Wednesday, 4 June 2014

புகழுக்குரிய வாழ்க்கையை தேர்ந்தெடுப்போம்!!!

                புகழுக்குரிய வாழ்க்கையை தேர்ந்தெடுப்போம்!!!

  


  
புகழுக்காக வாழ்வதைக் காட்டிலும் புகழுக்குரிய வாழ்க்கை வாழ்வது என்பது அரிய பெரும் பேறாகும்.

தலைமுறைகளைக் கடந்து உலகம் உள்ள வரை நின்று இலங்கிடும் பேற்றோடும், நற்பேரோடும் வாழ்வது மகத்தான வாழ்வாகும்.

அல்லாஹ்வும் அவனை நம்பிக்கை கொண்டு, நற்கருமங்கள் செய்கின்ற நல்லோர்களுக்கு அந்த நற்பேற்றை வழங்குவதாக வாக்களிக்கின்றான்.

مَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ

அல்லாஹ் கூறுகின்றான்: “ஆணாயினும் பெண்ணாயினும் சரி, எவர் இறை நம்பிக்கை கொண்டோராய் இருக்கும் நிலையில் நற்செயல் புரிகின்றாரோ அவரை இவ்வுலகில் தூய (புகழுக்குரிய) வாழ்வு வாழச் செய்வோம். மறுமையிலும் அத்தகையோருக்கு அவர்களின் உன்னதமான செயல்களுக்கு ஏற்ப நாம் கூலி வழங்குவோம்.

இந்த வசனத்திற்கு விளக்கம் தருகிற அறிஞர் பெருமக்களில் சிலர்ஹயாத்தன் ஹமீதாபுகழுக்குரிய வாழ்க்கை என்பதாகவும் பொருள் தந்திருக்கின்றார்கள்.

சில சந்தர்ப்பங்களில் சின்னஞ்சிறிய வார்த்தை கூட நம்மை புகழுக்குரிய வாழ்விற்கு அழைத்துச் சென்று விடும்.

وَاضْرِبْ لَهُمْ مَثَلًا رَجُلَيْنِ جَعَلْنَا لِأَحَدِهِمَا جَنَّتَيْنِ مِنْ أَعْنَابٍ وَحَفَفْنَاهُمَا بِنَخْلٍ وَجَعَلْنَا بَيْنَهُمَا زَرْعًا

அல்கஹ்ஃப் அத்தியாயத்தின் 32 – வது வசனம் முதல் 44 –ஆம் வசனம் வரை அல்லாஹ் இரு நண்பர்களின் வாழ்வில் நடந்த உரையாடலை இந்த உம்மத்திற்கு பாடமாக, உதாரணமாக எடுத்துச் சொல்லுமாறு நபி {ஸல்} அவர்களுக்கு பணிக்கின்றான்.

وَلَوْلَا إِذْ دَخَلْتَ جَنَّتَكَ قُلْتَ مَا شَاءَ اللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ إِنْ تَرَنِ أَنَا أَقَلَّ مِنْكَ مَالًا وَوَلَدًا

அதில் ஒரு நண்பர் சொன்ன ஒரு வார்த்தை தான் அவரை புகழுக்குரிய வாழ்விற்கு அழைத்துச் சென்றதாக அல்குர்ஆன் வர்ணிக்கின்றது.

ஆம்! இன்று வரை இல்லை, இல்லை மறுமை நாள் வரை உள்ள உலக மக்களுக்கெல்லாம் அவரைப் பற்றியுண்டான அந்த செய்தியை கொண்டு சேர்க்கும் பணியை அல்குர்ஆன் செய்து கொண்டிருக்கின்றது அல்லவா?

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூட சில போது நபித்தோழர்களைப் பார்த்துபுகழுக்குரிய வாழ்வை நீர் வாழ்வீர்என்று சிலாகித்துக் கூறிய சந்தர்ப்பங்களும் உண்டு.

ஸாபித் இப்னு கைஸ் இப்னு ஷம்மாஸ் (ரலி) அவர்கள்.

பின் நாளில் சன்மார்க்கத்தின் சிறப்புப் பேச்சாளராக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்கள்.

பனூ தமீம் கோத்திரத்தார்கள் முஸ்லிம்களாவதற்கு இவர்களின் உரையும் ஒரு காரணமாக அமைந்ததை வரலாற்றை வாசிக்கும் போது உணரலாம்.

قال الأقرع بن حابس: وأبي إن هذا الرجل لمؤتى له لخطيبه أخطب من خطيبنا ولشاعره أشعر من شاعرنا ولأصواتهم أحلى من أصواتنا فلما فرغ القوم أسلموا

ஒரு கட்டத்தில் பனூ தமீம் கோத்திரத்தின் தலைவர்களில் ஒருவரான அக்ரஃ இப்னு ஹாபிஸ்இதோ! முஹம்மத் வெற்றி பெறப் போகின்றார். அவருடைய பேச்சாளர் நாவாற்றல் மிக்கவராய் இருக்கின்றார். அவருடைய கவிஞர் (ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) ) நம் கவிஞரை மிகைத்தவராய் இருக்கின்றார். அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! சந்தேகமில்லாமல் முஸ்லிம்களின் குரல் ஓங்கி நிற்கிறது! முஹம்மத் வெற்றியுறப் போகின்றார்!” என்றார்.

