Thursday, 22 September 2016

மஹ்ஷர் பெருவெளியின் கேள்வி கணக்கில் இடம் பெரும் அருட்கொடைகள்! தொடர்….1



மஹ்ஷர் பெருவெளியின் கேள்வி கணக்கில் இடம் பெரும் அருட்கொடைகள்! தொடர்….1

செப்டம்பர் 29 காது கேளாதோர் தினமாக உலகெங்கும் அனுஷ்டிக்கப் படுகின்றது.

சமூகத்தில் காது கேளாதோர் சந்திக்கும் பிரச்சினைகள், அவர்களது கோரிக்கைகள், அவர்களுக்கான வசதிகள் ஆகியவற்றை ஒவ்வொரு அரசும் பரிசீலிக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.

முழு மையாகவோ அல்லது பாதியாகவோ ஒலியை உணர அல்லது புரிந்து கொள்ள முடியாதவர்கள் காது கேளாதவர் எனப்படுகின்றனர்.

உலகில் 7 கோடி பேர் காது கேளாமல் உள்ளனர். இவர்களில் 80 சதவீதம் வளரும் நாடுகளில் உள்ளனர் என உலக காது கேளாதோர் அமைப்பு தெரிவிக்கிறது.

1958இல், காது கேளாதோர் தினம் தொடங்கப்பட்டது. பின் இது காது கேளாதோர் வாரமாக மாற்றப்பட்டது. செப்., கடைசி ஞாயிறு (செப்., 29) இத்தினம் கடைப்பிடிக்கப்  படுகிறது.

அழகிய படைப்பாளன் அல்லாஹ் இந்த பூவுலகிற்கு அளித்த மாபெரும், மகத்தான கொடை தான் மனிதப்படைப்பு.

ஆம்! மனிதப்படைப்பு தான் உலகின் ஏனைய, மற்றெல்லா படைப்புகளுக்கும் அதன் மதிப்பை உணர்த்தியது.

ஆம்! மனிதன் என்கிற ஓர் இனத்தை அல்லாஹ் படைக்காது போயிருந்தால் வானம், பூமி, கடல், மழை, காற்று, ஆறு, மலை, தாவரம், கனி, காய், விலங்குகள் இன்னும் கோடான கோடி படைப்புகள் என எதற்கும் பயன்பாடுகள் என்பது இருந்திருக்காது.

அத்தகைய மனித இனத்தின் மாண்பு குறித்து அல்லாஹ் பேசுகையில் அல்லாஹ்அழகிய படைப்புஎன வர்ணித்துக் கூறுவான்.

لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ ()

மனிதனை மிக அழகான வடிவமைப்பில் திட்டமாக நாம் படைத்தோம்”.                                                ( அல்குர்ஆன்: 95: 4 )

மனித படைப்பின் உருவாக்கம் அதன் வளர்நிலை மற்றும் பிரம்மாண்டம் குறித்து விவரித்து விட்டு இறுதியாக தன்னைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு வர்ணிப்பான்.

فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ ()

படைப்பாளர்களில் அல்லாஹ் மிக்க அழகானவன், பெரும் பாக்கியம் நிறைந்தவன்”.                                               ( அல்குர்ஆன்: 23: 14 )

மனிதனின் உச்சந்தலை முதற்கொண்டு உள்ளங்கால் வரை உடலுக்கு உள்ளேயும், உடலுக்கு வெளியேயும் ஏராளமான உறுப்புக்களை, நரம்புகளை, எழும்புகளை, தசைகளை, இரத்தத்தை, நுண்ணுயிர்களை வடிவமைத்து அவைகள் வெளியே தெரிந்து விடாத படி மனித உறுப்புக்களிலேயே மிகவும் பெரிய உறுப்பாக தோலை உருவாக்கி, அதைக் கொண்டு அழகாக மூடி இப்போது நாம் இருக்கிற இந்த தோற்றத்தில் மனிதன் என்கிற முகவரியோடு உலவ விட்டிருக்கின்றான்.

இவ்வாறாக, படைத்த இறைவன் நமது உடலை, சிந்தித்துப் பார்க்குமாறும், அதன் மூலம் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்துமாறு தூண்டுகின்றான்.

ஒட்டு மொத்தமாக மனித உடலில் காணப்படும் எல்லா உறுப்புக்களும் மனிதனுக்கு முக்கியமானவை தான். எனினும் அல்லாஹ் மனித உடலில் இடம் பெற்றிருக்கிற மூன்று உறுப்புக்களைக் குறித்து அல்குர்ஆனில் அதிகம் பேசுகிறான், விமர்சிக்கிறான்.

கண், காது, இதயம் ஆகியவை தான் இம்முன்று உறுப்புக்கள். சில இடங்களில் மூன்று உறுப்புக்களையும் சேர்த்து பேசுகின்றான்.

பல இடங்களில் பார்வையையும், செவிப்புலனையும் இணைத்தே பேசுகின்றான். இன்னும் தெளிவாக சொல்வதாக இருந்தால் கண்பார்வையைப் பற்றி 148 இடத்திலும், காதுசெவிப்புலன் பற்றி 185 இடங்களிலும் பேசுகின்றான்.

அவ்வகையில் பார்க்கும் போது கண்ணும், காதும் மனித உறுப்பில் பிரதானமானவைகளாக இடம் பெறுகின்றன.

அதிலும் குறிப்பாக காதுசெவிப்புலன் என்பது மனித குலத்திற்கு அல்லாஹ் வழங்கியிருக்கிற மகத்தான அருட்கொடையாகும்.

