Monday 27 May 2019

ரமழான் சிந்தனை, தொடர் – 23 இறைவனின் கவனத்தை ஈர்த்த இரு மாதரசிகள்!!!


ரமழான் சிந்தனை, தொடர் – 23
இறைவனின் கவனத்தை ஈர்த்த இரு மாதரசிகள்!!!




22 –ஆவது நோன்பை நிறைவு செய்து, 23 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு அடுத்த நோன்பு நோற்பதற்காக எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

இன்றைய நாளின் தராவீஹ் தொழுகையில் அர் ரஹ்மான், அல் வாகிஆ, அல் ஹதீத், அல் முஜாதலா, அல் ஹஷ்ர் அத்தியாயங்கள் ஓதப்பட்டிருக்கின்றது.

 இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட அல் முஜாதலா அத்தியாயத்தின் முதல் 4 வசனங்களும், அல் ஹஷ்ர் அத்தியாயத்தின் 9 –ஆவது வசனமும் இறைவனின் கவனத்தை ஈர்த்த இரு பெரும் பெண்மணிகளின் செயல்பாடுகள் குறித்து பேசுவதை அல்லாஹ் பதிவு செய்திருக்கின்றான்.

குர்ஆன் பல பெண்மணிகளின் வரலாற்றுத் தரவுகளை பதிவு செய்திருந்தாலும் கூட இம்ரானின் மனைவி (அலைஹஸ்ஸலாம்) ஃபிர்அவ்னின் மனைவி ஆசியா (அலைஹஸ்ஸலாம்) மர்யம் (அலைஹஸ்ஸலாம்) ஆகியோர்களின் வரிசையில் புகழ்ந்து பேசப்படுகிற வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களாக கவ்லா பிந்த் ஸஅலபா (ரலி), உம்மு ஸுலைம் (ரலி) ஆகியோரையும் குறிப்பிட்டுள்ளது.

கவ்லா பின் ஸஅலபா (ரலி) அவர்களின் சிறப்பை பின் வரும் நிகழ்வின் மூலம் விளங்கி விட்டு பின்னர் இறைவனின் கவனத்தை ஈர்த்த அந்த நிகழ்வினை பார்ப்போம்.

وقد مر بها عمر بن الخطاب رضي الله عنه في خلافته والناس معه على حمار ، فاستوقفته طويلا ، ووعظته وقالت : يا عمر قد كنت تدعى عميرا ، ثم قيل لك : عمر ، ثم قيل لك : أمير المؤمنين ، فاتق الله يا عمر ، فإنه من أيقن بالموت خاف الفوت ، ومن أيقن بالحساب خاف العذاب ، وهو واقف يسمع كلامها ، فقيل له : يا أمير المؤمنين ، أتقف لهذه العجوز هذا الوقوف ؟ فقال : والله لو حبستني من أول النهار إلى آخره لا زلت إلا للصلاة المكتوبة ، أتدرون من هذه العجوز ؟ هي خولة بنت ثعلبة سمع الله قولها من فوق سبع سموات ، أيسمع رب العالمين قولها ولا يسمعه عمر ؟ (قرطبي

ஒரு முறை ஹள்ரத் உமர் ரலி அவர்கள் தங்கள் ஆட்சி காலத்தில் தன் சீடர்களோடு நகர் வளம் வந்து கொண்டிருந்தார்கள்.இடையில் ஒரு மூதாட்டி குறிக்கிட்டு உமர் ரலி அவர்களுக்கு வெகு நேரம் உபதேசம் செய்து கொண்டிருந்தார்கள்.உமர் ரலி அவர்களும் அதை பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அதனைக் கண்ணுற்ற சீடர்கள், இந்த மூதாட்டியின் பேச்சைக் கேட்டு ஒரு ஜனாதிபதியான நீங்கள் இவ்வளவு நேரம் நிற்க வேண்டுமா என்று கேட்டார்கள்.அப்போது உமர் ரலி அவர்கள் இடையில் தொழுகை நேரம் மட்டும் இல்லையெனில் அந்த மூதாட்டியின் பேச்சைக் கேட்க நான் இரவு வரை கூட நின்றிருப்பேன். அவர்கள் யார் தெரியுமா ? கவ்லா பின் ஸஃலபா. படைத்த அல்லாஹ்வே அவர்களின் சொல்லைக் கேட்டான்.இந்த உமர் கேட்க மாட்டாரா என்று கூறினார்கள்.

