இஸ்லாம் மொழிகளுக்கு
எதிரான மார்க்கமா?
حمدا لمن وصل من انقطع لخدمته وصلاة وسلاما على مخناره من خليقته عنوان
الشرف ومصباح الإرشاد سيدنا ومولانا محمد غاية الآمال فى يوم التناد وعلى آله
وأصحابه الكرام والتابعين وتابعيهم بإحسان على الدوام وبعد ……..
மத்திய அரசு
வரும் கல்வியாண்டு முதல்
கொண்டு வர இருக்கும்
புதிய கல்விக் கொள்கை
திட்டம் கல்வியாளர்கள், அரசியல்
சிந்தனையாளர்கள், மற்றும் முற்போக்கு
சிந்தனை கொண்டவர்கள், தொடக்கக்
கல்வி ஆசிரியர்கள், எழுத்தாளர்கள்,
சில மாநில முதலமைச்சர்கள்,
மற்றும் வெகுஜன மக்கள்
போன்றோர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு வருகிற சூழ்நிலைகளை
ஊடகத்தின் வாயிலாக நாம்
அறிந்து வருகின்றோம்.
பல்வேறு காரணங்களை
எதிர்ப்பவர்கள், புதிய கல்விக்
கொள்கை திட்டத்தை விமர்சிப்பவர்கள் முன் வைக்கின்றார்கள்.
மேலும், அந்த கல்விக்
கொள்கை திட்டம் சிறுபான்மை
சமூக மக்களுக்கு எதிராக
இருப்பதாகவும் குற்றச் சாட்டுகள்
முன் வைக்கப்படுகின்றன.
பிரதானமாக சமஸ்கிருத
மொழியை மூன்றாவது மொழியாக
கட்டாயம் படித்தே ஆக
வேண்டிய மொழியாக வலியுறுத்தப்படுவது ஏற்றுக் கொள்ள
முடியாது என்பது தான்
பெருவாரியான எதிர்ப்பாளர்கள் மற்றும்
விமர்சிப்பவர்களின் குற்றச்சாட்டாகும்.
இந்த தருணத்தில்
இஸ்லாம் மொழிகள் குறித்து
என்ன கூறியிருக்கின்றது? மொழிகளைக்
கற்பதும், கற்றுக் கொடுப்பதும்
நன்மை பயக்குமா? இஸ்லாம்
மொழிகளுக்கு எதிரான மார்க்கமா?
சமஸ்கிருத மொழியை முஸ்லிம்கள்
கற்பது பாவமாகுமா? போன்ற
கேள்விகளுக்கு நாம் விடையறிந்து
கொள்வது மிகவும் அவசியமானதும்,
காலத்தின் கட்டாயமும் ஆகும்.
வாருங்கள்! மொழிகள்
குறித்தான இஸ்லாமியப் பார்வை
என்ன? அதன் எல்லைகள்
என்ன? என்பதை சன்மார்க்கச்
சான்றுகளான அல்குர்ஆன் மற்றும்
சுன்னாவின் வெளிச்சத்தில் பார்த்து
விட்டு வருவோம்.
மொழிகள் ஓர் பார்வை……
உலக அளவில் 6800 -க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இதில்
சுமார் 2000
மொழிகள் 1000த்திற்கும் குறைவான
மக்கள்
தொகையினரால் மட்டுமே பேசப்படுகின்றன.
உலகில் 2000 மொழிகள்
மட்டுமே எழுத்து மட்டும்
பேச்சு வழக்குகளைக் கொண்ட
திருந்திய மொழிகளாகக் கருதப்படுகின்றன.
உலகில் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையினரால் பேசப்படும் மொழிகள் 13 மட்டுமே ஆகும். அவை,
மண்டேரியன் சீனம், ஆங்கிலம், ஹிந்தி,
ஸ்பெயின், ரஷ்ய மொழி, அரபு,
வங்காள மொழி, போர்த்துகீசிய மொழி, மலாய் இந்தோனேசியா மொழி, பிரெஞ்சு மொழி,
ஜப்பானிய மொழி, ஜெர்மனிய மொழி மற்றும்
உருது
ஆகியனவாகும்.
உலகில் அதிக
மக்கள் தொகையினரால் பேசப்படுகின்ற மண்டேரியன் சீன மொழியானது 6000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.
உலகில் 6 மொழிகளே பழமையான மொழிகள் அவை, தமிழ் மொழி, அரபு மொழி,
சீன மொழி, சமஸ்கிருத மொழி, கிரேக்க மொழி,
இலத்தீன் மொழி.
உலகில் அதிக
மொழிகள் பேசப்படுகின்ற நாடு பப்புவா நியூ கினியா ஆகும். பசுபிக் சமுத்திரத்தின் தென் மேற்கே அமைந்துள்ள இந்த நாட்டில் 850 -க்கும்
மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன.
அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் மகத்தான அத்தாட்சி மொழி….
وَمِنْ
آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ
وَأَلْوَانِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِلْعَالِمِينَ ()
”வானங்களையும் பூமியையும்
படைத்திருப்பதும்,
உங்களது மொழிகளும் நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளது. அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன” ( அல்குர்ஆன்: 30 : 22)
தூதுத்துவ
( ரிஸாலத் ) த்தின்
அடிப்படைகளில் பிரதானமானது மொழி…..
