Thursday 9 January 2020

இதோ! அல்லாஹ்வின் உதவி தொட்டுவிடும் தூரத்தில்….


இதோ! அல்லாஹ்வின் உதவி தொட்டுவிடும் தூரத்தில்….



குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாள்தோறும் சாத்வீகமான முறையில், ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், அமைதி, முழக்க பேரணிகள் என முஸ்லிம் சமூகம் பொதுவெளியில் களம் கண்டிருக்கிற அதே வேளையில் நோன்பு, திக்ர், ஸலவாத், இஃதிகாஃப் என ஆன்மீக. சமய நெறிகளோடும் வெற்றியைத் தேடி நகர்ந்து கொண்டிருக்கின்றது.

ஆட்சியாளர்கள் சட்டத்தை அமுல்படுத்துவதில் விடாப்பிடியாக இருக்கும் அதே நேரத்தில் சட்டத்தைத் திரும்பப் பெரும் வரையில் இறுதி வரை களம் காணப் போவதாக முஸ்லிம் சமூகமும், ஜனநாயக விரும்பிகளும் அறிவித்திருப்பது மத்திய ஃபாசிஸ ஆட்சியாளர்களை நடுங்கச் செய்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

நாட்டில் 60 சதவீதமானோர் இந்த சட்டத்தை ஆதரிப்பதாகவும், 68 லட்சம் மிஸ்ட் கால்கள் மூலம் தங்கள் ஆதரவை தெரிவித்திருப்பதாகவும் புருடா விட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இந்த சட்டத்திற்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் தன்னெழுச்சியாக தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதைப் பார்க்க முடிகின்றது.

முஸ்லிம் சமூகம் ஏகத்துவ வாழ்க்கையை ஏற்று இந்த உலகத்தில் வாழத் துவங்கிய நாள் முதற்கொண்டு எல்லா காலத்திலும் பிரச்சினைகளை சந்தித்தே வந்திருக்கின்றது. சவால்களை எதிர்கொண்டே வந்திருக்கின்றது.

ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு பிரச்சினையின் போதும், ஒவ்வொரும் சவால்களின் போதும் அந்த சமூகம் நம்பிக்கையோடு கேட்ட கேள்வியை, ஆவலை அல்லாஹ் அல்குர்ஆனில் நயம்பட பதிவு செய்கிறான்.

مَتَى نَصْرُ اللَّهِ அல்லாஹ்வின் உதவிஎப்போது வரும்? இது தான் அந்த மக்கள் வெளிப்படுத்திய ஆவல், கேட்ட கேள்வி.

அதற்கு, உடனடியாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தந்த பதிலையும் அல்குர்ஆனில் அழகுற அல்லாஹ் பதிவு செய்துள்ளான்.

أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ

அறிந்துகொள்ளுங்கள்! இதோ! அல்லாஹ்வின் உதவி மிக சமீபத்தில் இருக்கின்றது”.                                               ( அல்குர்ஆன்: 2: 214 )

نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ

அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் இதோ! மிகச் சமீபமாகவே இருக்கின்றது”.                                               ( அல்குர்ஆன்: 61: 13 )

அல்லாஹ்வின் உதவியை எதிர் பார்த்து நம்பிக்கையோடு காத்து நின்ற அந்த மக்களுக்கு அல்லாஹ் உதவி செய்தான்.

சில போது இயற்கையின் விதிகளை மாற்றியமைத்து பிரம்மிக்கத்தக்க உதவிகளை வழங்கி அல்லாஹ் வெற்றி பெறச் செய்தான்.

இன்னும் சில போது தனக்கான விதிகளையே மாற்றியமைத்து வியக்கத்தக்க உதவிகளை வழங்கி அல்லாஹ் வெற்றியை நல்கினான்.

அல்லாஹ் நமக்கும் அவனுடைய மகத்தான உதவியை வழங்கி, ஃபாசிஸ எதிரிகளுடனான இந்த போராட்டத்தில் பிரம்மாண்டமான வெற்றியை நல்குவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!

அல்லாஹ் செய்த உதவிகளை பார்க்கும் முன்பாக, அல்லாஹ் வழங்கிய வெற்றிகளை காணும் முன்பாக வெற்றிக்கான, இறை உதவியை பெறுவதற்கான காரணிகளை நாம் அறிந்து கொள்வது காலத்தின் கட்டாயம் ஆகும்.

வெற்றி என்பது


வெற்றி மொழிவதற்கு இலகுவாக இருந்தாலும், அனுபவிப்பதற்கு அழகாக இருந்தாலும் அதை அடைவதற்கான வழிகள் என்பது ஒன்றும் அவ்வளவு இலகுவான ஒன்றல்ல.

சில போது வெற்றிகள் துவக்கத்திலேயே கிடைத்து விடும். இன்னும் சில போது தோல்வியின் விளிம்பில் இருக்கும் போது கிடைக்கும். இன்னும் சில போது இனி வழியே இல்லை என்று எல்லாவற்றையும் இழந்து நிற்கிற போது கிடைக்கும்.

அல்லாஹ்வும் அல்குர்ஆனில் வெற்றி குறித்து, வெற்றி பெற்றவர்கள் குறித்து பல்வேறு வசனங்களில், பல்வேறு இடங்களில், பல்வேறு கோணத்தில் கூறுகின்றான்.

வெற்றி குறித்த வார்த்தைகளைக் கூட அல்லாஹ் பல்வேறு விதமாக பயன் படுத்துகின்றான். சுமார் 6 வார்த்தைகளைப் பயன் படுத்துகின்றான்.

அந்நஸ்ர், அல்ஃபத்ஹ், அல்ஃபலாஹ், அல்ஃபவ்ஸ், அல் ஃகலப், அல்அஃலா ஆகியவைகளாகும்.

முறையே, 3: 123 லும், 48: 1 லும், 23: 1, லும், 33: 72 லும், 26: 41,42,44 லும், 3: 39 லும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

வாருங்கள்! இதோ மிகச் சமீபத்தில் இருக்கிற வெற்றியையும், வெற்றிக்கான வாயில்களையும், வழிகளையும் அல்குர்ஆன் மற்றும் ஸுன்னாவின் வழிகாட்டுதலில் அறிந்து ஃபாஸிசத்திற்கெதிரான போராட்டத்தை வெற்றியோடு துவங்குவோம்!!

1. இறைநம்பிக்கையாளனாக இருப்பது வெற்றியை தேடித்தரும்….