ஏனெனில், பெரும்பாலான இடங்களில் இதயத்தை விட, கண்ணை விட அல்லாஹ் காதைத்தான் முற்படுத்தி முதன்மையாக கூறுகின்றான்.

செவிகாது என்பது…. அறிவியல் பார்வையில்….

நமது காது சாதாரணமாக 20 ஹெர்ட்சில் இருந்து 20 கிலோ ஹெர்ட்ஸ் வரை கேட்கும் திறன் பெற்றது. ஒரு கிலோ ஹெர்ட்ஸ் = 1000 ஹெர்ட்ஸ்.

செவி அல்லது காது (ear) என்பது ஒலியை உணரக்கூடிய ஒரு புலன் உறுப்பு ஆகும். மீன் தொடக்கம் மனிதர் வரை முதுகெலும்பிகளின் செவிகள் பொதுவான உயிரியல் தன்மையைக் கொண்டுள்ளன. எனினும் ஒழுங்கு மற்றும் சிற்றினங்களைப் பொறுத்து அமைப்பில் வேறுபாடுகள் உள்ளன.

செவி ஒலி அலைகளைப் பெற்று உணர்வது மட்டுமன்றி, உடல் சமநிலை உணர்வு தொடர்பிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. உடலின் ஐம்புலன்களில் செவி கேட்க உதவும் ஒரு கருவியாவும் அமைந்துள்ளது.

செவி என்பது சரியானபடி முழுமையான உறுப்பைக் குறிப்பதற்கோ அல்லது வெளியில் தெரியும் செவிப் பகுதியை மட்டும் குறிப்பதற்கோ பயன்படக்கூடும்.

இது புறச்செவி அல்லது செவிமடல் எனவும் அழைக்கப்படும். புறச்செவி மட்டுமே வெளியில் தெரியும் செவியாக இருப்பினும், இது கேட்டல் என்னும் செயற்பாட்டின் பல படிகளில் முதல் படியோடு மட்டுமே தொடர்புபட்டது. இது உடற் சமநிலை உணர்வு தொடர்பில் எவ்விதப் பங்கும் வகிப்பதில்லை.

முதுகெலும்பிகளில் தலையின் இரண்டு பக்கங்களிலும் பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு செவிகள் இருக்கும். இவ்வமைப்பு ஒலி எங்கிருந்து வருகிறது என்பதை அறிவதற்கு உதவுகிறது.


செவி – காது என்பது..... குர்ஆனிய பார்வையில்...

1. ரப்புக்கு நன்றி செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் உறுப்பு...

وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَا تَشْكُرُونَ ()

அல்லாஹ்வே உங்களுக்கு செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் படைத்தான். மிக குறைவாகவே அவனுக்கு நன்றி செலுத்துகிறீர்கள்”.

                                                                                                                                                 ( அல்குர்ஆன்: 32: 9 )

2.  இறைவனால் நியமிக்கப்பட்ட வேவு பார்க்கும் ஒற்றர்கள்…..

حَتَّى إِذَا مَا جَاءُوهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَأَبْصَارُهُمْ وَجُلُودُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ ()

அச்சமயம் பாவம் செய்த அவர்களுக்கு விரோதமாக அவர் களின் செவிகளும், கண்களும், அவர்களுடைய தோல்களும் அவர்கள் அவற்றின் மூலம் செய்தவற்றைப்பற்றி சாட்சி கூறும்”.                                                                           ( அல்குர்ஆன்: 41: 20 )


3. மனிதனை பரிசோதிப்பதற்காக படைக்கப்பட்ட உறுப்பு….

نَبْتَلِيهِ فَجَعَلْنَاهُ سَمِيعًا بَصِيرًا ()

மனிதனை நாம் சோதிப்பதற்காகவே செவியுடையவனாகவும், பார்வையுடையவனாகவும் அவனை ஆக்கினோம்”.                                          ( அல்குர்ஆன்: 76: 2 )


4. மஹ்ஷர் பெருவெளியின் கேள்வி மன்றத்தில் இடம்பெரும் உறுப்பு….

إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا ()

நிச்சயமாக! செவி, பார்வை, இதயம் இவை ஒவ்வொன்றும் அது பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படக் கூடியதாய் இருக்கின்றது”.      ( அல்குர்ஆன்: 17: 36 )

5. மனித படைப்பின் நோக்கத்தைக் கூறும் உறுப்பு

وَاللَّهُ أَخْرَجَكُمْ مِنْ بُطُونِ أُمَّهَاتِكُمْ لَا تَعْلَمُونَ شَيْئًا وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ ()

அல்லாஹ் உங்களைஉங்களுடைய அன்னையர்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் எதனையும் அறியாத நிலையில் வெளியாக்கினான்; மேலும், உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் அமைத்தான்! நீங்கள் நன்றி செலுத்துவதற்காக!”.                                         ( அல்குர்ஆன்: 16: 78 )

6. சுவனத்து இன்பங்களை முதலில் அனுபவிக்கும் உறுப்பு….

“சாந்தி நிலவட்டும்! சாந்தி நிலவட்டும்! எனும் சொல்லைத்தவிர, வேறு வீணாண, பாவமான எந்தப் பேச்சுக்களையும் அவர்கள் செவியுற மாட்டார்கள்”.

