அருள்மறைச் சாரல் – தராவீஹ் சிந்தனை:-6
அல்லாஹ்வின் மீது
நல்லெண்ணம் கொள்வோம்!!
அல்ஹம்துலில்லாஹ்!!
நாம் நோற்ற 5 –வது நோன்பை சிறப்பாக நிறைவு செய்து, 6 – வது நாள் தராவீஹ் தொழுகையை
தொழுது விட்டு இறைமறையின் வசனத்தின் விளக்கத்தைப் பெறும் பொருட்டு
அமர்ந்திருக்கின்றோம்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற
நாட்களின் நோன்புகளையும்,
வணக்க, வழிபாடுகளையும் எவ்வித
தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும்
நல்குவானாக!
ஆமீன்!!
இன்றைய நாளின்
தராவீஹ் தொழுகையில் அல் அன்ஆன் அத்தியாயம் துவங்கப்பட்டு 166 வசனங்கள் முழுமையாக
ஓதி நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இன்று ஓதப்பட்ட அல்
அன்ஆன் அத்தியாயத்தின் 91 வது வசனத்தில் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைப்பது
குறித்து பேசுகின்றான்.
وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ
“அல்லாஹ்வை எவ்வாறு
மதிப்பிட வேண்டுமோ அவ்வாறு அவர்கள் மதிப்பிடவில்லை”. ( அல்குர்ஆன்: 6:
91 )
عن ابي
هريرة رضي الله عنه ان رسول الله صل الله عليه وسلم فا ان حسن الظن بالله من حسن
العبادة
நிச்சயமாக அல்லாஹ்வை பற்றிய
நல்லெண்ணம் என்பது அழகிய வணக்கங்களில் உள்ளதாகும். ( திர்மிதி )
நம்முடைய காரியங்களில் நாம் விரும்பும் விஷயங்களோ, நாம் நினைக்கும் படியோ
நடக்காமல் போனால் அல்லாஹ் இதையே நமக்கு நன்மையாக்கி வைத்திருக்கிறான் என்ற எண்ணம்
நமக்கு துவக்கத்திலேயே தோன்ற வேண்டும்.
அப்படி நாம் நினைக்கும் அந்த நினைவையே அழகிய இபாதத் என்று
நபி {ஸல்} அவர்கள் கூறுகின்றார்கள்.
فعن
جابر رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم قبل
موته بثلاثة أيام يقول: «لا يموتَنَّ أحدكم إلا وهو يحسن
الظن بالله عز
وجل» رواه مسلم.
நபி {ஸல்}
இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு கூற, தான் கேட்டதாக ஜாபிர்
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “அறிந்து கொள்ளுங்கள்!
உங்களில் எவரும் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொண்டவராகவே தவிர மரணிக்க வேண்டாம்.” ( நூல்: தபகாத் இப்னு ஸஅது,
முஸ்னத் அபூதாவூது, முஸ்னத் அபூ யஃலா)
وَيُعَذِّبَ الْمُنَافِقِينَ وَالْمُنَافِقَاتِ وَالْمُشْرِكِينَ
وَالْمُشْرِكَاتِ الظَّانِّينَ بِاللَّهِ ظَنَّ السَّوْءِ عَلَيْهِمْ دَائِرَةُ
السَّوْءِ وَغَضِبَ اللَّهُ عَلَيْهِمْ وَلَعَنَهُمْ وَأَعَدَّ لَهُمْ جَهَنَّمَ
وَسَاءَتْ مَصِيرًا
அல்லாஹ்வைப்பற்றி
தீய எண்ணம் கொள்வது இணைவைப்போர்,மற்றும் நயவஞ்சகர்களின் பண்பு எனவும்,
அல்லாஹ்வின் கோபமும், சாபமும், இறுதியாக நரகமும் பெற்றுத் தரும் தீய பண்பாக
திருக்குர்ஆன் 48 ; 6 வசனத்தில் எச்சரிக்கை செய்கிறது.