قَدْ سَمِعَ اللّٰهُ قَوْلَ الَّتِىْ تُجَادِلُكَ فِىْ زَوْجِهَا وَ تَشْتَكِىْۤ اِلَى اللّٰهِ ‌ۖ
 وَاللّٰهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا‌ ؕ اِنَّ اللّٰهَ سَمِيْعٌ ۢ بَصِيْرٌ‏ 

தனது கணவர் பற்றி உம்மிடம் தர்க்கம் செய்து அல்லாஹ்விடம் முறையிட்டவளின் சொல்லை அல்லாஹ் செவியுற்றான். உங்களிருவரின் வாதத்தை அல்லாஹ் செவியுறுகிறான். அல்லாஹ் செவியுறுபவன்; பார்ப்பவன்.

اَلَّذِيْنَ يُظٰهِرُوْنَ مِنْكُمْ مِّنْ نِّسَآٮِٕهِمْ مَّا هُنَّ اُمَّهٰتِهِمْ‌ؕ اِنْ اُمَّهٰتُهُمْ اِلَّا الّٰٓـىِْٔ وَلَدْنَهُمْ‌ؕ وَاِنَّهُمْ لَيَقُوْلُوْنَ مُنْكَرًا مِّنَ الْقَوْلِ وَزُوْرًا‌ؕ وَ اِنَّ اللّٰهَ لَعَفُوٌّ غَفُوْرٌ‏ 

உங்களில் தமது மனைவியரை கோபத்தில் தாய் எனக் கூறுவோருக்கு அவர்கள் தாயாக இல்லை. அவர்களைப் பெற்றவர்கள் தவிர மற்றவர் அவர்களின் தாய்களாக முடியாது. வெறுக்கத்தக்க சொல்லையும், பொய்யையும் அவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் குற்றங்களை அலட்சியம் செய்பவன்; மன்னிப்பவன்.

وَالَّذِيْنَ يُظٰهِرُوْنَ مِنْ نِّسَآٮِٕهِمْ ثُمَّ يَعُوْدُوْنَ لِمَا قَالُوْا فَتَحْرِيْرُ رَقَبَةٍ مِّنْ قَبْلِ اَنْ يَّتَمَآسَّا‌ ؕ ذٰ لِكُمْ تُوْعَظُوْنَ بِهٖ‌ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏ 

தமது மனைவியரைக் கோபத்தில் தாய் எனக் கூறி விட்டு தாம் கூறியதைத் திரும்பப் பெறுகிறவர், ஒருவரையொருவர் தீண்டுவதற்கு முன் ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இதுவே உங்களுக்குக் கூறப்படும் அறிவுரை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ مِنْ قَبْلِ اَنْ يَّتَمَآسَّاؕ فَمَنْ لَّمْ يَسْتَطِعْ فَاِطْعَامُ سِتِّيْنَ مِسْكِيْنًا‌ؕ ذٰلِكَ لِتُؤْمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ‌ؕ وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ‌ؕ وَلِلْكٰفِرِيْنَ عَذَابٌ اَلِیْمٌ‏ 

(அடிமை) கிடைக்காதவர் ஒருவரையொருவர் தீண்டுவதற்கு முன் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். யாருக்குச் சக்தியில்லையோ அவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இது அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நீங்கள் நம்புவதற்கு ஏற்றது. இவை அல்லாஹ்வின் வரம்புகள். (அவனை) மறுப்பவருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.

