ரஹப் அல் கனூன் எனும் கரும்புள்ளி!!!
தஸ்லீமா நஸ்ரின்,
இஷ்ரத் ஜஹான், ஜாமிதா
வரிசையில் தற்போது தூய
இஸ்லாத்தின் மீது களங்கத்தை
வீசி, சர்வதேச ஊடகங்களால்
பெரிதும் கொண்டாடப் படுபவர்களின்
வரிசையில் இணைந்திருக்கின்றார் சவூதியில் பிறந்து வளர்ந்த ரஹப் அல் கனூன் என்கிற பெண்மணி.
கனடாவில் தஞ்சம் புகுந்துள்ள ரஹப் சவூதி அரசின்
பிராந்திய ஆளுநர் ஒருவரின் மகளாவார். அல் கியூனன் எனும் பாரம்பர்யமான குடும்பத்தைச்
சார்ந்த பெண்ணாவார்.
விரும்பிய ஆடைகளை அணியவும், விரும்பிய சுதந்திர
வாழ்க்கையை அனுபவிக்கவும் தான் ஏற்றிருக்கும் தூய இஸ்லாத்தை துறப்பதாக முகநூலிலும்,
டுவிட்டரிலும் தெரிவித்தார்.
தன்னைப் போன்றே கனவுகளைச் சுமந்து வாழும் சவூதியின்
இளம் பெண்கள், இஸ்லாமியச் சட்டங்களின் கடுமையான நிலைப்பாட்டால் பாதிக்கப்பட்ட பெண்கள்
என்னைப் போன்று இஸ்லாத்தை தூக்கியெறிந்து விட்டு வெளியே வரவேண்டும் என்றும் அழைப்பு
விடுத்துள்ளார்.
இறைநம்பிக்கை, இறையச்சம்,
இறை நேசம், இறை அடிமைத்தனம் போன்ற
உயர்ந்த படித்தரங்கள் தான் ஓர் முஃமினின் நிரந்தர பண்பாகும்.
உண்மையான ஈமான்
இடம் பெற்றிருக்கிற இதயத்தில் ஒரு போதும் ஈமானுக்கு எதிரான நிலைப்பாடு இடம் பெறாது.
வறுமைக்காகவோ, உயிரின் மீதான பிரியத்திற்காகவோ பதவியின் மீதான மோகத்திற்காகவோ, ஆட்சி,
அதிகாரத்தின் மீதான ஆசைக்காகவோ, சுதந்திரமான வாழ்க்கை வசதிக்காகவோ ஒரு போதும் தன் ஈமானை ஓர்
இறைநம்பிக்கையாளன் விலை பேசவும் மாட்டான், விலை போகவும் மாட்டான்.
ஆனால், நாம் வாழும் காலத்தில் நம்முடைய சகோதர, சகோதரி (முஸ்லிம்கள்)
மிக இலகுவாக காதல் என்ற பெயரில் மாற்றார்களை இழுத்துக்
கொண்டு ஓடும் அவலங்கள் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டுதானிருக்கின்றன.
எங்கிருந்து இந்த
பிழைகள் ஏற்படுகின்றது?
அதை எப்படி சரி செய்வது? என்பது குறித்த முழுமையான
முயற்சியில் நாம் ஈடுபட கடமைப்பட்டுள்ளோம்.
இஸ்லாத்தை துறப்பதால் பாதிப்பு யாருக்கு?
إنْ
تَكْفُرُوا فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنْكُمْ وَلَا يَرْضَى لِعِبَادِهِ الْكُفْرَ
“நீங்கள் நிராகரிப்பீர்களாயின் திண்ணமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன். ஆனால், அவன் தன் அடியார்களிடம் ஒருபோதும் நிராகரிப்பை விரும்புவதில்லை.” ( அல்குர்ஆன்:39:7 )
وَاللَّهُ الْغَنِيُّ وَأَنْتُمُ الْفُقَرَاءُ وَإِنْ تَتَوَلَّوْا
يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُمْ ()
“அல்லாஹ்வோ தேவைகள்
அற்றவன். நீங்கள் தாம் தேவையுடையவர்களாய் இருக்கின்றீர்கள்.
ஒருவேளை நீங்கள் புறக்கணித்து விட்டால், அல்லாஹ்
உங்களுடைய இடத்தில் வேறொரு சமுதாயத்தைக் கொண்டுவருவான். மேலும்,
அவர்கள் உங்களைப் போல் இருக்க மாட்டார்கள்.” ( அல்குர்ஆன்:47:38
)
إِنْ يَشَأْ يُذْهِبْكُمْ
أَيُّهَا النَّاسُ وَيَأْتِ بِآخَرِينَ وَكَانَ اللَّهُ عَلَى ذَلِكَ قَدِيرًا ()
“மனிதர்களே!
அவன் நினைத்தால் உங்களை அகற்றி விட்டு, உங்களுக்குப்
பகரமாக மற்றவர்களைக் கொண்டு வருவான். இவ்வாறு செய்ய அல்லாஹ்
முழு வல்லமை பெற்றவனாக இருக்கின்றான்.” ( அல்குர்ஆன்:4:133
)
இந்த மூன்று இறைவசனங்களும் பொதுவாக இறைநிராகரிப்பாளர்களைப் பற்றி பேசுகின்றது. ஆனால், பின் வரும் வசனமோ நேரடியாக முஃமின்களைப் பார்த்தே பேசுகின்றது.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا مَنْ يَرْتَدَّ
مِنْكُمْ عَنْ دِينِهِ فَسَوْفَ يَأْتِي اللَّهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ
وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ
يُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ وَلَا يَخَافُونَ لَوْمَةَ لَائِمٍ ذَلِكَ
فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ ()
அல்லாஹ் கூறுகின்றான்: “இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் எவரேனும் தனது
தீனை – மார்க்கத்தை விட்டுத் திரும்பி விடுவாராயின் (திரும்பிப் போகட்டும்.) அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைத்
தோற்றுவிப்பான். (அவர்கள் எத்தகையவர்களாய் இருப்பார்களெனில்,)
அல்லாஹ் அவர்களை நேசிப்பான்; அவர்களும்
அல்லாஹ்வை நேசிப்பார்கள்.
