Thursday 17 December 2020

 

சீர்மிகு அரபு மொழி!

சீர்தூக்கிப்  பார்க்காத முஸ்லிம் சமூகம்

 

ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோஅமைப்பு, ஆண்டுதோறும் டிசம்பர் 18 -ஆம் நாளை உலக அரபி நாளாக 2010 -ல் அறிவித்தது. டிசம்பர் – 18ஆம் நாளை உலக அரபி நாளாகவும் ஐ.நா. சபை அறிவித்தது. ஐ.நா. சபையின் அங்கீகாரம் கிடைத்தது 1973 டிசம்பர் – 18 -ஆம் நாள் என்பதால் அந்தத் தொடர்பிலேயே டிசம்பர் – 18 -ஐ உலக நாளாக ஐ.நா. அறிவித்தது.

அந்த அடிப்படையில் அரபு மொழி குறித்தான சில அடிப்படை விஷயங்களை நாம் இன்று அறிய இருக்கின்றோம்.

உலக அளவில் 6800 -க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இன்னொரு புள்ளி விவரம் 7099 என்று கூறுகின்றது. இதில் சுமார் 2000 மொழிகள் 1000த்திற்கும் குறைவான மக்கள் தொகையினரால் மட்டுமே பேசப்படுகின்றன.

உலகில் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையினரால் பேசப்படும்13 மொழிகளில் அரபு மொழியும் ஒன்றாகும்.

உலகில் 6 மொழிகளே பழமையான மொழிகள் அவை, தமிழ் மொழி, அரபு மொழி, சீன மொழி, சமஸ்கிருத மொழி, கிரேக்க மொழி, இலத்தீன் மொழி.

இன்று 21 நாடுகளின் ஆட்சி மொழியாகவும், .நா-வின் அதிகாரபூர்வ மொழிகளுள் ஒன்றாகவும்,  183 மில்லியன் மக்களின் தாய்மொழியாகவும் அரபி மொழி இருக்கின்றது.

மேற்கே வட ஆப்பிரிக்காவிலிருந்து கிழக்கே ஓமன் வரையும், வடக்கே சிரியாவிலிருந்து தெற்கே சூடான் வரையும் அரபியின் எல்லை விரிந்திருக்கிறது.

நாகரிக உலகின் மத்திய காலகட்டத்தில் பல நூற்றாண்டுகள் அரபி ஒரு கற்பிக்கும் மொழியாக, கலாச்சார மொழியாக, முற்போக்குக் கருத்துகளை முன்னிறுத்திய மொழியாக விளங்கியது.

 9-ம் நூற்றாண்டு முதல் 12-ம் நூற்றாண்டு வரை தத்துவம், மருத்துவம், வானியல் மற்றும் புவியியல் பற்றிய அநேக படைப்புகள் அரபியில் படைக்கப்பட்டதுபோல் வேறு மொழிகளில் படைக்கப்படவில்லைஎன்கிறார் கீழ்த்திசை மொழியியல் வல்லுநர் பிலிஃப் கே. ஹிட்டி.

நமது தாய் மொழி தமிழைப் போலவே அரபியும் ஒரு செம்மொழியாகும்.

அரபிக்கும் தமிழுக்குமான உறவு இன்றைக்கு மிகவும் நெருக்கமானதாகும். தமிழ்ச் சொற்களோடு இரண்டறக் கலந்த சொற்களாகிவிட்டன அரபிச் சொற்கள். சுமார் 1500 க்கும் மேற்பட்ட அரபுச் சொற்கள் தமிழோடு இரண்டறக் கலந்திருக்கின்றன.

உதாரணமாக, அமல், இனாம், கஜானா, ஜாமின், கைதி, ஜில்லா, தாலுக்கா, தாசில்தார், நகல், மகஜர், மசோதா, மராமத்து, ஜப்தி, வசூல், தகராறு, பாக்கி, வாரிசு, தாக்கல், மைதானம், கடுதாசி, ரசீது, மாமூல், வகையறா என இவைகளைக் குறிப்பிடலாம்.

அரபுத்தமிழ் எனும் கலப்பு மொழி...

தமிழ்நாட்டில் குடியேறிய அரபிகள் தமிழைக் கற்றுக் கொண்டதுடன் அதனை அரபி எழுத்துக்களினாலும் எழுதினர். இதுவே அரபுத் தமிழ் எனப் பெயர் பெறலாயிற்று.

தமிழில் உள்ள ள, , , ட போன்ற எழுத்துக்களுக்கு அரபியில் ஒலி இல்லாததால் அவற்றிற்கு சற்று முன்பின் சம ஒலியுள்ள அரபி எழுத்துக்களுக்கு சில அடையாளங்களை அதிகப்படியாகச் சேர்த்து அவ்வொலிகள் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழில் 247 எழுத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அரபுத் தமிழிலோ அரபி எழுத்துக்கள் 28 உடன் 8 எழுத்துக்கள் மேற்கொண்டும் சேர்க்கப்பட்டுள்ளன. அரபுத் தமிழுக்கு முன்னோடியாக இருப்பது அரபு வங்காள மொழியாகும்.

இதைப் பற்றி இப்னு கல்தூனும் தம்முடைய உலக வரலாற்று நூலில் குறிப்பிடுகிறார். இதற்கு முன்னர் தென் கிழக்கு ஆப்ரிக்காவில் தன்சானியா நாட்டில் சுவாஹிலி மொழி, அரபி எழுத்துக்களினாலும் எழுதப்பட்டது. மலேசியாவிலும் "ஜாவி" மொழி அரபி எழுத்துக்களால் தாம் எழுதப்பட்டு வருகிறது. துருக்கி மொழி துவக்கத்தில் அரபி லிபியில் தான் எழுதப்பட்டு வந்தது, பின்னர் முஸ்தபா கமால் காலத்திலயே அதனை உரோம லிபியில் எழுதும் பழக்கம் புகுத்தப்பட்டது. 

