அல்லாஹு அக்பர்.. வெறும் வார்த்தையல்ல!!
இறைநம்பிக்கையாளர்களின் பேராயுதம்!!! (2)
அல்லாஹு அக்பர்
ஒரு முஸ்லிமுடைய வாழ்வில்
அதிகம் இடம் பெறுகிற
முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தையாகும்.
பிறந்தது முதற்கொண்டு
வாழ்வின் இறுதி வரை
ஒரு முஸ்லிம் இந்த
வார்த்தையால் அடைகிற பேறுகளும்,
பாக்கியங்களும் மகத்தானதாகும்.
பிறந்த போதே
முதலில் ஒரு முஸ்லிம்
தம் செவியால் கேட்கும்
தேனமுது குழந்தையாய் இருக்கும்
போது அவன் செவிகளில்
ஒலிக்கப்படும் “அல்லாஹு அக்பர்”
என்று துவங்கும் பாங்கோசை
தான்.
மகத்துவமும்..
மாண்பும் நிறைந்தது
“அல்லாஹு அக்பர்”….
நாள்தோறும் தொழுகைக்காக
அழைக்கப்படும் பாங்கின் ஊடாக
சர்வதேச அளவில் 45 லட்சம்
பள்ளிவாசல்களில் 13 கோடியே 50 லட்சம்
முறை “அல்லாஹு அக்பர்”
எனும் வார்த்தை ஓங்கி
ஒலிக்கப்படுகின்றது. (ஒரு பாங்கில்
6 முறை, ஒரு நாளில்
சொல்லப்படும் ஐந்து முறை
பாங்குகளிலும் சேர்த்து 30 முறை)
அதே போன்று
தொழுகையை நிறைவேற்ற சொல்லப்படும்
இகாமத்தின் ஊடாக (ஹனஃபி
மத்ஹபின் படி) 13 கோடியே
50 லட்சம் முறையும், இதர
மூன்று மத்ஹப்களின் படி
9 கோடியே 40 லட்சம் முறையும்
“அல்லாஹு அக்பர் எனும்
ஓங்கார வார்த்தை ஒலிக்கப்படுகின்றது.
ஜும்ஆ தினமான வெள்ளிக்கிழமை அன்று மட்டும் 6 பாங்குகள்
சொல்லப்படுகின்றது. 45 லட்சம் பள்ளிவாசல்களில் 16 கோடியே 20 லட்சம் முறை “அல்லாஹு அக்பர்”
எனும் வார்த்தை ஓங்கி ஒலிக்கப்படுகின்றது.
நாள்தோறும் தவறாமல்
ஐந்து நேரம் தொழும்
பாக்கியம் பெற்ற முஸ்லிம்
ஒருவர் தன்னுடைய ஐந்து
நேரத் தொழுகையிலும் 94 முறை
“அல்லாஹு அக்பர்” என
மன ஓர்மையுடன் முழங்குகின்றார்.
ஸுப்ஹ் தொழுகையில் 11 தடவையும், ளுஹர், அஸர், இஷா
ஆகிய தொழுகைகளில் முறையே 22 தடவையும் (66) மக்ரிப் தொழுகையில் 17 தடவையும் அல்லாஹு
அக்பர் இடம் பெற்றுள்ளது.
அத்தோடு பாங்கிற்கு
பதில் சொல்கிற பழக்கம்
இருக்கின்ற ஒரு முஸ்லிம்
நாள்தோறும் அல்லாஹு அக்பர்
எனும் தக்பீரை 30 முறை
கூறுகின்றார்.
தொழுகையும் பாங்கிற்கு
பதில் சொல்கிற பேணுதலும்
உள்ள ஒரு முஸ்லிம்
நாள்தோறும் 124 முறை அல்லாஹு
அக்பர் எனும் சங்க
நாதத்தை கேட்கவும், உச்சரிக்கவும்
செய்கின்றார்.
உலகில் அதிக
முறை உச்சரிக்கப்படும் சிறப்பை
அல்லாஹ் மகத்துவம் வாய்ந்த
இந்த “தக்பீரைத்” தவிர
வேறெந்த வார்த்தைக்கும் வழங்கவில்லை.
