இந்தியாவில்
முஸ்லிம்களின் நிலை!!!
இந்த தேசத்தின் உயர்வுக்கும், விடுதலைக்கும் உடலாலும், உணர்வுகளாலும் உயிராலும், மாபெரும் அர்ப்பணிப்பை அளித்த ஓர் ஒப்பற்ற சமூகமான முஸ்லிம் சமூகம் சுதந்திர இந்தியாவில் இன்று
பல்வேறு பிரச்சனைகளை சங்கிலித்தொடர் போல சந்தித்து வருகின்றது.
அதிலும் குறிப்பாக
1992 பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகு முஸ்லிம்களுக்கு எதிரான போக்கு ஃபாஸிச
சக்திகளால் தீவிரமடைந்துள்ளது.
முஸ்லிம்களின்
மீதான வெறுப்புணர்வும், காழ்ப்புணர்ச்சியும் ஃபாஸிச பயங்கர வாதிகளால் திட்டமிட்டு
வடிவமைக்கப்பட்டு சிறிய, சிறிய இடைவெளிக்குப் பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக
தொடுக்கப்பட்டு வருவதைப் பார்த்து வருகின்றோம்.
சில போது, ஆளும்
வர்க்கத்தின் துணை கொண்டு, சில போது ஊடகங்களின் துணை கொண்டு, சில போது நீதி
மற்றும் சட்டத்தின் துணை கொண்டு, சில போது வன்முறை மற்றும் கலவரங்களின் துணை
கொண்டு, சில போது விமர்சனங்களின் துணை கொண்டு இப்படியாக முஸ்லிம்களுக்கு எதிரான
தாக்குதல் தொடரப்பட்டு வருகிறது.
தற்போது, இரண்டு
பிரச்சனைகளை முஸ்லிம் சமூகம் சந்தித்து வருவதை ஊடகத்தின் வாயிலாக அறிந்து
வருகின்றோம்.
1. பாரத் மாதா கீ
ஜே! என்று நாட்டு மக்கள் அனைவரும் மதங்கள் கடந்து கோஷமிட வேண்டும்.
2. தலாக் –
முஸ்லிம்களின் விவாகரத்து முறை சட்டப்பூர்வமானதா? என்று ஆய்வு செய்ய உச்ச
நீதிமன்றம் குழு ஒன்றை நியமித்து உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் பெருமையை வளரும் தலைமுறையிடம் எடுத்துக் கூற பாரத் மாதா கி ஜே என அனைவரும் கூற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்
பகவத் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மஹாராட்டிர
மாநிலத்தில் மஜ்லிஸ் கட்சியைச் சேர்ந்த
சட்டமன்ற உறுப்பினர் வரிஸ் பதான் ஒவைசிஸ் என்பவர், “’பாரத் மாதகி ஜெய்
“ என தம்மால் கோஷமிட முடியாது எனத் தெரிவித்ததால், சட்டப்பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மேலும்,
ஜெய்ஹிந்த் என்று
மட்டுமே தம்மால் கோஷமிட முடியும்
எனக் கூறியுள்ள அவர், தனக்கு எதிராக என்ன நடவடிக்கை
மேற்கொண்டாலும் “ பாரத் மாதாகி ஜே “ என கோஷம் போட முடியாது எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கழுத்தில் கத்தியை வைத்துக்
கேட்டாலும், “ பாரத் மாதகி ஜே“ எனக் கூறமுடியாது என்று
ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கருத்தை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் அசாதுதீன் ஓவைசியைக் கண்டித்து உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் அகில
பாரதிய வித்தியார்த்தி பரிஷத்
அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இதனிடையில் செய்தியாளர்களிடையே பேசிய பாஜகவின் பொதுச் செயலாளர் கைலாஷ்
விஜய்வர்கியா கூறுகையில், பாரத் மாதாகி ஜே என்று உச்சரிக்க
விரும்பாதவர்கள் இந்தியாவில் வாழத் தகுதியற்றவர்கள்
என்று நான் நினைக்கிறேன்.
அவர்கள் வேறு ஏதாவது நாட்டுக்குச் சென்றுவிட வேண்டும் எனத் தெரிவித்தார்.
அவர்கள் வேறு ஏதாவது நாட்டுக்குச் சென்றுவிட வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும் ஓவைசியாவின் நாக்கை வெட்டுபவர்களுக்கு
ஒரு கோடி ரூபாய் வெகுமதி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் 30/03/2016 அன்று டெல்லியின் பேகம்பூர் பகுதியில் உள்ள
பூங்காவில் ’ஜெய்
மாதா
கி’ மற்றும் ’பாரத் மாதா கி ஜே’ என்று முழக்கமிட
மறுத்த
மதரஸா
மாணவர்கள் மூவரை
கும்பல் ஒன்று தாக்கி உள்ளது.
மர்ம கும்பல்
தாக்கியதில் ஒரு
மாணவருக்கு எலும்பு
முறிவு
ஏற்பட்டு உள்ளது என்றும் மற்றவர்களுக்கும்
காயம்
ஏற்பட்டு உள்ளது
என்றும்
தகவல்கள் வெளியாகி உள்ளது.
காயம் அடைந்த
மாணவர்கள் தில்காஷ், அஜ்மல் மற்றும் நயீம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
மாணவர்களை தாக்கிய
மர்ம
நபர்கள் அடையாளம் காணப்பட்டு. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து , அதே பகுதியைச் சேர்ந்த ஐந்து நபர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் பெரும்
சர்ச்சையை ஏற்படுத்தி கொண்டிருக்கும் நிலையில், இந்த கோஷத்தை ஏற்க மறுப்பவர்களின்
குடியுரிமையை ரத்து
செய்யவேண்டும் என
சிவசேனா வலியுறுத்தியுள்ளது.
ஏப்ரல் 4 –ஆம் தேதியன்று மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற பொதுக்கூட்டம்
ஒன்றில் பேசிய அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் “பாரத் மாதா
கீ ஜே என்று சொல்ல மறுப்பவர்கள் பிரிவினைவாதிகள்.
அவர்கள் நாட்டில் குழப்பத்தை
ஏற்படுத்தி தேச ஒற்றுமையை உடைக்க முயற்சிப்பவர்கள். அப்படிப்பட்டவர்களை
நாம் ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும்?” என்றார்.
அதே தேதியில் ”பாரத் மாதா கீ ஜே என்று கூறுவதை ஏதாவது ஒரு மதம் தடுத்தால் அது
நாட்டு நலனுக்கு எதிரானது. நாட்டில் அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறது.
நாம் அதை மதிக்கின்றோம். இல்லையென்றால்,
பாரத மாதாவை அவமதிப்பவரின் தலை துண்டாகி இருக்கும். ஒருவர் மட்டும் அல்ல, ஆயிரம், லட்சம்
பேரின் தலைகளைக் கூட நம்மால் துண்டிக்க முடியும்” என்று அரியானா
மாநிலம் ரோதக் நகரில் நடந்த சத்பாவன சம்மேளனம் எனும் நிகழ்ச்சியில் யோகா குரு ராம்
தேவ் பேசினார்.
