Thursday 19 November 2020

 

நவீன உலகின் பிரச்சனைகளும்

நபி {ஸல்} அவர்கள் வழங்கும் தீர்வுகளும்

 


 

இரண்டாம் உலகப்போருக்கு முன்பு வரை இந்த உலகில் அரசியலே மனித குலத்திற்கு கடும் பிரச்சனையாக, பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது.

ஆனால், நவீனங்கள் நிறைந்த இன்றைய உலகில் அரசியல், சமூகம், கலாச்சாரம் என அனைத்துமே மனித குலத்திற்கு பிரச்சனைக்குரியதாக, பெரும் அச்சுறுத்தலாக மாறி வருவதை பார்க்க முடிகின்றது.

இன்றைய கால சூழ்நிலையில் உலகின் ஏதாவதொரு பாகத்தில் நாள்தோரும் புதிய, புதிய பிரச்சனைகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றது.

ஆனால், நிரந்தரத் தீர்வுகளை நோக்கிய நகர்வில் ஆரம்பக்கட்ட நிலையைக் கூட இன்னும் இன்றைய நவீன உலகமும், நவீன உலகின் பாதுகாவலர்களும் எட்ட வில்லை என்பது தான் நிதர்சனமான உண்மையாகும்.

இந்த காலகட்டத்தில் எல்லோரின் எதிர்பார்ப்பும் ஆசையும் ஒன்றாகவே இருக்கின்றது. ஆம்! நிரந்தரத்தீர்வு எங்கே இருக்கின்றது? யார் அதை தருவார்? என்று. 

1400 ஆண்டுகளுக்கும் முன்பாகவே எல்லா காலத்திற்குமான தீர்வை வார்த்தையாக, வாழ்க்கையாக தந்து விட்டு சென்றிருக்கின்றார்கள் உலகின் அருட்கொடை உத்தமர் முஹம்மது {ஸல்} அவர்கள்.

இங்கிலாந்தில் (1856 – 1950 ) காலகட்டங்களில் வாழ்ந்த அறிஞரும், விமர்சகருமான ஜார்ஜ் பெர்னாட்ஷா ஒருமுறை இப்படிக் கூறினார்.

“I believe that if a man like him were to assume the dictatorship of the modern worid he would succeed in solving its problems in a way that would bring it the much needed peace and happiness”

முஹம்மது நபி போன்ற ஒருவர் இன்றைய நவீன உலகின் தலைமைப் பொறுப்பிற்கு வருவாரெனில் இந்த உலகிற்கு எல்லா வகையிலும் தேவயான அமைதியையும் மகிழ்ச்சியையும் அவர் பெற்றுத்தருவார். இன்றைய உலகு சந்திக்கும் பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் தீர்வையும் தருவார்”. என்று The Genuine Islam எனும் நூலில் குறிப்பிடுகின்றார்.

எனவே, நவீன உலகில் மனித குலம் சந்திக்கின்ற எந்த ஒரு பிரச்சனைக்கும் முழு முன்மாதிரியாய் வாழ்ந்து சென்ற முஹம்மது நபி {ஸல்} அவர்கள் கூறும் தீர்வுகளை நோக்கி நகர்ந்தால் மாத்திரமே விடிவும் மோட்சமும் உண்டு என்பதை உறுதி படக் கூறுவோம்.

தற்கொலை முடிவுகளால் தடுமாறும் உலகம்

. நாவின் உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் தற்கொலைத் தடுப்புக்கான உலக அமைப்பு (IASP) ஆகியவை வெளியிட்ட (2018 –ஆம் ஆண்டிற்கான) புள்ளி விபரப்படி உலகம் முழுவதும் ஆண்டுக்கு 8 எட்டு லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இது வினாடி கணக்கில் எடுத்துக் கொண்டால் 40 நாற்பது வினாடிக்கு ஒருவர் தற்கொலை முடிவை தேர்ந்தெடுக்கின்றார் என்கிறது.

15 முதல் 30 வயதிற்குள்ளானவர்களே தற்கொலையை அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர் என்கிறது அந்த புள்ளி விவரம்.

நடப்பு ஆண்டு நிலவரப்படி, உலக அளவில் மரணங்களுக்கான முக்கிய காரணங்களில், தற்கொலை 15-ம் இடத்தில் இருக்கிறது. மொத்த மனித உயிரிழப்புகளில் 1.4 சதவீதம், தற்கொலைதான்!

மக்கள்தொகை அடிப்படையில் தற்கொலைவீதம் ஒரு லட்சம் பேருக்கு 11.4 என்கிற அளவில் உள்ளது. ஆண், பெண் எனத் தனித்தனியாகப் பார்த்தால், ஒரு லட்சம் ஆண்களுக்கு 15 ஆகவும் ஒரு லட்சம் பெண்களுக்கு 8 ஆகவும் தற்கொலைவீதம் உள்ளது. 

