தெவிட்டாத தேன்மறை – தராவீஹ் உரை:- 19.
மனிதன் ஓர்
அற்புதப் படைப்பு!!!
அல்லாஹ்வின்
மகத்தான கருணையினால்
18 –வது நோன்பை நோற்று, 19 – வது தராவீஹை
நிறைவு செய்து,
19 –வது நோன்பை நோற்கும் ஆவலில் எதிர் பார்த்து
காத்திருக்கின்றோம்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன்
நமது நோன்பையும்,
தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்தருள்வானாக! எதிர் வரும் நாட்களில் நோன்பு நோற்கும் ஆற்றலையும், தராவீஹ் தொழும் பாக்கியத்தையும் நஸீபாக்குவானாக!
இன்றைய தராவீஹ்
தொழுகையில் ஸாத், அஸ் ஸுமர், அல் முஃமின் ஆகிய சூராக்கள் நிறைவு செய்யப்பட்டு 248 வசனங்கள் ஓதப்பட்டுள்ளது.
இன்று தராவீஹ்
தொழுகையில் ஓதப்பட்ட அஸ் ஸுமர் அத்தியாயத்தின் 6 – ம் வசனத்திலும், அல் முஃமின் அத்தியாயத்தின் 67 –ம் வசனத்திலும் அல்லாஹ் மனித
படைப்பின் பரிணாமம் குறித்து பேசுகின்றான்.
அதே போன்று
அல்லாஹ்வின் படைப்பாற்றல் விஷயத்தில் தர்க்கம் செய்பவர்கள் குறித்து அல் முஃமின்
அத்தியாயத்தின் 56 மற்றும் 69 ஆகிய வசனங்களில் பேசுகின்றான். எனவே, அல்லாஹ்வின்
படைப்பாற்றலின் அற்புதச் சான்றாக இருக்கின்ற மனிதப் படைப்பு குறித்து இன்றைய
அமர்வில் பேசுவது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றேன்.
உலகில் உள்ள
உயிரினங்கள் அனைத்தையும் படைத்தவன் இறைவன்.
கண்ணுக்கு தெரியாத உயிரினம் முதல் உருவத்தில் மிகப்பெரிய
பிரம்மாண்டமான உயிரினங்கள் வரை பல்வேறு வகையான உயிரினங்களை பல்வேறு அமைப்பில் இறைவன் படைத்துள்ளான்.
ஊர்ந்து செல்லும் எறும்பு, தனது உடல் எடையை விடச் சுமார் எட்டு மடங்கு சுமையைச் சுமக்கிறது.
ஒட்டகம், முற்செடியையும் வலியின்றி
உட்கொண்டு ஜீரணிப்பதோடு ஓரிரு வாரம் வரை நீரின்றி உயிர் வாழ்கிறது.
ஆந்தை, கடுமையான இருட்டிலும் எவ்வித
தடுமாற்றமின்றிப் பறக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறது.
பல்லாயிரக்கணக்கான மைல் தூரம் பறக்கும் பறவை எத்தனை
நாட்களனாலும் மீண்டும் அதே வழித்தடத்தில் பறந்து தன் இருப்பிடத்திற்கே வந்து
சேர்கிறது.
இப்படி
மனிதன் பெற்றிராத உடற்கூறுகளை, ஆற்றலைக் கொண்டுள்ள கோடிக் கணக்கான ஜீவராசிகளை விடவும், “மனிதனை மிகச்சிறந்த படைப்பாகப் படைத்திருக்கிறோம்” என்று அல்லாஹ்
கூறுகிறான்.
உலகில் எந்த உயிரினங்களுக்கும் இல்லாத பல்வேறு
சிறப்புகளுடன் மனிதனை இறைவன் படைத்துள்ளான்.
وَلَقَدْ كَرَّمْنَا بَنِىٓ ءَادَمَ وَحَمَلْنَٰهُمْ
فِى ٱلْبَرِّ وَٱلْبَحْرِ وَرَزَقْنَٰهُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ وَفَضَّلْنَٰهُمْ
عَلَىٰ كَثِيرٍۢ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًۭا﴿17:70﴾
நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக்
கண்ணியப்படுத்தினோம்;
இன்னும், கடலிலும், கறையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல
உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள
(படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.
(அல்குர்ஆன்:17:70)
திருக்குர்ஆனில் அல்லாஹ் முக்கியமான ஒரு விஷயத்தை மிக அழுத்தமாக சொல்ல நினைத்தால், சில படைப்புகள் மீது சத்தியம் செய்து சொல்வதுண்டு. அப்படிப்பட்ட செய்திகளில் மிகுந்த உண்மைத்தன்மையும், பல அத்தாட்சிகளும் இடம் பெற்றிருக்கும். அப்படியான ஒரு வசனம் மனித படைப்பின் முக்கியத்துவம் குறித்து பேசும்போது..
وَالتِّينِ وَالزَّيْتُونِ وَطُورِ سِينِينَ وَهَذَا الْبَلَدِ
الْأَمِينِ لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ
"அத்தியின் மீதும், ஜெய்த்தூனின் மீதும் சத்தியமாக, தூர்ஸினாய் மலைத்தொடரின் மீதும்
சத்தியமாக,
அபயமளிக்கும் இந்த நகரத்தின் மீதும் சத்தியமாக, நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகிய அமைப்பில் படைத்திருக்கிறோம்". ( அல்குர்ஆன்
95: 1–4
)
மனிதன் அழகிய அமைப்பில் படைக்கப்பட்டுள்ளதோடு
மட்டுமல்ல அவன் தனித்துவம் வாய்ந்தவனாகவும் படைக்கப்பட்டிருக்கின்றான்.
தனித்துவத்துமானதில் ஒன்று விரல் ரேகை ஆகும்.
மற்றொன்று உள்வால் எழும்பாகும்.
விரல் ரேகை...
கைரேகை
என்பது இறைவன் மனிதர்களுக்கு அளித்த முத்திரை’ என்று தடயவியல் அறிஞர்கள் வர்ணித்துள்ளனர்.
கைரேகை
மூலம் மனிதர்களை அடையாளம் காண்பதற்கான முறையை சர் பிரான்சிஸ் கால்டன், சர் எட்வர்டு ஹென்றி ஆகியோர் உருவாக்கினார்கள். இந்த முறை 1901–ம் ஆண்டு ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறையில்
அதிகாரப்பூர்வமாக அறிமுகப் படுத்தப்பட்டது.
بَلَىٰ قَادِرِينَ عَلَىٰ أَن نُّسَوِّيَ بَنَانَهُ
ஆம்! அவனுடைய விரலின் நுனியைக் கூட மிக துல்லியமாக அமைப்பதற்கு நாம் ஆற்றல்
பெற்றுள்ளோம்’’.
( அல்குர்ஆன்: 75: 4 )
மனிதனின்
தனித்தன்மையை நிரூபிக்க இன்றைய அறிவியல் உலகு விரல் ரேகையையும்,
மரபணுக்களின் தொகுப்பையும் மட்டுமே
நம்பியுள்ளது என்பதை நவீன அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன
Unique Identification Data அனைத்து மனிதர்களுக்குமான தனித்துவமான அடையாளமாக அல்லாஹ்
விரல்ரேகையை அமைத்துள்ளான்
عن أنس قال:عمي أنس بن النضر سميت به لم يشهد بدرا مع
رسول الله صلى الله عليه وسلم فكبر علي فقال: أول مشهد شهده رسول الله صلى الله
عليه وسلم غبت عنه أما والله لئن أراني الله مشهدا مع رسول الله صلى الله عليه
وسلم فيما بعد ليرين الله ما أصنع قال فهاب أن يقول غيرها فشهد مع رسول الله صلى
الله عليه وسلم يوم أحد من العام القابل فاستقبله سعد بن معاذ فقال يا أبا عمرو
أين؟ قال: واها لريح الجنة أجدها دون أحد فقاتل حتى قتل، فوجد في جسده بضع وثمانون
من بين ضربة وطعنة ورمية فقالت: عمتي الربيع بنت النضر: فما عرفت أخي إلا ببنانه.
அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “நபி {ஸல்} அவர்களுடன் உஹதுப் போரில் பங்குகொண்ட நபித்தோழர்,அனஸ் இப்னு நள்ர் (ரலி) அவர்கள் கடுமையாக போரிட்டு ஷஹீதானர். அவர் (உடல்
முழுவதும் சிதைந்து போனதால்) அடையாளம் அறியப்படாத நிலையில் கொல்லப்பட்டார். அவரின்
உடலில் வாளால் வெட்டப்பட்டும், ஈட்டியால் குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப்பட்டும் எண்பதுக்கும் மேற்ப்பட்ட காயங்கள் இருந்தன. அவரை
அவரின் சகோதரி ருபைஉ பின்த் நள்ர் (ரலி) அவர்கள் அனஸ் அவர்களின் கைவிரலை வைத்தே அடையாளம் காட்டினார். ( நூல்: புகாரி )
1400 ஆண்டுகளுக்கு
முன்பே கைவிரல் நுனி வடிவமைப்பை கொண்டு மனிதர்களை அடையாளம் காண முடிந்தது என்பதை
மேற்கூறிய நபிமொழி நமக்கு உணர்த்துகிறது.
