சான்றாளர்களாய் வாழ்வோம்!!! – 2
மரணம் என்பது மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத, கட்டாயம் நடந்தே தீரும் ஒரு நிகழ்வாகும்.
அந்த மரணம் ஒரு இறைநம்பிக்கையாளனுடைய வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகும். ஏனெனில், மரணமே இல்லாத ஓர் உலகை நோக்கிய பயணத்தின் இரண்டாம் அத்தியாயமாகும்.
ஆதலால் தான் மாநபி {ஸல்} அவர்கள் “இறுதி முடிவு அழகானதாய் அமைய வேண்டும்” என்று துஆ செய்துள்ளார்கள்.
இறைவனுக்கு விருப்பமான முறையில் தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களின் வாழ்வை எப்படி அல்லாஹ் புகழ் மிக்கதாய் அமைக்கின்றான் என்று கடந்த ஜும்ஆ உரையில் பார்த்து வந்த நாம் மரணத்திற்கு பிந்தைய வாழ்விலும் புகழ் மிக்கதாய் எப்படி அமைக்கின்றான் என்பதை இந்த வார ஜும்ஆ உரையில் காண இருக்கின்றோம்.
இறைவனுக்கு விருப்பமான முறையில் தமது வாழ்வை அமைத்துக் கொண்ட நல்லடியார்களுக்கு மரணத்திற்குப் பிறகு அல்லாஹ் வழங்கும் படித்தரங்கள் – தரஜாக்கள் என்பது பல்வேறு வடிவங்களிலானது.
1. வானம், பூமி வருந்தும்… இரங்கல் தெரிவிக்கும்…
قال ابن عباس - رضي الله عنهما - عندما سئل عن قوله تعالى
فَمَا بَكَتْ عَلَيْهِمُ السَّمَاء وَالْأَرْضُ وَمَا كَانُوا مُنظَرِينَ}: "إنَّه ليسَ أحد من الخلائقِ إلا ولَه بابٌ في السَّماءِ منه يَنزل رزقه وفيه يَصعد عَمله ، فإذا ماتَ المؤمنُ فأغلِقَ بابَه من السَّماءِ الذي يَصعد فيه عمله ويَنزل منه رِزقه فَفَقده بَكى عليه
“வானமும், பூமியும் அவர்களுக்காக அழவில்லை” (அல்குர்ஆன்: 44: 29 ) இந்த வசனத்தின் விரிவுரையில் ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறும் விளக்கத்தை பெரும்பாலான விரிவுரையாளர்கள் எடுத்துரைக்கின்றனர்.
மேற்கூறிய இறைவசனத்தைக் கூறி ஒருவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் “ஒருவரின் இறப்புக்காக வானம் பூமி அழுமா? என்று வினா தொடுக்கின்றார்.
அதற்கு, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “ஆம்! உலகில் உள்ள படைப்பினங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு வாசல் இருக்கிறது. அந்த வாசல் வழியாகவே அவர்கள் செய்கிற நல்லமல்கள் தினந்தோரும் வானவர்களால் அல்லாஹ்வின் திருமுன் சமர்ப்பிக்கப்படுகின்றன. மேலும், அதே போன்று அவற்றிற்கான ரிஜ்க்கள் – வாழ்வாதாரங்களும் அவ்வழியாகவே வானவர்கள் மூலம் நாள் தோறு இறக்கப்படுகின்றது.
எனவே, நல்லடியார்களின் நல்லமல்கள் திடீரென தடைபடுகிற போது, அவர்களுக்குச் சென்று கொண்டிருந்த ரிஜ்க் நிறுத்தப்படுகிற போது வானம் அழுகிறது. அதே போன்று அவர் வழக்கமாக தொழுத இடங்களும், அவர் அல்லாஹ்வை திக்ர் செய்த இடங்களும் அவரின் பிரிவால் வருந்துகின்றன. அழுகின்றன” என்று பதில் தந்தார்கள். ( நூல்: தஃப்ஸீர் இப்னு ஜரீர், இப்னு கஸீர், குர்துபீ )
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ ،قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم
« مَا مِنْ مُؤْمِنٍ إِلاَّ وَلَهُ بَابَانِ بَابٌ يَصْعَدُ مِنْهُ عَمَلُهُ وَبَابٌ يَنْزِلُ مِنْهُ رِزْقُهُ فَإِذَا مَاتَ بَكَيَا عَلَيْهِ فَذَلِكَ قَوْلُهُ عَزَّ وَجَلَّ فَمَا بَكَتْ عَلَيْهِمُ السَّمَاءُ وَالأَرْضُ وَمَا كَانُوا مُنْظَرِينَ
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: எந்த ஒரு முஃமினுக்கும் வானத்தில் இரண்டு வாசல்கள் இருந்தே தவிர இல்லை. ஒரு வாசல் வழியாக அவர் செய்கிற நல்லறங்கள்தினந்தோரும் வானவர்களால் அல்லாஹ்வின் திருமுன் சமர்ப்பிக்கப்படுவதும், இன்னொரு வாசல் வழியாக அவருக்கு ரிஜ்க்கள் – வாழ்வாதாரங்களும் அவ்வழியாகவே வானவர்கள் மூலம் நாள் தோறும் இறக்கப்படுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்த முஃமின் இறந்து விட்டால் அந்த இரண்டு வாசல்களும் அழுகின்றன” என்று கூறிய மாநபி {ஸல்} அவர்கள் மேற்கூறிய இறைவசனத்தை ஓதிக் காண்பித்தார்கள். ( நூல்: திர்மிதீ )
இந்த அழுகை என்பது நாற்பது நாட்கள் வரையாகும் என ஸுஃப்யான் அஸ் ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். மேலும், வானம் அழுவதன் அடையாளம் அதிகாலைப் பொழுதில் வானம் செந்நிற தோற்றத்தில் காட்சி தரும் என்றும் அறிஞர் பெருமக்கள் விளக்கம் தருகின்றார்கள்.
توفي في حياة رسول الله صلى الله عليه وسلم.
روى حديثه محبوب بن هلال المزني، عن ابن أبي ميمونة، عن أنس بن مالك قال: نزل جبريل على النبي عليهما السلام وهو بتبوك، فقال: يا محمد، مات معاوية بن معاوية المزني بالمدينة، فيجب أن نصلي عليه: قال: نعم، فضرب بجناحه الأرض، فلم تبق شجرة ولا أكمة إلا تضعضعت، ورفع له سريره حتى نظر إليه، فصلى عليه وخلفه صفان من الملائكة، في كل صف ألف ملك، فقال النبي صلى الله عليه وسلم لجبريل عليه السلام: يا جبريل، بم نال هذه المنزلة ؟ قال بحبه " قلْ هُوَ الله أَحَدٌ " ، وقراءته إياها جائياً وذاهباً، وقائماً وقاعداً، وعلى كل حال.
وقد روى: في كل صف ستون ألف ملك.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நபித்தோழர்களோடு தபூக்கிலே இருந்த தருணம் அது..
என்றைக்கும் இல்லாத அளவு சூரியனின் ஒளி வெண்மையாகவும், பிரகாசமாகவும் இருந்தது.
அப்போது, வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வருகை தருகின்றார்கள்.
நபிகள் {ஸல்} அவர்கள் ஆச்சர்யம் மேலிட ”ஜிப்ரயீலே! என்றைக்கும் இல்லாத அளவிற்கு சூரியனின் பிரகாசம் இன்று மிகவும் வெண்மையாய் அமைந்திருக்கின்றதே காரணம் தான் என்னவோ?” என ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் வினவினார்கள்.
அதற்கு, ஜிப்ரயீல் (அலை) அவர்கள் “இன்று தங்களின் தோழர் முஆவியா இப்னு முஆவியத்துல் முஸனிய்யி (ரலி) மதீனாவில் இறந்து விட்டார்கள். (இன்னா லில்லாஹ்..)
அவருக்காக நீங்கள் ஜனாஸா தொழுகை நடத்த விரும்புகின்றீர்களா?” என அண்ணலாரிடம் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கேட்டார்கள்.
ஆம் என நபிகளார் பதில் அளித்ததும், ஜிப்ரயீல் (அலை) அவர்கள் தங்களது இறக்கையை பூமியில் அடித்தார்கள்.
தபூக்கில் இருந்தவாரே அண்ணலார் மக்காவையும் மதீனாவையும் கண்டார்கள்.
பின்பு, அண்ணலார் தோழர்களிடம் நடந்த விவரத்தைக் கூறி ஜனாஸா தொழுகைக்குத் தயாராகுமாறு ஆணை பிறப்பித்தார்கள்.
பின்பு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஜனாஸா தொழவைத்தார்கள். நபிகளாரோடு ஜிப்ரயீல் (அலை) அவர்களும், இரண்டு ஸஃப் நிறைய வானவர்களும், (ஒவ்வொரு ஸஃப்ஃபிலும் எழுபதினாயிரம் வானவர்கள் நின்றனர்), நபித்தோழர்களும் கலந்து கொண்டார்கள்.
தொழுது முடித்த பின்னர், ஜிப்ரயீலை நோக்கிய நபிகளார் “ஜிப்ரயீலே! எதன் காரணத்தினால் முஆவியா இப்னு முஆவியத்துல் முஸனிய்யீ இந்த உயர் அந்தஸ்தை அடைந்தார்” எனக் கேட்டார்கள்.
அதற்கு, ஜிப்ரயீல் (அலை) அவர்கள் “உலகில் வாழும் காலங்களில் அவர் அல் இஃக்லாஸ் அத்தியாயத்தை மிகவும் நேசித்தார்; அமர்ந்த நிலையில், நின்ற நிலையில், பசித்திருந்த நிலையில், படுத்த நிலையில், நடந்த நிலையில் என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் அதை ஓதியும் வந்தார்” ஆதலால் அல்லாஹ் அவருக்கு இந்த அந்தஸ்தை வழங்கி கௌரவித்துள்ளான்” என பதில் கூறினார்கள்.
இந்தச் செய்தி அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களின் வாயிலாக முஸ்னத் அபூ யஃலா வில் 4268 –வது ஹதீஸாகவும், இமாம் பைஹகீ (ரஹ்) அவர்கள் தங்கள் சுனனில் பாகம்: 4, பக்கம்:50 –லும், அபூ உமாமா அல் பாஹிலீ (ரலி) அவர்களின் வாயிலாக இமாம் தப்ரானீ (ரஹ்) அவர்கள் முஃஜமுல் கபீரில் 7537 –வது ஹதீஸாகவும் பதிவு செய்திருக்கின்றார்கள்.
அல்லாமா இப்னு அப்தில் பர் (ரஹ்) அவர்கள் தங்களின் அல் இஸ்தீஆப் ஃபீ மஃரிஃபத்தில் அஸ்ஹாப் எனும் நூலில் மேற்கண்ட மூன்று அறிவிப்புக்களையும் பதிவு செய்து விட்டு இந்தச் செய்தி வலுவான அறிவிப்புத் தொடர்களின் மூலம் இடம் பெற வில்லையென்றாலும் இது முன்கர் வகையைச் சார்ந்த ஹதீஸ் அல்ல என்றும் சான்று பகர்கின்றார்கள்.
மேலே தரப்பட்டிருக்கின்ற அரபி வாசகம் உஸ்துல் ஃகாபா நூலில் இடம் பெற்றுள்ளது.
( நூல்: அல் இஸ்தீஆப், பாகம்:2, பக்கம்:364,365. மற்றும் உஸ்துல் ஃகாபா )
2. ஜனாஸா தொழுகை மற்றும் ஜனாஸா சுமந்து செல்வதில் வானவர்கள் பங்கேற்பார்கள்…
மதீனத்து அன்சாரிகளில் முதல் இஸ்லாமிய குடும்பம் இவருடையது. அவ்ஸ் கோத்திரம் அப்துல் அஷ்ஹல் குடும்பம் தமது கோத்திரத்திலேயே இஸ்லாத்திற்காக அனைத்திலும் முன்னிலையில் நிற்பவர் ஸஅத் இப்னு முஆத் [ரலி] அவர்கள் மதீனாவில் அவ்ஸ் கோத்திரத்தாரின் தலைவராக இருந்தார்கள்.
இவரே ஸய்யிதில் அன்ஸார் - அன்ஸாரிகளின் தலைவர் என அண்ணல் நபி (ஸல்) அவர்களால் அன்பாக அழைக்கப்பட்டவர்கள்.
கந்தக் யுத்தத்தில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஒரு மாத காலத்திற்கு பின் அன்னார் வஃபாத்தானார்கள்.
. فقال رسول الله : "لقد نزل سبعون ألف ملك شهدوا سعد بن معاذ، ما وطئوا الأرض قبل ذلك اليوم".
அன்னாரின் நல்லடக்க இறுதி ஊர்வலத்தில் இப்பூமிக்கு இதற்கு முன் வருகை தராத எழுபதினாயிரம் வானவர்கள் வருகை புரிந்திருக்கிறார்கள் என நபி (ஸல்) கூறியதாக ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அறிவிக்கும் நபிமொழியொன்றை திர்மிதியில் காணலாம்.
عن جابر ، سمعت النبي يقول: "اهتز العرش لموت سعد بن معاذ.
”ஸஅத் இப்னு மஆத் (ரலி) யின் மரணத்தால் அர்ஷ் நடுங்கியது என நபி (ஸல்) அவர்கள் கூறிய நபிமொழியை முதவாத்திரான அதிகமான அறிவிப்புகளின் மூலம் காணலாம்.
حينما سمع النبي أحد المنافقين يقول: ما رأينا كاليوم، ما حملنا نعشًا أخف منه قط
நாங்கள் ஸஅத்ப்னு மஆத் (ரலி)யின் உடலை சுமந்து சென்ற போது என்ன இலகுவாகக் கொண்டு செல்கிறார்கள் என முனாபிக்கள் விமர்சித்த போது வானவர்கள் ஜனாஸாவை சுமந்து வருகிறார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்ற நபிமொழியை திர்மிதியில் பார்க்கலாம்.
3. மகத்தான முன்னோடியாக… நேர்வழிக்கு வித்திடுபவராக…
قال ابن إسحاق: لما انصرف رسول الله
من الطائف اتبع أثره عروة بن مسعود بن معتب حتى أدركه قبل أن يصل إلى المدينة فأسلم, وسأل رسول الله
أن يرجع إلى قومه بالإسلام, فقال له رسول الله
"إن فعلت فإنهم قاتلوك". فقال له عروة: يا رسول الله أنا أحب إليهم من أبصارهم, وكان فيهم محببًا مطاعًا, فخرج يدعو قومه إلى الإسلام فأظهر دينه رجاء ألا يخالفوه لمنزلته فيهم, فلما أشرف على قومه وقد دعاهم إلى دينه رموه بالنبل من كل وجه فأصابه سهم فقتله.
ஹிஜ்ரி 8 – ஆம் ஆண்டு ஹுனைன் யுத்தத்தில் தோற்று ஓடிய சில கோத்திரத்தார்கள் தாயிஃபில் தஞ்சம் புகுந்தனர்.
அவர்களை முற்றுகையிட்டு வெற்றியோடு தாயிஃபில் இருந்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது, அண்ணலாரைப் பின் தொடர்ந்து வந்த ஸகீஃப் கோத்திரத்தைச் சார்ந்த உர்வா இப்னு மஸ்வூத் என்பவர் மாநபி {ஸல்} அவர்களிடம் வந்து, கரம்பிடித்து இஸ்லாத்தைத் தழுவினார்.
இஸ்லாத்தின் அடிப்படைகளை அவருக்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்.
استأذن عروة بن مسعود من النبي
أن يرجع إلى قومه فقال
"إني أخاف أن يقتلوك"
அல்லாஹ்வின் தூதரே! என் சமூக மக்களுக்கும் நான் இந்த இஸ்லாத்தை எடுத்தியம்ப விரும்புகின்றேன். அனுமதி தாருங்கள்! என்றார் உர்வா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
ஸகீஃப் கோத்திரத்தாரின் மூர்க்கத்தனமான குணத்தை அறிந்து வைத்திருந்த அண்ணலார் “உர்வாவே! அவர்கள் உன்னை கொன்று விடுவார்களோ என நான் அஞ்சுகின்றேன். கொஞ்சம் காத்திருந்து அவர்களிடம் சொல்லலாமே” என்றார்கள்.
அதற்கு உர்வா ரலியல்லாஹு அன்ஹு ”அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் என்னை கன்னிப் பெண்ணை விட அதிகம் நேசிக்கின்றார்கள்”. ஆதலால் அப்படியெல்லாம் என்னிடம் அவர்கள் நடந்து கொள்ள மாட்டார்கள். ஆகவே, நீங்கள் பயப்பட வேண்டாம்” என்று கூறியவராக விடைபெற்றுச் சென்றார்கள்.
உண்மையில், அவரிடம் ஸகீஃப் கோத்திரத்தார்கள் அப்படித்தான் அதுவரை நடந்து கொண்டனர். ஆனால், அவரின் இந்த நல்லெண்ணம் இப்போது தவறாகிவிட்டது.
இஸ்லாத்தின் பால் அம்மக்களை உர்வா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அழைத்த போது, அவர்களின் குடும்பத்தினர்களும், நண்பர்களும் சினம் கொண்டு சீரியெழுந்தனர். கண்மூடித்தனமாகத் தாக்கினர். கையில் கிடைத்த ஆயுதங்கள் அனைத்தையும் பிரயோகித்து அவரை நடைபிணமாக ஆக்கினர்.
واختلف في اسم قاتله فقيل: أوس بن عوف، وقيل: وهب بن جابر، وقيل لعروة: ما ترى في دمك قال: كرامة أكرمني الله بها، وشهادة ساقها الله إليَّ فليس في إلا ما في الشهداء الذين قتلوا مع النبي
قبل أن يرتحل عنكم فادفنوني معهم فدفنوه معهم
இறுதியாக ஓர் அம்பு அவரின் உயிரை பதம் பார்த்தது. ஆம்! மரணத்தின் வாசல் வரை கொண்டு வந்து விட்டனர். மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்த உர்வா ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து “இப்போது உம்முடைய மதம் எப்படி இருக்கின்றது?” என கிண்டலாக கேட்டனர்.
அதற்கு, உர்வா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் “கண்ணியம் நிறந்த என் இறைவன் என்னை கண்ணியப் படுத்திவிட்டான்; இந்த தியாகத்தை நான் பதிவு செய்யவேண்டும் என்பதற்காகவே அவன் என்னை உங்களிடம் வரவைத்தான். இது எனக்கு அவன் வழங்கிய அருட் கொடையாகும்.” என்றார்கள்.
பின்பு, “நான் மரணமடைந்த பிறகு அல்லாஹ்வின் தூய மார்க்கத்திற்காக, அல்லாஹ்வின் தூதரோடு போரிட்டு, போர்க் களத்தில் வீர மரணம் அடைந்தார்களே அவர்களோடு என்னை நல்லடக்கம் செய்யுங்கள்” என்று கூறி வீர மரணம் அடைந்தார்கள். ( நூல்: அல் இஸ்தீஆப், பாகம்:2, பக்கம்:249 )
தூய இஸ்லாத்தை ஏற்று சில நாட்களிலேயே ஷஹீதாகும் நற்பேற்றைப் பெற்றார் உர்வா இப்னு மஸ்வூத் அஸ்ஸகஃபீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
فلما علم النبى بما حدث لعروة قال: «مَثَلُ عروة فى قومه مَثَلُ صاحب ياسين دعا قومه إلى الله فقتلوه
இப்னு இஸ்ஹாக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்: “தமது சமூகத்தில் உர்வா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அந்தஸ்து யாஸீன் சூராவில் சொல்லப்படும் சமூகத்தில் வாழ்ந்த வாலிபரின் அந்தஸ்தைப் போன்றதாகும்”. என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்தத்ரக் அல் ஹாக்கிம், பாகம்:3, பக்கம்:173 )
وبعد رحلة الإسراء والمعراج أخبر النبى صلى الله عليه وآله وسلم أصحابه أن هذا الصحابى هو أكثر الناس شبهًا بالمسيح عيسى بن مريم عليه السلام. وقال: «عُرض عليَّ الأنبياء، فإذا موسى ضرب من الرجال كأنه من رجال شنوءة، ورأيت عيسى بن مريم فإذا أقرب مَنْ رأيت به شبهًا عروة بن مسعود».
وفى صحيح مسلم وسنن الترمذى ومسند أحمد، عن عامر الشعبيّ قال: شبّه رسول الله، صَلَّى الله عليه وسلم، ثلاثة نَفَرٍ من أمّتهِ فقال: «دِحيْة الكلبيّ يُشبهُ جبرائيل، وعُروة بن مسعود الثّقَفيّ يُشْبِهُ عيسى بن مريم، وعبد العُزّى يُشْبهُ الدجّال».
ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “எனக்கு நபிமார்கள் காட்டப்பட்டனர். நான் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பார்த்தேன். ஷனூஆ வின் ஆண்களின் சாயலில் இருந்தார்கள். நான் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பார்த்தேன். உர்வா இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சாயலில் இருந்தார்கள். நான் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பார்த்தேன். அவர்கள் என் சாயலில் இருந்தார்கள். நான் அங்கே ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் பார்த்தேன். திஹ்யத்துல் கலபீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சாயலில் இருந்தார்கள்.” ( நூல்: முஸ்லிம், ஹதீஸ் எண்:167 )
இவைகளெல்லாம் பின் நாளில் உர்வா இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரால் வழங்கப்பட்ட கௌரவமாகும்.
காலம் கனிந்தது, உர்வா பின் மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொன்ற பிறகு அவர்களின் கோத்திரத்தார்களால் மன நிம்மதியாக வாழ்ந்திட இயலவில்லை.
அவர்களின் அச்செயல் குற்ற உணர்வை ஏற்படுத்தியது. ஹிஜ்ரி 9 – ஆம் ஆண்டு ரமலான் மாதம் அண்ணலாரைக் காண ஒட்டு மொத்த ஸகீஃப் கோத்திரமும் மதீனா வந்திருந்தனர். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன் வந்து நின்ற ஸகீஃப் கோத்திரத்தினர் “நாங்கள் இஸ்லாத்தை” ஏற்றுக் கொள்கின்றோம் என்று கூறி தூய இஸ்லாத்தில் இணைந்து கொண்டனர்.
சில நாட்களே இஸ்லாத்தின் நிழலில் பயணித்து வீர மரணமடைந்த ஒருவரின் மரணம் பல நூறு மனிதர்களுக்கு ஹிதாயத் கிடைப்பதற்கு காரணமாய் அமைந்த வரலாற்றுக்கு சொந்தக்காரராய் வாகாய் மிளிர்கின்றார்கள் உர்வா இப்னு மஸ்வூத் அஸ்ஸகஃபீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
4. ஜனாஸா தொழுகையில் அதிகமான மக்கள் பங்கேற்று அவரின் மன்னிப்பிற்கும், சுவன வாழ்விற்கும் சான்று பகர்வார்கள்...
والجنازة التي سوف نتكلّم عنها، هي جنازة إمام أهل السنة والجماعة أحمد بن حنبل الذي رحل عن دنيانا في ربيع ثان سنة 241 هجرية، في صبيحة يوم جمعة، بعد الشروق بساعتين، وقد حضر غسله مائة من بيت الخلافة من بنى هاشم، وعندما أخرج نعشه من بيته ببغداد كان وإلى بغداد حاضراً وهو الأمير 'محمد بن طاهر' لأن الخليفة المتوكل العباسي كان في مدينة 'سامرا' وقتها، واجتمع الناس لحضور الجنازة، ومن ضخامة أعداد المشيعين، أمر الأمير 'محمد بن طاهر' بإحصاء الحاضرين، فوجدوا ألف ألف وسبعمائة ألف، أي مليون وسبعمائة ألف مشيّع، وقال الحافظ أبو زرعة: "بلغني أن المتوكل أمر أن يمسح الموضع الذي وقف الناس فيه حيث صلوا على الإمام أحمد بن حنبل، فبلغ مقامه ألفي ألف وخمسمائة ألف"، أي مليونين ونصف المليون.
وقال الحافظ عبد الوهاب الوراق: "ما بلغنا أن جمعاً في الجاهلية ولا في الإسلام اجتمعوا في جنازة أكثر من الجمع الذي اجتمع على جنازة أحمد بن حنبل
وقال
ابن حاتم: "سمعت أنه قد أسلم يوم أن مات أحمد بن حنبل عشرون ألفاً من اليهود
والنصارى والمجوس".
இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 241 ரபீவுல் ஆகிரில் ஜும்ஆ தினத்தின் காலையில் வஃபாத் ஆனார்கள்.
இமாம் அவர்களின் ஜனாஸாவில் ஏழு லட்சம் ஆண்களும், 60 ஆயிரம் பெண்களும் கலந்து கொண்டனர்.
இது குறித்து முஹத்திஸ் அப்துல் வஹ்ஹாப் அல்வர்ராக் (ரஹ்) அவர்கள் “ஜாஹிலிய்யாவின் போதும் சரி இஸ்லாம் வளர்ந்து மக்களால் நிரம்பி இருக்கும் போதும் சரி இத்தகையதொரு பெருங்கூட்டம் எந்த ஒன்றிற்காகவும் கூடியதாக நாம் அறிந்ததில்லை” என்று வியப்போடு பதிவு செய்துள்ளார்கள்.
இமாம் இப்னு ஹாத்தம் (ரஹ்) அவர்கள் “அன்றைய நாளில் யூத, நஸாரா, மஜூஸி என சுமார் 20 ஆயிரம் (இன்னொரு அறிவிப்பில் 10 ஆயிரம்) நபர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
இமாம் அவர்கள் வஃபாத்தின் போது அன்றைய கலீஃபா அப்போது அங்கே இல்லை. மதீனாவில் இருந்தார்கள். மதீனாவில் இருந்து வந்ததும் ஜனாஸாவில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையை கேட்டு வியந்து மக்கள் நின்ற இடங்களின் பரப்பளவை கணக்கிடச் சொன்னார்கள்.
2 கோடியே 5 லட்சம் சதுரஅடி பரப்பளவில் ஜனாஸா தொழுகையில் மக்கள் நின்றுள்ளனர் என்று மிகத்துல்லியமாக கணக்கிட்டு வரலாற்றில் பதிவு செய்துள்ளார்கள். ( நூல்: ஸியரு அஃலாமின் நுபலா )
5 .மண்ணறை வாழ்வு மகிழ்ச்சிக்குரியதாய் அமையும்…
هذا عبد الله بن عباس ترجمان القرآن الذي
دعى له النبي صلى الله عليه وسلم
فقال
اللهم فقهه في الدين وعلمه التأويل)فوهب حياته لتعلم القرآن وتفسيره وما فيه من أحكام وأسرار، يعتمد على تفسيره كل من أتى بعده، ظل على هذا الحال حتى مات فلما ذهبوا به ليدفنوه دخل نعشه طائر لم ير مثل خلقته من قبل ولم ير خارجا منه
وسمعوا بعد دفنه صوتاً على شفير القبر لا يدري من القائل(يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي). (صححه الهيثمي في مجمع الزوائد 9/285، وقال الذهبي في سير أعلام النبلاء 3/358 هذه قصة متواترة)
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மாநபி {ஸல்} அவர்களின் தனிப் பெரும் பாசத்திற்கும், மகத்தான துஆவிற்கும் உரித்தானவர்கள் ஆவார்கள்.
மாநபி {ஸல்} அவர்களுடைய துஆவின் பரக்கத்தால் குர்ஆனுடைய ஞானத்தில் மிகச்சிறந்து விளங்கினார்கள்.
குர்ஆனுடைய விளக்கத்தை கற்கவும், உம்மத்துக்கு கற்றுக் கொடுக்கவும் தமது வாழ்க்கையையே முழுமையாக அர்ப்பணித்தார்கள்.
தங்களுடைய 71 –ஆவது வயதில் இறை அழைப்பை ஏற்றார்கள். அவர்களை நல்லடக்கம் செய்ய மண்ணறைக்கு சென்று அவர்களின் உடலை குழிக்குள் வைத்த போது முன்னெப்போதும் பார்த்திராத அழகிய பறவையொன்று கப்ருக்குள் நுழைந்து கொண்டது. அது அவர்களை மண்ணை போட்டு மூடி நல்லடக்கம் செய்கிற வரையிலும் வெளியே வரவும் இல்லை.
நல்லடக்கம் செய்து முடித்து மண்ணறையின் அருகாமையில் இருந்து மக்கள் கலைகிற போது கப்ருக்குள் இருந்து “அமைதி பெற்ற ஆன்மாவே! நீ உமது ரப்பின் பால் திருப்தி கொண்ட நிலையிலும், அவன் உன் மீது திருப்தி கொள்ளப்பட்ட நிலையிலும் மீளுவாயாக! ஆகவே, நீ எனது நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக! மேலும் எனது சுவனச் சோலையில் நீ நுழைவாயாக!” என்ற அல்ஃபஜ்ர் அத்தியாயத்தில் 27 – 30 வசனங்கள் ஓதப்படும் சப்தத்தை அங்கு நின்ற மக்கள் அனைவரும் கேட்டனர். ( நூல்: ஸியரு அஃலாமின் நுபலா )
ஆகவே, அல்லாஹ்விடம் மரணத்திலும், மரணத்திற்கு பிந்தைய அனைத்து நிலைகளிலும் பரக்கத்தைக் கேட்போம்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுக்கு விருப்பமான முறையில் வாழும் நஸீபை தௌஃபீக்கை உங்களுக்கும் எனக்கும் தந்தருள்வானாக!
ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
மாஷா அல்லாஹ் மிக அருமை அல்லாஹ் தங்கள் இல்மிலும் வாழ்விலும் அபிவிருத்தி செய்வானாக ஆமீன்
ReplyDeleteBarakallah moulana arumayana vishayangal allah ungalukku yella vidamana arutkodaigalai naseebakkattum
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத்.
ReplyDeleteவயிறு நிறைய உணவு கொடுப்பது போன்று பயான் குறிப்புகள் வழங்கியுள்ளீர்கள்.
الحمد لله جزاكم الله خير الجزاء يا استاذ ٣