Thursday, 15 July 2021

 

வணக்க வழிபாடுகள்

சடங்கு, சம்பிரதாயமல்ல!!

 

சலுகைகளை சட்டமாகவும், வணக்க, வழிபாடுகளை சடங்கு சம்பிரதாயமாகவும், பித்அத்களை ஸுன்னத்தாகவும் பார்க்கிற, கருதுகிற, ஏற்று செயல்படுத்துகிற ஒரு சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறி வருவதை இன்று நாம் கண் கூடாக கண்டுவருகின்றோம்.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியான இரண்டு விளம்பரங்கள் இந்த முஸ்லிம் சமூகம் எப்படியான சூழலில் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

இரண்டு விளம்பரங்களுமே பெருவாரியான ஆலிம்களையும், லட்சக்கணக்கான முஸ்லிம்களையும் கொண்டிருக்கின்ற தமிழ்நாட்டின் இரு ஊரில் இருந்து வெளியானது தான் 

முதல் விளம்பரம்

டென்ஷன் ஃப்ரீகுர்பானி.

ஒரு குர்பானி என்றால் ஆடு பிடிக்க வேண்டும், அதை வளர்ப்பதற்கு, அறுப்பதற்கு இடம் வேண்டும், அதை பாதுகாக்க வேண்டும், இறைச்சி வெட்ட, உரிக்க கூலியாள் தேட வேண்டும், பாகம் பிரிக்க வேண்டும், உரியவர்களுக்கு விநியோகிக்க வேண்டும், கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும், கவலையை விடுங்க! அனைத்தையும் நாங்க செய்கிறோம்ரூபாய் 10000 முதல் என்ற விளம்பரத்திற்கு கீழாக மூன்று மொபைல் எண்கள்.

இரண்டாவது விளம்பரம்

தமிழகத்தின் ஒரு ஷைகின் முரீதீன்கள் வசிக்கிற சர்வதேச நாடுகளில் (சிங்கப்பூர், மலேசியா) தமிழகத்தில் நடைபெறுகிற கூட்டுக்குர்பானி பங்கில் சேர அழைப்பு விடுத்ததோடல்லாமல், தமிழக வரலாற்றில் முதன் முறையாக, ஏன் இந்திய வரலாற்றில் இல்லை, இல்லை உலக வரலாற்றில் என்று கூட சொல்லலாம். 15000 ரூபாய் தந்தால் உங்கள் சார்பாக நாங்கள் ஆடு குர்பானி கொடுக்கின்றோம்எங்களின் இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடையுங்கள் என்று விளம்பரம் செய்து கீழாக ஒரு நிஸ்வான் மதரஸாவின் முகவரி மற்றும் சில மொபைல் எண்கள்.

தமிழகத்தில் இயக்கங்களின் வருகைக்குப் பின்னர் மெல்ல, மெல்ல எழுந்தது தான் இந்த கூட்டுக் குர்பானி. நாளடைவில் மதரஸாவை நடத்துகின்றவர்களில் சிலர் ஆரம்பித்து இன்று ஆலமரத்தின் விருட்சம் போல் படர்ந்து இந்த நிலையை எட்டி இருக்கின்றது.

கூட்டுக்குர்பானி என்பது தான் கடமை, கூட்டுக்குர்பானி தான் கொடுக்க வேண்டும் என்பது போன்ற தோற்றத்தை ஒரு மாயையை சமூகத்திலே இன்று சிலர் கட்டமைத்து விட்டிருக்கின்றனர்.

அதன் விளைவாக, சமுதாய அமைப்புகள், மதரஸாக்கள் போக இன்று தனிநபர்களும் வியாபார நோக்கில் கூட்டுக்குர்பானியை அணுகத்தொடங்கி இருக்கின்றனர்.

இந்த உம்மத்தை இது எவ்வளவு தூரம் பாதிப்படையச் செய்திருக்கின்றது என்பதை சொல்ல வேண்டிய கடமையும், கடப்பாடும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.

குர்பானி என்பது

இஸ்லாம் சில இடங்களை கண்ணியப்படுத்தச் சொல்கின்றது. சில கால, நேரங்களை கண்ணியப்படுத்தச் சொல்கின்றது. சில இபாதத்களை கண்ணியப்படுத்தச் சொல்கின்றது.

கண்ணியப்படுத்த வேண்டிய இடங்கள்: ஹஜ்ஜின் கிரியைகளோடு தொடர்புள்ள மக்காவின் ஹரம் ஷரீஃப், கஅபா, மகாம் இப்ராஹீம், ஸஃபா, மர்வா  மஷ்அரில் ஹராம் முஸ்தலிஃபா, மினா, அரஃபா, மதீனா ஹரம், இவைகள்.

நல்லறங்கள் நடைபெறுகிற அனைத்து இடங்கள், குறிப்பாக மூன்று மஸ்ஜிதுகள், மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுன் நபவீ, பைத்துல் முகத்தஸ், மற்றும் அனைத்து மஸ்ஜித்கள் 

கண்ணியப்படுத்த வேண்டிய கால, நேரங்கள்: சங்கை மிகுந்த நான்கு மாதங்கள், ரமலான் மாதம், ஜும்ஆ தினம், லைலத்துல் கத்ர் இரவு, அதிகாலை நேரம்.

கண்ணியப்படுத்த வேண்டிய இபாதத்: குர்பானி வணக்கம் குர்பானி பிராணி, குர்பானிக்காக அடையாளமிடப்பட்டவைகள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஹஜ்ஜின் கியையைகளில் இடம் பெறும் சில வழிபாடுகளையும், அது தொடர்பான இடங்களையும் தன்னுடைய அடையாளச் சின்னங்கள் என்று அல்குர்ஆனில் அடையாளப்படுத்துகின்றான்.