وَمَا
أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ
“எந்தத் தூதரையும்
அவருடைய சமுதாயத்தினர் பேசும் மொழியை உடையவராகவே தான் நாம் அனுப்பி
வந்திருக்கிறோம்”. ( அல்குர்ஆன்: 14: 4 )
நபி {ஸல்} அவர்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட லட்சத்திற்கும் மேற்பட்ட
நபிமார்கள், தூதர்கள் தத்தமது மொழியிலேயே இறைச்
செய்தியை எடுத்துரைத்தார்கள். அந்த மொழியிலேயே அவர்களுக்கு வேதங்களும் அருளப்பட்டன.
هذا من لطفه
تعالى بخلقه أنه يرسل إليهم رسلاً منهم بلغاتهم ليفهموا عنهم ما يريدون وما أرسلوا
به إليهم، كما روى الإمام أحمد عن أبي ذر قال: قال رسول اللّه صلى اللّه عليه
وسلم: (لم يبعث اللّه عزَّ وجلَّ نبياً إلا بلغة قومه)
அம்மக்களின் மொழிகளை
அறிந்த தூதுவர்களை அல்லாஹ் அனுப்பியதும், அவர்களின் மொழிகளிலேயே வேதங்களை அல்லாஹ் இறக்கியருளியதும்
அம்மக்கள் எளிதாக இறைச் செய்தியை விளங்க வேண்டும் என்கிற மகத்தான கிருபையின்
காரணமாகத்தான் என இப்னு கஸீர் (ரஹ்) கூறுகின்றார்கள்.
அபூதர் (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”அல்லாஹ் அந்தந்த சமுதாய மக்களின் மொழிகளைப்
பேசுகின்ற நபிமார்களைத் தான் தூதுவராக, நபியாக அனுப்பினான்” என நபி {ஸல்} அவர்கள்
கூறினார்கள்.
(
நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் )
மேலும், ஃபிர்அவ்னிடம்
சென்று ஏகத்துவ அழைப்பை
எடுத்து வைக்குமாறு அல்லாஹ்
நபி மூஸா {அலை}
அவர்களிடம் ஆணையிட்ட போது,
நபி மூஸா {அலை}
அவர்கள் அல்லாஹ்விடம் என்னோடு
மொழிவளமும், சொல்லாற்றலும் நிறைந்த
என் சகோதரர் ஹாரூன்
{அலை}
அவர்களையும் தூதுத்துவம் கொடுத்து
எனக்கு துணையாக அனுப்பு
என்று வேண்டினார்கள்.
اذْهَبْ
إِلَى فِرْعَوْنَ إِنَّهُ طَغَى ()
”நீர் ஃபிர்அவ்னிடம்
செல்வீராக! நிச்சயமாக அவன்
தன் தகுதியை மறந்து
இறைவனின் வரம்பை மீறிவிட்டான்”.
( அல்குர்ஆன்: 20: 24 )
وَأَخِي
هَارُونُ هُوَ أَفْصَحُ مِنِّي لِسَانًا فَأَرْسِلْهُ مَعِيَ رِدْءًا يُصَدِّقُنِي
إِنِّي أَخَافُ أَنْ يُكَذِّبُونِ ()
“என் இரட்சகனே!
என்னுடைய சகோதரர் ஹாரூன்
அவர் என்னை விட
மொழி வளத்தால் மிகச்
சிறந்தவர் ஆவார்; ஆகவே
அவரை எனக்கு உதவியாக
என்னுடன் அனுப்பி வைப்பாயாக!
அவர் (தன் மொழிவளத்தால்)
என்னை உண்மை படுத்தி
வைப்பார். ஏனெனில், (நீயாரின்
பக்கம் என்னை அனுப்பி
வைக்கின்றாயோ) அவர்கள் என்னைப்
பொய்யாக்கி விடுவதை நிச்சயமாக
நான் அஞ்சுகிறேன்”. என்று
மூஸா பிரார்த்தித்தார். (
அல்குர்ஆன்: 28: 34 )
நபிமார்களுக்கு வழங்கப்பட்ட அற்புதங்களில் மொழிவளத்திற்கு தனியானதொரு இடமும் உண்டு…
அல்லாஹ் நபி
சுலைமான் {அலை} அவர்களுக்கு
வழங்கிய அற்புதங்களில் மிகப்
பிரதானமானது படைப்பினங்கள் சிலவற்றின்
மொழிகளை பேசுவதற்கும், கேட்பதற்கும்
கற்றுக் கொடுத்தது.
சுலைமான் {அலை}
அவர்கள் தங்கள் சமூக
மக்களுக்கு ஏகத்துவ அழைப்பை
விடுத்த போது மற்ற
நபிமார்களின் அழைப்புப் பிரச்சாரத்திலிருந்து வேறுபட்டு தங்களுக்கு
வழங்கப்பட்ட பிரதானமான மொழிவளத்தை
முன் வைத்தே ஏகத்துவ
அழைப்பை விடுத்தார்கள் என்று
குர்ஆன் கூறுகின்றது.
