Wednesday 25 March 2015

வலுவிழக்கச் செய்யும் விபரீதப் போக்கு!!



வலுவிழக்கச் செய்யும் விபரீதப் போக்கு!!



ஆபத்தான குற்றங்களாகவும், இறைவனின் கோபத்தைப் பெற்றுத்தரும் பாவங்களாகவும் இஸ்லாம் அடையாளப்படுத்துகிற பாவமான காரியங்களை அலட்சியமாக கருதுகிற போக்கும்..

அபரிமிதமான நன்மைகளை பெற்றுத்தரும் செயல்களாகவும், இறை உவப்பபை பெற்றுத்தரும் அமலாகவும் இஸ்லாம் மதிப்பீடு செய்திருக்கிற நன்மையான காரியங்களை லட்சியப்படுத்தாத போக்கும்….

சமீப காலமாக இஸ்லாமிய சமூக மக்களிடையே பெருகி வருவதை சர்வ சாதாரணமாகக் காண முடிகின்றது.

சிறிய பாவமாகத்தானே இருக்கிறது, எளிய அமலாகத்தானே இருக்கிறது என்று துச்சமாகக் கருதுகிற மனோநிலை தான் இந்த விபரீத போக்கிற்கு அடிப்படை காரணம் ஆகும்.

எந்த நன்மையான செயல் நம்மை சுவனத்திற்கு அழைத்துச் செல்லும், எந்தப் பாவமான செயல் நம்மை நரகின் அதள பாதாளத்திற்கு அழைத்துச் என எவருக்கும் தெரியாது.

நன்மையோ, பாவமோ அதன் அளவைக் கொண்டு குறைவாக மதிப்பிடுகிற விபரீதப் போக்கு நம் ஈமானையும், ஈமானிய அடிப்படையிலான வாழ்வையும் ஆட்டிப்பார்க்கிற ஆற்றலும், வலிமையும் கொண்டது என்பதை முதலில் நாம் உணர்ந்தாக வேண்டும்.

يقول ابن المبارك رحمه الله
 رُبَّ عمل صغير تُعظِّمه النيّة، ورُبَّ عمل كبير تُصغِّره النيّة،

அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் கூறுவார்கள்: “ஓர் அடியான் உயர்வாக எண்ணி எத்தனையோ சின்னஞ்சிறிய அமல்களைச் செய்கிறான். அவைகள் அவனுக்கு ரப்பிடமிருந்து மகத்தான கூலியைப் பெற்றுத் தந்து விடுகின்றது.

ஓர் அடியான் எத்தனையோ பெரிய அமல்களைச் செய்கிறான். அவனுடைய துச்சமான எண்ணத்தின் காரணமாக அவைகள் அவனுக்கு ரப்பிடமிருந்து மிகக் குறைவான கூலியையே பெற்றுத்தருகிறது”.

எனவே, நம்முடைய அமல்களின், பாவங்களின் அளவுகோல்களை, மதிப்பீட்டை நாம் மறுஆய்வுக்கு உட்படுத்த கடமைப்பட்டிருக்கின்றோம்.

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: ”திண்ணமாக, செயல்களெல்லாம் எண்ணங்களைப் பொறுத்தே அமையப் பெறுகின்றன”.

காலம் கடந்த ஆசையும், எண்ணமும் பயன்தராது

حَتَّى إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ () لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ كَلَّا إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا
அல்லாஹ் கூறுகின்றான்: “இறுதியில் அவர்களில் எவருக்கேனும் மரணம் வந்துவிடுமானால், “என் இறைவனே! நான் விட்டு வந்துள்ள உலகுக்கு என்னைத் திரும்ப அனுப்புவாயாக! அங்கு நான் நற்செயல் புரிவேனே!” என்று புலம்புவான். அவ்வாறு ஒரு போதும் நடக்காது. இது அவன் பிதற்றிக் கொண்டிருக்கும் வெறும் வெற்றுவார்த்தைகள் தாம்!”                               ( அல்குர்ஆன்: 23: 99, 100 )

وَأَنْفِقُوا مِنْ مَا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ ()
உங்களில் எவருக்கேனும் மரண நேரம் வருவதற்கு முன்பாக நாம் வழங்கியவற்றிலிருந்து ( நல்வழியில் ) செலவு செய்து விடுங்கள்! ஏனெனில், மரண நேரத்தில் சிலர்என் அதிபதியே! நீ எனக்கு இன்னும் சில காலம் அவகாசம் அளிக்கக் கூடாதா? நான் தானதர்மம் செய்வேனே! நல்லோர்களில் ஒருவனாகி விடுவேனே!” என்று கூறுவார்கள்.

عَنْ جَابِرٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم:يَوَدُّ أَهْلُ الْعَافِيَةِ ، يَوْمَ الْقِيَامَةِ ، حِينَ يُعْطَى أَهْلُ الْبَلاَءِ الثَّوَابَ ، لَوْ أَنَّ جُلُودَهُمْ كَانَتْ قُرِضَتْ فِي الدُّنْيَا بالْمَقَارِيضِ.أخرجه التِّرْمِذِي (2402).

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உலக வாழ்வின் போது உடல் ஆரோக்கியத்தோடும், மன நிறைவோடும், நிம்மதியோடும் வாழ்ந்த நல்லடியார்கள், நாளை மறுமை நாளில், உலக வாழ்வின் போது பெரும் சோதனைகளால் ஆட்படுத்தப்பட்ட நல்லடியார்களுக்கு அல்லாஹ் வழங்குகிற மகத்தான கூலியைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுஉலகில் வாழும் காலத்தில் நம்முடைய உடல்களெல்லாம் கத்தரியால் வெட்டப்பட்டிருக்கக் கூடாதா? என ஆசை கொள்வார்கள்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                          ( நூல்: திர்மிதீ, ஹதீஸ் எண்: 2402 )

எனவே, உயிர் வாழும் காலத்திலேயே இபாதத்களை, நல் அமல்களைச் செய்திட வேண்டும். அது சிறிய அமலாக இருந்தாலும் சரி, பெரிய அமலாக இருந்தாலும் சரி இல்லையேல் அமல் செய்ய வேண்டும் என்கிற ஆசை வரும் போது அதற்கான அவகாசத்தை இறைவன் ஒரு போதும் வழங்கப்போவதில்லை.

