Wednesday 3 February 2021

 

உங்களை அவமதிப்பதை

ஒரு போதும் அனுமதியோம் யாரஸூலுல்லாஹ்!!!

பாகம்: 2

 



ஆச்சர்யம் நிறைந்த ஈமானுக்கு சொந்தக்காரர்கள் யார் என்று தெரியுமா? மாநபி {ஸல்} அவர்கள் சந்திப்பதற்கு ஆவல் கொண்டிருக்கிற ஒரு சமூகம் யார் என்று தெரியுமா?

 

இந்த உம்மத்தின் பெரும் பாக்கியவான்கள் இந்த இரண்டு கேள்விக்குமான பதிலுக்குச் சொந்தக்காரர்கள் தான்.

 

இந்த உம்மத்தின் பெரும் பாக்கியவான்களான அவர்களைப் பற்றி சொன்னால் புருவம் உயர்த்தி நீங்கள் ஆச்சர்யம் கொள்வீர்கள்.

 

ஆம்! அந்த பாக்கியவான்கள் வேறு யாருமல்ல! நீங்களும் நானும் தான். ஆம்! நீங்களும் நானும் மறுமை நாள் வரை வரவிருக்கிற முஃமின்களும் தான்.

 

மாநபி {ஸல்} அவர்கள் தோழர்களோடு அமர்ந்திருந்த ஒரு சபையில் தான் இந்தஎன் சகோதரர்களைச் சந்திக்க நான் ஆவலோடு காத்திருக்கின்றேன் என்று ஆனந்தத்தோடு அறிவித்தார்கள்.

 

அதே போன்றதொரு சபையில் தான் ஆச்சர்யமான ஈமானுக்கு நீங்களும்.. நானும் சொந்தக்காரர்கள் என்கிற தரச்சான்றை வழங்கி கௌரவித்தார்கள்.

 عوف بن مالك 

 قال رسول الله صلى الله عليه وسلم

يا ليتني قد لقيت إخواني . قالوا : يا رسول الله، ألسنا إخوانك وأصحابك؟ قال : بلى، ولكن قوما يجيئون من بعدكم، يؤمنون بي إيمانكم، ويصدقوني تصديقكم وينصروني نصركم، فيا ليتني قد لقيت إخواني .

அவ்ஃப் இப்னு மாலிக் அல் அஷ்ஜயீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “என் சகோதரர்களை நான் சந்திக்க என் மனம் ஆவல் கொள்ளுதே!” என்று மாநபி {ஸல்} அவர்கள் கூறிய போது, அவையில் இருந்த தோழர்கள்அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களின் தோழர்கள் இல்லையா? நாங்கள் உங்களது சகோதரர்களாக இல்லையா?” என்று வினவ, “ஆம்! என்று கூறிய மாநபி {ஸல்} “அவர்கள் உங்களுக்கு பின்னர் வருகிற ஒரு சமூகம் உங்களைப் போன்றே அவர்கள் என்னைக் கொண்டு நம்பிக்கை கொள்வார்கள். உங்களைப் போன்றே அவர்கள் என்னை உண்மைப் படுத்துவார்கள். உங்களைப் போன்றே அவர்கள் எனக்கு உதவி செய்வார்கள்!” (அப்படியான) என் சகோதரர்களைச் சந்திக்க என் மனம் ஆவல் கொள்ளுதே!” என்று கூறினார்கள்.                                ( நூல்: முஸ்னத் இப்னு அபீ ஷைபா )

 أبي هريرة قال

قال رسول الله صلى الله عليه وسلم

 أي شيء أعجب إيمانا؟ قيل : الملائكة، قال : كيف وهم في 

 السماء يرون من الله ما لا ترون . قيل : فالأنبياء، قال : كيف وهم يأتيهم الوحي قالوا : فنحن، قال : كيف وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله، ولكن قوم يأتون من بعدي يؤمنون بي ولم يروني، أولئك أعجب إيمانا، وأولئك إخواني، وأنتم أصحابي .

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் படைப்புகளிலேயே ஆச்சர்யத்திற்குரிய ஈமான் யாருடையது தெரியுமா?” என்று கேட்டார்கள்.

 

அதற்கு, அவையிலிருந்த தோழர்கள்வானவர்களின் ஈமான்என்று பதிலளித்தார்கள். அப்போது நபி {ஸல்} அவர்கள்அவர்களின் ஈமான் எப்படி ஆச்சர்யத்திற்குரியதாய் அமையும்? அவர்கள் தான் வானில் இருந்து கொண்டு நீங்கள் பார்க்காத எத்தனையோ விஷயங்களை அல்லாஹ்வின் உதவி கொண்டு பார்த்துக் கொண்டு இருக்கின்றார்களே!” என்றார்கள்.

 

அதற்கு, நபித்தோழர்கள்நபிமார்களின் ஈமான் ஆச்சர்யத்திற்குரியதுஎன்றார்கள். அப்போது, நபி {ஸல்} “அவர்களுக்குத் தான் வஹீ மூலம் இறைத் தொடர்பு இருக்கின்றதே!” என்றார்கள்.

 

அப்போது, நபித்தோழர்கள்எங்களின் ஈமான்என்று கூறினார்கள். அதற்குஉங்களின் ஈமான் எப்படி ஆச்சர்யத்திற்குரியதாகும்? “நீங்கள் தான் அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகின்றீர்களே! உங்களோடு தான் அல்லாஹ்வின் தூதர் (நான்) வாழ்கின் (றேனே) றாரே!” என்று கூறிவிட்டு, என்றாலும் அவர்கள் எனக்குப் பின்னால் வர இருக்கிற ஒரு சமூகத்தினர் ஆவார்கள். அவர்கள் என்னைப் பார்க்காமலே என்னை ஈமான் கொள்வார்கள். அவர்களின் ஈமான் தான் ஆச்சர்யத்திற்குரியது! இன்னும், அவர்களே! என் சகோதரர்கள் ஆவார்கள். நீங்களோ என் தோழர்கள் ஆவீர்கள்!” என்று மாநபி ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஃஜம் லில் இஸ்மாயீலீ )

 

நம்முடைய ஈமானுக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்னரே தரச்சான்று வழங்கி, நம்மை சகோதரர் என்று கூறி, நம்மைச் சந்திப்பதில் ஆர்வத்தோடு இருப்பதை ஆனந்தமாக வெளிப்படுத்திய அந்த உத்தமருக்கு நாம் என்ன கைமாறு செய்யப் போகின்றோம்?.

 

நாம் செய்கிற கைமாறு மாநபி {ஸல்} அவர்களுக்கு ஈடாகுமா என்றால்? ஒரு போதும் அது ஈடாகாது என்றே கூற முடியும். ஏனெனில், நாம் நம் உயிரை விட மேலாகவும் இந்த உலகின் அருட்கைடைகள் எல்லாவற்றையும் விட உயர்வாகவும் மதிக்க வேண்டும் என நம் இறைவன் அல்லாஹ் நமக்கு கட்டளையிட்டுள்ளான்.

 

நாம் வாழ்கிற காலம் எவ்வளவு மோசமாக இருந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம்.

 

கருத்துச் சுதந்திரம் என்கிற ஒற்றை வார்த்தையை சாக்காக வைத்துக் கொண்டு எங்கிருந்தோ ஒருவன் மாநபி {ஸல்} அவர்களுக்கு உருவம் கற்பிக்கின்றான். இன்னொருவன் கார்ட்டூன் கேலிச்சித்திரம் வரைகின்றான். இன்னும் ஒருவன் அவமானகப் பேசுகின்றான். ஆபாசமாக சித்தரிக்கின்றான்.

 

மாநபி {ஸல்} அவர்களை இழிவு படுத்தி ஒருவன் திரைப்படம் எடுக்கின்றான். இன்னொருவன் நூல் எழுதி வெளியிடுகின்றான்.

 

முடிவில்லாமல் தொடரும், எல்லையில்லாமல் நீளும் இத்தகைய கழிசடைகளின், கயவர்களின் நாவிலிருந்து, பேனாவிலிருந்து, சிந்தனையிலிருந்து, காட்சிப்படுத்துதலிருந்து நம் நாயகத்தை, நம் உயிரினும் மேலான உத்தமரைக் காக்க வேண்டாமா? அவர்களின் புனிதத்தை மாண்பை உயர்த்த வேண்டாமா?

 

இன்றையத் தேதியில் சுமார் இருநூறு கோடி முஸ்லிம்களின் தலைவராகவும், இனி மறுமை நாள் வரை வரவிருக்கிற கோடான கோடி முஸ்லிம்களின் தலைவராகவும் இருக்கிற மாநபி {ஸல்} அவர்களை அவமதிப்பதை இனி உலகில் எவரும் செய்ய முன்வராதவாறு தடுப்பது நம் கடமையல்லவா?

 

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த உம்மத்திற்கு ஆற்றலை வழங்குவானாக! நாம் ஒன்றிணைந்து ஒரே குரலாய் ஒலித்து நம் மாநபி {ஸல்} அவர்களின் கண்ணியத்தை சீர் குலைப்பவர்களை எச்சரிப்போம்.

 

மாநபி {ஸல்} அவர்களை நேருக்கு நேர் நின்று விமர்சித்தவர்களும் உண்டு. புற முதுகில் நின்று இழித்துப் பேசியவர்களும் உண்டு.

 

மாநபி {ஸல்} அவர்களை அவமதித்தவர்களோடு நடந்து கொண்ட செயல்பாடுகள் குறித்து வராலாறு மூன்று செய்திகளை முன்னிறுத்துகின்றது.

 

1.அல்லாஹ் அவர்களோடு நடந்து கொண்ட விதம். 2.மாநபி {ஸல்} அவர்கள் அவர்களோடு நடந்து கொண்ட விதம். 3.ஸஹாபா சமூகம் நடந்து கொண்ட விதம் என்ற மூன்று செய்திகள் தான் அது.

 

அல்லாஹ் நடந்து கொண்ட விதம் 1…

 

மாநபி {ஸல்} அவர்களை ஏசிப் பேசிய, தூற்றிய அபூலஹப் அவனோடு அல்லாஹ் நடந்து கொண்ட விதம் குறித்து வான்மறை பேசுகிறது.

வாழ்கிற காலத்தில் இறை சாபத்தோடும் உலகம் உள்ள வரை இறை சாபத்தையும் பெற்ற அபூலஹப் இதற்கு மிகப்பெரிய உதாரணம் ஆவான்.

 

வலீத் இப்னு முகைரா இரண்டாவது மிகப்பெரிய உதாரணம் ஆவான். அல் – கலம் அத்தியாயத்தில் மூன்றில் ஒரு பகுதி இறைவசனம் இவன் குறித்தே இறங்கிருக்கிறது என்பதை நாம் அறிவோம்.

 

அல்லாஹ் நடந்து கொண்ட விதம் 2…

 

மாநபி {ஸல்} அவர்களை வாளெடுத்து வீழ்த்திட வந்த உமர், அபீ சீனியாவிற்கு சென்று முஸ்லிம்களை காவு வாங்கி துடித்த அம்ர் இப்னு அல் ஆஸ், தம் இளமைக் காலத்தின் பெரும்பகுதியை பெருமானாரையும், முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் அழித்திட வேண்டும் என்ற குறிக்கோளோடு தளபதியாய் முன்னின்று படை நடத்திய காலித் இப்னு வலீத், அபூ ஸுஃப்யான் போன்றோருக்கு ஹிதாயத்தை வழங்கி, அவர்களையே இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக அல்லாஹ் பயன்படுத்தியது நபிமொழிக் கிரந்தங்களில் வரலாற்றுப் பேழைகளில் இன்றும் வாகாய் இலங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகின்றது.

 

மாநபி {ஸல்} அவர்கள் நடந்து கொண்ட விதம் 1…

 

பெருமானார் {ஸல்} அவர்கள் தம்மைத் தூற்றியவர்களில் பெரும்பாலானவர்களை தங்களின் நற்பண்புகளாலேயே மன்னிக்கும் மனோபாவத்தாலேயே வென்றெடுத்தார்கள்.

 

ஃபத்ஹ் மக்கா வரை எண்ணிலடங்கா உதாரணங்களை, உதாரணப்புருஷர்களை நாம் அடையாளம் காட்ட முடியும்.

 

தாயிஃப் நகர மக்கள், வஹ்ஷி, ஹிந்தா, இக்ரிமா, ஸுமாமா, ஸுஹைல் இப்னு அம்ர், ஸைத் இப்னு ஸஅனா, ஸுராக்கா இப்னு மாலிக் என பட்டியல் மிக நீண்டது.

 

மாநபி {ஸல்} அவர்கள் நடந்து கொண்ட விதம் 2…

 

கஅப் இப்னு அஷ்ரஃப், உபை இப்னு கலஃப், இப்னு ஃகதல் போன்றோரிடம் கடுமை காட்டி அவர்களை கொன்றிட நபித்தோழர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தார்கள். இன்னும் சிலருக்கு எதிராக மாநபி {ஸல்} அவர்கள் இறைவனிடம் கையேந்தி அவர்களின் முடிவை கேவலமாக்கிட துஆ செய்தது என சில நிகழ்வுகளும் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

 

3.ஸஹாபா சமூகம் நடந்து கொண்ட விதம்…

 

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) தங்களின் கவித்திறன் மூலமாக மாநபி {ஸல்} அவர்களை இழித்துப் பேசியவர்களுக்கு பதிலடி கூறி மாநபி {ஸல்} அவர்களைப் பாதுகாத்தார்கள்.

 

குபைப் இப்னு அதீ (ரலி) தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி) உம்மு அம்மாரா (ரலி) ஹபீப் இப்னு ஸைத் (ரலி) போன்றவர்கள் தங்களின் உயிர்களை மாநபி {ஸல்} அவர்களின் உயிரை காக்கும் கேடயமாகப் பயன் படுத்தினார்கள்.

 

முஆத் (ரலி) முஅவ்வித் (ரலி) எனும் இரு விடலைப்பருவ இளைஞர்கள் மாநபி {ஸல்} அவர்களோடு ஒழுங்கீனமாக நடந்து கொள்கின்றவர்களோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தீர்ப்பையே தந்தார்கள்.

 

روى البخاري ومسلم في صحيحيهما من حديث عبد الرحمن بن عوف قال: بينا أنا واقف في الصف يوم بدر، فنظرت عن يميني وعن شمالي، فإذا أنا بغلامين من الأنصار، حديثة أسنانهما، تمنيت أن أكون بين أضْلَعَ منهما، فغمزني أحدهما فقال: يا عم، هل تعرف أبا جهل؟ قلت: نعم، ما حاجتك إليه يا ابن أخي؟ قال: أُخبرتُ أنه يسب رسول الله - صلى الله عليه وسلم -، والذي نفسي بيده، لئن رأيته لا يفارق سوادي سواده حتى يموت الأعجل منا، فتعجبت لذلك، فغمزني الآخر، فقال لي مثلها، فلم أنشب أن نظرت إلى أبي جهل يجول في الناس، قلت: ألا إن هذا صاحبكما الذي سألتماني، فابتدراه بسيفيهما، فضرباه حتى قتلاه، ثم انصرفا إلى رسول الله - صلى الله عليه وسلم - فأخبراه، فقال: "أيكما قتله؟" قال كل واحد منهما: أنا قتلته، فقال: "هل مسحتما سيفيكما؟" قالا: لا، فنظر في السيفين، فقال: "كلاكما قتله، سلبه لمعاذ بن عمرو بن الجموح" وكانا معاذ بن عفراء، ومعاذ بن عمرو بن الجموح

 

பத்ருப் போரின்போது நான் (படை) அணியில் நின்றிருந்த நேரத்தில் என் வலப்பக்கமும் இடப் பக்கமும் பார்த்தேன். என்னருகே (இரண்டு பக்கங்களிலும்) இளவயதுடைய அன்சாரிச் சிறுவர்கள் இருவர் நின்றிருந்தார்கள். அப்போது, 'அவர்களை விடப் பெரிய வயதுடையவர்களுக்கிடையே நான் இருந்திருக்கக் கூடாதா' என்று நான் ஆசைப்பட்டேன். அவர்களில் ஒருவர் என்னை நோக்கிச் கண் சாடையிட்டு, 'என் பெரிய தந்தையே! நீங்கள் ஆபூ ஜஹ்லை அறிவீர்களா?' என்று கேட்டார்.

நான், 'ஆம் (அறிவேன்); உனக்கு அவனிடம் என்ன வேலை? என் சகோதரர் மகனே!" என்று கேட்டேன். அதற்கு அச்சிறுவர், 'அவன் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் திட்டுகிறான் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நான் அவனைப் பார்த்தால் எங்களில் எவர் விரைவில் மரணிக்க வேண்டியுள்ளதோ அவர் (அதாவது எங்கள் இருவரில் ஒருவர்) மரணிக்கும் வரை அவனுடைய உடலை என்னுடைய உடல் பிரியாது (அவனுடன் போரிட்டுக் கொண்டேயிருப்பேன்)" என்று கூறினார்.

இதைக் கேட்டு நான் வியந்து போனேன். அப்போது மற்றொரு சிறுவரும் கண்சாடை காட்டி முதல் சிறுவர் கூறியதைப் போன்றே கூறினார். சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் அபூ ஜஹ்ல் மக்களிடையே சுற்றி வருவதைக் கண்டு, 'இதோ நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி!" என்று கூறினேன். உடனே, இருவரும் தங்கள் வாட்களை எடுத்து போட்டி போட்டபடி (அவனை நோக்கிச்) சென்று அவனை வெட்டிக் கொன்றுவிட்டார்கள்.

பிறகு, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று அபூ ஜஹ்லைக் கொன்றுவிட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'உங்களில் யார் அவனைக் கொன்றது?' என்று கேட்டார்கள். அவர்களில் ஒவ்வொரு வரும், 'நானே (அவனைக் கொன்றேன்)" என்று பதிலளித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'உங்கள் வாட்களை நீங்கள் (இரத்தக் கறை போகத்) துடைத்து விட்டீர்களா?' என்று கேட்டார்கள். இருவரும், 'இல்லை" என்று பதிலளித்தார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாட்கள் இரண்டையும் நன்கு பார்த்துவிட்டு, 'நீங்கள் இருவருமே அவனைக் கொன்றிருக்கிறீர்கள். (முஆத் இப்னு அம்ர்டைய வாளில் ஆழமான இரத்தக் கறை தென்படுவதால்) 'அபூ ஜஹ்லுடைய உடலில் இருந்து எடுத்த பொருள்கள் முஆத் இப்னு அம்ர் இப்னி ஜமூஹுக்கு உரியவை! என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்என அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அறிவித்துவிட்டு, அவ்விருவரும் முஆத் இப்னு அம்ர் (ரலி) மற்றும் முஅவ்வித் இப்னு அம்ர் (ரலி) ஆவார்கள் என்று கூறினார். ( நூல்: புகாரி )

 

நம் உணர்வு எப்படி இருக்க வேண்டும்...

 

அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் வெற்றி கொண்ட எகிப்தில் கிருத்தவர்களும் இருந்தார்கள். அவர்கள் யாரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று நிர்பந்திக்கப் படவில்லை.

 

கிருத்தவர்கள் தங்களுடைய வீதியில் ஏசுநாதரின் சிலையை வைத்திருந்தார்கள். இஸ்லாத்தில் சிலைவணக்கம் கூடாது, என்றாலும் அவர்களுக்கு முழு மத சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. ஒரு நாள் அவர்களுடைய அந்த சிலை தாக்கப்பட்டிருந்தது. சிலையின் மூக்குப்பகுதி உடைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட கிருத்தவர்கள் ஆத்திரமடைந்தனர்.

 

கண்டிப்பாக இஸ்லாமிய இராணவத்தினர் யாராவது தான் இதை செய்திருக்க வேண்டும். அவர்கள் தான் சிலைவணக்கத்திற்கு எதிரானவர்கள், என்று கூறி இந்தத் தகவலை ஊர் முழுவதும் பரப்பினர். மாலை நேரத்திற்குள் எல்லா பகுதிக்கும் செய்தி பரவிவிட்டது. இதற்கு கண்டிப்பாக பலிவாங்க வேண்டும், என்ற நோக்கத்துடன் கிருத்தவர்களுடைய ஒரு குழு பேராயரின் தலைமையில் எகிப்தின் ஆட்சியர் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்களிடம் சென்றனர்.

 

அம்ர் (ரலி) அவர்கள் தூதுக்குழுவினரை வரவேற்று கண்ணியப்படுத்தி வந்த நோக்கம் பற்றி விசாரித்தார்கள். சிலை உடைத்த சம்பவத்தைக் கூறி இதை ஒரு முஸ்லிம் வீரர் தான் செய்திருக்க வேண்டுமென்று கூறினர். அம்ருபினுல் ஆஸ் (ரலி) அவர்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள்.

 

நீங்கள் ஏசுவின் மீது தெய்வபக்தி கொண்டிருப்பதால் உங்களில் யாரும் அப்படி செய்திருக்க மாட்டார்கள். இஸ்லாத்தில் சிலை வணக்கம் கூடாது, என்பதால் எங்களில் யாராவது ஒரு நபர் தான் செய்திருக்க வேண்டும், என்று ஒப்புக்கொண்டார்கள்.

 

பிறகு, நீங்கள் அந்தச் சிலையை சரி செய்து கொள்ளுங்கள். அதற்கான செலவை நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன். என்றும் கூறினார்கள். ஆனால், உடைந்த மூக்கு எங்களிடம் இல்லை. அப்படியே இருந்தாலும் அதை வைத்து சரிசெய்வது சாத்தியமில்லை. நாங்கள் ஏசுவை கடவுளின் குமாரனாக நம்பியிருக்கிறோம். இப்படிபபட்ட விஷயத்தில் சில பைசாக்களை வாங்கிக்கொண்டு எப்படி பொறுமையாக இருக்க முடியும்?, என்று கேட்டார்கள்.

 

எகிப்தின் ஆட்சியர், அப்படியானால் என்ன செய்யலாம்? என்று கேட்டார்கள். அப்போது கிருத்தவர்கள் முஸ்லிம்களின் மதப்பற்றைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் நீங்கள் முஹம்மது (ஸல்) உடைய சிலையை வைத்தால் நாங்களும் அதே போன்று..... என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

 

இந்த வாசகத்தைக் கேட்டவுடன் அம்ருப்னுல் ஆஸுடைய முகம் சிவந்துவிட்டது. கோபத்தில் வாளை எடுக்க நாடினார்கள். அந்த இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் அடுத்த வினாடி வந்திருந்த குழுவினரின் தலைகள் உருண்டிருக்கும்.

 

எனினும் தங்களை கட்டுப்படுத்திக்கொண்டார்கள். சினத்தை அடக்கிக் கொண்டார்கள். கோபத்தின் வேகத்தில் அங்குமிங்கும் நடந்து கெண்டிருந்தார்கள். கிருத்தவர்கள் இன்று, முதல் தடவையாக ஆட்சியாளரின் கோபத்தப் பார்க்கிறார்கள்.

 

சிறிது நேரத்திற்குப் பின் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் நீங்கள் நாகரிகமற்றவர்களாக இருக்கிறீர்கள். நபியை அவமரியாதை செய்கிறீர்கள். உங்களை கொன்று விடவேண்டுமென்றே உள்ளம் நாடுகிறது. நாங்கள் எங்களுடைய நபியின் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறோம்? என்று உங்களுக்குத் தெரியாது.

 

எங்களுடைய பிள்ளைகள் எங்களுக்கு முன்னால் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடக்கலாம். எங்களுடைய சொத்துக்களெல்லாம் சூறையாடப்படலாம். ஏன் எங்களையே கூட துண்டு துண்டாக வெட்டபட்டாலும் பரவாயில்லை. இவற்றையெல்லாம் கூட சகித்துக் கொள்ளலாம். ஆனால் எங்களின் உயிரினும் மேலான எங்கள் நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் விதமாக ஒரு சிறு வார்த்தையைக் கூட எங்களால் தாங்கிக் கொள்ளமுடியாது.

 

நீங்கள் இப்படிப் பேசி எங்களுடைய உள்ளத்தை தாங்கமுடியாத துயரத்தில் ஆழ்த்திவிட்டீர்கள். இஸ்லாத்தில் சிலை வணக்கம் கூடாது, என்பது உங்களுக்குத் தெரியாதா? நாங்கள் சிலையை மாரியாதைக்குரிய பொருளாக கருதுவதுமில்லை. நாங்கள் சிலைகளை செய்வதுமில்லை. விற்பதுமில்லை.

 

நபியவர்களுக்கு சிலை வடிப்பது பற்றி எங்களுடைய கற்பனையில் கூட வரமுடியாது. உங்களுடைய இந்த வேண்டுகோள் வீணானது. இப்பொழுது உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கே நீங்கள் தகுதியற்றவர்களாகி விட்டீர்கள். எனினும் நான் உங்களை புறக்கணிக்கவில்லை. இது தவிர ஏதாவது நல்ல யோசனை இருந்தால் சொல்லுங்கள்.

 

உங்களுடைய மனதும் திருப்தியடைய வேண்டும். நீங்கள் கண்ணியமாகக் கருதும் ஏசுநாதரின் சிலை உடைக்கப் பட்டிருபபதால் உங்களுடைய மனம் வேதனைப்பட்டிருக்கும். நபி (ஸல்) அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விட எங்களில் யாராவது ஒருவருடைய மூக்கை கூட நீங்கள் வெட்டிக்கொள்ளலாம், என்று அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

 

இதைக் கேட்டுவிட்டு தூதுக்குழவினர் உங்களை வேதனைப் படுத்தியதற்காக நாங்கள் கைசேதப்படுகிறோம்.

 

நீங்கள் நபியின் மீது இவ்வளவு பிரியம் வைத்திருப்பீர்கள், என்று நாங்கள் நினைக்கவில்லை. இல்லையானால் நாங்கள் இப்படி அவமரியாதையாக எதையும் பேசியிருக்க மாட்டோம். என்று கூறிவிட்டு நீங்கள் கூறியது போலவே முஸ்லிம்களில் யாராவது ஒருவரின் மூக்கை நாங்கள் வெட்டிக் கொள்கிறோம். அதற்காக மக்களை ஓரிடத்தில் ஒன்று திரட்டுங்கள். எல்லாருக்கும் முன்னால் இது நடக்க வேண்டும் என்று கூறினார்கள்.

 

(ஒரு சிலை உடைப்புக்காக படைப்புகளில் சிறந்த ஒரு மனிதரின் மூக்கை உடைக்க வேண்டும், என்று கோருகின்றனர். எனினும் மதஉணர்வுக்கு மரியாதை கொடுத்து இந்த கோரிக்கையை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டனர்.) மறுநாள் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரு மைதானத்தில் திரண்டனர். அங்கு இஸ்லாமிய இராணுவமும் இருந்தது. ஆனால் அவர்கள் யாருக்கும் எதற்காக இங்கு அழைக்கப் பட்டிருக்கிறோம், என்று தெரியாது.

 

கடைசியில் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் ஒரு குதிரையில் வந்து இறங்கினார்கள். பாதிரியும் அங்கு வந்து சேர்ந்தார். மக்களுக்கு முன்னால் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் நின்று நாம் ஏன் இங்கு கூடியிருக்கிறோம்? என்று தெரியுமா, என்று கேட்டுவிட்டு வீதியில் வைக்கப்பட்டிருந்த ஏசுநாதரின் சிலை உடைக்கப்பட்டிருக்கிறது. இதனால் மனவேதனையடைந்த கிருத்தவர்கள் தங்கள் சார்பாக ஒரு குழுவை என்னிடம் அனுப்பிவைத்தனர். அவர்கள் கிருத்தவர்கள் யாரும் அச்சிலையை உடைக்கமாட்டார்கள். இந்த வேலையை ஒரு முஸ்லிம் தான் செய்திருக்க வேண்டும், என்று கூறினர்.

 

நானும் அவர்களுடைய வாதத்தை ஏற்றுக்கொண்டாக வேண்டும். ஏனெனில் கிருத்தவர்கள் ஏசுநாதரின் சிலையை கண்ணியப்படுத்துபவர்கள். எனவே, அவர்கள் அப்படிச் செய்திருக்க முடியாது. முஸ்லிம்களில் யாராவது தான் உடைத்திருக்க வேண்டும். இஸ்லாத்தில் சிலை வணக்கம் கூடாது. அதில் நம்பிக்கையும் இருக்கக் கூடாது. சிலை வடிப்பதோ அதை விற்பதோ இஸ்லாத்தில் விலக்கப்பட்டிருந்தாலும் மாற்று மதத்தவர்களின் மதநம்பிக்கையை நாம் புண்படுத்தி அவர்களுடைய மனவேதனைக்கு காரணமாககக் கூடாது, என்றும் நமக்கு கட்டளையிட்ப பட்டிருக்கிறது.

 

எனவே, அவர்களுடைய இந்த மனவேதனைக்கு பலிவாங்குவதற்காக நம்மில் யாராவது ஒருவரின் மூக்கை அவர்கள் அறுத்துக் கொள்ளலாம், என்று முடிவாகியிருக்கிறது, என்று கூறிவிட்டு அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் தலைமைப் பாதிரியிடம் நான் தான் ராணுவத் தளபதியாக இருககிறேன். இந்நகரத்திற்கு ஆட்சியாளராக இருக்கிறேன்.

 

இந்நகர மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து பத்திரத்தில் நான் தான் எழுதிக்கொடுத்திருக்கிறேன். எனவே மக்களுக்கு ஏதாவது கஷ்டம் நேர்ந்தாலும் அதற்கு நான் தான் முழுப் பொறுப்பு. எனவே, என்னுடைய மூக்கை வெட்டிக்கொள்ளுங்கள், என்று கூறி வாளை உருவி பாதிரியிடம் கொடுத்தார்கள்.

 

மக்கள் திகைத்துப் போய் நின்றனர். இதைக் கண்ட ஒரு ராணுவ தளபதி, ஏன் எங்களில் ஒருவருடைய மூக்கு வெட்டப்படக்கூடாது? என்று கேட்டார். அவருக்கு பதில் சொல்வதற்கு முன் இஸ்லாமியப் படையின் ஒவ்வொரு வீரரும் முன்வந்தனர். ஆனால் அம்ருபினுல் ஆஸ் (ரலி) அனைவரையும் கண்டித்தார்கள். யாரும் இங்கு வரவேண்டாம், என்று உத்தரவிட்டார்கள். இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் ஒரு ராணுவ வீரர் கூட்டத்திலிருந்து ஓடி வந்தார்.

 

தன்னுடன் உடைந்த ஒரு மூக்கையும் கொண்டு வந்தார். நான் தான் உடைத்தேன். என்னுடைய மூக்கை வெட்டுங்கள், என்று கூறினார். இதை எதிர்பார்க்காத நகர மக்கள் திகைத்துப் போய் நின்றனர். உடனே பாதிரி வாளை அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்களிடம் கொடுத்து விட்டு நீங்கள் கிருத்துவ மதத்துக்கு முழுமையான முன்மாதிரி. நீதம், நேர்மையின் மறுஉருவமாக இருக்கிறீர்கள். யாருடைய மதத்தை நீங்கள் பரப்பிக் கொண்டிருக்கிறீர்களோ அவர் எவ்வளவு பரிசுத்தமான புனிதாராக இருப்பார்!

 

அந்த மனிதர் (நபி ஸல்) அவர்களுடைய காலத்தில் நான் இருந்திருந்தால் அவர்களுடைய பாதங்களை கழுவிக் குடித்திருப்பேன். ஈஸா (அலை) அவர்களுடைய சிலையை உடைப்பது தவறு தான். ஆனால் அந்த தவற்றுக்காக உங்களிடம் பலிவாங்குவது மிகப்பெரும் அநியாயம். நான் பேராயர் என்ற அடிப்படையில் மக்களின் சார்பாக உங்களை மன்னித்துவிட்டேன். உங்களுடைய ஆட்சி கியாமத் நாள் வரை இருக்கட்டும், என்று கூறினார்.

 

பாதிரியின் இந்த உரை மக்களுடைய மனதையும் தட்டியெழுப்பியது. பிறகு தலைமைப் பாதிரி முன்வந்து அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்களுடைய கரத்தைப் பிடித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். இதைப் பார்த்து விட்டு கிருத்தவர்களில் அதிகமானோர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். மற்றவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர். (நூல்: குஸ்தாகெ ரஸூல் கீ சஸா பஜபானெ சைய்யித்னா முஹம்மத் முஸ்தஃபா (ஸல்)...) (நன்றி: நிஜாம் யூஸுஃபி.ப்ளாக்ஸ்பாட்)

 

ஆர்ப்பாட்டங்களில் பேசும் தலைவர்களின் கவனத்திற்கு…

 

தற்போது பரவலாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

 

பல்வேறு அரசியல் மற்றும் அமைப்புகள், இயக்கங்களின் தலைவர்கள் ஆக்ரோஷமாக பேசுவதை பார்த்தும் கேட்டும் வருகின்றோம்.

 

நரம்பு புடைக்க, இரத்தம் சுண்ட வார்த்தைகளை பிரயோகிப்பதை நாம் கேட்க முடிகின்றது. கூட்டத்தில் உள்ளவர்களும் நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் என்று உரத்துக் கூறுகின்றார்கள். எனினும் நிதானம் தேவை.

 

வீரம் முக்கியமல்ல… விவேகமே முக்கியம்…

 

عن عكرمة، عن ابن عباس قال: أسرت الروم عبد الله بن حذافة السهمي، صاحب النبي صلى الله عليه وسلم، فقال له الطاغية: تنصّر وإلا ألقيتك في البقرة، لبقرة من نحاس، قال: ما أفعل. فدعا بالبقرة النحاس فملئت زيتاً وأغليت، ودعا برجل من أسرى المسلمين فعرض عليه النصرانية، فأبى، فألقاه في البقرة، فغذا عظامه تلوح، وقال لعبد الله: تنصّر وإلا ألقيتك. قال: ما أفعل. فأمر به أن يلقى في البقرة فبكى، فقالوا: قد جزع، قد بكى: قال ردوه. قال: لا ترى أني بكيت جزعاً مما تريد أن تصنع بي، ولكني بكيت حيث ليس لي إلا نفسٌ واحدة يفعل بها هذا في الله، كنت أحب أن يكون لي من الأنفس عدد كل شعر في، ثم تسلّط علي فتفعل بي ذها. قال: فأعجب منه: وأحبّ أن يطلقه، فقال: قبل رأسي وأطلقك. قال: ما أفعل. قال تنصّر وأزوجك بنتي وأقاسمك ملكي. قال: ما أفعل. قال قبل رأسي وأطلقك وأطلق معك ثمانين من المسلمين. قال: أما هذه فنعم. فقبّل رأسه، وأطلقه، وأطلق معه ثمانين من المسلمين. فلما قدموا على عمر بن الخطاب قام إليه عمر فقبل رأسه، قال: فكان أصحاب رسول الله صلى الله عليه وسلم يمازحون عبد الله فيقولون: قبلت رأس علج، فيقول لهم: أطلق الله بتلك القبلة ثمانين من المسلمين.

 

அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபதுஸ் ஸஹ்மீ (ரலி) அவர்கள், இஸ்லாத்தை ஆரம்பத்திலேயே ஏற்றுக் கொண்ட நற்பேறு பெற்றவர்கள். 

 

ஹபஷாவிற்கு ஹிஜ்ரத் மேற்கொண்ட புனிதர்களில் ஒருவர். பத்ரில் கலந்து கொண்டு சிறப்பாக பங்களித்த பாங்கான வீரரும் கூட.

 

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கிஸ்ரா மன்னனுக்கு இவர்களிடம் தான் இஸ்லாமிய அழைப்பை ஏந்திய கடிதத்தை கொடுத்தனுப்பினார்கள்.

 

இன்னும் பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க கௌரவத்திற்கு சொந்தக்காரர் தான் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபதுஸ் ஸஹ்மீ (ரலி) அவர்கள்.

 

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ரோமை நோக்கி அனுப்பப்பட்ட ஒரு படைக்கு அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபதுஸ் ஸஹ்மீ (ரலி) தளபதியாக நியமிக்கப் பட்டார்கள்.

 

நீண்ட போராட்டத்திற்கு பின் முஸ்லிம் படையினர் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

 

முஸ்லிம்கள் கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். அப்துல்லாஹ் (ரலி) தளபதியல்லவா? கொஞ்சம் கூடுதலாகவே சித்ரவதை செய்யப்பட்டார்கள்.

 

அவர்களுக்கு முன்னால் தோன்றிய ரோம அரசன் இஸ்லாத்தை விட்டு விடுமாறு கூறி கட்டாயப்படுத்தினான். தொடர்ந்து சித்ரவதையை மேற்கொள்ளுமாறு தம் பணியாளர்களுக்கு கட்டளையிட்டான்.

 

ஆனால், கொஞ்சம் கூட இசைந்து கொடுக்க வில்லை அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்.

 

உடனடியாக மிகப்பெரிய அடுப்பு தயார் செய்யப்பட்டு மிகப் பிரமாண்டமான அண்டா வரவழைக்கப்பட்டு அண்டா முழுவதும் நீரால் நிரப்பப்பட்டது.

 

தீ மூட்டப்பட்டு, தண்ணீர் கொதிக்க வைக்கப்பட்டது. கொதிக்கும் தண்ணீருக்கு முன்னால் கொண்டு வரப்பட்ட அப்துல்லாஹ் (ரலி) அவர்களை நோக்கிநீர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டால் உம்மை நான் விட்டு விடுகின்றேன்என்றான் அரசன்.

 

ஒரு போதும் நான் அத்தகைய இழிவான காரியத்தை செய்ய மாட்டேன் என்று கூறினார் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்.

 

கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த முஸ்லிம்களில் ஒருவரை பிடித்து கொதிக்கும் வெந்நீருக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தி இஸ்லாத்தை விட்டு விட்டால் உம் உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம் என்ன சொல்கிறாய்? என்று கேட்டான் அரசன்.

 

என் உயிரை விட இஸ்லாமே மேலானது என்றார் அவர். உடனே கொதிக்கும் நீரில் தூக்கி போட்டான். கை வேறு கால் வேறு என உடலின் அத்துணை அங்கங்களும் பிரிந்து போனது. இதைக் கண்ணுற்ற அப்துல்லாஹ் (ரலி) அப்படியே கதறுகின்றார்கள்.

 

மீண்டும் இன்னொரு முஸ்லிம் கொண்டு வரப்பட்டு அது போன்றே கொடூரமாக கொலை செய்யப்படுகின்றார்.

 

மீண்டும் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் முன் வந்த அரசன் அடுத்து நீ தான் என்ன சொல்கின்றாய்? மதம் மாறுகின்றாயா? இல்லையா? என்று கேட்டான்.

 

அவர்கள் மறுக்கவே, தலை கீழாக கட்டப்பட்டு கொதிக்கும் நீரின் மேலாக தொங்க விடப்படுகின்றார்கள். ஒரு கட்டத்தில் தேம்பி தேம்பி அழுகின்றார்கள்.

 

இந்த செய்தி அரசனுக்கு தெரிவிக்கப்பட்டு, அரசன் அவர்களை அவிழ்த்து விடச் சொல்லி அருகில் அழைத்து அழுததின் காரணம் என்ன என்று கேட்டான்.

 

நான் ஒன்றும் நீ ஏற்பாடு செய்திருக்கின்ற இந்த தண்டனையைக் கண்டு அஞ்சி நடுங்கி அழவில்லை. மாறாக, என்னிடம் சன்மார்க்கத்திற்காக கொடுப்பதற்கு இந்த உயிரைத் தவிர வேறு உயிரை என்னுள் அல்லாஹ் படைக்கவில்லையே என்று தான்.

 

அல்லாஹ் மாத்திரம் என் தலைமுடியின் அளவுக்கு உயிர் கொடுத்திருப்பானேயானால் அவையனைத்தையும் சத்திய மார்க்கத்திற்கு சன்மானமாக வழங்கியிருப்பேனே! என்று நினைத்து தான் நான் அழுகின்றேன் என்றார்கள்.

 

இதுவரை மரணத்தின் விளிம்பில் நிற்கிற எத்தனையோ மனிதர்களின் கெஞ்சல்களை கேட்டுப் பழகிய அரசனுக்கு அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் இந்த அணுகுமுறை புதிதாகத் தோன்றியது.

 

அப்படியே ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே சென்ற அரசன் அவரை விடுவிக்க ஆணை பிறப்பித்தான். அருகில் அழைத்த அரசன் நீர் கிறிஸ்துவனாக மதம் மாறிவிடு! உமக்கு எனது மகளை திருமணம் செய்து தருகின்றேன். எனது ஆட்சியில் பாதி நிலப்பரப்பை ஆளும் அதிகாரத்தைத் தருகின்றேன்என்றான். 

 

ஒரு போதும் நான் அதற்கு சம்மதிக்க மாட்டேன் என்று கூறினார்.

அதற்கு அந்த அரசன்என் நெற்றியில் முத்தமிட்டால் நான் உம்மையும் உம்மோடு சிறை பிடித்திருக்கிற 80 நபர்களை விடுதலை செய்து விடுகின்றேன்என்று கூறினான்.

 

அதற்கு, அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபத்துஸ் ஸஹ்மீ (ரலி) அவர்கள் அப்படி என்றால் உலகில் நீ தான் மிகச் சிறந்த மனிதன் இப்போதே உம் நெற்றியின் மீது முத்தமிடுகின்றேன்என்று கூறி முத்தமிட்டார்கள்.

 

சக தோழர்களை விடுவித்த மகிழ்ச்சியில் மதீனா நோக்கி வந்த அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபத்துஸ் ஸஹ்மீ (ரலி) அவர்களை மதீனாவின் எல்லையில் பெரும் கூட்டத்தோடு வந்து நின்று வரவேற்றார்கள் கலீஃபா உமர் (ரலி) அவர்கள்.

 

சுற்றியிருந்த மக்களில் சிலர் உயிருக்கு பயந்து எதிரியின் நெற்றியில் முத்தமிட்டு வந்த கோழை என்பதாக விமர்சித்து அப்துல்லாஹ் (ரலி) அவர்களை கேலி பேசினர்.

 

உடனே, உமர் (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா (ரலி) அவர்களின் நெற்றியில் முத்தம் பதித்துவிட்டு சுற்றியிருந்த மக்களை நோக்கி அவர் கொடுத்த ஒரு முத்தம் தான் 80 முஸ்லிம்களின் உயிரையும், ஈமானையும் காப்பாற்றியுள்ளதுஎன்று கூறினார்கள்.

 

போராட்டக்களங்களை இன்னும் தீவிரப்படுத்துவோம்…

 

நாம் மதிக்கின்ற ஒன்று, நாம் பாதுகாக்கிற ஒன்று சேதப்படுத்தப்படுமானால், நம்மிடம் இருந்து பறிக்கப்படுமானால் அதற்காக போராட வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

 

جاء رجل إلى رسول الله، فقال: يا رسول الله، أرأيت إن جاء رجل يريد أخذ مالي؟ قال: "فَلاَ تُعْطِهِ مَالَكَ". قال: أرأيت إن قاتلني؟ قال: "قَاتِلْهُ". قال: أرأيت إن قتلني؟ قال: "فَأَنْتَ شَهِيدٌ". قال: أرأيت إن قتلته؟ قال: "هُوَ فِي النَّارِ

مسلم: كتاب الإيمان

 

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வந்து... அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் என் பொருளை அபகரிக்க வந்தால் நான் என்ன செய்ய வேண்டும்? எனக் கேட்டார்.

 

அதற்கு அண்ணலார் உன் பொருளை அவன் கைப்பற்றிவிடாமல் நீ பாதுகாக்கவேண்டும் என்று பதில் கூறினார்கள்.

 

நான் அவனை தடுக்கிறபோது, அவன் என்னிடம் சண்டையிட்டால் இப்போது நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் மீண்டும் கேட்டார்.

 

அதற்கு நபி ஸல் அவர்கள் நீ அவனுடன் போராடியேனும் உன் உரிமையை மீட்க வேண்டும்  என்றார்கள்.

 

அப்படி அவனிடம் நான் போராடும் போது அவன் என்னை கொலை செய்துவிட்டால் இப்போது என் நிலை என்ன?” என்று அவர் கேட்ட போது...நீ மார்க்கப்போராளி எனும் ஷஹீது அந்தஸ்தைப் பெறுவீர். என்று மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

 

சரி! நான் அவனை கொலை செய்து விட்டால் இப்போது என்ன சொல்கிறீர்கள்?”  என்று அவர் கேட்டதும் அப்போது அண்ணலார்அவன் நரகவாதியே! என்று பதில் கூறினார்கள்.                                                                                      (  நூல்: முஸ்லிம் )

 

உலக வாழ்வின் அலங்காரம் என்றும், சோதனை என்றும் அல்லாஹ்வாலும், அவன் தூதராலும் வர்ணிக்கப்படுகிற பொருளாதாரத்தைப் பாதுகாக்கவே போராட அனுமதி இருக்கிறது எனும் போது அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தங்களின் இறுதிப்பேருரையின் போது கஅபாவின் மேன்மையை விட ஓர்  இறைநம்பிக்கையாளனின் மானம், மரியாதை, செல்வம், உயிர் உயர்வானது என்று கூறினார்களே அத்தகைய உயர்வான ஒன்றிற்காக எந்தளவு ஒரு முஃமின் முக்கியத்துவம் தந்து போராட முன்வர வேண்டும் என்பதை மேற்கூறிய நபிமொழி நமக்கு உணர்த்துகின்றது.

 

2. வீரியம் நிறைந்த போராட்டமாக இருக்க வேண்டும்....

 

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ الْمُقْرِي ، قَالَ : نَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ ، قَالَ : نَا يُوسُفُ بْنُ يَعْقُوبَ الْقَاضِي ، قَالَ : نَا نَصْرُ بْنُ عَلِيٍّ ، قَالَ : نَا صَفْوَانُ بْنُ عِيسَى ، عَنِ ابْنِ عَجْلانَ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ

  أَنَّ رَجُلا جَاءَ إِلَى النَّبِيِّ  صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشْكُو جَارَهُ ، فَقَالَ لَهُ النَّبِيُّ  صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : اصْبِرْ ، ثُمَّ أَتَاهُ الثَّانِيَةَ يَشْكُو ، فَقَالَ لَهُ النَّبِيَّ ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : اصْبِرْ ، ثُمَّ أَتَاهُ يَشْكُو ، فَقَالَ لَهُ : اصْبِرْ ، ثُمَّ أَتَاهُ الرَّابِعَةَ يَشْكُوهُ ، فَقَالَ : اذْهَبْ فَأَخْرِجْ مَتَاعَكَ فَضَعْهُ عَلَى ظَهْرِ الطَّرِيقِ ، فَجَعَلَ لا يَمُرُّ بِهِ أَحَدٌ إِلا قَالَ لَهُ : شَكَوْتُ جَارِي إِلَى رَسُولِ اللَّهِ ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : اذْهَبْ فَأَخْرِجْ مَتَاعَكَ فَضَعْهُ عَلَى ظَهْرِ الطَّرِيقِ ، فَجَعَلَ لا يَمُرُّ بِهِ أَحَدٌ إِلا قَالَ : اللَّهُمَّ الْعَنْهُ ، اللَّهُمَّ أَخِّرْهُ ، قَالَ : فَأَتَاهُ ، فَقَالَ : يَا فُلانُ ، ارْجِعْ إِلَى مَنْزِلِكَ فَوَاللَّهِ لا أُوذِيكَ أَبَدًا "

 

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து தன் அண்டைவீட்டாரைப் பற்றி புகார் செய்தார்.'நீர் சென்று பொறுமையாக இரு! என்று கூறினார்கள். அந்த மனிதர் (மீண்டும்) இரண்டாம் தடவை வந்து தன் அண்டைவீட்டாரைப் பற்றி புகார் செய்தார்.'நீர் சென்று பொறுமையாக இரு! என்று நபி (ஸல்) கூறினார்கள். மூன்றாம் தடவை (புகார் கூற) வந்த போது நபி (ஸல்) அவர்களிடம் ''நீர் சென்று உன் வீட்டுப் பொருட்களையெல்லாம் வீதியில் எறி! மக்கள் என்னவென்று விசாரிப்பார்கள்.

நீர் அவர்களிடம் விவரத்தை கூறு! மக்கள் அவரை சபிப்பார்கள், அல்லாஹ்வும் அவ்வறே செய்வான்'' என்று கூறினார்கள். அவரும் அவ்வாறு செய்தார் (நபிகளார் சென்னபடியே நடக்கவும் செய்தது. இதன் பின்னர்) அவரின் அண்டை வீட்டுக்காரர் வந்து, நீர் உம் வீட்டுக்கு திரும்பிச்செல்லும்! (இனிமேல்) நீ வெறுக்கும் எதையும் என்னிடம் காணமாட்டீர்! என்று கூறினார். 

 

                       ( அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி), நூல்: அபூதாவூத் )

 

முஸ்லிம் சமூகத்தின் உள்ளத்து உணர்வுகளை உலக அரங்கிற்கும், சகோதர மத அன்பர்களுக்கும் வீரியத்தோடு உணர்த்த போராட்ட களங்களே மிகவும் வலிமையான சாதனமாகும்.

 

கல்யாண ராமனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைப்பதோடு, எதிர்காலத்தில் இது போன்ற மத உணர்வுகளை காயப்படுத்துகிற கழிசடைகள், கயவர்கள், காவிகள் போன்றோருக்கு உச்சபட்ச தண்டனைகளுடன் கூடிய கடுமையான சிறைத்தண்டனையை சட்டமாக இயற்ற வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு முஸ்லிம் சமூகத்தின் சார்பாக மாநில முதலமைச்சருக்கும், பாரத பிரதமருக்கும், நாட்டின் ஜனாதிபதிக்கும் கோரிக்கை வைப்போம்.

 

அல்லாஹ் நாளை மறுமையில் என் ஹபீபை அவமதித்த போது, அதற்காக நீ என்ன செய்தாய்? என்று கேட்டால்...

 

என்ன பதில் வைத்திருக்கின்றோம்? மறுமையில் பதில் சொல்லிட, அல்லாஹ்வின் அன்பைப் பெற்றிட ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்.

 

  நீதி நிலை நாட்டப்படவும், இறைத்தூதர் {ஸல்} அவர்களின் கண்ணியம் காக்கப்படவும் தொடர்ந்து துணிவுடன் போராடுவோம்!