وَوَرِثَ
سُلَيْمَانُ دَاوُودَ وَقَالَ يَا أَيُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنْطِقَ
الطَّيْرِ وَأُوتِينَا مِنْ كُلِّ شَيْءٍ إِنَّ هَذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِينُ
()
“மேலும், சுலைமான்
நபித்துவத்தில் தாவூதுக்கு வாரிசாக
ஆனார்; மேலும், மனிதர்களே!
பறவைகளின் மொழியை நாங்கள்
கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளோம்” இன்னும்,
எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு
பொருளிலிருந்தும் ஏராளமாக
நாங்கள் கொடுக்கப்பட்டுள்ளோம். நிச்சயமாக!
இது….
இது தான் அல்லாஹ்வின்
மிகத் தெளிவான பேரருளாகும்”
என்று சுலைமான் கூறினார்”. ( அல்குர்ஆன்:
27: 16 )
ஜின்களிடம் பேசுவதற்கும்,
ஜின்கள் பேசுவதை கேட்பதற்கும்,
பறவைகளிடம் பேசுவதற்கும், பறவைகளின்
மொழியை கேட்பதற்கும், எறும்புகளிடம்
பேசுவதற்கும், எறும்புகளின் மொழியை
கேட்பதற்கும், காற்றுக்கு அவர்கள்
கட்டளையிட்டால் அதன் படி
காற்று அவர்களின் ஆணைக்கு
கட்டுப்படுவதற்கும் அல்லாஹ்
சுலைமான் {அலை} அவர்களுக்கு
வேறெந்த நபிமார்களுக்கும் வழங்காத
சிறப்பை வழங்கி கௌரவித்தான்
என குர்ஆனில் அல்லாஹ்
குறிப்பிடுவான்.
எறும்புகள் பேசியதை
நபி சுலைமான் {அலை}
கேட்டது தொடர்பாக…
حَتَّى
إِذَا أَتَوْا عَلَى وَادِ النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ
ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا
يَشْعُرُونَ () فَتَبَسَّمَ ضَاحِكًا مِنْ قَوْلِهَا
ஹுத்ஹுத் பறவை
பேசியதை கேட்டது மற்றும்
ஹுத்ஹுத் பறவையிடம் சுலைமான்
{அலை}
அவர்கள் பேசியது தொடர்பாக….
فَمَكَثَ غَيْرَ
بَعِيدٍ فَقَالَ أَحَطْتُ بِمَا لَمْ تُحِطْ بِهِ وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ
يَقِينٍ () إِنِّي وَجَدْتُ امْرَأَةً تَمْلِكُهُمْ وَأُوتِيَتْ مِنْ كُلِّ شَيْءٍ
وَلَهَا عَرْشٌ عَظِيمٌ () وَجَدْتُهَا وَقَوْمَهَا يَسْجُدُونَ لِلشَّمْسِ مِنْ دُونِ
اللَّهِ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيلِ
فَهُمْ لَا يَهْتَدُونَ () أَلَّا يَسْجُدُوا لِلَّهِ الَّذِي يُخْرِجُ الْخَبْءَ
فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَيَعْلَمُ مَا تُخْفُونَ وَمَا تُعْلِنُونَ ()
اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ () قَالَ سَنَنْظُرُ
أَصَدَقْتَ أَمْ كُنْتَ مِنَ الْكَاذِبِينَ () اذْهَبْ بِكِتَابِي هَذَا
فَأَلْقِهْ إِلَيْهِمْ ثُمَّ تَوَلَّ عَنْهُمْ فَانْظُرْ مَاذَا يَرْجِعُونَ ()
ஜின் பேசியதை
சுலைமான் {அலை} கேட்டது
தொடர்பாக….
قَالَ
يَا أَيُّهَا الْمَلَأُ أَيُّكُمْ يَأْتِينِي بِعَرْشِهَا قَبْلَ أَنْ يَأْتُونِي
مُسْلِمِينَ () قَالَ عِفْرِيتٌ مِنَ الْجِنِّ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَنْ
تَقُومَ مِنْ مَقَامِكَ وَإِنِّي عَلَيْهِ لَقَوِيٌّ أَمِينٌ ()
காற்றுக்கு சுலைமான்
{அலை}
அவர்கள் ஆணையிடும் அதிகாரம்
தொடர்பாக..
فَسَخَّرْنَا
لَهُ الرِّيحَ تَجْرِي بِأَمْرِهِ رُخَاءً حَيْثُ أَصَابَ ()
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நபிமார்களில்
எவருக்கும் வழங்கிடாத அற்புதமான மொழியாற்றலை வழங்கி சிறப்பு படுத்தியதை மனமாற
விளங்கிய போது சுலைமான் {அலை} அவர்கள் அல்லாஹ்வுக்கு
நன்றி செலுத்தியதாக அல்லாஹ் குறிப்பிடுவான்.
وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ
وَسُلَيْمَانَ عِلْمًا وَقَالَا الْحَمْدُ لِلَّهِ الَّذِي فَضَّلَنَا عَلَى
كَثِيرٍ مِنْ عِبَادِهِ الْمُؤْمِنِينَ ()
“தாவூதுக்கும், சுலைமானுக்கும்
நிச்சயமாக நாம் அநேக கல்வி (மொழி) வளத்தை
கற்றுக் கொடுத்தோம். ”இறை நம்பிக்கை கொண்ட நல்லடியார்களில்
அநேகரை விட எங்களை மேன்மையாக்கி வைத்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரியது”
என்று அவ்விருவரும் கூறி நன்றி செலுத்தினார்கள்”.