உஸ்பெக் மொழியும் அரபி லிபியிலயே எழுதப்பட்டு வந்தது. இப்போது ரோம லிபியில் எழுதப்பட்டு வருகிறது. கேரளத்திலும் அரபு மலையாளத்தில் பல நூல்கள் வெளியாகி உள்ளன. இந்திய மொழியான ஹிந்தியை அரபி எழுத்துக்களில் எழுதத் துவங்கியதன் விளைவாகவே உருது தோன்றியது.

அரபு தமிழில் ஏறத்தாழ நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட சமய நூல்கள் வெளிவந்துள்ளன. திருக்குரானுக்கு தமிழில் விளக்கவுரை எழுதக்கூடாது என மார்க்க விற்பன்னர்கள் பெரிதும் வற்புறுத்தி வந்ததன் காரணமாக அரபுத் தமிழில் தப்சீர்களும், ஏனைய இஸ்லாமிய நூல்களும் வெளிவரலாயின. குர்ஆனின் அரபுத் தமிழ் விரி உரைகளான தப்சீர் பத் ஹுல்கரீம், தப்சீர் பத் ஹுல் ரஹீம், புதூ ஹாதூர் ரஹ்மானியா பீதப்சீரி கலாமிர் ராப்பானியா ஆகியவை பிரசித்தி பெற்ற நூலாகும். இவை காயல்பட்டனத்திலிருந்து வெளிவந்தவை.

காயல்பட்டணம் ஷாம் சிஹாபுதீன் வலி அவர்கள் அரபுத் தமிழில் பல பாமாலைகள் இயற்றியுள்ளனர். கி. பி.1889 ஆம் ஆண்டில் "கஷ்பூர் ரான் பீ கல்பில் ஜான்" என்ற ஒரு வார ஏடும், கி பி 1906 ஆம் ஆண்டில் சென்னையிலிருந்து "அஜாயிபுல் அக்பர் (செய்தி வினோதம்) என்று ஒரு வார ஏடும் வெளிவந்துள்ளன.

பொதுவாக ஆண்களைவிட பெண்கள்தாம் இவ்வரபுத் தமிழை அதிகமாக எழுதப் படிக்க தெரிந்திருந்தனர். அக்காலத்தில் கடிதங்கள் கூட அரபுத் தமிழில் எழுதப்பட்டு வந்தன. தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் இது பிரபல்யமாக இருந்தது. தமிழ்நாட்டில் இதில் பல பாரிசி, உருது சொற்கள் கலந்து விட்ட பொழுது இலங்கையில் இது தன் நிலைகுலையாது இருந்தது.

கி.பி 8 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை அரபுத் தமிழ் சிறப்புற்று விளங்கியது. அச்சுப் பொறி வந்த பின் இதன் மதிப்பு மங்கலாயிற்று. மேலும் இதில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் பேச்சு வழக்கில் உள்ள சாதாரண சொற்களாக இருந்ததாலும் இதனுடைய நடையும், பழங்காலத்தாயிருந்ததாலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சில முஸ்லிம் தமிழ் எழுத்தாளர்கள் இதனை வன்மையாகத் தாக்கினர். இழித்தும் கூறினார்.

அதன் காரணமாகவும் அரபி மதராசாக்களில் இது வழகொழிந்ததால் தமிழ்நாட்டில் முஸ்லிம் பொது மக்களிடத்திலும், பெண்களிடத்திலும் இந்நூல்களைப் படிக்கும் ஆர்வம் அற்று போய் விட்டது. எனினும் இலங்கை வாழ் முஸ்லிம்களிடம் இது இன்றும் மதிப்புடன் விளங்குகிறது." அரபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்" என்று இதனை அங்குள்ள முஸ்லிம்கள் போற்றுகின்றனர்.

அங்கு தோன்றிய செய்கு முஸ்தபா ஆலிம் வலி " பதுகுர் ரஹ்மான் பி தப்சீர் இல் குரான்" என்ற பெயருடன் அரபுத் தமிழில் திருக்குரானுக்கு ஒரு விரிவுரை எழுதி உள்ளார். அதில் ஐந்து அத்தியாயங்களே அச்சில் வெளிவந்துள்ளன.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கடல்வழி வணிகத்துக்குத் தமிழகம் வந்த முஸ்லீம் வணிகர்கள் இஸ்லாம் தோன்றிய காலத்திலேயே தமிழகத்தின் பெருவழி என்றழைக்கப்பட்ட பாதையில் கள்ளிக்கோட்டையில் இருந்து புலிகட் வரை பரவி வாழ்ந்து தமிழக வ்ணிகமும் இஸ்லாமியக் கொள்கைகளும் கிழக்காசியாவில் பரவக் காரணமாக இருந்தார்கள்.

அவர்களே அரபிக் தமிழ் வரிவடிவத்தை உருவாக்கித் தென் தமிழகத்திலும் இலங்கையிலும் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து போற்றி வளர்த்து பள்ளிகளின் இளஞ் சிறார்களுக்கும் சிறூமிகளுக்கும் கற்பித்து வந்ததாக இணைப்பில் உள்ள ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

( நூல்: எம்.ஆர்.எம்.அப்துற்றஹீம், இஸ்லாமிய கலைக்களஞ்சியம், முதற்பாகம் )

அரபு மொழி குறித்த பாட திட்டங்கள்...

