அருளும்… மன்னிப்பும்…
ரமலான் மாதத்தில் அல்லாஹ்வின் அருள் நிறைந்த முதல் பத்து நாட்களை நிறைவு செய்து, அல்லாஹ்வின் மன்னிப்பு நிறைந்த இரண்டாவது பத்து நாட்களில் அடியெடுத்து வைக்க இருக்கின்றோம்.
ஒரு அடியானைப் பொறுத்த வரையில் அல்லாஹ்வின் புறத்தில் இருந்து கிடைக்கிற அருளும் மன்னிப்பும் மகத்தான பெரும் பாக்கியமாகும்.
பெருமானார் {ஸல்}
அவர்கள் கூறும் நபிமொழி
ஒன்றை நாம் புரிந்து
கொண்டால் அல்லாஹ்வின் புறத்தில்
இருந்து கிடைக்கிற அருளும்,
மன்னிப்பும் எவ்வளவு மகத்தானது?
என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
رواه البخاري (3208) ومسلم (2643) من حديث ابن مسعود
رضي الله عنه ، وقد أشكل على بعض الناس قوله صلى لله عليه وسلم فيه : ( فَإِنَّ
الرَّجُلَ مِنْكُمْ لَيَعْمَلُ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَ الْجَنَّةِ
إِلَّا ذِرَاعٌ فَيَسْبِقُ عَلَيْهِ كِتَابُهُ فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ
النَّارِ وَيَعْمَلُ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَ النَّارِ إِلَّا
ذِرَاعٌ فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ ).
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ஒரு மனிதர் சுவனத்திற்குரிய அமலை செய்து கொண்டிருப்பார். இறுதியில் அவருக்கும் சுவனத்திற்கும் இடையே ஒரு முழம் அளவு இடைவெளி இருக்கும் போது அவரின் விதி அவரை முந்தி விடும் ஆகவே அவர் நரகத்திற்கு செல்வதற்குரிய அமலைச் செய்து விடுவார். ஒரு மனிதன் நரகத்திற்குரிய அமலை செய்து கொண்டிருப்பான். இறுதியில் அவனுக்கும் நரகத்திற்கும் இடையே ஒரு முழம் அளவு இடைவெளி இருக்கும் போது அவரின் விதி அவரை முந்தி விடும் ஆகவே, அவர் சுவனத்திற்கு செல்வதற்குரிய அமலைச் செய்துவிடுவார்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி, முஸ்லிம் )
சுவனத்திற்கு செல்வதற்குத் தகுதியான ஒருவர் அவர் செய்து விடுகிற பாவமான ஒரு செயலுக்கு அல்லாஹ்வின் புறத்தில் இருந்து மன்னிப்பு கிடைக்காததால் நரகத்திற்கு செல்லக்கூடியர் செய்கிற காரியத்தைச் செய்வதும், நரகத்திற்கு செல்வதற்கு தகுதியான ஒருவர் அவர் செய்கிற நன்மையான ஒரு செயலால் (அல்லாஹ்வின் புறத்தில் இருந்து கிடைத்த அருளால்) சுவனத்திற்கு செல்லக்கூடியவர் செய்கிற காரியத்தைச் செய்வதும் இந்த நபிமொழியின் மூலம் நமக்கு உணர்த்தப்படுகின்றது.
அல்லாஹ் தன்னை எங்கெல்லாம் ரஹீம் – நிகரற்ற அன்புடையோன் என்று சொல்கின்றானோ அங்கெல்லாம் தன்னை ஃகஃபூர் – மன்னிக்கக்கூடியவன் என்று இணைத்தே அடையாளப்படுத்துகின்றான்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் அவனுடைய அருளையும், மன்னிப்பையும் பெற்ற மேன்மக்களில் ஆக்கியருள்வானாக!
உலகில் செய்யப்பட்ட
முதல் பிரார்த்தனையில் பிரார்த்தனை
செய்த ஆதம் (அலை)
அவர்களும், ஹவ்வா (அலை)
அவர்களும் அல்லாஹ்விடம் மன்றாடிக்
கேட்ட தவ்பா – பாவமன்னிப்பில் கூறிய இந்த
இரண்டு வார்த்தைகளும் மிகவும்
கவனிக்கத்தக்கதாகும்.
قَالَا رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا
وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ (23)
“எங்கள் இறைவா! நீ எங்களை மன்னிக்கவில்லை என்றால், நீ எங்கள் மீது அருள் செய்யவில்லை என்றால் நாங்கள் நஷ்டவாளிகளாக ஆகிவிடுவோம்” (அல்குர்ஆன்: 7: 23 )
அகிலத்தார்களில் இறைச்
செய்திக்காக முதன் முதலாகத்
தேர்ந்தெடுக்கப்பட்ட நபி
நூஹ் (அலை) அவர்கள்
தங்களின் பிரார்த்தனையில் இணைத்த
இரண்டு வார்த்தைகளும் மிகவும்
முக்கியமானதாகும்.