( அல்குர்ஆன்:27:15 )
மொழி குறித்த விஷயத்தில் இஸ்லாத்தின்
நிலைப்பாடு பரந்து விரிந்த பல அம்சங்களைக் கொண்டது என்பதை மேற்கூறிய குர்ஆன்
வசனங்கள் விரிவாக விளக்கிக் கூறுவதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.
வளமும்… பயன்பாடும்….
அல்லாஹ் கொடுத்த எந்த வளத்தையும்
தனக்கும், தன் குடும்பத்திற்கும், தன் சமூகத்திற்கும், ஏன் ஒட்டு மொத்த மனித
குலத்திற்கும் பயன் தருகிற எந்த ஒரு காரியத்திற்காகவும் பயன் படுத்தலாம் என
இஸ்லாம் அறிவுறுத்துகின்றது.
அந்த வளம் தன்னிடம் இல்லாத போது அதை
தேடிப் பெற்று அதை அடைந்து அதன் மூலம் மனித குலத்திற்கு பயனளிப்பவரே படைத்த
ரப்பின் நேசத்திற்குரியவர் என்றும் இஸ்லாம் ஆர்வமூட்டுகின்றது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“உனக்கு பயன் தருகிற அனைத்து அம்சங்களின் மீதும் நீ ஆசைப்படு”
என்று என்னிடம் நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: )
أحب الناس
إلى الله عزَّ وجل أنفعهم للناس ، وأحب الأعمال إلى الله عزَّ وجل سرور تدخله على
مسلم ، أو تكشف عنه كربه ، أو تقضي عنه ديناً ، أو تطرد عنه جوعاً ، ولو أن تمشي
مع أخيك في حاجته أحب إليَّ من أن أعتكف في المسجد شهراً
ஒரு கிராமவாசி
மாநபி {ஸல்} அவர்களின்
சபைக்கு வந்து “அல்லாஹ்வின்
தூதரே! அல்லாஹ்விற்கு பிரியமான
செயல் எது? அல்லாஹ்வின்
நேசத்திற்குரியவர் யார்?
என்று வினவினார்.
அப்போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
“மனிதர்களில் அல்லாஹ்விற்கு மிகவும்
நேசத்திற்குரியவர் சக
மனிதர்களுக்கு எல்லா வகையிலும்
பயன் தருகின்றவரே!” என்று
பதில் கூறினார்கள். ( நூல்:
அஹ்மத் )
அந்த வகையில்
ஒரு மொழியைக் கற்பதால்,
கற்றுக் கொடுப்பதால் மனித
சமூகத்திற்கும், மனித குலத்திற்கும்
பயன் தரும் என்றிருந்தால்
அதைக் கற்றுக் கொள்வதற்கு
இஸ்லாம் ஒரு போதும்
தடையாக நிற்காது என்பதை
நாம் விளங்கிக் கொள்ள
வேண்டும்.
அல்லாஹ் சுலைமான்
{அலை}
அவர்களுக்கு வழங்கிய பேருபகாரங்களை
பட்டியலிட்டுச் சொன்ன பிறகு,
هَذَا
عَطَاؤُنَا فَامْنُنْ أَوْ أَمْسِكْ بِغَيْرِ حِسَابٍ ()
“இது உமக்குக்
கொடுக்கப்பட்ட நம்முடைய அன்பளிப்பாகும்.
ஆகவே, இதிலிருந்து பிறருக்கு
உபகாரம் செய்வீராக! அல்லது
உமக்கு மட்டுமே பயன்
படுத்திக் கொள்வீராக! உம்மீது
எந்த கேள்வி கணக்கும்
இல்லை”.
( அல்குர்ஆன்: 38: 39 )
இருமலைகளுக்கு மத்தியில்
வாழ்ந்து வந்த ஓர் சமூகத்தார் யஃஜூஜ் – மஃஜூஜ் எனும்
கலகக்காரர்களால் அதிகம் பாதிக்கப்பட்டு வந்தனர். அவர்களின் அராஜகப்
போக்கால் வாழ்க்கையின் மீது நிராசை கொண்டு வாழ்ந்து வந்தனர்.
யஃஜூஜ் – மஃஜூஜ் கூட்டத்தாரை எதிர் கொள்ளத் துணிவில்லாமல் தகுதி உள்ள எவராவது
வரமாட்டார்களா? அவர்களைக் கொண்டு யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார்களின்
தாக்குதல்களிலிருந்து மீண்டு விடலாம் என எண்ணிக் கொண்டு நாட்களை நகர்த்திக் கொண்டு
இருந்தனர்.
இந்த நேரத்தில் தான்
உலகை சுற்றி வந்து கொண்டிருந்த துல்கர்னைன் (அலை)
அவர்கள் அம்மக்கள் வசிக்கும் பகுதிக்கு வருகை தந்திருந்தார்கள்.