                                                   ( அல்குர்ஆன்: 56: 25, 26 )

செவி – காது என்பது.. அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் பார்வையில்…

وكان من دعائه صلى الله عليه وسلم اللهم متعنا بأسماعنا وأبصارنا وقوتنا ما أحييتنا واجعله الوراث منا.
قال العلماء: معنى اجعله الوارث منا: أي أبقها صحيحة سليمة إلى أن أموت.
و كان النبي صلى الله عليه وسلم إذا سجد يقول: اللهم لك سجدتُ وبك آمنتُ ولك أسلمتُ
سجد وجهي للذي خلقه وصوره وشقّ سمعه وبصره فتبارك الله أحسن الخالقين.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தங்களின் துஆக்களில் “யாஅல்லாஹ்! என் செவிகளுக்கும், என் பார்வைகளுக்கும் உயிர் வாழும் காலம் வரையிலும் சுகத்தையும், இயங்கும் ஆற்றலையும் வழங்குவாயாக! என்று கேட்பார்கள்.

மேலும், குர்ஆன் திலாவத்தின் போது செய்கிற ஸஜ்தாவில் கூட “அல்லாஹ்வே! உனக்கே சிரம் பணிந்தேன்! உன்னையே நம்பிக்கை கொண்டேன்! உனக்காக கட்டுப்பட்டேன்! பெரும் பாக்கியவானும், அழகிய படைப்பாளனுமான அல்லாஹ் அவன் தான் பார்வைகளுக்கும், செவிப்புலன்களுக்கும் ஆற்றல் வழங்கி, அழகிய தோற்றம் கொண்டு மனிதனைப் படைத்தான்! அத்தகைய ஒருவனுக்கு நான் சிரம் பணிந்தேன்!” என்று பிரார்த்திப்பார்கள்.          ( நூல்: அபூதாவூத், முஸ்லிம் )

أخبرنا عبد الواحد المليحي أخبرنا أبو طاهر أحمد بن محمد بن الحسين أخبرنا أبو علي حامد بن محمد الرفاء حدثنا أبو الحسن علي بن عبد العزيز أخبرنا الفضل بن دكين حدثنا سعد بن أوس العبسي حدثني بلال بن يحيى العبسي أن شتير بن شكل أخبره عن أبيه شكل بن حميد قال: أتيت النبي صلى الله عليه وسلم فقلت: يا نبي الله علمني تعويذا أتعوذ به فأخذ بيدي ثم قال: "قل: اللهم إني أعوذ بك من شر سمعي وشر بصري وشر لساني وشر قلبي وشر مَنِيَّ" قال: فحفظتها قال سعد المني ماؤه

ஷக்ல் இப்னு ஹுமைத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு பாதுகாப்பு துஆ ஒன்றைக் கற்றுத் தாருங்கள்! என்று வேண்டி நின்றேன்.

அப்போது, மாநபி {ஸல்} அவர்கள் என் கையைப் பிடித்து “அல்லாஹ்வே! என் செவியின் தீங்கிலிருந்தும், என் பார்வையின் தீங்கிலிருந்தும், என் நாவின் தீங்கிலிருந்தும், என் உள்ளத்தின் தீங்கிலிருந்தும், என் பிறப்புறுப்பில் இருந்து வெளியாகும் நீரின் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்!” என்று பிரார்த்திக்குமாறு கூறினார்கள்.                                ( நூல்: அபூதாவூத் )

நேர்மையான வழியில் பயன் படுத்தினால்….

وفي يومٍ من هذه الأيَّام التي سَبَقَت رحيل الجَيْشِ، عادَ الغلامُ عُمَيْرُ بنُ سَعدٍ إلى بَيْتِه بَعْدَ أداءِ الصلاةِ في المَسجِدِ وقد امتلأت نَفْسُه بطائفة مُشْرِقَةٍ من صُوَر بَذْلِ المسلمين وتَضحِيَتِهِم رَآها بِعَيْنَيه، وسَمِعَها بأذُنَيه.
فقد رأَى نسـاءَ المُهاجِرِين والأنْصارِ يُقْبِلْنَ على رسولِ اللّهِ صلى الله عليه وسلم  وَيَنْزَعْنَ حُلِيَّهنَّ ويُلْقِينَه بَيْنَ يَدَيْهِ لِيُجَهِّزَ بِثَمَنِه الجَيشَ الغازِيَ في سبيل اللّه.
وأبصرَ بعَيْنَيْ رأسِه عثمانَ بنَ عَفَّان يأتي بِجِراب فيه ألْفُ دينارٍ ذَهَباً، ويقدِّمُه للنبيِّ عليه الصلاةُ والسلامُ.
وشَهِدَ عبدَ الرحمن بنَ عَوف يَحْمِلُ على عاتِقِه مائتي أوقِيَّةٍ من الذَّهَبِ ويُلْقِيْها بين يَدَي النبيِّ الكريم.
بل إنَّه رأى رجلاً يَعْرِضُ فِراشَه للبَيْع لِيَشْتَرِيَ بِثَمَنِه سَيفاً يُقاتلُ به في سبيلِ اللّه.



அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தபூக் யுத்தத்திற்கான அழைப்பு விடுத்திருந்த தருணம் அது.. நீண்ட தூர பயணம், கடுமையான வெயிற்காலமும் கூட.. நிறைய நிதிகளும், தளவாடங்களும் தேவைப் பட்டது.

மக்களை அல்லாஹ்வின் பாதையில் அள்ளி அள்ளி வழங்குமாறு மாநபி {ஸல்} அவர்கள் ஆர்வமூட்டிக் கொண்டிருந்தார்கள். மக்களும் ஒவ்வொருவராக வந்து தங்களால் இயன்ற அளவு கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு ஏழை நபித்தோழர் தன் படுக்கை விரிப்பைக் கொண்டு வந்து சந்தையில் இதோ இந்த விரிப்பை யாரேனும் விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். தபூக்கிற்கான நிதியில் என் பங்கும் சேர வேண்டுமென நான் ஆவல் கொள்கிறேன்என்று கூறிக் கொண்டிருந்தார்.

