இறை உதவியைச் சமீபமாக்கும்
மூன்று அடிப்படை அம்சங்கள்!!!
மனித வாழ்க்கையின்
எல்லா காலத்திலும், எல்லா
நிலைகளிலும் இறைவனின் உதவி
என்பது இன்றியமையாத ஒன்றாகும்.
இறைவனின் உதவி
இன்றி இந்த உலகத்தில்
மட்டுமல்ல, மண்ணறையிலும், மறுமையிலும்
ஈடேற்றம் பெற முடியாது.
மனித சமூகம் வாழத்துவங்கிய நாள் முதற்கொண்டு எல்லா காலத்திலும் வாழ்ந்த அனைத்து இறைத்தூதர்களும், அவர் தம் சமூக மக்களும் இறை உதவியை எதிர் பார்த்து வாழ்ந்ததாகவும், இறைவனின் புறத்திலிருந்து அவர்களுக்கு உதவி செய்யப்பட்டதாகவும் வான்மறையில் வல்லோன் அல்லாஹ் பல இடங்களில் குறிப்பிடுகின்றான்.
இதைப் பின் வரும் வசனங்களின் மூலம் அல்லாஹ்
உணர்த்துகின்றான்.
أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ (214)
“உங்களுக்கு முன் சென்றுவிட்ட (இறை நம்பிக்கையுடைய) வர்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற நிலை உங்களுக்கு வராமலேயே நீங்கள் சுவனத்தில் நுழைந்து விடலாமென்று எண்ணிக் கொண்டிருக்கின்றீர்களா? இன்னல்களும், இடுக்கண்களும் அவர்களை அலைக்கழித்தன.
அன்றைய காலத்தில் அவர்களுடன் வாழ்ந்த இறைத்தூதர்களும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் “அல்லாஹ்வுடைய உதவி எப்போது வரும்?” என்று ( அழுது புலம்பிக் ) கேட்கும் வரை அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள்.
அப்பொழுது அவர்களுக்கு இவ்வாறு ஆறுதல் கூறப்பட்டது! “இதோ! அல்லாஹ்வின் உதவி மிக அண்மையில் இருக்கின்றது என்று”. ( அல்குர்ஆன்: 2:214 )
யுத்தகளத்தின் நடுவே இறை உதவியை கேட்டு அனுபவித்த சமூகம்...
மூஸா (அலை) அவர்களுக்குப் பின்னர் நடைபெற்ற
நிகழ்ச்சி இது. இஸ்ரவேல் சமூகம் அநீதத்திற்கு உள்ளாக்கப்பட்ட காலகட்டம். அவர்கள்
தம்மை ஊரை விட்டும் விரட்டியவர்களுக்கு எதிராகப் போராட ஒரு தலைமையை
எதிர்பார்த்தனர். அவர்கள் தமது நபியிடம் இதனைக் கேட்டனர். பின்னர், அல்லாஹ் தாலூத் என்பவர் தலைவராக இருந்து வழிநடத்துவார் என்று நபியின் மூலம் பிரகடனப்படுத்தினான்.
فَلَمَّا
فَصَلَ طَالُوتُ بِالْجُنُودِ قَالَ إِنَّ اللَّهَ مُبْتَلِيكُمْ بِنَهَرٍ فَمَنْ
شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّي وَمَنْ لَمْ يَطْعَمْهُ فَإِنَّهُ مِنِّي إِلَّا
مَنِ اغْتَرَفَ غُرْفَةً بِيَدِهِ فَشَرِبُوا مِنْهُ إِلَّا قَلِيلًا مِنْهُمْ
فَلَمَّا جَاوَزَهُ هُوَ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ قَالُوا لَا طَاقَةَ لَنَا
الْيَوْمَ بِجَالُوتَ وَجُنُودِهِ قَالَ الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُمْ مُلَاقُو
اللَّهِ كَمْ مِنْ فِئَةٍ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَةً بِإِذْنِ اللَّهِ
وَاللَّهُ مَعَ الصَّابِرِينَ (249) وَلَمَّا بَرَزُوا لِجَالُوتَ وَجُنُودِهِ
قَالُوا رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا
عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ (250) فَهَزَمُوهُمْ بِإِذْنِ اللَّهِ وَقَتَلَ دَاوُودُ
جَالُوتَ وَآتَاهُ اللَّهُ الْمُلْكَ وَالْحِكْمَةَ وَعَلَّمَهُ مِمَّا يَشَاءُ
وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَفَسَدَتِ الْأَرْضُ
وَلَكِنَّ اللَّهَ ذُو فَضْلٍ عَلَى الْعَالَمِينَ
“பின்னர் தாலூத் படைகளுடன் புறப்பட்ட போது ‘நிச்சயமாக அல்லாஹ் உங்களை ஓர் ஆற்றின் மூலம் சோதிப்பான். எவரேனும் அதில் அருந்தினால் அவர் என்னைச் சார்ந்தவரல்லர். யார் அதில் அருந்தவில்லையோ அவர் என்னைச் சார்ந்தவராவார். எனினும் தன் கையளவு அள்ளி (அருந்தி)யவரைத் தவிர என்று கூறினார். அவர்களில் சொற்பமானவர் களைத் தவிர (மற்ற) அனைவரும் அதிலிருந்து அருந்தினர். பின்னர் அவரும் அவருடன் நம்பிக்கை கொண்டோரும் அதைக் கடந்து சென்ற போது, ‘ஜாலூத்துடனும் அவரது படையுடனும் (போராட) இன்று எமக்கு எந்த வலிமையும் இல்லை” என்று (அவர்களில் சிலர்) கூறினர். ‘நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதியாக நம்பிக்கை கொண்டோர், ‘எத்தனையோ சிறு படைகள் பெரும் படைகளை அல்லாஹ்வின் உதவியினால்; வெற்றி கொண்டுள்ளனவே!” எனக் கூறினர். அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.”
படைகளை நோக்கி முன்னேறும்போது “எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக.
எங்களை உறுதியாக்குவாயாக. இக்கொடிய மக்களை எதிர்கொள்ளும் சக்தியை எங்களுக்குத்
தந்தருள்வாயாக. எங்களுக்கு வெற்றியை நல்கி உதவி புரிவாயாக” எனக் கூறி தாலூத் பிரார்த்தித்தார்.
மோதல் ஆரம்பமானது. படையோடு படையாகப் போரிடாமல் வலுவானவர் முன் வந்து எதிரிப்
படையில் இருக்கும் வலுவானவரோடு போராட வேண்டும் என்று முடிவானது. இப்படியே மோதல்கள்
நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, ஜாலூத் படைகளுக்கு முன்னால் தோன்றி “என்னை எதிர்கொள்ளும் வலிமையும் துணிவும் உங்களில் யாருக்கு
உள்ளது” என்று ஆணவத்துடன்
கேட்டான்.
அவன் உருவத்தைக் கண்டவுடன் எல்லோருமே பின்வாங்கினார்கள். ஆனால் மிகச் சிறிய
உருவமான தாவூத் (அலை) அரசர் தாலூத்திடம் அனுமதி பெற்று முன்வந்தார்கள் “நான் இருக்கிறேன் உன்னை வீழ்த்த” என்று நம்பிக்கையுடன் முழங்கினார்கள்.
தாவூத் (அலை) அவர்களைக் கண்ட ஜாலூத் உரக்கச்சிரித்தான் “நீ என்னை வீழ்த்துவதா? போய் உன் வீட்டின் பெரியவர்களை வரச்சொல்” என்றான். தாவூத் (அலை) மனம் தளராமல் “உனக்கு என்னைக் கண்டு பயமா?” என்று கேட்டார்கள்.
கோபம் தலைக்கேறிய ஜாலூத் காளையைப் போல் சீறிப் பாய்ந்து வந்தான்.
ذكروا
في الإسرائيليات: أنه قتله بمقلاع كان في يده رماه به فأصابه فقتله
பழங்களையும் சிறு விலங்குகளையும் அடித்து உண்ணப் பயன்படுத்தும் உண்டிகோலை சிறப்பாகப் பயன்படுத்தத் தெரிந்த தாவூத் (அலை), ஜாலூத்தின் நெற்றிப்பொட்டை சரியாகக் குறி பார்த்து ஓங்கி அடித்தார்கள். அதைச் சிறிதும் எதிர்பாராத ஜாலூத்தின் தலையில் கல் மோதி அவன் உயிரற்றுக் கீழே சாய்ந்தான்.
இதைக் கண்ட அவனது படையினர் பயந்து ஓடலானார்கள். இஸ்ராயீலர்கள் அந்தப் படையை மிகச் சுலபமாக வென்றுவிட்டார்கள். ( அல்குர்ஆன்: 2: 249-251 )
மரணத்தின் விளிம்பில் இறை உதவியை கேட்டு அனுபவித்த சமூகம்
இறைத்தூதர்கள்
அனுப்பப்படும்போது அவர்களை ஏற்றுக் கொள்ளாத சமுதாயத்தினர், போதுமான அவகாசம் கொடுக்கப்பட்ட பின் அழிக்கப்பட்டனர்.
தண்டனையின் அறிகுறிகளைக் கண்ட கடைசி நேரத்தில் கூட எந்தச் சமுதாயமும் திருந்தி நல்வழிக்கு வரவில்லை. விதிவிலக்காக யூனுஸ் நபியின் சமுதாயம் (லட்சத்திற்கும் மேற்பட்டோர்) இறைவனின் தண்டனைக்கான அறிகுறிகளைக் கண்டபோது, தமது தவறைத் திருத்திக் கொண்டு (தௌபா) பாவமன்னிப்புக் கேட்டதால் தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டனர்.
இது போல் தண்டனைக்கான அறிகுறி வந்தபோது மற்ற சமுதாயமும் மன்னிப்புக் கேட்டு தப்பித்திருக்க வேண்டாமா? என்று இறைவன் யூனுஸ் (10 -ம்) அத்தியாயத்தின் 96 முதல் 100 வரையிலான வசனங்களின் ஊடாக கேட்கிறான்.
இது தவிர பெருமானார் {ஸல்} அவர்கள் வாழும் காலத்திலும் இந்த உம்மத்திற்கு பல்வேறு உதவிகளை இறைவன் செய்ததாக குறிப்பிடுகின்றான்.
பத்ர், அஹ்ஸாப்,
ஹுனைன் போன்ற யுத்தங்களில் அல்லாஹ் இந்த உம்மத்திற்கு செய்த உதவிகளை நினைவு
கூர்ந்து பார்க்குமாறு வலியுறுத்துகிற இறைவசனங்களும் குர்ஆனில் உண்டு.
ஆகவே, இறைவனின்
உதவி என்பது இறைவனை நம்பிக்கை கொள்கிற அனைவருக்கும் கிடைக்கும் என்றே இறைமறை
மேற்கூறிய வரலாறுகளின் மூலம் உணர்த்துகின்றது.
نَصْرٌ
مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ
“அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் இதோ! மிகச் சமீபமாகவே இருக்கின்றது”. ( அல்குர்ஆன்: 61: 13 )
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تَنْصُرُوا اللَّهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ (7)
“இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிந்தால் அவன் உங்களுக்கு உதவி வழங்குவான். மேலும், உங்களின் பாதங்களை அவன் உறுதிப்படுத்துவான்.” ( அல்குர்ஆன்: 47: 7 )
இறை உதவி மொழிவதற்கு இலகுவாக இருந்தாலும், அனுபவிப்பதற்கு அழகாக இருந்தாலும் அதை அடைவதற்கான வழிகள் என்பது ஒன்றும் அவ்வளவு இலகுவான ஒன்றல்ல.
சில போது இறை உதவி துவக்கத்திலேயே கிடைத்து விடும். இன்னும் சில போது தோல்வியின் விளிம்பில் இருக்கும் போது கிடைக்கும். இன்னும் சில போது இனி வழியே இல்லை என்று எல்லாவற்றையும் இழந்து நிற்கிற போது கிடைக்கும்.
அல்லாஹ்வின் உதவியை எதிர் பார்த்து நம்பிக்கையோடு காத்து நின்றவர்களுக்கு அல்லாஹ் உதவி செய்தான்.
சில போது இயற்கையின் விதிகளை மாற்றியமைத்து
பிரம்மிக்கத்தக்க உதவிகளை வழங்கினான்.
இன்னும் சில போது தனக்கான
விதிகளையே மாற்றியமைத்து வியக்கத்தக்க உதவிகளை வழங்கினான்.
அல்லாஹ்வும் அல்குர்ஆனில் இறைவனின் உதவியைப் பெற்றவர்கள் குறித்து பல்வேறு வசனங்களில், பல்வேறு இடங்களில், பல்வேறு கோணத்தில் கூறுகின்றான்.
இறைவனின் உதவியைச் சமீபாக்கும் மிக முக்கியமான மூன்று காரணிகளை, அடிப்படை அம்சங்களை அல்லாஹ் அல்குர்ஆனில் அல் அன்பியா அத்தியாயத்தில் விவரிக்கின்றான்.
அல் அன்பியா
அத்தியாயம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களை அகிலத்தின் அருட்கொடை என்று
அடையாளப்படுத்தும் அத்தியாயம். 112 இறைவசனங்களைக் கொண்ட இந்த அத்தியாயம் மக்காவில்
நபி {ஸல்} வாழும் போது மத்திய கால கட்டங்களில் இறக்கியருளப்பட்டது.
இந்த அத்தியாயயத்தில் பல்வேறு செய்திகளை கூறும் அல்லாஹ், அநேக நபிமார்களின் பெயர்களைக் குறிப்பிடுகின்றான்.
மிகவும் இக்கட்டான, நெருக்கடியான, சோதனையான கால கட்டத்தில் வாழ்ந்த தம்முடைய இறைத்தூதர்கள் பலருக்கு தான் புரிந்த வியப்பான பல உதவிகளை அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
குறிப்பாக,
இப்ராஹீம் (அலை), நூஹ் (அலை), லூத் (அலை), அய்யூப் (அலை), யூனுஸ் (அலை), ஜகரிய்யா
(அலை) ஆகியோருக்கு செய்த உதவிகளை அல்லாஹ் தொடர்ந்து பட்டியலிட்டு கூறிய பிறகு
அவர்கள் அனைவருக்கும் இறை உதவிகள் வந்ததற்கான பிரதான மூன்று அடிப்படைகளை
குறிப்பிடுகின்றான்.
إِنَّهُمْ كَانُوا يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَيَدْعُونَنَا
رَغَبًا وَرَهَبًا وَكَانُوا لَنَا خَاشِعِينَ
“இவர்கள் யாவரும் நற்பணி (நல்லறங்) களில் முனைந்து செயற்படுவோராகவும், பேரார்வத்துடனும், அச்சத்துடனும் நம்மிடம் இறைஞ்சக் கூடியவர்களாகவும், நம் முன் பணிந்தவர்களாகவும் விளங்கினார்கள்”. (அல்குர்ஆன்: 21: 90 )
ஆகவே, இந்த மூன்று அடிப்படை அம்சங்களை நம் வாழ்க்கையில் கொண்டு வந்து இறை உதவியைப் பெற முயற்சி செய்வோம்.
1. நற்பணி (நல்லறங்) களில் முனைந்து செயல்படுவது…
நபி {ஸல்} அவர்கள் நபித்தோழர்களுக்கு உபதேசம் செய்வதை தடுக்கும் நோக்கோடும், நபி {ஸல்} அவர்களுக்கு நோவினை கொடுக்கும் நோக்கோடும் நபி {ஸல்} அவர்களின் பெரும்பாலான நேரங்களை நயவஞ்சகர்கள் இரகசியம் பேச வேண்டும் என்ற கோரிக்கையோடு மாநபி {ஸல்} அவர்களிடம் அனுமதி கோரி அடிக்கடி சந்தித்து நீண்ட நேரம் தேவையில்லாத ஏதாவது விஷயங்களை பேசிக்கொண்டிருப்பார்கள்.
மாநபி {ஸல்} அவர்களுக்கு இது சிரமமாக இருந்த போதும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இன்முகத்தோடு அவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
அதே நேரத்தில் நபித்தோழர்கள் பலருக்கு மிக முக்கியமான தேவைகள் ஏற்படும் போது அண்ணலாரை அணுகுவதற்கு மிகவும் சிரமமாகவும் இருந்தது.
இந்த தருணத்தில் அல்லாஹ்
ரப்புல் ஆலமீன் அல் முஜாதலா (58- ம்) அத்தியாயத்தின் 12- ஆம் இறைவசனத்தை இறக்கியருளினான்.
“இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இறைத்தூதருடன் தனிமையில் பேச வேண்டுமாயின், அவ்வாறு பேசுவதற்கு முன்பாக தான தர்மம் செய்யுங்கள். இது உங்களுக்கு நன்மையானதும், மிகத்தூய்மையானதும் ஆகும். ஆனால், தர்மம் செய்வதற்கு எதுவும் இல்லை என்றால் திண்ணமாக, அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணை மிக்கவனாகவும் இருக்கின்றான்”. (அல்குர்ஆன்: 58: 12 )
இந்த இறைவசனம் இறங்கியதன்
பின்னர் நபி {ஸல்} அவர்களைத் தொந்தரவு
செய்து எந்த நயவஞ்சகர்களும் நெருங்கவில்லை. அதே நேரத்தில் நபித்தோழர்கள்
அன்று குறைந்த பொருளாதாரத்தோடு இருந்தமையால் தர்மம் செய்து விட்டு தனிமையில் இரகசியம்
பேசும் வாய்ப்பை பெற முடியாமல் போனது.
وقال ليث بن أبي سليم، عن مجاهد، قال علي، رضي الله عنه: آية في كتاب
الله، عز وجل لم يعمل بها أحد قبلي، ولا يعمل بها أحد بعدي، كان عندي دينار فصرفته
بعشرة دراهم، فكنت إذا ناجيت رسول الله
صلى الله عليه وسلم تصدقت بدرهم، فنسخت ولم يعمل بها أحد قبلي، ولا يعمل بها أحد
بعدي، ثم تلا هذه الآية: { يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نَاجَيْتُمُ
الرَّسُولَ فَقَدِّمُوا بَيْنَ يَدَيْ نَجْوَاكُمْ صَدَقَةً } الآية.
அலீ இப்னு அபீ தாலிப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அருள்மறையின் ஒரு வசனம் எனக்கு முன்பாக யாரும் அமல் செய்தது கிடையாது, எனக்குப் பின்பும் யாரும் அமல் செய்ய முடியாது. என்னிடம் ஒரு தீனார் இருந்தது நான் பத்து திர்ஹம்களாக மாற்றி வைத்துக் கொண்டேன். எப்போதெல்லாம் நான் நபி {ஸல்} அவர்களிடம் இரகசியம் பேச வேண்டும் என்று விரும்பினேனோ அப்போதெல்லாம் ஒரு திர்ஹத்தை தர்மம் செய்து விட்டு நபி {ஸல்} அவர்களிடம் சென்று பேசினேன். பின்பு இந்த சட்டம் மாற்றப்பட்டது. என்று கூறி மேற்கூறிய இறைவசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.
இமாம் முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “அலீ (ரலி) அவர்கள் நபி {ஸல்} அவர்களிடம் பத்தி சிறப்பு பண்புகள் குறித்து கேட்டார்கள்
பிரபல விரிவுரையாளர் இமாம் முகாத்தில் இப்னு ஹய்யான் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “இந்த சட்டம் பத்து நாட்கள் அமலில் இருந்தது. பின்னர் 13 –ஆம் வசனம் இறக்கியருளப்பட்டு இந்த சட்டம் மாற்றப்பட்டது.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்: அலீ (ரலி) அவர்களிடத்தில் இருந்த மூன்று அம்சங்கள் ஏதாவது ஒன்று என்னிடம் இருப்பதை நான் செந்நிற ஒட்டகைகள் கிடைப்பதை விட உயர்ந்ததாக எண்ணிணேன்
1,இந்த இறைவசனத்தின் அமல். 2.கைபர் யுத்தத்தில் நபி {ஸல்} அவர்கள் அலீ (ரலி) அவர்களை “நாளை ஒருவரிடம் நான் இஸ்லாமியக் கொடியை வழங்குவேன். அவரை அல்லாஹ்வும், அவனது தூதரும் நேசிக்கின்றார்கள். அவரும் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நேசிக்கின்றார்” என்று புகழ்ந்து கூறியது. 3.அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்களை திருமணம் செய்திருந்தது.
அலீ (ரலி) அவர்கள் நன்மையான காரியங்களை விரைந்து செய்வதிலே எவ்வளவு ஆர்வமாக இருந்தார்கள் என்பதை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது.
2.பேரார்வத்தோடும், அச்சத்தோடும் துஆ செய்வது…
நபித்தோழர்களில் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்கள். ஹிஜ்ரி 6-ல் கைபர் போருக்குப் பின்னர் இஸ்லாத்தைத் தழுவி மாநபி {ஸல்} அவர்களோடு ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகள் அருகாமையைப் பெற்று, இந்த தீனுக்கும், உம்மத்துக்கும் மகத்தான பங்களிப்பைச் செய்தவர்கள்.
ஆம்! நபி {ஸல்} அவர்களிடம்
இருந்து 5374 ஹதீஸ்களை இந்த உம்மத்திற்கு கொடையாக வழங்கியவர்கள்.
أَنَّ رَجُلا جَاءَ زَيْدَ بْنَ ثَابِتٍ ، فَسَأَلَهُ عَنْ شَيْءٍ ،
فَقَالَ لَهُ
عَلَيْكَ أَبَا
هُرَيْرَةَ ، " فَإِنِّي بَيْنَمَا أنا وَأَبُو هُرَيْرَةَ وَفُلانٌ فِي
الْمَسْجِدِ ذَاتَ يَوْمٍ نَدْعُو اللَّهَ ، وَنَذْكُرُ رَبَّنَا ، خَرَجَ
عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى جَلَسَ
إِلَيْنَا ، فَسَكَتْنَا ، فَقَالَ عُودُوا لِلَّذِي كُنْتُمْ فِيهِ ، قَالَ زَيْدٌ :
فَدَعَوْتُ أَنَا وَصَاحِبَيَّ قَبْلَ أَبِي هُرَيْرَةَ ، وَجَعَلَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُؤَمِّنُ عَلَى دُعَائِنَا ، ثُمَّ
دَعَا أَبُو هُرَيْرَةَ ، فَقَالَ : اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِثْلَ مَا
سَأَلَكَ صَاحِبَايَ هَذَانِ ، وَأَسْأَلُكَ عِلْمًا لا يُنْسَى ، فَقَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : آمِينَ ، فَقَالَ : يَا رَسُولَ
اللَّهِ ، وَنَحْنُ نَسْأَلُ اللَّهَ عِلْمًا لا يُنْسَى ، فَقَالَ : سَبَقَكُمْ
بِهَا الْغُلامُ الدَّوْسِيُّ
"
ஒரு நாள் ஜைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்களிடம் ஒருவர் ஏதோ ஒன்றை கேட்க வந்தார். அப்போது இது குறித்து நீங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் போய் கேளுங்கள் என்று அங்கிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்களை காட்டினார்கள். பின்னர், ஒரு நாள் நானும்,பெயர் அறியப்படாத ஒரு நபித்தோழரும், அபூஹுரைரா ஆகியோர் மஸ்ஜிதுன் நபவீயில் அமர்ந்திருந்தோம்.
அப்போது, எங்களில் ஒவ்வொருவரும் துஆக் கேட்க வேண்டும் என்றும், ஒருவர் துஆக் கேட்குக்ம் போது மற்ற இருவரும் ஆமீன் சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தோம்.
அப்போது அங்கே நபி {ஸல்} அவர்கள் வருகை தந்து மூவரும் கூடி அமர்ந்திருப்பதன் நோக்கம் குறித்து கேட்டறிந்து, எங்கள் துஆவுக்கு ஆமீன் சொன்னார்கள்.
இறுதியாக, அபூஹுரைரா (ரலி)
அவர்கள்: “அல்லாஹ்வே! உன்னிடம் நான் மறந்து போகாத கல்வியறிவைக் கேட்கின்றேன். மேலும்,
என்னுடைய இரு நணபர்களும் உன்னிடம் எதைக் கேட்டார்களோ அதையும் உன்னிடம் நான் கேட்கின்றேன்”
என்று துஆக் கேட்க அதற்கு நபி {ஸல்} அவர்கள் ஆமீன் என்று கூறினார்கள்.
அப்போது மற்ற இரு நபித்தோழர்களும் நாங்கள் இருவரும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கேட்ட துஆவின் பலன் எங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று துஆ கேட்கின்றோம் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் ஆமீன் சொல்லுங்கள் என்று கோரினார்கள்.
அதற்கு நபி {ஸல்} அவர்கள் “தவ்ஸ் குலத்தைச் சார்ந்த இந்த சிறியவர் இது விஷயத்தில் உங்கள் இருவரையும் முந்தி விட்டார்” என்று கூறினார்கள்.
இந்த நிகழ்வின் ஊடாக அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு துஆக் கேட்பதில் இருந்த பேரார்வம் நமக்கு புலப்படுகின்றது.
3.
இறைவனுக்கு முன்னால், இறைக்கட்டளைகளுக்கு முன்னால் பணிந்து, பயந்து நடப்பது…
أنَّهُ ذَكَرَ رَجُلًا فِيمَن سَلَفَ - أوْ فِيمَن كانَ
قَبْلَكُمْ، قالَ: كَلِمَةً: يَعْنِي - أعْطاهُ اللَّهُ مالًا ووَلَدًا، فَلَمَّا
حَضَرَتِ الوَفاةُ، قالَ لِبَنِيهِ: أيَّ أبٍ كُنْتُ لَكُمْ؟ قالوا: خَيْرَ أبٍ،
قالَ: فإنَّه لَمْ يَبْتَئِرْ - أوْ لَمْ يَبْتَئِزْ - عِنْدَ اللَّهِ خَيْرًا،
وإنْ يَقْدِرِ اللَّهُ عليه يُعَذِّبْهُ، فانْظُرُوا إذا مُتُّ فأحْرِقُونِي حتَّى
إذا صِرْتُ فَحْمًا فاسْحَقُونِي - أوْ قالَ: فاسْحَكُونِي -، فإذا كانَ يَوْمُ
رِيحٍ عاصِفٍ فأذْرُونِي فيها، فقالَ: نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ:
فأخَذَ مَواثِيقَهُمْ علَى ذلكَ ورَبِّي، فَفَعَلُوا، ثُمَّ أذْرَوْهُ في يَومٍ
عاصِفٍ، فقالَ اللَّهُ عزَّ وجلَّ: كُنْ، فإذا هو رَجُلٌ قائِمٌ، قالَ اللَّهُ:
أيْ عَبْدِي ما حَمَلَكَ علَى أنْ فَعَلْتَ ما فَعَلْتَ؟ قالَ: مَخافَتُكَ، - أوْ
فَرَقٌ مِنْكَ -، قالَ: فَما تَلافاهُ أنْ رَحِمَهُ عِنْدَها وقالَ مَرَّةً
أُخْرَى: فَما تَلافاهُ غَيْرُها، فَحَدَّثْتُ به أبا عُثْمانَ، فقالَ: سَمِعْتُ
هذا مِن سَلْمانَ غيرَ أنَّه زادَ فِيهِ: أذْرُونِي في البَحْرِ، أوْ كما حَدَّثَ.
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் `முன் சென்ற` அல்லது `உங்களுக்கு முன் வாழ்ந்த` ஒரு மனிதரைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அல்லாஹ்
அவருக்குச் செல்வத்தையும் குழந்தைகளையும் வழங்கியிருந்தான். அவருக்கு இறப்பு
நெருங்கியபோது அவர் தம் மக்களிடம் `உங்களுக்கு நான் எப்படிப்பட்ட தந்தையாக இருந்தேன்?`
என்று கேட்டார். அவர்கள் `சிறந்த தந்தையாக இருந்தீர்கள்` என்று பதில் கூறினர். அவர் தமக்காக அல்லாஹ்விடம்
எந்த நன்மையும் சேமித்திருக்கவில்லை. அல்லாஹ்வின் முன்னிலையில் தாம் சென்றால்
தம்மை அவன் வேதனை செய்துவிடுவான் என அவர் அஞ்சினார். எனவே,
(அவர் தம் மக்களிடம் `நன்றாகக் கவனியுங்கள். நான் இறந்துவிட்டால் என்னைப்
பொசுக்கிவிடுங்கள். நான் (வெந்து) கரியாக மாறிவிட்டால் என்னைப் `பொடிப் பொடியாக்கிவிடுங்கள்`.
அல்லது `துகள் துகளாக்கிவிடுங்கள்`.
பிறகு சூறாவளிக் காற்று வீசும் நாளில்
காற்றில் என்னைத் தூவிவிடுங்கள்` என்று கூறிதாம் கூறியபடி செய்ய வேண்டுமென அவர்களிடம் அவர்
உறுதிமொழியும் வாங்கினார்.
என் இறைவன் மீதானையாக அவ்வாறே அவர்களும்
செய்தனர். அப்போது அல்லாஹ் `(பழையபடி முழு மனிதனாக) ஆகிவிடு!` என்று கூறினான்.
உடனே (அந்த) மனிதர் (உயிர்பெற்று) எழுந்தார். (அவரிடம்) அல்லாஹ் `என் அடியானே! இவ்வாறு நீ செய்யக் காரணமென்ன?`
என்று கேட்டான். அந்த மனிதர் உன்னைக்
குறித்த அச்சமே என்னை இவ்வாறு செய்யத் தூண்டியது` என்று பதிலளித்தார். (இறுதியில்) அவர் அடைந்தது
இறையருளைத்தான்.
அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:
நான் அபூ உஸ்மான்(ரஹ்) அவர்களிடம் இதை அறிவித்தேன். அப்போது அவர்கள் `சல்மான் ஃபார்சி(ரலி) அவர்கள் இதைப் போன்றே கூற
கேட்டேன். ஆனால் (காற்றில்) என்னைத் தூவிவிடுங்கள் எனுமிடத்தில்) `கடலில் என்னைத் தூவிவிடுங்கள்` என்றோ, வேறுவிதமாகவோ கூடுதலாக அறிவித்தார்கள்` என்று கூறினார்கள்.
انَ رَجُلٌ مِمَّنْ كانَ قَبْلَكُمْ يُسِيءُ الظَّنَّ بعَمَلِهِ، فقالَ لأهْلِهِ: إذا أنا مُتُّ فَخُذُونِي فَذَرُّونِي في البَحْرِ في يَومٍ صائِفٍ، فَفَعَلُوا به، فَجَمعهُ اللَّهُ ثُمَّ قالَ: ما حَمَلَكَ علَى الذي صَنَعْتَ؟ قالَ: ما حَمَلَنِي إلَّا مَخافَتُكَ، فَغَفَرَ له.
இன்னொரு அறிவிப்பில்...
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்` உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனூ இஸ்ராயீல்
மக்களில்) ஒருவர் தம் செய்து வந்த (குற்றச்) செயல் குறித்து அஞ்சியவராக
இறந்துவிட்டால் என்னை(க் கரித்துச் சாம்பலை) எடுத்து சூறாவளிக் காற்று வீசும்
காலத்தில் கடலில் தூவிவிடுங்கள்` என்று கூறினார். (அவர் இறந்தவுடன்) அவரை அவ்வாறே அவரின்
வீட்டாரும் செய்தனர். அல்லாஹ் (காற்றோடு கலந்துவிட்ட) அவரின் உடலை ஒன்று திரட்டிய
பின் `நீ இவ்வாறு
செய்யததற்குக் காரணம் என்ன?` என்று கேட்டான்.
அவர் `உன்னைப் பற்றிய
அச்சமே என்னை இவ்வாறு செய்யத் தூண்டியது` என்று பதிலளித்தார். எனவே, அல்லாஹ் அவரை மன்னித்துவிட்டான்.
என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.
ورد لفظ (خشع) في القرآن سبع عشرة مرة، جاء في خمسة عشر موضعًا
بصيغة الاسم، من ذلك قوله عز من قائل: {قد أفلح المؤمنون * الذين هم في صلاتهم
خاشعون} (المؤمنون:2) وجاء في موضعين بصيغة الفعل، الأول: قوله عز وجل: {وخشعت
الأصوات للرحمن فلا تسمع إلا همسا} (طه:108) الثاني: قوله تعالى: {ألم يأن للذين
آمنوا أن تخشع قلوبهم لذكر الله} (الحديد:16).
ولفظ (خشع) ورد في القرآن على
أربعة معان:
الأول: بمعنى التصديق
والتسليم، ومنه قوله تعالى: {واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على
الخاشعين} (البقرة:25) قال الطبري: "يعني بقوله: {إلا على الخاشعين} أي: إلا
على الخاضعين لطاعته، الخائفين سطواته، المصدقين بوعده ووعيده".
الثاني: التواضع والخضوع، ومنه
قوله سبحانه: {إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا
خاشعين} (الأنبياء:90) أي: متواضعين خاضعين. ومنه أيضاً قوله تعالى: {خاشعة
أبصارهم} (القلم:43) أي: خاضعة أبصارهم للذي هم فيه من الخزي والهوان.
الثالث: بمعنى التذلل، ومنه
قوله عز وجل: {الذين هم في صلاتهم خاشعون} (المؤمنون:2) قال الطبري: "خشوعهم
فيها تذللهم لله فيها بطاعته، وقيامهم فيها بما أمرهم بالقيام به فيها".
وبحسب هذا المعنى أيضاً قوله تعالى: {وجوه يومئذ خاشعة} (الغاشية:2) أي: ذليلة.
ومن هذا القبيل كذلك قوله عز من قائل: {خشعا أبصارهم} (القمر:7) يقول: ذليلة
أبصارهم خاشعة.
الرابع: بمعنى سكون الجوارح،
ومنه قوله عز وجل: {وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا} (طه:108) أي: سكنت
أصوات الخلائق للرحمن. روى الطبري عن ابن عباس رضي الله عنهما، قوله: {وخشعت
الأصوات للرحمن} يقول: سكنت.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனில் “ஃகுஷூஃ” என்ற வார்த்தையை “இஸ்ம்” உடைய அமைப்பில் 17 இடங்களிலும், “ஃபிஅல்” உடைய அமைப்பில் 2 இடங்களிலும் மொத்தம் 19 இடங்களில் குறிப்பிடுகின்றான்.
மேலும், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் 4 பொருள்களில் “ஃகுஷூஃ” என்ற வார்த்தையைப் பயன் படுத்துகின்றான்.
1. அல்லாஹ்விற்கு கட்டுப்படுவது
மற்றும் அல்லாஹ்வின் வார்த்தைகளை நம்புவது, உண்மைபடுத்துவது.
2. அல்லாஹ்வின் கட்டளை விஷயத்தில்
பணிவோடும், தன்னடக்கத்தோடும் நடந்து கொள்வது.
3. இறைக்கட்டளைக்கு முன்பாக
தன்னை முற்றிலும் தாழ்த்திக் கொள்வது.
4. உடலுறுப்புக்களை இறைகட்டளைகள் மற்றும் வழிபாடுகளின் போது சாந்தமாக, அமைதியாக வைத்திருப்பது.
பெருமானார் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “இந்த உலகத்தில் இந்த உம்மத்திடம் இருந்து முதலில் உயர்த்தப்படுவது இறையச்சத்தால் பணிந்து நடக்கும் தன்மை தான். எதுவரை இது நடக்கும் என்றால் எவரையும் நீங்கள் இறையச்சத்தால் பணிந்து நடப்பவராக பார்க்கமாட்டீர்கள்”.
قال حذيفة رضي الله عنه: أول ما تفقدون من دينكم الخشوع، ويوشك أن تدخل مسجد الجماعة، فلا ترى فيهم خاشعًا.
ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
“உங்கள் மார்க்க விஷயத்தில் முதலில் நீங்கள் இழப்பது இறையச்சத்தால் பணிந்து நடக்கும்
தன்மையைத் தான். அப்போது, நீங்கள் பெருங்கூட்டத்தால் நிரம்பியிருக்கிற ஒரு மஸ்ஜிதுக்குள்
நீங்கள் நுழைவீர்கள். ஆனால், இறையச்சத்தால் பணிந்து நடக்கும் தன்மை கொண்ட ஒருவரையும்
நீங்கள் பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்.
استعيذوا بالله من خشوع النفاق»، قالوا: وما خشوع النفاق؟ قال:"
أن ترى الجسد خاشعا والقلب ليس بخاشع".
அபூதர் (ரலி) அவர்கள் “நீங்கள் நயவஞ்சகமான “ஃகுஷூஃ –லிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள்” என ஒரு சபையில் கூறினார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் நயவஞ்சகமான “ஃகுஷூஃ” என்றால் என்ன? என்று வினவினர். அதற்கு, அபூதர் (ரலி) அவர்கள் “உடல் மொழியில் “ஃகுஷூஃ” இருக்கும். ஆனால், உள்ளத்தில் “ஃகுஷூஃ” இருக்காது” என்று பதில் கூறினார்கள்.
ஆகவே, இறைவனின் உதவியைச் சமீபாக்கி
நம் வாழ்வை வளமாக்கும் இந்த மூன்று அடிப்படை அம்சங்களை நம் வாழ்க்கையில் நாம் கடைபிடித்து
வாழ்வோம்! அல்லாஹ்வின் மகத்தான உதவியைப் பெறுவோம்!!
بارك الله فيك يا أخي الكريم
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ். வாராவாரம் ஆரவாரத்துடன் உங்கள் ஆக்கங்களை தேடுவேன். படிப்பேன் பல அலுவல்களுக்கு மத்தியிலும் பயான் குறிப்புகளை பதிவு செய்து விடுகிறீர்கள். جزاكم الله خيرا حضرت
ReplyDeleteMasha allah
ReplyDeleteبارك الله
ReplyDelete