நிராயுதபாணிகளுக்கு உதவுவோம்!!!
குடியுரிமை திருத்தச்
சட்டத்திற்கெதிராக நாட்டின்
பலபகுதிகளிலும் ஷாஹீன் பாக்குகள்
– (தொடர் இருப்பு போராட்டக்களங்கள்)
அமைத்து மக்கள் அறவழியில்,
அமைதியான முறையில் போராடி
வருகின்றனர்.
குடியுரிமை திருத்தச்
சட்டத்தை அரசு திரும்பப்பெற
வேண்டும் என்பதை வலியுறுத்தியும்,
இந்திய அரசியல் சாசனம்
பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை
முன்னிறுத்தியும் இந்த
போராட்டக்களங்களில் பெண்கள்,
மாணவர்கள் உட்பட நாட்டின்
அனைத்து தரப்பு மக்களும்
போராடி வருகின்றனர்.
இந்த போராட்டக்களங்களை முடிவுக்கு கொண்டு
வர ஆளும் மத்திய
அரசு பல்வேறு வகையான
முயற்சிகளை மேற்கொண்டும் பலனில்லாமல்
போகவே, அவர்களின் அஜெண்டாவின்
படி தங்களது சங்கப்பரிவார,
பஜ்ரங்தள, ஆர்எஸ்எஸ் குண்டர்களை,
பாஜக தொண்டர்களை குடியுரிமை
திருத்தச் சட்ட ஆதரவு
பேரணி என்கிற பெயரில்
களமிறக்கி வடகிழக்கு டெல்லியை
கலவர பூமியாக மாற்றி
விட்டனர்.
கடந்த பிப்ரவரி,
23,24,25, ஆகிய தேதிகளில் வரலாறு
காணாத வன்முறையை கட்டவிழ்த்து
விட்டனர். சுமார் 72 மணி
நேரம் வடகிழக்கு டெல்லியின்
பல பகுதிகளைத் தங்களது
கட்டுப்பாட்டின் கீழ்
கொண்டு வந்து, காவல்
துறையின் சில கரும்புள்ளிகளை தங்களோடு இணைத்துக்
கொண்டு கொலை வெறியாட்டம்
நடத்தினர்.
விகடன் குழுமத்தின்
செய்தி சேகரிப்பின் படி
இதுவரை சுமார் 56 பேர்
உயிரிழந்துள்ளனர். 200 க்கும் மேற்பட்டோர்
படுகாயம் அடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில், படுகாயம்
அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை
பெறுபவர்களில் பாதிக்கும் மேற்ப்பட்டோர்
துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளனர்.
முஸ்லிம்களின் கடைகள்,
வீடுகள், வணிக நிறுவனங்கள்,
வாகனங்கள், பள்ளி வாசல்
தர்ஹா என அனைத்தும்
குறி வைத்து பெட்ரோல்
குண்டுகள் மற்றும் கேஸ்
சிலிண்டர்களை பயன்படுத்தி வெடிக்க
வைத்து கடும் சேதாரத்துக்குள்ளாக்கி இருக்கின்றனர்.
பண்ட பாத்திரங்கள்,
பொருட்கள், பணம், தங்க
நகைகள் என அனைத்தையும்
சூரையாடிச் சென்றிருக்கின்றனர்.
இந்நிலையில் கலவரத்தால்
பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியை
ஆய்வு செய்யவும், வன்முறையால்
பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து
ஆறுதல் கூறவும், ஏற்படுத்தப்பட்ட சேதாரங்களை கணக்கிடவும்,
தேவைகள் என்னென்ன என்பதை
அறியவும் கடந்த 02/03/2020 அன்று
தமிழ் மாநில ஜமாஅத்துல்
உலமா சபையின் தலைவர்
உட்பட உயர்மட்ட நிர்வாகிகள்
டெல்லி சென்றனர்.
டெல்லியில் இருந்து
திரும்பி வந்த அவர்கள்
“டெல்லி வன்முறை என்பது
அரசே முன்னின்று நடத்திய
இனப்படுகொலை என்று கண்டனம்
தெரிவித்ததோடு இறுக்கமான சூழலில்,
அச்சமான நிலையில் பல்வேறு
இழப்புக்களை சந்தித்த நிலையில்
கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள்
இருப்பதாக கூறினார்கள்.
மேலும், அவர்கள்
இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும்
பொருட்டு தேவையான மறுகட்டமைப்பு,
வீடுகளை, கடைகளை, வணிக
நிறுவனங்களை, பள்ளிவாசல் மற்றும்
தர்காவை சீரமைத்தல், அன்றாட
வாழ்க்கைத்தேவைகளுக்கான உணவு
மற்றும் இதர செலவினங்கள்
ஆகியவற்றை ஈடு செய்ய
கோடிக்கணக்கில் பணம் தேவைப்படுவதாக
கூறினார்கள்.
அத்தோடு நின்றுவிடாமல்
அந்த தேவைகளை ஈடு
செய்யும் பொருட்டு ஈமானிய
சொந்தங்களாக இருக்கும் நாம்
பெருமளவில் உதவிட முன்வர
வேண்டும் என்று கேட்டுக்
கொண்டதோடு இந்த வார
ஜும்ஆ வசூலை அந்த
மக்களுக்கு வழங்கி உதவிடுமாறு
கோரிக்கை அடங்கிய அறிவிப்பை
வெளியிட்டுள்ளனர்.
இன்ஷா அல்லாஹ்
அந்த மக்களுக்காக உங்களால்
இயன்ற அளவிலான உதவிகளைச்
செய்யுங்கள் அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் ஈருலகிலும் அதற்குரிய
பிரதிபலனை மிகச் சிறந்த
முறையில் வழங்குவான்.
வன்முறை, கலவரம்
ஆகியவை மிகவும் ஆபத்து
மிக்கவை என்பதை நாம்
உணர்ந்திருக்கின்றோம். வன்முறையின் வீரியத்தை
நாம் அனுபவித்து இருக்கின்றோம்.
வன்முறையாளர்களிடம் சிக்கிக்
கொண்ட மனிதர்களை அவ்வளவு
எளிதாக மாநபி {ஸல்}
அவர்கள் கடந்து போய்விட
வில்லை. அவர்களுக்காக கவலைப் பட்டார்கள்.
அவர்களைச் சந்தித்து ஆறுதல்
கூறினார்கள். அவர்களுக்காக துஆ
செய்தார்கள். அவர்களுக்கு உதவிடுமாறு
ஏவினார்கள். வன்முறையாளர்களின் தீங்குகளில்
இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு
அறிவுறுத்தினார்கள்.
வன்முறையில் கடும்
தாக்குதலுக்கு ஆளாகி படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை
பெற்று வருபவர்களுக்கும், ஷஹீதாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் முதலில்
ஆறுதலும் சோபனமும் சொல்வோம். அடுத்து அவர்களின் சிரமங்கள், துயரங்கள் நீங்குவதற்காக
துஆச் செய்வோம்.
قال أنس
رضى الله عنه " إن جبريل أتى رسول الله صلّى الله عليه وسلم وعنده ابن ام
مكتوم فقال له متى ذهب بصرك قال وانا غلام فقال جبريل الأمين له : قال الله تبارك
وتعالى : إذا ما أخذت كريمة عبدى لم أجد له بها جزاء الا الجنة ، هكذا وعد الله
إبن أم مكتوم بالجنة وبشره بها جبريل عليه السلام.
البداية والنهاية أبو الفداء الحافظ بن كثير
البداية والنهاية أبو الفداء الحافظ بن كثير
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“ ஒரு நாள் பொழுது அண்ணலார் சபையில் ஜிப்ரயீல் (அலை)
அவர்கள் வருகை தந்திருந்தார்கள். அப்போது
அங்கே இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களும்
அமர்ந்திருந்தார்கள்.
அப்போது, அண்ணலார் {ஸல்} அவர்கள்
தங்களருகே இப்னு உம்மி மக்தூம் அவர்களை அழைத்து, ”அப்துல்லாஹ்
அவர்களே உங்களின் பார்வை பிறவியிலேயே இப்படியா? அல்லது
இடையிலே ஏற்பட்ட ஏதேனும் கோளாரில் பார்வை பரிபோனதா?” என்று
அன்பொழுக விசாரித்தார்கள்.
அப்போது, அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், தாம் சிறுவயதாக இருக்கும் போது ஏற்பட்ட ஒரு
சூழ்நிலையில் பார்வை பறிபோனதாக தெரிவித்தார்கள்.
அப்போது ஜிப்ரயீல் (அலை) அவர்கள், நபிகளாரிடம்
“சங்கையான என்னுடைய அடியானிடம் இருந்து நாம் ஏதேனுமொரு அருட்கொடையை
எடுத்துக் கொண்டோம் எனில், அதற்குப் பகரமாக நாம் சுவனத்தைத்
தவிர வேறெதையும் கூலியாக வழங்குவதில்லை” என்று அல்லாஹ்
கூறியதாக கூறினார்கள். ( நூல்: அல்பிதாயா
வந்நிஹாயா )
அவர்களுக்கு உதவுவது நமக்கான கடமை என்பதை உணர்வோம்!