இந்தியாவில் ஏறத்தாழ அரபி மொழிக்கென்றே தனியாகக் கல்லூரிகள் கேரளம், அஸ்ஸாம் மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ளன. இந்தியப் பல்கலைக்கழகங்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் அரபி மொழியைப் பயிற்றுவிக்கின்றன. அவற்றின் கீழ் இயங்கும் கல்லூரிகளும் பல நூறுகளைத் தாண்டும்.

தமிழகத்தில் சுமார் 95 ஆண்டுகளாக மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் அஃப்ஸலுல் உலமா எனும் அரபு மொழி சார்ந்த துறை ரீதியான பட்டயம் வழங்கப்படுகின்றது. 

இதுவல்லாமல் இந்தியா முழுவதிலும் 1500 க்கும் மேற்பட்ட அரபுக்கல்லூரிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 

ஆலிம், ஃபாளில், முதஅவ்வல், முஃப்தி, என பல்வேறு பெயர்களில் பட்டயங்கள் வழங்கப்படுகின்றன. 

மொழிகள் என்பது...

மொழிகள் என்பது படைத்த ரப்புல் ஆலமீன் படைப்புகளுக்கு வழங்கியிருக்கிற மகத்தான அருட்கொடையாகும்.

ஒரு மனிதன் சக மனிதனோடு, ஒரு பறவை இன்னொரு பறவையோடு, ஒரு விலங்கு இன்னொரு விலங்கோடு தொடர்பு கொள்ள, தனது சுக துக்கங்களை பரிமாறிக் கொள்ள, தன் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திக் கொள்ள பயன்படும் ஒரு துணைச் சாதனமாக ஆக்கியிருக்கின்றான்.

இன்னும் சொல்லப்போனால் இப்பிரபஞ்சத்தில் கண்ணால் காண்கிற வானம், பூமி, காற்று, மலை, நதி, கடல் என ஒவ்வொன்றுக்கும், நம் கண்களை விட்டும் மறைந்திருக்கிற ஷைத்தான்கள், ஜின்கள், மலக்குகள் என ஒவ்வொருவருக்கும் மொழிகளை அல்லாஹ் அருட்கொடையாக வழங்கியிருக்கின்றான் என்று இஸ்லாம் கூறுகின்றது.

 

تُسَبِّحُ لَهُ السَّمَاوَاتُ السَّبْعُ وَالْأَرْضُ وَمَنْ فِيهِنَّ وَإِنْ مِنْ شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا (44)

 

ஏழு வானங்களும், பூமியும் இன்னும் அவற்றிலுள்ளவையும் அவனைத்துதி செய்த வண்ணம் உள்ளன. அவனது புகழைக் கொண்டு துதி செய்யாது பிரபஞ்சத்தில் எதுவுமே இல்லை. எனினும், அவற்றின் துதியை நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டீர்கள். நிச்சயமாக அவன் சகித்துக் கொள்ளக்கூடியவனாகவும், மிக்க மன்னிப்போனாகவும் இருக்கின்றான்”.                         ( அல்குர்ஆன்: 17: 44 )

 

وَيُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ

அவனுடைய புகழைக் கொண்டு இடியும், அவனுடைய அச்சத்தினால் வானவர்களும் தஸ்பீஹ் செய்கின்றனர்”.                      ( அல்குர்ஆன்: 13: 13 )

 

وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنْصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنْذِرِينَ (29) قَالُوا يَاقَوْمَنَا إِنَّا سَمِعْنَا كِتَابًا أُنْزِلَ مِنْ بَعْدِ مُوسَى مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ يَهْدِي إِلَى الْحَقِّ وَإِلَى طَرِيقٍ مُسْتَقِيمٍ (30) يَاقَوْمَنَا أَجِيبُوا دَاعِيَ اللَّهِ وَآمِنُوا بِهِ يَغْفِرْ لَكُمْ مِنْ ذُنُوبِكُمْ وَيُجِرْكُمْ مِنْ عَذَابٍ أَلِيمٍ (31) وَمَنْ لَا يُجِبْ دَاعِيَ اللَّهِ فَلَيْسَ بِمُعْجِزٍ فِي الْأَرْضِ وَلَيْسَ لَهُ مِنْ دُونِهِ أَوْلِيَاءُ أُولَئِكَ فِي ضَلَالٍ مُبِينٍ (32)

 

ஜின்களின் மொழி குறித்து அத்தியாயம் 34 வசனம் 14 –கிலும், அத்தியாயம் 46 வசனங்கள் 29 முதல் 32 வரையிலும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் மகத்தான அத்தாட்சி மொழி….

 

وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِلْعَالِمِينَ ()

 

வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும் நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளது. அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன         ( அல்குர்ஆன்: 30 : 22)

 

தூதுத்துவ ( ரிஸாலத் ) த்தின் அடிப்படைகளில் பிரதானமானது மொழி…..

 

وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ

 

எந்தத் தூதரையும் அவருடைய சமுதாயத்தினர் பேசும் மொழியை உடையவராகவே தான் நாம் அனுப்பி வந்திருக்கிறோம்”.      ( அல்குர்ஆன்: 14: 4 )

 

நபி {ஸல்} அவர்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட லட்சத்திற்கும் மேற்பட்ட நபிமார்கள், தூதர்கள் தத்தமது மொழியிலேயே இறைச் செய்தியை எடுத்துரைத்தார்கள். அந்த மொழியிலேயே அவர்களுக்கு வேதங்களும் அருளப்பட்டன.

