ஹாதியாவின் போராட்டமும்.... ருக்ஷானாவின்
மரணமும்...
இந்த உம்மத்திற்கு சொல்லும் பாடங்கள்!!!
சமீபத்திய இரண்டு நிகழ்வுகள் முஸ்லிம் சமூகத்தை
மிகப் பெரிய அளவில் உலுக்கி இருக்கின்றது என்றால் அது மிகையல்ல.
ஒன்று, சாதாரணமான ஒரு நிகழ்வு தேசிய அளவில் மிகப்
பெரிய சர்ச்சைக்குரிய விவகாரமாக மாற்றப்பட்டு, கேரள உயர்நீதி மன்றம் மற்றும் உச்ச
நீதிமன்றம் ஆகியவற்றின் தலையீடுகளைத் தொடர்ந்து தேசிய ஊடகங்களில் விவாதப் பொருளாக
ஆகியிருக்கின்றது.
இரண்டு, கடுமையான ஒரு நிகழ்வு ஆனால், பெரிய
அளவில் கவனிக்கப்படாமல், ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்டு தமிழக உயர் நீதி
மன்றத்தின் தீர்ப்பை எதிர் நோக்கி காத்திருக்கின்றது.
இரண்டுக்குமே அடிப்படைக் காரணம் இஸ்லாம்,
முஸ்லிம் எனும் அடையாளம் தான்.
முதலில் இரண்டு நிகழ்வுகளையும் சுருக்கமாக ஓர்
பார்வை பார்த்து விட்டு வருவோம்!
கேரளாவின் மலப்புரம் மாவட்டம், வைக்கம் எனும்
ஊரைச் சார்ந்த அசோகன் மணி மற்றும் பொன்னம்மா தம்பதியரின் மகளான அகிலா
பள்ளிப்படிப்பை முடித்த கையோடு 2015 –ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில்
உள்ள ஓர் கல்லூரியில் இளங்கலை ஹோமியோபதி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை
தொடர்பாக படிக்க சேர்ந்தார்.
கல்லூரியில் படிக்கும் சக தோழியர்களோடு ஒரு
வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு தங்கிக் கொண்டு கல்லூரியில் படித்து வந்தார்.
கல்லூரியில் தன்னோடு படிக்கும் சக இஸ்லாமியப்
பெண்களோடு நட்புறவு அதிகமாகி, இஸ்லாத்தின் கொள்கை மற்றும் பண்பாடுகள், பழக்க,
வழக்கங்களால் கவரப்பட்ட அகிலா நாளடைவில் இஸ்லாமிய பண்பாடுகளைக் கடைபிடிக்க
ஆரம்பித்தார்.
தொடர்ந்து, இஸ்லாமிய நூற்களைப் படிப்பது,
இணையத்தில் இருந்து இஸ்லாமிய சொற்பொழிவுகளை கேட்பது என்று இஸ்லாமிய அறிவை பெரிதாக
வளர்த்துக் கொண்டார், ஆரம்பத்தில் இரகசியமாக ஹிஜாப் அணிந்து வந்தவர் ஒரு
கட்டத்தில் தைரியமாக ஹிஜாப் அணிந்து கல்லூரிக்குள் வலம் வர ஆரம்பித்தார்.
இதற்கிடையில் 2015 டிசம்பர் மாதம் தாத்தாவின்
இறப்பிற்காக சொந்த ஊர் சென்ற அவர் இந்து மதச் சடங்குளில் இருந்து முழுமையாக
ஒதுங்கிக் கொண்டார்.
ஊர் சென்று திரும்பி வந்த அகிலா முன்பை விட
பகிரங்கமாக இஸ்லாமிய பண்பாடுகளை கடைபிடிக்க ஆரம்பித்தார்.
2016 ஜனவரி 2 –ஆம் தேதி ஊர் சென்ற அகிலா
வீட்டில் தொழுகையை நிறைவேற்றினார். இதனைக் கண்ட பெற்றோர் கடும் கோபமடைந்து திட்டவே
அங்கிருந்து கோபத்தோடு சேலம் வந்தார்.
2016 ஜனவரி 6 –ஆம் தேதி ஹிஜாப் அணிந்து கொண்டு
எங்கோ வெளியில் சென்றதை சேலத்தில் உள்ள அசோகனின் நண்பர் கண்டு அசோகனுக்கு தெரியப்
படுத்தினார்.
இந்த தகவல் கிடைத்ததும் அகிலாவின் பெற்றோர் ஊர்
வருமாறு அழைப்பு விடுத்தனர்.
ஊர் சென்றால் என்ன நடக்கும் என்பதை நன்கு
அறிந்து வைத்திருந்த அவர் ஊர் செல்லாமல் வாடகை வீட்டை காலி செய்து விட்டு, தமது
தோழியின் வீடு ஒன்றில் அடைக்கலமானார்.
இதுவரை அகிலாவாக இருந்து கொண்டு தான் செய்து
கொண்டிருந்ததை முறைப்படி இஸ்லாத்தை தழுவி ஹாதியாவாக தன்னை மாற்றிக் கொண்டு செயல்பட
ஆரம்பித்தார்.
இதன் பின்னர் இஸ்லாமிய சட்ட திட்டங்களை முறையாக
அறிய ஹாதியா சத்திய சாரணி எனும் நிறுவனத்தில் சேர்ந்தார்.
இதற்கிடையில், ஹாதியாவின் தந்தை 2016 ஜனவரி 6 –ஆம்
தேதி முதல் தமது மகளை காணவில்லை என்றும் தனது மகளின் தோழிகள் அவளை கடத்தி
இருக்கலாம் என்றும் ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
உடனடியாக மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம்
விரைவாக செயல்பட்டு விசாரித்து “ஹாதியாவின் மதமாற்றத்தில் எவ்வித
நிர்ப்பந்தங்களும் ஏற்பட வில்லை என்று உறுதி செய்த நீதிமன்றம் அசோகனின் மனுவை
தள்ளுபடி செய்ததோடு, ஹாதியா சத்திய சாரணியில் தனது இஸ்லாமிய படிப்பை தொடர்ந்து
படிக்க அனுமதியளித்து சைனபா எனும் சமூக ஆர்வலரை ஹாதியாவிற்கு பாதுகாவலராக
நியமித்து உத்தரவிட்டது.
அடுத்ததாக அசோகன் மீண்டும் 2016 ஆகஸ்ட் 17 –ஆம்
தேதி அடுத்த ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அதில், “தனது மகளை யாரோ ஏமாற்றி
மதம் மாற்றி விட்டதாகவும், அவளை தீவிரவாத அமைப்புகளில் சேர்த்து வெளி நாட்டிற்கு
அனுப்ப சதி செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
தனது நிலையை விளக்கி தந்தைக்கு கடிதம் எழுதிய
ஹாதியா ”தன்னை யாரும் ஏமாற்றி மதம் மாற்றவில்லை என்றும், தாமாக விரும்பி மதம்
மாறியதாகவும், தான் தேசவிரோத செயல்களில் ஈடுபடுபவள் அல்ல என்றும், தந்தையின்
குற்றச்சாட்டு தனக்கு மன வேதனையை அளிப்பதாகவும்” குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து, சத்தியப் பாதையில் பயணிக்கவும்,
தனக்கு முன்பாக உள்ள சவால்களை எதிர் கொள்ளவும் தனக்கு ஓர் துணை அவசியம் தேவை
என்பதை உணர்ந்த ஹாதியா மலப்புரத்தைச் சேர்ந்த ஷஃபின் ஜஹான் என்பவரை 2016 டிசம்பர்
19 அன்று திருமணம் செய்து கொண்டார்.
