மஸ்ஜிதும்…. சேவை உணர்வும்….
இறையில்லம் என்பது
ஓர் இறைநம்பிக்கையாளனின் உணர்வுகளோடும்,
உள்ளத்தோடும் இரண்டற கலந்து
விட்ட ஓர் உன்னதமான
அங்கமாகும்.
இறையில்லத்தோடு அவன்
தொடர்பில் இருக்கும் காலமெல்லாம்
இறைவனின் அருள் மழையில்
சதா அவன் நனைந்து
கொண்டே இருக்கின்றான்.
ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிருக்கு நிகரான,
புனிதம் வாய்ந்த ஒன்று
இருக்குமேயானால் அது
இறையில்லமாகத்தான் இருக்கும்.
ஏனெனில், உயிரின்
உரிமையும் இறையில்லத்தின் உரிமையும்
முற்றிலும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது.
وَأَنَّ
الْمَسَاجِدَ لِلَّهِ
அல்லாஹ் கூறுகின்றான்:
”மேலும், திண்ணமாக மஸ்ஜித்கள்
– பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியனவாகும்”. ( அல்குர்ஆன்:72:18
)
إِنَّ
اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنْفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ
لَهُمُ الْجَنَّةَ
அல்லாஹ் கூறுகின்றான்:
“உண்மையாக, அல்லாஹ்
இறைநம்பிக்கையாளர்களிடமிருந்து அவர்களின்
உயிர்களையும், உடமைகளையும் சுவனத்திற்கு
பகரமாய் விலைக்கு வாங்கிக்
கொண்டான்”.
( அல்குர்ஆன்:9:111 )
உலகில் வாழ்கிற
போது இறையில்லத்துடன் ஓர்
இறைநம்பிக்கையாளன் கொண்டிருக்கிற
தொடர்பு என்பது உளப்பூர்வமானதாகவும்,
உயிரோட்டமானதாகவும் அமைந்து
விடும் பட்சத்தில் அல்லாஹ்வின்
அரியணையின் கீழ் நிழல்
பெறுகிற பெரும் பேற்றை
வழங்கி கௌரவிப்பதாக இஸ்லாம்
உயர்த்திக் கூறுகிறது.
فعن أبي هريرة - رضي الله عنه - أن رسول الله - صلى الله عليه
وسلم - قال:
((سَبْعَةٌ يُظِلُّهُمْ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا
ظِلُّهُ: الْإِمَامُ الْعَادِلُ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ
قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ، وَرَجُلَانِ تَحَابَّا فِي اللَّهِ
اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ
مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ أَخْفَى
حَتَّى لَا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ
خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ))
البخاري (620)، ومسلم (1712).
அபூ ஹுரைரா
(ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான்.
நீதியான அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபர், இறையில்லத்தோடு தனது இதயத்தை தொடர்புபடுத்திய மனிதர், இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள்.
நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய(ஒதுங்கிக் கொண்ட)வர், வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
முன்னுரிமை பெறும் அம்சம்.
இறைநம்பிக்கையாளர்களின் வாழ்க்கையில்
முன்னுரிமை வழங்கப்படும் முதல்
அம்சமாக இருப்பதும் இறையில்லம்
தான்.
அல்லாஹ் தன்
திருமுன் உறவாடிட, விண்ணுலகப்
பயணத்திற்கு நபிகளாரை அழைத்துச்
சென்ற போது பைத்துல்
முகத்தஸ் எனும் புனித
இறையில்லத்திற்கு அழைத்து
வந்து, பின்னர் அங்கிருந்து
விண்ணுலகிற்கு அழைத்துச் சென்றதாக
அல்குர்ஆனில் கூறுகின்றான்.
سُبْحَانَ
الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى
الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا
إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ ()
”மிகத் தூய்மையானவன்;
தன் அடியாரை ஓர்
இரவில் அழைத்துச் சென்றவன்!
மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து வெகுதொலைவில்
இருக்கிற மஸ்ஜிதுல் அக்ஸா
வரையில்! அதன் சுற்றுப்
புறங்களை அவன் அருள்வளம்
நிறைந்ததாய் ஆக்கியுள்ளான்.
எதற்காக அழைத்துச்
சென்றானெனில், தன்னுடைய சான்றுகளை
அவருக்கு காண்பிப்பதற்காக! உண்மையில்
அவன் அனைத்தையும் செவியுறுபவனாகவும்,
பார்ப்பவனாகவும் இருக்கின்றான்”. ( அல்குர்ஆன்:17:1
)
وفي يوم الاثنين 8
ربيع الأول سنة 14 من النبوة ـ وهي السنة الأولى من الهجرة نزل رسول الله صلى الله
عليه وسلم بقباء .
وأقام
رسول الله صلى الله عليه وسلم بقباء أربعة أيام : الاثنين والثلاثاء والأربعاء
والخميس وأسس مسجد قباء وصلى فيه، وهو أول
مسجد أسس على التقوى بعد النبوة،
பெருமானார் {ஸல்}
அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு
புலம்பெயர்ந்து சென்ற போது
வழியில் குபா எனும்
இடத்தில் நான்கு நாட்கள்
தங்கினார்கள்.
நபித்துவத்தின் பதினான்காம்
ஆண்டு, அதாவது ஹிஜ்ராவின்
முதல் ஆண்டு ரபீவுல்
அவ்வல் பிறை 8,9,10,11 (திங்கள்
முதல் வியாழன் வரை)
ஆகிய நாட்கள் தங்கினார்கள்.
அப்போது, அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்கள்
ஒரு பள்ளியை நிர்மாணித்து
அங்கே ஐவேளை தொழகைகளை
நிறைவேற்றினார்கள். குபாவில் நிர்மாணித்த
அந்த இறையில்லம் தான்
நபித்துவத்திற்குப் பிறகு
இறைவனை வணங்குவதற்காக நிர்மாணிக்கப்பட்ட முதல் பள்ளியாகும்.
( நூல்: அர்ரஹீக்குல் மஃக்தூம்,
பாடம்: ஹிஜ்ரத்துன் நபீ
{ஸல்}…)
தங்கியதென்னவோ நான்கு
நாட்கள் தான். ஆனால்,ஓர்
இறைநம்பிக்கையாளன் தனக்கான
வாழ்வியல் நோக்கங்களில் பிரதானமானதாக,
முன்னுரிமை தர வேண்டிய
முதல் அம்சமாக இறையில்லம்
தான் இடம் பெற்றிருக்க
வேண்டும் என்பதை இந்த
உம்மத்துக்கு உணர்த்திக் காட்டினார்கள்.
فإن أول عمل قام به النبي صلى الله عليه وسلم عندما
قدم إلى المدينة المنورة هو بناؤه لمسجده الشريف في المكان الذي بركت فيه ناقته، وكان
ملكاً ليتيمين فاشتراه النبي صلى الله عليه وسلم وأقام عليه المسجد، وكان يعمل فيه
بنفسه مع أصحابه الكرام، وقد بدأ بناء المسجد في ربيع الأول سنة واحد من الهجرة
بعد وصول النبي صلى الله عليه وسلم مباشرة،
كما جاء في كتاب الرحيق المختوم
மதீனா வந்த
பின்னரும் கூட மஸ்ஜிதுன்
நபவீயை நிர்மாணிப்பதில் அண்ணலார்
காட்டிய அக்கறை மிகவும்
கவனிக்கத்தக்கதாகும்.