ஜப்பானும்.. தற்கொலையும் 

ஹிரோஷிமா நாகசாயி இந்தப் பெயரை இந்த உலகம் மறந்து விட்டாலும் அந்த சம்பவம் நடைபெற்றதன் பின்னர் ஜப்பான் மீண்டெழுந்து உலகின் அபார வளர்ச்சி கண்ட நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றதை மறக்க இயலாது.

தன்னம்பிக்கைக்கும், விடாத முயற்சிக்கும், தொழில் நுட்ப அறிவு மற்றும் வளர்ச்சிக்கும் பெயர்பெற்ற நாடு ஜப்பான். 

உலகின் 130 முன்னணி நாடுகளுக்கு தங்கள் நாட்டின் கண்டு பிடிப்பு சாதனங்களை அன்றாடம் லட்சக்கணக்கில் ஏற்றுமதி செய்யும் நாடு.

Made in Jappan என்ற பெயர் பதித்த பொருளின் தரத்தை உலகில் உணராதவர்கள் எவருமில்லை என்று சொல்கிற அளவுக்கு தரமான உற்பத்தியை கொண்ட நாடு.

நில நடுக்கம், பூகம்பம் என ஏதாவது பேரிடர்கள் ஏற்ப்பட்டால் வெறும் நான்கு நாட்களிலேயே அப்படியொரு நிகழ்வே நடக்காதது போல சுவடுகள் தெரியாமல் மீட்பு பணி செய்யும் தொழில் நுட்பம் நிறைந்த நாடு.

இந்தியாவின் அகமதாபாத் மும்பை இடையேயான புல்லட் ரெயில் திட்டத்திற்கு சுமார் 88 ஆயிரம் கோடி ரூபாயை கடன் வழங்கிய செல்வ வளர்ச்சி கண்ட நாடு. 

20 கோடி மக்களை கொண்ட வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இடம் பெற்ற நாடு ஜப்பான். 

இவ்வளவு சிறப்புகள் இருந்தும் அந்த நாட்டில் தீராத பிரச்ச்னை ஒன்று இருக்கிறதென்றால் அது இன்றளவும் நீடித்து வருகிறதென்றால் அது தற்கொலை பிரச்சனை தான்.

ஆண்டுக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு.

அதிலும் குறிப்பாக 2014, 2015, 2016 ஆகிய மூன்று ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட ஜப்பானியர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 18 ஆயிரத்துக்கும் மேல் என்கிறது புள்ளிவிவரம்.

உலகில் அதிக நபர்கள் தற்கொலை செய்யும் நாடுகளின் பட்டியலில் 17 –ஆம் இடத்தில் இருந்து 12 இடத்திற்கு முன்னேறி அதிர்ச்சியளித்தது. (தற்போது மீண்டும் 17 ஆம் இடத்தில் இருக்கின்றது)

100 சதவீத கல்வியைக் கொண்ட, அறிவாற்றல் கொண்ட, தொழில் நுட்ப அறிவு நிறைந்த ஒரு நாட்டில் கொத்து கொத்தாய் உயிர்கள் மாய்த்துக் கொள்ளப்படுவதை உலக நாடுகளின் சபை ஐ. நா., மற்றும் ஐ. நாவின் உலக சுகாதார நிறுவனம் (WHO) திகைத்துப் போனது. உடனடியாக,  ஜப்பான் அரசிடம் ஏன் உங்கள் மக்கள் இப்படி உயிரை மாய்த்துக் கொள்கின்றார்கள்? காரணங்களைக் கண்டறிந்து ஆய்வறிக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டது.

. நா., சபை கொடுத்த அழுத்தத்தின் பேரின் நாடு முழுவதும் ஆய்வு செய்ய மிகப்பெரிய அளவிலான குழுக்களை நியமித்தது.

நாடு முழுவதும் ஆய்வு செய்த அந்தக்குழுவினர் ஆயிரம் பக்கங்களில் ஆய்வறிக்கையை கொண்டு வந்து சமர்ப்பித்தனர்.

 

பல்வேறு காரணங்களைக் குறிப்பிட்டிருந்த அந்தக் குழுவினர் தற்கொலை செய்து கொள்வதற்கு பிரதான காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களில் பெரும்பகுதியினர் கூட்டுக்குடும்பச் சூழலில் இருந்து விலகி, உறவுகளைப் பிரிந்து, தனிக்குடித்தனமாக வாழ்ந்தவர்கள் என்றும், தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளின் போது ஆலோசனை சொல்லவோ, உதவிடவோ உறவுகள் இல்லாததால் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கின்றார்கள் என்று குறிப்பிட்டிருக்கின்றனர். 

உலகளவில் தற்கொலை அதிகரிக்க 60 சதவீத காரணம் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசாமல் இருப்பதே என்கிறது பிபிசி யின் அறிக்கை ஒன்று.