முதல்
கட்டளைகளில் ஒன்று
“அல்லாஹு அக்பர்”…
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் மாநபி {ஸல்}
அவர்களுக்கு தன் புறத்திலிருந்து அருளிய இறைச்
செய்தியில், கட்டளையில் இடம்
பெற்றிருந்த இரண்டாவது கட்டளையே
நபியே! “அல்லாஹு அக்பர்”
என்று சொல்லுங்கள் என்பது
தான்.
يَاأَيُّهَا
الْمُدَّثِّرُ (1) قُمْ فَأَنْذِرْ (2) وَرَبَّكَ فَكَبِّرْ
“வஹியின் நடுக்கத்தால்
போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!
நீர் எழுந்திருப்பீராக! மக்களுக்கு
அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!
இன்னும் உம்முடைய ரப்பை
(அல்லாஹு அக்பர் என்று
கூறி) பெருமை படுத்துவீராக!
( அல் குர்ஆன்: 74: 1-3 )
மேலும், கதீஜா
(ரலி)
அவர்களும், இறைநம்பிக்கை கொண்ட
முஸ்லிம்களும் ஆரம்ப நாட்களில்
கலிமா தவ்ஹீதுக்குப் பின்னர்
அதிகமாக சொன்ன வார்த்தை
“அல்லாஹு அக்பர்” தான்.
அருளின் வாசலை திறக்கும் அபார வார்த்தை…
بينما نحن نصلي مع رسول الله ، إذ قال رجل من القوم: الله أكبر
كبيرًا، والحمد لله
كثيرًا، وسبحان الله بكرة وأصيلاً،فقال
رسول الله من القائل كلمة كذا وكذا؟، فقال رجل من القوم: أنا يا رسول الله، قال:
«عجبت لها، فتحت لها أبواب السماء
قال ابن عمر فما تركتهن منذ
سمعت رسول الله يقول ذلك
صحيح
مسلم
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“ நாங்கள் நபி {ஸல்} அவர்களுடன் தொழுது விட்டு அமர்ந்திருந்தோம். அப்போது கூட்டத்தில் ஒருவர் الله أكبر كبيرًا، والحمد لله كثيرًا، وسبحان الله بكرة وأصيلاً “” என்றார். அப்போது, நபி {ஸல்} அவர்கள் ”இன்னின்னவாறு கூறியவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது, ”கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து நான் தான் இன்னின்னவாறு கூறினேன்” என்றார்.
அப்போது, நபி {ஸல்} அவர்கள் “என்ன ஓர் ஆச்சர்யம்! அந்த வார்த்தைகளை நீங்கள் கூறிய போது வானத்தின் அத்தனை வாசல்களும் திறக்கப்பட்டன” என்றார்கள்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இப்படிக் கூறியதைக் கேட்டதிலிருந்து ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் நான் ஓதிவருவதை இதுவரை விட்டதில்லை”
( நூல்: முஸ்லிம் )
ஒரு முறை கூறினாலே இவ்வளவா?...
قال صلى الله عليه وسلم
إنَّ
الله تعالى اصطفى من الكلام أربعًا: سبحان الله، والحمد لله، ولا إله إلا الله،
والله أكبر، فمن قال: سبحان الله كتبت له عشرون حسنة، وحطت عنه عشرون سيئة، ومن
قال: الله أكبر مثل ذلك. ومن قال: لا إله إلا الله مثل ذلك. ومن قال: الحمد لله رب
العالمين، من قبل نفسه كتبت له ثلاثون حسنة وحطَّت عنه ثلاثون خطيئة
.صحيح الجامع الصغير وزيادته
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ் நான்கு வார்த்தைகளை தேர்ந்தெடுத்துள்ளான். அவை ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹுஅக்பர், லாஇலாஹ இல்லல்லாஹு ஆகியவை ஆகும். யார் سبحان الله என்று கூறுவாரோ அவருக்கு இருபது நன்மைகள் எழுதப்படுகின்றது. இருபது பாவங்கள் அழிக்கப்படுகின்றது. இது போன்றே الله أكبر கூறினாலும், இது போன்றே لا إله إلا الله கூறினாலும் வழங்கப்படுகின்றது.“எவர் الحمد
لله رب العالمين என்று கூறுவாரோ முப்பது நன்மைகள் எழுதப் படுகின்றது. முப்பது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன”. ( ஸஹீஹ் அல் ஜாமிஉ )
இரண்டு
பெரும் பேறுகளைப் பெற்றுத் தரும்
வார்த்தை…
قال صلى الله عليه وسلم
من صلى لله أربعين يوما في جماعة يدرك التكبيرة
الأولى، كُتب له براءتان: براءة من النار، وبراءة من النفاق
.صحيح الجامع الصغير وزيادته
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்:
“எவர் அல்லாஹ்விற்காக நாற்பது நாட்கள் முதல் தக்பீருடன் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்வாரோ அல்லாஹ் அவருக்கு இரண்டு விடுதலைப் பத்திரங்களை வழங்குகின்றான். ஒன்று, நயவஞ்சகத்தன்மையில் இருந்தும், மற்றொன்று நரகில் இருந்தும் என்று”.
இஸ்லாம் 17 நேரங்களில்
“அல்லாஹு அக்பர்” என்ற
வார்த்தையை கூறுமாறு வலியுறுத்துகின்றது.
1.தொழுகையின் ஆரம்பத்தில்
மற்றும் தொழுகையின் உள்ளே.
2.பிறையை பார்க்கும்
போது.
3.துல்ஹஜ் பிறை
10-ம் நாளில்.
4.ஹஜ்ஜின் பல்வேறு
இடங்களில்.. 1.தவாஃபின் போது,
2.மினாவில் இருந்து அரஃபா
செல்லும் போது, 3.கல்லெறியும்
போது.
5.இரண்டு பெருநாட்களிலும்.
6.இரண்டு பெருநாள்
தொழுகைகளிலும்.
7.பிரயாணத்தின் போது
வாகனத்தில் ஏறும் போது.
8.பிரயாணத்தில் இருந்து
ஊர் திரும்பும் போது.
9.உயர்ந்த, மேடான
இடங்களில் ஏறும் போது.
10.பிராணிகளை அறுக்கும்
போது.
11.மகிழ்ச்சியான செய்தியை
(அ)
சோபனமான வார்த்தையை கேட்கும்
போது.
12.தீப்பிடித்து எரியும்
போது.
13.மழைவேண்டி தொழும்
போது.
14.குழந்தையின் வலது
காதில் பாங்கு சொல்வது.
15.குழந்தையின் இடது
காதில் இகாமத் சொல்வது.
16.ஜனாஸா தொழுகையின்
போது.
17.யுத்த களங்களில் பங்கேற்கும் போது,
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சில அமல்களில்,
இடங்களில் “அல்லாஹ் அக்பர்”
என்பதை கூறுவதில் மிகவும்
கவனமாக, மனத்தூய்மையாக கூற
வேண்டும். இல்லையெனில் அந்த
அமலே ஏற்றுக் கொள்ளப்படாமல்
போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
மேலும், இவை அனைத்தும்
ஸஹீஹான நபி மொழிகளில்
இடம் பெறுகிற தகவல்களாகும்.
முதலில் அல்லாஹு அக்பர்
சொன்னது யார்?...
واختلفت
كتب التفسير في تعيين أول القائلين بها. هناك مَن ذكر أنها قيلت لأول مرة على لسان
جبريل فرحاً بعد فداء إسماعيل بكبش من السماء، إذ ردد "الله أكبر"
وكررها بعده إسماعيل "لا إله إلا الله. الله أكبر"، ثم قال النبي
إبراهيم "الله أكبر ولله الحمد"، كما ورد في كتاب "نزهة المجالس
ومنتخب النفائس" لعبد الرحمن الصفوري.
இறைத்தூதர் இப்ராஹீம்
(அலை)
அவர்கள் தாம் கண்ட
கனவை நனவாக்கிட தம்
மகனார் இஸ்மாயீல் (அலை)
அவர்களை அறுத்துப் பலியிட
ஆயத்தமாகி, இஸ்மாயீல் (அலை)
அவர்களின் கழுத்தில் கத்தியை
வைத்த அதே நேரத்தில்
அல்லாஹ் ரப்புல் இஸ்ஸத்
ஜிப்ரயீல் (அலை அவர்களிடம்
சுவனத்து ஆடு ஒன்றை
அழைத்துக் கொண்டு இறைத்தூதர்
இப்ராஹீம் (அலை) அவர்களிடம்
கொடுத்து “இஸ்மாயீல் (அலை)
அவர்களுக்குப் பகரமாக இந்த
ஆட்டை அறுத்துப் பலியிட
அல்லாஹ் ஏவுகின்றான்” என
சொல்லுமாறு கூறி அனுப்பி
வைத்தான்.
இறைத்தூதர் இப்ராஹீம்
(அலை)
அவர்களிடம் வந்த ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ஆட்டை கையில்
கொடுத்து அல்லாஹ் சொல்லச்
சொன்ன தகவலை இப்ராஹீம்
(அலை)
அவர்களிடம் கூறினார்கள். மேலும், இஸ்மாயீல் (அலை)
அவர்களுக்குப் பகரமாக வானில் இருந்து வல்லோன் அல்லாஹ் வழங்கிய ஆட்டிற்காக மகிழ்ச்சி
ததும்ப “அல்லாஹு அக்பர்” அல்லாஹு
அக்பர்” என சொல்லிக்
கொண்டே இருந்தார்கள்.
அப்போது, இஸ்மாயீல்
(அலை)
அவர்கள் “லா இலாஹ
இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்”
என்று உற்சாகமாய் கூறினார்கள்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீனுடைய கருணையை உணர்ந்து
மெய்சிலிர்த்து நின்ற இறைத்தூதர்
இப்ராஹீம் (அலை) அவர்கள்
நன்றிப்பெருக்கோடு “அல்லாஹு அக்பர்
வலில்லாஹில் ஹம்து” என்று
கூறினார்கள். ஆதலால் தான்
ஈதுல் அழ்ஹா தினத்தன்று
நாம் இம்மூவரும் சொன்ன
தக்பீர்களை இணைத்து மொத்தமாகச்
சொல்கின்றோம் என பெரும்பாலான
திருக்குர்ஆனின் விரிவுரையாளர்கள் குறிப்பிடுகின்றார்கள் என
அப்துர் ரஹ்மான் ஸுஃபூரி
(ரஹ்)
அவர்கள் கூறுகின்றார்கள். ( நூல்:
நுஸ்ஹத்துல் மஜாலிஸ் வ
முந்தகபுன் நஃபாயிஸ் )
அல்லாஹு அக்பர் எனும்
பேரற்புதங்களை வெளிப்படுத்தும் வார்த்தை..
وقال
البراء
لما كان يوم الخندق عرضت لنا في بعض الخندق صخرة لا تأخذ منها المعاول،
فاشتكينا ذلك لرسول الله صلى الله عليه وسلم، فجاء وأخذ المعول فقال
بسم الله ثم ضرب ضربة، وقال
الله أكبر، أعطيت مفاتيح الشام، والله إني لأنظر قصورها الحمر
الساعة، ثم ضرب الثانية فقطع آخر، فقال
الله أكبر، أعطيت فارس، والله إني لأبصار قصر المدائن الأبيض
الآن، ثم ضرب الثالثة
بسم الله، فقطع بقية الحجر، فقال
الله أكبر، أعطيت مفاتيح اليمن، والله إني لأبصار أبواب صنعاء
من مكاني فقال
عن جابر
قال
إنا يوم الخندق نحفر، فعرضت كدية شديدة، فجاؤوا النبي صلى الله عليه وسلم
فقالوا
هذه كدية عرضت في الخندق، فقال أنا نازل، ثم قام وبطنه معصوب بحجر
ولبثنا
ثلاثة لا نذوق ذواقا
فأخذ
النبي صلى الله عليه وسلم المعول، فضرب فعاد كثيبا أهيل أو أهيم
أي صار
رملا لا يتماسك.