இதன் பின்னர் நடந்த
வரலாற்று நிகழ்வுகளை அல்லாஹ், அல் கஹ்ஃப் அத்தியாயத்தில்
நயம்பட விவரிக்கின்றான்.
حَتَّى
إِذَا بَلَغَ بَيْنَ السَّدَّيْنِ وَجَدَ مِنْ دُونِهِمَا قَوْمًا لَا يَكَادُونَ
يَفْقَهُونَ قَوْلًا () قَالُوا يَا ذَا الْقَرْنَيْنِ إِنَّ يَأْجُوجَ
وَمَأْجُوجَ مُفْسِدُونَ فِي الْأَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلَى أَنْ
تَجْعَلَ بَيْنَنَا وَبَيْنَهُمْ سَدًّا () قَالَ مَا مَكَّنِّي فِيهِ رَبِّي
خَيْرٌ فَأَعِينُونِي بِقُوَّةٍ أَجْعَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ رَدْمًا ()
آتُونِي زُبَرَ الْحَدِيدِ حَتَّى إِذَا سَاوَى بَيْنَ الصَّدَفَيْنِ قَالَ
انْفُخُوا حَتَّى إِذَا جَعَلَهُ نَارًا قَالَ آتُونِي أُفْرِغْ عَلَيْهِ قِطْرًا
فَمَا اسْطَاعُوا أَنْ يَظْهَرُوهُ وَمَا اسْتَطَاعُوا لَهُ نَقْبًا ()
قَالَ
هَذَا رَحْمَةٌ مِنْ رَبِّي فَإِذَا جَاءَ وَعْدُ رَبِّي جَعَلَهُ دَكَّاءَ
وَكَانَ وَعْدُ رَبِّي حَقًّا ()
பிறகு, துல்கர்னைன் (அலை) வேறொரு முக்கிய காரியத்தை முன்னிட்டு புறப்பட்டார். அவர்
இரு மலைகளுக்கிடையே வாழ்ந்துவந்த ஓர் சமுதாயத்தைக் கண்டார். அவர்களின்
மொழியை துல்கர்னைன் அவர்களால் எளிதில் விளங்கிக் கொள்ள இயலவில்லை”
அப்போது, அந்த மக்கள் “துல்கர்னைன் அவர்களே!
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் நாங்கள் வசிக்கும் பகுதியில் பெரும் அராஜகத்தைக்
கட்டவிழ்த்து வருகின்றனர். எனவே, நீர் எங்களுக்கும்
அவர்களுக்கும் இடையே ஓர் தடுப்புச் சுவரை எழுப்பித்தர வேண்டும், இதற்காக நாங்கள் உங்களுக்கு ஏதேனும் கப்பம் வரி செலுத்த வேண்டுமா? என்று கோரினார்கள்.
அதற்கு, அம்மக்களிடம் துல்கர்னைன் {அலை} அவர்கள் ““என்னுடைய இறைவன் எனக்கு ஏராளமாக வழங்கியிருக்கின்றான்.
எனக்கு எதுவும் நீங்கள் தர வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் உங்கள் உழைப்பின் மூலம் எனக்கு உதவி செய்யுங்கள்” நான் உங்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஓர் தடுப்புச்
சுவரை எழுப்பித் தருகின்றேன். அதற்காக நீங்கள் இரும்புப்பாளங்களை
கொண்டு வாருங்கள்” என்றார்கள்.
இறுதியில், இரு மலைகளுக்கு இடையிலான பகுதிகளை இரும்புப் பாளங்களால் நிரப்பி
விட்ட பிறகு, மக்களை நோக்கி துல்கர்னைன் “இப்பொழுது நெருப்பை மூட்டுங்கள்! என்று கூறினார்.
கடைசியில், அந்த இரும்புச் சுவர் முற்றிலும் நெருப்பாய் பழுக்கக் காய்ந்த
போது மக்களை நோக்கி துல்கர்னைன் {அலை} அவர்கள் “உருக்கிய செம்புத்
திரவத்தைக் கொண்டு வாருங்கள்! நான் அதன் மீது ஊற்றுகின்றேன்.
யஃஜூஜ் – மஃஜூஜ் கூட்டத்தார் ஏறி வராத அளவுக்கு உயரமாகவும், துளையிட முடியாத அளவுக்கு வலுவாகவும் அந்தச் சுவர் அமைந்திருந்தது.
அம்மக்கள் பிரம்மாண்டமான
அந்த தடுப்புச் சுவர் குறித்து வியப்பில் ஆழ்ந்த போது துல்கர்னைன் “இது என் இறைவனின் கருணையாகும். என் இறைவன்
வாக்களித்த நேரம் ( மறுமை ) வந்து விட்டால்,
அவன் இதனைத் தூள் தூளாக்கி விடுவான். என்னுடைய
இறைவனின் வாக்குறுதி உண்மையாகும்”.
( அல்குர்ஆன்: 18: 92 – 98 )
போகிற போக்கில் படித்து
விட்டு உச்சுக் கொட்டி விட்டு சென்று விடுகிற வரலாற்று நிகழ்ச்சியல்ல இது.