மஸ்ஜிதுன் நபவீ
பள்ளிவாசலுக்கு தேர்ந்தெடுத்த இடம்
இரண்டு அநாதை இளைஞர்களுக்கு
சொந்தமானது. அந்த இடத்தை
விலைக்கு வாங்கி நபி
{ஸல்}
அவர்கள் மஸ்ஜிதுன் நபவீயை
நிர்மாணித்தார்கள்.
அந்த இடத்தை
வாங்குவதற்கான விலையை பனூ
நஜ்ஜார் கோத்திரத்தார்கள் எந்த
வித பிரதிபலனும் நோக்காமல்
கொடுத்தார்கள்.
( நூல்: அர்ரஹீக்குல் மஃக்தூம்,
பாடம்: ஹிஜ்ரதுன் நபி
{ஸல்}..
)
அண்ணலாரின் அடிச்சுவட்டில் அப்படியே பின்பற்றிய,
நேர்வழி நின்று ஆட்சி
செய்த கலீஃபாக்களும் இஸ்லாமிய
எல்லைகள் விரிவடைகிற போதெல்லாம்
முதலாவதாக அங்கே இறையில்லம்
அமைப்பதற்கே முன்னுரிமை கொடுத்து
வந்தார்கள்.
احتطّ عتبة مكان الأبلّة مدينة
البصرة، وعمّرها وبنى مسجدها العظيم..
ولبث عتبة مكانه يصلي بالناس، ويفقههم
في دينهم، ويحكم بينهم بالعدل، ويضرب لهم أروع المثل في الزهد والورع والبساطة...
ஃகலீஃபா உமர்
(ரலி)
அவர்கள் பாரசீகத்தை வென்றெடுக்க
இறுதியாக அனுப்பிய படைப்பிரிவுக்கு உத்பா இப்னு
ஃகஸ்வான் (ரலி) அவர்களை
தளபதியாக நியமித்தார்கள்.
பாரசீகர்களின்
இராணுவத் தளமான உபுல்லாவின் கோட்டையைக் கைப்பற்றி, வெற்றியை பதிவு செய்தது உத்பா
(ரலி) அவர்களின் தலைமையிலான முஸ்லிம் அணியினர்.
கலீஃபா உமர் (ரலி)
அவர்களுக்கு இந்த வெற்றியை குறித்தும் எதிர்கால திட்டம் குறித்தும் விரிவான ஒரு
கடிதத்தை எழுதினார்கள்.
அதில் உடனடியாக
அங்கே ஓர் பள்ளிவாசலை நிறுவ வேண்டும் என்றும்
உபுல்லாவின் கோட்டையை இஸ்லாமிய இராணுவத்தளமாகவும், ஒரு நகரை உருவாக்கி
ஆட்சியின் தலைமையிடமாகவும் அமைக்க
வேண்டும்கொண்டு என்று கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்கள்.
உத்பா (ரலி)
அவர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொண்ட உமர் (ரலி) அவர்கள் அதற்கு இசைவு தந்தார்கள்.
பஸ்ரா எனும் நகரை
உருவாக்கி, ஒரு பள்ளிவாசலையும் நிறுவி, இராணுவத் தலைமையிடத்தையும்
உருவாக்கினார்கள்.
கலீஃபா உமர் (ரலி)
அவர்கள் உத்பா இப்னு கஸ்வான் (ரலி) அவர்களையே இஸ்லாமிய அரசின் முதல் ஆளுநராக
நியமித்தார்கள்.
அங்கேயே உத்பா
(ரலி) அவர்கள் முதல் இமாமாகவும் பரிணமித்தார்கள்.
( நூல்: ரிஜாலுன்
ஹவ்லர்ரஸூல் {ஸல்}..... )
ஆக அல்லாஹ்வும்,
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும், அவர் தம் அருமைத் தோழர்களும் இறையில்லத்திற்கு
வழங்கிய முக்கியத்துவத்தை மேலே கூறிய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
இறையில்லத் தொடர்பு! சன்மானமும்.... சோபனமும்....
روى الشيخان في صحيحيهما أن عثمان بن عفان - رضي
الله عنه - أراد بناء المسجد، فكره الناس ذلك، وأحبوا أن يدعه، فقال عثمان - رضي
الله عنه -: سمعت النبي - صلى الله عليه وسلم - يقول: ((مَنْ بَنَى مَسْجِدًا - قَالَ
بُكَيْرٌ حَسِبْتُ أَنَّهُ قَالَ يَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ - بَنَى اللَّهُ
لَهُ مِثْلَهُ فِي الْجَنَّةِ))
البخاري (431)، ومسلم (829).
உஸ்மான் (ரலி) அவர்கள் தங்களின் ஆட்சிக்காலத்தில்
மதீனாவின் ஒரு பகுதியில் இறையில்லத்தை எழுப்புவதற்கு விரும்பிய போது, அப்பகுதியின் மக்கள் அதற்கு விரும்பவில்லை.
அப்போது, விரும்பாத அம்மக்களை அழைத்து, உஸ்மான்
(ரலி) அவர்கள் “அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன்..
“எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இறையில்லத்தைக் கட்டுவாரோ,
அவருக்காக அல்லாஹுதஆலா சுவனத்தில் மாளிகை ஒன்றைக் கட்டுகின்றான்”
என்று கூறினார்கள். ( நூல்: புகாரி, முஸ்லிம்
)
روى أبو هريرة أنه - عليه الصلاة والسلام - قال: ((أَحَبُّ
الْبِلَادِ إِلَى اللَّهِ مَسَاجِدُهَا، وَأَبْغَضُ الْبِلَادِ إِلَى اللَّهِ
أَسْوَاقُهَا)).
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“உலகில் எல்லா இடங்களைக் காட்டிலும் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான
இடம் இறையில்லங்களாகும். மிக வெறுப்பான இடம் கடைவீதிகளாகும்”
என்று நபி {ஸல்} அவர்கள்
கூறியதை நான் கேட்டிருக்கின்றேன். ( நூல்: முஸ்லிம் )
وقال - عليه الصلاة والسلام -: ((مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ وَرَاحَ
أَعَدَّ اللَّهُ لَهُ نُزُلَهُ مِنْ الْجَنَّةِ كُلَّمَا غَدَا أَوْ رَاحَ))"
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“எவர் காலை, மாலை இறையில்லத்திற்குச் செல்கின்றாரோ,
அவருக்கு சொர்க்கத்தில் விருந்து உபசரிப்பு செய்ய அல்லாஹ் ஏற்பாடு செய்கின்றான்.