ஒருவர் ஒரு திர்ஹத்திற்கு அதை வாங்கினார். அதைப் பெற்றுக் கொண்ட அந்த நபித்தோழர் விரைவாக மாநபியை நோக்கிச் சென்றார். தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உமைர் இப்னு ஸஅதுல் காரீ என்ற சிறுவர் அந்த நபித்தோழரைப் பின் தொடர்ந்தார்.

மஸ்ஜிதுன் நபவீயில் வீற்றிருந்த நபிகளாரின் கையில் ஒரு திர்ஹத்தை கொடுத்து விட்டு தமது உள்ளக் கிடக்கை வெளிப்படுத்தினார் அந்த ஏழை நபித்தோழர்.                                                                                                

அவர்  நபிகளாரை விட்டு நகர்ந்ததும்  உஸ்மான் {ரலி} அவர்கள் அங்கே வந்தார்கள். 1000 பொற்காசுகள் நிரப்பப்பட்ட ஒரு தோல் பையை மாநபியின் கரங்களில் கொடுத்துவிட்டுச் சென்றார்கள்.                                       

சிறிது நேரத்தில் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் {ரலி} அவர்கள் தமது தோள்களில் ஒரு பையைச் சுமந்து வந்து மாநபி {ஸல்} அவர்களின் முன் கொட்டினார்கள். பையிலிருந்து 200 ஊக்கியா தங்கக் கட்டிகள் வந்து விழுந்தது.                                                                                                                                        
இப்படியாக நபித்தோழர்கள் ஒவ்வொருவராக வருவதும், ஏதாவது கொடுத்து விட்டுச் செல்வதுமாய் இருந்தனர். இந்தக் காட்சியை மஸ்ஜிதின் வாசலில் நின்று கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் சிறுவரான உமைர் இப்னு ஸஅத்.

فَأخَذَ عُمَيْرٌ يَسْتَعيدُ هذه الصُّوَرَ الفَذَّةَ
الرائِعَةَ، ويَعْجَبُ من تباطُؤ الجُلاس عن الاسْتِعْدادِ للرَّحيلِ مع الرسولِ صلواتُ اللّه وسلامه عليه، والتأخّرِ عن البَذْل على الرغم من قدرته ويَسَاره

وكأنَّما أرادَ عُمَيْرٌ أنْ يَسْتَثيرَ هِمَّةَ الجُلاسِ ويَبْعَثَ الحَمِيَّةَ في نَفْسِه بم فاخَذَ يَقُصُّ عليه أخبارَ ما سَمِعَ ورأى وخاصَّةً خَبَرَ أولئك النَّفَرِ من المؤمنين الذين قَدِموا على رسولِ اللّه صلى الله عليه وسلم  ، وسألوه في لَوْعَةٍ أنْ يَضُمَّهُمْ إلى الجيش الغازي في سبيل اللّهِ فَرَدَّهم النبيُّ لأنَّه لم يَجِدْ عِنْدَه من الرَّكائبِ ما يَحْمِلُهم عليه، فَتوَلَّواوأعيُنُهُمْ تفيضُ من الدَّمْع حَزَناً ألاَّ يَجِدوا ما يُبلِّغُهُمْ أمْنِيَتّهَمْ في الجهاد، ويُحقِّقُ لهم أشواقَهُمْ إلى الاستِشْهادِ.
لكنَّ الجُلاسَ ما كادَ يَسْمَعُ من عُمَيْرٍ ما سَمِعَ حَتَّى انطلقت من فَمِه كلمة أطارتْ صوَابَ الفَتَى المؤمِن.
إذْ سَمِعَهُ يقول: "إنْ كان محمدٌ صادقاً فيما يَدَّعيه من النُبوَّةِ فَنَحْن شَر من الحَميِرِ".
***
لقد شُدِه عُمَيرٌ مِمَّا سَمِعَ؟ فما كان يَظُنُّ أنَّ رجلاً له عقل الجُلاسِ وسِنُّه تَنِدُّمن فَمِهِ مثلُ هذه الكلمةِ التي تُخْرِجُ صاحبها من الإيمان دفعةً، واحدةً وتُدْخِلُه في الكفرِ من أوْسَع أبوابه.
وكما تَنْطلقُ الآلاتُ الحاسِبَةُ الدقيقةُ في حِسابِ ما يُلْقَى إليها من المسائل، انطلق عَقْلُ الفَتَى عُمَيْرِ بنِ سعدٍ يُفَكِّر فيما يجب عليه أن يصنعه.
لقد رأى أنَّ في السكوتِ عن الجُلاسِ والتَّسَتُّرِ عليه خيانةً للّهِ ورسولِه، وإضراراً بالإسلام الذي يَكيدُ له المنافقون ويأتمرون به

