Thursday 11 April 2024

பிறை பார்த்து நோன்பு நோற்பதும்… பிறை பார்த்து பெருநாள் கொண்டாடுவதும்…

 

பிறை பார்த்து நோன்பு நோற்பதும்

பிறை பார்த்து பெருநாள் கொண்டாடுவதும்


தமிழகத்தில் ஷவ்வால் மாதம் மற்றும் நோன்புப் பெருநாள் பற்றிய அறிவிப்புக்கு  பிறை தேட வேண்டிய நாளான 09.04.2024 செவ்வாய்க் கிழமையன்று தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வானம் வெளிச்சமாக இருந்தும் பிறை எங்கும் தென்பட வில்லை என்ற காரணத்தினால் 30 வது நாள் நோன்பைப் பூர்த்தியாக்கி 11/04/2024 வியாழக்கிழமை நோன்புப் பெருநாள் என்று தமிழ்நாடு அரசின் தலைமைக் காழி அவர்கள் அறிவிப்பு செய்தார்கள்.

இந்த நிலையில் வழக்கம் போல நடு  சாமத்தில் பெருநாள் அறிவிப்பை வெளியிடுவதில் கைதேர்ந்த அமைப்பான அந்த மூன்றெழுத்து அமைப்பு கோவை - சாரமேடு கரும்பு கடை  மற்றும் குமரி - வேர்கிளம்பி பகுதியில் பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் 09.04.2024 செவ்வாய்க்கிழமை மஹ்ரிபில் இருந்து தமிழகத்தில் ஷவ்வால் மாதம் ஆரம்பமாகிறது என்பதையும் 10.04.2024  புதன்கிழமை நோன்பு பெருநாள் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம் என்று இரவு 10:55 மணிக்கு அறிவிப்பை வெளியிட்டது ‌

அவர்கள் எப்போதுமே தாங்கள் கெட்டுப் போவதோடு நின்று கொள்ளாமல் சமூகத்தின் பெருங்கொண்ட மக்களையும் கெடுப்பார்கள்.

அந்த வகையில் பல மக்கள் இரவு நேரத்தில் குழம்பி உறவுகளுக்கும், தெரிந்த ஆலிம்களுக்கும் ஃபோன் செய்து நோன்பா? பெருநாளா? என்று பதறியதும், சிலர் நோன்பு வைக்காமல் தவிர்த்ததும் நடந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட இடங்களில் பிறை கண்ட செய்தியை ஏன் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் ஜமாஅத்துல் உலமா சபை ஏன் ஏற்றுக் கொள்ள வில்லை. இதற்கு முன்னரும் இது போன்ற பிறை பார்த்ததாக வந்த அறிவிப்புகளை ஏற்க மறுத்து விட்டது.

அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தை பின்பற்றுவோர் சிலர் தமிழ் நாடு அரசு காழியை, அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்களை பொதுவெளியில் இது குறித்து காரசாரமாக விவாதிப்பதும், அந்த மூன்றெழுத்து அமைப்பினர் சமூக ஊடகங்களில் விமர்சிப்பதும் கடந்த காலங்களில் இருந்து இன்று வரை தொடர்கிறது.

இந்த நிலையில் இந்த இரண்டு இடங்களில் பார்க்கப்பட்ட பிறை விவகாரங்களில் துவக்கத்திலேயே சந்தேகத்திற்கு இடம் இருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.

அது உண்மை என்பதை பின்னர் விளங்க முடிந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் வேர்க்கிளம்பியில் பிறை பார்த்ததாக சொன்ன நபரிடம் அந்த ஊரைச் சேர்ந்தவர்களும் அருகில் உள்ள ஊரைச் சேர்ந்தவர்களும் சென்று பிறை பற்றிய தகவல்களை கேட்க முயன்ற போது சம்பந்தப்பட்ட அந்த நபர் ஆரம்பத்தில் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்துள்ளார். நீண்ட நேரத்திற்கு பிறகு வந்த அவர் பிறை பார்த்த தகவலை விளக்கிக் கூற முற்படாமல் எடுத்த எடுப்பிலேயே நம்புனா நம்புங்கள் இல்லேன்னா போங்க " என்று கூறியிருக்கின்றார்.

 

இவரது சாட்சியத்தை ஏற்றுக் கொள்வதில் பல்வேறு தயக்கங்கள் நமக்கு உண்டு.

1. அவரைத் தவிர வேறு யாரும் பார்க்க வில்லை. 2. தாம் பார்த்ததை நிரூபிக்க வேண்டிய அவசியம் உள்ள அந்த நபர் நிரூபிக்க மறுத்தது, சாட்சியம் சொல்ல அழைக்கும் போது சாட்சியம் சொல்ல வர மறுத்தது. 3. தான் பார்த்ததாக சொல்லும் பிறை 07:15 மணிக்கு பார்த்ததாக (பிறை தெரிய சாத்தியமற்ற நேரத்தை) ச் சொன்னது. 4. இவர் பார்த்ததாக சொன்ன அந்த நேரத்திற்கும் முன்பாகவே அவர் வசிக்கும் கன்னியாகுமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் பிறை கமிட்டி கேரளாவில் பொன்னானியில் பிறை பார்த்த அடிப்படையில் பெருநாள் என்று அறிவித்து விட்டார்கள். 

சாட்சியம் கூற அழைத்தால் வர மறுப்பது பாவச் செயலாகும்!

وَ لَا يَاْبَ الشُّهَدَآءُ اِذَا مَا دُعُوْا

அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; ( அல்குர்ஆன்: 2: 283 )

அடுத்து, கோவை - சாரமேடு கரும்பு கடை  பகுதியில் உள்ள அமைப்பு சாரா பள்ளிவாசலின் முத்தவல்லி மற்றும் அவருடைய நண்பரின் சாட்சியம்.

இவர்களது சாட்சியத்தை ஏற்றுக் கொள்வதில் பல்வேறு தயக்கங்கள் நமக்கு உண்டு.

1. இது தொடர்பாக அவர்கள் மூன்று வீடியோக்கள் வெளியிட்டுள்ளனர்.