விரல்கள் பேச ஆரம்பித்த நாளில் இருந்து இதழ்கள் பேசுவதிலிருந்து விலகிக் கொண்டது.

யாரென்றே தெரியாதவர்களிடம் முகநூலில் பேசுகிற அளவு அன்றாடம் கண் முன்னால் தென்படுகிறவர்களிடம் முகம் பார்த்து பேசுவதில்லை.

டச் போனோடு நம்மை இணைத்துக் கொண்டதால் உறவுகளுடனான டச்சில் இருந்து வெகுதூரம் இன்று விலகிச் சென்றுள்ளோம். 

தடுமாறும் உலகிற்கு தாஹா நபி {ஸல்} அவர்கள் வழங்கிய தடம்

  

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ، وَأَنْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ، فَلْيَصِلْ رَحِمَهُ»

யார் தனக்கு ரிஸ்கி (வாழ்வாதாரத்தி) ல் விஸ்தீரணத்தையும் நீண்ட ஆயுளையும் விரும்புகின்றாரோ அவர் உறவுகளைப் பேணி வாழ்ந்து கொள்ளட்டும்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ்(ரலி) ( நூல் : புகாரி )

இன்றைய நவீன உலகில் தனிக்குடித்தனம் செல்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. 

முஸ்லிம் சமூகத்தில் கூட தனிக்குடித்தனம் என்பது வேகமாகப் பரவி வரும் கலாச்சாரமாக மாறிவிட்டது.

தாம் வசிக்கிற ஊரை விட்டு, தாய் தந்தை, சகோதர, சகோதரி உறவுகளைப் பிரிந்து, மஹல்லாவை விட்டு, பள்ளிவாசல் மதரஸா எனும் அழகிய சூழலை விட்டு, தூரமான பகுதியில் சகோதர சமய மக்களோடு வசிக்கிற, வாழ்கிற அதை மட்டுமே விரும்புகின்ற ஒரு தலைமுறை இன்று உருவாகி வருகின்றது. 

கல்வி, வேலை, கடை, பிழைப்பு, மருத்துவம் எனும் ஏதாவது சாக்கு போக்குகளைச் சொல்லி தன்னந்தனியாக மனைவியை, மக்களை வீட்டில் விட்டுச் செல்கிற இந்த அவல நிலையை இந்தச் சமூகம் கைவிட வேண்டும்.

மேற்கூறிய நபிமொழியில் நீண்ட ஆயுள் வாழ உளவியல் ரீதியாக மாநபி {ஸல்} அவர்கள் கூறுகிற மகத்தான ஆலோசனை உறவுகளுடன் சேர்ந்து வாழ்வது என்பது தான். 

தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும்

ஜகாத் தர முடியாது என மறுத்த ஸஅலபா (ரலி) விஷயத்தில் அல்லாஹ் ஸஅலபாவின் இந்தச் செயலை இடித்துரைத்து வசனங்களை இறக்கியருளினான்.

وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِنْ فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ (75) فَلَمَّا آتَاهُمْ مِنْ فَضْلِهِ بَخِلُوا بِهِ وَتَوَلَّوْا وَهُمْ مُعْرِضُونَ (76) فَأَعْقَبَهُمْ نِفَاقًا فِي قُلُوبِهِمْ إِلَى يَوْمِ يَلْقَوْنَهُ بِمَا أَخْلَفُوا اللَّهَ مَا وَعَدُوهُ وَبِمَا كَانُوا يَكْذِبُونَ (77)

அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களில் இப்படிச் சிலர் இருக்கின்றனர்; “அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து எங்களுக்கு வழங்கினால், நிச்சயம் நாங்கள் தானதர்மங்கள் செய்வோம்; மேலும், நல்லவர்களாக வாழ்வோம்என்று அல்லாஹ்விடம் அவர்கள் வாக்குறுதி அளித்தார்கள்.

ஆனால், அல்லாஹ் தன்னுடைய அருட்கொடையிலிருந்து அவர்களுக்கு வழங்கிய போது, அதில் அவர்கள் கஞ்சத்தனம் செய்தார்கள். மேலும், சிறிதும் பொருட்படுத்தாதவர்களாய் (தமது வாக்குறுதியிலிருந்து) நழுவிச் சென்றார்கள்.

ஆகவே, அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதிக்கு அவர்கள் மாறுசெய்த காரணத்தினாலும், பொய்யுரைத்துக் கொண்டிருந்ததாலும் அல்லாஹ் அவர்களின் உள்ளத்தில் நயவஞ்சக எண்ணத்தை ஏற்படுத்தினான்.” 

                                                       (அல்குர்ஆன்:9:75-77)

நபிகளாரின் அவையிலிருந்த ஸஅலபாவின் உறவினர் ஒருவர் ஓடோடிச் சென்று இந்தச் செய்தியை ஸஅலபாவிடம் தெரிவித்தார். 