பர்ராவு இப்னு
ஆஸிப் (ரலி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள்: “அகழ் யுத்தத்தின்
போது நாங்கள் அகழ்
தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தோம்.
அப்போது ஒரு பகுதியில்
எந்த கடப்பாறையாலும் உடைக்க
முடியாத ஒரு பாறை
குறுக்கிட்டது. அப்போது நாங்கள்
அது குறித்து நபி
{ஸல்}
அவர்களிடம் முறையிட்டோம்.
நபி {ஸல்}
அவர்கள் அங்கு வந்து
“பிஸ்மில்லாஹ் சொல்லி பாறையின்
மீது சம்மட்டியை (அ) கடப்பாறையை
தூக்கி ஓர் அடி
அடித்தார்கள். பாறையில் கீறல் விழுந்தது. அப்போது ஆச்சர்ய
மேலீட்டால்
நபி {ஸல்}
அவர்கள் அல்லாஹு அக்பர் என்று
கூறினார்கள். பின்னர், “ஷாம் தேசப்
பொக்கிஷங்கள் எனக்கு அருளப்பட்டன.
நான் இப்போது அங்குள்ள
செந்நிறக் கோட்டைகளைப் பார்க்கின்றேன்”
என்றார்கள்.
இரண்டாவதாக, “பிஸ்மில்லாஹ்
சொல்லி பாறையின் மீது
சம்மட்டியை (அ) கடப்பாறையை
தூக்கி ஓர் அடி
அடித்தார்கள். பாறை பிளந்தது. அப்போது ஆச்சர்ய மேலீட்டால் நபி {ஸல்} அவர்கள் அல்லாஹு
அக்பர் என்று கூறினார்கள்.
பின்னர், “பாரசீகத்தின் தேசப் பொக்கிஷங்கள்
எனக்கு அருளப்பட்டன. அல்லாஹ்வின்
மீதாணையாக! நான் இப்போது
அங்குள்ள மதாயின் நகரத்து
வெள்ளை மாளிகைகளைப் பார்க்கின்றேன்”.
என்றார்கள். பாறை இன்னும்
கொஞ்சம் உடைந்தது.
மூன்றாவதாக, ““பிஸ்மில்லாஹ்
சொல்லி பாறையின் மீது
சம்மட்டியை (அ) கடப்பாறையை
தூக்கி ஓர் அடி
அடித்தார்கள். பாறை பிளந்தது. அப்போது ஆச்சர்ய மேலீட்டால் நபி {ஸல்} அவர்கள் அல்லாஹு
அக்பர் என்று கூறினார்கள்.
பின்னர், “யமன் தேசத்தின் பொக்கிஷங்கள்
எனக்கு அருளப்பட்டன. அல்லாஹ்வின்
மீதாணையாக! நான் இப்போது
அங்குள்ள ஸன்ஆ நகரத்து
தலைவாயில்களைப் பார்க்கின்றேன்”. என்றார்கள்.
