வறுமையை ஒழிப்போம்!!! இஸ்லாத்தின் ஒளியில்…..
உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் கத்தர்,
புருணை, ஐக்கிய அரபு அமீரகம், குவைத்,
சவூதி போன்ற
முஸ்லிம் நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன.
அதிலும் குறிப்பாக 2014 –ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி உலகப்
பணக்கார நாடுகளின் பட்டியலில் கத்தர் முதலிடமும்,
புருணை 5 –வது இடத்தையும், ஐக்கிய அரபு அமீரகம் 6 –வது இடத்திலும் குவைத் 15 –வது இடத்திலும், சவூதி 19 –வது இடத்திலும் இடம் பெற்றிருக்கின்றன.
இன்னொரு புறம், உலக ஏழை நாடுகளின் பட்டியலில் அதிக அளவில் இடம் பிடித்திருப்பதும் முஸ்லிம்
நாடுகளே!
வறுமை... ஏழ்மை.... இது வெறும் வார்த்தைகளல்ல இதுதான் இன்றைய முஸ்லிம் சமூகத்தின்
பெரும்பான்மையானவர்களின் வாழ்க்கை நிலை.
70 சதவீத முஸ்லிம்கள் வாழும் சூடானில் வறுமை காரணமாக தங்கள் நாட்டின் விளை
நிலங்களில் பெரும்பாலானவற்றை சவூதி, மற்றும் சீனாவிற்கு விற்று விட்டது.
95 சதவீத முஸ்லிம்கள் வாழும் பாகிஸ்தானில் வறுமையின் காரணமாக 25,000 கிராமங்களில் வசித்து
வந்தவர்களை வேறு பகுதிக்கு மாற்றி விட்டு அந்த இடத்தை கத்தார் நாட்டிற்கு விற்று
விட்டது, விளை நிலங்களை சவூதி நாட்டிற்கு குத்தகைக்கு
தந்துள்ளது.
35 சதவீத முஸ்லிம்கள் வாழும் தான்சானியாவில் வறுமையின் காரணமாக 1000 சதுர
கி.மீட்டர் இடத்தை தென்கொரியாவிற்கு கொடுத்துள்ளது.
32.8 சதவீத முஸ்லிம்கள் வாழும் எத்தியோப்பியாவில் வறுமையின் காரணமாக சுமார் 6,00000 ஹெக்டேர் நிலத்தை
பிற நாட்டிற்கு வழங்கியுள்ளது.
8 சதவீத முஸ்லிம்கள் வாழும் மடகாஸ்கரில் வறுமையின் காரணமாக 13,0000 ஹெக்டேர் நிலத்தை
இந்தியாவின் மும்பை நிறுவனமான வருண் இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு தாரை
வார்த்துள்ளது.
சோமாலியா,
ஃபலஸ்தீன், ஜோர்டான் மற்றும் ஆஃப்ரிக்க முஸ்லிம் நாடுகளின்
நிலைகளோ சொல்லி மாளாது.
பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருந்த ஈராக், ஆஃப்கானிஸ்தான், சிரியா
போன்ற நாடுகள் போர் மேகம் சூழ்ந்ததால் வறுமையின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டன.
இந்தியாவில் வாழும் முஸ்லிம்களில் 100-க்கு 60 நபர்கள் ஏழைகள் என்று சச்சார்
கமிஷன் அறிக்கை சொல்கிறது.
மேலும், நீதியரசர் ராஜீந்தர் சச்சார் தமது அறிக்கையில் ”நாட்டில் இயங்குகின்ற 27 பொதுத்துறை வங்கிகளில் முஸ்லிம்கள் சேமிப்பு கணக்கு பரிவர்த்தனையில் 12 விழுக்காடு தான் பங்கு பெற்றுள்ளனர்.
அதாவது நாட்டில் வசிக்கும் 25 கோடி முஸ்லிம்களில் மூன்றரை கோடி முஸ்லிம்களுக்கு மட்டுமே வங்கியில்
சேமிப்புக் கணக்கு உள்ளது”
என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தைப் பொறுத்த வரை இன்றளவும் அநேக முஸ்லிம்கள் ஆதரவற்றவர்களாய், வறியவர்களாய், ஏழைகளாய்,
கடனாளிகளாய், நோயாளிகளாய் இந்த சமுதாயத்தில் நடமாடிக் கொண்டுதானிருக்கிறார்கள்.
முன்பெல்லாம் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே பள்ளிவாசலில் ஸலாம் சொல்லி முறையிட்ட
ஏழைகளின் குரலை இப்போது தினந்தோரும் ஐந்து நேரத் தொழுகைகளின் பின்னாலும் கேட்க
முடிகின்றது.
முஸ்லிம் சமூகத்தைத் தாண்டி உலகளாவிய அளவிலும் வறுமை என்பது மிகவும் சவாலான
ஒன்றாகவே இருக்கின்றது.
ஐ. நா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை ”உலகில் 1.4 பில்லியன் மக்கள் அதாவது 70 சதவீத மக்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகின்றார்கள்” என்றும் மேலும், உலக பணக்காரர்களில் 20 சதவீதம் பேர் உலகின் மொத்த வளங்களில் 86
சதவீதத்தைக்
கைப்பற்றியுள்ளனர். மீதமுள்ள
80 சதவீத
மக்களுக்கு கிடைப்பது வெறும் 14 சதவீத வளங்கள் மட்டுமே” என்றும் கூறுகின்றது.
இந்தக் கணக்கெடுப்புக்குப் பின்னர் ஐ. நா வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின்
கூட்டமைப்பின் கூட்டத்தைக் கூட்டி
1992 –இல் மாநாடு
ஒன்றை நடத்தியது.
அந்த மாநாட்டில் உலக நாடுகளை விட்டும் முற்றிலுமாக வறுமையை ஒழிக்க பல
திட்டங்கள் தீட்டப்பட்டு, அக்டோபர்
17 –ஆம் தேதியை உலக
வறுமை ஒழிப்பு தினமாக அறிவித்து, 2015 –ஆம் ஆண்டுக்குள் உலகில் இருந்து
முற்றிலுமாக வறுமையை ஒழித்து விட வேண்டும் என சூளுரைத்தது.
அவர்கள் நிர்ணயித்த இலக்கைத் தாண்டி அடுத்த ஆண்டுக்குள் நுழைந்தும் ஆகிவிட்டது. இது வரை உலகின் எந்த ஒரு நிலப்பரப்பிலும் வறுமையை ஒழித்து விட்டதாக ஒரு
பரப்புரையைக் கூட காண முடியாது.
காரணம் இவர்கள் வறுமையை ஒழிக்க தீட்டிய திட்டங்கள் அனைத்தும் இன்னும் அதள
பாதாளத்திற்குள் அழைத்துச் செல்வதாகவே அமைந்திருப்பதைப் பார்க்க முடிகின்றது.
ஆனால், இஸ்லாம்
1400 ஆண்டுகளுக்கு
முன்னால் வறுமையை ஒழிப்பதற்காக கொண்டு வந்த திட்டங்கள் மிகச்சரியாக நடைமுறைப்
படுத்தப்பட்ட போது முதல் நூற்றாண்டுகளின் முடிவிலேயே அதாவது உமர் இப்னு அப்துல்
அஜீஸ் (ரஹ்) அவர்களின் ஆட்சிக் காலத்தின் போதே
உலகெங்கும் இருந்து வறுமையை முற்றிலுமாக இல்லாமல் ஆக்கப்பட்டதை வரலாறு நிரூபணம்
செய்து வைத்துள்ளது.
வறுமையின் கோரப்பிடியிலிருந்து உலகத்தை மீட்டெடுத்த இஸ்லாத்தின் திட்டங்களைப்
பார்ப்போம்…
வறுமை ஒழிப்புப் பணியில் இஸ்லாம் காட்டிய முனைப்பும்… தீட்டிய திட்டங்களும்…
ஹிஜ்ரத்திற்கு பிந்தைய முஸ்லிம் சமூகத்தின் வாழ்க்கை நிலை தான் இஸ்லாமிய
வாழ்வியலின் முன் மாதிரிக் கோட்பாடுகளைக் கொண்டிருப்பவை.
