தெவிட்டாத தேன்மறை – தராவீஹ் உரை:- 15.
அல்லாஹ்வின்
காணிக்கையை வீட்டுக்கு எடுத்துச் செல்வோம்!!!
அல்லாஹ்வின்
மகத்தான கருணையினால்
14 –வது நோன்பை நோற்று, 15 – வது தராவீஹை
நிறைவு செய்து,
15 –வது நோன்பை நோற்கும் ஆவலில் எதிர் பார்த்து
காத்திருக்கின்றோம்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நமது நோன்பையும்,
தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்தருள்வானாக! எதிர் வரும் நாட்களில் நோன்பு நோற்கும் ஆற்றலையும், தராவீஹ் தொழும் பாக்கியத்தையும் நஸீபாக்குவானாக!
இன்றைய தராவீஹ்
தொழுகையில் சூரா அந்நூரின் எஞ்சிய 44 வசனங்களையும், சூரா அல் ஃபுர்கான் மற்றும் சூரத்துஷ் ஷுஅரா ஆகிய சூராக்கள் நிறைவு
செய்யப்பட்டு சூரா அந்நம்லின் 6 வசனங்கள் என 354 வசனங்கள் ஓதப்பட்டுள்ளது.
இன்றைய தராவீஹ்
தொழுகையில் ஓதப்பட்ட அந்நூர் அத்தியாயத்தின் 61 –ம் வசனத்தில் நம் இல்லங்களுக்கு
அல்லாஹ்வின் காணிக்கையை எடுத்துச் செல்லுமாறு அல்லாஹ் பணிக்கின்றான்.
அதாவது
வீட்டிற்குள் நுழைந்தால் ஸலாம் “அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு” சொல்லி
நுழையுமாறு கட்டளையிடுகின்றான்.
فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَى أَنْفُسِكُمْ تَحِيَّةً
مِنْ عِنْدِ اللَّهِ مُبَارَكَةً طَيِّبَةً كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ
الْآيَاتِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ
"நீங்கள் உங்கள் இல்லங்களில் நுழையும் போது, அல்லாஹ்விடமிருந்து வழங்கப்பட்ட அருள் மிகு நல்வாழ்த்தை(அமைதியை) கொண்டு
ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொள்ளுங்கள். அல்லாஹ் தமது வசனங்களை நீங்கள் விளங்கி
கொள்வதற்காக உங்களுக்கு தெளிவாக்கியுள்ளான். ( அல்குர்ஆன்: 24: 61 )
வீட்டிற்குள் அல்லாஹ்வின் காணிக்கையை எடுத்துச்
செல்பவர் பெறும் பேறு..
عَنْ
أَبِي أُمَامَةَؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: ثَلاَثَةٌ كُلُّهُمْ ضَامِنٌ عَلَي
اللهِ، إِنْ عَاشَ رُزِقَ وَكُفِيَ، وَإِنْ مَاتَ أَدْخَلَهُ اللهُ الْجَنَّةَ:
مَنْ دَخَلَ بَيْتَهُ فَسَلَّمَ فَهُوَ ضَامِنٌ عَلَي اللهِ، وَمَنْ خَرَجَ إِلَي
الْمَسْجِدِ فَهُوَ ضَامِنٌ عَلَي اللهِ، وَمَنْ خَرَجَ فِي سَبِيلِ اللهِ فَهُوَ
ضَامِنٌ عَلَي اللهِ.
رواه ابن حبان، (والحديث صحيح): ٢ /٢٥٢
அபூஉமாமா (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்: “மூன்று நபர்கள் அல்லாஹ்வுடைய பொறுப்பில் உள்ளனர், அவர்கள் உயிர் வாழ்ந்தால் அவர்களுக்கு இரணம் அளிக்கப்படும், அவர்களுடைய வேலைகளில் உதவி செய்யப்படும், அவர்கள் மரணித்துவிட்டால்
அல்லாஹுதஆலா அவர்களைச் சுவனத்தில் நுழையவைப்பான். அவர்களில் முதலாமவர், தமது வீட்டில் நுழைந்ததும் ஸலாம் சொல்பவர் இரண்டாமவர், பள்ளிக்குச் செல்பவர் மூன்றாமவர், அல்லாஹுதஆலாவின் பாதையில்
புறப்பட்டவர்”
என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்:
இப்னு ஹிப்பான் )
வீட்டிற்குள்
ஸலாம் சொல்லி செல்பவர் பெறுகிற பேறு மிகச் சாதாரணமான ஒன்றல்ல. மூன்று
நற்பாக்கியங்களுக்கு 1. வாழும் காலமெல்லாம் ரிஸ்க் வழங்கப்படுதல். 2. அவருடைய
சொந்த அலுவல்களில் இறையுதவி பெறுதல். 3. மரணத்திற்குப் பின்னர் சுவனத்தில்
நுழையும் பேற்றைப் பெறுதல்.அல்லாஹ் பொறுப்பேற்பதாக சோபனம் சொல்கின்றார்கள் மாநபி
{ஸல்} அவர்கள்.
பள்ளிக்குத் தொழச்
செல்பவருக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போராட, கல்வி பெற) புறப்பட்டவருக்கு
அல்லாஹ் இந்தப் பேற்றை வழங்குவதோடு ஒருவர் தன் வீட்டிற்கு தன் தேவைக்காகவே
வருகின்றார். தன் தாய் தந்தையை, மனைவி, மக்களை பார்க்க, அவர்களுடன் சிரித்துப்
பேச, மகிழ்ந்திருக்க என அவர் தன் வீட்டில் செய்கிற எந்தக் காரியமும் இறை
வழிபாட்டோடோ அந்த அந்த இரண்டு காரியங்களுக்கு ஒப்பாகவோ இல்லை. ஆனாலும், அல்லாஹ்
ரப்புல் ஆலமீன் இந்த பேற்றை வழங்குவதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கின்றான்.
அப்படி என்ன நாம் வசிக்கும் வீட்டில் இருக்கின்றது?
வீடு என்பது..
وَاللَّهُ
جَعَلَ لَكُمْ مِنْ بُيُوتِكُمْ سَكَنًا وَجَعَلَ لَكُمْ مِنْ جُلُودِ
الْأَنْعَامِ بُيُوتًا تَسْتَخِفُّونَهَا يَوْمَ ظَعْنِكُمْ وَيَوْمَ
إِقَامَتِكُمْ ۙ وَمِنْ أَصْوَافِهَا وَأَوْبَارِهَا وَأَشْعَارِهَا أَثَاثًا
وَمَتَاعًا إِلَىٰ حِينٍ
உங்கள் வீடுகளில்
உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். கால்நடைகளின் தோல்களிலிருந்து
உங்களுக்குக் கூடாரங்களை ஏற்படுத்தினான். உங்கள் பிரயாணத்தின் போதும், ஊரில் நீங்கள் தங்கியிருக்கும் போதும் அவற்றை எளிதாக எடுத்துச் செல்கிறீர்கள்.
செம்மறி ஆட்டு ரோமங்கள்,
வெள்ளாட்டின் ரோமங்கள், ஒட்டகத்தின் ரோமங்கள்
ஆகியவற்றிலிருந்து ஆடைகளையும், குறிப்பிட்ட காலம் வரை
(பயன்படும்) வசதிகளையும் ஏற்படுத்தினான் ( அல்குர்ஆன்: 16: 80 )
நிம்மதி தவழும் இடமாக, நிம்மதி என்றென்றும் நிலவும்
வீடாக நம் இல்லங்கள் இருக்க வேண்டும் என்றால் நம் வீடுகளில் ஸலாம் ஒலித்துக் கொண்டே
இருக்க வேண்டும்.
வீடு என்பது இறைவனின் அருள். அந்த வீட்டில் வாழவைப்பது
இறைவன் புரிகிற மகத்தான பேரருள் ஆகும்.
வாழ்வதற்கு வீடில்லாமல் வீட்டை விட்டும் வெளியேற்றுவது அல்லாஹ் வழங்கும்
தண்டனைகளில் ஒன்றாகும்..
هُوَ الَّذِي أَخْرَجَ الَّذِينَ كَفَرُوا مِنْ
أَهْلِ الْكِتَابِ مِنْ دِيَارِهِمْ لِأَوَّلِ الْحَشْرِ ۚ مَا ظَنَنْتُمْ أَنْ
يَخْرُجُوا ۖ وَظَنُّوا أَنَّهُمْ مَانِعَتُهُمْ حُصُونُهُمْ مِنَ اللَّهِ
فَأَتَاهُمُ اللَّهُ مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوا ۖ وَقَذَفَ فِي قُلُوبِهِمُ
الرُّعْبَ ۚ يُخْرِبُونَ بُيُوتَهُمْ بِأَيْدِيهِمْ وَأَيْدِي الْمُؤْمِنِينَ
فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ
அவனே வேதமுடையோரில் உள்ள (ஏக இறைவனை) மறுப்போரை அவர்களது
இல்லங்களிலிருந்து முதல் வெளியேற்றமாக வெளியேற்றினான். அவர்கள் வெளியேறுவார்கள் என
நீங்கள் எண்ணவில்லை. தமது கோட்டைகள் அல்லாஹ்விடமிருந்து தங்களைக் காக்கும் என
அவர்கள் நினைத்தனர். அவர்கள் எண்ணிப் பார்த்திராத வழியில் அவர்களை அல்லாஹ்
அணுகினான். அவர்களது உள்ளங்களில் அச்சத்தை விதைத்தான். தமது கைகளாலும், நம்பிக்கை கொண்டோரின் கைகளாலும் தமது வீடுகளை நாசமாக்கினார்கள். அறிவுடையோரே
படிப்பினை பெறுங்கள்! அவர்கள் வெளியேறுவதை அல்லாஹ் விதித்திருக்காவிட்டால் அவர்களை
இவ்வுலகில் தண்டித்திருப்பான். மறுமையில் அவர்களுக்கு நரகின் வேதனை இருக்கிறது.
அவர்கள் அல்லாஹ்வையும்,
அவனது தூதரையும் பகைப்போராக இருந்ததே இதற்குக் காரணம். யார்
அல்லாஹ்வைப் பகைக்கிறாரோ அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். ( அல்குர்ஆன்: 59:
2-4 )
வீடில்லாமல்
வாழ்வது மிகப் பெரும் சோதனை ஆகும். ஆதலால் தான் அநியாயமும், அட்டூழியமும் செய்த
யூதர்களுக்கு வாழ்வதற்கு வீடில்லாமல் தட்டழிந்து திரியும் தண்டனையை இறைவன்
அவர்களுக்கு விதித்தான். இதிலிருந்து ஒருவன் வாழ்வதற்குரிய வீட்டைப் பெற்றிருப்பது
இறைவன் அவனுக்குச் செய்த மிகப் பெரும் பேரருள் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
இவ்வளவு சிறப்பு மிக்க வீடு என்னும் பாக்கியத்தைப்
பெற்றவர்கள் அவ்வீட்டை நிம்மதி தரும் வீடாக ஆக்க வேண்டாமா?
எனவே, நாம் நம்
வீடுகளில் நுழையும் போது ஸலாம் சொல்லி நுழைவோம்.
ஸலாம் என்பது அல்லாஹ்வின் பெயராகும்..