( ஆதாரம்: ஒன் இண்டியா ஆன்லைன், தினகரன் ஏப்ரல்/ 5 /
2016 )
நாடு முழுவதும்
சர்ச்சையை
ஏற்படுத்தி உள்ள இந்த விவகாரத்தில் முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன? என்பதை
அறிய நாடு முழுவதும் ஓர் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
வாருங்கள்!
இஸ்லாமிய மார்க்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை கொஞ்சம் பார்த்து விட்டு வருவோம்!
இந்திய அரசியலமைப்புச் சட்டமும்... அரசு வழிகாட்டலும்....
1. முதலில் இந்த
தேசத்தின் அரசியலமைப்புச் சட்டத்தில் இதற்கான வழிகாட்டல் ஏதும் உள்ளதா? என்று
பார்த்தால் நமது அரசமைப்பு
சட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் பாரத் மாதாகி
ஜெய் என்ற வாசகம் இடம் பெறவில்லை.
2. இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடாக இருப்பினும் குடிமக்களின் மத உணர்வுகளை மதித்து அவர்கள் தாங்கள் விரும்பிய எந்த ஒரு மதத்தையும் பின்பற்றும் உரிமை உண்டு என இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25 முதல் 28 வரையிலான ஷரத்துக்களின் வழியாக உரிமை வழங்கி யுள்ளது.
எனவே ஒவ்வொரு மனிதனும் தான் விரும்பிய மதத்தை பின்பற்ற அவனுக்கு சர்வ சுதந்திர உரிமை உண்டு.
மேலும், ஒருவனுக்கு மற்றவனது மதத்தை பழிக்கவோ, அவமதிக்கவோ உரிமை கிடையாது. அப்படி ஒருவன் அதைச் செய்தான் என்றால் இந்திய தண்டனைச் சட்டத்தின் படி தண்டிப்பதற்குரிய குற்றங்களாகும்.
மதம் சம்பந்தமான குற்றங்களை இந்திய தண்டனைச் சட்டமானது தனது 295 முதல் 298 வரையிலான 5 சட்டப்பிரிவுகளின் வாயிலாக விளக்குகிறது. அந்த 5 சட்டப்பிரிவுகளையும் பின்வரும் மூன்று தலைப்புகளின் கீழ் வகைப்படுத்துகிறது.
(offences
relating to religions) மதம் சம்பந்தமான குற்றங்கள் 1. வழிபாட்டிற்குரிய இடங்களில் அல்லது பொருள்களின் புனிதத்தன்மைக் கெடுத்தல். (defilement of places of
worship or objects of veneration) பிரிவுகள் 295 மற்றும் 297. 2.மத உணர்வுகளை அவமதித்தல், (outraging the religious feelings) பிரிவுகள் 295-a மற்றும் 298. 3.மதக் கூட்டங்களுக்கு இடையூறு விளைவித்தல், (disturbing religious
assemblies) பிரிவு 296.
( நூல்: இந்திய தண்டனைச் சட்டம், பக்கம்: 370,371. )
ஆனால், தலைகளை
துண்டித்திருப்பேன், நாக்கை வெட்டுங்கள்,
நாட்டை விட்டு வெளியேறுங்கள்
என்று சொல்பவர்களை நோக்கி
இந்த சட்டம் ஒரு
போதும் பாய்ந்ததில்லை.
இதற்கு முன்பு வந்தே மாதரம் நாட்டுப் பாடலாக அறிவிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக 07.09.2006 அன்று இந்தியா முழுக்க அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் பகல் 11 மணிக்கு இப்பாடலை பாட வேண்டும் என்று இந்திய அரசு அறிவித்தது.
அப்போது பல இஸ்லாமிய அமைப்புக்கள் இந்த பாடலை பாடுவதற்கு தயக்கம் தெரிவித்தன எனவே மத்திய மாநில அரசாங்கம் கீழ்கண்ட வழிகளை அறிவித்தது.
மத்திய அரசாங்கம் – இப்பாடலைப் பாடுவது கட்டாயமல்ல என்றும் சமயச் சார்பற்ற முதல் இரண்டு பத்திகளை பாடினால் போதும் என்றும் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
மதச்சாற்பற்ற மாநில அரசாங்கங்கள் - தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகள் இப்பாடலை பாடுவதை மாணவர்களின் விருப்பத்துக்கு விட்டிருந்தான.
மதவாத மாநில அரசாங்கங்கள்
– பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் இப்பாடலை பாட வைப்பதற்கு உறுதியான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதை அடுத்து, சில இஸ்லாமிய அமைப்புகள்,
அன்றைய தினம் பெற்றோர் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்கள்.
ஆனால், தற்போது
முன்பை விட சங்கபரிவார கும்பல்களாலும், ஃபாஸிச பயங்கரவாதிகளும் புதிய வடிவிலான
மிரட்டல்கள் விடப்படுகின்றது.
வேறொன்றுமில்லை.
இத்தகைய மிரட்டல்களால் முஸ்லிம்களை இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேற்றி விடலாம்,
இந்த தேசத்தை விட்டும் இஸ்லாத்தை விரட்டி விடலாம் என மனப்பால் குடித்துக்
கொண்டிருக்கின்றனர்.
يُرِيدُونَ
لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ
كَرِهَ الْكَافِرُونَ
அல்லாஹ் கூறுகின்றான்: “இவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களால் ஊதி அணைத்து விட விரும்புகின்றார்கள்.
ஆனால், அல்லாஹ்வின் முடிவு என்னவெனில் தன் ஒளியை
முழுமையாகப் பரப்பியே தீர்வது என்பதாகும். இறை நிராகரிப்பாளர்களுக்கு
அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே!”.
( அல்குர்ஆன்: 61: 8 )
இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன?
வந்தே மாதரம் பாடலாகட்டும்,
பாரத் மாதா கீ ஜே கோஷமாகட்டும் இதன் அடிப்படை நோக்கம் துர்க்கை அம்மனை துதி பாடுவதாகும்!.
எனவே, தான் வந்தே மாதரம் பாடலை திணிக்க முற்பட்ட போது சுதந்திர வேட்கை
நிறைந்த அன்றைய காலத்திலேயேயும், இந்தியா சுதந்திரம்
அடைந்த துவக்க காலத்திலும் முஸ்லிம்கள் எதிர்த்து வந்தனர்.
வந்தே மாதரம் இந்தியாவின் நாட்டுப் பண்ணாக பல ஆண்டு காலம் கருதப்பட்டு வந்தாலும், இறுதியில் ஜன கண மன நாட்டுப் பண்ணாக முடிவு செய்யப்பட்டது.
வந்தே மாதரம் பாடல் நாட்டை தாய்க்கும், அதன் மூலம் மறைமுகமாக இந்து தெய்வமான துர்க்கைக்கும் ஒப்புமைப் படுத்துவதாக, இறைவனுக்கு
இணைகற்பிப்பதாக, இஸ்லாமியர்கள் கருதியதால் அன்றைய தேசத் தலைவர்கள் சமய சார்பற்ற நாட்டுப்பண்ணை தேர்ந்தெடுக்கும் முகமாக ஜன கண மன பாடலை நாட்டுப் பண்ணாக தேர்ந்தெடுத்தனர். வந்தே மாதரம் நாட்டுப்பண்ணாக்கப்படவில்லை.
இணை கற்பிக்கும் படி பெற்றெடுத்த பெற்றோரே கூறினாலும்.....