قَالَ رَبِّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِي بِهِ
عِلْمٌ وَإِلَّا تَغْفِرْ لِي وَتَرْحَمْنِي أَكُنْ مِنَ الْخَاسِرِين(47)
“எனது இறைவனே! நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லை என்றால் நான் நஷ்டவாளர்களில் ஒருவனாக ஆகிவிடுவேன்”. ( அல்குர்ஆன்: 11: 47 )
அல்லாஹ்வுடன் உரையாடிய
மூஸா (அலை) அவர்களின்
சமூகமான பனூ இஸ்ரவேலர்கள்
காளைக் கன்றை வணங்கி
வழிகேட்டில் வீழ்ந்து பிறகு
அதைத் தவறென்று உணர்ந்த
போது தங்களின் பிரார்த்தனையில் அவர்கள் குறிப்பிட்ட
வார்த்தைகள் இரண்டும் மிகவும்
கவனிக்கத்தக்கதாகும்.
وَلَمَّا سُقِطَ فِي أَيْدِيهِمْ وَرَأَوْا أَنَّهُمْ قَدْ ضَلُّوا
قَالُوا لَئِنْ لَمْ يَرْحَمْنَا رَبُّنَا وَيَغْفِرْ لَنَا لَنَكُونَنَّ مِنَ
الْخَاسِرِينَ (149)
“நிச்சயமாக! அவர்கள் திட்டமாக வழிகெட்டு விட்டோம் என்பதை எண்ணி கைசேதப்பட்ட போது “எங்கள் இறைவன் எங்களுக்கு அருள் செய்து, எங்களை மன்னிக்கவில்லையானால் நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளர்களில் உள்ளவர்களாகி இருப்போம்” என்று கூறினார்கள். ( அல்குர்ஆன்: 7: 149 )
எனவே, அல்லாஹ்வின் அருளும், மன்னிப்பும் இல்லாத ஒரு வாழ்க்கையை ஒரு முஃமின் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அப்படி ஒரு வாழ்க்கையை அவன் ஒரு போதும் வாழ விரும்பவும் மாட்டான். ஏனெனில், அந்த வாழ்க்கையை நஷ்டவாளிகளின் வாழ்க்கை என அல்குர்ஆன் பெயரிடுகின்றது.
மனிதனாக இந்த உலகில் நாம் உலவுவதே அல்லாஹ்வின் நிகரற்ற
அருளாகும்…
عن أنس
بن مالك -رضي الله عنه- مرفوعاً: «وكَّلَ اللهُ بالرَّحِم مَلَكًا، فيقول: أيْ
ربِّ نُطْفة، أيْ ربِّ عَلَقة، أيْ ربِّ مُضْغة، فإذا أراد اللهُ أن يقضيَ
خَلْقَها، قال: أيْ ربِّ، أذكرٌ أم أنثى، أشقيٌّ أم سعيدٌ، فما الرزق؟ فما
الأَجَل؟ فيكتب كذلك في بطن أُمِّه».
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ் தாயின் கருவறையில் ஒரு வானவரை நியமிக்கின்றான். அவர் “இறைவா! (இது ஒரு துளி) விந்து. இறைவா! (இது பற்றித் தொங்கும்) கருக்கட்டி. இறைவா! (இது மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைத்துண்டு” என்று கூறிக் கொண்டிருப்பார். அதன் படைப்பை முழுமையாக்கிட அல்லாஹ் விரும்பும் போது “இறைவா! இது ஆணா? அல்லது பெண்ணா? துர்பாக்கியம் உடையதா? அல்லது நற்பாக்கியம் பெற்றதா? (இதன்) வாழ்வாதாரம் எவ்வளவு? ஆயுள் எவ்வளவு?” என்று வானவர் கேட்பார். அவ்வாறே, இவையனைத்தும் அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்பட்டு அது தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே எழுதப்படும்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)
عن عبد اللَّهِ بن مسعود قال حدثنا رسول اللَّهِ
صلى الله عليه وسلم وهو الصّادق المصدوق: «إِنَّ أَحَدَكُمْ يُجْمَعُ خَلْقُهُ في
بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا ثُمَّ يَكُونُ في ذلك عَلَقَةً مِثْلَ ذلك
ثُمَّ يَكُونُ في ذلك مُضْغَةً مِثْلَ ذلك ثُمَّ يُرْسَلُ الْمَلَكُ فَيَنْفُخُ
فيه الرُّوحَ وَيُؤْمَرُ بِأَرْبَعِ كَلِمَاتٍ بِكَتْبِ رِزْقِهِ وَأَجَلِهِ
وَعَمَلِهِ وَشَقِيٌّ أو سَعِيد
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உங்களில் ஒருவர் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறார். பிறகு அதைப் போன்றே நாற்பது நாட்கள் அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு அதைப் போன்றே மேலும் நாற்பது நாட்கள் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப் பிண்டமாக மாறிவிடுகின்றது. பிறகு (அதனிடம்) அல்லாஹ் ஒரு வானவரை அனுப்புகின்றான். அவர் நான்கு விஷயங்களை எழுதுமாறு பணிக்கப்படுகின்றார். அந்த மனிதனின் வாழ்வாதாரம், வாழ்நாள், அது துர்பாக்கியசாலியா அல்லது நற்பாக்கியசாலியா ஆகியவை எழுதப்படும். பிறகு அதனுள் உயிர் ஊதப்படும்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )
பல்வேறு வயதுடையவர்களாக இங்கே அமர்ந்திருக்கிற நாம் இந்த உலகில் இன்று நடமாடிக் கொண்டிருப்பதே அல்லாஹ்வின் நிகரற்ற அருள் என்பதை நாம் உணர வேண்டும்.