இந்த செய்தியை முழுமையாக பார்க்க நம்முடைய முந்தைய பதிவானவளமாய் வாழ.. நலமாய் வாழ… “ பதிவை பார்வையிடவும்.

                                (நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம்)


قال أنس بن مالك: لما انكشف الناس يوم اليمامة قلت لثابت بن قيس بن شماس: ألا ترى يا عم؟ ووجدته يتحنط فقال: ما هكذا كنا نقاتل مع رسول الله صلى الله عليه وسلم، بئس ما عودتم أقرانكم، وبئس ما عودتكم أنفسكم؛ الله إني أبرأ إليك مما جاء به هؤلاء، يعني الكفار، وأبرأ إليك مما يصنع هؤلاء، يعني المسلمين، ثم قاتل حتى قتل، بعد أن ثبت هو وسالم مولى أبي حذيفة؛ فقاتلا حتى قتلا، وكان على ثابت درع له نفيسة فمر به رجل من المسلمين فأخذها، فبينما رجل من المسلمين نائم أتاه ثابت في منامه فقال له: إني أوصيك بوصية، فإياك أن تقول: هذا حلم، فتضيعه؛ إني لما قتلت أمس، مر بي رجل من المسلمين فأخذ درعي، ومنزله في أقص الناس، وعند خبائه فرس يستن في طوله وقد كفأ على الدرع برمة وفوق البرمة رحل، فأت خالداً، فمره فليبعث فليأخذها؛ فإذا قدمت الدينة على خليفة رسول الله صلى الله عليه وسلم، يعني أبا بكر، فق له: إن علي من الدين كذا وكذا، وفلان من رقيقي عتيق، وفلان؛ فاستيقظ الرجل فأتى خالداً فأخبره، فبعث إلى الدرع فأتى بها على ما وصف، وحدث أبا بكر رضي الله عنه برؤياه، فأجاز


யமாமா யுத்தம், பொய்யன் முஸைலமாவை எதிர் கொள்ள அபூபக்ர் (ரலி) அவர்கள் அனுப்பிய பெரும் படையில் மிக ஆர்வத்தோடு கலந்து கொண்டார் ஸாபித் (ரலி) அவர்கள்.

ஆரம்பத்தில் இருந்தே கடுமையான சண்டை நிகழ்ந்தது. போரின் உச்ச கட்ட நேரமது, ஆக்ரோஷமாகவும் வீரமாகவும் சுழன்று சுழன்று வாள் வீசிய வேங்கை ஸாபித் (ரலி) அவர்கள் எதிரி ஒருவனின் எதிர் பாராத தாக்குதலால் ஷஹீத் வீர மரணம் அடைகின்றார்கள்.

அன்றிரவு யுத்தத்தில் கலந்து கொண்ட ஒருவரின் கனவில் வந்துநான் போருக்கு வரும் போது கவச உடை அணிந்து இருந்தேன். நான் கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் போது, மதீனாவின் இன்ன பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் படை வீரர் ஒருவர் என் அருகே வந்து இன்னின்ன அடையாளங்களைக் கொண்ட என் கவச உடையை கழற்றிச் சென்று விட்டார்.

காலித் (ரலி) அவர்களை உம்முடன் அழைத்துக் கொண்டு, அவரிடம் சென்று அந்த கவச உடையைப் பெற்று அதை விற்று, கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அதை ஒப்படைத்து எனக்கு இன்னின்னாரிடம் இன்னின்ன கடன் இருக்கின்றது. அவர்களை அழைத்து என் சார்பாக கடனை அடைக்கச் சொல்லுங்கள்.” இதை நான் உமக்கு வஸிய்யத்தாக சொல்கின்றேன்”. என்று ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

மறு நாள் அது போன்றே அவரின் கவச உடை பெறப்பட்டு, கடனும் நிறைவேற்றப்பட்டது.

 فأجاز وصيته، ولا يعلم أحد أجيزت وصيته بعد موته سواه.


இந்த செய்தியை அறிவிக்கின்ற அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “  நான் அறிந்து நாங்கள் வாழும் காலத்தில் கனவில் செய்யப்பட்ட வஸிய்யத் ஒன்று நிறைவேற்றப் பட்ட அந்தப் பெருமை ஸாபித் (ரலி) அவர்கள் விஷயத்தில் தவிர வேறு எவருக்கும் கிடைக்கப்பெற்றதில்லை.”

              (நூல்: உஸ்துல் ஃகாபா, ஸியரு அஃலா மின் நுபலா, இஸ்தீஆப்)

உயிரோடு வாழ்கிற காலத்திலேயே கடன் வாங்கி விட்டு, கடன் கொடுத்தவனை தவிக்க விடுகிற உலகத்தில் இறந்த பின்னரும் கூட கனவில் வந்து நிறைவேற்றச் சொன்ன ஸாபித் (ரலி) அவர்களின் வாழ்வு உண்மையில் புகழுக்குரிய வாழ்வு தான்.