இதைக் கேட்டதும் பதறித்துடித்த ஸஅலபா தமக்கான ஜகாத்தை கணக்கிட்டு, எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வந்தார். அதைப் பெற்றுக் கொள்ளுமாறும் கூறினார்.

அதற்கு, அண்ணல் {ஸல்} அவர்கள்அல்லாஹ் உம்மிடமிருந்து உம்முடைய ஜகாத்தைப்பெறுவதற்கு தடை செய்துவிட்டான்என்று கூறினார்கள். 

சபையில் எத்தனையோ பேர் இருந்தும் கூட அவரின் உறவினர் ஒருவருக்கு தான் இறைவனின் கண்டிப்புக்கு தம் உறவினர் ஆளாகி விடக்கூடாது எனும் பரிதவிப்பு இருந்தது. ஆதலால் தான் ஊருக்கு வெளியே வெகு தூரத்தில் இருந்த ஸஅலபாவின் வீட்டிற்கு ஓடோடி வந்து தகவலைத் தெரிவித்தார்.

ஆன்லைன் ஆபத்துகளால் நிகழும் தற்கொலைகள்…

கொரானா ஊரடங்கு காரணமாக வீட்டிலிருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் வரை பலரும் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இது மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே பல்வேறு மனநலச் சிக்கல்களை ஏற்படுத்துவதோடு, பெருமளவிலான குற்றங்களுக்கும் வழிவகை செய்கிறது.

1.   ஆன்லைன் சூதாட்டம் - தற்கொலைகள்…

தமிழகத்தில் புதிய அபாயமாக ஆன்லைன் சூதாட்டம் மற்றும் ஆன்லைன் கேமிங் உருவாகியுள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தில் மூழ்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்து இதுவரை 11 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

போலீஸ்காரர், தனியார் வங்கி ஊழியர், சிகார்ட் மொத்த விற்பனையாளர், கல்லூரி மாணவர், கணவன் – மனைவி என பலதரப்பட்டவர்கள் ஆன்லைன் சூதாட்ட வலையில் சிக்கி உயிரை மாய்த்துள்ளனர். 

உலகில் இன்று வரை 42 லட்சம் கோடி ரூபாய் பெறுமான ஆன்லைன் மோசடி நடந்துள்ளது. 46 கோடி இந்தியர்கள் இணையதளத்தை பயன்படுத்துகிறார்கள். இதில் சுமார் 4 கோடி பேர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கப்படுகிறார்கள்.

ஆன்லைன் விளையாட்டுகளின் மூலம் மட்டும் ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி வரை பணப்புழக்கம் நடைபெறுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றது.

சூதாட்டங்களின் முந்தைய வடிவங்களான குதிரைப் பந்தயம், சீட்டாட்டம், லாட்டரி ஆகியவற்றில் குறைந்தபட்சம் நேரக் கட்டுப்பாடாவது இருந்தது. தற்போதைய கைப்பேசி வடிவத்தில், ஒரே அழுத்தில் பணம் செலுத்தும் வசதியும் நேரங்காலமின்றி விளையாடும் வாய்ப்பும் இருப்பதைத் தொடர்ந்து இழப்பின் அளவு பாரதூரமாக அதிகரித்திருக்கிறது.

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், சூதாட்ட விளையாட்டில் ஈடுபடுபவர்களின் மனநிலைக்கு ஏற்ப அவ்வப் போது அவர்களை வெற்றிபெறச் செய்து, மேலும் பணத்தை இழக்கச் செய்யும் வழிமுறையை திட்டமிட்டே செய்கின்றன, ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள்.

இதனை பணத்தை இழந்த பின்னர் தனது அனுபவத்தில் இருந்தே உணர்ந்தாலும், அந்த விளையாட்டு போதைக்கு அடிமையாகி அதிலிருந்து வெளிவரமுடியாமல் மேலும் பணத்தை இழக்கின்றனர், மாணவர்களும் இளைஞர்களும்.

இறுதியில் மெய்யுலகில் பணம் தீர்ந்ததும் தான், இழந்த பணத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறோம் என்ற எண்ணம் அவர்களை அடுத்தகட்டத்திற்கு நகர்த்துகிறது. மனச்சோர்வு, மன அழுத்தம், படபடப்பு, பயம் காரணமாக பலரும் தற்கொலையை நோக்கிச் செல்கின்றனர்.

2.   ஆன்லைன் கேமிங் – தற்கொலைகள்...

இந்தியாவில், ஆன்லைன் கேமில் ஈடுபடும் 60 சதவீதமானோர் 18 முதல் 24 வயதுடையவர்களே. ஊரடங்கில், பேடிஎம்-ன் மொபைல் கேமிங் செயலியான Paytm First Games செயலியை பயன்படுத்துவபவர்களின் எண்ணிக்கை மட்டும் 200 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கேமில் வெற்றி அடைபவர்கள் பணம் ஈட்டி, ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள், மற்றும் விராட் கோலி, தமன்னா போன்ற முன்னணி நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் விளம்பரத்திற்கு வருவது ஆகியவற்றில் மயங்குகின்றனர்.மேலும் தம்மாலும் எளிமையாக பணம் ஈட்ட முடியும் என்றும் நம்புகின்றனர்.