 

هذا من لطفه تعالى بخلقه أنه يرسل إليهم رسلاً منهم بلغاتهم ليفهموا عنهم ما يريدون وما أرسلوا به إليهم، كما روى الإمام أحمد عن أبي ذر قال: قال رسول اللّه صلى اللّه عليه وسلم: (لم يبعث اللّه عزَّ وجلَّ نبياً إلا بلغة قومه)

 

அம்மக்களின் மொழிகளை அறிந்த தூதுவர்களை அல்லாஹ் அனுப்பியதும், அவர்களின் மொழிகளிலேயே வேதங்களை அல்லாஹ் இறக்கியருளியதும் அம்மக்கள் எளிதாக இறைச் செய்தியை விளங்க வேண்டும் என்கிற மகத்தான கிருபையின் காரணமாகத்தான் என இப்னு கஸீர் (ரஹ்) கூறுகின்றார்கள்.

 

அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ் அந்தந்த சமுதாய மக்களின் மொழிகளைப் பேசுகின்ற நபிமார்களைத் தான் தூதுவராக, நபியாக அனுப்பினான்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் ) 

அரபு மொழிக்கான சிறப்பு எங்கிருந்து வந்தது?...

முதல் மனிதர் ஆதம் அளைஹிஸ்ஸலாம் அவர்கள் பேசிய மொழி அரபியே!, சுவனத்தில் பேசப்படுகிற மொழியும் அரபியே!, திருக்குர்ஆன் அருளப்பட்ட மொழியும் அரபியே!, இறுதி இறைத்தூதர் நம் உயிரினும் மேலான முஹம்மது {ஸல்} அவர்கள் மொழியும் அரபியே! ஆகும்.

எனவே தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அரபு மொழியை சிறப்பாக்கினான். உலகில் இலகுவான, தெளிவான, எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய மொழியாக இந்த அரபு மொழி விளங்குவதாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனின் பல இடங்களில் குறிப்பிடுகின்றான்.

ஆச்சர்யமான ஒரு விஷயம் என்னவென்றால் அரபுமொழியை தாய் மொழியாக கொள்ளாத பிற மொழி அறிஞர்கள் அரபு மொழியாற்றலின் மூலமாக இந்த உம்மத்துக்கு செய்த கொடைகள் ஏராளம் தாராளம்.

திருக்குர்ஆனுக்கு அரபியில் விரிவுரை எழுதிய அறிஞர் பெருமக்களில் சிலரின்  தாய் மொழி அரபி கிடையாது.

திருக்குர்ஆனுக்கு அடுத்த படியாக விளங்குகிற ஷரீஆவின் அடிப்படைகளில் ஒன்றான நபிமொழியை தொகுத்த ஸிஹாஹ் ஸித்தா எனும் அருபெரும் ஆறு ஹதீஸ் கிரந்தங்களை தொகுத்த (புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸாஈ, இப்னு மாஜா, அபூதாவுத்) ஆறு அறிஞர்களின் தாய் மொழி அரபி கிடையாது.

இன்னும் பல்லாயிரக்கணக்கான அரபி இலக்கண, இலக்கிய, வரலாற்று, ஃபிக்ஹ் மற்றும் அகீதா நூற்களை இயற்றிய பல அறிஞர் பெருமக்களின் தாய் மொழி அரபி கிடையாது.

நான்காயிரம் வரிகளைத் தாண்டும் அரபிக் கவிதைகளை அரபிகளே வியந்து போற்றும் வகையில் வித்ரிய்யா எனும் பெயரில் அகீதா மற்றும் மதஹ் ரஸூல் {ஸல்} குறித்து இயற்றி சதகத்துல்லாஹ் அப்பா அவர்களின் தாய் மொழி தமிழாகும்.

توفي، الشيخ المحدث الأستاذ الدكتور محمد ضياء الرحمن الأعظمي الهندي السلفي الأزهري المدني الخميس الماضي يوم عرفة (ذلك اليوم المشهود) التاسع من ذي الحجة لسنة (1441هـ)عن عمر يناهز 77 عامًا قضى غالبيتها في خدمة العلم والسنة النبوية.

ولد في بيت البراهمة وسمي  (بنكيرام) ثم سمى نفسه  (إمام الدين)بعد الإسلامولما عرف بهذا في الهند وخشي من أذية الهندوس، غيره إلى (محمد ضياء الرحمن الأعظمي) ولما قدم السعودية عدل التركيب في اسمه فأصبح (محمد بن عبدالله بن عبدالرحمن الأعظمي).كان الشيخ من إحدى الأسر الهندوكية الميسورة، درس إلى المرحله الثانوية، وكان مطلعاً على الثقافات والديانات السائدة في الهند وفي نهاية المطاف قد شرح الله صدره للإسلام.وحين سمع والده وأقاربه بإسلامه قرروا منعه من ذلك فقطعوا عنه المال والدراسة، و تحمل ذلك إلى أن وصل الأمر إلى تهديده بالقتل.. ففر بدينه إلى باكستان.والتحق بمدرسة للجماعة الإسلامية التي كان أميرها الشيخ أبي الأعلى المودودي – يرحمه الله ويغفر له – فلم يستطع التوافق مع توجه هذه الجماعة الفقهي والفكري.

وانتقل إلى بلاد الحرمين ودرس في الجامعة الإسلامية ثم أكمل الماجستير والدكتوراه في جامعة الأزهر في مصر .اشتغل بالبحث في الأديان ومقارنتها.ثم تخصص في الحديث الشريف، وعين مدرساً في الجامعة وابتعث لنيل درجة الماجستير والدكتوراه من جامعة الأزهر، وعين عضواً بهيئة التدريس في الجامعة الإسلامية وتدرج في السلك الأكاديمي حتى نال الأستاذية، وعين عميداً لكلية الحديث الشريف.وهذا كله من كرم هذه البلاد المباركة وأنصافها حيث قبلته طالباً ثم منحته الجنسية بشفاعة أمين رابطة العالم الإسلامي حينذاك الشيخ محمد بن علي الحركان.

