Wednesday, 20 August 2014

” இல்லம்...” ஓர் மகத்தான அருட்கொடை!

” இல்லம்...” ஓர் மகத்தான அருட்கொடை!


 

   
மனிதன் சிந்திக்கத் தவறிய இறைவனின் அருட்கொடைகள் ஏராளம் தாராளம் இருக்கின்றன.

அப்படி மனிதன் சிந்திக்கத் தவறிய ஓர் உயரிய அருட்கொடை தான் இல்லமாகும். ஆம்! மனிதன் தான் வசிப்பதற்கு பயன் படுத்தும் வீடாகும்.

அப்படி மனிதன் சிந்திக்கத் தவறிய வீட்டைக் குறித்து சிந்தித்து உணருமாறு அல்லாஹ் தன் திருமறையில் தூண்டுகின்றான்.

وَاللَّهُ جَعَلَ لَكُمْ مِنْ بُيُوتِكُمْ سَكَنًا وَجَعَلَ لَكُمْ مِنْ جُلُودِ الْأَنْعَامِ بُيُوتًا تَسْتَخِفُّونَهَا يَوْمَ ظَعْنِكُمْ وَيَوْمَ إِقَامَتِكُمْ وَمِنْ أَصْوَافِهَا وَأَوْبَارِهَا وَأَشْعَارِهَا أَثَاثًا وَمَتَاعًا إِلَى حِينٍ

மேலும், அல்லாஹ் உங்களுக்காக உங்கள் வீடுகளை அமைதியளிக்கும் இடங்களாக ஆக்கினான்.

 மேலும், கால்நடைகளின் தோல்களின் மூலம் உங்களுக்கு எத்தகைய வீடுகளை உருவாக்கினானென்றால், நீங்கள் பயணம் செல்லும் போதும் அல்லது தங்கிவிடும் போதும் அவற்றை இலேசாகக் காண்கின்றீர்கள்.

 மேலும், கால் நடைகளின் குறுமென் மயிர், முடி, ரோமம் ஆகியவற்றின் மூலம் (அணிவதற்கும் வீட்டு உபயோகத்திற்கும் உரிய) ஏராளமான பொருள்களை அவன் படைத்தான். வாழ்வின் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவை உங்களுக்குப் பயன் படுகின்றன.

இந்த இறைவசனத்திற்கு முன்னாலும், பின்னாலும் அல்லாஹ் பல்வேறு அருட்கொடைகளைக் கூறிவிட்டு அவைகளைப் பற்றி சிந்திக்குமாறு கூறுகின்றான்.

நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் எத்துனையோ அருட்கொடைகளை அனுபவிக்கின்றோம்.

என்றாலும், அவைகளின் மதிப்புகளை நாம் உணர்வதில்லை. அது போன்று தான் இறைவனின் மாபெரும் அருட்கொடையான வீடுஇல்லத்தின் மதிப்பு குறித்தும் நாம் உணரவில்லை.

வீடே இல்லாதவனுக்குத் தான் வீட்டின் மதிப்பும், அருமையும் தெரியும்.

இன்று உலகத்தில் கோடான கோடி பேர்கள் வீடில்லாமல், குழந்தை குட்டிகளோடு நாடோடிகளாக மரங்களுக்கு கீழேயும், மேம்பாலத்தின் விளிம்புகளிலும், ஆற்றுப் படுகைகளிலும் படுத்து உறங்கிக் கொண்டு அலைந்து திரிகின்றார்கள்.

இன்னும் சிலர், சொந்த வீடு இருந்தும் இயற்கைப் பேரிடர், யுத்த மேகம், உள் நாட்டுப் போர் ஆகியவைகளால் பாதிக்கப்பட்டு அகதிகள் முகாமில் ஒரு நேர சாப்பாட்டிற்கு வரிசையில் நின்று கொண்டிருக்கின்றார்கள்.

ஆதலால் தான் அல்லாஹ்வின் தூதர் {ஸல் அவர்கள் தங்களது துஆவில் ரிஜ்கில் – வாழ்வாதாரத்தில் அபிவிருத்தியைக் கேட்பதற்கு முன்னால் இல்லத்தின் விசாலத்தைப் பற்றி அல்லாஹ்விடம் முறையிட்டார்கள்.

وقد كان الرسول - صلى الله عليه وسلم - يدعو، فيقول: (اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي وَوَسِّعْ لِي فِي دَارِي وَبَارِكْ لِي فِي رِزْقِي)(1).

__________
(1) - ابن أبي شيبة(29384) صحيح

                                          
இறைவா! என்னுடைய பாவத்தை மன்னித்து விடுவாயாக! என் வீட்டை விசாலமாக்குவாயாக! என் வாழ்வாதாரத்தில்ரிஜ்கில் அபிவிருத்தி செய்வாயாக!

                            ( நூல்: இப்னு அபீ ஷைபா, ஹதீஸ் எண்: 29384 )

வீட்டின் அமைப்பும்சமூகத்தின் கனவுகளும்….

இன்று சமூகத்தில் வீட்டை உருவாக்குவதில் மனிதர்கள் பல்வேறு கனவுகளைச் சுமந்தவர்களாக வலம் வருகின்றார்கள்.

சில போது வீட்டை அமைப்பதில் காட்டுகின்ற அக்கறையும், அதீத ஆர்வமும் அல்லாஹ்வின் வரம்புகளை மீறிடும் துணிச்சலைத் தந்து விடுகின்றது.

அதனால், வீண்விரயம் வட்டி, இன்னொருவனின் உரிமையப் பறித்தல் போன்ற பாவங்களைச் செய்திட மனிதன் துணிந்து விடுகின்றான்.
 நாம் பார்த்திருக்கின்றோம், சில பேர் பக்கத்து வீட்டுக்காரனின் இடத்தை அபகரித்து தன் வீட்டைக் கட்டி விட்டு வீட்டின் முகப்பிலேஇது என் இறைவனின் அருட்கொடைஎன்று போட்டிருப்பார்கள்.