உள்வால் எலும்பு...
மனிதன் மரணம் அடையக்கூடியவன் என்றும் மறுமை நாளில் அவன் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவான் என்றும் அங்கே அவனது நன்மைகள்,
தீமைகளுக்கு ஏற்ப அவனுக்கு சொர்க்கம் அல்லது நரகம் பரிசாக
தீர்ப்பளிக்கப்படும் என்று இஸ்லாம் கூறுகிறது.
இறந்த பிறகு
அடக்கம் செய்யப்படும் மனித உடல் எண்ணப்படும் சில நாட்களில் மண்ணோடு மண்ணாக
மட்கிப்போகும். மீண்டும் எப்படி மனிதன் உருவாக்கப்படுவான்’ என்கிற கேள்வி உலகம்
தோன்றிய நாள் முதற் கொண்டு
இன்று வரை நிலைத்திருக்கின்ற ஒன்றாகும்.
இதற்கு
அல்குர்ஆனும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் இவ்வாறு பதிலுரைக்கின்றார்கள்:
وَضَرَبَ لَنَا مَثَلًا وَنَسِيَ خَلْقَهُ قَالَ مَنْ يُحْيِ
الْعِظَامَ وَهِيَ رَمِيمٌ (78) قُلْ يُحْيِيهَا الَّذِي أَنْشَأَهَا أَوَّلَ
مَرَّةٍ وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيمٌ (79)
மேலும், அவன் தன் படைப்பை (தான்
படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர்
உதாரணத்தையும் கூறுகின்றான்; “எலும்புகள் அவை மக்கிப்
போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று.
“ முதல் முதலில்
அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப்
படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
( அல்குர்ஆன்: 36: 78, 79 )
மனிதன் மரணிக்கக்
கூடியவன்தான். ஆயினும் மறுமை நாளில் அவன் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவான். அப்போது
அவனது நன்மைகள்,
தீமைகளுக்கு ஏற்ப அவனுக்கு சொர்க்கம் அல்லது நரகம் பரிசாக
வழங்கப்படும் என்பதே உண்மை. இதுவே இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையும் நம்பிக்கையும்
ஆகும்.
இறந்த பின்னர்
அடக்கம் செய்யப்படும் மனித உடல் சில மாதங்களில் மண்ணோடு மண்ணாகிவிடும். அவ்வாறான
மனிதன் மீண்டும் எப்படி உருவாக்கப்படுவான்? என்ற கேள்வி அன்று முதல்
இன்று வரை காணப்படுகின்றது. அருள்மறை அல்குர்ஆன் இதற்கு பின்வருமாறு
பதிலுரைக்கின்றது:
أَيَحْسَبُ
الْإِنْسَانُ أَلَّنْ نَجْمَعَ عِظَامَهُ ، بَلَى قَادِرِيْنَ عَلَى أَنْ
نُسَوِّيَ بَنَانَهُ – القيامة: 3 ، 4
இறந்து, உக்கி மண்ணாய்போன அவனுடைய
எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கமாட்டோம் என்று மனிதன் எண்ணிக் கொண்டிருக்கின்றானா? அவனது நுனிவிரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
(அல்குர்ஆன்: 75: 3,
4)
இத்திருவசனம் மனிதன் மரணித்த பின் மீண்டும்
உயிர்ப்பிக்கப்படுவான் என்பதை வலியுறுத்துகின்றது.
அவன் எவ்வாறு உயிர்ப்பிக்கப்படுவான் என்பது பற்றி
தெளிவுபடுத்தும் போது நபி {ஸல்} அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்.
عَنْ
أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
كُلُّ ابْنِ آدَمَ يَأْكُلُهُ التُّرَابُ، إِلَّا عَجْبَ الذَّنَبِ مِنْهُ، خُلِقَ
وَفِيهِ يُرَكَّبُ (صحيح مسلم
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "ஆதமின்
மகனின் (மனிதனின் உடலிலுள்ள) அனைத்துப் பகுதிகளையும் மண்சாப்பிட்டு விடும்
மனிதனின் (முதுகுத் தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் நுனியைத்
தவிர! அதை வைத்தே அவன் (தன் தாயின் கருவறையில் முதன் முதலாக) படைக்கப்பட்டான்.