وأنَّ في إذاعةِ ما سَمِعَـه عقوقاً بالرَّجُلِ الذي يَنْزِلُ من نَفْسِـه منْزِلَةَ الوالد، ومجازاةً لإحسانه إليه بالإساءةِ؛ فهو الذي آواه من يُتْم وأغْنَاهُ من فقر وعوّضه عن فَقْدِ أبيه.
وكان على الفتى أنْ يَخْتَارَ بَيْنَ أمْرَيْنِ أحْلاهُما مُرٌّ . وسرعان ما اختارَ...
فالتفتَ إلى الجُلاسِ وقال: واللّه يا جُلاسُ ما كانَ على ظَهْرِ الأرضِ أحدٌ بعْدَ محمد بنِ عبدِ للّه أحَبَّ إليَّ مِنْكَ.
فأنت آثرُ الناس عندي، وأجلُّهم يداً علَّي، ولقد قُلْتَ مَقَالةً إن ذَكَرْتُها فَضَحْتُكَ، وإنْ أخْفَيتُها خُنْتُ أمانتي وأهْلكْتُ نفسي وديني، وقد عزمتُ على أنْ أمْضِيَ إلى رسولِ اللّهِ صلى الله عليه وسلم  ، وأخْبِرَه بما قلت، فكن على بَيَنّةَ من أمرك.
***
مضى الفتى عميرُ بنُ سعدٍ إلى المسجدِ، وأخبرَ النبيَّ عليه الصلاةُ والسلامُ بما سَمِعَ من الجُلاسِ بن سُوَيْدٍ .
فاسْتَبْقاه الرسولُ صلواتُ اللّه عليه عنْدَه، وأرسلَ أحَد أصحابِه ليَدْعُوَ له الجُلاسَ.
وما هو إلا قليل حَتَّى جاءَ الجُلاسُ فَحَيّا رسولَ اللّه صلى الله عليه وسلم  ، وجَلَسَ بَيْنَ يَدَيْه، فقال له النبيُّ عليه الصلاةُ والسلامُ:
(ما مَقالة سَمِعَها مِنْكَ عُمَيْرُ بنُ سَعْدٍ ؟!) وذَكَرَ لَهُ ما قَالَهُ.
فقال: كَذَبَ علَّي يا رسولَ اللّه وافْتَرَى، فما تَفَوَّهْتُ بِشيءٍ من ذلك.
وأخَذَ الصَّحَـابَةُ يُنَقِّلون أبصارَهم بين الجُلاسِ وفَتَاه عُمَيْرِ بن سَعْدٍ كأنهم يريدون أن يَقْرَؤوا على صَفْحَتَي وَجْهَيْهماما يُكِنّه صدراهما.

وجعلوا يَتَهامَسون: فقال واحِدٌ من الذين في قلوبِهم مَرَضٌ فتًى عاق أبى إلا أنْ يُسِيءَ لِمَنْ أحسَنَ إليه.
وقال آخرون: بَل إنَّه غلام نَشَأ في طاعةِ اللّه، وإنَّ قَسَمَات وَجْهِه لَتَنْطِقُ بِصِدْقِه.
والتَفَتَ الرَّسولُ صلواتُ اللّهِ عليه إلى عمَيْرٍ فَرَأى وَجْهَهُ قد احتَقَنَ بالدَّمِ، والدُّموعُ تَتَحَدَّرُ مِدْراراً مِنْ عَيْنًيه، فتتساقَطُ على خَدَّهِ وصَدْرِه وهو يقول:
اللَّهُمَّ أنزِلْ على نَبيِّكَ بَيَانَ ما تَكلَّمْتُ به...
اللَّهُمَّ أنزِلْ على نَبيِّكَ بَيَانَ ما تَكلَّمْتُ به...
فانْبَرَى
الجُلاسُ وقال: إنَّ ما ذكرتُه لك يا رسول اللّهِ هو الحقُّ، وإن شِئْتَ تحالَفنا بَيْنَ يديك.
وإني أحْلِفُ باللّه أني ما قلتُ شَيئاً مِمَّا نَقَلَه لك عُمَيْر.
فما إنْ انتهى من حَلِفهِ وأخَذَتْ عيونً الناسِ تَنْتَقِلُ عنه إلى عمير بنِ سعدٍ حتى غَشِيَتْ
رسولَ اللّهِ صـلواتُ اللّه وسلامُه عليه السكينةُ، فعرَفَ الصحابةُ أنهُ الوَحيُ، فَلَزِموا أماكِنَهم وسَكَنَتْ جوارحُهم ولاذوا بالصَّمتِ
وتَعَلَّقَتْ أبصارُهم بالنبيِّ عليه الصلاة والسلام.

وهنا ظَهَرَ الخَوفُ والوَجلُ على الجُلاس، وبَدَا التَّلَهُّفُ والتَّشَـوُّفُ
على عُمَيْرٍ . وظَلَّ الجميعْ كذلك حَتَّى سُرِّي
عن رسولِ اللّهِ صلى الله عليه وسلم  ، فَتَلا قولَه جَلَّ وعَزَّ
 يَحْلِفُونَ باللّهِ ما قَالُوا ولَقَدْ قَالُوا كَلِمَةَ الكُفْرِ وكَفَرُوا بَعْدَ إسْلامِهِم
 إلى قوله تعالى
  فإنْ يَتُوبوا يَكُ
خيراً لهم وإنْ يَتَولَّوا يُعَذِّبْهُمُ اللّهُ عَذَاباً أليماً
فارتَعَدَ الجُلاسُ من هَوْلِ ما سَمِعَ، وكادَ يَنْعَقِدُ لِسَانُه من الجزع، ثُمَّ التَفَتَ إلى رسولَ اللّهِ صلى الله عليه وسلم  وقال: بل أتوبُ يا رسولَ الله ... بل أتوب...
صدق عميرٌ - يا رسول اللّه- كنتُ من الكاذبين.
اسْألِ اللّهَ أن يَقْبَلَ تَوْبَتِي، جُعِلْتُ فِدَاكَ يا رسولَ اللّهِ.
وهنا تَوجَّه الرسولُ صلواتُ اللّهِ عليه إلى الفتى عمير بنِ سعدٍ ، فإذا دُمُوعُ الفَرَح تُبَلِّلُ وَجْهَهُ المشرِقَ بنورِ الإيمانَ.