வீட்டின் வரைவிலக்கணத்தைப் பற்றி அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு அஹ்மத் அல் அன்ஸாரி அல் குர்துபீ (ரஹ்) அவர்கள், மேற்கூறிய இறைவசனத்தின் விளக்கத்தில் கூறுகின்ற போது..

وكل ما علاك فأظلك فهو سقف وسماء، وكل ما أقلك فهو أرض، وكل ما سترك من جهاتك الأربع فهو جدار، فإذا انتظمت واتصلت فهو بيت.

உன் தலைக்கு மேல் நிழல் தருபவைக்கு முகடு என்றும், உன்னைச் சுமந்து தாங்கி நிற்பவைகளுக்கு தரை என்றும், உன்னை நான்கு புறத்திலும் மறைப்பதற்கு சுவர் என்றும் கூறப்படும் இவை அனைத்தும் ஒன்று சேர்ந்த கட்டிடத்திற்குபைத்வீடு என்று சொல்லப்படும்.”

மனிதன் தனது அயராத உழைப்பினூடே சிறிது நேரம் ஓய்வெடுப்பது அவசியம். இந்த ஓய்வு என்பது அவனுக்கு வீட்டில் தான் கிடைக்கின்றது.

மேலும், உடல் ஓய்வோடு உள்ளமும், சிந்தனையும், சீர் பட அல்லாஹ் வீட்டில் தான் அமைதியை, மன நிம்மதியை அருளியிருப்பதாக இந்த வசனத்தில் தெளிவு படுத்தி இருக்கின்றான்.


                                               ( நூல்: தஃப்ஸீர் குர்துபீ )


வீட்டை நிர்மாணிப்பதில் முன்னோர்களின் ஈடுபாடு.

وحين نقول بيته فلنذكر تماما، ماذا كان ذاك البيت..؟ فحين همّ سلمان ببناء هذا الذي يسمّى مع التجوّز بيتا، سأل البنّاء: كيف ستبنيه..؟

وكان البنّاء حصيفا ذكيا، يعرف زهد سلمان وورعه.. فأجابه قائلا:" لا تخف.. انها بناية تستظل بها من الحر، وتسكن فيها من البرد، اذا وقفت فيها أصابت رأسك، واذا اضطجعت فيها أصابت رجلك"..!
فقال له سلمان: "نعم هكذا فاصنع".
கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் நபித்தோழர் ஸல்மானுல் ஃபார்ஸீ (ரலி) அவர்கள் ஷாமின் கவர்னராக இருந்த தருணம் அது.

தங்களுக்கென அது வரை எந்த ஒரு வீட்டையும் அவர்கள் கட்ட வில்லை. பெரும்பாலும் மரங்களின் நிழல்களிலும், மஸ்தித்களிலும் தங்கிக் கொள்வார்கள்.

மதாயின் பகுதியில் வசித்து வந்த ஸல்மான் (ரலி) அவர்களை ஒரு நாள் ஹுதைஃபா (ரலி) அவர்கள் சந்தித்து, தோழரே! நீங்கள் ஏன் உங்களுக்காக ஒரு வீட்டை கட்டிக் கொள்ளக் கூடாது? என்று கேட்டார்.
அதற்கு ஸல்மான் (ரலி) அவர்கள்எதற்காக வீட்டை கட்ட வேண்டும்? என்று கேட்டார்கள்.

அதற்கு ஹுதைஃபா (ரலி) அவர்கள்ஓய்வெடுக்கவும் இன்ன பிற சுய தேவைகளுக்கும் உங்களுக்கு பயன் தருமல்லவா? என்று கூறினார்கள்.

அது கேட்ட ஸல்மான் அதைத் தான் மதாயின் நகர மரங்களின் நிழல்களில் பெற்றுக் கொள்கின்றேனே என்று கூறி மறுத்து விட்டார்கள்.

வற்புறுத்திக் கூறவே, வீடு கட்ட சம்மதித்து கொத்தனாரை வரவழைத்தார்கள்.

கொத்தனாரிடம் ஸல்மான் (ரலி) அவர்கள், எப்படி வீட்டைக் கட்டப் போகின்றாய்? என்று கேட்டார்கள்.

ஸல்மான் (ரலி) அவர்களின் உலகப் பற்றற்ற வாழ்வையும், எளிமையையும் நன்கு விளங்கி வைத்திருந்த கொத்தனார் இப்படிக் கூறினார்.

கவர்னர் அவர்களே! கவலை கொள்ளாதீர்கள்! நான் தங்களுக்காக கட்டித் தரப்போகும் வீடு வெயில் காலங்களில் நிழல் தரும், குளிர் காலங்களில் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். நீங்கள் எழுந்து நின்றால் அதன் முகடு உங்கள் தலையின் உச்சியைத் தொடும், நீங்கள் படுத்திருந்தால் அதன் சுவர்கள் உங்களின் கால்களைத் தட்டும்!” என்றார் கொத்தனார்.

அவர் சொன்ன பதிலைக் கேட்டு, அகமகிழ்ந்தவராகஆம்! இப்படித்தான் என் இல்லம் அமைந்திருக்க வேண்டுமென்று நானும் விரும்பினேன்என்றார்கள் ஸல்மான் ஃபார்ஸி (ரலி) அவர்கள்.

( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, இஸ்தீஆப், பாகம்:1, பக்கம்:336 )

ولقد مر الإمام علي بن أبى طالب -رضي الله عنه- على رجل يبني بيتًا، فقال له:
قَدْ كُنْتَ مَيْتا فَصِرْتَ حيّا وَعَنْ قَلِيْلٍ تَصِيْرُ مَيْتا
بنيت بدار الفناء بيتاً فَابْنِ بِدارِ البَقَاءِ بَيْتا



ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் ஒரு நாள் மதீனாவின் வீதியில் வந்து கொண்டிருக்கும் போது, ஒருவர் தமது வீட்டை கட்டிக் கொண்டிருந்தார். அவரை அழைத்து அலீ (ரலி) அவர்கள் சொன்னார்களாம்.