ஒரு சமூகத்தின் மொழியே
தெரியாத ஒருவர் எப்படி அவர்களின் பிரச்சனையை தெரிந்து கொண்டிருப்பார்? அவர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வை கொடுத்திருப்பார்?
சாதாரணமாக ஒரு வீட்டையோ
அல்லது ஒரு பாலத்தையோ கட்ட வேண்டுமானால் ஒரு பொறியாளருக்கு எத்தனை மாதங்கள் ஆகின்றது?
பிரம்மாண்டமான ஒரு
தடுப்புச் சுவரை, அதுவும் உலக அழிவு நாள் வரை தகர்க்க முடியாத
ஒரு சுவரை எழுப்ப வேண்டுமானால் எத்தனை வருடங்கள் ஆகியிருக்கும்?
இப்படியான பல கேள்விகள்
இந்த வரலாற்றில் தொக்கி நிற்கின்றது.
அப்படியானால், அங்கே என்ன நடந்திருக்கும்? என்பதை அல்லாஹ்
தந்திருக்கும் அறிவின் துணை கொண்டு நாம் சிந்தித்து, அனுபவித்து இந்த வரலாற்றை வாசிக்க வேண்டும்.
அவர்களின் மொழியை துல்கர்னைன்
அவர்களால் எளிதில் விளங்கிக் கொள்ள இயலவில்லை” என்று கூறிதான்
அல்லாஹ் அவர்களின் வரலாற்றை ஆரம்பிக்கின்றான்.
உலகை வலம் வந்து கொண்டிருந்த
துல்கர்னைன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த மக்களுக்கு உதவ வேண்டும் என்பதில் உறுதியாக
இருந்தார்கள்.
எனவே, அவர்களோடு அந்தப்பகுதியில் தங்கி அவர்களின் மொழியைக் கற்றார்கள்.
பிறகு அவர்களின் பிரச்சனைகளை
கேட்டறிந்தார்கள். அதன் பின்னரே அவர்களுக்கு உதவ முன் வந்தார்கள்.
அவர்களின் உடல் உழைப்பை துணையாக வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பேருதவியை
மூலதனமாகக் கொண்டு மிகப் பிரம்மாண்டமான, வலுவான சுவற்றைக் கட்டியெழுப்பினார்கள்.
என்பது போன்ற பல விஷயங்களை, அம்சங்களை இந்த வரலாற்றின்
மூலம் நம்மால் விளங்கிக் கொள்ள முடிகின்றது
ஆதலால் தான் அல்லாஹ்
வரலாற்றுச் செய்திகளை, நிகழ்வுகளை பதிவு செய்த பிறகு, “சிந்திக்கும் மக்களுக்கு இதில் சான்றுகள் இருக்கின்றன, படிப்பினைகள் இருக்கின்றன” என்று குறிப்பிடுவான்.
மொழி வளத்தை இஸ்லாமிய வளர்ச்சிக்கு பயன் படுத்திய அண்ணலார்…
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப்
பிறகு உலக நாடுகள் அனைத்திற்கும் இஸ்லாத்தை, ஏகத்துவத்தை கொண்டு
சென்றிட முயற்சி மேற்கொண்டார்கள்.
عن أنس ـ رضي الله عنه ـ :
( أن رسول الله ـ صلى الله عليه وسلم ـ كتب إلى كسرى
وقيصر وإلى النجاشي - وهو غير الذي صلّى عليه - وإلى كل جبّار يدعوهم إلى الله عز
وجل )( مسلم ).
توجه سفراء الرسول ـ صلى الله عليه وسلم ـ بالرسائل إلى
النجاشي ملك الحبشة، وإلى المقوقس عظيم القبط في مصر، وإلى كسرى ملك الفرس، وإلى
هرقل عظيم الروم، وإلى المنذر بن ساوى ملك
البحرين، وغيرهم من ملوك وأمراء ..
”அதன் ஒரு பகுதியாக
அன்றைய பாரசீக, கிஸ்ரா, ரோம், பஹ்ரைன், அபீசீனியா, மிஸ்ர் போன்ற
தேசங்களின் மன்னர்களுக்கும், அரபு நாடுகளின் அருகே ஆண்டு கொண்டிருந்த
சிற்றரசர்களுக்கும் கடிதத்தின் மூலமாக ஏகத்துவ அழைப்பை கொண்டு செல்ல முடிவெடுத்தார்கள்.
فاختار النبي ـ صلى الله عليه وسلم ـ دحية
الكلبي ، وأرسله إلى هرقل عظيم الروم . يقول ابن
حجر في الإصابة عن دحية : " كان
يُضرب به المثل في حسن الصورة ". وكان دحية
ـ مع حسن مظهره ـ فارسا ماهرا، وعليما بالروم ..
وأرسل النبي ـ صلى الله عليه وسلم ـ عبد
الله بن حذافة إلى كسرى عظيم الفرس، وكان له دراية بهم ولغتهم،
وكان ابن حذافة مضرب الأمثال في الشجاعة ورباطة
الجأش .
وأرسل ـ صلى الله عليه وسلم ـ إلى المقوقس ملك مصر حاطب بن أبي بلتعة ، وقد قال فيه ابن حجر في الإصابة :" كان أحد فرسان قريش
وشعرائها في الجاهلية "، وكان له علم بالنصرانية، ومقدرة على المحاورة ..