நம்முடைய பெற்றோர்கள் இல்லற வாழ்வில் ஈடுபட்டு அதன் பின்னர் ஏற்படும் கருவறையில் நிகழ்வுகள் குறித்து பெருமானார் {ஸல்} அவர்கள் கூறிய இந்த நபிமொழிகளை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
விந்துத் துளியாக இருக்கும் போதே அல்லாஹ் நம்மை கருவில் சேமித்து இருக்காவிட்டால்? கருக்கட்டியாக இருக்கும் போது அல்லாஹ் நம்மை சேமித்து இருக்காவிட்டால்? சதைப்பிண்டமாக இருக்கும் போது அல்லாஹ் நம்மை சேமித்து இருக்காவிட்டால்? நாம் என்னவாக ஆகியிருப்போம். இந்த மூன்று நிலைகளையும் தாண்டி நான்காவதாக ரூஹ் – உயிரை தந்திருக்காவிட்டால் நாம் என்னவாக ஆகியிருப்போம்.
அதன் பின்னர் இப்போது நாம் வாழ்கிற இந்த தருணம் வரையிலும் நம்மைப் பாதுகாத்து, தொடர்ந்து நமக்குத் தேவையானவற்றை தேவையான நேரத்தில் தந்து நம்மை நீரிலும் நிலத்திலும் வாழ்கிற படைப்புகளில் மிகச் சிறப்பான படைப்பாக மனிதனாக வாழ வைத்து வாழ்வைத் தந்திருக்கின்றானே இது அல்லாஹ் ரப்புல் ஆலமீனுடைய நிகரற்ற அன்பு இல்லையா?
இஸ்லாத்தோடும்… முஸ்லிமாகவும் உலவ வைத்திருப்பதும் அல்லாஹ்வின் நிகரற்ற அருளாகும்..
இஸ்லாம் என்பது அல்லாஹ்வின் வார்த்தை. முஸ்லிம் என்பது அல்லாஹ் இஸ்லாமிய மார்க்கத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு அவனே சூட்டி அழகு பார்க்கும் பெயர்.
إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ
“திண்ணமாக, இஸ்லாம் மட்டுமே அல்லாஹ்விடம் ஒப்புக் கொள்ளப்பட்ட வாழ்க்கை நெறி ( மார்க்கம் – தீன் ) ஆகும்”. ( அல்குர்ஆன்: 3: 19 )
هُوَ اجْتَبَاكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمِينَ مِنْ قَبْلُ وَفِي هَذَا
“மேலும், அவன் தனது பணிக்காக உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். மேலும், அவன் வழங்கிய மார்க்கத்தில் ( இஸ்லாத்தில் ) உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் வைத்திடவில்லை.
உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கத்தில் நிலைத்திருங்கள். அல்லாஹ் தான் இதற்கு முன்பும், இப்போதும் உங்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயர் சூட்டியுள்ளான். தூதர் உங்கள் மீது சான்று வழங்குபவராகவும், நீங்கள் மக்கள் மீது சான்று வழங்குபவர்களாகவும் திகழ வேண்டும் என்பதற்காக!”. ( அல்குர்ஆன்: 22: 78 )
குடும்பமாக, உறவுகளாக நம்மை அல்லாஹ் வாழ வைத்திருப்பதும் அவனுடைய நிகரற்ற அருளாகும்…
குடும்ப அமைப்பு இது அல்லாஹ் மனித சமூகத்திற்கு வழங்கியிருக்கிற மாபெரும் மகத்தான அருட்கொடையாகும்.
தாய் தந்தை, மகன் மகள், சகோதரன் சகோதரி, மாமன் மச்சான், சிறிய தந்தை பெரிய தந்தை, மாமி சின்னம்மா, கணவன் மனைவி, பேரன் பேத்தி என நீண்டதொரு பட்டியலைக் கொண்டது குடும்ப அமைப்பில் உருவாகும் உறவு முறைகள் ஆகும்.
மனித இனத்திற்கு “குடும்ப அமைப்பு” என்கிற ஓர் உறவு முறையை அல்லாஹ் அமைத்துக் கொடுத்து, அந்த குடும்ப அமைப்பின் உறவு முறைகளுக்கு அழகிய பெயர்களைச் சூட்டி அந்த உறவு முறைகளோடு சக மனிதர்களுக்கு இருக்கிற உரிமைகளையும், கடமைகளையும் வஹியின் மூலமாகவும் அந்த வஹியைச் செயல்படுத்திக் காட்டிட இறைத்தூதர்களான நபிமார்களின் மூலமாகவும் வடிவமைத்துத் தந்துள்ளான்.