وتذكر كتب التفاسير بخصوص سبب نزول هذه الآية الكريمة، أن خولة بنت ثعلبة زوجة أوس بن الصامترضي الله عنهما، كان بينها وبين زوجها ما يكون بين الرجل وزوجته من خلاف. وقد كان زوجها رجلاً سريع الغضب، فلما كان بينهما ما كان، حلف أن لا يقربها، وقال لها: أنت علي كأمي. وكانت هذه العادة من عادات الجاهلية التي حرمها الإسلام، لكن بقيت رواسبها عند البعض.
ثم إن أوسًا بعد ما كان منه ما كان، أراد أن يقرب زوجته فامتنعت منه، ورفضت أن تستجيب له، حتى يأتي رسول الله صلى الله عليه وسلم ويخبره بما كان، لكن أوسًاتحرج منعه الحياء أن يذكر لرسول الله ما جرى منه؛ فذهبت خولة بنفسها إلى رسول الله صلى الله عليه وسلم، وأخبرته بالذي حدث، فقال لها رسول الله صلى الله عليه وسلم: (ما أراك إلا قد حرمت عليه) !! فأخبرت رسول الله صلى الله عليه وسلم أن زوجها لم يرد بقوله ذلك طلاقًا ولا فراقًا، فأجابها رسول الله ثانية: (ما أراك إلا قد حرمت عليه)، فلما سمعت جواب رسول الله التجأت إلى الله قائلة: اللهم إليك أشكو حالي وفقري.
ثم أخذت تحاور رسول الله لتقنعه أنها تحب زوجها، ولا تريد فراقه، وأنه يبادلها نفس المشاعر، فما كان من رسول الله إلا أن أجابها ثالثة: (ما أراك إلا قد حرمت عليه)؛ ومع هذا، فإنها لم تيأس من رحمة الله، ومن ثم أخذت من جديد تحاور رسول الله صلى الله عليه وسلم، عن طريق التركيز على الجانب العاطفي والإنساني، لعلها تقنعه بإيجاد مخرج للمأزق الذي هي فيه، فتقول له: فإني وحيدة، ليس لي أهل سواه...إن لي صبية صغارًا، إن ضممتهم إليه ضاعوا، وإن ضممتهم إلي جاعوا، فلا يجد لها رسول الله جوابًا إلا أن يقول لها: (لا أراك إلا قد حرمت)، فلما لم تجد لها جوابًا عند رسول الله، التجأت إلى الله قائلة: اللهم أنزل على لسان نبيك ما يقضي لي في أمري، فلم تكد تنتهي من دعائها، حتى أنزل الله على نبيه قوله سبحانه: {قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير}.
ثم إن رسول الله صلى الله عليه وسلم بعد أن أنزل الله عليه قرآنًا، بين فيه حكم هذه الواقعة، دعا زوجها أوسًا ، وسأله أن يحرر عبدًا كفارة عن فعله، فأخبر أوس رسول صلى الله عليه وسلم أنه لا طاقة له بذلك، فسأله رسول الله إن كان يستطيع أن يصوم شهرين، فأجابه أنه لا يستطيع؛ لأنه رجل قد تقدم به العمر، والصيام يضعفه، حينئذ طلب منه رسول صلى الله عليه وسلم أن يتصدق على ستين مسكينًا، فأخبره أنه لا يملك من المال ما يتصدق به، فلما رأى عليه الصلاة والسلام من حاله ما رأى، تصدق عنه، وطلب منه أن يعود إلى زوجته.

கவ்லா பின்த் ஸலபா (ரலி) என்ற பெண்மணிக்கும் அவரது கணவர் அவ்ஸ் இப்னு ஸாமித் (ரலி) அவர்களுக்கும் ஒரு சமயம் சின்ன சண்டை ஏற்பட்டது. மிகவும் கோபக்காரராக இருந்த அவ்ஸ் கோபத்தில் தம் மனைவியைப் பார்த்து “நீ என் மீது என் தாயின் முதுகைப் போல என்று கூறி விட்டார்.