இந்தப் பேற்றை பெற்றுத் தந்த அந்த அற்புத நிகழ்வையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

وَرَوَى الطَّبَرَانِيُّ وَابْنُ مَرْدَوَيْهِ عَنْ ثَابِتِ بْنِ قَيْسِ بْنِ شَمَّاسٍ ، قَالَ : كُنْتُ عِنْدَ رَسُولِ اللهِ ـ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ـ فَقَرَأَ هَذِهِ الْآيَةَ فَذَكَرَ الْكِبْرَ وَعَظَّمَهُ فَبَكَى ثَابِتٌ ، فَقَالَ لَهُ رَسُولُ اللهِ ـ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ـ : " مَا يُبْكِيكَ " ؟ فَقَالَ : يَا رَسُولَ اللهِ ، إِنِّي لَأُحِبُّ الْجَمَالَ حَتَّى إِنَّهُ لَيُعْجِبُنِي أَنْ يَحْسُنَ شِرَاكُ نَعْلِي ، قَالَ : فَأَنْتَ مِنْ أَهْلِ الْجَنَّةِ إِنَّهُ لَيْسَ بِالْكِبَرِ أَنْ تُحَسِّنَ رَاحِلَتَكَ وَرَحْلَكَ ، وَلَكِنَّ الْكِبْرَ مَنْ سَفِهَ الْحَقَّ وَغَمَصَ النَّاسَ ،

ஒரு முறை அண்ணலாரின் அவையிலே தன் சக தோழர்களோடு அமர்ந்திருந்த ஒரு பொழுதிலே, அல்லாஹ்வின் வசனம் ஒன்று அருளப்பட்டது. அன் நிஸா அத்தியாயத்தின் 36 –வது இறைவசனம் அது.

وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا


அல்லாஹ் கூறுகின்றான்: “திண்ணமாக, அறிந்து கொள்ளுங்கள்! வீண் பெருமையிலும், கர்வத்திலும் உழல்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.”

சபையில் இருந்த ஸாபித் (ரலி) அவர்கள் அழுது விட்டார்கள். இதைக் கண்ணுற்ற நபி {ஸல்} அவர்கள், அழுகைக்கான காரணத்தை ஸாபித் (ரலி) அவர்களிடம் கேட்ட போது, ஸாபித் (ரலி) அவர்கள்நான் புகழுக்குரியவனாய் வாழ விரும்புகின்றேன். அது அறுந்து போன என் செருப்பு விஷயமாக இருந்தாலும் கூட, அது அழகாக இருக்க வேண்டும் என்பதில் நான் கவனம் செலுத்துகின்றேனே! அல்லாஹ்வோ அத்தகையவர்களை நேசிப்பதில்லை என்கிறானே அதை நினைத்து தான் நான் அழுகின்றேன் அல்லாஹ்வின் தூதரே!” என்றார்கள்.

அது கேட்ட அண்ணலார், ”நீர் சுவன வாசி! உம்மிடம் காணப்படுவது கர்வமோ பெருமையோ இல்லை. கர்வம் என்பது சத்தியத்தை மறைப்பதும் மக்களை கேவலமாகக் கருதுவதும் தான்என்று கூறினார்கள்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلَا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ أَنْ تَحْبَطَ أَعْمَالُكُمْ وَأَنْتُمْ لَا تَشْعُرُونَ

وقال ابن جرير: حدثنا أبو كُرَيْب، حدثنا زيد بن الحُبَاب، حدثنا أبو ثابت بن ثابت بن قيس بن شمَّاس، حدثني عمي إسماعيل بن محمد بن ثابت بن قيس بن شماس، عن أبيه قال: لما نزلت هذه الآية: { لا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ } قال: قعد ثابت بن قيس (5) في الطريق يبكي، قال: فمر به عاصم بن عدي من بني العَجلان، فقال: ما يبكيك يا ثابت؟ قال: هذه الآية، أتخوف أن تكون نزلت فيَّ وأنا صيت، رفيع الصوت. قال: فمضى عاصم بن عدي إلى رسول الله صلى الله عليه وسلم قال: وغلبه البكاء، فأتى امرأته جميلة ابنة عبد الله بن أبي بن سلول فقال لها: إذا دخلتُ بيت فَرَسي فشدّي عَلَيّ الضبَّة بمسمار فضربته بمسمار حتى إذا خرج عطفه، وقال: لا أخرج حتى يتوفاني الله، عز وجل، أو يرضى عني رسول الله صلى الله عليه وسلم. قال: وأتى عاصم رسولَ الله صلى الله عليه وسلم فأخبره خبره، فقال: "اذهب فادعه لي". فجاء عاصم إلى المكان فلم يجده، فجاء إلى أهله فوجده في بيت الفَرَس، فقال له: إن رسول الله صلى الله عليه وسلم يدعوك. فقال: اكسر الضبة. قال: فخرجا فأتيا (6) النبي صلى الله عليه وسلم فقال له رسول الله صلى الله عليه وسلم: "ما يبكيك يا ثابت؟". فقال: أنا صيت وأتخوف أن تكون هذه الآية نزلت في: { لا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ } . فقال له رسول الله صلى الله عليه وسلم: "أما ترضى أن تَعِيش حَميدًا، وتقتل شهيدا، وتدخل الجنة؟". فقال: رضيت ببشرى الله ورسوله صلى الله عليه وسلم، ولا أرفع صوتي أبدا على صوت النبي صلى الله عليه وسلم.