காலையோ, மாலையோ அவர் எத்தனை முறை இறையில்லத்துக்குச்
சென்றாலும் அத்தனை முறையும் அவருக்கு அந்த ஏற்பாடு செய்யப்படுகின்றது” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
( நூல்: புகாரி )
فعن أبي هريرة - رضي الله عنه - قال: قال - عليه
الصلاة والسلام -: ((مَنْ تَطَهَّرَ فِي بَيْتِهِ، ثُمَّ مَشَى إِلَى بَيْتٍ مِنْ
بُيُوتِ اللَّهِ لِيَقْضِيَ فَرِيضَةً مِنْ فَرَائِضِ اللَّهِ؛ كَانَتْ
خَطْوَتَاهُ إِحْدَاهُمَا تَحُطُّ خَطِيئَةً، وَالْأُخْرَى تَرْفَعُ دَرَجَةً))
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“எவர் வீட்டிலிருந்து உளூ செய்து விட்டு, பின்னர்
இறையில்லத்திற்கு அல்லாஹ்வின் கட்டளைகளில் ஏதேனுமொரு கட்டளையை நிறைவேற்ற நடந்து செல்வார்
எனில், அவரின் ஒவ்வொரு எட்டிற்கும் இரண்டு விதமான சன்மானம் வழங்கப்படுகின்றன.
1. அவரின் ஒரு பாவம் மன்னிக்கப்படுகின்றது. 2. அவருக்கு சுவனத்தின் ஒரு அந்தஸ்து உயர்த்தப்படுகின்றது” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
( நூல்: முஸ்லிம் )
عن أبي الدرداء
رضي الله عنه
قال
سمعت رسول الله - صلى
الله عليه وسلم - يقول: ((المسجد بيت كل تقي، وتكفل الله
لمن كان
المسجد بيته بالروح والرحمة، والجواز على الصراط إلى رضوان الله إلى الجنة
அபுத்தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“இறையில்லம் என்பது இறையச்சமுள்ள ஒவ்வொருவரின் இனிய இல்லமாகும்.
எவருடைய இல்லம் இறையில்லமாக ஆகிவிடுமோ, அவருக்கு
ஆரோக்கியத்தை கொடுக்கவும், தன் அருளைப் பொழியவும், சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை எளிதில் கடக்கவும், தன்
திருப்பொருத்தத்தை அளிக்கவும், மேலான சுவனத்தைத் தரவும் அல்லாஹ்
பொறுப்பேற்றுள்ளான்” என நபி {ஸல்}
அவர்கள் கூறினார்கள். ( நூல்: தப்ரானீ )
وأخرج الإمام أحمد أيضا عن معاذ بن
جبل رضي الله عنه أن نبي الله صلى الله عليه وسلم
قال إن الشيطان ذئب الإنسان كذئب الغنم ، يأخذ الشاة القاصية والناحية ،
فإياكم والشعاب ، وعليكم بالجماعة والعامة والمسجد }
முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
“ஆடுகளை வேட்டையாடும் ஓநாயைப் போன்று, மனிதனை வேட்டையாடும்
ஓநாய் ஷைத்தான் ஆவான். மந்தையை விட்டும் தனித்திருக்கிற ஆட்டையே
ஓநாய் பிடித்துக் கொள்கின்றது. அது போன்றே ஷைத்தானும் ஆவான்.
ஆகவே, தனித்து செயல்படுவதை தவிர்ந்து கொள்ளுங்கள்; கூட்டாக இருப்பது, பொதுமக்களுடன் சேர்ந்து இருப்பது,
இறையில்லத்தில் இருப்பது ஆகியவற்றை அவசியமாக்கிக் கொள்ளுங்கள்”
என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
(நூல்:அஹ்மத்)
وفي الترمذي عن النبي صلى الله عليه وسلم أنه قال :
إذا رأيتم الرجل يعتاد المسجد فاشهدوا له بالإيمان ;
لأن الله يقول : { إنما يعمر مساجد الله } الآية. قلت : رواه الترمذي
كما قال شيخ الإسلام من حديث أبي سعيد الخدري رضي
الله عنه وقال : حديث حسن غريب ، ورواه ابن ماجه وابن خزيمة وابن حبان في
صحيحيهما والحاكم من طريق دراج
أبي السمح عن أبي الهيثم عن أبي سعيد . وقال الحاكم صحيح الإسناد .
அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“இறையில்லத்தோடு அதிக தொடர்பில் இருப்பவரைக் கண்டால் அவர், இறைநம்பிக்கை உள்ளவர் என்று நீங்கள் சாட்சியம் சொல்லுங்கள்” என்று கூறிய மாநபி {ஸல்} அவர்கள்
“அல்லாஹ்வின் மீதும், மறுமை நாளின் மீதும் நம்பிக்கை
கொண்டவர்களே! இறையில்லங்களை நிர்வகிக்கத் தகுதியுடையோர்”
என அல்லாஹ் கூறியுள்ளான், என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்:
திர்மிதீ )
عن ابن عباس أن امرأة كانت تلقط القذى من المسجد
فتوفيت ، فلم يؤذن النبي - صلى الله عليه وسلم - بدفنها ، فقال النبي - صلى الله
عليه وسلم - : " إذا مات لكم ميت فآذنوني " وصلى عليها وقال :
" إني رأيتها
في الجنة [ لما كانت ] تلقط القذى من المسجد " .
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“ஒரு பெண்மணி மாநபி {ஸல்} அவர்களின் பள்ளிவாசலில் குப்பை கூளங்களை அகற்றி வந்தார். ஒரு நாள் அப்பெண்மணி இறந்து விட்டார். அவரை அடக்கம் செய்த
விவரத்தை நபித்தோழர்கள் அண்ணலாருக்குத் தெரிவிக்கவில்லை.
அண்ணலாருக்குத் தெரிய
வந்த போது “உங்களில் ஒருவர் இறந்து விட்டால் எனக்குத் தெரியப்படுத்துங்கள்”
என்று கூறிய அண்ணலார், பிறகு அப்பெண்மணிக்காக ஜனாஸா
தொழுகை தொழுதார்கள்.
பின்னர், தோழர்களை நோக்கி “இப்பெண்மணி பள்ளியில் குப்பைக்
கூளங்களைச் சுத்தம் செய்து வந்த காரணத்திற்காக சுவனத்தில் இருந்ததை நான் பார்த்தேன்”
என்று நபி {ஸல்} அவர்கள்
கூறினார்கள். ( நூல்: தப்ரானீ )
إن للمساجد
أوتادا الملائكة جلساؤهم ، إن غابوا يفتقدوهم ، وإن مرضوا عادوهم ، وإن كانوا في
حاجة أعانوهم } .
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“இறையில்லத்திற்கென முளைக்கம்புகள் இருக்கின்றன. எவர்கள் இறையில்லத்தில் ஒன்று கூடுவதை வழக்கமாக்கிக் கொள்கின்றார்களோ,
அவர்களுடன் வானவர்கள் அமர்கின்றனர்.
பள்ளியில் அவர்களை
காணவில்லை என்றால், வானவர்கள் தேடுகின்றனர். மேலும், அவர்கள் நோயுற்றால் நலம் விசாரிக்கச் செல்கின்றனர்.