عَنْ
عَبْدِ اللهِ يَعْنِيْ اِبْنَ مَسْعُوْدٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اَلسَّلاَمُ
اِسْمٌ مِنَ اَسْمَاءِ اللهِ تَعَالَي وَضَعَهُ فِي اْلاَرْضِ فَاَفْشُوْهُ
بَيْنَكُمْ، فَاِنَّ الرَّجُلَ الْمُسْلِمَ اِذَا مَرَّ بِقَوْمٍ فَسَلَّمَ
عَلَيْهِمْ فَرَدُّوْا عَلَيْهِ كَانَ لَهُ عَلَيْهِمْ فَضْلُ دَرَجَةٍ بِتَذْكِيْرِهِ
اِيَّاهُمُ السَّلاَمَ، فَاِنْ لَمْ يَرُدُّوْا عَلَيْهِ رَدَّ عَلَيْهِ مَنْ هُوَ
خَيْرٌ مِنْهُمْ.
رواه البزار والطبراني واحد اسنادي البزار جيد قوي
الترغيب:٣ /٤٢٧
ஸலாம் என்ற வார்த்தை அல்லாஹுதஆலாவின் பெயர்களில் ஒன்று. அல்லாஹுதஆலா
அதை பூமியில் இறக்கி வைத்துள்ளான், எனவே உங்களுக்கிடையே அதை நன்றாகப்
பரப்புங்கள். ஏனேனில் ஒரு முஸ்லிம் ஒரு கூட்டத் தாரைக் கடந்து செல்லும்போது அவர் அக்கூட்டத்தாருக்கு
ஸலாம் சொல்ல,
அவர்கள் இவருக்குப் பதில் சொன்னால், அவர்களுக்கு ஸலாமை ஞாபக மூட்டியதன் காரணத்தால் ஸலாம் சொல்லியவருக்கு அந்தக் கூட்டத்தாரை
விட ஒரு படித்தரம் சிறப்புக் கிடைக்கிறது. அவர்கள் இவருக்குப்பதில் சொல்லவில்லை யெனில்
மனிதர்களைவிடச் சிறந்த மலக்குகள் இவருடைய ஸலாமுக்குப் பதில் சொல்கின்றனர்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு மஸ்வூத் (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்: பஸ்ஸார், தபரானீ, தர்ஙீப்
)
ஸலாம் தான் மனித சமூகத்திற்கு அல்லாஹ் இட்ட முதல் கட்டளை..
وعن أبي هريرة، رضي اللّه ستون ذراعاً، فلما خلقه قال: اذهب فسلم على
أولئك، نفر من الملائكة، جلوس، فاستمع ما يحيونك، فإنها تحيتك وتحية ذريتك، فقال:
السلام عليكم، فقالوا: السلام عليك ورحمة الله، فزادوه: ورحمة الله، فكل من يدخل
الجنة على صورة آدم، فلم يزل الخلق عنه، عن النبي صلى الله عليه وسلم قال: (خلق
الله آدم على صورته، طوله ينقص بعد حتى الآن)
أخرجه البخارى, – باب: بدء السلام
இறைத்தூதர் {ஸல்}
அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம்(அலை) அவர்களை(களி மண்ணிலிருந்து)
படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, ‘நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள்
உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள்
முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்’ என்று சொன்னான்.
அவ்வாறே ஆதம்(அலை)
அவர்கள் (வானவர்களிடம் சென்று), ‘அஸ்ஸலாமு அலைக்கும் – உங்களின் மீது சாந்தி பொழியட்டும்’ என்று கூறினார்கள்.
அதற்கு வானவர்கள்,
‘உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்’ என்று பதில் கூறினார்கள். ‘இறைவனின் கருணையும் (உங்களின் மீது
பொழியட்டும்)’
என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்)
அதிகப்படியாக கூறினார்கள்.
எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில்
நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம்(அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள்.
ஆதம்(அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன’ என அபூ ஹுரைரா(ரலி)
அறிவித்தார்.
( நூல்: புகாரி: 3326 )
பொறுப்பேற்றுக் கொண்ட அல்லாஹ் தன் பொறுப்பை எப்படி
நிறைவேற்றுவான்?
قال
الإمام أحمد: حدثنا يونس بن محمد، حدثنا ليث، عن جعفر بن ربيعة، عن عبد الرحمن بن
هُرْمُز، عن أبي هريرة، عن رسول الله صلى الله عليه وسلم أنه ذكر "أن رجلا من
بني إسرائيل سأل بعض بني إسرائيل أن يُسْلفه ألف دينار، فقال: ائتني بشهداء
أشهدهم. قال: كفى بالله شهيدًا. قال: ائتني بكفيل. قال: كفى بالله كفيلا. قال:
صدقت. فدفعها إليه إلى أجل مسمى، فخرج في البحر فقضى حاجته، ثم التمس مركبًا يقدم
عليه للأجل الذي أجله، فلم يجد مركبًا، فأخذ خشبة فنقرها فأدخل فيها ألف دينار
وصحيفة معها إلى صاحبها، ثم زَجج موضعها، ثم أتى بها البحر، ثم قال: اللهم إنك قد
علمت أني استسلفت فلانًا ألف دينار، فسألني كفيلا فقلت: كفى بالله كفيلا. فرضي
بذلك، وسألني شهيدًا، فقلت: كفى بالله شهيدًا. فرضي بذلك، وإني قد جَهِدْتُ أن أجد
مركبًا أبعث بها إليه بالذي أعطاني فلم أجد مركبًا، وإني اسْتَوْدعْتُكَها. فرمى
بها في البحر حتى ولجت فيه، ثم انصرف، وهو في ذلك يطلب مركبًا إلى بلده، فخرج
الرجل الذي كان أسلفه ينظر لعل مركبًا تجيئه بماله، فإذا بالخشبة التي فيها المال،
فأخذها لأهله حطبًا فلما كسرها وجد المال والصحيفة، ثم قدم الرجل الذي كان تَسَلف
منه، فأتاه بألف دينار وقال: والله ما زلت جاهدًا في طلب مركب لآتيك بمالك فما
وجدت مركبًا قبل الذي أتيت فيه. قال: هل كنت بعثت إلي بشيء؟ قال: ألم أخبرك أني لم
أجد مركبًا قبل هذا الذي جئت فيه؟ قال: فإن الله قد أدى عنك الذي بعثت به في
الخشبة، فانصرف بألفك راشدًا".
وهذا إسناد صحيح وقد رواه البخاري في سبعة
مواضع من طرق صحيحة
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றா
கடன் கேட்டவர் “சாட்சிக்கு அல்லாஹ்வே
போதுமானவன்” என்றார். அப்படியா
கடன் வாங்கியவர்
கடல் வழிப் பயணம் புறப்பட்டு, தம் காரியங்களை முடித்து விட்டு, குறிப்பிட்ட தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக வாகன
வசதியைத் தேடினார். ஆனால், அவருக்கு எந்த வாகனமும் கிடைக்க வில்லை. அப்போது, அவர் ஒரு மரக்கட்டையை விலைக்கு வாங்கி, அதைக் குடைந்து அதற்குள் ஆயிரம் பொற்காசுகளையும், கடன் கொடுத்தவருக்கு ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்து அடைத்தார். பின்னர், கடற்கரையோரமாக அந்த மரக்கட்டையை கொண்டு வந்து, வானை நோக்கி கையை உயர்த்தி….
”இறைவா! இன்ன மனிதரிடம் நான் ஆயிரம் பொற்காசுகளைக் கடனாகக் கேட்டேன். அவர் பிணையாளி வேண்டுமென்றார். நானோ அல்லாஹ்வே நீயே
போதுமானவன்!” என்றேன். அவர் உன்னைப் பிணையாளியாக ஏற்றுக் கொண்டார்.
என்னிடம் சாட்சிகளைக் கொண்டு வருமாறு கோரினார். நானோ அல்லாஹ்வே நீயே சாட்சிக்குப் போதுமானவன்!” என்றேன். அவர் உன்னை சாட்சியாக ஏற்றுக் கொண்டார்.
அவர் கூறிய தவணை முடிவடையும் முன்பாக அவருக்குரிய பணத்தை
அவரிடம் கொடுத்து விடும் முயற்சியில் இறங்கி, வாகனத்திற்கு ஏற்பாடு
செய்தேன்! அல்லாஹ்வே! ஒரு வாகனமும் எனக்கு
கிடைக்கவில்லை. இதையெல்லாம் நீ நன்கறிவாய்! எனவே, இதோ அவருக்குரிய பொற்காசுகள் நிரப்பிய மரக்கட்டையை இந்த கடலில் வீசுகின்றேன்! இதை உரியவரிடத்தில் சேர்க்கும் பொறுப்பையும் உன்னிடத்தில் ஒப்படைக்கின்றேன்” என்று பிரார்த்து விட்டு அதைக் கடலில் வீசினார். அது கடலின் நடுப்பகுதிக்கு சென்றதும் திரும்பி விட்டார். அத்துடன் தமது ஊருக்குச் செல்வதற்காக வாகனத்தையும் அவர் தேடிக் கொண்டிருந்தார்.
இதனிடையே, கடன் கொடுத்தவர் கடன் வாங்கியவரின் வருகையை எதிர் பார்த்த வண்ணம் இருந்தார். ஒன்று அவர் வருவார், அல்லது நமது செல்வத்துடன் வாகனம் எதுவும் வரக்கூடும் என்று நோட்டமிட்ட வண்ணம்
புறப்பட்டார்.
அப்போது, ஒரு ஓரத்தில் ஒரு மரக்கட்டை கிடப்பதைக் கண்டார். தமது குடும்பத்திற்கு விறகாகப் பயன்படட்டும் என்கிற நோக்கத்தில் அதை எடுத்து
வீட்டுக்குக் கொண்டு வந்தார். அதைப் பிளந்து பார்த்த போது, “ஆயிரம் பொற்காசுகளையும்
கடிதத்தையும் கண்டார். சிறிது நாட்கள் கழித்து, கடன் வாங்கியவர் கடன்
கொடுத்த அம்மனிதரைச் சந்திக்க வந்தார். வந்தவர் ”அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உமது பணத்தை உமக்கு தருவதற்காக வாகனம் தேடும் முயற்சியில்
நான் ஈடுபட்டிருந்தேன். இப்போது, தா
அதற்கு கடன்
கொடுத்தவர் “எனக்கு எதையாவது அனுப்பி வைத்தீரா?” என்று கேட்டார். அப்போது, கடன் வாங்கியவர் “வாகனம் கிடைக்காமல் இப்போது தான் வந்திருக்கின்றேன் என்று உமக்கு நான்
தெரிவித்தேனே!” என்றார்.
அதற்கு கடன் கொடுத்தவர் “நீர் மரத்தில் வைத்து
எனக்கு அனுப்பியதை உமது சார்பாக அல்லாஹ் என்னிடம் சேர்த்து விட்டான். எனவே, நீர் கொண்டு வந்த ஆயிரம் பொற்காசுகளை எடுத்துக் கொண்டு சரியான வழியில் உமது
ஊருக்குச் செல்வீராக! என்றார். ( நூல்: மு
எனவே, நம் இல்லங்களை இறைவனின் காணிக்கையை கொண்டு
சாந்தி நிறைந்த இல்லமாக மாற்றுவோம்!! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வீட்டுக்குள் நுழையும்
போதெல்லாம் அவனுடைய காணிக்கையையும் எடுத்துச் செல்ல அருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்!
யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
No comments:
Post a Comment