பின், பணத்தை இழந்து செய்வதறியாமல் தற்கொலை, கொள்ளை, கொலை ஆகியவற்றிலும் ஈடுபடுகின்றனர்.  மேலும், இதனால் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகள் மணமுறிவு வரை செல்வதாகவும் மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். சமீபத்தில், சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் பணத்தை இழந்த இளைஞர்கள் உள்ளிட்டு தமிழகத்தில் மட்டும் ஆன்லைன் கேமிங்கில் பணத்தை இழந்ததன் காரணமாக 4 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

உலகளவில் 560 மில்லியன் இணையதள பயன்பாட்டாளர்களை கொண்டுள்ள இந்தியா, ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதன் மூலம், ஆன்லைன் கேமிங்கிற்கான செயலிகளை பதவிறக்கம் செய்யும் இரண்டாவது மிகப்பெரிய சந்தையாக இருந்து வந்த சூழலில், கொரோனா ஊரடங்கு ஆன்லைன் கேமிங் கம்பெனிகளுக்கான கதவை மேலும் அகலத்திறந்துள்ளது.

2023-ல் இணையதள பயனர்களின் எண்ணிக்கை 650 மில்லியனாக அதிகரிக்கும் என்ற தகவல் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் சந்தை ஆதிக்கத்தை முன்னறிவிப்பதாக உள்ளது. 2010-ல் வெறும் 25 ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில் 2019-ல் அது 11 மடங்காக உயர்ந்து 275 நிறுவனங்களாக உள்ளது.

ஆன்லைன் கேம்கள் எனப் பொதுவாகக் கூறினாலும், PUBG மற்றும் FreeFire போன்ற கேம்களைத்தான் பெரிதாக மாணவர், இளைஞர்கள் விரும்புகின்றனர். இந்தியாவில் மட்டும் பப்ஜி செயலியை 5 கோடி பேர் தரவிறக்கம் செய்துள்ளனர். செயல்பாட்டிலுள்ள அதன் பயனர்களின் எண்ணிக்கை மட்டும் 3.30 கோடி பேர்.

உலகளவில் பப்ஜி கேமர்களில் 21 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர். காரணம், தன் நண்பர்களுடன் கூட்டாக, அவர்கள் எங்கிருந்தாலும் பரஸ்பரம் பேசிக்கொண்டே விளையாடும் வகையில், எந்த செலவுமின்றி, எளிதில் அனைவரும் விளையாடும் வடிவில், நிஜ உலகிற்கு இணையாக 3d கிராஃபிக்சில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாநபி {ஸல்} அவர்கள் வழங்கிய தீர்வு...

ஆன்லைன் சூதாட்டம் மற்றும் ஆன்லைன் கேமிங் ஆகியவற்றால் மொத்தம் 15 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் நால்வர் சிறார்களாவர். 

எப்படியாவது சம்பாதித்து விட வேண்டும், குறுக்கு வழியில் கோடீஸ்வரனாக ஆகிவிட வேண்டும் என்கிற பேராசை தான் இப்படியான ஆன்லைன் பயன்பாடுகளால் சமூகத்தில் நிகழும் தற்கொலைகளுக்கான காரணங்கள்.

عن أبي هريرة -رضي الله عنه- قال‏:‏ قال رسول الله -صلى الله عليه وسلم-‏:‏ ‏‏(انظروا إلى من هو أسفل منكم، ولا تنظروا إلى من هو فوقكم، فهو أجدر أن لا تزدروا نعمة الله عليكم)‏ ‏ متفق عليه‏ .

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “(செல்வம், உலக வசதி வாய்ப்புகள், செல்வாக்கு ஆகியவற்றில்) உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். (உலகாதாய நோக்கங்களின் அடிப்படையில் பார்க்கும் போது) உங்களை விட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ் உங்களுக்கு அருளியிருக்கிற அருட்கொடைகள் உங்களுடைய பார்வையில் மதிப்பிழந்து போய் விடாமல் இருப்பதற்கு இந்த நடத்தையே அதிகப் பொருத்தமானதாகும்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                          ( நூல்: புகாரி, முஸ்லிம் )  

حَدَّثَنِي يَحْيَى بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا أَبُو بَكْرٍ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: تَعِسَ عَبْدُ الدِّينَارِ، وَالدِّرْهَمِ، وَالقَطِيفَةِ، وَالخَمِيصَةِ، إِنْ أُعْطِيَ رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطَ لَمْ يَرْضَ

பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகி விட்டவன் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான். (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)                             ( நூல் : புகாரி 6435 )

2376 – حدثنا سويد بن نصر أخبرنا عبد الله بن المبارك عن زكريا بن أبي زائدة عن محمد بن عبد الرحمن بن سعد بن زارة عن ابن كعب بن مالك الأنصاري عن أبيه قال : قال رسول الله صلى الله عليه و سلم ما ذئبان جائعان أرسلا في غنم بأفسد لها من حرص المرء على المال والشرف لدينه

ஒரு ஆட்டு மந்தையினுள் அனுப்பி வைக்கப்பட்ட பசியோடு உள்ள இரண்டு ஓநாய்கள் அதனை நாசமாக்குவதை விட ஒரு மனிதனுக்கு செல்வத்தின் மீதுள்ள பேராசை அவனுடைய மார்க்கப்பற்றை நாசாமாக்கி விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : கஅப் பின் மாலிக் (ரலி) ( நூல் : திர்மிதி 2298 )

6420 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَبُو صَفْوَانَ عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ المُسَيِّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: لاَ يَزَالُ قَلْبُ الكَبِيرِ شَابًّا فِي اثْنَتَيْنِ: فِي حُبِّ الدُّنْيَا وَطُولِ الأَمَلِ

முதியவரின் மனம்கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்து வரும். 1. இம்மை வாழ்வின் (செல்வத்தின்) மீதுள்ள பிரியம். 2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)                        ( நூல் : புகாரி 6420, 6421 ) 

وغزوة عمرو بن العاص ذات السلاسل من أرض بني عذرة ، وكان من حديثه أن رسول الله صلى الله عليه وسلم بعثه يستنفر العرب إلى الشام ، وذلك أن أم العاص بن وائل كانت امرأة من بلي ، فبعثه رسول الله صلى الله عليه وسلم إليهم يستألفهم لذلك ، حتى إذا كان على ماء بأرض جذام يقال له السلسل ، وبذلك سميت تلك الغزوة ، غزوة ذات السلاسل ‏.‏

فلما كان عليه خاف ، فبعث إلى رسول الله صلى الله عليه وسلم يستمده ، فبعث إليه رسول الله صلى الله عليه وسلم أبا عبيدة بن الجراح في المهاجرين الأولين ، فيهم أبو بكر وعمر ، وقال لأبي عبيدة حين وجهه ‏:‏

لا تختلفا ، فخرج أبو عبيدة حتى إذا قدم عليه ، قال له عمرو ‏:‏ إنما جئت مدداً لي ؛ قال أبو عبيدة ‏:‏ لا ، ولكنى على ما أنا عليه ، وأنت على ما أنت عليه ‏.‏

وكان أبو عبيدة رجلاً ليناً سهلاً ، هيناً عليه أمر الدنيا ، فقال له عمرو ‏:‏ بل أنت مدد لي ، فقال أبو عبيدة ‏:‏ يا عمرو ، إن رسول الله صلى الله عليه وسلم قال لي ‏:‏ لا تختلفا ، وإنك إن عصيتني أطعتك ، قال ‏:‏ فإني الأمير عليك ، وأنت مدد لي ، قال ‏:‏ فدونك ‏.‏

தாதுஸ் ஸலாசில் எனும் போருக்காக அம்ர் பின் அல் ஆஸ் (ரலி) அவர்களுடைய தலைமையில் ஒரு படையை நபி (ஸல்) சிரியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். எதிரிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதை அங்கு சென்றபின்னரே முஸ்லிம்கள் அறிகின்றனர். உதவி கோரி அல்லாஹ்வின் தூதருக்கு தூது அனுப்பினார்கள்.

அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு படையை நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அந்தப் படையில் அபூபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். 

படையினர் விடை பெறும் வேளையில் அபூ உபைதா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் இருவரும் (நீங்களும் அம்ர் பின் அல்ஆஸ் அவர்களும்) கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்”. 

படை சிரியா வந்து சேர்ந்தது. உதவிக்கு வந்து சேர்ந்த படையை வரவேற்ற பின்னர் அம்ர் பின் அல் ஆஸ் (ரலி) அபூ உபைதா (ரலி) அவர்களிடம் கூறினார்: நீங்கள் எனக்கு உதவியாகவே வந்துள்ளர்கள். ஆகவே நான்தான் இங்கு பொறுப்புதாரி”.

அபூ உபைதா (ரலி) கூறினார்: இல்லை. என்னுடன் வந்த படையினருக்கு நான் பொறுப்புதாரி. உங்களுடன் இருக்கும் படைக்கு நீங்கள் பொறுப்புதாரியாக இருங்கள்”.