இறுதி வடிவம் கொடுக்கும் முகமாக இறுதித்தூதர் முஹம்மது {ஸல்}
அவர்களைக் கொண்டு உறவுமுறைகளின் மீதான உரிமைகளையும், கடமைகளையும் நிறைவுபடுத்தி இருக்கின்றான்
وَهُوَ الَّذِي خَلَقَ مِنَ الْمَاءِ بَشَرًا فَجَعَلَهُ نَسَبًا وَصِهْرًا وَكَانَ رَبُّكَ قَدِيرً
”மேலும், நீரிலிருந்து மனிதனைப் படைத்தவன் அவனே! பிறகு வம்ச உறவின் மூலமாகவும், திருமணத் தொடர்பின் மூலமாகவும் இரு தனித்தனியான உறவு முறைகளை அவன் ஏற்படுத்தினான். உம் இறைவன் பெரும் ஆற்றல் மிக்கவனாய் இருக்கின்றான்” ( அல்குர்ஆன்: 25: 54 )
إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ
“திண்ணமாக! இறை நம்பிக்கையாளர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்களே! உங்கள் சகோதர உறவுகளை உங்களுக்கிடையே சரி செய்து கொள்ளுங்கள்” ( அல்குர்ஆன்: 49: 10 )
1. இரத்த உறவுகள் ( தந்தை, தாய் வழி உறவுகள்.
2. திருமணத்திற்கு பிந்தைய ( மனைவியின் மூலம் வருகிற ) உறவுகள்.
3. ஈமானிய ( சகோதரத்துவ உறவுகள்.
ஆகவே, மனிதனாக, முஸ்லிமாக, உறவுகளோடு அல்லாஹ் நம்மை படைத்து வாழ்வதற்கு வாழ்க்கையையும் வழங்கியிருப்பது அவனுடைய நிகரற்ற பேரருளேயாகும்.
மன்னிப்பும்…
ஓர் இறை நம்பிக்கையாளனை பொறுத்த வரையில் அவனுடைய வாழ்வில் அல்லாஹ்வின் மன்னிப்பு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
ஈருலகிலும் அல்லாஹ்வின் மன்னிப்பு அவனுக்கு கிடைக்க வேண்டுமென அவன் ஆசிப்பதும், நேசிப்பதும் ஈமானுக்கு அடுத்த படி மிக முக்கியமான ஒன்றாகும்.
சுருங்கச்சொன்னால் அல்லாஹ்வின் மன்னிப்பு இல்லையென்றால் அவனுடைய ஒட்டு மொத்த ( உலக, மண்ணறை, மறுமை ) வாழ்க்கை அனைத்தும் கேள்விக்குறியே!
1.
அல்லாஹ்விடம் இருந்து மன்னிப்பு கிடைக்கவில்லையானால்….
عن أبي هريرة رضي الله عنه ، أن النبي صلى الله عليه
وسلم صعد المنبر ، فقال : " آمين آمين آمين " . قيل : يا رسول الله ،
إنك حين صعدت المنبر قلت : آمين آمين آمين . ، قال : " إن جبريل أتاني ، فقال : من أدرك شهر
رمضان ولم يغفر له فدخل النار فأبعده الله ، قل : آمين ، فقلت : آمين . ومن أدرك
أبويه أو أحدهما فلم يبرهما ، فمات فدخل النار فأبعده الله ، قل : آمين ، فقلت :
آمين . ومن ذكرت عنده فلم يصل عليك فمات فدخل النار فأبعده الله ، قل : آمين ،
فقلت : آمين "
حسن صحيح
رواه ابن خزيمة و ابن حبان في صحيحه و ابي يعلى الموصلي
في مسنده و الطبراني في المعجم الأوسط و البيهقي في الشعب.
صححه الالباني رحمه الله في صحيح الترغيب و الترهيب
(997) و الله أعلم
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு முறை நபி {ஸல்} அவர்கள் சொற்பொழிவு மேடை மீது ஏறும் போது மூன்று முறை “ஆமீன்” கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மிம்பரின் மீது ஏறும் போது “ஆமீன்” என மூன்று முறை கூறினீர்களே” என வினவப்பட்டது.
என்னிடம் வானவர் ஜிப்ரயீல் (அலை) வருகை தந்தார். வந்தவர், “யார் ரமலான் மாதத்தை அடைந்தும் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட வில்லையோ அவர் நரகம் நுழைவார்; அல்லாஹ்வின் அருளை விட்டும் அவர் தூரமாகிவிடட்டும்” எனக் கூறிவிட்டு, ”ஆமீன்” கூறுங்கள் என்றார். எனவே, நான் முதல் முறை “ஆமீன்” கூறினேன்.
“யார் தன்னுடைய பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ பெற்றிருந்தும் அவர்களுக்கு நன்மை செய்யாமல் இறந்து விட்டாரோ அவரும் நரகம் நுழைவார்; அல்லாஹ்வின் அருளை விட்டு அவரும் தூரமாகி விடட்டும்” எனக் கூறிவிட்டு, “ஆமீன்” கூறுங்கள் என்றார். எனவே, நான் இரண்டாவது முறையாக “ஆமீன்” கூறினேன்.