முழுப்பாறையும் உடைந்தது. புகாரியின்
இன்னொரு அறிவிப்பில், பாறை
உடைந்து குறுமணல் போல்
ஆனது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
( நூல்: ரஹீக் அல்
மக்தூம், முஸ்னத் அஹ்மத்,
ஸுனன் நஸாயீ )
இந்த சம்பவத்தில் உள்ள சில விஷயங்களை நாம் புரிந்து
கொள்ள வேண்டும். பெருமானார் {ஸல்} அவர்கள் மூன்று நாள் உணவு உண்ணாமல் வயிற்றிலே கல்லைக்
கட்டியிருந்தார்கள். உடலில் போதிய அளவு தெம்பில்லாமலும் இருந்தார்கள். எனினும், அல்லாஹ்வின்
மீது நம்பிக்கை வைத்து பிஸ்மில்லாஹ் சொல்லி பாறையின் மீது அடித்தார்கள். ஆனால், பெரும்பாறையில்
அப்போது கீறல் விழுந்தது. நபி {ஸல்} அவர்கள் பிரமிப்புடன் “அல்லாஹு அக்பர் என்று கூறினார்கள்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல்லாஹு அக்பர் எனும் பெயரைச் சொன்னதற்காக மூன்று பகுதிகளும்
வெற்றி கொள்ளப்படும் என பஷாரத் – சோபனத்தை முன்னறிவிப்பாக தந்தான். மாநபி {ஸல்} அவர்களின்
தூய மறைவிற்குப் பின்னர் மூன்று பகுதிகளும் கலீஃபாக்களால் வெற்றி கொள்ளப்பட்டு இஸ்லாமிய
ஆளுகையின் கீழ் வந்தது.
அல்லாஹு அக்பர் எனும்
பேராயுதம்..
أخرج مسلم والحاكم عن أبى هريرة رضى الله عنه أن رسول الله صلى الله
عليه وسلم قال (هل سمعتم بمدينة جانب منها فى البر وجانب فى البحر؟ فقالوا: نعم يا
رسول الله، قال: لا تقوم الساعة حتى يغزوها سبعون ألفا من بنى إسحق حتى إذا جاءوها
نزلوا فلم يقاتلوا بسلاح ولم يرموا بسهم، فيقولون لا إله إلا الله والله أكبر،
فيسقط أحد جانبيها، ثم يقولون الثانية لا إله إلا الله والله أكبر فيسقط جانبها
الآخر، ثم يقولون الثالثة لا إله إلا الله والله أكبر فيفرج لهم فيدخلونها،
فيغنمون فبينما هم يقتسمون الغنائم إذ جاءهم الصريخ أن الدجال قد خرج فيتركون كل
شيء ويرجعون". قال الحاكم: يقال إن هذه المدينة هى القسطنطينية صح أن فتحها
مع قيام الساعة.
அபூஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு
பகுதி கரையிலும், ஒரு
பகுதி கடலிலும் உள்ள
நகரத்தைப் பற்றி நீங்கள்
கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? என்று
கேட்டார்கள். அதற்கு, மக்கள்
“ஆம்!
அல்லாஹ்வின் தூதரே! என்று
பதிலளித்தார்கள்.
அப்போது, நபி
{ஸல்}
அவர்கள் “இஸ்ஹாக் (அலை)
அவர்களின் வழித்தோன்றல்களில் எழுபதாயிரம்
பேர் அந்நகரத்தின் மீது
போர் தொடுக்காத வரை
யுக முடிவு நாள்
வராது. அவர்கள் வந்து
அந்நகரத்தில் இறங்கும் போது
அவர்கள் எந்த ஆயுதத்தையும்
கொண்டு சண்டையிட மாட்டார்கள்.
அம்பெய்யவும் மாட்டார்கள். அவர்கள்
“லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு
அக்பர்” என்றே கூறுவார்கள்.
உடனே அந்நகரத்தின் கடலிலுள்ள
ஒரு பகுதி வீழ்ந்து
விடும்.
பிறகு அவர்கள்
இரண்டாவது முறை “லாஇலாஹ
இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்”
என்றே கூறுவார்கள். உடனே
அந்நகரத்தின் மறு பகுதியும்
வீழ்ந்து விடும். பிறகு
மூன்றாவது முறை “லாஇலாஹ
இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்”
என்றே கூறுவார்கள். உடனே
அந்நகரத்தின் உள்ளே செல்லும்
வழி அவர்களுக்காக திறக்கும்.
அதில் நுழைந்து அவர்கள்
போர்ச்செல்வங்களைத் திரட்டுவார்கள்.
அவர்கள் போர்ச்செல்வங்களைப் பங்கிட்டுக்
கொண்டிருக்கும் போது ஒருவர்
அவர்களிடையே வந்து உரத்த
குரலில் “தஜ்ஜால் புறப்பட்டு
விட்டான்” என்று அறிவிப்பார்.
உடனே, அவர்கள் எல்லாவற்றையும் அங்கேயே விட்டுவிட்டு
தஜ்ஜாலை நோக்கி திரும்பிச்
செல்வார்கள்” என நபி
{ஸல்}
அவர்கள் கூறினார்கள். ( நூல்:
முஸ்லிம் )
இந்த நபிமொழியில்
இடம் பெற்றிருக்கும் நகரம்
என்பது குஸ்ததீனியா – கான்ஸ்டாண்டி
நோபிள் என்று அழைக்கப்பட்டு
வந்த இஸ்தான்பூல் (துருக்கியின்
தலை நகரம்) நகரத்தையே
குறிக்கும் என ஹதீஸ்கலை
வல்லுனர்கள் கூறுகின்றார்கள்.
மேலும், இந்த
நபிமொழிக்கு விளக்கம் தருகிற
அறிஞர் பெருமக்கள் “இது
ஹிஜ்ரி 857 –ல் உஸ்மானிய
ஃகிலாஃபாவின் முஹம்மத் அல்
ஃபாத்திஹ் அவர்களால் இந்த
நகரம் வெற்றி கொள்ளப்பட்டது”
எனக்கூறுகின்றார்கள். எனினும் தஜ்ஜால்
வருவதற்கு சற்று முன்
நடப்பதாக மாநபி {ஸல்}
அவர்களே கூறி இருப்பதால்
இந்த கருத்தை ஏற்றுக்
கொள்ள முடியாது என்கின்றார்கள்.
( நூல்: தக்மிலா )
சிரமத்தில், சோதனையில், கஷ்டத்தில், நெருக்கடியில்
சிக்கி இருக்கும் இருக்கும் ஒரு முஸ்லிம் 2,10000 முறை இரண்டு லட்சத்து பத்தாயிரம்
முறை அல்லாஹு அக்பர் என்று கூறினால் அல்லாஹ் அவரை அந்த நெருக்கடியில் இருந்து விடுவித்து
மகிழ்வான வாழ்க்கையின் கதவுகளை திறந்து விடுவான். என்கிற மறைவான ஒரு உணர்த்துதலும்
இந்த நபிமொழியில் புதைந்து இருக்கின்றது.
இந்த மகத்துவம்
மிக்க வார்த்தையைத் தான்
முஸ்கான் கான் எனும்
இளவல் கம்பீரமாக முழங்கி
இருப்பாள்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீனின் மகத்துவத்தை, கம்பீரத்தை,
உயர்வை பறை சாற்றும்
“அல்லாஹு அக்பர்” எனும்
வார்த்தையை உரக்க முழங்குவோம்!
ஈருலகிலும் உயர்வைப்
பெறுவோம்!!! உற்சாகமாய் சொல்வோம்!
செவிதாழ்த்திக் கேட்போம்!! “அல்லாஹு
அக்பர்”!!!
அல்ஹம்துலில்லாஹ். நிறைவான முறையில் தற்கால நிகழ்வுகளை முன் வைத்து ஆக்கம் வழங்கியுள்ளீர்கள். இதுவும் ஒரு சதகத்துல் ஜாரியா தான். இதை படிக்கும் ஆலிம் பெருமக்கள் அதை மக்களுக்கு எத்தி வைக்கும் போது தங்களுக்கு நன்மைகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். பாரகல்லாஹு ஹஜ்ரத்.
ReplyDeleteஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
Deleteماشاءالله
ReplyDeleteமிகச்சிறந்த ஆய்வு மாஷா அல்லாஹ் பாரகல்லாஹ் ஜஸாகல்லாஹூ கைரா ஹஜ்ரத்.அய்யாமுத் தஷ்ரீக் உடைய நாட்களில் 23 வக்த் தொழுகைக்குபின் கூறிடும் தக்பீரையும் இணைத்துக் கொள்ளவும். ஹஜ்ரத் நன்றி 💐
ReplyDelete