அதிலிருந்தே அவன் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படுவான்" என நபி {ஸல்} அவர்கள்
கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَيْنَ النَّفْخَتَيْنِ أَرْبَعُونَ» قَالُوا: يَا أَبَا هُرَيْرَةَ أَرْبَعُونَ يَوْمًا؟ قَالَ: أَبَيْتُ، قَالُوا: أَرْبَعُونَ شَهْرًا؟ قَالَ: أَبَيْتُ، قَالُوا: أَرْبَعُونَ سَنَةً؟ قَالَ: أَبَيْتُ، «ثُمَّ يُنْزِلُ اللهُ مِنَ السَّمَاءِ مَاءً فَيَنْبُتُونَ، كَمَا يَنْبُتُ الْبَقْلُ» قَالَ: «وَلَيْسَ مِنَ الْإِنْسَانِ شَيْءٌ إِلَّا يَبْلَى، إِلَّا عَظْمًا وَاحِدًا، وَهُوَ عَجْبُ الذَّنَبِ، وَمِنْهُ يُرَكَّبُ الْخَلْقُ يَوْمَ الْقِيَامَةِ. صحيح مسلم
அபூஹுரைரா ரலி
அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி {ஸல்} மறுமை நாளில் மனிதர்கள் எழுப்பப்படுவது
குறித்த நபிமொழி ஒன்றை நான் மக்களுக்கு அறிவித்துக் கொண்டிருந்தேன். நபி ஸல்
அவர்கள்: உலக முடிவு நாளில்
அனைத்தையும் அழிப்பதற்காகவும், பின்னர் அனைவரையும் எழுப்புவதற்காகவும்
ஊதப்படும்) இரண்டு ஸூருக்கும் இடையே நாற்பது இருக்கும்". என்று கூறினார்கள்.
அப்போது மக்கள் அபூஹுரைரா அவர்களே! நாற்பது நாளா? என்று கேட்டனர். நான் இல்லை என்றேன். மீண்டும் மக்கள் நாற்பது மாதமா? என்றனர். நான் இல்லை என்றேன். மீண்டும் மக்கள் நாற்பது ஆண்டுகளா? என்று கேட்டனர். மீண்டும் நான் இல்லை என்றேன். பின்னர் நபி {ஸல்} அவர்கள்
கூறிய செய்தியை நான் தொடர்ந்தேன். இரண்டாம் ஸூர் ஊதப்பட்டதும் "இறந்து
போனவர்கள் பச்சைப் புற் பூண்டுகள் முளைப்பதைப் போன்று எழுவார்கள். மனிதனின் எல்லா
உறுப்புகளும் (மண்ணுக்குள்) மக்கிப் போய்விடும்; ஒரே ஒரு எலும்பைத் தவிர! அது (அவனது முதுகுத்தண்டின் வேர்ப்
பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும். அதை வைத்தே
படைப்பினங்கள் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படும் என நபி {ஸல்} அவர்கள்
கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )
Hans Spemann experiments
Scientists
found out that the cell formation and organization of the fetus is initiated by
the primitive streak and primitive node. Before these parts form no differentiation
of cells can take place. One of the most popular scientists, who proved this,
was the German scientist Hans Spemann.
By
his experiments with the primitive streak and the primitive node he found out
that they organize the development of the embryo and called them for this
reason "the primary organizer".
The
German scientist started his experiments with amphibians by inserting a primary
organizer he had cut out from one embryo under the epiblast of another embryo
of the same age (first embryonic stage third or fourth week).
This
led to the formation of a second embryo from the implanted part, which has been
inserted into a new environment. The implanted part had influence on the
surrounding cells of the new environment. That way a second embryo is formed in
the first embryo.
Tailbone
cells can not be degraded or destroyed
In
1931 Spemann ground the primary organizer and implanted it again. The grinding
did not change the results of the experiment; the second embryo was formed
anyhow. In 1933 Spemann and his scientists repeated the same experiment but
this time they boiled the primary organizer before. But despite boiling a
second embryo was formed. It was shown that the cells could not be influenced.
In 1935 Spemann got the Nobel Prize for the discovery of the primary organizer.
Dr.
Othman Al Djilani and Sheik Abd Majid Azzandani did some experiments on the
tailbone in 2003/Ramadan1424 in the Sheik Abd Majid Azzanidanis house in Sana'a
(Yemen). One of the two vertebras of the five tailbones was burned on a gas
flame for 10 minutes until they were burned completely. (They had glowed red
and then turned black).
They
put the burned pieces into sterile boxes and brought them to a analysis
laboratory in Sana'a (Al Olaki Laborytory) Dr. Saleh al Olaki, Professor for
histology and pathology of the university of Sana'a analyzed the pieces and
found out that the cells of the bone tissue of the tailbone ware not affected
and had survived the flames (only muscles, fat and bone marrow were burned,
while the cells of the tailbone were not affected).
ஜெர்மனின் நோபல் விஞ்ஞானியான ஹான்ஸ் ஸ்பீமேன் என்பவர்
உள்வால் எலும்பு நுனி குறித்து தீவிரமாக ஆராய்ந்தார். அதனை பல ஆயிரம் டிகிரி
வெப்பத்தில் எரிக்கவும்,
வீரியம் மிக்க அமிலங்களின் கலவை கொண்டு அதனை கரைக்கவும்
முயற்சி செய்தார். அதில் சிறு மாறுதலைக் கூட அவரால் செய்ய முடியவில்லை.
ஆராய்ச்சியின் முடிவாய் திருக்குர்ஆன் மற்றும் நபி ஸல் அவர்களின் வார்த்தைகளை
உண்மைபடுத்தி உலகிற்கு 1931
- 1933 காலகட்டத்தில் அறிவித்தார். மனித உடலில் உள்ள அழிக்க முடியாத பகுதி
இது என்பதை இந்த உலகுக்கு தன்னுடைய சோதனையின் மூலம் நிரூபித்தார். இதற்காக அவர்
நோபல் பரிசினையும் பெற்றார்.
எனவே, முதலில் மனிதன் தன் படைப்பைப்
பற்றி சிந்திக்க வேண்டும்..
اَوَلَا
يَذْكُرُ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ قَبْلُ وَلَمْ يَكُ شَيْـٴًـــا
இதற்கு முன்னர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த அவனை நாமே
மனிதனாகப் படைத்தோம் என்பதை அவன் கவனிக்க வேண்டாமா? ( அல்குர்ஆன்: 19: 67 )
பின்னர் எந்த நோக்கத்திற்காக படைக்கப்பட்டிருக்கின்றான்
என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا
لَا تُرْجَعُونَ
நாம் உங்களை
வீணுக்காகப் படைத்தோம் எனவும் நிச்சயமாக நீங்கள் எம்மிடம் மீட்டப்படமாட்டீர்;கள் எனவும் எண்ணிக்கொண்டிருந்தீர்களா? ( அல்குர்ஆன்: 23: 115 )
أَيَحْسَبُ الْإِنسَانُ أَن يُتْرَك سُدًى
மனிதன் (விசாரணையின்றி) வெறுமனே விட்டு விடப்படுவான் என அவன் எண்ணிக் கொண்டிருக்
கின்றானா?
( அல்குர்ஆன்: 75:
36 )
விடையாக, அல்லாஹ் மனித ஜின் இனங்களை அவனை வணங்கி வழிபடும் உயர் இலட்சியத்திற்காகவும், உன்னத நோக்கத்திற்காகவும் இவ்வுலகத்தில் படைத்துள்ளான் என்கிற பேருண்மையை நாம்
புரிந்து கொள்ள முடியும்.
وَمَا
خَلَقْتُ الْجِنَّ وَالأِنْسَ إِلاَّ لِيَعْبُدُونِ
என்னை
வணங்குவதற்காகவேயன்றி ஜின்களையும், மனிதர்களையும் நான்
படைக்கவில்லை. ( அல்குர்ஆன்: 51: 56 )
فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ
“அல்லாஹ் படைப்பாளர்களிலெல்லாம் மிகச் சிறந்த படைப்பாளன் ஆவான்”. ( அல்குர்ஆன்: 23: 14 )
எனவே, உலகப் படைப்புகளில் எப்படி அறிவின் மூலம் மனித படைப்பு சிறந்த படைப்பு என்பதாக பெருமை அடைகின்றோமோ, அதே உணர்வோடு படைப்பின் நோக்கமான இறைவனை வணங்கி வழிபடும் விஷயத்திலும் நாம் கவனம்
செலுத்த வேண்டும்!!
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனை அறிந்து, விளங்கி வணங்கும் மேன்மக்களாக நம் அனைவர்களையும்
ஆக்கியருள்வானாக!! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
மாஷா அல்லாஹ்...அருமையான விளக்கம். மருத்துவத்துறையில் இதைத்தான் தற்போது STEM CELL மருத்துவம் எனச் சொல்கிறார்கள்.
ReplyDeleteமாஷா அல்லாஹ். அல்லாஹ் தங்களுடைய சேவையை கபூல் செய்வானாக! ஆமீன் யாரப்பல்ஆலமீன்
ReplyDeleteமாஷா அல்லாஹ் பாரகல்லாஹ்
ReplyDeleteஅல்லாஹ் உங்கள் கல்வியில் பரக்கத் செய்வானாக மேலும் பல சேவைகளை செய்ய வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக ஆமீன் யாஅல்லாஹ்