(இஸ்லாம் வரும் முன்பாக அரபுலகத்தில் ஒருவர் தன் மனைவியை தனக்கு மஹ்ரமான ஒரு பெண்ணோடு இவ்வாறு ஒப்பிட்டு கூறி விட்டால் அதன் பின்னர் அந்த இருவருக்கும் மத்தியில் பிரிவினை ஏற்பட்டு விடும். இருவரும் அதன் பிறகு சேர்ந்து வாழ முடியாது அதற்கு ளிஹார் என்று சொல்லப்படும்)

சிறிது நாட்கள் கழித்து தான் சொன்னது தவறு என்றுணர்ந்து மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பி மனைவியிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்கள். அதற்கு கவ்லா ரலி அவர்கள், நான் நபி {ஸல்} அவர்களிடம் சென்று இதற்கான விளக்கத்தை தெரிந்து வருகிறேன் என்று கூறி நபி {ஸல்} அவர்களிடம் வந்து கேட்ட போது நபி {ஸல்} அவர்கள், உங்களுக்கு மத்தியில் பிரிவினை ஏற்பட்டு விட்டது. எனவே நீங்கள் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி விட்டார்கள்.

அதற்கு அந்த பெண்மனி, யாரசூலல்லாஹ்! என் கணவர் கோபத்தில் சொன்ன வார்த்தை.அதனைக் கொண்டு அவர் தலாக்கை நாட வில்லை என்று கூறிய போது  நபி {ஸல்} அவர்கள், எப்படியிருந்தாலும் நீங்கள் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி விட்டார்கள். அந்த பெண்மனி போய் விடுகிறார்கள்.

மறுபடியும் இரண்டாவது முறை வந்து சேர்ந்து வாழ்வதற்கான கோரிக்கையை வைத்தார்.என் கணவர் தலாக் விட வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்ல வில்லை. ஏதோ கோபத்தில் சொல்லி விட்டார் என்று சொல்லிப் பார்த்தார்.அப்போதும் நபி {ஸல்} அவர்கள் முந்தைய பதிலையே சொன்னார்கள். இதற்கிடையில் அந்த பெண்மனி அல்லாஹ் விடமும் தன் பிரச்சனைக்கான தீர்வை நாடி துஆ செய்து கொண்டிருந்தார்.

கொஞ்ச நாள் சென்ற பிறகு மறுபடியும் அந்த பெண்மனி வந்து யாரசூலல்லாஹ்! நான் வயதான பெண்மனி.எனக்கு ஆதரவாக என் குடும்பத்தில் யாருமில்லை. என் கணவரும் வயதானவர் அவருக்கும் என்னை விட்டால் ஆதரவில்லை.

எனக்கு சின்ன பிள்ளைகளும் இருக்கிறார்கள்.அவர்களையும் கவனிக்க வேண்டும்.அந்த பிள்ளைகளை என் கணவரோடு விட்டால் அவர்கள் வீணாகி விடுவார்கள். என்னோடு வைத்துக் கொண்டால் பசியால் வாடிப் போவார்கள்.

எனவே இக்கட்டான சூழ்நிலையிலே நான் இருக்கிறேன் என்று அந்த பெண்மனி கூறினார்கள். அப்போதும் நபி {ஸல்} அவர்கள் அல்லாஹ்விடமிருந்து இதற்கான எந்த உத்தரவும் வர வில்லை. அதனால் நீங்கள் சேர்ந்து வாழ வழியில்லை என்று கூறினார்கள்.

இப்படி மூன்று முறை கேட்டும் தன் இயலாமையை வெளிப்படுத்தியும் எந்த பலனும் ஏற்பட வில்லை. இருந்தாலும் அவர்கள் மனம் தளராத அவர் அல்லாஹ்விடம் தன் கோரிக்கைத் தொடர்ந்தார்கள்.

என் பிரச்சனைக்கான ஒரு தீர்வை உன் நபியின் நாவின் வழியாக எனக்கு ஏற்படுத்து என்று அல்லாஹ்விடம் கேட்டு அழுதார்கள். கெஞ்சி கண்ணீர் வடித்தார்கள்.