ஏனெனில், மதீனாவிற்கு வந்த பின்பு தான் இஸ்லாமியக்
கோட்பாட்டின் படி முழுமையாக வாழ்வதற்கு முஸ்லிம்கள் பழக்கப்படுத்தப் பட்டார்கள்
அல்லது பக்குவப்படுத்தப் பட்டார்கள் என்று சொல்ல வேண்டும்.
நபி {ஸல்} அவர்கள் சமூக மக்களிடையே காணப்பட்ட
வறுமையை நீக்குவதற்கு படிப்படியாக சில முயற்சிகளை மேற்கொண்டார்கள்.
ஆரம்பத்தில் இஸ்லாத்தின் பிரதானமான கொள்கைப் பிரகடனங்களில் ஒன்றாக வறுமையின்
ஒரு பகுதியாக இருக்கிற பசி, பட்டினி ஒழிப்பை சேர்த்துக் கொண்டார்கள்.
ஆம்! பசியிலிருந்து விடுதலை!! இது தான் அந்தப் பிரகடனம்!!!
வறுமையை ஒழித்தலே சுவனத்தில் இலகுவாகக் கொண்டு சேர்க்கும் எளிய வழி என்று
சூளுரைத்த அண்ணலார்….
வெறுமெனே பிரகடனமாகச் சொல்லாமல் சோலைகள் நிறைந்த சுவனத்தில் சுலபமாகப்
பிரவேசிக்க உதவும் பிரதானமான அம்சங்களில் ஒன்றாக பசித்த ஒருவருக்கு உணவளிப்பதும்
அடங்கும் என அருள் வாய் மலர்ந்தார்கள் நபி {ஸல்} அவர்கள்.
فعن عبد الله بن عمرو رضي الله عنهما قال
قال
رسول الله صلى الله عليه وسلم: اعبدوا الرحمن، وأطعموا الطعام، وأفشوا السلام،
تدخلوا الجنة بسلام
[الترمذي].
இந்தப் பிரகடனத்தை பிரயோகித்த காலமும் மிகவும் கவனத்தைப் பெறுகின்றது. யூதப் பண்டிதர் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் அவர்கள் விரும்பி இஸ்லாத்தை ஏற்றுக்
கொண்டதற்கான அடிப்படைக் காரணமே இந்தப் பிரகடனம் தான்.
وروى أحمد في المسند، والترمذي في السنن عن أبي سعيد
الخدري قال: قال رسول الله صلى الله عليه وسلم
أيما
مؤمن أطعم مؤمنا على جوع أطعمه الله يوم القيامة من ثمار الجنة، وأيما مؤمن سقى
مؤمنا على ظمأ سقاه الله يوم القيامة من الرحيق المختوم، وأيما مؤمن كسا مؤمن على
عري كساه الله من خضر الجنة
அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “எந்த ஒரு இறை நம்பிக்கையாளர் பசித்திருக்கும் ஓர் இறை நம்பிக்கையாளருக்கு
உணவளிக்கின்றாரோ, அல்லாஹ் அவருக்கு சுவனத்து கனிகளை
மறுமையில் வழங்குவான்.
“எந்த ஒரு இறை நம்பிக்கையாளர்
தாகித்திருக்கும் ஓர் இறை நம்பிக்கையாளருக்கு தண்ணீர் கொடுக்கின்றாரோ, அல்லாஹ் அவருக்கு ரஹீக்கில் மஃதூமின் நீரை மறுமையில் புகட்டுவான்.
“எந்த ஒரு இறை நம்பிக்கையாளர்
ஆடையில்லாதிருந்த ஓர் இறை நம்பிக்கையாளருக்கு அணிய ஆடை கொடுக்கின்றாரோ, அல்லாஹ் அவருக்கு சுவனத்து பட்டாடையை மறுமையில் அணிவிப்பான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: திர்மிதீ
)
பசியில் இருந்தும் பட்டினியில் இருந்தும் கொஞ்சம் அந்த சமூகம் மீண்டது. அடுத்து அந்த மக்களிடம் கொஞ்சம் காசு, பணம் சேர ஆரம்பிக்கிறது, ஓரளவு வயிறு நிரம்ப சாப்பிடும் அளவிற்கு முன்னேற்றம் ஏற்படுகின்றது.
இப்போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் பசித்தவருக்கு உணவளிப்பதை இறை
நம்பிக்கையாளனின் உயரிய செயலாக உயர்த்திக் கூறினார்கள்.
وفي هذا يقول رسول الله - صلى الله عليه وسلم - ((ما
آمن بي من بات شبعان وجاره جائع))
எந்தளவுக்கெனில், ”உண்மையான ஓர் இறை நம்பிக்கையாளன்
பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க தான் வயிறு நிரம்ப சாப்பிட மாட்டான்” என்றது நபி {ஸல்} அவர்களின் அந்தக் கட்டளை.
முன்பிருந்ததை விட சிறிய அளவிலான முன்னேற்றத்தை அந்தச் சமூகம் அடைந்த போது,
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் பசி, பட்டினியோடு, இதர இல்லாத சில நிலைகளையும் இணைத்துக்
கொண்டு, இல்லாதோருக்கு ஈந்தளிப்பது இறைவனின்
நேசத்தைப் பெற்றுத் தரும் என்பதாக அறிவித்தார்கள்.
وقد قال النبي – صلى الله عليه وسلم
أحب الناس إلى الله عزَّ وجل أنفعهم للناس ، وأحب
الأعمال إلى الله عزَّ وجل سرور تدخله على مسلم ، أو تكشف عنه كربه ، أو تقضي عنه
ديناً ، أو تطرد عنه جوعاً ، ولو أن تمشي مع أخيك في حاجته أحب إليَّ من أن أعتكف
في المسجد شهراً
ஒரு கிராமவாசி மாநபி {ஸல்} அவர்களின் சபைக்கு வந்து “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விற்கு பிரியமான செயல் எது? என்று வினவினார்.
அப்போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} “மனிதர்களில் அல்லாஹ்விற்கு மிகவும்
நேசத்திற்குரியவர் சக மனிதர்களுக்கு எல்லா வகையிலும் பயன் தருகின்றவரே! செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானது ஒரு முஸ்லிம் தன் சக முஸ்லிமின்
வாழ்க்கையில் ஏற்படுத்துகிற மகிழ்ச்சியும், சந்தோஷமும் ஆகும்.
அந்த மகிழ்ச்சி என்பது அவனுடைய ஒரு கஷ்டத்தை நீக்குவதின் மூலமாகவோ, அல்லது அவனுடைய கடனை அடைப்பதின் மூலமாகவோ, அல்லது அவனுடைய பசியை, வறுமையை போக்குவதின் மூலமாகவோ அமைந்திருந்தாலும் சரியே!
மீண்டும், கேள்வி கேட்ட அந்த கிராமவாசியை நோக்கி “நீர் உம் சகோதரர் ஒருவரின் தேவையை நிறைவேற்றுவதற்காக நடந்து செல்வதென்பது ஒரு
மாத காலம் என்னுடைய இந்தப் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருப்பதை விட எனக்கு மிகப்
பிரியமானதாகும்” என்று பதில் கூறினார்கள்.
وفي رواية للطبراني "
" إن أحب الاعمال إلى الله تعالى بعد الفرائض : إدخال السرور على المسلم
، كسوت عورته ، أو أشبعت جوعته ، أو قضيت حاجته
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் இன்னொரு அறிவிப்பின் படி..
”அல்லாஹ்வின் கடமைகளை சரிவர செய்கிற ஓர்
அடியானின் செயல்களில் அல்லாஹ்விற்கு மிகப் பிரியமான செயல் தன் சக முஸ்லிமின்
வாழ்வினில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகும். அந்த மகிழ்ச்சி என்பது அவன் மானத்தை
மறைக்க ஆடை கொடுப்பதின் மூலமாகவோ, அல்லது அவன் பசியை நீக்குவதன் மூலமாகவோ, அவனுடைய தேவைகளை நிறைவேற்றுவதின் மூலமாகவோ அமைந்திருந்தாலும் சரியே!” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
( நூல்:தப்ரானி,
ஸில்ஸிலத் அஸ்
ஸஹீஹ் லில் அல்பானீ )
அடுத்து, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் வறுமையின் ஒவ்வொரு பிரிவையும்
தனித்தனியாக வகைப்படுத்தி அந்த பிரிவுகளில் உழல்பவர்களை மீட்டெடுக்கும்
முயற்சிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எண்ணிலடங்கா சோபனங்களை வழங்கினார்கள்.