__________

பிரிதொரு சந்தர்ப்பத்தில், அல்லாஹ் ஹுஜுராத் அத்தியாயத்தின் 2 –ஆம் வசனத்தை இறக்கியருளிய போது, மதீனாவின் வீதியில் இருந்து அழுது கொண்டிருந்தார்கள்.

அவ்வழியாகச் சென்ற ஆஸிம் இப்னு அதீ (ரலி) அவர்கள் அதைப் பார்த்து விட்டு, அழுவதற்கான காரணத்தை வினவிய போது,  மேற்கூறிய இறைவசனத்தை சுட்டிக் காட்டி அந்த வசனம் என் சம்பந்தமாகத்தான் இறங்கிற்றோ என்கிற கவலையில் நான் அழுகின்றேன் என்றார்கள்.

அங்கிருந்து ஆஸிம் (ரலி) அவர்கள் விடைபெற்றதும், அழுகை மிகுதியாகவே நேராக வீட்டிற்குச் சென்ற ஸாபித் (ரலி) அவர்கள், தம்முடைய மனைவி ஜமீலா (ரலி) அவர்களிடம் வந்து, என்னை குதிரையை கட்டும் லாயத்தில் ஓரிடத்தில் கூண்டடித்து என்னை கட்டிப்போட்டு விடுங்கள்.

பின்னர் தமது மனைவியை நோக்கிஎன்னை குறித்து நபி {ஸல்} அவர்கள் திருப்தி கொள்ளாதவரையில் எனக்கு மரணமே வந்தாலும் நான் கூண்டை விட்டு  வெளியே வரமாட்டேன்என்றார்கள்.

அதே வேளையில் ஆஸிம் (ரலி) அவர்கள் வழியில் தாம் கண்ட காட்சியை அண்ணலாரிடம் கூறினார்கள். அப்போது நபிகளார் ஸாபித் (ரலி) அவர்களை தம்மிடம் அழைத்து வருமாறு ஆஸிம் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.

நேராக மதீனாவின் வீதிக்கு வந்த ஆஸிம் (ரலி) அவர்கள், ஸாபித் (ரலி) அவர்கள் அங்கு இல்லாததைக் கண்டு ஸாபித் (ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள்.

அங்கே குதிரை லாயத்திலே முடங்கிக்கிடந்த ஸாபித் (ரலி) அவர்களிடம் நபி {ஸல்} அவர்கள் உடனே மஸ்ஜிதுன் நபவீக்கு உங்களை வரச்சொன்னார்கள்என்றார். அதற்கு ஸாபித் (ரலி) அவர்கள் தம் மீது போடப்பட்டிருக்கின்ற கூண்டை உடைக்கச் சொன்னார்கள்.
அது போன்றே ஆஸிம் (ரலி) அவர்களும் உடைத்தார்கள். பின்னர் இருவரும் நபிகளாரின் சபை நோக்கி நடந்தார்கள்.

அழுது புலம்பியவராக அண்ணலாரின் அவைக்குள்ளே அடியெடுத்து வைத்த ஸாபித் (ரலி) அவர்களை நோக்கி பெருமானார் {ஸல்} அவர்கள்தோழரே! நீர் புகழுக்குரிய வாழ்வை வாழ்வீர் என்றால் பொருந்திக்கொள்வீரா?”  ”நீர் ஷஹாதத் எனும் வீர மரணம் அடைவீர் என்றால் பொருந்திக்கொள்வீரா?”  ”நீர் சுவனத்தைப் பெற்றுக் கொள்வீர் என்றால் பொருந்திக்கொள்வீரா?”

வாரும்! உமக்கான சோபனத்தை பெற்றுச் செல்லும்! என்று கூறினார்கள். நிச்சயமாக! அல்லாஹ்வின் தூதரே! இதோ! அல்லாஹ்வுடைய, அல்லாஹ்வின் தூதருடைய சோபனத்தை நான் பொருந்திக்கொள்கின்றேன்.” என்று ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

இனி ஒரு போதும் நான் தங்களின் குரலை விட உயர்த்தி பேசமாட்டேன் அல்லாஹ்வின் தூதரே! என்றுரைத்தார்.

உடனடியாக அல்லாஹ் அடுத்து ஒரு இறை வசனத்தை இறக்கியருளினான்.