وقد روى مسلم في صحيحه من حديث عبدالله بن عمرو رضي الله عنه قال قال النبي صلى الله عليه و سلم:" قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما آتاه

அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:ஒருவர் முஸ்லிமாக வாழ்வாரேயானால் அவர் வெற்றி பெற்றுவிடுவார். எவர் அல்லாஹ் வழங்கியதைக் கொண்டு போதுமென்ற மனதோடு வாழ்கின்றாரோ, அவரின் வாழ்க்கைக்குத் தேவையான வாழ்வாதாரத்தை அல்லாஹ் வழங்குகின்றான்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                              ( நூல்: முஸ்லிம், 1054 )

عِمْرَانَ بْنِ حُصَيْنٍ في قصة صاحب العضباء لما أُسِرَ فمر به النبي عليه الصلاة والسلام فنادى يا محمد؛ فَقَالَ:"مَا شَأْنُكَ؟ " قَالَ: إِنِّي مُسْلِمٌ. قَالَ:" لَوْ قُلْتَهَا وَأَنْتَ تَمْلِكُ أَمْرَكَ أَفْلَحْتَ كُلَّ الْفَلَاحِ

இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:ஏதோ ஒரு யுத்தத்தின் போது கைதியாக பிடிக்கப்பட்டவர்கள் மஸ்ஜிதுன் நபவீயின் அருகே தங்க வைக்கப்பட்டிருந்த தருணத்தில் ஒரு முறை அண்ணலார் அவ்விடத்தைக் கடந்து செல்ல முயன்ற போது, அங்கிருந்த கிராமவாசியான கைதி ஒருவர் மாநபி {ஸல்} அவர்களை முஹம்மதே! என்று பெயர் கூறி அழைத்தார்.

அருகே சென்ற அண்ணலார், பெயர் கூறி அழைத்ததன் நோக்கம் என்ன? உம்முடைய நிலை தான் என்ன? என்று அக்கிராமவாசியிடம் கேட்டார்கள்.

அதற்கவர், நான் முஸ்லிமாகிவிட்டேன் என்றார். அப்போது, நபி {ஸல்} அவர்கள் அப்படியாயின், நீர் சொல்வதில் உண்மை இருப்பின் உன் காரியங்கள் யாவும் இனி உனக்கு சாதகமாக அமைந்து விடும்; நீர் மகத்தான அனைத்து வெற்றியையும் அடைந்து விடுவீர்!என்று பதில் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

இந்த ஹதீஸிற்கு விளக்கம் தருகிற இமாம் கதாபீ (ரஹ்) அவர்களும், இமாம் நவவீ (ரஹ்) அவர்களும் வாழ்க்கையில் எல்லா வகையான வெற்றிகளையும் பெறுவதற்கு இறைநம்பிக்கையாளனாய் (முஃமின்) இறைவனுக்கு கட்டுப்பட்டவனாய் (முஸ்லிம்) இருப்பது அவசியம்என்பதை மேற்கூறிய நபிமொழி சுட்டிக் காட்டுவதாக கூறுகின்றார்கள்.

2. நற்காரியங்களை அதிக ஈடுபாட்டுடன் செய்வது

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا وَاعْبُدُوا رَبَّكُمُ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் ருகூவு செய்யுங்கள்! ஸுஜூதும் செய்யுங்கள்! உங்களின் இறைவனையே வணங்குங்கள்! நற்காரியங்களைச் செய்யுங்கள்! நீங்கள் வெற்றி அடைவீர்கள்”.                   ( அல்குர்ஆன்: 22: 77 )

3. அல்லாஹ்வின் பாதையில் உயிராலும், பொருளாலும் அர்ப்பணம் செய்வது

لَكِنِ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُواْ مَعَهُ جَاهَدُواْ بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ وَأُوْلَئِكَ لَهُمُ الْخَيْرَاتُ وَأُوْلَئِكَ هُمُ الْمُفْلِحُونَ ()

அல்லாஹ்வின் தூதரும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும், தங்களின் பொருட்களைக் கொண்டும், உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்விற்காக அர்ப்பணம் செய்கின்றனர்; அத்தகையோரின் நன்மைகள் அனைத்தும் அவர்களுக்கே உரியன மேலும், அவர்கள் தாம் வெற்றியாளர்கள்”.                     ( அல்குர்ஆன்: 9: 88 )

4. குர்ஆன், ஸுன்னாவை பின்பற்றி நடப்பது

فَالَّذِينَ آمَنُواْ بِهِ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَاتَّبَعُواْ النُّورَ الَّذِيَ أُنزِلَ مَعَهُ أُوْلَئِكَ هُمُ الْمُفْلِحُونَ ()
ஆகவே, எவர்கள் அவர் {முஹம்மது ஸல்} மீது நம்பிக்கை கொண்டு, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து அவருடன் இறக்கி வைக்கப் பட்டுள்ளதே அந்த வேத ஒளியைப் பின்பற்றினார்களோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்”.                                           ( அல்குர்ஆன்: 7: 157 )

وأخرج الإمام أحمد رحمه الله: عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه و سلم صلى الله عليه وسلم: "لكل عمل شرة ولكل شرة فترة فمن كانت فترته إلى سنتي فقد أفلح ومن كانت إلى غير ذلك فقد هلك ". وهو في الصحيح المسند للعلامة الوادعي رحمه الله وقال: هذا حديث صحيح على شرط الشيخين

அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:ஒவ்வொரு செயலுக்கும் ஒரு வரையறை இருக்கின்றது. ஒவ்வொரு வரையறைக்கும் ஒரு (இயற்கை) மார்க்கம் இருக்கின்றது. எவருடைய (இயற்கை) மார்க்கம் என் வழியாக, நடைமுறையாக இருக்கின்றதோ அவர் வெற்றி பெறுவார்; என் வழியல்லாத, நடைமுறையல்லாத மார்க்கமாக எவருடைய மார்க்கம் இருக்கின்றதோ அவர் தோல்வியைத் தழுவுவார்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: அஹ்மத் )

5. அல்லாஹ், ரஸூலின் முடிவுக்கு செவி தாழ்த்துவதும், கட்டுப்பட்டு நடப்பதும்….

إِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِينَ إِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَنْ يَقُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ

இறைநம்பிக்கையாளர்களுடைய சொல்லாக இருந்ததெல்லாம், அவர்களின் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தூதராகிய அவர் தீர்ப்பு வழங்குவதற்காக, அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் அவர்கள் அழைக்கப்பட்டால், ”நாங்கள் செவியுற்றோம்! இன்னும் கட்டுப்பட்டோம்! என்று அவர்கள் சொல்வது தான்; இன்னும், அவர்கள் தாம் வெற்றியாளர்கள்”.                   ( அல்குர்ஆன்: 24: 51 )

6. இஸ்லாத்தின் கடமைகள் மீது பேணுதலாக இருப்பது

أخرج البخاري في صحيحه عن طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ يَقُولُ
"جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَهْلِ نَجْدٍ ثَائِرَ الرَّأْسِ يُسْمَعُ دَوِيُّ صَوْتِهِ وَلَا يُفْقَهُ مَا يَقُولُ حَتَّى دَنَا فَإِذَا هُوَ يَسْأَلُ عَنْ الْإِسْلَامِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ فَقَالَ هَلْ عَلَيَّ غَيْرُهَا قَالَ لَا إِلَّا أَنْ تَطَوَّعَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصِيَامُ رَمَضَانَ قَالَ هَلْ عَلَيَّ غَيْرُهُ قَالَ لَا إِلَّا أَنْ تَطَوَّعَ قَالَ وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الزَّكَاةَ قَالَ هَلْ عَلَيَّ غَيْرُهَا قَالَ لَا إِلَّا أَنْ تَطَوَّعَ قَالَ فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ وَاللَّهِ لَا أَزِيدُ عَلَى هَذَا وَلَا أَنْقُصُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْلَحَ إِنْ صَدَقَ

தல்ஹா இப்னு உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:நஜ்த் பகுதியைச் சார்ந்த ஒருவர் தலைவிரி கோலத்துடன் அண்ணலாரின் சபைக்கு வருகை தந்து, மென்மையான குரலில், இஸ்லாத்தைக் குறித்து கேட்டார், இஸ்லாத்தைப் பற்றிய அறிமுகத்திற்குப் பின்னர், மாநபி {ஸல்} அவர்கள் தினமும் ஐவேளை தொழ வேண்டும் என்றார்கள். அப்போது, அவர் இவையல்லாத வேறெந்த கடமையான தொழுகைகளும் என் மீது விதியாக்கப்பட்டுள்ளதா? நான் வேறெந்த தொழுகைகளையும் அவசியம் தொழ வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு, நபி {ஸல்} அவர்கள் இல்லை! நீர் உபரியான தொழுகைகளை விரும்பினால் தொழுது கொள்ளலாம்என்றார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் மீது ஆணை! கடமையான ஐவேளைத் தொழுகையை விட கூடுதலாகவோ, அதை விடக் குறைவாக நான் ஒரு போதும் செய்யப்போவதில்லை!என்றார்.

பின்னர், நபி {ஸல்} அவர்கள் ஜகாத் குறித்து கூறினார்கள். முன்பு போலவே, அவர் இவையல்லாத பொருளாதாரம் சம்பந்தமான வேறெந்த கடமைகளும் என் மீது விதியாக்கப்பட்டுள்ளதா? நான் பொருளாதாரம் சம்பந்தமான வேறெந்த கடமைகளையும் அவசியம் நிறைவேற்ற வேண்டுமா? என்று கேட்டார்.

அதற்கு, நபி {ஸல்} அவர்கள் இல்லை! நீர் உபரியான தான தர்மங்களை, விரும்பினால் கொடுக்கலாம்என்றார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் மீது ஆணை! கடமையான ஜகாத்தை விட கூடுதலாகவோ, அதை விடக் குறைவாக நான் ஒரு போதும் செய்யப்போவதில்லை!என்றார்.

பின்னர், அவர் அண்ணலாரிடம் இருந்து விடை பெற்று அங்கிருந்து வேகமாக சென்று விட்டார். இப்போது, மாநபி {ஸல்} அவர் எங்களை நோக்கி இவர் சொன்னது போன்று நடந்து கொண்டார் எனில் வெற்றி பெறுவார்என்று கூறினார்கள்.

                                                            ( நூல்: புகாரி )

7. தொழுகையை பேணுதலோடும், உள்ளச்சத்தோடும் தொழுவது

قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ () الَّذِينَ هُمْ فِي صَلاتِهِمْ خَاشِعُونَ

இறைநம்பிக்கையாளர்கள் திட்டமாக வெற்றி அடைந்து விட்டார்கள்; அவர்கள் எத்தகையோரென்றால் தொழுகையில் அவர்கள் உள்ளச்சம் உடையவர்களாக இருப்பார்கள்”.  (அல் குர்ஆன்: 23: 1 ) இதே தொடரில்


وَالَّذِينَ هُمْ عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ ()

இன்னும், அவர்கள் தம் தொழுகைகளின் மீது பேணுதலும் கவனமும் உள்ளவர்களாக இருப்பார்கள்”.                                 ( அல்குர்ஆன்: 23: 9 )

இவ்வுலகத்தில் மாத்திரமல்ல மறுமையிலும் வெற்றியைத் தீர்மானிக்கும் ஆற்றல் தொழுகைக்கு உண்டு.

وأخرج الترمذي رحمه الله: عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:" إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته، فإن صلحت، فقد أفلح وأنجح، وإن فسدت، فقد خاب وخسر، فإن انتقص من فريضته شيئاً، قال الرب، عز وجل: انظروا هل لعبدي من تطوعٍ، فيكمل منها ما انتقص من الفريضة؟ ثم يكون سائر أعماله على هذا" قال الترمذي حديث حسن

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: மறுமையில் ஓர் அடியானிடம் முதன் முதலாக தொழுகை குறித்தே விசாரிக்கப்படும்; அக்கேள்விக்கான பதில் சரியாக இருந்தால் அந்த அடியான் பெரும் வெற்றியை எய்தப் பெறுவார். இல்லையெனில், பெரும் தோல்வியையும், நஷ்டத்தையும் சந்திப்பார்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                   ( நூல்: திர்மிதீ )


8. பாவமன்னிப்பின் மூலம் அல்லாஹ்வை நெருங்குவது

فَأَمَّا مَن تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا فَعَسَى أَن يَكُونَ مِنَ الْمُفْلِحِينَ

எவர் பாவமன்னிப்புப் பெற்று, இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல் செய்கின்றாரோ அவர் வெற்றியாளர்களில் ஒருவர் தாம்”.       ( அல்குர்ஆன்: 28: 67 )

9. அல்லாஹ்வால் தடை செய்யப்பட்டவைகளை தவிர்த்து வாழ்வதும், பெரும்பாவங்களில் இருந்து விலகி வாழ்வதும்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالأَنصَابُ وَالأَزْلاَمُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

இறைநம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளும், குறிபார்க்கும் அம்புகளும் ஷைத்தானுடைய செயல்களிலுள்ள அருவருக்கத் தக்கவையாகும்; ஆகவே, அவைகளில் இருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்”.                      ( அல்குர்ஆன்: 5: 90 )

قال العلامة السعدي رحمه الله في تفسيره:" فإن الفلاح لا يتم إلا بترك ما حرم الله، خصوصا هذه الفواحش المذكورة

அல்லாமா ஸஅதீ (ரஹ்) அவர்கள் இந்த இறைவசனத்திற்கு விளக்கம் தருகிற போது வெற்றி என்பது அல்லாஹ் தடை செய்தவற்றிலிருந்து முற்றிலுமாக விலகி வாழாத வரை சாத்தியமே இல்லை. குறிப்பாக மேற்கூறிய காரியங்கள் வெற்றிக்கு மிகப் பெரும் தடையாகும்.

10. வாழ்வில் எல்லா நிலைகளிலும் இறையச்சத்தோடு இருப்பது..

قُل لاَّ يَسْتَوِي الْخَبِيثُ وَالطَّيِّبُ وَلَوْ أَعْجَبَكَ كَثْرَةُ الْخَبِيثِ فَاتَّقُواْ اللَّهَ يَا أُوْلِي الأَلْبَابِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (100)
قال العلامة السعدي: "أخبر أن الفلاح متوقف على التقوى التي هي موافقةُ اللهِ في أمرهِ ونهيهِ، فمن اتقاه أفلح كل الفلاح، ومن ترك تقواه حصل له الخسران وفاتتهُ الأرباح

நபியே! அம்மக்களை அழைத்து நீங்கள் கூறிவிடுங்கள்! தீயதும், நல்லதும் சமமாக மாட்டாது; தீயவை பரவலாக நடைமுறையில் இருப்பது உம்மை வியப்பில் ஆழ்த்தினாலும் சரி! எனவே, அறிவுடையோரே! வாழ்வில் எல்லா அம்சங்களிலும் இறையச்சத்தைக் கடைபிடியுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்”. ( அல்குர்ஆன் 5:100 )

அல்லாமா ஸஅதீ (ரஹ்) அவர்கள் இந்த இறைவசனத்திற்கு விளக்கம் தருகிற போது அல்லாஹ் வாழ்வின் எல்லா நிலைகளிலும் தக்வாவோடு நடந்து கொள்கிற போது தான் வெற்றியை வசப்படுத்தி கொடுக்கின்றான்என்று கூறுகின்றார்கள்.

இன்று உலகளாவிய அளவில் தோல்விகளுக்கு மேல் தோல்விகளை அடுக்கடுக்காகச் சந்தித்துக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் சமூகம் சிந்தித்து உணரவேண்டும்.

கடந்த காலங்களில் மேற்கூறிய அம்சங்களில் முன்னேறிய முஸ்லிம் சமூகம் உலகெங்கும், சென்ற இடங்களிலெல்லாம், அடியெடுத்து வைத்த இடங்களிலெல்லாம் மாபெரும் வெற்றிகளை குவித்து வரலாற்றுச் சாதனை படைத்தது என்பதை.

பிரம்மிக்கத்தக்க உதவியும்வெற்றியும்

இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்களின் சமூகம் நபி நூஹ் {அலை} அவர்களையும், அவர்களைக் கொண்டு ஈமான் கொண்ட 83 நபர்களையும் கடுஞ்சொற்களாலும், இன்னபிற செயல்களாலும் சொல்லெனாத்துயரங்களுக்கு உள்ளாக்கிய போது இறைத்தூதர் நூஹ் {அலை} அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்.
قَالَ رَبِّ اِنَّ قَوْمِىْ كَذَّبُوْنِ‌ ۖ‌ۚ‏
فَافْتَحْ بَيْنِىْ وَبَيْنَهُمْ فَتْحًا وَّنَجِّنِىْ وَمَنْ مَّعِىَ مِنَ الْمُؤْمِنِيْنَ
என் இறைவனே! என்னுடைய சமூகத்தார்கள் நிச்சயமாக என்னைப் பொய்யாக்கி விட்டார்கள். ஆகவே, நீ எனக்கும், அவர்களுக்கு மிடையே தீர்ப்புச் செய்து, என்னையும், என்னுடனிருக்கும் முஃமின்களையும் இரட்சிப்பாயாக!” (என்று பிரார்த்தித்தார்.                                         ( அல்குர்ஆன்: 26: 117, 118 )


وَ قَالَ نُوْحٌ رَّبِّ لَا تَذَرْ عَلَى الْاَرْضِ مِنَ الْكٰفِرِيْنَ دَيَّارًا‏

என் இறைவா! பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டு விடாதே.

اِنَّكَ اِنْ تَذَرْهُمْ يُضِلُّوْا عِبَادَكَ وَلَا يَلِدُوْۤا اِلَّا فَاجِرًا كَفَّارًا‏

நிச்சயமாக நீ அவர்களை விட்டு வைப்பாயானால். உன் அடியார்களை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள்; அன்றியும், பாவிகளையும், காஃபிர்களையும் அன்றி அவர்கள் பெற்றெடுக்கமாட்டார்கள். ( அல்குர்ஆன்: 71: 26, 27 )

அல்லாஹ் நூஹ் {அலை} அவர்களின் பிரார்த்தனையை ஏற்றான். பின்னர் நூஹ் {அலை} அவர்களை நோக்கி

وَأُوحِيَ إِلَى نُوحٍ أَنَّهُ لَنْ يُؤْمِنَ مِنْ قَوْمِكَ إِلَّا مَنْ قَدْ آمَنَ فَلَا تَبْتَئِسْ بِمَا كَانُوا يَفْعَلُونَ (36) وَاصْنَعِ الْفُلْكَ بِأَعْيُنِنَا وَوَحْيِنَا وَلَا تُخَاطِبْنِي فِي الَّذِينَ ظَلَمُوا إِنَّهُمْ مُغْرَقُونَ (37) وَيَصْنَعُ الْفُلْكَ وَكُلَّمَا مَرَّ عَلَيْهِ مَلَأٌ مِنْ قَوْمِهِ سَخِرُوا مِنْهُ قَالَ إِنْ تَسْخَرُوا مِنَّا فَإِنَّا نَسْخَرُ مِنْكُمْ كَمَا تَسْخَرُونَ (38) فَسَوْفَ تَعْلَمُونَ مَنْ يَأْتِيهِ عَذَابٌ يُخْزِيهِ وَيَحِلُّ عَلَيْهِ عَذَابٌ مُقِيمٌ (39)

மேலும், நூஹ் -க்கு வஹீ அறிவிக்கப்பட்டது: “(முன்னர்) ஈமான் கொண்டவர்களைத் தவிர, (இனி) உம்முடைய சமூகத்தாரில் நிச்சயமாக எவரும் நம்பிக்கை கொள்ளமாட்டார்; ஆதலால் அவர்கள் செய்வதைப்பற்றி நீர் விசாரப்படாதீர்.

நம் பார்வையில் நம்(வஹீ) அறிவிப்புக்கு ஒப்ப கப்பலைக் கட்டும்; அநியாயம் செய்தவர்களைப் பற்றி(ப் பரிந்து இனி) நீர் என்னிடம் பேசாதீர்; நிச்சயமாக அவர்கள் (பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்.
அவர் கப்பலைக் கட்டிக் கொண்டிருந்த போது, அவருடைய சமூகத்தின் தலைவர்கள் அவர் பக்கமாகச் சென்றபோதெல்லாம் அவரைப் பரிகசித்தனர்; (அதற்கு) அவர்:நீங்கள் எங்களைப் பரிகசிப்பீர்களானால், நிச்சயமாக நீங்கள் பரிகசிப்பதுபோலவே, (அதிசீக்கிரத்தில்) நாங்கள் உங்களைப் பரிகசிப்போம்என்று கூறினார்.

அன்றியும், எவன்மீது அவனை இழிவு படுத்தும் வேதனை வருமென்றும், எவன்மீது நிலைத்திருக்கும் வேதனை இறங்கும் என்றும் வெகு விரைவில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்” (என்றும் கூறினார்). ( அல்குர்ஆன்: 11: 36 - 39 )

அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்வை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

وَنُوحًا إِذْ نَادَى مِنْ قَبْلُ فَاسْتَجَبْنَا لَهُ فَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ مِنَ الْكَرْبِ الْعَظِيمِ (76) وَنَصَرْنَاهُ مِنَ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا إِنَّهُمْ كَانُوا قَوْمَ سَوْءٍ فَأَغْرَقْنَاهُمْ أَجْمَعِينَ (77)
இன்னும், நூஹ் - அவர் முன்னே பிரார்த்தித்தபோது, அவருக்கு (அவருடைய பிரார்த்தனையை ஏற்று)) பதில் கூறினோம்; அவரையும், அவருடைய குடும்பத்தாரையும் மிகப் பெரிய துன்பத்திலிருந்தும் நாம் ஈடேற்றினோம்.

இன்னும் நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க முற்பட்டார்களே அந்த சமூகத்தாரிடமிருந்து அவருக்கு உதவி செய்தோம். நிச்சயமாக அவர்கள் மிகக் கெட்ட சமூகத்தாராகவே இருந்தனர் - ஆதலால் அவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்தோம்.                                          ( அல்குர்ஆன்: 21: 76, 77 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனைக் கொண்டு நம்பிக்கை கொண்ட ஒரு நபி மற்றும் 83 ஈமானிய சமூகத்திற்காக தண்ணீரின் தடங்களே இல்லாத, நதிகளோ, கடலோ இல்லாத பாலைப் பெருவெளியில் பார்க்கும் இடமெல்லாம் நீரைப் பெருக்கெடுத்து ஓடச் செய்தான்.

ஆம்! மிகப்பெரிய வெள்ளத்தை ஏற்படுத்தி முழு உலகையும் அழித்து, மகத்தான உதவியையும், வெற்றியையும் வழங்கி உலகின் நாலா புறங்களிலும் சுபிட்சமாக வாழவைத்தான்.

வியக்கத்தக்க உதவியும்வெற்றியும்

خرج بهم "يوشع بن نون" عليه السلام، أو بمن بقي منهم وبسائر بني إسرائيل من الجيل الثاني، فقصد بهم بيت المقدس فحاصرها، فكان فتحها يوم الجمعة بعد العصر، فلما تَضَيَّفَتِ الشمس للغروب، وخَشي دخول السبت عليهم قال "إنك مأمورة وأنا مأمور، اللهم احبسها عليَّ"، فحبسها الله تعالى حتى فتحها.

في الحديث الصحيح عن أبي هريرة عن رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال: (غزا نبي من الأنبياء) الحديث أخرجه مسلم وفية قال: (فغزا فأدنى للقرية  حين صلاة العصر أو قريبا من ذلك فقال للشمس أنت مأمورة وأنا مأمور اللهم أحبسها  على شيئافحبست عليه حتى فتح الله عليه


வசிப்பதற்கு நாடின்றி நாடோடிகளாய் அலைந்து திரிந்த பனூ இஸ்ரவேலர்களை ஒன்றிணைத்து அமாலிக்காவினரை எதிர்த்துப் போராட ஓர் உன்னதமான வலிமையை ஏற்படுத்தினார்கள் நபி யூஷஃ இப்னு நூன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

குறிப்பிட்ட நாளில் போராடக் கிளம்பிய அவர்களுக்கு அல்லாஹ் ஒரு சோதனை ஏற்படுத்தினான். அதாவது சனிக்கிழமை அவர்களின் ஜும்ஆ நாள் அந்த நாளில் அவர்கள் இறை வணக்கத்தைத் தவிர வேறெதிலும் ஈடுபடக்கூடாது.

ஆகவே, போரில் வெற்றியை வெள்ளிக்கிழமை சூரியன் அஸ்தமிக்கும் முன்பாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் அந்த சோதனை.

வெற்றியின் சமீபத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்ற வேளையில் சூரியனும் அஸ்தமிக்க நெருங்கிக்கொண்டிருந்தது.

இந்த நேரத்தில் நபி யூஷஃ இப்னு நூன் {அலை} அவர்கள் சூரியனின் ஓட்டத்தை தடுத்து நிறுத்துமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.

அல்லாஹ்வும் அவர்கள் வெற்றி பெறும் வரை சூரியனின் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தி, பின்னர் சூரியனை அஸ்தமிக்க வைத்தான்.                                    

   ( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் )

 இறை உதவியை தொட்டு விட இரண்டு தேவை..


இறுதி வரை களத்தில் நின்று போராட வேண்டும்….

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِذَا لَقِيتُمْ فِئَةً فَاثْبُتُواْ وَاذْكُرُواْ اللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلَحُونَ (45)

இறைநம்பிக்கை கொண்டோர்களே! நீங்கள் எதிரிகளைச் சந்தித்தால் அவர்களை எதிர்த்து போராடுவதில் உறுதியாக இருங்கள்; அல்லாஹ்வை அதிகம் திக்ர் செய்யுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்”.                ( அல்குர்ஆன்: 8: 45 )
                                           
மேற்கூறிய இறைவசனத்தில் அல்லாஹ் வெற்றிக்கான காரணிகளாக இரண்டு அம்சங்களை குறிப்பிடுகின்றான். வெற்றிக்கான காரணிகளில் இந்த இரண்டு அம்சங்களும் முக்கியத்துவமும் மகத்துவமும் வாய்ந்தவையாகும்.

1.   இறுதிவரை களத்தில் நின்று போராடுவது. 2. அல்லாஹ்வை நினைப்பதை அதிகப்படுத்துவது. (அதாவது இபாதத்களை அதிகப்படுத்துவது)

இப்போது, இந்த சமூகம் போராட்ட களத்தில் கவனமெடுப்பது போன்று இபாதத்களின் போதும் சற்று கூடுதலாக கவனமெடுக்க வேண்டும்.

இரண்டாம் நூற்றாண்டு ஹிஜ்ரி 200 க்கும் 280 க்கும் இடைப்பட்ட ஆண்டுகள் இஸ்லாமிய உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய காலம் என்றே சொல்ல வேண்டும்.

முஃதஜிலாக்களின் ஆதிக்கம் ஓங்கி இருந்த தருணம் அது. அப்பாஸிய ஆட்சியாளர்களில் சிலரும் கூட அவர்களோடு கை கோர்த்துக் கொண்டு இஸ்லாமிய கொள்கைகளில், கோட்பாடுகளில் சராமாரியாக விளையாடிக் கொண்டிருந்த அபாயகரமான, குழப்பமான சூழல் அது.

குர்ஆன் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்டது அல்ல. அது அல்லாஹ்வால் படைக்கப்பட்டது என்கிற புதியதோர் குழப்பத்தை ஆட்சியாளர்களின் துணை கொண்டு முஃதஜிலாக்கள் நிறுவ முயன்று கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்தில் அன்றைய உலமாக்கள் அணி திரண்டு கடுமையாக எதிர்த்தனர். எதிர்த்த அத்துனை உலமாக்களும் மிரட்டப்பட்டனர். சிலர் சிறை வைக்கப்பட்டனர். சிலர் சித்ரவதை செய்யப்பட்டனர்.

உலமாக்களை சிறைகளிலும், வீடுகளிலும் முடக்கி விட்டு தங்களின் புதிய விஷமக் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்றனர். மக்களும் அவர்களின் தர்க்க ரீதியிலான வாதங்களுக்கு முன்னால் தோற்றுப் போய் குர்ஆன் படைக்கப்பட்டது தான் எனும் கருத்துக்கு உடன் பட ஆரம்பித்தனர்.

உடன்பட மறுக்கின்றவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். எதிர்த்துப் போராடுகின்றவர்கள் சிலுவையில் அறையப்பட்டு கழுகளுக்கும், விலங்கினங்களுக்கும் இரையாக ஆக்கப்பட்டனர்.

لم يصبر فى المحنة إلا أربعة : أحمد بن حنبل أبو عبد الله . و أحمد بن نصر بن مالك الخزاعى ، و محمد بن نوح بن ميمون المضروب ، و نعيم بن حماد و قد مات فى السجن مقيدا ، فأما أحمد بن نصر فضربت عنقه .و مات محمد بن نوح فى فتنة الخليفة المأمون ، والخليفة المعتصم ضرب الإمام أحمد بن حنبل .
قال الحافظ فى "تقريب التهذيب" ص / 85 :قتل ظلما .

இந்த தருணத்தில் உலமாக்களில் தலை சிறந்த உலமாக்களாக அன்றைய காலத்தில் அறியப்பட்ட இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள், இமாம் அஹ்மத் இப்னு நஸ்ர் (ரஹ்) அவர்கள், முஹம்மத் இப்னு நூஹ் (ரஹ்) அவர்கள், நயீம் இப்னு ஹம்மாது (ரஹ்) ஆகிய நால்வரும் வெகுண்டெழுந்து, மக்களை ஒன்று திரட்டி குர்ஆன் படைக்கப்படது என்று கூறுவதும், நம்புவதும் ஷரீஆவிற்கு முரணானது, குர்ஆன் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்டது என்று கூறி பிரச்சாரம் செய்தனர்.

ஆனாலும், அப்பாஸிய ஆட்சியாளர்கள் இந்நான்கு இமாம்களுக்கும் சித்ரவதைகளையும், சிறைக்கூடங்களையும், கொடூர மரணங்களையும் பரிசாக வழங்கினர்.

இமாம் முஹம்மத் இப்னு நூஹ் (ரஹ்) அவர்கள் சிறைக்குள் அடித்து சித்ரவதை செய்யப்பட்டார்கள். கலீஃபா மாமூன் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட கலகம் ஒன்றில் கலகக்காரர்களால் கொல்லப்பட்டு ஷஹீத் ஆக்கப்பட்டார்கள்.

இமாம் நயீம் இப்னு ஹம்மாது (ரஹ்) அவர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு, உண்ண உணவு கொடுக்கப்படாமலும், குடிக்க நீர் வழங்கப்படாமலும், சங்கிலியால் கட்டப்பட்ட நிலையிலேயே ஷஹீதாக ஆக்கப்பட்டார்கள்.

ஆட்சியாளர் முஃதஸிம் அவர்களின் கட்டுங்கடங்காத சித்ரவதைகளை உடல் முழுவதும் தாங்கியவர்களாக இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் அநியாயமாக கொல்லப்பட்டு ஷஹீதாக ஆக்கப்பட்டார்கள்.

أن هذه المحنة التي وقعت عامة بأرض الإسلام لم يصمد فيها سوى الإمام أحمد، وقد تداوله ثلاثة خلفاء يسلطون عليه من شرق الأرض إلى غربها ومعهم من العلماء المتكلمين والقضاة والوزراء والأمراء والولاة والقادة العسكريين، فبعضهم تسلط عليه بالحبس وبعضهم بالتهديد والوعيد بالقتل، وبعضهم جلده وعذبه وألقاه في غياهب السجون، وبعضهم بالنفي والتشريد والمطاردة

ஆட்சியாளர் மாமூன், அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த அவரின் மகன் முஃதஸிம் அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த அவரின் மகன் வாஸிக் ஆகியோர் பிழையான கொள்கையில் இருந்ததோடு மாத்திரமல்லாமல் ஆயிரக்கணக்கான மக்களை, மார்க்க அறிஞர்களை, ஸாலிஹீன்களை இந்த பிழையான கொள்கையின் பெயரால் சித்ரவதை செய்தனர்.

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் இம்மூன்று ஆட்சியாளர்களின் வசம் சிக்கி சின்னாபின்னமாக்கப்பட்டார்கள். அல்லாஹ்வின் பெரும் கருணையின் துணை கொண்டே இமாம் அவர்கள் முஸ்னத் அஹ்மத் மற்றும் இதர நூற்களை தொகுத்து வழங்கினார்கள்.

வரலாற்று நிகழ்வு என்ன  தெரியுமா ?

மூன்று அரசர்கள் மாறினார்கள் , ஆனால் இமாமின் போராட்டம் மாறவில்லை. போராட்டம் வெற்றி பெறும் வரை பின்வாங்காமல் களத்தில் நின்றார்கள்.

இறுதியில் நான்காவதாக வந்த அப்பாஸிய அரச குடும்பம் இமாமுக்கு பணிந்தது. தன்னுடைய கருத்தை மாற்றிக் கொண்டது.

في مجلس محاكمة الامام احمد بن نصر ،جلس الواثق و قال لأحمد بن نصر : دع ما أخذت له ، ما تقول فى القرآن ؟ قال : كلام الله .
قال : أفمخلوق هو ؟ قال : كلام الله

அன்றொரு நாள், ஆட்சியாளர் வாஸிக் முன் கொண்டு வரப்பட்ட இமாம் அஹ்மத் இப்னு நஸ்ரு (ரஹ்) அவர்களிடத்திலே அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டு துளைக்கிறார் வாஸிக்.

எதற்கும் அஞ்சாத நெஞ்சத்தோடு பதில் கூறினார்கள் இமாமவர்கள்.

குர்ஆன் விஷயத்தில் உங்களின் நிலைப்பாடு என்ன?

இமாமவர்கள்: அது அல்லாஹ்வின் வார்த்தை.

குர்ஆன் படைக்கப்பட்டது தானே?

இமாமவர்கள்: இல்லை, குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை.

ثم التفت الخليفة الواثق إلى أعوانه ومستشاريه في المجلس وقال
ما تقولون فيه ؟
فقال عبد الرحمن بن إسحاق هو حلال الدم . و قال جماعة من الفقهاء
المعتزلة - كما قال ، فأظهر ابن أبى دؤاد أنه كاره لقتله ، فقال للواثق
ياأمير المؤمنين شيخ مختل ، لعل به عاهة ، أو تغير عقل ، يؤخر أمره و يستتاب .
فقال الواثق : ما أراه إلا مؤديا لكفره ، قائما بما يعتقده منه .
و دعا الواثق بالصمصامة و قال : إذا قمت إليه ، فلا يقومن أحد معى ، فإنى أحتسب خطاى إلى هذا الكافر ، الذى يعبد ربا لا نعبده ، و لا نعرفه بالصفة التى وصفه بها ، ثم أمربالنطع ،

வாஸிக் சுற்றியிருந்தவர்களை நோக்கி இவர் விஷயத்தில் என்ன கூறுகின்றீர்கள்? என்று கேட்க,

முஃதஜிலாக்களின் அறிஞர் ஒருவர் இவரைக் கொலை செய்வது தான் சரியான முடிவாகும். இவர் காஃபிர் என்கிறார்.

அருகில் இருந்த மார்க்க அறிஞர்கள், இமாமவர்களை ஏதும் செய்து விடாதீர்கள் என பதறுகின்றார்கள்.

கொஞ்ச நேரத்தில் இதயத்தை சுக்கு நூறாக்குகிற காரியத்தை வாஸிக்கே முன் நின்று செய்தார்.

ஆம்! உடல் வேறாக, தலை வேறாக வெட்டப்படுகின்றது.

وقال جعفر بن محمد الصائغ : « بصرت عيناي وإلا فقئتا وسمعت أذناي وإلا فصمتا أحمد بن نصر الخزاعي حين ضربت عنقه يقول رأسه : لا إله إلا الله ؛ وقد سمعه بعض الناس وهو مصلوب على الجذع ورأسه يقرأ : (الم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ) قال :فاقشعر جلدي،

இமாம் ஜஅஃபர் இப்னு முஹம்மத் அஸ் ஸாயிஃக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இமாம் அஹ்மத் இப்னு நஸ்ர் (ரஹ்) அவர்களின் கழுத்தை வெட்டி தலையை துண்டாக எடுத்த போது அவர்களின் தலை لا إله إلا الله என்று சொன்னதை என் கண்களால் பார்த்தேன். என் காதுகளால் கேட்டேன்.

இமாம் அவர்களின் தலையை சிலுவையில் தொங்க விட்ட போது அவர்களின் தலை الم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنونஓதியதை மக்கள் கேட்டதாக என்னிடம் சொன்ன போது உண்மையில் என் உடலெல்லாம் புல்லரித்துப் போனதை நான் உணர்ந்தேன்.

ஹிஜ்ரி 231 ஷஅபான் மாதத்தின் பிறை 28 வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டு, அவர்களின் தலை வேறாக முண்டம் வேறாக இருவேறு சிலுவைகளில் அறையப்பட்டு பக்தாத் மாநகரின் கிழக்குப் பகுதியில் ஒரு பாகமும், மேற்குப்பகுதியில் ஒரு பாகமும் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.

، وعلقوا في أذنه رقعة مكتوب عليها : « بسم الله الرحمن الرحيم ، هذا رأس أحمد بن نصر بن مالك ، دعاه عبد الله الإمام هارون ، و هو الواثق بالله أمير المؤمنين ، إلى القول بخلق القرآن ، و نفى التشبيه ، فأبى إلا المعاندة فعجله الله إلى ناره .

இனி எவரும் குர்ஆன் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்டது என்று முழங்குவதற்கு முன் வருவாரானால் அவருக்கும் இதே கதி தான் என்றும், ஆட்சியாளர் முஃதஸிம் நேர்வழியில் இருக்கின்றார், இதோ இந்த அஹ்மத் இப்னு நஸ்ரோ ( நவூதுபில்லாஹ்… ) குஃப்ரிய்யத்தில் இருக்கின்றார் என்று எழுதப்பட்ட ஓர் ஓலையை தலையை துண்டாக வெட்டி, அவர்களின் ஒரு பக்க காதில் ஓட்டை போட்டு அதில் தொங்க விட்டு, சிலுவையில் அறைந்திருந்தனர்.

ولم يزل رأسه منصوباً من يوم الخميس الثامن والعشرين من شعبان من هذه السنة أعني سنة إحدى وثلاثين ومائتين( 28 شعبان/231 هـ) إلى بعد عيد الفطر بيوم أو يومين من سنة سبع وثلاثين ومائتين ، فجمع بين رأسه وجثته ودفن بالجانب الشرقي من بغداد بالمقبرة المعروفة « بالمالكية» ، رحمه الله . وذلك بأمر «المتوكل على الله» الذي ولى الخلافة بعد أخيه «الواثق» .
دخل عبد العزيز بن يحي الكتائي صاحب كتاب الحيدة على «المتوكل» ، وكان من خيار الخلفاء لأنه أحسن الصنيع لأهل السنة بخلاف أخيه «الواثق» وأبيه «المعتصم» ،وعمه «المأمون» ، فإنهم أساؤا إلى أهل السنة ،وقربوا أهل البدع والضلال من المعتزلة ،وغيرهم ، فأمره أن ينزل جثة أحمد بن نصر ويدفنه ففعل

இதை விட மிகப் பெரிய கொடுமை என்னவென்றால், அவர்களின் உடல் சுமார் 34 நாட்கள் அதாவது ஷவ்வால் பிறை 2 வரை இவ்வாறே இரண்டு பகுதிகளிலும் மக்கள் பார்வைக்காக தொங்க விடப்பட்டிருந்தது.

அதன் பின்னர், ஆட்சியாளராக பொறுப்பேற்ற முதவக்கில் அவர்கள் உடலின் இருபாகங்களையும் ஒன்று சேர்த்து கஃபன் செய்து நல்லடக்கம் செய்ய உத்தரவிட்டார்கள்.      ( நூல்: அல்பிதாயா வன் நிஹாயா 10/306, தஹ்தீபுல் கமால் )

ஒதுங்கி நிற்பதன் ஆபத்துகளும்வேடிக்கை பார்ப்பதன் விபரீதங்களும்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கெதிரான போராட்ட களங்களில் பங்கெடுக்காமலும், யாருக்கோ, எங்கேயோ ஏதோ நடக்கிறது என்கிற தொனியில் பேசுகின்றவர்களும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

عن أبي ذر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال
من لم يهتم بأمر المسلمين فليس منهم
أخرجه الطبراني في "المعجم الأوسط" (1/29)

முஸ்லிம் சமூகத்தின் விவகாரங்களில் யார் ஒதுங்கி இருக்கின்றார்களோ, கவலைப் படாமல் இருக்கின்றார்களோ அவர்கள் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்தவர்களே அல்லர்என நபி {ஸல்} அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.                                              ( நூல்: தப்ரானீ )

தபூக் யுத்தத்திற்கு வராமல் ஊரிலேயே தங்கி விட்டவர்களின் நிலைமை, அவர்களுக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார நெருக்கடி, அவர்களின் மன்னிப்பு என பேசி வந்த இறைவன் தொடர்ந்து அவர்களின் செயல் குறித்து ஆதங்கத்துடன் பதிவு செய்வதை அவ்வளவு எளிதாக ஒரு முஃமின் கடந்து போய்விட முடியாது.

مَا كَانَ لِاَهْلِ الْمَدِيْنَةِ وَمَنْ حَوْلَهُمْ مِّنَ الْاَعْرَابِ اَنْ يَّتَخَلَّفُوْا عَنْ رَّسُوْلِ اللّٰهِ وَ لَا يَرْغَبُوْا بِاَنْفُسِهِمْ عَنْ نَّـفْسِهٖ ‌ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ لَا يُصِيْبُهُمْ ظَمَاٌ وَّلَا نَصَبٌ وَّلَا مَخْمَصَةٌ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا يَطَــٴُـــوْنَ مَوْطِئًا يَّغِيْظُ الْكُفَّارَ وَلَا يَنَالُوْنَ مِنْ عَدُوٍّ نَّيْلاً اِلَّا كُتِبَ لَهُمْ بِهٖ عَمَلٌ صَالِحٌ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَۙ‏
மதீனா வாசிகளானாலும் சரி, அல்லது அவர்களைச் சூழ்ந்திருக்கும் கிராமவாசிகளானாலும் சரி, அவர்கள் அல்லாஹ்வின் தூதரைப்பிரிந்து பின் தங்குவதும், அல்லாஹ்வின் தூதரின் உயிரைவிடத் தம் உயிரையே பெரிதாகக் கருதுவதும் தகுதியுடையதல்ல;

ஏனென்றால் அல்லாஹ்வின் பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், களைப்பு (துயர்) பசி, காஃபிர்களை ஆத்திரமூட்டும்படியான இடத்தில் கால்வைத்து அதனால் பகைவனிடமிருந்து துன்பத்தையடைதல் ஆகிய இவையாவும் இவர்களுக்கு நற்கருமங்களாகவே பதிவு செய்யப்படுகின்றன - நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை வீணாக்க மாட்டான்.
                                                     
وَلَا يُنْفِقُوْنَ نَفَقَةً صَغِيْرَةً وَّلَا كَبِيْرَةً وَّلَا يَقْطَعُوْنَ وَادِيًا اِلَّا كُتِبَ لَهُمْ لِيَجْزِيَهُمُ اللّٰهُ اَحْسَنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ
இவர்கள் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ, (எந்த அளவு) அல்லாஹ்வின் வழியில் செலவு செய்தாலும், அல்லது (அல்லாஹ்வுக்காக) எந்தப் பள்ளத்தாக்கை கடந்து சென்றாலும், அது அவர்களுக்காக (நற்கருமங்களாய்) பதிவு செய்யப்படாமல் இருப்பதில்லை; அவர்கள் செய்த காரியங்களுக்கு, மிகவும் அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுக்கிறான்.           ( அல்குர்ஆன்:  9: 120 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய மகத்தான உதவியை வழங்கி, ஃபாசிஸ எதிரிகளுடனான இந்த போராட்டத்தில் பிரம்மாண்டமான வெற்றியை நல்குவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

6 comments:

  1. அருமையான பதிவு...
    ஆனால் இந்த உரை நிகழ்த்த குறைந்த பட்சம் மூன்று மணி நேரமாவது தேவைப்படும் .......

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் மிகவும் அருமை

    ReplyDelete
  3. Alhadulillah arpudam moulana jazakallah hairan

    ReplyDelete
  4. காலத்திற்கேற்ப ஜும்ஆ குறிப்புகளை அள்ளி வழங்கியுள்ளீர்கள். جزاكم الله خيرا كثيرا يا استاذ திருப்பூர்

    ReplyDelete
  5. மாஷா அல்லாஹ்

    ReplyDelete