Wednesday, 2 September 2015

கனவுகள் மெய்ப்படும்…..



கனவுகள் மெய்ப்படும்…..



மனித வாழ்க்கையில் கனவுகள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

ஒவ்வொரு மனிதனுக்கும் சராசரியாக நாளொன்றுக்கு ஆறு கனவுகளாவது ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர் கனவைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஆய்வாளர்கள்.

ஒவ்வொரு கனவும் குறைந்தது பத்து நிமிடங்களாவது நீடிக்கும் என்கிறார் தூக்கத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலுள்ள செம்டக் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர் எர்னஸ்ட் ஹார்ட்மென் என்பவர்.

ஒரு பிரச்சனையில் தீர்வு கிடைக்கவில்லையாயின் அந்த பிரச்சனையை அசை போட்டவாறே தூங்கி விட்டால் அந்த பிரச்சனைக்கான நல்ல தீர்வு கிடைத்து விடும் என்று வரலாற்று ஆதாரத்தோடு கூறுகிறார் அமெரிக்காவின் பிரபல அறிஞர் கார்பீல்ட்.

பிரபல மருத்துவர் ஜக்கைல் என்பவரின் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியாமல் திணறிய துப்பறியும் நிபுணர் ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன் என்பவருக்கு அவர் கண்ட கனவின் மூலம் துப்பு கிடைத்து குற்றவாளியைக் கண்டு பிடிக்க உதவியது.

தையல் எந்திரம் கண்டு பிடிக்கும் பணியில் மும்முரமாய் ஈடுபட்டிருந்த எல்லீஸ் ஹோவா என்பவர் தொடர்ந்து செய்த பல தவறுகளால் தையல் இயந்திரம் முடிவடைவதில் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருந்தார். இறுதியில் அவர் கண்ட கனவின் மூலமே அவர் செய்த தவறுக்கான தீர்வைப் பெற்று தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்து சாதனை படைத்தார் என்கிறது வரலாறு.

கனவு என்பது ஒரு பிரமை என்று வாதிக்கும் ஒரு பிரிவினரும் இருக்கின்றனர். இன்னும் சிலரோ கனவு என்பது வெறும் பிரதிபலிப்பு தான் என்று வாதிடுகின்றனர்.

உலக அரங்கில் அறிவியல் ரீதியாக, விஞ்ஞானப் பூர்வமாக 1973 –இல் தான் ஆலன் ஹாப்ஸன் மற்றும் ராபர்ட் மெக்கார்லே எனும் விஞ்ஞானிகள் கனவைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு கனவு காண்பது சாத்தியம் என்று நிரூபித்தனர்.

கனவைப் பற்றிய வாதங்களும், பிரதிவாதங்களும் இன்று வரை நீடித்துக் கொண்டே இருக்கின்றன.

கனவைப் பற்றிய இஸ்லாமிய வழிகாட்டுதல்கள் என்ன? கனவுக்கும் ஓர் இறைநம்பிக்கையாளனுக்கும் இடையே இருக்கிற தொடர்புகள் என்ன என்பதை நாமும் அறிந்து கொள்வதற்கு கடமைப் பட்டுள்ளோம்.

குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் பார்க்கும் போது கனவு என்பது நல்லவன், கெட்டவன், அரசன், ஆண்டி, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என பாகுபாடின்றி அனைத்து மனிதர்களும் காண்கிற ஒன்றாகும்.

وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَيَانِ قَالَ أَحَدُهُمَا إِنِّي أَرَانِي أَعْصِرُ خَمْرًا وَقَالَ الْآخَرُ إِنِّي أَرَانِي أَحْمِلُ فَوْقَ رَأْسِي خُبْزًا تَأْكُلُ الطَّيْرُ مِنْهُ نَبِّئْنَا بِتَأْوِيلِهِ إِنَّا نَرَاكَ مِنَ الْمُحْسِنِينَ (36)
وَقَالَ الْمَلِكُ إِنِّي أَرَى سَبْعَ بَقَرَاتٍ سِمَانٍ يَأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَسَبْعَ سُنْبُلَاتٍ خُضْرٍ وَأُخَرَ يَابِسَاتٍ يَا أَيُّهَا الْمَلَأُ أَفْتُونِي فِي رُؤْيَايَ إِنْ كُنْتُمْ لِلرُّؤْيَا تَعْبُرُونَ (43)

இதை அல்குர்ஆனின் யூஸுஃப் அத்தியாயத்தில் இடம் பெறும் 36 முதல் 41 வரையிலான வசனங்களும், 43 முதல் 49 வரையிலான வசனங்களும் உணர்த்துகின்றன.

சிறையில் தண்டனைப் பெற்ற குற்றவாளியும், நாடாளும் அரசனும் கனவு கண்டதாக தெரிய முடிகிறது.

அறிஞர் பெருமக்கள் கனவைப் பற்றி விளக்கம் தருகிற போது “விழித்திருக்கும் ஒரு மனிதனின் உள்ளத்தில் அல்லாஹ் சில விளக்கங்களை உருவாக்குவது போன்றே, தூங்கும் மனிதனின் உள்ளத்திலும் சில விளக்கங்களைப் போடுகின்றான். அதுவே கனவாகும்”.

அடுத்து கனவு கண்டது நடக்குமா? எனும் சந்தேகத்திற்கு விடை தேடினால் “நல்ல கனவை கண்பவரின் வாழ்வில் மகிழ்ச்சியூட்டும் சம்பவங்களும், கெட்ட கனவை காண்பவரின் வாழ்வில் சங்கடங்களும் ஏற்படலாம். சில போது ஏற்படாமலும் போகலாம்.

இதற்கு உதாரணமாக, யூஸுஃப் அத்தியாயத்தின் 4 –ஆம் வசனத்தையும், 100 –ஆம் வசனத்தையும் விளக்கமாக எடுத்துக் கொள்ளலாம்.

إِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِي سَاجِدِينَ (4)
இதில் நான்காம் வசனத்தில் “யூஸுஃப் தம் தந்தையிடம், “என் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் நான் கனவில் கண்டேன்; அக்கனவில் அவை என் முன் தாழ்ந்து பணிந்து கொண்டிருப்பதாகவும் கண்டேன்” என்று கூறினார்.

11 நட்சத்திரங்கள் யூஸுஃப் (அலை) அவர்களின் சகோதரர்களையும், சூரியன், சந்திரன் இரண்டும் யூஸுஃப் (அலை) அவர்களின் தாய், தந்தையரைக் குறிக்கும் என விரிவுரையாளர்கள் விளக்கம் தருகின்றனர்.

وَرَفَعَ أَبَوَيْهِ عَلَى الْعَرْشِ وَخَرُّوا لَهُ سُجَّدًا وَقَالَ يَا أَبَتِ هَذَا تَأْوِيلُ رُؤْيَايَ مِنْ قَبْلُ

ஆனால், 100 –ஆம் வசனத்தில், “நகரத்தில் நுழைந்த பின்னர் அவர் தம் தாய் தந்தையரை தம் அருகிலிருந்த அரியணையின் மீது அமர வைத்தார். அவர்களின் சகோதரர்கள் அனைவரும் அவர்களின் முன் சிரம் பணிந்தார்கள். அப்போது, யூஸுஃப் (அலை) கூறினார்: “என் தந்தையே! நான் முன்னர் கண்ட கனவுக்கு இது தான் விளக்கமாகும்.” என்று வந்துள்ளது.

நான்காம் வசனத்தில் தம் தாய், தந்தையரும் தமக்கு சிரம் பணிவதாக யூஸுஃப் (அலை) அவர்கள் கண்டார்கள். ஆனால், தம் தாய், தந்தையரோடு அரியணையில் அமர்ந்திருந்த போது தம் சகோதரர்கள் சிரம் பணிந்தார்கள்” என 100 –ஆம் வசனத்தில் இடம் பெற்றுள்ளது.

எனவே, கனவில் கண்டது மாதிரியே நடக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்று மேற்கூறியவாறு விளக்கம் தருகின்றார்கள்.

அதே போன்று கனவு என்பது இரு வகைப்படும். 1. நபிமார்கள் காணும் கனவுகள். 2. சாதரண மனிதர்கள் காணும் கனவுகள்.

இதில் சாதாரண மனிதர்கள் காணும் கனவுகளில் ஷைத்தான் குறுக்கிட வழியுண்டு. ஆனால், நபிமார்களின் கனவுகளைப் பொறுத்தவரை அது வஹீ இறைச் செய்தியாகும். ஷைத்தானுக்கு அங்கு எந்த வேலையும் கிடையாது. மேலும், நபிமார்கள் காணும் கனவு கண்டிப்பாக நடந்தேறியே தீரும்.

உதாரணமாக, இப்ராஹீம் (அலை) அவர்கள் தங்களது மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களைக் கனவில் அறுத்துப் பலியிடுவது போல் கண்டது.

நபி {ஸல்} தோழர்களோடு ஹரமிற்குள் ஹஜ் செய்வதாகக் கண்ட கனவு.

நல்ல கனவும்… கெட்ட கனவும்….

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا يَحْيَى - هُوَ ابْنُ سَعِيدٍ - قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ قَالَ سَمِعْتُ أَبَا قَتَادَةَ عَنِ النَّبِىِّ - صلى الله عليه وسلم - قَالَ « الرُّؤْيَا مِنَ اللَّهِ ، وَالْحُلْمُ مِنَ الشَّيْطَانِ » .

அபூ கத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                 ( நூல்: புகாரி )

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ حَدَّثَنَا اللَّيْثُ حَدَّثَنِى ابْنُ الْهَادِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خَبَّابٍ عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ أَنَّهُ سَمِعَ النَّبِىَّ - صلى الله عليه وسلم - يَقُولُ « إِذَا رَأَى أَحَدُكُمْ رُؤْيَا يُحِبُّهَا فَإِنَّمَا هِىَ مِنَ اللَّهِ ، فَلْيَحْمَدِ اللَّهَ عَلَيْهَا ، وَلْيُحَدِّثْ بِهَا ، وَإِذَا رَأَى غَيْرَ ذَلِكَ مِمَّا يَكْرَهُ ، فَإِنَّمَا هِىَ مِنَ الشَّيْطَانِ ، فَلْيَسْتَعِذْ مِنْ شَرِّهَا ، وَلاَ يَذْكُرْهَا لأَحَدٍ ، فَإِنَّهَا لاَ تَضُرُّهُ » .

அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான கனவொன்றைக் கண்டால், அது அல்லாஹ்விடமிருந்தே வந்தது என விளங்கிக் கொள்ளட்டும்! மேலும், அதற்காக அவர் அல்லாஹ்வைப் போற்றிப் புகழட்டும்! மேலும், அதை தமக்கு விருப்பமானவர்களிடம் மட்டும் தெரிவிக்கட்டும்.

அதற்கு மாறாக, தமக்கு விருப்பமில்லாத கனவொன்றைக் கண்டால் அது ஷைத்தானிடமிருந்து வந்தது என விளங்கிக் கொள்ளட்டும்! மேலும், அதன் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும்! அதைப் பற்றி யாரிடமும் கூற வேண்டாம். ஏனெனில், அப்போது அக்கனவு அவருக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِى طَلْحَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ « الرُّؤْيَا الْحَسَنَةُ مِنَ الرَّجُلِ الصَّالِحِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ » .

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஓர் நல்லடியார் காணும் நல்ல கனவென்பது நபித்துவத்தின் நாற்பத்தி ஆறு பகுதிகளில் ஒன்றாகும்.” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                          ( நூல்: புகாரி )

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنِ الزُّهْرِىِّ حَدَّثَنِى سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - يَقُولُ « لَمْ يَبْقَ مِنَ النُّبُوَّةِ إِلاَّ الْمُبَشِّرَاتُ » . قَالُوا وَمَا الْمُبَشِّرَاتُ قَالَ « الرُّؤْيَا الصَّالِحَةُ » .

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நற்செய்தி கூறுகின்றவை தவிர, நபித்துவத்தில் வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை” என்று நபி {ஸல்} கூறிய போது, மக்கள் “நற்செய்தி கூறுகின்றவை என்றால் என்ன?” என்று கேட்டனர். அதற்கு நபி {ஸல்} அவர்கள் “நல்ல கனவு” என்று விடை பகர்ந்தார்கள். ( நூல்: புகாரி )

قَالَ مُحَمَّدٌ وَأَنَا أَقُولُ هَذِهِ قَالَ وَكَانَ يُقَالُ الرُّؤْيَا ثَلاَثٌ حَدِيثُ النَّفْسِ ، وَتَخْوِيفُ الشَّيْطَانِ ، وَبُشْرَى مِنَ اللَّهِ ، فَمَنْ رَأَى شَيْئًا يَكْرَهُهُ فَلاَ يَقُصُّهُ عَلَى أَحَدٍ ، وَلْيَقُمْ فَلْيُصَلِّ .

கனவுகளுக்கு விளக்கமளிக்கும் மாமேதை முஹம்மத் இப்னு ஸீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். 1. மனப் பிரமையின் மூலம் ஏற்படும் விழிநிலைக் கனவுகள். 2. ஷைத்தானின் அச்சுறுத்தல் மூலம் ஏற்படும் கனவுகள். 3. அல்லாஹ் (வானவர்களின் தூண்டுதல் மூலம்) ஏற்படுத்தும் கனவுகள். ஆகவே, தாம் விரும்பாத கனவொன்றை எவரேனும் கண்டால் அதைப் பற்றி எவரிடமும் விவரிக்க வேண்டாம். மாறாக, எழுந்து அவர் இறைவனைத் தொழட்டும்.       ( நூல்: புகாரி)


1. கனவிலும் கூட தங்களையும், தங்களது நண்பர்களையும் சுவனத்தில் கண்ட மேன்மக்கள்.

وروى جبير بن نفير، عن عوف بن مالك أَنه رأَى في المنام قبة من أَدَم في مرج أَخضر، وحول القبة غَنَم رَبوض تجتر وتَبعر العجوة، قال: قلت: لمن هذه القبة ؟ قيل: هذه لعبد الرحمن بن عوف. فانتظرناه حتى خرج فقال: يا ابن عوف، هذا الذي أَعطى الله عز وجل بالقرآن، ولو أَشرفت على هذه الثنيه لرأَيت بها ما لم تر عينك، ولم تسمع أذنك، ولم يخطر على قلبك مثله، أَعد. الله لأَبي الدرداء إِنه كان يدفع الدنيا بالراحتين والصدر.

அவ்ஃப் இப்னு மாலிக் அல் அஷ்ஜயீ (ரலி) எனும் சீரிய நபித்தோழர். ஃபத்ஹ் மக்காவின் போது அஷ்ஜயீ கோத்திரத்தாரின் அணியை தலைமையேற்று வழி நடாத்தி தமது கோத்திரத்தாரின் கொடியை நபிகளாரின் ஆணைக்கிணங்க பிடித்தபடி மக்காவில் நுழையும் பாக்கியத்தைப் பெற்றவர்கள்.

ஒரு நாள் கனவொன்று கண்டார்கள். அந்தக் கனவில் பரந்து விரிந்த ஓர் சோலைவனம். நிழல் படர்ந்த அடர்த்தியான மரங்கள். அதன் நடுவே உயர்ந்த மாடங்கள் கொண்ட ஓர் அழகிய கூடாரம். முழுக்க தோலினால் ஆன அழகிய கூடாரம் அது. தம் வாழ்நாளில் அதுவரை கண்டிராத கூட்டம் கூட்டமாக செம்மறி ஆட்டின் மந்தை!

இவ்வளவு உயர்ந்த இந்த பூஞ்சோலை யாருக்குரியது?” என வினவினாராம் அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள். தூரத்தில் இருந்துஇது அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களுக்குரியதுஎன்று அசரீரி வந்தது.

அசரீரியைக் கேட்டுக் கொண்டே முன்னெறிய போது கூடாரத்தின் உள்ளிருந்து வெளியேறிய அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள், அவ்ஃப் இப்னு மாலிக்கிடம் சொன்னார்களாம்: “அவ்ஃபே! இது அல்லாஹ் நமக்கு தருவதாக குர்ஆனில் வாக்களித்திருந்தவைகளாகும்.

அதோ தெரிகிறதே அந்த மேடான பகுதிக்குச் சென்றால் அங்கே நீர் கற்பனைக்கு எட்டாதவைகளை எல்லாம் காண்பீர்என்றார்கள்.

அப்போது அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள்அது யாருக்கு உரியது அபூ முஹம்மத் அவர்களே?” என்று வினவ, வல்ல ரஹ்மான் தோழர் அபூதர்தா (ரலி) அவர்களுக்காக ஆயத்தப்படுத்தி வைத்துள்ளான்.

ஏனெனில், அவர் உலகில் வாழும் போது தமது முழு ஆற்றலையும் பயன் படுத்தி உலக வளங்களை விட்டும், சுக போக வாழ்வை விட்டும் ஒதுங்கி வாழ்ந்தார். ஆதாலால் இன்று மிகப்பெரிய செல்வந்தனாக மாறிப்போனார்என்று அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் பதில் கூறினார்களாம்.

இதை ஜுபைர் இப்னு நஃபீர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

                ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}…., உஸ்துல் காபா )
روى ابن ماجه بسند صحيح عن طلحة بن عبيد الله أن رجلين قَدِما على رسول الله صلى الله عليه وسلم، وكان إسلامهما جميعاً, فكان أحدهما أشد اجتهاداً من الآخر, فغزا المجتهد منهما فاستشهد, ثم مكث الآخر بعده سنة ثم توفي, قال طلحة: فرأيت في المنام بينا أنا عند باب الجنة إذا أنا بهما, فخرج خارج من الجنة فأذن للذي توفي الآخِر منهما, ثم خرج فأذن للذي استشهد, ثم رجع إلي فقال: ارجع فإنك لم يأْنِ لك بعد, فأصبح طلحة يحدث به الناس, فعجبوا لذلك, فبلغ ذلك رسول الله صلى الله عليه وسلم, وحدثوه الحديث, فقال: (مِن أي ذلك تعجبون؟), فقالوا: يا رسول الله! هذا كان أشد الرجلين اجتهاداً، ثم استشهد, ودخل هذا الآخر الجنة قبله, فقال رسول الله صلى الله عليه وسلم: (أليس قد مكث هذا بعده سنة). قالوا: بلى, قال (وأدرك رمضان، فصام، وصلى كذا، وكذا من سجدة في السنة)، قالوا: بلى, قال رسول الله صلى الله عليه وسلم
 (فما بينهما أبعد مما بين السماء والأرض).

தல்ஹா இப்னு உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அந்தலூஸ்ஸ்பெயினிலிருந்து இரண்டு மனிதர்கள் நபி {ஸல்} அவர்களிடம் வந்தார்கள். இருவரும் ஒரே சமயம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

அவ்விருவரில் ஒருவர் மற்றவரை விட அல்லாஹ்வின் வழிபாடு விஷயத்தில் கடுமையாக முயற்சிக்கக்கூடியவர். அவ்விருவரில், முயற்சி செய்பவர் அறப்போரில் கலந்து கொண்டு உயிர்த்தியாகம் செய்து ஷஹீத் ஆக்கப்பட்டார். மற்றொருவர், அவருக்குப் பிறகு ஒரு வருடம் வாழ்ந்தார். பின்னர் மரணித்தார்.

நான் கனவில் என்னை சொர்க்கத்தின் வாசல் அருகிலே அவ்விருவருடனும் இருந்ததைப் பார்த்தேன். அப்போது சொர்க்கத்திலிருந்து ஒருவர் வெளியே வந்து அவ்விருவரில் இறுதியாக மரணித்தவருக்கு சொர்க்கத்தின் உள்ளே செல்ல அனுமதி அளித்தார்.

பின்னர், மீண்டும் வெளியே வந்து உயிர்த்தியாகம் செய்து ஷஹீதான முதலாமவருக்கு சொர்க்கத்தின் உள்ளே செல்ல அனுமதி வழங்கினார்.

பிறகு, அவர் என்னிடம் வந்தார். மேலும், என்னைப் பார்த்துநீங்கள் திரும்பிச் செல்லுங்கள்; உங்களுக்கு உள்ளே செல்வதற்கான நேரம் வரவில்லைஎன்று கூறினார்.

இதை நான் காலையில் மக்களிடம் கூறினேன். மக்கள் ஆச்சர்யம் அடைந்தனர். இந்தச் செய்தி மாநபி {ஸல்} அவர்களுக்கும் தெரிய வந்தது. மக்களும் நபி {ஸல்} அவர்களிடம் சென்று தங்களின் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினார்கள்.

அதற்கு, நபி {ஸல்} அவர்கள்எது குறித்து நீங்கள் ஆச்சர்யம் அடைகின்றீர்கள்?” என்று மக்களை நோக்கி வினவினார்கள். அப்போது, மக்கள்அல்லாஹ்வின் தூதரே! முதலாமவர் கடுமையாக முயற்சி செய்தார்; அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்து ஷஹீதும் ஆனார். ஆனால், மற்றவரோ இவருக்கு முன்னால் சுவனத்தில் நுழைந்து விட்டாரே!?” என்று தங்களின் ஆச்சர்யத்திற்கான காரணத்தை வெளிப்படுத்தினார்கள்.

அதற்கு, நபி {ஸல்} அவர்கள்இவர் அவருக்குப் பின்னால் ஒரு வருடம் வாழ வில்லையா?” என மக்களிடம் கேட்டார்கள். அதற்கு மக்களும்ஆம், வாழ்ந்தார்என்று ஆமோதித்தனர்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள்அவர் ரமலானை அடைந்திருப்பார்; நோன்பு நோற்றிருப்பார்; உபரியான தொழுகைகளை அதிகமதிகம் தொழுதிருப்பார் இல்லையா?” எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள்ஆமாம்என்று பதில் கூறினார்கள்.

ஆகவே தான் அவ்விருவருக்கும் இடையே வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள மிகப்பெரிய தூரத்தைப் போன்று இடைவெளி உள்ளதுஎன்று கூறினார்கள்.

       ( நூல்: இப்னு மாஜா, இப்னு குஸைமா, பஸ்ஸார், இப்னு ஹிப்பான் )

2. வாழ்க்கையின் போக்கையே மாற்றியமைத்த கனவுகள்…..

1. முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை மாற்றிய கனவு

وفي خلافة أبي بكر رجع معاذ من اليمن، وكان عمر قد علم أن معاذا أثرى.. فاقترح على الخليفة أبي بكر أن يشاطره ثروته وماله..!
ولم ينتظر عمر، بل نهض مسرعا الى دار معاذ وألقى عليه مقالته..
كان معاذ ظاهر الكف، طاهر الذمة، ولئن كان قد أثري، فانه لم يكتسب اثما، ولم يقترف شبهة، ومن ثم فقد رفض عرض عمر، وناقشه رأيه..
وتركه عمر وانصرف..
وفي الغداة، كان معاذ يطوي الأرض حثيثا شطر دار عمر..
ولا يكاد يلقاه.. حتى يعنقه ودموعه تسبق كلماته وتقول:
" لقد رأيت الليلة في منامي أني أخوض حومة ماء، أخشى على نفسي الغرق.. حتى جئت وخلصتني يا عمر"..
وذهبا معا الى أبي بكر.. وطلب اليه معاذ أن يشاطره ماله، فقال أبو بكر:" لا آخذ منك شيئا"..
فنظر عمر الى معاذ وقال:" الآن حلّ وطاب"..
ما كان أبو بكر الورع ليترك لمعاذ درهما واحدا، لو علم أنه أخذه بغير حق..
وما كان عمر متجنيا على معاذ بتهمة أو ظن..

மதீனாவில் பொருளாதார நெருக்கடியொன்று ஏற்பட்ட போது, ஒரு மாலைப் பொழுதில் கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை அழைத்து ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள்.

பேச்சின் ஊடாக உமர் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களிடம் ஒரு யோசனை எம்மிடம் உண்டு. வேண்டுமானால் முஆத் (ரலி) அவர்களை அழைத்து அவர்கள் யமனில் சம்பாதித்த அவரின் தேவைக்குப் போக மீதமிருக்கிற அனைத்து சொத்துக்களையும் அரசுக்கு ஒப்படைக்கு மாறு சொல்லுங்கள்.

நீங்கள் ஆட்சியாளர் தானே! அவர் தந்தார் என்றால் இந்த நிலை கொஞ்சம் மாறிவிடும் அல்லவா?” என்று கூறினார்கள்.

அது கேட்ட அபூபக்ர் (ரலி) அவர்கள்அவர்களாக விரும்பி எதைத் தந்தாலும் நாம் பெற்றுக் கொள்வோம்! மாறாக, அவரிடம் இருந்து எதையும் கட்டாயப்படுத்தி நான் பெற்றுக் கொள்ளமாட்டேன்.” என்றும், மேலும், முஆத் அவர்களை நபி {ஸல்} அவர்கள் யமனுக்கு அனுப்பும் போதே பொருளீட்டுவதற்கும் சம்பாத்யம் செய்வதற்கும் அனுமதி அளித்திருந்தார்கள்என்று கூறி மறுத்து விட்டார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் மறுத்ததும், முஆத் (ரலி) அவர்களை நேரிடையாகச் சந்தித்து மதீனாவின் நிலையை எடுத்துக் கூறி தமது அபிப்பிராயத்தைக் கூறினார்கள்.

முஆத் (ரலி) அவர்கள் மறுத்து விடுகின்றார்கள். முஆத் (ரலி) மறுத்ததும் அங்கிருந்து விடைபெற்று வீட்டிற்கு வந்து விடுகின்றார்கள்.

உமர் (ரலி) அவர்களின் அபிப்பிராயத்தை நிராகரித்த முஆத் (ரலி) அவர்கள் நீண்ட நேரம் யோசித்தார்கள். சட்டென அவருக்கு பழைய கனவொன்று மின்னல் கீற்று போல் பளிச்சிட்டு மறைந்தது. மீண்டும் அதிகம் உமர் (ரலி) அவர்களின் அபிப்பிராயம் குறித்து சிந்தித்தார்கள் முஆத் (ரலி) அவர்கள்.

ஒருவாராக உமர் (ரலி) அவர்களின் வீட்டை நோக்கி நடந்தார்கள். அந்த நடையில் அவர்கள் எடுத்த முடிவின் வேகம் தென்பட்டது.

வீட்டின் கதவை தட்டி உமர் (ரலி) அவர்களை வெளியே அழைத்த முஆத் (ரலி) அவர்கள்உமர் அவர்களே! நான் உங்களுடைய ஆலோசனையையும், அபிப்பிராயத்தையும் ஏற்கின்றேன்

என்னுடைய இந்த மனமாற்றத்திற்கு என்ன காரணம் என்று என்னிடம் நீங்கள் அவசியம் கேட்கத்தான் வேண்டும்?” என்றார் முஆத் (ரலி) அவர்கள்.

உம்முடைய மன மாற்றத்திற்கான காரணம் என்ன? என்று உமர் (ரலி) அவர்கள் வினவியதற்கு

நேற்றைய இரவில் நான் கனவொன்று கண்டேன். அதில் ஆழமான நீர்ச்சுழலில் நான் சிக்கிக்கொண்டேன். இன்னும் சிறிது நேரத்தில் மூழ்கப்போகிறேன் எனும் அச்சம் மனதை ஆட்கொண்ட போது, நீங்கள் தான் வந்து கரம் கொடுத்து என்னைக் காப்பாற்றினீர்கள்என்று முஆத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பின்னர், உமர் அவர்களையும் அழைத்துக் கொண்டு அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று தமது பொருளாதாரம் முழுவதையும் கொடுத்து விட்டு, அமீருல் முஃமினீன் அவர்களே! இதோ இங்கிருப்பவைகள் மட்டும் தான் நான் சம்பாதித்தது! அதை நான் அல்லாஹ்விற்காக தந்துவிட்டேன்என்று கூறி சென்று விட்டார்கள்.

( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:139, ஸியரு அஃலா மின் நுபலா, பாகம்: )
  
2. அறிவுலக மாமேதை இமாம் கஸ்ஸாலி {ரஹ்} அவர்களை மாற்றிய கனவு.

இமாம் கஸ்ஸாலி {ரஹ்} அவர்கள் கூறுகின்றார்கள்: “என் ஆசிரியர் அஹ்மத் ஹஸன் அல் பாக்கூரி {ரஹ்} அவர்கள் என்னை அவசரமாக கூப்பிட்டழைத்ததாக ஒருவர் என்னிடம் சொன்னார்.

நான் அவர்களைக் காண அவர்களின் வீட்டிற்குச் சென்றேன். என்னைப் பார்த்ததும் படுக்கையில் படுத்திருந்த அவர்கள் வேக வேகமாக எழுந்தார்கள். அழைத்த காரியம் மிகவும் அவசியமாக இருக்கும் எனக் கருதினேன்.

மிகவும் முக்கியமான ஒரு விஷயம் குறித்து பேசுவதற்காகத்தான் உம்மை நான் அழைத்துள்ளேன். நானே உம்மிடம் வரலாமென்று தான் நினைத்தேன். ஆனால், என் உடல் ஒத்துழைக்க வில்லை.என்றார்கள்.

பின்பு, என்னிடம்உமக்கும் அம்ருப்னுல் ஆஸ் {ரலி} அவர்களுக்கும்என்ன பிரச்சனை? எனக் கேட்டார்கள்.

அதற்கு நான்நான்  அம்ருப்னுல் ஆஸ் {ரலி} –மஸ்ஜிதின் ஃகதீப் அவ்வளவு தான் வேறொன்றும் எங்களுக்குள் இல்லைஎன்றேன்.

நான் அதைக் கேட்க வில்லை, அது தான் ஊரில் உள்ள எல்லோருக்கும் தெரியுமே? என்றார்கள்.

பின்ன வேறெதைப் பற்றிக் கேட்கின்றீர்கள்? என்றேன்.

நான் கனவில் கண்டதை அப்படியே கூறுகின்றேன். நீர் விளக்கம் சொல்லும் என்றார்கள்.

பின்பு கூறினார்கள்: “ கனவில் நான் உறங்கிக் கொண்டிருந்தேன். வாசலின் கதவை யாரோ தட்டுவது போல் உணர்ந்தேன். எழுந்து சென்று யார் என்று வினவினேன்.

      அதற்கு ஆட்சியாளர் வந்திருக்கின்றேன். என பதில் வந்தது. நான் வந்திருக்கும் ஆட்சியாளர் யார்? என்று கேட்டேன்.

அதற்கு கதவிற்கு அப்பாலிருந்துநான் தான் அம்ருப்னுல் ஆஸ் நாயகத்தோழர்என பதில் வந்தது.

கதவைத் திறந்தேன்! நபித்தோழர் ஒருவரின் வருகையால் நான் மெய்சிலிர்த்துப் போனேன்! அவர்களின் வருகையால் என் சரீரத்தில் நீண்ட நாட்களாய் பீடித்திருந்த நோய் நீங்கியது போன்று உணர்ந்தேன்.

இப்போது நீர் அமர்ந்திருக்கும் அதே இடத்தில் தான் அவர்களும் அமர்ந்திருந்தார்கள். “என் மீது உங்களின் மாணவர் கஸ்ஸாலி நீண்ட காலமாய் கொண்டிருக்கின்ற பகைமையுணர்வை நான் மன்னித்து விட்டதாக நீங்கள் கூறிவிடுங்கள்; ஏனென்றால், அவர் என் மஸ்ஜிதை மார்க்க அறிவால் உயிர் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.

      மேலும், இஸ்லாத்திற்காக கட்டப்பட்ட நான்கு இறையில்லங்களில் என் மஸ்ஜிதும் ஒன்றாகும். அங்கு தான் ரோமானியர்களை வெற்றி கொண்ட வெற்றியாளர்கள் ஒன்றினைந்தோம்.

மிஸ்ரில் இஸ்லாமிய தீபத்தை அங்கிருந்து தான் ஏற்றி வைத்தோம்.” என்று பேசி முடித்த அம்ர் {ரலி} அவர்கள் விடை பெற்று செல்வதை உணர்ந்த போது, பாங்கு சொல்லும் சப்தத்தை கேட்டேன்.

கண்விழித்துப் பார்த்த போது உண்மையில் முஅத்தின் பாங்கு சொல்லிக் கொண்டிருந்தார். எழுந்து உளூ செய்து பள்ளிக்குச் சென்றேன். தொழுதேன்.

உம்மை அழைத்து நீர் இங்கு வரும் வரை என்னால் சரியாக அமரக் கூட முடியவில்லை.

சரி இது தான் நடந்தது. உம்மிடம் சொல்லச் சொன்னதை நான் சொல்லி விட்டேன். பின்பு உமது விருப்பம் என்றார்கள்.

அங்கிருந்து விடை பெற்று நான் மஸ்ஜிதை நோக்கி விரைந்தேன். அந்தக் கனவை கேட்டதிலிருந்து என் மீது ஏதோ இடி விழுந்ததைப் போன்று எண்ணத் தோன்றியது.

என்னை வெறுத்தவனாக நான் நடந்து கொண்டு பள்ளியை நோக்கிச் சென்றேன். என் சிந்தை முழுக்க அது தான் ஆக்கிரமித்து இருந்தது. அம்ரு {ரலி} அவர்கள் குறித்து நான் கொண்டிருந்த மன முரண் இப்போது அவர்களுக்கே தெரிந்துவிட்டது.

ஏனெனில், நான் அலீ {ரலி} அவர்களுக்கு எதிராக போர் புரிந்தவர்களை வெறுத்தேன்.

ஆனால், இப்போதோ இந்தக் கனவின் மூலம் நான் அம்ரு {ரலி} அவர்கள் குறித்து எண்ணியது எவ்வளவு மாபெரும் குற்றம் என்பதை உணர்ந்து கொண்டேன்.

ஒரு நபித்தோழர் மீது, அதுவும் அவருக்கு சிறிதும் தொடர்பில்லாத ஒன்றின் மீது நான் கொண்டிருந்த தவறான அபிப்பிராயத்திற்காக மனம் வருந்தினேன். அதற்காக அழுது புரண்டு தவ்பாச் செய்தேன்.

அம்ருப்னுல் ஆஸ் {ரலி} அவர்களையும், அவர்களின் தகுதியையும் நான் விளங்கிக் கொண்டேன். அவரும், அவர்களுக்கு உதவியாக முஸ்லிம்களும் இல்லையென்றால் நிச்சயமாக, சத்தியமாக இந்த மிஸ்ரில் இஸ்லாம் பரவியே இருக்காது. நானும் முஸ்லிமாக இருந்திருக்க மாட்டேன். என்று நான் விளங்கிக் கொண்டேன்.

பின்னர் நபித்தோழர்கள் குறித்து வேறெதுவும் நான் ஒரு போதும் அபிப்பிராய பேதம் கொள்ளப் போவதில்லைஎன்று தீர்மானமாக உறுதி எடுத்துக் கொண்டேன்.

                                 ( நூல்: ஸுஹ்பதுஸ் ஸஹாபா, பக்கம்:92,93,94,95. )

கனவில் செய்யப்பட்ட மரண சாசனமும், அது நிறைவேற்றப்படுதலும்

قال أنس بن مالك: لما انكشف الناس يوم اليمامة قلت لثابت بن قيس بن شماس: ألا ترى يا عم؟ ووجدته يتحنط فقال: ما هكذا كنا نقاتل مع رسول الله صلى الله عليه وسلم، بئس ما عودتم أقرانكم، وبئس ما عودتكم أنفسكم؛ الله إني أبرأ إليك مما جاء به هؤلاء، يعني الكفار، وأبرأ إليك مما يصنع هؤلاء، يعني المسلمين، ثم قاتل حتى قتل، بعد أن ثبت هو وسالم مولى أبي حذيفة؛ فقاتلا حتى قتلا، وكان على ثابت درع له نفيسة فمر به رجل من المسلمين فأخذها، فبينما رجل من المسلمين نائم أتاه ثابت في منامه فقال له: إني أوصيك بوصية، فإياك أن تقول: هذا حلم، فتضيعه؛ إني لما قتلت أمس، مر بي رجل من المسلمين فأخذ درعي، ومنزله في أقص الناس، وعند خبائه فرس يستن في طوله وقد كفأ على الدرع برمة وفوق البرمة رحل، فأت خالداً، فمره فليبعث فليأخذها؛ فإذا قدمت الدينة على خليفة رسول الله صلى الله عليه وسلم، يعني أبا بكر، فق له: إن علي من الدين كذا وكذا، وفلان من رقيقي عتيق، وفلان؛ فاستيقظ الرجل فأتى خالداً فأخبره، فبعث إلى الدرع فأتى بها على ما وصف، وحدث أبا بكر رضي الله عنه برؤياه، فأجاز
யமாமா யுத்தம், பொய்யன் முஸைலமாவை எதிர் கொள்ள அபூபக்ர் (ரலி) அவர்கள் அனுப்பிய பெரும் படையில் மிக ஆர்வத்தோடு கலந்து கொண்டார் ஸாபித் (ரலி) அவர்கள்.

ஆரம்பத்தில் இருந்தே கடுமையான சண்டை நிகழ்ந்தது. போரின் உச்ச கட்ட நேரமது, ஆக்ரோஷமாகவும் வீரமாகவும் சுழன்று சுழன்று வாள் வீசிய வேங்கை ஸாபித் (ரலி) அவர்கள் எதிரி ஒருவனின் எதிர் பாராத தாக்குதலால் ஷஹீத் வீர மரணம் அடைகின்றார்கள்.

அன்றிரவு யுத்தத்தில் கலந்து கொண்ட ஒருவரின் கனவில் வந்துநான் போருக்கு வரும் போது கவச உடை அணிந்து இருந்தேன். நான் கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் போது, மதீனாவின் இன்ன பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் படை வீரர் ஒருவர் என் அருகே வந்து இன்னின்ன அடையாளங்களைக் கொண்ட என் கவச உடையை கழற்றிச் சென்று விட்டார்.

காலித் (ரலி) அவர்களை உம்முடன் அழைத்துக் கொண்டு, அவரிடம் சென்று அந்த கவச உடையைப் பெற்று அதை விற்று, கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அதை ஒப்படைத்து எனக்கு இன்னின்னாரிடம் இன்னின்ன கடன் இருக்கின்றது. அவர்களை அழைத்து என் சார்பாக கடனை அடைக்கச் சொல்லுங்கள்.” இதை நான் உமக்கு வஸிய்யத்தாக சொல்கின்றேன்”. என்று ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

மறு நாள் அது போன்றே அவரின் கவச உடை பெறப்பட்டு, கடனும் நிறைவேற்றப்பட்டது.

 فأجاز وصيته، ولا يعلم أحد أجيزت وصيته بعد موته سواه.

இந்த செய்தியை அறிவிக்கின்ற அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “நான் அறிந்து நாங்கள் வாழும் காலத்தில் கனவில் செய்யப்பட்ட வஸிய்யத் ஒன்று நிறைவேற்றப் பட்ட அந்தப் பெருமை ஸாபித் (ரலி) அவர்கள் விஷயத்தில் தவிர வேறு எவருக்கும் கிடைக்கப் பெற்றதில்லை.”

              (நூல்: உஸ்துல் ஃகாபா, ஸியரு அஃலா மின் நுபலா, இஸ்தீஆப்)

உயிரோடு வாழ்கிற காலத்திலேயே கடன் வாங்கி விட்டு, கடன் கொடுத்தவனை தூங்க விடாமல் தவிக்க விடுகிற உலகத்தில் இறந்த பின்னரும் கூட பிறரின் கனவில் வந்து நிறைவேற்றச் சொன்ன ஸாபித் (ரலி) அவர்களின் வாழ்வும் வஸிய்யத்தும் உண்மையில் புகழுக்குரிய ஒன்று தான்.

மேற்கூறிய நிகழ்வுகள் கனவுகள் சம்பந்தமான சந்தேகங்களுக்கு ஓரளவு நிவர்த்தியாக அமைந்திருக்கும் என நம்புகின்றேன்.

இன்ஷா அல்லாஹ் இன்னொரு பதிவில் மாநபி {ஸல்} அவர்களைக் கனவில் காண முடியுமா? என்ற ஆய்வைப் பார்ப்போம்.

ஆகவே, கனவு குறித்தான நமது தவறான புரிதலை தவிர்த்திடுவோம்! மேலும், கனவுக்கு விளக்கம் தருகிற அறிஞர் பெருமக்கள் அரிதாகி விட்ட இந்தக் காலத்தில் நம்மில் யாராவது கனவு கண்டால் “யா அல்லாஹ் நான் கண்ட இக்கனவும், கனவின் முடிவும் எனக்கு நன்மை தரக்கூடியதாக இருந்தால் அதன் நன்மையை தர நீயே எனக்கு போதுமானவன். நான் கண்ட இக்கனவும், கனவின் முடிவும் தீமை தரக்கூடியதாக இருந்தால் அதன் தீமையிலிருந்து பாதுகாக்க நீயே போதுமானவன். என்று அல்லாஹ்விடம் பொறுப்பை ஒப்படைப்பதே மேலான ஒன்றாகும்.

அல்லாஹ் நமக்கு விளக்கத்தைத் தருவானாக! ஆமீன்! வஸ்ஸலாம்!!





9 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......................
    பயானை படித்து முடித்தப்பின் நாங்களும் எழுந்து விட்டோம்


    மாஷா அல்லாஹ்
    கனவிற்கு நல்ல விளக்கம்

    ReplyDelete
  2. கனவு சம்பந்தமாக அருமையான விளக்கம் ஜஸாகல்லாஹூ கைரன்

    ReplyDelete
  3. ﻣﺎ ﺷﺎﺀ ﺍﻟﻠﻪ

    ReplyDelete
  4. கனவில் இருந்து முழிக்க (முடிக்க) முடியவில்லை

    ReplyDelete
  5. அருமையான விளக்கம்

    ReplyDelete
  6. மெய்யான கனவு கான மெஞ்ஞான விளக்கம் அல்ஹம்துலில்லாஹ் அன்புடன் பரகத் பாகவி

    ReplyDelete
  7. மெய்யான கனவு கான மெஞ்ஞான விளக்கம் அல்ஹம்துலில்லாஹ் அன்புடன் பரகத் பாகவி

    ReplyDelete
  8. அருமையான விளக்கம்

    ReplyDelete
  9. அல்ஹம்துலில்லாஹ்
    உங்களின் சேவைக்கு கூலியை ஈருலகிலும் தந்தருள்வானாக ஆமீன்

    ReplyDelete