إِنَّ الَّذِينَ يَغُضُّونَ أَصْوَاتَهُمْ عِنْدَ رَسُولِ اللَّهِ أُولَئِكَ الَّذِينَ امْتَحَنَ اللَّهُ قُلُوبَهُمْ لِلتَّقْوَى لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ عَظِيمٌ

அல்லாஹ் கூறுகின்றான்: “திண்ணமாக! எவர்கள் இறைத்தூதரின் திருமுன் உரையாடும் போது தங்கள் குரலைத் தாழ்த்துகின்றார்களோ உண்மையில் அத்தகையவர்களின் இதயங்களை இறையச்சத்திற்காக அல்லாஹ் பரிசோதித்து தேர்ந்தெடுக்கின்றான். அவர்களுக்கு மன்னிப்பும் மகத்தான கூலியும் இருக்கின்றது.”

                   (நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர், இஸ்தீஆப், உஸ்துல் ஃகாபா)

நாமும் தான் எத்தனையோ தடவை தண்டனை குறித்தான வசனங்களை, எச்சரிக்கை குறித்தான வசனங்களை, நரகம் குறித்தான வசனங்களை நாள் தோரும் ஓதுகின்றோம். ஓதக் கேட்கின்றோம்.

நம் இதயங்கள் நொருங்கிப் போக வேண்டாம். கண்கள் ஒரு சொட்டு கண்ணீரையாவது சொட்ட வேண்டாமா?

ஒற்றை வசனத்தின் வார்த்தைகளும், அதன் பொருளும் எப்படியெல்லாம் மேன்மக்களை அதிர்ச்சியுறச் செய்திருக்கின்றது.

அப்பாத் இப்னு பிஷ்ர் (ரலி) அவர்கள்.

சற்றேறக்குறைய முஸ்லிமாக 13 ஆண்டுகளே வாழும் பாக்யம் பெற்றவர்கள். தங்களது 15 –வது அல்லது இன்னொரு அறிவிப்பின் படி 25 –வது வயதில் தம்மை இஸ்லாத்தின் பால் இணைத்துக் கொண்டார்கள்.

أسلم بالمدينة على يد مصعب بن عمير، قبل إسلام سعد بن معاذ، وأسيد بن خضير. وشهد بدراً وأحداً والمشاهد كلها مع رسول الله صلى الله عليه وسلم.


முஸ்அப் (ரலி) அவர்களின் கரத்தால் இஸ்லாமிய உலகிற்குள் அடியெடுத்து வைக்கும் அருட்பேரு பெற்றவர்கள்.

எப்போதும் இவர்கள் குர்ஆன் ஓதிக்கொண்டே இருப்பார்கள். ஆதலால் இவர்கள்ஸாஹிபுல் குர்ஆன்குர்ஆனின் தோழன் என்றே நபித்தோழர்களால் அழைக்கப்பட்டார்கள்.

وروت عائشة رضي الله عنها: أن النبي صلى الله عليه وسلم سمع صوت عباد بن بشر، فقال: " اللهم ارحم عباداً "

ابْنُ إِسْحَاقَ: عَنْ مُحَمَّدِ بنِ جَعْفَرِ بنِ الزُّبَيْرِ، عَنْ عَبَّادِ بنِ عَبْدِ اللهِ بنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:
تَهَجَّدَ رَسُوْلُ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- فِي بَيْتِي، فَسَمِعَ صَوْتَ عَبَّادِ بن بِشْرٍ، فَقَالَ: (يَا عَائِشَةُ! هَذَا صَوْتُ عَبَّادِ بنِ بِشْرٍ).
قُلْتُ: نَعَمْ.
قَالَ: (اللَّهُمَّ اغْفِرْ لَهُ (2)).

ஒரு நாள் நபி {ஸல்} அவர்கள் தமதருமை மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களோடு வீட்டிலே அளவளாவிக் கொண்டிருந்தார்கள்.

திடீரென அண்ணலாரின் முகம் அப்படியே மலர் போல் மலர்ந்து இலங்கியது. மஸ்ஜிதுன் நபவீயில் இருந்து ஓர் அழகிய குரல் அண்ணலாரின் வதனம் இலங்கிட காரணமாய் அமைந்தது.

அங்கே யார்? அப்பாத் இப்னு பிஷ்ர் அவர்களா குர்ஆன் ஓதிக்கொண்டிருக்கின்றார்? கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்களேன்! அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை அன்பாய் ஆணையிடுகின்றார்கள்அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்.

ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அப்பாத் இப்னு பிஷ்ர் அவர்களே தான். அல்லாஹ் அவரின் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பானாக! இது நபிகளாரின் சுந்தர வாயில் இருந்து உதிர்ந்த வார்த்தை எத்தகைய சோபனத்திற்குரிய துஆ!

ஓர் இறை நம்பிக்கையாளனின் வாழ்வில் இதனை விட வேறென்ன ஆசை இருக்க முடியும்.

وكان من فضلاء الصحابة، قالت عائشة: ثلاثة من الأنصار لم يكن أحد يعتد عليهم فضلاً، كلهم من بني عبد الأشهل: سعد بن معاذ، وأسيد بن حضير، وعباد بن بشر.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “அன்ஸார்களில் மூன்று நபர்களின் அந்தஸ்தை வேறெவரும் அடைந்திட முடியாது. அவர்களின் தரம் மிகவும் உயர்ந்தது. அவர்கள் ஸஅத் இப்னு முஆத் (ரலி), உஸைத் இப்னு ஹுளைர் (ரலி), அப்பாத் இப்னு பிஷ்ர் (ரலி).”

மிகக் குறைந்த காலத்திலேயே, மிகக் குறைந்த வயதிலேயே புகழுக்குரிய வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்தார்கள்.

வரலாற்றில் தங்களுக்கென தனியானதொரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார்கள். இவர்களின் அந்தஸ்தை சக அன்ஸார்களில் ஒருவரே அடைய முடியாதென்றால்?”

فأجمعوا على ان عبادا كان اذا مشى في الظلام انبعثت منه أطياف نور وضوء، تضيء له الطريق..

இரவில் எங்கே சென்றாலும் அவருடன் ஒளியும் சேர்ந்தே செல்லும். நபியுல்லாஹ் மூஸா {அலை} அவர்களுக்குப் பின்னர் எப்போதும் ஒளியுடன் வாழ்ந்தவர்கள் அப்பாத் இப்னு பிஷ்ர் (ரலி) அவர்கள்.

عباد بن بشر - معه من الله نور

வரலாற்று ஆசிரியர் காலித் முஹம்மத் காலித் (ரஹ்) அவர்கள் அப்பாத் இப்னு பிஷ்ர் (ரலி) அவர்களின் வரலாற்றை கூறுகின்ற போது “அல்லாஹ்வின் ஒளி பொருந்திய அப்பாத் இப்னு பிஷ்ர்” என்றே தமது நூலான ரிஜாலுன் ஹவ்லர் ரஸூலில் அறிமுகப்படுத்துவார்கள்.
ஹிஜ்ரி நான்காம் ஆண்டு நடை பெற்ற படையெடுப்புக்கு “தாதுர் ரிகாவு” எனும் பெயர். இந்த யுத்தத்தில் தான் யுத்த கால தொழுகை முறை அறிமுகம் ஆனது.

நபித்தோழர்களின் ஈமானை பரிசோதிக்கும் முகமாக அமைந்து விட்டதோ எனும் எண்ணுமளவிற்கு பல்வேறு சோதனைகள் அங்கே நடைபெற்றன.

முறைவைத்து தான் பயணம் மேற்கொள்ளப்பட்டது. மொத்த படை வீரர்கள் 700 நபர்கள். ஆறு நபருக்கு ஒரு ஒட்டகம் வீதம் பயணத்திற்கு பயன் படுத்தப் பட்டது.

எந்த அளவுக்கெனில், நபித்தோழர்களின் பலருடைய நகங்களெல்லாம் கிழிந்து விழுந்து விட்டன.

பாறைகளையும், பாலைகளையும் கடந்து சென்றதால் பலருக்கு காயம் ஏற்பட்டு தங்களது துணிகளை கிழித்து காயத்திற்கு ஒட்டுப்போட்டுக்கொண்டனர்.

ஆதலால், அந்தப் போருக்கே தாதுர் ரிகாவு – ஒட்டுத்துணிப்போர் என பெயர் வழங்கப்பட்டது.

பெரிய அளவில் போரெல்லாம் நடைபெறவில்லை. எதிரிகளை அச்சுறுத்துவதற்காகவே அந்தப் போர் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் முஸ்லிம்கள் திரும்பி விட்டனர்.

بعد أن فرغ رسول الله والمسلمين من غزوة ذات الرقاع نزلوا مكانا يبيتون فيه، واختار الرسول للحراسة نفرا من الصحابة يتناوبونها وكان منهم عمار بن ياسر وعباد بن بشر في نوبة واحدة.
ورأى عباد صاحبه عمار مجهدا، فطلب منه أن ينام أول الليل على أن يقوم هو بالحراسة حتى يأخذ صاحبه من الراحة حظا يمكنه من استئناف الحراسة بعد أن يصحو.
ورأى عباد أن المكان من حوله آمن، فلم لا يملأ وقته اذن بالصلاة، فيذهب بمثوبتها مع مثوبة الحراسة..؟!
وقام يصلي..
واذ هو قائم يقرأ بعد فاتحة الكتاب سور من القرآن، احترم عضده سهم فنزعه واستمر في صلاته..!
ثم رماه المهاجم في ظلام الليل بسهم ثان نزعه وأنهى تلاوته..
ثم ركع، وسجد.. وكانت قواه قد بددها الاعياء والألم، فمدّ يمينه وهو ساجد الى صاحبه النائم جواره، وظل يهزه حتى استيقظ..
ثم قام من سجوده وتلا التشهد.. وأتم صلاته.
وصحا عمار على كلماته المتهدجة المتعبة تقول له:
" قم للحراسة مكاني فقد أصبت".
ووثب عمار محدثا ضجة وهرولة أخافت المتسللين، ففرّوا ثم التفت الى عباد وقال له:
" سبحان الله..
هلا أيقظتني أوّل ما رميت"؟؟
فأجابه عباد:
" كنت أتلو في صلاتي آيات من القرآن ملأت نفسي روعة فلم أحب أن أقطعها.
ووالله، لولا أن أضيع ثغرا أمرني الرسول بحفظه، لآثرت الموت على أن أقطع تلك الآيات التي كنت أتلوها"..!!


வழியில் ஓரிடத்தில் இளைப்பாருவதற்காக நபிகளார் படையினரை அனுமதித்தார்கள். இந்த இரவில் நமக்காக காவல் காற்பது யார்? என்று நபி {ஸல்} அவர்கள் வினவிய போது, முஹாஜிர்களில் அம்மார் இப்னு யாஸிர் (ரலி) அவர்களும், அன்ஸார்களில் அப்பாத் இப்னு பிஷ்ர் (ரலி) அவர்களும் முன் வந்தனர்.

நபிகளாரும், நபித்தோழர்களும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். இரவின் ஒரு பகுதி கழிந்ததும் அப்பாத் (ரலி) அவர்கள், அம்மார் (ரலி) அவர்களிடம் நீங்கள் தூங்கிக் கொள்ளுங்கள். நான் காவல் காக்கின்றேன். பின்னர் நான் உறங்குகின்றேன் நீங்கள் காவல் காத்துக் கொள்ளுங்கள்.

கொஞ்ச நேரம் போனது அவர்களின் மனம் முழுவதும் இந்த ரம்மியமான இரவு வீணாகி விடக்கூடாது. பேசாமல் சிறிது நேரம் தொழுது விடுவோம் என ஆசை கொண்டிருந்தது.

தொழுகைக்கு தக்பீர் கட்டி நின்றார்கள். ஃபாத்திஹா வுக்குப் பின்னர் சூரா கஹ்ஃப் ஓத ஆரம்பித்தார்கள்.

பின்னால், வேவு பார்த்து வந்த எதிரி ஒருவன் அப்பாத் அவர்களின் மீது அம்பொன்றை எய்தான். பிடுங்கி தூர எறிந்து விட்டு தொழுகையை தொடர்ந்தார்கள்.

மீண்டும் ஒரு அம்பு, மீண்டும் ஒரு அம்பு என மூன்று அம்புகள் எய்யப்பட்டது. ஆனாலும் அசராமல் பிடுங்கி எறிந்து விட்டு தொழுகையைப் பூர்த்தி செய்து விட்டு அம்மார் (ரலி) அவர்களை எழுப்பினார்கள்.

எழுந்து பார்த்த அம்மார், அப்படியே அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டார்கள்.

ஏன் முதல் முறை நீங்கள் தாக்கப்படும் போதே என்னை எழுப்பியிருக்க வேண்டாமா? எனக் கேட்டார்கள்.

தொழுகையில், குர்ஆனின் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தேன். இடையில் நிறுத்த என் மனம் விரும்ப வில்லை.

அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கின்றேன் அம்மாரே! நான் குர்ஆன் ஓதுவதை நிறுத்துவதை விட மரணித்து போவதையே விரும்புனேன். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் படைக்கு காவலாக இருக்கும் படி கட்டளை இட்டிருந்ததால், என் மரணம் படைக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாதே என அஞ்சினேன்என்றார்கள்.

       (நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, அல்மஃகாஸீ லில் வாகிதீ)
وقبل أن تبدأ معركة اليمامة بيوم، رأى في منامه رؤيا لم تلبث أن فسرت مع شمس النهار، وفوق أرض المعركة الهائلة الضارية التي خاضها المسلمون..
ولندع صحابيا جليلا هو أبو سعيد الخدري رضي الله عنه يقص علينا الرؤيا التي رآها عبّاد وتفسيره لها، ثم موقفه الباهر في القتال الذي انتهى باستشهاده..
يقول أبو سعيد:
" قال لي عباد بن بشر يا أبا سعيد رأيت الليلة، كأن السماء قد فرجت لي، ثم أطبقت عليّ..
واني لأراها ان شاء الله الشهادة..!!
فقلت له: خيرا والله رأيت..
واني لأنظر اليه يوم اليمامة، وانه ليصيح بالأنصار:
احطموا جفون السيوف، وتميزوا من الناس..
فسارع اليه أربعمائة رجل، كلهم من الأنصار، حتى انتهوا الى باب الحديقة، فقاتلوا أشد القتا

هكذا ارتفع عباد الى مستوى واجباته كؤمن من الأنصار، بايع رسول الله على الحياة لله، والموت في سبيله..
وعندما رأى المعركة الضارية تتجه في بدايتها لصالح الأعداء، تذكر كلمات رسول الله لقومه الأنصار:
" أنتم الشعار..
فلا أوتيّن من قبلكم"..
وملأ الصوت روعه وضميره..
حتى لكأن الرسول عليه الصلاة والسلام قائم الآن يردده كلماته هذه..
وأحس عباد أن مسؤولية المعركة كلها انما تقع على كاهل الأنصار وحدهم.. أو على كاهلهم قبل سواهم..
هنالك اعتلى ربوة وراح يصيح:
" يا معشر الأنصار..
احطموا جفون السيوف..
وتميزوا من الناس..
وحين لبّى نداءه أربعمائة منهم قادهم هو وأبو دجانة والبراء ابن مالك الى حديقة الموت حيث كان جيش مسيلمة يتحصّن.. وقاتل البطل القتال اللائق به كرجل.. وكمؤمن.. وكأنصاري..


யமாமா பல நபித்தோழர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் யுத்தமாக விளங்கியதென்றால் அது மிகையல்ல.

ஆனால், யமாமாவின் கதாநாயகர் என்று தான் அப்பாத் இப்னு பிஷ்ர் (ரலி) அவர்களைச் சொல்ல வேண்டும்.

போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த போதிலும் சொல்லிக் கொள்ளும் படியான துளியளவு முன்னேற்றம் கூட முஸ்லிம் படையில் இல்லை.

ஒரு கட்டத்தில் முஸ்லிம் படையிலேயே அன்ஸார்களுக்கும், முஹாஜிர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் முரண்பட்டு நின்றனர்.

இதைக் கண்ணுற்ற அப்பாத் இப்னு பிஷ்ர் (ரலி) அவர்கள், போகிற போக்கில் முஸ்லிம் படையினர் முஸைலமாவின் படையினரிடம் சரணடைந்து விடுவார்களோ என்று அஞ்சி நபிகளார் முன்பு ஒரு சந்தர்ப்பத்தில் கையாண்ட உபாயத்தை யமாமாவில் கையாண்டார்கள்.

அன்ஸார்களை நோக்கி வீர உரை ஒன்றை நிகழ்த்தினார்கள். அதில் அண்ணலார் அன்ஸார்களை நோக்கி பயன் படுத்திய வாசகங்களை அப்படியே பயன்படுத்தினார்கள்.

அதன் பலன் உடனடியாகவே கிடைத்தது. ஆம்! 400 அன்ஸாரித் தோழர்கள் அப்பாத் (ரலி) அவர்களின் முன் திரண்டனர்.

அப்பாத் இப்னு பிஷ்ர் (ரலி) அவர்கள் பின்னால் அணி திரண்ட அம்மக்கள் முஸைலமாவின் படையினரை விரட்டியடித்தனர். முஸ்லிம்களின் எதிர் பாராத இத்தாக்குதலால் நிலைகுலைந்து போய் அங்கிருந்த ஒரு தோட்டத்தில் அடைக்கலம் புகுந்தனர்.

அத்தோட்டத்தில் புகுந்த முஸைலமாவின் கூட்டத்தினர்கள் அங்கேயே சமாதியாகிப் போனார்கள். இறுதியாக அப்பாத் இப்னு பிஷ்ர் (ரலி) அவர்களும் ஷஹீதானார்கள்.

அவர்களின் உடல் சல்லடையாய் துளைக்கப்பட்டு தோட்டத்தின் சுவர் ஓரத்தில் வீழ்ந்து கிடந்தது. அவரின் சகோதரி வந்து அடையாளம் காட்டிய பிறகே அப்பாத் இப்னு பிஷ்ர் (ரலி) அவர்கள் தான் எனும் முடிவுக்கே வந்தார்கள் நபித்தோழர்கள்.

சரிவின் பாதையில் போய்க்கொண்டிருந்த யுத்த களத்தை, சரித்திர வெற்றியாக, ஒரு புதிய சகாப்தத்தின் துவக்கமாக மாற்றிக் காட்டி வரலாற்றில் நீங்காத ஓரிடத்தை முஸ்லிம் சமூகத்திற்கு வெகுமதியளித்து விட்டுத்தான் அந்த மாவீரர் மாண்டு போனார். ஆம் வீரமரணம் அடைந்தார்.

மிகச் சாதரணமாக வாழ்க்கையை துவங்கிய அப்பாத் (ரலி) அவர்கள், வெறும் 13 ஆண்டுகளில் புகழுக்குரிய வாழ்வை வாழ்ந்து விட்டு புகழுக்குரிய முறையிலேயே மரணமும் அடைந்தார்கள்.

ஆடும் வாழ்கிறது மாடும் வாழ்கிறது நம் வீட்டு கோழியும் வாழ்கிறது. உண்கிறது, குடிக்கிறது, குடும்பமும் நடத்துகின்றது,

அது போன்றதல்ல நம் வாழ்க்கை. வாழ்க்கை பல பாடங்களைக் கொண்டது. பல அர்த்தங்களைக் கொண்டது.

வாழ வேண்டும், அதுவும் புகழுக்குரிய வாழ்வாக வாழ வேண்டும்.

அல்லாஹ் அத்தகைய மேன்மையான வாழ்வை வாழும் நல்ல நஸீபை பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்!

                       யாரப்பல் ஆலமீன்!!

                          வஸ்ஸலாம்!!!












2 comments:

  1. தோன்றின் புகழோடு தோன்றுக; அஃதன்றி தோன்றலின் தோன்றாமை நன்று. என்ற வள்ளுவரின் வார்த்தையை மெய்படுத்திய நின் புகழ் வாழ்க!

    ReplyDelete