 

கடந்த 1441 துல்ஹஜ் பிறை 9 ல் மதீனா யுனிவர்ஸிட்டியில் முஹத்திஸாக பணிபுரிந்த முதுபெரும் அறிஞர் ஷைக்  ழியாவுர்ரஹ்மான் அல் அஃள்மீ அவர்கள் வஃபாத் ஆனார்கள்.

இவர்கள் 9 நூல்களை அரபியில் எழுதியிருக்கின்றார்கள். இதில் 8 நூற்கள் ஹதீஸ் துறைச் சார்ந்தது. 1 நூல் இமாம் ராஸீ (ரஹ்) அவர்கள் எழுதிய தஃப்ஸீருக்கான விரிவுரையாகும். இது மட்டும் 12 வால்யூம்கள் ஆகும்.

அடிப்படையில் இவர்கள் இந்தியாவின் உ.பி யைச் சார்ந்த உயர்ஜாதிக் குடும்பத்தில் பிறந்தவர்கள் இவரின் இயற்பெயர் பன்கிராம். அல்லாஹ் அவர்களுக்கு ஹிதாயத்தை நஸீபாக்கினான்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக பல்வேறு துன்பங்களைத் தாங்கி, கொலைவெறித்தாக்குதலில் இருந்து தப்பித்து பாகிஸ்தான் தப்பியோடி அபுல் அஃலா மௌதூதி அவர்களின் மதரஸாவில் பயின்று, அங்கிருந்து எகிப்து சென்று ஜாமிவுல் அஸ்ஹரில் பயின்று மதீனா யுனிவெர்சிட்டியிலும் பயின்று ஹதீஸ் துறையின் முதுபெரும் அறிஞராக விளங்கி அங்கேயே வஃபாத் ஆகி ஜன்னத்துல் பகீவிலே அடங்கப்பெற்றுள்ளார்கள்.

நாம் சிந்தித்துப்பார்க்க கடமைப்பட்டுள்ளோம். நாம் குறைந்த பட்ச அரபு மொழி அறிவாவது பெற்றிருக்கின்றோமா?

ஏன்? திருக்குர்ஆனையாவது முழுமையாக கற்றறிந்து ஓதுகிறவர்களாக நாம் இருக்கின்றோமா? 

நம்முடைய வளரும் தலைமுறை, அடுத்த தலைமுறையின் குர்ஆன் கற்றலில் நாம் என்ன தயாரிப்பில் இருக்கின்றோம்? 

அரபு மொழியின் சிறப்பை பேசும் நாம் திருக்குர்ஆனோடு நாம் கொண்டிருக்கிற தொடர்பையும் கொஞ்சம் சீர்தூக்கி பார்க்க வேண்டாமா?

அல் குர்ஆன் எனும் அருட்கொடை

குர்ஆனோடு ஒவ்வொரு முஸ்லிமும் கொண்டிருக்க வேண்டிய தொடர்பு என்ன என்பதை அல்லாஹ்வும், அவனது ரஸூல் மாநபி {ஸல்} அவர்களும் மிக விரிவாகவே நமக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

குறைந்த பட்சமாக இவைகளையாவது நிறைவேற்ற வேண்டும்.

1. குர்ஆனைக் கண்ணியப்படுத்த வேண்டும்

1. மகிழ்ச்சி அடையவேண்டும்.

 

قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ ()

 

அல்லாஹ் தன்னுடைய கருணையைக் கொண்டும், அருளைக் கொண்டும் இந்த திருக்குர்ஆனை இறக்கியருளினான். இந்த திருக்குர்ஆனைக் கொண்டு மக்கள் மகிழ்ச்சி அடையட்டும்! அவர்கள் சேகரித்துக் கொண்டிருக்கும் எல்லாவற்றையும் விட இது சிறந்ததாகும்என நபியே! நீர் கூறுவீராக!”           ( அல்குர்ஆன்: 10: 58 )

 

2. கண்ணியம் கொடுக்கவேண்டும்.

 

ذَلِكَ وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ ()

 

மேலும், யாரேனும் அல்லாஹ் புனிதம் என்று அடையாளப் படுத்தியவைக்கு கண்ணியம் அளிப்பாராயின் திண்ணமாக, அது இதயங்களில் உள்ள இறையச்சத்தால் விளைவதாகும்”.                                             ( அல்குர்ஆன்: 22: 32 )

 

3. தூய்மையோடு தொடவேண்டும்.

إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ () فِي كِتَابٍ مَكْنُونٍ () لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ ()

 

இது ஓர் உன்னதமான குர்ஆன் ஆகும். இது பாதுகாப்பானதொரு நூலில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. தூய்மையானவர்களைத் தவிர வேறு எவரும் இதனைத் தொடமுடியாது”.                                        ( அல்குர்ஆன்: 56: 77 – 79 )

 

4. அடக்கத்தோடும், பணிவோடும் கேட்கவேண்டும்.

 

وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ ()

 

மேலும், குர்ஆன் உங்கள் முன் ஓதப்படும் போது அதனைப் பணிவோடும், செவிதாழ்த்தி அடக்கத்தோடும் கேளுங்கள்! அல்லாஹ் உங்கள் மீதும் அருள் பொழியக்கூடும்!”.                                            ( அல்குர்ஆன்: 7: 204 )

 

5. ஷைத்தானை விட்டு பாதுகாப்பு தேடவேண்டும்.

 

فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ ()

 

மேலும், நீங்கள் குர்ஆனை ஓதத் தொடங்கும் போது, சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருங்கள்!”. ( அல்குர்ஆன்: 16: 98 )

 

6. தினம் ஒரு முறையாவது பார்க்கவேண்டும்.

 

, قَالَ :, يَقُولُ : قَالَ أَمِيرُ الْمُؤْمِنِينَ عُثْمَانُ بْنُ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ

لَوْ أَنَّ قُلُوبَنَا طَهُرَتْ مَا شَبِعَتْ مِنْ كَلامِ رَبِّنَا

 وَإِنِّي لأَكْرَهُ أَنْ يَأْتِيَ عَلَيَّ يَوْمٌ لا أَنْظُرُ فِي الْمُصْحَفِ "

 

நம்முடைய உள்ளம் தூய்மை அடைந்து விட்டால் நம்முடைய ரப்பின் வார்த்தையான திருக்குர்ஆனை ஓதுவதில் நமது ஆசை அடங்காது. திருமறை குர்ஆனை பார்க்காமல் ஒரு நாள் என்னை கடந்து செல்வதைக் கூட நான் அறவே வெறுக்கின்றேன்என உஸ்மான் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.

 

7. குர்ஆனை ஓதவேண்டும்.

فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ

 

உங்களுக்கு குர்ஆனிலிருந்து சுலபமாக எந்த அளவுக்கு ஓத முடியுமோ அந்த அளவுக்கு ஓதிக்கொள்ளுங்கள்!”.                              ( அல்குர்ஆன்: 73: 20 )

 

وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا ()

மேலும், குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுங்கள்!”.      ( அல்குர்ஆன்: 73: 4 )

 

عَنْ عَائِشَةَ ـ رَضِيَ اللهُ عَنْهَا ـ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ، وَالَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَتَتَعْتَعُ فِيهِ وَهُوَ عَلَيْهِ شَاقٌّ لَهُ أَجْرَانِ

 

குர்ஆனைத் திறனுடன் சரளமாக ஓதுகின்றவர், கடமை தவறாத கண்ணியம் மிக்க தூதுவர்களான வானவர்களுடன் இருப்பார். குர்ஆனை சிரமப்பட்டுத் திக்கித் திணறி ஓதுகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டுஎன நபி {ஸல்} அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.          ( நூல் : இப்னு மாஜா, 3777 )

 

குர்ஆனில் 323015 மூன்று லட்சத்து இருபத்தி மூன்றாயிரத்து பதினைந்து எழுத்துக்கள் இருக்கின்றன.

 

சாதாரண நாட்களில் ஒரு குர்ஆனை ஓதிமுடிப்பவருக்கு ஒரு எழுத்துக்கு பத்து நன்மைகள் வீதம் 323015 எழுத்துக்களுக்கு 3230150 முப்பத்திரண்டு லட்சத்தி முப்பதாயிரத்து நூற்றிப் ஐம்பது நன்மைகள் கிடைக்கும்.

 

குர்ஆன் அதனுடன் தொடர்பு வைப்பவரை உயர்த்தும்….

 

அலீ (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம் அது. பஸராவின் ஆளுநராக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) வீற்றிருக்கின்றார்கள்.

 

ஒரு நாள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் முக்கிய விவகாரம் குறித்து குறைஷி குலத்தின் மேன்மக்களோடு அமர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

 

عن أبي العالية: كنت آتي ابن عباس فيرفعني على السرير وقريش أسفل من السرير، فتغامز بي قريش، وقالوا: يرفع هذا العبد على السرير ؟ ! ففطن بهم ابن عباس، فقال: إن هذا العلم يزيد الشريف شرفا ويجلس المملوك على الأسرة.

 

அப்போது, ”அபுல் ஆலியாரஃபிவு இப்னு மிஹ்ரான் என்பவர்கள் அந்த அவைக்கு வருகை தருகின்றார்கள். அவர்களைக் கண்ட இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மலர்ந்த முகத்தோடு வரவேற்று, தாங்கள் அமர்ந்திருந்த இருக்கையை வலது புறமாக போட்டு, சற்று உயர்த்தி, அதிலே அவர்களை அமரச் சொல்லி தாங்கள் கீழே அமர்ந்தார்கள்.

 

சுற்றியிருந்த குறைஷி மேன்மக்கள் தங்களுக்குள் இப்னு அப்பாஸ் செய்த இந்த காரியத்தைக் கண்டீர்களா? ஒரு அடிமைக்கு எவ்வளவு மரியாதை செய்கின்றார்?” என்று பேசிக் கொண்டதோடு அபுல் ஆலியா அவர்களை கேலி பேசினார்கள்.

 

இதனைச் செவிமடுத்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குறைஷி குல மேன்மக்களை நோக்கி மார்க்க அறிவு என்பது இப்படித் தான் சிறப்புக்கு சிறப்பு சேர்க்கும்! பிற மக்களுக்கு மத்தியில் அவர்களின் கண்ணியத்தை உயர்த்தும்! ஏன்? அடிமைகளைக் கூட அரியணையில் அமர வைத்து அழகு பார்க்கும்! இதோ! நீங்கள் யாரைக் குறித்து விமர்சிக்கின்றீர்களோ இந்த அபுல் ஆலியாவை நான் உயர்த்திப் பார்ப்பதாக நீங்கள் கருதுகின்றீர்கள்.

 

உண்மை அதுவல்ல! அல்லாஹ்வின் தூய வார்த்தையான அல்குர்ஆனோடு அடிமையாக இருந்த அபுல் ஆலியா அவர்கள் கொண்டிருந்த இடைவிடாத் தொடர்பின் மூலம் இந்த உயர்வை அல்லாஹ் அவருக்கு வழங்கினான்என்றார்கள்.

 

யார் இந்த அபுல் ஆலியா?...