 “! இன்னவரே! நீர் உயிரற்றவராய் இருந்தீர்! பின்பு நீர் உயிர் கொடுக்கப்பட்டீர்! சில காலத்திற்குப் பின்னர் மீண்டும் உயிரற்றுப் போவீர்!

ஆனாலும், நீர்! அழியும் உலகில் வீட்டைக் கட்டிக் கொண்டிருக்கின்றீர்! அழியா உலகான மறுமையில் நீர் இன்பமாக இருப்பதற்காகவும் ஓர் வீட்டை உருவாக்கிக் கொள்வீராக!

وكتب بهلول على حائط من حيطان قصر عظيم بناه أخوه الخليفة هارون الرشيد يا هارون رفعت الطين ووضعت الدين رفعت الجص ووضعت النص إن كان من مالك فقد أسرفت إن الله لا يحب المسرفين وإن كان من مال غيرك ظلمت إن الله لا يحب الظالمين


மன்னர் ஹாரூன் ரஷீத் அவர்கள் மிகப் பிரம்மாண்டமான முறையில், அதிக செலவில் ஓர் அரண்மனையைக் கட்டினார்கள்.

அந்த அரண்மனையைக் கண்டு அதிர்ந்து போன, அந்த காலத்தில் வாழ்ந்த மாமேதை புஹ்லூல் (ரஹ்) அவர்கள் அரண்மனையின் சுவரில்

ஹாரூனே! மண்ணை உயர்த்தி சத்திய சன்மார்க்கத்தை நீர் தாழ்த்தி விட்டீர்! வைரக் கல்லை உயர்த்தி சத்திய தீனின் நெறியான குர்ஆன்ஹதீஸைத் தாழ்த்தி விட்டீர்!

ஹாரூனே! அறிந்து கொள்ளுங்கள்! இந்த அரண்மனை சொந்த வருமானத்தில் கட்டப்பட்டிருந்தால் அது இஸ்ராஃப்வீண் விரயமாகும். அல்லாஹ் வீண் விரயம் செய்பவர்களை ஒரு போதும் நேசிப்பதில்லை.”

அவ்வாறின்றி, பொதுச் சொத்திலிருந்து கட்டப்பட்டிருந்தால் அது அநியாயம் ஆகும். அல்லாஹ் அநியாயம் செய்பவர்களையும் ஒரு போதும் நேசிப்பதில்லை.” என்று எழுதினார்கள்.

( நூல்: தஃப்ஸீர் ரூஹுல் பயான், அந் நஹ்ல் 80 –வது வசனத்தின் விளக்கத்தில் )

வீடு கட்ட வேண்டும் என்ற பேராசையில் உழல்பவர்களுக்கும், பிறரின் புகழுக்காக ஆடம்பரமாகவும், உயரமாகவும் பயன்பாட்டிற்கு அதிகமாகவும் வீடு கட்டுகின்ற ஒவ்வொருவருக்கும் முன்னோர்களின் வரலாற்றில் பாடங்கள் நிறைய உண்டு.

அல்லாஹ் விளக்கத்தைத் தருவானாக! ஆமீன்,

 நற்பேறுக்கான அடையாளம் இல்லம்.

ولقول الرسول - صلى الله عليه وسلم - : (أَرْبَعٌ مِنَ السَّعَادَةِ : الْمَرْأَةُ الصَّالِحَةُ ، وَالْمَسْكَنُ الْوَاسِعُ ، وَالْجَارُ الصَّالِحُ ، وَالْمَرْكَبُ الْهَنِيءُ ، وَأَرْبَعٌ مِنَ الشَّقَاوَةِ : الْجَارُ السُّوءُ ، وَالْمَرْأَةُ السُّوءُ ، وَالْمَسْكَنُ الضِّيقُ ، وَالْمَرْكَبُ السُّوءُ.)(1).
__________
(1) - ابن حبان (4032 ) صحيح

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

நான்கு விஷயங்கள் ஓர் அடியானுக்கு ஸாலிஹான நல்ல மனைவி, விசாலமான அமைதி நிலவும் வீடு, நல்லவராக இருக்கும் அண்டை வீட்டான், இலகுவான வாகனம் ஆகியவை அமையப் பெறுமானால் அவன் நற்பேற்றை பெற்றவனாவான்.

அதே போன்று ஓர் அடியானுக்கு தீய நடத்தையுள்ள மனைவி, கெட்டவராக இருக்கும் அண்டை வீட்டான், நெருக்கடியும் அசௌகர்யமும் நிலவும் வீடு, பயனற்ற வாகனம் ஆகியவை அமையப் பெறுமானால் அவன் துர்பாக்கியம் பெற்றவனாவான்.”

                              ( நூல்: இப்னு ஹிப்பான், ஹதீஸ் எண்: 4032  )

சோபனமும்.. சாந்தியும்

قال صلى الله عليه وسلم : " طوبى لمن ملك لسانه ووسعه بيته وبكى على خطيئته " .

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “தன்னுடைய நாவை கட்டுப்படுத்தினானே அத்தகைய ஒருவனுக்கும், தனது பாவத்தை நினைத்து அழுகின்றானே அத்தகைய ஒருவனுக்கும், தனது இல்லத்தை எல்லா வகையிலும் விசாலமாக ஆக்கிக் கொண்டானே அத்தகைய ஒருவனுக்கும் சோபனம் உண்டாகட்டும்!

وقال صلى الله عليه و سلم : " سلامة الرجل من الفتنة أن يلزم بيته " .

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “குழப்பத்திலிருந்து தான் பாதுகாக்கப்பட வேண்டும் என ஒரு மனிதன் விரும்பினால், அவன் வீட்டில் வசிப்பதை அவசியமாக்கிக் கொள்ளட்டும்!”

வீடென்பது

ஓர் இறைநம்பிக்கையாளனின் இல்லத்தில் அல்லாஹ் வாக்களிக்கிற அமைதியும் நிம்மதியும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் வாக்களிக்கிற சோபனமும், நற்பேரும் தவழ வேண்டுமானால் எப்படிப் பட்ட இல்லமாக அது திகழ வேண்டும்?

எதைக் கொண்டு நிரப்பினால் அங்கே அமைதி நிலவும்?