அபரிமிதமான நன்மைகளை அள்ளித்தரும் உபரியான வணக்கங்கள்

1. இறைக்கடமைகளில்…..

1. சில சூராக்களும், சில வசனங்களும்.. அதன் சிறப்பும்….

قال صلى الله عليه وسلم
من قرأ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ حتى يختمها عشر مرات بني الله له قصرًا في الجنة
فقال عمر رضي الله عنه: إذن نستكثر قصورًا يا رسول الله، فقال: الله أكثر وأطيب
.السلسلة الصحيحة 1/589

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எவர் அல் இக்லாஸ் அத்தியாயத்தை தினமும் பத்து தடவை ஓதுகின்றாரோ, அவருக்காக அல்லாஹ் சுவனத்தில் ஓர் மாளிகையை கட்டித்தருகின்றான். அப்போது, உமர் (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதரே! அப்படியென்றால், நாங்கள் எங்களுக்காக அதிகமாக கோட்டைகளை கட்டிக்கொள்கிறோம்என்றார்கள். அதற்கு, நபி {ஸல்} அவர்கள்அல்லாஹ் அதிகரித்துத் தர காத்திருக்கின்றான். மேலும், அவன் தூய்மையானவன்என்று பதில் கூறினார்கள்.  ( நூல்: அஸ்ஸில்ஸிலா அஸ்ஸஹீஹா லில் அல்பானீ )

قال صلى الله عليه وسلم
                       من قرأ سورة الكهف في الجمعة، أضاء له من النور ما بين
 الجمعتين
صحيح الجامع

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எவர் ஜும்ஆ நாளில் அல்கஹ்ஃப் அத்தியாயம் ஓதுகின்றாரோ அடுத்த ஜும்ஆ நாள் வரை அல்லாஹ் அவரை ஒளியால் அரவணைத்துக் கொள்கின்றான்”.          ( நூல்: ஸஹீஹ் அல் ஜாமிஉ )

قال صلى الله عليه وسلم
من حفظ عشر آيات من أول سورة الكهف عُصم من فتنة الدجال
صحيح الجامع

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எவர் அல்கஹ்ஃப் அத்தியாயத்தின் முதல் பத்து வசனங்களை மனனமிட்டு இருக்கின்றாரோ அவரை அல்லாஹ் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து பாதுகாப்பான்”.                    ( நூல்: ஸஹீஹ் அல் ஜாமிஉ )

قال صلى الله عليه وسلم
من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة، لم يمنعه من دخول الجنة إلا أن يموت
صحيح الجامع

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எவர் ஆயத்துல் குர்ஸீயை கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் ஓதுவாரோ, அவர் சுவனத்தில் நுழைவதற்கு மரணத்தைத் தவிர வேறெதுவும் தடையாக இருக்காது”. ( நூல்: ஸஹீஹுல் ஜாமிஉ )

قال صلى الله عليه وسلم
إذا أخذت مضجعك من الليل، فاقرأ (قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ) , ثم نم على خاتمتها فإنها براءة من الشرك
.صحيح الجامع

நபி {ஸல்} அவர்கள் ஒரு நபித்தோழரிடம்நீர் உறங்குவதற்காக உம் படுக்கைக்குச் செல்வீரேயானால் அல் காஃபிரூன் அத்தியாயத்தை ஓதிய நிலையில் உறங்குவீராக! ஏனெனில், இணைவைப்பிலிருந்து உம்மை அது பாதுகாக்கும்என்று கூறினார்கள்.                                      ( நூல்: ஸஹீஹ் அல் ஜாமிஉ )

2. சில துஆக்களும், சில தஸ்பீஹ்களும்அதன் சிறப்பும்

قال صلى الله عليه وسلم
من توضأ فأحسن الوضوء، ثم قال: "أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأن محمدا عبده ورسوله، اللهم أجعلني من التوابين، واجعلني من المتطهرين، فتحت له أبواب الجنة الثمانية يدخل من أيها شاء
.صحيح الجامع

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எவர் அழகிய முறையில் உளூ செய்து விட்டு, வணங்குவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையுமில்லை என்றும், நிச்சயமாக, முஹம்மத் {ஸல்} அவர்கள் அல்லாஹ்வின் அடியாராகவும், தூதராகவும் இருக்கின்றார்கள் என்றும் நான் சாட்சி கூறுகின்றேன்.

யாஅல்லாஹ்! என்னை பாவமன்னிப்புக் கோரியவர்களில் ஒருவராகவும், பரிசுத்தவான்களில் ஒருவராகவும் ஆக்குவாயாக!” என்று ஓதுவாரானால் அவருக்காக சுவனத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படுகின்றன. அவர் நாடிய வாசல் வழியாக சுவனத்தில் நுழைந்து கொள்ளலாம்”.                ( நூல்: ஸஹீஹ் அல் ஜாமிஉ )

بينما نحن نصلي مع رسول الله ، إذ قال رجل من القوم: الله أكبر كبيرًا، والحمد لله كثيرًا، وسبحان الله بكرة وأصيلاً،فقال رسول الله من القائل كلمة كذا وكذا؟، فقال رجل من القوم: أنا يا رسول الله، قال: «عجبت لها، فتحت لها أبواب السماء
 قال ابن عمر فما تركتهن منذ
 سمعت رسول الله يقول ذلك
صحيح مسلم

