Thursday, 25 October 2018

வாழ்க்கையை மாற்றும் சில தருணங்கள்!!


வாழ்க்கையை மாற்றும் சில தருணங்கள்!!



உலகத்தில் அறுபது வயதையோ எழுபது அல்லது எண்பது வயதையோ கடந்த ஒருவரிடத்தில் சென்றுஉங்கள் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லுங்கள்என்று சொன்னால் ஒரு மணி நேரத்தில் அல்லது அதை விட சற்று கூடுதலான நேரத்திற்குள்ளாக சொல்லி முடித்திடுவார் அவர் பிறந்தது முதற்கொண்டு தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிற அந்த தருணம் வரையிலான வாழ்க்கையை.

உண்மையில், ஒரு மணி நேரத்தில் சொல்லி முடித்து விடும் வாழ்க்கைக்காகவா நாம் இந்த உலகத்தில் 60, 70, 80 என்று வருடக்கணக்கில் வாழ்கிறோம்.

அப்படியானால், அவர் அந்த ஒரு மணி நேரத்தில் வாழ்க்கையின் எந்த அனுபவத்தைச் சொல்லி இருப்பார்?

வாழ்க்கையில் அவர் அடைந்த உச்ச இன்பத்தைப் பற்றியா? அல்லது அவர் அடைந்த துன்பத்தைப் பற்றியா? இல்லை, அவர் அடைந்த வெற்றியைப் பற்றியா? அல்லது அவர் அடைந்த அவமானம், தோல்வியைப் பற்றியா? எதைப் பற்றி சொல்லி இருப்பார்?

யதார்த்தத்தில் எந்தவொரு மனிதரும் மறக்காத, மறக்க முடியாத தருணங்கள் என்று சில விஷயங்கள் வாழ்க்கையின் போங்கில் நடைபெற்றிருக்கும்.

அது வெற்றியாகவோ, தோல்வியாகவோ, துன்பமாகவோ, இன்பமாகவோ, அவமானமாகவோ, மரியாதையாகவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

வாழ்க்கையையே மாற்றிப் போட்ட அந்த தருணங்கள் தான் அந்த ஒரு மணி நேரத்தை ஆக்கிரமித்து, ஆர்ப்பரித்து நின்றிருக்கும்.

வாழ்க்கையையே மாற்றிப் போடுகிற சில தருணங்கள், சில கணங்கள் அது எல்லோருடைய வாழ்விலும் ஏற்படுவதுண்டு.

எதிர்காலம் சரியாக அமைய வேண்டுமானால் நிகழ்காலத்தை மிகச்சரியாக அமைத்துக் கொள்ள நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், கடந்து போன காலம் என்பது சில போது நிகழ்காலத்தையும், பசுமையான எதிர்காலத்தையும் கவலைக்குரியதாக மாற்றி விடும் என்பது தான்அந்த ஒரு மணி நேர வாழ்க்கை அனுபவம்நமக்கு கற்றுத் தருகிற மகத்தான பாடம் ஆகும்.

ஆகவே, வாழ்க்கையை மாற்றிப் போடுகிற அந்த தருணங்கள் குறித்து மிகவும் கவனமாகவும், விழிப்புணர்வோடும், எச்சரிக்கையாகவும் வாழ நாம் கடமைப்பட்டுள்ளோம்.

இஸ்லாம் கூறும் வாழ்வியல் கோட்பாடு…

وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ (107)

மேலும், ஏதேனும் ஒரு துன்பத்தை அல்லாஹ் உமக்குக் கொடுத்தால் அதனை அகற்றுபவர் அவனைத்தவிர வேறு யாருமில்லை. மேலும், உமக்கு ஏதேனும் நன்மை அளிக்க அவன் நாடினால் அவனுடைய அருளைத் தடுப்பவரும் யாரும் இல்லை. தன்னுடைய அடியார்களில் தான் நாடுபவருக்குத் தன் அருளை அவன் வழங்குகின்றான்”.                                           ( அல்குர்ஆன்: 10: 107 )


عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ قَالَ كُنْتُ رَدِيفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ
يَا غُلَامُ أَوْ يَا غُلَيِّمُ أَلَا أُعَلِّمُكَ كَلِمَاتٍ يَنْفَعُكَ اللَّهُ بِهِنَّ فَقُلْتُ بَلَى فَقَالَ احْفَظْ اللَّهَ يَحْفَظْكَ احْفَظْ اللَّهَ تَجِدْهُ أَمَامَكَ تَعَرَّفْ إِلَيْهِ فِي الرَّخَاءِ يَعْرِفْكَ فِي الشِّدَّةِ وَإِذَا سَأَلْتَ فَاسْأَلْ اللَّهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ قَدْ جَفَّ الْقَلَمُ بِمَا هُوَ كَائِنٌ  
فَلَوْ أَنَّ الْخَلْقَ كُلَّهُمْ جَمِيعًا أَرَادُوا أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَكْتُبْهُ اللَّهُ عَلَيْكَ لَمْ يَقْدِرُوا عَلَيْهِ وَإِنْ أَرَادُوا أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَكْتُبْهُ اللَّهُ عَلَيْكَ لَمْ يَقْدِرُوا عَلَيْهِ 
وَاعْلَمْ أَنَّ فِي الصَّبْرِ عَلَى مَا تَكْرَهُ خَيْرًا كَثِيرًا وَأَنَّ النَّصْرَ مَعَ الصَّبْرِ وَأَنَّ الْفَرَجَ مَعَ الْكَرْبِ وَأَنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு நாள் நான் நபியவர்களின் பின்னால் வாகனத்தில் அமர்ந்திருந்தேன்.

அப்போது நபியவர்கள் என்னைப் பார்த்து சிறுவனே! நான் உனக்கு சில வார்த்தைகளை கற்றுத் தரட்டுமா?! அல்லாஹ் அதன் மூலம் உனக்கு நற்பயனை வழங்குவான்!என்று கேட்டார்கள். நான், “ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அவசியம் கற்றுத்தாருங்கள்! என்றேன். அப்போது மாநபி {ஸல்} அவர்கள்

1. அல்லாஹ்வை நீ பேணிக்கொள்! (பயந்து கொள்). அவன் உன்னை பாதுகாப்பான். 2. அல்லாஹ்வை நீ பேணிக்கொள்! (பயந்து கொள்) உனக்கு முன்னால் அவனை நீ காண்பாய். 3. நீ ஆரோக்கியமாகவும், செழுமையாகவும் வாழும் காலத்தில் அல்லாஹ்வை நினைத்து வாழ்! உன்னுடைய கஷ்டமான காலத்தில் அல்லாஹ்வும் உன்னை நினைவில் வைத்திருப்பான்.

4. நீ ஏதாவது கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! 5. நீ உதவி தேடினால் அல்லாஹ்வைக் கொண்டே உதவி தேடு! ஏனெனில், எழுது கோள்கள் உயர்த்தப்பட்டுவிட்டன! எவைகள் எல்லாம் உண்டாக வேண்டும் என அவன் தீர்மானித்தானோ அவைகள் எல்லாம் உண்டாகி விட்டன.

 6. அறிந்து கொள்! முழு மனித சமூகமும் ஒன்று சேர்ந்து உனக்கொரு நன்மையான காரியத்தை செய்ய நாடினாலும் அதனை அல்லாஹ் உனக்கு விதித்திருந்தால் தவிர அவர்களால் எதுவும் செய்ய முடியாது!

 7. அவ்வாறு தான் முழு மனித சமூகமும் ஒன்றிணைந்து உனக்கொரு தீங்கை விளைவிக்க முற்பட்டாலும் அல்லாஹ் உனக்கு அந்த தீமையை விதித்திருந்தாலே தவிர அவர்களால் அதனை செய்ய முடியாது!

8. அறிந்துகொள் சிறுவனே! நீ வெறுக்கின்ற பல காரியங்களில் பொறுமை மேற்கொண்டால் பல நல்ல விளைவுகளைக் காண்பாய்!

9. திண்ணமாக! அல்லாஹ்வின் உதவி என்பது பொறுமை கொள்வதில் தான் இருக்கின்றது!, திண்ணமாக, மகிழ்ச்சி என்பது சிரமத்தை ஏற்றுக் கொள்வதில் தான் இருக்கின்றது! திண்ணமாக, இலகு என்பது கஷ்டத்தைத் தாங்கிக் கொள்வதில் தான் இருக்கின்றது!என்று கூறினார்கள்.                              ( நூல்: திர்மிதீ )

ஓர் இறைநம்பிக்கையாளனின் வாழ்வியல் கோட்பாடு குறித்த இஸ்லாத்தின் பார்வை மிகவும் அற்புதமானதும், பரந்து விரிந்த பொருள் கொண்டதும் ஆகும் என்பதை மேற்கூறிய இறை வசனமும், நபிமொழியும் உணர்த்துவதை அழகாகக் காணலாம்.

எனவே, வாழ்க்கையின் எந்தவொரு உயர்வும் எந்தவொரு தாழ்வும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றது என்று நம்புவதோடு உயர்வின் மீது உறுதியாகவும், அந்த உறுதியில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கையோடும் காத்திருப்பது ஓர் இறை நம்பிக்கையாளனுக்கு அவசியமாகும்.

ஏனெனில், நம்மை உயர்த்துகிற தருணத்தை அல்லாஹ்வே நம் வாழ்வில் திடீரென ஏற்படுத்துகின்றான்.

புறக்கணிக்கப்படுபவர்கள் புகழப்படுவார்கள்!

وفادة وائل بن حجر بن ربيعة بن وائل بن يعمر الحضرمي ابن هنيد أحد ملوك حضرموت على رسول الله ﷺ.
قال أبو عمر ابن عبد البر: كان أحد أقيال حضرموت، وكان أبوه من ملوكهم، ويقال: أن رسول الله ﷺ بشر أصحابه قبل قدومه به، وقال: «يأتيكم بقية أبناء الملوك».
فلما دخل رحب به وأدناه من نفسه، وقرب مجلسه، وبسط له رداءه، وقال: «اللهم بارك في وائل وولده وولد ولده».
واستعمله على الأقيال من حضرموت، وكتب معه ثلاث كتب؛ منها كتاب إلى المهاجر ابن أبي أمية، وكتاب إلى الأقيال، والعياهلة، وأقطعه أرضا، وأرسل معه معاوية ابن أبي سفيان فخرج معه راجلا فشكى إليه حر الرمضاء، فقال: «انتعل ظل الناقة».
فقال: وما يغني عني ذلك لو جعلتني ردفا.
فقال له وائل: اسكت فلست من أرادف الملوك.
ثم عاش وائل بن حجر حتى وفد على معاوية وهو أمير المؤمنين فعرفه معاوية فرحب به، وقربه وأدناه، وأذكره الحديث، وعرض عليه جائزة سنية فأبى أن يأخذها، وقال: أعطها من هو أحوج إليها مني.
وأورد الحافظ البيهقي بعض هذا، وأشار إلى أن البخاري في (التاريخ) روى في ذلك شيئا.
وقد قال الإمام أحمد: حدثنا حجاج، أنبأنا شعبة عن سماك بن حرب، عن علقمة بن وائل، عن أبيه أن رسول الله ﷺ أقطعه أرضا، قال: وأرسل معي معاوية أن أعطيها إياه - أو قال: أعلمها إياه -، قال: فقال معاوية: أردفني خلفك.
فقلت: لا تكون من أرداف الملوك.
قال: فقال: أعطني نعلك.
فقلت: انتعل ظل الناقة.
قال: فلما استخلف معاوية أتيته فأقعدني معه على السرير، فذكرني الحديث - قال سماك -: فقال: وددت أني كنت حملته بين يدي.

வாஇல் இப்னு ஹுஜ்ர் யமன் தேசத்தை அடுத்த ஹள்ரமௌத் என்ற பகுதியை ஆண்ட மன்னரின் மகனாவார்.

தந்தையின் மரணத்திற்குப் பின் தம் பகுதி மக்களை வழி நடத்துகிற மகத்தான பொறுப்புக்கு மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்.

அவர் பொறுப்பேற்றிருந்த அந்தக் காலம் இஸ்லாம் ஏகத்துவ வசந்தத்தை அரபுலகைத் தாண்டி அனைத்து நாடுகளின் கதவுகளையும் திறந்து கொண்டு கொஞ்சம், கொஞ்சமாக மணம் வீசத் துவங்கி இருந்த காலமாகும்.

அருகில் இருக்கும் எமனுக்குள்ளும் அது நறுமணம் வீசி கமழ்ந்து கொண்டிருந்தது. அந்த வசந்தம் ஹள்ரமௌத்தையும் விட்டு வைக்கத் தவறவில்லை.

ஆம்! வாஇல் இப்னு ஹுஜ்ர் ஏகத்துவ சுகந்தத்தை நேரடியாக மாநபி {ஸல்} அவர்களிடம் இருந்து நுகர்ந்திட வேண்டும் என்கிற ஆவலில் மதீனாவை நோக்கி பயணமாகின்றார்கள்.

மதீனாவின் எல்லையை வந்தடைந்த வாஇல் இப்னு ஹுஜ்ர் மஸ்ஜிதுன் நபவீயின் முகவரியைத் தெரிந்து கொண்டு அங்கே வந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்தச் செய்தியை அல்லாஹ் வானவர் ஜிப்ரயீல் {அலை} அவர்களின் மூலம் பெருமானார் {ஸல்} அவர்களுக்கு தெரியப்படுத்துகின்றான்.

மஸ்ஜிதுன் நபவீயில் தோழர்களோடு அமர்ந்திருந்த நபி {ஸல்} அவர்கள் “இன்னும் சிறிது நேரத்தில் ஹள்ரமௌத் என்கிற தூர தேசத்தில் இருந்து வாஇல் இப்னு ஹுஜ்ர் என்பவர் அல்லாஹ்விற்காகவும், அல்லாஹ்வின் தூதருக்காகவும் ஆவலோடும், ஆசையோடும் பயணித்தவராக உங்களின் முன்பாக வந்து நிற்பார். அவர் யார் தெரியுமா? அரசர்களின் வாரிசுகளில் கடைசியாக இருப்பவர் அவரே!” என்று கூறினார்கள்.

சிறிது நேரத்தில் அங்கே வாஇல் இப்னு ஹுஜ்ர் நுழைகிறார். மாநபி {ஸல்} அவர்கள் அகமகிழ்வோடும், முக மலர்ச்சியோடும் வரவேற்றார்கள். தங்களோடு நெருக்கிக் கொண்டார்கள். தங்களுக்கு அருகாமையில் தங்களின் மேல் துண்டை விரித்து அதன் மீது அமரச் சொன்னார்கள்.

வாஇல் இப்னு ஹுஜ்ரும் மாநபி {ஸல்} அவர்களுக்கு மிக அருகில் நெருக்கமாக அமர்ந்தார். ஷஹாதா கூறி முஸ்லிமாக ஆனார். சில நாட்கள் மாநபி {ஸல்} அவர்களின் அருகாமையில் இருந்து தீனின் பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொண்டார்.

தன் பகுதிக்கு திரும்ப செல்வதாக வாஇல் இப்னு ஹுஜ்ர் (ரலி) அவர்கள் நபி {ஸல்} அவர்களிடம் தெரிவித்த போது “யாஅல்லாஹ்! வாஇல் அவர்களுக்கும், அவரின் சந்ததிக்கும், சந்ததியின் சந்ததிக்கும் உன்னுடைய அபிவிருத்தியை வழங்குவாயாக!” என்று பிரார்த்தித்து விட்டு, ஹள்ரமௌத்தினுடைய பொறுப்பு தாரியாக நியமித்து அனுப்பினார்கள்.

போகின்ற போது மதீனாவின் எல்கை வரை விட்டு வருமாறு முஆவியா (ரலி) அவர்களை நபி {ஸல்} அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

ஒட்டகையின் மீது அமர்ந்தவாறு வாஇல் இப்னு ஹுஜ்ர் (ரலி) அவர்கள் செல்ல, அந்த ஒட்டகையின் மூக்கணாங்கயிற்றை பிடித்து நடந்தவாறு முஆவியா (ரலி) அவர்கள் செறுப்பணியாத வெறுங்காலோடு செல்கின்றார்கள்.
வெயிலின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக பாதத்தை பதம் பார்க்க, ஒட்டகையின் நிழலை ஒட்டியவாறு முஆவியா (ரலி) நடந்து செல்கின்றார்கள்.

உச்சி வெயில் உள்ளங்கால் கொதிக்கின்றது. நடக்க முடியாத சூழ்நிலை, தயங்கியவாறே முஆவியா (ரலி) அவர்கள் வாஇல் இப்னு ஹுஜ்ர் (ரலி) அவர்களிடம் பாலை மணலில் சூடு குறித்து முறையிட்டு, உங்களின் பின்னால் அமர்ந்து நான் வரட்டுமா? என்று கேட்கின்றார்.

அதற்கு, வாஇல் (ரலி) அவர்கள் “வாயை மூடிக் கொண்டு வா! அரசர்களுக்கு அருகே அமர்கிற அருகதை எல்லாம் உமக்கு கிடையாது” என்கிறார்.

வாஇல் (ரலி) அவர்களுக்கு தெரியாது ஒட்டகையின் மூக்கணாங்கயிற்றைப் பிடித்து வருகிற இந்த கைகள் தான் வஹியை எழுதுகிற மகத்தான பாக்கியம் பெற்ற கை என்று.

ஆம்! அப்போது முஆவியா (ரலி) அவர்கள் வஹியை எழுதுகின்றவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்தார்கள்.

அமைதியாக வந்து கொண்டிருந்த முஆவியா (ரலி) அவர்கள் மீண்டும் சூடு தாங்காமல் வாஇல் (ரலி) அவர்களிடம் “நீங்கள் தான் ஒட்டகையில் அமர்ந்து வருகின்றீர்களே, உங்களின் செருப்பை கழற்றி எனக்குத் தாருங்களேன்! சிறிது நேரம் நான் பயன்படுத்தி விட்டு தருகின்றேன்” என்றார்கள்.

அது கேட்ட வாஇல் இப்னு ஹுஜ்ர் (ரலி) அவர்கள் “ஒட்டகையின் நிழலிலேயே நீர் நடந்து வாரும்!” என்று கூறினார்கள்.

அவர் செல்ல வேண்டிய எல்கை வந்ததும் விடை பெற்று முஆவியா (ரலி) அவர்கள் மதீனா வந்தடைந்தார்கள்.

நடந்த இந்தச் செய்தியை நபி {ஸல்} அவர்களிடத்திலோ, வேறு எவரிடத்திலுமோ முஆவியா (ரலி) அவர்கள் தெரிவிக்கவில்லை.

காலச்சக்கரம் வேகமாக சுழல்கிறது. காலச்சக்கரத்தை சுழற்றுபவன் மாபெரும் ஆற்றல் நிறந்த அல்லாஹ் அல்லவா?.

முஆவியா (ரலி) அவர்கள் இப்போது கலீஃபாவாக இருக்கின்றார்கள். புதிய ஆட்சியாளரை சந்திக்கும் முகமாக வாஇல் இப்னு ஹுஜ்ர் (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களைக் காண சபைக்குள் வருகின்றார்கள்.

மஸ்ஜிதுன் நபவீக்குள் வாயில் இப்னு ஹுஜ்ர் (ரலி) நுழைகிற போது மாநபி {ஸல்} எவ்வாறு கண்ணியப்படுத்தி, மரியாதை செய்தார்களோ அதே போன்று முஆவியா (ரலி) அவர்களும் கண்ணியமும், மரியாதையும் கொடுத்தார்கள்.

பின்னர் கடந்த கால அந்த நீங்கா நினைவுகளை அவரோடு பகிர்ந்து கொண்டு, அன்று அரசர்களின் பின்னால் அமர்வதற்கும், அரசர்களின் செருப்பை அணிவதற்கும் தகுதி இல்லாதவன் என்று உங்களால் அடையாளம் காட்டப்பட்ட இந்த முஆவியாவை அல்லாஹ் இந்த உம்மத்தின் தலைவராக, ஆட்சியாளராக ஆக்கியிருக்கின்றான்” என்று கூறினார்கள்.

அங்கிருந்து விடை பெற்ற வாஇல் இப்னு ஹுஜ்ர் அவர்களிடம் சில பண முடிப்புகளை முஆவியா (ரலி) வழங்க, என்னை விட தகுதியானவர்களுக்கு இதை வழங்குங்கள் என்று கூறி வாஇல் (ரலி) வாங்க மறுத்து விட்டார்கள்.

தங்களோடு உணவருந்திச் செல்லுமாறு கோரிய அழைப்பையும் நிராகரித்து விட்டு அங்கிருந்து தள்ளாடியபடியே கடந்து சென்றார் வாஇல் இப்னு ஹுஜ்ர் (ரலி) அவர்கள்.

இந்தச் செய்தியை அறிவிக்கும் ஸிமாக் (ரஹ்) அவர்கள் வாஇல் இப்னு ஹுஜ்ர் (ரலி) அவர்கள் என்னிடம் “முஆவியா (ரலி) அவர்களை என்னோடு நான் ஒட்டகையில் அமர வைத்திருக்கலாமே என்று இப்போது நினைக்கின்றேன்” என்று கூறினார்கள்.( நூல்: அல் இஸ்தீஆப், அல்பிதாயா வன் நிஹாயா,தபகாத்துல் குப்ரா )

திசை மாறிச் சென்ற பள்ளிப்புறா….

عن أبي أمامة الباهلي قال: " جاء ثعلبة بن حاطب الأنصاري إلى رسول الله صلى الله عليه وسلم فقال: يا رسول الله، ادع الله أن يرزقني مالاً، فقال: " ويحك يا ثعلبة، قليل تؤدي شكره خير من كثير لا تطيقه " . ثم أتاه بعد ذلك فقال: يا رسول الله، ادع الله أن يرزقني مالاً، قال: " أما لك في أسوة حسنة، والذي نفسي بيده لو أردت أن تسير الجبال معي ذهباً وفضة لسارت " ، ثم أتاه بعد ذلك فقال: يا رسول الله، ادع الله أن يرزقني مالاً، والذي بعثك بالحق لئن رزقني الله مالاً لأعطين كل ذي حق حقه، فقال رسول الله صلى الله عليه وسلم: " اللهم ارزق ثعلبة مالاً، الله ارزق ثعلبة مالاً " ، قال: فاتخذ غنماً فنمت كما ينمي الدود، فكان يصلي مع رسول الله صلى الله عليه وسلم الظهر والعصر، ويصلي في غنمه سائر الصلوات، ثم كثرت ونمت، فتقاعد أيضاً حتى صار لا يشهد إلا الجمعة، ثم كثرت ونمت فتقاعد أيضاً حتى كان لا يشهد جماعة ولا جماعة، وكان إذا كان يوم جمعة خرج يتلقى الناس يسألهم عن الأخبار فذكره رسول الله صلى الله عليه وسلم ذات يوم فقال: " ما فعل ثعلبة " ؟ فقالوا: يا رسول الله، اتخذ ثعلبة غنماً لا يسعها واد، فقال رسول الله صلى الله عليه وسلم: " يا ويح ثعلبة، يا ويح ثعلبة، يا ويح ثعلبة " ، وأنزل الله آية الصدقة، فبعث رسول الله صلى الله عليه وسلم رجلاً من بني سليم، ورجلاً من بني جهينة، وكتب لهما أسنان الصدقة كيف يأخذان وقال لهما: " مرا بثعلبة بن حاطب، وبرجل من بني سليم، فخذا صدقاتهما " ، فخرجا حتى أتيا ثعلبة فسألاه الصدقة، وأقرآه كتاب رسول الله صلى الله عليه وسلم فقال: ما هذه إلا جزية: ما هذه إلا أخت الجزية: انطلقا حتى تفرغا ثم عودا إلي، فانطلقا وسمع بهما السلمي، فنظر إلى خيار أسنان إبله، فعزلها للصدقة، ثم استقبلهما بها، فلما رأياها قالا: ما هذا عليك، قال: خذاه فإن نفسي بذلك طيبة، فمرا على الناس وأخذا الصدقة، ثم رجعا إلى ثعلبة، فقال: أروني كتابكما، فقرأه فقال: ما هذه إلا جزية، ما هذه إلا أخت الجزية، اذهبا حتى أرى رأيي، فأقبلا فلما رآهما رسول الله صلى الله عليه وسلم قبل أن يكلماه قال: " يا ويح ثعلبة " ، ثم دعاء للسلمي بخير، وأخبراه بالذي صنع ثعلبة، فأنزل الله عز وجل: " ومنهم من عاهد الله لئن آتانا من فضله " إلى قوله " وبما كانوا يكذبون " وعند رسول الله صلى الله عليه وسلم رجل من أقارب ثعلبة سمع ذلك، فخرج حتى أتاه، فقال: ويحك يا ثعلبة، قد أنزل الله عز وجل فيك كذا وكذا فخرج ثعلبة حتى أتي النبي صلى الله عليه وسلم، فسأله أن يقبل منه صدقته فقال: " إن الله تبارك وتعالى منعني أن أقبل منك صدقتك " ، فجعل يحثي التراب على رأسه، فقال رسول الله صلى الله عليه وسلم " هذا عملك، قد أمرتك فلم تطعني " ، فلما أبى رسول الله صلى الله عليه وسلم أن يقبض صدقته رجع إلى منزله، وقبض رسول الله صلى الله عليه وسلم ولم يقبض منه شيئاً.
ثم أتى أبا بكر رضي الله عنه حين استخلف، فقال: قد علمت منزلتي من رسول الله صلى الله عليه وسلم وموضعي من الأنصار فاقبل صدقتي، فقال أبو بكر: لم يقبلها رسول الله منك، أنا أقبلها؟ فقبض أبو بكر رضي الله عنه ولم يقبلها.
فلما ولي عمر أتاه فقال: يا أمير المؤمنين، اقبل صدقتي، فقال: لم يقبلها منك رسول الله صلى الله عليه وسلم ولا أبو بكر، أنا أقبلها؟ فقبض ولم يقبلها.
ثم ولي عثمان رضي الله عنه فأتاه فسأله أن يقبل صدقته، فقال: لم يقبلها رسول الله ولا أبو بكر ولا عمر، أنا أقبلها؟ ولم يقبلها. وهلك ثعلبة في خلافة عثمان رضي الله عنه.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் ஸஅலபா இப்னு ஹாத்தப் என்கிற நபித்தோழர் வந்தார்.

அல்லாஹ்வின் தூதரே! செல்வச் செழிப்பான வாழ்விற்காக அல்லாஹ்விடம் எனக்காக பிரார்த்தியுங்கள்என்றார்.

ஸஅலபாகுறைவாக வழங்கப்பட்டு அதற்காக நீர் நன்றி செலுத்துவது இருக்கிறதே, நிறைவான செல்வம் வழங்கப்பட்டு நன்றி செலுத்தாமல் வாழ்வதைக் காட்டிலும் மிகச் சிறந்ததாகும்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

மீண்டும் முன்பு போலவே ஸஅலபா, அண்ணலாரிடம் வந்து கேட்டுக் கொண்டார்.

அதற்கு அண்ணலார், உனக்கு என் வாழ்க்கையில் அழகிய முன் மாதிரி இல்லையா? “என்னைப் பாரும்! என் உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது ஆணை! நான் விரும்பினால் இதோ தெரிகிற இந்த மலைகளை தங்கமாகவும், வெள்ளியாகவும் அல்லாஹ் மாற்றித்தருவான்!” (என்றாலும் எளிமையாக நான் வாழவில்லையா?) என்று கூறினார்கள்.

மூன்றாவது முறை நபிகளாரின் முன்வந்து நின்ற போது, அல்லாஹ்வின் தூதரே! எனக்காக துஆ செய்யுங்கள்! அல்லாஹ் எனக்கு வழங்குகின்ற செல்வத்திலிருந்து நான் யார் யாருக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அவைகளை முறையாக முழுமையாக கொடுப்பேன்! இது உங்களை சத்தியத்தை கொண்டு அனுப்பிய அந்த இறைவனின் மீது ஆணைஎன்று முழங்கினார்.

அப்போது, அண்ணலார் அவருக்காக மூன்று முறை பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் துஆ பரக்கத்தால் ஸஅலபாவின் (ஆடு, மாடு, ஒட்டகை) மந்தை பல்கிப் பெருகியது.

எப்போதும் பள்ளிவாசலிலேயே சுற்றித்திரிந்து கொண்டுஹமாமுல் மஸ்ஜித்பள்ளிப்புறாவாக இருந்த அவர் இப்போது லுஹர் மற்றும் அஸர் ஆகியவற்றை மட்டும் அண்ணலாருடன் தொழுது வந்தார்.

மீதமுள்ள தொழுகைகளை அவரின் மந்தையிலேயே தொழுது கொண்டிருந்தார்.

மந்தை இன்னும் பல்கிப் பெருகியது, ஜும்ஆவிற்கு மட்டும் வந்து கொண்டிருந்தார்.

மதீனாவில் அவரின் மந்தையை வைப்பதற்கு இடமே கிடைக்கவில்லை எனும் நிலை ஏற்படும் அளவிற்கு மந்தை பல்கிப் பெருகியது.

மதீனாவை விட்டு வெகு தூரமிருக்கின்ற ஓர் மலைப்பகுதியில் பிரம்மாண்டமான ஓர் இடத்தில் அவர் மந்தையை அமைத்தார்.

இப்போது அவரிடம் இருந்து ஜும்ஆவிற்கான நற்பேரும் அகன்று போனது.

ஒருமுறை நபிகளார் ஸஅலபா என்ன ஆனார்? என்று வினவியதற்கு, நபித்தோழர்கள் அவரின் நிலையை விளக்கிக் கூறினார்கள்.

அப்போது, அண்ணலார்யா வய்ஹ ஸஅலபாஸஅலபா விற்கு ஏற்பட்ட நாசமே! என்று மூன்று முறை கூறினார்கள்.

இந்நிலையில் அல்லாஹ் ஜகாத்தின் சட்டத்தை அருளினான். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஸஅலபாவிடமும், ஸுலைம் கோத்திரத்தைச் சார்ந்த இன்னொரு நபித்தோழரிடமும் ஜகாத் வசூலிக்க இரண்டு நபர்களை, ஜகாத் பற்றிய விவரத்தோடும், என்னென்ன பொருளுக்கு என்னென்ன ஜகாத் வழங்க வேண்டும் என்கிற தகவலும் அடங்கிய ஒரு கடிதத்தையும் கொடுத்து அனுப்பினார்கள்.

அவர்கள் நேராக ஸஅலபாவிடம் வந்து, கடிதத்தைக் கொடுத்து தம்மை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அனுப்பிவைத்ததின் நோக்கத்தைக் கூறினார்கள்.

ஜகாத்தின் விவரங்களைப் படித்த பிறகு, ஸஅலபா சொன்னார்: ”என்ன இது ஒரு முஸ்லிமிடம் ஜிஸ்யா வரி கேட்பது போலல்லவா இருக்கிறதுஎன்றார்.

அவர்கள் அங்கிருந்து கிளம்பி ஸுலைம் கோத்திரத்தைச் சார்ந்த இன்னொரு நபித்தோழரைச் சந்தித்து, கடிதத்தைக் கொடுத்து தங்களை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அனுப்பி வைத்ததின் நோக்கத்தைக் கூறினார்கள்.

ஜகாத்தின் விவரங்களைப் படித்த அவர் சற்று ஓய்வெடுங்கள். இதோ கணக்கெடுத்து விட்டு ஜகாத்தைத் தருகின்றேன்என்றார்கள்.

இதோ! என்னுடைய ஜகாத்! கொண்டு செல்லுங்கள். இப்போது தான் இதை வழங்கியதன் மூலம் என் மனம் நிம்மதி அடைவதை உணர்கின்றேன்என்றார்கள்.

அதைப் பெற்றுக் கொண்ட இருவரும், மீண்டும் ஸஅலபாவிடம் வந்தனர். முன்பு போலவே கூறிய அவர் ஜகாத் தர முடியாது என மறுத்து விட்டார்.

அங்கிருந்து விடை பெற்று இருவரும் மதீனா நோக்கி வந்தார்கள். நேராக மஸ்ஜிதுன் நபவீயில் வந்திறங்கினார்கள்.
அவர்கள் இருவரும் பேச்சு கொடுக்கும் முன்பாகவேயா வைஹ ஸஅலபாஎன்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

பின்பு நடைபெற்ற சம்பவங்களை அவ்விருவரும் நபிகளாரிடம் விவரித்தார்கள். ஸஅலபாவை சபித்த நபிகளார் {ஸல்} அவர்கள், ஸுலைம் கோத்திரத்தைச் சார்ந்த அந்த நல்ல நபித்தோழருக்கு துஆ செய்தார்கள்.

அப்போது அல்லாஹ் ஸஅலபாவின் இந்தச் செயலை இடித்துரைத்து வசனங்களை இறக்கியருளினான்.

وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِنْ فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ (75) فَلَمَّا آتَاهُمْ مِنْ فَضْلِهِ بَخِلُوا بِهِ وَتَوَلَّوْا وَهُمْ مُعْرِضُونَ (76) فَأَعْقَبَهُمْ نِفَاقًا فِي قُلُوبِهِمْ إِلَى يَوْمِ يَلْقَوْنَهُ بِمَا أَخْلَفُوا اللَّهَ مَا وَعَدُوهُ وَبِمَا كَانُوا يَكْذِبُونَ (77)

அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களில் இப்படிச் சிலர் இருக்கின்றனர்; “அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து எங்களுக்கு வழங்கினால், நிச்சயம் நாங்கள் தானதர்மங்கள் செய்வோம்; மேலும், நல்லவர்களாக வாழ்வோம்என்று அல்லாஹ்விடம் அவர்கள் வாக்குறுதி அளித்தார்கள்.

ஆனால், அல்லாஹ் தன்னுடைய அருட்கொடையிலிருந்து அவர்களுக்கு வழங்கிய போது, அதில் அவர்கள் கஞ்சத்தனம் செய்தார்கள். மேலும், சிறிதும் பொருட்படுத்தாதவர்களாய் (தமது வாக்குறுதியிலிருந்து) நழுவிச் சென்றார்கள்.

ஆகவே, அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதிக்கு அவர்கள் மாறுசெய்த காரணத்தினாலும், பொய்யுரைத்துக் கொண்டிருந்ததாலும் அல்லாஹ் அவர்களின் உள்ளத்தில் நயவஞ்சக எண்ணத்தை ஏற்படுத்தினான்.”

                                                       (அல்குர்ஆன்:9:75-77)

நபிகளாரின் அவையிலிருந்த ஸஅலபாவின் உறவினர் ஒருவர் ஓடோடிச் சென்று இந்தச் செய்தியை ஸஅலபாவிடம் தெரிவித்தார்.

இதைக் கேட்டதும் பதறித்துடித்த ஸஅலபா தமக்கான ஜகாத்தை கணக்கிட்டு, எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வந்தார். அதைப் பெற்றுக் கொள்ளுமாறும் கூறினார்.

அதற்கு, அண்ணல் {ஸல்} அவர்கள்அல்லாஹ் உம்மிடமிருந்து உம்முடைய ஜகாத்தைப்பெறுவதற்கு தடை செய்துவிட்டான்என்று கூறினார்கள்.

அங்கிருந்து விடை பெற்ற ஸஅலபா தம் தலை மீது மண்ணை அள்ளி தூவிய வாறு சென்றார்.

அப்போது நபி {ஸல்} அவர்கள்ஸஅலபாவே! இது தான் உம்முடைய செயலாகும். முன்னரே உமக்கு உணர்த்தினேன். ஆனால், நீர் என் சொல்லை ஏற்க மறுத்து விட்டீர்என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தங்களின் காலத்தில் ஸஅலபாவிட மிருந்து ஜகாத் பெற மறுத்து விட்டார்கள்.

முறையே பின்னர் ஆட்சியாளர்களாக இருந்த அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரும் வாங்க மறுத்து விட்டார்கள்.

இறுதியில் உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஸஅலபா இறந்து போனார்.

(நூல்: உஸ்துல் ஃகாபா, பாகம்:1, பக்கம்:333, அல் இஸாபா, பாகம்:1, பக்கம்:930)

பத்ர் மற்றும் உஹதில் கலந்து கொண்டவர்கள்,எந்நேரமும் பள்ளிவாசலோடு தொடர்பில் இருந்தவர்கள் அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட அந்த தருணம் அவர்களை  இப்படியான நிலைக்கு தள்ளிவிட்டது.

வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும் ஏகோபித்து இவர்களின் விஷயத்தில் இத்தோடு நின்று கொள்வது சாலச் சிறந்தது எனவும், மேற்கொண்டு அவர்களின் இறுதி விவகாரம் அல்லாஹ்வோடு தொடர்புடையது என்றும் நமக்கு அறிவுறுத்துகின்றார்கள்.

அதிசயம் ஆனால் உண்மை…

He entered the insurance industry, and became a top salesman, who soon built his own company.
What made his nickname, “The Miracle Man”, was the accident that happened in 1981. Goodman took his new airplane out for a test flight, which ended with an accident: the plane crashed, and he stayed paralyzed, unable to move from head to foot, breathe on his own, talk or swallow – unable to do anything but blink his eyes.
His diagnosis was that he’d never breathe, talk or walk ever again in his life; they even assumed he had also lost all brain function – but he had other plans: “I believed with all my heart and soul that I would one day be normal—not hooked to machines, not silent, not fed through tubes, not pushed in a wheelchair.”
It was his sister, Pat, who noticed his limited eye movement, and understood that  his eyes would be the only channel through which Goodman could communicate. So she developed a series of charts which contained the alphabet and other important subjects, and Morris was soon able to communicate his thoughts by blinking his eyes.
But he wasn’t satisfied: he wanted to talk, and since talk required the ability to breathe, he started working on using other abdominal muscles (since his diaphragm was destroyed), and after several weeks he was able to take his first breath without the use of a machine. The doctors, who were stunned, slowly reduced the settings on Goodman’s ventilator, and soon he started working with speech therapists, and on June 1, less than four months after his accident,  he began to eat again and working on learning to walk again.
Eight months after the crash, Goodman walked out of the hospital. “The Miracle Man” was the nickname he was given by his doctors, and he kept it later on.

மார்ச் 10, 1981 மோரிஸ் குட்மேன் என்ற அமெரிக்கர், இன்ஸூரன்ஸ் பாலிசிகளை விற்று கோடிகளுக்கு சொந்தக்காரரான பெரும் செல்வந்தர்.

அவர் தனக்காக ஒரு குட்டி விமானத்தை வாங்கினார். விமானம் ஓட்டும் பயிற்சியையும் அவர் முடித்திருந்தார்.

மேலே குறிப்பிட்ட அந்த நாளில் அந்த குட்டி விமானத்தை அவரே இயக்கி வானத்தில் பறந்தார்.

மேலே உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது இஞ்சினில் கோளாறு ஏற்பட, மோரிஸ் விமானத்தை தரையிறக்க முயற்சி செய்து இறுதியில் அது பெரும் சப்தத்துடன் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் நொறுங்கியது.

விமானத்தில் பயணித்த மோரிஸ் -க்கு கழுத்து எலும்புகளில் முக்கியமான இ1, இ2 என்று சொல்லப்படும் முதுகுத்தண்டு எழும்புகள் உடைந்தது. நெஞ்செலும்பு, நுரையீரல் ஆகியவை கடும் சேதமடைந்தது.

இன்னும் உடலின் பல பாகங்களில் பலத்த அடியும் காயமும் ஏற்பட்டிருந்தது. அவரைப் பரிசோதித்த உயர்தர மருத்துவக்குழு கூட்டாக “அவரால் பேச முடியாது, நடக்க முடியாது, சாப்பிட முடியாது, மூச்சு விட முடியாது, உடலை அசைக்க முடியாது என்று பட்டியலிட்டுக் கொண்டே போனார்கள். சுருக்கமாகச் சொன்னால் அவர் ஒரு நடைபிணம் என்று சொல்லாமல் சொல்லி விட்டார்கள்.

அவரால் ஒரேயொரு செயலை மட்டும் தான் செய்ய முடியும். அது என்ன? கண்களை மட்டும் இமைக்க முடியும். இது தான் இவரின் வாழ் நாள் முழுவதுமான நிலையாகும். இன்னும் சில வாரங்களோ, சில மாதங்களோ தான் இவர் உயிரோடு இருப்பார் என்று கூறி விட்டுச் சென்று விட்டார்கள்.

ஆனால், அதே ஆண்டு நவம்பர் 13 –ஆம் தேதி மருத்துவமனையை விட்டு வெளியே வந்து இயல்பு வாழ்க்கை வாழ வந்து விட்டார் வெறும் எட்டே மாதங்களில்.

அவர் எழுதிய சுய சரிதையில் அவர் இப்படி குறிப்பிட்டார் “மருத்துவர்கள் கூறியது என் காதில் கேட்ட மாத்திரத்திலேயே அடுத்த கிறிஸ்துமஸ் க்குள் எழுந்து நடமாடிட வேண்டும், முன்பு போல் இயங்கிட வேண்டும்” என்று உள்ளத்தில் உறுதி பூண்டேன்” என்றார்.

மோரிஸ் குட்மேன் என்பவர் த மிராக்கிள் மேன் குட்மேன் அற்புத மனிதர் குட்மேன் என்று உலகம் புகழ மாறிப் போனார். 

அதிசயத்தை விஞ்சிய பேரதிசயம்…

அந்த நபித்தோழருக்கு ஏற்பட்ட நோய், அதன் வீரியம், அது ஏற்படுத்திய எதிர்வினைகள் எல்லாம் அவரின் வாழ்க்கையை வீட்டின் ஓர் அறைக்குள் முடக்கிப் போட்டது.

அந்த நபித்தோழர் தாம் மரணத்தின் விளிம்பிற்கே வந்து விட்டதாக உணர்ந்தார். இன்னும் சில தினங்களில் தாம் உயிரிழந்து விடுவோம் என்கிற முடிவுக்கு வந்து எல்லா வகையிலும் தம்மை தயார் படுத்திக் கொண்டார்.

அது ஹஜ்ஜுடைய காலம். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுடன் லட்சத்திற்கும் மேற்பட்ட தோழர்களும் பங்கெடுத்திருந்த மகத்தான தருணமும் கூட.

பெருமானார் {ஸல்} அவர்களோடு பல்வேறு சபைகளில் அமர்ந்தும், பல்வேறு யுத்த களங்களில் பங்கெடுத்து அம்பெய்யும் பாக்கியம் கிடைத்த அவருக்கு, நபி {ஸல்} அவர்களோடு இணைந்து ஹஜ் செய்ய முடியாமல் போனதே என்கின்ற வருத்தமும் சேர்ந்து கொண்டது.

முதல் ஈமானிய புருஷர் அபூபக்ர் (ரலி) அவர்கள் முதற்கொண்டு ஹஜ்ஜுடைய நாளுக்கு முன்பாக ஈமான் கொண்ட கடைசி தோழர் வரையிலான லட்சத்திற்கும் மேற்பட்ட தோழர்களோடு தமது இறுதி ஹஜ்ஜை நிறைவு செய்த மாநபி {ஸல்} அவர்கள் நோய்வாய்ப்பட்டு வீட்டில் முடங்கிக் கிடக்கும் அந்த நபித்தோழரின் வீட்டை நோக்கி புறப்பட்டார்கள்.

இஸ்லாத்திற்காக முதல் அம்பெய்தவர் எனும் பேற்றிற்கு சொந்தக்காரர், பூமான் நபியவர்களின் சுந்தர வதனத்தால் சுவனத்தைக் கொண்டு சோபனம் சொல்லப்பட்ட பதின்மரில் ஒருவரான ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் தான் நோய்வாய்ப்பட்டிருந்த அந்த நபித்தோழர்.

மாநபி {ஸல்} அவர்கள் ஸஅத் (ரலி) அவர்களின் வீட்டிற்குள் வருகை தருகின்றார்கள்.

படுக்கையில் முடங்கிக் கிடக்கின்ற ஸஅத் (ரலி) அவர்களின் அருகே சென்று அமர்கின்றார்கள்.

பிறகென்ன நடந்ததென்று ஸஅத் (ரலி) அவர்கள் சொல்லி நாம் கேட்போமே..

وعن أبي إسحاق سعد بن أبي وقاص مالك بن أهيب بن عبد مناف بن زهرة بن كلاب بن مرة بن كعب بن لؤي القرشي الزهري رضي الله عنه أحد العشرة المشهود لهم بالجنة رضي الله عنهم قال: جاءني رسول الله صلى الله عليه وسلم يعودني عام حجة الوداع من وجع اشتد بي فقلت: يا رسول الله إني قد بلغ بي من الوجع ما ترى، وأنا ذو مال ولا يرثني إلا ابنة لي، أفأتصدق بثلثي مالي ؟ قال: لا قلت: فالشطر يا رسول الله ؟ فقال: لا قلت فالثلث يا رسول الله ؟ قال الثلث والثلث كثير أو كبير إنك أن تذر ورثتك أغنياء خير من أن تذرهم عالة يتكففون الناس وإنك لن تنفق نفقة تبتغي بها وجه الله إلا أجرت عليها حتى ما تجعل في في امرأتك

“ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) கூறினார்கள்விடைபெறும்' ஹஜ்ஜின்போது மிகக் கடுமையாக நோயுற்றிருந்த என்னை உடல் நலம் விசாரிப்பதற்காக இறைத்தூதர் {ஸல்} அவர்கள் என்னிடம் வந்தார்கள்.

அப்போது நான், '(இதோ) தாங்கள் காண்கிறீர்களே இந்த நோய் என்னைப் பீடித்துவிட்டது. நான் ஒரு செல்வந்தன். (நான் இறந்துவிட்டால்) என் ஒரே மகள் தவிர வேறெவரும் என(து சொத்து)க்கு வாரிசாக மாட்டார்கள். எனவே என்னுடைய செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தானம் செய்து விடட்டுமா?' என்று கேட்டேன்.

நபி(ஸல்) அவர்கள், 'வேண்டாம்' என்று கூறினார்கள். நான் '(என்னுடைய செல்வத்தில்) பாதியை (யாவது தானம் செய்யட்டுமா)?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் (அப்போதும்) வேண்டாம் என்று கூறினார்கள்.

நான் மூன்றிலொரு பங்கை(யாவது தானம் செய்துவிடட்டுமா)?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், '(மூன்றிலொரு பங்கா?) மூன்றிலொரு பங்கே அதிகம் தான்.

நீங்கள் உங்கள் வாரிசுகளைத் தன்னிறைவுடையவர்களாகவிட்டுச் செல்வது, அவர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாகவிட்டுச் செல்வதைவிடச் சிறந்ததாகும்.

நீங்கள் இறைவனின் திருப்தி கருதிச் செய்யும் (தான தர்மம், குடும்பச்) செலவு எதுவாயினும் அதற்காக உங்களுக்கு நற்பலன் அளிக்கப்படாமல் இருப்பதில்லை. அது நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் ஊட்டும் (ஒரு கவளம்) உணவாயினும் சரியே (அதற்கும் நற்பலன் உண்டு)' என்று கூறினார்கள்.

இன்னொரு அறிவிப்பில் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் (நான் நோயுற்றிருந்த போது என்னை உடல் நலம் விசாரிக்க வந்து), இறைவா! சஅதுக்கு (நோயிலிருந்து) குணமளிப்பாயாக என்று பிரார்த்தித்தார்கள்”.                                                 ( நூல்: புகாரி )

அம்பெய்யும் படைவீரராக துவங்கிய அவர்களின் வாழ்க்கைப் பயணம் முன்னணி வீரர்களில் ஒருவராகத் தொடர்ந்து தளபதி, கவர்னர் என பரிணாமம் கண்டு மிளிர்ந்தது.

 ஹிஜ்ரி 10 –இல், ஹஜ்ஜத்துல் வதாவில் சில தினங்களில் உயிர் பிரிந்து விடும் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்த ஸஅத், அதற்கு எல்லா வகையிலும் ஆயத்தமாக இருந்த ஸஅத் (ரலி) அவர்கள் அதற்குப் பிறகு வாழ்ந்த காலம் எவ்வளவு தெரியுமா? சுமார் 45 ஆண்டுகள்.

ஹிஜ்ரி 55 –இல் முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் வஃபாத் ஆகின்றார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்...

இன்னும் சொல்லப் போனால் முஹாஜிர்களில் கடைசியாக இறப்பெய்தியவர்கள் என்கிற சிறப்பையும் அவர்கள் பெற்றார்கள்.

மாநபி {ஸல்} அவர்கள் சந்திக்க வந்த அந்த தருணத்தில், ஹஜ்ஜுடைய காலத்தில் அல்லாஹ்வின் நபியே! என் நோய் நீங்க துஆச் செய்யுங்கள்! என்று கூறாமல் அல்லாஹ் வழங்கிய செல்வங்கள் அனைத்தையும் அவனுக்கே அர்ப்பணிக்கத் துணிந்த அந்த மாபெரும் இதயத்தை மாண்புயர் நபி புரிந்து கொண்டார்கள்.

அந்தத் தருணம் தான். எஞ்சிய நாற்பத்தைந்து ஆண்டு கால வாழ்க்கைக்கு அச்சாரமாக அமைந்தது. ஆம்! அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஸஅத் (ரலி) அவர்களின் நோய் குணமாக வேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்.

எனவே, வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிற, மாற்றுகிற சில தருணங்களை அல்லாஹ் நம் முன் கொண்டு வருவான்.

நாம் அதைப் பயன்படுத்துவதைப் பொறுத்து நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ அமைந்து விடுகின்றது.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன்! நம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களையும், வெற்றிகளையும், உயர்வுகளையும் தந்தருள் புரிவானாக! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

11 comments:

  1. தங்களின் பொன்னான நேரத்தை செலவிட்டு அளப்பெரிய குறிப்புகளை அள்ளி தரும் தங்களுக்கு அல்லாஹ் எல்லா வளங்களையும் நலன்களையும் தருவானாக ஆமீன்

    ReplyDelete
  2. Allah thangaluku Ella vithamana nalavuhalayum innum kalvi atrlayum thantharulvanaga ameen

    ReplyDelete
    Replies
    1. ஆமீன் ஆமீன் யா ரபல் ஆலமீன்

      Delete
  3. Barakallahu Fee Umrika,Amrika,Ahlika,Sihhathika Va Ijthihadhika

    ReplyDelete
  4. جزاكﷲ خيرا في الدارين

    ReplyDelete