பொதுவாக அபூ உபைதா (ரலி) மென்மையான சுபாவம் கொண்டவர். உலக விவகாரங்கள் குறித்து அவ்வளவாக அலட்டிக்கொள்ளமாட்டார். எனவே அமீராகவும் பொறுப்புதாரியாகவும் இருக்க வேண்டும் என்பதில் அவர் ஒருபோதும் ஆசை கொண்டதில்லை. என்றாலும் தம்மோடுவந்த படையினருக்கு தாம்தானே பொறுப்பாளராக இருக்க முடியும் என்பதற்காகவே அம்ர் பின் அல் ஆஸ் (ரலி) அவர்களிடம் அவ்வாறு கூறினார். 

அம்ர் (ரலி): இல்லை. நீங்கள் எனக்கு உதவியாகவே வந்துள்ளர்கள். ஆகவே நான் தான் பொறுப்புதாரிஎன்று மீண்டும் வலியுறுத்திக் கூறினார்.

அபூஉபைதா (ரலி): அம்ரே! நாங்கள் இங்கு புறப்பட்டு வரும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்என்று என்னிடம் உபதேசித்தார்கள். ஆகவே உங்களோடு நான் கருத்து வேறுபாடு கொள்ள மாட்டேன். நமக்கிடையே கருத்து மோதல் வேண்டாம். உங்களுக்கு நிச்சயம் நான் கட்டுப்படுவேன்”.

மீண்டும் அம்ர் (ரலி) அவர்கள்: அவ்வாறெனில் நான் தான் அமீர். நீங்கள் எனக்கு உதவி செய்வதற்காக வந்தவர்கள்”.

ஒப்புக்கொண்டார் அபூ உபைதா (ரலி). போர் முடிந்தது. போர்களத்தில் இருந்து மக்கள் மதீனாவுக்குத் திரும்பினர். அவர்களில் ஆரம்பமாக மதீனாவை வந்தடைந்தவர் அவ்ஃப் பின் மாலிக் (ரலி) ஆவார். வந்தவர் நேரடியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்து சிரியாவில் நடந்தவற்றை ஒன்றுவிடாமல் விவரித்தார்.

அனைத்தையும் செவியுற்ற பின்னர்.. பதவியின் மீது பேராசை கொள்ளாத.. கிடைத்ததைப் பொருந்திக்கொண்ட அபூ உபைதாவைக் குறித்து பெருமானார் (ஸல்) அவர்கள் பெருமிதம் கொண்டார்கள். பின்னர் அருகில் இருந்த தோழர்களிடம் கூறினார்கள்: அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக! அல்லாஹ் அவருக்கு அருள்பாலிப்பானாக!. அவர் எப்போதும் நன்மையை நாடக் கூடியவராகவே இருந்துள்ளார்”.

போதுமென்ற மனம் இல்லாததும் ஒரு காரணம்…

عن أبي أمامة الباهلي قال: " جاء ثعلبة بن حاطب الأنصاري إلى رسول الله صلى الله عليه وسلم فقال: يا رسول الله، ادع الله أن يرزقني مالاً، فقال: " ويحك يا ثعلبة، قليل تؤدي شكره خير من كثير لا تطيقه " . ثم أتاه بعد ذلك فقال: يا رسول الله، ادع الله أن يرزقني مالاً، قال: " أما لك في أسوة حسنة، والذي نفسي بيده لو أردت أن تسير الجبال معي ذهباً وفضة لسارت " ، ثم أتاه بعد ذلك فقال: يا رسول الله، ادع الله أن يرزقني مالاً، والذي بعثك بالحق لئن رزقني الله مالاً لأعطين كل ذي حق حقه، فقال رسول الله صلى الله عليه وسلم: " اللهم ارزق ثعلبة مالاً، الله ارزق ثعلبة مالاً "

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் ஸஅலபா இப்னு ஹாத்தப் என்கிற நபித்தோழர் வந்தார். 

அல்லாஹ்வின் தூதரே! செல்வச் செழிப்பான வாழ்விற்காக அல்லாஹ்விடம் எனக்காக பிரார்த்தியுங்கள்என்றார்.

ஸஅலபாகுறைவாக வழங்கப்பட்டு அதற்காக நீர் நன்றி செலுத்துவது இருக்கிறதே, நிறைவான செல்வம் வழங்கப்பட்டு நன்றி செலுத்தாமல் வாழ்வதைக் காட்டிலும் மிகச் சிறந்ததாகும்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

மீண்டும் முன்பு போலவே ஸஅலபா, அண்ணலாரிடம் வந்து கேட்டுக் கொண்டார்.

அதற்கு அண்ணலார், உனக்கு என் வாழ்க்கையில் அழகிய முன் மாதிரி இல்லையா? “என்னைப் பாரும்! என் உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது ஆணை! நான் விரும்பினால் இதோ தெரிகிற இந்த மலைகளை தங்கமாகவும், வெள்ளியாகவும் அல்லாஹ் மாற்றித்தருவான்!” (என்றாலும் எளிமையாக நான் வாழவில்லையா?) என்று கூறினார்கள்.