ஏதேனும் தேவை கருதி அவர்கள் வெளியே சென்றால் அவர்களுக்கு வானவர்கள் உதவுகின்றனர்”
என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்:
அஹ்மத் )
حدثنا محمد بن
العلاء حدثنا حسين بن
علي عن زائدة عن هشام بن
عروة عن أبيه عن عائشة قالت أمر رسول الله صلى الله عليه وسلم ببناء المساجد في الدور وأن
تنظف وتطيب
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இறைநம்பிக்கையாளர்கள் வாழும் பகுதிகளில் இறையில்லங்களை அமைத்திட உத்தரவிட்டார்கள்.
மேலும், அவைகளை சுத்தமாகவும் நறுமணம் கமழும் இடமாகவும்
வைத்திருக்க வேண்டும் என்றும் ஆணையிட்டார்கள்”. ( நூல்:அபூதாவூத்)
ஆக ஓர் இறைநம்பிக்கையாளனின்
வாழ்வில் நீங்காத அருட்கொடையாக, ஈருலக வாழ்க்கையின் உயர்வுக்கும் ஆதாரமாக இருக்கிற
ஓர் உயர்ந்த அங்கம் தான் இறையில்லம் எனும் பள்ளிவாசல் ஆகும்.
இன்றைய மஸ்ஜித்களும்... முஸ்லிம்களின் நிலையும்...
வறுமை.....இது
வெறும் வார்த்தையல்ல இதுதான் இன்றைய உலகில் வாழும் 70% மக்களின் வாழ்க்கை.
உலக அளவில் வெறும்
5% வருமானத்தைக் கொண்டுதான் உலகில் வாழும் 40% மக்கள் தங்கள் வாழ்க்கையை கழித்துக்
கொண்டிருகின்றனர்.
ஐ.நா வின் துணை நிறுவனமான
யுனிசெஃப்-ன் கணக்கின்படி ஒவ்வொரு நாளும் 22,000
குழந்தைகள் வறுமையால் இறக்கின்றன.
41 ஏழை நாடுகளின் மொத்த
வருமானமே 7 பணக்கார நாடுகளின் வளத்தை விட குறைவானதாகும்.
இந்தியாவில்
வாழும் முஸ்லிம்களில் 100-க்கு 60 நபர்கள் ஏழைகள் என்று சச்சார் கமிஷன் அறிக்கை
சொல்கிறது.
தமிழகத்தைப்
பொறுத்த வரை இன்றளவும் அநேக முஸ்லிம்கள் ஆதரவற்றவர்களாய், வறியவர்களாய்,
ஏழைகளாய், கடனாளிகளாய், நோயாளிகளாய் இந்த சமுதாயத்தில் நடமாடுக் கொண்டுதானிருக்கிறார்கள்.
இன்னொரு புறம், மற்றெந்த சமூகத்திலும்
இல்லாத
அளவிற்கு 54 சிறிய பெரிய
ஆன்மீக
மற்றும்
அரசியல்
அமைப்புகளை கொண்டு, சமூக சேவைகளில் தன்னை
ஈடுபடுத்திக் கொண்டதாக முழக்கமிடும் - கோஷமிடும் நிலைகளும் முஸ்லீம் சமூகத்தில் காணப்படுகிறது.
உலக அளவில் பெயர்
வாங்கிய இயக்கமும்,
தேசிய அளவில் பெயர் பெற்ற இயக்கமும், மாநில அளவில் சிறந்து விளங்குகின்ற இயக்கங்களையும் கொண்டிருக்கிற, சமூக சேவையில்,
சமூக தொண்டாற்றுவதில் முண்ணனி வகிக்கின்ற ஒரு சமூகத்தின்
நிலை இது என்றால்?...
இந்த சமூகத்தில்
எங்கோ பிழைகளும்,
தவறுகளும் நடந்து கொண்டிருக்கிறது என்பது தான் உள்ளார்ந்த பொருள் - அது தான் உண்மை.
இந்த சமூகம்
செய்து கொண்டிருக்கிற சேவைகளில் ஆற்றுகிற தொண்டில் சில பல மாற்றங்களையும், முன்னோர்களிடம் காணப்பட்ட சில பண்புகளையும், கையாள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது.
சேவை அது எங்கிருந்து துவங்கப்பட வேண்டும்?...
முஸ்லிம்களின் துயரை
துடைக்கிற பணி எங்கிருந்து
துவங்கப்பட வேண்டும்? அது
எப்படி அமைந்திருக்க வேண்டும்?
என்பதெற்கெல்லாம் அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்கள்
அழகிய முறையில் நமக்கு
வழிகாட்டிச் சென்றுள்ளார்கள்.
ஆம்! அந்தப்
பணி பள்ளிவாசல்களில் இருந்து
துவங்கப்பட வேண்டும்.
இறையில்லம் என்பது
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் காலத்தில் இறையன்பை, இறையச்சத்தை, இறை பக்தியை
வெளிப்படுத்துகிற இடமாக மாத்திரம் இல்லாமல், பல நேரங்களில் அது வறியோர்களின்
வறுமையை நீக்கும் இடமாகவும், வக்கற்றோர், திக்கற்றோர்களின் துயர்களை துடைக்கும்
இடமாகவும், கடனாளிகள், அநாதைகளின் இன்னல்களை அகற்றும் இடமாகவும், இராணுவ கேந்திரமாகவும்,
மருத்துவமனையாகவும், பல்கலைக்கழகமாகவும் பரிணமித்ததை வரலாற்றின் நெடுகிலும்
காணமுடிகிறது.
வாருங்கள் கொஞ்சம்
வாசித்து விட்டு வருவோம்..
முஸ்லிம்களின் துயரை
துடைக்கிற பணி எங்கிருந்து
துவங்கப்பட வேண்டும்? அது
எப்படி அமைந்திருக்க வேண்டும்?
என்பதெற்கெல்லாம் அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்கள்
அழகிய முறையில் நமக்கு
வழிகாட்டிச் சென்றுள்ளார்கள்.
ஆம்! அந்தப்
பணி பள்ளிவாசல்களில் இருந்து
துவங்கப்பட வேண்டும்.
அநாதைகளின் பிரச்சனைகளை களையும் இடமாக….
وروى
عقيل عن ابن شهاب أن يتيماً خاصم أبا لبابة في نخلة فقضى بها رسول الله صلى الله
عليه وسلم لأبي لبابة فبكى الغلام. فقال رسول الله صلى الله عليه وسلم لأبي لبابة
أعطه نخلتك فقال لا فقال: " أعطه إياها ولك بها عذق في الجنة " . فقال
لا. فسمع بذلك أبو الدحداح فقال لأبي لبابة: أتبيع عذقك ذلك بحديقتي هذه قال نعم فجاء
أبو الدحداحة رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله، النخلة التي سألت
لليتيم إن أعطيته إياها ألي بها عذق في الجنة؟ قال: نعم
மஸ்ஜிதுன் நபவீயில்
வீற்றிருந்த அண்ணலாரின் முன்னால் வழக்கொன்று கொண்டு வரப்பட்டது. இது தான் அந்த வழக்கு.
ஆதரவற்ற அநாதை வாலிபர் ஒருவருக்கும்,
நபித்தோழர் அபூலுபாபா (ரலி)
அவர்களுக்கும் ஒரு பேரீத்தமரம்
சம்பந்தமாக நீண்ட நாட்களாக
தகராறு இருந்து வந்தது.
