அருள்மறைச் சாரல் - தராவீஹ் சிந்தனை:-2.
தூய்மையானவற்றிலிருந்து பொருளீட்டுவோம்!!!
அல்ஹம்துலில்லாஹ்!!
2 –வது தராவீஹ் தொழுகையை சிறப்பாக நிறைவு செய்து விட்டு நாம் ஆசையோடு
எதிர்பார்த்து காத்திருந்த முதல் நோன்பை நோற்று நிறைவு செய்திருக்கின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல்
செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க,
வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக
நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!
இன்றைய நாளின்
தராவீஹ் தொழுகையில் சூரத்துல் பகராவின் 177 – வசத்தில் இருந்து 11/4 ஜுஸ்வு
ஓதப்பட்டிருக்கின்றது. சூரத்துல் பகரா நிறைவு செய்யப்பட்டு, ஆலு இம்ரான் சூராவின்
13 வசனங்கள் ஓதப்பட்டிருக்கின்றது.
இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட அல் பகரா
அத்தியாயத்தின் 267 –ஆவது வசனம் ஒரு இறைநம்பிக்கையாளனின் பொருளீட்டலும், செலவு
செய்தலும் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து அல்லாஹ் குறிப்பிட்டுப் பேசுவதை
அவதானிக்க முடிகின்றது.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنْفِقُوا مِنْ طَيِّبَاتِ مَا
كَسَبْتُمْ
“இறைநம்பிக்கையாளர்களே!
நீங்கள் சம்பாதித்த தூய்மையானவற்றிலிருந்து செலவு செய்யுங்கள்!” ( அல்குர்ஆன்: 2:
267 )
பொருளாதாரம் மனித
வாழ்வுக்கு இன்றியமையாதது. எனினும் அதனை இஸ்லாம் கூறும் வரையறைகளுடன் பெற வேண்டும், பயன்படுத்த வேண்டும்.
பொருளாதாரம் தொடர்பில் இரண்டு விஷயங்கள் முக்கியத்துவம்
பெறுகின்றன.
1. பொருளாதாரத்தை
சம்பாதித்தல்.
2. அதனைச் செலவு செய்தல்.
நமது
பொருளீட்டலும்,
நாம் செய்யும் செலவும் இஸ்லாம் வலியுறுத்தும் நல்ல வழியில்
( தூய்மையானதாக - ஹலாலாக) அமைய வேண்டும். இறைவன் தடுத்துள்ள (ஹராமான) வழியில்
அமைந்திருக்கக்கூடாது.
ஹராமான தொழில், அதன் மூலம் பெறப்படும் வருமானம், அதில் இருந்து
செய்யப்படும் செலவினங்கள் இவற்றை விட்டும் ஒரு உண்மையான இறைநம்பிக்கையாளர்
தவிர்ந்து வாழ வேண்டும்.
ஏனெனில், ஒரு இறைநம்பிக்கையாளரின்
உலக வாழ்க்கையிலும் நாளை மறுமை வாழ்க்கையிலும் மகத்தான
பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் ஆற்றல் அதற்கு உண்டு.
இறைத்தூதர்களான
நபிமார்கள் ஆகுமான உணவை உண்பதற்காகவும், தமது குடும்பத்தாரின்
அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும்
தமக்கு தெரிந்த, தம்மால் முடிந்த
தூய்மையான தொழில்களின் மூலம் சம்பாதித்து பொருளீட்டினார்கள்.
عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله
عليه وسلم: «ما بعث الله نبيا إلا راعي غنم»
فقال له أصحابه:
وأنت يا رسول الله؟ قال: «وأنا رعيتها لأهل مكة بالقراريط » .
ويقول عليه الصلاة والسلام:
كنت أرعاها لأهل مكة بالقراريط :يعني كل شاة بقيراط، والقيراط الذي هو جزء من
الدينار أو الدرهم.
ويقول
عليه الصلاة والسلام: كنت أرعاها لأهل مكة بالقراريط :يعني كل شاة بقيراط،
والقيراط الذي هو جزء من الدينار أو الدرهم.