عن أبي
ذر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال
من لم
يهتم بأمر المسلمين فليس منهم
أخرجه الطبراني في "المعجم الأوسط" (1/29)
أخرجه الطبراني في "المعجم الأوسط" (1/29)
“முஸ்லிம் சமூகத்தின் விவகாரங்களில் யார் ஒதுங்கி இருக்கின்றார்களோ, கவலைப் படாமல் இருக்கின்றார்களோ அவர்கள்
முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்தவர்களே அல்லர்” என நபி {ஸல்} அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள். (
நூல்: தப்ரானீ )
وَلَا
يُنْفِقُوْنَ نَفَقَةً صَغِيْرَةً وَّلَا كَبِيْرَةً وَّلَا يَقْطَعُوْنَ وَادِيًا
اِلَّا كُتِبَ لَهُمْ لِيَجْزِيَهُمُ اللّٰهُ اَحْسَنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ
இவர்கள் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ, (எந்த அளவு) அல்லாஹ்வின்
வழியில் செலவு செய்தாலும், அல்லது (அல்லாஹ்வுக்காக) எந்தப் பள்ளத்தாக்கை கடந்து சென்றாலும், அது அவர்களுக்காக (நற்கருமங்களாய்) பதிவு செய்யப்படாமல் இருப்பதில்லை; அவர்கள் செய்த காரியங்களுக்கு, மிகவும் அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுக்கிறான்.
( அல்குர்ஆன்: 9: 120 )
1. சேவையும் இறைவழிபாடுதான்…
அல்குர்ஆன் இறைவனுக்கு வழிபடுவதை மனித வாழ்க்கையின் லட்சியம் எனக் குறிப்பிடுகிறது.
وَمَا خَلَقْتُ الْجِنَّ
وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ ()
“நான் ஜின்களையும், மனிதர்களையும் எனக்கு வழிபட வேண்டும் என்பதற்காகவேயன்றி வேறு எதற்காகவும்
படைக்கவில்லை”. ( அல்குர்ஆன்: 51: 56 )
அல்குர்ஆன்
அல்லாஹ்வின் படைப்பினங்களுக்கு, சக மனிதர்களுக்கு சேவை
செய்வதை வாழ்க்கையின் குறிக்கோள் என வலியுறுத்துகிறது.
يَا أَيُّهَا الَّذِينَ
آمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا وَاعْبُدُوا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ
لَعَلَّكُمْ تُفْلِحُونَ ()
“இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ருகூவும், ஸுஜூதும் செய்யுங்கள். மேலும், உங்கள் இறைவனுக்கு வழிபடுங்கள். மேலும், சேவையாற்றுங்கள். நீங்கள் வெற்றியடையக் கூடும்!”. ( அல்குர்ஆன்: 22: 77 )
ஒரு மனிதன் வழிபாடுகளின் மூலம் இறை உவப்பையும்,
இறை
நெருக்கத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என இஸ்லாம் தூண்டும் அதே வேளையில் அந்த
வழிபாட்டை இரு கூறுகளாக பிரித்திருக்கின்றது.
ஒன்று உடல் ரீதியிலானது. இன்னொன்று உடமை மற்றும் பொருள்
ரீதியிலானது.
இறைவனின் நெருக்கத்தை, பொருத்தத்தைப் பெறுவதற்காக எவ்வாறு உடல்
ரீதியான வழிபாடு முக்கியம் என்று குர்ஆன் வலியுறுத்துகிறதோ அதே போன்று உடமை
மற்றும் பொருள் ரீதியான வழிபாடும் முக்கியம் என வலியுறுத்துகிறது.
ஆகவே தான் குர்ஆனில் அல்லாஹ் தொழுகையையும் ஜகாத்தையும் பல இடங்களில்
ஒன்றிணைத்தே வலியுறுத்திக் கூறுகின்றான்.
இறைவனின் முன் பக்திப் பரவசத்துடன் தலை தாழ்த்துவது மட்டுமல்ல வழிபாடு என்பது.
மாறாக, தான் சம்பாதித்து சேர்த்து வைத்திருக்கிற
செல்வத்தில் சக மனிதர்களுக்கும் உரிமை உள்ளது என்ற உணர்வுடன் சேவையாற்றுவதும், உதவிக்கரம் நீட்டுவதும் வழிபாடு தான் என்பதை உணர்த்துவதற்காகத் தான் உடல்
ரீதியான தொழுகையையும், பொருள் ரீதியான ஜகாத்தையும் இணைத்தே
அல்லாஹ் கூறியிருக்கின்றான்.
وَأَحْسِنْ كَمَا أَحْسَنَ
اللَّهُ إِلَيْكَ
”அல்லாஹ் உமக்கு உபகாரம் செய்திருப்பதைப்
போன்று நீயும் சக மனிதர்களுக்கு உபகாரம் செய்”. ( அல்குர்ஆன்: 28: 77 )
2. உதவும் பண்பு முஸ்லிம்களிடம் இருக்க வேண்டிய உயர் பண்பாகும்..
أصابت خيل رسـول اللـه -صلى اللـه عليه وسلم- ابنة
حاتم الطائي في سبايا
طيّ فقدمتْ بها على رسـول الله -صلى الله عليه وسلم-فجُعِلَتْ في حظيرة بباب
المسجد فمرّ بها رسول الله -صلى الله عليه وسلم- فقامت إليه وكانت امرأة جزلة ، فقالت يا رسول الله هَلَكَ الوالِد وغابَ الوافد،فقال ومَنْ وَافِدُك ؟، قالت عدي بن حاتم ، قال الفارُّ من الله ورسوله ؟، ومضى حتى مرّ ثلاثاً ، فقامت وقالت يا رسول الله هَلَكَ الوالِد وغابَالوافد فامْنُن عليّ مَنّ الله عليك قال قَدْ فعلت ،
طيّ فقدمتْ بها على رسـول الله -صلى الله عليه وسلم-فجُعِلَتْ في حظيرة بباب
المسجد فمرّ بها رسول الله -صلى الله عليه وسلم- فقامت إليه وكانت امرأة جزلة ، فقالت يا رسول الله هَلَكَ الوالِد وغابَ الوافد،فقال ومَنْ وَافِدُك ؟، قالت عدي بن حاتم ، قال الفارُّ من الله ورسوله ؟، ومضى حتى مرّ ثلاثاً ، فقامت وقالت يا رسول الله هَلَكَ الوالِد وغابَالوافد فامْنُن عليّ مَنّ الله عليك قال قَدْ فعلت ،
ஹாத்திம் தாயி என்பவருடைய மகள் ஸஃபானாவும், அவரின் கோத்திரத்தாரும் கைதியாக
பிடிக்கப்பட்டு மதீனாவின் மஸ்ஜித்துன் நபவீயின் முன்னால் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த தருணம் அது..
அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை வறியோருக்கும், எளியோருக்கும், வாழ வழியில்லாதோருக்கும் கலங்கரை
விளக்கமாய் இருந்தவர். உயிருடன் வாழும் காலம் வரைக்கும் ஈந்து கொடுப்பதை
வழக்கமாய் கொண்டிருந்த மாமனிதர் அவர். ஆனால்,
நானும், என் சமூகமும் இன்று இப்படி நிராயுதபாணிகளாய் நின்று கொண்டிருக்கின்றோம். எங்கள் மீது கருணை காட்டுங்கள்! உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவான்!” என்று ஸஃபானா தழுதழுத்த குரலில் நபி {ஸல்} அவர்களிடம் கூறினார்.
قال
رسـول الله صلى الله عليه وسلم
(( ارحموا عزيز قوم ذلّ ، وغنياً افتقر ، وعالماً ضاع بين جهّال ))
[ ذكر هذه ابن هشام في سيرته ،
والطبري في تاريخه ]
நீண்ட உரையாடலுக்குப் பின்னர் அண்ணலார் ஸஃபானாவின் தந்தையை வாழ்த்தி விட்டு, விடுதலை அளிப்பதாக கூறிவிட்டு அணிய ஆடையும்,
உண்ண உணவும், செலவுக்கு பணமும் கொடுத்து விட்டு சுற்றியிருந்த தோழர்களை நோக்கி “கண்ணியமானவர்கள் இழிவடைந்த நிலையில் இருப்பதைக் கண்டாலோ, வசதி படைத்தவர்கள் வறுமையில் மாட்டிக் கொண்டாலோ, அறிவுபடைத்தவர்கள் முட்டாள்களிடத்தில் சிக்கிக் கொண்டாலோ
உடனடியாக அவர்களுக்கு உதவுங்கள்” என கூறினார்கள்.
பின்னர், தகுந்த பாதுகாப்போடு ஸஃபானாவை அவரின்
சொந்த ஊரான ஷாமுக்கு அனுப்பி வைத்தார்கள். (
நூல்: இப்னு ஹிஷாம், அத்தாரிக் லித் தபரீ )
இப்போது, முஸ்லிம் சமூகம் அண்ணலாரின் இந்த அன்புக்
கட்டளையைத் தானே செய்திருக்கின்றது.
எனவே, அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் வலியுறுத்திய கடமையைத் தான்
செய்திருக்கின்றோம் என்பதை மனதில் நிறுத்த வேண்டும்.