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ

நிச்சயமாக, ஸஃபா மர்வா என்னும் இரு மலைக்குன்றுகளும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். ஆகவே, எவர் இறை இல்லம் கஅபாவை, ஹஜ்ஜு அல்லது உம்ரா செய்வாரோ அப்பொழுது அவ்விரண்டையும் வலம் வருவது அவர் மீது குற்றமல்ல. மேலும், எவர் நன்மையை மிகுதியாகச் செய்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவனும், அவருடைய நற்செயலை மிக அறிந்தவனாகவும் இருக்கின்றான்”. ( அல்குர்ஆன்: 2: 158 )

அதே போன்று தான் குர்பானி பிராணியையும், அந்த வழிபாட்டையும் தன்னுடைய அடையாளச் சின்னம் என்று அடையாளப்படுத்துகின்றான்

பின்னர் அந்த அடையாளச் சின்னங்களை ஒரு முஃமின் எப்படி அணுக வேண்டும் என்று வழிகாட்டியும் இருக்கின்றான்.

وَالْبُدْنَ جَعَلْنَاهَا لَكُمْ مِنْ شَعَائِرِ اللَّهِ لَكُمْ فِيهَا خَيْرٌ فَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهَا صَوَافَّ فَإِذَا وَجَبَتْ جُنُوبُهَا فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّ كَذَلِكَ سَخَّرْنَاهَا لَكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ

ஒட்டகங்களை உங்களுக்கு அல்லாஹ்வினுடைய மார்க்க அடையாளங்களில் ஒன்றாக நாம் ஆக்கியுள்ளோம். உங்களுக்கு அவற்றின் மூலம் நன்மைகள் இருக்கின்றன. ஆகவே, (அவற்றை இடது முன்னங்காலை கட்டி) மூன்று கால்களில் நிற்கச்செய்து அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்து விடுங்கள். அவற்றின் விலாப்புறங்கள் கீழே விழுந்து உயிர் நீத்து விட்டால், அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள், தேவையிருந்தும் பிறரிடம் யாசிக்காதவர்களுக்கும், யாசித்துக் கேட்பவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள். நீங்கள் நன்றி செலுத்திடும் பொருட்டு இவ்வாறு நாம் அதை உங்களுக்கு வசப்படுத்தி தந்துள்ளோம்”. (அல்குர்ஆன் : 22: 36 )

ஒட்டகத்தை அல்லாஹ்வின் மார்க்க அடையாளங்களில் ஒன்று என்று குறிப்பிடும் அல்லாஹ் இதற்கு முந்தைய மற்றும் பிந்தைய வசனங்களில் குர்பானி குறித்து பேசுகின்றான். எனவே, குர்பானி பிராணியும், குர்பானி வணக்கமும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் கட்டுப்பட்டதாகும்.

அல் ஹஜ் அத்தியாயம் 26- ம் வசனத்தில் இருந்து ஹஜ்ஜையும், ஹஜ்ஜின் இதர கிரியைகளையும் சிறப்பித்துக் கூறி வரும் இறைவன் நடுவிலும், இறுதியாகவும்இவைகள் அல்லாஹ்வினால் புனிதமாக்கப்பட்டவைஎன்றும், ”அல்லாஹ்வின் சன்மார்க்க அடையாளங்கள்என்றும் குறிப்பிட்டு விட்டு கண்ணியப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றான்.

கண்ணியப்படுத்துபவர்கள் அடையும் பேறுகள்

ذَلِكَ وَمَنْ يُعَظِّمْ حُرُمَاتِ اللَّهِ فَهُوَ خَيْرٌ لَهُ عِنْدَ رَبِّهِ

இன்னும் எவர் அல்லாஹ்வினால் புனிதமாக்கப்பட்டவற்றை கண்ணியப்படுத்து கின்றாரோ, அது அவருடைய ரப்பிடம் அவருக்குச் சிறந்ததாகும்”. ( அல்குர்ஆன்: 22: 30 )

ذَلِكَ وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ

எவர் அல்லாஹ்வின் (சன்மார்க்க) அடையாளங்களைக் கண்ணியப்படுத்துகின்றாரோ, நிச்சயமாக அது இதயங்களில் உள்ள இறையச்சத்தால் விளைவதாகும்”. ( அல்குர்ஆன்: 22: 32 )

 

கண்ணியப்படுத்தாமல் அலட்சியம் செய்பவர்களின் நிலை

ஆதம் (அலை)” அவர்களை ஸஜ்தாவின் மூலம் கண்ணியப்படுத்த மறுத்த ஷைத்தான் கேவலப்படுத்தப்பட்டான் என அல்லாஹ் அல்குர்ஆனில் விமர்சிக்கின்றான்.                              ( அல்குர்ஆன்: 2:34, 7: 13, 18, 17: 63 )

பைத்துல் முகத்தஸைகண்ணியப்படுத்தத் தவறிய பனூ இஸ்ராயீல்கள் 40 ஆண்டுகாலம் பூமியில் தட்டழிந்தனர் என்று அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை அல்லாஹ் பதிவு செய்கின்றான்.      ( அல்குர்ஆன்: 2: 58,59, 5: 20-26 )

இறை அற்புதமானஒட்டகத்தைகண்ணியப்படுத்த மறுத்த ஸாலிஹ் (அலை) அவர்களின் கூட்டத்தினர் அழிவுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.                      ( அல்குர்ஆன்: 7: 73-79, 54: 23-31, 26: 155-158  

ஒரு இறைநம்பிக்கையாளனின் மனோநிலை?