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ நாங்கள் நபி {ஸல்} அவர்களுடன் தொழுது விட்டு அமர்ந்திருந்தோம். அப்போது கூட்டத்தில் ஒருவர் الله أكبر كبيرًا، والحمد لله كثيرًا، وسبحان الله بكرة وأصيلاً “” என்றார். அப்போது, நபி {ஸல்} அவர்கள்இன்னின்னவாறு கூறியவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது, ”கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து நான் தான் இன்னின்னவாறு கூறினேன்என்றார்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள்என்ன ஓர் ஆச்சர்யம்! அந்த வார்த்தைகளை நீங்கள் கூறிய போது வானத்தின் அத்தனை வாசல்களும் திறக்கப்பட்டனஎன்றார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இப்படிக் கூறியதைக் கேட்டதிலிருந்து ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் நான் ஓதிவருவதை இதுவரை விட்டதில்லை”.         ( நூல்: முஸ்லிம் )

قال صلى الله عليه وسلم من قال
سبحان الله العظيم وبحمده، غُرست له نخلة في الجنة
.صحيح الجامع الصغير وزيادته

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “سبحان الله العظيم وبحمده،என்று சொல்வாரோ சுவனத்தில் ஒரு மரம் நடப்படுகின்றது”.

                              ( நூல்: ஸஹீஹ் அல் ஜாமிஉஸ்ஸஃகீர் )

قال صلى الله عليه وسلم
إنَّ الله تعالى اصطفى من الكلام أربعًا: سبحان الله، والحمد لله، ولا إله إلا الله، والله أكبر، فمن قال: سبحان الله كتبت له عشرون حسنة، وحطت عنه عشرون سيئة، ومن قال: الله أكبر مثل ذلك. ومن قال: لا إله إلا الله مثل ذلك. ومن قال: الحمد لله رب العالمين، من قبل نفسه كتبت له ثلاثون حسنة وحطَّت عنه ثلاثون خطيئة
.صحيح الجامع الصغير وزيادته

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் நான்கு வார்த்தைகளை தேர்ந்தெடுத்துள்ளான். அவை ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹுஅக்பர், லாஇலாஹ இல்லல்லாஹு ஆகியவை ஆகும். யார்  سبحان الله என்று கூறுவாரோ அவருக்கு பத்து நன்மைகள் எழுதப்படுகின்றது. பத்து பாவங்கள் அழிக்கப்படுகின்றது. இது போன்றே الله أكبر கூறினாலும், இது போன்றே لا إله إلا الله கூறினாலும் வழங்கப்படுகின்றது.

எவர் الحمد لله رب العالمين என்று கூறுவாரோ முப்பது நன்மைகள் எழுதப் படுகின்றது. முப்பது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன”.     ( ஸஹீஹ் அல் ஜாமிஉ )

قال صلى الله عليه وسلم
من صلَّى عليَّ حين يُصبح عشرًا، وحين يُمسي عشرًا، أدركته شفاعتي يوم القيامة
.صحيح الجامع الصغير وزيادته

நபி {ஸல்} அவர்கள் கூறுகின்றார்கள்: “எவர் தினமும் காலை, மற்றும் மாலை நேரங்களில் என் மீது பத்து முறை ஸலவாத் கூறுகின்றாரோ அவர் என் ஷஃபாஅத்தைப் பெற்றுக் கொள்வார்”.                ( நூல்: ஸஹீஹ் அல் ஜாமிஉ )

قال صلى الله عليه وسلم
من قال رضيت بالله رباً وبالإسلام دينًا، وبمحمد نبيًا، وجبت له الجنة
.صحيح الجامع الصغير وزيادته

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எவர் தினமும் رضيت بالله رباً وبالإسلام دينًا، وبمحمد نبيًا சொல்கின்றாரோ அவருக்கு சுவனம் கடமையாகிவிட்டது”.

3. சில தொழுகைகளும்.. அதன் சிறப்புக்களும்

قال صلى الله عليه وسلم
من صلَّى في اليوم والليلة اثني عشرة ركعة تطوعًا، بنى الله له بيتًا في الجنة
.صحيح الجامع الصغير وزيادته

நபி {ஸல்} அவர்கள் கூறுகின்றார்கள்: ”எவர் தினந்தோரும் விரும்பி, பேணுதலாக 12 ரக்அத் தொழுது வருகின்றாரோ அல்லாஹ் அவருக்கு சுவனத்தில் ஒரு வீட்டை கட்டுகின்றான்”.                          ( ஸஹீஹ் அல் ஜாமிஉ )

قال صلى الله عليه وسلم
من حافظ على أربع ركعات قبل الظهر، وأربع بعدها حُرم على النار
.صحيح الجامع الصغير وزيادته

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எவர் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்துகளும், பின்னர் நான்கு ரக்அத்துகளும் பேணுதலாக தொழுது வருகின்றாரோ, அவருக்கு நரகம் ஹராமாக்கப்பட்டு விடுகின்றது”.  ( நூல்: ஸஹீஹ் அல் ஜாமிஉ )

قال صلى الله عليه وسلم
رحم الله امرءًا صلى قبل العصر أربعًا
.صحيح الجامع الصغير وزيادته

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “அஸர் தொழுகைக்கு முன் நான்கு ரக்அத் (சுன்னத்) தொழும் மனிதருக்கு அல்லாஹ் அருள் பாளிப்பானாக!”

قال صلى الله عليه وسلم
من صلى الفجر في جماعة، ثم قعد يذكر الله حتى تطلع الشمس، ثم صلى ركعتين، كانت له كأجر حجة وعمرة تامة تامة تامة
.صحيح الجامع وزيادته

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எவர் ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்தாக தொழுது விட்டு, அதே இடத்தில் அமர்ந்து அல்லாஹ்வை திக்ரும் செய்து, சூரியன் உதயமாகிய பின்னர் இரண்டு ரக்அத் தொழுவாரோ அவருக்கு பரிபூரணமான ஹஜ் மற்றும் உம்ரா செய்த நன்மை வழங்கப்படுகின்றது”. ( நூல்: ஸஹீஹ் அல் ஜாமிஉ )

قال صلى الله عليه وسلم
أفضل الصلوات عند الله صلاة الصبح يوم الجمعة في جماعة
.السلسلة الصحيحة 4/1566

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்விடத்தில் மிகச் சிறந்த தொழுகை ஜும்ஆ தினத்தன்று சுப்ஹ் தொழுகையை ஜமாஅத்தோடு தொழுவது தான்”.                                       ( நூல்: ஸில்ஸிலா அஸ் ஸஹீஹா )

قال صلى الله عليه وسلم
من صلى لله أربعين يوما في جماعة يدرك التكبيرة الأولى، كُتب له براءتان: براءة من النار، وبراءة من النفاق
.صحيح الجامع الصغير وزيادته

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எவர் அல்லாஹ்விற்காக நாற்பது நாட்கள் முதல் தக்பீருடன் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்வாரோ அல்லாஹ் அவருக்கு இரண்டு விடுதலைப் பத்திரங்களை வழங்குகின்றான். ஒன்று, நயவஞ்சகத்தன்மையில் இருந்தும், மற்றொன்று நரகில் இருந்தும் என்று”.

قال صلى الله عليه وسلم
إنَّ الله وملائكته يصلون على الذين يصلون الصفوف، ومن سد فرجة بني الله له بيتًا في الجنة ورفعه بها درجة
.السلسلة الصحيحة 4/1892

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “ஸஃப்ஃபில் சேர்ந்து நின்று தொழுவோரின் மீது அல்லாஹ்வும், அவனுடைய வானவர்களும் ஸலவாத்து சொல்கின்றார்கள். எவர் ஸஃப்ஃபில் காணப்படும் இடைவெளியை சரி செய்கின்றாரோ, அல்லது அந்த இடைவெளியை நிரப்புகின்றாரோ அல்லாஹ் சுவனத்தில் ஒரு வீட்டைக் கட்டுகின்றான். மேலும், சுவனத்தில் ஓர் அந்தஸ்தை உயர்த்துகின்றான்”.

قال صلى الله عليه وسلم
ما من عبد يسجد لله سجدة إلا كتب له بها حسنة، وحط بها سيئة، ورفع له بها درجة، فاستكثروا من السجود
. صحيح الجامع وزيادته

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்விற்காக ஓர் அடியான் ஒரு ஸஜ்தா செய்கிறான் என்றால், அல்லாஹ் அந்த அடியானுக்கு ஓர் நன்மையை எழுதுகின்றான். ஒரு பாவத்தை அழிக்கின்றான். ஒரு அந்தஸ்தை உயர்த்துகின்றான். எனவே, நீங்கள் அதிகமாக ஸுஜூது செய்யுங்கள்”.         ( ஸஹீஹ் அல் ஜாமிஉ )

2. இறையடியார்க் கடமைகளில்….

1. முஆஷராத் எனும் வாழ்க்கைப் போங்குகளில் கவனிக்க வேண்டியவை..

قال صلى الله عليه وسلم
من كان سهلا هينا لينًا، حرمه الله على النار
.صحيح الجامع الصغير وزيادته

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எவர் மக்களிடையே மென்மையான சுபாவத்தோடும், இலகுவான குணத்தோடும், மென்மையான அணுகுமுறையோடும் கலந்துறவாடுவாரோ அல்லாஹ் அவர் மீது நரகை தடை செய்துவிட்டான்”.

قال صلى الله عليه وسلم
من كتم غيظا، وهو قادرٌ على أن يُنفذه، دعاه الله على رءوس الخلائق، حتى يخيره من الحور العين، يزوجه منها ما شاء
.صحيح الجامع الصغير وزيادته
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எவர் தண்டிப்பதற்கும், பழிவாங்குவதற்கு சக்தியும் அருகதையும் இருந்து தன் சக மனிதன் ஒருவனை மன்னித்து விடுகின்றாரோ அவரை அல்லாஹ் மறுமையில் படைப்பினங்களின் முன்னிலையில் சிறப்பித்து அழைப்பான். மேலும், ஹூருல் ஈன் பெண்களில் அவர் விரும்பியவர்களை மணம் முடிக்கும் உரிமையையும் வழங்குவான்”.

قال صلى الله عليه وسلم
من أنظر معسرًا، أو وضع له، أظلَّه الله يوم القيامة تحت ظل عرشه، يوم لا ظلَّ إلا ظلّه
.صحيح الجامع الصغير وزيادته

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எவர் வாழ வழியில்லாமல் சிரமப்படும் ஒருவரை கருணைக் கண் கொண்டு பார்க்கின்றாரோ, அல்லது அவருக்காக ஏதேனும் சிரமமேற்கொள்கின்றாரோ அவரை அல்லாஹ் நிழலே இல்லாத அந்நாளில் தன் அரியணையின் கீழ் நிழல் தருவான்”.                     ( ஸஹீஹ் அல் ஜாமிஉ )

قال صلى الله عليه وسلم
من نفَّس عن غريمه، أو محا عنه، كان في ظل العرش يوم القيامة
.صحيح الجامع الصغير وزيادته

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எவர் கடனாளியை அவரின் கஷ்டத்திலிருந்து காப்பாற்றுகின்றாரோ, அல்லது அவரின் பெயரை கடனாளியின் பட்டியலில் இருந்து நீக்க முயற்சி மேற்கொள்கின்றாரோ அவரை அல்லாஹ் அர்ஷின் நிழலின் கீழ் இடம் பெறச் செய்கின்றான்”.        ( ஸஹீஹ் அல் ஜாமிஉ )

قال صلى الله عليه وسلم
من دعا لأخيه بظهر الغيب، قال الملك الموكل به: آمين ولك بمثله
.صحيح الجامع الصغير وزيادته

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “அருகில் இல்லாத தன் சக முஸ்லிம் சகோதரனுக்காக எவர் துஆ செய்கின்றாரோ, அவரைக் கொண்டு சாட்டப்பட்டு இருக்கின்ற மலக் ஆமீன் என்று கூறுவதோடு நின்று விடாமல், உமது சகோதரனுக்காக எதையெல்லாம் இறைவனிடம் வேண்டினாயோ அவற்றை அல்லாஹ் உமக்கும் வழங்குவானாக!” என்று துஆச் செய்கின்றார்.

قال صلى الله عليه وسلم
من ذبَّ عن عرض أخيه بالغيبة، كان حقا على الله أن يُعتقه من النار
.صحيح الجامع الصغير وزيادته

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “தன் அருகில் இல்லாத சக முஸ்லிம் ஒருவனின் மானம் காக்க எவர் போராடுகின்றாரோ, அவரை நரகில் இருந்து விடுவிப்பதை அல்லாஹ் தன் மீது கடமையாக்கி கொண்டான்”. (ஸஹீஹுல் ஜாமிஉ)

قال صلى الله عليه وسلم
من أخرج من طريق المسلمين شيئًا يؤذيهم، كتب الله له به حسنة، ومن كتب له عنده حسنة أدخله الجنة
.صحيح الجامع الصغير وزيادته

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எவர் பொதுப்பாதையில் முஸ்லிம்களுக்கு தொல்லை தருகிற ஒன்று கிடப்பது கண்டு, அதை அங்கிருந்து அப்புறப்படுத்துகிறாரோ அல்லாஹ் அவருக்கு நன்மையை எழுதுகின்றான். எவருக்கு நன்மைகள் இருக்கிறதோ அவர் சுவனம் சென்றிடுவார்”.  ( ஸஹீஹ் அல் ஜாமிஉ )

ما رواه مسلم في صحيحه عن عائشة رضي الله عنها قالت: « جَاءَتْنِي مِسْكِينَةٌ تَحْمِلُ ابْنَتَيْنِ لَهَا، فَأَطْعَمْتُهَا ثَلاَثَ تَمَرَاتٍ، فَأَعْطَتْ كُلَّ وَاحِدَةٍ مِنْهُمَا تَمْرَةً، وَرَفَعَتْ إِلَى فِيهَا تَمْرَةً لِتَأْكُلَهَا فَاسْتَطْعَمَتْهَا ابْنَتَاهَا فَشَقَّتِ التَّمْرَةَ الَّتِي كَانَتْ تُرِيدُ أَنْ تَأْكُلَهَا بَيْنَهُمَا، فَأَعْجَبَنِي شَأْنُهَا، فَذَكَرْتُ الَّذِي صَنَعَتْ لِرَسُولِ الله صلى الله عليه وسلم فَقَالَ: «إِنَّ الله قَدْ أَوْجَبَ لَهَا بِهَا الجَنَّةَ، أَوْ أَعْتَقَهَا بِهَا مِنَ النَّارِ

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “என்னிடம் இரு பெண்குழந்தைகளை சுமந்தவாறு ஒரு ஏழைப்பெண்மணி வந்தார். அவருக்கு நான் மூன்று பேரீத்தம் பழங்களை உண்ணக்கொடுத்தேன். இரு பேரீத்தம் பழங்களை தம் இரு பெண்குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டு, ஒன்றை தான் தின்பதற்காக வாயின் அருகே கொண்டு சென்ற போது, அந்த இரண்டு குழந்தைகளில் ஒன்று அம்மா என்று இரக்கமாகக் கூற தன் வாயருகே கொண்டு சென்ற அந்தப்பழத்தை தன் பிஞ்சுக்குழந்தையின் வதனத்தில் ஊட்டி விட்டு வாஞ்சையோடு அக்குழந்தையை நோக்கினாள்.

உண்மையில், இந்தக் காட்சியைக் கண்டு நான் ஆச்சர்யம் அடைந்தேன். நடந்த சம்பவத்தை நபி {ஸல்} அவர்களிடம் கூறிய போது “அப்பெண்மணியின் இரக்க சிந்தனைக்குப் பரிசாக அல்லாஹ் அவளுக்கு சுவனத்தைக் கொடுத்து நரகிலிருந்து விடுதலையும் தந்து விட்டான்”. என்று கூறினார்கள்.           ( நூல்: முஸ்லிம் )

وروى أحمد وغيره عن أبي هريرة رضي الله عن النبي صلى الله عليه وسلم أنه قال
 «إِنَّ رَجُلاً لَمْ يَعْمَلْ خَيْرًا قَطُّ، فَكَانَ يُدَايِنُ النَّاسَ؛ فَيَقُولُ لِرَسُولِهِ: خُذْ مَا تَيَسَّرَ وَاتْرُكْ مَا عَسُرَ وَتَجَاوَزْ؛ لَعَلَّ الله يَتَجَاوَزُ عَنَّا، فَلَمَّا هَلَكَ قَالَ الله عَزَّ وَجَلَّ لَهُ: هَلْ عَمِلْتَ خَيْرًا قَطُّ؟ قَالَ: لا، إِلاَّ أَنَّهُ كَانَ لِي غُلامٌ وَكُنْتُ أُدَايِنُ النَّاسَ، فَإِذَا بَعَثْتُهُ يَتَقَاضَى قُلْتُ لَهُ: خُذْ مَا تَيَسَّرَ وَاتْرُكْ مَا عَسُرَ وَتَجَاوَزْ؛ لَعَلَّ الله عَزَّ وَجَلَّ يَتَجَاوَزُ عَنَّا. قَالَ الله عَزَّ وَجَلَّ: قَدْ تَجَاوَزْتُ عَنْكَ»

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “முன் சென்ற காலத்தில் கடன் கொடுக்கும் தொழிலை ஒருவர் செய்து வந்தார். அவர் வெறெந்த சிறப்பான அமலும் செய்தது கிடையாது. கடன் வாங்கியவர்களிடம் பணம் வசூலிக்கச் செல்லும் தன் பணியாளர்களை நோக்கி தினந்தோரும் இப்படிச்சொல்வாராம் “மென்மையாகக் கேளுங்கள்; தந்ததைப் பெற்றுக் கொள்ளுங்கள்; ஏழைகள், இயலாதவர்கள் ஆகியோர் தராவிட்டால் அப்படியே மன்னித்து விட்டு விடுங்கள்; அவர்களின் கடனை தள்ளுபடி செய்து விடுங்கள். ஏனெனில், அல்லாஹ்வும் நம் விஷயத்தில் மன்னிப்பான் என நான் ஆதரவு வைக்கின்றேன்” என்றார்.

திடீரென ஒரு நாள் அவர் இறந்து விட்டார். அல்லாஹ்வின் திரு முன் கொண்டு வரப்பட்ட அவர் அவர் செயல் குறித்து விசாரித்தான்.

என்ன உம்முடைய ஏட்டில் எந்த ஒரு நல்லறமும் நீ செய்ததாக இடம் பெற வில்லையே? என்று அல்லாஹ் கேட்டான்.

அதற்கு அவர் ஆம் என்று கூறிவிட்டு, என்றாலும், ”இறைவா! நான் செல்வந்தனாகவும், பிறருக்கு கடன் உதவி செய்பவனாகவும் உலகில் இருந்து வந்தேன். என்னிடம் கடன் வாங்கியவர்களிடம் பணம் வசூலிக்கச் செல்லும் என் பணியாளர்களை நோக்கி தினந்தோரும் இப்படிச்சொல்வேன் “மென்மையாகக் கேளுங்கள்; தந்ததைப் பெற்றுக் கொள்ளுங்கள்; ஏழைகள், இயலாதவர்கள் ஆகியோர் தராவிட்டால் அப்படியே மன்னித்து விட்டு விடுங்கள்; அவர்களின் கடனை தள்ளுபடி செய்து விடுங்கள். ஏனெனில், அல்லாஹ்வும் நம் விஷயத்தில் மன்னிப்பான் என நான் ஆதரவு வைக்கின்றேன் என்று கூறும் பழக்கமுடையவனாகவே இருந்தேன்” என்று பதில் கூறுவார்.

அப்போது, அல்லாஹ் அவரை நோக்கி “இன்று நாம் உம்முடைய பாவங்களையும் தள்ளுபடி செய்து, மன்னித்து விட்டோம்” என்று சொல்வானாம்.  
    
சிறிய அமலும்… சீரிய அந்தஸ்தும்…

أخبرنا أحمد قال: حدثنا مسلمة بن القاسم، حدثنا جعفر بن محمد بن الحسن الأصبهاني بسيراف، قال: حدثنا حذيفة بن غياث بن حسان العسكري، قال: حدثنا عثمان بن الهيثم، قال: حدثنا محبوب بن هلال المدني عن ابن أبي ميمونة، عن أنس بن مالك، قال: نزل جبريل على النبي صلى الله عليه وسلم فقال: يا محمد، مات معاوية بن معاوية المزني، أفتحب أن تصلي عليه؟ قال: " نعم " فضرب بجناحه الأرض، فلم يبق شجرة ولا أكمة إلا تضعضعت، ورفع إليه سريره، حتى نظر إليه، فصلى عليه وخلفه صفان من الملائكة في كل صف سبعون ألف ملك، فقال النبي صلى الله عليه وسلم لجبريل عليه السلام: " يا جبريل، بم نال هذه المنزلة من الله؟ قال: بحبه قل هو الله أحد، وقراءته إياها جائياً وذاهباً وقائماً وقاعداً وعلى كل حال " .

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நபித்தோழர்களோடு தபூக்கிலே இருந்த தருணம் அது..
என்றைக்கும் இல்லாத அளவு சூரியனின் ஒளி வெண்மையாகவும், பிரகாசமாகவும் இருந்தது.

அப்போது, வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வருகை தருகின்றார்கள்.

நபிகள் {ஸல்} அவர்கள் ஆச்சர்யம் மேலிட ”ஜிப்ரயீலே! என்றைக்கும் இல்லாத அளவிற்கு சூரியனின் பிரகாசம் இன்று மிகவும் வெண்மையாய் அமைந்திருக்கின்றதே காரணம் தான் என்னவோ?” என ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் வினவினார்கள்.

அதற்கு, ஜிப்ரயீல் (அலை) அவர்கள் “இன்று தங்களின் தோழர் முஆவியா இப்னு முஆவியத்துல் முஸனிய்யி (ரலி) மதீனாவில் இறந்து விட்டார்கள். (இன்னா லில்லாஹ்..)

அவருக்காக நீங்கள் ஜனாஸா தொழுகை நடத்த விரும்புகின்றீர்களா?” என அண்ணலாரிடம் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கேட்டார்கள்.

ஆம் என நபிகளார் பதில் அளித்ததும், ஜிப்ரயீல் (அலை) அவர்கள் தங்களது இறக்கையை பூமியில் அடித்தார்கள்.

தபூக்கில் இருந்தவாரே அண்ணலார் மக்காவையும் மதீனாவையும் கண்டார்கள்.

பின்பு, அண்ணலார் தோழர்களிடம் நடந்த விவரத்தைக் கூறி ஜனாஸா தொழுகைக்குத் தயாராகுமாறு ஆணை பிறப்பித்தார்கள்.

பின்பு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஜனாஸா தொழவைத்தார்கள். நபிகளாரோடு ஜிப்ரயீல் (அலை) அவர்களும், இரண்டு ஸஃப் நிறைய வானவர்களும், (ஒவ்வொரு ஸஃப்ஃபிலும் எழுபதினாயிரம் வானவர்கள் நின்றனர்), நபித்தோழர்களும் கலந்து கொண்டார்கள்.

தொழுது முடித்த பின்னர், ஜிப்ரயீலை நோக்கிய நபிகளார் “ஜிப்ரயீலே! எதன் காரணத்தினால் முஆவியா இப்னு முஆவியத்துல் முஸனிய்யீ இந்த உயர் அந்தஸ்தை அடைந்தார்” எனக் கேட்டார்கள்.

அதற்கு, ஜிப்ரயீல் (அலை) அவர்கள் “உலகில் வாழும் காலங்களில் அவர் அல் இஃக்லாஸ் அத்தியாயத்தை மிகவும் நேசித்தார்; அமர்ந்த நிலையில், நின்ற நிலையில், பசித்திருந்த நிலையில், படுத்த நிலையில், நடந்த நிலையில் என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் அதை ஓதியும் வந்தார்” ஆதலால் அல்லாஹ் அவருக்கு இந்த அந்தஸ்தை வழங்கி கௌரவித்துள்ளான்” என பதில் கூறினார்கள்.

இந்தச் செய்தி அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களின் வாயிலாக முஸ்னத் அபூ யஃலா வில் 4268 –வது ஹதீஸாகவும், இமாம் பைஹகீ (ரஹ்) அவர்கள் தங்கள் சுனனில் பாகம்: 4, பக்கம்:50 –லும், அபூ உமாமா அல் பாஹிலீ (ரலி) அவர்களின் வாயிலாக இமாம் தப்ரானீ (ரஹ்) அவர்கள் முஃஜமுல் கபீரில் 7537 –வது ஹதீஸாகவும் பதிவு செய்திருக்கின்றார்கள்.

அல்லாமா இப்னு அப்தில் பர் (ரஹ்) அவர்கள் தங்களின் அல் இஸ்தீஆப் ஃபீ மஃரிஃபத்தில் அஸ்ஹாப் எனும் நூலில் மேற்கண்ட மூன்று அறிவிப்புக்களையும் பதிவு செய்து விட்டு இந்தச் செய்தி வலுவான அறிவிப்புத் தொடர்களின் மூலம் இடம் பெற வில்லையென்றாலும் இது முன்கர் வகையைச் சார்ந்த ஹதீஸ் அல்ல என்றும் சான்று பகர்கின்றார்கள்.

      (நூல்: அல் இஸ்தீஆப், பாகம்:2, பக்கம்:364,365. மற்றும் உஸ்துல் ஃகாபா)

Top of Form
حدثنا إسحاق بن نصر حدثنا أبو أسامة عن أبي حيان عن أبي زرعة عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لبلال عند صلاة الفجر يا بلال حدثني بأرجى عمل عملته في الإسلام فإني سمعت دف نعليك بين يدي في الجنة قال ما عملت عملا أرجى عندي أني لم أتطهر طهورا في ساعة ليل أو نهار إلا صليت بذلك الطهور ما كتب لي أن أصلي قال أبو عبد الله دف نعليك يعني تحريك


Bottom of Form

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் ஃபஜ்ருடைய தொழுகைக்காக நாங்கள் காத்திருந்த போது, நபி {ஸல்} அவர்கள் பிலால் (ரலி) அவர்களை அருகே அழைத்து, “பிலாலே! நான் சுவனத்திலே நுழைந்தேன், ஆனால், அங்கு எனக்கு முன்னாடியே யாரோ ஒருவர் நடந்து போகிற காலடிச் சப்தத்தை கேட்டேன்.

அப்போது, என் அருகே இருந்த ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் “இந்த காலடிச் சப்தத்திற்கு உரியவர் யார்?” என்று கேட்டேன். “பிலால் (ரலி) அவர்களுடைய காலடிச் சப்தம் தான்” என ஜிப்ரயீல் (அலை) அவர்கள் பதில் கூறினார்கள்.

இப்போது, மீண்டும் பிலால் (ரலி) அவர்களிடம் நபி {ஸல்} அவர்கள் “இஸ்லாத்தில் எந்த அமலை ஆதரவு வைத்து இந்த சீரிய சிறப்பை நீர் அடைந்து கொண்டீர்!” எனக் கேட்டார்கள்.

அதற்கு, பிலால் (ரலி) அவர்கள் “இரவு, பகல் எந்த நேரமானாலும் சரி நான் உளூவுடனே இருப்பேன். எந்த நேரத்தில் உளூ முறிந்தாலும் உடனடியாக உளூ செய்து விடுவேன். பின்னர், உடனடியாக இரண்டு ரக்அத் தொழுது விடுவேன். இதை நான் என் மீது கடமையாகவே ஆக்கிக் கொண்டேன்” என பதில் கூறினார்கள்.
                                          ( நூல்: புகாரீ, அல் இஸ்தீஆப் )

وذكر عبد الرزاق عن معمر عن الزهري عن عروة عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم: " نمت فرأيتني في الجنة فسمعت صوت قارئ فقلت من هذا قالوا صوت حارثة بن النعمان " . فقال رسول الله صلى الله عليه وسلم: " كذلك البر كذلك البر " . وكان أبر الناس بأمه.
ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் என்னிடம் “ஆயிஷாவே! எனக்கு உறக்கத்தில் சுவனம் காட்டப்பட்டது. அப்போது, சுவனத்தின் ஓர் பகுதியிலிருந்து ஒருவர் அழகிய குரலில் குர்ஆனை ஓதுகிற சப்தத்தைக் கேட்டேன்.

அப்போது, நான் “யார் இவர்? இங்கே குர்ஆன் ஓதுகின்றாரே? என்று ஆச்சர்யத்தோடு வினவினேன்.

அப்போது, என்னிடம் ”இந்த சப்தம் ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்களுடையது என்று கூறப்பட்டது” என்று கூறிய அண்ணலார் தொடர்ந்து, “ நன்மை செய்வோருக்கும் அவ்வாறே பாக்யம் கிடைக்கும்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்கள் தன் தாய்க்கு மிகவும் உபகாரம் செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள்.

قال أبو عمر كان حارثة بن النعمان قد ذ هب بصره فاتخذ خيطاً من مصلاه إلى باب حجرته ووضع عنده مكتلاً فيه تمر فكان إذا جاءه المسكين يسأل أخذ من ذلك المكتل ثم بطرف الخيط حتى يناوله وكان أهله يقولون له نحن يكفيك فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: " مناولة المسكين تقي ميته السوء " .


இப்னு அப்துல் பர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்களின் இறுதிகாலத்தில் கண்பார்வை இன்றி வாழ்ந்தார்கள்.

தான் தொழுகிற இடத்திலிருந்து வீட்டின் வாசல் வரை கயிறு கட்டியிருப்பார்கள். அருகே ஒரு பாத்திரத்தில் பேரீத்தம் பழங்களை வைத்திருப்பார்கள்.

வீட்டு வாசலில் எவராவது வந்து யாசகம் கேட்டால், கையில் பேரீத்தம் பழங்களை எடுத்துக் கொண்டு வாசல் வரை வந்து அந்த யாசகரின் கையில் கொடுத்து விட்டு மீண்டும் தாங்கள் அமரும் இடத்திற்கு வந்து விடுவார்கள்.

ஒருவர் அல்ல இருவர் அல்ல. எத்தனை பேர் யாசகம் கேட்டு வந்தாலும், கயிற்றைப் பிடித்து வருவதும் போவதுமாக இருப்பார்கள் ஹாரிஸா (ரலி) அவர்கள்.

ஹாரிஸா (ரலி) அவர்கள் படுகிற அவஸ்தைகளையும், சிரமங்களையும் பார்த்து விட்டு அவர்களின் குடும்பத்தினர் “ஓர் யாசகருக்கு இவ்வளவு சிரமப்பட்டு ஏன் இவ்வாறு தர்மம் செய்கின்றீர்கள்? எங்களிடம் தந்தால் நாங்கள் கொண்டு கொடுப்போமே?” என்று கூறினார்கள்.

அதற்கு, ஹாரிஸா (ரலி) அவர்கள் “ஏழை எளியோரை தேடிச் சென்று, அவர்களின் கரங்களில் கொண்டு தர்மப் பொருட்களைக் கொடுப்பதென்பது துர்மரணத்தைத் தடுக்கும்” என நபி {ஸல்} அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன்.
ஆதலால், தான் இவ்வளவு சிரமத்திற்கு மத்தியிலும் நான் இவ்வாறு நடந்து கொள்கின்றேன்” என்றார்கள்.

( நூல்: அல் இஸ்தீஆப் ஃபீ மஃரிஃபத்தில் அஸ்ஹாப் லி இப்னி அப்தில் பர் )

ஏழை, எளியோரை உதாசீனப்படுத்துவதிலும், பெற்றெடுத்த தாய், தந்தையரை கொடுமை புரிவதிலும் மூழ்கிப் போயிருக்கிற நம் கால சமூக மக்களுக்கான நிறைவான ஓர் படிப்பினை தான் ஹாரிஸா (ரலி) அவர்களின் வரலாறு.

மனித வாழ்வின் அனைத்துச் செயல்களும் அலசப்பட்டு, எடைபோடப்படும் மறுமை நாளில் நல்லறங்களின் எடை அதிகக் கனமுள்ளதாகக் காணப்பட வேண்டும் என்ற ஆவல் கொண்டிருக்கிற எந்த ஒரு இறைநம்பிக்கையாளரும் எந்த ஒரு அமலையும் குறைத்து மதிப்பிட மாட்டார்.

நமது ( ஃபர்ள் ) கட்டாய வணக்கங்களில் ஏற்படுகிற குறைகளையும், வாழ்வின் கடமைகளில் நிகழ்கிற குறைகளையும் நிவர்த்தி செய்து, ரஹ்மானின் நெருக்கத்தை சம்பூர்ணமாக்கித் தருகிற ஆற்றலும் வலிமையும், நாம் அதிகம் கண்டு கொள்ளாத, அல்லது லட்சியப்படுத்தாத இந்த சிறிய, உபரியான வணக்கங்களுக்கே இருக்கின்றது.

எனவே, நன்மைகளை அள்ளித்தருகிற, இறை உவப்பைப் பெற்றுத்தருகிற எல்லா நன்மையான காரியங்களையும் முனைப்போடு செய்து, ஈமானையும், நன்மைகளின் தராசையும் வலுவிழக்கச் செய்கிற விபரீதப் போக்கிற்கு முற்றுப் புள்ளி வைப்போம்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் துணை நிற்பானாக! ஆமீன்! ஆமீன்!!
                யாரப்பல் ஆலமீன்!!! வஸ்ஸலாம்!!!



3 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ் !
    நல்ல பயனுள்ள தகவல்கள்.
    ஜஸாகுமுல்லாஹ் ஹைரா!

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  3. அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete