Wednesday, 22 May 2019

ரமழான் சிந்தனை, தொடர் – 18 மனசாட்சி எனும் மாபெரும் அருட்கொடை!


ரமழான் சிந்தனை, தொடர் – 18
மனசாட்சி எனும்  மாபெரும் அருட்கொடை!

 


17 –ஆவது நோன்பை நிறைவு செய்து, 18 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு அடுத்த நோன்பு நோற்பதற்காக எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

இன்றைய நாளின் தராவீஹ் தொழுகையில் ஸபஃ அத்தியாயம், அல் ஃபாத்திர் அத்தியாயம் மற்றும் யாஸீன், அஸ் ஸாஃப்ஃபாத் அத்தியாயங்கள் என 364  வசனங்கள் ஓதப்பட்டிருக்கின்றது.

இன்றைய தராவீஹ் தொழுகையோடு 22 1/2 ஜுஸ்வுகள் நிறைவு செய்யப்பட்டிருக்கின்றது.

 யாஸீன், அத்தியாயத்தின் 22 முதல் 27 வசனங்கள், அஸ் ஸாஃப்ஃபாத் அத்தியாயத்தின் 51 முதல் 61 வசனங்கள் ஆகியவற்றின் ஊடாக இறைவசனங்களின் மூலம் மனசாட்சி எனும் மாபெரும் அருட்கொடையை அல்லாஹ் மனித சமூகத்திற்கு வழங்கியிருப்பதை அல்லாஹ் உணர்த்திக்காட்டுகின்றான்.

நாம் ஒரு பாவமான காரியத்தை செய்து விட்ட பிறகு நம்மை உறங்க விடாமல் சதாவும் துரத்திக் கொண்டே இருக்கும் உணர்வு.

நாம் ஒரு நன்மையான காரியத்தை செய்ய நினைத்து செய்யாமல் போகிற போது அதைக் குறித்து வருத்தப்படுகிற உணர்வு.

எல்லா ஆற்றலும் இருந்தும் சமூகத்தில் யாரோ ஒரு நல்ல மனிதருக்கு நிகழ்கிற ஒரு நிகழ்வில் அவருக்கு உதவிட முடியாமல் போகிற போது ஏற்படுகிற குற்ற உணர்வு.

இப்படி நம் உள்ளிருந்து நம்மை அழவும், எழவும் தூண்டுகிற ஓர் அபாரமான அருட்கொடை தான் மனசாட்சி.

மேலே யாஸீன் சூராவின் வசனங்களில் வாயிலாக இறை மன்னிப்பையும், சுவனத்து சோபனத்தையும் பெற்ற ஓர் இளைஞரின் தம் சமூகத்தை நோக்கிய உள உணர்வைத் தான் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

அஸ்ஸாஃப்ஃபாத் அத்தியாயத்தின் வசனங்களின் வாயிலாக தம் நண்பர் ஒருவரின் மறுமை நிலை கண்டு மருகி, உருகி உணர்வுகளை வெளிப்படுத்துகிற ஒருவரின் உளக்குமுறலைத் தான் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

இந்த மனசாட்சி நம்முள் சரியாக செயல் படுகிற வரை நாம் நேர்வழியிலும், சுவனப்பாதையிலும் பயணிப்போம்.

எனவே, அல்லாஹ் மனசாட்சி என்கிற உணர்வை மாபெரும் அருட்கொடையாகத் தந்து மனித சமூகத்தை அழிவிலிருந்தும், இழி நரகிலிருந்தும் காக்கின்றான்.

وَنَفْسٍ وَمَا سَوَّاهَا (7) فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا (8) قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا (9) وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا (10)
“மனித ஆன்மாவின் மீதும், அதனைச் செம்மைப்படுத்தி பின்னர், அதன் தீமையையும், தூய்மையையும் அதனுடைய உள்ளுணர்வில் (மனசாட்சியில்) வைத்தவன் மீது சத்தியமாக!

திண்ணமாக! (மனசாட்சியைப் பயன்படுத்தி) மனதைத் தூய்மைபடுத்தியவன் வெற்றி பெற்றுவிட்டான். மேலும், (மனசாட்சியை மதிக்காமல்) மனதை நசுக்கியவன் தோற்று விட்டான்!.”                                      ( அல்குர்ஆன்: 91: 7 – 10 )

உயிர் இருக்கும் வரை ஆதிக்கம் செலுத்தும் அபார ஆற்றல் கொண்டது மனசாட்சி...

لم يمض على ذلك وقت طويل حتّى أتى عمر بن الخطاب ـ رضي الله عنه ـ ديار الشام يتفقد أحوالها، فلما نزل بحمص لقيه أهلها للسلام عليه فقال: كيف وجدتم أميركم؟ فشكوه إليه، وذكروا أربعاً من أفعاله كل واحد منها أعظم من الآخر. قال عمر فجمعت بينه وبينهم، ودعوت الله ألا يخيب ظني فيه، فقد كنت عظيم الثقة به. فلما أصبحوا عندي هم وأميرهم، قلت ما تشكون من أميركم؟ قالوا: لا يخرج إلينا حتى يتعالى النهار، فقلت وما تقول في ذلك يا سعيد؟ فسكت قليلاً، ثم قال: والله إني كنت أكره أن أقول ذلك، أمّا وإنّه لا بدّ منه، فإنه ليس لأهلي خادم، فأقوم في كل صباح على خدمتهم.
قال عمر: فقلت لهم: وما تشكون منه أيضاً؟ قالوا: إنه لا يجيب أحداً بليل. قلت: وما تقول في ذلك يا سعيد؟ قال: إني  والله كنت أكره أن أعلن هذا أيضاً. فأنا قد جعلت النهار لهم والليل  لله عز وجل. قلت: وما تشكون منه أيضاً؟ قالوا: إنه لا يخرج إلينا يوماً في الشهر. قلت: وما هذا يا سعيد؟ قال: ليس لدي خادم يا أمير المؤمنين، وليس عندي ثياب غير التي علي، فأنا أغسلها في الشهر مرة وأنتظرها حتى تجف، ثم أخرج إليهم في آخر النهار. ثم قلت: وما تشكون منه أيضاً؟! قالوا: تصيبه من حين إلى آخر غشية فيغيب عمّن في مجلسه، فقلت: وما هذا يا سعيد؟! فقال: شهدت مصرع خبيب بن عديّ وأنا مشرك، ورأيت قريشاً تقطع جسده وهي تقول: أتحبّ أن يكون محمّدا مكانك؟ فيقول: (والله ما أحب ّ أن أكون آمناً في أهلي وولدي، وأن محمداً تشوكه شوكةٌ...)(1) وإني والله ما ذكرت ذلك اليوم وكيف أني تركت نصرته إلا ظننت أن الله لا يغفر لي..! وأصابتني تلك الغشية. عند ذلك قال عمر بن الخطاب: الحمد لله الذي لم يخيّب ظني به!

ஸயீத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் குறித்து ஹிம்ஸ் மாகாண மக்கள் ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்களை அணுகி நான்கு விதமான குற்றச்சாட்டுகளை முன்வைத்த போது,

1. காலையில் மிக தாமதமாகவே பணிக்கு வருகின்றார்.
2. இரவு நேரங்களில் எங்களின் முறையீடுகளுக்கு செவி சாய்ப்பதே இல்லை.
3. மாதத்தில் இரு நாட்கள் எங்களைச் சந்திப்பதை முற்றிலும் தவிர்க்கிறார்.
4. சில நேரங்களில் மயங்கி கீழே விழுந்து விடுகின்றார்.

இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்விடம் இப்படிப் பிரார்த்தித்தார்களாம் யாஅல்லாஹ்! உன் பொருப்பை சுமக்கும் விஷயத்தில் இது வரை நான் அவரை கண்ணியமானவராகவே அறிந்து வைத்திருக்கின்றேன்! என் உள்ளத்தில் இருக்கும் அந்த உத்தமரின் கண்ணியத்தை எடுத்து விடாதே ரஹ்மானே!” என்று....

விசாரணை மன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்த ஸயீத் மேற்கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஒன்றன் பின் ஒன்றாக விளக்கம் தந்தார்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! முதல்குற்றச்சாட்டிற்கான விளக்கத்தை நான் கொடுக்கும் முன்பாக, நான் பகிரங்கப்படுத்த விரும்பாத ஒன்று என்ற போதிலும் மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதை நினைத்து வருந்துகின்றேன்.

1.       எனது வீட்டில் வேலையாட்கள் கிடையாது. எனது குடும்பத்தாருக்கு வீட்டு வேலைகளில் நான் தான் உதவி ஒத்தாசையாக இருப்பேன். தினமும் காலையில் எழுந்ததும் ரொட்டிக்கு மாவு பிசைந்து, பின்னர் சமைத்து கொடுத்து விட்டு வருவேன்.


அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இரண்டாம் குற்றச்சாட்டிற்கான விளக்கத்தை நான் கொடுக்கும் முன்பாக, இதற்கும் பதில் கூறுவதை நான் விரும்பவில்லை. ஆயினும், நான் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதை நினைத்து மிகவும் வருந்துகின்றேன்.

2.       பகலெல்லாம் இவர்களுக்காக உழைக்கின்றேன்; இரவை படைத்த என் இரட்சகனுக்காக ஒதுக்கி வைத்துள்ளேன்.

மூன்றாம் முறையும் முன்பு போலவே சத்தியமிட்டுக் கூறி தமது வருத்தத்தை வெளிப்படுத்தினார்கள்.

3.       என்னிடத்திலே உடுத்துவதற்கு என்று பிரத்யேகமாக எந்த ஆடையும் கிடையாது. இதோ நான் உடுத்தியிருக்கிற ஓர் ஆடை மட்டும் தான் என்னிடம் உள்ளது. மாதத்தில் ஒரு நாள் சலவை செய்து, காயவைத்து பின்னர் உடுத்த வேண்டியுள்ளது. அதனால் தான் அன்று என்னால் இவர்களை சந்திக்க முடியாமல் போனது.

நான்காவது குற்றச்சாட்டிற்கு பதில் கூறும் போது ஸயீத் (ரலி) அவர்கள் மிகவும் உணர்ச்சி வயப்பட்டவர்களாக காணப்பட்டார்கள்.

4.       இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்முன் ஒரு நாள் அந்த கொடூரக் காட்சியை பார்த்தேன். ஆம்! குபைப் இப்னு அதீ (ரலி) இறைவிரோதிகளால் கொல்லப்பட்டதை என்னுடைய இந்த இரண்டு கண்களால் பார்த்தேன்.

குறைஷிகள் மிகக் குரூரமாக வெட்டி, ரத்த வெள்ளத்தில் அவரை மிதக்க விட்டிருந்தனர். உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் அவ்வேளையில், கொடியோர்கள் அவரிடம் இப்படிக்கேட்டனர்: உமக்கு பதிலாக இப்போது இங்கே முஹம்மத் இருந்திருக்கலாமே என்று நினைக்கின்றாய் தானே?” என்று...

மரணத்தின் வாசல் வரை வந்து விட்ட பின்னரும் கூட, இந்த கேள்வியைக் கேட்டதும், மிகவும் ஆவேசமடைந்தவர்களாக முஹம்மத் {ஸல்} அவர்கள் மீது சிறு முள் தைப்பதைக் கூட என்னால் அனுமதிக்க முடியாது” என்று உரக்கக் கூறினார்கள்.

இந்தப் பதிலை சற்றும் எதிர்பாராத விரோதிகள், உடனடியாக சிலுவையில் அறைந்து கொன்றனர்.

இந்த கொடூரங்களையெல்லாம் பார்த்துக்கொண்டு, ஒரு சாட்சியாக, அவரைக் காப்பாற்ற முடியாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேனே! என்ற எண்ணம் எனக்கு மேலோங்கும் போதெல்லாம், அல்லாஹ்வின் தண்டனையை நினைத்து அஞ்சி நடுக்கம் ஏற்பட்டு மயக்க நிலைக்கு சென்று விடுகின்றேன்.” என பதில் கூறி முடித்தார்கள்.

இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் அனைத்துப் புகழும் அல்லாஹ்விற்கே! நான் ஸயீத் (ரலி) அவர் மீது கொண்டிருந்த கண்ணியம் எதுவும் வீண்போகவில்லை” என்று மீண்டும் துஆ செய்தார்கள்.

( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:156, குலஃபாவுர் ரஸூல் {ஸல்}, பக்கம்:131. )

நினைத்ததை முடிக்க வைக்கும் ஆற்றல் கொண்டது மனசாட்சி...

மக்கா வெற்றியின் போது நபி {ஸல்} அவர்களின் வருகையையும், முஸ்லிம்களின் எழுச்சியையும் கண்டு பயந்துபோய் இக்ரிமா எமனுக்குச் சென்று விட்டார். இக்ரிமா வேறு யாருமல்ல. அபூஜஹ்லின் மகன், இவரும் தந்தையைப் போலவே இஸ்லாத்திற்கெதிராக கடும் பகமை கொண்டிருந்தார்.

இவரின் மனைவி உம்மு ஹக்கீம் பின்த் ஹாரிஸ் {ரலி} அவர்கள் எமனுக்குச் சென்று அழைத்து வந்தார்கள். பின்பு மாநபியின் சபைக்கு அழைத்து வந்தார்கள்.

தூரத்தில் இக்ரிமா வருவதைக் கண்ட பெருமானார் {ஸல்} அவர்கள் வெகு தூரத்திலிருந்து சிரமத்துடன் பயணித்து வரும் பயணியே, வாருங்கள்! தங்கள் வருகை நல்வரவாகட்டும்!என்று கூறி தம் அருகே அமர வைத்தார்கள்.
இக்ரிமா கேட்டார்: இப்போது நான் என்ன சொல்ல வேண்டும்.?                                             நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: ஷஹாதத் சொல்லுங்கள். உடனடியாக ஷஹாதாவை மொழிந்து இக்ரிமா முஸ்லிமானார்கள்.
فقال رسول الله
 ( لا تسألني اليوم شيئا أعطيه أحدا إلا أعطيتكه )
فقال عكرمة
 فإني أسألك أن تستغفر لي كل عداوة عاديتكها ، أو مسير وضعت فيه ، أو مقام لقيتك فيه ، أو كلام قلته في وجهك أو وأنت غائب عنه ، فقال رسول الله - صلى الله عليه وسلم - :( اللهم اغفر له كل عداوة عادانيها ، وكل مسير سار فيه إلى موضع يريد بذلك المسير إطفاء نورك ، فاغفر له ما نال مني من عرض في وجهي أو أنا غائب عنه ) ..
فقال عكرمة : رضيت يا رسول الله ، لا أدع نفقة كنت أنفقها في صدٍ عن سبيل الله إلا أنفقتُ ضعفها في سبيل الله ، ولا قتالا كنت أقاتل في صد عن سبيل الله إلا أبليت ضعفه في سبيل الله .. ثم اجتهد في القتال حتى قتِل شهيدا (أي في يوم اليرموك) .. وبعد أن أسلم رد رسول الله - صلى الله عليه وسلم - امرأته له بذلك النكاح الأول
.." .

பின்னர் நபி {ஸல்} அவர்கள் இக்ரிமா.. உமக்கு என்ன வேண்டும் கேளுங்கள். எது கேட்டாலும் தருகிறேன்.என்றார்கள்.

இக்ரிமா {ரலி} அவர்கள் சொன்னார்கள்:      அல்லாஹ்வின் தூதரே! ஆரம்பமாக என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். உங்கள் மீதான பகைமையால் உங்களை நான் கடுமையாக ஏசியிருக்கிறேன். போர்களில் கலந்து கொண்டு கண்மூடித்தனமாக நான் நடந்து கொண்டிருக்கிறேன். இவை அத்தனைக்காகவும் என்னை மன்னித்து விடுங்கள். 

அப்போது நபி {ஸல்} அவர்கள் தம் இரு கைகளையும் வானை நோக்கி உயர்த்தி யா அல்லாஹ்! இந்த இக்ரிமா எனக்கு எதிராக நடத்திய போருக்காக, என்மேல் கொண்டிருந்த பகைமைக்காக, என்னை ஏசியதற்காக, இவை அத்தனைக்காகவும் இவரை மன்னித்துவிடுஎன்று துஆ செய்தார்கள்.           

இதனைக் கேட்ட இக்ரிமா {ரலி} அவர்கள்:   அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த மார்க்கத்தை தடுப்பதற்காக எவ்வளவு பொருளாதாரத்தை செலவு செய்தேனோ, அதைவிட பன்மடங்கு இந்த மார்க்கத்தின் உயர்விற்காக நான் செலவு செய்வேன். இந்த மார்க்கத்திற்கெதிராக எவ்வளவு போர்களில் நான் கலந்து கொண்டேனோ, அதைவிட பன்மடங்கு இந்த மார்க்கத்தின் உயர்விற்காக இறைவனின் பாதையில் நான் போர் செய்வேன்.என முக மலர்ச்சியோடு கூறினார்கள்.  

மாநபி {ஸல்} அவர்கள், இக்ரிமா {ரலி} அவர்கள் தம்மை நோக்கி சபைக்குள் நுழைகிற போதே அவரின் நோக்கத்தை அறிந்து கொண்டு அபூஜஹ்லின் மகன் இக்ரிமா நம்பிக்கை கொண்டவராக உங்கள் முன் வருகிறார். அவரைக் கண்டால் அவரின் தந்தையைக் குறித்து குறை கூறி விமர்சனம் செய்யாதீர்கள். இறந்து போன ஒருவரை ஏசினால் அது உயிருடன் இருப்பவருக்கு மனவேதனையையே தரும். என்றார்கள்.   நூல்: இஸ்தீஆப், பாகம்:2, பக்கம்:269,270,271.     

விளைவு அவர் தனது நெஞ்சில் உள்ள பாரத்தையெல்லாம் இறக்கிவைத்து விட்டு நபித்தோழர் எனும் மாணிக்கமாக மாறிச் சென்றார். இஸ்லாத்திற்கெதிராக அவர் நடந்து கொண்டவைகளைக் கொண்டு அவரின் மனசாட்சி அவரைத் துரத்திக் கொண்டே இருந்தது.

ஆம்! முஸைலமாவுக்கு எதிராக நடைபெற்ற யமாமா யுத்தத்தில் வீரமரணம் அடைந்த போது தான் அவரின் மனசாட்சி அமைதி அடைந்தது.

பாவமீட்சியை பெற்றுத் தந்த மனசாட்சி…

كَانَ رَسُولُ اللَّهِ ( صلى الله عليه و آله ) لَمَّا حَاصَرَ بَنِي قُرَيْظَةَ قَالُوا لَهُ ابْعَثْ إِلَيْنَا أَبَا لُبَابَةَ نَسْتَشِيرُهُ فِي أَمْرِنَا ، فَقَالَ رَسُولُ اللَّهِ ( صلى الله عليه و آله ) : " يَا أَبَا لُبَابَةَ ائْتِ حُلَفَاءَكَ وَ مَوَالِيَكَ ، فَأَتَاهُمْ .
فَقَالُوا لَهُ : يَا بَا لُبَابَةَ مَا تَرَى ، أَ نَنْزِلُ عَلَى حُكْمِ رَسُولِ اللَّهِ ( صلى الله عليه و آله ) ؟
فَقَالَ : انْزِلُوا وَ اعْلَمُوا أَنَّ حُكْمَهُ فِيكُمْ هُوَ الذَّبْحُ ، وَ أَشَارَ إِلَى حَلْقِهِ .
ثُمَّ نَدِمَ عَلَى ذَلِكَ ، فَقَالَ خُنْتُ اللَّهَ وَ رَسُولَهُ ، وَ نَزَلَ مِنْ حِصْنِهِمْ ، وَ لَمْ يَرْجِعْ إِلَى رَسُولِ اللَّهِ ( صلى الله عليه و آله ) ، وَ مَرَّ إِلَى الْمَسْجِدِ ، وَ شَدَّ فِي عُنُقِهِ حَبْلًا ثُمَّ شَدَّهُ إِلَى الْأُسْطُوَانَةِ الَّتِي كَانَتْ تُسَمَّى أُسْطُوَانَةَ التَّوْبَةِ ، فَقَالَ لَا أَحُلُّهُ حَتَّى أَمُوتَ ، أَوْ يَتُوبَ اللَّهُ عَلَيَّ .
فَبَلَغَ رَسُولَ اللَّهِ ( صلى الله عليه و آله ) ، فَقَالَ : " أَمَا لَوْ أَتَانَا لَاسْتَغْفَرْنَا اللَّهَ لَهُ ، فَأَمَّا إِذَا قَصَدَ إِلَى رَبِّهِ فَاللَّهُ أَوْلَى بِهِ " .
وَ كَانَ أَبُو لُبَابَةَ يَصُومُ النَّهَارَ وَ يَأْكُلُ بِاللَّيْلِ مَا يُمْسِكُ رَمَقَهُ ، وَ كَانَتْ بِنْتُهُ تَأْتِيهِ بِعَشَائِهِ ، وَ تَحُلُّهُ عِنْدَ قَضَاءِ الْحَاجَةِ .
فَلَمَّا كَانَ بَعْدَ ذَلِكَ وَ رَسُولُ اللَّهِ فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ نَزَلَتْ تَوْبَتُهُ .
فَقَالَ : " يَا أُمَّ سَلَمَةَ قَدْ تَابَ اللَّهُ عَلَى أَبِي لُبَابَةَ " .
فَقَالَتْ : يَا رَسُولَ اللَّهِ أَ فَأُؤْذِنُهُ بِذَلِكَ ؟
فَقَالَ : " لَتَفْعَلَنَّ " .
فَأَخْرَجَتْ رَأْسَهَا مِنَ الْحُجْرَةِ ، فَقَالَتْ : يَا أَبَا لُبَابَةَ أَبْشِرْ قَدْ تَابَ اللَّهُ عَلَيْكَ .
فَقَالَ : الْحَمْدُ لِلَّهِ .
فَوَثَبَ الْمُسْلِمُونَ يَحُلُّونَهُ .
فَقَالَ : لَا وَ اللَّهِ حَتَّى يَحُلَّنِي رَسُولُ اللَّهِ ( صلى الله عليه و آله ) بِيَدِهِ .
فَجَاءَ رَسُولُ اللَّهِ ( صلى الله عليه و آله ) ، فَقَالَ : " يَا أَبَا لُبَابَةَ قَدْ تَابَ اللَّهُ عَلَيْكَ تَوْبَةً لَوْ وُلِدْتَ مِنْ أُمِّكَ يَوْمَكَ هَذَا لَكَفَاكَ " .
فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ أَ فَأَتَصَدَّقُ بِمَالِي كُلِّهِ ؟
قَالَ : " لَا " .
قَالَ : فَبِثُلُثَيْهِ ؟
قَالَ : " لَا " .
قَالَ : فَبِنِصْفِهِ ؟
قَالَ : " لَا " .
قَالَ : فَبِثُلُثِهِ ؟
قَالَ : " نَعَمْ " .
فَأَنْزَلَ اللَّهُ : ﴿ وَآخَرُونَ اعْتَرَفُواْ بِذُنُوبِهِمْ خَلَطُواْ عَمَلاً صَالِحًا وَآخَرَ سَيِّئًا عَسَى اللّهُ أَن يَتُوبَ عَلَيْهِمْ إِنَّ اللّهَ غَفُورٌ رَّحِيمٌ * خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِم بِهَا وَصَلِّ عَلَيْهِمْ إِنَّ صَلاَتَكَ سَكَنٌ لَّهُمْ وَاللّهُ سَمِيعٌ عَلِيمٌ * أَلَمْ يَعْلَمُواْ أَنَّ اللّهَ هُوَ يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهِ وَيَأْخُذُ الصَّدَقَاتِ وَأَنَّ اللّهَ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ ﴾

அபூ லுபாபா (ரலி) அவர்கள் பிரபல ஸஹாபி ஆவார்கள் . "பனூ குறைளா " யுத்தத்தின் போது , பனூ குறைளா வர்க்கத்தினரை நபித்தோழர்கள் முற்றுகையிட்டனர் . வேறு வழி இன்றி ஆயுதங்களை போட்டு விட்டு சரணடைந்து விட எண்ணினார்கள்.

அறியாமைக் காலத்தில் அபூ லுபாபா (ரலி) அவர்களுக்கும் பனூ குறைளா வர்க்கத்தினருக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்தது. இதனால் " நாங்கள் சரணடைந்தால் , நபி (ஸல்) அவர்களின் திட்டம் என்னவாக இருக்கும் " என்பதை அக்கூட்டத்தினர் அழுது கொண்ட கேட்க, அபூ லுபாபா (ரலி) அவர்கள் தமது கையால் கழுத்தின் பக்கம் சாடை செய்து , அதாவது அவர்களை தலைவெட்டி விடுவதுதான் , என்ற யுத்த ரகசியத்தை எதிராளிகளுக்கு வெளிப்படுத்தினார்கள்.

இது மாபெரும் தவறு என்பதை பின்னர் உணர்ந்தார்கள் அபூ லுபாபா (ரலி) உடனே மஸ்ஜிதுந் நபவிக்குச் சென்று ஒரு பேரீத்த மரத்தூணில் தன்னைத் தாமேக் கட்டிக் கொண்டு " என்னுடைய தவ்பா வை இறைவன் ஏற்றுக் கொள்ளாத வரை என்னை அவிழ்த்துக் கொள்ள மாட்டேன் .

மேலும் நபி (ஸல்) அவர்கள் அவிழ்த்து விட்டால்தான் இவ்விடத்தை விட்டுச் செல்வேன் " என்று உறுதி கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு இச்செய்தி கிடைத்த போது , "அவர் நேரே என்னிடம் வந்திருந்தால் , நான் அல்லாஹு தஆலாவிடம் அவருக்காக பாவ மன்னிப்புக் கேட்டிருப்பேனே , ஆனால் அவர் நேரடியாக அல்லாஹ்விடம் தவ்பா ஏற்றுக்கொள்ள உறுதி கொண்ட பிறகு நான் எவ்வாறு அவரை அவிழ்த்து விட முடியும் ? " என்று கூறிவிட்டார்கள் .

பல நாட்கள் இதே நிலையில் கழிந்தன. தொழும் நேரத்திலும் சுய தேவைகளுக்கும் அவருடைய மனைவியோ ,மகளோ அவரை அவிழ்த்து விடுவார்கள். தேவை முடிந்த பின் கட்டி விடுவார்கள் . 

இதே நிலையில் பல நாட்கள் வரை உண்ணவோ, அருந்தவோ, ஏதுமின்றி பசியினால் கண்களுக்கு முன்னால் இருள் சூழ்ந்து கொண்டது .காதடைத்து பலத்த ஓசை மட்டுமே கேட்டது.

பல நாட்களுக்குப் பிறகு நபி (ஸல்) உம்மு ஸல்மா (ரலி -அன்ஹா) அவர்களின் வீட்டினருக்கும் போது, தஹஜஜ் நேரத்தில் .அபூ லுபாபா (ரலி) அவர்களின் தவ்பா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இறைவசனம் வேத வசனமாக " வ ஆகரூன ஃதர Fபூ பிதுனூபிஹிம் " நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது .

உடனே அபூ லுபாபா (ரலி) அவர்களின் தவ்பா இறைவன் ஏற்றுக்கொள்ளப்பட்ட நற்செய்தியை கூறி ஸஹாபாக்கள் அவிழ்த்து விட எண்ணி அவரை அவிழ்க்க முற்படும் போது, " ரசூலுல்லாஹி (ஸல்) அவர்களே நேரடியாக வந்து தங்களுடைய முபாரக்கான திருங்கரங்களால் அவிழ்த்து விடாதவரை என்னை அவிழ்த்துக் கொள்வதில் சம்மதம் இல்லை " என உறுதி பட கூறி விட்டார்கள் .

நபி (ஸல்) சுப்ஹூ தொழுகைக்கு தமது இல்லத்தில் இருந்து வெளியே வந்த போது அவர்களை அவிழ்த்து விட்டார்கள்.                 ( தஃப்ஸீர் இப்னு கஸீர் )

அல்லாஹ்விடம் நன்மையின் பால் தூண்டுகிற, தீமையில் இருந்து காக்கிற மனசாட்சியைக் கேட்போம்!

மனசாட்சியைக் கொண்டு மகத்தான வெற்றி பெறுவோம்!!!

வஸ்ஸலாம்!!!

1 comment:

  1. மாஷா அல்லாஹ் அபார ஆற்றலின் ஆழிய சிந்தனையின் வெளிப்பாடுதான் இந்தப்பதிவு பாரக்கல்லாஹ்

    ReplyDelete