وعن عائشة رضي الله عنها قالت: قال عليه الصلاة والسلام
من أدخل على أهل بيتٍ من المسلمين سروراً لم يرضَ
الله له ثواباً دون الجنة
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “எந்த ஒரு முஸ்லிம் தன் சக முஸ்லிம் ஒருவரின் வாழ்வில் ஏற்பட்ட கஷ்டத்தை நீக்கி
சந்தோஷத்தை ஏற்படுத்துகிறாரோ அவருக்கு சுவனத்தை தவிர வேறெதையும் கூலியாக வழங்குவதை
அல்லாஹ் விரும்புவதில்லை” என நபி
{ஸல்} அவர்கள் கூறினார்கள்.
சகோதரத்துவம் எனும் அனுசரனை கொண்டு உதவத் தூண்டிய பெருமானார் {ஸல்}…..
அடுத்து, ஒரு முஸ்லிமை இன்னொருவனாக பார்ப்பதைத்
தவிர்த்து உங்களில் ஒருவராக, சகோதரராக பாருங்கள்! உங்களுக்கு உங்கள் பொருளில் என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை உங்கள்
சகோதரருக்கும் இருக்கிறது என்றார்கள் நபி {ஸல்} அவர்கள்.
قول رسول الله - صلى الله عليه وسلم -: ((المؤمن للمؤمن كالبنيان يشد
بعضه بعضا))
”ஒரு இறைநம்பிக்கையாளர், மற்றொரு இறைநம்பிக்கையாளருக்குக் கட்டிடத்தைப் போன்றவராவார். எப்படி ஒரு கட்டிடம் நிலைத்திருப்பதற்கு ஒரு செங்கல் இன்னொரு செங்கலின் துணை
கொண்டு உறுதிப்படுத்துகின்றதோ அதைப் போன்று” என நபி
{ஸல்} அவர்கள் கூறினார்கள்.
وقوله - عليه السلام -: ((مثل المؤمنين في توادهم
وتراحمهم؛ كمثل الجسد، إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى)).
முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் அன்போடும், கருணையோடும் இருப்பதற்கு உதாரணம் சொல்ல
வேண்டுமெனில் உடலை உதராணமாகச் சொல்லலாம். காய்ச்சலின் போதோ, அல்லது ஏதாவது நோவினையின் போதோ உடலின் ஏதாவது ஒரு உறுப்புக்கு பாதிப்பு
என்றால் ஒட்டு மொத்த உடலும் அதில் பங்கெடுத்துக் கொள்கின்றதே அதைப் போன்று” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
அடுத்து, முஸ்லிம் சமூகத்தில் குறிப்பிடும்படியாக
ஒரு சிலர் முன்னேற்றம் அடைந்த போது…
فقال رسول الله - صلى الله عليه وسلم –
((فمن
كان أخوه تحت يده، فليطعمه مما يطعم، وليلبسه مما يلبس)).
“உங்களில்
ஒருவரின் பொறுப்பின் கீழ் இருக்கும் தம் சகோதரர் ஒருவருக்கு தாம் எதை உண்கிறாரோ
அதையே உண்ணக் கொடுக்கட்டும், தாம் எதை ஆடையாக அணிகிறாரோ அதையே அணியக்
கொடுக்கட்டும்” என்று நபி
{ஸல்} அவர்கள் கூறினார்கள்.
அடுத்து, முஸ்லிம் சமூகத்தில் குறிப்பிடும் படியாக
சிலர் வீடு, வாசல்,
வாகனம் என
முன்னேற்றம் கண்ட போது…
قال أبو سعيد الخدري: كنا
في سفر فقال رسول الله - صلى الله عليه وسلم -: ((من كان معه فضل ظهر
"دابة" فليعد به على من لا ظهر له، ومن كان معه فضل زاد فليعد به على من
لا زاد له))؛ رواه مسلم.
“உங்களில் ஒரு வாகனத்திற்கும் மேற்பட்ட
வாகனத்தைப் பெற்றிருப்பவர்கள் வாகனம் இல்லாதவருக்குக் கொடுக்கட்டும், உங்களில் மேல் மிச்சமான அளவுக்கு உணவு வைத்திருப்பவர்கள் உணவு இல்லாதவருக்கு
கொடுக்கட்டும்!” என்று ஒரு பிரயாணத்தில் நாங்கள் இருந்த
போது எங்களிடையே நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்” என அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
யாசிப்பதை விட்டு விட்டு உழைக்கத் தூண்டிய அண்ணலார்….
இன்னொரு புறம், தங்களுடைய வறிய, ஏழ்மையான சூழ்நிலையைக் காரணம்
காட்டி யாசகம் கேட்டு வாழ்வதை மாநபி {ஸல்} அவர்கள் கடுமையாக கண்டித்தார்கள்.
عن قبيصة بن مخارق الهلالي رضي الله عنه: قال:'
تحمَّلت حَمَالة ، فأتيتُ رسول الله صلى الله عليه وسلم أسأله فيها ، فقال: أقِمْ
حتى تأتيَنا الصدقةُ ، فنأمُرَ لك بها ، ثم قال: يا قبيصة ، إنَّ المسألةَ لا تحلّ
إلا لأحد ثلاثة: رجل تحمل حمالة ، فَحلَّتْ له المسألة حتى يُصيبَها ، ثم يُمْسِكُ
، ورجُل أصابتهُ جائحة اجتاحت ، فحلّتْ له المسألة حتى يُصيب قوَاما مِنْ عَيْش -
أو قال: سِدادا مِنْ عَيْش - ورجل أصابته فاقة ، حتى يقول ثلاثة من ذوي الحِجَا من
قومه: لقد أصابت فلاناً فاقة ، فحلّت له المسألة ، حتى يصيبَ قَوَاما من عَيْش -
أو قال: سِدَادا من عيش - فما سِوَاُهنَّ من المسألة يا قبيصة سُحْت ، يأكلها
صاحبها سُحْتا '.
أخرجه مسلم وأبو داود والنسائي.
أخرجه مسلم وأبو داود والنسائي.
கபீஸா இப்னுல் மஃகாரிக் அல் ஹிலாலீ (ரலி) கூறுகின்றார்கள்: ”இருவருக்கு மத்தியில் நடைபெற்ற சண்டையை சமாதானம் செய்து வைத்து, அந்த சமாதானத்தை பணத்தை
கொடுப்பதன் மூலம் தீர்த்து வைத்து அப்பொறுப்பை தான் ஏற்றுக்கொண்ட நிலையில்
அல்லாஹ்வின் தூதரிடம் வந்தேன். சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நான்
பொறுப்பேற்ற பணத்தை கொடுக்க என்னிடம் போதுமான பண வசதி இல்லை என்று கூறி
அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்களிடத்தில் பணத்தை கேட்டேன்.
அதற்கு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} ”இவ்விடத்தில்
நிற்பீராக, எங்களுக்கு ஸதகாக்கள் வரும் அதனை உமக்கு
தருமாறு ஏவுவோம்! சற்று நிற்பீராக! என்று என்னிடம் கூறினார்கள். பிறகு ஹபீஸாவே
யாசிப்பது நிர்பந்தமான மூன்று நிலையில் உள்ளவருக்குதான் அனுமதியாகும்.
”ஒருவர்,
இருவருக்கு மத்தியிலுள்ள சண்டையை சமாதானம் செய்து விட்டு அதில்
கொடுக்க வேண்டிய பணத்தை தான் தருவதாக வாக்குறுதி அளித்தவராவார். அவரிடம் கொடுப்பதற்கு பணமில்லை எனும் நிலையில்
அவர் யாசிப்பது ஹலாலாகும் அப்பணத்தைப் பெற்றவுடன் யாசிப்பதை நிறுத்திக்கொள்ள
வேண்டும்.
இன்னொருவர்,
திடீரென ஏற்படும் பேரிடரின் காரணமாக சொத்து செல்வங்கள் அனைத்தையும் பறிகொடுத்து விட்ட
ஒருவர், அவரும் யாசிப்பது அனுமதிக்கப் பட்டதாகும். இது அவர்
வாழ்வாதாரத்தை பெற்றுக்கொள்ளும் வரை தான் பின்னர்
அவர் யாசிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
மூன்றாமவர், வறுமையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர். அவரது சமூகத்திலே உள்ள தலைவர்கள், அறிஞர்கள் அவருக்கு உதவி செய்யுமாறு பரிந்துரை செய்கின்கிறார்கள்.
அந்நபருக்கும் யாசிப்பது அனுமதிக்கப்பட்டதாகும். அவரும் வாழ்வாதாராத்தைப்
பெற்றுக்கொள்ளும் வரை தான் பின்னர் அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இதற்குப் பின்னரும் ஒரு மனிதன் கை நீட்டுவானேயானால், யாசிப்பதை வழக்கமாக்கிக் கொள்வானேயானால், பிச்சை கேட்பதை தொழிலாக செய்வானேயானால்
அவன் ஆகுமாக்கப்படாத ஹராமான உணவையே உண்ணுகிறான்’
என்று மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: அஹ்மத் )
அப்படி ஒருமுறை நபி {ஸல்}
அவர்களிடம் யாசகம் கேட்டு வந்த ஒருவருக்கு தொழிலுக்கான
வழிகளைக்காட்டி வியர்வை சிந்தி உழைத்து உண்ணுமாறு உபதேசித்தார்கள்.
وعن أنس بن مالك : أن رجلا من الأنصار أتى النبي صلى
الله عليه وسلم يسأله فقال : " أما في بيتك شيء ؟ " قال بلى حلس نلبس
بعضه ونبسط بعضه وقعب نشرب فيه من الماء . قال : " ائتني بهما " قال
فأتاه بهما فأخذهما رسول الله صلى الله عليه وسلم بيده وقال : " من يشتري
هذين ؟ " قال رجل أنا آخذهما بدرهم قال : " من يزيد على درهم ؟ "
مرتين أو ثلاثا قال رجل أنا آخذهما بدرهمين فأعطاهما إياه وأخذ الدرهمين فأعطاهما
الأنصاري وقال : " اشتر بأحدهما طعاما فانبذه إلى أهلك واشتر بالآخر قدوما
فأتني به " . فأتاه به فشد فيه رسول الله صلى الله عليه وسلم عودا بيده ثم
قال له اذهب فاحتطب وبع ولا أرينك خمسة عشر يوما " . فذهب الرجل يحتطب ويبيع
فجاء وقد أصاب عشرة دراهم فاشترى ببعضها ثوبا وببعضها طعاما فقال رسول الله صلى
الله عليه وسلم : " هذا خير لك من أن تجيء المسألة نكتة في وجهك يوم القيامة
ஒரு முறை மதீனாவைச் சேர்ந்த ஏழை முஸ்லிம் ஒருவர் நபிகளாரிடம் யாசகம் கேட்டு
வந்தார். அதற்கு நபிகளார் உமது வீட்டில் எதுவும் இல்லையா? என வினவ, விரிப்பாக பயன்படுத்தும் ஒரு போர்வையும், நீர் அருந்துவதற்கான ஒரு பாத்திரமும் இருப்பதாக கூறினார்.
அவை இரண்டையும் தங்களிடம் கொண்டு வரும்படி நபியவர்கள் வேண்டவே, அதனை கொண்டு வந்தார் அவர். நபியவர்கள் அதனை சஹாபாக்களிடம் காட்டி உங்களில்
யார் இதனை வாங்கிக்கொள்கிறீர்கள் என கேட்க, ஒரு மனிதர் ஒரு திர்ஹம் கொடுத்து அதனை
வாங்கிக்கொள்கின்றேன் என்றார்.
அப்போது,
நபியவர்கள் மீண்டு ஒரு திர்ஹத்தை விட யார் அதிகமாகத் தர விரும்புகிறீர்கள் என
இரண்டு அல்லது மூன்று முறை கேட்டார்கள்.
உடனே இன்னொரு மனிதர் இரு திர்ஹம் கொடுத்து நான் அவற்றை வாங்கிக்கொள்கின்றேன்
என பதிலளிக்க அவரிடம் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டு பணம் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இரு திர்ஹங்களையும் அம்மனிதரிடம் நபியவர்கள் கொடுத்து ஒரு திர்ஹமுக்கு உணவு
வாங்கி அதனை உனது குடும்பத்தினருக்கு கொடுத்து விடு. எஞ்சிய திர்ஹமுக்கு ஒரு
கோடாரியை வாங்கி அதனை என்னிடம் கொண்டுவா என்றார்கள்.
அதற்கு தனது கையாலேயே கைப்பிடியை செய்து கொடுத்து விறகுகளை வெட்டி அதனை
வியாபாரம் செய், இன்னும் 15
நாட்களுக்கு
என்னை நீ காண வரக்கூடாது என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.
அந்த ஏழை முஸ்லிம் விறகுகளைச் சேர்த்து வியாபாரம் செய்யலானார். பத்து
திர்கங்களைச் சம்பாதித்து சில பணத்திற்கு உணவுகளை வாங்கியவராக நபிகளாரின் முன்
வந்து நின்ற போது,
நபி {ஸல்} அவர்கள் ”யாசகம் கேட்டு மறுமை நாளில் உமது முகத்தில் புள்ளியிடப்பட்ட ஒரு
அடையாளத்துடன் வருவதை விட இப்படி உழைத்து பொருளீட்டி வாழ்வது உமக்கு மிகவும்
சிறந்ததாகும்” என்றார்கள்.
( நூல்: அபூ தாவூத் )
வட்டியை தடை செய்து, வட்டியில்லா அழகிய கடன் வழங்க வான்மறை துணை நின்று வழி கோலிய
அண்ணலார்…..
இன்னொரு புறம், அறியாமைக் காலத்தில் இருந்து கடன் என்கிற பெயரில் நடை முறையில் இருந்து வந்த, உயிரை உறிஞ்சும் வட்டியை மாநபி {ஸல்} அவர்கள் தடை செய்தார்கள்.
الَّذِينَ يَأْكُلُونَ الرِّبا لا يَقُومُونَ إِلَّا
كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ
بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبا وَأَحَلَّ اللَّهُ
الْبَيْعَ وَحَرَّمَ الرِّبا فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَى
فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ
النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ
"வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே
எழுவார்கள். "வியாபாரம் வட்டியைப் போன்றதே" என்று அவர்கள் கூறியதே
இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து,
வட்டியைத் தடை
செய்து விட்டான்.
தமது இறைவனிடமிருந்து அறிவுரை வந்தப்பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது
உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் (வட்டித் தொழில்) செய்வோர் நரகவாசிகள் ஆவர். அதில் அவர்கள் நிரந்தரமாக
இருப்பார்கள்”. (
அல் குர்ஆன்: 2: 275 )
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنَ
اللَّهِ وَرَسُولِهِ.
"நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால்
வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்!" அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால்
அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் போரிடுவதாகப் பிரகடனம் செய்து விடுங்கள்". ( அல் குர்ஆன்: 2: 278,279 )
عن عبد الله بن حنظلة غسيل الملائكة قال قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهويعلم أشد من ستة وثلاثين زنية (رواه أحمد)
"வட்டியின் ஒரு நாணயத்தை (அது வட்டியின் பொருள்தான் என்பதை) அறிந்த நிலையில்
ஒருவன் உண்பது, முப்பத்தி ஆறு முறை விபச்சாரம் புரிவதை
விட கடுமையான குற்றமாகும்" என நபி {ஸல்} அவர்கள்
கூறினார்கள். ( நூல்: அஹ்மது )
عن عبد الله بن مسعود أن رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكله وشاهديه وكاتبه رواه إ بن ماجه
"வட்டியை உண்பவன், அதனை உண்ணக் கொடுப்பவன், அதற்கு சாட்சியம் அளிக்கும் இருவர், கணக்கு எழுதுபவன் ஆகிய அனைவரையும் நபி {ஸல்} அவர்கள்
சபித்தார்கள்".
( நூல்: இப்னு மாஜா )
அடுத்து,
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்
அல்லாஹ்வின் அழகிய வழிகாட்டல்களோடு வறுமையில் உழல்பவர்களுக்கும், ஏழ்மையில் சிக்குண்டவர்களுக்கும் கடன் கொடுத்து உதவுமாறு பணித்தார்கள்.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும்
கொடுக்கிற கடன் ஸதக்கா – தர்மம் ஆகும்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
தமக்கு எந்த சூழ்நிலை ஏற்பட்டாலும், யாரிடமும் கையேந்தக் கூடாது என்று கூறிய
அண்ணலார் அதைத் தாங்கள் கடை பிடித்ததோடு மாத்திரமல்லாமல், ஒரு
யூதனிடம் தங்களின் பொருட்களை அடைமானமாக வைத்து கடனுக்குப் பணம் பெற்றார்கள்.
حَدَّثَنَا مُسَدَّدٌ
حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ حَدَّثَنَا الأَعْمَشُ قَالَ تَذَاكَرْنَا عِنْدَ
إِبْرَاهِيمَ الرَّهْنَ ، وَالْقَبِيلَ فِى السَّلَفِ ، فَقَالَ إِبْرَاهِيمُ
حَدَّثَنَا الأَسْوَدُ عَنْ عَائِشَةَ - رضى الله عنها - أَنَّ النَّبِىَّ - صلى
الله عليه وسلم - اشْتَرَى مِنْ يَهُودِىٍّ طَعَامًا إِلَى أَجَلٍ وَرَهَنَهُ
دِرْعَهُ .
நபி {ஸல்} அவர்கள் யூதர் ஒருவரிடமிருந்து ஒரு
குறிப்பிட்ட தவணைக்கு உணவுப் பொருளை வாங்கினார்கள்.
அதற்காக தமது
கவசத்தை அடைமானம் வைத்தார்கள்” என ஆயிஷா
(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்: புகாரி
)
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ
إِبْرَاهِيمَ حَدَّثَنَا هِشَامٌ حَدَّثَنَا قَتَادَةُ عَنْ أَنَسٍ - رضى الله عنه
- قَالَ وَلَقَدْ رَهَنَ النَّبِىُّ - صلى الله عليه وسلم - دِرْعَهُ بِشَعِيرٍ ،
وَمَشَيْتُ إِلَى النَّبِىِّ - صلى الله عليه وسلم - بِخُبْزِ شَعِيرٍ وَإِهَالَةٍ
سَنِخَةٍ ، وَلَقَدْ سَمِعْتُهُ يَقُولُ « مَا أَصْبَحَ لآلِ مُحَمَّدٍ - صلى الله
عليه وسلم - إِلاَّ صَاعٌ ، وَلاَ أَمْسَى » . وَإِنَّهُمْ لَتِسْعَةُ أَبْيَاتٍ .
நபி {ஸல்} அவர்கள் தமது போற்கவசத்தை
வாற்கோதுமைக்குப் பகரமாக அடகு வைத்திருந்தார்கள்.
நான் நபி {ஸல்} அவர்களிடம் வாற்கோதுமை ரொட்டியையும், வாசனை நீங்கிய உருகிய கொழுப்பையும் கொண்டு சென்றேன்.
அதைப் பார்த்த அண்ணலார் {ஸல்} முஹம்மதின் குடும்பத்தாரிடம் அவர்கள்
ஒன்பது வீட்டினராக இருந்தும் கூட ஒரேயொரு ஸாவு ( தானியம் அல்லது பேரீச்சம்பழம் ) தவிர காலையிலோ மாலையிலோ வேறெந்த உணவும் இருந்ததில்லை என்று கூறினார்கள்” என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
( நூல்: புகாரி )
அத்தோடு, கடனை வாங்கி விட்டு திருப்பி செலுத்த
முடியாமல் சிரமப் படுகின்ற ஏழை எளியோரிடம் மென்மையாக நடக்கும் படியும், தவணை கொடுக்கும் படியும், இயன்றால் வாங்கிய கடனை கொடுக்க முடியாமல்
சிரமப்படும் எளியோரின் கடனை தள்ளுபடி செய்து விடும் படியும் வல்லோனின் கட்டளையைக்
கொண்டும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நபி {ஸல்} அவர்கள் ஆணையிட்டார்கள்.
وفي رواية أخرى: قال: إن رجلا لم يعمل خيرا قط وكان يداين الناس فيقول
لرسوله: خذ ما تيسر واترك ما عسر وتجاوز لعل الله يتجاوز عنا، فلما هلك قال الله
له: هل عملت خيرا قط؟ قال: لا، إلا أنه كان لي غلام وكنت أداين الناس فإذا بعثته
يتقاضى قلت له: خذ ما تيسر واترك ما عسر، وتجاوز لعل الله يتجاوز عنا، قال الله
تعالى: قد تجاوزت عنك
وفي رواية أخرى: قال الله تعالى: نحن أحق بذلك منه تجاوزوا عنه.
ஒரு சமயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைப் பற்றி சொல்லிக்
கொண்டிருந்தார்கள் . அவர் வரம்பு மீறி செலவு செய்பவராக இருந்தார். எந்த ஒரு
நன்மையான காரியமும் செய்யாமல் இருந்த அவர் மரணம் அடைந்து விட்டார் .
அவரிடம் கேள்வி கணக்கு கேட்கப்பட்டது ."ஓ மனிதனே! ஒரு நல்ல காரியமுமா
செய்ய வில்லை ?" அதற்கு அவர் "ஆம் , இருந்த போதிலும் நான் எல்லா மக்களுக்கும் கடன் கொடுப்பேன் . அது மட்டுமல்லாமல்
, என்னுடைய மக்களுக்கும் சொல்வேன் .கடன்
கொடுத்தவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளுங்கள். கொடுக்க முடியாமல்
கஷ்டப்படுபவர்களை , எதிர் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள், அல்லது அந்த கடனை வேண்டாம் என்று விட்டு விடுங்கள் " என்று கூறுவேன் .
இப்பதிலைக் கேட்ட அல்லாஹ் "அவ்வாறு செய்வதற்கு உன்னை விட நானே அதிகம்
தகுதி பெற்றவன்" என்று கூறிவிட்டு அம்மனிதரை மன்னித்து விடுவான் .
மேலும்,
"ஒரு மனிதர் கால நிர்ணயம் செய்து தீனார்
ஒன்றை கடனாக கொடுத்து விட்டால் அந்த காலம் முடியும் வரை ஒவ்வொரு நாளும் தர்மம்
செய்த நன்மை உண்டு. காலம் கடந்தும் கடனாளி அதை செலுத்தவில்லை. அவரும் அவரை
அவசரப்படுத்தாமல் எதிர்பார்த்து இருக்கும் ஒவ்வொரு நாளும் அக்கடன் அனைத்தையும் தர்மம்
செய்த நன்மையைப் பெற்றுவிடுகிறார்”. என நபி {ஸல்}
அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )
ஒரு கட்டத்தில்,
கடன் வாங்கி கொடுக்காமல் இறந்து விட்டால் அவரின் சுவன ஆசை தடை பட்டு விடும் என எச்சரித்தார்கள்.
முஹம்மத் இப்னு ஜஹஷ் (ரலி) அறிவிக்கிறார்கள்:
“ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள்
அமர்ந்திருக்கையில், அன்னார் வானத்தை நோக்கி தலையை உயர்த்திக்
கொண்டிருந்து, பின் தங்கள் உள்ளங் கையை நெற்றியில்
வைத்துக் கொண்டு, ‘ஸுப்ஹானல்லாஹ்! எவ்வளவு கடுமையான சட்டம்
எனக்கு அறிவிக்கப் பட்டுள்ளது!.” என்று கூறினார்கள்.
நாங்கள் பயத்தின் காரணமாக வாய் மூடி அமர்ந்திருந்தோம். அடுத்த நாள் காலையில் ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! நேற்று உங்களுக்கு அறிவிக்கப் பட்ட கடுமையான சட்டம் என்ன?” என்று வினவினேன்.
அதற்கு நபியவர்கள், ”யாருடைய கையில் எனது உயிர் இருக்கிறதோ
அவன் மீது ஆணையாக! ஒரு மனிதன் யுத்தத்தில் அல்லாஹ்வுக்காக
கொல்லப் பட்டு, உயிர்கொடுத்து எழுப்பப் பட்டு, மீண்டும் அல்லாஹ்வுக்காக கொல்லப் பட்டு, மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப் பட்டு, மீண்டும் அல்லாஹ்வுக்காக கொல்லப் பட்டாலும், அவனுக்கு கடன் இருப்பின், அந்தக் கடனை தீர்க்கும் வரை அவன்
சுவர்க்கம் புக மாட்டான்.’ என்று கூறினார்கள்.”
( நூல்: நஸாயி )
அடுத்து, முஸ்லிம் சமூகத்தில் பெரும்பான்மையினர்
பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கண்ட போது சக முஸ்லிகளுக்கும், உறவினர்களுக்கும் தான, தர்மம் செய்யுமாறு நபி {ஸல்} அவர்கள் தூண்டினார்கள்.
அந்த தான தர்மத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வது என்ற அடை மொழியைக்
கொண்டு சிறப்புப் படுத்தி தான தர்மம் செய்பவருக்கு பல்வேறு சிறப்புக்களையும், நன்மைகளையும் கூறி கௌரவப் படுத்தினார்கள்.
அத்தோடு, நீங்கள் எதை அதிகம் உங்களுக்காக
விரும்புகின்றீர்களோ, அதையே அல்லாஹ்வுக்காக பிறருக்கும், உறவினருக்கும் கொடுத்து உதவுங்கள் என்று அல்லாஹ்வின் துணை கொண்டு
ஆணையிட்டார்கள்.
لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ وَمَا
تُنْفِقُوا مِنْ شَيْءٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ
அல்லாஹ் கூறுகின்றான்: “உங்களுக்கு விருப்பமானவற்றை இறைவழியில்
அர்ப்பணிக்காத வரை நீங்கள் நன்மையினை அடைந்திட முடியாது. மேலும், எதனை நீங்கள் அர்ப்பணித்தாலும் திண்ணமாக, அல்லாஹ் அதனை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.”
இந்த இறை வசனம் இறங்கிய பின்னர் ஒவ்வொரு நபித்தோழர்களும் முன்பை விட தர்மம்
செய்வதிலும் அறம் செய்வதிலும், தங்களை ஈடுபடுத்தினார்கள்.
وقال الإمام أحمد: حدثنا روح، حدثنا مالك، عن إسحاق
بن عبد الله بن أبي طلحة، سمع أنس بن مالك يقول: كان أبو طلحة أكثر أنصاري بالمدينة مالا وكانَ أحبَّ أمواله إليه
بيْرَحاءُ -وكانت مُسْتقْبلة المسجد، وكان النبي صلى الله عليه وسلم يدخلها ويشرب
من ماء فيها طيّب-قال أنس: فلما نزلت: { لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى
تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ } قال أبو طلحة: يا رسول الله، إن الله يقول: { لَنْ
تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ } وإن أحبَّ أموالي
إلَيَّ بيْرَحاءُ وإنها صدقة لله أرجو بِرَّها وذُخْرَها عند الله تعالى، فَضَعْها
يا رسول الله حيث أراك الله [تعالى] فقال النبي صلى الله عليه وسلم: "بَخٍ،
ذَاكَ مَالٌ رَابِحٌ، ذَاكَ مَالٌ رَابِح، وَقَدْ سَمِعْتُ، وَأَنَا أرَى أنْ
تجْعَلَهَا فِي الأقْرَبِينَ". فقال أبو طلحة: أفْعَلُ يا رسول الله.
فَقَسَمها أبو طلحة في أقاربه وبني عمه. أخرجاه
முதன் முதலாக இதைத் துவக்கிவைத்தவர்கள் அபூ தல்ஹா அன்ஸாரி (ரலி) அவர்கள்.
தங்களுக்கு
மிகவும் விருப்பமான பைருஹா தோட்டத்தை அறமாக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் தந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அபூ தல்ஹா அளித்த தோட்டத்தை
வறுமையில் வாடிய அபூ தல்ஹா (ரலி) அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கும், சொந்த பந்தங்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்கள்.
(நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர்)
وكذلك فعل زيد ابن حارثة، عمد مما يحب إلى فرس يقال له (سبل) وقال:
اللهم إنك تعلم أنه ليس لي مال أحب إلي من فرسي هذه، فجاء بها إلى النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فقال:
هذا في سبيل الله. فقال لأسامة بن زيد (اقبضه). فكأن زيدا وجد من ذلك في نفسه.
فقال رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إن الله قد قبلها منك). ذكره
أسد بن موسى. وأعتق ابن عمر نافعا مولاه، وكان أعطاه فيه عبد الله بن جعفر ألف
دينار. قالت صفية بنت أبي عبيد: أظنه تأول قول الله عز وجل:" لَنْ تَنالُوا
الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ".
அடுத்து ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்கள்
”தங்களது
வீட்டில் இருந்து அழுது புலம்பியவர்களாக யாஅல்லாஹ்!
என்னிடத்திலே
சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பணம் ஒன்றும் இல்லை.
என்னிடம் நான்
மிகவும் நேசிக்கின்ற ஒன்றாக இதோ இந்த குதிரை மட்டும் தான் இருக்கின்றது. இதோ அதையும் உனக்காக அர்ப்பணித்து விடுகின்றேன்”
என்று
சொல்லியவராக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வந்து குதிரையை கொடுத்து
விட்டுச் சென்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஜைத் (ரலி) அவர்களிடம் இருந்து பெற்ற குதிரையை
அவர்களின் மகனார் உஸாமா (ரலி) அவர்களுக்கே கொடுத்து விட்டார்கள். பின்பு, ஜைதே! அல்லாஹ் உம்மிடம் இருந்து இதை பூரணமாக
ஏற்றுக் கொண்டான்” என்று கூறினார்கள்.
அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் (ரலி) அவர்கள்
1000 தீனாரை எடுத்துக்
கொண்டு வந்து நபி {ஸல்} அவர்களிடம் கொடுத்தார்கள்.
இதை, மதீனாவின் ஏழைகளுக்கு மாநபி {ஸல்} பங்கிட்டுக் கொடுத்தார்கள்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் தங்களின் அடிமையான நாஃபிஉ (ரலி) அவர்களை விடுதலை செய்தார்கள்.
(நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ)
عن ابن عمر رضي الله عنهما أن عمر تصدق بمال له على عهد رسول الله ?
وكان يقال له: ثمغ، وكان به نخل، فقال عمر: يا رسول الله إني استفدت مالاً، وهو
عندي نفيس، فأردت أن أتصدق به، فقال النبي ?: تصدق بأصله، لا يباع ولا يوهب، ولا
يورث، ولكن ينفق ثمر. فتصدق به عمر، فصدقته تلك في سبيل الله، وفي الرقاب،
والمساكين، والضيف وابن السبيل، ولذوي القربى، ولا جناح على من وليه أن يأكل
بالمعروف، أو يؤكل صديقه غير متمولٍ به، وفي رواية: أصاب عمر بخيبر أرضاً، فأتى
النبي ? فقال: أصبت أرضاً لم أصب مالاً قط. أنفس منه، كيف تأمرني به؟ قال:إن شئت
حبست أصلها وتصدقت بها، فتصدق عمر: أنه لا يباع أصلها، ولا يوهب، ولا يورث، في
الفقراء وذوي القربى، والرقاب، وفي سبيل الله، والضيف، وابن السبيل، لا جناح على
من وليها أن يأكل منها بالمعروف، أويطعم صديقاً غير متموِّل فيه، فهذا الموقف
العمري فيه فضيلة ظاهرة للفاروق رضي الله عنه ورغبته في المسارعة للخيرات، وإيثاره
الحياة الآخرة على الحياة الفانية.
உமர் (ரலி) அவர்கள் நபிகளாரின் சமூகத்திற்கு வருகை
தந்தார்கள். ”அல்லாஹ்வின் தூதரே! எனக்கு கைபரில் கிடைத்த ஒரு பங்கு நிலமான “ஸமஃக்”
உள்ளது.
அதை விடவும் சிறந்த மதிப்புமிக்க வேறொரு பொருள் என்னிடம் இல்லை; நான் அதனை அல்லாஹ்விற்காக அர்ப்பணிக்க விரும்புகின்றேன். அதற்காக நான் என்ன செய்ய வேண்டும்? அன்பு கூர்ந்து எனக்கு ஆலோசனை நல்குங்கள்” என்று பணிவுடன் வேண்டி நின்றார்கள்
அதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்
“உமரே! நீர் விரும்பினால் அதன் அசலை வக்ஃப் செய்து விடுங்கள்! அதில் இருந்து கிடைக்கும் லாபத்தை தர்மம் செய்து விடுங்கள்.” என்று கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நல்கிய ஆலோசனையின் படி தங்களின்
நிலத்தை அர்ப்பணிப்புச் செய்தார்கள்.
அதாவது, அந்த நிலம் விற்கவோ, அன்பளிப்புச் செய்யவோ பட மாட்டாது. அதற்கு யாரும் வாரிசு ஆகவும் முடியாது. அதன் முழு வருமானமும் ஏழை, எளியோர்,
வறியோர், வறுமையில் வாடும் உமர் (ரலி) அவர்களின் உறவினர்கள், விருந்தாளிகள், பிரயாணிகள் ஆகியோருக்கு செலவழிக்கப்படும்.
மேலும், அடிமையை விடுதலை செய்யவும், சன்மார்க்கப் போருக்காக செலவழிக்கவும் அதில் இருந்து பயன் படுத்தலாம். மேலும், இந்தச் சொத்தைக் கண்காணித்துப்
பாதுகாப்பவர் என்கிற முறையில் அவரும் நியாயமான முறையில் சிறிது எடுத்துக்
கொள்ளலாம். அல்லது அவரின் நண்பர்களுக்கும்
அதிலிருந்து தர்மமாக வழங்கிக் கொள்ளலாம். ஆனால்,ஒரு போதும் அதிலிருந்து சொத்தாக எதையும்
சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று கூறி உமர் (ரலி) வக்ஃப் செய்தார்கள்.
( நூல்: ஃப்ஸ்லுல் கிதாப் ஃபீ ஸீரதி இப்னுல்
கத்தாப் லில் இமாமிஸ் ஸுல்லாபி )
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “உமர் (ரலி) அவர்களைத் தொடர்ந்து உஸ்மான் (ரலி) அவர்களும்,
அலீ (ரலி) அவர்களும்,
ஜுபைர் இப்னு
அவ்வாம் (ரலி) அவர்களும் தாங்கள் அதிகம் விரும்பிய, நேசித்த பெரும் நிலங்களை ஏழைகளின் துயர் துடைத்திட அர்ப்பணித்தார்கள்.
எந்த அளவுக்கென்றால், ஓரளவு வசதியுள்ள எந்தவொரு நபித்தோழரும்
அர்ப்பணிப்புச் செய்யாமல் இல்லை என்று சொல்லும் அளவிற்கு தங்கள் சொத்துக்களை
அல்லாஹ்வின் பாதையில் அள்ளித் தந்து சமுதாய முன்னேற்றத்தில் மிகப் பெரும்
பங்காற்றினார்கள்” என்பதை நான் அதிகம் அறிவேன்.
( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் )
அத்தோடு அல்லாஹ்வின் வழிகாட்டலோடு ஜகாத் என்கிற இஸ்லாத்தின் உயரிய கடமையையும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} நடைமுறைப் படுத்தினார்கள்.
ஜகாத் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும், கொடுப்பதால் ஏற்படுகிற நன்மைகளையும், கொடுக்காமல் இருப்பதால் ஈருலகிலும்
ஏற்படுகிற தீமைகளையும் விளக்கிக் கூறி இந்த உம்மத்தில் இருந்து
வறுமை முற்றிலுமாய் விரட்டிட மாநபி {ஸல்} அவர்கள் முயற்சி மேற்கொண்டார்கள்.
வரலாற்றில் இப்படி ஒரு மாற்றம் நடை பெற்றது. அது வரை பல்வேறு தேவைகளையும், உதவிகளையும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் முறையிட்ட ஏழை முஸ்லிம்கள் வணக்க வழிபாடுகளில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆவலில்
தாங்கள் ஆர்வமாக இருப்பதாகக் கூறினார்கள்.
وعن أبي هريرة رضي الله عنه أن فقراء المهاجرين أتوا رسول الله صلى
الله عليه وسلم فقالوا ذهب أهل الدثور بالدرجات العلى والنعيم المقيم يصلون كما
نصلي ويصومون كما نصوم ولهم فضل من أموال يحجون ويعتمرون ويجاهدون ويتصدقون فقال
ألا أعلمكم شيئا تدركون به من سبقكم وتسبقون به من بعدكم ولا يكون أحد أفضل منكم
إلا من صنع مثل ما صنعتم & قالوا بلى يا
رسول الله قال تسبحون وتحمدون وتكبرون خلف كل صلاة ثلاثا وثلاثين قال أبو صالح
الراوي عن أبي هريرة لم سئل عن كيفية ذكرهن قال يقول سبحان الله والحمد لله والله
أكبر حتى يكون منهن كلهن ثلاثا وثلاثين متفق عليه .
ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஒரு முறை ஏழை முஹாஜிர்கள் நபி {ஸல்} அவர்களின்
சமுகத்திற்கு வந்து, “சீமான்கள் உயர்ந்த அந்தஸ்துகளையும்
நிரந்தரமான பாக்கியங்களையும் தட்டிச் சென்றுவிட்டனர்” என்று கூறினார்கள்.
”அது எவ்வாறு?” என்று ரஸூலுல்லாஹி {ஸல்}
அவர்கள் கேட்க, “நாங்கள் தொழுவதைப் போல் அவர்களும்
தொழுகிறார்கள், நாங்கள் நோன்பு நோற்பது போல் அவர்களும்
நோன்பு நோற்கிறார்கள், (ஆனால்) அவர்கள் தர்மம் செய்கிறார்கள், எங்களால் தர்மம் செய்ய முடிவதில்லை, அவர்கள் அடிமைகளை உரிமை விடுகிறார்கள், அது எங்களால் இயலவில்லை” என்று ஸஹாபாக்கள் கூறினர்.
“உங்களைவிட அமலால் முந்தியவரை நீங்கள்
அடைந்து கொள்ளும்படியும் உங்களைவிடப் பிந்தியவரை முந்திச் செல்லும்படியுமான, மேலும் உங்களைப் போன்று அமல் செய்யாத வரை உங்களைவிடச் சிறந்தவர்களாக யாரும் ஆகமுடியாத
ஒரு அமலை உங்களுக்குச் சொல்லித் தரட்டுமா? என்று நபி {ஸல்} அவர்கள் வினவ, “யாரஸூலல்லாஹ்! அவசியம் அறிவித்துத்
தாருங்கள்” என ஸஹாபாக்கள் வேண்டினர்.
ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் “சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர், ஒவ்வொன்றையும் 33 முறை ஓதிவாருங்கள்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். (அதன்படியே அவர்கள் அமல் செய்ய ஆரம்பித்தார்கள்.
ஆனால், நபி {ஸல்} அவர்கள் சொல்லித்
தந்ததை வசதிபடைத்த ஸஹாபாக்கள் அறிந்ததும்,
அவர்களும் அமல்
செய்ய ஆரம்பித்தார்கள்) மீண்டும் ஏழை முஹாஜிர்கள் வந்து, “எங்களில் வசதிபடைத்த சகோதரர்களும் இதைக் கேள்விப்பட்டு அவர்களும் இவ்வாறே அமல்
செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்!’ என்று கூறினர்.
இது அல்லாஹ்வின் அருள், அவன் நாடியவருக்கு வழங்குகிறான்” என்று நபி {ஸல்} அவர்கள் சொன்னார்கள். ( முஸ்லிம் )
அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்கள் படிப்படியாக நடைமுறைப் படுத்திய வறுமை ஒழிப்புத் திட்டங்கள்
குறிப்பிட்ட சில ஆண்டுகளில் நபித் தோழர்களின் மன ஓட்டத்தையும், வாழ்க்கையையும் முற்றிலுமாக மாற்றியமைத்ததைத் தான் மேற்கூறிய செய்தி
நமக்கு உணர்த்துகின்றது.
அடுத்த சில ஆண்டுகளில் வறுமை ஒழிப்பு என்பது மக்கா, மதீனாவைத் தாண்டி யமனில்
முழுமையாக ஏற்பட்டது.
முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை நபி {ஸல்} அவர்கள், யமனுக்கு ஆளுநராக நியமித்தார்கள்.
நபி {ஸல்} அவர்களின் கட்டளைப்படி முஆத் (ரலி) அவர்கள், செல்வந்தர்களிடமிருந்து
முறையாக வசூலித்து, அத்தொகையை அங்கு வாழ்ந்த ஏழைகளுக்கும்,
வறியவர்களுக்கும் முறையாக பகிர்ந்தளித்தார்கள்.
இதன் காரணமாக,
ஒவ்வோர் ஆண்டும் கணிசமாக ஏழைகளின் எண்ணிக்கை குறைந்து ஜகாத் கொடுக்கும்
செல்வந்தர்களின் எண்ணிக்கை கூடியது.
உமர் (ரலி) ஆட்சியின் போது, முஆத் (ரலி) அவர்கள் யமனில் இருந்து மூன்றில் ஒரு பங்கை
மதீனாவிற்கு அனுப்பி வைத்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள், காரணம் கேட்டதற்கு முஆத் (ரலி) அவர்கள் ஏழைகள் கிடைக்க வில்லை என்று பதில்
கூறினார்கள்.
அடுத்த ஆண்டு யமனில் இருந்து ஜகாத்தாக வசூலித்ததில் பாதி தொகையையும், அதற்கு அடுத்த ஆண்டு
முழுத்தொகையையும் அனுப்பி வைத்தார்கள் முஆத் (ரலி) அவர்கள்.
உமர் (ரலி) அவர்கள் காரணம் கேட்டதற்கு, யமன் தேசத்தில் ஒரு ஏழை கூட இல்லை” என்று பதில் கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள் அந்த பொருளாதாரத்தைக் கொண்டு இஸ்லாம் இயம்பும் இன்ன பிற
வழிகளில் அதைச் செலவிட்டார்கள். ( நூல்: அல்
அம்வால் )
அடுத்த நூறாவது ஆண்டில் முழு உலகில் இருந்தும் வறுமையை இல்லாமல் ஆக்கியது
அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்கள் உருவாக்கித்தந்த வறுமை ஒழிப்புத் திட்டங்கள்.
ஆம்! உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் காலத்தில் உலகின் எந்த ஒரு
பாகத்திலும் ஜகாத் பணத்தைப் பெறுகிற அளவிலான எந்த ஓர் ஏழையில் இருந்திருக்க
வில்லை.
فروى
أبو عبيد بإسناده عن سهيل بن أبي صالح، عن رجل من الأنصار، قال
كتب عمر بن عبد العزيز
إلى عبد الحميد بن عبد الرحمن وهو بالعراق: أن أخرج للناس أعطياتهم، فكتب إليه عبد
الحميد: إني قد أخرجت للناس أعطياتهم وقد بقي في بيت المال مال، فكتب إليه: أن
انظر كل من أدان في غير سفه ولا سرف فاقض عنه، قال: قد قضيت عنهم وبقي في بيت المال
مال، فكتب إليه: أن زوج كل شاب يريد الزواج، فكتب إليه: إني قد زوجت كل من وجدت
وقد بقي في بيت مال المسلمين مال، فكتب إليه بعد مخرج هذا: أن انظر من كانت عليه
جزية فضعف عن أرضه، فأسلفه ما يقوى به على عمل أرضه، فإنا لا نريدهم لعام ولا
لعامين.
ورواه ابن زنجويه في الأموال أيضا من طريق أبي عبيد
ورواه ابن زنجويه في الأموال أيضا من طريق أبي عبيد
ஜனாதிபதி உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் ஈராக்கின் ஆளுநர் அப்துல்
ஹமீத் இப்னு அப்துர்ரஹ்மான் அவர்களுக்குப் பின் வருமாறு கடிதம் எழுதினார்கள்.
“மக்களுக்குக்
கொடுக்க வேண்டிய மாதாந்திர உதவித் தொகையை அரசுக் கருவூலத்திலிருந்து கொடுத்து
விடுங்கள்” என்று.
அதற்கு, அப்துர்ரஹ்மான், “நான் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து
விட்டேன். ஆயினும், அரசுக் கருவூலத்தில் ஏராளமான நிதி
மீதமிருக்கிறது” என்று பதில் எழுதினார்கள்.
அதற்கு, உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் “யாராவது
கடனாளியாக கஷ்டப்பட்ட்டால் அவருக்கு அத்தொகையை அரசுக் கருவூலத்திலிருந்து கொடுத்து
விடுங்கள்” என்று இன்னொரு கடிதத்தில் பதில் எழுதினார்கள்.
அதற்கு, அப்துர்ரஹ்மான் அவர்கள் “அப்படிச் செலுத்திய
பின்னரும் அரசுக் கருவூலத்தில் இருப்புத் தொகை மீதமிருக்கிறது” என்று பதில் எழுதினார்கள்.
மீண்டும், உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் “திருமண
மஹர்த் தொகையை கொடுப்பதற்கு சிரமப்படுகிற ஏழை இளைஞர்கள் எவரேனும் இருந்தால்
அவர்களுக்கு கொடுத்து திருமணம் செய்ய உதவுங்கள்” என்று
இன்னொரு கடிதம் எழுதினார்கள்.
அதற்கு, அப்துர்ரஹ்மான் அவர்கள் “அப்படிச் செலுத்திய
பின்னரும் அரசுக் கருவூலத்தில் இருப்புத் தொகை மீதமிருக்கிறது” என்று பதில் எழுதினார்கள்.
இறுதியாக, உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் “ஜிஸ்யா வரி
செலுத்தக் கடமைப் பட்ட சகோதர சமய மதத்தவர்களில் எவராவது விவசாயத் தொழில் செய்ய
முற்பட்டால் அவர்களுக்குத் தேவையான தொகையைக் கருவூல நிதியிலிருந்து வழங்குங்கள்”
என்று பரிந்துரைத்தார்கள். ( நூல்: அல் அம்வால் )
அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்கள் வகுத்துத் தந்த வறுமை ஒழிப்புத் திட்டங்கள் முறையாக
செயல்படுத்தப் பட்டால் நிச்சயமாக ஏழை, எளியோர் இல்லாத ஓர்
சமூகத்தை உருவாக்க முடியும் என்பதை மேற்கூறிய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
ஆகவே, ஜகாத் எனும் கடமையோடு மட்டும் நின்று விடாமல் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அக்கறையோடு கூறிய அத்துனை வழி நின்றும்
முஸ்லிம் உம்மத்தின் வறுமை நீங்கி, உயர்வு பெற்றிட உறுதுணையாய்
நின்று வறுமையை ஒழிப்போம்! வளமான சமூகம் அமைப்போம்!!
அல்லாஹ் துணை நிற்பானாக!
ஆமீன்!!
யா அல்லாஹ்! எங்களை வறுமையில் இருந்தும், ஏழ்மையில் இருந்தும், உன் அல்லாத பிறர் எவரிடமும் தேவையாகுவதில் இருந்தும் எங்களைக் காத்தருள்
ரஹ்மானே!
ஆமீன்! ஆமீன்!! யாரப்பல்
ஆலமீன்!!! வஸ்ஸலாம்!!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி ஹஜ்ரத்
ReplyDeleteதங்கள் சமுதாய பணிகளை படைத்த ரப்புல் ஆலமீன் அங்கீகரித்துக் கொள்வானாக.
ஆமீன்
அல்ஹம்துலில்லாஹ் அருமை அற்புதமாக தொகுத்து இருக்கின்றீா்கள்
ReplyDeleteபொதுவாக தொகுத்து அமைப்பதில்
உங்கள் ஸ்டெய்ல் சூப்பா்