" اللهم إني أسألك صدق التوكل عليك،
وحسن الظن بك "
இறைவா! உன் மீது
உண்மையான நம்பிக்கையையும் உன்னைப்பற்றிய நல்ல எண்ணத்தையும் உன்னிடம் நான்
கேட்கிறேன் என்று சயீது பின் ஜுபைர் ரலி அவர்கள் பிரார்த்திப்பவர்களாக
இருந்தார்கள்.
عَنْ
أَنَسٍ قَالَ قَالَ أَنَسٌ أَصَابَنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَطَرٌ قَالَ فَحَسَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ ثَوْبَهُ
حَتَّى
أَصَابَهُ مِنْ الْمَطَرِ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ لِمَ صَنَعْتَ هَذَا
قَالَ لِأَنَّهُ حَدِيثُ عَهْدٍ بِرَبِّهِ تَعَالَى (صحيح مسلم- 1494)
அல்லாஹ்வுடைய
தூதர் {ஸல்} அவர்களுடைய ஒரு செயலை அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்
அறிவிக்கின்றார்கள். எந்த அளவு நபி {ஸல்} அல்லாஹ்வின் மீது ஆர்வம் உள்ளவர்களாக, அந்த ஆசை உள்ளவர்களாக நல்லெண்ணம் கொண்டவர்களாக இருந்தார்கள் என்றால், மழை பொழிய ஆரம்பித்தால், அல்லாஹ்வுடைய தூதர் {ஸல்}
அவர்கள் தன்னுடைய மேலாடையை கொஞ்சம் களைந்து விட்டு அந்த மழையிலே நனைவார்கள். ஸஹாபாக்கள்
ஒரு முறை “அல்லாஹ்வின் தூதரே! என்ன இப்படி செய்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அப்போது ரஸூலுல்லாஹி {ஸல்} அவர்கள் “இந்த மழை என்னுடைய ரப்பிடம்
இருந்து புத்தம் புதுசாக வருகிறது. எந்த கலப்படமும் இல்லாமல் அந்த ரஹ்மத், அது என் மீது பட வேண்டும்” பதில் கூறினார்கள்: ( நூல்: முஸ்லிம்,
எண்: 1494 )
التقى
إبراهيم بن أدهم وشقيق بمكة فقال إبراهيم لشقيق: ما بدو أمرك الذي بلغك هذا؟
فقال:
سرت في بعض الفلوات فرأيت طيرا مكسور الجناحين في فلاة من الأرض فقلت: انظر من أن
يرزق فقعدت بحذائه فإذا أنا بطير قد أقبل في منقاره جرادة فوضعها في منقار الطير
المكسور الجناحين فقلت في نفسي: يا نفس، الذي قيض هذا الطائر الصحيح لهذا الطائر
المكسور الجناحين في فلاة من الأرض هو قادر أن يرزقني حيث ما كنت فتركت التكسب
واشتغلت بالعبادة.
فقال له
إبراهيم: يا شقيق ولم لا تكون أنت الطير الصحيح الذي أطعم العليل حتى يكون أفضل
منه أما سمعت من النبي صلى الله عليه وسلم: اليد العليا خير من اليد السفلى، ومن
علامة المؤمن أن يطلب أعلا الدرجتين في أموره كلها حتى يبلغ منازل الأبرار.
قال:
فأخذ يد إبراهيم وقبلها وقال له: أنت أستاذنا يا أبا إسحاق.
رواه
ابن عساكر في “تاريخ دمشق”
பல்கு தேசத்தைச்
சேர்ந்த ஷகீக் {ரஹ்}
அவர்கள் ஒரு முறை இப்ராஹீம் பின் அத்ஹம் {ரஹ்}
அவர்களைச் சந்தித்து தாம் வியாபார விஷயமாக பயணம்
மேற்கொள்வதாக கூறிச் சென்றார்கள். ஆனால் பயணம் சென்ற சில நாட்களிலேயே ஷகீக்{ரஹ்}திரும்பிவிட்டார்கள் எனும் செய்தி கேள்வி பட்டு இப்ராஹீம் பின் அத்ஹம் {ரஹ்}
அவர்கள் ஷகீக்{ரஹ்} அவர்களைச் சந்திக்கச் சென்றார்கள். திரும்பி
வந்த காரணம் என்ன?