அவர்கள் இறைநம்பிக்கையாளர்களிடம் மென்மையாகவும், நிராகரிப்போரிடம் கடுமையாகவும்
இருப்பார்கள். அல்லாஹ்வின் பாதையில் கடும் முயற்சிகளை
மேற்கொள்வார்கள். நிந்திப்பவர்களின் எந்த நிந்தனைக்கும்
அவர்கள் அஞ்சமாட்டார்கள்.
இது அல்லாஹ்வின் அருளாகும். தான் நாடுகின்றவர்களுக்கு இதனை அவன் அருளுகின்றான். மேலும், அல்லாஹ் பரந்த வளங்களின் உரிமையாளனாகவும்
அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்.” ( அல்குர்ஆன்:5:54
)
அளவிலா அருட்கொடை இஸ்லாம்
إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ
“திண்ணமாக,
இஸ்லாம் மட்டுமே
அல்லாஹ்விடம் ஒப்புக் கொள்ளப்பட்ட வாழ்க்கை நெறி
( மார்க்கம் – தீன் ) ஆகும்”.
( அல்குர்ஆன்: 3: 19 )
உலக மனித சமுதாயத்திற்கு அல்லாஹ் செய்த அருட்கொடைகளில் மகத்தான அருட்கொடை இஸ்லாம்
எனும் வாழ்வியல் நெறியைத் தந்ததாகும்.
الْيَوْمَ أَكْمَلْتُ
لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ
الْإِسْلَامَ دِينًا
“இன்று உங்களுடைய தீனை உங்களுக்காக நான்
முழுமையாக்கி விட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு
செய்தும் விட்டேன். இன்னும்,
உங்களுக்காக
இஸ்லாத்தை உங்களுடைய தீன் – வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு
விட்டேன். ( அல்குர்ஆன்: 5: 3 )
மனிதனை மனிதனாகவும், புனிதனாகவும் மாற்றுகிற, பண்படுத்துகிற மகத்தான ஆற்றல் இஸ்லாத்திற்கு மாத்திரமே உண்டு. ஏனெனில், இஸ்லாம் மாத்திரமே படைத்த இறைவனால்
அங்கீகரிக்கப்பட்ட மாதமாகும்.
உலகில் மனித சமூகத்தின் எல்லா வகையான உயர் சிந்தனைகளும், அழகிய செயல்பாடுகளும் அங்கீகரிக்கப்பட வேண்டுமானால் அங்கே இஸ்லாம் நிச்சயம்
இடம் பெற்றாக வேண்டும்.
وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ
وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ ()
”இஸ்லாத்தை விடுத்து வேறொரு வாழ்க்கை
நெறியை யாரேனும் மேற்கொள்ள விரும்பினால், அவனிடமிருந்து ஒரு போதும் அது ஏற்றுக்
கொள்ளப்படாது. மேலும்,
மறுமையில் அவன்
நஷ்டமடைந்தவரில் ஒருவனாக இருப்பான்”.
( அல்குர்ஆன்: 3: 85 )
இஸ்லாத்தின் நிழலில் ஒரு நாள் வாழ்வதன் மகத்துவம்....
ஹகீம் இப்னு
ஹிஸாம் அவர்கள் தங்களின் வாழ்க்கையில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தாம்
இஸ்லாத்திற்கு தாமதமாக வந்ததை நினைத்து கண்ணீர் வடிப்பார்கள்.
சற்றேறக்குறைய 120 ஆண்டுகள் வாழ்ந்தவர்கள். இறைநிராகரிப்பில் சரியாக 60
ஆண்டுகளும், தூய இஸ்லாத்தை வாழ்க்கை
நெறியாக ஏற்று 60
ஆண்டுகளும் வாழ்ந்திருக்கின்றார்கள்.
அன்னை கதீஜா (ரலி) அவர்களின் சகோதரரின் மகன் ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்கள். மக்கா வெற்றியின் போது தூய இஸ்லாத்தை
வாழ்க்கை நெறியாக ஏற்றுக்
கொண்டார்கள்.
فلقد رآه ابنه بعد إسلامه يبكي، فقال: "ما يبكيك يا أبتاه؟
قال: "أمور كثيرة كلها أبكاني يا بني
أولها بطء إسلامي مما جعلني أسبق إلى مواطن كثيرة صالحة حتى لو أنني أنفقت ملء الأرض ذهبا لما بلغت شيئا منها
ثم إن الله أنجاني يوم "بدر" و "أحد" فقلت يومئذ في نفسي
لا أنصر بعد ذلك قريشا على رسول الله – صلى الله عليه و سلم – و لا أخرج من مكة، فما لبثت أن جررت إلى نصرة "قريش" جرا
ثم إنني كنت كلما هممت بالإسلام، نظرت إلى بقايا من رجالات قريش لهم أسنان و أقدار متمسكين بما هم عليه من أمر الجاهلية، فأقتدي بهم و أجاريهم
و ياليت أني لم أفعل
فما أهلكنا إلا الاقتداء بآبائنا و كبرائنا
فلم لا أبكي يا بني؟
அப்படி ஒரு நாள்
அவர்கள் அழுது கொண்டிருந்த போது அவர்களின் மகனார் “தந்தையே!
ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டார்.
ஒன்றா? இரண்டா? மகனே! எத்தனையோ விஷயங்கள்
இருக்கின்றது நான் அழுவதற்கு… என்று கூறிவிட்டு
தொடர்ந்தார்கள்.
ஆரம்பமாக நான்
இஸ்லாத்தை மிகவும் தாமதமாக ஏற்றுக் கொண்டதை நினைத்தும், எத்தனையோ தருணங்கள் அப்பொழுதெல்லாம் நான் இணைந்திருந்தால் மகத்தான
நன்மைகளையும், கூலியையும் பெற்றிருப்பேனே!? நான் இழந்த அந்த நன்மைகளை பூமி முழுவதையும் செலவழித்தாலும் பெற்றுக் கொள்ள
முடியாதே! என்பதற்காகவும் அழுகின்றேன்.
பின்னர், அல்லாஹ் என்னை பத்ரிலும், உஹதிலும் நான்
கொல்லப்படாமல் பாதுகாத்தான். அப்போது, நான் எனக்குள் கூறிக்
கொண்டேன் “இனி ஒரு போதும், குறைஷிகளுக்கு
உதவக் கூடாது என்று” என்ன செய்ய அதன் பின்னரும் குறைஷிகள் இழுத்த
இழுப்புக்கெல்லாம் நான் இசைந்தேன்.
பின்னர், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று என் உள் மனம் கூறும்
போதெல்லாம் குறைஷி குலத்தின் மேன்மக்களை பார்த்தேன், அவர்கள்
தங்களின் கொள்கையில் பிடிப்போடு இருந்ததோடு மாத்திரமல்லாமல் மக்களிடம் செல்வாக்கோடும்
இருந்தார்கள்.
நான் அப்படிச்
செய்திருக்கக் கூடாது! என் அழிவுக்கும், நாசத்திற்கும்
காரணம் மூதாதையர்களின் கொள்கையும், மேன்மக்களின் வழிமுறைகளும்
தான்!.
மகனே! இப்போது
சொல்! நான் எப்படி அழாமல் இருக்க முடியும்! என்று பதில் கூறினார்கள். ( நூல்: தஹ்தீபுல்
கமால் லி இமாமி அபுல் ஹஜ்ஜாஜுல் முஸ்னீ (ரஹ்).. )
கிட்டத்தட்ட 60
ஆண்டு கால இஸ்லாமிய வாழ்க்கையில் போட்டி போட்டு இபாதத்கள் செய்தார்கள்.
ஒருமுறை ஹஜ் செய்ய
வரும் போது தன்னுடன் 100 ஒட்டகைகளை அழைத்து வந்து,
குர்பானி கொடுத்து ஏழைகளுக்கு வினியோகித்தார்களாம்.
மற்றொரு முறை ஹஜ்
செய்ய வரும்போது தன்னுடன் நூறு அடிமைகளை அழைத்து வந்தார்கள். அவர்களின்
கழுத்துகளில் “அல்லாஹ்விற்காக ஹகீம் இப்னு ஹிஸாம்
அவர்களால் விடுவிக்கப்படுவர்கள்” என வெள்ளியால் ஆன
பட்டைகளில் பொறிக்கப்பட்டு இருந்ததாம். பின்னர் அவர்களை விடுதலை செய்தார்கள்.
وقيل إن حكيما باع دار الندوة من معاوية بمئة ألف
உச்சபட்சமாக, இழந்த நன்மைகளை அடையும் பொருட்டு இஸ்லாத்திற் கெதிராகவும்,
மாநபிக்கும், உம்மத்திற்கும் எதிராகவும் சதா
தீய பல திட்டம் தீட்ட உதவிய தாருன் நத்வாவை ஒரு லட்சம் திர்ஹம் விலை கொடுத்து
வாங்கி முஆவியா (ரலி) ஆட்சி காலத்தில் முஆவியா (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.
يا رسول
الله لا أدع شيئا صنعته في الجاهلية إلا صنعت لله في الإسلام مثله وكان أعتق في
الجاهلية مئة رقبة وأعتق في الإسلام مثلها وساق في الجاهلية مئة بدنة وفي الإسلام
مثلها
இன்னொரு, அறிவிப்பின் படி ”இஸ்லாத்திற்கு முன்பாக
எதையெல்லாம் நான் விரும்பி செய்தேனோ அல்லாஹ்வின் தூதரே! அவற்றை போன்று இஸ்லாமிய
வாழ்விலும் நான் செய்வேன்” என்று ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி)
அவர்கள் மாநபி {ஸல்} அவர்களிடம்
உறுதியோடு கூறினார்கள்.
பின்னர், அது போன்றே ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்கள் நடந்து
கொண்டார்கள்.
حدثنا عبد الحميد بن سليمان سمعت مصعب بن ثابت يقول
بلغني والله أن حكيم بن حزام حضر يوم عرفة ومعه مئة رقبة ومئة بدنة ومئة بقرة ومئة
شاة فقال الكل لله وعن أبي حازم قال ما بلغنا أنه كان بالمدينة أكثر حملا في سبيل
الله من حكيم
இன்னொரு
அறிவிப்பின் படி, ஒரு ஹஜ்ஜின் போது அரஃபாவில் 100 ஆடுகள்,
100 மாடுகள், 100 ஒட்டகங்கள் 100 அடிமைகள்
ஆகியவற்றை கொண்டு வந்து இதை நான் அல்லாஹ்விற்காக தர்மம் செய்கின்றேன் என்றார்கள்.
மதீனாவில்
அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணிக்கப்படுகிற செல்வங்களில் பெரும்பான்மையானவை ஹகீம்
இப்னு ஹிஸாம் (ரலி) அவர்களுடையதாகத்தான் இருக்கும் என அபூ ஹாஸிம் (ரஹ்) அவர்கள்
அறிவிக்கின்றார்கள். ( நூல்: அல் இஸ்தீஆப்
ஃபீ மஃரிஃபதில் அஸ்ஹாப், ஸியரு அஃலா மின் நுபலா, )
இஸ்லாத்தின்
நிழலில் ஒரு நாள் வாழ்வதன் மகத்துவம் குறித்து நபித்தோழர் ஹகீம் இப்னு ஹிஸாம்
(ரலி) அவர்களின் வாழ்வும் வாக்கும் நம்மை உணரத் தூண்டுகின்றது.
நாம் சில தலைமுறைகளாக முஸ்லிம்களாக இருப்பதால் இஸ்லாம் எவ்வளவு பெரிய மகத்தான
அருட்கொடை என்பதை நம்மால் விளங்க முடிவதில்லை.
இஸ்லாத்தின் நிழலில் சில நாட்கள் வாழ்வதன் மகத்துவம்....
قال ابن إسحاق: لما انصرف رسول الله
من الطائف اتبع أثره عروة بن مسعود بن معتب حتى أدركه قبل أن يصل إلى
المدينة فأسلم, وسأل رسول الله
أن يرجع إلى قومه بالإسلام, فقال له رسول الله
"إن فعلت فإنهم قاتلوك".
فقال له عروة: يا رسول الله أنا أحب إليهم من أبصارهم,
وكان فيهم محببًا مطاعًا, فخرج يدعو قومه إلى الإسلام فأظهر دينه رجاء ألا يخالفوه
لمنزلته فيهم, فلما أشرف على قومه وقد دعاهم إلى دينه رموه بالنبل من كل وجه
فأصابه سهم فقتله.
ஹிஜ்ரி 8 – ஆம் ஆண்டு ஹுனைன் யுத்தத்தில் தோற்று ஓடிய சில கோத்திரத்தார்கள் தாயிஃபில்
தஞ்சம் புகுந்தனர்.
அவர்களை முற்றுகையிட்டு வெற்றியோடு
தாயிஃபில் இருந்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது, அண்ணலாரைப் பின்
தொடர்ந்து வந்த ஸகீஃப் கோத்திரத்தைச் சார்ந்த உர்வா இப்னு மஸ்வூத் என்பவர் மாநபி {ஸல்} அவர்களிடம் வந்து,
கரம்பிடித்து இஸ்லாத்தைத் தழுவினார்.
இஸ்லாத்தின்
அடிப்படைகளை அவருக்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக்
கொடுத்தார்கள்.
استأذن عروة بن مسعود من النبي
أن يرجع إلى قومه فقال
"إني أخاف أن يقتلوك"
அல்லாஹ்வின் தூதரே! என் சமூக மக்களுக்கும் நான் இந்த இஸ்லாத்தை எடுத்தியம்ப விரும்புகின்றேன். அனுமதி தாருங்கள்! என்றார் உர்வா ரலியல்லாஹு
அன்ஹு அவர்கள்.
ஸகீஃப் கோத்திரத்தாரின் மூர்க்கத்தனமான குணத்தை அறிந்து வைத்திருந்த அண்ணலார் “உர்வாவே! அவர்கள் உன்னை கொன்று விடுவார்களோ என நான் அஞ்சுகின்றேன். கொஞ்சம் காத்திருந்து அவர்களிடம் சொல்லலாமே” என்றார்கள்.
அதற்கு உர்வா ரலியல்லாஹு
அன்ஹு ”அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் என்னை கன்னிப் பெண்ணை விட
அதிகம்
நேசிக்கின்றார்கள்”. ஆதலால்
அப்படியெல்லாம் என்னிடம் அவர்கள் நடந்து கொள்ள மாட்டார்கள். ஆகவே,
நீங்கள் பயப்பட வேண்டாம்” என்று கூறியவராக விடைபெற்றுச் சென்றார்கள்.
உண்மையில், அவரிடம் ஸகீஃப் கோத்திரத்தார்கள் அப்படித்தான் அதுவரை
நடந்து கொண்டனர். ஆனால்,
அவரின் இந்த நல்லெண்ணம் இப்போது தவறாகிவிட்டது.
இஸ்லாத்தின் பால்
அம்மக்களை உர்வா ரலியல்லாஹு
அன்ஹு அவர்கள் அழைத்த போது, அவர்களின்
குடும்பத்தினர்களும்,
நண்பர்களும் சினம் கொண்டு சீரியெழுந்தனர். கண்மூடித்தனமாகத் தாக்கினர். கையில் கிடைத்த ஆயுதங்கள் அனைத்தையும் பிரயோகித்து அவரை நடைபிணமாக ஆக்கினர்.
واختلف في اسم قاتله فقيل: أوس بن عوف، وقيل: وهب بن جابر، وقيل لعروة:
ما ترى في دمك قال: كرامة أكرمني الله بها، وشهادة ساقها الله إليَّ فليس في إلا
ما في الشهداء الذين قتلوا مع النبي
قبل أن يرتحل عنكم فادفنوني معهم فدفنوه معهم
இறுதியாக ஓர் அம்பு அவரின் உயிரை பதம் பார்த்தது. ஆம்! மரணத்தின் வாசல் வரை கொண்டு வந்து விட்டனர். மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்த உர்வா ரலியல்லாஹு
அன்ஹு அவர்களைப் பார்த்து “இப்போது உம்முடைய மதம் எப்படி இருக்கின்றது?” என
கிண்டலாக கேட்டனர்.
அதற்கு, உர்வா ரலியல்லாஹு
அன்ஹு அவர்கள் “கண்ணியம் நிறந்த என் இறைவன் என்னை கண்ணியப் படுத்திவிட்டான்; இந்த தியாகத்தை நான் பதிவு செய்யவேண்டும்
என்பதற்காகவே அவன் என்னை உங்களிடம் வரவைத்தான். இது எனக்கு அவன் வழங்கிய அருட் கொடையாகும்.” என்றார்கள்.
பின்பு, “நான்
மரணமடைந்த பிறகு அல்லாஹ்வின் தூய மார்க்கத்திற்காக, அல்லாஹ்வின் தூதரோடு போரிட்டு, போர்க் களத்தில் வீர மரணம் அடைந்தார்களே அவர்களோடு என்னை நல்லடக்கம் செய்யுங்கள்” என்று கூறி வீர மரணம்
அடைந்தார்கள். ( நூல்: அல் இஸ்தீஆப்,
பாகம்:2, பக்கம்:249 )
தூய இஸ்லாத்தை ஏற்று சில நாட்களிலேயே ஷஹீதாகும்
நற்பேற்றைப் பெற்றார் உர்வா இப்னு மஸ்வூத் அஸ்ஸகஃபீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
فلما علم النبى بما حدث لعروة قال: «مَثَلُ عروة فى قومه مَثَلُ صاحب
ياسين دعا قومه إلى الله فقتلوه
இப்னு இஸ்ஹாக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்:
“தமது சமூகத்தில் உர்வா ரலியல்லாஹு
அன்ஹு அவர்களின் அந்தஸ்து யாஸீன் சூராவில்
சொல்லப்படும் சமூகத்தில் வாழ்ந்த வாலிபரின் அந்தஸ்தைப்
போன்றதாகும்”.
என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்தத்ரக் அல்
ஹாக்கிம்,
பாகம்:3, பக்கம்:173 )
وبعد رحلة الإسراء والمعراج أخبر النبى صلى الله عليه وآله وسلم أصحابه
أن هذا الصحابى هو أكثر الناس شبهًا بالمسيح عيسى بن مريم عليه السلام. وقال: «عُرض عليَّ
الأنبياء، فإذا موسى ضرب من الرجال كأنه من رجال شنوءة، ورأيت عيسى بن مريم فإذا
أقرب مَنْ رأيت به شبهًا عروة بن مسعود».
وفى صحيح مسلم وسنن الترمذى ومسند أحمد، عن عامر الشعبيّ قال: شبّه
رسول الله، صَلَّى الله عليه وسلم، ثلاثة نَفَرٍ من أمّتهِ فقال: «دِحيْة الكلبيّ
يُشبهُ جبرائيل، وعُروة بن مسعود الثّقَفيّ يُشْبِهُ عيسى بن مريم، وعبد العُزّى
يُشْبهُ الدجّال».
ஜாபிர் ரலியல்லாஹு
அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “எனக்கு நபிமார்கள் காட்டப்பட்டனர். நான் மூஸா அலைஹிஸ்ஸலாம்
அவர்களைப் பார்த்தேன். ஷனூஆ வின் ஆண்களின் சாயலில் இருந்தார்கள். நான் ஈஸா அலைஹிஸ்ஸலாம்
அவர்களைப் பார்த்தேன். உர்வா இப்னு
மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சாயலில் இருந்தார்கள். நான் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பார்த்தேன். அவர்கள் என் சாயலில் இருந்தார்கள். நான் அங்கே ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் பார்த்தேன். திஹ்யத்துல் கலபீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சாயலில் இருந்தார்கள்.” ( நூல்: முஸ்லிம்,
ஹதீஸ் எண்:167 )
இவைகளெல்லாம் பின்
நாளில் உர்வா இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு
அல்லாஹ்வின் தூதரால் வழங்கப்பட்ட கௌரவமாகும்.
காலம் கனிந்தது, உர்வா பின் மஸ்வூத் ரலியல்லாஹு
அன்ஹு அவர்களைக் கொன்ற பிறகு அவர்களின் கோத்திரத்தார்களால் மன
நிம்மதியாக வாழ்ந்திட இயலவில்லை.
அவர்களின் அச்செயல் குற்ற உணர்வை ஏற்படுத்தியது. ஹிஜ்ரி 9 – ஆம் ஆண்டு ரமலான் மாதம் அண்ணலாரைக் காண ஒட்டு
மொத்த ஸகீஃப் கோத்திரமும் மதீனா வந்திருந்தனர். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன் வந்து
நின்ற ஸகீஃப் கோத்திரத்தினர் “நாங்கள் இஸ்லாத்தை” ஏற்றுக் கொள்கின்றோம் என்று கூறி தூய இஸ்லாத்தில் இணைந்து
கொண்டனர்.
சில நாட்களே
இஸ்லாத்தின் நிழலில் பயணித்து வீர மரணமடைந்த ஒருவரின் மரணம் பல நூறு மனிதர்களுக்கு
ஹிதாயத் கிடைப்பதற்கு காரணமாய் அமைந்த வரலாற்றுக்கு சொந்தக்காரராய் வாகாய்
மிளிர்கின்றார்கள் உர்வா இப்னு மஸ்வூத் அஸ்ஸகஃபீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
சருகுகள் உதிர்ந்து போகும்... நுரைகள் காற்றில் கரைந்து போகும்...
ملك
غسان جبلة بن الأيهم، الذي منعه الكبر من الثبات على الإسلام، بعد أن دخل فيه؛ روى
ابن الكلبي وغيره: أن عمر لما بلغه إسلام جبلة فرح بإسلامه، ثم بعث يستَدْعيه
ليراه بالمدينة، وقيل: بل استأذنه جبلة في القُدُوم عليه، فأذن له، فركب في خلْق
كثير من قومه، قيل: مائة وخمسين راكبًا، فلما سلَّم على عمر رحب به عمر وأدنى
مجلسه، وشهد الحج مع عمر في هذه السنة، فبينما هو يطوف بالكعبة، إذ وطئَ إزارَه
رجلٌ من بني فزارة فانحل،
فرفع
جبلة يده فهشم أنف ذلك الرجل
ومن
الناس مَن يقول: إنه قلع عينه، فاستعدى عليه الفزاري إلى عمر، ومعه خلْق كثيرٌ من
بني فزارة، فاستحضره عمر فاعترف جبلة، فقال له عمر: أقدته منك؟ فقال: كيف، وأنا
ملك وهو سوقة؟! فقال: إن الإسلام جمعك وإياه، فلست تفضله إلا بالتقوى، فقال
جبلة: قد كنتُ أظُن أن أكونَ في الإسلام أعز مني في الجاهلية، فقال عمر: دع ذا
عنك، فإنك إن لم ترضِ الرجل أقدته منك، فقال: إذًا أتنَصَّر، فقال: إن تنَصَّرتَ
ضرَبتُ عنقك، فلما رأى الحدَّ قال: سأنظر في أمري هذه الليلة، فانصرف من عند عمر،
فلما ادلَهَمَّ الليلُ ركب في قومه ومن أطاعه، فسار إلى الشام، ثم دخل بلاد الروم .
ஹிஜ்ரி 13 -ஆம் ஆண்டு யர்மூக்
போர் நடைபெறும் வரை கஸ்ஸானியர்கள் ரோமர்களின் கவர்னர்களாகவே ஷாம் நாட்டில் ஆட்சி செய்தனர். அந்தக்
கவர்னர்களில் இறுதியானவரான ‘ஜபலா இப்னு அய்ஹம்’ என்பவர் அமீருல் முஃமினீன் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிமானார்.
பின்னர் மதீனா வந்த அவரை இன்முகத்தோடு வரவேற்று உபசரித்த கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹஜ்ஜுடைய நாட்கள் நெருங்கி வருவதால் ஹஜ்
செய்து விட்டு ஊர் திரும்புமாறும், அதுவரை மதீனாவிலேயே தங்குமாறு
வேண்டிக்கொண்டார்கள்.
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களோடு
ஹஜ்ஜுக்குச் சென்ற ஜபலா தவாஃப் செய்து கொண்டிருந்தார். அருகில் தவாஃப் செய்து கொண்டிருந்த
ஒரு கிராமவாசி கூட்ட நெரிசலில் தவறுதலாக ஜபலாவின் காலில் மிதித்து விட்டார்.
தான் ஒரு நாட்டின் அரசன் எனும் அகங்காரம் மேலிடவே அந்த கிராமவாசியை
கண்மூடித்தனமாக அடித்து தாக்கினார். ஒரு அறிவிப்பில் அவரின் இரு கண்களில் ஒரு கண்
பிதுங்கி வெளியே வந்து விட்டது.
மருத்துவசிகிச்சை எடுத்துக் கொண்ட அந்தக் கிராமவாசி ஹஜ்ஜுடைய நாட்கள்
முடிந்ததும் ஜபலாவின் செயல் குறித்து முறையிட்டார்.
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஜபலாவிடம்
இது குறித்து விசாரித்து விட்டு, சம்பந்தப்பட்ட அந்த கிராமவாசியிடம் நடந்து கொண்ட
செயலுக்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோருங்கள்! அவர் மன்னித்து விட்டால்
உங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை.
அவர் மன்னிக்கவில்லை என்றால் பழிக்குப்பழி எனும் அடிப்படையில் அவர் உம்மை நீர்
அடித்தது போன்று அடிப்பார் என்றார்கள் கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
அதற்க, ஜபலா நான் ஒரு நாட்டின் ஆட்சியாளன், அவனோ ஓர் கிராமவாசி அதுவும்
சாமானியன். ஆட்சியாளனுக்கு எதிராக சாமானியனுக்கு இவ்வளவு துணிச்சலை எப்படி வழங்க
முடியும்? என்று கேட்டார்.
இஸ்லாம், கலிமா ஷஹாதா என்கிற அற்புதம் இந்த பேதத்தைக் களைந்து இருவரையும்
ஒன்றாகவே பார்க்கத்தூண்டுகின்றது. இருவரும் சரிசமமான மனிதர்கள் என்கிற தத்துவத்தை
போதிக்கின்றது என்றார் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
அப்படியென்றால், நான் மீண்டும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறப்போகின்றேன் என்று
மிரட்டினார் ஜபலா.
இதைக் கேட்டதும் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் “செய்த தவருக்கு மன்னிப்பு வேண்டி, அவர்
மன்னித்தால் ஒன்றும் இல்லை. அவர் மன்னிக்காவிட்டால் பழிக்குப்பழி அடிப்படையில்
தண்டனை மட்டும் தான். நீர் மதம்மாறினால் உமக்கு மரண தண்டனை என்றார்கள்.
அவ்வளவு தான் ஜபலாவின் முகம் வெளிறியது. எனக்கு சிறிது அவகாசம் வேண்டும். நாளை
காலையில் இது குறித்து நான் என் பதிலைச் சொல்கின்றேன் என்றார்.
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் அவகாசம்
அளித்தார்கள். ஆனால், ஜபலாவிற்கோ அகம்பாவமும், பெருமையும் இடம் தர மறுத்ததால்
மதீனாவை விட்டு ஓடி விட்டார்.
ஜபலா மதீனாவை விட்டு ஓடிய பிறகு அவருக்கு நேர்வழியின் பால் அழைப்பு விடுக்க ஒரு தூதரை உமர் ரலியல்லாஹு அன்ஹு அனுப்பி வைத்தார்கள்.
தூதர் சென்ற போது அவர் தங்க நாற்காலியில் அமர்ந்து கொண்டு,
தங்கத்தட்டில் உணவு உண்டு கொண்டு, தங்க டம்ளரில் மது அருந்திக் கொண்டிருந்தார்.
தூதர் அவரிடம் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகுந்த கருணையோடு அவரை திரும்ப அழைத்து வரச் சொன்னதை சொன்னார். ஜபலாவின் கண் கலங்கியது.
எனக்கு நேர்வழியில் நீடித்து இருக்க கிடைத்த ஒரு பொன்னான வாய்பை நான் தவற விட்டு விட்டேன். என்று கதறி அழுதார். ஆனால், அவர் மீண்டும் இஸ்லாத்தில் வரவில்லை.
தூதர் திரும்பி வந்து உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நடந்த விவரத்தை கூறினார்கள். அவர் அழுததை கண்டு ஆதங்கப்பட்ட உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர் மது குடிக்கிறாரா? என ஆச்சர்யத்தோடு கேட்டார்கள்.
ஆம்! என தூதர் பதில் கூறியதும் அப்படியானால், இனி அவர் ஒரு போதும் திருந்த வாய்ப்பே இல்லை. அவர் நேர்வழியிலிருந்து வெகு தூரமாகி விட்டார் என்றார்கள். இறுதியில் ஜபலா கிருத்துவராகவே மரணித்தார். ( நூல்: அல்வாஃபீ ஃபில் வஃபிய்யாத், அல் பிதாயா வன் நிஹாயா )
ஹிதாயத்தோடு வாழ்ந்திட… ஹிதாயத்தோடு மரணித்திட…
அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களும் தடம்
மாறிச் சென்றிடும் ஈமானை விட்டும் பாதுகாவல் தேடுமாறு வலியுறுத்துகின்றார்கள்.
رَبَّنَا لَا تُزِغْ
قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ
أَنْتَ الْوَهَّابُ ()
அல்லாஹ் கூறுகின்றான்: “எங்கள் இறைவனே! எங்களை நீ நேர்வழியில் செலுத்திய பின்பு எங்கள் இதயங்களை நேர்வழியிலிருந்து பிறழச் செய்து விடாதே! மேலும், எங்களுக்கு உன் அருளிலிருந்து கொடை வழங்குவாயாக! திண்ணமாக, நீயே உண்மையில் தாராளமாக வழங்குபவனாய் இருக்கின்றாய்.” ( அல்குர்ஆன்:3:8 )
حدثنا يزيد أخبرنا همام بن يحيى عن علي بن زيد عن أم محمد
عن عائشة قالت : كان رسول الله صلى الله عليه وسلم
يقول يا مقلب القلوب ، ثبت قلبي على دينك ، قلت : يا
رسول الله ، إنك تدعو بهذا الدعاء ، قال : يا عائشة
، أوما علمت أن القلوب أو قال : قلب بني آدم بين إصبعي الله ، إذا
شاء أن يقلبه إلى هدى قلبه ، وإذا شاء أن يقلبه إلى ضلالة قلبه
அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள்: “அல்லாஹ்வின்
தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “இதயங்களை புறட்டக்கூடியவனே! என் இதயத்தை உன் சத்திய
மார்க்கத்தின் மீது நிலைப்படுத்துவாயாக!” என்று அதிகமதிகம்
இறைவனிடம் இறைஞ்சக்கூடியவர்களாக இருந்தார்கள்.
நான் நபிகளாரிடம் “அல்லாஹ்வின் தூதரே! ஏன் நீங்கள் அல்லாஹ்வின் தூதராக இருந்து
கொண்டு இப்படி பிரார்த்திக்கின்றீர்கள்” என்று கேட்டேன்.
அதற்கு, அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஆயிஷாவே! ஆதமுடைய சந்ததியினரின் இதயத்தை
அல்லாஹ் தன் இரு விரல்களுக்கு மத்தியில் வைத்திருக்கின்றான். அவன் நாடினால்
நேர்வழியின் பால் புறட்டுகின்றான். அவன் நாடினால் வழிகேட்டின் பால்
புறட்டுகின்றான். ஆதலால் தான் நான் அவ்வாறு அல்லாஹ்விடம் இறைஞ்சுகின்றேன்” என்று கூறினார்கள். ( நூல்:
திர்மிதீ )
وقال تعالى آمرا لعباده المؤمنين أن يقولوا
( ربنا
لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وقد كان الصديق رضي الله عنه يقرأ بهذه الآية في الركعة
الثالثة من صلاة المغرب بعد الفاتحة سرا . فمعنى قوله تعالى
( اهدنا
الصراط المستقيم استمر بنا عليه ولا تعدل بنا
إلى غيره
அபூபக்ர் ரலியல்லாஹு
அன்ஹு
அவர்கள் மஃக்ரிப் தொழுகையின் மூன்றாவது ரக்அத்தில்
ஃபாத்திஹா சூரா ஓதிய பின்னர் மௌனமாக ““எங்கள்
இறைவனே! எங்களை நீ நேர்வழியில் செலுத்திய பின்பு எங்கள்
இதயங்களை நேர்வழியிலிருந்து பிறழச் செய்து விடாதே! மேலும்,
எங்களுக்கு உன் அருளிலிருந்து கொடை வழங்குவாயாக! திண்ணமாக, நீயே உண்மையில் தாராளமாக வழங்குபவனாய்
இருக்கின்றாய்.” என்று ஓதும் வழமை கொண்டவர்களாக இருந்தார்கள். ( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் )
عبد الله بن مسعود ، روى أن رسول الله دخل
الْمَسْجِدَ وَهُوَ بَيْنَ أَبِي بَكْرٍ وَعُمَرَ وهو يُصَلِّي، وَإِذَا هُوَ
يَقْرَأُ النِّسَاءَ، فَانْتَهَى إِلَى رَأْسِ الْمِائَةِ فَجَعَلَ ابْنُ
مَسْعُودٍ يَدْعُو وَهُوَ قَائِمٌ يُصَلِّي فَقَالَ النَّبِيُّ : ((اسْأَلْ
تُعْطَهْ اسْأَلْ تُعْطَهْ))، ثُمَّ قَالَ: ((مَنْ سَرَّهُ أَنْ يَقْرَأَ الْقُرْآنَ
غَضًّا كَمَا أُنْزِلَ فَلْيَقْرَأْهُ بِقِرَاءَةِ ابْنِ أُمِّ عَبْدٍ))، فَلَمَّا
أَصْبَحَ غَدَا إِلَيْهِ أَبُو بَكْرٍ لِيُبَشِّرَهُ وَقَالَ لَهُ: مَا سَأَلْتَ
اللَّهَ الْبَارِحَةَ قَالَ: قُلْتُ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ إِيمَانًا لَا
يَرْتَدُّ وَنَعِيمًا لَا يَنْفَدُ وَمُرَافَقَةَ مُحَمَّدٍ فِي أَعْلَى جَنَّةِ
الْخُلْدِ.
அப்துல்லாஹ் இப்னு
மஸ்வூத்
ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: “ஒரு நாள் இரவு இஷாத்
தொழுக்கைக்குப் பின்னர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதுன்
நபவீக்கு வருகை தந்தார்கள்.
அங்கே உமர் ரலியல்லாஹு அன்ஹு மற்றும் அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோரும் அமர்ந்து பேசிக்
கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்கருகில் நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களும் அமர்ந்து கொண்டார்கள்.
அப்போது நான்
தொழுது கொண்டிருந்தேன்.
தொழுகையில் சூரா அந்நிஸாவை ஓதிக் கொண்டிருந்தேன். சூரா அந்நிஸாவின் நூறாவது வசனத்தோடு என் தொழுகையை நான் நிறைவு செய்தேன்.
தொழுது
முடித்ததும் என்னை அழைத்த அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அப்துல்லாஹ்வே! அல்லாஹ்விடம் நீ விரும்பியதை கேள்! உனக்கு அல்லாஹ் நீ
விரும்பியதை வழங்குவான்!”
என இரு முறை கூறினார்கள்.
பின்பு, “யார் குர்ஆனை ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்னிடம் கொண்டு வந்து இறக்கியருளிய போது ஓதப்பட்டதைப் போன்று ஓத
வேண்டும் என்று விரும்புகின்றார்களோ அவர்கள் இப்னு உம்மி அப்த் ( இது இப்னு மஸ்வூத் அவர்களின் செல்லப்பெயர் ) அவர்கள் ஓதுவது போன்று ஓதிக் கொள்ளட்டும்!” என்றும்
கூறினார்கள்.
மறுநாள் வைகறைத்
தொழுகை முடித்து நான் அமர்ந்திருக்கும் போது என்னிடம் வந்த அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த சோபனத்தை என்னிடம் கூறிய
பிறகு “அப்துல்லாஹ்வே!
நீ விரும்பியதை அல்லாஹ்விடம் கேள்!
அல்லாஹ் நீ
விரும்பியதை உமக்கு தருவான்!” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மிடம்
கூறினார்களே இன்றைய அதிகாலைத் தொழுகைக்குப் பின்னர் அல்லாஹ்விடம் நீர் என்ன துஆ
செய்தீர் என்று கூறுங்களேன்” என்று கேட்டார்கள்.
அதற்கு, நான்
“அல்லாஹ்வே! உன்னிடம் நான் நிலையான, தடம் மாறிப்போய் விடாத ஈமானையும், அழிந்து போகாத அருட்கொடைகளையும், உயர்வான சுவனத்தில்
முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு என்றென்றும்
தோழமை கொள்கிற பெரும் பேற்றையும் கேட்கிறேன்” என்று நான் கேட்ட அந்த துஆவைக் கூறினேன்.
ஆக, எக்காரணத்தைக் கொண்டும் தம்மை விட்டும் ஈமான் பறிபோய் விடக்கூடாது என்பதில்
எந்தளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை மேற்கூறிய நபி மொழிகள் நமக்கு
உணர்த்துகின்றன.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் ஹிதாயத்தை
நஸீபாக்குவானாக!
வாழும் காலமெல்லாம் ஹிதாயத்தோடு வாழ்ந்து, ஹிதாயத்தோடு
மரணிக்கும் நஸீபையும் தந்தருள்வானாக!
ஆமீன்! ஆமீன்! யாரப்பல்
ஆலமீன்!!! வஸ்ஸலாம்!!!
Barakkalllaho
ReplyDeletemasha allah
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteAlhamdulillah
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteاحسنت
ReplyDeleteالحمد لله على كل حال
ReplyDeleteBarakallahu laka
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத்.
ReplyDeleteஅந்த முர்தத் பெண்ணை குறித்துப் பேசி ஈமானின் மேன்மையை சமூகத்துக்கு உணர்த்த அருமையான தகவலை தந்து உதவியுள்ளீர்கள் உஸ்தாத். جزاكم الله خير الجزاء يا استاذ