இறுதியாக, இப்போது
நபி
{ஸல்}
அவர்களிடம் இந்த வழக்கு
கொண்டு வரப்பட்டது. அண்ணலார்
இருவரையும் அழைத்து மரம்
சம்பந்தமாக விசாரித்தார்கள்.
ஆதாரங்களின் அடிப்படையில்
அந்த மரம் அபூலுபாபா
(ரலி)
அவர்களுக்குச் சொந்தமானது என்பதை
அறிந்து கொண்ட நபி
{ஸல்}
அவர்கள் அபூலுபாபா (ரலி)
அவர்களுக்கு உரியதென தீர்ப்பளித்தார்கள்.
இதைக் கேட்ட
அந்த வாலிபரின் முகம்
முற்றிலும் மாறிப்போய் விட்டது.
அழுதார், இது நாள்
வரை தமது சொந்தமெனக்
கருதி வந்த மரம்
தமக்குரியதாக இல்லை என்றதும்
நிலைகுலைந்து போனார்.
அதைக் கண்ணுற்ற
அண்ணலார், அந்த அநாதை
வாலிபரின் வாழ்வில் இழந்த
அந்த சந்தோஷத்தை மீண்டும்
கொடுக்க விரும்பினார்கள்.
அபூலுபாபா (ரலி)
அவர்களை அருகே அழைத்த
நபி
{ஸல்}
அவர்கள் ”அந்த மரத்தை
ஆதரவற்ற அந்த வாலிபருக்கு
அன்பளிப்பாக கொடுத்து விடுங்களேன்”
என்று தமது விருப்பத்தை
விண்ணப்பித்தார்கள்.
ஆனால், அபூலுபாபா
(ரலி)
அவர்களோ தம்மால் அப்படி
தர இயலாது என்று
கூறி விட்டார்கள்.
நபி {ஸல்}
அவர்கள் விடவில்லை. ”அபூலுபாபா
அவர்களே! நீங்கள் அந்த
மரத்தை அவருக்கு அன்பளிப்பாக
வழங்கிவிட்டீர்களென்றால், அதற்குப்
பகரமாக சுவனத்தில் உங்களுக்கு
மதுரமான கனிகள் தரும்
ஓர் உயர்ந்த சோலையை
பெற்றுத்தர நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்” என்று
கூறி மீண்டும் கேட்டார்கள்.
இரண்டாவது முறையாகவும்
தம்மால் தர இயலாது
என அபூலுபாபா (ரலி)
அவர்கள் கூறிவிட்டார்கள்.
இந்தக் காட்சிகளை
தூரத்தில் இருந்து பார்த்துக்
கொண்டிருந்த இன்னொரு நபித்தோழரான
அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்கள்
நேராக அபூலுபாபா (ரலி)
அவர்களின் அருகே சென்று
”மதீனாவின் இன்ன பகுதியிலே
இருக்கிற 100 பேரீத்தமரங்கள் கொண்ட
ஒரு சோலையை நான்
தருகிறேன் எனக்கு அந்த
ஒரு பேரீத்த மரத்தை
தருவீர்களா?” என்று கேட்டார்கள்.
உடனடியாக, அதற்குச்
சம்மதம் தெரிவித்தார் அபூலுபாபா
(ரலி)
அவர்கள். அடுத்து அதற்கான
ஒப்பந்தமும் செய்து கொண்டார்கள்.
இப்போது, அபுத்தஹ்தாஹ்
(ரலி)
அவர்கள், மாநபி {ஸல்}
அவர்களின் அருகே வந்து
“அல்லாஹ்வின் தூதரே! நான்
அபூலுபாபா (ரலி) அவர்களிடம்
இருந்து அந்த மரத்தை
என்னுடைய நூறு பேரீத்தமரங்கள் நிறைந்த ஒரு
சோலையை விலையாகக் கொடுத்து
வாங்கி விட்டேன்.
அந்த ஆதரவற்ற
வாலிபருக்கு அந்த மரத்தைக்
கொடுத்து உங்களின் விருப்பத்தையும் நான் நிறைவேற்றுகின்றேன்!
ஆனால், நீங்கள்
அவருக்கு அளித்த உத்தரவாதத்தை
எனக்கும் அளிப்பீர்களா?” என்று
ஏக்கத்தோடு கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அகமும்,
முகமும் மலர்ந்தவர்களாக ஆம்!
உமக்கும் நான் அந்த
உத்தரவாதத்தை தருகின்றேன்” என்று
கூறினார்கள்.
பின்னர், அந்த
வாலிபரை அழைத்து வாஞ்சையோடு
அணைத்து அந்த மரம்
இனி உமக்கு சொந்தமானது
என்று கூறினார்கள்.
இதைக்கேட்ட அந்த
வாலிபர் மிகவும் மகிழ்ச்சியோடும்,
சந்தோஷத்தோடும் அங்கிருந்து விடைபெற்றுச்
சென்றார்.
ثم
قتل أبو الدحداحة شهيداً يوم أحد فقال رسول الله صلى الله عليه وسلم: " رب
عذق مذلل لأبي الدحداحة في الجنة " .
வாய் மொழியாகச்
சொன்ன அந்த உத்தரவாதத்தை
அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்கள் உஹத் யுத்தகளத்திலே
வீரமரணம் அடைந்து ஷஹீதாகக்
காட்சி தந்த அபுத்தஹ்தாஹ்
(ரலி)
அவர்களை ஆரத்தழுவி, தங்களது
புனித மடியில் கிடத்தி
விட்டு “கனிகள் தரும்
மதுரமான எத்தனையோ சோலைகள்
சுவனத்தில் அபுத்தஹ்தாஹ் (ரலி)
அவர்களின் வருகைக்காக காத்திருக்கின்றன”
என்று கூறி உறுதிபடுத்தினார்கள்.
( நூல்: الإستيعاب في معرفة
الأصحاب,பாகம்:3,
பக்கம்:102 )
வக்கற்றோர், திக்கற்றோர்களின் துயர்களை துடைக்கும்
இடமாக…..