மேலும், நீங்கள்
அனைவரும் அல்லாஹ்வுக்கே அடிபணிந்து வாழுங்கள். அவனோடு எதனையும்
இணையாக்காதீர்கள்”. (
அல்குர்ஆன்: 4: 36 )
“எனக்கு நீ நன்றி
செலுத்து. மேலும், உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து. என் பக்கமே நீ திரும்ப
வேண்டியுள்ளது. ஆனால், எதனை நீ அறிய மாட்டாயோ அதனை என்னோடு நீ இணை கற்பிக்க
வேண்டுமென்று அவர்கள் இருவரும் உன்னை நிர்பந்தித்தால் அவர்களுடைய பேச்சை நீ ஒரு
போதும் ஏற்றுக் கொள்ளாதே!”. (
அல்குர்ஆன்: 31: 14, 15 )
படைத்த இறைவனுக்கு
அடுத்த படியாக பார்க்கப்பட வேண்டிய உறவு என்று இஸ்லாம் கூறும் ஓர் உன்னத உறவு
பெற்றோர் எனும் உறவு. அந்த உறவே படைத்த இறைவனுக்கு இணை கற்பிக்குமாறு கூறினாலும்
அந்த விஷயத்தில் அந்த உறவின் வேண்டுகோலுக்கு உடன் படக்கூடாது என்று உறுதியாக
கட்டளையிடும் பட்சத்தில் இணை கற்பிக்கும் ஃபாஸிச கும்பல்களின் மிரட்டலுக்கும்,
உருட்டலுக்கும் முஸ்லிம் சமூகம் செவி சாய்க்குமா என்ன?
இவர்களென்ன
இவர்களை விட மிகக் கொடுமையான கொடுங்கோலர்கள் எல்லாம் இந்த உம்மத்தை
மிரட்டிப்பார்த்தார்கள். உயிரை துச்சமாகக் கருதி உன்னத ஏகத்துவத்திற்காக இன்னுயிரை
நீத்த வீரர்களை முன் மாதிரியாகக் கொண்ட வராற்றுப் பாரம்பரியமிக்க சமூகம் இந்த
முஸ்லிம் சமூகம்.
மயிரின் அளவு உயிர் வழங்கப்பட்டிருந்தாலும்.....
عن
عكرمة، عن ابن عباس قال: أسرت الروم عبد الله بن حذافة السهمي، صاحب النبي صلى
الله عليه وسلم، فقال له الطاغية: تنصّر وإلا ألقيتك في البقرة، لبقرة من نحاس،
قال: ما أفعل. فدعا بالبقرة النحاس فملئت زيتاً وأغليت، ودعا برجل من أسرى
المسلمين فعرض عليه النصرانية، فأبى، فألقاه في البقرة، فغذا عظامه تلوح، وقال
لعبد الله: تنصّر وإلا ألقيتك. قال: ما أفعل. فأمر به أن يلقى في البقرة فبكى،
فقالوا: قد جزع، قد بكى: قال ردوه. قال: لا ترى أني بكيت جزعاً مما تريد أن تصنع
بي، ولكني بكيت حيث ليس لي إلا نفسٌ واحدة يفعل بها هذا في الله، كنت أحب أن يكون
لي من الأنفس عدد كل شعر في، ثم تسلّط علي فتفعل بي ذها.
உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம் அது. உலக
வரைபடத்தில் இஸ்லாமிய எல்லைகள் விரிவடைந்து கொண்டிருந்த தருணம் அது.
ரோமை நோக்கி அப்துல்லாஹ்
இப்னு ஹுதாஃபதுஸ் ஸஹ்மீ (ரலி) அவர்களை தளபதியாக
நியமித்து படை ஒன்றை அனுப்பி வைத்தார்கள் அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள்.
நீண்ட போராட்டத்திற்கு
பின் முஸ்லிம் படையினர் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
முஸ்லிம்கள் கடும்
சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். அப்துல்லாஹ் (ரலி) தளபதியல்லவா? கொஞ்சம் கூடுதலாகவே
சித்ரவதை செய்யப்பட்டார்கள்.
அவர்களுக்கு முன்னால்
தோன்றிய ரோம அரசன் இஸ்லாத்தை விட்டு விடுமாறு கூறி கட்டாயப்படுத்தினான். தொடர்ந்து சித்ரவதையை மேற்கொள்ளுமாறு தம் பணியாளர்களுக்கு கட்டளையிட்டான்.
ஆனால், கொஞ்சம் கூட இசைந்து கொடுக்க வில்லை அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்.
உடனடியாக மிகப்பெரிய
அடுப்பு தயார் செய்யப்பட்டு மிகப் பிரமாண்டமான அண்டா வரவழைக்கப்பட்டு அண்டா முழுவதும்
நீரால் நிரப்பப்பட்டது.
தீ மூட்டப்பட்டு, தண்ணீர் கொதிக்க வைக்கப்பட்டது. கொதிக்கும்
தண்ணீருக்கு முன்னால் கொண்டு வரப்பட்ட அப்துல்லாஹ் (ரலி)
அவர்களை நோக்கி “நீர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டால்
உம்மை நான் விட்டு விடுகின்றேன்” என்றான் அரசன்.
ஒரு போதும் நான் அத்தகைய
இழிவான காரியத்தை செய்ய மாட்டேன் என்று கூறினார் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்.
கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த
முஸ்லிம்களில் ஒருவரை பிடித்து கொதிக்கும் வெந்நீருக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தி
இஸ்லாத்தை விட்டு விட்டால் உம் உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம் என்ன சொல்கிறாய்? என்று கேட்டான் அரசன்.
என் உயிரை விட இஸ்லாமே
மேலானது என்றார் அவர். உடனே கொதிக்கும் நீரில் தூக்கி போட்டான்.
கை வேறு கால் வேறு என உடலின் அத்துணை அங்கங்களும் பிரிந்து போனது.
இதைக் கண்ணுற்ற அப்துல்லாஹ் (ரலி) அப்படியே கதறுகின்றார்கள்.
மீண்டும் இன்னொரு முஸ்லிம்
கொண்டு வரப்பட்டு அது போன்றே கொடூரமாக கொலை செய்யப்படுகின்றார்.
மீண்டும் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் முன் வந்த அரசன் அடுத்து நீ
தான் என்ன சொல்கின்றாய்? மதம் மாறுகின்றாயா? இல்லையா? என்று கேட்டான்.
அவர்கள் மறுக்கவே, தலை கீழாக கட்டப்பட்டு கொதிக்கும் நீரின் மேலாக தொங்க விடப்படுகின்றார்கள்.
ஒரு கட்டத்தில் தேம்பி தேம்பி அழுகின்றார்கள்.
இந்த செய்தி அரசனுக்கு
தெரிவிக்கப்பட்டு, அரசன் அவர்களை அவிழ்த்து விடச் சொல்லி அருகில்
அழைத்து அழுததின் காரணம் என்ன என்று கேட்டான்.
நான் ஒன்றும் நீ ஏற்பாடு
செய்திருக்கின்ற இந்த தண்டனையைக் கண்டு அஞ்சி நடுங்கி அழவில்லை. மாறாக, என்னிடம் சன்மார்க்கத்திற்காக கொடுப்பதற்கு
இந்த உயிரைத் தவிர வேறு உயிரை என்னுள் அல்லாஹ் படைக்கவில்லையே! என்ற ஏக்கத்தில் தான்
அழுகின்றேன்!