                                                                                               
வேகமாக தம் வீட்டிற்கு வந்தார். இவரின் தந்தை ஸஅத் {ரலி} அவர்கள் பத்ரில் கலந்து கொண்டு ஷஹீதாகி விட்டார். பின்னர் இவரின் தாயார் அர்மலா {ரலி} அவர்கள், ஜுலாஸ் இப்னு சுவைத் {ரலி} என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்கள்.                                                   

இப்போது வளர்ப்புத் தந்தையான ஜுலாஸ் {ரலி} அவர்களிடம் வந்து சந்தையிலிருந்து துவங்கி மாநபி {ஸல்} அவர்களின் தர்பார் வரையிலான தான்  கண்ட காட்சியை சொல்லிவிட்டு, ஆதங்கத்தோடு அச்சிறுவர் கேட்டார்..

 தந்தையே!  நீங்களும் பெரும் செல்வந்தர் தானே ஏன் நபி {ஸல்} அவர்களிடம் வந்து அல்லாஹ்விற்காக கொடை வழங்கவில்லை.? போய் நீங்களும் கொடுத்து விட்டு வாருங்கள். என்றார்.                                                                                                                                                                                      
அதற்கு, ஜுலாஸ் முஹம்மத் அவர் சொல்வதில் {கொள்கையில்} உண்மையாளராக இருப்பாரேயானால், நாம் கழுதையை விட கேடு கெட்டவர்களாக ஆகி விட்டிருப்போம்என்று சொன்னார்.                                                                

இதைக் கேட்ட உமைர் முஹம்மத் {ஸல்} அவர்கள் உண்மையாளர் தான் என்று நான் சாட்சி கூறுகின்றேன். நீர் தான் கழுதையை விட கேடு கெட்டவர்என்று உணர்ச்சிப் பொங்க கூறினார். இந்த பதிலை சற்றும் எதிர் பாராத ஜுலாஸ் மகனே தயவு செய்து இதை நபிகளாரிடம் சொல்லிவிடாதே என்று சொன்னார்.                                                

அப்போது உமைர் ஜுலாஸே! என்று பெயர் கூறி அழைத்து, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதுவரை  என் இதயத்தில் மனிதர்களில் மிகவும் உயர்ந்தவராக உம்மைத்தான் வைத்திருந்தேன். என் சிந்தையில் உம்மைத் தான் பெரும் கொடையாளியாக இருத்தியிருந்தேன். உம்மை கண்ணியமானவராகவும், நல்லவராகவும் கருதியிருந்தேன்.                                                                                                                                                       
ஆனால், நீர் சொன்ன ஒரு வார்த்தை உம் மீதான அனைத்து நன்மதிப்பையும் தூக்கி எறிய வைத்து விட்டது.                                                                           

இப்போது சொல்கிறேன் கேட்டுக்கொள்ளும்! நீர் பேசியதை மக்களிடம் தெரியப்படுத்தினால், நான் உம்மை கேவலப்படுத்தியது போல் ஆகி விடும். நீர் பேசியதை நான் மறைத்து விட்டால் மக்களெல்லாம் மதிக்கின்ற இறைத் தூதருக்கு நான் துரோகம் செய்தது போல் ஆகிவிடும்”.                                                                                                                                        

ஆகவே, கண்டிப்பாக நான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் சொல்வேன். என்றார்.                                                                                 

அதற்கு ஜுலாஸ் நீ சிறுவனாக இருப்பதால் உன் சொல்லை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.எனக் கொன்றும் கவலை இல்லை என்றார்.                                                                                                                                             
உமைர் மஸ்ஜிதுன்நபவி-க்கு வந்தார். மாநபி {ஸல்} அவர்களிடம் நடந்த சம்பவங்களை விவரமாகக் கூறினார்.                                                         

உறுதியான நெஞ்சோடும், உண்மைக்கும்,நீதிக்கும் சாட்சியாளனாய் நின்று சான்று பகர்வதை பொறுமையாய் கேட்டுக் கொண்டிருந்த மா நபி {ஸல்} அவர்கள் ஜுலாஸை அழைத்து வர ஒருவரை அனுப்பினார்கள்.                                                                                                        

அதற்குள் அங்கிருந்த சில நபித் தோழர்கள் ஜுலாஸ் நம்மோடு தான் தொழுகிறார். நம்மோடு தான் கலந்துறவாடுகிறார்அவர் அப்படி சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்றனர்.                                                                                                                

இன்னும் சிலரோ இப்படிச் சொன்னார்கள் சிறுவராக இருந்தாலும் இவரையும் நாங்கள் தொழக் கண்டிருக்கிறோம். மேலும், சிறுவரின் முகமே சொல்கிறது அவர் பொய் சொல்ல மாட்டார் என்று”.                                                 

ஜுலாஸ் வந்தார் வந்தவரிடத்தில் உமைர் சொல்வது உண்மையா? என்று நபியவர்கள் கேட்டார்கள்.                                                                

அதற்கு ஜுலாஸ் இல்லை! அல்லாஹ்வின் தூதரே! உமைர் பொய் சொல்கிறார்என்றார்.                                                                                                     

மாநபி {ஸல்} அவர்கள் உமைரை நோக்கி பார்த்தார்கள். நான் பொய் சொல்லவில்லை அல்லாஹ்வின் தூதரே! அவர் உங்களைப் பற்றி அப்படித்தான் சொன்னார்என்றார் உமைர்.                                                                