 

அபூபக்ர் இப்னு அபூ தாவூத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நபித்தோழர்களுக்குப் பின்னால் குர்ஆனிய அறிவைப் பரிபூரணமாக பெற்றவர்களில் முதலாமவர் அபுல் ஆலியா ரஃபிவு இப்னு மிஹ்ரான் தாபிஈ (ரஹ்) அவர்கள், அடுத்து ஸயீத் இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்கள் ஆவார்கள்.

 

பெரும்பாலான நபித்தோழர்களைச் சந்தித்ததோடு மாத்திரமல்லாமல் அவர்களிடம் இருந்து மார்க்க ஞானத்தையும் கற்றுக் கொண்டார்கள். அதிலும் குறிப்பாக, உமர் (ரலி), அலீ (ரலி) அபூதர் (ரலி) உபை இப்னு கஅப் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), இப்னு மஸ்வூத் (ரலி) ஆகிய நபித்தோழர்களிடம் மிகவும் நெருக்கத்தைப் பெற்று சன்மார்க்க அறிவைப் பெற்றிருக்கின்றார்கள்.

 

உபை இப்னு கஅப் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), ஆகியோரிடம் தலா ஒரு முறையும், உமர் (ரலி) அவர்களிடம் தலா மூன்று முறையும் முழுக்குர்ஆனையும் மனனமாக ஓதிக் காட்டியும் இருக்கின்றார்கள்.

 

அடிமை எனும் ஸ்தானத்திலிருந்து திருக்குர்ஆன் விரிவுரையாளர் எனும் நிலைக்கு….

 

ولد رُفيع بن مهران في بلاد "فارس", وعلى أرضها نشأ وترعرع, ولما شرع المسلمون بغزو بلاد فارس ليُخرِجوا أهلها من الظلمات إلى النور… وقع رفيع أسيرا في أيدي المسلمين.

ثم ما لبث أن أسلم وأقبل على كتاب الله, وتعلم حديث رسول الله صلى الله عليه وسلم, والكتابة العربية.

 

அபூபக்ர் (ரலி) ஆட்சிகாலத்தில் பாரசீகத்தை நோக்கிச் சென்ற முஸ்லிம்களின் படை பாரசீகத்தின் ஒரு பகுதியை வெற்றி கொண்டு, ஏராளமான ஃகனீமத் பொருட்கள் மற்றும் நிறைய கைதிகளோடு மதீனா நோக்கி வந்தது.

 

அந்த கைதிகளில் ஒருவராக, இணைவைப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தவர் தான் இந்த ரஃபிவு இப்னு மிஹ்ரான் அவர்கள்.

 

பனூதமீம் கோத்திரத்தைச் சார்ந்த ஸாலிஹான நபித்தோழியர்களில் ஒருவருக்கு அடிமையாக போய்ச் சேர்ந்தார்கள்.

 

அங்கு தான் ரஃபிவு இப்னு மிஹ்ரான் அவர்களின் இதயத்திற்கு அல்லாஹ் ஹிதாயத்தின் வாசலைத் திறந்து விட்டான்.

 

ஆம் நபித்தோழர்களின் வியத்தகு வாழ்வைப் பார்த்த ரஃபிவு இப்னு மிஹ்ரான் அவர்கள் கொஞ்ச நாளிலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அத்தோடு குர்ஆன் ஷரீஃபோடு அழகியதொரு தொடர்பையும் ஏற்படுத்திக் கொண்டார்கள்.

 

அவர்களோடு இன்னும் அடிமையாக இருந்த சிலரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். இவர்களின் எஜமானர்களான ஸஹாபாக்கள் தங்களுக்கு பணிவிடை செய்வதோடு ஒரு நாளில் ஒரு குர்ஆனை ஓதி முடிக்க வேண்டும் என ஆணையும் பிறப்பித்தனர். பகல், இரவு என எஜமானர்களின் பணிவிடைகளுக்கு இடையே மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் குர்ஆனை ஓதினர். எனினும் இது மனச் சோர்வையும், உடல் தளர்வையும் ஏற்படுத்தவே எஜமானர்களிடம் இது குறித்து கோரிக்கை வைத்ததும், அது இரண்டு நாளாக மாற்றப்பட்டது. அதுவும் சிரமமாக ஆகவே மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டு மூன்று நாளாக உயர்த்தப்பட்டது.

 

فكنّا نختم القرآن الكريم كل ليلة مرة، فشقّ ذلك علينا فجعلنا نختم كلّ ليلتين مرة، فشق علينا فجعلنا نختم كل ثلاث ليال مرة، فشقَّ علينا حتّى شكا بعضنا إلى بعض, فلقينا أصحاب رسول الله، صلى الله عليه وسلم.

فعلمونا أن نختم كل جمعة مرّة, فصلينا ونمنا ولم يشق علينا بعد ذلك.

 

ரஃபிவு இப்னு மிஹ்ரான் தலைமையில் சிலர் ஒன்று கூடி மூத்த ஸஹாபாக்கள் சிலரிடம் இது குறித்து முறையிட வந்தனர். அங்கே, ரஃபிவு இப்னு மிஹ்ரான் அவர்கள் நாங்கள் எங்கள் எஜமானர்களுக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் பணிவிடைகள் மற்றும் ஊழியம் செய்கின்றோம். சிறிது நேர ஓய்வு, சிறிது நேர தூக்கம் என்று போக மீதமுள்ள அனைத்து நேரங்களிலும் குர்ஆனையே ஓதிக் கொடிருக்கின்றோம்.

 

எங்களுக்கு முழுக்குர்ஆனையும் ஓதி முடிப்பதற்கு இன்னும் கூடுதலாக அவகாசம் தர வேண்டும்என்று வேண்டினார்கள்.