அதற்காக அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்கள் உலக நாடுகளின்
மொழிகளைக் கற்றறிந்த, அந்தந்த மொழிகளில் மிகவும் புலமைப் பெற்றிருந்த
நபித் தோழர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.
அவர்களிடம் கடிதத்தைக்
கொடுத்து அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இஸ்லாமிய தூதுத்துவச் செய்தியின் தூதுவர்களாக அனுப்பி வைத்தார்கள்”
என்று இமாம் வாக்கிதீ (ரஹ்), இமாம் தபரீ (ரஹ்), இமாம் இப்னு
ஹஜர் அல் அஸ்க்கலானீ (ரஹ்) ஆகிய வரலாற்று
ஆசிரியர்கள் தங்களின் நூல்களில் பதிவு செய்திருக்கின்றார்கள்.
عن ابن عباس ـ رضي الله
عنهما : ( أن النبي ـ صلى الله عليه وسلم ـ كتب إلى
قيصر يدعوه إلى الإسلام، وبعث بكتابه إليه دحية
الكلبي ، وأمره أن يدفعه إلى عظيم بصرى ليدفعه
إلى قيصر، فإذا فيه :
" بسم الله الرحمن الرحيم، من محمد بن عبد
الله ورسوله، إلى هرقل عظيم الروم، سلام على من اتبع الهدى: أما بعد، فإني أدعوك
بدعاية الإسلام، أسلم تسلم يؤتك الله أجرك مرتين، فإن توليت عليك إثم الأريسيِّين،
{ قُلْ يَا أَهْلَ
الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلا
نَعْبُدَ إِلا اللَّهَ وَلا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلا يَتَّخِذَ بَعْضُنَا
بَعْضًا أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ فَإِنْ تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا
بِأَنَّا مُسْلِمُونَ }(آل عمران64) )( البخاري ) .
ذكر الواقدي أن رسول الله ـ
صلى الله عليه وسلم ـ كتب إلى النجاشي كتابا، وأرسله مع عمرو
بن أمية الضمري ، فيه:
( بسم الله الرحمن الرحيم، من محمد
رسول الله إلى النجاشي ملك الحبشة، أسلم أنت، فإني أحمد إليك الله، الذي لا إله
إلا هو، الملك القدوس، السلام المؤمن، المهيمن، وأشهد أن عيسى ابن مريم، وروح
الله، وكلمته ألقاها إلى مريم البتول، فحملت به، فخلقه من روحه، ونفخه، كما خلق
آدم بيده، وإني أدعوك إلى الله وحده لا شريك له، والموالاة على طاعته، وأن تتبعني،
وتؤمن بالذي جاءني، فإني رسول الله، وإني أدعوك وجنودك إلى الله عز وجل، وقد بلغت
ونصحت، فاقبلوا نصيحتي، والسلام على من اتبع الهدى ).
كتاب النبي ـ صلى الله عليه وسلم ـ إلى المقوقس
ملك مصر
ذكر الواقدي أن النبي ـ صلى الله عليه وسلم ـ كتب إلى المقوقس،
مع حاطب بن أبي بلتعة : ( بسم الله الرحمن الرحيم: من محمد بن عبد الله إلى المقوقس
عظيم القبط، سلام على من اتبع الهدى، أما بعد: فإني أدعوك بداعية الإسلام، أسلم
تسلم، وأسلم يؤتك الله أجرك مرتين، فإن توليت فإن عليك إثم القبط ، { قُلْ يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ
سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلَّا نَعْبُدَ إِلَّا اللَّهَ وَلا نُشْرِكَ
بِهِ شَيْئاً وَلا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضاً أَرْبَاباً مِنْ دُونِ اللَّهِ
فَإِنْ تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ }(آل عمران:64) ) .
كتاب النبي ـ صلى الله عليه وسلم ـ إلى كسرى ملك
فارس
وقد أرسله النبي ـ صلى الله عليه وسلم ـ مع عبد الله بن حذافة ـ رضي الله عنه ـ كما ذكر الواقدي ، وكان فيه:
( بسم الله الرحمن الرحيم، من محمد
رسول الله إلى كسرى عظيم فارس، سلام على من اتبع الهدى وآمن بالله ورسوله، وشهد أن
لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله، أدعوك بدعاية الله، فإني
أنا رسول الله إلى الناس كافة، لأنذر من كان حيا ويحق القول على الكافرين، أسلم
تسلم ، فإن أبيت فعليك إثم المجوس ) .
அவ்வகையில், திஹ்யத்துல் கலபீ (ரலி) அவர்களை ரோமுக்கும், அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா
(ரலி) அவர்களை பஹ்ரைன் மற்றும் பாரசீகத்திற்கும்,
ஹாதப் இப்னு அபீ புல்தஃ (ரலி) அவர்களை மிஸ்ருக்கும், அம்ர் இப்னு உமைய்யா (ரலி) அவர்களை அபீசீனியாவிற்கும், ஹபீப் இப்னு ஜைத் (ரலி) அவர்களை
ரோமின் இன்னொரு பகுதிக்கும் இஸ்லாமிய அழைப்பை ஏந்திய கடிதத்தைக் கொடுத்து அனுப்பினார்கள்.
قال الطبري في تاريخه :
" وقد اختلف تلقي الملوك لهذه الرسائل، فأما هرقل والنجاشي والمقوقس، فتأدبوا
وتلطفوا في جوابهم، وأكرم النجاشي والمقوقس رسل رسول الله - صلى الله عليه وسلم -،
وأرسل المقوقس هدايا إلى رسول الله ـ صلى الله عليه وسلم ـ .
وأما كسرى لما قريء عليه الكتاب مزقه، فعن ابن عباس ـ رضي الله عنهما ـ: ( أن رسول الله ـ صلى الله عليه وسلم ـ بعث بكتابه إلى كسرى مع
عبد الله بن حذافة السهمي ، فأمره أن يدفعه إلى عظيم البحرين، فدفعه عظيم البحرين إلى
كسرى، فلما قرأه مزقه ) .
இமாம் தபரீ (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது
“அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கொடுத்தனுப்பிய கடிதத்திற்கு பதில் பலவாறாக இருந்தது. ரோமபுரியின் ஹிர்கல் மன்னரும், மிஸ்ரின் மகூகஸ் மன்னரும்,
அபீசீனியாவின் நஜ்ஜாஷி மன்னரும், கடிதம் கொண்டு
சென்ற தூதுவர்களிடம் அழகிய முறையில் நடந்து, நபி {ஸல்} அவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கி அழகிய முறையில்
பதில் கடிதமும் கொடுத்தனுப்பினார்கள்.
பாரசீகத்தின் கிஸ்ரா
மன்னரும், பஹ்ரைன் மன்னரும் தூதரிடம் மிக மோசமாக நடந்து
கொண்டதோடு கடிதத்தை கிழித்தும் அராஜகத்தோடு நடந்து கொண்டனர்.
( நூல்:
அல் இஸாபா, அத்தாரீஃக் லி த்தபரீ, அத்தாரீஃக் லில் வாக்கிதீ )
ஆகவே, சமஸ்கிருதம் அல்ல உலகின் எந்தவொரு மொழியையும் மனித குலத்திற்கு
பயன் தருகிற வகையில், இஸ்லாமிய மார்க்கத்தை பிற மொழி சார்ந்த
மக்களுக்கு அறியச் செய்யும் வகையில் அதைக் கற்றுக் கொள்வதை இஸ்லாம் தடுக்க வில்லை.
எதிரான நிலைப்பாடும் கொண்டிருக்க வில்லை என்பதை தெளிவாக உலக அரங்கிற்கு
அறிவிக்கும் அதே வேளையில் மொழி ரீதியான பாகுபாடுகளை, மொழி ரீதியான
வெறியை மக்களுக்கு மத்தியில் திணிப்பதை மடமைத்தனம், அறியாமைக்
கால அறிவீனம் என்று பிரகடனப் படுத்துகின்றது.
நபி (ஸல்) அவர்கள் அரபு மொழி பேசும் சமூகத்தில் பிறந்தார்கள். உலகிலேயே அரபுகள் போன்று மொழி வெறி பிடித்தவர்கள் அன்றைக்கு இருந்ததில்லை.
தம்மை அரபுகள்
எனக் கூறிக் கொண்டே அந்தச் சமுதாயம் ஏனைய மொழி பேசுவோரை அஜமிகள் (வாயில்லாத ஜீவன்கள்) என்றே குறிப்பிட்டனர். மற்ற மொழி பேசும் மக்களை மக்களாகக் கூட அவர்கள் கருத முன்வரவில்லை.
மற்றவர்களின்
மொழியை வாயில்லா
ஜீவன்களின் சப்தமாகத் தான் அவர்கள் மதித்தார்கள்.
மொழி வெறி பிடித்து அலைந்த அந்தச் சமுதாயத்தில் பிறந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில்.....
هذا الحديث قد رواه الإمام أحمد بن حنبل في ( باقي مسند الأنصار - رقمه 22391 ):
”மக்களே!
அரபு மொழி பேசுகின்ற எவருக்கும் அரபு மொழி பேசாத எவரையும் விட எந்தச் சிறப்பும் கிடையாது” என்று பிரகடனம்
செய்தார்கள்.
தமது தாய் மொழியே அரபு மொழியாக இருந்தும் தமது மொழிக்குக் கூட எந்தச் சிறப்பும் கிடையாது என்று பிரகடனம் செய்த ஒரே தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான்.
இறைவனின்
பார்வையில் எந்த மொழியும் வேறு எந்த மொழியையும் விட சிறந்ததில்லை என்பதை இஸ்லாத்தை
விட வேறெந்த மதங்களும், சமயங்களும் இந்த அளவுக்கு மிகத் தெளிவாக அறிவிக்க வில்லை
என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.
அல்லாஹ் விளக்கத்தைத் தருவானாக! ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!!
வஸ்ஸலாம்!!!
சுதந்திர தினத்தைப் பற்றி பேச விரும்புபவர்கள் நம்முடைய முந்தைய சுதந்திர தின
பதிவுகளைப் பார்த்து பேசிக்கொள்ளுங்கள்!
No comments:
Post a Comment