அப்போது அல்லாஹ்வின் மீது சத்தியமாச் சொல்கின்றேன்! நான் ஒரு போதும் அப்படிச் சொல்லவில்லைஎன்றார் ஜுலாஸ்.                                                           

இதைக் கேட்ட பிஞ்சு நெஞ்சம் பதறியது, கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாய் வந்தது.                                                                                                     

வானை நோக்கிப் பார்த்த உமைரின் பிஞ்சு வதனங்கள் அல்லாஹ்வே! உன் தூதரின் மீது என் விஷயத்தில் விளக்கத்தை இறக்கியருள்என்று மொழிந்தது. அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அமைதியானார்கள்.                                                                                                 
சுற்றியிருந்த நபித்தோழர்கள் விளங்கிக் கொண்டனர் மாநபியவர்களுக்கு இறைத்தூது {வஹீ} வந்து கொண்டிருக்கின்றது என்று.                                                                                                                                                                                                 
பின்பு நபி {ஸல்} அவர்கள் : நாங்கள் அவ்வாறு கூறவில்லைஎன்று அல்லாஹ்வின் மீது (மீண்டும் மீண்டும்) சத்தியம் செய்கின்றார்கள். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின் நிராகரிப்பை மேற்கொண்டு விட்டார்கள். மேலும், தம்மால் செய்ய முடியாத செயலை செய்ய நினைத்தார்கள். தன்னுடைய அருளால் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்குச் செல்வம் வழங்கியதற்காகவா, அவர்கள் இவ்வளவு வெறுப்புக் கொள்கிறார்கள்! அவர்கள் தம்முடைய இந்நடத்தையில் இருந்து விலகிக் கொண்டால் அது அவர்களுக்குச் சிறந்ததாகும்.விலகிக் கொள்ளாவிட்டால் அல்லாஹ் அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் துன்புறுத்தும் தண்டனை அளிப்பான். இப்பூமியில் அவர்களை ஆதரிப்போரையும்,அவர்களுக்கு உதவிசெய்வோரையும் பெற்றுக் கொள்ளமாட்டார்கள்.அல்குர்ஆன்:9:74. எனும், வசனத்தை ஓதிக்காட்டி இப்போது தான் ஜிப்ரீல் {அலை} அவர்கள் இந்த வசனத்தை தந்து விட்டுச் செல்கிறார்கள். என்றார்கள்.                                                                                                                

இதைக் கேட்ட ஜுலாஸ் அல்லாஹ்வின் தூதரே! எனக்காக அல்லாஹ்விடம் தவ்பாச் செய்யுங்கள். நானும் தவ்பாச் செய்கிறேன். உமைர் உண்மைதான் சொன்னார். நான் தான் பொய் சொன்னேன்.என்று கூறியவாறு கண்ணீர் விட்டு அழுதார்.                                                                                                                                                                         
அப்போது, முகம் நிறைய மகிழ்ச்சியோடு நின்று கொண்டிருந்த உமைர் இப்னு ஸஅத் {ரலி} அவர்களை மாநபி {ஸல்} அவர்கள் தம் அருகே அழைத்து,

فمدَّ الرسولُ يَدَه الشريفةَ إلى أذنه وأمسكَها بِرِفْق وقال: (وَفَّت أذُنُكَ- يا غلامً- ماسَمِعَتْ، وصَدَّقَكَ رَبُّك).                                                                                                                                                         
அவரின் காதுகளை வருடிவிட்டு சிறுவனே!  உம்முடைய காது அதன் பொறுப்பை நிறைவேற்றியது! மேலும், உன்னுடைய இறைவனும் நீ உண்மையாளன் தான் என்பதை உறுதிபடுத்திவிட்டான்என்று கூறினார்கள்.

                இந்த ஹதீஸை தன் தந்தை சுபைர் {ரலி} அவர்கள் மூலமாக அறிவிக்கக்கூடிய உர்வா {ரஹ்} அவர்கள் இந்த சம்பவத்திற்குப் பிறகு உமைர் {ரலி} அவர்களின் வாழ்க்கையில், அவர் மரணிக்கும் வரை மிக உயர்வான நிலை மட்டுமே காணப்பட்டது.என்று தம் தந்தை சுபைர் {ரலி} தம்மிடம் சொன்னதாக கூறுகிறார்கள்.      
                                                                                        
இந்த ஹதீஸை உர்வா {ரஹ்} அவர்களிடமிருந்து அறிவிக்கும் இப்னு ஸீரீன் {ரஹ்} அவர்கள் இந்த சம்பவத்திற்குப் பின் ஈமானை சீர் குலைக்கும் எந்த ஒரு செயலிலும் ஜுலாஸ் {ரலி} அவர்கள் ஈடுபடவில்லை. என்று கூறுகின்றார்கள்.
                                                                                               
ஹூமைத் இப்னு ஜஅஃபர் {ரஹ்} அவர்கள், அவர்களின் தந்தையின் வாயிலாக அறிவிக்கின்றார்கள். இந்த சம்பவத்திற்குப் பின்னர் ஜுலாஸ், உமைர் {ரலி} அவர்களை முன்பை விட மிக சிறப்பாக நடத்தினார். தான் நேர்வழி அடைய உமைர் தான் காரணம் என்று அடிக்கடி சொல்வார்களாம்.