அல்லாஹ் மாத்திரம்
என் தலை முடியின் அளவுக்கு உயிர் கொடுத்திருப்பானேயானால் அவையனைத்தையும்
ஒவ்வொன்றாக சத்திய சன் மார்க்கத்திற்கு சன்மானமாக வழங்கியிருப்பேனே! என்று நினைத்து தான் நான் அழுகின்றேன் என்றார்கள். (
நூல்: உஸ்துல் ஃகாபா )
துண்டு துண்டாக
வெட்டினாலும்.....
முஸைலமா நஜ்த் தேசத்தை தலைமையிடமாக கொண்டு, தன்னைப் பின்பற்றுகிற ஒரு சிறு
கூட்டத்தை உருவாக்கிக் கொண்டு, தன்னை நபியாக அறிவித்து மக்களை வழிகெடுத்துக்
கொண்டிருந்தான்.
தானும் கெட்டு, பிறரையும் வழிகேட்டில் அழைத்துச் செல்கிற முஸைலமாவின்
தறி கெட்ட செயலை தடுத்து நிறுத்தும் முகமாக, எச்சரிக்கையுடன்
கூடிய ஒரு கடிதத்தை அண்ணலார் {ஸல்} அவர்கள்
எழுதி, அதை கொண்டு சேர்க்கும் அரும்பணியை ஹபீப் இப்னு ஜைத்
(ரலி) எனும் 20 அல்லது
21 வயது நிரம்பிய இளம் வாலிபரிடம் ஒப்படைத்து, நஜ்துக்கு அனுப்பினார்கள்.
”இத்தோடு, முஸைலமாவும் அவனது ஆதரவாளர்களும்
மனம் திருந்தி மீண்டும் சத்திய மார்க்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு, தங்களின் ஈமானை புதுப்பித்துக் கொள்வார்கள்” எனும் ஆசையோடு
பாலை, சுடுமணல், மலை, காடு என பல சிரமங்களைத் தாண்டி நஜ்தை அடைந்து பொய்யன் முஸைலமாவின் கோட்டைக்கு
வந்தார்.
கடுமையான கெடுபிடிக்குப் பின்னால் அவன் முன் வந்து நின்று, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் தூதுவராக நான் வந்திருக்கின்றேன்! இதோ இந்த
கடிதத்தை நபி {ஸல்} அவர்கள் தங்களிடம் தரச்
சொன்னார்கள் என்று கூறியவாறே கடிதத்தை முஸைலமாவிடம் கொடுத்தார் ஹபீப் (ரலி) அவர்கள்.
جمع الكذاب
مسيلمة قومه، وناداهم الى يوم من أيامه المشهودة..
وجيء بمبعوث رسول الله صلى الله عليه وسلم، حبيب بن زيد، يحمل آثار
تعذيب شديد أنزله به المجرمون، مؤملين أن يسلبوا شجاعة روحه، فيبدو امام الجميع
متخاذلا مستسلما، مسارعا الى الايمان بمسيلمة حين يدعى الى هذا الايمان أمام الناس..
وبهذا يحقق الكذاب الفاشل معجزة موهومة أمام المخدوعين به..
கடிதத்தைப் பிரித்துப் படித்ததும் கடும் சினம் கொண்டவனாக மாறினான். தூதுவருக்கு அளிக்க வேண்டிய மரியாதையை காற்றில் பறக்க விட்ட அவன்
“இவரைச் சிறையில் அடையுங்கள்! நாளைக் காலையில்
இவரை நம் அவையின் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள்” என்று மதம்
கொண்ட யானை போல் பிளிறினான்.
கைது செய்யப்பட்ட ஹபீப் (ரலி) கலங்கிடவில்லை. மறுநாள் காலைப் பொழுது எல்லோருக்கும்
காலைப் பொழுதாக விடிந்தது. ஆனால், ஹபீபிற்கு மாத்திரம் ஷஹாதத் உடைய காலைப் பொழுதாக
விடிந்தது.
ஆம்! பொய்யன் முஸைலமா, தமது
ஆதரவாளர்களின் புடைசூழ ஆனந்தமாக அமர்ந்திருக்கும் சபைக்கு சங்கிலியோடு இழுத்து வரப்பட்டார்
ஹபீப் (ரலி) அவர்கள்.
قال مسيلمة لـ
حبيب:
" أتشهد أن
محمدا رسول الله..؟
وقال حيب:
نعم أشهد أن
محمدا رسول الله.
وكست صفرة الخزي
وجه مسيلمة وعاد يسألأ:
وتشهد أني رسول
الله..؟؟
وأجاب حبيب في
سخرية قاتلة:
اني لا أسمع شيئا..!!
ஏளனத்தோடு, ஏறிட்டுப்பார்த்த முஸைலமா முகத்தில் எவ்வித
சலனமும் இன்றி நின்றிருந்த ஹபீப் (ரலி) அவர்களை நோக்கி “முஹம்மத் யார்? அவர் அல்லாஹ்வின் தூதரா? என்று கேட்டான்.
”ஆம்! முஹம்மத் {ஸல்}
அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகின்றேன்!”
என்று உரக்கக் கூறினார்.
முஸைலமா, கோபத்தால் முகம் சிவந்தவனாக ஹபீபை நோக்கி சுட்டெரிக்கும்
பார்வையில் “நான் அல்லாஹ்வின் தூதன் தான் என்பதற்கு நீ சாட்சி
கூறுகின்றாயா?” என்று கேட்டான்.
“நீ ஏதோ சொல்கிறாய் என்று எனக்குத் தெரிகிறது. ஆனால், நீ என்ன சொல்கிறாய் என்று என் காதில் விழவில்லை”
என்று நக்கலாக அதே நேரத்தில், முகத்தில் வெளிக்காட்டாமல்
பதில் கூறினார் ஹபீப் (ரலி) அவர்கள்.
وتحوّلت صفرة
الخزي على وجه مسيلمة الى سواد حاقد مخبول..
لقد فشلت خطته،
ولم يجده تعذيبه، وتلقى أمام الذين جمعهم ليشهدوا معجزته.. تلقى لطمة قوية أشقطت
هيبته الكاذبة في الوحل..
هنالك هاج كالثور
المذبوح، ونادى جلاده الذي أقبل ينخس جسد حبيب بسنّ سيفه..
ثم راح يقطع جسده
قطعة قطعة، وبضعة بضعة، وعضوا عضوا..
والبطل العظيم لا
يزيد على همهمة يردد بها نشيد اسلامه:
" لا اله الا الله محمد رسول الله"..
முகம் வெளுத்தது முஸைலமாவிற்கு. சினத்தின்
உச்சத்திற்கே சென்ற அவன் “அவர் உடலின் ஒரு பகுதியை வெட்டி எறியுங்கள்”
என ஆணை பிறப்பித்தான்.
உடலின் ஒரு பகுதி வெட்டப்பட்டு, ஹபீப் அவர்களின்
கண்முன்னே கிடக்கிறது. அருகில் வந்தான் முஸைலமா, என்ன ஹபீபே! இப்போதும் “முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் தான் என்று சாட்சி
கூறுகின்றாயா?” என்று கேட்டான்.
குருதி வழிந்தோடினாலும் ஈமானிய சுருதி குறையாமல் ”ஆம்! முஹம்மத் {ஸல்}
அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகின்றேன்!”
என்று உரக்கக் கூறினார்.
மீண்டும், முஸைலமா, கோபத்தால் முகம்
சிவந்தவனாக ஹபீபை நோக்கி “நான் அல்லாஹ்வின் தூதன் தான் என்பதற்கு
நீ சாட்சி கூறுகின்றாயா?” என்று கேட்டான்.
ஹபீப் (ரலி) அவர்கள் முன்பு போலவே,
“நீ ஏதோ சொல்கிறாய் என்று எனக்குத் தெரிகிறது. ஆனால், நீ என்ன சொல்கிறாய் என்று என் காதில் விழவில்லை”
என்று உறுதி படக்கூறினார்.
ஹபீப் (ரலி) அவர்களின் உடலின்
ஒவ்வொரு பகுதியும் இவ்வாறே துண்டு, துண்டாக வெட்டப்படுகின்றது.
இந்த உரையாடலும் தொடர்கின்றது. முக்கால்
வாசி உடல் பாகங்கள் வெட்டப்பட்டு, ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றது.
“அல்லாஹ் அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, முஹம்மத்
{ஸல்} அவர்கள் அல்லாஹ்வின் தூதரென்று நான் சாட்சி
கூறுகின்றேன்.” என்று கூறியவாறே அவரின் இறுதி மூச்சும் பிரிந்தது.
( நூல்:
ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, இப்னு ஹிஷாம் )
و قد كان حبيب يحب رسول
الله صلى الله عليه وسلم أكثر من نفسه ، فقد ذكر عروة بن الزبير في مغازيه وغيره
أن المشركين حينما رفعوا خبيب بن عدي رضي الله عنه على الخشبة ليصلبوه نادوه
يناشدونه
أتحب أن
محمداً مكانك؟ فقال
لا والله العظيم ما أحب أن
يفديني بشوكة يشاكها في قدمه،
உறுதிமிக்க நெஞ்சோடு
மரணத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் ஒரு மாவீரனின் முன்னால் ஆயிரக்கணக்கானோர் திரண்டு
நின்று கொண்டிருந்த பரபரப்பான தருணம் அது.
ஆம்! குபைப் (ரலி) அவர்கள்
கழுமரத்தில் ஏற்றப்பட்டு மக்காவின் முக்கியமான ஒரு தலைவரின் வருகைக்காக காத்திருந்தது
அந்தக் கூட்டம்.
எதிர்பார்த்த அந்த
தலைவர் அங்கே வருகை புரிந்தார். மக்கள் அமைதியானார்கள்.
ஆம்! மக்காவின் பெரும் தலைவராக பொறுப்பேற்று இருந்த
அபூசுஃப்யான் அங்கே வந்தார்.
வந்தவர், ஃகுபைப் (ரலி) அவர்களின்
அருகே சென்று “குபைபே! உம்மை துன்புறுத்த
வேண்டும், உம்மைக் கொல்ல வேண்டும் என்பதெல்லாம் எங்களின் நோக்கமல்ல!
குபைபே! உம்மிடம் இருந்து நாங்கள் எதிர்பார்ப்பது இது தான்! அதுவும் ஒற்றை வார்த்தை தான் சொல்லிவிடு குபைபே!
“இந்தக் கழுமரத்தில்
முஹம்மத் {ஸல்} அவர்கள் ஏற்றப்படுவதை நான்
விரும்புகின்றேன்” என்று ஒற்றை வார்த்தை சொல்லிவிடு!
உமக்கு வாழ்க்கை தருகின்றோம்! உமது மனைவி, மக்களோடு நீர் இன்பமாக வாழலாம்”
என்றார்.
“என் மனைவி,
மக்களுடன் வாழவோ, உலக இன்பத்தில் திளைக்கவோ நான்
ஆசைப் படவில்லை. என் குடும்பத்தையே அடியோடு அழிப்பீர்களே அப்போதும்
எனக்கு எந்தக் கவலையும் இல்லை.
என் வாயால் ஒரு போதும்
நீங்கள் கூறுவது போன்ற எந்தவொரு வார்த்தையையும் சொல்லப்போவதில்லை.
கேட்டுக் கொள்ளுங்கள்! நபி {ஸல்} அவர்களின்
திருப்பாதங்களில் சிறு முள் தைக்கப்படுவதைக் கூட என் மன ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது”
என்று அஞ்சா நெஞ்சத்தோடு ஃகுபைப் (ரலி)
அவர்கள் பதில் கூறினார்கள்.
இது கேட்ட அபூசுஃப்யான்
ஆவேசமடைந்தார். கொலைவெறியோடு திரண்டிருந்த மக்களிடையே ஃகுபைபை
காலி செய்யுமாறு சைகை செய்தார்.
தனியொரு மனிதனை, கழுமரத்தில் உடல் முழுவதும் கயிறுகளால் கட்டப் பட்டிருந்த ஒரு
மாவீரனை திரண்டிருந்த மக்கள் கூட்டம் சின்னா பின்னப்படுத்தியது.
கையில் கொண்டு வந்திருந்த
அம்பு, ஈட்டி போன்ற ஆயுதங்களால் குபைபை கொடூரமாக தாக்கினார்கள்
எதிரிகள்.
உதிரம் சொட்டச் சொட்ட
கொஞ்சம் கொஞ்சமாய் அங்கே ஃகுபைப் (ரலி) அவர்களின் ஆன்மா அடங்கிப் போயிற்று.
இன்னும், ஃகப்பாப், யாஸிர், சுமைய்யா ( ரலி – அன்ஹுமா
) போன்றவர்களின் தியாகச் சுவடுகளை நீங்காத காவியமாய் வரலாறு தன்னுள்
புதைத்து வைத்திருக்கின்றது.
இவர்களெல்லாம் எதற்காக
சித்ரவதைகளை தாங்கிக் கொண்டார்கள்? ஏன் கொலை
வெறித்தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டார்கள். மிகக் கொடூரமாக படுகொலை
செய்யப்பட்டார்கள்.
ஒன்றுமில்லை, ஒரே ஒரு வார்த்தைக்காகத்தான்! ஆம்!
ஒற்றை வார்த்தையைத் தான் அன்றைய இறை மறுப்பாளர்கள், இணை வைப்பாளர்கள் இவர்களின் வாயில் இருந்து வெளிப்பட்டு விடாதா? என எதிர் பார்த்தார்கள்.
வாழ்க்கையில்
மட்டும் அல்ல வார்த்தையால் கூட அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்க முன் வரவில்லை!
இந்த அஞ்சா
நெஞ்சர்களின் வாழ்க்கை முன்மாதிரி தான் இன்றும் எங்களை உலக எதிரிகள்
அனைவரிடத்திலும் எதிர்த்து நின்று போராட தூண்டிக் கொண்டிருக்கின்றது.
அல்லாஹ்வின் தூதர்
{ஸல்} அவர்களுக்கும் இதே போன்றதொரு நிலையை அன்றைய மக்காவின் இணைவைப்பாளர்கள்
உருவாக்கிய போது அல்லாஹ் அழகியதொரு வழிகாட்டலை வழங்கி இணை வைப்பாளர்களை நோக்கி அறை
கூவல் விடச்சொன்னான்.
அதையே இன்றைய
ஃபாஸிச, சங்கபரிவார, சிவசேனா, இந்து முண்ணனி போன்ற இந்து ராஷ்டிர கனவு காணும்
கும்பல்களுக்கு பதிலாக, அறை கூவலாக விடுப்போம்!
قُلْ
يَا أَيُّهَا الْكَافِرُونَ (1) لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ (2) وَلَا أَنْتُمْ
عَابِدُونَ مَا أَعْبُدُ (3) وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ (4) وَلَا
أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ (5) لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ (6)
“( ஏக இறைவனை ) மறுப்பவர்களே!” நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு” என நபியே! நீர் கூறுவீராக! ( அல்குர்ஆன்: 109 –
1-6 )
2. தலாக் –
முஸ்லிம்களின் விவாகரத்து முறை சட்டப்பூர்வமானதா? என்று ஆய்வு செய்ய உச்ச
நீதிமன்றம் குழு ஒன்றை நியமித்து உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் முஸ்லிம் தனியார் சட்டம்....
மொகலாயர்கள்
காலத்தில் இஸ்லாமியச் சட்டம் தான் நாட்டினுடைய சட்டமாக இருந்து வந்தது.
சிவில் சட்டம்
மட்டுமல்ல, குற்றவியல் சட்டமும் இஸ்லாமிய சட்டத்தில் இருந்தே பெறப்பட்டன.
தங்கள் திருமணம்,
வாரிசுரிமை, சொத்து ஆகியவை சம்பந்தமாய் தங்களுடைய மதங்களின் சட்டப்பிரகாரமும்,
சம்பிரதாயப் பிரகாரமும் நடந்து கொள்ள முஸ்லிம் அல்லாதோருக்கு முழு உரிமை
வழங்கப்பட்டிருந்தது.
அப்போதிருந்த
நீதிமன்றங்களும் இச்சட்டங்களின் அடிப்படையில் தான் நீதி வழங்கி வந்தன.
1765 –ஆம் ஆண்டில்
ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் அடியெடுத்து வைத்த பின்னரும் கூட இந்த நிலை
தொடர்ந்தது. பிற்காலத்தில் படிப்படியாக ஆங்கிலச் சட்டங்களை ஆங்கிலேயர்கள்
அமுல்படுத்தத் தொடங்கினர்.
1862 –ஆம் ஆண்டு
முதல் இஸ்லாமியக் குற்றவியல் சட்டம் முற்றிலும் கை விடப்பட்டடது. பின்னர் இந்தியன்
பீனல் கோட் ( இ. பி. கோ ) அமுலுக்கு கொண்டு வரப்பட்டது.
ஆனால், திருமணம்,
திருமண முறிவு, வாரிசுரிமை, தனிப்பட்ட விவகாரங்கள், குடும்ப விவகாரங்கள்
சம்பந்தப்பட்ட வகையில் இஸ்லாமியச் சட்டம் தொடர்ந்து அமலில் இருக்க
அனுமதிக்கப்பட்டது.
ஆனால், நாட்டின்
சில பகுதிகளில் இஸ்லாமல்லாத கலாச்சாரங்களின் கீழ் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள்
ஹிந்து மத சம்பிரதாயங்களை கடை பிடித்து வந்தனர்.
இத்தகைய முஸ்லிம்கள்
பெண்களுக்கு சொத்துரிமையை கொடுக்க மறுத்தனர். இதனை அப்போதிருந்த உலமாக்களும்,
சமுதாய நலன் விரும்பிகளும் தடுத்து நிறுத்த முயற்சித்தனர்.
எனவே, பிரிட்டிஷ்
அரசை நாடினர். இவர்களின் கோரிக்கையை ஏற்ற பிரிட்டிஷ் அரசு 1937 –ஆம் ஆண்டு
முஸ்லிம் தனியார் சட்டத்தை ( Muslim Personal Low Shariat
Application Act 1937 ) அமுலுக்கு கொண்டு வந்தனர். முஸ்லிம் தனியார் சட்டத்தின் மற்றொரு
பெயர் “ஷரீஅத் ஆக்ட் 1937” என்பதாகும்.
அதில், திருமணம், மஹர், ஜீவனாம்சம்,
தலாக், குலாஃ, ஹிபா, வாரிசுரிமை, சொத்துரிமை, வக்ஃப் ஆகிய விவகாரங்களில், சம்பந்தப்பட்டவர்கள்
முஸ்லிம்களாக இருந்தால் ஷரீஅத் ஆக்ட் படித்தான் தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும். இதுவே
நாட்டின் சட்டமாக இருந்தது.
முஸ்லிம் தனியார் சட்டம் தொகுத்து
அளிக்கப்பட்ட ஒன்றல்ல என்றாலும், இஸ்லாமிய ஷரீஅத்தையே தீர்ப்புக் காண்பதற்கான அடிப்படை
என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. இதனால்,
இஸ்லாமிய ஃப்க்ஹூ நாட்டின் சட்டம் எனும் அந்தஸ்தைப் பெற்றிருந்தது.
நீதிமன்றங்களுக்கு உதவியாக
இருக்க முஸ்லிம் சட்டங்கள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டன. டி. எஃப். முல்லா எழுதிய பிரின்ஸிபில்ஸ்
ஆஃப் முஹம்மதன் லா, அ. அ. ஃபைஸி எழுதிய அவுட் லைன்ஸ் ஆஃப் முஹம்மதன் லா ஆகிய நூற்கள்
புகழ்பெற்று விளங்கின.
ஹனஃபி ஃபிக்ஹூ சட்டத்தின்
பிரபலமானதும், ஆதாரமானதுமான ஹிதாயா ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, வழக்கறிஞர்களால்
அச்சட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டு நீதிமன்றங்களும் இஸ்லாமியச் சட்டங்களின் அடிப்படையிலேயே
தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருந்தன.
இந்திய விடுதலைக்குப் பின்னரும்
இந்நிலை நீடித்து இறைவன் அருளால் இன்றளவும் தொடர்ந்து வருகின்றது.
இனி இந்த நாட்டில் இந்த நிலை
தொடர்ந்திட நாம் பார்த்துக் கொள்வது அவசியமாகும்.
ஏனெனில், சமீப காலமாக ஷரீஆவின்
சட்டங்களை மாற்றி பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்கிற கோஷம் வலுவாக மாற்றப்பட்டு
வருகிறது.
ஷரீஆவின் சட்டத்தின் அவசியம்….
இஸ்லாம் உலகாளும் மார்க்கமாக
அங்கீகாரம் பெற்று உலகில் 1/3 மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றது. வாழ்ந்து காட்டுவதற்கும்,
பின்பற்றிச் செல்வதற்கும் ஏதுவான, தூய்மையான சட்டங்களால் அமையப் பெற்றிருப்பது தான்
அடிப்படைக் காரணமாகும்.
இஸ்லாமிய ஆட்சி நடைபெறும்
நாடுகள், இஸ்லாமிய ஆட்சி அல்லாத மதவாத, சோஷலிச, மதசார்பற்ற, ஜனநாயக நாடுகள் எந்த ஒன்றில்
ஒரு முஸ்லிம் வாழ்ந்தாலும் திருக்குர்ஆனையும், திருத்தூதர் {ஸல்} அவர்களின் வழிகாட்டலின்
அடிப்படையில் அமைந்த ஷரீஆவின் சட்டங்களை அப்படியே பின்பற்றி வாழ்வது கடமையாக்கப்பட்டிருக்கின்றது.
வாழ்வின் எந்தவொரு விஷயங்களிலும்
தம் விருப்பப்படி ஏதாவதொரு வழியை தேர்ந்தெடுத்து அதன் படி செயல்பட இஸ்லாம் ஒரு போதும்
முஸ்லிம்களுக்கு சுதந்திரம் வழங்கவில்லை.
அல்லாஹ் மற்றும்
அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்களுடைய கட்டளைகள் தான்
“உயர் நிலைச் சட்டங்கள்”
( Supreem Law ) என்று குர்ஆன் குறிப்பிடுகின்றது.
எனவே, ஷரீஆவின்
சட்ட வடிவம் என்பது
அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும்
தான் என்பது குர்ஆனின்
பல்வேறு வசனங்கள் மூலம்
நிரூபிக்கப்பட்டுள்ளது.
அவற்றை அப்படியே
ஏற்று கீழ்படிந்து நடப்பது
ஒவ்வொரு இறைநம்பிக்கையாளன் மீதும்
கடமையாகும்.
அது
விஷயத்தில் மாற்றுக் கருத்து கொள்வதோ,
மனதால் கூட
மாற்றம் செய்ய
நினைப்பதோ ஈமானிற்கு நேர் முரணானதாகும்.
பார்க்க: 4: 64, 4: 80, 59:
7, 33: 36, 24: 51.
அல்லாஹ் வடிவமைக்காத எந்தச்
சட்டமும் பின்பற்றத் தகுத்ததல்ல.
பார்க்க: 5:44, 45, 47, 50
அல்லாஹ்வின் சட்டங்களை மீறி
நடக்க யாருக்கும் உரிமையில்லை.
பார்க்க: 2: 229, 65: 1 – 4,
மனிதனின் நடத்தைகளை, நடைமுறைகளை நெறிப்படுத்தும் ஆற்றல்
அல்லாஹ்வுக்கே இருக்கிறது.
( பார்க்க: 7: 54, 5: 38 – 40,
12: 40, 21: 23, 13: 41, 5: 1, 95: 8. )
அந்த அடிப்படையில் தலாக் எனும் திருமண முறிவுக்கும்
அங்கீகாரம் வழங்குவது திருக்குர்ஆனே!
முறையே அத்தியாயம் 2, 4, 58, 65 ஆகியவைகளில் தலாக்
சம்பந்தமான தெளிவான சட்டங்களை இஸ்லாம் முன் மொழிகிறது.
அத்தலாக்கு என்று இரண்டு இடங்களிலும், அல் முதல்லகாத்து
என்று இரண்டு இடங்களிலும் இடம் பெறச்செய்து தலாக் என்பதன் முக்கியத்துவத்தை உறுதிப்
படுத்துகின்றது.
தலாக் என்றால் என்ன?
திருமண உறவின் மூலம் இணைந்து கணவனும், மனைவியுமாய்
வாழ்ந்து வரும் இருவரிடையே பிணக்கு ஏற்பட்டு இனிமேல் சேர்ந்து வாழ்வது சாத்தியமே இல்லை
எனும் முடிவுக்கு வரும் தம்பதியருக்கு ஷரீஆ வகுத்துத் தந்த சட்டம் தான் தலாக் திருமண
முறிவு என்கிற வழியாகும்.
தலாக் என்பதற்கு விடுவித்தல், அவிழ்த்தல், கைவிடுதல்
என நேரடிப் பொருளும் கொள்ளலாம்.
பொதுவாக, மணவிலக்கு, விவாக விலக்கு, விவாகரத்து
என்றும் பொருள் கொள்கின்றார்கள்.
என்றாலும், ஷரீஆ திருமணத்தை ஓர் ஒப்பந்தமாக வர்ணித்துக்
கூறுகின்றது. மற்றைய ஒப்பந்தங்களைப்போல் இதையும் முறித்துக் கொள்ளலாம் என்பதால் திருமண
முறிவு என்று பொருள் கொள்வதே சிறந்ததாகும்.
தலாக் தாக்கும் ஆயுதமா? காக்கும் கேடயமா?...
மனைவி செய்யும் சிறு சிறு தவறுகளுக்கெல்லாம் திருமண
முறிவை கையில் எடுத்து பெண்களை வாட்டி வதைக்கும் ஒரு ஆயுதமாக இஸ்லாத்தின் வருகைக்கு
முன்னர் அரேபியர்கள் பயன்படுத்தி வந்தனர். மேலும், இது யூத, கிறிஸ்துவர்களின் நடைமுறையாகவும்
இருந்து வந்தது.
அந்த முறையை முஸ்லிம்களும் கடைபிடித்து விடக்கூடாது
என்பதற்காக பல்வேறு வழிகாட்டுதலைப் பின் பற்றியும், கடைபிடித்தும் வருமாறு வலியுறுத்துகின்றது.
وَاللَّاتِي
تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ
وَاضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا إِنَّ
اللَّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا () وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا
فَابْعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا
إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا
()
அல்லாஹ் கூறுகின்றான்: “மனைவிமார்களாகிய அவர்களின்
மாறுபாட்டை நீங்கள் பயப்படுகின்ற பெண்களுக்கு நீங்கள் உபதேசம் செய்யுங்கள். அதில் அவர்கள்
திருந்தாவிடில் படுக்கைகளில் அவர்களை விலக்கி வையுங்கள். அப்பொழுதும் அவர்கள் திருந்தாவிடில்
அவர்களை காயப்படாமல் அடியுங்கள். அப்பொழுது அவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டுவிட்டால்
அவர்களின் மீது குற்றம் சுமத்திட வேறு வழியினைத் தேடாதீர்கள். நிச்சயமாக, அல்லாஹ் மிக்க
உயர்ந்தோனாகவும், மிகப் பெரியவனாகவும் இருக்கின்றான்.
அவ்விருவருக்கும் இடையே பிளவு ஏற்படுவதை நீங்கள்
பயந்தால் அவனுடைய குடும்பத்திலிருந்து ஒரு
நீதியாளரையும், அவளுடைய குடும்பத்திலிருந்து ஒரு நீதியாளரையும் அவ்விருவரிடமும் அனுப்புங்கள்.
அவ்விருவரும் சமாதானத்தை நாடினால் அல்லாஹ் அவ்விருவருக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவான்”.
( அல்குர்ஆன்: 4: 34, 35 )
கணவன், மனைவிக்கிடையே பிணக்கு ஏற்பட்டால் எவ்வாறு
நடந்து கொள்ள வேண்டும் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் தெளிவாகவே கூறியுள்ளான்.
இந்நான்கு முயற்சிகளுக் பயன் தராத பட்சத்தில் இறுதியாகத்
தான் தலாக்கை பயன் படுத்தும் உரிமையை, வாழ்வை நடத்திச் செல்கிற பொறுப்பும், ஆற்றலும்
பெண்ணை விட ஆணுக்கு அதிகம் இருப்பதால் திருமண முறிவை பயன் படுத்துகிற உரிமையை இஸ்லாம்
ஆண்களுக்கு வழங்கி இருக்கின்றது.
திருமண முறிவை தலாக்கை எப்படி பயன்படுத்த வேண்டும்?...
ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்தால் அவன் அவள்
மீது மூன்று தலாக்கிற்கு உரிமை பெற்றவனாகின்றான். அவளை ஒரு தலாக் சொல்லி விட்டால் அது
ரஜயீ தலாக்காக இருந்தாலும் சரி, பாயின் தலாக்காக இருந்தாலும் சரி) அவளை திரும்பவும்
மனைவியாக ஆக்கிக் கொள்ளும் பொழுது மீதி இரண்டு தலாக்குகளுக்கு மட்டுமே உரிமையுள்ளவனாக
அவன் ஆவான்.
இரண்டு தலாக் சொல்லியிருந்தால் மீதி ஒரு தலாக்குக்கு
மட்டுமே அவன் உரிமையுள்ளவனாவான். எனவே, ஒருவன் தன் மனைவியை மூன்று தலாக் சொல்லி விட்டால்
அவளைத் திரும்ப மனைவியாக மீட்டிக் கொள்ளவோ, அல்லது நிகாஹ் செய்து கொள்ளவோ முடியாது.
ஆகவே, கணவன் மனைவியின் மீது மூன்று தலாக்கிற்கு
உரிமை பெற்றவனாக இருந்தாலும் அந்த மூன்று தலாக்கையும் ஒரே தடவையில் பிரயோகிப்பது வெறுப்பிற்கும்
குற்றத்திற்கும் உரியதாகும். இப்படி ஒரேடியாக மூன்றையும் பிரயோகித்தாலும் தலாக் நிகழ்ந்து
விடும்.
முத்தலாக்….
மொத்த முஸ்லிம்களில் இரண்டு அல்லது மூன்று சதவீத
எண்ணிக்கையைக் கொண்டிருக்கிற வஹ்ஹாபியக் கூடாரங்களும், விசிலடிச்சான் குஞ்சுகளும் முத்தலாக்
ஒரே நேரத்தில் மும்முறை தலாக் கூறினாலும் ஒரே தலாக் தான் என குழப்பம் விளைவித்து வருகின்றனர்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நபி {ஸல்} அவர்கள் காலத்திலும், அபூபக்கர் (ரலி) அவர்கள் காலத்திலும், உமர் (ரலி) அவர்களின்
ஆட்சி காலத்தில் முதல் இரண்டு வருடங்கள் வரையிலும் ஒரே சமயத்தில் மும்முறை கூறும் தலாக்குகளை
ஒரே தலாக்காகவே கருதப்பட்டு வந்தது.
உமர் (ரலி) அவர்கள் நிச்சயமாக ஜனங்கள் ஒவ்வொரு காரியத்திலும்
அவசரத் தன்மையுடையவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் போக்கிலேயே விட்டு விட்டால் நஷ்டமடைந்து
விடுவார்கள். அதாவது, பிறகு மும்முறை ஒரே நேரத்தில் தலாக் கூறினால் மூன்று தலாக்காகவே
கருதச் செய்தார்கள்”. ( நூல்: அஹ்மத், முஸ்லிம் )
“ நான் என் மனைவியை நூறு தலாக் கூறிவிட்டேன். தாங்கள்
என் மனைவி விஷயத்தில் என்ன கருதுகின்றீர்? என்று ஒருவர் என்னிடம் வினவினார். அதற்கு
நான் ”மூன்று தலாக் உம்மிடமிருந்து நிகழ்ந்து விட்டது 97 தலாக்குகளால் நீர் இறை வசனத்தைப்
பரிகாசம் செய்து விட்டீர்” என்று கூறினேன் என்பதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். ( நூல்: முஅத்தா )
அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைப்படி குர்ஆன்,
ஸுன்னா, இஜ்மாஃ, கியாஸ் ஆகியவைகளே ஷரீஆ சட்டங்களின் அஸ்திவாரம். முத்தலாக் என்பது ஸஹாபாக்களின்
இஸ்மாஃ எனும் அஸ்திவாரத்தின் ஒரு பகுதியாகும். எனவே, மும்முறை ஒருவர் ஒரேடியாக தலாக்
கூறினாலும் அது நிகழ்ந்து விடும்.
இந்த சட்ட அமைப்பில், முறையில் அரசு ஏதேனும் மாற்றம்
செய்ய முயற்சி செய்யுமானால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் ஜனநாயக வழியில் போராடி,
ஷாபானு வழக்கில் நிலை நிறுத்தியது போன்று இன்ஷா அல்லாஹ் நிலை நிறுத்தும்.
ஷரீஆவின் சட்டத்தைப் பின்பற்றுவதில் இருந்து எங்களை
விலக்கிட நினைத்தாலும், இணைவைப்பிற்கான வார்த்தையை எங்கள் வாய்களில் இருந்து வெளிப்படுத்திட
இயன்றாலும் தோல்வி எதிரிகளுக்கே என்று முழங்கிடுவோம்!!!
ஈமானிய உணர்வு உள்ள எந்த ஒரு முஸ்லிமும் வார்த்தையாலும்,
வாழ்க்கையாலும் ஷரீஆவின் நிழலிருந்து அணுவளவு கூட விலகிட மாட்டான் என்று உரக்கக்கூறுவோம்!!!
யா அல்லாஹ்! இந்திய தேசத்தில் இஸ்லாமிய மக்களுக்கு
உன் ஷரீஅத்தின் படி வாழ்ந்திடும் ஆற்றலைத் தந்திடுவாயாக!!!
ஆமீன் ஆமீன்! யாரப்பல்
ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
அல்ஹம்து லில்லாஹ் மிக அருமையான ஆய்வு கட்டுரை ரப்புல் ஆலமீன் தங்களின் இல்மிலும் அறிவிலும் அறிவிலும் பரகத் செய்வானாக
ReplyDeleteகாலத்திற்கேப்ப அருமையான தகவல்களை உள்ளடக்கிய பதிவு!தங்கள் சேவையை அல்லாஹ் கபூல் செய்து தங்களுக்கு நீண்ட ஆயுளையும் -ஆபியத்தையும் தந்தருள்வானாக..
ReplyDeleteகாலத்திற்கேப்ப அருமையான தகவல்களை உள்ளடக்கிய பதிவு!தங்கள் சேவையை அல்லாஹ் கபூல் செய்து தங்களுக்கு நீண்ட ஆயுளையும் -ஆபியத்தையும் தந்தருள்வானாக..
ReplyDeleteகாலத்திற்கு ஏற்ற பதிவு
ReplyDeleteகாலத்திற்கு ஏற்ற பதிவு
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ் முஸ்லிம்களுக்கு படிப்பினையைப் பெற்றுத்தருகிற அருமையான பதிவு
ReplyDeleteமஸ்ஜிதில் பணியாற்றும் என்னைப்போன்ற இமாம் களுக்கு தங்களது பயான் குறிப்பு மிகப்பெரிய வரப்பிரசாதம்.
ReplyDeleteமஸ்ஜிதில் பணியாற்றும் என்னைப்போன்ற இமாம் களுக்கு தங்களது பயான் குறிப்பு மிகப்பெரிய வரப்பிரசாதம்.
ReplyDeleteجزاكم الله خيرا كثيرا
ReplyDeleteجزاكم الله خيرا كثيرا
ReplyDelete