என்று வினவியபோது, ஷகீக் {ரஹ்}
கூறினார்கள்: ”நான் நெடுந்தூரம் பயணம் செய்த களைப்பில் ஓரிடத்தில் ஓய்வு பெற ஒரு மரத்தடியில்
அமர்ந்தேன். அங்கே நான் கண்ட காட்சி தான் எனக்கு அல்லாஹ்வைப் பற்றியான ஓர் உண்மையை
உணர்த்தியது. அப்படியா?
என்ன அந்தக் காட்சி கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன்
என்றார்கள் மாமேதை இப்ராஹீம் {ரஹ்} அவர்கள்.
நான்
அமர்ந்திருந்த அந்த மரத்தின் ஒரு கிளையில் ஊனமான,குருடான ஒரு பறவை அதன் கூட்டில் இருந்தது. ஆள் நடமாட்டமே இல்லாத இந்த இடத்தில்
யார் வந்து உணவளிக்கப்போகிறார்கள்? என்று நினைத்துக்
கொண்டிருந்த அந்த நேரத்தில், எங்கிருந்தோ வந்த இன்னொரு
பறவை ஊனமான அந்த பறவைக்கு தன் அலகுகளால் உணவளித்தது. இதனைக் கண்ணுற்ற நான் ”ஏன் நமக்கும் அல்லாஹ் இவ்வாறு உணவளிக்க மாட்டான்? என்ற எண்ணம் தோன்றவே நான் ஊர் திரும்பிவிட்டேன்.” என்றார்கள்.
அதற்கு இப்ராஹீம் {ரஹ்}
அவர்கள், “தோழரே! நீங்கள் எந்தப்
பறவையிலிருந்து படிப்பினை பெற்றிருக்கின்றீர்கள்? தனக்காகவும் - தன் சக உயிரினத்திற்காகவும் பாடுபட்ட அந்த நல்ல
பறவையிடமிருந்தல்லவா பாடம் பெற்றிருக்கவேண்டும். காலொடிந்த பறவையிடமிருந்தா
வல்லோனை விளங்கிக்கொண்டீர்கள்?” என்று கேட்டார்கள். ( நூல்: தாரீக் திமிஷ்க்
லி இப்னி அஸாக்கிர் )
ودخل
واثِلَةُ بن الأسْقَع على أبي الأسود الجُرَشي في مرضه الذي مات
فيه، فسلم عليه وجلس. فأخذ أبو الأسود يمين واثلة،
فمسح بها على عينيه
ووجهه، فقال له واثلة: واحدةٌ أسألك عنها.
قال: وما هي؟
قال: كيف ظنك بربك؟
فأومأ أبو الأسود برأسه، أي حسن.
فقال واثلة: أبشر؛ فإني سمعت رسول الله صلى الله عليه
وسلم يقول: «قال
الله عز وجل: أنا عند ظن عبدي بي، فليظن بي ما شاء»
رواه أحمد.
வாஸிலா இப்னு அல் அஸ்கஃ (ரலி) அவர்கள் அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்களின் மரண படுக்கையில் இருக்கும்போது காண சென்றார்கள்.
சென்றதும் ஸலாம் உரைத்து அமர்ந்து அவர்களின் இரு கண்கள் மற்றும் முகத்தின் மீது தடவினார்கள். பின் வாஸிலா அவர்கள்: “நான் ஒன்று
கேட்க வேண்டும் என்று சொன்னதும் என்ன என்று கேட்க? “உங்களின் இறைவனை பற்றி உங்களின்
எண்ணம் எப்படி என்று கேட்க, அதற்கு, அபுல் அஸ்வத் அவர்கள் நல்லெண்ணம் தான் என்று
தனது தலையை அசைத்து சைக்கினை செய்தார்கள். அதற்க்கு வாஸிலா அவர்கள் சுபச்செய்தி
உண்டாகட்டும்! என்று சொல்லி : நான் அல்லாஹ் சொல்வதாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன் :நான்
எனது அடியானின் எண்ணப்படியே ஆகிவிடுகிறேன்! எனவே என்னை அவன் நினைக்கும் படி எண்ணிக்கொள்ளட்டும்!”
என்று. ( நூல்: அஹ்மத் )
كان رجل نصرانيا فأسلم وقرأ البقرة وآل عمران ، فكان يكتب للنبي صلى
الله عليه وسلم ، فعاد نصرانيا ، فكان يقول : ما يدري محمد إلا ما كتبت له ،
فأماته الله فدفنوه ، فأصبح وقد لفظته الأرض ، فقالوا : هذا فعل محمد وأصحابه لما
هرب منهم ، نبشوا عن صاحبنا فألقوه ، فحفروا له فأعمقوا ، فأصبح وقد لفظته الأرض ،
فقالوا : هذا فعل محمد وأصحابه ، نبشوا عن صاحبنا لما هرب منهم فألقوه ، فحفروا له
وأعمقوا له في الأرض ما استطاعوا ، فأصبح وقد لفظته الأرض ، فعلموا : أنه ليس من
الناس فألقوه .
الراوي: أنس بن مالك المحدث: البخاري - المصدر: صحيح
البخاري -
அனஸ் பின் மாலிக்
(ரலி) அறிவிக்கின்றார்கள் “எங்களில் பனுந்நஜ்ஜார்
குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் இருந்தார். அவர் (இஸ்லாத்தைத் தழுவி) அல்பகரா, ஆலுஇம்ரான் ஆகிய (குர்ஆன்) அத்தியாயங்களை ஓதி முடித்தார். அவர் அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களுக்காக எழுதுபவராக இருந்தார். பிறகு அவர் (தமது பழைய கிறித்தவ
மதத்துக்கே) ஓடிப்போய்,
வேதக்காரர்களுடன் சேர்ந்து கொண்டார்.
வேதக்காரர்கள்
அவரைத் தூக்கி வைத்துக் கொண்டாடினர். “இவர் முஹம்மதுக்காக எழுதி
வந்தார்” என்று கூறி, அவரால் பெருமைப்பட்டுக் கொண்டனர். இதே நிலையில், (ஒருநாள்) அவர்களுக்கு மத்தியில் வைத்து அவரது கழுத்தை அல்லாஹ்
முறித்துவிட்டான். ஆகவே, அவருக்காகச் சவக்குழி தோண்டி அவரைப் புதைத்து விட்டனர். காலை நேரமான போது
அவரைப் பூமி (குழிக்கு வெளியில்) தூக்கியெறிந்து விட்டிருந்தது. பிறகு மீண்டும்
அவருக்காகக் குழி தோண்டி அவரைப் புதைத்தனர். மறுநாள் காலையிலும் பூமி (குழிக்கு
வெளியில்) அவரைத் தூக்கியெறிந்து விட்டிருந்தது. பிறகு மறுபடியும் அவர்கள்
அவருக்காகக் குழி தோண்டி அவரைப் புதைத்தனர். மறுநாள் காலையிலும் பூமி அவரை
(குழிக்கு வெளியில்) தூக்கியெறிந்து விட்டிருந்தது. ஆகவே, அவர்கள் அவரை (புதைக்காமல்) அப்படியே போட்டுவிட்டார்கள். ( நூல்: முஸ்லிம் 5366
)
மேற்கண்ட
நிகழ்வில் இருக்கும் நபர்,
நபிகளாரின் எழுத்தர்களில் ஒருவராக இருந்தும் கூட அவரின்
மறுமை வாழ்க்கை பாழாகிவிட்டது. காரணம், அவர் இறக்கும் போது
மார்க்கத்தின் வரம்புக்குள் இல்லை என்பதுதான்.
ஆகவே, அல்லாஹ்வைப்பற்றி நல்லெண்ணம் கொள்வோம்! அல்லாஹ்வைப்
பற்றி தீய எண்ணம் கொள்வதிலிருந்து நாம் எச்சரிக்கையாக இருப்போம்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் அவன் மீது
நல்லெண்ணம் கொள்பவர்களாக ஆக்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
No comments:
Post a Comment