முஸ்லிம் சமூகம் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு
வாழ்க்கைக்கு திரும்பும் வரை தொடர்ந்து உதவிக்கரம் நீட்டிக் கொண்டிருக்க வேண்டும்.
நம்மை நோக்கி வருகிற பிற சமூக மக்களின் வாழ்த்துக்களை, பாராட்டுக்களை எண்ணி, அகமகிழ்ந்து போகிறோம் எனில் இஸ்லாம் மனித
நேயப் பணிகளுக்கு வழங்குகிற அபரிமிதமான நன்மைகளை இழக்கும் அபாயம் நேரிடலாம்.
3. மனிதனுக்கு செய்யும் சேவை இறைவனுக்கு
செய்யும் சேவையே!..
وعن أبي هريرة رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله
عز وجل يقول يوم القيامة يا ابن آدم مرضت فلم تعدني قال يا رب كيف أعودك وأنت رب
العالمين قال أما علمت أن عبدي فلانا مرض فلم تعده أما علمت أنك لو عدته لوجدتني
عنده يا ابن آدم استطعمتك فلم تطعمني قال يا رب كيف أطعمك وأنت رب العالمين قال
أما علمت أنه استطعمك عبدي فلان فلم تطعمه أما علمت أنك لو أطعمته لوجدت ذلك عندي
يا ابن آدم استسقيتك فلم تسقني قال يا رب كيف أسقيك وأنت رب العالمين قال استسقاك
عبدي فلان فلم تسقه أما علمت أنك لو سقيته لوجدت ذلك عندي رواه مسلم
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் எங்களை நோக்கி “மறுமை நாளில் அல்லாஹ் மனிதனிடம் “மனிதனே!
நான்
நோய்வாய்ப்பட்டிருந்தேன். நீயோ என்னை நலம் விசாரிக்க வரவில்லையே!” என்று கேட்பான்.
மனிதன் பதைபதைப்போடு “என் இறைவனே! நீ தானே அனைத்துலகையும் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கின்றாய்! உன்னை எப்படி நான் வந்து நலம் விசாரிப்பது” என்று கேட்பான்.
அப்போது, அல்லாஹ் “இன்ன மனிதன் நோயுற்றிருந்ததை நீ
அறிந்திருந்தாய் தானே! ஆனால்,
அவனது உடல் நலம்
பற்றி நீ விசாரிக்கச் செல்லவில்லையே! நீ அவனை நலம் விசாரிக்கச் சென்றிருந்தால்
அங்கே என்னைப் பார்த்திருப்பாய்!” என்று கூறுவான்.
மீண்டும், அல்லாஹ் “மனிதா!
உன்னிடம் நான்
உணவு கேட்டேனே? நீ ஏன் எனக்கு உணவு அளிக்கவில்லை?” என்று கேட்பான்.
அதற்கு, மனிதன் “அகில உலகங்களின் இரட்சகன் நீ! எப்போது நீ பசியோடு இருந்தாய்? நான் உனக்கு எப்படி உணவளிப்பது?” என்று கேட்பான்.
அப்போது, அல்லாஹ் ““இன்ன மனிதன் பசியோடு இருந்ததை நீ
அறிந்திருந்தாய் தானே! ஆனால்,
அவனது பசியை
போக்கிட உணவு கொடுக்க வில்லையே! நீ அவனுக்கு உணவு கொடுத்திருந்தால் அங்கே
என்னைப் பார்த்திருப்பாய்!” நீ அவனது தேவையை நிறைவேற்றி இருந்தால்
அதற்கான நற்கூலியை இப்போது இங்கு பெற்றிருப்பாய்!”
என்று கூறுவான்.
மீண்டும், அல்லாஹ் “மனிதா!
நான் தாகித்த
நிலையில் உன்னிடம் வந்து தண்ணீர் கேட்டேனே? ஏன் எனக்கு நீ குடிக்கத் தண்ணீர்
தரவில்லை?” என்று கேட்பான்.
அதற்கு, மனிதன் “அகில உலகங்களின் அதிபதி நீ! எப்போது தாகித்திருந்தாய்? உனக்கு எவ்வாறு நான் தண்ணீர் புகட்டுவது?” என்று கேட்பான்.
அப்போது, அல்லாஹ் ““இன்ன மனிதன் தாகத்தோடு இருந்ததை நீ
அறிந்திருந்தாய் தானே! ஆனால்,
அவனது தாகத்தைப்
போக்கிட நீ தண்ணீர் கொடுக்க வில்லையே! நீ அவனுக்கு தண்ணீர் கொடுத்து தாகத்தை
தீர்த்திருந்தால் அங்கே என்னைப் பார்த்திருப்பாய்!”
நீ அவனது தேவையை
நிறைவேற்றி இருந்தால் அதற்கான நற்கூலியை இப்போது இங்கு பெற்றிருப்பாய்!” என்று கூறுவான்.
(
நூல்: முஸ்லிம் )
மனித குலத்திற்கு செய்யும் சேவையை இறைவன் தனக்கு செய்யும் சேவைக்கு ஒப்பாக்கி
கூறுவதில் இருந்து மனிதகுல சேவையின் முக்கியத்துவத்தை உணர முடிகின்றது.
4. பாதிப்புக்குள்ளானவர்களின் நிலை கண்டு
வாரி, வாரி வழங்க வேண்டும்..
عن جرير بن عبد الله البجلي قَالَ: كُنَّا عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ فِي صَدْرِ النَّهَارِ، فَجَاءَهُ قَوْمٌ حُفَاةٌ عُرَاةٌ
مُجْتَابِي النِّمَارِ أَوِ الْعَبَاءِ، مُتَقَلِّدِي السُّيُوفِ، عَامَّتُهُمْ
مِنْ مُضَرَ، بَلْ كُلُّهُمْ مِنْ مُضَرَ فَتَمَعَّرَ وَجْهُ رَسُولِ الله صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَا رَأَى بِهِمْ مِنَ الْفَاقَةِ، فَدَخَلَ ثُمَّ
خَرَجَ، فَأَمَرَ بِلَالًا فَأَذَّنَ وَأَقَامَ، فَصَلَّى ثُمَّ خَطَبَ فَقَالَ:
{يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ
وَاحِدَةٍ} النساء: 1 إِلَى آخِرِ الْآيَةِ،
{إِنَّ
اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا} النساء: 1 وَالْآيَةَ
الَّتِي فِي الْحَشْرِ: {اتَّقُوا اللهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ
وَاتَّقُوا اللهَ} الحشر: 18 «تَصَدَّقَ رَجُلٌ مِنْ دِينَارِهِ، مِنْ دِرْهَمِهِ، مِنْ ثَوْبِهِ،
مِنْ صَاعِ بُرِّهِ، مِنْ صَاعِ تَمْرِهِ - حَتَّى قَالَ - وَلَوْ بِشِقِّ
تَمْرَةٍ» قَالَ: فَجَاءَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ بِصُرَّةٍ كَادَتْ كَفُّهُ
تَعْجِزُ عَنْهَا، بَلْ قَدْ عَجَزَتْ، قَالَ: ثُمَّ تَتَابَعَ النَّاسُ، حَتَّى
رَأَيْتُ كَوْمَيْنِ مِنْ طَعَامٍ وَثِيَابٍ، حَتَّى رَأَيْتُ وَجْهَ رَسُولِ
اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَهَلَّلُ، كَأَنَّهُ مُذْهَبَةٌ،
فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَنَّ فِي
الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً، فَلَهُ أَجْرُهَا، وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا
بَعْدَهُ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ، وَمَنْ سَنَّ فِي
الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً، كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ
بِهَا مِنْ بَعْدِهِ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَيْءٌ»
ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “”(ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களோடு சபையில் அமர்ந்திருந்தோம்.
அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த கம்பளி ஆடை
அல்லது நீளங்கி அணிந்த ஒரு கூட்டத்தார் தம் ( கழுத்துகளில் ) வாட்களைத்
தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.
அவர்களில் பெரும்பாலானோர் முளர் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அல்லது, அவர்களில் அனைவருமே
முளர் குலத்தைச் சேர்ந்தவர்கள் தாம்.
அவர்களது வறிய நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறம்
மாறிவிட்டது.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ( ஒருவித பதட்டத்தோடு ) வீட்டுக்குள்
சென்றுவிட்டு வெளியே வந்து பிலால் (ரலி) அவர்களிடம் பாங்கு சொல்லுமாறு உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள்
தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரையொன்றை நிகழ்த்தினார்கள்.
அப்போது, “மனிதர்களே! உங்கள்
இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள்
யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர்
மனைவியையும் படைத்தான்.
பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும்
பெண்களையும் (வெளிப் படுத்தி உலகில்) பரவச் செய்தான், ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர்
(தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக்
கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது
கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்” என்கிற (4 –ஆம் அத்தியாயத்தின் 1 –ஆவது ) இறைவசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள்.
பின்னர், ‘அல் ஹஷ்ர்’ அத்தியாயத்திலுள்ள ”இறைநம்பிக்கை கொண்டோர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு
ஆன்மாவும் நாளைக் கென்று எதனை அனுப்பியுள்ளது என்பதை கவனத்திற் கொள்ளட்டும்.
அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்’ எனும் ( 59 –ஆம் அத்தியாயத்தின் 18 –ஆவது ) வசனத்தையும் ஓதிக் காட்டி (முளர்
கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள்.
அப்போது ”( உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக் காசு, துணி,
ஒரு ‘ஸாஉ’ கோதுமை,
ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம்
பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்” என்றும் ”பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும்” என்றும் வலியுறுத்திக் கூறினார்கள்.
உடனே ( நபித்தோழர்கள் ) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும்
வெள்ளிக் காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு ‘ஸாஉ’ கோதுமையிலிருந்தும்
ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம் பழத்திலிருந்தும்
தர்மம் செய்தார்கள்.
அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை ( நிறைய பொருட்களைக் ) கொண்டுவந்தார்.
அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது, பின்னர் தொடர்ந்து மக்கள் ( தங்களின்
தர்மப் பொருட்களுடன் ) வந்துகொண்டிருந்தனர்.
இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்து விட்டதை
நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று
இலங்கிக் கொண்டிருப்பதை நான் கண்டேன்.
அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “யார் இஸ்லாத்தில்
ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப்
பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு, அதற்காக
அவர்களது நன்மையில் எதுவும் குறைந்து விடாது.
அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன்
பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல் படுபவர்களின் பாவமும் அ(தன்படி செயல்பட்ட)
வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல் உண்டு” என்று
கூறினார்கள்.
( நூல்: முஸ்லிம் )
விசாலமான எண்ணங்களும், சகோதரத்துவ ஈமானிய உணர்வும்...
وذكر أهل التاريخ أنه في عهد الخليفة أبي بكر الصديق - رضي الله عنه -
أصاب الناس جفاف وجوع شديدان، فلمّا ضاق بهم الأمر ذهبوا إلى الخليفة أبي بكر -
رضي الله عنه - وقالوا: يا خليفة رسول الله،
إنّ السّماء لم تمطر، والأرض لم تنبت، وقد أدرك الناس الهلاك فماذا نفعل؟ قال أبو
بكر - رضي الله عنه -: انصرفوا، واصبروا، فإني أرجو ألاّ يأتي المساء حتّى يفرج
الله عنكم. وفي آخر النهار جاء الخبر بأنّ قافلة جمالٍ لعثمان بن عفّان - رضي الله
عنه - قد أتت من الشّام إلى المدينة. فلمّا وصلت خرج النّاس يستقبلونها، فإذا هي
ألف جمل محملة سمناً وزيتاً ودقيقاً، وتوقّفت عند باب عثمان - رضي الله عنه -
فلمّا أنزلت أحمالها في داره جاء التجار. قال لهم عثمان - رضي الله عنه - ماذا
تريدون؟ أجاب التجار: إنّك تعلم ما نريد، بعنا من هذا الذي وصل إليك فإنّك تعرف
حاجة النّاس إليه. قال عثمان: كم أربح على الثّمن الذي اشتريت به؟ قالوا: الدّرهم درهمين.
قال: أعطاني غيركم زيادة على هذا. قالوا: أربعة! قال عثمان - رضي الله عنه -: أعطاني غيركم أكثر.
قال التّجار: نربحك خمسة. قال عثمان: أعطاني غيركم أكثر. فقالوا: ليس في المدينة
تجار غيرنا، ولم يسبقنا أحد إليك، فمن الذي أعطاك أكثر مما أعطينا؟! قال عثمان -
رضي الله عنه -:إن الله قد أعطاني بكل درهم عشرة، الحسنة بعشرة أمثالها، فهل عندكم
زيادة؟ قالوا: لا. قال عثمان: فإني أشهد الله أني جعلت ما جاءت به هذه الجمال صدقة
للمساكين وفقراء المسلمين. ثم أخذ عثمان بن عفان يوزّع بضاعته، فما بقي من فقراء
المدينة واحد إلاّ أخذ ما يكفيه ويكفي أهله.
அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம், பஞ்சம் எனும் பேரிடர் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
கடும் பஞ்சத்தால் மக்கள் உண்ண உண்வின்றி,
குடிக்க
நீரின்றி கடும் சோதனைக்கு உள்ளாகினர். அனுதினமும் ஆட்சியாளரின் வீட்டு வாசலின் முன்பாக ஆயிரமாயிரம் மக்கள் வருவதும், போவதுமாக தங்களின் சிரமங்களை முறையிட்டவர்களாக இருந்ததை தவிர்க்க
முடியவில்லை.
“அல்லாஹ்வால் எங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிற ஆட்சியாளரே! வானம் பொய்த்து விட்டது! பூமி மலடாகி
காய்ந்து விட்டது! நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிவை
நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றோம். நாங்கள் என்ன செய்வது?” என்று கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி கேட்டனர்.
கண்ணீர் மல்க, கலீஃபா அபூபக்ர் (ரலி) கூறினார்கள் “மக்களே! உங்களின் இல்லங்களுக்கு
திரும்பிச் செல்லுங்கள்! பொறுமை காத்திடுங்கள்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன்
உங்களின் கஷ்டங்களை எல்லாம் மிக விரைவில்
நீக்கி, சுகத்தோடு வாழ வைப்பான்” என ஆதரவு வைக்கின்றேன்” என்று.
இப்படியாக நாட்கள் பல உருண்டோடியது.
திடீரென ஒரு
நாள் மதீனா நகரெங்கும் புளுதிப் படலம், மக்கள் என்னவோ ஏதோவென்று பதறியடித்தவாறு வீட்டை விட்டு வெளியேறி மதீனாவின் முக்கிய வீதியில் ஒன்று கூடி தூரத்தில் தெரிந்த புளுதி கொஞ்சம், கொஞ்சமாக மதீனா நகரை நெருங்கி வருவது
குறித்து ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.
இப்போது புளுதி சிறிது விலகி ஓர் ஒட்டகக் கூட்டம் தங்களின் அருகே வருவதை
உணர்ந்தனர்.
அவர்களின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி! அந்த ஒட்டகக் கூட்டத்தினரைக்
கண்டு…
ஆம்! அந்த ஒட்டகக்கூட்டம் உஸ்மான் (ரலி) அவர்களின் வியாபாரக் கூட்டம். கடந்த
சில மாதங்களுக்கு முன்பாக ஷாமுக்கு சென்றிருந்த வியாபாரக் கூட்டம். பெருமளவு
தானியங்களோடும், ஜைத்தூன் எண்ணெய் பீப்பாய்களோடும், கொழுப்புகளோடும் ஆயிரம் ஒட்டகைகளில்
வந்து உஸ்மான் (ரலி) அவர்களின் வீட்டின் முன்பாக நின்றது.
வரலாற்று ஆசிரியர்கள் இப்படிக் கூட
கூறுவார்கள் “முதல் ஒட்டகம் உஸ்மான் (ரலி) அவர்களின் வீட்டின் முன் நின்றது என்றால் ஆயிரமாவது கடைசி ஒட்டகம் ஷாமின் எல்லையில் நின்றது” என்று.
இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட மதீனா
மற்றும் அதன்
சுற்று வட்டார வியாபாரிகள் அனைவரும் உஸ்மான் (ரலி) அவர்களின் வீட்டின் முன்பாக கூடிவிட்டனர்.
உஸ்மான் (ரலி) அவர்கள் வியாபாரிகளின்
முற்றுகையையும், மக்களின் முகத்தில் தெரிந்த சோக ரேகைகளின் பிண்ணனியையும் ஒரே நேரத்தில் புரிந்து கொண்டார்கள்.
ஏனெனில், வருகிற வழியிலேயே மதீனாவில் நிகழ்கிற பேரிடர், அதனால் ஏற்பட்டிருக்கிற பசி, பஞ்சம் ஆகியவற்றைக் கேட்டு தெரிந்து வைத்திருந்தார்கள்.
உள்ளூர் மற்றும் சுற்று வட்டார வியாபாரிகளின் சார்பாக ஒருவர் முன் வந்து
“மக்களின் தேவைகளை நீங்கள் நன்கு அறிவீர்கள்! எனவே, மொத்த சரக்குகளையும் உள்ளூர் மற்றும்
சுற்று வட்டார வியாபாரிகளாகிய எங்களிடமே நீங்கள்
விலைக்கு தர வேண்டும். வெளியூர் வியாபாரிகளுக்கு நீங்கள் விற்பனை செய்யக் கூடாது” என்று கோரிக்கை வைத்தார்.
அது கேட்ட உஸ்மான் (ரலி) அவர்கள் “என்னிடம் இருந்து நீங்கள் வாங்கும்
பொருளுக்கு எவ்வளவு லாபம் தருவீர்கள்? என்று கேட்டார்கள்.
அதற்கு, வியாபாரிகள் “ஒரு திர்ஹம் மதிப்புள்ள பொருளுக்கு இரண்டு திர்ஹம்கள்
தருகின்றோம்” என்றார்கள். அதற்கு, உஸ்மான் (ரலி) அவர்கள் “வெறொருவர் உங்களை விட கூடுதலாக
தருகின்றேன் என்று கூறிவிட்டார்” என்று கூறினார்கள்.
அதற்கு, வியாபாரிகள் “இரண்டுக்கு மூன்று திர்ஹம்” என்றார்கள். அதற்கு
, உஸ்மான் (ரலி)
அவர்கள் “வெறொருவர் உங்களை விட கூடுதலாக
தருகின்றேன் என்று கூறிவிட்டார்” என்று கூறினார்கள்.
அதற்கு, வியாபாரிகள் “மூன்றுக்கு நான்கு திர்ஹம்” என்றார்கள். அப்போதும் முன்பு போன்றே உஸ்மான் (ரலி) அவர்கள் கூற, இப்போது வியாபாரிகள் கடைசியாக நான்குக்கு ஐந்து திர்ஹம் தருகின்றோம்” என்றார்கள்.
அதற்கு, உஸ்மான் (ரலி) அவர்கள் “வெறொருவர் உங்களை விட கூடுதலாக தருகின்றேன் என்று கூறிவிட்டார்” என்று கூறினார்கள்.
இதைக் கேட்ட வியாபாரிகள் “எங்களுக்குத் தெரிந்து உள்ளூரின், சுற்றுபுறத்தின் அனைத்து வியாபாரிகளும் இங்கே தான் குழுமியிருக்கின்றோம். அத்தோடு இதுவரை உங்களிடம் தான் நாங்கள் கொடுக்கல் வாங்கலும் வைத்திருக்கின்றோம், எங்களை விட கூடுதல் விலைக்கு, கூடுதல் லாபத்திற்கு வியாபாரம் பேசிய அந்த வியாபாரி யார்? இப்பொழுதே எங்களுக்குத் தெரிய வேண்டும்? என்று கேட்டனர்.
அது கேட்ட உஸ்மான் (ரலி) அப்படியே மௌனித்து நிற்கின்றார்கள். மக்கள்
ஏக்கத்தோடு நிற்கின்றார்கள். வியாபாரிகள்
புருவத்தை
உயர்த்தி யாராக இருக்கும் என்ற சிந்தனையோடு நின்று கொண்டிருக்கின்றார்கள்.
நீண்ட மௌனத்திற்குப் பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் “அல்லாஹ்விடம் நான் வியாபாரம் பேசியுள்ளேன்” அவன் தான் உங்களை விட அதிக விலைக்கு, லாபத்திற்கு வியாபாரம் பேசிய வியாபாரியாவான்” என்று கூறி மௌனத்தைக் கலைத்தார்கள்.
“அல்லாஹ் ஒவ்வொரு திர்ஹத்திற்கும் பத்து திர்ஹம் தருவதாக திருக் குர்ஆன் மூலம் வாக்களித்திருக்கின்றான். “எவர் அழகிய ஒன்றை நம்மிடம் கொண்டு வருகின்றாரோ அது போன்று
அவருக்கு பத்து நன்மைகளை வழங்குவோம்” அல்அன்ஆம் அத்தியாயத்தின் 160 –ஆவது வசனத்தை ஓதிக் காண்பித்து விட்டு, இதை விட கூடுதலாக நீங்கள் யாரும் தருவீர்களா? இறைவனை விட கூடுதலாக வழங்க யாருக்குத் தான் இயலும்? என்று கேட்டார்கள்.
அதற்கு, வியாபாரிகள் “எங்களால் ஒருபோதும் அப்படித் தர இயலாது” என்று கூறினார்கள்.
அப்போது, உஸ்மான் (ரலி) அவர்கள் “என் ஒட்டகைகள் ஆயிரமும் சுமந்து வந்த அத்துனை பொருட்களையும் வறட்சியாலும், பசி
பஞ்சத்தாலும் வாடி வதங்கிக் கொண்டிருக்கிற இந்த
மக்களுக்கும்,
ஏழைகளுக்கும் வழங்குகின்றேன்!
அல்லாஹ்வே இதற்கு உன்னையே சாட்சியாகவும் ஆக்குகின்றேன்” என்று
கூறினார்கள்.
மதீனாவில்
இருக்கிற எல்லா
குடும்பத்தினர்களும் அவரவர்களின் தேவைக்கு ஏற்ப அதில்
இருந்து எடுத்துக்
கொண்டார்கள். இறுதியில் எதுவும் மிஞ்சவில்லை”. ( நூல்: ஃபிக்ஹுத் தாஜிருல் முஸ்லிம் )
யார் வேண்டுமானாலும் நிராயுதபாணியாகலாம்….
كان في
زمان سليمان بن عبد الملك بن مروان بن الحكم رجلٌ يُقال له " خُزيمة بن بِشر
" ؛ من بني أسد بالرَّقَّة ، وكانت له مروءة و نِعمة حسنة وفضل و بِرٌّ
بإخوانه ، فلم يزل على تلك الحال حتى احتاج إلى إخوانه الذين كان يتفضَّل عليهم ،
فواسَوه حيناً ، ثم ملُّوه ، فلمّا لاح له تغيُّرهم أتى إلى امرأته
وكانت
ابنة عمه - ؛ فقال لها : يابنت عمّ ؛ قد رأيتُ من إخواني تغيُّراً ، و قد عزمتُ
على لزوم بيتي إلى أن يأتيني الموت .
وأغلق بابه عليه ، وأقام يتقوَّتُ بما عنده ، حتى نفد ؛ وبقي حائراً في أمره ؟!!.
وأغلق بابه عليه ، وأقام يتقوَّتُ بما عنده ، حتى نفد ؛ وبقي حائراً في أمره ؟!!.
ஸுலைமான் இப்னு அப்துல் மலிக் இப்னு மர்வான் இப்னுல் ஹகம் (ரஹ்) அவர்களின் ஆட்சிகாலத்தில் குஸைமா இப்னு பிஷ்ர் (ரஹ்) என்கிற கொடையாளர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அல்லாஹ்வின் வழங்கிய அருட்கொடைகள் அனைத்தையும் மனித நேயப் பண்போடு தேவையுள்ளவர்களைத் தேடித்தேடிச் சென்று கொடுப்பார்.
அத்தோடு நின்று விடாமல் தன் சகோதரர்களுக்கும் வாரி, வாரி வழங்குவார். ஒரு கட்டத்தில் அவரை வறுமை சூழ்ந்து கொண்டது. அவர் தன் சகோதர்களிடம் சென்று தன் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டிய அளவிலான சூழ்நிலையும் வந்தது.
ஒரு கட்டத்தில் கொடுத்து உதவியவர்கள், சில நாட்களிலேயே
வார்த்தைகளால் சூடு வைக்கத்துவங்கினர். இவரைக் கண்டதும் முகம் சுழிக்க ஆரம்பித்தனர். தன் சகோதரர்களே அவமானப்படுத்துகின்றார்களே என்ற மன வேதனையோடு வீட்டிற்கு வந்து தன் மனைவியோடு நடந்தவைகளை பரிமாறிக் கொண்டார்.
பேச்சின் ஊடாக, தன்மானத்தோடு மனைவியைப் பார்த்து “வீட்டைப் பூட்டி விடு! நான் மௌத்தாகும் வரை வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை! என முடிவெடுத்து விட்டேன்” என்றார். மனைவியும் அவ்வாறே செய்கின்றார். ஒரு நாள், இரண்டு நாள், என்று நகர்ந்து, ஒரு வாரம் கழிந்ததும் வீட்டில் இருந்த அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தீர்ந்து போனது.
இனி அடுத்த வேளைக்கு உண்ண உணவில்லை, வீட்டின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற பணம் இல்லை. எனினும் தன்மான உணர்ச்சி அவரை மற்றவர்களிடம் சென்று உதவி கேட்க தடுத்தது. ஆகவே, அங்கு இங்கு என்று கடன் வாங்கினார், திருப்பிக் கொடுக்கவும்
முடியவில்லை. கடன்காரர்கள் நெருக்கினார்கள்.
சற்று காலம் முன்பு வரை தாம் ஒரு கொடைவள்ளல், இன்றோ இப்படி! என்ன செய்வது அல்லாஹ்வின் சோதனை என்று வீட்டிலேயே முடங்கிப் போனார். ஊரெங்கும் இதே பேச்சு தான். வாழ்வாங்கு வாழ்ந்தவர் இப்படி ஆகிப்போனாரே என்று!.
عكرمة الفياض الوالي الجزيرة الفياض لكثرة ما يفيض على إخوانه من المال
والعطايا
و في أحد الأيام كان عكرمة في مجلسه ؛ وعنده
جماعة من أهل البلد ، فجرى ذِكر خزيمة بن بشر في المجلس ، فقال الوالي عكرمة
مستفهماً عن تغيبه الذي طال عن مجلسه : ما حاله ؟ فقالوا : صار من سوء الحال إلى
أمرٍ لا يُوصَف ؛ فأغلق بابه ؛ ولزم بيته .!! فقال عكرمة الفيَّاض : فما وجدَ
خُزيمةُ بنُ بِشر مُواسِياً ولامُكافياً ؟ قالوا : لا . فأمسك عن الكلام ، و عزم
في نفسه على فعل شيء
அவர் வாழ்ந்த பகுதியின் கவர்னராக அப்போது இருந்தவர் இக்ரிமத்துல் ஃபய்யாள் (ரஹ்) என்பவர் ஆவார்கள். கிட்டத்தட்ட குஸைமா அவர்களைப் போன்றே இவர்களும் இரக்கமனமும், உதவி செய்யும் மனப்பான்மையும்
நிறைந்தவர். வரலாற்று ஆசிரியர்கள் இப்படிக்
குறிப்பிடுவார்கள்:
“அவரின் இயற்பெயர் இக்ரிமா என்பது மட்டுமே
அவரின் உதவும் மனப்பான்மையால் ஃபய்யாள் எனும் பெயரும் ஒட்டிக்கொண்டது” என்று.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு குஸைமா இப்னு பிஷ்ர் அவர்கள் இக்ரிமா (ரஹ்) அவர்களின் சபைக்கு வருகை புரிந்திருந்தார்கள். எனினும்,
முன்பு போல்
அவரின் முகத்தோற்றத்தில் பொலிவு இல்லாததை உணர்ந்த இக்ரிமா அவர்கள்
இடையிடையே அவரை கவனித்துக் கொண்டே இருந்தார்கள்.
ஏனெனில், அருகில் இருக்கிற நகர்ப்புறத்தில்
இருந்து குழு ஒன்று கவர்னரை சந்திக்க
வந்திருந்தது. அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் கவர்னர் இக்ரிமா அவர்கள். இக்ரிமாவும், குஸைமாவும் நெருங்கிய நண்பர்களும் கூட. நீண்ட நாட்களுக்குப் பின் நாம்
வந்திருந்தும் கூட நம்மை அழைத்து நம் நண்பர் ஒரு வார்த்தை கூட பேசவில்லையே என ஆதங்கப்பட்ட குஸைமா அவர்கள் விருட்டென
அங்கிருந்து சென்று விடுகின்றார்கள்.
அந்தக் குழுவோடு பேசி முடித்த பின் இக்ரிமா (ரஹ்) அவர்கள் குஸைமா (ரஹ்) அவர்களைத் தேடுகின்றார்கள். சபையின் எந்த பகுதியிலும்
அவரைக் காணவில்லை. அதன் பின்னர், அவையில் அமர்ந்திருந்தவர்களிடம் “குஸைமாவின் முகத்தில் பழைய பொலிவைக் காணவில்லையே? அவருக்கு என்ன ஆயிற்று? வந்தார்,
திடீரென சென்று
விட்டாரே? என்று கேட்டார்கள்.
அப்போது தான் அவரின் முழு நிலைமையையும் இக்ரிமா
(ரஹ்) அவர்கள்
தெரிந்து கொண்டார்கள். அப்பொழுதே ஒரு முடிவொன்றையும் எடுத்தார்கள். இரவு நேரத்திற்காக காத்தும் இருந்தார்கள்.
இரவு நேரம்
வந்ததும்,
தங்களின் மனைவியிடமும் கூட சொல்லாமல் இரகசியமாக தம் பணியாளரை அழைத்து பைத்துல் மாலில் இருந்து
நான்காயிரம் தீனாரை எடுத்து ஒரு பையில் போட்டு மாறு
வேடத்தில் குஸைமா (ரஹ்) அவர்களின் வீட்டை அடையாளம் கண்டு,
தம் பணியாளரை திரும்பிச் செல்லுமாறு பணித்து விட்டு, குஸைமா அவர்களின் வீட்டு வாசல் முன் நின்று கதவைத்
தட்டினார்கள் இக்ரிமா (ரஹ்) அவர்கள். சில மணித்துளிகளுக்குப் பின்னர் கதவு
திறக்கப்பட்டு
வாசலில் குஸைமா அவர்கள் வந்து நின்றார்கள்.
வந்து நின்றவரின்
கரங்களில் நான்காயிரம் தீனார் நிரப்பப்பட்ட பையைக்
கொடுத்து ”இதை வைத்து உங்களின் வாழ்க்கை நிலையை சரி செய்து கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு விறுவிறுவென தங்கள் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து நடக்க
எத்தனித்தார்கள். பை அதிகக் கனமாக இருப்பதை உணர்ந்த குஸைமா (ரஹ்) அவர்கள் “யார் நீங்கள்?
என் வாழ்க்கைச் சூழல் எப்படி உங்களுக்குத் தெரியும்? என்று
கேட்டார்கள்.
அதற்கு, ”நான் யார் என்று அறிமுகப்படுத்துவதற்காக இப்போது,
இந்த நடுநிசி வேளையில் உம்மிடம் நான் வரவில்லை” என்று கூறி நடக்க ஆரம்பித்தார்கள்.
மீண்டும், குஸைமா (ரஹ்) அவர்கள் “என் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த
விரும்புகின்றீர்கள்?
என் கஷ்டத்தை போக்க இவ்வளவு பெரிய சிரமம் எடுத்துக் கொள்கின்றீர்கள்? நீங்கள் யார் என்று
சொன்னால் தான் என் மனம் அமைதி பெரும்” என்று சொன்னார்கள்.
அதற்கு, இக்ரிமா (ரஹ்) அவர்கள் أنا
جابر عَثَرات الكرام “சங்கையான மனிதர் ஒருவரின் துயரை துடைக்க வந்தவன்” என்று கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டார்கள் இக்ரிமா (ரஹ்) அவர்கள். வீட்டிற்குள் தீனார்
பையுடன் நுழைந்த குஸைமா (ரஹ்) அவர்கள் “என் ரப்பு என்னைக் கைவிட வில்லை, மனைவியே அல்லாஹ் நமக்கு
இன்பத்தையும்,
மகிழ்ச்சியையும் இதோ மீண்டும் தந்து விட்டான்” என மகிழ்ச்சி பொங்க
கூறிவிட்டு விளக்கை பற்ற வை எவ்வளவு தீனார் இருக்கிறது என்று
பார்ப்போம்?
என்றார்.
அதற்கு குஸைமாவின்
மனைவி விளக்கும் இல்லை,
விளக்கை பற்ற வைக்க எண்ணையும் இல்லை என்றார். காலையில் விழித்து பார்த்துக் கொள்ளலாம் என்றார் அவரின் மனைவி. அதை ஆமோதித்தவராக உறங்கிப்போனார் குஸைமா (ரஹ்) அவர்கள்.
ورجع عكرمة الفيّاض إلى منزله ، فوجد امرأته قد
افتقدَتْه؛ وسألت عنه ؟ فأُخبِرَت بركوبه منفرداً ، فارتابت لذلك ؟!! فشقت جَيبَها
؛ولَطَمَت خدَّها ؛ و هي تظن به الظنون !!! ، فلمّا رآها على تلك الحال قال لها :
مادَهاكِ يا بنتَ عم ؟ . قالت : غَدَرتَ يا عِكرمةُ بابنة
عمّك ؟. قال : وما ذاك ؟قالت : أميرُ الجزيرة يخرج بعد هَدْأَةٍ من الليل
مُنفرداً من غلمانه ؛ في سِرٍّ منأهله !! والله ما يَخرُج إلا إلى زوجة أو سَرِيةٍ
؟
و هكذا المرأة إذا ماتحركت فيها الغيرة أو أثيرت شكوكها ... بركان هادر ؛ مدمر
فقال لها زوجها عكرمة : لقد علمَ اللهُ أَنِّي ما خرجتُ إلى واحدة مما ذكرتِ . قالت : فخبِّرْني ؛فِيمَ خرجتَ ؟ قال : يا هذه ؛ لم أخرج في هذا الوقت وأنا أريد أن يعلمَ بي أحد ؟! قالت : لا بد أن تخبرني . قال : فاكتُميه إذاً . قالت : أَفعلُ . فأخبرها القصة على وجهها ، وما كان من حديث بينه و بين خزيمة و كيف أعطاه المال ؛ و كيف سأله عن اسمه؟ و كيف أجابه قائلاً : أنا جابر عثرات الكرام . ثم قال لزوجته : أتُحبِّين أن أحلف لك ؟ قالت : لا ؛ فإن قلبي قد سَكَن إلى ما ذَكَرتَ .
ஒரு வழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள் இக்ரிமா அவர்கள். வீட்டுக்கு வந்ததும் எதிர் பார்த்துக் காத்திருந்த இக்ரிமா அவர்களின்
மனைவி, அவர்களின் ஆடை நனைந்து இருந்ததையும், அவர்கள் மாறுவேடம் அணிந்திருந்ததையும் பார்த்து விட்டு,
எங்கே, இந்த இரவு நேரத்தில் அதுவும் தனியாக சென்று வருகின்றீர்கள்? நெஞ்சுப் பகுதியை சட்டையோடு பிடித்துக் கொண்டு இப்போதே நீங்கள் எனக்கு சொல்லியாக வேண்டும்? யார் வீட்டுக்கு இந்த நேரத்தில் சென்று
விட்டு வருகின்றீர்கள்? வேறு ஏதாவது பெண்ணை திருமணம் செய்து இருக்கின்றீர்களா? எனக்கு மோசம் செய்து விட்டீர்களே? என அடுத்தடுத்து கேள்விகளால் துளைத்தெடுத்தார் இக்ரிமா (ரஹ்) அவர்களின் மனைவி.
ஏன் இரவில் தனியாகச் சென்று வந்தால் இந்த நோக்கத்திற்காகத் தான் ஒரு ஆண் செல்வானா? நான் இந்த மாகாணத்தின் கவர்னர், நான் அலுவலக வேலை நிமித்தமாக வெளியே ஒரு இடத்திற்கு சென்று வந்தேன்
என்று கூறினார்கள்.
ஆனாலும், எவ்வளவோ சமாளித்தும் அவரின் மனைவியை
சமாதானம் செய்ய முடியவில்லை. எனக்கு நீங்கள் எங்கு
சென்று வந்தீர்கள் என்ற உண்மையைச் சொல்லும்
வரை உங்களை
விடமாட்டேன் என மனைவி வற்புறுத்தவே வேறு வழியின்றி நடந்த சம்பவங்களை விவரித்துக் கூறிவிட்டு, அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக்
கூறுகின்றேன் இதை எப்போதும், எந்த தருணத்திலும், எவரிடமும் கூறக்கூடாது என்று உறுதி வாங்கினார்கள் இக்ரிமா அவர்கள். அவ்வாறே
இரகசியம் பேணுவதாக அவர்களின் மனைவி உறுதி
கூறினார்கள்.
فلما أصبح خُزيمة صالح الغرماء – دفع ديونه - ، وأصلح من حاله ، ثم
تجهز لزيارة الخليفة سليمان بن عبد الملك بفلسطين – و كانت عسقلان بفلسطين مصيف
الخلفاء - ، فسافر إليه ، و لما وقف ببابه دخل الحاجب فأخبره بوصول خزيمة بن بِشر
للقائه – و كان الخليفة سليمان بن عبد الملك يعرف خزيمة و مروءته و كرمه - ،
فأذنله بالدخول ، فلما دخل عليه وسلم بالخلافة ، قال له الخليفة
يا خزيمة ؛ ما أبطأك
عنا ؟ قال : سوء الحال . قال: فما منعك من النّهضة إلينا ؟ - لماذا لم تأت إلينا
لنسعفك ؟
قال خزيمة : ضعفي يا أمير المؤمنين . فقال
الخليفة : ففيمَ نهضت ؟ - كيف فُرِّج عنك فاستطعت أن تأتي إلينا ؟ - قال : لم أعلم
- يا أمير المؤمنين - بعد هَدأَة الليل إلا و رَجُلٌ طرق بابي ، فكان منه كَيت
وكَيتَ ... وأخبره القصة من أولها إلى آخرها . فقال له الخليفة : هل تعرفه ؟ قال
خزيمة : ما عرفته يا أمير المؤمنين ، وذلك لأنه كان متنكِّراً ، وما سمعت منه إلا
" أنا جابر عثرات الكرام " . فقال الخليفة متلهفاً إلى معرفته : لو
عَرَفناه لأعنَّاهُ على مروءته .
காலைப்பொழுதும்
மலர்ந்தது. பையைப் பிரித்துப் பார்த்த குஸைமா பூரித்துப்
போனார். வாங்கிய கடன்களை அடைத்தார். இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார்.
சில நாட்கள்
கழித்து ஃபலஸ்தீனில் அஸ்கலான் எனும் ஊரில் இருக்கும் கலீஃபா
ஸுலைமான் (ரஹ்) அவர்களைச் சந்திக்க ஃபலஸ்தீன் பயணமானார்.
ஃபலஸ்தீன் வந்த
குஸைமா (ரஹ்) அவர்கள் கலீஃபாவைச் சந்திக்க தாம்
வந்திருப்பதாக வாயிற்காப்போனிடம் சொல்ல, உள்ளே வந்து
இப்படியொருவர் உங்களைச் சந்திக்க வந்திருக்கின்றார் உள்ளே
வரச் சொல்லவா என வாயிற்காப்போன் அனுமதி கேட்க இறுதியாக, அனுமதி கிடைத்து உள்ளே சென்று கலீஃபாவைச் சந்தித்தார் குஸைமா அவர்கள்.
கலீஃபா பரிவோடு நலம் விசாரித்து விட்டு, நீண்ட காலமாக
எம்மை சந்திக்க ஏன் வரவில்லை? என்று வினவினார். அதற்கு, குஸைமா தான் பட்ட கஷ்டங்களைக் கூறினார். அதற்கு,
கலீஃபா எனக்கு ஒரு தகவல் அனுப்பி இருந்தாலோ, என்னிடம் நீர் வந்திருந்தாலோ நான் உமக்கு தேவையான உதவிகளை
செய்து இருப்பேனே!”
என்று கூறி விட்டு, இப்போது எப்படி நிலைமை சரியானதா?
ஏதேனும் உதவி செய்யட்டுமா? என்று கேட்டார்.
குஸைமா (ரஹ்)
அவர்கள் “அதற்கு அவசியம் இல்லை கலீஃபா அவர்களே! இப்படி, இப்படி இரவில் நடந்தது என நடந்த சம்பவத்தைக் கூறினார்கள்.
அதற்கு, கலீஃபா உமக்கு உதவியவர் யார் என உமக்கு தெரியுமா?
என்று கேட்க, இல்லை, أنا جابر عَثَرات الكرام “சங்கையான மனிதர் ஒருவரின் துயரை துடைக்க வந்தவன்” என்று மட்டும் என்னிடம் கூறினார்” என்றார். அப்படியானால்,
அவரை நீர் அடையாளம் கண்டு கொண்டீர் என்றால் எம்மிடம் அறிவியும் நாம் அவரைக் கண்ணியப்படுத்துவோம் என்று கலீஃபா
கூறினார்கள்.
கலீஃபாவைச்
சந்திக்கச் சென்ற குஸைமா ஜசீராவுக்கு வருகை தருகிற போது ஒரு
ஓலையோடு வந்தார். அந்த ஓலை இது தான் கலீஃபா எழுதியனுப்பிய கடிதம் “இன்று முதல் குஸைமா ஜஸீரா மாகாணத்தின் கவர்னராக இருப்பார். கவர்னராக இருந்த
இக்ரிமா
பதி நீக்கம் செய்யப்படுகின்றார்” என்று.
இக்ரிமா (ரஹ்) கவர்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, குஸைமா கவர்னராக ஆக்கப்படுகிறார்.
கவர்னர் பதவியில்
அமர்ந்ததும் இக்ரிமா (ரஹ்) அவர்கள் பொறுப்பேற்று இருக்கும்
போது மாகாணத்தின் பைத்துல் மாலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றம் சுமத்தி கடுமையான விசாரணைக்கு உத்தரவிட்டார். பைத்துல்மாலின் கணக்குப் பதிவேடு சரிபார்க்கப்படுகின்றது. பக்கம் பக்கமாக ஆய்வு செய்த விசாரணைக் குழு ஓரிடத்தைக் கண்டு
அதிர்ச்சியடைகின்றது.
பைத்துல்மாலில்
இருந்து உதவி பெற்றவர்கள்,
கொடுக்கப்பட்ட பணம் வரிசையாக
எழுதப்பட்டு இருந்தது. ஆனால், அந்த இடத்தில்
நான்காயிரம் தீனார் கொடுக்கப்பட்டதாக எழுதப்பட்டிருந்தது.
ஆனால், உதவி பெற்ற அந்த நபரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. விசாரணைக்குழு கவர்னரின்
முன்பாக இக்ரிமா (ரஹ்) அவர்களை ஆஜர்படுத்தியது.
கவர்னர் குஸைமா
(ரஹ்) யாருக்குக் கொடுத்தீர்கள் என்று கேட்கின்றார். அது
இரகசியம் அதை என்னால் சொல்ல முடியாது என்று கூறி மறுத்து விட்டார் இக்ரிமா (ரஹ்) அவர்கள்.
கொடுத்தவர்
இப்போது குற்றவாளியாக நிற்கின்றார். யாருக்கு கொடுக்கப்பட்டதோ
அவர் இப்போது கவர்னராக இருக்கின்றார். என்ன செய்வது? ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறையில் தள்ளப்படுகின்றார் இக்ரிமா (ரஹ்) அவர்கள்.
இடையிடையே
யாருக்குக் கொடுக்கப்பட்டது என்று கேட்டு அடி,
உதை,
சித்ரவதைகள் சிறையிலே வழங்குமாறு கலீஃபா
உத்தரவிட்டிருந்தார். சிறைத் தண்டனையோடு, சித்ரவதைகளையும்
அனுபவித்துக்
கொண்டிருந்தார் இக்ரிமா (ரஹ்) அவர்கள்.
وبلغ إلى زوجته ما نزل بعكرمة من الضُّرِّ والأذى ،فجزعت عليه ، واغتمَّت لذلك ، ثم دعت مولاةً – خادمة - لها ذات عقل ، وقالت لها : امضي الساعةََ إلى باب هذا الأمير ؛ فقولي : عندي نصيحة . فإذا طُلِبَت منك ؛ فقولي : لا أقولها إلا للأمير خزيمة بن بشر . فإذا دخلتِ عليه فسَلِيه أن يُخلِيك – أن يكون حديثك معه على انفراد بينكما - ، فإذا فعل ؛ فقولي له : ما كان هذا جزاءَ جابر عثرات الكرام منك ! كافأْتَه بالحبس والضيق والحديد ؟ .
فذهبت المولاة إلى بابقصر الأمير ، و فعلت ما قالته لها سيدتها ، فلما سمع خزيمة دعاها ؛ فاستمع منها كلامها ، و إذا به يقول : وا سوأتاه ! وإنه لهُوَ جابر عثرات الكرام ؟ قالت : نعم .
சிறையில் தன்
கணவர் சித்ரவதைகளைச் சந்திக்கின்றார் என்று கேள்வி பட்டதும்
துடிதுடித்துப் போனார் இக்ரிமா (ரஹ்) அவர்களின் மனைவி ஆவேசப்படாமல், அறிவார்ந்த முறையில் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்.
தன்னிடம் வேலை
செய்த பணிப்பெண்ணை அழைத்து,
“நீ கவர்னரின் வீட்டுக்குச் சென்று
அங்கு வேலை செய்யும் பணியாளர்களிடம் சென்று, நான் கவர்னரிடம்
முக்கியமான
ஒரு செய்தியைச் சொல்ல வந்திருக்கின்றேன்” என்று சொல். அப்போது,
அவர்கள் என்ன செய்தி என்று உன்னிடம் கேட்பார்கள்.
அதற்கு, நீ நான் கவர்னரை தனியாகச் சந்தித்து பேச வேண்டும் என்று சொல்,
அதற்கும் அனுமதி கிடைத்தது என்று சொன்னால் கவர்னரிடம்
சென்று
உங்களுக்கு உதவிய جابر
عثرات الكرام க்கு
இது தான் நீங்கள் செய்கிற பிரதி உபகாரமா? சிறைத்தண்டனையும்,
சித்ரவதைகளையும் தான் பரிசாகக் கொடுப்பீர்களா?
என்று சொல்லி விட்டு வந்து விடு என்றார்கள். அப்பணிப்பெண்ணும் அது போன்றே சென்றார்கள். அப்படியே சொல்லவும் செய்தார்கள்.
இதைக் கேட்ட
குஸைமா (ரஹ்) அவர்கள் இந்த செய்தியை யார் உனக்கு சொன்னது? என்று கேட்டார். அதற்கு, நடந்த சம்பவத்தை
அப்பணிப்பெண் கூறியதும் குஸைமா மிகவும் வருத்தத்தோடு தவறு
செய்து விட்டேனே என சப்தம் போட்டு கதறினார்.
உடனடியாக, ஊரின் பிரமுகர்களை அழைத்துக் கொண்டு சிறைக்கூடத்திற்குச் சென்றார் குஸைமா. இக்ரிமா (ரஹ்) அவர்களை ஆரத்தழுவி, நெற்றியில் முத்தமிட்டவாறே அழுதார். அருகில் இருக்கிற கொல்லனை அழைத்து இக்ரிமா
(ரஹ்)
அவர்களை பிணைக்கப்பட்டிருந்த சங்கிலியை உடைத்தெறியச்
சொன்னார்.
இதைப் பார்த்த
இக்ரிமா (ரஹ்) நேற்று வரை எனக்கு சித்ரவதைகளையும், அடி உதைகளையும் வழங்க உத்தரவிட்ட நீர் இப்போது முத்தமிடுவதும், சங்கிலியை
உடைக்கச் சொல்வதும் முரணாக இருக்கின்றதே? என்ன விஷயம் என்று கேட்டார்கள்.
என் வாழ்க்கையில் வசந்தத்தை
தந்தவர் நீர்! என் வறுமையை போக்கியவர் நீர்! என்
முகத்தில் மலர்ச்சியை தந்தவர் நீர்! நான் இழந்த பெருமையை மீட்டுத் தந்தவர் நீர்! இன்னுமா புரியவில்லை உமக்கு! உம் மனைவியின் புத்திசாலித்தனமான
நடவடிக்கையால்
நீர் தான் என்று சற்று முன்னர் தான் தெரிந்து கொண்டேன்.
எனக்கு உதவியும்
செய்து விட்டு,
நான் கொடுத்த தண்டனையையும் மனதார ஏற்றுக் கொண்டு ஒரு வார்த்தைக் கூட சொல்லாமல் இப்படி இருந்து விட்டீரே
நீர்!
நியாயமாகப்
பார்த்தால் நான் தான் இந்த தண்டனையை அனுபவித்து இருக்க
வேண்டும் என்று கூறியவாறு,
சிறைக்குள் சென்று சிறைக் கதவைத் தாழிட்டு என்னைச் சங்கிலியால் பிணையுங்கள் என்று கத்தினார் குஸைமா (ரஹ்) அவர்கள்.
அல்லாஹ் உன்னையும், என்னையும் மன்னிக்க வேண்டும்! அல்லாஹ்வின் மீது
சத்தியம் இட்டுச் சொல்கின்றேன்! உம்மீது எனக்கு எவ்வித குரோதமும் இல்லை,
நீர் தண்டனை அனுபவிக்க ஒரு போதும் நான் அனுமதிக்க மாட்டேன்
என்று இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
ثم أمر خزيمة بالحمَّام فأُخلِي ، و دخلا جميعاً
، ثم قام خزيمةُ فتولّى خدمة عكرمة بنفسه ، ثم خرجا ، فخلع عليه – أعطاه جميل
الهدايا و ثمينها - ، وجَمَّله ، وأعطاه مالاً كثيراً ، ثم سار معه إلى
داره ، واستأذنه في الاعتذار إلى ابنة عمه ، فأذن له ،فاعتذر لها ، و صار يذمّ
نفسه على ما فعله ،
சிறையில் இருந்து
அழைத்து நேராக தம்முடைய வீட்டிற்கு இக்ரிமாவை கூட்டிப்போய்
குளிக்க வைத்து,
அழகிய ஆடைகளை அணிவித்து, நறுமணமும் பூசி, உணவு
உண்ண அமர வைத்து இக்ரிமா (ரஹ்) அவர்களுக்குப் பரிமாறி
பணிவிடையும் செய்தார்கள். அழகிய சில அன்பளிப்புகள், பண முடிச்சுகளைக் கொடுத்து வீடு வரை கொண்டு வந்து விட்டுச் சென்றார்கள் குஸைமா (ரஹ்) அவர்கள்.
பின்னர், தன்னுடைய செயலுக்காக இக்ரிமா (ரஹ்) மற்றும் அவரின் மனைவிடம் மன்னிப்பும் கோரினார். பின்னர் சில நாட்கள் கழித்து கலீஃபா ஸுலைமான் அவர்களைச் சந்திக்க இக்ரிமா அவர்களை அழைத்துச் சென்று, முன்பு நான் சொன்னேனே அந்த அவர் جابر عثرات الكرام வந்திருக்கின்றார் என அறிமுகப் படுத்தி வைத்து விட்டு, நடந்த சம்பவங்களைக் கூறினார்கள்.
கலீஃபா அவர்கள் தங்களின் அருகே அமரவைத்து ஆறுதல் கூறி, உமக்கு என்ன தேவையோ அத்தனையும் இதோ இந்த
பேப்பரில் எழுதித்தாருங்கள் என்று கூறி
பேப்பர் ஒன்றை
இக்ரிமா அவர்களிடம் நீட்டினார்.
இக்ரிமா மறுத்து
விட்டார். கலீஃபா அவர்கள் உயர்தர ஆடை இரண்டை அன்பளிப்பாகக்
கொடுத்து,
10000 தீனாரையும் அன்பளிப்பாகக் கொடுத்து அனுப்பினார்கள்.
மீண்டும்
அல்ஜசீராவின் கவர்னராக ஆக்கி அனுப்பி வைத்தார்கள். ஆனால்,
இக்ரிமா (ரஹ்) குஸைமா (ரஹ்) கவர்னராக தொடர விரும்பினால்
அவரே தொடரட்டும்! அவர் விரும்பி விலகினால் நான் கவர்னராக
தொடர்கின்றேன் என்றார்கள். பின்னர் இருவரும் அல்ஜஸீராவுக்கு திரும்பி வந்தார்கள்.
அத்தோடு நின்று
விடாமல்,
இக்ரிமா (ரஹ்) அவர்களையும், குஸைமா (ரஹ்) அவர்களையும் தங்களின் ஆட்சிக்காலத்தில் அல் ஜஸீரா, அர்மீனியா,
அஜர்பைஜான் ஆகிய பகுதிகளுக்கு
கவர்னராகவும் நியமித்தார்கள்.
( நூல்: அல் முஸ்தஜாத் மன்ஃபஅலாத்தில்
அஜ்வாத் லிஇமாமி
அல் காழீ அத்துனூஃகி (ரஹ்) 1/6, ஃபீ தீபில் முதாக் மின் ஸமராத்தில் அவ்ராக் லிஇமாமி இப்னு ஹுஜ்ஜதுல் ஹம்வீ
(ரஹ்)... 195 – 196 )
அல்லாஹ்வே! முஸ்லிம் உம்மத்தை
இது போன்ற கலவரம், வன்முறை ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பாயாக!
ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!
வஸ்ஸலாம்!!!
அல்ஹம்துலில்லாஹ் காலத்திற்கு ஏற்ற பதிவு
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteசுமையை குறைத்த ஹழ்ரத் அவர்களுக்கு
சுவனத்தை நஸீப் ஆக்குவானாக
ஆமீன்....
Aameen
DeleteAlhamdulillah barakallah moulana
ReplyDeleteSubhanallah
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்
ReplyDeleteமிகவும் அருமையாக இருந்தது
உங்கள் சேவையை அல்லாஹ் பொருந்தி கொள்வானாக
Assalamu alaikum
ReplyDelete