عن جرير بن عبد الله البجلي قَالَ: كُنَّا عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ فِي صَدْرِ النَّهَارِ، فَجَاءَهُ قَوْمٌ حُفَاةٌ عُرَاةٌ
مُجْتَابِي النِّمَارِ أَوِ الْعَبَاءِ، مُتَقَلِّدِي السُّيُوفِ، عَامَّتُهُمْ
مِنْ مُضَرَ، بَلْ كُلُّهُمْ مِنْ مُضَرَ فَتَمَعَّرَ وَجْهُ رَسُولِ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَا رَأَى بِهِمْ مِنَ الْفَاقَةِ،
فَدَخَلَ ثُمَّ خَرَجَ، فَأَمَرَ بِلَالًا فَأَذَّنَ وَأَقَامَ، فَصَلَّى ثُمَّ
خَطَبَ فَقَالَ: {يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ
مِنْ نَفْسٍ وَاحِدَةٍ} النساء: 1 إِلَى آخِرِ الْآيَةِ،
{إِنَّ
اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا} النساء: 1 وَالْآيَةَ الَّتِي فِي
الْحَشْرِ: {اتَّقُوا اللهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا
اللهَ} الحشر: 18 «تَصَدَّقَ رَجُلٌ مِنْ دِينَارِهِ، مِنْ دِرْهَمِهِ، مِنْ ثَوْبِهِ،
مِنْ صَاعِ بُرِّهِ، مِنْ صَاعِ تَمْرِهِ - حَتَّى قَالَ - وَلَوْ بِشِقِّ
تَمْرَةٍ» قَالَ: فَجَاءَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ بِصُرَّةٍ كَادَتْ كَفُّهُ
تَعْجِزُ عَنْهَا، بَلْ قَدْ عَجَزَتْ، قَالَ: ثُمَّ تَتَابَعَ النَّاسُ، حَتَّى
رَأَيْتُ كَوْمَيْنِ مِنْ طَعَامٍ وَثِيَابٍ، حَتَّى رَأَيْتُ وَجْهَ رَسُولِ
اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَهَلَّلُ، كَأَنَّهُ مُذْهَبَةٌ،
فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ
سُنَّةً حَسَنَةً، فَلَهُ أَجْرُهَا، وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا بَعْدَهُ، مِنْ
غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ، وَمَنْ سَنَّ فِي الْإِسْلَامِ
سُنَّةً سَيِّئَةً، كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ
بَعْدِهِ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَيْءٌ»
ஜரீர் இப்னு
அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள்: “”(ஒரு நாள்) நாங்கள்
முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு சபையில் அமர்ந்திருந்தோம்.
அப்போது
செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த கம்பளி ஆடை அல்லது நீளங்கி
அணிந்த ஒரு கூட்டத்தார் தம் ( கழுத்துகளில் ) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.
அவர்களில்
பெரும்பாலானோர் முளர் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அல்லது, அவர்களில் அனைவருமே முளர் குலத்தைச் சேர்ந்தவர்கள் தாம்.
அவர்களது வறிய
நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறம் மாறிவிட்டது.
உடனே அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் ( ஒருவித பதட்டத்தோடு ) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே
வந்து பிலால் (ரலி) அவர்களிடம் பாங்கு சொல்லுமாறு உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள்
தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரையொன்றை நிகழ்த்தினார்கள்.
அப்போது, “மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து
கொள்ளுங்கள்,
அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்.
பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப் படுத்தி உலகில்) பரவச் செய்தான், ஆகவே,
அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக்
கொள்கிறீர்கள்.
மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும்
(ஆதரியுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்”
என்கிற (4 –ஆம்
அத்தியாயத்தின் 1 –ஆவது ) இறைவசனத்தை
முழுமையாக ஓதிக் காட்டினார்கள்.
பின்னர், ‘அல்
ஹஷ்ர்’
அத்தியாயத்திலுள்ள ”இறைநம்பிக்கை கொண்டோர்களே! நீங்கள்
அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக் கென்று எதனை அனுப்பியுள்ளது
என்பதை கவனத்திற் கொள்ளட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்’ எனும் ( 59
–ஆம் அத்தியாயத்தின் 18 –ஆவது ) வசனத்தையும் ஓதிக் காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு
கூறி)னார்கள்.
அப்போது ”( உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக் காசு, துணி, ஒரு ‘ஸாஉ’ கோதுமை, ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம்
செய்யட்டும்”
என்றும் ”பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம்
செய்யட்டும்” என்றும் வலியுறுத்திக் கூறினார்கள்.
உடனே (
நபித்தோழர்கள் ) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக்
காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு ‘ஸாஉ’ கோதுமையிலிருந்தும் ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள்.
அப்போது
அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை ( நிறைய பொருட்களைக் ) கொண்டுவந்தார். அதைத் தூக்க
முடியாமல் அவரது கை திணறியது, பின்னர் தொடர்ந்து மக்கள் ( தங்களின் தர்மப்
பொருட்களுடன் ) வந்துகொண்டிருந்தனர்.
இறுதியில் உணவுப்
பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்து விட்டதை நான் கண்டேன். அப்போது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று இலங்கிக் கொண்டிருப்பதை
நான் கண்டேன்.
அப்போது, அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் “யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ
அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின்
நன்மையும் உண்டு,
அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்து விடாது.
அவ்வாறே, யார்
இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப்
பின் அதன்படி செயல் படுபவர்களின் பாவமும் அ(தன்படி செயல்பட்ட) வர்களின்
பாவத்திலிருந்து எதுவும் குறையாமல் உண்டு” என்று கூறினார்கள். ( நூல்:
முஸ்லிம் )
ஏழை எளியோரின் வறுமையை அகற்றும் இடமாக....
لقيتُ بلالًا مؤذِّنَ رسولِ اللَّهِ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ
بحلبَ فقلتُ: يا بلالُ حدِّثني كيفَ كانت نفقةُ رسولِ اللَّهِ صلَّى اللَّهُ
علَيهِ وسلَّمَ؟
قالَ: ما كانَ لَهُ شيءٌ، كنتُ أَنا الَّذي ألي
ذلِكَ منهُ منذُ بعثَهُ اللَّهُ إلى أن توُفِّيَ، وَكانَ إذا أتاهُ الإنسانُ مُسلمًا فرآهُ
عاريًا، يأمرُني فأنطلقُ فأستقرِضُ فأشتري لَهُ البردةَ فأَكْسوهُ وأطعمُهُ حتَّى
اعتَرضَني رجلٌ منَ المشرِكينَ،
فقالَ: يا بلالُ، إنَّ عندي سَعةً، فلا تستقرِضْ
من أحدٍ إلَّا منِّي، ففعلتُ فلمَّا أن كانَ ذاتَ يومٍ توضَّأتُ، ثمَّ قمتُ
لأؤذِّنَ بالصَّلاةِ، فإذا المشرِكُ قد أقبَلَ في عصابةٍ منَ التُّجَّارِ، فلمَّا
أن رآني، قالَ: يا حبشيُّ، قلتُ: يا لبَّاهُ فتجَهَّمَني، وقالَ لي قولًا غليظًا،
وقالَ لي: أتدري كم بينَكَ وبينَ الشَّهرِ؟ قالَ: قُلتُ قريبٌ، قالَ: إنَّما
بينَكَ وبينَهُ أربعٌ، فآخذُكَ بالَّذي عليكَ، فأردُّكَ تَرعى الغنمَ، كما كنتَ قبلَ ذلِكَ فأخذَ
في نَفسي ما يأخذُ في أنفسِ النَّاسِ، حتَّى إذا صلَّيتُ العتَمةَ،
رجعَ رسولُ اللَّهِ صلّى اللَّه عليه وسلَّمَ
إلى أَهْلِهِ، فاستأذنتُ علَيهِ فأذنَ لي، فقلتُ: يا رسولَ اللَّهِ، بأبي أنتَ
وأمِّي، إنَّ المُشْرِكَ الَّذي كنتُ أتديَّنُ منهُ، قالَ لي كذا وَكَذا، وليسَ
عندَكَ ما تَقضي عنِّي، ولا عندي، وَهوَ فاضحي، فأذن لي أن آبَقَ إلى بعضِ هؤلاءِ
الأحياءِ الَّذينَ قد أسلَموا، حتَّى يرزُقَ اللَّهُ رسولَهُ صلَّى اللَّهُ علَيهِ
وسلَّمَ ما يَقضي عنِّي، فخرجتُ حتَّى إذا أتيتُ منزلي، فجعَلتُ سيفي وجرابي ونَعلي ومجنِّي عندَ رأسي، حتَّى إذا انشقَّ عمودُ الصُّبحِ الأوَّلِ
أردتُ أن أنطلِقَ،
فإذا إنسانٌ يسعَى يدعو: يا بلالُ أجب رسولَ
اللَّهِ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ، فانطلقتُ حتَّى أتيتُهُ، فإذا أربعُ رَكائبَ مُناخاتٌ عليهنَّ
أحمالُهُنَّ، فاستأذنتُ، فقالَ لي رسولُ اللَّهِ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ:
أبشِر فقد جاءَكَ اللَّهُ بقضائِكَ ثمَّ قالَ: ألم ترَ الرَّكائبَ المُناخاتِ
الأربَع فقلتُ: بلى، فقالَ: إنَّ لَكَ رقابَهُنَّ وما عليهنَّ، فإنَّ عليهنَّ
كسوةً وطعامًا أَهْداهنَّ إليَّ عظيمُ فدَكَ فاقبِضهنَّ، واقضِ دَينَكَ ففعلتُ،
فذَكَرَ الحديثَ، ثمَّ انطلقتُ إلى المسجدِ،
فإذا رسولُ اللَّهِ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ قاعدٌ في المسجدِ فسلَّمتُ
علَيهِ، فقالَ: ما فعلَ ما قِبلَكَ؟ قلتُ: قد قضى اللَّهُ كلَّ شيءٍ كانَ على
رسولِ اللَّهِ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ، فلم يبقَ شيءٌ،
قالَ: أفضَلَ شيءٌ؟ قلتُ: نعَم، قالَ: انظُر أن
تريحَني منهُ، فإنِّي لستُ بداخلٍ على أحدٍ من أَهْلي حتَّى تريحَني منه فلمَّا
صلَّى رسولُ اللَّهِ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ العتمةَ دعاني، فقالَ: ما فعلَ
الَّذي قبلَكَ؟ قالَ: قلتُ: هوَ معي لم يأتِنا أحدٌ،
فباتَ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ علَيهِ
وسلَّمَ، في المسجدِ، وقصَّ الحديثَ حتَّى إذا صلَّى العتَمةَ يعني منَ الغدِ دعاني، قالَ: ما فعلَ الَّذي قبلَكَ؟
قالَ: قلتُ: قد أراحَكَ اللَّهُ منهُ يا رسولَ اللَّهِ، فَكَبَّرَ وحمدَ اللَّهَ
شفَقًا من أن يُدْرِكَهُ الموتُ، وعندَهُ ذلِكَ، ثمَّ اتَّبعتُهُ، حتَّى إذا جاءَ أزواجَهُ فسلَّمَ على امرأةٍ،
امرأةٍ حتَّى أتى مَبيتَهُ فَهَذا الَّذي سألتَني عنهُ
الراوي: عبدالله الهوزني المحدث: الألباني -
المصدر: صحيح أبي داود - الصفحة أو
الرقم: 3055, إسناده صحيح
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்
ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த பின்னர், முஸ்லிம் ஏழைகள்
விஷயத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? எவ்வாறு செலவுகள்
செய்யப்பட்டன?” என்று பிலால் (ரலி)
அவர்களிடம் கேட்கப்பட்ட போது,
பிலால் (ரலி)
அவர்கள் இப்படிக் கூறினார்கள்:
“எங்களிடையே ஏழைகளும், வழிப்போக்கர்களும் உதவி தேடி
வருவர். அதுபோது எங்களிடம்
எது இருக்குமோ அதைக்
கொடுப்போம். எதுவும் இல்லாத
போது நபி {ஸல்}
அவர்கள் என்னிடத்தில் அந்த
ஏழைகளுக்கு ஏதாவது உதவி
செய்திடுமாறு கூறுவார்கள்.
நானும் யாரிடமாவது
கடன் வாங்கி அவர்களுக்கு
உதவிகள் செய்வேன். பின்னர்
நபி
{ஸல்}
அவர்களுக்கு தர்மப்பொருளோ, அல்லது
அன்பளிப்புகளோ வருமானால் அதைக்
கொண்டு கடனை அடைத்து
விடுவேன். இது தான்
வழக்கமாக இருந்து வந்தது.
இந்நிலையில், மக்காவின்
இணைவைப்பாளரான பெரிய செல்வந்தர்
ஒருவர் என்னை ஒருபோது
சந்தித்து உங்களின் விவகாரம்
குறித்து நான் கேள்விபட்டேன்.
இனிமேல் நீங்கள்
வேறுயாரிடமும் சென்று கடன்
வாங்கவேண்டாம். என்னிடமே பெற்றுக்
கொள்ளுங்கள். சொல்கிற தவணையில்
சரியாகக் கொடுத்தால் போதும்
என்றான்.
அவ்வாறே நானும்
ஒரு சந்தர்ப்பத்தில் தவணையின்
அடிப்படையில் கடன் பெற்றிருந்தேன்.
ஒரு நாள்
பாங்கு சொல்வதற்காக உளூ
செய்து கொண்டிருந்தேன். அந்த
நேரத்தில் எனக்கு கடன்
கொடுத்த அந்த முஷ்ரிக்
சில நபர்களை அழைத்துக்
கொண்டு என்னை நோக்கி
”ஓ கறுப்பு அடிமையே!”
என்று சப்தமிட்டான். அந்த
சப்தத்தைக் கேட்டு நான்
நடுங்கிப்போனேன்.
அந்த முஷ்ரிக்கை
நோக்கி “ஓ கொழுத்தவனே!
என்னைப் பயமுறுத்தி விட்டாயே!
என்று கேட்டேன்.
அதற்கு, அந்த
முஷ்ரிக் ஓ! கறுப்பு
அடிமையே! நான் உம்மீது
இரக்கப்பட்டு கடனுதவி வழங்கினேன்
என்று எண்ணிக் கொண்டாயா?
ஒரு போதும் இல்லை.
உமக்கு நான் கடன்
தர வேண்டும். நீ
அதைத் தர முடியாமல்
தவிக்க வேண்டும். உன்னை
நான் முன்பு போல
அடிமைப் படுத்தி, ஒட்டகம்
மேய்க்க விடவேண்டும்” என்று
நினைத்தல்லவா? உமக்கு கடன்
தந்தேன்” என்றான்.
அதற்கு நான்
”தவணை முடிய இன்னும்
நான்கு நாட்கள் இருக்கத்தானே
செய்கிறது?” அதற்கு முன்
ஏன் இப்படி வந்து
மிரட்டுகின்றாய்” என்று கூறினேன்.
அதனைக் கேட்ட அவன்
நான்கு நாட்கள் கழித்து
வருவதாக சொல்லி விட்டுச்
சென்றான்.