அவர்களின் கனத்த அழு குரல் அல்லாஹ்வின் அர்ஷின் கதவைத் தட்டியது. அல்லாஹ்வின் கவனத்தை ஈர்த்தது. அல்லாஹ் மேல்கூறிய வசனங்களை இறக்கியருளினான்.

ஒரு அடிமையை உரிமை விடுதல், அதற்கு இயலாதவர்கள் 60 நாட்கள் நோன்பு நோற்றல், அதற்கும் இயலாதவர்கள் 60 ஏழைகளுக்கு உணவளித்தல் இந்த பரிகாரங்களில் ஒன்றை செய்து இருவரும் சேர்ந்து வாழலாம் என்ற வசனங்களை இறக்கி வைத்தான்.                                       ( நூல்: தஃப்ஸீர் குர்துபீ )

உம்மு ஸுலைம் ரலி

  وَالَّذِيْنَ تَبَوَّؤُ الدَّارَ وَالْاِيْمَانَ مِنْ قَبْلِهِمْ يُحِبُّوْنَ مَنْ هَاجَرَ اِلَيْهِمْ وَلَا يَجِدُوْنَ فِىْ صُدُوْرِهِمْ حَاجَةً مِّمَّاۤ اُوْتُوْا وَيُـؤْثِرُوْنَ عَلٰٓى اَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ ؕ
 وَمَنْ يُّوْقَ شُحَّ نَـفْسِهٖ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‌ۚ‏ 

அவர்களுக்கு முன்பே நம்பிக்கையையும், இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (உரியது). ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக்கின்றனர்.

அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ள மாட்டார்கள். தமக்கு வறுமை இருந்தபோதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்.
 
عن أبي هريرة أن رجلا أتى النبي صلى الله عليه وسلم فاستضافه فبعث إلى نسائه هل عندكن من شيء؟ فقلن ما معناه: إلا الماء فقال رسول الله صلى الله عليه وسلم من يضم أو يضيف هذا؟ فقال رجل من الأنصار: أنا يا رسول الله فانطلق به إلى امرأته فقال: أكرمي ضيف رسول الله صلى الله عليه وسلم فقالت: ما عندنا إلا قوت الصبيان
قال: هيئي طعامك وأصبحي سراجك ونومي صبيانك، إذا أرداوا عشاءً، فهيأت طعامها وأصبحت سراجها ونوّمت صبيانها ثم قامت كأنها تصلح سراجها فأطفأته، فجعلا يريانه أنهما يأكلان فباتا طاويين، فلما أصبح غدا إلى رسول الله صلى الله عليه وسلم، فقال: ضحك الله الليلة أو عجب من فعالكما فأنزل الله عز وجل: "ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة، ومن يوق شح نفسه فأولئك هم المفلحون"

ஒருமுறை நபி(ஸல்) அவர்களின் சமூகத்துக்கு ஒரு புதிய விருந்தாளி வந்தார். இவரை அபூதல்ஹா(ரலி) அவர்கள் தனது வீட்டுக்கு விருந்தளிக்க அழைத்து வந்தார்கள்.

மனைவியிடம் ஏதேனும் உணவு உண்டா எனக்கேட்க, குழந்தைகளுக்கு மட்டும்தான் உணவுள்ளது, இருந்தாலும் விருந்தாளியை கெளரவிக்க வேண்டும் என்ற நோக்கில் நான் குழந்தைகளை எப்படியேனும் சமாளித்து தூங்க வைத்துவிடுகிறேன், விருந்தாளி மட்டும் உண்டு பசியாறட்டும் என்று ஆலோசனை கூறினார்கள். பெற்ற குழந்தைகளை பட்டினி போட்டு இவர்கள் தமக்குள் செய்த இந்த இரகசிய தியாகம் பற்றி மேற்கூறிய அல்குர்ஆன் வசனம் அருளப்பட்டது. ( நூல்: தஃப்ஸீர் அல் பக்வீ )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனது கவனத்தை ஈர்க்கும் மேன்மக்களாக நம்மை ஆக்கியருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment