ஓ மனித சமூகமே!
இறை நினைவை விட்டும் உங்களை தூரமாக்கியது எது?
எல்லாம் வல்ல
இறையோனின் கருணையையும், மன்னிப்பையும்,
நரக விடுதலையையும், சுவன
வாக்குறுதியையும், நன்மைக் குவியலையும்
பெற்றுத் தந்த ரமலான்
இதோ நம்மை விட்டும்
விடை பெற்றுச் சென்று
விட்டது.
இனியொரு ரமலானைச்
சந்திக்க வேண்டுமானால் இன்னும்
ஒரு வருடம் காத்திருக்க
வேண்டும்.
அல்லாஹ் அது
வரை நமக்கு ஆயுளை
நீட்டித்து தர வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்
ரப்புல் ஆலமீன் நம்
அனைவருக்கும் வாழும் காலமெல்லாம்
ரமலானை நஸீபாக்குவானாக! ரமலானில்
உடல் ஆரோக்கியத்தையும், மன
நிறைவையும் தந்தருள்வானாக! எல்லாவற்றிற்கும் மேலாக எல்லா
வகையான வணக்க, வழிபாடுகளையும்,
நல்லறங்களையும் செய்வதற்கு தௌஃபீக்
செய்வானாக!
புனிதமான லைலத்துல்
கத்ர் இரவை அடைந்திடும்
நல்ல பாக்கியத்தை வாழும்
காலமெல்லாம் நம் அனைவருக்கும்
நஸீபாக்கி அருள்வானாக!
ரமலான் மாதத்தில்
நோன்பு நோற்கவும், வணக்க
வழிபாடுகளில் ஈடுபடவும், தான
தர்மங்கள் கொடுப்பதிலும், உறவுகளை
அரவணைப்பதிலும், ஏழை எளியோரை
ஆதரிப்பதிலும் அதிக கவனமும்,
ஆர்வமும் கொண்டிருந்தோம்.
அல்ஹம்துலில்லாஹ்… அந்தக்
கவனமும், ஆர்வமும் வாழும்
காலமெல்லாம் தொடர வேண்டும்
என்று அல்லாஹ்விடம் துஆச்
செய்வோம். அதே நேரத்தில்,
ஆர்வமும் கவனமும் கொள்வோம்.
திருக்குர்ஆனின் மூன்று
இறை வசனங்கள் உங்களையும்,
என்னையும் நேருக்கு நேராக
அழைத்து இவ்வாறு கேட்கிறது.
يَاأَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ (6)
الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ (7) فِي أَيِّ صُورَةٍ مَا شَاءَ
رَكَّبَكَ (8)
“ ஓ! மனிதனே!
கருணையாளனாகிய உன் இறைவனைக்
குறித்து உன்னை ஏமாற்றத்தில்
வீழ்த்தியது எது?
அவனே உன்னைப்
படைத்தான்; உன்னைக் குறைகள்
எதுவுமின்றிச் செம்மை படுத்தினான்;
உனக்குப் பொருத்தமான உடல்
உறுப்புக்களை அளித்தான்; மேலும்,
தான் நாடிய வடிவில்
உன்னை ஒருங்கிணைத்து மனிதனாக
படைத்தான்”.
( அல்குர்ஆன்:
82: 6 – 8 )
ரமலானோடு வணக்க
வழிபாடுகளை, நல்லறங்களை, தான
தர்மங்களை மூட்டை கட்டி
வைப்பவர்களை நோக்கி வாழும்
இந்த உலகில் மாத்திரமல்ல,
நாளை மறுமையிலும் இந்தக்
கேள்விகள் கேட்கப்படும்.
என்ன பதில்
வைத்திருக்கின்றோம் நாம்?
ரமலான் மாதத்தில் நோற்ற நோன்பும், வணக்க
வழிபாடுகளும், தான தர்மங்களும்,
உறவுகளை அரவணைத்தலும், ஏழை
எளியோரை ஆதரித்தலும் ரமலானைத்
தொடர்ந்தும் தொடருமேயானால் அதனால் ஏற்படுகிற மறுமைப்
பேறுகளை வார்த்தையால் வர்ணித்திட இயலாது.
வணக்க வழிபாடுகளை காலமெல்லாம்
பேணிப் பாதுகாத்து வாழ்ந்த நல்லடியார்களை அழைத்து அல்லாஹ் கூறுவான் என மாநபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் இந்த உம்மத்திற்கு சொன்ன தகவல் மிகவும் கவனிக்கத் தக்கது.
يُنادي
ربكم: ((يا عبادي، إنَّما هي أعمالُكم أُحصيها لكم، ثم أوفِّيكم إيَّاها، فمَن وجد
خيرًا فليحمدِ الله، ومَن وجد غيرَ ذلك، فلا يلومنَّ إلاَّ نفسَه))؛ رواه مسلم.
மாநபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “உங்கள் இறைவன் உங்களை
அழைப்பான்! ஓ! என்னுடைய அடியார்களே!
இதோ உங்களின் அமல்கள், உங்களுக்காக நான் பாதுகாத்து
வந்தேன். இதோ அதற்காக உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நான் நிறைவேற்றப்
போகின்றேன்” என்று அல்லாஹ் கூறுவதாக கூறிவிட்டு, யார் நன்மைகளை பெற்றுக் கொள்கின்றாரோ அவர் அல்லாஹ்வைப் புகழ்வார். யார் நன்மைகள் அல்லாத மற்றவற்றைப் பெற்றுக் கொள்கின்றாரோ அவர் தன்னைத் தானே
பழித்துக் கொள்வார்”. ( நூல்: முஸ்லிம் )
இதையே அல்குர்ஆனின்
இரண்டு வசனங்கள் இப்படிக் கூறும்..
يَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَا عَمِلَتْ مِنْ خَيْرٍ مُحْضَرًا وَمَا
عَمِلَتْ مِنْ سُوءٍ
“ஒவ்வோர் ஆன்மாவும்
தான் செய்த நன்மைகளும், தான் செய்த தீமைகளும் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதைக்
காணும் நாள் வந்தே தீரும்!”. ( அல்குர்ஆன்: 3: 30
)
فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ (7) وَمَنْ يَعْمَلْ
مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ (8)
“எவர் அணுவளவு
நன்மை செய்தாரோ அவர் அதனைக் கண்டு கொள்வார். மேலும், எவர் அணுவளவு தீமை புரிந்தாரோ அவரும் அதனைக் கண்டு கொள்வார்”.
( அல்குர்ஆன்: 99: 7, 8 )
எனவே, நிரப்பமான நன்மைகளை நாம் காண வேண்டுமானால் நியமமாக, நிலையாக நாம் நல்அமல்கள் செய்திருக்க வேண்டும்.
ஆகவே, ரமலானில் அமல்கள் செய்வதன் மீது இருந்த அந்தக் கவனமும்,
ஆர்வமும் நாம் வாழும்
காலமெல்லாம் தொடர வேண்டும்.
இன்ஷா அல்லாஹ்.. அமல்களை
நாம் தொடர்ந்திடுவோம்! தொடர்ந்திட வேண்டும் என்று
அல்லாஹ்விடமும் துஆச் செய்வோம்!!
قال الحسنُ البصريُّ - رحمه الله -: "إنَّ الله
لمْ يجعلْ لعملِ المؤمنِ أَجلاً دونَ الموتِ، ثُمَ قرأ
﴿ وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ
الْيَقِينُ ﴾
இமாம் ஹஸன்
அல் பஸரீ ரஹிமஹுல்லாஹ்
கூறுவார்கள்: “அல்லாஹ் ஒரு
முஃமினுக்கு அமல் செய்வதை
நிறுத்துவதற்குண்டான எல்கையாக
மரணத்தை தான் ஆக்கியிருக்கின்றான்”
என்று கூறிவிட்டு அல்
ஹிஜ்ர் அத்தியாயத்தின் 99 –ஆவது
“உமக்கு மரணம் வரும்
வரை நீர் உம்
ரப்பை வணங்கி, வழிபட்டு
வாழ்வீராக” வசனத்தை ஓதிக்
காண்பிப்பார்கள்.
قيل لبِشْر الحافي: إنَّ قومًا يتعبَّدون ويجتهدون
في رمضان، فقال: بئس القومُ قومٌ لا يعرفون لله حقًّا إلاَّ في رمضان، إنَّ الصالح
الذي يتعبَّد ويجتهد السَّنةَ كُلَّها،.
பிஷ்ருல் ஹாஃபீ
ரஹிமஹுல்லாஹு அலைஹி அவர்களிடம்
“மக்களில் சிலர் ரமலானில் மட்டும்
கடுமையாக அமல்கள் செய்கின்றார்கள்” என்று கூறப்பட்டது.
அதற்கு, பிஷ்ருல் ஹாஃபீ
ரஹிமஹுல்லாஹு அலைஹி அவர்கள் “மக்களில்
மிகக் கெட்டவர்கள்
ரமலானில் மட்டும் அமல் செய்பவர்கள் தான். ஏனெனில்,
அவர்கள் படைத்த ரப்பை உண்மையான முறையில் அறிந்திருக்கவில்லை. உண்மையில், ஸாலிஹான
நல்லடியார் யாரெனில் ஆண்டு
முழுவதும் கடுமையாக வணக்க, வழிபாடுகளில் ஈடுபடுபவரே” என்று
கூறினார்கள்.
وسُئِل الشبليُّ - رحمه الله -: أيُّما أفضل؛ رجب،
أو شعبان؟ فقال: كن ربانيًّا، ولا تكن شعبانيًّا فرب
رمضان هو رب الشهور كلها
ஷிப்லீ ரஹிமஹுல்லாஹு
அலைஹி அவர்களிடம் ஒருவர்
ரஜப் சிறந்ததா? ஷஅபான்
சிறந்ததா? எனக் கேட்டார்.
அதற்கு, ஷிப்லீ
ரஹிமஹுல்லாஹு அலைஹி அவர்கள்
“நீர் ரப்பானீ – இறைவனுக்கு
மட்டுமே அடிமைகளாக இருந்து,
அவனுடைய நோக்கத்தை நிறை
வேற்றும் வண்ணம் வாழ்பவர்களாக
இருப்பீராக! ஷஅபானிய்யீ – ஷஅபான்
மாதத்தை மட்டும் சிறப்பு
படுத்தி அமல் செய்பவராய்
நீர் இருக்க வேண்டாம்”
என்றார்கள்.
سئلت السيدة عائشةرضي الله عنها – " هل كان رسول الله – صلى الله
عليه وسلم – يخص شيئا من الأيام ؟ فقالت: "لا بل كان عمله ديمة" أي كان
دائماً مستمراً على الطاعات.
أن
الدوام على العمل الصالح محبب إلى الله، حتى وإن قل هذا العمل، وقد جاء في الحديث
" أحب الإعمال
إلى الله أدومها وإن قل".
அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் “நபி
{ஸல்} அவர் நாட்கள் குறிப்பிட்டு ஏதாவது அமல் செய்யும் வழக்கம் உடையவர்களாக இருந்துள்ளார்களா?
என்று வினவப்பட்டது.
அதற்கு, அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள்
“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்படியெல்லாம் செய்பவர்களாக
இருக்கவில்லை,. மாறாக, எந்த ஒரு அமலைச் செய்தாலும் அதை வாழ்நாளில் தொடர்ந்து நிரந்தரமாகவே
செய்திருக்கின்றார்கள்” என்று பதிலளித்தார்கள்.
மேலும், மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறுவார்கள்: “அல்லாஹ்விற்கு அமல்களில் மிகவும் பிடித்தமானது தொடர்ச்சியாக செய்வது
தான், அது குறைவாக இருந்தாலும் சரியே!” என்று கூறுவார்கள்.
1.
தாய் தந்தையருடனான உறவையும்,
ஏழைகளுக்கு உதவுவதையும் ரமலானைத் தாண்டி எப்போதும் கடைபிடிக்க வேண்டு்ம்.
وذكر عبد الرزاق عن معمر عن الزهري عن عروة عن عائشة قالت قال رسول
الله صلى الله عليه وسلم: " نمت فرأيتني في الجنة فسمعت صوت قارئ فقلت من هذا
قالوا صوت حارثة بن النعمان " . فقال رسول الله صلى الله عليه وسلم: "
كذلك البر كذلك البر " . وكان أبر الناس بأمه.
ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் என்னிடம் “ஆயிஷாவே! எனக்கு உறக்கத்தில் சுவனம் காட்டப்பட்டது. அப்போது, சுவனத்தின் ஓர் பகுதியிலிருந்து ஒருவர்
அழகிய குரலில் குர்ஆனை ஓதுகிற சப்தத்தைக்
கேட்டேன்.
அப்போது, நான் “யார் இவர்?
இங்கே குர்ஆன்
ஓதுகின்றாரே? என்று ஆச்சர்யத்தோடு வினவினேன்.
அப்போது, என்னிடம் ”இந்த சப்தம் ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்களுடையது என்று கூறப்பட்டது” என்று கூறிய அண்ணலார் தொடர்ந்து, “ நன்மை செய்வோருக்கும் அவ்வாறே பாக்யம் கிடைக்கும்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்கள் தன் தாய்க்கு மிகவும் உபகாரம் செய்யக் கூடியவர்களாக
இருந்தார்கள்.
قال أبو عمر كان حارثة بن النعمان قد ذ هب بصره فاتخذ خيطاً من
مصلاه إلى باب حجرته ووضع عنده مكتلاً فيه تمر فكان إذا جاءه المسكين يسأل أخذ من
ذلك المكتل ثم بطرف الخيط حتى يناوله وكان أهله يقولون له نحن يكفيك فقال سمعت
رسول الله صلى الله عليه وسلم يقول: " مناولة المسكين تقي ميته السوء "
.
இப்னு அப்துல் பர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்களின் இறுதிகாலத்தில் கண்பார்வை இன்றி
வாழ்ந்தார்கள்.
தான் தொழுகிற இடத்திலிருந்து வீட்டின் வாசல் வரை கயிறு கட்டியிருப்பார்கள். அருகே ஒரு பாத்திரத்தில் பேரீத்தம் பழங்களை
வைத்திருப்பார்கள்.
வீட்டு வாசலில் எவராவது வந்து யாசகம் கேட்டால்,
கையில்
பேரீத்தம் பழங்களை எடுத்துக் கொண்டு வாசல் வரை வந்து அந்த யாசகரின் கையில்
கொடுத்து விட்டு மீண்டும் தாங்கள் அமரும்
இடத்திற்கு வந்து விடுவார்கள்.
ஒருவர் அல்ல இருவர் அல்ல. எத்தனை பேர் யாசகம் கேட்டு வந்தாலும், கயிற்றைப் பிடித்து வருவதும் போவதுமாக
இருப்பார்கள் ஹாரிஸா (ரலி) அவர்கள்.
ஹாரிஸா (ரலி) அவர்கள் படுகிற அவஸ்தைகளையும்,
சிரமங்களையும் பார்த்து விட்டு அவர்களின் குடும்பத்தினர் “ஓர் யாசகருக்கு இவ்வளவு சிரமப்பட்டு ஏன் இவ்வாறு தர்மம் செய்கின்றீர்கள்? எங்களிடம் தந்தால் நாங்கள் கொண்டு
கொடுப்போமே?” என்று கூறினார்கள்.
அதற்கு, ஹாரிஸா (ரலி) அவர்கள் “ஏழை எளியோரை தேடிச் சென்று,
அவர்களின்
கரங்களில் கொண்டு தர்மப் பொருட்களைக் கொடுப்பதென்பது துர்மரணத்தைத் தடுக்கும்” என நபி {ஸல்} அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன்.
ஆதலால், தான் இவ்வளவு சிரமத்திற்கு மத்தியிலும் நான் இவ்வாறு நடந்து கொள்கின்றேன்” என்றார்கள்.
( நூல்: அல் இஸ்தீஆப் ஃபீ மஃரிஃபத்தில்
அஸ்ஹாப் லி இப்னி அப்தில் பர் )
2.
நஃபிலான வணக்கங்கள் எல்லாக் காலமும் தொடர
வேண்டும்...
حدثنا إسحاق بن نصر حدثنا أبو أسامة عن
أبي حيان عن أبي زرعة عن
أبي هريرة رضي
الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لبلال عند صلاة الفجر يا بلال حدثني
بأرجى عمل عملته في الإسلام فإني سمعت دف نعليك بين يدي في الجنة قال ما عملت
عملا أرجى عندي أني لم أتطهر طهورا في ساعة ليل أو نهار إلا صليت بذلك الطهور ما
كتب لي أن أصلي قال أبو عبد الله دف نعليك يعني تحريك
|
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் ஃபஜ்ருடைய தொழுகைக்காக நாங்கள் காத்திருந்த போது, நபி {ஸல்}
அவர்கள் பிலால் (ரலி) அவர்களை அருகே அழைத்து, “பிலாலே! நான் சுவனத்திலே நுழைந்தேன், ஆனால், அங்கு எனக்கு முன்னாடியே
யாரோ ஒருவர் நடந்து போகிற காலடிச் சப்தத்தை கேட்டேன்.
அப்போது, என்
அருகே இருந்த ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் “இந்த காலடிச் சப்தத்திற்கு உரியவர் யார்?” என்று கேட்டேன். “பிலால் (ரலி) அவர்களுடைய காலடிச் சப்தம் தான்” என ஜிப்ரயீல் (அலை) அவர்கள் பதில் கூறினார்கள்.
இப்போது, மீண்டும்
பிலால் (ரலி) அவர்களிடம் நபி {ஸல்}
அவர்கள் “இஸ்லாத்தில் எந்த அமலை ஆதரவு வைத்து இந்த சீரிய சிறப்பை நீர் அடைந்து
கொண்டீர்!” எனக் கேட்டார்கள்.
அதற்கு, பிலால்
(ரலி) அவர்கள் “இரவு, பகல் எந்த நேரமானாலும் சரி நான் உளூவுடனே இருப்பேன். எந்த நேரத்தில்
உளூ முறிந்தாலும் உடனடியாக உளூ செய்து விடுவேன். பின்னர், உடனடியாக இரண்டு ரக்அத் தொழுது விடுவேன். இதை நான் என்
மீது கடமையாகவே ஆக்கிக் கொண்டேன்” என பதில் கூறினார்கள்.
( நூல்: புகாரீ, அல் இஸ்தீஆப் )
3.
தேவையில்லாத எதிலும் தலையிடாமல் இருப்பது எப்போதும் வேண்டும்..
أخرج ابن أبي الدنيا عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ مرسلًا
عن رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أنه قال
أَوَّلُ مَنْ
يَدْخُلُ مِنْ بَابِ الْمَسْجِدِ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ، فَدَخَلَ عَبْدُ
اللَّهِ بْنُ سَلَامٍ رَضِيَ الله عَنْه، فَقَالَ لَهُ رَجُلٌ: إِنَّ النَّبِيَّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَذَا وَكَذَا فَأَيُّ عَمَلٍ لَكَ
أَوْثَقُ تَرْجُو بِهِ؟ قَالَ
إِنّي لَضَعِيفٌ
وَإِنَّ أَوْثَقَ مَا أَرْجُو بِهِ لَسَلَامَةُ الصَّدْرِ وَتَرْكُ مَا لَا
يَعْنِينِي
وأصله في الصحيح
முஹம்மத் இப்னு கஅபுல் குறழீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “மாநபி {ஸல்} அவர்கள் தங்களின் முன்பாக திரண்டிருந்த
சபையொன்றில் “இன்று இந்த வாசலில் யார் முதலில்
நுழைகின்றாரோ அவர் சுவனவாசி என்று மஸ்ஜிதுன் நபவீயின் முன் வாசலை காண்பித்துக்
கூறினார்கள்.
அந்த அறிவிப்பைக் கேட்டதில் இருந்து மாநபித்தோழர்கள் அனைவரின் பார்வையும்
அங்கு நோக்கி இருந்தது.
உள்ளே ஒருவர் நுழைகின்றார்! அனைவரின் முகத்திலும் சந்தோஷம்! ஆம்! யூதபாதிரியாக இருந்து அல்லாஹ்வின்
தூதரின் கரம்பிடித்து சத்திய சன்மார்க்கத்தை ஏற்ற அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்கள் தான் அந்த சோபனத்தைத் தட்டிச்
சென்றார்கள்.
சபையில் இருந்த ஒருவர் எழுந்து, நேராகச் சென்று அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்களிடம் மாநபி {ஸல்} அவர்கள் சொன்ன சோபனத்தைச் சொல்லி விட்டு “உங்களுக்கு இந்த சோபனம் கிடைப்பதற்கு உங்களிடம் இடம் பெற்றிருக்கின்ற எந்த
அம்சத்தை காரணமாக கூறுவீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு, அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்கள்
“நான் வயது
முதிர்ந்தவன், உடல் பலவீனமானவன் ( என்னால் மிகப்பெரிய வணக்க வழிபாடுகளைச் செய்ய இயலாது. அப்படிச் செய்தால் அல்லவா நான் அவைகளைக் காரணமாக கூறமுடியும் ) என்றாலும் மாநபி {ஸல்} அவர்கள் கூறிய சோபனத்தைப் பெறுவதற்கு
காரணமாக என்னிடம் காணப்படுகிற இரண்டு அம்சங்களை ஆதரவு வைக்கிறேன்.
1.
எப்போதும் என் உள்ளத்தை எந்தச் சலனமும் ஏற்படாதவாறு கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றேன். 2. எனக்கு தேவை இல்லாத, அவசியம் இல்லாத எந்த ஒன்றிலும் நான் தலையிடுவதில்லை, அவைகளில் பங்கு கொள்ளாமல் விட்டு விடுவேன்” என்று பதில் கூறினார்கள். ( நூல்: இப்னு ஹிப்பான் )
وقال زيد بن أسلم
دخل على أبي دجانة وهو مريض ، وكان وجهه يتهلل . فقيل له : ما لوجهك يتهلل ؟ فقال
: ما من عمل شيء أوثق عندي من اثنتين : كنت لا أتكلم فيما لا يعنيني ، والأخرى
فكان قلبي للمسلمين سليما
ஜைத் இப்னு ஸாலிம் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: அபூதுஜானா (ரலி)
அவர்கள் நோய்வாய்ப்பட்டு இருக்கும் போது அவர்களை நான் நலம்
விசாரிக்கச் சென்றேன்.
அப்போது, அவரின்
முகம் ஒளியால் இலங்குவதைக் கண்டேன். அபூதுஜானா அவர்களே! இவ்வளவு சிரமமான நோயின் போதும் கூட உங்களின் முகத்தில்
நோய்க்கான எந்தவொரு அறிகுறியும் இன்றி ஒளியால் இலங்குகின்றதே” என்ன காரணம் என்று கேட்டேன்.
அதற்கவர்கள், அநேகமாக
இந்த நிலைக்கு நான் வருவதற்கு என்னிடம் இருக்கும் இரு உயரிய பண்புகள் தான் காரணம்
என உறுதியாகக் கூற முடியும். 1. தேவையில்லாத எந்தவொன்றையும் நான் பேசுவதில்லை. 2.
அனைத்து முஸ்லிம்கள் விஷயத்தில் என் இதயத்தில் நான்
எப்போதும் நல்லதையே நினைப்பேன்” என்று பதில் கூறினார்கள். ( நூல்: அல் அZஜ்லா லிஇமாமி அல்
ஃகதாபி
)
4.
கொடுக்கல், வாங்கலில் பெருந்தன்மை
அது எப்போதும் வேண்டும்…
وروى أحمد وغيره عن أبي هريرة رضي الله عن النبي صلى
الله عليه وسلم أنه قال
«إِنَّ رَجُلاً لَمْ يَعْمَلْ خَيْرًا قَطُّ، فَكَانَ يُدَايِنُ
النَّاسَ؛ فَيَقُولُ لِرَسُولِهِ: خُذْ مَا تَيَسَّرَ وَاتْرُكْ مَا عَسُرَ
وَتَجَاوَزْ؛ لَعَلَّ الله يَتَجَاوَزُ عَنَّا، فَلَمَّا هَلَكَ قَالَ الله عَزَّ
وَجَلَّ لَهُ: هَلْ عَمِلْتَ خَيْرًا قَطُّ؟ قَالَ: لا، إِلاَّ أَنَّهُ كَانَ لِي
غُلامٌ وَكُنْتُ أُدَايِنُ النَّاسَ، فَإِذَا بَعَثْتُهُ يَتَقَاضَى قُلْتُ لَهُ:
خُذْ مَا تَيَسَّرَ وَاتْرُكْ مَا عَسُرَ وَتَجَاوَزْ؛ لَعَلَّ الله عَزَّ وَجَلَّ
يَتَجَاوَزُ عَنَّا. قَالَ الله عَزَّ وَجَلَّ: قَدْ تَجَاوَزْتُ عَنْكَ»
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “முன் சென்ற காலத்தில் கடன் கொடுக்கும் தொழிலை ஒருவர் செய்து
வந்தார். அவர் வெறெந்த சிறப்பான அமலும் செய்தது கிடையாது. கடன் வாங்கியவர்களிடம் பணம் வசூலிக்கச் செல்லும் தன் பணியாளர்களை
நோக்கி தினந்தோரும் இப்படிச்சொல்வாராம் “மென்மையாகக் கேளுங்கள்; தந்ததைப் பெற்றுக் கொள்ளுங்கள்; ஏழைகள், இயலாதவர்கள் ஆகியோர் தராவிட்டால்
அப்படியே மன்னித்து விட்டு விடுங்கள்; அவர்களின் கடனை தள்ளுபடி செய்து விடுங்கள். ஏனெனில், அல்லாஹ்வும் நம் விஷயத்தில் மன்னிப்பான் என நான் ஆதரவு வைக்கின்றேன்” என்றார்.
திடீரென ஒரு நாள் அவர் இறந்து விட்டார். அல்லாஹ்வின் திரு முன் கொண்டு வரப்பட்ட அவர் அவர் செயல் குறித்து விசாரித்தான்.
என்ன உம்முடைய ஏட்டில் எந்த ஒரு நல்லறமும் நீ செய்ததாக இடம் பெற வில்லையே? என்று அல்லாஹ் கேட்டான்.
அதற்கு அவர் ஆம் என்று கூறிவிட்டு, என்றாலும்,
”இறைவா! நான் செல்வந்தனாகவும், பிறருக்கு கடன் உதவி செய்பவனாகவும்
உலகில் இருந்து வந்தேன். என்னிடம் கடன் வாங்கியவர்களிடம் பணம்
வசூலிக்கச் செல்லும் என் பணியாளர்களை நோக்கி தினந்தோரும் இப்படிச்சொல்வேன் “மென்மையாகக் கேளுங்கள்; தந்ததைப் பெற்றுக் கொள்ளுங்கள்; ஏழைகள்,
இயலாதவர்கள்
ஆகியோர் தராவிட்டால் அப்படியே மன்னித்து விட்டு விடுங்கள்; அவர்களின் கடனை தள்ளுபடி செய்து விடுங்கள். ஏனெனில், அல்லாஹ்வும் நம் விஷயத்தில் மன்னிப்பான் என நான் ஆதரவு வைக்கின்றேன் என்று கூறும் பழக்கமுடையவனாகவே இருந்தேன்” என்று பதில் கூறுவார்.
அப்போது, அல்லாஹ் அவரை நோக்கி “இன்று நாம் உம்முடைய பாவங்களையும் தள்ளுபடி செய்து, மன்னித்து விட்டோம்” என்று சொல்வானாம்.
5.
இறையச்சம் எப்போதும் வேண்டும்…
حَدَّثَنَا
عَطَّافُ بْنُ خَالِدٍ ، قَالَ : حَدَّثَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ ، أَنَّ عُمَرَ
بْنَ الْخَطَّابِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ خَرَجَ لَيْلَةً يَحْرُسُ النَّاسَ ،
فَمَرَّ بِامْرَأَةٍ وَهِيَ فِي بَيْتِهَا وَهِيَ تَقُولُ
تَطَاوَلَ هَذَا اللَّيْلُ وَاسْوَدَّ جَانِبُهْ ... وَطَالَ عَلَيَّ أَنْ لاَ خَلِيلَ أُلاَعِبُهْ
فَوَاللَّهِ لَوْلاَ خَشْيَةُ اللهِ وَحْدَهْ ... لَحُرِّكَ مِنْ هَذَا السَّرِيرِ جَوَانِبُهْ
فَلَمَّا أَصْبَحَ عُمَرُ أَرْسَلَ إِلَى الْمَرْأَةِ ، فَسَأَلَ عَنْهَا ، فَقِيلَ
هَذِهِ فُلاَنَةُ
بِنْتُ فُلاَنٍ ، وَزَوْجُهَا غَازٍ فِي سَبِيلِ اللهِ ، فَأَرْسَلَ إِلَيْهَا
امْرَأَةً ، فَقَالَ : كُونِي مَعَهَا حَتَّى يَأْتِيَ زَوْجُهَا ، وَكَتَبَ إِلَى
زَوْجِهَا ، فَأَقْفَلَهُ ، ثم دخل على حفصة ابنته رضي الله عنها فقال اني سائلك
عن آمر قد أهمني فافرجيه عني. في كم تشتاق امرأة الى زوجها فخفضت رأسها واستحيت
قال : فان الله لا يستحي من الحق قَالَتْ : أَرْبَعَةَ أَشْهُرٍ ، أَوْ خَمْسَةَ
أَشْهُرٍ ، أَوْ سِتَّةَ أَشْهُرٍ ، فكتب عمر رضي الله عنه ان لا تحـبس الجيوش فوق
أربعة اشهر
رواه
سعيد بن منصور في سننه واخرجه عبد الرزاق في مصنفه
உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம் அது. ஒரு நாள் இரவு உமர் (ரலி) அவர்கள்
நகர்வலம் வருகின்றார்கள். ஒரு வீட்டிலிருந்து ஒரு பெண்ணின்
அழுகுரல் கேட்கிறது. அழுகையின் ஊடாக இடையே ஏதோ சில
வாசகங்களையும் அப்பெண்மனி உதிர்த்துக் கொண்டிருந்தார்.
செவியைக் கூர்மையாக்கி கேட்கின்றார்கள். அப்பெண்மனி “எத்துனை
இரவுகள் என் துணைவர் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. எத்துனை
நீண்டதாகத் தெரிகிறது இந்த இரவுகள்? என் துணைவர் என்னுடன்
கொஞ்சிக் குலாவாமல் எங்கோ இருப்பதனால்….
அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கின்றேன்! அல்லாஹ்வின் அச்சம் மட்டும் என் உள்ளத்தில்
இல்லாது போயிருக்குமானால், இந்த கட்டில் என்றோ அதன் உண்மைத்
தன்மையை இழந்திருக்கும்… என் தேகமும் தான்…” என்ற பொருள் பட கவி நடையில் தன் உணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
கவிதை வரிகள் உமர் (ரலி) அவர்களின் உள்ளத்தைப் பிழிந்தது. நெருஞ்சி முள்ளாய் தைத்தது. அங்கிருந்து அமைதியாய்
அகன்று விட்டார்கள்.
மறுநாள் காலை அந்த வீட்டின் விவரங்களை சேகரிக்க உத்தரவுகள் பரந்தன. இறுதியில், அப்பெண்மனியின் கணவர் அறப்போரில் கலந்து கொள்ளச் சென்று, நீண்ட காலம் ஆகியும் திரும்பி வரவில்லை என்கிற தகவல் பெறப்பட்டு கலீஃபா
உமர் (ரலி) அவர்களிடம்
தெரிவிக்கப்பட்டது.
உடனே, கலீஃபா உமர் (ரலி) அவர்கள்
“ஒரு பெண்ணை தன்னோடு அழைத்துக் கொண்டு அப்பெண்மனியின் வீட்டிற்குச்
சென்றார்கள். அப்பெண்மனியை அழைத்து “தன்னோடு
அழைத்து வந்த அப்பெண்மனியை சுட்டிக் காட்டி இதோ! இப்பெண்மனியை உங்களுக்குத் துணையாக வைத்துக் கொள்ளுங்கள்!
தங்கள் கணவருக்கு நான் கடிதம் எழுதி அவர் உடனே ஊருக்குப் புறப்பட்டு
வர ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறினார்கள்.
பின்னர், நேராக தங்களுடைய மகளான உம்முல் முஃமினீன் அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று ”மகளே! கடந்த இரு தினங்களாக என் நெஞ்சில் நெருஞ்சி
முள்ளாய் குத்திக் கொண்டிருக்கிற ஒரு விஷயத்திற்கு நீ தெளிவாக விடையளித்து,
என் உள்ளத்தை சிரமத்தில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்” என்று கூறி விட்டு…
”தம்
கணவனை விட்டும் பிரிந்து வாழ்கிற ஒரு பெண் எவ்வளவு நாள் தன் உணர்ச்சிகளைக்
கட்டுப்படுத்தி, இயல்புகளோடு இருக்க இயலும்” என்று கேட்டார்கள்.
இந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்பாராத அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்கள் வெட்கத்தால் தலை கவிழ்ந்தார்கள். தந்தையே!
என்ன கேள்வி கேட்கிறீர்கள் என்று தெரிந்து தான் கேட்கின்றீர்களா?”
என்று கேட்டார்கள்.
அதற்கு, உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ் சத்தியத்தைச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை” என்கிற இறைவசனத்தை ஓதிக் காண்பித்து விட்டு, நடந்த
சம்பவத்தை கூறினார்கள்.
அப்போது, அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்கள்
“நான்கு மாதம் அல்லது ஆறு மாதம்” என்று பதில்
கூறினார்கள்.
இதைக் கேட்டதும் உமர் (ரலி) அவர்கள் விரைவாக மஸ்ஜிதுன் நபவீயை நோக்கி
வந்தார்கள். அறப்போரில் பங்கு பெற உலகின் நாலா
பாகங்களுக்கும் சென்றிருக்கிற அத்துனை படைத் தளபதிகளுக்கும் “நான்கு மாதங்களுக்கு மேலாக படையில் பங்கு பெற்றிருக்கும் போர் வீரர்கள்
அனைவருக்கும் ஒரு மாத காலம் விடுப்பு கொடுத்து அவரவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி
வைக்கப் பட வேண்டும்; இனிமேல் எந்தப் படை வீரர்களும் நான்கு
மாதத்திற்கு மேல் போர்ப் பணி செய்யக்கூடாது” என கடிதம் எழுதி
தூது அனுப்பினார்கள்.
( நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக், ஃகுலஃபாவுர் ரஸூல் {ஸல்}…. }
எனவே, ரமலானில் நாம் செய்த
நல்லறங்களையும், நல் அமல்களையும் வாழும் காலமெல்லாம் நிரந்தரமாகச் செய்வோம்!
அல்லாஹ்வே! உன்னை நினைப்பதற்கும்,
உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
உன்னை அழகிய முறையில் வழிபடுவதற்கும் எங்களுக்கு
தௌஃபீக் செய்தருள்வாயாக!
ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
இன்ஷா அல்லாஹ்… அடுத்த வாரம் ஜும்ஆ பயான் பதிவிடப்படாது.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத். இந்த இரமலான் முழுவதும் நான் உட்பட தமிழகத்தின் ஆயிரக்கணக்கான மஸ்ஜிதில் இமாம்கள் தங்களது குறிப்புகளையே மக்களுக்கு பயானாக முழங்கியுள்ளார்கள்.
ReplyDeleteஇந்த வார ஜும்ஆ குறிப்பு மிக பொருத்தமான முறையில் இரமலானுக்கு பிறகு மக்களுக்கு அவசியம் எடுத்தியம்ப வேண்டிய அறிவுரைகள்.
தங்களது உதவிக்கு மிகுந்த நன்றிகள். جزاكم الله خيرا كثيرا يا استاذ
தயவு செய்து வியாழக்கிழமை பயான்களை பதிவேற்றம் செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ReplyDelete