 

அது கேட்ட நபித்தோழர்கள் வேண்டுமானால் ஒரு ஜும்ஆவை காலக் கெடுவாக எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு ஜும்ஆவிற்கும் ஒரு குர்ஆனை ஓதி முடியுங்கள்!என்று உத்தரவிட்டார்கள்.

 

இதன் பின்னர், ரஃபிவு அவர்கள் தங்களுக்கு கிடைத்த நேரங்களில் உபை இப்னு கஅப் (ரலி), உமர் (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோரிடம் சென்று குர்ஆனை மனனமாக ஓத ஆரம்பித்தார்கள். அத்தோடு குர்ஆனுடைய விளக்கத்தையும் படித்தார்கள்.

 

ஒரு கட்டத்தில் குர்ஆனோடு அலாதியான தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட இவரைப் பார்த்த இவர்களின் எஜமானி ரஃபிவு அவர்களின் வேலைப் பளுவை குறைத்து, மார்க்கக் கல்வியை பயில அனுமதி அளித்தார்கள். குர்ஆன் மற்றும் ஹதீஸ் துறையில் சிறந்த ஞானம் பெற்றவராக உருவெடுத்ததும் இவர்களை விடுதலை செய்திட முன் வந்தார்கள்.

وقالت: اشهدوا يا معشر المسلمين أني أعتقت غلامي هذا رغبة في ثواب الله

وطمعا بعفوه ورضاه

وأنه ليس لأحد عليه من سبيل إلاّ سبيل المعروف.

اللهم إني أدّخره عندك ليوم لا ينفع فيه مال ولا بنون

 

ஒரு ஜும்ஆ உடைய நாளில் முஸ்லிம்களுக்கு மத்தியில் ரஃபிவு அவர்களை அழைத்து வந்த அவர்களின் எஜமானி முஸ்லிம்களே! அல்லாஹ்வின் மகத்தான கூலியை, மேலான மன்னிப்பை ஆதரவு வைத்து அழகிய முறையில் நான் இவரை உரிமை விடுகின்றேன்என்று கூறிவிட்டு, யாஅல்லாஹ்! இதோ! இந்த செயலை செல்வமும், பிள்ளைச் செல்வங்களும் பயன் தராத அந்த மறுமை நாளுக்காக முன் கூட்டியே நான் உன்னிடம் அனுப்பி வைக்கின்றேன்என்று பிரார்த்தித்தார்கள்.

 

ஆம்! இணைவைப்பில் ஊரிப்போயிருந்த, அடிமையாக இருந்த ரஃபிவு இப்னு மிஹ்ரான் தூய இஸ்லாத்தை ஏற்று, புனித குர்ஆனோடு ஏற்படுத்திக் கொண்ட அந்த தொடர்பு உலகின் அனைத்து இமாம்களாலும் அங்கீகரிக்கப்பட்ட முதல் நிலை திருக்குர்ஆன் விரிவுரை அறிஞராக மாறிப்போனார்கள் அபுல் ஆலியாரஃபிவு இப்னு மிஹ்ரான் தாபிஈ (ரஹ்) அவர்கள்.

 

மார்க்கப் போரில் பங்கெடுத்து தீனுக்காக வீரத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற தீராத வேட்கையும் அவரின் இதயத்தில் இடம் பெற்றிருந்தது. அதற்காக பயிற்சி மேற்கொண்டிருந்த போது கீழே விழுந்து காலில் முறிவு ஏற்பட்டது. அந்த முறிவு அவர்களுக்கு பலத்த வலியை ஏற்படுத்தியது. வலியால் துடித்த அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்ற போது, மருத்துவர்கள் உயர் சிகிச்சைகள் மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார்கள்.

 

அதன் ஒரு பகுதியாக மயக்க மருந்து பயன்படுத்தி அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றார்கள்.

 

فقال: أحضروا لي قارئاً يتقن كتاب الله، واجعلوه يقرأ علي ما تيسر من آياته، فإذا رأيتموني قد احمر وجهي واتسعت حدقتاي وثبت نظري في السماء فافعلوا بي ما شئتم.

وقرأ القارئ القرآن، فلما وقع ما ذكر، ونظر وثبت بصره في السماء نفذوا أمره ونشروا ساقه وبتروها، فلما أفاق قال له الطبيب: كأنك لم تشعر بآلام الشق والبتر؟ فقال: لقد شغلني برد حب الله وحلاوة ما سمعته من كتاب الله عن حرارة المناشير.

 

அதற்கு இசைவு தெரிவிக்காத அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் குர்ஆனை அழகிய முறையில் ஓதக் கூடியவர்களை அழைத்து என் அருகே அவர்களை ஓதச் சொல்லுங்கள்! அப்போது, உங்களின் அறுவை சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்! என்று கூறினார்கள்.

 

அவ்வாறே செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்ததும் மருத்துவர் அபுல் ஆலியா (ரஹ்) அவர்களிடம் எப்படி உங்களால் இவ்வாறு எவ்வித சலனமும் இல்லாமல் இருக்க முடிந்தது? என்று கேட்டார்.

 

அதற்கு, “படைத்த ரப்பின் நேசம் இதயத்திலும், அல்குர்ஆனின் இனிமை செவியிலும் ஊற்றுப் பிரவாகம் எடுக்கும் போது இவைகள் எல்லாம் அதற்கு முன் நின்று ஈடு கொடுக்க முடியுமா?” என்று பதில் கூறினார்கள்.

 

                                        ( நூல்: ஸியரு அஃலா மின் நுபலா ) 

 

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் அவனுடைய புனித வேதத்தோடு தொடர்பு வைத்துக் கொள்கிற நல்ல நஸீபை தந்தருள்வானாக!

 

ஆமீன்!! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!