எனக்கு என்
முந்தைய அடிமை வாழ்க்கையும்,
அவனுடைய மிரட்டலும் கண்
முன் வரவே பயந்து
போய் நபிகளாரின் சபைக்கு
ஓடோடி வந்து நடந்தவற்றை
நபி
{ஸல்}
அவர்களிடம் விளக்கிக் கூறி
விட்டு, அல்லாஹ்வின் தூதரே!
நான் நான்கு நாட்கள்
முஸ்லிம்கள் நிறைந்து வாழ்கிற
எங்காவது தலைமறைவாக இருக்க
விரும்புகின்றேன்.
உங்களிடம் தர்மப்பொருளோ,
அல்லது அன்பளிப்புகளோ வந்து
விட்டதென்றால் நான் வந்து
அதைக் கொண்டு போய்
அவனிடம் கொடுத்து விடுகின்றேன்”
என்றேன்.
அதுகேட்ட அண்ணலார்,
மிகவும் மௌனமாக இருந்தார்கள்.
அங்கிருந்து உடனடியாக வீட்டுக்கு
வந்த நான் வெளியூர்
செல்வதற்கு தயாரானேன்.
அப்போது, என்னிடம்
ஒருவர் வந்து பிலால்
அவர்களே உங்களை நபி
{ஸல்}
அவர்கள் வரச் சொன்னார்கள்.
உடனடியாக செல்லுங்கள் என்றார்.
நானும் உடனடியாக
நபிகளாரைக் காண மஸ்ஜிதுன்
நபவீக்கு வந்தேன். பள்ளிக்கு
வெளியே நான்கு ஒட்டகங்களும்
அதன் மீது சாதனங்கள்
அடங்கிய மூட்டைகளும் இருக்கக்
கண்டேன்.
அப்போது நபி
{ஸல்}
அவர்கள் முகம் மலர்ந்தவர்களாக இருக்கக் கண்டேன்.
என்னைப் பார்த்ததும்
நபி
{ஸல்}
அவர்கள் “பிலாலே சோபனத்தைப்
பெற்றுக் கொள்ளுங்கள்! பள்ளிக்கு
வெளியே நான்கு ஒட்டகைகளைப்
பார்த்தீர்களா?” இப்போதே அதை
ஓட்டிச் சென்று யார்
யாருக்கு என்ன கொடுக்க
வேண்டுமோ அதை கொடுத்து
விட்டு எனக்கு மன
நிம்மதியை ஏற்படுத்துங்கள்” என்றார்கள்.
நானும் மகிழ்ச்சியோடு
வெளியே வந்து “யார்
யாருக்கு அல்லாஹ்வின் தூதர்
{ஸல்}
அவர்களின் சார்பாக கடன்
பெறப்பட்டுள்ளதோ அவர்கள்
வந்து பெற்றுக் கொள்ளுங்கள்”
என்று பொது அறிவிப்புச்
செய்தேன்.
பின்னர் அந்த
முஷ்ரிக்கிடம் சென்று அவனுக்கு
தரவேண்டிய கடனையும் கொடுத்து
விட்டு பள்ளிக்கு வந்தேன்.
என்னைப் பார்த்த
நபிகளார் என்ன பிலாலே
எல்லா சாதனங்களும் தீர்ந்து
விட்டதா? நான் மன
நிம்மதி பெற்று விடுவேனா?”
என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதரே!
இன்னும் கொஞ்சம் பொருட்கள்
இருக்கின்றன” என்றேன். அப்படியானால்
சீக்கிரம் கொண்டு கொடுத்து
விட்டு வாருங்கள்” என்றார்கள்
நபி
{ஸல்}
அவர்கள்.
இப்படியாக இரண்டு
நாட்கள் நபி {ஸல்}
அவர்கள் வீட்டிற்கே செல்லவில்லை.
பள்ளியிலேயே இருந்து விட்டார்கள்.
நானும் கொஞ்சம் கொஞ்சமாக
தேவையுடையோர்களைத் தேடிப்
பிடித்துச் சென்று உதவிகளைச்
செய்தேன்.
மூன்றாவது நாள்
இரவு நேரமும் வந்தது.
அண்ணலார் முன்பு போலவே
என்னிடம் கேட்டார்கள். வெளியே
செல்லுங்கள் பிலாலே! வெளியில்
தேவையுடையோர் யாராவது தென்பட்டால்
அவர்களிடம் கொடுத்து விட்டு
என் சுமையைக் கொஞ்சம்
குறையுங்கள்” என்றார்கள்.
இறுதியாக, ஒரு
பிரயாணக்குழுவொன்று வந்தது.
அவர்களில் தேவையுடையோருக்கு உண்வும்,
ஆடையும் கொடுத்த பின்
என்னிடம் இருந்த எல்லா
பொருட்களும் தீர்ந்து போயின.
அல்லாஹ்வின் தூதர்
{ஸல்}
அவர்களிடம் சென்று நான்
சொன்னேன். அதைக் கேட்டதும்
அண்ணல் {ஸல்} அவர்கள்
தக்பீர் கூறியவர்களாக, அல்லாஹ்வைப்
புகழ்ந்தவர்களாக பள்ளியை
விட்டு எழுந்து சென்றார்கள்.
தங்களின் மனைவியர்களின்
வீடுகளின் முன்பு நின்று
ஸலாம் கூறி இன்று
யார் வீட்டில் தங்கும்
முறை என்று கேட்டு
விட்டு, அந்த வீட்டிற்குள்
நுழைந்தார்கள்.
ஏனெனில், அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்கள்
மூன்று இரவு மற்றும்
மூன்று பகலாக எந்த
மனைவியரின் வீட்டிற்கும் செல்லவில்லை.
பள்ளியிலேயே தங்கியிருந்தார்கள்.
( நூல்; அபூதாவூத் )
ஆகவே, மஸ்ஜித்களின் மாண்புகளை உணர்வதோடு மாத்திரம்
நின்று விடாமல், வெறுமெனே இபாதத்களோடு நிறுத்திக் கொள்ளாமல் மஸ்ஜித்களை சேவை செய்யும்
நிறுவனங்களாக, முஸ்லிம்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் உன்னத பீடங்களாக மாற்றுவோம்!
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களது காலத்து, நேர்வழி
நின்ற கலீஃபாக்களின் காலத்து பள்ளிவாசல்கள் போல் அமைப்போம்!
வல்ல ரஹ்மான் துணை நிற்பானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல்
ஆலமீன்!!
வஸ்ஸலாம்!!!
இஸ்லாமிய பள்ளிவாசல்கள் வெறுமெனே தொழுகை நடத்துவது மட்டும் இபாதத் அல்ல என்னென்ன நன்மையான காரியங்கள் இருக்கிறதோ அவையனைத்தும் நடைபெறும் இடமாக பள்ளிவாசல் செயல்பட வேண்டும் என்பதை தங்களுக்கே உரித்தான பாணியில் பதிவு செய்துளளீர்கள் பாரகல்லாஹு பீ இல்மிக
ReplyDeleteArumai
ReplyDeleteஅருமை
ReplyDelete