மூன்றாவது முறை நபிகளாரின் முன்வந்து நின்ற போது, அல்லாஹ்வின் தூதரே! எனக்காக துஆ செய்யுங்கள்! அல்லாஹ் எனக்கு வழங்குகின்ற செல்வத்திலிருந்து நான் யார் யாருக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அவைகளை முறையாக முழுமையாக கொடுப்பேன்! இது உங்களை சத்தியத்தை கொண்டு அனுப்பிய அந்த இறைவனின் மீது ஆணைஎன்று முழங்கினார்.

அப்போது, அண்ணலார் அவருக்காக மூன்று முறை பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் துஆ பரக்கத்தால் ஸஅலபாவின் (ஆடு, மாடு, ஒட்டகை) மந்தை பல்கிப் பெருகியது.

தேர்வு தோல்வி பயத்தால் நிகழும் தற்கொலைகள்…

இந்திய மருத்துவ சங்கம் மேற்கொண்ட ஆய்வின்படி ஒவ்வொரு ஆண்டும், 70 சதவீத மாணவர்களுக்கு தேர்வு ஜுரம் வருவதாகத் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக மாணவச் சமூகம் தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் ரிசல்ட் வரும் நாள் வரை ஒரு வித பதட்டத்தோடும், அச்சத்தோடும், மனச் சோர்வோடும் காணப்படுகின்றனர்.

National crime records bureau ( NCRB – நேஷனல் க்ரைம் ரிகார்ட்ஸ் ப்யூரோ ) என்ற அமைப்பின் கூற்றுப்படி நாடெங்கிலும் நாளொன்றுக்கு 7 மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

2009 –இல் 2000 மாணவர்கள், 2011 –இல் 2381 மாணவர்கள், இன்னொரு புள்ளி விவரப்படி நாடெங்கிலும் நடைபெறுகிற தற்கொலையில் 14 வயதிற்குட்பட்டவர்கள் எண்ணிக்கை 3035 ஆகும்.

தாழ்வு மனப்பான்மையும், தன்னம்பிக்கையின்மையும் இன்றைய மாணவச் செல்வங்களிடையே புரையோடிப் போயிருப்பதாலேயே தற்கொலைகள் நிகழக் காரணமாகும்.

தன்னம்பிக்கைக்கு மன வலிமை அவசியம். மன வலிமை கொண்டவர்களால் தான் தடைகளை தாண்ட இயலும். சோதனைகளை வெற்றிகரமாக சமாளிக்க இயலும். ஆதலால் தான், மன வலிமை கொண்ட முஃமின் அல்லாஹ்வின் அன்பை பெற்றவன் என்றார்கள் அண்ணல் நபி {ஸல்} அவர்கள்.

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَابْنُ نُمَيْرٍ قَالَا حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ عَنْ رَبِيعَةَ بْنِ عُثْمَانَ عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنْ الْمُؤْمِنِ الضَّعِيفِ وَفِي كُلٍّ خَيْرٌ  

பலகீனமான இறைநம்பிக்கையாளரை விட சக்தியும், வலிமையும் நிறைந்த இறைநம்பிக்கையாளரே சிறந்தவரும், அல்லாஹ்விற்கு அதிக விருப்பமானவரும் ஆவார்என மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள். ( நூல்: திர்மிதி )

என்னால் முடியாது , என்னிடம் அந்த திறமை இல்லை, நான் சக்தியற்றவன், என்று எதிர்மறையாக பேசுவதையும், தன்னை ஒருவன் குறைவாக மதிப்பிடுவதையும் அண்ணல் நபி (ஸல்) தடுத்தார்கள்.

ஏனெனில், இவ்வாறான பேச்சுக்கள், எண்ணங்கள் தனிமனிதனையும், ஒரு சமூகத்தையும் பின்னுக்கு தள்ளி விடும்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا

عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَقُولَنَّ أَحَدُكُمْ خَبُثَتْ نَفْسِي وَلَكِنْ لِيَقُلْ لَقِسَتْ نَفْسِي رواه البخاري معني لقست غثت وضاقت 

''உங்களில் எவரும் தன் மனம் கெட்டு விட்டது என்று கூற வேண்டாம், மாறாக, என் மனம் நெருக்கடிக்குள்ளாகி விட்டது என்று கூறிக் கொள்ளட்டும்!” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                   ( நூல்: புகாரி )

பிற உயிர்களைக் கூட எளிதில் கொன்று விடத் தயங்கும் மனித சமூகம் தன்னுடைய உயிரை அவ்வளவு எளிதாக எடுத்து விட ஏன் தயங்குவதில்லை என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.

 

மாநபி {ஸல்} அவர்கள் வழங்கிய தீர்வுகளே இந்த உலகில் மானுட சமூகத்தை விடியலை நோக்கி நகர்த்தும் என்பதை உணர்வோம்!!!

 

அல்லாஹ் மனித சமூகத்திற்கும் நமக்கும் விளக்கத்தைத் தருவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!