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் விஷயத்தில் இப்ராஹீம் (அலை) அவர்கள் நடந்து கொண்ட அம்சங்களை அல்லாஹ்வின் வேதத்தில் ஓதும் போதும், பெருமானார் {ஸல்} அவர்களின் அமுதவாயால் பேசக் கேட்கும் போதும் இப்ராஹீம் (அலை) அவர்களின் மீது உமர் (ரலி) அவர்களின் இதயத்தில் ஏற்பட்ட கண்ணியத்திற்கும், மதிப்பிற்கும் அளவே கிடையாது. ஒரு சந்தர்ப்பத்தில் மாநபி {ஸல்) அவர்களிடத்தில் தங்களின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியே விட்டார்கள் 

وقال ابن مردويه: حدثنا محمد  بن أحمد بن محمد القزويني، حدثنا علي بن الحسين الجنيد، حدثنا هشام بن خالد، حدثنا الوليد، عن مالك بن أنس، عن جعفر بن محمد عن أبيه، عن جابر، قال: لما وقف رسول الله صلى الله عليه وسلم يوم فتح مكة عند مقام إبراهيم، قال له عمر: يا رسول الله، هذا مقام إبراهيم الذي قال الله: { وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى } ؟ قال: "نعم". قال الوليد: قلت لمالك: هكذا حدثك { وَاتَّخِذُوا } قال: نعم. هكذا وقع في هذه الرواية.

 

மக்காவாசிகள் தங்களின் மூதாதையர்கள் மூலமாக மகாம் இப்ராஹீமை அறிந்து வைத்து இருந்தாலும் அறியாமைக் காலத்தில் அவர்களிடம் பல்வேறு மூடப்பழக்க வழக்கங்கள் இருந்தும் கூட அவர்கள் மகாம் இப்ராஹீமை எவ்விதத்திலும் கண்ணியப்படுத்தி, பூஜை செய்து வழிபாடு செய்யக் கூடியவர்களாக இருந்திருக்கவில்லை.

இஸ்லாம் மக்காவில் வந்த பின்னரும் கூட அந்த மகாமுக்கு முஸ்லிம்கள் எவ்வித மரியாதையும் செய்யவில்லை. மக்கா வெற்றி கொண்ட பிறகு மாநபி {ஸல்} அவர்கள் கஅபாவைச் சுற்றி வருகின்ற போது, உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம்

அல்லாஹ்வின் தூதரே! இதோ நம் தந்தை இப்ராஹீம் {அலை} அவர்கள் இந்தக் கல்லின் மீது நின்று தானே இந்த கஅபாவைக் கட்டினார்கள். இங்கு நின்று தானே ஹஜ்ஜுக்கான அழைப்பை விடுத்தார்கள். ஏன் நாம் இந்தக் கல் அமைந்திருக்கும் இடத்தை தொழும் இடமாக ஆக்கிக் கொள்ளக் கூடாது? என்று வினாவொன்றை எழுப்பினார்கள்.

அப்போது, அல்லாஹ் 2: 125 –ஆவது வசனத்தை "(இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; மகாமு இப்ராஹீமை தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்”. ( அல்குர்ஆன்- 2: 125 ) இறக்கியருளினான்.

அதுவும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தங்களின் ஹஜ்ஜின் போது தான் அதற்கான செயல் வடிவத்தைக் கொடுத்தார்கள்.

حدَّثنا آدم,ُ حدَّثنا شعبةُ, حدَّثَنا عمرُو بنُ دينار, قال: سمعتُ ابنَ عمرَ رضيَ الله عنهما يقول  قِدمَ النبي صلى الله عليه وسلم فطَاف بالبيِت سبعاً, وصلَّى خَلفَ المقام ركعَتين, ثم خرجَ إلى الصَّفاَ, وقد قال الله تعالى

لقد كانَ لكم في رسول اللهِ أسوةٌ حَسَنةٌ "

 الأحزاب:21.

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி {ஸல்} அவர்கள் கஅபாவை தவாஃப் செய்த பிறகு மகாம் இப்ராஹீம் அருகே நின்று இரண்டு ரக்அத் தொழுதார்கள். பின்னர் ஸஃபா மலக்குன்றை நோக்கி சென்றார்கள்.

அப்போது, “உங்களுக்கு உங்களின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கின்றது என்ற கருத்தைக் கூறுகின்ற அஹ்ஸாப் அத்தியாயத்தின் 21 –ஆம் வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.                                                   ( நூல்: புகாரி )

உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை முத்தமிட்டு விட்டு அதை நோக்கி நிச்சயமாக நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். உன்னால் எந்த நன்மையும், தீமையும் செய்ய முடியாது என்பதையும் நான் அறிவேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்த்திரா விட்டால் நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன் என்று கூறினார்கள். (நூல் : புகாரி: 1597, 1605)

எங்கிருந்து வந்த கல் அது?..

 

حدثنا قتيبة حدثنا يزيد بن زريع عن رجاء أبي يحيى قال : سمعت مسافعا الحاجب قال : سمعت عبد الله بن عمرو يقول : سمعت رسول الله صلى الله عليه و سلم يقول إن الركن والمقام ياقوتتان من ياقوت الجنة طمس الله نورهما ولو لم يطمس نورهما لأضاءتا ما بين المشرق والمغرب  قال أبو عيسى : هذا يروى عن عبد الله بن عمرو موقوفا قوله وفيه عن أنس أيضا وهو حديث غريب


ஹஜ்ருல் அஸ்வதும், மகாமு இப்ராஹீமும் சொர்க்கத்தின் மாணிக்கக் கற்களில் உள்ளவையாகும். அவற்றின் ஒளியை அல்லாஹ் மங்கச் செய்துவிட்டான். அவற்றின் ஒளியை அவன் மங்கச் செய்யாமலிருந்தால் கிழக்குக்கும், மேற்குக்கும் இடைப்பட்ட பகுதியை அவை ஒளிரச் செய்திருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), ( நூல் : திர்மிதீ 804 )

أخبرني إبراهيم بن يعقوب قال حدثنا موسى بن داود عن حماد بن سلمة عن عطاء بن السائب عن سعيد بن جبير عن بن عباس أن النبي صلى الله عليه و سلم قال : الحجر الأسود من الجنة قال الشيخ الألباني : صحيح