அல்லாஹ் அனுப்பிய
எந்த நபியும் ஆடு மேய்க்காமல் இருந்ததில்லை’ என நபி (ஸல்)
கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், ‘நீங்களுமா?’ என்று கேட்டார்கள். ‘ஆம்,
மக்காவாசிகளின் சில கீராத் கூலிக்காக ஆடு மேய்ப்பவனாக நான்
இருந்தேன்’
என்று நபி (ஸல்) பதிலளித்தார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
قوله
صلى الله عليه وسلم: ((ما أَكَل أحدٌ طعامًا قطُّ خيرًا مِن أن يأكُل مِن عَمَلِ
يَدِه، وإنَّ نبيَّ اللهِ داودَ عليه السلام كان يأكُل مِن عَمَلِ يَدِه))؛ رواه
البخاري.
ஒருவர் தம் கையால்
உழைத்து,
உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ணமுடியாது. நபி
தாவூத் (அலை) அவர்கள் தங்களின் கையால் உழைத்து, உண்பவராக இருந்தார் என
நபி (ஸல்) கூறினார்கள்’.
(அறிவிப்பாளர்: மிக்தாம் (ரலி), நூல்: புகாரி)
நபி தாவூத் (அலை)
அவர்களைப் பற்றி இவ்வாறு சிறப்பித்து கூறப்படுவதற்கு காரணம் அவர்கள் மன்னராக
இருந்தபோதிலும் போர்க்கவசங்களை தமது கையால் செய்து, அதிலிருந்து வரும் வருமானத்தில் தான் அவர் உண்பார்.
وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ مِنَّا فَضْلًا يَاجِبَالُ أَوِّبِي مَعَهُ
وَالطَّيْرَ وَأَلَنَّا لَهُ الْحَدِيدَ (10) أَنِ اعْمَلْ سَابِغَاتٍ وَقَدِّرْ
فِي السَّرْدِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
‘தாவூதுக்கு (அலை) நாம்
நமது அருளை வழங்கினோம். மலைகளே, பறவைகளே, அவருடன் சேர்ந்து துதியுங்கள் (எனக் கூறினோம்). போர்க் கவசங்களைச் செய்வீராக, அவற்றின் வளையங்களை ஒழுங்குபடுத்துவீராக’ என (கூறி) அவருக்கு
இரும்பை மென்மையாக்கினோம். ‘நல்லறத்தைச் செய்யுங்கள், நீங்கள் செய்பவற்றை நான் பார்ப்பவன்’ எனவும் கூறினோம்’. (திருக்குர்ஆன் 34:10,11)
நியாயமான
சம்பாத்தியத்தின் மூலம் கிடைத்த உணவினால் தான் நல்ல உணர்வு ஏற்படும்; நல்ல செயலும் ஏற்படும்.
பொருளீட்டலும்
முக்கியம்,
செலவும் முக்கியம். இரண்டுக்குமே அல்லாஹ் விடம் பதில்
சொல்லியே தீர வேண்டும். இரண்டுமே தூய்மையான வழியில் அமைய வேண்டும்.
ورد في
الحديث عن الرسول - صلى الله عليه وسلم
أنه قال
(لا تزول قدما عبدٍ يوم القيامة حتى يسأل عن عمره فيم أفناه؟
وعن علمه فيم فعل فيه؟ وعن ماله من أين اكتسبه وفيم أنفقه؟ وعن جسمه فيم أبلاه
رواه الترمذي
நாளை மறுமையில்
பின்வரும் நான்கு கேள்விகளுக்கு பதில் கூறாமல் எந்த ஒரு அடியானின் இரண்டு
பாதங்களும் நகர முடியாது. 1)
உனது ஆயுளை நீ எவ்வாறு கழித்தாய்?, 2) உனது வாலிபத்தை நீ எவ்வாறு அமைத்தாய்?, 3) உனது
பொருளாதாரத்தை நீ எவ்வாறு சம்பாதித்தாய்?, அதை எந்த
விதத்தில் செலவளித்தாய்?,
4) நீ கற்றதின் படி எவ்வாறு நடந்தாய்? என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு
மஸ்ஊத் (ரலி),
நூல்: திர்மிதி)
வணக்கத்தின் அடிப்படையே ஹலாலான வருமானம்தான்.
وقال صلى الله عليه وسلم: " العبادة عشرة أجزاء: تسعة منها في طلب
في طلب الحلال
நபி {ஸல்} அவர்கள்
கூறினார்கள். வணக்கம் பத்து பாகம் என்றால் அதில் ஒன்பது பாகம் ஹலாலான வழியில்
பொருளீட்டுவதாக இருக்கும்.
கொஞ்சம் ஹராம் இருந்தாலும் தொழுகை கூடாது.
وقال
صلى الله عليه وسلم: " من اشترى ثوباً بعشرة دراهم وفي ثمنه درهم حرام لم
يقبل الله صلاته مادام عليه منه شيء
நபி {ஸல்} அவர்கள்
கூறினார்கள்.பத்து திர்ஹத்துக்கு வாங்கிய ஆடை. அதில் ஒரு திர்ஹம் ஹராமாக
இருந்தாலும் அது இருக்கும் வரை தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது.
" مَنِ
اشْتَرَى ثَوْبًا بِعَشَرَةِ دَرَاهِمَ ، فِي ثَمَنِهِ دِرْهَمٌ حَرَامٌ ، لَمْ
يَقْبَلِ اللَّهُ لَهُ صَلاةً مَا دَامَ عَلَيْهِ " ثُمَّ وَضَعَ
إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ فَقَالَ : صَمْتًا إِنْ لَمْ أَكُنْ سَمِعْتُه
مشکوة
ஒரு முறை உமர் (ரலி)அவர்கள் (தங்களின் மாணவர்களிடம்)ஒருவர்
பத்து திர்ஹத்திற்கு ஒரு ஆடையை வாங்கினார்.ஆனால் அதில் ஒரு திர்ஹம் ஹராமாக
இருந்தாலும்,அந்த ஆடையை அணிந்திருக்கும் காலெமல்லாம் அருடைய தொழுகையை அல்லாஹ் ஏற்றுக்
கொள்ளமாட்டான்.என்று கூறிவிட்டு தன் காதுகளில் விரல்களை நுழைத்து விட்டுச்
சொன்னார்கள்:இவ்வாறு நபி(ஸல்)அவர்கள் சொன்னதாக நான் கேட்கவில்லை என்றால் என்
காதுகள் செவிடாக்கட்டும். (நூல்:அஹ்மத்)
ஹராம் இருந்தால் தர்மம் கூடாது.
. وقال صلى الله عليه وسلم: " من أصاب مالاً من مأثم فوصل به رحماً
أو تصدق به أو أنفقه في سبيل الله جمع الله ذلك جميعاً ثم قذفه في النار
ஒருவர் ஹராமான
வழியில் சம்பாதித்த பொருளைக்கொண்டு இரத்த உறவுகளுக்கு செலவு செய்தால், அல்லது
யாரேனும் ஒருவருக்கு தர்மம் செய்தால், அல்லது அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணித்தால்
நாளை மறுமையில் அனைத்தையும் ஒன்று சேர்ப்பான். பின்னர் நரகில் வீசி விடுவான் என
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
وقال
صلى الله عليه وسلم: من اكتسب مالاً من حرام فإن تصدق به لم يقبل منه
ஒருவர் ஹராமான
வழியில் சம்பாதித்த பொருளைக்கொண்டு தர்மம் செய்தால் அத்தர்மம் ஏற்றுக்கொள்ளப்படாது.
என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
عن النبي صلى الله عليه وسلم قال
يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه
».
ஒரு காலம் வரும் தான் எதிலிருந்து வருமானத்தைப் பெறுகின்றானோ அதன் வழி ஹலாலா? ஹராமா?
என்பதை மனிதன் ஒரு போதும் பொருட்படுத்த மாட்டான்” என நபி
{ஸல்} அவர்கள் கூறினார்கள். (நூல்:புகாரி)
في حديث كعب بن عجرة قال «مر النبي علي رجل، فرأي أصحاب
رسول الله من جلده ونشاطه، فقالوا: يا رسول الله، لو كان هذا في سبيل الله! فقال
رسول الله: «إن كان خرج يسعي علي ولده صغارا، فهو في سبيل الله، وإن كان خرج يسعي
علي أبوين شيخين كبيرين، فهو في سبيل الله، وإن كان خرج علي نفسه يعفها فهو في
سبيل الله، وإن كان خرج يسعي رياء ومفاخرة؛ فهو في سبيل الشيطان
ஒரு மனிதரின் வலுவையும் சுறுசுறுப்பையும் கண்ட நபித்தோழர்கள் (நபியிடம்)
அல்லாஹ்வின் தூதரே இவர் அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவதில் ஈடுபட்டுக்கொண்டு)
இருந்தால் நன்றாயிருக்கும் என்றார்கள். அதற்கு நபியவர்கள் இவர் தனது சிறு
பிள்ளைகளுக்காக உழைக்கப் புறப்பட்டுச் சென்றால் அல்லாஹ்வின் பாதையில் தான்
இருக்கிறார். வயதான பெற்றோருக்காக உழைக்கப் புறப்பட்டுச் சென்றால் அல்லாஹ்வின்
பாதையில் தான் இருக்கிறார்.தான் சுயமரியாதையுடன் வாழ்வதற்காக உழைக்கப்
புறப்பட்டுச் சென்றால் அல்லாஹ்வின் பாதையில் தான் இருக்கிறார். முகஸ்துதிக்காகவும்
பெருமையடித்துக்கொள்வதற்காகவும் புறப்பட்டுச் சென்றால் அவர் ஷைத்தானின் பாதையில்
தான் இருப்பார்; என்று கூறினார்கள்;.
நூல் தப்ரானி: 15619.
رِجَالٌ لَا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللَّهِ وَإِقَامِ
الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ
الْقُلُوبُ وَالْأَبْصَارُ () لِيَجْزِيَهُمُ اللَّهُ أَحْسَنَ مَا عَمِلُوا
وَيَزِيدَهُمْ مِنْ فَضْلِهِ وَاللَّهُ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ ()
“இன்னும் சிலர் இருக்கின்றார்கள். அவர்கள் எத்தகையோர் எனில், இறைவனை நினைவு கூருவதை விட்டும், தொழுகையை நிலை நாட்டுவது மற்றும் ஜகாத் கொடுப்பதை விட்டும், வியாபாரமும், கொள்வினை, கொடுப்பினையும் அவர்களைப் பாராமுகமாக்கி விடுவதில்லை; இதயங்கள் நிலைகுலைந்து, பார்வைகள் நிலைகுத்தி விடக்கூடிய ஒரு நாள் குறித்து அவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்கள் ஏன் இப்படிச் செய்கின்றார்கள் என்றால் அவர்கள் செய்த மிக அழகிய செயல்களுக்குரிய கூலியை அல்லாஹ் அவர்களுக்கு அருள்வதற்காகவும், அவனுடைய அருளால் இன்னும் அதிகமாக அவர்களுக்கு வழங்குவதற்காகவும் தான்!” ( அல்குர்ஆன்: 24: 37, 38 )
மாநபி {ஸல்}
அவர்களின் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்களின் நடை முறையை
இந்த வசனம் குறிப்பிடுகின்றது. நபித்தோழர்களை பொருத்தமட்டில் தொழுகைக்கான அழைப்பு
காதில் விழுந்து விட்டால் அவர்கள் கடைவீதியில் எந்த நிலையில் நின்றிருந்தாலும்
அப்படியே போட்டு விட்டு பள்ளிக்கு விரைந்து சென்று விடுவார்கள். ( நூல்: தஃப்ஸீர் அல் மள்ஹரீ )
சுவனத்தைக் கொண்டு
சோபனம் சொல்லப்பட்ட நபித்தோழர்களில் அபூபக்ர், உமர், உஸ்மான்,
அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப், தல்ஹா,
ஜுபைர் இப்னு அவ்வாம், ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (
ரலியல்லாஹு அன்ஹும் ) ஆகியோர் மாபெரும் வணிகர்கள் மற்றும் செல்வந்தர்கள்.
وقال أبو عمر: كان تاجرًا
مجدودًا في التجارة، فكسب مالا كثيرًا وخلف ألف بعير وثلاثة آلاف شاة ومائة فرس
ترعى بالبقيع، وكان يزرع بالجرف على عشرين ناضحًا
فكان يدخل من ذلك قوت أهله
سنة.
அப்துர்ரஹ்மான்
இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் குறித்து வரும் செய்தி மிகவும் ஆச்சர்யமானது. ஒரு முறை
அவர்களின் சரக்கு சந்தைக்கு சென்று திரும்பும் போது ஓராண்டு முழுவதுக்கும்
அவர்களின் குடும்பம் சும்மா உட்கார்ந்து அனுபவிப்பதற்குத் தேவையான லாபங்களை
ஈட்டுமாம்.
தல்ஹா (ரலி)
அவர்கள் குறித்து சொல்லப்படும் போது “எவராவது அவரிடம் உதவி
கேட்கும் நோக்கத்தில் அவரைச் சந்திக்கச் சென்றால் அவர் கேட்கும் முன்பாக அவர்
கேட்க நினைத்ததை விட அதிகளவிலான உதவிகளைச் செய்வார்களாம்.
وهذا خباب بن الأرت كان حدادًا، وعبد الله بن مسعود
كان راعيًا، وسعد بن أبي وقاص كان يصنع النبال، والزبير بن العوام كان
خياطًا،وسلمان الفارسي كان حلاقًا ومؤبرًا للنخل، وخبيرًا بفنون الحرب، والبراء بن
عازب وزيد بن أرقم كانا تاجرين
இன்னும், நபித்தோழர்களில் கப்பாப் (ரலி) அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) ஸல்மான் ஃபார்ஸி (ரலி) ஜைத் இப்னு அர்க்கம், பர்ராஉ இப்னு ஆஸிப் (ரலி) ஆகியோரும், அப்துல்லாஹ் இப்னு உமர், அபுத்தர்தா,
அபூதல்ஹா, அபுத்தஹ்தாஹ், அபூஸுஃப்யான்,
முஆவியா, அப்துல்லாஹ் இப்னு
அப்பாஸ்,
உம்முல் முஃமினீன் ஜைனப் பிந்த் ஜஹ்ஷ், ஜுலைபீப் (ரலி) அவர்களின் மனைவி (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகியோரும் பெரும் லாபம்
ஈட்டும் வணிக நிறுவனங்களின் நிறுவனர்களாக இருந்துள்ளனர்.
இமாம்களில், அபூஹனீஃபா,
அப்துல்லாஹ் இப்னு முபாரக், (ரஹ்-அலைஹிமா) ஆகியோரும் ஹதீஸ் மற்றும் தஃப்சீர் துறையில் சிறந்து விளங்கிய
ஏராளமான அறிஞர் பெருமக்களும் வணிகத்தில் சிறந்து விளங்கினர்.
இப்படியாக, வணிகத்தில் சிறந்து விளங்கிய மேன்மக்களான நமது முன்னோர்கள் ஒவ்வொருவரும்
தங்களின் மரணத்தின் போது விட்டுச் சென்ற சொத்தின் மதிப்பீடுகள் அவர்களின் மொத்த
குடும்ப அங்கத்தினர்களும் தலைமுறைக்கும் சும்மா இருந்து அனுபவிக்கும் அளவுக்கு
இருந்தது.
அவர்களின் வணிக
வெற்றிக்கும்,
அபாரமான வளர்ச்சிக்கும் பின்புலனாக இருந்தது வணிகத்தில்
பக்தி தான்.
அல்லாஹ்வைப்
பற்றிய பயம்,
ஹலாம், ஹராம் பற்றிய
விழிப்புணர்வு,
நேர்மை, நாணயம், உண்மை,
வாய்மை, நுகர்வோரை ஏமாற்றாமல்
இருத்தல்,
பொய் சத்தியம் செய்து வியாபாரம் செய்யாமல் இருத்தல், பதுக்கல் வியாபாரம் செய்யாமல் இருத்தல் போன்ற வியாபார பண்பாடுகளின் ஊற்று தான்
இந்த பக்தி என்பது.
தூய்மையற்ற பொருளீட்டல் ரஹ்மானின்
முன்பாக குற்றவாளியாக்கி விடும் என்பதையும், அதன் மூலம் பெற்ற பொருளாதரத்தில் இருந்து
செலவழித்த செலவுகளும், தர்மம் போன்ற வழிபாடுகளும் ஏற்றுக் கொள்ளப்படாமல் போகும் என்பதையும்,
நரகில் வீசப்படும் வழிபாடுகளாக ஆகிவிடும் என்பதை உணர்வோம்!
எனவே, தூய்மையான வழியில் பொருளீட்டுவோம்!
தூய்மையான வழியில் செலவளிப்போம்!
Alhamdulillah ...... jazakallah khair
ReplyDeleteஅல்ஹம்து லில்லாஹி..
ReplyDeleteமாஷா அல்லாஹ்.. மிக மிக அற்புதமான உரை நடை.. தேவையான செய்திகள் மவ்லானா.. தங்களின் அழகிய சேவைகள் தொடர வாழ்த்துக்கள்..
ReplyDeleteஅப்துல் காதர் மன்பயீ