(  நூல்:துர்ருல் மன்ஸூர், பாகம்:3, பக்கம்:463,464,  முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக், ஹதீஸ் எண்:18303. அல் இஸ்தீஆப்,1/151,152,153. 2/158,159. )

தன் செவியை நேர்மையாக பயன்படுத்திய உமைர் (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய வெகுமதி என்ன தெரியுமா?

உமைர் இப்னு ஸஅத் (ரலி) அவர்களின் குரலில் இனிமையை வழங்கி, அவர்கள் குர்ஆன் ஓதினால் கேட்போரின் செவிகளிலும், நெஞ்சங்களிலும் அல்லாஹ் நிம்மதியை, அமைதியைத் தவழச் செய்தான்.

அதிகாலை நேரங்களில் அவர் குர்ஆன் ஓதுவதைக் கேட்க மதினா நகரெங்கிலும் உள்ள நபித்தோழர்கள் அவர்களின் வீட்டு வாசல் முன் குவியத் தொடங்கி விடுவார்கள்.

பரபரப்பான, யுத்த காலங்களிலும் கூட ஓய்வு நேரத்தில் உமைர் (ரலி) அவர்களை குர்ஆன் ஓதச் சொல்லி நபித்தோழர்கள் உள்ளத்திற்கும், உடலுக்கும் புத்துயிர்ச்சி ஊட்டிக்கொள்வார்கள்.

உமர் (ரலி) அவர்கள் தங்களின் ஆட்சிக்காலத்தில் ஹிம்ஸ் பகுதியின் ஆளுநராய் நியமித்து அந்த பதவிக்கு அழகிய மகுடமும் சூட்டி அழகு பார்த்தார்கள்.

வாழ்க்கையில் இந்தளவு உயரம் எட்ட அவருக்கு துணை நின்றது அவரின் சிறு பிராயத்தில் நிகழ்ந்த அந்த நிகழ்வில் அவர் நடந்து கொண்ட அந்த விதம் தான்.

உயிரோட்டம் பெற உயிர்ப்போடு செவி சாய்த்துக் கேட்க வேண்டும்…

இந்த உம்மத்தின் சீர்குலைவுக்குப் பெரும் காரணம் வெள்ளிக்கிழமை குத்பாவின் - பயானின் முக்கியத்துவத்தை இந்த உம்மத் உணராமல் போனது தான்.

சாதாரண நேரத்தில் ஆற்றுகின்ற உரைக்கும் ஜும்ஆ உரைக்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.

மக்களில் சிலர் நேரத்திற்கு வந்து கடமைக்காக குத்பாவுக்குக் காதுகொடுத்துக் கேட்கின்றனர். மற்றும் சிலர் கடைசி நேரத்தில் வந்து கலந்து கொள்கின்றனர். இந்த நிலை நீங்க வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் ஆன்மீக எழுச்சியிலும், சமூக மறுமலர்ச்சியிலும் குத்பாக்களுக்கு முக்கிய பங்குள்ளது.

வெள்ளிக்கிழமை தினத்தில் மஸ்ஜித்களின் வாயில்களில் மலக்குளால் பள்ளிக்கு வருபவர்களைப் பதியப்படுகின்றது. இமாம் (குத்பா நிகழ்த்துவதற்காக) வந்துவிட்டால் மலக்குகள் ஏட்டை மூடிவிட்டு குத்பா உரையை செவிமடுப்பார்கள்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.” ( நூல்: நஸாஈ: 1386, இப்னுமாஜா: 1092, இப்னு குஸைமா: 17691 )

إِنَّ فِي ذَلِكَ لَذِكْرَى لِمَنْ كَانَ لَهُ قَلْبٌ أَوْ أَلْقَى السَّمْعَ وَهُوَ شَهِيدٌ

சிந்தித்துணரும் இதயமும், கவனமாக செவிமடுக்கும் திறனும் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் அறிவுரையில் படிப்பினைகள் பல இருக்கின்றன.”

فَبَشِّرْ عِبَادِ (17) الَّذِينَ يَسْتَمِعُونَ الْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُ أُولَئِكَ الَّذِينَ هَدَاهُمُ اللَّهُ وَأُولَئِكَ هُمْ أُولُو الْأَلْبَابِ

”(நபியே!) சொற்பொழிவுகளைக் கேட்டு, அவற்றில் சிறந்த அம்சத்தைப் பின் பற்றுகிற என் அடியார்களுக்கு நீர் நற்செய்தி அறிவித்து விடுவீராக! இத்தகையவர்களுக்குத் தான் அல்லாஹ் நேர்வழி காட்டியிருக்கின்றான். அவர்களே விவேகம் உடையவர்கள் ஆவார்கள்.                    ( அல்குர்ஆன்: 39: 17, 18 )

இன்ஷா அல்லாஹ்….. வரும் வாரமும் தொடரும்….

8 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ்
    மௌலானா உஸ்தாத் அவர்கள் அருமையான தகவல்

    அல்லாஹ் அவர்களின் சேவையை கபூல் செய்வானாக ஆமீன்...

    ReplyDelete
  2. அல்லாஹ் அவருக்கு நீண்ட ஆயுளை தருவானாக ஆமீன்

    ReplyDelete
  3. ما شاء الله ! ما شاء الله !

    ReplyDelete
  4. ما شاء الله ! ما شاء الله !

    ReplyDelete
  5. செவியை பாதிக்கக்கூடிய வெடியில் இருந்து முஸ்லிம் சமூகம் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற முறையில் 28/10/2016 ஜும்ஆ அன்று பயான் செய்ய அருமையான குறிப்புகளை வழங்கியுள்ளீர்கள் உஸ்தாத். جزاكم الله خيرا كثيرا

    ReplyDelete