எப்படி அமைத்தால் அங்கே நிம்மதி தவழும்?

எதைக் கொண்டு அலங்கரித்தால் அங்கே சாந்தி கிடைக்கும்?

எதைப் பரிமாரினால் அங்கே நற்பேறு தழைக்கும்?

தேடலைத் தொடர்வோம்! வாருங்கள்….

1.வீட்டின் அஸ்திவாரத்தை இறையச்சத்தையும், இறைதிருப்தியையும் நோக்கமாகக் கொண்டு அமைக்க வேண்டும்.

أَفَمَنْ أَسَّسَ بُنْيَانَهُ عَلَى تَقْوَى مِنَ اللَّهِ وَرِضْوَانٍ خَيْرٌ أَمْ مَنْ أَسَّسَ بُنْيَانَهُ عَلَى شَفَا جُرُفٍ هَارٍ فَانْهَارَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ (109)

அல்லாஹ் கூறுகின்றான்: “இறையச்சத்தையும், இறைதிருப்தியையும் நோக்கமாகக் கொண்டு தம் கட்டடத்தை நிர்மாணித்தவர் சிறந்தவரா? அல்லது வெள்ளத்தால் அரிக்கப்பட்ட உறுதியற்ற ஓடைக்கரையின் மீது தனது கட்டடத்தை நிர்மாணித்து, பிறகு அக்கட்டடத்துடன் சேர்ந்து தானும் நரக நெருப்பில் நேராக வந்து விழுந்து விட்டானே அவன் சிறந்தவனா?”

                              ( அல்குர்ஆன்: அத் தவ்பா, வசனம்:109 )

இந்த இறைவசனம் நயவஞ்சகர்கள் கட்டிய மஸ்ஜித் ளிரார் குறித்து நேரடியாகப் பேசினாலும், பொதுவாக எந்த ஒரு கட்டிடமானாலும் அது இறையச்சத்தையும், இறைதிருப்தியையும் நோக்கமாகக் கொண்டு கட்டப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றது.

2.இபாதத்களின் கூடாரமாகவும், இறைநெருக்கத்தைப் பெற்றுத் தரும் இனிய செயல்களின் உறைவிடமாகவும் இல்லம் அமைந்திருக்க வேண்டும்.

وقال العوفي، عن ابن عباس، في تفسير هذه الآية قال: قالت بنو إسرائيل لموسى، عليه السلام: لا نستطيع أن نظهر صلاتنا مع الفراعنة، فأذن الله تعالى لهم أن يصلوا في بيوتهم، وأمروا أن يجعلوا بيوتهم قبل القبلة.

فقال الثوري وغيره، عن خُصَيْف، عن عِكْرِمة، عن ابن عباس: { وَاجْعَلُوا بُيُوتَكُمْ قِبْلَةً } قال: أمرُوا أن يتخذوها مساجد.
وقال الثوري أيضا، عن ابن منصور، عن إبراهيم: { وَاجْعَلُوا بُيُوتَكُمْ قِبْلَةً } قال: كانوا خائفين، فأمروا أن يصلوا في بيوتهم.
وكذا قال مجاهد، وأبو مالك، والربيع بن أنس، والضحاك، وعبد الرحمن بن زيد بن أسلم، وأبوه زيد بن أسلم

وَأَوْحَيْنَا إِلَى مُوسَى وَأَخِيهِ أَنْ تَبَوَّآ لِقَوْمِكُمَا بِمِصْرَ بُيُوتًا وَاجْعَلُوا بُيُوتَكُمْ قِبْلَةً وَأَقِيمُوا الصَّلَاةَ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ (87)

பனூ இஸ்ரவேலர்கள் ஃபிர்அவ்னின் அடக்குமுறைகளால் பலவந்தப் படுத்தப் பட்ட போது, அவர்களால் ஆலயங்களில் சென்று தொழ முடியாத சூழல் ஏற்பட்டது.

அப்போது, நபிய்யுல்லாஹ் மூஸா (அலை) அவர்களிடம் பனூ இஸ்ரவேலர்கள் முறையிட்ட போது அல்லாஹ் அவர்களின் இல்லங்களையே தொழுகையில் முன்னோக்கும் கிப்லாவாக அமைக்க உத்தரவிட்டான்.

ஃபிர்அவ்ன் வெற்றி கொள்ளப்படும் வரை பனூ இஸ்ரவேலர்கள் தங்களது வீடுகள் எத்திசை நோக்கி இருப்பினும் அத்திசைகளையே கிப்லாவாக அமைத்துக் கொண்டார்கள்.

ஆகவே, இல்லங்கள் இறைவழிபாடு நடத்தப்படும் இடங்களாக மாறிப்போய் விட வேண்டும்.

عن محمود بن الربيع الأنصاري ، أن عتبان بن مالك - وهو من أصحاب الرسول صلى الله عليه و سلم ، وهو ممن شهدوا بدرا من الأنصار- أنه أتى رسول الله صلى الله عليه وسلم ، فقال : يا رسول الله ! قد أنكرت بصري وأنا اصلي لقومي ، فإذا كانت الأمطار سال الوادي الذي بيني وبينهم لم أستطع أن آتي مسجدهم فأصلي بهم ، وددت يا رسول الله أنك تأتيني فتصلي في بيتي فأتخذه مصلى ، قال : فقال رسول الله صلى الله عليه وسلم : " سأفعل - إن شاء الله - " . قال عتبان :فغدا رسول الله صلى الله عليه وسلم ،وأبو بكر حين ارتفع النهار فاستأذن رسول الله صلى الله عليه وسلم ،فأذنت له ،فلم يجلس حتى دخل البيت ، ثم قال : " أين تحب أن أصلي في بيتك ؟ " قال : فأشرت له إلى ناحية من البيت ، فقام رسول الله صلى الله عليه و سلم فكبر ، فقمنا فصففنا فصلى ركعتين ثم سلم . رواه البخاري الفتح 1/519


அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சமூகத்திற்கு வருகை தந்த இத்பான் இப்னு மாலிக் (ரலி) எனும் நபித்தோழர் நபிகளாரிடத்தில்

“அல்லாஹ்வின் தூதரே! நான் என் சமூக மக்களுக்கு இமாமாக இருக்கின்றேன். என் வீட்டிற்கும் பள்ளிவாசலுக்கும் இடையே ஓர் ஓடை ஓடுகின்றது.