மேலும், “யாரிடம் தங்களது பெயர் கூறப்பட்டும் தங்களின் மீது ஸலவாத் சொல்லாத நிலையிலேயே மரணித்து விடுகின்றாரோ அவரும் நரகம் நுழைவார்; அல்லாஹ்வின் அருளை விட்டு அவரும் தூரமாகி விடட்டும்” எனக் கூறிவிட்டு, “ஆமீன்” கூறுங்கள் என்றார். எனவே, நான் மூன்றாவது முறையாக “ஆமீன்” கூறினேன்” என்று பதில் கூறினார்கள். ( நூல்: இப்னு குஸைமா )
அல்லாஹ்விடம் இருந்து மன்னிப்பை கேட்டுப் பெறுவதில் விரைவும், வேகமும் காட்ட வேண்டும், தாமதிக்கிற ஒவ்வொரு நொடிப்பொழுதுகளும் நமக்கு ஆபத்து என்பதை பின்வரும் வசனம் நமக்கு உணர்த்துகின்றது.
மௌத்துக்கு முன்னால் எல்லா பாவங்களில் இருந்தும் நாம் அல்லாஹ்விடம் மன்னிப்பைப் பெற்று விடவேண்டும்....
ஏனெனில், மௌத்தின் போது அல்லாஹ்விடம் கேட்கப்படும் பாவமன்னிப்பிற்கு மதிப்பு கிடையாது. பாவங்களுக்கு மன்னிப்பும் கிடையாது.
وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّى إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الْآنَ وَلَا الَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ أُولَئِكَ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا (
அல்லாஹ் கூறுகின்றான்: “எவர்கள் பாவங்கள் புரிந்தவாறு வாழ்ந்து விட்டு மரணம் நெருங்கும் போது “நான் இப்போது மன்னிப்புக் கோருகின்றேன்” என்று கூறுகின்றார்களோ அவர்களுக்கு மன்னிப்புக் கிடையாது. மேலும், இறுதி மூச்சு வரை நிராகரிப்பிலேயே மூழ்கியிருப்பவர்களுக்கும் பாவமன்னிப்புக் கிடையாது. இத்தகையோருக்கு துன்புறுத்தும் தண்டனையை நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம்”. ( அல்குர்ஆன்: 4: 18 )
மனித படைப்பாகிய நாம் படைத்த ரப்புக்கு மாற்றமான பாவமான காரியங்களை பகிரங்கமாகவும், இரகசியமாகவும், அறிந்தும் அறியாமலும், சிறிதும் பெரிதுமாக வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டே இருக்கின்றோம்.
மனித சமூகமாகிய நாம் செய்கிற பாவமான செயல்களுக்காக உடனடியாக அல்லாஹ் தண்டிக்க நாடிவிட்டால் இந்த உலகத்தில் மனித சமூகம் என்கிற ஓர் படைப்பே இல்லாமல் போய் விடும்.
எனினும் அல்லாஹ் தன்னுடைய மன்னிப்பு எனும் பெருங் கருணையின் துணை கொண்டு நம்மை அரவணைத்து, வாழும் நாட்களை நீட்டித்து, செய்த பாவமான செயல்களில் இருந்து மீள்வதற்கான பாவமன்னிப்பு எனும் வாசலையும் திறந்து வைத்து நம்மீது பேருபகாரம் செய்திருக்கின்றான்.
அல்லாஹ் தான் மன்னிப்பாளன் என்பதை அல்குர்ஆனில் மூன்று விதமாக அடையாளப்படுத்துகின்றான்.
1. ஃகஃபூர் 2. ஃகாஃபிர், 3. ஃகஃப்ஃபார்.
அல்குர்ஆனில் ஏறத்தாழ 5 இடங்களில் ஃகஃப்ஃபார் - - என்றும், ஒரு இடத்தில் ஃகாஃபிர் - - என்றும், 90 மேற்பட்ட இடங்களில் ஃகஃபூர் என்றும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
அல்லாஹ் அடியார்கள் செய்கிற பாவத்தை மன்னிப்பதோடு, ஈருலகத்திலும் மறைத்து அவர்கள் மீது அருள் புரிகின்றான்.
عن أنس بن مالك رضى الله عنه قال: سمعت رسول الله
يقول: قال الله تعالى
(يا
ابن آدَمَ إِنَّكَ مَا دَعَوتَنِى وَرَجَوتَنِى غَفَرتُ لَكَ عَلى مَا كَانَ مِنكَ
وَلاَ أُبَالِى
يَا
ابنَ آدَمَ لَو بَلَغَت ذُنُوبُكَ عَنَانَ السَّماءِ ثُمَّ استَغفَرتَنِى غَفَرتُ
لَكَ
يَا ابنَ آدَمَ إِنَّكَ لَو أَتَيتَنِى بِقُرَابِ الأَرضِ خَطَايَا ثُمَّ لَقِيتَنِى لا تُشرِكُ بِى شَيئاً لأَتَيتُكَ بقُرَابِها مَغفِرَةً). رواه الترمذى وقال: حديث حسن صحيح
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”அல்லாஹ் சொன்னதாக மாநபி {ஸல்} அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: “ஆதமுடைய மகனே! நீ என் மன்னிப்பை ஆதரவு வைத்து, என்னை அழைத்துப் பிரார்த்திக்கின்றாய்! நான் உன் ஆதரவை ஏற்று உன் பாவங்களை மன்னித்து விடுகின்றேன்!
ஆதமின் மகனே! நீ வானத்தின் முகட்டை தொடும் அளவுக்கு பாவத்தோடு என்னிடம் மன்னிப்பு கேட்டு வந்தாலும் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, நான் மன்னித்து விடுவேன்!
ஆதமின் மகனே! எனக்கு இணை கற்பிக்காத நிலையில் பூமி முழுவதும் பாவத்தோடு நீ என்னிடம் வந்தாலும், நான் உன்னிடம் மன்னிப்பு எனும் பெரும் கருணையோடே உன்னை நான் நெருங்கி வருவேன்”. ( நூல்: திர்மிதீ
وروي ان حبيب بن الحارث قال للنبي (صلى الله عليه وآله وسلم): إني مقراف للذنوب، قال: (فتب إلى الله يا حبيب، فقال: إني أتوب ثم أعود، فقال: كلما أذنبت فتب، حتى قال: عفو الله أكبر من ذنوبك يا حبيب).
ஹபீப் இப்னு ஹாரிஸ் (ரலி) என்கிற தோழர் மாநபி {ஸல்} அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் பாவத்தால் சூழப்பட்டிருக்கின்றேன்” என்று கூறினார். ஹபீபே! அல்லாஹ்விடம் தவ்பாச் செய் என்று நபி {ஸல்} அவர்கள் பதில் கூற, அல்லாஹ்வின் தூதரே! நான் தவ்பாச் செய்கிறேன், எனினும் மீண்டும் பாவம் செய்து விடுகின்றேனே” என்ன செய்ய அல்லாஹ்வின் தூதரே! என்று மீண்டும் வினவினார். அதற்கு, மாநபி {ஸல்} அவர்கள் “நீர் பாவம் செய்கிற போதெல்லாம் அல்லாஹ்விடம் தவ்பாச் செய்து விடு” என்று கூறினார்கள்.
மீண்டும் அவர் இவ்வாறு கேட்கவே, “ஹபீபே! உம்முடைய பாவத்தை விட அல்லாஹ்வின் மன்னிப்பு மிகப் பெரியது” என்று பதிலளித்தார்கள். ( நூல்: அல் கபாயிர் )
وفي الحديث الطويل لأنس أن الأعرابي قال يا رسول الله من يلي حساب الخلق فقال الله تبارك وتعالى قال هو بنفسه قال نعم فتبسم الأعرابي فقال صلى الله عليه و سلم مم ضحكت يا أعرابي فقال إن الكريم إذا قدر عفا وإذا حاسب سامح فقال النبي صلى الله عليه و سلم صدق الأعربي ألا لا كريم أكرم من الله تعالى هو أكرم الأكرمين
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அண்ணலாரின் சபைக்கு ஒரு கிராமவாசி வந்தார். வந்தவர், அல்லாஹ்வின் தூதரே! படைப்புகளின் கேள்வி கணக்கை யார் கேட்பார்? என்று வினவினார். அதற்கு, மாநபி {ஸல்} அவர்கள் “அல்லாஹ் தான் கேட்பான்” என்று கூறினார்கள்.
அப்போது, அவர் “அல்லாஹ் தானே, அவன் மட்டும் தானே கேள்வி கேட்பான்? என்று வினவினார். அதற்கு பெருமானார் {ஸல்} அவர்கள் “ஆம்” என்று பதிலளித்தார்கள்.
அப்போது, அந்தக் கிராமவாசி புன்னகைத்தார். அதைக் கண்ட பெருமானார் {ஸல்} அவர்கள் “எதற்காக நீர் சிரித்தீர்?” என வினவினார்கள்.
அப்போது, அந்தக்கிராமவாசி “கண்ணியமானவன் என்றால் யார் தெரியுமா? அனைத்துக்கும் சக்தியிருந்தும் மன்னிப்பான்! விசாரணை மேற்கொண்டால் கண்டும் காணாமல் நடந்து கொள்வான்” என்றார்.
அதற்கு, நபி {ஸல்} அவர்கள் “கிராமவாசி உண்மையே சொன்னார்! அல்லாஹ்வை விட கண்ணியமானவன் எவருமில்லை. அவன் கண்ணியமானவர்களில் எல்லாம் மிகவும் கண்ணியமானவன்” என்று பதில் கூறினார்கள். ( நூல்: அல்கபாயிர் )
அல்லாஹ்வின் மகத்தான மன்னிக்கும் குணம்…
أن موسى عليه السلام، كان هناك رجلاً من قومه يؤذيه
بأنواع من الأذى و موسى يحاول أن ينصحه وأن يكف عنه شره وذاك الرجل يزداد سوءاً
وشراً فاشتكى موسى إلى الله تعالى قال (ياربِ إن فلان فعل كذا وكذا فيارب خلصني
منه ) فأوحى الله تعالى إلى موسى قال له( يا موسى قد جعلت عقابه إليك ) أي أنت
تريد به عقوبة معينه فلك ذلك ، فرآه موسى عليه السلام في وسط الطريق يوماً فأقبل
ذلك الرجل كعادته يسب موسى عليه السلام ويتنقصه فغضب موسى عليه السلام فقال يا أرض
خذيه ، قالوا فانشقت الأرض فدخل الرجل إلى ركبتيه فصاح قال: يا موسى تبت، يا موسى
أغثني، فقال موسى: يا أرض خذيه، فانشقت الأرض ودخل إلى حقويه "حوظه" فلا زال يستغيث يا موسى تبت، وموسى عليه السلام لا
يستجيب له حتى بلعته الأرض كله، فأوحى الله تعالى إلى موسى ، قال يا موسى: ما أقسى
قلبك ، وعزتي وجلالي لو استغاث بي لأغثته .
وهذه القصة ذكرها الإمام ابن أبي الدنيا في كتابه
مستجابي الدعوة
பனூஇஸ்ரவேலர்களில் ஒருவன் மூஸா {அலை} அவர்களுக்கு எல்லா வகையிலும் நோவினை கொடுத்து வந்தான். அவனை அழைத்து மூஸா {அலை} அவர்கள் எவ்வளவோ உபதேசம் செய்தும் அவன் திருந்தவில்லை.
நாளுக்கு நாள் அவன் மூலம் அடைகிற தொல்லை பெருகிக் கொண்டே போனது. இறுதியாக மூஸா {அலை} அவர்கள் அவனுடைய தொல்லைகள் எல்லை மீறிப்போனது குறித்து அல்லாஹ்விடம் முறையிட்டார்கள்.
அல்லாஹ் நபி மூஸா {அலை} அவர்களிடம் அவன் விஷயத்தை உங்களிடமே ஒப்படைக்கின்றேன். நீர் அவனோடு எப்படி நடந்து கொள்ள விரும்புகின்றீரோ அப்படி நடந்து கொள்ளும்!” என்று கூறிவிட்டான்.
ஒரு நாள் மூஸா {அலை} அவர்கள் கடை வீதிக்குச் சென்றார்கள். எதிரே அந்த மனிதன் வந்தான். மூஸா {அலை} அவர்களைக் கண்டதும் முன்பு போல பலவாறாக ஏசிப்பேசினான்.
கோபமடைந்த மூஸா {அலை} அவர்கள் “பூமியைப் பார்த்து பூமியே! நீ அவனைப் பிடித்துக் கொள்! என்று கூறினார்கள்.
பூமி அவனைப் பிடித்துக் கொண்டது. கொஞ்சம் கொஞ்சமாக அவன் பூமியின் பிடிக்குள் சிக்கி பூமிக்குள் புக ஆரம்பித்தான்.
தாம் அழியப்போகிறோம் என்பதை உணர்ந்த அவன் “நபிய்யுல்லாஹ் மூஸா அவர்களே! நான் மன்னிப்புக் கோருகின்றேன்! எனக்கு உதவி செய்யுங்கள்! என்று மரண ஓலமிட்டான்.
மூஸா {அலை} அவர்களோ! பூமியே இன்னும் நீ நன்றாகப் பிடித்துக் கொள்! என்று கட்டளைப் பிறப்பித்தார்கள். பூமிக்குள் முழுவதுமாக அவன் இழுக்கப்படுகின்ற வரை அவன் “நபிய்யுல்லாஹ் மூஸா அவர்களே! நான் மன்னிப்புக் கோருகின்றேன்! எனக்கு உதவி செய்யுங்கள்! என்று ஓலமிட்டுக் கொண்டே இருந்தான்.
மூஸா {அலை} அவர்களும் அதைக் கண்டு கொள்ளாமல் பூமியிடம் கட்டளை போட்டுக் கொண்டே இருந்தார்கள்.
இறுதியாக அவன் பூமிக்குள் புதையுண்டு போனான். இப்போது, அல்லாஹ் மூஸா {அலை} அவர்களை நோக்கி “மூஸா அவர்களே! ஏன் உம் உள்ளம் இப்படி வறண்டு போய் விட்டது? அவன் என்னிடம் உதவி கோரியிருந்தால் நான் அவனை மன்னித்து அவனுக்கு உதவியிருப்பேன்!” என்று கூறினான்.
( நூல்: அல் முஸ்தஜாபுத் தஃவா லி இமாமி இப்னு அபித்துன்யா )
அல்லாஹ் எப்படி வேண்டுமானாலும் மன்னிப்பான்…
كان احد الصالحين جار لاحد
الفسقة الذين ادمنو الخمر .. والمعاصى
فلما مات هذا العاصى وطلب الناس من هذا الصالح ان يصلى
عليه.. تافف الصالح وقال هذا رجل فاسق كيف اصلى عليه.
وفى تلك اليلة ..نام هذا الرجل الصالح ....
وفى المنام
راى مفاجاة
وهى ان هذا الفاسق كان يصلى فى الجنة
جن الجنون هذا الرجل الصالح فذهب الى امراة الفاسق ,و
وسالها ماذا كان يفعل زوجك .. قالت ما كان يفعل الا ما ريتم الا انه كان كل اسبوع
يجمع اطفال الحى اليتامى ويقول لهم : ادعو لعمكم عسى ان يغفر الله لهم
ஸாலிஹீன்களில் ஒருவரின் வீட்டுக்கு அருகே மதுப்பிரியர் வாழ்ந்து வந்தார். திடீரென ஒரு நாள் அவர் இறந்து போனார். மக்கள் அந்த ஸாலிஹை அவருக்கு ஜனாஸா தொழுகை தொழ வைக்குமாறு வேண்டினர்.
என்ன சொல்கின்றீர்கள்? சதா மதுவிலேயே ஊறித் திளைத்தவருக்கு எப்படி தொழ வைக்க முடியும்? நான் தொழ வைக்க மாட்டேன் என்று கூறி மறுத்து விட்டார்.
அன்றைய இரவிலே அந்த ஸாலிஹ் இறந்த போன பக்கத்து வீட்டுக்காரரை சுவனத்தில் தொழுவது போன்று கனவில் கண்டார்.
நித்திரையில் இருந்து விழித்தெழுந்த அவருக்கு எப்படி இவர் இந்த அந்தஸ்தை அடைந்தார்? என ஒரே குழப்பமாக இருந்தது.
காலையில் முதல் ஆளாக அவரின் வீட்டுக்குச் சென்று தாம் கனவில் கண்டதைக் கூறி உம் கணவர் ஏதாவது நன்மையான செயலைச் செய்து இருக்கின்றாரா? என்று கேட்டார்.
அதற்கு அப்பெண்மணி, ஆம்! வாரத்தில் ஒரு நாள் ஊரில் இருக்கிற அநாதைக் குழந்தைகளை ஓரிடத்தில் ஒன்று சேர்த்து உணவோ அல்லது திண்பண்டமோ வாங்கிக் கொடுத்து விட்டு, நீங்கள் எனக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்! அல்லாஹ் என் பாவங்களை உங்கள் துஆவால் மன்னிப்பான் என நான் ஆதரவு வைக்கின்றேன்” எனக் கூறுவார் என்றார் அவரின் மனைவி. ( நூல்: அல்கபாயிர் )
عن ابن عمر رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه و سلم :( كان الكفل من بني إسرائيل لا يتورع عن ذنب عمله فأتته امرأة فأعطاها ستين دينارا على أن يطأها فلما قعد مقعد الرجل من امرأته أرعدت فبكت فقال : ما يبكيك أكرهت ؟ قالت : لا و لكن هذا عمل لم أعمله قط و إنما حملني عليه الحاجة قال فتفعلين هذا و لم تفعليه قط قال : ثم نزل فقال : اذهبي و الدنانير لك قال : ثم قال و الله لا يعصي الكفل ربه أبدا فمات من ليلته و أصبح مكتوبا على بابه قد غفر للكفل ) رواه الحاكم و قال : هذا حديث صحيح الإسناد و لم يخرجاه و وافقه الذهبي
இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: பனூ இஸ்ரவேலர்களில் ஒருவர் இருந்தார். அவரிடம் ஒரு பெண்மணி உதவி கேட்டு வந்தார். அறுபது தீனாரை கொடுத்து விட்டு, விபச்சாரம் செய்ய அழைத்தார். அந்தப் பெண்மணியும் வேறு வழியின்றி சம்மதித்தார்.
அந்தச் செயலைச் செய்வதற்காக அந்தப் பெண்மணியின் தொடையின் மீது இவர் அமர்ந்த போது திடுக்கிட்டு எழுந்த அப்பெண்மணி கதறி அழுதாள். அப்போது அவர் ஏன் அழுகின்றாய்? என்று வினவினார்.
அதற்கு, அப்பெண்மணி இதற்கு முன் எப்போதும் நான் இப்படியான இழி செயலை செய்ததில்லை. என் சூழ்நிலை என்னை இவ்வாறு செய்யத் தூண்டி விட்டது என்றாள்.
அப்போது, அவர் “இனி ஒரு போதும் நீ இந்த இழி செயலைச் செய்ய வேண்டாம். அந்த தீனார்களை நீயே எடுத்துக் கொள்! என்று கூறி விட்டு, மனம் திருந்தியவராக “அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! இனி வாழ்க்கையில் எந்தவொரு தருணத்திலும் ரப்புக்கு நான் மாறு செய்ய மாட்டேன்” என்று சத்தியமிட்டுக் கூறினார். அந்த இரவிலேயே அவர் இறந்து போனார்.
“அவருடைய வீட்டு வாசலைக் கடந்து சென்ற அனைவரும் ஆச்சர்யத்தோடு பார்த்த படியே ஒருவருக்கொருவர் பேசிய படியே சென்றனர்.
ஆம்! அவர் வீட்டு வாசலிலே “அல்லாஹ் இவரை மன்னித்து விட்டான்” என்று எழுதப்பட்டு இருந்தது.
திர்மிதியின் இன்னொரு அறிவிப்பில்….
பின்னர், அல்லாஹ் அவர் பற்றியுண்டான இந்தச் செய்தியை அந்த காலத்தில் வாழ்ந்த நபிக்கு அறிவித்துக் கொடுத்து மக்களிடம் சொல்லுமாறு ஆணை பிறப்பித்தான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: திர்மிதீ, ஹாக்கிம் )
அல்லாஹ் நம் அனைவரின் பாவங்களையும் மன்னித்து அருள் புரிவானாக!
அவன் நமக்கு
நிகரற்ற அன்போடு வழங்கியிருக்கின்ற அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துகின்ற நல்லடியார்களாக
நம்மில் ஒவ்வொருவரையும் அல்லாஹ் ஆக்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்.
Alhamdulillah miga sirappaga thandullergal allah ungalukku barakkath seyyattum
ReplyDeleteJazakallah kairan Barakallah
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteMasha allah moulana
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteجزاك الله خيرا كثيرا في الدارين
ReplyDeleteமாஷா அல்லாஹ் அருமை
ReplyDelete