அருள்மறைச் சாரல் – தராவீஹ் சிந்தனை:-4
சமாதானம் செய்வோம்! . மகத்தான கூலியைப் பெறுவோம்!!
அல்ஹம்துலில்லாஹ்!!
4 –வது தராவீஹ் தொழுகையை சிறப்பாக நிறைவு செய்து விட்டு நாம் ஆசையோடு
நேற்றிருக்கும் 3-வது நோன்பை நிறைவு செய்திருக்கின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல்
செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க,
வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக
நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!
இன்றைய நாளின்
தராவீஹ் தொழுகையில் அந்நிஸா அத்தியாயம் துவங்கப்பட்டு, 11/4 ஜுஸ்வு
ஓதப்பட்டிருக்கின்றது. 147 வசனங்கள் ஓதப்பட்டிருக்கின்றது.
இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட அந்நிஸா
அத்தியாயத்தின் 114 -ஆவது வசனம் சமாதானம் செய்து வைப்பதால் மகத்தான நன்மைகள்
கிடைக்கும் என்கிற சோபனத்தைச் சொல்கிறது.
لَا خَيْرَ فِي كَثِيرٍ مِنْ نَجْوَاهُمْ إِلَّا مَنْ أَمَرَ
بِصَدَقَةٍ أَوْ مَعْرُوفٍ أَوْ إِصْلَاحٍ بَيْنَ النَّاسِ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ
ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا
மனிதர்களின்
பெரும்பாலான இரகசிய பேச்சுக்களில் எவ்வித நன்மையும் இருப்பதில்லை. தானதர்மம் செய்யும்படியோ, நற்செயல் புரியும்படியோ, மனிதர்களுக்கிடையே
சீர்திருத்தம் செய்யும்படியோ அறிவுரை கூறுபவர்களின் பேச்சுக்களைத் தவிர! ( அவற்றில் நன்மை உண்டு ) மேலும், எவர் அல்லாஹ்வின்
உவப்பைத் தேடுவதற்காக இவ்வாறு செய்கின்றாரோ அவருக்கு நாம் விரைவில் மகத்தான கூலியை
வழங்குவோம்”. ( அல்குர்ஆன்: 4: 114 )
இன்று முழு
உலகிலும் சமாதானம் தேவைப்படுகிறது. உலக நாடுகளிடையே சமாதானத்தை
ஏற்படுத்துவதற்காகவே ஐ.நா., சபை தோற்றுவிக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.
இன்று தனி
மனிதனில் துவங்கி எல்லோரிடமும், எல்லா இடங்களிலும் பிரச்சினைகள் இருக்கின்றது.
எந்தப்
பிரச்சினைக்கும் பிரிந்து போவதை இஸ்லாம் தீர்வாக முடிவாக சொல்ல வில்லை.
சகல விஷயத்திற்கும் வழிக்காட்டும் இஸ்லாமிய மார்க்கம் பிரச்சினைகளின் போதும்
நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அழகான முறையில் வழிக்காட்டுகிறது.
இரண்டு நண்பர்களுக்கு இடையில், அல்லது கணவன் மனைவிக்கு இடையில் அல்லது இரண்டு குடும்பங்களுக்கு இடையில்
ஜமாத்தார்களுக்கு இடையில்,
சில பிரச்சனைகள் வரும். அது போல இரண்டு சமுதாயத்திற்கு இடையேயும் பிரச்சினைகள் வரலாம். அந்த நேரத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்
என்பதை அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம்கள்
சமாதானமாகவே வாழ வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறான்.
وَإِنْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا
بَيْنَهُمَا فَإِنْ بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي
تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِنْ فَاءَتْ فَأَصْلِحُوا
بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ
முஃமின்களில்
இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில்
சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம்
செய்தால்,
அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால்
திரும்பும் வரையில்,
(அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு,
அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக
அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து
கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான். (49-09)
இந்த குர்ஆன் வசனங்கள் மூலம் ஒரு சமுதாயத்தில் பிரச்சனையின்
காரணமாக இரண்டு குழுக்களாக பிரிந்து சண்டையிட்டுக் கொண்டால் அவர்களை சமாதானப்
படுத்தி வைய்யுங்கள் என்று அல்லாஹ் நமக்கு வழிக் காட்டுகிறான். எனவே நடுநிமையான
நடுவர் கூட்டம் ஒன்று சரியான முறையில் சமாதானப்படுத்தி வைக்க முயற்ச்சி செய்ய
வேண்டும்.
பல வழிகளில் சமாதனத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு
அவர்களில் ஒரு கூட்டம் இறுதி வரை சமாதானத்திற்கு முன் வராவிட்டால், சமாதானத்திற்கு வரும் கூட்டத்துடன் நீங்கள் இணைந்து அவர்களுக்கு எதிரராக
போராடுங்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
يقول الحسن البصري:
اسْتَقْبَلَ
وَاللَّهِ الحَسَنُ بْنُ عَلِيٍّ مُعَاوِيَةَ بِكَتَائِبَ أَمْثَالِ الجِبَالِ،
فَقَالَ عَمْرُو بْنُ العَاصِ:
إِنِّي لَأَرَى كَتَائِبَ لاَ تُوَلِّي حَتَّى تَقْتُلَ أَقْرَانَهَا، فَقَالَ
لَهُ مُعَاوِيَةُ وَكَانَ وَاللَّهِ خَيْرَ الرَّجُلَيْنِ: أَيْ عَمْرُو إِنْ
قَتَلَ هَؤُلاَءِ هَؤُلاَءِ، وَهَؤُلاَءِ هَؤُلاَءِ مَنْ لِي بِأُمُورِ النَّاسِ
مَنْ لِي بِنِسَائِهِمْ مَنْ لِي بِضَيْعَتِهِمْ، فَبَعَثَ إِلَيْهِ رَجُلَيْنِ
مِنْ قُرَيْشٍ مِنْ بَنِي عَبْدِ شَمْسٍ: عَبْدَ الرَّحْمَنِ بْنَ
سَمُرَةَ، وَعَبْدَ اللَّهِ
بْنَ عَامِرِ بْنِ كُرَيْزٍ، فَقَالَ:
اذْهَبَا إِلَى هَذَا الرَّجُلِ، فَاعْرِضَا عَلَيْهِ، وَقُولاَ لَهُ: وَاطْلُبَا
إِلَيْهِ، فَأَتَيَاهُ، فَدَخَلاَ عَلَيْهِ فَتَكَلَّمَا، وَقَالاَ لَهُ:
فَطَلَبَا إِلَيْهِ، فَقَالَ لَهُمَا الحَسَنُ بْنُ عَلِيٍّ: إِنَّا بَنُو عَبْدِ
المُطَّلِبِ، قَدْ أَصَبْنَا مِنْ هَذَا المَالِ، وَإِنَّ هَذِهِ الأُمَّةَ قَدْ
عَاثَتْ فِي دِمَائِهَا، قَالاَ: فَإِنَّهُ يَعْرِضُ عَلَيْكَ كَذَا وَكَذَا،
وَيَطْلُبُ إِلَيْكَ وَيَسْأَلُكَ قَالَ: فَمَنْ لِي بِهَذَا، قَالاَ: نَحْنُ لَكَ
بِهِ، فَمَا سَأَلَهُمَا شَيْئًا إِلَّا قَالاَ: نَحْنُ لَكَ بِهِ، فَصَالَحَهُ،
فَقَالَ الحَسَنُ:
وَلَقَدْ سَمِعْتُ أَبَا بَكْرَةَ يَقُولُ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ عَلَى المِنْبَرِ وَالحَسَنُ بْنُ عَلِيٍّ إِلَى جَنْبِهِ،
وَهُوَ يُقْبِلُ عَلَى النَّاسِ مَرَّةً، وَعَلَيْهِ أُخْرَى وَيَقُولُ: «إِنَّ
ابْنِي هَذَا سَيِّدٌ وَلَعَلَّ اللَّهَ أَنْ يُصْلِحَ بِهِ بَيْنَ فِئَتَيْنِ
عَظِيمَتَيْنِ مِنَ المُسْلِمِينَ»، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: "قَالَ لِي
عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ: إِنَّمَا ثَبَتَ لَنَا سَمَاعُ الحَسَنِ مِنْ أَبِي
بَكْرَةَ، بِهَذَا الحَدِيثِ".
ஹஸன் பஸாரீ(ரஹ்) அறிவித்தார்.: அலீ(ரலி) அவர்களின் மகனான ஹஸன்(ரலி), முஆவியா(ரலி) அவர்களை மலைகளைப் போன்ற (பிரம்மாண்டமான) படையணிகளுடன் எதிர்கொண்டார்கள். (அவற்றைக் கண்ட முஆவியா(ரலி) அவர்களின் ஆலோசகர்) அம்ர் இப்னு ஆஸ்(ரலி), 'இவற்றில் உள்ள (போரிடுவதிலும், வீரத்திலும்) சமபலம் வாய்ந்தவர்களை நீங்கள் கொன்று விடாதவரை இந்தப் படைகள் பின்வாங்கிச் செல்லாது என்று கருதுகிறேன்'' என்று கூறினார்கள். அவருக்கு முஆவியா(ரலி) அல்லாஹ்வின் மீதாணையாக! அவ்விருவரில் முஆவியாவே, சிறந்தவராக இருந்தார்...'
' அம்ரே! இவர்கள் அவர்களையும் அவர்கள் இவர்களையும் கொன்று விடுவார்களாயின் மக்களின் நிர்வாகத்திற்குப் பொறுப்பேற்க என்னிடம் வேறு யார் இருப்பார்கள்? (என் குடி) மக்களின் பெண்களைப் பாதுகாக்க என்னிடம் (வேறு) யார் இருப்பார்கள்? அவர்களின் சொத்துகளைப் பாதுகாக்க என்னிடம் (வேறு) யார் தான் இருப்பார்கள்?' என்று பதிலளித்தார்கள்.
எனவே, ஹஸன்(ரலி) அவர்களிடம் குறைஷிகளில் பனூ அப்தி ஷம்ஸ் கிளையாரைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அவர்களையும், அப்துல்லாஹ் இப்னு ஆமிர் இப்னி குரைஸ்(ரலி) அவர்களையும் அனுப்பி, 'நீங்கள் இருவரும் இந்த மனிதரிடம் சென்று விபரத்தை எடுத்துரைத்துப் பேசி, அவரிடம் (சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி) கோருங்கள்'' என்று கூற, அவ்விருவரும் (அவ்வாறே) ஹஸன்(ரலி) அவர்களிடம் சென்று, அவர்களின் அறைக்குள் நுழைந்து பேசினார்கள்;
ஹஸன்(ரலி) அவர்களிடம் (முஅவியா(ரலி) அவர்களின் தூதை எடுத்துச்) சொல்லி (அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வரும்படி) கோரினார்கள். அதற்கு அவ்விருவரிடமும் ஹஸன்(ரலி), 'நாங்கள் அப்துல் முத்தலிபின் மக்கள்; இந்த செல்வத்தை (எங்கள் தலைமைத்துவத்தின் காரணத்தால்) பெற்றிருக்கிறோம். (அதை எங்கள் குடிமக்கள், படைவீரர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே செலவு செய்து வருகிறோம்.) இந்தச் சமுதாயமோ தன் இரத்தத்தை சிந்திப் பழம்விட்டது'' என்று கூறினார்கள்.
இதற்கு அவ்விருவரும், 'முஆவியா(ரலி) உங்களுக்கு இவ்வளவு (மானியம்) தருவதாகக் கூறுகிறார்கள்; மேலும் (சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி) உங்களிடம் கோருகிறார்கள்'' என்று கூறினர். அதற்கு ஹஸன்(ரலி), 'இந்த விஷயத்தில் எனக்குப் பொறுப்பு யார்?' என்று கேட்க, அவ்விருவரும் 'இதில் உங்களுக்கு நாங்கள் பொறுப்பு'' என்று கூறினர்.
ஹஸன்(ரலி)
கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அவர்கள், 'நாங்கள் உங்களிடம் இதற்குப் பொறுப்பேற்கிறோம்'' என்றே கூறினார்கள். இறுதியாக, ஹஸன்(ரலி), முஆவியா(ரலி)
அவர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள்.
மேலும், '(ஒரு முறை) இறைத்தூதர் மிம்பர் மீதிருக்க, அவர்களின் ஒரு பக்கத்தில் ஹஸன் இப்னு அலீ(ரலி)
அமர்ந்திருக்க, நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை மக்களை நோக்கியும், மற்றொரு முறை ஹஸன்(ரலி) அவர்களை நோக்கியும் (உரை நிகழ்த்திய
வண்ணம்), 'இந்த என்னுடைய புதல்வர்
(கண்ணியத்திற்குரிய) தலைவராவார். முஸ்லிம்களின் இரண்டு பெரும் கூட்டத்தாரிடையே
இவரின் மூலமாக அல்லாஹ் சமாதானம் செய்து வைக்க விரும்புகிறான்'' என்று கூறிக் கொண்டிருந்ததை பார்த்தேன்'' என்று அபூ பக்ரா(ரலி) கூறியதை கேட்டேன். ( நூல்: புகாரி )
إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ
وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
நிச்சயமாக முஃமின்கள்
(யாவரும்) சகோதரர்களே;
ஆகவே, உங்கள் இரு
சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். ( அல்குர்ஆன்: 49: 10 )
நபி {ஸல்} அவர்கள் இரு இறைநம்பிக்கையாளர்களிடையே,
இரு குடும்பத்தார்களிடையே, இரு கோத்திரத்தார்களிடையே சமாதானம் செய்து வைத்திருக்கின்றார்கள்.
عن كَعْبٍ بن مالك أَنَّه تَقَاضَى
ابْنَ أَبِي حَدْرَدٍ دَيْنًا كَانَ لَهُ عَلَيْهِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا
حَتَّى سَمِعَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي
بَيْتٍه فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِمَا
حَتَّى كَشَفَ سِجْفَ حُجْرَتِهِ فَنَادَى كَعْبَ بْنَ مَالِكٍ فَقَالَ : يَا
كَعْبُ فَقَالَ : لَبَّيْكَ يَا رَسُولَ اللَّه، ِ فَأَشَارَ بِيَدِهِ أَنْ ضَعْ
الشَّطْرَ فَقَالَ كَعْب:ٌ قَدْ فَعَلْتُ يَا رَسُولَ اللَّهِ ، فَقَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : قُمْ فَاقْضِه ) رواه البخاري .
கஅப் இப்னு
மாலிக்(ரலி) அறிவித்தார்: “அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் எனக்கு இப்னு அபீ
ஹத்ரத்(ரலி) தர வேண்டியிருந்த ஒரு கடனை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் வைத்துத்
திருப்பிச் செலுத்தும்படி கேட்டேன். (எங்கள்) இருவரின் குரல்களும் நபி(ஸல்)
அவர்கள் தம் வீட்டிலிருந்தபடியே அதைக் கேட்கும் அளவிற்கு உயர்ந்தன. எனவே, நபி(ஸல்) அவர்கள் எங்களிருவரையும் காணப் புறப்பட்டு வந்தார்கள்.
தம் அறையின்
திரையை விலக்கி,
'கஅபே!'' என்றழைத்தார்கள். நான், 'இதோ வந்துவிட்டேன்,
இறைத்தூதர் அவர்களே!'' என்று
பதிலளித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'பாதிக் கடனைத் தள்ளுபடி
செய்துவிடு'
என்று தம் கரத்தால் சைகை காட்டினார்கள். 'அவ்வாறே செய்து விட்டேன், இறைத்தூதர் அவர்களே!'' என்று நான் கூற,
இப்னு அபீ ஹத்ரத்(ரலி) அவர்களைப் பார்த்து, 'நீங்கள் எழுந்து சென்று அவரின் கடனை அடையுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ أَهْلَ قُبَاءٍ
اقْتَتَلُوا حَتَّى تَرَامَوْا بِالْحِجَارَةِ فَأُخْبِرَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذَلِكَ فَقَالَ : ( اذْهَبُوا بِنَا نُصْلِحُ
بَيْنَهُمْ ) رواه البخاري
ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: குபா பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்குள் ஏதோ பிரச்சனையின் காரணமாக
ஒருவருக்கொருவர் கல்வீசி தாக்கிக் கொண்டிருக்கின்றனர் என்று சிலர் தெரிவித்த போது, வாருங்கள்! சென்று அவர்களிடையே
சமாதானம் செய்து வைப்போம்! என்று கூறி எங்களை அங்கே
அழைத்துச் சென்று சமாதானம் செய்து வைத்தார்கள். ( நூல்: புகாரி )
حدثنا يونس بن عبد الأعلى، أخبرنا ابن وهب، حدثنا الليث ويونس، عن ابن
شهاب، أن عروة بن الزبير حدثه أن عبد الله بن الزبير حدثه عن الزبير بن العوام:
أنه خاصم رجلا من الأنصار قد شهد بدرا مع رسول الله صلى الله عليه وسلم إلى رسول
الله صلى الله عليه وسلم في شراج في الحَرة، كانا يسقيان به كلاهما النخل، فقال
الأنصاري: سَرِّح الماء يَمُر. فأبى عليه الزبير، فقال رسول الله صلى الله عليه
وسلم: "اسق يا زبير ثم أرسل إلى جارك" فغضب الأنصاري وقال: يا رسول
الله، أن كان ابن عَمَّتك؟ فتلوَّن وجه رسول الله صلى الله عليه وسلم ثم قال:
"اسق يا زبير ثم احبس الماء حتى يرجع إلى الجَدْر" واستوعى رسولُ الله
صلى الله عليه وسلم للزبير حَقّه وكان رسول الله صلى الله عليه وسلم قبل ذلك أشار
على الزبير برأي أراد فيه السعة له وللأنصاري، فلما أحفظ (3) الأنصاري رسولَ الله
صلى الله عليه وسلم استوعى للزبير حقه في صريح الحكم فقال الزبير : ما أحسب هذه
الآية إلا في ذلك: { فَلا وَرَبِّكَ لا يَؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا
شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لا يَجِدُوا فِي أَنْفُسِهِمْ حَرَجًا مِمَّا قَضَيْتَ
وَيُسَلِّمُوا تَسْلِيمًا }
وهكذا
رواه النسائي
ஸுபைர்(ரலி)
அறிவித்தார்: எனக்கு பத்ருப் போரில் பங்கெடுத்த அன்சாரி ஒருவருடன் (மதீனாவின்) 'ஹர்ரா'
எனும் (கருங்கல் பூமியிலுள்ள) ஒரு கால்வாயின் விஷயத்தில்
தகராறு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் அந்தக் கால்வாய் மூலமாகத் தான் எங்கள்
தோட்டங்களுக்கு நீர்பாய்ச்சி வந்தோம். நபியவர்களிடம் வழக்கில் தீர்ப்புக் கேட்டு
சென்றபோது நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'ஸுபைரே! (முதலில்)
நீங்கள் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு, பிறகு உங்கள்
அண்டையிலிருப்பவருக்கு அதை அனுப்பி விடுங்கள்'' என்று
கூறினார்கள். இதைக் கேட்ட அந்த அன்சாரி கோபமடைந்து, 'இறைத்தூதர் அவர்களே! உங்கள் அத்தையின் மகன் என்பதாலா (இப்படித் தீர்ப்புக்
கூறினீர்கள்?'
என்று கேட்டார். நபி(ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்
சிவந்து) நிறம் மாறியது. பிறகு வரப்புகளைச் சென்றடையும் வரை தடுத்து நிறுத்திக்
கொள்ளுங்கள்''
என்று கூறினார்கள்.
இவ்வாறு
ஸுபைர்(ரலி) அவர்களுக்கு,
அன்னாருடைய முழு உரிமையையும் இறைத்தூதர் வழங்கினார்கள்.
''இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
அதற்கு முன் ஸுபைர்(ரலி) அவர்களுக்கும் அந்த அன்சாரிக்கும் தாராளமாகப் பயன் தரும்
விதத்தில் ஸுபைர்(ரலி) அவர்களிடம் யோசனை தெரிவித்தார்கள். ஆனால், அந்த அன்சாரி அல்லாஹ்வின் தூதருக்குக் கோபமூட்டியபோது ஸுபைர்(ரலி) அவர்களுக்கு
அவர்களின் உரிமையை தெளிவான ஆணையின் வாயிலாக முழுமையாக வழங்கிவிட்டார்கள்'' என்று அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்.
''(நபியே!) உங்களுடைய
இறைவன் மீது ஆணையாக! அவர்கள் தமக்குள் ஏற்படும் சச்சரவுகளில் உங்களை நீதிபதியாக
ஏற்று, நீங்கள் வழங்கும் தீர்ப்பை மனத்தில் எந்த அதிருப்தியும் கொள்ளாமல்
அங்கிகாரித்து,
முற்றிலும் கட்டுப்பட்டு நடக்காத வரையில், அவர்கள் உண்மையான விசுவாசிகளாய் ஆக மாட்டார்கள்' என்னும் (திருக்குர்ஆன் 04:65) வசனம் இது தொடர்பாகவே
இறங்கியதாக நான் நினைக்கிறேன்'' என்று ஸுபைர்(ரலி)
கூறினார். ( நூல்: புகாரி,
நஸாயீ )
சமாதானம் செய்து வைப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்...
وقال الرسول صلى الله عليه وسلم ( ألا أخبركم بأفضل من درجة الصيام
والصلاة والصدقة ؟ قالوا بلى ، قال : إصلاح ذات البين فإن فساد ذات البين هي
الحالقة ) رواه أبو داود والترمذي وقال حديث صحيح ، وللترمذي لا أقول
تحلق الشعر ولكن تحلق الدين .
அபுத்தர்தா (ரலி) அறிவிக்கின்றார்கள்: “எங்களிடையே வந்த
மாநபி {ஸல்} அவர்கள் உபரியான
தொழுகையின், நோன்பின், தர்மத்தின் நன்மையைக்
காட்டிலும் சிறந்த நன்மையைப் பெற்றுத் தருகிற ஓர் செயலை நான் உங்களுக்கு அறிவித்து
தரட்டுமா? என்று வினவினார்கள்.
அப்போது, எங்களில் சிலர் ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள்! என்றார்கள்.
அதற்கு, நபி {ஸல்} இரண்டு பேருக்கு மத்தியில் சமாதானம் செய்து வைப்பது தான்
சிறந்த நன்மையைப் பெற்றுத்தரும் உயரிய செயலாகும். இரண்டு பேருக்கு மத்தியில் குழப்பம் ஏற்படுத்துவது என்பது மழிக்கும் செயலாகும். நான் முடியை மழிப்பதைச் சொல்லவில்லை. அது தீனை அவரிடம் இருந்து மழித்து விடும்” என கூறினார்கள். ( நூல்: திர்மிதீ, அபூதாவூத் )
وقال
صلى الله عليه وسلم : ( كل يوم تطلع فيه الشمس تعدل بين اثنين ( تصلح بينهما
بالعدل ) صدقة )
”சூரியன் உதயமாகும்
ஒவ்வொரு நாளிலும் நீங்கள் இருவருக்கு மத்தியில் சமாதானம் செய்து வைப்பது தர்மம்
ஆகும்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
( நூல்: புகாரி, முஸ்லிம் )
قال أنس رضي الله عنه ( من أصلح بين اثنين أعطـاه
الله بكل كلمة عتق رقبة
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “இரண்டு பேரை சேர்த்து வைப்பதற்காக சமாதானம் மேற்கொள்ளும் ஒருவர் அதற்காக
பேசுகின்ற ஒவ்வொரு பேச்சிற்கும் அல்லாஹ் ஒரு அடிமையை உரிமை விட்ட நன்மையை
வழங்குகின்றான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
எனவே, பிரச்சினைக்குரிய நேரங்களில் இஸ்லாம் கூறும்
அழகிய தீர்வுகளை முன்னெடுப்போம். சமாதானம் செய்வோம்! சமாதானம் செய்து வைப்போம்!!
No comments:
Post a Comment