ஒவ்வொரு வீடியோவிலும் தகவல்கள் முரண்படுகிறது. ஒரு வீடியோவில் பார்த்தது இரண்டு பேர் என்றும், இன்னொரு வீடியோவில் பார்த்தது 5 பேர் என்றும் சொல்லியுள்ளனர். 2. பிறை எவ்வளவு நேரம் நின்றது என்பது தொடர்பாக இருவரும் வெவ்வேறு நேரங்களை குறிப்பிடுகின்றனர். ஒருவர் 10 ல் இருந்து 15 நொடிகள் வானில் பிறை தெரிந்தது என்கிறார். இன்னொருவர் 5 நொடிகளே தமது கண்களுக்கு தெரிந்ததாக கூறுகின்றார். அப்புறம் விரைவாக மறைந்து விட்டதாக வேறு முன்னுக்கு பின் முரணாக கூறுகின்றனர். 3. அவர்கள் பிறை பார்த்து விட்டு வந்ததாக தமது பள்ளிவாசலில் தொழுத மக்களிடம் கூறியதும் உடனே அவர்கள் எவ்வித விசாரணையும் இன்றி அந்த தஙவலை உறுதியாக ஏற்றுக் கொண்டு தக்பீர் சொன்னதாக கூறுகிறார். 4. பிறை பார்த்ததாக சொன்ன அந்த தகவலை அந்த ஜமாஅத்தும் ஊர்ஜிதம் செய்ய முன் வர வில்லை. இப்படி பல்வேறு தகவல்கள் முரண்படுவதாலும் மேலும், இவ்வளவு சந்தேகம் நிறைந்த இந்த பிறைத் தகவலை அவர்கள் பிறை பார்த்ததாக சொன்ன நேரத்தில் இருந்து 2 3/4 மணி நேரத்திற்கு பிறகு வீடியோவில் பதிவு செய்து பரப்புகின்றனர்.

இவைகளை எல்லாம் வைத்து பார்க்கும் போது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த பிறைத் தகவலை ஏற்றுக் கொள்ளாததன் ஊடாக நமக்கு 30 நோன்புகளை நஸீபாக்கி உள்ளான்.

 

ஆகவே, நாம் நோன்பு நோற்றதற்காகவும், அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தை பின்பற்றுவோராக இருப்பதற்காகவும் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்!!!

தவறான இந்த தகவலை அடிப்படையாக வைத்து நோன்பு நோற்காமல் விட்டவர்கள் மீண்டும் அவர்கள் இன்னொரு நாளில் களாச் செய்து நோற்க வேண்டும்.

قال النبي صلى الله عليه وسلم :- الصومُ يومَ تصومون ، والفطرُ يومَ تفطرون ، والأضحى يومُ تُضَحُّونَ

الراوي : أبو هريرة | المحدث : ابن كثير | المصدر : إرشاد الفقيه | الصفحة أو الرقم : 280/1 | خلاصة حكم المحدث : صحيح | التخريج : أخرجه الترمذي (697) واللفظ له، وابن ماجه (1660).

நபி (ஸல்)  அவர்கள்  கூறினார்கள் : நோன்பு என்பது நீங்கள் (கூட்டமாக) நோன்பு வைக்கும் நாளாகும். நோன்பை விடுவது என்பது நீங்கள் (கூட்டமாக) நோன்பை விடும்  நாளாகும். குர்பானி கொடுப்பது என்பது நீங்கள் (அனைவரும்) குர்பானி கொடுக்கும் நாளாகும். 

இந்த ஹதீஸில் தெளிவாக ஈது பெருநாள்கள் நோன்பை வைப்பது விடுவது எல்லாம் அந்த ஊர் மக்களின் பெரும்பான்மையினர்  அடிப்படையில் இருக்க வேண்டும் என தெளிவாக அறிவிக்கிறது. 

அவங்க பார்த்தாங்க இவங்க பார்த்தாங்க, அவிங்க அல்லாஹ் மேல சத்தியம் பண்ணுனாங்க!.அதனால் நான் நோன்பை விடுகிறேன் என்பது மனோ இச்சையின் அடிப்படையிலே தவிர மார்க்கத்தை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

حَدَّثَنَا أَبُو سَعِيدٍ عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الأَشَجُّ قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، قَالَ: كُنَّا عِنْدَ عَمَّارِ بْنِ يَاسِرٍ فَأُتِيَ بِشَاةٍ مَصْلِيَّةٍ، فَقَالَ: كُلُوا، فَتَنَحَّى بَعْضُ القَوْمِ، فَقَالَ: إِنِّي صَائِمٌ، فَقَالَ عَمَّارٌ: «مَنْ صَامَ اليَوْمَ الَّذِي يَشُكُّ فِيهِ النَّاسُ فَقَدْ عَصَى أَبَا القَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»

சந்தேகத்திற்குரிய நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) யார் நோன்பு நோற்கிறாரோ அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார். அறிவிப்பவர்: அம்மார் (ரலி) நூல்: ஹாகிம்

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு தமிழகத்தில் பல பகுதிகளில் சந்தேகத்திற்குரிய அடிப்படையில் இவர்களாக அறிவித்துக் கொண்ட பெருநாளை காரணம் காட்டி மக்களை நோன்பை விட்டு விடுமாறு வற்புறுத்தி இருக்கின்றனர்.

ஆனால், பிறை பார்க்க வேண்டிய ஷக் உடைய நாளில் பிறை தென்படாததால், பிறை பார்த்து நோன்பு வையுங்கள்! பிறை பார்த்து பெருநாள் கொண்டாடுங்கள் என்று நபி ஸல் அவர்கள் காட்டிய வழியில் ரமழான் மாதத்தை 30 ஆக பூர்த்தியாக்கி நாம் புதன் கிழமை நோன்பு நோற்றிருக்கின்றோம். வியாழக்கிழமை பெருநாள் கொண்டாடி இருக்கின்றோம். எனவே, நாம் குழம்ப தேவையில்லை.

எனவே, அவர்கள் விளைவித்தது பெரும் ஃபித்னாவும் குழப்பமும் ஆகும் என்பதை நாம் புரிந்து கொள்ள கடமைப் பட்டிருக்கின்றோம்.

பிறை பார்த்தல் விவகாரங்களில் சாட்சியம் தொடர்பான வழிகாட்டல்!

أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ شَبِيبٍ أَبُو عُثْمَانَ، وَكَانَ شَيْخًا صَالِحًا بِطَرَسُوسَ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ حُسَيْنِ بْنِ الْحَارِثِ الْجَدَلِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدِ بْنِ الْخَطَّابِ، أَنَّهُ خَطَبَ النَّاسَ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ، فَقَالَ: أَلَا إِنِّي جَالَسْتُ أَصْحَابَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَسَاءَلْتُهُمْ، وَإِنَّهُمْ حَدَّثُونِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صُومُوا لِرُؤْيَتِهِ، وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، وَانْسُكُوا لَهَا فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا ثَلَاثِينَ، فَإِنْ شَهِدَ شَاهِدَانِ فَصُومُوا، وَأَفْطِرُوا»"

அப்துர்ரஹ்மான் இப்னு ஜைது இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாக ஹுஸைன் இப்னு ஹாரிஸுல் ஜத்லீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அப்துர் ரஹ்மான் இப்னு ஜைது இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் பிறை பார்க்கப் பட வேண்டிய சந்தேகத்திற்குரிய நாளில் மக்களுக்கு பிரசங்கம் நிகழ்த்தினார்கள். அந்த உரையில் "நான் நபித்தோழர்களுடன் அமர்ந்திருந்த ஒரு சபையில் சந்தேகத்திற்குரிய நாளின் பிறை குறித்து கேட்டேன். அப்போது, நபித்தோழர்கள் "பிறை பார்த்து நோன்பு வையுங்கள்! பிறை பார்த்து நோன்பை விடுங்கள்! அதன் படியே மார்க்கக் கிரியைகளை அமைத்துக் கொள்ளுங்கள். பிறை பார்த்ததாக இரண்டு சாட்சிகள் சாட்சி கூறினால் நோன்பு வையுஙகள். நோன்பை விடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ وَهْبٍ، عَنْ يَحْيَى بْنِ سَالِمٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ نَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «تَرَاءَى النَّاسُ الْهِلَالَ، فَأَخْبَرْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي رَأَيْتُهُ، فَصَامَ وَأَمَرَ النَّاسَ بِالصِّيَامِ»

[تعليق المحقق] إسناده صحيح

மக்களெல்லாம் பிறை பார்க்க முயன்றனர். நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நான் பிறை பார்த்தேன் என்று தெரிவித்தேன். உடனே நபி (ஸல்) அவர்கள் தாமும் நோன்பு நோற்று, மக்களையும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) ( நூல் : தாரமி )

فَصَامَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- وَأَمَرَ النَّاسَ بِالصِّيَامِ. تَفَرَّدَ بِهِ مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ عَنِ ابْنِ وَهْبٍ وَهُوَ ثِقَةٌ.

 

இந்த நபிமொழியை மர்வான் பின் முஹம்மத் மட்டும் தான் அறிவித்துள்ளார். இவர் நம்பகமானவர் ஆவார் என்று தாரகுத்னி அவர்கள் கூடுதலாக சொல்கிறார்கள்.

மேற்கண்ட ஹதீஸை பதிவு செய்த ஹாகிம் அவர்கள் இது முஸ்லிம் இமாமுடைய நிபந்தனைகள் அடிப்படையில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்றும் கூறுகிறார்.

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் அடிப்படையில் முதல் நபிமொழியை ஆதாரமாக வைத்து பேணுதல் அடிப்படையில் இரண்டு நபர்கள் அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் சொல்லும் சாட்சியம் அடிப்படையில், சாத்தியக்கூறுகள் நம்பும் படியாக இருப்பின் அவர்களின் சாட்சியங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு நோன்பு நோற்குமாறோ அல்லது நோன்பை விடுமாறோ ஷூராவின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்.

சாட்சியங்களின் அவசியம், அதன் ஒழுங்கு மற்றும் மாண்பு குறித்து இஸ்லாம்!

இஸ்லாமிய வாழ்வை வாழத் துவங்குகின்ற ஒவ்வொருவரும் உணர்வுப் பூர்வமாக ஒப்புக் கொள்கிற போது அவர்கள் சொல்வது இஸ்லாம் ஓர் இலகுவான மார்க்கம் என்று தான்.

ஒரு பிரச்சனையில் பல விதமான முடிவுகள் எடுக்க சாத்தியக்கூறுகள் இருக்கும் போது சாட்சியங்கள் மூலம் முடிவு செய்ய இஸ்லாம் வழி காட்டுகிறது.

இந்த சாட்சியச் சட்டம் என்பது அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே மாதிரியானதல்ல. பிரச்சனைகளைப் பொருத்து சாட்சியச் சட்டம் வேறுபடும் என்பதையும் இஸ்லாம் தெளிவாக கூறுகிறது.

சாட்சியங்களைப் பொறுத்தவரையில் இஸ்லாம் இரண்டு நிலைப்பாடுகளை முன் வைத்து வழிகாட்டுகின்றது.

ஒன்று ஒரு அடியானுக்கு மார்க்க விவகாரங்களில் ஏற்படும் பிரச்சினை.

இன்னொன்று ஒரு அடியானுக்கு சக மனிதர்களுடன் ஏற்படும் பிரச்சினை அல்லது விவகாரங்கள்.

மார்க்க அடிப்படையிலான பிரச்சனைகளாக இருந்தால் ஒரு சாட்சி போதுமாகும். நான்கு சாட்சிகளோ, இரண்டு சாட்சிகளோ தேவை இல்லை.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சாட்சியம் கூற அழைக்கின்றான்!

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلَّهِ وَلَوْ عَلَى أَنْفُسِكُمْ أَوِ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ إِنْ يَكُنْ غَنِيًّا أَوْ فَقِيرًا فَاللَّهُ أَوْلَى بِهِمَا فَلَا تَتَّبِعُوا الْهَوَى أَنْ تَعْدِلُوا وَإِنْ تَلْوُوا أَوْ تُعْرِضُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا

இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும், அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும்,       ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்’. ( அல்குர்ஆன்: 4: 135 )

பொய் சாட்சி சொல்லக் கூடாது!.

وَالَّذِينَ لَا يَشْهَدُونَ الزُّورَ وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا»

மேலும், (ரஹ்மானின் உண்மையான அடியார்கள் யாரெனில்) அவர்கள் பொய் சாட்சியம் அளிக்க மாட்டார்கள். ( அல்குர்ஆன்: 25: 72 )

عن أبي بكرة عن النبي -صلى الله عليه وسلم- قال: (أَلا أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبائِرِ ثَلاثًا)، قَالُوا: بَلى يا رَسُولَ اللهِ، قَالَ: (الإِشْراكُ بِاللهِ وَعُقوقُ الْوالِدَيْنِ) وَجَلَسَ، وَكانَ مُتَّكِئًا(2)، فَقالَ: (أَلا وَقَوْلُ الزّورِ) قَالَ: فَما زَالَ يُكَرِّرُها حَتّى قُلْنا: لَيْتَهُ سَكَتَ. (متفق عليه).

அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: பெரும் பாவங்களில் மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்! அதற்கு நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம். அதற்கவர்கள், அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோரை நிந்திப்பது என்று கூறினார்கள். அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான், அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான் என்று கூறினார்கள். நிறுத்த மாட்டார்களா? என்று நான் கூறும் அளவுக்கு அவற்றைத் திரும்ப திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்கள். ( நூல் : புகாரி )

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என்று பொய் சத்தியம் செய்வது! பொய் சாட்சி கூறுவது...

عن عبد الله بن مسعود أن رسول الله صلّى الله عليه وسلّم قال: «من حلف على يمين ليقتطع بها مال امرئ مسلم لقى الله وهو عليه غضبان، فأنزل الله- تعالى- تصديق ذلك إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ. قال عبد الله:

فدخل الأشعث بن قيس فقال: ما يحدثكم أبو عبد الرحمن قلنا: كذا وكذا. فقال: صدق. في نزلت، كان بيني وبين رجل خصومة في بئر، فاختصمنا إلى رسول الله صلّى الله عليه وسلّم فقال رسول الله صلّى الله عليه وسلّم: شاهداك أو يمينه؟ قلت: إنه إذا يحلف ولا يبالى فقال رسول الله صلّى الله عليه وسلّم: «من حلف على يمين ليقتطع بها مال امرئ مسلم هو فيها فاجر لقى الله وهو عليه غضبان» ، ونزلت: إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ .

 

அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: "ஒரு செல்வத்தை அநியாயமாக அடைவதற்காக, ஒரு பிரமாணத்தின் போது பொய் சத்தியம் செய்பவர், அல்லாஹ் அவர் மீது கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனை (மறுமையில் அவர் சந்திப்பார்) (என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.) பிறகு, அதை உறுதிப்படுத்தும் விதத்தில் அல்லாஹ், எவர் அல்லாஹ்விடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்றுவிடுகின்றார்களோ, அவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை தான் இருக் கின்றது என்னும் (3:77) வசனத்தை அருளினான் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள். பிறகு அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் எங்களிடம் வந்து, அபூ அப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)) உங்களிடம் என்ன சொல்கிறார்? என்று கேட்க, நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் சொன் னதைத் தெரிவித்தோம். அதற்கு அவர்கள் சொன்னார்கள்: அவர் உண்மையே சொன்னார். என் விவகாரத்தில் தான் அந்த வசனம் இறங்கியது. எனக்கும் ஒரு மனிதருக்குமிடையே ஒரு விஷயத்தில் தகராறு இருந்து வந்தது. நாங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் வழக்கைக் கொண்டு சென்றோம். அவர்கள், உனது இரு சாட்சிகள். அல்லது அவருடைய சத்தியம் (தீர்ப்பளிக்கத் தேவைப்படுகின்றன) என்று கூறினார்கள். நான், அப்படியென்றால், அவர் (அந்த யூதர், தயங்காமல்) பொய் சத்தியம் செய்வாரே. (பொய் சத்தியம் செய்வதைப் பற்றி) கவலைப்பட மாட்டாரே என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், எவர் ஒரு பிரமாணத்தின் போது அதன் மூலம் ஒரு சொத்தை அடைந்து கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்கின்றாரோ அல்லாஹ் அவர் மீது கோபம் கொண்ட நிலையில் (மறுமையில்) அவனை அவர் சந்திப்பார் என்று கூறினார்கள்.

அல்லாஹ், நபி (ஸல்) அவர்களின் இந்தச் சொற்களை உறுதிப்படுத்தி (திருக்குர்ஆனில் ஒரு வசனத்தை) அருளினான் என்று கூறிவிட்டு அந்த (3:77) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

பொய் கூறுவது தவறு, பொய் சத்தியம் செய்வது தவறு, அதிலும் பொய் சாட்சியம் கூறுவது மோசமான தவறு என்றும், பொய் சாட்சி கூறுவது பெரும் பாவம் ஆகும் என்றும் பல்வேறு நபிமொழிகள் நமக்கு உணர்த்துகிறது.

அல்லாஹ்வின் மார்க்கம் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் ஒரு முஃமின் பொய் சொல்ல துணிய மாட்டான். அப்படி பொய் சொன்னால் அதற்கான தண்டனை அல்லாஹ்விடம் கிடைக்கும் என்பதை அவன் பயப் பட வேண்டும்.

அநியாயத்திற்கு (ஆதரவாக) சாட்சி சொல்லக் கூடாது.

عن النعمان بن بشير رضي الله عنهما قال: تصدق علي أبي ببعض ماله، فقالت أمي عَمْرَة بنت رَوَاحَة: لا أرضى حتى تشهد رسول الله صلى الله عليه وسلم فانطلق أبي إلى رسول الله صلى الله عليه وسلم ليُشْهِد على صدقتي فقال له رسول الله صلى الله عليه وسلم : أفعلت هذا بولدك كلهم؟ قال: لا، قال: «اتقوا الله واعدلوا في أولادكم، فرجع أبي، فرد تلك الصدقة». وفي لفظ: «فلا تُشْهدني إذًا؛ فإني لا أشهد على جَوْرٍ». وفي لفظ: «فأشهد على هذا غيري»

நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:-"என் தாயார் என் தந்தையிடம் அவரது செல்வத்திலிருந்து எனக்கு சிறிது அன்பளிப்பு வழங்கும்படி கேட்டார்கள். பிறகு, அவருக்கு (இதுவரை கொடுக் காமலிருந்து விட்டோமே என்ற வருத்தம் மனத்தில்) தோன்றி எனக்கு அதை அன்பளிப்புச் செய்தார். என் தாயார், நீர் நபி (ஸல்) அவர்களை சாட்சியாக்காத வரை நான் திருப்தி கொள்ள மாட்டேன் என்று கூறினார்கள். ஆகவே, என் தந்தை நான் சிறுவனாயிருந்ததால் என் கையைப் பிடித்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் என்னை அழைத்துச் சென்று, இவனுடைய தாயாரான (அம்ரா) பின்த்து ரவாஹா இவனுக்கு சிறிது அன்பளிப்புத் தரும்படி என்னிடம் கேட்டாள் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், இவனைத் தவிர வேறு குழந்தை ஏதும் உங்களுக்கு உண்டா? என்று கேட்டார்கள். என் தந்தை, ஆம் (உண்டு) என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், என்னை அக்கிரமத்துக்கு சாட்சியாக்காதீர்கள் என்று கூறினார்கள் எனக் கருதுகிறேன்.

இன்னோர் அறிவிப்பில், நான் அக்கிரமத்துக்கு சாட்சியாக இருக்க மாட்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வந்துள்ளது.

சாட்சியத்தை மறைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ وَمَنْ يَكْتُمْهَا فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ

மேலும், சாட்சியத்தை நீங்கள் மறைத்து விடாதீர்கள். சாட்சியத்தை மறைப்பவரின் இதயம் நிச்சயமாக பாவத்திற்குள்ளாகி விடுகின்றது. மேலும், அல்லாஹ் நீங்கள் செய்கின்ற அனைத்தையும் நன்கறிபவனாயிருக்கிறான். ( அல்குர்ஆன்: 2: 283 )

ஒருவர் நேர்மையானவர் என்று சாட்சி சொல்ல எத்தனை பேர் வேண்டும்?

ஒரு மனிதர் மற்றொரு மனிதரை நல்லவர் என்று கூறினால் (அவரது சாட்சியத்தை ஏற்க) அதுவே போதுமானதாகும்.

باب إِذَا زَكَّى رَجُلٌ رَجُلًا كَفَاهُ وَقَالَ أَبُو جَمِيلَةَ ، وَجَدْتُ مَنْبُوذًا فَلَمَّا رَآنِي عُمَرُ ، قَالَ : عَسَى الغُوَيْرُ أَبْؤُسًا كَأَنَّهُ يَتَّهِمُنِي ، قَالَ عَرِيفِي : إِنَّهُ رَجُلٌ صَالِحٌ ، قَالَ : كَذَاكَ اذْهَبْ وَعَلَيْنَا نَفَقَتُهُ

அபூஜமீலா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் கேட்பாரற்ற குழந்தை ஒன்றைக் கண்டெடுத்தேன். என்னை உமர் (ரலி) அவர்கள் பார்த்த போது, (அது கண்டெடுக்கப்பட்ட குழந்தை என்பதை நம்பாமல், நான் என் குழந்தையைத் தான் அதன் தகப்பன் என்கிற பொறுப்பை ஏற்க மறுத்துப் பொதுநிதியிலிருந்து பணம் பெறுவதற்காக இப்படிக் கூறுகிறேன் என்று கருதி), இது உனக்கு ஆபத்தாகவே முடியும் என்று குற்றம் சாட்டுவதைப் போல் கூறினார்கள்.

எங்கள் (வட்டார அரசு) அதிகாரி ஒருவர், அவர் நல்ல மனிதர் என்று கூறியதும், அப்படித் தான் (என்று ஒப்புக் கொள்கிறேன்), போ! அக்குழந்தையின் பராமரிப்புச் செலவு எம் (அரசின்) மீது சாரும் என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )

حدثنا سليمان بن حرب: حدثنا حماد بن زيد، عن ثابت، عن أنس رضي الله عنه قال: مر على النبي ﷺ بجنازة فأثنوا عليها خيرا، فقال: (وجبت). ثم مر بأخرى فأثنوا عليها شرا، أو قال: غير ذلك، فقال: (وجبت). فقيل: يا رسول الله، قلت لهذا وجبت ولهذا وجبت؟ قال: (شهادة القوم، المؤمنون شهداء الله في الأرض).

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இருந்த இடத்தின் வழியாக ஜனாஸா (பிரேதம்) ஒன்று கொண்டு செல்லப்பட்டது. மக்கள் அதைக் குறித்து நல்லவிதமாகப் (புகழ்ந்து) பேசினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், உறுதியாகி விட்டது என்று கூறினார்கள். பிறகு, மற்றொரு ஜனாஸா கொண்டு செல்லப்பட்டது. மக்கள் அது குறித்து (இகழ்ந்து) கெட்டவிதமாகப் பேசினார்கள். நபி (ஸல்) அவர்கள், உறுதி யாகி விட்டது என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! அதற்கும் உறுதியாகி விட்டது என்று கூறினீர்கள்; இதற்கும் உறுதி யாகி விட்டது என்று கூறினீர்களே. (இரண்டிற்குமே இவ்வாறு கூறக் காரணமென்ன?) என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், இது சமுதாயத்தின் சாட்சியமாகும். இறை நம்பிக்கையுடையவர்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள் ஆவர் என்று கூறினார்கள்.

حدثنا موسى بن إسماعيل: حدثنا داود بن أبي الفرات: حدثنا عبد الله بن بريدة، عن أبي الأسود قال: أتيت المدينة، وقد وقع بها مرض، وهم يموتون موتا ذريعا، فجلست إلى عمر رضي الله عنه، فمرت جنازة فأثني خيرا، فقال عمر: وجبت، ثم مر بأخرى فأثني خيرا فقال: وجبت، ثم مر بالثالثة فأثني شرا، فقال: وجبت، فقلت: ما وجبت يا أمير المؤمنين؟ قال: قلت كما قال النبي ﷺ : (أيما مسلم شهد له أربعة بخير أدخله الله الجنة). قلنا: وثلاثة، قال: (وثلاثة). قلت: واثنان، قال: (واثنان). ثم لم نسأله عن الواحد.

அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மதீனா நகரை (கொள்ளை) நோய் பீடித்திருக்கும் நிலையில் நான் அங்கு சென்றேன். மக்கள் பரவலாகவும் விரை வாகவும் இறந்து கொண்டிருந்தார்கள். நான் உமர் (ரலி) அவர்களிடம் சென்று அமர்ந்தேன். அப்போது ஒரு ஜனாஸா சென்றது. அதைக் குறித்து நல்லவிதமாகப் (புகழ்ந்து) பேசப்பட்டது. உடனே, உமர் (ரலி) அவர்கள், உறுதியாகி விட்டது என்று கூறினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. அதைக் குறித்தும் நல்ல விதமாகப் பேசப்பட்டது. அதற்கும் உமர் (ரலி) அவர்கள், உறுதியாகி விட்டது என்று கூறினார்கள். பிறகு, •மூன்றாவது ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. அதைக் குறித்து (இகழ்ந்து) கெட்ட விதமாகப் பேசப்பட்டது. உமர் (ரலி) அவர்கள், உறுதியாகி விட்டது என்று கூறினார்கள். நான், விசுவாசிகளின் தலைவரே! என்ன உறுதியாகி விட்டது? என்று கேட்டேன். அவர்கள் (பின் வருமாறு) பதிலளித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே நானும் சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், எந்த முஸ்-முக்கு நான்கு பேர், அவர் நல்லவர் என்று சாட்சி சொல்கின் றார்களோ அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்துவான் என்று கூறினார்கள். நாங்கள், மூன்று பேர் சாட்சி சொன்னாலுமா? என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், ஆம்; மூன்று பேர் சாட்சி சொன்னாலும் சரி (அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்துவான்) என்று கூறினார்கள். நாங்கள், இரண்டு பேர் சாட்சி சொன்னாலுமா? என்று கேட்டோம். அவர்கள், ஆம்; இரண்டு பேர் சாட்சி சொன்னாலும் சரியே என்று கூறினார்கள். பிறகு, நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஒருவரைப் பற்றி (ஒருவர் சாட்சி சொன்னாலுமா? என்று) கேட்கவில்லை.

திருமணத்தின் போது இரண்டு சாட்சியங்கள்....

கொடுக்கல் வாங்கல் உட்பட இன்ன பிற உடன்படிக்கைகளுக்கு குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகள் இருக்க வேண்டும். 

கடன் கொடுக்கும் போது இரண்டு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று அல்குர்ஆன்: 2: 282 வது வசனம் கூறுகிறது.

அனாதைகளின் சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைக்கும் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று அல்குர்ஆன்: 4: 6 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

மரண சாசனம் செய்யும் போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறு இறைவன் கூறுகிறான். (அல்குர்ஆன்: 5: 106 )

இதை அடிப்படையாகக் கொண்டு திருமணத்திற்கும் சாட்சிகள் அவசியம் என்பதை அறியலாம்.

திருமணம் என்பதும் ஒரு ஒப்பந்தமாக இருப்பதால் இரண்டு சாட்சிகள் அதற்குப் போதுமானதாகும்.

திருமணத்தின் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன.

وقال ابن عبد البر : وقد روي عن النبي صلى الله عليه وسلم { : لا نكاح إلا بولي وشاهدين عدلين } . من حديث ابن عباس وأبي هريرة وابن عمر

"இரண்டு நீதமான சாட்சிகளும், வலிய்யும் இல்லாமல் திருமணம் இல்லைஎன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி)  அவர்கள் அறிவித்துள்ளார்கள். ( நூல்: திர்மிதீ : ஹதீஸ் எண் : 1101 )

மார்க்க அடிப்படையிலான பிரச்சனைகளாக இருந்தால் ஒரு சாட்சி போதுமாகும். நான்கு சாட்சிகளோ, இரண்டு சாட்சிகளோ தேவை இல்லை. ஒரு சாட்சி போதும் என்பதற்கு பின் வரும் நபிமொழி சான்றாகும்.

பாலூட்டும் பிரச்சனை ஒருவரின் சாட்சியம் போதுமானதாகும்..

 

 

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الحَسَنِ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ أَبِي حُسَيْنٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الحَارِثِ، أَنَّهُ تَزَوَّجَ ابْنَةً لِأَبِي إِهَابِ بْنِ عُزَيْزٍ فَأَتَتْهُ امْرَأَةٌ فَقَالَتْ: إِنِّي قَدْ أَرْضَعْتُ عُقْبَةَ وَالَّتِي تَزَوَّجَ، فَقَالَ لَهَا عُقْبَةُ: مَا أَعْلَمُ أَنَّكِ أَرْضَعْتِنِي، وَلاَ أَخْبَرْتِنِي، فَرَكِبَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ فَسَأَلَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَيْفَ وَقَدْ قِيلَ» فَفَارَقَهَا عُقْبَةُ، وَنَكَحَتْ زَوْجًا غَيْرَهُ

உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) கூறியதாவது: நான் அபூஇஹாப் பின் அஸீஸ் என்பவரின் மகளை மணந்து கொண்டேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து நான், உக்பாவுக்கும் நீ மணந்து கொண்டுள்ள பெண்ணுக்கும் (உங்கள் மழலைப் பருவத்தில்) பாலூட்டியிருக்கிறேன்' (இந்த வகையில் நீங்கள் இருவரும் பால்குடிச் சகோதரரர்கள் ஆவீர்கள்) என்று கூறினார். நான் நீங்கள் எனக்குப் பாலூட்டியதை நான் அறியமாட்டேன்; (நான் மணமுடித்துக் கொண்ட போது) நீங்கள் எனக்கு (இதைத்) தெரிவிக்கவில்லையே! என்று கேட்டேன்.  ஆகவே, (இப்பிரச்சினைக்குத் தீர்வு காண மக்காவிலிருந்து) நான் மதீனாவிலிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கிப் பயணம் செய்து, அவர்களிடம் (இது குறித்து) வினவினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நீயும் உம் மனைவியும் ஒரே செவிலித்தாயிடம் பால்குடித்ததாகச்) சொல்லப்பட்டுப் போன பிறகு எப்படி (நீங்கள் இருவரும் இணைந்து வாழ்வது) எப்படி (செல்லும்)? என்று கூறினார்கள். ஆகவே நான் அவளை விட்டுப் பிரிந்துவிட்டேன். அவள் பெண்ணும் வேறொரு கணவனை மணந்து கொண்டாள்.  ( நூல் : புகாரி )

சக மனிதர்களுடனான விவகாரங்கள் மற்றும் பிரச்சினைகளின் போது சில விஷயங்களில் ஒருவரின் சாட்சியம், சில விஷயங்களில் இரண்டு சாட்சியம், சில விஷயங்களில் மூன்று சாட்சியம், சில விஷயங்களில் நான்கு சாட்சியம் என்று இஸ்லாம் வழிகாட்டுகின்றது.

கொலை தொடர்பான விவகாரங்களில் ஒரு சாட்சியம்....

ويجوز شهادة النساء في القتل والقصاص إذا کان معهنَّ رجالٌ أو رجل، بأن يشهد رجل وامرأتان على رجلٍ بالقتل أو الجراح، فأمّا شهادتهنَّ على الانفراد فإنها لا تقبل على حال

`சில மார்க்க அறிஞர்கள் கொலை சம்பந்தப்பட்ட விவகாரங்களிலும் மேற்படி ஆண் என்றால் ஒருவரும் பெண் என்றால் இருவரும் சாட்சியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். ( நூல்: ஃபத்ஹுல் பாரீ )

கொடுக்கல் வாங்கல் போன்ற (சிவில் ) பொருளாதாரம் தொடர்பான விவகாரங்களில் இரண்டு ஆண்கள், அல்லது ஒரு ஆண் இரு பெண்கள் சாட்சியம் அளிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ إِلَى أَجَلٍ مُسَمًّى فَاكْتُبُوهُ وَلْيَكْتُبْ بَيْنَكُمْ كَاتِبٌ بِالْعَدْلِ وَلَا يَأْبَ كَاتِبٌ أَنْ يَكْتُبَ كَمَا عَلَّمَهُ اللَّهُ فَلْيَكْتُبْ وَلْيُمْلِلِ الَّذِي عَلَيْهِ الْحَقُّ وَلْيَتَّقِ اللَّهَ رَبَّهُ وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْئًا فَإِنْ كَانَ الَّذِي عَلَيْهِ الْحَقُّ سَفِيهًا أَوْ ضَعِيفًا أَوْ لَا يَسْتَطِيعُ أَنْ يُمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهُ بِالْعَدْلِ وَاسْتَشْهِدُوا شَهِيدَيْنِ مِنْ رِجَالِكُمْ فَإِنْ لَمْ يَكُونَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَامْرَأَتَانِ مِمَّنْ تَرْضَوْنَ مِنَ الشُّهَدَاءِ أَنْ تَضِلَّ إِحْدَاهُمَا فَتُذَكِّرَ إِحْدَاهُمَا

இறைநம்பிக்கை கொண்டோரே! குறிப்பிட்ட காலக்கெடு விதித்து ஒருவருக்கொருவர் கடன் கொடுத்தால் அதை எழுதிக் கொள்ளுங்கள்! எழுதுபவர் உங்களுக்கிடையே நேர்மையான முறையில் எழுதட்டும். எழுதுபவர் அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தது போல் எழுத மறுக்க வேண்டாம். கடன் வாங்கியவர், எழுதுவதற்குரிய வாசகங்களைச் சொல்லட்டும்! தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அதில் எதையும் குறைத்திடக் கூடாது. கடன் வாங்கியவர் விபரமறியாதவராகவோ, பலவீனராகவோ, எழுதுவதற்கு ஏற்பச் சொல்ல இயலாதவராகவோ இருந்தால் அவரது பொறுப்பாளர் நேர்மையாகச் சொல்லட்டும். உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்! இரு ஆண்கள் இல்லாவிட்டால் சாட்சிகள் என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும், இரண்டு பெண்களையும் (ஆக்கிக் கொள்ளுங்கள்!) அவ்விரு பெண்களில் ஒருத்தி தவறாகக் கூறினால் மற்றொருத்தி நினைவுபடுத்துவாள். ( அல்குர்ஆன்: 2: 282 )

மரண சாசனத்தின் போது இரண்டு சாட்சியங்கள்...

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا شَهَادَةُ بَيْنِكُمْ اِذَا حَضَرَ اَحَدَكُمُ الْمَوْتُ حِيْنَ الْوَصِيَّةِ اثْـنٰنِ ذَوَا عَدْلٍ مِّنْكُمْ اَوْ اٰخَرَانِ مِنْ غَيْـرِكُمْ اِنْ اَنْـتُمْ ضَرَبْتُمْ فِى الْاَرْضِ فَاَصَابَتْكُمْ مُّصِيْبَةُ الْمَوْتِ‌ تَحْبِسُوْنَهُمَا مِنْۢ بَعْدِ الصَّلٰوةِ فَيُقْسِمٰنِ بِاللّٰهِ اِنِ ارْتَبْتُمْ لَا نَشْتَرِىْ بِهٖ ثَمَنًا وَّلَوْ كَانَ ذَا قُرْبٰى‌ وَلَا نَـكْتُمُ شَهَادَةَاللّٰهِ اِنَّاۤ اِذًا لَّمِنَ الْاٰثِمِيْنَ‏

இறைநம்பிக்கை கொண்டவர்களே!. உங்களில் யாருக்கேனும் மரணம் சமீபித்து (அவர் மரண சாஸணம் கூற விரும்பினால்) அச்சமயத்தில் உங்களுக்குள் நம்பிக்கைக்குரிய இரண்டு சாட்சிகள் இருக்க வேண்டும்: அல்லது உங்களில் எவரும் பூமியில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் பொது மரணம் சமீபித்தால் (அப்போது முஸ்லிம்களாக இரு சாட்சிகள் கிடைக்காவிடின்) உங்களையல்லாத வேறிருவர் சாட்சியாக இருக்கட்டும்.’ ( அல்-குர்ஆன்:  5: 106 )

விவாகரத்து விவகாரத்தில் இரண்டு சாட்சியங்கள்....

وقول الله تعالى: {وأشهدوا ذوي عدل منكم} /الطلاق: 2/. 

விவாகரத்து செய்ய விரும்பினால் உங்களில் இரண்டு பேர் சாட்சியாக இருக்கட்டும்  ( அல்-குர்ஆன்:  65: 2 )

ஒழுக்கக் கேடு தொடர்பான விவகாரங்களில் நான்கு சாட்சியங்கள்...

 

وَالّٰتِىْ يَاْتِيْنَ الْفَاحِشَةَ مِنْ نِّسَآٮِٕكُمْ فَاسْتَشْهِدُوْا عَلَيْهِنَّ اَرْبَعَةً مِّنْكُمْ‌ فَاِنْ شَهِدُوْا فَاَمْسِكُوْهُنَّ فِى الْبُيُوْتِ حَتّٰى يَتَوَفّٰٮهُنَّ الْمَوْتُ اَوْ يَجْعَلَ اللّٰهُ لَهُنَّ سَبِيْلًا‏

உங்கள் பெண்கள் வெட்கக்கேடானதைச் செய்தால் உங்களில் நான்கு சாட்சிகள் மூலம் நிரூபிக்கச் சொல்லுங்கள்! அவர்கள் சாட்சி கூறினால் அப்பெண்கள் மரணிக்கும் வரை அல்லது அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் வேறு வழியைக் காட்டும் வரை வீடுகளில் அவர்களைத் தடுத்து வையுங்கள்! ( அல்குர்ஆன்: 4: 15 )

وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ يَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِيْنَ جَلْدَةً وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ 

ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள். ( அல்குர்ஆன்:  24: 4 )

اِنَّ الَّذِيْنَ جَآءُوْ بِالْاِفْكِ عُصْبَةٌ مِّنْكُمْ‌ لَا تَحْسَبُوْهُ شَرًّا لَّـكُمْ‌ بَلْ هُوَ خَيْرٌ لَّـكُمْ‌ لِكُلِّ امْرِىٴٍ مِّنْهُمْ مَّا اكْتَسَبَ مِنَ الْاِثْمِ‌ وَالَّذِىْ تَوَلّٰى كِبْرَهٗ مِنْهُمْ لَهٗ عَذَابٌ عَظِيْمٌ‏

எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு.

لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ ظَنَّ الْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بِاَنْفُسِهِمْ خَيْرًا وَّقَالُوْا هٰذَاۤ اِفْكٌ مُّبِيْنٌ‏

முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் - இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, “இது பகிரங்கமான வீண் பழியேயாகும்என்று கூறியிருக்க வேண்டாமா?

لَوْلَا جَآءُوْ عَلَيْهِ بِاَرْبَعَةِ شُهَدَآءَ‌ فَاِذْ لَمْ يَاْتُوْا بِالشُّهَدَآءِ فَاُولٰٓٮِٕكَ عِنْدَ اللّٰهِ هُمُ الْـكٰذِبُوْنَ‏

அ(ப்பழி சுமத்திய)வர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டாமா, எனவே அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில், அவர்கள் தாம் அல்லாஹ்விடத்தில் பொய்யர்களாக இருக்கிறார்கள். ( அல்குர்ஆன்:  24: 11-13 )

மனைவி மீது கணவன் சொல்லும் குற்றச்சாட்டாக இருந்தால் கணவன் என்ற ஒரு சாட்சியே போதும். ஒருவன் சொன்னதால் அவனுக்கு அவதூறுக்கான தண்டனை கிடையாது. ஆனால் நான்கு தடவை சத்தியம் செய்து சாட்சி கூற வேண்டும்.

وَالَّذِيْنَ يَرْمُوْنَ اَزْوَاجَهُمْ وَلَمْ يَكُنْ لَّهُمْ شُهَدَآءُ اِلَّاۤ اَنْفُسُهُمْ فَشَهَادَةُ اَحَدِهِمْ اَرْبَعُ شَهٰدٰتٍۭ بِاللّٰهِ‌ۙ اِنَّهٗ لَمِنَ الصّٰدِقِيْنَ‏

தங்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தமது மனைவியர் மீது பழி சுமத்துவோர், தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும்.

وَالْخَـامِسَةُ اَنَّ لَـعْنَتَ اللّٰهِ عَلَيْهِ اِنْ كَانَ مِنَ الْكٰذِبِيْنَ‏

தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் என்பது ஐந்தாவதாகும்.

وَيَدْرَؤُا عَنْهَا الْعَذَابَ اَنْ تَشْهَدَ اَرْبَعَ شَهٰدٰتٍۢ بِاللّٰهِ‌ۙ اِنَّهٗ لَمِنَ الْكٰذِبِيْنَ

அவனே பொய்யன்'' என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) அப்பெண் சாட்சியமளிப்பது தண்டனையிலிருந்து அவளைக் காக்கும்.

وَالْخَـامِسَةَ اَنَّ غَضَبَ اللّٰهِ عَلَيْهَاۤ اِنْ كَانَ مِنَ الصّٰدِقِيْنَ‏

அவன் உண்மையாளனாக இருந்தால் என்மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும்'' என்பது ஐந்தாவதாகும்.

وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ وَاَنَّ اللّٰهَ تَوَّابٌ حَكِيْمٌ

அல்லாஹ்வின் அருளும், அன்பும் உங்களுக்கு இல்லாமலும், அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவனாகவும், ஞானமிக்கவனாகவும் இல்லாமலும் இருந்தால் (உங்களுக்கு அழிவு ஏற்பட்டிருக்கும்) ( அல்குர்ஆன்: 24: 6-10 )

மாநபி (ஸல்) அவர்களின் கண்ணியம் காத்தவரின் சாட்சியம்!

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ أَنَّ الْحَكَمَ بْنَ نَافِعٍ حَدَّثَهُمْ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُمَارَةَ بْنِ خُزَيْمَةَ أَنَّ عَمَّهُ حَدَّثَهُ وَهُوَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْتَاعَ فَرَسًا مِنْ أَعْرَابِيٍّ فَاسْتَتْبَعَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَقْضِيَهُ ثَمَنَ فَرَسِهِ فَأَسْرَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَشْيَ وَأَبْطَأَ الْأَعْرَابِيُّ فَطَفِقَ رِجَالٌ يَعْتَرِضُونَ الْأَعْرَابِيَّ فَيُسَاوِمُونَهُ بِالْفَرَسِ وَلَا يَشْعُرُونَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْتَاعَهُ فَنَادَى الْأَعْرَابِيُّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنْ كُنْتَ مُبْتَاعًا هَذَا الْفَرَسِ وَإِلَّا بِعْتُهُ فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ سَمِعَ نِدَاءَ الْأَعْرَابِيِّ فَقَالَ أَوْ لَيْسَ قَدْ ابْتَعْتُهُ مِنْكَ فَقَالَ الْأَعْرَابِيُّ لَا وَاللَّهِ مَا بِعْتُكَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَلَى قَدْ ابْتَعْتُهُ مِنْكَ فَطَفِقَ الْأَعْرَابِيُّ يَقُولُ هَلُمَّ شَهِيدًا فَقَالَ خُزَيْمَةُ بْنُ ثَابِتٍ أَنَا أَشْهَدُ أَنَّكَ قَدْ بَايَعْتَهُ فَأَقْبَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى خُزَيْمَةَ فَقَالَ بِمَ تَشْهَدُ فَقَالَ بِتَصْدِيقِكَ يَا رَسُولَ اللَّهِ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهَادَةَ خُزَيْمَةَ بِشَهَادَةِ رَجُلَيْنِ

 

நபி (ஸல்) அவர்கள் ஒரு கிராமவாசியிடம் குதிரையை விலைபேசி முடித்தார்கள். அந்தக் கிராமவாசி (அதற்கான கிரயத்தைப் பெறுவதற்காக) நபி (ஸல்) அவர்களைப் பின் தொடர்ந்தார். நபி (ஸல்) அவர்கள் விரைந்து நடக்க, அந்தக் கிராமவாசி மெதுவாக நடந்து வந்தார்.

நபி (ஸல்) அவர்கள் விலைபேசி வாங்கியதை அறியாத மக்கள் அந்தக் கிராமவாசியிடம் கூடுதல் விலைக்கு கேட்கலானார்கள். அப்போது கிராமவாசி நபிகள் நாயகத்தை உரத்த சப்த்த்தில் அழைத்து நீங்கள் இதை வாங்குவதாக இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நான் மற்றவருக்கு விற்று விடுவேன் என்று கூறினார். உடன் நபி (ஸல்) அவர்கள் நின்றார்கள்.

நான் தான் உன்னிடம் விலை பேசி வாங்கி விட்டேனே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தக் கிராமவாசி அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இதை உங்களுக்கு விற்கவில்லை என்றார். இல்லை நான் உன்னிடம் இதை விலைக்கு வாங்கி விட்டேன் என்று கூறினார்கள். அப்போது கிராமவாசி இதற்கு சாட்சியைக் கொண்டு வாருங்கள் என்று கூறினார்.

அப்போது குஸைமா என்ற நபித்தோழர் கிராமவாசியைப் பார்த்து நீ நபி (ஸல்) அவர்களிடம் விற்றாய் என்று சாட்சி கூறுகிறேன் என்றார். பின்னர் நபி (ஸல்) அவர்கள் குஸைமாவிடம் நீ எப்படி சாட்சி கூறினாய் என்று கேட்டார்கள். உங்கள் மீது உள்ள நம்பிக்கையால் சாட்சி கூறினேன் என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரது சாட்சியத்தை இருவரின் சாட்சியத்துக்கு சமமாக ஆக்கினார்கள்.

( நூல் : அபூதாவூத், அஹ்மத் )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பிறை விஷயத்தில் நம் அனைவரையும் நேர்வழியில் நடத்துவானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!!