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்திலிருந்து இறங்கியதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர் : இப்னுஅப்பாஸ் (ரலி)

(நூல்: நஸாயீ 2886)

முஃமின்கள் எந்த சொர்க்கத்தை அடைவதை இலக்காகக் கொண்டு இந்த உலகத்தில் வாழ பணிக்கப்பட்டுள்ளார்களோ அந்த சொர்க்கத்தின் பொருள் ஒன்று இவ்வுலகில் காணக் கிடைக்கிறது என்றால் அதைக் காண்பதற்கும், தொடுவதற்கும் ஆவல் பிறக்கத்தானே செய்யும். இவ்வுலகிலேயே காணக் கிடைக்கும் சொர்க்கத்துப் பொருள் என்ற அடிப்படையில் தான் மாநபி {ஸல்} அவர்கள் அதைத் தொட்டு முத்தமிடுவதை நடைமுறையாக்கினார்கள்.

எனவே, அல்லாஹ்வும், ரஸூலும் கண்ணியப்படுத்த வேண்டும் என எவைகளை எல்லாம் நமக்கு அடையாளப்படுத்தினார்களோ அவைகளை நாம் கண்ணியப்படுத்துவோம்.

அந்த வகையில் குர்பானி என்கிற வழிபாட்டை முஃமின்கள் கண்ணியப்படுத்த வேண்டும்.

ஆடு, மாடு வாங்குவது, வளர்ப்பது, பராமரிப்பது, தீனி போடுவது, பெருநாள் அன்றோ அல்லது அய்யாமுத் தஷ்ரீக் உடைய நாளில் சிலமணி நேரங்கள் ஒதுக்க வேண்டும் அறுப்பதற்கு ஆள் தேடவேண்டும், வெட்டுவதற்கு இறைச்சிக்கடைக்காரரை அமர்த்த வேண்டும். பங்கு பிரித்து, பாக்கெட் போட்டு ஊர்க்காரர்கள், உறவுக்காரர்கள், ஏழைகள், நட்புகள் என அலைந்து திரிந்து கொடுக்க வேண்டும். அப்பாடா எவ்வளவு வேலை என்று கருதி, இவைகளை பாரமாக நினைத்து இது எதுவுமே செய்யாமல் நமக்கான பங்கு நம் வீடு தேடி வந்து வந்துவிடும். நாம் இறைச்சி கொடுத்தா மற்றவர்களுக்கு நிறையப்போகிறது மற்றவர்களும் கொடுப்பார்கள் தானே நாம் ஏன் கொடுக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு யாராவது ஒருவரின் கூட்டுக்குர்பானி குழுமத்தில் சேர்ந்து சடங்கு செய்வது போன்று, சம்பிரதாயத்தை நிறைவேற்றுவது போன்று குர்பானிக் கடமையைச் செய்து ஓ நாம் குர்பானியை நிறைவேற்றி விட்டோம் என்று திருப்தி பட்டுக்கொள்கின்றோம்.

நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். குர்பானி என்பது “உளப்பூர்வமாக” நிறைவேற்றப்பட வேண்டிய கடமையாகும் என்பதை அல்லாஹ் மிகத் தெளிவாகவே அறிவித்து விட்டான்.

لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ

“குர்பானிப் பிராணிகளாகிய அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ ஒரு போதும் அல்லாஹ்வை சென்றடைவதில்லை. எனினும், உங்களின் இதயத்தின் இறையச்சமே அவனைச் சென்றடையும்”. (அல்குர்ஆன்: 22: 37 )

இப்போது நீங்கள் இந்த இறைவசனத்தோடு அல்ஹஜ் அத்தியாயத்தின் 30, 32, 36 ஆகிய இறைவசனங்களின் கருத்தை இணைத்துப் பாருங்கள். குர்பானிக் கடமையை நாம் வழிபாடாக நிறைவேற்றி இருக்கின்றோமா? சடங்கு சம்பிரதாயம் போல் நிறைவேற்றி இருக்கின்றோமா? என்பதை புரிந்து கொள்ள முடியும்.

உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும் இது நபியவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும்.

قال النّووي رحمه الله في " المجموع " (8/382):" قيل سمّيت بذلك لأنّها تُفعل في الضّحى، وهو ارتفاع النّهار ".

 

இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் லுஹா உடைய நேரத்தில் அறுக்கப்படுவதால் அதற்கு உள்ஹிய்யா என்று பெயர் வந்ததுஎன கூறுகின்றார்கள்.

الإمام أبي حنيفة أنّها واجبة على القادر.

இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்கள் உள்ஹிய்யா கொடுப்பது வாஜிப் என்று கூறுகிறார்கள். பின் வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு 

ما رواه أحمد وابن ماجه وغيرهما عن أبي هريرة رضي الله عنه عن النبيّ صلّى الله عليه وسلّم قال: (( مَنْ وَجَدَ سَعَةً فَلَمْ يُضَحِّ، فَلاَ يَقْرَبَنَّ مُصَلاّنَا )) [حديث حسن].

قال السّندي رحمه الله:" ليس المراد أنّ صحة الصلاة تتوقّف على الأضحية، بل هو عقوبة له بالطّرد عن مجالس الأخيار، وهذا يفيد الوجوب، والله تعالى أعلم ".

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “யார் உள்ஹிய்யா கொடுக்கிற அளவுக்கு வசதி வாய்ப்புகள் பெற்றிருந்தும் உள்ஹிய்யா கொடுக்க வில்லையோ, அவர் நம் தொழுமிடத்துக்கு வரவேண்டாம் என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                     ( நூல்: அஹ்மத், இப்னு மாஜா )

இந்த ஹதீஸிற்கு விளக்கம் தருகிற அஸ்ஸிந்தீ (ரஹ்) அவர்கள் உள்ஹிய்யா கொடுப்பவரின் தொழுகை தான் நிறைவேறும் என்ற பொருளில் இந்த ஹதீஸை அணுகாமல் உள்ஹிய்யா கொடுப்பவர்களோடு இவர்கள் கலந்து விடுவதிலிருந்து தனித்து விடப்படவேண்டும் என்ற பொருளிலேயே இதை அணுக வேண்டும். மேலும், இது ஒரு வகையில் அவர்களைத் தண்டிப்பது போலவும் அமைந்திருக்கின்றது, மேலும், இந்த ஹதீஸை இவ்வாறு நோக்கும் பட்சத்தில் உள்ஹிய்யா வாஜிப் எனும் அந்தஸ்தைப் பெறுகின்றது. அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன் என்று கூறுகின்றார்கள்.

இதற்கு ஆதாரமாக இன்னொரு ஹதீஸையும் மேற்கோள் காட்டுகின்றனர்.

 

ما رواه أحمد وأبو داود عن مخنف بن سليم أنّ النبيّ صلّى الله عليه وسلّم قال: (( يَا أَيُّهَا النَّاسُ، إِنَّ عَلَى أَهْلِ كُلِّ بَيْتٍ أُضْحِيَةُ كُلَّ عَامٍ )).

மஃக்னஃப் இப்னு ஸுலைம் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “மக்களே! உங்களில் (சொந்தமாக) வீடுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண்டும் உள்ஹிய்யா கொடுக்க வேண்டும் என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: அபூதாவூத், அஹ்மத்  

وهو قول الإمام أبي حنيفة، ورواية عن مالك وأحمد، والثّوري، والأوزاعي، وربيعة، والليث، وهو الظّاهر للأدلّة

அபூஹனீஃபா (ரஹ்) அவர்களின் இந்த கருத்தையே, மேற்கூறிய ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு இமாம் மாலிக், இமாம் அஹ்மத், இமாம் ஸுஃப்யானுஸ் ஸவ்ரீ, இமாம் அவ்ஜாயீ, இமாம் ரபீஆ, இமாம் லைஸ் (ரஹ் அலைஹிம் ) ஆகியோரும் கொண்டிருக்கின்றனர்.

للجمهور أنّها سنّـة مؤكّدة، قال ابن قدامة في "المغني"(9/345):

" روي ذلك عن أبي بكر، وعمر، وبلال، وأبي مسعود البدري رضي الله عنهم.

وبه قال سويد بن غفلة، وسعيد بن المسيب، وعلقمة، والأسود، وعطاء، والشافعي، وإسحاق، وأبو ثور، وابن المنذر " اهـ

ஆனால், ஜும்ஹூர்  பெரும்பாலான அறிஞர்கள் இமாம் ஸயீத் இப்னுல் முஸய்யப், இமாம் அல்கமா, இமாம் ஸுவைத் இப்னு ஃகஃப்லா, இமாம் அதாஃ இப்னு அபீ ரபாஹ், இமாம் ஷாஃபீயீ, இமாம் இஸ்ஹாக், இமாம் அபூ ஸவ்ர், இமாம் இப்னுல் முந்திர் (ரஹ்  அலைஹிம்) ஆகியோர் அபூபக்ர், உமர், பிலால், அபீ மஸ்வூத் அல்பத்ரீ (ரலி  அன்ஹும்) ஆகியோர் பதிவு செய்திருக்கிற ஹதீஸ்களை மேற்கோள் காட்டி ஸுன்னத் முஅக்கதா வலியுறுத்தப்பட்ட ஸுன்னத் என்று கூறுகின்றார்கள் என்பதாக இமாம் இப்னு குதாமா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.  ( நூல்: அல்முஃனீ லி இமாமி இப்னு குதாமா, பாகம்:9, பக்கம்: 345 )

முதல் இரண்டு நபிமொழிகளின் அடிப்படையில் வசதி வாய்ப்புள்ள அனைவரும் தனித்தனியாக குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.

எனவே, தனியாக ஆடு, மாடு குர்பானி கொடுக்க வசதி படைத்தவர்கள் ஆட்டையோ, மாட்டையோ வாங்கி அதை வளர்த்து, பராமரித்து அழகிய முறையில் குர்பானி கொடுக்க வேண்டும்.

இன்று சமூகத்தில் தனியாக ஆடு, மாடு குர்பானி கொடுத்துக் கொண்டிருந்த அநேகம் பேர், வசதி வாய்ப்புகள் இருந்தும் கூட்டுக்குர்பானி கொடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றார்கள். ஆனால், இது போன்றவர்களுக்கு கூட்டுக் குர்பானியை விட தனியாக குர்பானி கொடுப்பதே அதிக நன்மைக்கும், சிறப்புக்கும் உரியதாகும்.

உள்ஹிய்யா – குர்பானி தொடர்பான சில செய்திகள்…

அறுப்பதன் ஒழுங்குகள்

குர்பானி பிராணியை கிப்லா திசையை முன்னோக்கி வைத்து அறுக்க வேண்டும்...

يوجّه وجه الأُضحية إلى القبلة، كما يشير إليه حديث جابر رضي الله عنه عند أبي داود حين قال:" كَانَ النَّبِيُّ صلّى الله عليه وسلّم إِذَا أَرَادَ أَنْ يَذْبَحَ ذَبِيحَتَهُ وَجَّهَهَا ..." أي: إلى القبلة 

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி {ஸல்} அவர்கள் பலிப்பிராணியை கிப்லா திசையை முன்னோக்கி வைத்து அறுப்பவர்களாக இருந்தார்கள்”.                                                 ( நூல்: அபூதாவூத்  

அறுக்கும் போது....

فيقول عند الذّبح :" بسم الله، والله أكبر، اللهمّ هذا منك ولك، اللهمّ تقبّل منّي ".

மிகப் பெரியவனான அல்லாஹ்வின் பெயர் கொண்டு அறுக்கின்றேன், இறைவா! இது உன் புறத்தில் இருந்து எனக்கு வழங்கப்பட்ட அருளாகும். இதை உனக்காகவே நிறைவேற்றுகின்றேன், என்னிடத்தில் இருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக!என்று கூறி அறுக்க வேண்டும்.

حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ قَالَ ضَحَّى النَّبِىُّ - صلى الله عليه وسلم - بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ ، ذَبَحَهُمَا بِيَدِهِ ، وَسَمَّى وَكَبَّرَ وَوَضَعَ رِجْلَهُ عَلَى صِفَاحِهِمَا .

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி {ஸல்} அவர்கள் கொம்பு உள்ள இரு கறுப்பு வெள்ளை செம்மறி ஆட்டுக்கடாக்களை குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தமது கரத்தால் அறுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறினார்கள். தக்பீரும் (அல்லாஹு அக்பர்) சொன்னார்கள். மேலும், தமது காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்து அறுத்தார்கள்”.        ( நூல்: புகாரி )

அறுத்த பின்பு... 

ولا يجوز أن يشرع في سلخها وكسر عظمها قبل خروج روحها، قال عمر بن الخطّاب رضي الله عنه:" لاَ تَعْجَلُوا الأَنْفُسَ حَتَّى تُزْهَقَ " [انظر " فتح الباري "(9/526)].

"சட்டெனெ தோலை உரித்து இறைச்சிகளை எடுத்து விடக் கூடாது, மாறாக, உயிரும், உடல் அசைவும் அடங்கும் வரை காத்திருக்க வேண்டும்.

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஆன்மா அடங்கும் வரை காத்திருங்கள்; அவசரப்பட்டு விடாதீர்கள் 

உள்ஹிய்யா பிராணிகளை வதைக்காமல் அறுப்பது….

عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ قَالَ ثِنْتَانِ حَفِظْتُهُمَا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ كَتَبَ الْإِحْسَانَ عَلَى كُلِّ شَيْءٍ فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا الْقِتْلَةَ وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذَّبْحَ وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ فَلْيُرِحْ ذَبِيحَتَهُ رواه مسلم

ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நான் இரண்டு விஷயங்களை அண்ணலாரிடம் இருந்து கற்று இது வரை அதைப் பேணி வருகின்றேன் 

"எல்லாப் பொருட்களின் மீதும் நல்ல முறையில் நடந்து கொள்வதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். 1. நீங்கள் (கிஸாஸ் பழிக்குப் பழி வாங்கும் போது) கொலை செய்தால் அழகிய முறையில் கொலை செய்யுங்கள்.

2.நீங்கள் பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். உங்கள் கத்தியை நீங்கள் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள்! (விரைவாக) அறுப்பதன் மூலம் அதற்கு நிம்மதியைக் கொடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

 

" مَرَّ رَسُولُ اللهِ صلّى الله عليه وسلّم بِرَجُلٍ يَشْحَذُ سِكِّينَهُ أَمَامَ الأُضْحِيَةِ، فَقَالَ: (( أَفَلاَ قَبْلَ هَذَا ؟ أَتُرِيدُ أَنْ تُمِيتَهَا مَوْتَـَتيْنِ، هَلاَّ حَدَدْتَ شَفْرَتَكَ قَبْلَ أَنْ تُضْجِعَهَا 

நபி {ஸல்} அவர்கள் உள்ஹிய்யா பிராணியை அறுப்பதற்காக தயாராகிக் கொண்டிருந்த ஒரு  மனிதரை  கடந்து  சென்றார்கள்.

அவர் உள்ஹிய்யா பிராணிக்கு முன் கத்தியை தீட்டிக்கொண்டிருந்தார்.  அப்போது நபி {ஸல்} அவர்கள், சற்று முன்பாக இதை நீர் செய்திருக்க வேண்டாமா? அதற்கு இரண்டு மரணத்தை ஏன் கொடுக்கிறீர்?” என கண்டித்தார்கள்.

உள்ஹிய்யாவில் செய்யக்கூடாதவைகள்...

اعلم أنّه يحرُم على المسلم أن يبيع شيئا من أُضحيته، وهو مذهب عطاء، والنّخعي، والإمام مالك، وإسحاق، والشّافعيّة.

உள்ஹிய்யா கொடுக்கப்பட்ட கொடுக்கப்பட்ட பிராணிகளின் முடிகளையோ தோல்களையோ மாமிசங்களையோ விற்கவோ, அல்லது அறுத்தவருக்கு கூலியாகவோ கொடுக்கக்கூடாது என அறிஞர் பெருமக்கள் பின் வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு கூறுகின்றார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلّى الله عليه وسلّم: (( مَنْ بَاعَ جِلْدَ أُضْحِيَتِهِ فَلاَ أُضْحِيَةَ لَهُ )).

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: எவர் உள்ஹிய்யா பிராணியின் எந்த ஒன்றையாவது விற்கிறாரோ அவர் உள்ஹிய்யா கொடுத்தவராக கருதப்பட மாட்டார்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: ஹாகிம் )

فقد روى الشّيخان عن عليّ بن أبي طالب رضي الله عنه قال:" أَمَرَنِي رَسُولُ اللهِ صلّى الله عليه وسلّم أَنْ لاَ أُعْطِيَ الجَازِرَ مِنْهَا شَيْئاً 

குர்பானி பிராணியை மேற்பார்வையிடும் பணியில் என்னை நபி {ஸல்} அவர்கள் நியமித்து, அவைகளின் எந்த ஒரு பகுதியையும் அறுப்பவருக்கு கூலியாகக் கொடுக்கக் கூடாது என நபி {ஸல்} கண்டிப்பாக கூறினார்கள்.       ( நூல்: புகாரி )

இறைச்சியைப் பங்கிடல்

لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ

தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடுமாடுஒட்டகம் போன்ற) பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பானி கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்)எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்”.                                                  ( அல்குர்ஆன்: 22:28 ) 

ومن السنّة أن لا يأكل المضحي شيئا يوم النحر حتى يضحي فيأكل من أضحيته ، فقد روى

الدّارمي عن أَبِي موسى الأشعريّ رضي الله عنه أنّ النبيّ صلّى الله عليه وسلّم كان يفعل 

உள்ஹிய்யா கொடுப்பவர் தான் கொடுத்த உள்ஹிய்யாவிலிருந்து அன்றைய முதல் உணவை உட்கொள்வது தனித்த சுன்னத் ஆகும். ஏனெனில், நபி {ஸல்} அவர்கள் அவ்வாறே சாப்பிட்டு இருப்பதாக அபூமூஸல் அஷ்அரீ (ரலி) அவர்கள் வாயிலாக இமாம் தாரமீ (ரஹ்) தங்களது தாரமீயிலே ஒரு ஹதீஸை பதிவிட்டு இருக்கின்றார்கள்.

حَدَّثَنَا أَبُو عَاصِمٍ عَنْ يَزِيدَ بْنِ أَبِى عُبَيْدٍ عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ قَالَ قَالَ النَّبِىُّ - صلى الله عليه وسلم - « مَنْ ضَحَّى مِنْكُمْ فَلاَ يُصْبِحَنَّ بَعْدَ ثَالِثَةٍ وَفِى بَيْتِهِ مِنْهُ شَىْءٌ » . فَلَمَّا كَانَ الْعَامُ الْمُقْبِلُ قَالُوا يَا رَسُولَ اللَّهِ نَفْعَلُ كَمَا فَعَلْنَا عَامَ الْمَاضِى قَالَ « كُلُوا وَأَطْعِمُوا وَادَّخِرُوا فَإِنَّ ذَلِكَ الْعَامَ كَانَ بِالنَّاسِ جَهْدٌ فَأَرَدْتُ أَنْ تُعِينُوا فِيهَا »

ஸலமா இப்னு அக்வஃ(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் குர்பானிப் பிராணியை அறுக்கிறவர் (அறுத்ததிலிருந்து) மூன்று நாள்களுக்குப் பின் (அதிலிருந்து எதுவும் அவரின் வீட்டில் எஞ்சியிருக்கும் நிலையில்) காலைப் பொழுதை அடைய வேண்டாம்என்று கூறினார்கள்.

அடுத்த ஆண்டு வந்தபோதுமக்கள் 'இறைத்தூதர் அவர்களே! சென்ற ஆண்டு செய்ததைப் போன்றே (இந்த ஆண்டும்) நாங்கள் செய்ய வேண்டுமா?' என்று கேட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள் 'நீங்களும் அதிலிருந்து உண்டு (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுங்கள். சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால்கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. எனவேநீங்கள் அந்தச் சிரமத்தைப் போக்க (அவர்களுக்கு) உதவ வேண்டும் என்று விரும்பினேன்என்று பதிலளித்தார்கள்.

                                                            ( நூல்: புகாரி )

من أجل ذلك استحبّ العلماء أن تقسّم الاضحية ثلاثة أثلاث: ثلث يأكل منه أهل البيت، وثلث يُتَصدّق به، وثلث يطعم به الأضياف والجيران.

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டே உள்ஹிய்யா பிராணியின் இறைச்சியை மூன்றாகப் பங்கு வைப்பதை முஸ்தஹப் என்கிறார்கள்.

1. தனக்கு ஒரு பங்கும், 2. ஏழை, எளியவர்களுக்கு தர்மமாக ஒரு பங்கும், 3. உறவினர்கள், அண்டை அயலார், நண்பர்கள், விருந்தாளிகள் ஆகியோருக்கு ஒரு பங்கும் வைப்பதாகும்.

மாற்று மதத்தவர்களுக்கு உள்ஹிய்யா இறைச்சியை கொடுக்கலாமா?.. 

وعَنْ مُجَاهِدٍ : " أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو ذُبِحَتْ لَهُ شَاةٌ فِي أَهْلِهِ ، فَلَمَّا جَاءَ قَالَ: أَهْدَيْتُمْ لِجَارِنَا الْيَهُودِيِّ ؟ ، أَهْدَيْتُمْ لِجَارِنَا الْيَهُودِيِّ ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ( مَا زَالَ جِبْرِيلُ يُوصِينِي بِالْجَارِ حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُوَرِّثُهُ ) رواه الترمذي (1943) وصححه الألباني.

قال ابن قدامة : " وَيَجُوزُ أَنْ يُطْعِمَ مِنْهَا كَافِرًا ، ... ؛ لِأَنَّهُ صَدَقَةُ تَطَوُّعٍ ، فَجَازَ إطْعَامُهَا الذِّمِّيَّ وَالْأَسِيرَ، كَسَائِرِ صَدَقَةِ التَّطَوُّعِ ". انتهى من "المغني" (9/450) .
وفي فتاوى اللجنة الدائمة (11/424)
 " يجوز لنا أن نطعم الكافر المعاهد ، والأسير من لحم الأضحية ، ويجوز إعطاؤه منها لفقره ، أو قرابته ، أو جواره ، أو تأليف قلبه...؛ لعموم قوله تعالى
 ( لَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ) ، ولأن النبي صلى الله عليه وسلم أمر أسماء بنت أبي بكر رضي الله عنها أن تصل أمها بالمال وهي مشركة في وقت الهدنة " . انتهى

இமாம் முஜாஹித் (ரஹ்) அவர்கள் மூலமாக திர்மிதீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸை திர்மிதீயிலே பதிவு செய்திருக்கிறார்கள்.

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தார்கள். வெளியில் சென்று விட்டு வீட்டுக்குள் வந்ததும் தமது வீட்டாரிடம் நமது அண்டை வீட்டாரான யஹூதியின் வீட்டிற்கு கொடுத்தனுப்புனீர்களா? என மூன்று முறை கேட்டு விட்டு நபி {ஸல்} அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன் என்னிடம் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வந்து அண்டை வீட்டாரின் உரிமைகள் குறித்து சொல்லிய வண்ணம் இருந்தார். எங்கே அண்டை வீட்டாருக்கும் சொத்தில் பங்கு கொடுங்கள் என்று கூறிவிடுவார்களோ எனும் எண்ணுமளவிற்கு என்று. ( நூல்: திர்மிதீ )

இமாம் இப்னு குதாமா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “மாற்று மதத்தவர்களுக்கும், திம்மீக்களுக்கும், கைதிகளுக்கும் உள்ஹிய்யா இறைச்சியிலிருந்து உண்ணக்கொடுப்பது ஆகுமாகும். மேலும், அது ஸதக்கா ததவ்வுஃ உபரியான தர்ம வகையைச் சார்ந்ததாகும்.

( நூல்: அல் முஃக்னீ லி இமாமி இப்னு குதாமா, பாகம்: 9, பக்கம்: 450 )

லஜ்னத் அத்தாயிமா எனும் ஃபத்வா நூலில்….

لَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ (8)

தீன் (இறைமார்க்கம்) தொடர்பான விஷயங்களில் எவர்கள் உங்களுடன் போர் புரியவில்லையோ  உங்களை உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்ற வில்லையோ அவர்களிடம் நீங்கள் நல்லவிதமாகவும், நீதியுடனும் நடப்பதிலிருந்து அல்லாஹ் உங்களைத் தடுப்பதில்லை. திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான்”. ( அல்குர்ஆன்: 60:8 ) 

அஸ்மா (ரலி) அவர்களின் தங்களது தாயார் இணைவைப்பராய் இருக்கும் நிலையில் அவருக்கு தாம் உதவியாய் இருக்கலாமா? என அண்ணலார் {ஸல்} அவர்களிடம் வினவிய போது, நபி {ஸல்} அவர்கள் உலக விவகாரங்களில் அவர்களோடு தாராளமாக நடந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

மேற்கூறிய இந்த இறைவசனத்தையும், நபிமொழியையும் ஆதாரமாக வைத்து, மாற்றுமதத்தவர்கள் தம் அண்டை வீட்டுக்காரராகவோ, ஏழையாகவோ, சொந்தமாகவோ இருந்தால் அவர்களுக்கு வழங்கலாம். மேலும், அவர்களின் இதயம் இந்த தீனின் பால் ஈர்க்கப்பட வேண்டும் என்ற ஆதரவுடன் உள்ஹிய்யா இறைச்சியை வழங்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

          ( நூல்: ஃபதாவா லஜ்னத் அத்தாயிமா, பாகம்: 11, பக்கம்: 424  

குர்பானி தோலின் சட்டம் என்ன?

குர்பானி தோலை பதனிட்டு தானே பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது பிறருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கலாம். அல்லது ஏழைகளுக்கு சதகாவாக கொடுக்கலாம். விற்பது கூடாது. அப்படி விற்பனை செய்து விட்டால் அக்கிரயத்தை ஏழைகளுக்கு சதகா செய்துவிடுவது கடமையாகும். அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கக் கூடாது.

தோலை யாருக்கு கொடுப்பது கூடாது?

மஸ்ஜித் கட்டடப் பணி, மராமத்து பணிகளுக்காகவும், 2. அறுத்து உறிப்பவர், உதவியாளர் ஆகியோருக்கு ஊதியமாகவும், 3. முஅத்தின், இமாம் ஆகியோருக்கு சம்பளமாகவும் கொடுப்பது கூடாது.

மதரஸாவின் கட்டுமானப்பணி, மராமத்துப்பணிக்கோ கொடுக்காமல் அங்கு பயிலும் மாணவர்களுக்காக கொடுக்கலாம்.  பள்ளிவாசலில் பைத்துல்மால் எனும் அமைப்பு இருந்து அதன் மூலம் ஏழை, எளியவருக்கு உதவிகள் கொடுக்கப்படும் என்றிருந்தால் கொடுக்கலாம்

அல்லாஹ்வின் அச்சத்தோடும் அவனுக்காகவே செய்யும் தூய உள்ளத்தோடும் உள்ஹிய்யா (குர்பானி) கொடுக்க வேண்டும் என்பதை மேற்கூறிய வசனம் நமக்கு உணர்த்துகின்றது.

நம் வாழ்வில் எல்லா காரியங்களிலும் இறையச்சத்தோடும், உளத்தூய்மையோடும் நடக்க அல்லாஹ் நம் எல்லோருக்கும் அருள் பாளிப்பானாக!

 

     ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

6 comments:

  1. இப்னு குதாமா எந்த மத்ஹபை சார்ந்தவர்

    ReplyDelete
    Replies
    1. ஹம்பலி மத்ஹபைச் சேர்ந்தவர்கள்

      Delete
  2. மாஷா அல்லாஹ் ஒரு குர்பானி "மஸாயில் மஜ்லிஸ்" நடத்தி முடித்து விட்டீர்!! அல்ஹம்துலில்லாஹ் எல்லாம்வல்ல இறைவன் தன்னுடைய பரிபூரண அருளால் தங்களுடைய இல்மை பொருந்திக்கொள்வானாக

    ReplyDelete
  3. அனைத்தும் ஆதாரத்தோடு,ஆணித்தரமாக
    அற்புதம்! பாரக்கல்லாஹு ஹஜ்ரத்!

    ReplyDelete
  4. உங்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வத்தையும் கொடுப்பானாக ஆமீன்

    ReplyDelete