அதைக் கடந்து தான் நான் தொழவைக்கச் செல்வேன். ஆனால், மழைக் காலங்களில் அதைக் கடந்து செல்ல எனக்கு மிகவும் சிரமமாக இருக்கின்றது. மேலும், சமீப காலமாக எனக்குப் பார்வைக் குறைபாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அது எனக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, நான் அங்கு சென்று தொழுவதும், தொழவைப்பதும் இயலாத காரியமாக இருக்கின்றது.

ஆகவே, நான் எனது வீட்டிலேயே ஓரிடத்தில் தொழுது கொள்ள அனுமதியளித்து, அந்த இடத்தில் நீங்கள் வந்து முதல் தொழுகையைத் தொழுதிட என் உள்ளம் நாடுகின்றது, அதுவே எனது விருப்பமாகவும் இருக்கின்றது. மேலும், அந்த இடத்தை நான் தொழுமிடமாக ஆக்கிக் கொள்வேன்.

அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் வருவீர்களா?” என்று வேண்டி நின்றார்.

அதற்கு அண்ணலார், இன்ஷா அல்லாஹ்.. அப்படியே செய்கின்றேன் என்றார்கள்.

இத்பான் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:”மறுநாள் நபிகளாரும், அபூபக்ர் (ரலி) அவர்களும் முற்பகல் நேரத்தில் எனது வீட்டிற்கு வருகை தந்தார்கள்.

 பின்னர், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} வீட்டினுள் எங்கேயும் அமராமல் என்னை நோக்கி “நீர்! எங்கே தொழுதிட விரும்புகின்றீர்!” என்று கேட்டார்கள்.

அப்போது நான் வீட்டின் ஒரு ஓரப்பகுதியை சுட்டிக் காட்டினேன். அண்ணல் நபி {ஸல்} அவர்கள் இமாமாக நிற்க, நானும் அபூபக்ர் (ரலி) அவர்களும் நபிகளாரைப் பின் பற்றி இரண்டு ரக்அத்கள் தொழுதோம். பின்னர் அண்ணலார் என்னிடம் இருந்து விடை பெற்றுச் சென்றார்கள்.

          ( நூல்: புகாரியின் தெளிவுரை ஃபத்ஹுல் பாரீ, பாகம்:1, பக்கம்:519 )

عن عائشة - رضي الله عنها - قالت : " كان رسول الله صلى الله عليه وسلم ، يصلي من الليل فإذا أوتر قال قومي فأوتري يا عائشة " . رواه مسلم ، مسلم بشرح النووي 6/23
وقال صلى الله عليه وسلم : " رحم الله رجلا قام من الليل فصلى فأيقظ امرأته فصلت ، فإن أبت نضح في وجهها الماء " . رواه أحمد وأبو داود ، صحيح الجامع 3488

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இரவுத் தொழுகைகளை முடித்து விட்டு வித்ர் தொழுகையை தொழும் போது ஆயிஷாவே! எழுந்திரு! வித்ர் தொழுகையைத் தொழு!” என்று கூறுவார்கள்.

         ( நூல்: ஷரஹ் முஸ்லிம் லி இமாமின் நவவீ, பாகம்:6, பக்கம்:23 )

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தாம் செய்ததோடு மாத்திரம் நின்று விடாமல் இந்த உம்மத்தாரையும் செய்யுமாறு ஏவியதோடு, அப்படிச் செய்பவர்அல்லாஹ்வின் அருளுக்கு எல்லா காலத்திலும் சொந்தக்காரராக இருக்கதுஆவும் செய்தார்கள்.

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “ஒரு மனிதர் இரவுத் தொழுகைக்காக எழுகின்றார். தொழுகின்றார். பின்னர் அவரின் துணைவியாரையும் எழுப்புகின்றார். அவரின் துணைவியாரும் தொழுகின்றார். அல்லாஹ் இத்தகைய மனிதருக்கும், அவர் எழுப்புகின்ற போது, எழ மறுக்கும் தமது துணைவியாரின் முகத்தில் நீர் தெளித்து விழிக்கச் செய்து தொழ வைக்கிற மனிதருக்கும் அல்லாஹ் தனது அருளைப் பொழிவானாக!”

                         ( நூல்: ஸஹீஹுல் ஜாமிஉ, ஹதீஸ் எண்:3488 )

3.நன்மைகள் ஏவப்படுகின்ற, தீமைகள் தடுக்கப் படுகின்ற, அழைப்புப் பணியின் கேந்திரமாக இல்லம் அமையப் பெற்றிருக்க வேண்டும்.

{ يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة } سورة التحريم ، الآية :6 وهذه الآية أصل في تعليم أهل البيت وتربيتهم ، وأمرهم بالمعروف ،ونهيهم عن المنكر ،وإليك أيها القارئ الكريم بعضا مما قاله المفسرون في هذه الآية ، بشأن ما يجب على رب الأسرة :
قال قتادة : يأمرهم بطاعة الله ، وينهاهم عن معصيته ، وأن يقوم عليهم بأمر الله يأمرهم به ، ويساعدهم عليه .
وقال الضحاك ومقاتل : حق على المسلم أن يعلم أهله من قرابته وإمائه ما فرض الله عليهم وما نهاهم عنه .
وقال علي - رضي الله عنه - : علموهم وأدبوهم .
و قال الكيا الطبري - رحمه الله - : فعلينا تعليم أولادنا وأهلينا الدين والخير ، وما لا يستغنى عنه من الأدب . وإذا كان رسول الله صلى الله عليه وسلم حث على تعليم الإماء وهن أرقاء ؛ فما بالك بأولادك وأهلك الأحرار .


அல்லாஹ் கூறுகின்றான்: “இறைநம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும் கற்களும் எரிபொருள்களாகக் கூடிய அந்த நரக நெருப்பிலிருந்து உங்களையும் உங்கள் வீட்டாரையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.”

இந்த இறைவசனத்திற்கு விளக்கம் தருகிற பெரும்பாலான அறிஞர் பெருமக்கள்வீட்டில் உள்ளவர்களுக்கு தர்பியத் செய்வதையும், கல்வி வழங்குவதையும் தான் இந்த இறைவசனம் குறிப்பிடுகின்றதுஎன்று கூறுகின்றார்கள்.

கதாதா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “வீட்டில் உள்ளவர்களை அல்லாஹ்விற்கு வழிப்படுமாறு ஏவுவதும், அல்லாஹ் தடுத்தவற்றிலிருந்து விலகி வாழுமாறு எச்சரிப்பதும் தான்” இந்த ஆயத் வலியுறுத்துகிற கருத்தாகும்.

ளஹ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “வீட்டில் உள்ளவர்களுக்கும் தமது நெருங்கிய உறவுகளுக்கும் சன்மார்க்க போதனைகளை போதிப்பது ஒரு முஸ்லிமின் மீது கடமையெனஇந்த வசனம் அறிவுறுத்துகின்றது.

4.மார்க்க அறிவை வளர்த்திடும் கலாசாலையாக இல்லம் அமைந்திருக்க வேண்டும்.

فهو الحبر الحاذق الفطن في كل علم.. في تفسير القرآن وتأويله وفي الفقه.. وفي التاريخ.. وفي لغة العرب وآدابهم، ومن ثمّ فقد كان مقصد الباحثين عن المعرفة، يأتيه الناس أفواجا من أقطار الاسلام، ليسمعوا منه، وليتفقهوا عليه..
حدّث أحد أصحابه ومعاصريه فقال:
" لقد رأيت من ابن عباس مجلسا، لو أن جميع قريش فخرت به، لكان لها به الفخر..
رأيت الناس اجتمعوا على بابه حتى ضاق بهم الطريق، فما كان أحد يقدر أن يجيء ولا أن يذهب..

فدخلت عليه فأخبرته بمكانهم على بابه، فقال لي: ضع لي وضوءا، فتوضأ وجلس وقال: أخرج اليهم، فادع من يريد أن يسأل عن القرآن وتأويله..فخرجت فآذنتهم: فدخلوا حتى ملؤا البيت، فما سالوا عن شيء الا اخبرهم وزاد..
ثم قال لهم: اخوانكم.. فخرجوا ليفسحوا لغيرهم.
ثم قال لي: أخرج فادع من يريد أن يسأل عن الحلال والحرام..
فخرجت فآذنتهم: فدخلوا حتى ملؤا البيت، فما سألوا عن شيء الا أخبرهم وزادهم..
ثم قال: اخوانكم.. فخرجوا..
ثم قال لي: ادع من يريد أن يسأل عن الفرائض، فآذنتهم، فدخلوا حتى ملؤا البيت، فما سألوه عن شيء الا أخبرهم وزادهم..
ثم قال لي: ادع من يريد أن يسال عن العربية، والشعر..
فآذنتهم فدخلوا حتى ملؤا البيت، فما سألوه عن شيء الا أخبرهم وزادهم"!!

சன்மார்க்கத்தின் எல்லாத் துறைகளிலும் ஆழமான ஞானமும், தீட்சண்யமான கல்வியறிவும் கொண்டிருந்த அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கல்வியை கற்பதிலும், பிறருக்கு கற்பிப்பதிலும் பேரார்வத்தோடு திகழ்ந்தார்கள்.

பல ஆயிரக்கணக்கான தாபியீன்களின் பேராசிரியப் பெருந்தகையாகத் திகழ்ந்தார்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்.

அவர்களிடம் பயின்ற மாணாக்கரில் ஒருவர் கூறுகின்றார்: “நான் அவர்களின் சபையில் பங்கு கொள்கிற அறிஞர் பெருமக்களைப் பார்த்திருக்கின்றேன். அதைக் கொண்டு குறைஷிகள் எத்துணை பெருமை கொண்டாலும் அது தகுதியானது தான் என்று எண்ணத்தோன்றும்.”

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வீட்டுக்குச் செல்கின்ற பாதை முழுவதும் அவரிடம் கல்வி பயில வந்த மாணவர்களால் நிரம்பி வழியும். மற்றவர்கள் சென்று வருவதற்கு கூட இடம் இல்லாத அளவிற்கு அவருடைய வீட்டைச் சுற்றிலும் எந் நேரமும் அலை அலையாய் மாணவர்கள் நிறைந்து இருப்பதை நான் கண்ணாறக் கண்டிருக்கின்றேன்.

(உதாரணத்திற்காக சொல்ல வேண்டுமானால், விழாக்காலங்களில் தி. நகர் உஸ்மான் சாலையில் காணப்படும் கூட்ட நெரிசலைக் கூறிக் கொள்ளலாம். இது கட்டுரையாளரின் கருத்து.)
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வீட்டிற்குள் நுழைந்து, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வெளியில் மாணவர்கள் காத்திருக்கும் விஷத்தைக் கூறுவேன்.

உடனே, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உளூ செய்வதற்கு தேவையான தண்ணீரை எடுத்து வருமாறு ஏவுவார்கள். நான் தண்ணீரை அவர்களின் அருகே கொண்டு செல்வேன். உடனடியாக உளூச் செய்து விட்டு, தாம் வழக்கமாக அமர்ந்து பாடம் நடத்தும் இடத்தில் அமர்ந்து விடுவார்கள்.

பிறகு என்னிடம்குர்ஆன் குறித்தும், குர்ஆனின் விரிவுரை குறித்தும் விளக்கத்தைக் கேட்க வந்திருப்பவர்கள் உள்ளே வரலாம்என்று அறிவிப்புச் செய்யச் சொல்வார்கள்.

நான் வெளியே சென்று அதைப் போன்று அறிவிப்புச் செய்வேன். பெருமளவில் மக்கள் உள்ளே நுழைவார்கள். வீடும் அறையும் நிறைந்து விடும். அவர்கள் கேட்கின்ற எல்லாவகையான கேள்விகளுக்கும் அவர்கள் தெளிவு பெரும் பொருட்டு மிக நேர்த்தியாக பதிலளிப்பார்கள்.

அவர்கள் கேட்க மறந்த கேள்விகளையும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களே நினைவு படுத்தி அதற்கும் விளக்கம் தருவார்கள். பிறகு, ”உங்களின் இன்ன பிற சகோதரர்களுக்காக நீங்கள் வழி விடுங்கள்என்று கூறுவார்கள்.

பிறகு என்னிடம்ஹலால் குறித்தும், ஹராம் குறித்தும் விளக்கத்தைக் கேட்க வந்திருப்பவர்கள் உள்ளே வரலாம்என்று அறிவிப்புச் செய்யச் சொல்வார்கள்.

நான் வெளியே சென்று அதைப் போன்று அறிவிப்புச் செய்வேன். பெருமளவில் மக்கள் உள்ளே நுழைவார்கள். வீடும் அறையும் நிறைந்து விடும். அவர்கள் கேட்கின்ற எல்லாவகையான கேள்விகளுக்கும் அவர்கள் தெளிவு பெரும் பொருட்டு மிக நேர்த்தியாக பதிலளிப்பார்கள்.

அவர்கள் கேட்க மறந்த கேள்விகளையும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களே நினைவு படுத்தி அதற்கும் விளக்கம் தருவார்கள். பிறகு, ”உங்களின் இன்ன பிற சகோதரர்களுக்காக நீங்கள் வழி விடுங்கள்என்று கூறுவார்கள்.

பிறகு என்னிடம்கடமைகள் குறித்து விளக்கத்தைக் கேட்க வந்திருப்பவர்கள் உள்ளே வரலாம்என்று அறிவிப்புச் செய்யச் சொல்வார்கள்.

நான் வெளியே சென்று அதைப் போன்று அறிவிப்புச் செய்வேன். பெருமளவில் மக்கள் உள்ளே நுழைவார்கள். வீடும் அறையும் நிறைந்து விடும். அவர்கள் கேட்கின்ற எல்லாவகையான கேள்விகளுக்கும் அவர்கள் தெளிவு பெரும் பொருட்டு மிக நேர்த்தியாக பதிலளிப்பார்கள்.

அவர்கள் கேட்க மறந்த கேள்விகளையும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களே நினைவு படுத்தி அதற்கும் விளக்கம் தருவார்கள். பிறகு, ”உங்களின் இன்ன பிற சகோதரர்களுக்காக நீங்கள் வழி விடுங்கள்என்று கூறுவார்கள்.

பிறகு என்னிடம்அரபி மொழி, மற்றும் கவிதைகள் குறித்து விளக்கத்தைக் கேட்க வந்திருப்பவர்கள் உள்ளே வரலாம்என்று அறிவிப்புச் செய்யச் சொல்வார்கள்.

நான் வெளியே சென்று அதைப் போன்று அறிவிப்புச் செய்வேன். பெருமளவில் மக்கள் உள்ளே நுழைவார்கள். வீடும் அறையும் நிறைந்து விடும். அவர்கள் கேட்கின்ற எல்லாவகையான கேள்விகளுக்கும் அவர்கள் தெளிவு பெரும் பொருட்டு மிக நேர்த்தியாக பதிலளிப்பார்கள்.

அவர்கள் கேட்க மறந்த கேள்விகளையும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களே நினைவு படுத்தி அதற்கும் விளக்கம் தருவார்கள். பிறகு, ”உங்களின் இன்ன பிற சகோதரர்களுக்காக நீங்கள் வழி விடுங்கள்என்று கூறுவார்கள்.

இறுதியாக, எல்லோரும் சென்ற பிறகே சற்று ஓய்வெடுப்பார்கள்.

ولقد كان معاصروه يتحدثون فيقولون:
" ما رأينا بيتا أكثر طعاما، ولا شرابا، ولا فاكهة، ولا علما من بيت ابن عباس"..!!

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் மாணவர்களில் ஒருவர் கூறுகின்றார்: ”நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வீட்டில் அதிகமான கல்வி ஞானத்தை பெற்றுக் கொண்டதோடு அல்லாமல், அதிகமான உணவு பதார்த்தங்களையும், அதிகமான பானங்களையும், அதிகமான கனிவர்க்கங்களையும் பெற்றிருக்கின்றோம்.”

அப்படி என்றால், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்து சென்ற பெருமளவிலான மக்களுக்கு கல்வியை மாத்திரம் கொடுக்காமல் அவர்களுக்கு உண்ண உணவும், பருக இதமான பானங்களும் வழங்கி பெரும் கொடையாளியாகவும் திகழ்ந்திருக்கின்றார்கள்.

5. நல்லோர்களும், சான்றோர்களும் உலவிச் செல்கிற இல்லமாக அமைந்திருக்க வேண்டும்.

நபி நூஹ் (அலை) அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பிரத்யேகமான துஆவை மிகவும் இக்கட்டான சூழலில் பயன் படுத்திய போதும் கூட தன் வீட்டிற்கு வந்து சென்ற நல்லோர்களையும் இணைத்துக் கொண்டார்கள்.

{ رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا للمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تباراً } سورة نوح الآية : 28

என் அதிபதியே! எனக்கும், என் தாய் தந்தையருக்கும், மேலும், என் வீட்டில் இறைநம்பிக்கை கொண்டவராகப் பிரவேசித்திருக்கும் ஒவ்வொருவருக்கும், மேலும், நம்பிக்கை கொண்ட ஆண் – பெண் அனைவருக்கும் நீ மேலான உன் மன்னிப்பை வழங்குவாயாக! மேலும், கொடுமைக்காரர்களுக்கு அதிக அழிவைத் தவிர வேறு எதையும் நீ கொடுக்காதே!

ஏனெனில், நல்லோர்களின் வரவால் இல்லங்களில் ஈமானியப் பிரகாசம் சுடர் விடும். மேலும், அவர்களோடு உரையாடுவதால் ஈருலகத்திற்கும் பயன் தருகிற ஏராளமான நன்மைகள் வந்து சேரும்.

6.தீயோர்களின் நிழல் கூட படியாத இல்லமாக அமைந்திருக்க வேண்டும்.

قال رسول الله صلى الله عليه وسلم : " ومثل جليس السوء كمثل صاحب الكير " قطعة من رواية أبي داود " 4829 " . وفي رواية البخاري : " وكير الحداد يُحرق بيتك أو ثوبك أو تجد منه ريحاً خبيثة "رواه البخاري الفتح 4/323 .أي والله يحرق بيتك بأنواع الفساد والإفساد،كم كان دخول المفسدين والمشبوهين سبباً لعداوات بين أهل البيت ، وتفريق بين الرجل وزوجته ، ولعن الله من خبّب امرأة على زوجها ، أو زوجاً على امرأته ، وسبب عداوة بين الأب وأولاده ، وما أسباب وضع السحر في البيوت أو حدوث السرقات أحياناً وفساد الخلق كثيراً إلا بعد إدخال من لا يُرضى دينه ، فيجب عدم الإذن بدخوله ، ولو كان من الجيران ، رجالاً ونساءً ، أو من المتظاهرين بالمصادقة رجالاً ونساءً ،

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “தீய நடத்தை கொண்டவர்களோடு பழகுவது என்பது, கொல்லம் பட்டறைக்கு அருகே வசிப்பதற்கு சமமாகும். ஒன்று அதன் புகை உன் வீட்டிற்குள் நுழைந்து விடும் ஆபத்து உள்ளது.

அல்லது உன் ஆடையை கரித்து விடும் ஆபத்தும் நேரிடலாம். அல்லது அதன் மூலம் உமக்கு நோவினை கூட ஏற்படலாம்.”

இந்த ஹதீஸிற்கு விளக்கம் தரும் அறிஞர் பெருமக்கள் “தீயோர்களின் வரவால் வீட்டில் குழப்பமும், கணவன் மனைவி இடையே பிணக்கும், குடும்பத்தார்களிடையே பகைமையும், பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே பிரச்சனைகளும் ஏற்படும்.

சில போது அவர்களால் இழப்பும், ஆபத்தும் கூட ஏற்படலாம். ஆகையால் இது போன்ற தீய குணம் கொண்டவர்களை வாசலோடு அனுப்பி வைப்பது சாலச் சிறந்தது. அவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும்சரியே!

இன்றைக்கு நமது இல்லங்களில் அமைதியும், சாந்தியும், மகிழ்ச்சியும் இல்லாமல் போனதற்கான காரணங்கள் நம்முடைய சிந்தனைக்குப் புலப்பட்டிருக்கும்.

وَمَا بِكُمْ مِنْ نِعْمَةٍ فَمِنَ اللَّهِ

அல்லாஹ் கூறுகின்றான்: “உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அத்துணை அருட் கொடைகளும் அல்லாஹ்வின் புறத்திலிருந்தே வழங்கப்பட்டிருக்கின்றன.”

உலகில் நாம் அனுபவிக்கும் அனைத்து நிஃமத்துக்களுமே அல்லாஹ் நமக்களித்த அருட்கொடை தான் என்பதை உளப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

وَإِنْ تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا

அல்லாஹ் கூறுகின்றான்: “அல்லாஹ்வின் அருட் கொடைகளை நீங்கள் கணக்கிட்டால் அது எண்ணிக்கையில் அடங்காது.”

நமக்களித்த அருட்கொடைகளை எல்லால் நாம் கணக்கிட நினைத்தாலும் ஒரு போதும் நம்மால் அவைகளை எண்ணிக்கையில் அடக்கி விட முடியாது.

அவன் வழங்கிய தாராளமான நிஃமத்தில் இல்லம் என்பது அல்லாஹ் நமக்களித்திருக்கின்ற ஓர் மகத்தான அருட்கொடை என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

அப்படி ஒப்புக் கொள்கிற மனோ நிலைக்கு நாம் வரும் போது தான் படைத்த ரப்புக்கு நாம் நன்றியாளர்களாக மாறிடும் சூழ்நிலை ஏற்படும்.

لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ
அல்லாஹ் கூறுகின்றான்: “அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருட் கொடைகளுக்காக நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பீர்களேயானால், அந்த அருட் கொடைகளில் அல்லாஹ் இன்னும் அபிவிருத்தியை நல்குவான்.”

அப்படி நாம் கொடையளித்த இறைவனுக்கு நன்றியாளர்களாக மாறிடும் பட்சத்தில் நமக்கு வழங்கிய கொடைகளில் அல்லாஹ் அபிவிருத்தியை நல்குவான்.

இல்லையேல், அல்லாஹ் நம்மைப் பாதுகாக்க வேண்டும். நாம் இறைக் கொடையை அனுபவித்து விட்டு அவனை மறந்தவர்களில், மறுத்துவர்களில் ஒருவராக ஆகிவிடுவோம்.

يَعْرِفُونَ نِعْمَتَ اللَّهِ ثُمَّ يُنْكِرُونَهَا وَأَكْثَرُهُمُ الْكَافِرُونَ

ஏனெனில், சில சமூகத்திற்கு அல்லாஹ் தான் அளித்த தண்டனையைக் குறிப்பிடும் போது, அது அவர்களின் வீடாகத்தான் இருந்தது என்று குறிப்பிடுகின்றான்.

ஆகவே, நம்முடைய இல்லங்களை சாந்தியும் அமைதியும் என்றென்றும் நின்று நிலவும் பூஞ்சோலைகளாக மாற்றிட முன் வருவோம்!

பெருமானாரின் சோபனத்திற்குரிய இல்லத்தோராய் நம்மை நாம் மாற்றிட முயற்சி செய்வோம்!

அல்லாஹ் நம் இல்லங்களிலும், உள்ளங்களிலும் நிம்மதியைத் தந்தருள்வானாக!

            ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!

                     வஸ்ஸலாம்!!!

































 

2 comments: