Thursday, 5 November 2020

 

மாநபி {ஸல்} அவர்களின் அழைப்பை ஏற்போம்!!!

 

 

மனித வாழ்வதென்பது இரண்டு வகை. ஒன்று உயிர்ப்போடு வாழ்வது. இன்னொன்று உயிர் இருப்பதால் வாழ்வது. 

உயிர் இருப்பதால் வாழ்வதெனும் இரண்டாம் தர வாழ்க்கையை கிட்டத்தட்ட உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் வாழ்கிறது. 

நம்மில் பலரும் அப்படித்தான் அந்த உயிரினங்கள் போல வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

உண்பது, குடிப்பது, உறங்குவது, உறவாடுவது, அன்பு செலுத்துவது, அளவலாவுவது, பிள்ளை குட்டிகளை பெற்றுக்கொள்வது என எல்லா உயிரினங்களையும் போல வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

உண்மையில் இந்த இரண்டாம் தர வாழ்க்கை என்பது வாழ்க்கையே அல்ல, அதிலும் ஒரு இறைநம்பிக்கையாளன் அந்த வாழ்க்கையை வாழ்வதென்பது அழகும் அல்ல.

உயிர்ப்புடன் வாழ்கிற முதல் தர வாழ்க்கை தான் மனித சமூகம் வாழ வேண்டிய வாழ்க்கை. 

மனித சமூகத்திற்கு அல்லாஹ் தன் புறத்தில் இருந்து தெளிவான வழிகாட்டலைக் கொண்ட நபிமார்களை, ரஸூல்மார்களை அனுப்பிய அடிப்படை காரணமே முதல் தர வாழ்க்கையை வாழ்வதற்காகவே!.

மனித வாழ்க்கையின் எல்லாத் துறைகளுக்குமான முழுமையான முன்மாதிரியாக இறுதித்தூதர் முஹம்மத் {ஸல்} அவர்களை நமக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வழங்கியிருக்கின்றான். 

இறைநம்பிக்கையாளன் என்ற அடிப்படையில் வாழ்வியல் முன்மாதிரியான மாநபி {ஸல்} அவர்களின் வாழ்க்கையை நாம் வாழ்ந்தே ஆக வேண்டும். அது தான் இந்த உலகில் நாம் வாழ்ந்ததற்கான அடையாளமும், அர்த்தமும் ஆகும்.

அதற்கும் முன்பாக நாம் ஒரு உண்மையை விளங்க வேண்டும் என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அறைகூவல் விடுக்கின்றான்.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ

அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் பதிலளியுங்கள்! உங்களை வாழ வைக்கிற காரியங்களின் பால் அல்லாஹ்வின் தூதர் அழைத்தால் அவருக்கு பதிலளியுங்கள்!”.                                             ( அல்குர்ஆன்: 8: 24 )

فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ

நம் தூதராகிய அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களே, அத்தகையவர்கள் (உலகில்) தங்களுக்கு துன்பம் நிகழ்வதையோ, (மறுமையில்) நோவினையளித்திடும் வேதனை நிகழ்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்!”. (அல்குர்ஆன்: 24: 63 )

 

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வார்த்தைகள், சோபனங்கள், எச்சரிக்கைகள், சமிஞ்க்கைகள், நடைமுறைகள், அங்கீகாரங்கள் என அனைத்துமே இந்த உம்மத்தை வாழ வைப்பதற்கான அழைப்புகள் ஆகும். அதற்கு பதிலளிப்பதென்பது அதை அப்படியே ஏற்று நம் வாழ்வில் கடைபிடிப்பது தான்.

அதை நாம் செய்ய மறுத்தாலோ, செய்யாமல் அலட்சியம் செய்தாலோ என்ன நிகழும் என்கிற எச்சரிக்கையை அல்லாஹ் தெளிவு படுத்திவிட்டான்.

ஏற்று நடத்தலும்அலட்சியம் செய்தலும்

عن أبي مسعود قال: ( كان رسول الله يأمرنا بالصدقة، فما يجد أحدنا شيئاً يتصدق به؛ حتى ينطلق إلى السوق، فيحمل على ظهره، فيجيء بالمدّ، فيعطيه رسول الله ، إني لأعرف اليوم رجلاً له مائة ألف، ما كان له يومئذ درهم! ) رواه النسائي/ صحيح النسائي:2528

அபூ மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் எங்களிடையே நபி {ஸல்} அவர்கள் அமர்ந்திருந்த போது எங்களிடம் தர்மம் செய்யுமாறு கூறினார்கள்.

 அப்போது எங்களில் எவரிடமும் தர்மம் செய்யும் அளவுக்கு எதுவும் இல்லை. எங்களில் ஒருவர் கடை வீதிக்குச் சென்று உழைத்து, அதன் மூலம் கிடைத்த கூலியை ஒரு முத்து அளவிற்கு பெருமானார் {ஸல்} அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தார். 

இப்போது நான் அவரின் வாழ்க்கைத் தரத்தைப் பார்க்கின்றேன். அவரிடம் ஒரு லட்சம் திர்ஹம் இருக்கின்றது. ஆனால், அண்ணலாரிடம் அவர் வந்து கொடுக்கும் முன்பு வரை அவரிடம் ஒரு திர்ஹம் கூட இல்லை”.               ( நூல்: நஸாயி ) 

أنَّ رسول الله صلى الله عليه وآله وسلم حين قال -فيما رواه الحاكم في

المستدرك

 «مَنْ تَكَفَّلَ لِي أَنْ لَا يَسْأَلَ النَّاسَ شَيْئًا فَأَتَكَفَّلَ لَهُ بِالْـجَنَّةِ» فقال ثوبان: أنا، فكان لا يسأل الناسَ شيئًا، وذلك من شِدَّة التزامه بتوجيهات رسول الله صلى الله عليه وآله وسلم وطاعته لله ورسوله
وقد مات سيدنا ثوبان رضي الله عنه سنة أربع وخمسين من الهجرة، رضي الله عنه وأرضاه،
 

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நபித்தோழர்களோடு அமர்ந்திருக்கும் போது, “எவரொருவர் வாழ்க்கையில் எந்த தருணத்திலும் எவரிடத்திலும் எந்த ஒன்றையும் யாசிக்க மாட்டேன் என பொறுப்பேற்றுக் கொள்கின்றாரோ, அவருக்கு நான் அவரை சுவனத்தில் கொண்டு சேர்க்கின்ற பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றேன்என்று மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

அப்போது அந்த சபையில் அமர்ந்திருந்த ஸவ்பான் {ரலி} அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! என் வாழ்க்கையில் எந்த தருணத்திலும், எவரிடத்திலும் எந்த ஒன்றையும் யாசிக்கவே மாட்டேன் என நான் பொறுப்பு தருகின்றேன்என்று கூறினார்கள்.                                                             

      இந்த ஹதீஸை அறிவிக்கின்ற அபுல் ஆலியா {ரஹ்} அவர்கள் கூறுகின்றார்கள்:அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் புனித வஃபாத்திற்குப் பிறகு ஸவ்பான் {ரலி} அவர்கள் ஷாம் தேசத்திற்கு சென்றுவிட்டார்கள்.            

ஸவ்பான் (ரலி) அவர்கள் மரணிக்கின்ற வரையிலும் அவர்கள் யாரிடத்திலும் யாசிக்க வில்லை.” ( நூல்:அபூதாவூத், ஹதீஸ் எண்:1763, ஸியரு அஃலா மின் நுபலா, பாகம்:3, பக்கம்:17. )

وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال : قال لي رسول الله صلى الله عليه وسلم : يا عبد الله ألم أخبر أنك تصوم النهار وتقوم الليل فقلت : بلى يا رسول الله ، قال : فلا تفعل صم وأفطر وقم ونم فإن لجسدك عليك حقا وإن لعينك عليك حقا وإن لزوجك عليك حقا وإن لزوْرك عليك حقا وإن بحسبك أن تصوم كل شهر ثلاثة أيام فإن لك بكل حسنة عشر أمثالها فإن ذلك صيام الدهر كله فشدَّدتُ فشدَّد عليَّ قلت يا رسول الله إني أجد قوة قال فصم صيام نبي الله داود عليه السلام ولا تزد عليه قلت وما كان صيام نبي الله داود عليه السلام قال نصف الدهر فكان عبد الله يقول بعد ما كبر يا ليتني قبلت رخصة النبي صلى الله عليه وسلم . رواه البخاري ( 1874 ) ومسلم ( 1159 ) . زوْرك : أي ضيفك .

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ் (ர­லி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி {ஸல்} அவர்கள் என்னிடம், ''அப்துல்லாஹ், நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக நான் அறிகின்றேனே!'' அது உண்மையா? என்று கேட்டார்கள். அதற்கு, நான் ''ஆம்! அல்லாஹ்வின் தூதரே!'' என்றேன்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள் ''இனி அவ்வாறு செய்யவேண்டாம்! (சில நாட்கள்) நோன்பு வைத்து; (சில நாட்கள்) விட்டுவிடுவீராக! (சிறிது நேரம்) தொழுது; (சிறிது நேரம்) உறங்குவீராக!

ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் சிலது உமக்கிருக்கின்றன; உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் சிலது உமக்கிருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் சிலது உமக்கிருக்கின்றன; உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்!

ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!'' என்று கூறினார்கள்.

நான் சிரமத்தை வரிந்து கட்டிக்கொண்டு ஏற்றுக்கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது!'' ஆம்! அப்போது அல்லாஹ்வின் தூதரே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!'' என்று நான் கூறினேன். அதற்கு நபி {ஸல்} அவர்கள் ''தாவூத் நபி {அலை} அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதைவிட அதிகமாக்க வேண்டாம்!'' என்றார்கள்.

            தாவூத் நபியின் நோன்பு எது?' என்று நான் கேட்டேன். ''வருடத்தில் பாதி நாட்கள்!'' என்றார்கள். ''அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ் (ர­லி) அவர்கள் வயோதிகம் அடைந்த காலத்தில் எனக்கு 'நபி {ஸல்} அவர்கள் அளித்த சலுகைகளை நான் ஏற்காமல் போய்விட்டேனே!' என்று (வருத்தத்துடன்) கூறுவார்கள்!'' என அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.                           ( நூல்: புகாரி )

பெருமானார் {ஸல்} அவர்களின் அழைப்பிற்கு அழகிய முறையில் பதிலளித்த ஒருவரின் வாழ்வு...

كان خالد بن الوليد كثيرَ التردُّد في الانتماء للإسلام، غير أنه مال إلى الإسلام وأسلم متأخِّرًا في صفر للسنة الثامنة من الهجرة، قبل فتح مكة بستة أشهر، وقبل غزوة مؤتة بنحو شهرين، وتعود قصة إسلام خالد بن الوليد إلى ما بعد معاهدة الحديبية؛ حيث أسلم أخوه الوليد بن الوليد، ودخل الرسول صلى الله عليه وسلم مكة في عمرة القضاء فسأل الوليد عن أخيه خالد، فقال: «أَيْنَ خَالِدٌ؟» فقال الوليد: يأتي به الله.
فقال النبي صلى الله عليه وسلم: «
مَا مِثْلُهُ جَهِلَ الْإِسْلَامَ، وَلَوْ كَانَ يَجَعَلَ نِكَايَتَهُ مَعَ المُسْلِمِينَ عَلَى المُشْرِكِينَ كَانَ خَيْرًا لَهُ، وَلَقَدَّمْنَاهُ عَلَى غَيْرِهِ». فخرج الوليد يبحث عن أخيه فلم يجده، فترك له رسالة قال فيها: «بسم الله الرحمن الرحيم، أمَّا بعدُ.. فإني لم أَرَ أعجب من ذهاب رأيك عن الإسلام وَعَقْلُهُ عَقْلُكَ، ومِثْلُ الإسلام يجهله أحدٌ؟! وقد سألني عنك رسول الله صلى الله عليه وسلم، فقال: «أَيْنَ خَالِدٌ؟» -وذَكَرَ قولَ النبي صلى الله عليه وسلم فيه- ثم قال له: فاستدركْ يا أخي ما فاتك فيه؛ فقد فاتتك مواطن صالحة». وقد كان خالد –رضي الله عنه- يُفَكِّر في الإسلام، فلمَّا قرأ رسالة أخيـه سُرَّ بها سرورًا كبيرًا، وأعجبه مقالة النبـي صلى الله عليه وسلم فيه، فتشجَّع وأسلـم (1).

الحلم
رأى خالد بن الوليد في منامه كأنه في بلادٍ ضيِّقة جدبة، فخرج إلى بلد أخضر واسع، فقال في نفسه: «إن هذه لرؤيا». فلمَّا قَدِمَ المدينة ذكرها لأبي بكر الصديق رضي الله عنه فقال له: «هو مخرجُكَ الذي هداك الله للإسلام، والضيقُ الذي كنتَ فيه من الشرك
» (2).

رحلة خالد بن الوليد إلى المدينة
يقول خالد عن رحلته من مكة إلى المدينة: (وددت لو أجد مَنْ أُصاحب، فلقيتُ عثمان بن طلحة، فذكرتُ له الذي أُريد فأسرع الإجابة، وخرجنا جميعًا فأدلجنا سرًّا، فلما كنا بالسهل إذا عمرو بن العاص، فقال: «مرحبًا بالقوم». قلنا: «وبك». قال: «أين مسيركم يا مجانين؟». فأخبرْنَاه، وأخبرَنَا -أيضًا- أنه يُريد النبي صلى الله عليه وسلم ليُسلم، فاصطحبنا حتى قدمنا المدينة أول يوم من صفر سنة ثمان).
فلما رآهم رسول الله صلى الله عليه وسلم قال لأصحابه: «
رَمَتْكُمْ مَكَّةُ بِأَفْلَاذِ كَبِدِهَا (3)». يقول خالد: «ولما اطَّلعت على رسول الله صلى الله عليه وسلم سَلَّمتُ عليه بالنبوة، فردَّ عليَّ السلام بوجهٍ طلقٍ، فأسلمتُ وشهدتُ شهادة الحقِّ». وحينها قال الرسول صلى الله عليه وسلم: «الحَمْدُ لِلهِ الَّذِي هَدَاكَ، قَدْ كُنْتُ أَرَى لَكَ عَقْلًا رَجَوْتُ أَنْ لَا يُسْلِمَكَ إِلَّا إِلَى خَيْرٍ». وبايعتُ الرسـول وقلتُ: «استغفر لي كل ما أوضعـتُ فيه من صدٍّ عن سبيل الله». فقال: «الْإِسْلَامُ يَجُبُّ مَا كَانَ قَبْلَهُ». فقلتُ: «يا رسول الله على ذلك». فقال: «اللهُمَّ اغْفِرْ لِخَالِدِ بْنِ الْوَلِيدِ كُلَّ مَا أَوْضَعَ فِيهِ مِنْ صَدٍّ عَنْ سَبِيلِكَ». وتقدَّم عمرو بن العاص وعثمان بن طلحة، فأسلما وبايعا رسول الله (4).
وقال الرسول صلى الله عليه وسلم عن خالد: «
نِعْمَ عَبْدُ اللهِ خَالِدُ بْنُ الوَلِيدِ، سَيْفٌ مِنْ سُيُوفِ اللهِ» (5).

மக்காவின் பனூ மக்சூம் என்ற குலத்தில் வலீத் பின் முகீரா என்பவருக்கு மகனாகப் பிறந்த காரணத்தால், அவரது பெருமைமிக்க குலப் பெருமையின் காரணமாக, இளமையிலேயே எல்லோராலும் அறியப்படக் கூடிய மனிதராகக் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் திகழ்ந்தார்கள்.

அவரது இளமைக் காலத்திலேயே தூர நோக்கு, திட்டமிட்டு செயலாற்றுதல், எடுத்த காரியத்தை கனகச்சிதமாக நிறைவேற்றுதல் ஆகியவற்றின் காரணமாக பனூ மக்சூம் கோத்திரத்து வாலிபர்களில் மிகச் சிறந்த இடத்தைப் பெற்றிருந்தார்கள்.

உஹதுப் போர் முதல் ஹ{தைபிய்யா வரைக்கும் இஸ்லாமிய எதிரிகளின் தரப்பில் இருந்த காலித் பின் வலீத் அவர்கள், இஸ்லாமிய எதிரிகளின் இராணுவத்தின் துணைப் பிரிவுக்குத் தலைவராகவும், குதிரைப் படைக்குத் தலைவராகவும் இருந்து பணியாற்றிய அனுபவமிக்க இவர். 

ஒருமுறை போரின் பொழுது, நபித்தோழர்கள் பின்னிற்க இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதிய லுஹர் தொழுகையை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார்கள். இது தான் தக்க சமயம் என்று எண்ணிக் கொண்ட காலித் பின் வலீத் அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களையும், அவர்களைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்த தோழர்களையும் தாக்கி, அந்தப் போரைத் தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வதற்குத் தாயரானார்.

ஆனால், கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு படை ஒன்று, அவரைப் பின்னுக்கு இழுப்பதைப் போல உணர்ந்த காலித் பின் வலீத் அவர்கள், தன்னுடைய முயற்சியைக் கைவிட்டார். முஸ்லிம்களை எதிர்க்கும் துணிவையும் இழந்து விட்டார்.

மீண்டும் அஸர்  தொழுகை நடந்து கொண்டிருந்தது. இந்தமுறை கண்டிப்பாக சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது என்று சூளுரைத்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்த தோழர்களையும் நெருங்கிய பொழுது, கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு சக்தி அவரைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டதோடு, அவரால் நகரக் கூட இயலாமல் போனது. அப்பொழுது தான் ஒரு முடிவுக்கு வந்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் மோதுவது தேவையில்லாத ஒன்று என்று. அவரை ஏதோ ஒரு சக்தி பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது, இந்த நிலையில் அரேபியாவை மட்டுமல்ல, அரபுப் பிரதேசத்தையும் கடந்து இந்த முழு உலகத்தையும் அவர் ஒரு நாள் வென்று விடுவார் என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு, தனது முயற்சிகளைக் கை விட்டு விட்டார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் இறைநிராகரிப்பாளர்களுக்கும் ஹ{தைபிய்யாவில் வைத்து உடன்படிக்கை நடந்து முடிந்ததுடன், இனி நமது நிலை என்ன? நாம் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என்ற மனநிலைத் தடுமாற்றத்துக்கு உள்ளானார்.

அடுத்து எந்த முடிவை எடுப்பது என்ற குழப்பத்தில் தடுமாறிய காலித் பின் வலீத் அவர்கள், எத்தியோப்பியாவிற்குச் சென்று விடலாமா? என்று கூட நினைத்தார். பின் எத்தியோப்பியாவிற்கு நாம் எப்படிச் செல்வது? ஏற்கனவே, எத்தியோப்பியாவின் மன்னர் நஜ்ஜாஸி முஸ்லிம்களின் ஆதரவாளராக மாறி, முஸ்லிம்கள் அங்கு பாதுகாப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நினைவு அவருக்கு வந்ததும் தன்னுடைய அந்த முடிவையும் மாற்றிக் கொண்டார்.

பின் நாம் ஹிர்கல் தேசத்துக்குச் சென்று தன்னுடைய மதத்தை விட்டு விட்டு, ஒரு கிறிஸ்தவனாகவோ அல்லது யூதனாகவோ மதம் மாறி விடலாமா? என்றும் கூட எண்ணினார்.

இவ்வாறாக, பல்வேறு சிந்தனைகள் அவரது மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. ஆனால் எந்த முடிவுக்கும் அவரால் வர இயலவில்லை. இன்னும் எதுவாக இருப்பினும் இந்த அரேபியா மண்ணிற்குள் இருந்து தான் அந்த மாற்றம் நிகழ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

போர், சண்டை என்று அனைத்தையும் விட்டு விட்டு அமைதியாக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமா? என்று பலவித நினைவுகள் அவரது நினைவை அலைக்கழித்துக் கொண்டிருந்தன, ஆனால் எதிலும் ஒரு முடிவுக்கு வர இயலாதவராக இருந்தார்.

இந்த தருணத்தில் தான் ஏற்கனவே இஸ்லாத்தைத் தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டிருந்த அவரது சகோதரர், வலீத் இப்னு வலீத் காலித் பின் வலீத் அவர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதினார். அந்தக் கடிதத்தில் தன்னுடைய சகோதரரைப் பற்றி விசாரித்தும், இன்னும் அதற்கும் மேலாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களைப் பற்றி விசாரித்தார்கள் என்ற செய்தியையும் அதில் குறிப்பிட்டிருந்ததைக் கண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு இனம் புரியாததொரு புத்துணர்வு ஏற்பட்டது.

இன்னும் காலித் பின் வலீத் அவர்கள் ஒரு நாள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள். அவரது அறிவு, ஆற்றல், சிந்தனைத் திறன், தொலை நோக்குப் பார்வை ஆகிய இறைவனின் அருட்கொடைகள் அனைத்தும், காலித் பின் வலீத் அவர்களை இதே நிலையில் விட்டு வைத்திருக்கப் போவதில்லை என்பதனையும் அதில், அந்த சகோதரர் குறிப்பிட்டுக் கூறியிருந்தார்.

மேலே உள்ள செய்திகள் யாவும் காலித் பின் வலீத் அவர்களை பல்வேறு சிந்தனைகளைத் தோற்றுவித்ததோடு, என்னை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்களா? நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வேன் என்று சொன்னார்களா? எனக்கென பிரகாசமான எதிர்காலம் ஒன்று இருக்கின்றது போல் தெரிகின்றது என்று தனக்குத் தானே கூறிக் கொண்ட காலித் பின் வலீத் அவர்கள், தான் கண்ட கனவை இப்பொழுது அசை போட்டுப் பார்க்க ஆரம்பித்தார்.

அடர்ந்த, காற்றோட்டம் இல்லாத குகை போன்ற இடத்தை விட்டு பச்சைப் பசேலென்ற மிகப் பரந்த பசுஞ்சோலைகளின் பக்கம் தான் மீண்டு வருவதாகக் கண்ட கனவையும், இப்பொழுது தனக்குள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் உணர்வலைகளையும் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தார். இனி நாம் இங்கு மக்காவில் தங்கியிருப்பதில் பயனில்லை என்பதை உணர்ந்தவராக, இனி மதீனாவை நோக்கிச் செல்வது என்ற இறுதி முடிவை எடுத்தார்.

பின்னர், நாம் தனியாகப் போவதை விட, நம்முடன் யாரையாவது துணைக்கு அழைத்துச் செல்வது நல்லது என்று நினைத்து, யாருடன் செல்வது என்ற சிந்தனையில் ஆழ்ந்த போது, சட்டென உதுமான் பின் தல்ஹா (ரழி) அவர்களின் நினைவு வர, தனது நோக்கத்தை அவரிடம் தெரிவித்தார்.

அது கேட்ட, உதுமான் பின் தல்ஹா (ரழி) அவர்களும் தனக்கும் அப்படியொரு நோக்கம் இருப்பதாகக் கூறிய அவர், சரி இருவரும் சேர்ந்து இணைந்தே மதீனாவிற்குச் சென்று இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்திப்பதென்று முடிவு செய்து இருவரும் மதீனா நோக்கிப் புறப்பட்டனர்.

வழியின் இடையில் அம்ர் பின் ஆஸ் (ரழி) அவர்களைச் சந்தித்தனர். அவர், நீங்கள் இருவரும் எங்கே புறப்பட்டு விட்டீர்கள் என்று கேட்ட பொழுது, அவர்கள் தங்களது நோக்கத்தைத் தெரிவித்தார்கள். தாங்கள் மதீனா சென்று இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களது கரங்களில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளச் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார்கள்.

மதீனா செல்லும் குழுவின் எண்ணிக்கை, இரண்டு இப்பொழுது மூன்றாக மாறியது. ஆம்! அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்களும் இணைந்து கொண்டார்கள்.

மூவரும் மதீனாவை ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு, ஸஃபர் மாதம் முதல் நாளன்று சென்றடைந்தார்கள். முதலில் இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்த காலித் பின் வலீத் அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் புன்னகை தவழ வரவேற்றார்கள்.

பின்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருக்கரங்களைப் பற்றிக் கொண்டு, திருக்கலிமாவை முன்மொழிந்து இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். மிகவும் பாசத்துடன் காலித் பின் வலீத் (ரழி) அவர்களை நோக்கிய  

அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : காலித் பின் வலீத் (ரழி) அவர்களே….! உங்களது புத்திசாலித்தனம், கல்வி ஞானம், தொலை நோக்குப் பார்வை ஆகிய நற்பண்புகளை வைத்துக் கணித்து, என்றாவது ஒருநாள் நீங்கள் இஸ்லாத்திற்குள் நுழைவீர்கள் என்று நான் நினைத்தேன்என்றார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.

அது கேட்ட காலித் (ரலி) அவர்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! எனக்கு மன்னிப்பு உண்டா? என்ற கேட்டாகள்..! 

ஏனெனில், நான் என்னுடைய வாள் பலத்தினால் பல்வேறு இன்னல்களையும், தீமைகளையும் புரிந்துள்ளேன். இதற்கு முன் இஸ்லாத்திற்கு நான் இழைத்த கொடுமைகளுக்காக மன்னிப்புக் கோரி இறைவனிடம் பிரார்த்தனை புரியுமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்களை வேண்டிக் கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு, இறைநிராகரிப்பில் இருந்து கொண்டு நீங்கள் செய்த அத்தனை பாவங்களும் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதன் காரணமாக, தானாகவே அழிந்து போய் விடுகின்றன என்று பதில் கூறினார்கள்.

இல்லை..! அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எனக்காக பிரார்த்தனை செய்தாக வேண்டும் என்று மீண்டும் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் வலியுறுத்தவே,

அல்லாஹ்வே! காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் பாவங்களை மன்னித்தருள்வாயாக! அவர் மீது கருணை காட்டுவாயாக! என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.

அதன் பின்பு அம்ர் பின் ஆஸ் (ரழி) அவர்களும், பின்பு உதுமான் பின் தல்ஹா (ரழி) அவர்களும் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டார்கள்.

காலித் இப்னு வலீத் (ரலி) இஸ்லாமிய வரலாற்றின் வெற்றிமிகு தளபதி. போர் ஆசான். நெருங்கமுடியாத உறுதிமிக்க தளங்களை கைப்பற்றியவர். தம்மிலும் பார்க்க மிகப்பெரிய பலம்வாய்ந்த பென்னம் பெரும் படைகளையும், தளபதிகளையும் எதிர்கொண்டு களங்களில் வெற்றிவாகை சூடியவர்.

எதிரி படைகளின் பலவீனமான முனைகளை இனங்கண்டு அதனுள் ஊடுருவும் வியூகங்களை வகுப்பதில் வல்லவர் இவர்.  

தனது படையினரை அல்லாஹ்விற்காக உயிர் தியாகம் செய்யும் மனோநிலையை வலுப்படுத்தி அவர்களது தீரமிகு தாக்குதல்களின் ஊடாக எதிரியை நிலைகுலைய வைத்து வெற்றிகளை வளைத்து போடுபவர்.

இவர் தான் காலித் இப்னு வலீத். இது தான் இஸ்லாமிய வரலாறு. ஒரு மிகப்பெரும் வீரர், தன்னிகரில்லா தளபதி, ஸைஃபுல்லாஹ் அல்லாஹ்வின் வாள் எனும் பட்டத்தை நபியவர்களின் திருவாயினால் பெற்றவர், ஜிஹாத் வேறு அவர் வேறு என்று பிரித்து பார்க்க முடியாத முஜாஹித். 

இஸ்லாமியப் போர்ப்படைத்தளபதியாகப் பரிணமித்தார். இஸ்லாத்தின் எதிரிகளை நிலைகுலையச் செய்து, இஸ்லாமிய சாம்ராஜ்யம் அரபுப் பிரதேசத்தை விட்டும் பரவத் துணை புரிந்தார். உமர் (ரலி) அவர்களின் 22 ½ லட்சம் சதுர மைல் பரப்பளவு கொண்ட இஸ்லாமிய ஆளுகைக்கு வித்திட்டவர்.

இஸ்லாத்தை தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக கலந்து கொண்ட அத்தனை போர்களிலும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எதிராக மார்தட்டி நின்ற காலித் பின் வலீத் அவர்கள், ஒவ்வொரு முறையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்திக்கும் பொழுதெல்லாம் அவர்களது குணநலன்களால் கவரப்பட்டு, தன்னுடைய நோக்கத்தை சிறிது சிறிதாக மாற்றிக் கொண்டார். இறுதியாக இஸ்லாம் அவரது இதயத்தைக் கவ்வி இருந்த இருளைத் துடைத்தெறிந்தது. அவரது தலைமை இஸ்லாமிய போர் வரலாற்றில் சூரியனாகப் பிரகாசித்தது.

இப்படியான புகழ்மிக்க வரலாற்றுப் பக்கங்களுக்கு அவரை கொண்டு வந்து நிறுத்தியது எது? அண்ணலாரின் அழைப்புக்கு அழகிய முறையில் பதில் தந்தது தான்.

وروى مسلم بسنده عن إبراهيم التيمي عن أبيه قال

  حذيفة فقال

 لقد رأيتنا مع رسول الله صلى الله عليه وسلم ليلة الأحزاب وأخذتنا ريح شديدة وقر فقال رسول الله صلى الله عليه وسلم ألا رجل يأتيني بخبر القوم جعله الله معي يوم القيامة فسكتنا فلم يجبه منا أحد ثم قال ألا رجل يأتينا بخبر القوم جعله الله معي يوم القيامة فسكتنا فلم يجبه منا أحد، ثم قال ألا رجل يأتينا بخبر القوم جعله الله معي يوم القيامة، فسكتنا فلم يجبه منا أحد، فقال: قم يا حذيفة فأتنا بخبر القوم، فلم أجد بدا إذ دعاني باسمي أن أقوم، قال: اذهب فأتني بخبر القوم، ولا تذعرهم علي، فلما وليت من عنده جعلت كأنما أمشي في حمام حتى أتيتهم، فرأيت أبا سفيان يصلي ظهره بالنار، فوضعت سهما في كبد القوس فأردت أن أرميه، فذكرت قول رسول الله صلى الله عليه وسلم ولا تذعرهم علي، ولو رميته لأصبته، فرجعت وأنا أمشي في مثل الحمام، فلما أتيته فأخبرته بخبر القوم وفرغت قررت، فألبسني رسول الله صلى الله عليه وسلم من فضل عباءة كانت عليه يصلي فيها، فلم أزل نائما حتى أصبحت، فلما أصبحت قال: قم يا نومان»…

அஹ்ஸாப் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த பனிப்பொழிவு மிகுதியாக இருந்த இரவு நேரம் அது…

பகைவர்களைப் பற்றி உளவறிந்து சொல்ல யாரேனும் தயாரா?  அப்படிச் செல்பவருக்கு சொர்க்கம் கிடைக்கும்!என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} கேட்டார்கள். அகழைத் தாண்டிச் ஸெல்வது என்பதை யாராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.  என்ன நடக்குமோ என்கிற பீதி வேறு அவர்களைப் பிடித்துக் கொண்டிருந்தது.  வெளியிலோ குளிர் கொட்டிக் கொண்டிருந்தது.  உடம்பெல்லாம் விறைத்துப் போய் பற்கள் ஆடிக் கொண்டிருந்தன.  சில்லிட்ட தரையில் அமர்ந்திருந்த ஸஹாபாக்கள் யாருமே வாயைத் திறக்கவில்லை. 

அல்லாஹ்வின் தூதர் சென்றார்கள்.  இரண்டு ரக்அத் தொழுது இறைவனிடம் துஆ கேட்டார்கள்.  மீண்டும் திரும்பி வந்தார்கள். பகைவர்களைப் பற்றி உளவறிந்து சொல்ல யாரேனும் தாயரா?  அப்படி செல்பவருக்கு சொர்க்கம் கிடைக்கும்!என்று இறைத்தூதர் கேட்டார்கள்.  அவையில் ஒரு சின்ன அசைவு கூட இல்லை.  

மீண்டும் சென்று தொழுது துஆச் செய்தவர்களாக அல்லாஹ்வின் தூதர் திரும்பி வந்தார்கள். பகைவர்களைப் பற்றி உளவறிந்து வந்து சொல்ல யாரேனும் தயாரா?  அவர் நாளை சொர்க்கத்தில் என்னோடு இருப்பார்!என்று கேட்டார்கள்.  சப்த நாடி கூட ஒடுங்கிப் போனவர்களாக சஹாபாக்கள் அமர்ந்திருந்தார்கள். 

இப்போது அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சபையினரை நோட்டமிட்டார்கள்.  ஹூதைஃபா இப்னு யமான் (ரலி) அவர்களை அழைத்தார்கள். நீர் சென்று வாரும்!  இறைவன் உமக்கு வெற்றியைத் தருவான்என்று கூறி புறப்படச் சொன்னார்கள். 

ஹூதைஃபா (ரழியல்லாஹு அன்ஹு) கூறுகிறார் – “இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என் பெயரை அறிவித்தவுடன் கீழ்ப்படிய இதாஅத் செய்ய வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.  கடுங்குளிரில் குழியைத் தாண்டி எப்படி செல்வது என்கிற பயம் என்னையும் பீடித்துத் தான் இருந்தது. 

உளவறிந்து வந்தால் மட்டும் போதும்.  வேறு எந்த வேலையும் என் அனுமதியின்றி நீர் செய்து விடக் கூடாது என்றும் மாநபி {ஸல்} கூறினார்கள்.  கூடாரத்தை விட்டு வெளியே வந்ததும் எந்தக் குளிரை எண்ணி நான் பயந்து கொண்டிருந்தேனோ, அந்த குளிர் கொஞ்சம் கூட உறைக்கவில்லை.  சூடான ஒரு குளியலறையில் இருக்கும் உணர்வே எனக்கு ஏற்பட்டது.அங்கே எதிரிகளின் நிலையோ பரிதாபமாக இருந்தது.

கடுமையான சூறாவளிக் காற்று வீசிக் கொண்டிருந்தது.  கூடாரங்கள் எல்லாம் காற்றில் பறந்து கொண்டிருந்தன.  எங்கு பார்த்தாலும் ஒரே பேரிரைச்ஸல்.  களத்தில் நின்ற குதிரைகள் எல்லாம் மிரண்டு போய் அங்குமிங்கும் தாறுமாறாக ஒடிக் கொண்டடிருந்தன.  

காரிருள், இவையெல்லவற்றையும் விட குளிர், கடுங்குளிர்!  உடம்பிலிருந்து உயிரை உருவி எடுத்து விடும் போல் இருந்தது.  குளிரைச் சமாளிக்க கற்களை குவித்து நெருப்பு மூட்டலாம் என்பதை, நினைத்துப் பார்க்கக் கூட முடியாது.  சுழன்று சுழன்று காற்று அடித்துக் கொண்டிருந்தது.  திரும்பிச் செல்வது ஒன்றே வழி என்று அபுசுஃப்யான் முடிவெடுத்து விட்டார்.  அதை விட்டால் வேறு வழி எதுவும் அவருக்கு புலப்படவில்லை.

ஹூதைஃபா தொடர்கிறார் – “குளிர் காய்வதற்காக தனியே தணல் அருகில் ஓர் ஆள் உட்கார்ந்திருந்தார்.  யாரென்று உற்றுப் பார்த்தேன்.  பார்த்தால், அது அபுசுஃயான்!  ஆஹா, நல்ல வாய்ப்பு என்று எண்ணியவனாக அம்பை உருவ முதுகின் பின்னால் கைகளைக் கொண்டு சென்றேன்.  இறைத்தூதர் எச்சரித்தது ஞாபகத்திற்கு வரவே, பேசாமல் இருந்து விட்டேன்!

தமது படையில் எதிரியாள் ஒருவன் நுழைந்து விட்டானோ, என்று அபுசுஃப்யானுக்கு சந்தேகம் வந்து விட்டது.  வீரர்களையெல்லாம் அழைத்து அவர் கூறினார் – “குறைஷித் தோழர்களே!  யாரோ உளவாளி வந்துள்ளான் என்று நினைக்கிறேன்.  ஒவ்வொருவரும் உங்களுக்கு அருகில் உள்ள ஆளின் கையைப் பிடித்து விசாரித்து கொள்ளுங்கள்!என்று கூறினார்.

அந்தப் பனிப் பொழிவிலும் குப்பென்று வியர்த்தது ஹூதைஃபாவிற்கு!  ஒரே வினாடியில் சுதாரித்துக் கொண்ட ஹூதைஃபா (ரலி) அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்தவனின் கையைப் பிடித்தார். யார் நீ?” என்றார் ஹுதைஃபாஅவன் வெலவெலத்துப் போனவனாக அவன். என்னைத் தெரியவில்லையா!  நான் தான் இன்னாருடைய மகன்!” என்றான்.

நிலைமையின் விபரீதத்தை வீரர்களுக்கு விளக்கிய பிறகு இனிமேலும் இங்கே வெட்டியாய் இருப்பதில் எந்தப் பயனும் இல்லை!  நான் ஒட்டகத்தைக் கட்டுகின்றேன்.  வருகின்றவர்கள் என்னுடன் வரலாம்!என்று அபுசுஃப்யான் கூறினார். 

மிக விரைவாக மூட்டை முடிச்சுகளோடு கிளம்ப ஆயத்தமானார்கள் எதிரிப்படையினர் அனைவரும்!  அல்ஹம்துலில்லாஹ் என்றவாறு சப்தமில்லாமல் திரும்பலானார் ஹுதைஃபா (ரலி) அவர்கள். 

மாநபி {ஸல்} அவர்களின் கூடாரத்தை அடைந்த ஹுதைஃபா, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தொழுது கொண்டிருப்பதைக் கண்டார்.  பயங்கரமான குளிர் அவரை வதைத்தது!  இறைத்தூதரின் காலடியிலேயே சுருண்டவாறு படுத்துக் கொண்டார். 

சுபுஹ் நேரம் நெருங்கிய போது யா நவ்மான்!” (தூங்கிக் கொண்டிருப்பவரே!) என்று அவரை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} எழுப்பினார்கள்.  நடந்த விஷயங்கள் அனைத்தையும் அவர் ஒன்றுவிடாமல் கூறினார்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம்) அவர்கள் (அகழ்ப் போரின் வெற்றிக்குப் பிறகு) கூறினார்கள்.  நான் (சபாஎன்னும்) கிழக்குக் காற்றின் மூலமாக வெற்றி அளிக்கப்பட்டுள்ளேன். ஆதுசமூகத்தார் (‘தபூர்என்னும்) மேலைக் காற்றினால் அழிக்கப்பட்டனர்.                    ( நூல்: புஃகாரி, கிதாபுல் மகாஸி )

இன்றும் மாநபி {ஸல்} அவர்கள் லட்சக்கணக்கான நபிமொழிகளின் வாயிலாக, நடைமுறைகளின் மூலமாக, பண்பாடுகளின் ஊடாக நம்மை வாழ வைப்பதற்காக அழைத்துக் கொண்டே இருக்கின்றார்கள்.

நாம் தான் நம் மாநபி {ஸல்} அவர்களின் அழைப்பிற்கு செவி சாய்க்க வேண்டும். நாமே செவி சாய்க்கவில்லை எனில் இந்த உலகில் வேறு யார் தான் செவி சாய்ப்பார்?

சிந்திப்போம்! செவிமடுப்போம்!! செயல்படுவோம்!! நம் வாழ்வை உயிர்ப்புள்ளதாய் அமைத்துக்கொள்வோம்!!!

 

8 comments:

  1. சம்பவங்கள் மிக நீலமாகஅமைகிறது ஜும்ஆவில் மிக நீண்ட சம்பவங்கள் சலிப்பை தரும் தயவுசெய்து தவிருஙகள்

    ReplyDelete
    Replies
    1. அல்ஹம்துலில்லாஹ்! உங்கள் கருத்துக்கு நன்றி. ஒரு தலைப்பில் பல்வேறு சம்பவங்கள் குறிப்பிடப்படுவதன் நோக்கம் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து பேச வேண்டும் என்ற எண்ணம் தான்.

      Delete
  2. மிக அருமை காலத்திற்கு ஏற்ற பதிவு

    ReplyDelete