இதன் பின்னர், ஹாதியாவின் தந்தை அசோகன் தரப்பு
வழக்கறிஞர் ஹாதியா ஏமாற்றப்பட்டு திருமணம் செய்யப்பட்டுள்ளார் என்று கேரள
உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
மனுவை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள்
ஹாதியாவின் திருமணம் செல்லாது என்றும், ஹாதியாவிற்கு செல்போன் உள்ளிட்ட தொடர்பு
சாதன்ங்களை கொடுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டு, அவரை கண்காணிக்க பெண் ஒருவரையும்
நியமித்து தீர்ப்பளித்தனர்.
இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து
ஹாதியாவின் கணவர் ஷஃபின் ஜஹான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
2017 ஆகஸ்ட் 16 அன்று இதை விசாரித்த உச்ச
நீதிமன்றம் “ஹாதியா இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சம்பவம் மற்றும் அவரின் திருமணம்
தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய புலனாய்வு குழுமமான என்.ஐ.ஏ
விற்கு உத்தரவிட்டதுடன் அந்த விசாரணையை உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் மேற்பார்வை
செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளது.
18 வயதை பூர்த்தியடைந்த ஒரு இந்தியப் பிரஜை
தான் விரும்பிய மதத்தைத் தேர்ந்தெடுக்கவும், தான் விரும்பியவரை திருமணம் செய்யவும்
முழு உரிமையும், சுதந்திரமும் வழங்கப்பட்டிருப்பதாக அரசியல் சாசனத்தில்
சொல்லப்பட்டிருந்தாலும் நீதிமன்றம் தலையிட்டு திருமணத்தை ரத்து செய்திருப்பதும்,
அவரின் மதமாற்றத்திற்கான உண்மையைக் கண்டறிய என். ஐ. ஏ யிடம் ஒப்படைத்து இருப்பதும்
மோசமான ஒரு முன்னுதாரணமாகும் என்பதே வெகுஜன மக்களின் கருத்தாகும்.
தற்போது பெற்றோர் வீட்டில் சிறை
வைக்கப்பட்டிருக்கும் ஹாதியாவை மீண்டும் இந்து மதத்திற்கு திருப்புவதற்கான அனைத்து
முயற்சிகளும் மேற்கொள்ளப் படுகின்றன.
ஆளும் இடதுசாரி அரசின் ஒத்துழைப்பு,
காவல்துறையின் பாதுகாப்பு, ஆர்.எஸ்.எஸ்ஸின் கண்காணிப்பு என ஹாதியாவின் உரிமைகள்
முற்றிலுமாக மறுக்கப்பட்டு வெளியுலகின் எவ்வித தொடர்பும் இன்றி
முடக்கப்பட்டிருப்பினும் அனைத்து தடைகளையும் எதிர் கொண்டு ஹாதியா தனது போராட்டத்தை
தொடர்ந்து உயிர்ப்போடு நடத்தி வருகின்றார்.
( அல்லாஹ் ஹாதியாவிற்கு துணை நிற்பானாக! ஆமீன்!! )
கோவை, சாய்பாபா காலனியைச் சேர்ந்தவர் ஹைதர்
ஷெரீஃப், இவரது மகள் ருக்ஷானா வயது 21, பி.எஸ்.சி பட்ட்தாரியான இவர் கடந்த 16 –ஆம்
தேதி தோழி ஒருவரின் வீட்டிற்கு புத்தகம் வாங்கச் செல்கிறேன் என்று சென்றவர்
மீண்டும் வீடு திரும்பவில்லை.
பெற்றோர் மற்றும் குடும்பத்தார் எங்கு தேடியும்
கிடைக்காததால் 19/10/2017 அன்று சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார்
செய்தனர்.
ருக்ஷானா மொபைல் போனிலிருந்து கடைசியாக
சரவணம்பட்டியைச் சார்ந்த பிரசாந்த் ( வயது 25, தனியார் நிறுவன சாஃப்ட்வேர்
இஞ்ஜினியர் ) என்பவருடன் பேசியது தெரிய வந்தது. பிரசாந்தை பிடித்து விசாரித்ததில்
மேட்டுப்பாளையத்திற்கு அருகிலுள்ள கல்லாற்றில் ருக்ஷானாவை கொலை செய்து புதைத்து
வைத்திருக்கும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
இந்த தகவலை அடுத்து அங்கு சென்ற போலீஸார் ருக்ஷானாவின்
பிரேதத்தைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்டமாக மிகக் கொடூரமாக கொலை
செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இதன் பின்னர், ருக்ஷானா குறித்து வாட்ஸ்அப்
மற்றும் இணையத்தில் அவர் மாற்றுமதத்தவரான பிரசாந்த் உடன் நெருங்கி இருப்பது போன்ற
புகைப்படங்கள் வெளியாகியது. அவர் சில வருடங்களாக அவரை காதலித்து வந்ததாகவும்,
அவரோடு இணைந்து பல இடங்களில் ஜோடியாக சுற்றித் திரிந்ததாகவும் பரவலாக செய்திகள்
வெளியாகின.
இந்நிலையில், ”ருக்ஷானாவின் பெற்றோர் கடந்த 6
மாதத்திற்கு முன்பாக பிரசாந்த் எங்கள் வீட்டிற்கு வந்து தகராறு செய்தான். நாங்கள்
அப்போது சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். வழக்கும் பதிவு
செய்யப்பட்டது.
எனினும், பிரசாந்த் மீது எந்த நடவடிக்கையையும்
காவல் துறை மேற்கொள்ள வில்லை. இந்நிலையில் தான் எங்கள் மகளை கடந்த 22/10/2017
அன்று பவானி கல்லாற்றின் பாறைப் பொதும்பில் நிர்வாண நிலையில் மிகக் கொடூரமாக கொலை
செய்யப்பட்ட நிலையில் பிணமாகக் கண்டோம்.
ஆனால், எங்களது மகள் மரணம் குறித்து தவறான
தகவல்களை ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பதிவு செய்து இறந்து போன நபரை
மீண்டும், மீண்டும் படுகொலை செய்கின்றனர்.
எங்கள் மகள் மிகவும் நல்லொழுக்கத்துடன்
வாழ்ந்து வந்ததோடு, எங்களின் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்பவராகவே இருந்து
வந்தார். அவருக்கு எதிர் வரும் ஜனவரி 2018 –இல் திருமணம் செய்ய உத்தேசித்து
அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு இருந்தோம்.
எங்கள் மகள் திட்டமிட்டு கொலை
செய்யப்பட்டுள்ளார். கொலை நடந்த விதம் மேற்படி சம்பவத்தில் ஒரு நபர் மட்டும்
ஈடுபட்டிருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதையே காட்டுகிறது.
எனவே, இதன் பின்னணியில் உள்ளவர்கள், மற்றும்
இதற்கு உதவியவர்கள் ஆகியோரையும் விசாரித்து நடவடிக்கை எடுக்கும் வரையிலும்
சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடாமல்
இருக்கும் வகையிலும் எங்கள் மகள் கொலை வழக்கு சிறப்பு பிரிவு விசாரணைக்கு மாற்றம்
செய்யப்பட வேண்டும்” என கோவை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.
ஊடகங்களிலும், வலைத்தளங்களிலும் ருக்ஷானா
குறித்து வலம் வந்த செய்திகளுக்கும், அவரின் பெற்றோர்கள் காவல் ஆணையரிடம் அளித்த
புகாருக்கும் பல்வேறு வித்தியாசங்கள் இருக்கின்றன. இதுவரை கொலைக்கான காரணம்
எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை, எனினும் உண்மைகளை அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
சுவாதி கொலையை ஊடகங்கள் கையாண்ட விதமும் ருக்ஷானா
கொலையை ஊடகங்கள் கையாளும் விதமும் முற்றிலும் வேறுபட்டிருப்பதை உணர முடிகின்றது.
நிர்வாண நிலையில், மிகக் கொடூரமாக கொலை
செய்யப்பட்டு கிடந்த அந்தச் சடலம் ஓர் முஸ்லிம் பெண்ணிற்குரியது என்பதால் இந்தப் பாரபட்சம்
என்றிருந்தால் ஊடக தர்மம் என்பதெல்லாம் அது வெறும் வெற்றுச் சவடால் தான்.
சரி, இனி விஷயத்திற்கு வருவோம்! ஹாதியாவின்
போராட்டமும் ருக்ஷானாவின் மரணமும் இந்த உம்மத்திற்கு சொல்லவரும் பாடங்களையும்,
படிப்பினைகளையும் நாம் மறுக்காமல் ஏற்றுத் தான் ஆக வேண்டும்.
அவைகளை சீர் தூக்கிப் பார்த்து நம் வாழ்வை சரி
செய்து தான் ஆக வேண்டும்.
வாருங்கள்! பாடங்களையும், படிப்பினைகளையும்
பார்த்து விட்டு வருவோம்!!!
முதலில் ருக்ஷானாவின் மரணம் தருகிற பாடம்
என்னவென்று பார்ப்போம்!
அல்லாஹ் அந்தச் சகோதரியின் பாவங்களை மன்னிப்பானாக!
அவரை இழந்து வாடும் அவரின் பெற்றோருக்கு அழகிய பொறுமையை வழங்குவானாக! ஆமீன்!!
ருக்ஷானாவின் விவகாரத்தைப் பொறுத்தவரை அவர்
மாற்று மதத்தவரை காதலித்தாரா? இல்லையா? என்கிற ஆய்வுக்கு நாம் செல்ல வேண்டாம்.
நமக்கு அது அவசியமும் இல்லை.
தற்போதைய காலத்தில் ஒரு பெற்றோர் தங்களுடைய
பெண் மக்களுக்கு வழங்கும் கட்டற்ற, முழுமையான சுதந்திரம் அவர்களை எங்கு கொண்டு
போய் சேர்த்து விடும் என்பதற்கான சாட்சி தான் இந்த மரணம்.
பெற்றோர் எனும் உயரிய
பொறுப்பு....
உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் பொறுப்புகள்
வழங்கப் பட்டிருப்பதாக இஸ்லாம் வலியுறுத்திக் கூறுகின்றது. அத்தோடு நின்று விடாமல்
அப்பொறுப்புக்களை மிகச் சரியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் இஸ்லாம் தூண்டுகின்றது.
பொறுப்புக்களைச் செய்யாமல் தட்டிக்
கழிக்கிறவர்கள், பொறுப்புக்களில் இருந்து விலகிச் செல்கிறவர்கள் நாளை மறுமையில்
இறைவனின் திருமுன் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டு, வழங்கப்பட்ட பொறுப்புக்கள்
குறித்து விசாரிக்கப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படுவார்கள் என எச்சரிக்கையும்
செய்கின்றது.
ஆகவே, எனக்கு எந்தப் பொறுப்பும் கிடையாது என்று
உலகில் எவரும் கூறிட இயலாது.
அந்த வகையில் அல்லாஹ் வழங்கியிருக்கும்
பொறுப்புக்களில் மகத்தான பொறுப்பு பெற்றோர் எனும் பொறுப்பாகும்.
அந்த பொறுப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள
மக்கட்செல்வங்கள் குறித்து, வளர்ப்பு குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அந்தப் பொறுப்பு எவ்வளவு கனமானது என்பது
குறித்து கீழ் வரும் இறை வசனம் உணர்த்துகின்றது.
“எங்கள் இறைவா! எங்கள் துணையை, எங்களின்
சந்ததிகளை எங்களுக்கு கண் குளிர்ச்சியாக நீ ஆக்கிவிடு! மேலும், எங்களை
இறையச்சமுடையோருக்கு தலைமை வகிக்கும் பண்புடையோராகவும் நீ ஆக்கியருள்” என்று
ரஹ்மானின் அடியார்கள் பிரார்த்திப்பார்கள்.
(
அல்குர்ஆன்: 26: 74 )
அதிலும் குறிப்பாக பெண்மக்களை வளர்த்தெடுக்கும்
விஷயத்தில் மிகவும் சிரத்தையோடும், அதிக கவனத்தோடும் நடந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில், பெண்மக்கள் என்பவர்கள் அல்லாஹ்வின்
மகத்தான அருட்கொடையாவார்கள்.
ஆம்! அல்லாஹ்வின் புறத்திலிருந்து
அபிவிருத்தியையும், சோபனங்களையும் கொண்டு வந்து சேர்ப்பவர்கள்.
عن أنس بن مالك ـ رضي الله عنه ـ قال: قال رسول الله ـ صلى الله عليه وسلم
ـ: ( مَنْ عال جارتين (بنتين) حتى تبلغا، جاء يوم القيامة أنا وهو وضم أصابعه ) رواه
مسلم
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “எவருக்கு இரண்டு பெண் மக்கள் இருந்து அவர்கள் திருமண வயதை அடையும்
வரை அழகிய முறையில் வளர்த்தெடுக்கின்றாரோ அவரும், நானும் இருவிரல்களை
இணைத்துக் காட்டி இது போன்று மறுமையில் இருப்போம்” என்று நபி {ஸல்} கூறினார்கள். ( நூல்: முஸ்லிம்)
وعن أنس ـ رضي الله عنه ـ أن النبي ـ صلى الله عليه وسلم ـ قال: ( مَن عال
ابنتينِ أو ثلاثًا، أو أختينِ أو ثلاثًا، حتَّى يَبِنَّ (ينفصلن عنه بتزويج أو موت)،
أو يموتَ عنهنَّ كُنْتُ أنا وهو في الجنَّةِ كهاتينِ - وأشار بأُصبُعِه الوسطى والَّتي
تليها ) رواه ابن ماجه وصححه الألباني
“எவருக்கு இரண்டு அல்லது மூன்று
பெண்மக்களோ அல்லது இரண்டு அல்லது இரண்டு அல்லது மூன்று சகோதரிகளோ இருந்து அவர்களை அழகிய
முறையில் வளர்த்தார்களோ அவரும், நானும் இருவிரலை இணைத்துக்
காட்டி சுவனத்தில் இப்படி இருப்போம்” என நபி {ஸல்} கூறினார்கள். ( நூல்:
திர்மிதீ )
وعن عقبة بن عامر ـ رضي الله عنه ـ أن النبي ـ صلى الله عليه وسلم ـ قال:
( مَنْ كان له ثلاث بنات فصبَرَ علَيْهِنَّ، وأطعَمَهُنَّ وسقاهُنّ، وكساهُنَّ مِنْ
جِدَتِهِ (سعته وطاقته)، كُنَّ لَهُ حجاباً مِن النارِ يومَ القيامة )، وفي رواية الترمذي
“எவருக்கு மூன்று பெண்மக்கள்
இருந்து அவர்களை வளர்ப்பதில் உள்ள சிரமங்களை பொறுமையோடு எதிர்கொண்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாழ்வாதாரத்தைக் கொண்டு உண்ண உணவும், குடிக்க பானமும், உடுத்த உடையும் வழங்கினார்களோ
அந்த பெண்மக்கள் நாளை மறுமையில் அவர்களின் பெற்றோர் நரகில் நுழைவதற்கு பெரும் தடுப்புச்
சுவராக இருப்பார்கள்” என நபி {ஸல்} கூறினார்கள்.
( நூல்: திர்மிதீ )
وعن أبي سعيد الخدري ـ رضي الله عنه ـ قال: قال رسول الله ـ صلى الله عليه
وسلم ـ: ( مَن كان له ثلاثُ بناتٍ أو ثلاثُ أخَوات، أو ابنتان أو أُختان، فأحسَن صُحبتَهنَّ
واتَّقى اللهَ فيهنَّ َفلهُ الجنَّةَ ) رواه الترمذي
“எவருக்கு இரண்டு அல்லது மூன்று
பெண்மக்கள் அல்லது சகோதரிகள் இருந்து அவர்களோடு அல்லாஹ்வைப் பயந்து, அழகிய முறையில் நடந்து கொள்கின்றாரோ அவருக்கு கட்டாயம் சுவர்க்கம்
உண்டு” என பூமான் நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்:
திர்மிதீ )
பெண் மக்களுக்கான வழிகாட்டலில் மிகச் சிறந்தது
எது?
இன்றைய முஸ்லிம் சமூகத்தில் மார்க்கம் என்ற
பெயரில் பெண் சமூகத்திற்கு ஹிஜாப் அணிவது, கணவனுக்கு பணிவிடை செய்வது, மாற்றாரின்
கண்படாமல் இருப்பது என்பன போன்ற விஷயங்களை மட்டுமே திரும்பத் திரும்ப போதிக்கப்
பட்டு வருகின்றது.
நவீன காலத்தில் வாழும் பெண்களுக்கு இந்தப்
போதனைகள் மட்டும் போதாது.
ஒரு பெண் தனக்கு முன்பாக குவிந்து கிடக்கும்
சவால்களை எப்படி எதிர் கொள்வது?
ஒரு பெண் தனக்கு எதிராக சமூகத்தில் உள்ள தடைகளை
எப்படி எதிர் கொள்வது?
ஒரு பெண் சமூகத்தில் தனக்கான பாதுகாப்பை
எவ்வாறு மேம்படுத்துவது?
உடல் மற்றும் மன ரீதியான சீண்டல்களிலிருந்து
எவ்வாறு தன்னை காத்துக் கொள்வது?
அந்தந்த வயதில் எது நல்லவை? எது தீயவை? என்ற
புரிதலையும், எந்த உறவு நல்ல உறவு? எது தவறான உறவு? என்பன போன்ற அறிவையும்
சேர்த்தே அல்லவா மார்க்கம் கற்றுக் கொடுக்குமாறு ஏவுகின்றது.
மார்க்கத்தின் அடிப்படைகளோடு இவைகள்
அனைத்தையும் ஒருங்கே கற்றுக் கொடுப்பதே மிகச் சிறந்த ஒரு பெற்றோரின் உயரிய
கடமையாகும்.
லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களின்
மகனுக்கு செய்த உபதேசங்களை பட்டியலிடும் அல்குர்ஆனின் வசனங்களை என்றாவது நாம்
முழுமையாக படித்துப் பார்த்திருப்போமா?
وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لا تُشْرِكْ
بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ
وَوَصَّيْنَا الإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى
وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ
وَإِن جَاهَدَاكَ عَلَى أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلا
تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ
إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
يَا بُنَيَّ إِنَّهَا إِن تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ فَتَكُن
فِي صَخْرَةٍ أَوْ فِي السَّمَاوَاتِ أَوْ فِي الأَرْضِ يَأْتِ بِهَا اللَّهُ إِنَّ
اللَّهَ لَطِيفٌ خَبِيرٌ
يَا بُنَيَّ أَقِمِ الصَّلاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنكَرِ
وَاصْبِرْ عَلَى مَا أَصَابَكَ إِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الأُمُورِ
وَلا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلا تَمْشِ فِي الأَرْضِ مَرَحًا إِنَّ
اللَّهَ لا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ
وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِن صَوْتِكَ إِنَّ أَنكَرَ الأَصْوَاتِ
لَصَوْتُ الْحَمِيرِ
சுமார் ஏழு வசனங்களில் ( அத்தியாயம்: 31: 13
முதல் 19 வரை ) அல்லாஹ் அதை நயம்பட விவரிப்பான். இணை வைப்பின் வீரியம் குறித்து,
இபாதத்தின் இன்பம் குறித்து, நன்மையை ஏவி, தீமையை தடுப்பதன் மகத்துவம் குறித்து,
இறைவனின் முடிவின் மீது கொள்ள வேண்டிய நம்பிக்கை மற்றும் பொறுமை குறித்து கூறியதன்
பின்னர் அவர் தம் மகனுக்கு கூறிய அறிவுரைகளைப் பாருங்கள்!
”மகனே! மக்களை விட்டு உம் முகத்தை
திருப்பியவாறு பேசாதே! பூமியில் செருக்கோடு நடக்காதே! அகந்தையும், ஆணவமும் கொண்ட
எவரையும் அல்லாஹ் ஒரு போதும் நேசிப்பதில்லை.
உனது நடையில் மிதமான நிலையை மேற்கொள்! உன்னுடைய
குரலைச் சற்று தாழ்த்திக்கொள்! திண்ணமாக, அனைத்துக் குரல்களிலும் மிகவும்
அருவருப்பானது, கழுதைகளின் குரலாகும்”. ( அல்குர்ஆன்: 31: 18, 19 )
நம் அறிவுக்கும், சிந்தைக்கும் மிகச் சிறியதாக
புலப்படுகிற அம்சங்களை வாழ் நாளில் ஒரு போதும் செய்து விடக்கூடாது என்பதை எவ்வளவு
அழகாக எச்சரிக்கின்றார்கள்.
ஆக மார்க்க கடமைகளை, அடிப்படைகளைக் கற்றுக்
கொடுப்பதோடு யதார்த்த உலகின் வாழ்வியல் தத்துவத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
அதுவே மிகச் சிறந்த போதனை! அப்படிப்
போதிப்பவர்களே மிகச் சிறந்த பெற்றோர் ஆவர்.
மாநபி {ஸல்} அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்தை
மக்காவில் மேற்கொண்ட மத்திய தருணம் அது.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களை உருட்டி,
மிரட்டி, ஆசைவார்த்தைகள் கூறி, சமரச முயற்சிகள் மேற்கொண்டு எல்லாவற்றிலும்
தோற்றுப் போன குறைஷித் தலைவர்கள் தாருன் நத்வாவில் மாநபி {ஸல்} அவர்களுக்கு எதிரான
அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிக்க ஒன்று கூடியிருந்தனர்.
பேச்சைத் துவக்கி வைத்தான் அபூஜஹ்ல் தொடர்ந்து
மாநபிக்கு எதிராக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவியதை அனைத்து
தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
அடுத்து என்ன செய்வது? என்ற கேள்வியை முன்
வைத்த அபூஜஹ்ல் இம்முறை நாம் மேற்கொள்ளும் நடவடிக்கை முஹம்மதை {ஸல் அவர்களை} நிலை
குலையச் செய்வதாய் அமைந்திருக்க வேண்டும்” என்றான்.
و لما اشتد النزاع بين الرسول صلوات الله و سلامه عليه و بين قريش، قال
بعضهم لبعض:
"ويحكم... إنكم قد حملتم عن محمد همومه بتزويج
فتيانكم من بناته، فلو رددتموهن إليه لانشغل بهن عنكم..."
فقالوا: "نعم الرأي ما رأيتهم." و مشوا إلى أبي العاص و قالوا
له:
"فارق صاحبتك يا أبا العاص، و ردها إلى بيت أبيها، و نحن
نزوجك أي امرأة تشاء من كرائم عقيلات قريش."
فقال: "لا والله إني لا أفارق صاحبتي، و ما أحب أن لي بها نساء الدنيا
جميعا..."
أما ابنتاه رقية و أم كلثوم فقد طلقتا و حملتا إلى بيته، فسر الرسول صلوات
الله عليه بردهما إليه، و تمنى أن لو فعل أبو العاص كما فعل صاحباه، غير أنه ما كان
يملك من القوة ما يرغمه به على ذلك، و لم يكن قد شرع – بعد – تحريم زواج المؤمنة من
المشرك.
கூட்டத்தில் இருந்த ஒருவன் “நம் குடும்பத்தின்
நிம்மதியை கெடுத்து விட்டு முஹம்மது மாத்திரம் நிம்மதியாக இருக்கின்றார். அவரின்
இரண்டு பெண் மக்கள் நம் குடும்பங்களில் தான் வாழ்க்கைப் பட்டுள்ளனர்.
முஹம்மதின் {ஸல் அவர்களின்} மகள்களான ருகைய்யா
(ரலி) மற்றும் உம்மு குல்ஸூம் (ரலி) ஆகியோர் அபூலஹபின் மகன்களான உத்பா, உதைபா
ஆகியோருக்கும், ஜைனப் (ரலி) அவர்கள் ரபீஃ என்பவரின் மகன் அபுல் ஆஸ் என்பவருக்கும்
வாழ்க்கைப்பட்டுள்ளனர்.
எனவே, அவர்களிடம் சென்று நபிகளாரின் பெண்மக்களை
விவாக விலக்கு செய்யுமாறு கோருவோம். விவாக விலக்கு கொடுக்கப்பட்ட தம் பெண்மக்களைக்
கண்டதும் முஹம்மது நம் வழிக்கு வந்து விடுவார்” என்று கூறினான்.
அவ்வாறே குறைஷித் தலைவர்கள் முதலில் அபூலஹபைச்
சென்று சந்தித்து விஷயத்தைச் சொன்னார்கள்.
அவர் உடனடியாக அதை ஏற்றுக் கொண்டு தம் இரு
மகன்களுக்கும் தலாக் விடுமாறு உத்தரவிட்டார்.
அவர்கள் இருவரும் தந்தை சொன்னது போன்றே தலாக்
விட்டனர். இன்னொரு அறிவிப்பில் லஹப் அத்தியாயம் இறங்கிய போது ரோஷப்பட்ட லஹப் தம்
இரு மகன்களையும் அழைத்து தலாக் விடுமாறு ஆணையிட்டார் என்றும் வந்துள்ளது. எனினும்,
முதல் அறிவிப்பையே சரி என வரலாற்று ஆசிரியர்கள் சரி காண்கின்றனர்.
அடுத்த படியாக குறைஷித் தலைவர்கள் அபுல் ஆஸிடம்
வந்து தங்களின் முடிவை தெரிவித்தனர். அபுல் ஆஸ் அவர்களோ ஜைனப் (ரலி) அவர்களுடனான என்
உறவு நன்றாக இருக்கும் பட்சத்தில் நான் எப்படி தலாக் விடமுடியும், மேலும், நபியை
எதிர்க்க எவ்வளவோ வழிகள் இருக்கிறது. இதற்கு நான் உடன்பட மாட்டேன் என்று கூறி
தலாக் விட மறுத்துவிட்டார்.
அபூலஹபின் மகன்களால் திருப்பி அனுப்பட்ட தம்
மக்களான ருகைய்யா, உம்மு குல்ஸூம் (ரலி – அன்ஹுமா) ஆகியோரின் விஷயத்தில் மாநபி {ஸல்}
சற்றும் கவலைப்பட வில்லை. மாறாக, மகிழ்ச்சியே அடைந்தார்கள்.
காரணம், ஈமானும் இறைநிராகரிப்பும் ஒரே இடத்தில்
பயணிக்க இயலாது, அதே நேரத்தில் இது குறித்த இறை வழிகாட்டல் எதுவும் அப்போது
இறக்கியருளப்படவும் இல்லை.
சிறிது நாளிலேயே உஸ்மான் (ரலி) அவர்களுக்கு நபி
{ஸல்} அவர்கள் ருகைய்யா (ரலி) அவர்களை மணம் முடித்துக் கொடுத்தார்கள்.
அடுத்த கொஞ்ச நாளிலேயே இருவரும் ஹபஷாவை நோக்கி
தம்பதியராக ஹிஜ்ரத்தும் மேற்கொண்டார்கள்.
நாட்கள் நகர்கிறது. ஹிஜ்ரத் கடமையாக்கப்பட்டு
மாநபி {ஸல்} அவர்களும், முஸ்லிம்களும் மதீனாவிற்கு புலம்பெயர்ந்தனர்.
எனினும் ஜைனப் (ரலி) அவர்கள் ஈமான்
கொண்டிருந்தாலும் கூட கணவர் அபுல் ஆஸோடு மக்காவிலேயே இருந்து விட்டார்.
و لما هاجر الرسول صلوات الله و سلامه عليه إلى المدينة، و اشتد أمره فيها،
و خرجت قريش لقتاله في "بدر" اضطر أبو العاص للخروج معهم اضطرارا...
إذ لم تكن به رغبة في قتال المسلمين، ولا أرب في النيل منهم، و لكن منزلته
في قومه حملته على مسايرتهم حملا... وقد انجلت "بدر" عن هزيمة منكرة لقريش
أذلت معاطس الشرك، و قصمت ظهور طواغيته، ففريق قتل، و فريق أسر، و فريق نجاه الفرار.
و كان في زمرة الأسرى أبو العاص زوج زينب بنت محمد صلوات الله و سلامه عليه.
فرض النبي عليه الصلاة و السلام على الأسرى فدية يفتدون بها أنفسهم من الأسر،
و جعلها تتراوح بين ألف درهم و أربعة آلاف حسب منزلة الأسير في قومه و غناه.
و طفقت الرسل تروح و تغدو بين مكة و المدينة حاملة من الأموال ما تفتدي
به أسراها.
فبعثت زينب رسولها إلى المدينة يحمل فدية زوجها أبي العاص، و جعلت فيها
قلاده كانت أهدتها لها أمها خديجة بنت خويلد يوم زفتها إليه... فما رأى الرسول – صلى
الله عليه و سلم – القلادة غشيت وجهه الكريم غلالة شفافة من الحزن العميق، و رق لابنته
أشد الرقة، ثم التفت إلى أصحابه و قال:
(إن زينب بعثت بهذا المال لافتداء أبي العاص، فإن رأيتم أن تطلقوا لها أسيرها
و تردوا عليها مالها فافعلوا).
فقالوا: "نعم، و نعمة عين يا رسول الله."
غير أن النبي عليه الصلاة و السلام اشترط على أبي العاص قبل إطلاق سراحه
أن يسير إليه ابنته زينب من غير إبطاء...
فما كاد أبو العاص يبلغ مكة حتى بادر إلى الوفاء بعهده...
فأمر زوجته بالاستعداد للرحيل، و أخبرها بأن رسل أبيها ينتظرونها غير بعيد
عن مكة، و أعد لها زادها و راحلتها، و ندب أخاه عمرو بن الربيع لمصاحبتها و تسليمها
لمرافقيها يدا بيد.
இந்நிலையில், பத்ர் யுத்தம் நடைபெற்றது. முஸ்லிம்களுக்கு
அதில் வெற்றியும் கிடைத்தது. மக்கா குறைஷிகள் கைதியாக பிடிக்கப்பட்டார்கள். அந்த
கைதிகளில் ஒருவராக அபுல் ஆஸும் இடம் பெற்றிருந்தார்.
கைதிகள் ஈட்டுத் தொகை கொடுத்து தங்களை
விடுவித்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பையொட்டி பலர் ஈட்டுத்தொகை கொடுத்து தங்கள்
உறவுகளை மீட்டுச் சென்றனர்.
அந்த தருணத்தில் அபுல் ஆஸை மீட்பதற்காக மாநபி
{ஸல்} அவர்களிடம் ஒரு வைர மாலை கொடுக்கப்பட்டது. அதைக் கண்ட மாநபி {ஸல்} அவர்களின்
கண்களில் இருந்து கண்ணீர் கரை புரண்டோடியது.
ஆம்! அம்மாலை கதீஜா (ரலி) அவர்களின் கழுத்தை
அலங்கரித்த மாலை, ஜைனப் (ரலி) அவர்களின் திருமணத்தின் போது கதீஜா (ரலி) அவர்கள்
அன்பளிப்பாக மகள் ஜைனபுக்கு வழங்கினார்கள்.
இப்போது, மாநபித் தோழர்கள் நபி {ஸல்} அவர்களின்
உணர்வுகளைப் புரிந்து கொண்டு அபுல் ஆஸிற்கான மொத்த ஈட்டுத்தொகையையும் தாங்களே
கொடுத்து அபுல் ஆஸை விடுதலை செய்தார்கள்.
விடுதலையான அபுல் ஆஸை அழைத்த பெருமானார் {ஸல்}
அவர்கள் “அபுல் ஆஸே! நீர் மக்கா சென்றதும் எம் மகள் ஜைனபை இன்ன நாளில் இன்ன இடத்தில்
நான் அனுப்புகிற என் தோழர்களிடத்தில் ஒப்படைத்து விடவேண்டும். அங்கிருந்து என்
மகள் பத்திரமாக என்னிடம் வந்து சேர்ந்து விடுவார்.
அபுல் ஆஸே! என் மகளில் இதயத்தில் ஈமான்
இருக்கிறது, உம் இதயத்தில் இறை நிராகரிப்பு இருக்கிறது இரண்டும் ஒரு சேர ஓரிடத்தில்
சங்கமிக்க இயலாது. மேலும், இது விஷயத்தில் இறைவழிகாட்டல் எதுவும் வழங்கப்படவில்லை
ஆகவே, நீர் எம் மகளை எம்மிடம் அனுப்பி வைத்து விடவேண்டும்” என்றார்கள்.
சரி என்று சொல்லி விட்டுச் சென்ற அபுல் ஆஸ்
வாக்களித்தது போன்றே ஜைனப் (ரலி) அவர்களை பத்திரமாக அழைத்து வந்து, சொன்ன நாளில்,
சொன்ன இடத்தில் மாநபித்தோழர்களிடம் ஒப்படைத்தார்கள்.
أقام أبو العاص في مكه بعد فراق زوجته زمنا، حتى إذا كان قبيل الفتح بقليل،
خرج إلى الشام في تجارة له، فلما قفل راجعا إلى مكة و معه عيره التي بلغت مئة بعير،
و رجاله الذين نيفوا على مئة و سبعين رجلا، برزت له سرية من سرايا الرسول صلوات الله
و سلامه عليه قريبا من المدينة، فأخذت العير و أسرت الرجال، و لكن أبا العاص أفلت منها
فلم تظفر به.
فلما أرخى الليل سدوله و استتر أبو العاص بجنح الظلام، و دخل المدينه خائفا
يترقب، و مضى حتى وصل إلى زينب، و استجار بها فأجارته...
و لما خرج الرسول صلوات الله و سلامه عليه لصلاة الفجر، و استوى قائما في
المحراب، و كبر للإحرام و كبر الناس بتكبيره، صرخت زينب من صفة النساء و قالت:
"أيها الناس، أنا زينب بنت محمد، و قد أجرت أبا العاص فأجيروه. فلما
سلم النبي – صلى الله عليه و سلم – من الصلاة، التفت إلى الناس و قال:
(هل سمعتم ما سمعت؟!).
قالوا: نعم يا رسول الله.
قال: (و الذي نفسي بيده ما علمت بشيء من ذلك حتى سمعت ما سمعتموه، و إنه
يجير من المسلمين أدناهم)، ثم انصرف إلى بيته و قال لابنته:
(أكرمي مثوى أبي العاص، و اعلمي أنك لا تحلين له).
ثم دعا رجال السرية التي أخذت العير و أسرت الرجال و قال لهم:
(إن هذا الرجل منا حيث قد علمتم، و قد أخذتم ماله، فإن تحسنوا و
تردوا عليه الذي له، كان ما نحب، و إن أبيتم فهو فيء الله الذي أفاء عليكم، و أنتم
به أحق).
فقالوا: "بل نرد عليه ماله يا رسول الله".
مضى أبو العاص بالعير و ما عليها إلى مكة فلما بلغها أدى لكل ذي حق حقه،
ثم قال:
"يا معشر قريش هل بقي لأحد منكم عندي مال لم يأخذه؟."
قالوا: "لا... و جزاك الله عنا خيرا، فقد وجدناك وفيا كريما."
قال: "أما و إني قد وفيت لكم حقوقكم، فأنا أشهد أن لا إله إلا الله
و أن محمدا رسول الله...
ثم خرج حتى قدم على رسول الله – صلى الله عليه و سلم – فأكرم وفادته و رد
إليه زوجته،
வருடங்கள் உருண்டோடியது. ஃபத்ஹ் மக்காவின்
வெற்றிக்கு சில மாதங்களுக்கு முன்னதாக ஷாமில் இருந்து பெரும் வியாபாரப் பொருளோடு
ஊர் திரும்பிக் கொண்டிருந்த அபுல் ஆஸின் வியாபாரக் கூட்டம் நபித்தோழர்களால்
பிடிக்கப்பட்டது.
வியாபாரப் பொருட்களை அங்கேயே விட்டு, விட்டு
மதீனாவில் தஞ்சமானார் அபுல் ஆஸ், அதுவும் அவர் அடைக்கலம் கேட்டு நின்றது ஜைனப்
(ரலி) அவர்களிடம்.
அவர் அடைக்கலம் கேட்டு நின்ற நேரம் அதிகாலை
சுப்ஹுத்தொழுகையின் நேரம், மாநபி {ஸல்} அவர்கள் வீட்டில் இல்லை, மஸ்ஜிதுன்
நபவீக்கு ஓடி வருகிறார் ஜைனப் (ரலி) அவர்கள். அப்போது, அங்கே சுப்ஹுத் தொழுகையின்
ஜமாஅத் நடந்து கொண்டிருந்தது.
வந்தவர்கள் கொஞ்சமும் தாமதிக்காமல் மஸ்ஜிதுன்
நபவீயின் வாசலில் நின்றவாறு “நான் நபி {ஸல்} அவர்களின் மகள் ஜைனப் ஆவேன். நான்
அபுல் ஆஸ் க்கு அடைக்கலம் தந்துள்ளேன்” என்று உரக்கக் கூறி விட்டு சென்று
விட்டார்கள்.
தொழுகையை முடித்த மாநபி {ஸல்} அவர்கள் மக்களை
நோக்கி அமர்ந்தவாறு “தொழுகையில் நிற்கும் போது நான் கேட்டவற்றை நீங்களும்
கேட்டீர்களா? என்று வினவியதற்கு, மக்கள் “ஆம்” என்றார்கள்.
பின்னர், மக்களை நோக்கி என் உயிர் எவன் கைவசம்
இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! இந்த விஷயத்தை நீங்கள் எப்போது கேட்டீர்களோ
அப்போது தான் நானும் கேட்டேன்” என்று கூறிவிட்டு விடைபெற்று நேராக மகள் ஜைனப்
(ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள்.
வந்த பெருமானார் {ஸல்} அவர்கள் மகள் ஜைனப்
(ரலி) அவர்களை நோக்கி “எனதருமை மகளே! அவரை (அபுல் ஆஸை)
கண்ணியமான முறையில் கவனித்துக் கொள்! அவரோடு தனிமையில் இருப்பதை நீ தவிர்த்துக்
கொள்! இப்போது நீ அவருக்கு அனுமதிக்கப்பட்ட உறவு முறையில் உள்ளவளாக இல்லை! என்று
கூறினார்கள்.
அப்போது, ஜைனப் (ரலி) அவர்கள் “அபுல் ஆஸ்
என்னைத் தேடி வரவில்லை, மாறாக, அவரின் பொருளைத் தேடி அவர் வந்திருக்கின்றார்”
என்றார்கள்.
சிறிது நேரத்தில், அவரின் வியாபாரப் பொருட்களை
பிடித்த நபித்தோழர்கள் மதீனா வந்தடைந்தனர்.
மாநபி {ஸல்} அவர்கள் மக்களை ஒன்று திரட்டி,
மக்களின் முன்பாக அபுல் ஆஸையும், அவரின் வியாரப் பொருட்களையும் வைத்து “இதோ! இவரை
நீங்களும், நானும் நன்கறிவோம்! இவரின் வியாபாரப் பொருட்களை அல்லாஹ் உங்களின்
கரங்களில் தந்திருக்கின்றான். அது உங்களுக்கு உரியது. எனினும், நான் அபுல் ஆஸ்
விஷயத்தில் மனித நேயத்தோடு நீங்கள் நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகின்றேன்!
மேலும், எனவே, நீங்கள் விரும்பினால் அவரின் வியாபாரப் பொருட்களை அவரிடம்
திருப்பிக் கொடுக்கலாம். நீங்கள் கொடுக்க மறுத்தாலும் அதற்கானத் தகுதியும்
உங்களுக்கு இருக்கின்றது!” என்று கூறினார்கள்.
அது கேட்ட மக்கள் “அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்களே! நாங்கள் அவரின் பொருட்களை அவரிடமே திருப்பிக் கொடுத்து விடுகின்றோம்”
என்று கூறி திருப்பிக் கொடுத்து விட்டார்கள்.
வியாபாரப் பொருட்கள் மீண்டும் கைக்கு கிடைத்த
மகிழ்ச்சியோடு அங்கிருந்து விடைபெற்ற அபுல் ஆஸ் நேராக மக்கா வந்து, வியாபாரப்
பொருட்களுக்கு உரிய அனைவர்களிடமும் அவர்களின் பொருட்களை ஒப்படைத்தார்கள்.
பின்னர் அவர்களையும், குறைஷிகளையும் ஓரிடத்தில்
ஒன்று திரட்டி “குறைஷி குல மக்களே! என்னோடு வியாபாரத்தில் கூட்டாகியிருந்த
எவருக்கும் நான் உரிய பங்கை கொடுக்காமல் மோசடி செய்திருக்கின்றேனா? என்று
கேட்டார்கள்.
அதற்கு அம்மக்கள் ”அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்கட்டும்!
உம்மை நாம் விபரம் தெரிந்த நாள் முதலாக வாய்மையாளராகவும், நேர்மையாளராகவும்,
கண்ணியமானவராகவுமே கண்டிருக்கின்றோம்!” என்று பதில் கூறினார்கள்.
மீண்டும் அபுல் ஆஸ் அவர்கள் மக்களை நோக்கி
“கலிமா ஷஹாதாவை மொழிந்து நான் தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்!” என்று கூறி
அங்கிருந்து மதீனா வந்து மாநபி {ஸல்} அவர்களின் கரம் பற்றி முஸ்லிமானார்கள்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அபுல் ஆஸ்
(ரலி) அவர்களை தம் மகளார் ஜைனப் (ரலி) அவர்களோடு சேர்த்து வைத்தார்கள்.
( நூல்: அல் இஸ்தீஆப் ஃபீ மஅரிஃபத்தில் அஸ்ஹாப்
லிஇமாமி இப்னு அப்துல் பர் (ரஹ்)... )
உலகத்திற்கே பண்பாடுகளையும், ஒழுக்கவிழுமியத்தையும்
கற்றுக் கொடுத்த மாநபி {ஸல்} அவர்கள் தங்களின் பெண்மக்களுக்கு ஒழுக்கத்தை
ஆரம்பத்தில் இருந்தே சொல்லித் தான் வளர்த்திருப்பார்கள் எனினும், ஒரு நல்ல
தந்தையாக அந்தந்த கால சூழ்நிலைக்கு ஏற்ப பெண்மக்களுக்கு போதிக்க வேண்டியதை
கட்டாயம் போதித்தே ஆக வேண்டும் என்பதை இந்த உம்மத்திற்கு உணர்த்துகின்றார்கள்.
எனவே, நவீன காலத்து பெண்மக்களுக்கு, அதுவும் பள்ளியில்,
கல்லூரியில், டியூஷனில் படிக்கும் பெண்மக்களுக்கு எது நல்லவை? எது தீயவை? யாரோடு
உறவு வைத்துக் கொள்ள வேண்டும்? யாரோடு உறவு வைத்துக் கொள்ளக் கூடாது? என்பதை
தெளிவாக்க் கற்றுக் கொடுக்க வேண்டும்.
இல்லையெனில் இது போன்ற மரணங்கள் இனியும் தொடரும்...
அல்லாஹ் இந்த உம்மத்தின் பெண்மக்களை பாதுகாப்பானாக!
இந்த காலத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும்
எம் சமூகத்தின் எல்லா பெண்களையும் ஒட்டு மொத்தமாக குறை சொல்லியும் விடக்கூடாது.
ஏனெனில், ஹாதியாவின் உள்ளத்தில் இஸ்லாம்
துளிர்விட ஹாதியாவோடு இணைந்து படித்த முஸ்லிம் தோழிகளின் நடவடிக்கையும்,
பண்பாடுகளுமே முக்கியக் காரணம் ஆகும்.
இறுதியாக, பொறுப்பை சரி வர செய்யாமல்,
பெண்மக்களின் வளர்ப்பு விஷயத்தில் கண்டும் காணாமல் இருக்கும் பெற்றோருக்கு மாநபி
{ஸல்} அவர்களின் ஓர் எச்சரிக்கையை இங்கே நினைவு படுத்துகின்றோம்.
இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “மூன்று
வகை குணம் கொண்ட நபர்களுக்கு அல்லாஹ் சொர்க்கத்தை நிரந்தரமாகத் தடை செய்து
விட்டான். 1. நிரந்தரமாக மது குடிப்பவன். 2. பெற்றோருக்கு நோவினை செய்பவன். 3. குடும்பத்தாரின்
அசிங்கங்களை, தீய நடத்தைகளை கண்டு தடுக்காமல் அதை அங்கீகரிப்பவன்” என நபி {ஸல்}
அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்னத் அஹ்மத் )
அடுத்து, ஹாதியாவின் போராட்டத்திற்கு வருவோம்.
இஸ்லாத்தை அதன் கொள்கை கோட்பாட்டை ஆசை கொண்டு, அறிந்து, படித்து விளங்கி ஏற்றுக்
கொண்டு அதன் பின்னர் இஸ்லாமிய முறைப்படி ஒரு திருமணமும் செய்து கொண்டு அதன்
பின்னால் அவருக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகளை சமாளித்து, அவருக்கு கொடுக்கப்பட்ட
சோதனைகளை பொறுமையோடு எதிர்கொண்டு, எல்லாமுனைகளில் இருந்தும் தொடுக்கப்படுகிற
எல்லாத் தாக்குதல்களையும் துணிச்சலாக எதிர்கொண்டு, ஏற்றுக் கொண்ட தூய இஸ்லாத்தில்
இறுதிவரை நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக மிகப் பெரிய போராட்டத்தை நடத்திக்
கொண்டிருக்கின்ற அவரின் வாழ்வு அன்றைய ஆரம்ப கால முஸ்லிம்களான யாஸிர், சுமைய்யா,
பிலால், ஸஅத் இப்னு அபீவக்காஸ், கப்பாப், ஸின்னீரா, நஹ்திய்யா ( ரலி அன்ஹும் )
போன்ற பல நபித்தோழர்களின் வாழ்க்கையை நினைவு படுத்துகின்றது.
எனவே, அல்லாஹ் வழங்கி இருக்கிற ஈமானை
பாதுகாத்து, இறுதிவரை ஈமானோடு வாழ்ந்து ஈமானோடு மரணிக்க வேண்டும் என்கிற உந்து
சக்தியை ஹாதியாவின் போராட்டம் இந்த உம்மத்துக்கு பாடமாக தருகிறது என்றால் அது
மிகையல்ல.
அல்லாஹ் ஹாதியாவின் போராட்டத்தில் வெற்றியை
வழங்கி, எல்லா வகையான இன்பத்தோடும், பேறுகளோடும் கணவரோடு இணைந்து வாழ்கிற
நற்பாக்கியத்தை வழங்குவதோடு நம் அனைவருக்கும் இஸ்திகாமத்தை தந்தருள்வானாக!
ஆமீன்!
ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத். அருமையான ஆக்கத்தை வழங்கியுள்ளீர்கள். இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை தெரியப்படுத்துகிறேன். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். جزاكم الله خيرا كثيرا يا أستاذ
ReplyDeleteஅல்ஹம்து லில்லாஹ்... பாரக்கல் லாஹ்... எனக்கு மூன்று பெண் மக்கள் இருக்கின்றார்கள். பொறுப்பை உணர்ந்து நடந்திட அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக!ஆமீன்!
Deleteநல்ல ஆக்கப்பூர்வமான தேவையான பதிவுகள் எங்களுக்கு பலன் அளிக்கிறது அல்லாஹ் தங்களுக்கு நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையயை தந்தருள்வானாக
Deleteஎனக்கும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர் துஆ செய்யுங்கள்
பயனுள்ள தகவல்
ReplyDeleteالسلام عليكم ورح ...
ReplyDeleteالخطبة أهمية و إيمانية جدا ! بارك الله في علمك يا أخي الكريم ! محمد رافع المحضري
நல்ல அருமையான பதிவு :எதிரிகள் அன்றும் இன்றும் பெண்களின் விஷயத்தில் கை வைத்தே முஸ்லிம்களை முடக்க நினைக்கிறார்கள்.
ReplyDelete