முஸ்லிம்
சமூகத்தின் மீதான
வெறுப்புணர்வை வேரறுப்போம்!!
முன்னெப்போதும் இல்லாத
அளவு முஸ்லிம் சமூகம்
உலகளாவிய அளவில் பிற
சமூக மக்களின் வெறுப்பிற்கு
ஆளாகி வருவதை உலகெங்கிலும்
பார்க்க முடிகின்றது.
கடந்த மாதம் கூட டில்லியில் புல்டோசர் கொண்டு முஸ்லிம்
குடியிருப்புகளை இடிக்க அரசு இயந்திரமான மாநகராட்சி முயன்றதை ஊடகத்தின் வாயிலாகப் பார்த்தோம்.
சர்வதேச அளவில்…
அமெரிக்கா அதிபர்
மாளிகையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்
பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஜோ பைடன் பேசியதாவது: “உலகம் முழுவதும்
இன்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடப்படுகிறது. ஆனால், அனைத்து இஸ்லாமியர்களும் இந்த
ரம்ஜானை உற்சாகமாக கொண்டாட முடியவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உலகம் முழுவதும்
இஸ்லாமியர்களுக்கு பல்வேறு விதமான சவால்களும், சோதனைகளும் தொடருவதை நாம்
ஏற்றாக வேண்டும். உலகளவில் வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது இஸ்லாமியர்கள்தான்.
ரம்ஜான் பண்டிகையை கொண்டாட முடியாத உய்குர்ஸ், ரோஹிங்கியா இன மக்களையும்
இந்த நேரத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கவலை
தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்லாமியர்களால்தான்
ஒவ்வொரு நாளும் அமெரிக்கா வலிமை பெற்று வருகிறது. அவர்களது உழைப்பு முக்கிய பங்கு
வகித்துள்ளதுசர்வதேச அமைப்புகளுக்கு நான் இஸ்லாமியரைத்தான் தூதராக அமைத்துள்ளேன்.
இவ்வாறு ஜோ பைடன் கூறினார்.
( நன்றி: ஒன்இந்தியா. மே 3/2022 )
அமெரிக்க அதிபர்
ஜோ பைடனின் இந்தக்
கவலை வெறும் உதட்டளவில்
இல்லாமல் உளப்பூர்வமாக அமைந்திருக்கும் என நாம்
நம்புவோம்.
உண்மையில் சர்வதேசம்
முதல் தேசியம் வரை
முஸ்லிம் சமூகத்தின் மீது
வெறுப்புணர்வு பரப்பப்பட்டு, இன்று
அது பாரிய விளைவுகளை
ஏற்படுத்திக் கொண்டிருப்பதை பார்க்க
முடிகின்றது.
உண்மையில் இந்த
வெறுப்புணர்வு பிரச்சாரத்தைத் துவக்கிய
அமெரிக்கா ”இன்று உலக
அரங்கில் முஸ்லிம்கள் அதிகம்
வன்முறைக்கு உள்ளாக்கப் படுகின்றனர்”
என்று ஒப்புக் கொண்டுள்ளது.
*இஸ்லாமிய வெறுப்புணர்வின் தோற்றம் எங்கிருந்து? எப்போது?
ஏன்?..*
இசுலாமிய
வெறுப்புணர்வு நோய் –
இஸ்லாம் ஃபோபியா” என்ற சொல்லை 1997-ம் ஆண்டு வெளியிட்ட தன்னுடைய அறிக்கையில் ரன்னிமேடே(Runnymede ) அறக்கட்டளை தான் முதன்முதலாக பிரபலப்படுத்தியது. முசுலீம்கள் மீதான வெறுப்பை
குறிப்பதற்கு ஒரு சொற்பதம் தேவைப்பட்டதன் பின்னணியில் இது புழக்கத்தில் வந்தது.
முதலில் “முசுலீம்களுக்கு எதிரான அடிப்படையற்ற வெறுப்பு, பின்னர் அதுவே அனைத்து முசுலீம்கள் மீது பயம் அல்லது வெறுப்பு” என்ற அடிப்படையில் ‘[அடிப்படையற்ற] அதீத பயம் அல்லது சமநிலை குலைந்த மனநோய்’ (“phobia” ) என்ற பின்னொட்டு சேர்க்கப்பட்டது.
“இசுலாமிய வெறுப்புணர்வு
நோய்” என்ற சொற்பதம் இசுலாம் மீதான விமர்சனத்தையோ மாற்றுக் கருத்துக்களையோ
கண்டனங்களையோ வெளிப்படுத்தக்கூடாது என்று கூறவில்லை என்று தெளிவாகவே ரன்னிமேடே
அறிக்கை கூறியிருந்தது.
முசுலீம்கள்
இங்கிலாந்தைக் கைப்பற்றி விடுவார்கள் என்று 31% பிரிட்டிஷ்
சிறுவர்கள் உண்மையில் கருதுகிறார்கள்; அதே போல முசுலீம்களின்
எண்ணிக்கையை குறைக்கும் கட்சிக்கு 37% பிரிட்டிஷ் மக்கள்
ஆதரவு தெரிவிக்கிறார்கள். எதார்த்தத்தில் சக வெள்ளை இன கிறுத்துவர்களை விட
முசுலீம் மக்களுக்கு 76%
குறைவாகவே வேலை கிடைக்கிறது. மேலும், இங்கிலாந்தின் மிகவும் பின்தங்கிய 10% பகுதிகளில் தான் 50% முசுலீம் மக்கள் வாழ்கின்றனர். இச்சூழ்நிலைகள் அனைத்தும் வெறுமனே வெறுப்பு
என்ற வார்த்தைக்குள் அடங்காது. இவை இசுலாமிய வெறுப்புணர்வு என்ற பரந்துபட்ட பொருள்
கொண்ட வார்த்தைக்குள்ளே கச்சிதமாக அடங்குகின்றன.
மேலும் ‘இசுலாமிய வெறுப்புணர்வு நோய்’ என்பது அதன் விரிந்த
பொருளில் முசுலீம் இன வெறுப்புதான் என்பது தற்போது நன்கு நிறுவப்பட்டுள்ளது.
கல்வியாளர்கள்,
ஆராய்ச்சியாளர்கள், பிரிட்டிஷ் மக்கள், காவல் துறையினர்,
ஊடகங்கள் மற்றும் பிரிட்டிஷ் பிரதமரையும் தாண்டி உலகம்
முழுதும் இதன் பயன்பாடு பரவியிருக்கிறது. மேலும் அனைவருக்கும் அந்த வார்த்தை என்ன
சொல்ல வருகிறது என்றும் தெரிந்திருக்கிறது.
’இசுலாமிய வெறுப்புணர்வு
நோய் ‘ இருப்பது உண்மை. அது நம் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் அவற்றின் அனைத்து பரிமாணங்களோடும்
வளர்ந்து வருகிறது.
’இசுலாமிய வெறுப்புணர்வை
நோய்’ ஆட்கொண்டவர்களும் ’இசுலாமிய வெறுப்புணர்வு நோய்’ நிலவுவதை மறுப்பவர்களும், நமது தெரிவான ‘இசுலாமிய வெறுப்புணர்வு’
எனும் பதத்தை பயன்படுத்த வேண்டும் என்ற கருத்து
நகைப்பிற்குரியது.
ஏனெனில் வெறும்
வார்த்தை மாற்றம் அவர்களது வெறுப்புணர்வை ஒருபோதும் மாற்றப் போவது இல்லை. ( நன்றி:
வினவு மே 31; 2018 )
அமெரிக்காவில்
கடந்த 10
ஆண்டுகளில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ள 427 பேரில் 70
விழுக்காட்டுக்கும் மேற்பட்ட கொலைகளுக்கு வலதுசாரி
தீவிரவாதிகளே காரணம் என்று அந்த நாட்டின் ‘அவதூறு எதிர்ப்பு லீக்’ என்ற அமைப்பு தெரிவித்து உள்ளது.
இந்த அளவு, இடதுசாரி தீவிரவாதிகள் அல்லது உள்நாட்டு இஸ்லாமிய தீவிரவாதி கள் அரங்கேற்றிய
கொலைகளைவிட மிகவும் அதிகம்.
ஆனால், முஸ்லிம் அல்லாதவர்கள் நடத் திய தாக்குல்களைவிட
முஸ்லிம் தீவிரவாதி கள் நடத்திய தாக்குதல்களை அமெரிக்க ஊடகங்கள் 357 விழுக்காடு அதிகமாக ஊதி பெரிதாக்கின என்று அலபாமா பல் கலைக்கழக ஆய்வார்கள்
சொல்கிறார்கள்.
எல்லாவற்றையும்
வைத்துப் பார்க்கையில்,
இஸ்லாம் வெறுப்புணர்வு என்பது உலக சமூகத்துக்கே பெரும்
மிரட்டல் என்பதையும் அந்த மிரட்டல் அறவே துடைத்து ஒழிக்கப் படவேண்டும்; அத்தகைய உணர்வு அறவே கூடாது என்பதையும் அது முற்றிலும் நிரா
கரிக்கப்படவேண்டும் என்பதையும் சமூகங் கள் நன்கு புரிந்துகொள்ளவேண்டும். ( நன்றி: தமிழ் முரசு மார்ச் 2019
)
இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு…
சர்வதேச அளவில் தீவிரவாத
எண்ணங்களிலிருந்து மக்களை மீட்பது மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை
எனக் கூறி,
சிறுபான்மை சமூகங்களை குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை
ஓரங்கட்டும் வகையில் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.
முஸ்லிம் சமூகத்தை
திட்டமிட்டு ஓரங்கட்டுவதன் மூலம் அவர்கள் தன்னிச்சையான முறையில் கைது செய்யப்பட்டு
சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக, இஸ்லாமிய நாடுகளின்
கூட்டமைப்பின் இணை அமைப்பான சுயாதீனமான மற்றும் நிரந்தரமான மனித உரிமைகள்
ஆணைக்குழு கூறியுள்ளது.
*இந்தியாவில் பல்வேறு வடிவத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான
வெறுப்புணர்வு…*
1.
கொரோனோ காலகட்டத்தில் 2020 ல்...
சென்னை தி.நகரை சேர்ந்த ஜெயின் பேக்கரிஸ்
அண்ட் மிட்டாய்ஸ் என்ற நிறுவனம் சார்பில் சமூக தளங்களில் ஒரு விளம்பரம்
செய்யப்பட்டிருந்தது. அதில்,
‘ஜெயின்
ஊழியர்களால் இனிப்புகள் செய்யப்படுகின்றன. முஸ்லிம் ஊழியர்களால் அல்ல’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
இந்த விளம்பரம் நேற்று சமூக தளங்களில்
வைரலானதைத் தொடர்ந்து போலீசாருக்கும் தகவல்கள் சென்றன. இதையடுத்து மாம்பலம்
போலீஸார் தாங்களாகவே முன் வந்து அந்த பேக்கரி உரிமையாளர் மீது வழக்குப் பதிந்து
அவரைக் கைது செய்தனர். அவர் மீது 295 ஏ (வேண்டுமென்றே தீங்கிழைக்கும் செயல்கள், மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கம் கொண்ட
மதத்தை அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பது ) மற்றும் 504 (பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்)
பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. ( நன்றி:
மின்னம்பலம்
10/05/2020 )
2.
சிஏஏ போராட்டங்களுக்குப்
பின்னர்....
இந்த நிலையில் மேலும் ஒரு அதிரடி நடவடிக்கையை
இந்துக்கள் மேற்கொண்டு உள்ளனர். அதாவது முஸ்லிம்கள் நடத்தும் கடைகளிலும், நிறுவனங்களிலும் பொருட்கள் வாங்குவதை
இந்துக்கள் தவிர்த்து உள்ளனர். அமைதியாக நடந்துள்ள இந்த புரட்சி முஸ்லிம்களுக்கு
பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
முஸ்லிம்கள் நடத்தும் ஜவுளிக்கடை முதல்
செருப்புக்கடை வரையிலும், சூப் கடை முதல் பிரியாணி
கடை வரையிலும் இந்துக்கள் பொருட்களை வாங்குவதை இப்போது தவிர்த்து வருகின்றனர்.
மேலும் முஸ்லிம்கள் வைத்துள்ள வாகனங்களை வாடகைக்கு அமர்த்துவதும் குறைத்துள்ளனர்.
முஸ்லிம்கள் நடத்தும் தனியார் பேருந்துகளையும் இந்துக்கள் புறக்கணித்து உள்ளனர். முஸ்லிம்களின்
ஆட்டோக்களையும் தவிர்க்கத்தொடங்கி உள்ளனர்.
இப்படி முஸ்லிம்களிடம் வியாபாரம் செய்வதை
இந்துக்கள் புறக்கணித்துள்ளது,
முஸ்லிம்களுக்கு
மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செங்கோட்டையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு
முன்பு, விநாயகர் சதுர்த்தி
விழாவின்போது முஸ்லிம்கள் சிலர் தேவையில்லாமல் இடையூறு செய்தார்கள். இதனைத்
தொடர்ந்து அனைத்து கட்சிகளிலும் உள்ள இந்துக்கள் ஒருங்கிணைந்து செங்கோட்டை
முழுவதும் "முஸ்லிம்கள் கடைகளில் எந்த பொருட்களையும் வாங்கக் கூடாது"
என்று முடிவு செய்தார்கள். இதனால் செங்கோட்டை முழுவதும் முஸ்லிம் வியாபாரிகள்
பெருமளவில் பாதிப்புக்கு உள்ளானார்கள். அதன்பிறகு முஸ்லிம் பெரியவர்கள் சார்பில்
மன்னிப்பு கேட்டு நிலைமையை ஓரளவு சீர் செய்தனர். இருப்பினும் அதன் பாதிப்புகள்
இன்னமும் அங்கு தெரிகிறது.
இப்போது தமிழகம் முழுவதும் ஏறக்குறைய இதே
நிலையை நோக்கி நகர்கிறது. இது அண்ணன் - தம்பிகளாக பழகி வந்த இந்து, முஸ்லிம் உறவில் மிகப்பெரிய விரிசலை
ஏற்படுத்தி உள்ளது. ( நன்றி: கதிர் தொகுப்பு 25/02/2020 )
3.
வெறுப்புணர்வின் உச்சம்…
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் அண்மையில்
(கடந்த மாதம் – 2022) நடைபெற்ற அனந்தபுரி இந்து மகா சம்மேளன மாநாட்டில் ஜார்ஜ்
பங்கேற்று பேசினார். அப்போது அவர், "முஸ்லிம்கள் நடத்தும் ஓட்டல்களில் குளிர்பானம், டீக்கடையில் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும்
திரவங்கள் கலக்கப்படுகிறது. இதனால் ஆண்கள், பெண்களுக்கு
மலட்டுத் தன்மை ஏற்படும். இந்துக்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி
முஸ்லிம்களின் மக்கள் தொகையை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், முஸ்லிம்கள்
உணவின் மீது எச்சில் துப்பிய பிறகே பரிமாறுகின்றனர். அவர்களின் எச்சிலை நாம் ஏன்
சாப்பிட வேண்டும்? அவர்கள் துப்புவது ஒரு
வாசனை என்று அவர்களின் அறிஞர்கள் கூறுகின்றனர் என அவர் பேசியிருந்தது மிகுந்த
சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்
தெரிவித்தனர். அவருக்கு எதிராக கேரள காவல் துறை தலைவர் அனில் காந்த் மற்றும்
பல்வேறு காவல் நிலையங்களில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. இதனையடுத்து, ஜார்ஜை கேரள போலீசார் வீட்டில் வைத்து
காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் திருவனந்தபுரம் அழைத்து வந்து
மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர். அவர் ஜார்ஜிற்கு நிபந்தனையுடன் கூடிய
ஜாமின் வழங்கினார். இனிமேல் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேச மாட்டேன் என்று
ஜார்ஜ் வாக்குறுதி அளித்ததால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆரம்பத்தில்
காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த பி.சி.ஜார்ஜ் பல்வேறு கட்சிகளுக்கு தாவினர். கடந்த
2019-ம் ஆண்டில் கேரள ஜனபக்சம்
என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சி தற்போது பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது
குறிப்பிடத்தக்கது.
4.
வாட்ஸ்அப் (சமூக வலைத்தலங்களின்) பங்கு…
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் வழியாக
முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் மக்களிடையே வேகமாக பரவி, முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
வாட்ஸ்அப் குழுக்களில் பயத்தை, வெறுப்பைப் பரப்பும் வகையில் அனுப்பப்படும்
குறுஞ்செய்திகள் குறித்த ஆய்வு ஒன்றை கரக்பூர் ஐஐடி மற்றும் அமெரிக்காவின் எம்ஐடி
(Massachusetts
Institute of Technology) இணைந்து நடத்தியது. அதில் அவர்கள் 5000 குழுக்களில் இருந்து 20 லட்சம் குறுஞ் செய்திகளை ஆய்வு செய்து
முடிவுகளை வெளியிட்டுள்ளார்கள்.
அதாவது ஆகஸ்ட் 2018 முதல் ஆகஸ்ட் 2019 வரை வாட்ஸ்அப் குழுக்களில் இருந்து சேகரித்த
குறுஞ்செய்திகளில், குழுக்களில் அனுப்பப்படும்
மூன்றில் ஒரு குறுஞ்செய்தி இஸ்லாம் மீதான பயத்தையும், வெறுப்பையும் விதைக்கும் விதமாக
இருப்பதாகவும், மேலும் இந்த மாதிரியான
குறுஞ்செய்திகள், சாதாரண குறுஞ்செய்திகளை
விட அதிகம் பகிரப்படுகிறது என்று தெரியவந்திருக்கிறது.
முக்கியமாக இஸ்லாமியம் மற்றும் இஸ்லாமிய
மக்கள் மீதான வெறுப்பை, பயத்தை விதைப்பது போலவே
பெரும்பாலான குறுஞ்செய்திகள் இருப்பதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதேபோல் முகநூல் நிறுவனத்தில் வேலை செய்த
ஒருவர், இஸ்லாமியர்களுக்கு எதிரான
இந்துத்துவவாதிகளின் பொய்யான பிரச்சாரங்களை முகநூல் சமூகவலைத்தளம் அறிந்தே தடுக்காமல்
அனுமதித்தது என்று ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளார். ( நன்றி: மே 17 இயக்க குரல் மே 3/2022 )
5.
வாடகை வீடு பிரச்சினை…
தலைநகர் தில்லியில் இடநெருக் கடியால் வீடு கிடைப்பது என்பது மிக கடுமையான
பிரச்சனையாக உள்ளது. அதுவும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த நபருக்கு, தில்லியில் வீடு வாடகைக்கு தருவ தற்கு யாரும்
தயாராகவே இல்லை. முஸ்லிம்களுக்கு வாடகை வீடு இல்லை என்பது எழுதப்படாத சட்டமாகவே
உள்ளது. முஸ்லிம் களை பிரித்துப் பார்க்கும் பாகு பாடு, தலைநகரில் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இதனை
வீட்டு உரிமையாளர்களும், சொத்து டீலர்களும்
ஒப்புக் கொள்கிறார்கள். வீட்டு உரிமையாளர் சார்பில் ஆஜராகும் ஏஜெண்ட் ஒருவர்
கூறுகையில், நிலச்சுவான்தாரர்
கள் இந்தியர்களைத்தான் விரும்பு கிறார்கள். முஸ்லிம்களை அல்ல என்று வெளிப்படையாக
கூறி னார்.
( நன்றி: இறயாவனம்
ஜூலை 10/2012 )
வாடகைக்கு வீடுகள் கொடுப்பதில் இஸ்லாமியர்களை நிராகரிப்பதில் தமிழகத்திலேயே
சென்னைக்குத்தான் முதலிடம் என்று சொல்ல வேண்டும். தோற்றத்தின் மூலம்
இல்லையென்றாலும், பெயரைவைத்து
இஸ்லாமியர் என்று எளிதில் அடையாளம் காணப்படும் ஒருவர், (பெயர்கள் அரபுமொழியில்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை
என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது).
தமிழ்நாட்டு நகரம் ஒன்றில் “வாடகைக்கு வீடு தருவீர்களா?” என்று கேட்ட உடனேயே வீட்டு உரிமையாளர்களிடமிருந்து
கிடைக்கும் பதில் இதுதான்: “வேறொருவர் முன் பணம் கொடுத்துவிட்டார்.”
தகுதிகள் இருந்தும் இஸ்லாமியர் என்ற அடையாளத்துக்காகப் பன்னாட்டு நிறுவனங்கள்
பல, இவர்களை
நிராகரிக்கும் போக்கு இருக்கிறது. கூடவே, அவர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதும் பெருநகரங்களில்
மிகப் பெரிய சிக்கலாக உருவாகியிருக்கிறது. ( நன்றி: தமிழ் இந்து, ஜனவரி 07/2014 )
அப்துல் ஹமீத் எனும் மனுஷ்ய புத்திரன் அவர்கள் தமிழ் இந்து நாளிதழுக்கு எழுதிய கட்டுரையில்.. என் உடல் சார்ந்த குறைபாட்டை நான் கடந்துவிட்டேன். ஆனால், என் பிறப்பு சார்ந்த பெயருக்காக எனக்குக்
கொடுக்கப்படும் தண்டனைகளை என்னால் கடக்க முடியவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான்
கேட்கிறேன். கிடைக்கவில்லை. என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே
இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும்
அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக
இருக்கும்?
நான் எழுதிய இரண்டாயிரம் கவிதைகளை நினைத்துப்பார்த்தேன். மதச்சார்பின்மைக்
காகவும் சமூக நீதிக்காகவும் நான் எழுதிய ஆயிரக்கணக்கான பக்கங்கள், பேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள் அனைத்தையும் நினைத்துப்
பார்த்தேன். ஆயிரம் இருந்தென்ன? நான் இப்போது எதுவுமே இல்லை; வெறும் ஒரு முஸ்லிம்… அவ்வளவுதானே!
சென்னையில் பெரும் வெள்ளம் சூழ்ந்த போது, வீடுகளிலும் கோயில்களிலும் புகுந்த சாக்கடையைச்
சுத்தப்படுத்திய இஸ்லாமியர்கள் பாராட்டப்பட்டார்கள். அந்த நல்லுணர்வுகள் சாக்கடைத்
தண்ணீரைப் போல இவ்வளவு சீக்கிரம் வடிந்துவிட்டனவா என்று தோன்றியது.
வட இந்தியாவில் இருப்பதுபோல தமிழகத் தில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் தனித்
தனியான குடியிருப்புப் பகுதிகளைக் கொண்டிருப்பதில்லை. தமிழகத்துக்கு என்று தனிப்
பாரம்பரியமும் நல்லுறவு நல்லுணர்வும் இருக்கிறது. ஆனால், இஸ்லாமியர்களுக்கு வீடு தரக் கூடாது என்ற மனோபாவம்
இவ்வளவு ஆழமாக இங்கே எப்போது ஊடுருவியது? இல்லாமியர்கள் அசுத்தமானவர்கள், வன்முறை யாளர்கள், தேச விரோதிகள் என்ற பிரச்சாரம் சமூகத்தின் அடியாழம் வரை
எப்போது ஆழமாகப் பரவியது? தெரியவில்லை! (
நன்றி: தமிழ் இந்து, மார்ச் 29/2017 )
நீதிபதி சச்சார்
கமிட்டி அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள - பொதுவாக பரவலாக செய்தியாக்கப்படாத அல்லது
அறியப்படாத -நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு கொடுப்பது
மறுக்கப்பட்டு வரும் பிரச்சினையை கையிலெடுத்தது முந்தைய காங்கிரஸ் அரசு.
சச்சார் அறிக்கையில், ஓரளவு தொழில் மற்றும்
வேலை வாய்ப்பு பெற்றிருக்கும் முஸ்லிம்களுக்கு அவர்கள் சார்ந்துள்ள மதத்தைக்
காரணம் காட்டி,
வாடகைக்கு வீடு கொடுக்க மறுக்கப்பட்டு வருகிறது என்று
சொல்லப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை கையிலெடுத்த காங்கிரஸ் அரசு ஒரு வரைவு திட்டத்தை தயாரித்தது.
இந்த வரைவுத் திட்டத்தின்படி, சிறுபான்மை முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகள்
மட்டுமல்லாது வாடகைக்கு வீடு தர அல்லது வீட்டு வசதியை மறுப்பவர்களுக்கு மூன்று
ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கவும், ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் வழிவகை செய்தது.
இந்த சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ்
அரசின் சிறுபான்மை நலத்துறை முழு முயற்சியை மேற்கொண்டது. ஆனால், துரதிஷ்ட வசமாக
காங்கிரஸ் ஆட்சியின் ஆயுள் முடிந்து போனது. எனினும், இந்த சட்டம்
நிறைவேற்றப்பட்டிருந்தால் இதனால் முஸ்லிம்களுக்கு எவ்வித பயனும் விளையப்
போவதில்லை. முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு தரவில்லை என்றால் சட்டப்படி அது தவறு
என்பதை விளங்கிக் கொள்ளும் வீட்டின் உரிமையாளர், வாடகைத் தொகையையும்,
முன் பணத்தையும் வேண்டுமென்றே கூட்டிச் சொல்லி தானாகவே
முஸ்லிம்கள் விலகிக் கொள்ளும் வகையில் நடந்து கொண்டால் சட்டத்தால் அவர்களை என்ன
செய்து விட முடியும்?
6.
திரைப்படங்களின் பங்கு…
இஸ்லாமிய வெறுப்புணர்வை ஏற்றுமதி செய்வதில் Hollywood
படங்களின்
பங்களிப்பு மிக அதிகம்.
ஹாலிவுட் திரைப்படங்கள் உலகளவில் பாரிய
கவனயீர்ப்பைப் பெற்ற பல ரசிகர் களை வசீகரித்து வைத்திருக்கும் மேற்கத்தேய
சினிமா முறையாகும். இது 1 -ஆம் உலக மகா யுத்தத்தின்
பின்னர் அமெரிக்காவை நோக்கி குடிபெயர்ந்த யூதர்களினால் உருவாக்கப்பட்டது.
ஹாலிவுட் சினிமாவின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் பெரும்பான்மையானவை
யூதர்களுக்கு சொந்தமானவை. உதாரணமாக Colombia Coldwyn Myer-Metro Warner Brothers Peramount Universal போன்றவற்றைக் குறிப்பிட
முடியும். ஹாலிவுட் சினிமாக்கள் முஸ்லிம்களை வில்லன்களாகவும் பண்பாடற்ற, நாகரிகம் தெரியாத, மனித இரத்தத்தை குடிக்கும் சமூகமாகவே
அவர்களை சித்திரிக்கின்றன. 2001/09/01 இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப்
பின் இந்த நிலைமை அதிகரித்துள்ளது. இவ்வாறான ஹாலிவுட் திரைப்படங்களில் 70% க்கும் மேற்பட்டவை முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும்
பயங்கரவாதிகளாகவும் பெண்களை துன்புறுத்துபவர்களாகவும் காட்சிப்படுத்துகின்றன.
அரபு, – இஸ்ரேல் சமூகங்களுக்கிடையில் போராட்டத்தை தூண்டும்
வகையிலும் தமது போராட்டத்தை நியாயப்படுத்தும் வகையிலும் அவர்கள் திரைப்படத்தை
தயாரித்து வெளியிட்டனர்.
Network (1976), Exodus (1960), Black of Sunday (1977), The Delta
Force (1986) போன்ற
திரைப்படங்கள் இவ்வாறான கருத்துக்களை பிரதிபலிப்பதாக வெளியிடப்பட்ட
திரைப்படங்களகும்.
இதுவரை வெளியான முஸ்லிம்களை மோசமாக சித்திரிக்கும்
திரைப்படங்களுக்கு உதாரணங்களாக Erodus, Black Sunday, Delta Force, Iron Eagle, Ruls Of
Engagment, Hidalco, The Mummy Returns போன்றவற்றைக் குறிப்பிடலாம். (
நன்றி: விடிவெள்ளி, ஏப்ரல் 1 2019 )
இந்திய திரைப்படங்களும், தமிழ்த் திரைப்படங்களும் கடந்த 25 ஆண்டுகளாக, கன
கச்சிதமாக இந்த வேலையை செய்திருக்கின்றது.
சமீபத்திய பீஸ்ட், தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படங்கள்
மிகப்பெரிய உதாரணங்களாகும்.
வெறுப்புணர்வை எதிர்
கொள்ளும் முஸ்லிம் சமூகம் அதில் இருந்து எப்படி தன்னை தற்காத்துக் கொள்ளப் போகிறது?...
1.
வலிமையான ஈமான் வேண்டும்.
எல்லா இறைத்தூதர்களும் இந்த உலகில்
வெறுப்புணர்வை எதிர் கொண்டிருக்கின்றார்கள். மிக
மோசமான வெறுப்பை உமிழ்ந்திருக்கின்றது அந்த சமூகங்கள்.
எல்லா காலத்திலும் இறைநம்பிக்கை கொண்ட சமூகம் வெறுப்புணர்வை எதிர் கொண்டு இருக்கின்றது.
தந்தையின் வெறுப்புணர்வு..
قَالَ
اَرَاغِبٌ اَنْتَ عَنْ اٰلِهَتِىْ يٰۤاِبْرٰهِيْمُۚ لَٮِٕنْ لَّمْ تَنْتَهِ
لَاَرْجُمَنَّكَ وَاهْجُرْنِىْ مَلِيًّا
(அதற்கு அவர்) “இப்ராஹீமே! நீர் என் தெய்வங்களை புறக்கணிக்கிறீரா? நீர் (இதை விட்டும்) விலகிக்க கொள்ளாவிட்டால் உம்மைக் கல்லாலெறிந்து கொல்வேன்; இனி நீர் என்னைவிட்டு நெடுங்காலத்திற்கு விலகிப் போய்விடும்” என்றார்.
( அல்குர்ஆன்: 19: 46 )
நூஹ் நபியின் சமூகத்தின் வெறுப்புணர்வு…
فَقَالَ الْمَلَاُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ مَا نَرٰٮكَ اِلَّا بَشَرًا مِّثْلَنَا وَمَا نَرٰٮكَ اتَّبَعَكَ اِلَّا الَّذِيْنَ هُمْ اَرَاذِلُــنَا بَادِىَ الرَّاْىِۚ وَمَا نَرٰى لَـكُمْ عَلَيْنَا مِنْ فَضْلٍۢ بَلْ نَظُنُّكُمْ كٰذِبِيْنَ
அவரை நிராகரித்த
அவருடைய சமூகத்தின் தலைவர்கள் (அவரை நோக்கி), “நாம் உம்மை
எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே அன்றி (வேறு விதமாகக்) காணவில்லை; எங்களுக்குள்ளே ஆழ்ந்து யோசனை செய்யாத இழிவானர்களேயன்றி (வேறெவரும்) உம்மைப்
பின்பற்றி நடப்பதாகவும் நாம் காணவில்லை; எங்களைவிட உங்களுக்கு எந்த
விதமான மேன்மை இருப்பதாகவும் நாம் காணவில்லை - மாறாக உங்களை (யெல்லாம்) பொய்யர்கள்
என்றே நாங்கள் எண்ணுகிறோம்”
என்று கூறினார்கள். ( அல்குர்ஆன்: 11: 27 )
قَالُوْۤا
اَنُؤْمِنُ لَكَ وَاتَّبَعَكَ الْاَرْذَلُوْنَؕ
அவர்கள்: “தாழ்ந்தவர்கள் உம்மைப் பின்பற்றும்போது, உம் மீது நாங்கள் ஈமான்
கொள்வோமா,”
என்று கூறினார்கள். (
அல்குர்ஆன்: 26:111 )
قَالُوْا
لَٮِٕنْ لَّمْ تَنْتَهِ يٰـنُوْحُ لَـتَكُوْنَنَّ مِنَ الْمَرْجُوْمِيْنَؕ
அதற்கவர்கள்
கூறினார்கள்: “நூஹே! நீர் (உம் பிரச்சாரத்தை விட்டும்) விலகிக் கொள்ளாவிட்டால், நிச்சயமாக நீர் கல்லாலெறிந்து கொல்லப்படுவீர்” என்று கூறினார்கள் ( அல்குர்ஆன்: 26:116 )
ஷுஐபு நபியின்
சமூகத்தின் வெறுப்புணர்வு…
قَالُوْا
يٰشُعَيْبُ اَصَلٰوتُكَ تَاْمُرُكَ اَنْ نَّتْرُكَ مَا يَعْبُدُ اٰبَآؤُنَاۤ اَوْ
اَنْ نَّـفْعَلَ فِىْۤ اَمْوَالِنَا مَا نَشٰٓؤُا ؕ اِنَّكَ لَاَنْتَ
الْحَـلِيْمُ الرَّشِيْدُ
(அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய தெய்வங்களை விட்டு விடுமாறும், நாங்கள் எங்கள் பொருட்களை எங்கள் விருப்பப்படிச் செலவு செய்வதை
விட்டுவிடுமாறும் உம்முடைய (மார்க்கத்) தொழுகையா உம்மை ஏவுகிறது? நிச்சயமாக நீர் கிருபையுள்ளவரும் நேர்மையானவரும் தான்” என்று (ஏளனமாகக்) கூறினார்கள். ( அல்குர்ஆன்: 11:87. )
قَالُوْا
يٰشُعَيْبُ مَا نَفْقَهُ كَثِيْرًا مِّمَّا تَقُوْلُ وَاِنَّا لَـنَرٰٮكَ فِيْنَا
ضَعِيْفًا ۚ وَلَوْلَا رَهْطُكَ لَرَجَمْنٰكَ وَمَاۤ اَنْتَ عَلَيْنَا بِعَزِيْزٍ
(அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நீர் சொல்பவற்றில் பெரும்பாலானதை நாங்கள் புரிந்து கொள்ள முடியவில்லை; நிச்சயமாக உம்மை எங்களிடையே பலஹீனராகவே நாங்கள் காண்கிறோம்; உம் குலத்தார் இல்லை என்றால் உம்மைக் கல்லலெறிந்தே நாங்கள் (கொன்றிருப்போம்); நீர் எங்களில் மதிப்புக்குரியவரும் அல்லர்” என்று கூறினார்கள். ( அல்குர்ஆன்: 11:91. )
ஆட்சியாளனின் வெறுப்புணர்வு…
وَقَالَ
فِرْعَوْنُ ذَرُوْنِىْۤ اَقْتُلْ مُوْسٰى وَلْيَدْعُ رَبَّهٗۚ اِنِّىْۤ اَخَافُ
اَنْ يُّبَدِّلَ دِيْنَكُمْ اَوْ اَنْ يُّظْهِرَ فِى الْاَرْضِ الْفَسَادَ
மேலும் ஃபிர்அவ்ன்
கூறினான்: “மூஸாவை கொலை செய்ய என்னை விட்டு விடுங்கள்! இன்னும் இவர் தம்முடைய இறைவனை
அழை(த்துப் பிரார்த்தி)க்கட்டும்; நிச்சயமாக இவர் உங்கள்
மார்க்கத்தை மாற்றிவிடுவார்; அல்லது இப்பூமியில்
குழப்பத்தை வெளியாக்குவார் என்று நான் அஞ்சுகிறேன்” என்று.
( அல்குர்ஆன்:40:
26 )
ஆனாலும், இறைத்தூதர்களை அல்லாஹ் காப்பாற்றியதோடு,
அவர்களைக் கொண்டு நம்பிக்கைக் கொண்டிருந்த மக்களும் படைத்த ரப்புல் ஆலமீனின் மீது வைத்த
நம்பிக்கையின் காரணமாக ஈடேற்றம் பெற்றார்கள் என்று வரலாறு கூறுகின்றது.
2.
நாம் சரியாக இருக்க வேண்டும்…
يٰۤـاَيُّهَا
الَّذِيْنَ اٰمَنُوْا عَلَيْكُمْ اَنْفُسَكُمْۚ لَا يَضُرُّكُمْ مَّنْ ضَلَّ
اِذَا اهْتَدَيْتُمْ ؕ اِلَى اللّٰهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا فَيُـنَـبِّـئُكُمْ
بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
ஈமான்
கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் நேர்வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள்
உங்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் அனைவரும் மீள
வேண்டியிருக்கின்றது;
நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றையெல்லாம், அப்போது அவன் உங்களுக்கு உணர்த்துவான். (
அல்குர்ஆன்: 5:105.
وَعَدَ
اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَ عَمِلُوا الصّٰلِحٰتِ
لَـيَسْتَخْلِفَـنَّهُمْ فِى الْاَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِيْنَ مِنْ
قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِيْنَهُمُ الَّذِى ارْتَضٰى لَهُمْ وَلَـيُبَدِّلَــنَّهُمْ
مِّنْۢ بَعْدِ خَوْفِهِمْ اَمْنًا ؕ يَعْبُدُوْنَنِىْ لَا يُشْرِكُوْنَ بِىْ
شَيْــٴًــــا ؕ وَمَنْ كَفَرَ بَعْدَ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ
உங்களில் எவர்
ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில்
அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு
(எதையும்,
எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே
வணங்குவார்கள்;”
இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து
நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம். ( அல்குர்ஆன்:
24: 55 )
3.
தனியாகவோ, குழுவாகவோ, சமூகமாகவோ
போராட முன்வர வேண்டும்..
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ
اٰمَنُوْا خُذُوْا حِذْرَكُمْ فَانْفِرُوْا ثُبَاتٍ اَوِ انْفِرُوْا جَمِيْعًا
நம்பிக்கை
கொண்டவர்களே! எதிரிகளை சந்திக்கும் போது நீங்கள்
எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; பிரிவு, பிரிவாகவோ அல்லது எல்லோரும் சேர்ந்து ஒன்றாகவோ (எச்சரிக்கையுடன்) செல்லுங்கள். ( அல்குர்ஆன்:
4: 71 )
وَقَالَ
رَجُلٌ مُّؤْمِنٌ ۖ مِّنْ اٰلِ فِرْعَوْنَ يَكْتُمُ اِيْمَانَهٗۤ اَتَقْتُلُوْنَ
رَجُلًا اَنْ يَّقُوْلَ رَبِّىَ اللّٰهُ وَقَدْ جَآءَكُمْ بِالْبَيِّنٰتِ مِنْ
رَّبِّكُمْ ؕ وَاِنْ يَّكُ كَاذِبًا فَعَلَيْهِ كَذِبُهٗ ؕ وَاِنْ يَّكُ صَادِقًا
يُّصِبْكُمْ بَعْضُ الَّذِىْ يَعِدُكُمْ ۚ اِنَّ اللّٰهَ لَا يَهْدِىْ مَنْ هُوَ
مُسْرِفٌ كَذَّابٌ
ஃபிர்அவ்னின்
குடும்பத்தாரில் தம் ஈமானை மறைத்து வைத்திருந்த ஒரு நம்பிக்கை கொண்டவர் கூறினார்: “என் இறைவன் அல்லாஹ்வே தான்!” என்று ஒரு மனிதர்
கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா? மேலும் அவர் மெய்யாகவே
உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே
அவர் பொய்யராக இருந்தால்,
அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு
வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய
பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.” ( அல்குர்ஆன்: 40:28 )
قَالُوْا
لَنْ نُّؤْثِرَكَ عَلٰى مَا جَآءَنَا مِنَ الْبَيِّنٰتِ وَالَّذِىْ فَطَرَنَا
فَاقْضِ مَاۤ اَنْتَ قَاضٍ ؕ اِنَّمَا تَقْضِىْ هٰذِهِ الْحَيٰوةَ الدُّنْيَا ؕ
(மனந்திருந்திய அவர்கள்
ஃபிர்அவ்னிடம்) “எங்களுக்கு வந்துள்ள தெளிவான அத்தாட்சிகளை விடவும், எங்களைப் படைத்தவனை விடவும் உன்னை (மேலானவனாக) நாங்கள் எடுத்துக் கொள்ள
மாட்டோம்;
ஆகவே என்ன தீர்ப்புச் செய்ய நீ இருக்கிறாயோ அவ்வாறே
தீர்ப்புச் செய்துகொள்;
நீ தீர்ப்புச் செய்வதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் தான்” என்று கூறினார். (
அல்குர்ஆன்: 20:72 )
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: " عَرَضَنِي رَسُولُ اللهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ أُحُدٍ فِي الْقِتَالِ، وَأَنَا ابْنُ أَرْبَعَ
عَشْرَةَ سَنَةً، فَلَمْ يُجِزْنِي، وَعَرَضَنِي يَوْمَ الْخَنْدَقِ، وَأَنَا
ابْنُ خَمْسَ عَشْرَةَ سَنَةً، فَأَجَازَنِي،
அப்துல்லாஹ் பின்
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் பதினான்கு வயதினனாக இருந்தபோது, உஹுதுடைய நாளில் போருக்காக (ஆட்கள் தேர்வு நடந்த சமயம்) அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களுக்கு முன்னால் நின்றேன். ஆனால், (போரில்
கலந்துகொள்ள) எனக்கு அவர்கள் அனுமதியளிக்கவில்லை. (அடுத்த ஆண்டு நடந்த)
அகழ்ப்போரின் போது,
நான் அவர்களுக்கு முன் நின்ற சமயம் நான் பதினைந்து வயதினனாக
இருந்தேன். அப்போது (போரில் கலந்துகொள்ள) எனக்கு அனுமதியளித்தார்கள்.. ஸஹீஹ் முஸ்லிம் 3804.
வீரர்களை
இராணுவத்துக்கு தேர்தெடுக்கும் நேரம் ஸமுரா இப்னு ஜுன்துப் (ரலி) அவர்களை நீங்க
வயசு பத்தாது. என மறுத்து விட்டார்கள். ஆனால் அவரோ மீண்டும் முயற்சிக் கிறார்.
நபி! (ஸல்)அவர்களே
அதோ அந்த பையனை சேர்த்துக் கொண்டீர்களே! وَلَوْ صَارَعَنِي لَصَرَعْتُهُ؟ "அவரை என்னுடன்
மொத விடுங்க. அவரை நான் வீழ்த்து காட்டுகிறேன் .அப்படியா قَالَ:"فَدُونَكَ، فَصَارِعْهُ காட்டு
பார்க்கலாம்.என்றார்கள்.அவ்வாறே அவர் வென்றுவிட்டார். எனவே இந்த ஸமுரா (ரலி)
இராணுவப் படையில் சேர்த்துக் கொண்டார்கள்.
4.
எல்லா வகையிலும் தயாராக
இருக்க வேண்டும்..
وَاَعِدُّوْا
لَهُمْ مَّا اسْتَطَعْتُمْ مِّنْ قُوَّةٍ وَّمِنْ رِّبَاطِ الْخَـيْلِ
تُرْهِبُوْنَ بِهٖ عَدُوَّ اللّٰهِ وَعَدُوَّكُمْ وَاٰخَرِيْنَ مِنْ دُوْنِهِمْ ۚ
لَا تَعْلَمُوْنَهُمُ ۚ اَللّٰهُ يَعْلَمُهُمْؕ وَمَا تُـنْفِقُوْا مِنْ شَىْءٍ
فِىْ سَبِيْلِ اللّٰهِ يُوَفَّ اِلَيْكُمْ وَاَنْـتُمْ لَا تُظْلَمُوْنَ
அவர்
(நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும்
அச்சமடையச் செய்யலாம்;
அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச்
செய்யலாம்);
அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை
அறிவான்;
அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது. ( அல்குர்ஆன்:
8: 60 )
இந்த இறைவசனத்தில் பகைவர்களையும், விரோதிகளையும் எதிர் கொள்வதற்கு வலிமை அவசியம் என்பதையும், முஸ்லிம் சமூகம் எதிர் கொள்வதற்காக எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதையும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
உடல் வலிமை, மன வலிமை, ஆன்மீக வலிமை, கல்வியாற்றல், பொருளாதார பலம், அரசியல், அதிகார பலம், வீர தீரம், ஆயுதபலம் என சக்தியின் வகைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
ஒரு முஃமினைப் பொறுத்தவரை மனித வாழ்க்கைக்கும், சமூக வாழ்க்கைக்கும், இவ்வுலக வாழ்க்கைக்கும், மறுமை வாழ்க்கைக்கும் பயன் தருகிற எல்லா வகையான ஆற்றலையும் பெற்றிருப்பது மிகவும் அவசியம் ஆகும்.
5.
நடப்பது நடக்கட்டும் என்ற அலட்சிய போக்கு தவிர்க்கப்பட
வேண்டும்…
இஸ்லாம் மூன்று
விஷயங்களை பெரும் பாவச்செயல்களாகக் கருதுகிறது. அதில் ஒன்று ‘இக்னரன்ஸ்’
எனும் பொடுபோக்கு. இதன் பொருள் அறியாமை அல்ல. ‘நடப்பது நடக்கட்டும் நமக்கு என்ன?’ என்ற அலட்சிய
மனோபாவம் தான்.
وَاِذْ
قَالَتْ اُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُوْنَ قَوْمَاْ ۙ اۨللّٰهُ مُهْلِكُهُمْ
اَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيْدًا ؕ قَالُوْا مَعْذِرَةً اِلٰى رَبِّكُمْ
وَلَعَلَّهُمْ يَتَّقُوْنَ
(அவ்வூரிலிருந்த
நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், “அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான
வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு
நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்; அதற்கு (அந்த நல்லடியார்கள்): “எங்கள் இறைவனிடம் (நம்)
பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து
வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று
கூறினார்கள்.”
7:164.
6.
உலக மோகம் தவிர்க்கப்பட வேண்டும்…
سنن أبي
داود - 3745 - عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ يُوشِكُ الْأُمَمُ أَنْ تَدَاعَى عَلَيْكُمْ كَمَا تَدَاعَى
الْأَكَلَةُ إِلَى قَصْعَتِهَا فَقَالَ قَائِلٌ وَمِنْ قِلَّةٍ نَحْنُ يَوْمَئِذٍ
قَالَ بَلْ أَنْتُمْ يَوْمَئِذٍ كَثِيرٌ وَلَكِنَّكُمْ غُثَاءٌ كَغُثَاءِ
السَّيْلِ وَلَيَنْزَعَنَّ اللَّهُ مِنْ صُدُورِ عَدُوِّكُمْ الْمَهَابَةَ
مِنْكُمْ وَلَيَقْذِفَنَّ اللَّهُ فِي قُلُوبِكُمْ الْوَهْنَ فَقَالَ قَائِلٌ يَا
رَسُولَ اللَّهِ وَمَا الْوَهْنُ قَالَ حُبُّ الدُّنْيَا وَكَرَاهِيَةُ
உணவு உண்பவர்கள்
தங்களது தட்டின் பக்கம் (மற்றவர்களை) அழைப்பது போல் ஒவ்வொரு திசையிலிருந்தும்
உங்களை கொன்றிட பிற சமுதாயங்கள் (மற்றவர்களுக்கு) அழைப்பு விடுக்கும் கட்டம் வரும்
என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ”அன்றைய தினம் நாங்கள் சிறு கூட்டமாக இருப்போம் என்பதாலா?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அந்நாளில் நீங்கள்
பெரும்பான்மையாகவே இருப்பீர்கள்; எனினும் (மழை/ஆற்று )
வெள்ளத்தில் மிதந்து செல்லும் நுரையைப் போன்று (மதிப்பிழந்தவர்களாக) இருப்பீர்கள்
..
உங்கள் எதிரிகளின்
உள்ளங்களிலிருந்து (உங்களைப் பற்றிய) பயம் இல்லாமல் போகும். உங்களுடைய உள்ளங்களில்
அல்லாஹ் “வஹ்னை’
ஏற்படுத்தி விடுவான் என்று பதிலளித்தார்கள்.”அல்லாஹ்வின் தூதரே வஹ்ன் என்றால் என்ன?” என்று நாங்கள்
கேட்டோம். ”உலகத்தை நேசிப்பது,
மரணத்தை வெறுப்பது” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்
: ஸவ்பான் (ரழி),
நூல்:அபூ தாவூது.3745 & அஹ்மத்21363+ 22397
7.
பொறுமையுடன் எதிர் கொள்ள வேண்டும்…
يٰۤـاَيُّهَا
الَّذِيْنَ اٰمَنُوا اصْبِرُوْا وَصَابِرُوْا وَرَابِطُوْا وَاتَّقُوا اللّٰهَ
لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ
முஃமின்களே!
பொறுமையுடன் இருங்கள்;
(இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக்
கொள்ளுங்கள்;
(இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள்
வெற்றியடைவீர்கள்! ( அல்குர்ஆன்: 3: 200 )
8.
பிற சமூக மக்களுடனான உறவை மேம்படுத்த வேண்டும்.
முஸ்லிம் உலகிற்கு
உதவிகள் செய்கிற, பக்கபலமாய் நிற்கிற மனித நேய மாண்பாளர்களாய் மிளிர்கிற, நீதி வழுவாமல் நடந்து கொள்கிற மாற்றுக் கருத்து கொண்ட சகோதர
சமய மக்களோடு நன்முறையில் நடந்து கொள்ள வேண்டும் என அல்லாஹ் வலியுறுத்துகின்றான்.
لَا
يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ
يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ إِنَّ
اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ (8)
”தீன் – இறைமார்க்கம் தொடர்பான விஷயங்களில் எவர்கள் உங்களுடன் போர் புரியவில்லையோ
உங்களை உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றவில்லையோ அவர்களிடம் நீங்கள்
நல்லவிதமாகவும்,
நீதியுடனும் நடந்து கொள்வதிலிருந்து அல்லாஹ் உங்களைத்
தடுப்பதில்லை”.
( அல்குர்ஆன்:60:8 )
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் முஸ்லிம் உம்மாவிற்கும், இஸ்லாத்திற்கும் உதவிகள் செய்கிற, பக்கபலமாய் நிற்கிற மனித நேய மாண்பாளர்களாய் மிளிர்கிற, நீதி வழுவாமல் நடந்து கொள்கிற மாற்றுக் கருத்து கொண்ட சகோதர
சமய மக்களோடு நடந்து கொண்ட விதங்கள் வரலாற்றில் ஏராளமாய் இடம் பெற்றிருக்கின்றன.
நபி {ஸல்} அவர்கள் மக்காவில் இறைநிராகரிப்பாளர்கள் கடுமையான நெருக்கடியும், துன்பமும் இழைத்த போது கிருஸ்துவ நாடான அபீ சீனியாவிற்கு ஹிஜ்ரத் அடைக்கலம் தேடி அனுப்பி வைத்தார்கள்.
அதே போன்று
அபூபக்ர் (ரலி) அவர்களும் அபீ சீனியாவிற்கு அடைக்கலம் (ஹிஜ்ரத்) புறப்பட்ட போது
நடைபெற்ற நெகிழ்வான நிகழ்வு..
عَنِ
الزُّهْرِىِّ قَالَ أَخْبَرَنِى عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ - رضى
الله عنها - قَالَتْ لَمْ أَعْقِلْ أَبَوَىَّ قَطُّ ، إِلاَّ وَهُمَا يَدِينَانِ
الدِّينَ ، وَلَمْ يَمُرَّ عَلَيْنَا يَوْمٌ إِلاَّ يَأْتِينَا فِيهِ رَسُولُ
اللَّهِ - صلى الله عليه وسلم - طَرَفَىِ النَّهَارِ بُكْرَةً وَعَشِيَّةً ، فَلَمَّا
ابْتُلِىَ الْمُسْلِمُونَ خَرَجَ أَبُو بَكْرٍ مُهَاجِرًا قِبَلَ الْحَبَشَةِ ،
حَتَّى إِذَا بَلَغَ بَرْكَ الْغِمَادِ لَقِيَهُ ابْنُ الدَّغِنَةِ - وَهْوَ
سَيِّدُ الْقَارَةِ - فَقَالَ أَيْنَ تُرِيدُ يَا أَبَا بَكْرٍ فَقَالَ أَبُو
بَكْرٍ أَخْرَجَنِى قَوْمِى فَأَنَا أُرِيدُ أَنْ أَسِيحَ فِى الأَرْضِ فَأَعْبُدَ
رَبِّى . قَالَ ابْنُ الدَّغِنَةِ إِنَّ مِثْلَكَ لاَ يَخْرُجُ وَلاَ يُخْرَجُ ،
فَإِنَّكَ تَكْسِبُ الْمَعْدُومَ ، وَتَصِلُ الرَّحِمَ ، وَتَحْمِلُ الْكَلَّ ،
وَتَقْرِى الضَّيْفَ ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ ، وَأَنَا لَكَ جَارٌ
فَارْجِعْ فَاعْبُدْ رَبَّكَ بِبِلاَدِكَ . فَارْتَحَلَ ابْنُ الدَّغِنَةِ ،
فَرَجَعَ مَعَ أَبِى بَكْرٍ ، فَطَافَ فِى أَشْرَافِ كُفَّارِ قُرَيْشٍ ، فَقَالَ
لَهُمْ إِنَّ أَبَا بَكْرٍ لاَ يَخْرُجُ مِثْلُهُ ، وَلاَ يُخْرَجُ ، أَتُخْرِجُونَ
رَجُلاً يُكْسِبُ الْمَعْدُومَ ، وَيَصِلُ الرَّحِمَ ، وَيَحْمِلُ الْكَلَّ ،
وَيَقْرِى الضَّيْفَ ، وَيُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ . فَأَنْفَذَتْ
قُرَيْشٌ جِوَارَ ابْنِ الدَّغِنَةِ وَآمَنُوا أَبَا بَكْرٍ وَقَالُوا لاِبْنِ
الدَّغِنَةِ مُرْ أَبَا بَكْرٍ فَلْيَعْبُدْ رَبَّهُ فِى دَارِهِ ، فَلْيُصَلِّ
وَلْيَقْرَأْ مَا شَاءَ ، وَلاَ يُؤْذِينَا بِذَلِكَ ، وَلاَ يَسْتَعْلِنْ بِهِ ،
فَإِنَّا قَدْ خَشِينَا أَنْ يَفْتِنَ أَبْنَاءَنَا وَنِسَاءَنَا . قَالَ ذَلِكَ
ابْنُ الدَّغِنَةِ لأَبِى بَكْرٍ ، فَطَفِقَ أَبُو بَكْرٍ يَعْبُدُ رَبَّهُ فِى
دَارِهِ ، وَلاَ يَسْتَعْلِنُ بِالصَّلاَةِ وَلاَ الْقِرَاءَةِ فِى غَيْرِ دَارِهِ
، ثُمَّ بَدَا لأَبِى بَكْرٍ فَابْتَنَى مَسْجِدًا بِفِنَاءِ دَارِهِ ، وَبَرَزَ
فَكَانَ يُصَلِّى فِيهِ ، وَيَقْرَأُ الْقُرْآنَ ، فَيَتَقَصَّفُ عَلَيْهِ نِسَاءُ
الْمُشْرِكِينَ وَأَبْنَاؤُهُمْ ، يَعْجَبُونَ وَيَنْظُرُونَ إِلَيْهِ ، وَكَانَ
أَبُو بَكْرٍ رَجُلاً بَكَّاءً لاَ يَمْلِكُ دَمْعَهُ حِينَ يَقْرَأُ الْقُرْآنَ ،
فَأَفْزَعَ ذَلِكَ أَشْرَافَ قُرَيْشٍ مِنَ الْمُشْرِكِينَ ، فَأَرْسَلُوا إِلَى
ابْنِ الدَّغِنَةِ فَقَدِمَ عَلَيْهِمْ ، فَقَالُوا لَهُ إِنَّا كُنَّا أَجَرْنَا
أَبَا بَكْرٍ عَلَى أَنْ يَعْبُدَ رَبَّهُ فِى دَارِهِ ، وَإِنَّهُ جَاوَزَ ذَلِكَ
، فَابْتَنَى مَسْجِدًا بِفِنَاءِ دَارِهِ ، وَأَعْلَنَ الصَّلاَةَ وَالْقِرَاءَةَ
، وَقَدْ خَشِينَا أَنْ يَفْتِنَ أَبْنَاءَنَا وَنِسَاءَنَا ، فَأْتِهِ فَإِنْ
أَحَبَّ أَنْ يَقْتَصِرَ عَلَى أَنْ يَعْبُدَ رَبَّهُ فِى دَارِهِ فَعَلَ ، وَإِنْ
أَبَى إِلاَّ أَنْ يُعْلِنَ ذَلِكَ فَسَلْهُ أَنْ يَرُدَّ إِلَيْكَ ذِمَّتَكَ ،
فَإِنَّا كَرِهْنَا أَنْ نُخْفِرَكَ ، وَلَسْنَا مُقِرِّينَ لأَبِى بَكْرٍ
الاِسْتِعْلاَنَ . قَالَتْ عَائِشَةُ فَأَتَى ابْنُ الدَّغِنَةِ أَبَا بَكْرٍ ،
فَقَالَ قَدْ عَلِمْتَ الَّذِى عَقَدْتُ لَكَ عَلَيْهِ ، فَإِمَّا أَنْ تَقْتَصِرَ
عَلَى ذَلِكَ وَإِمَّا أَنْ تَرُدَّ إِلَىَّ ذِمَّتِى ، فَإِنِّى لاَ أُحِبُّ أَنْ
تَسْمَعَ الْعَرَبُ أَنِّى أُخْفِرْتُ فِى رَجُلٍ عَقَدْتُ لَهُ . قَالَ أَبُو
بَكْرٍ إِنِّى أَرُدُّ إِلَيْكَ جِوَارَكَ ، وَأَرْضَى بِجِوَارِ اللَّهِ .
அன்னை ஆயிஷா (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “மக்கவில் முஸ்லிம்கள் இணைவைப்பாளர்களால் சோதனைக்கு உள்ளாக்கப்பட போது, அபூபக்ர் (ரலி) அவர்கள் நாடு துறந்து அபீசீனியாவை நோக்கி
ஹிஜ்ரத் சென்றார்கள்.
யமன் செல்லும்
வழியில் அல்காரா குலத்தின் தலைவர் இப்னு தஃகினா என்பவரை சந்தித்தார்கள்.
தம் நோக்கத்தையும், முஸ்லிம்கள் மக்காவில் சந்தித்துவரும் கஷ்டங்களையும்
அவரிடம் தெரிவித்தார்கள்.
அதற்கு, இப்னு தஃகினா “உம்மைப் போன்றவர்கள் வெளியேறவும் கூடாது; வெளியேற்றப்படவும் கூடாது. ஏனெனில், நீர் ஏழைகளுக்காக உழைக்கின்றீர், உறவைப் பேணுகிறீர்; சிரமப்படுவோரின் சுமையைச் சுமக்கின்றீர்; விருந்தினர்களை உபசரிக்கின்றீர்; சோதனைகளில் ஆட்பட்டோருக்கு உதவுகின்றீர். எனவே, நான் உமக்கு அடைக்கலம் தருகின்றேன். ஆகவே, திரும்பிச் சென்று உமது ஊரிலேயே இறைவனை வழிபடுவீராக!” என்று கூறினார்.
அத்தோடு நின்று
விடாமால், அபூபக்ர் (ரலி) அவர்களை அழைத்துக் கொண்டு
குறைஷித்தலைவர்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தி தாம் அடைக்கலம்
தந்திருப்பதாகவும் அதை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
ஆகவே, குறைஷிகள் இப்னு தஃகினாவின் அடைக்கலத்தை ஏற்று அபூபக்ர்
(ரலி) அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தனர்.
மேலும், குறைஷிகள் இப்னு தஃகினாவிடம் ” தமது வீட்டில் தமது இறைவனைத் தொழுது வருமாறும் விரும்பியதை ஓதுமாறும் அதனால் எங்களுக்குத் தொந்தரவு இல்லாமல் பார்த்துக்கொள்ளுமாறும்
அதை பகிரங்கமாகச் செய்யாதிருக்கும் படியும் அபூபக்கருக்கு நீர் கூறுவீராக. ஏனெனில் அவர் எங்களது மனைவி மக்களை குழப்பி சோதனைக்குள்ளாக்கி விடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம்” என்றனர்.
இதை இப்னு தஃகினா அபூபக்கர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தார் . பிறகு அபூபக்கர் (ரலி)
அவர்கள் வீட்டிற்கு வெளியே தொழுது ஓதி பகிரங்கப்படுத்தாமல் தம் வீட்டிற்குள்ளேயே தம் இறைவனை வணங்கலானார்கள்.
பிறகு அவர்களுக்கு ஏதோ தோன்ற தமது வீட்டிற்கு முன்புறத்திலுள்ள காலியிடத்தில் தொழுமிடம் ஒன்றைக் கட்டி வெளியே வந்து தொழுதார்கள். அந்தப் இடத்தில் தொழவும் குர்ஆன் ஓதவும் தொடங்கினார்கள்.
இணைவைப்பவர்களின் மனைவிமக்கள் திரண்டு வந்து ஆச்சரியத்துடன் அவரை கவனிக்கலானார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் குர்ஆன் ஓதும் போது மனம் உருகி வெளிப்படும் தமது கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுபவராக இருந்தார்கள். இணைவைப்பவர்களான குரைஷிப் பிரமுகர்களுக்கு இது கலக்கத்தை ஏற்படுத்தியது.
குறைஷிகள் இப்னு
தஃகினாவை அழைத்து வரச் செய்து நடந்தவற்றைக் கூறினார்கள். அவர் அடைக்கலத்திற்கான நிபந்தனைகளை அபூபக்ர் (ரலி) அவர்களிடத்திலே
நினைவு படுத்திய போது அபூபக்கர் (ரலி) அவர்கள் “இப்னு தஃகினாவே! உம் அடைக்கலத்தை நீர் திரும்ப எடுத்துக் கொள்ளும்! நான் அல்லாஹ்வின் அடைக்கலத்தையே திருப்தியுறுகின்றேன்” என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )
எந்த அளவுக்கு பிற
சமூக மக்களுடனான உறவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பதை வரலாறு நமக்கு
உணர்த்துகின்றது.
عمر بن
الخطاب يهدي رجلا مشرك
وفي
موقف آخر لطيف يرويه عبد الله بن عمر -رضي الله عنهما-، ويذكر فيه أن عمر بن
الخطاب رضي الله عنه رأى حُلَّة سيراء[6] عند باب المسجد، فقال: يا رسول الله، لو
اشتريتَ هذه فلبستَها يوم الجمعة وللوفد إذا قدموا عليك. فقال رسول الله صلى الله
عليه وسلم: «إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لاَ خَلاَقَ لَهُ فِي الآخِرَةِ». ثم
جاءت رسولَ الله صلى الله عليه وسلم منها حُلَلٌ، فأعطى عمر بن الخطاب رضي الله
عنه منها حُلَّةً، فقال عمر: يا رسول الله، كَسَوْتَنِيهَا وقد قلت في حُلَّة
عطارد ما قلت؟! قال رسول الله صلى الله عليه وسلم: «إِنِّي لَمْ أَكْسُكَهَا
لِتَلْبَسَهَا». فكساها عمر بن الخطاب رضي الله عنه أخًا بمكة مشركًا
فعمر
رضي الله عنه يُهْدِي هذه الحُلة لأحد إخوانه المشركين، ورسول الله صلى الله عليه
وسلم لا يعترض، وإقراره صلى الله عليه وسلم -كما هم معلوم- سُنَّة.
يقول
الإمام النووي -رحمه الله- معلقًا على هذا الموقف: «وفي هذا دليلٌ لجواز صلة
الأقارب الكفار، والإحسان إليهم، وجواز الهدية إلى الكفار»]
உமர் (ரலி) அவர்களுக்கு நபி {ஸல்} அவர்கள் பட்டாடை
ஒன்றை அன்பளிப்பு செய்தார்கள். அதை மக்காவில் வாழ்ந்து வந்த தம் உறவினரான உஸ்மான் என்பவருக்கு
இணை வைப்பாளருக்கு அன்பளிப்பு செய்தார்கள் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.
இதை நபி {ஸல்} அவர்கள் ஆமோதித்தார்கள். இந்த நபிமொழியை ஆதாரமாகக் கொண்டு இணைவைப்பாளராய்
இருக்கிற உறவினர்களுக்கு அன்பளிப்பு செய்யலாம் என இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் முஸ்லிமின்
ஷரஹான மின்ஹாஜில் குறிப்பிடுகின்றார்கள்.
رواه عبدالرزاق في مصنفه» وكان بعض أجلاء التابعين يعطون نصيباً
من صدقة الفطر لرهبان النصارى ولايرون في ذلك حرجاً،بل ذهب بعضهم كعكرمة وابن
سيرين والزهري إلى جواز إعطائهم من الزكاة نفسه
தாபியீன்களில் இக்ரிமா (ரஹ்), இப்னு ஸீரீன் (ரஹ்),
ஜுஹ்ரீ (ரஹ்) ஆகியோர் கிறிஸ்தவப் பாதிரிகளுக்கு ஸதகத்துல் ஃபித்ரை வழங்கலாம் எனவும்,
குற்றமில்லை எனவும் குறிப்பிடுகின்றார்கள்.
وعبدالله
بن عمرو يوصي غلامه أن يعطي جاره اليهودي من الأضحية ،ويكرر الوصية مرة بعد مرة
،حتى دهش الغلام،وسأله عن سر هذه العناية بجار يهودي،قال ابن عمرو:إن النبي صلى
الله عليه وسلم قال:«مازال جبريل يوصيني بالجار حتى ظننت أنه سيورثه» «رواه
أبوداود والترمذي».
மேலும், ஈதுல் அள்ஹா அன்று தமது வீட்டில் அறுக்கப்பட்ட
குர்பானி பிராணியின் இறைச்சியை தமது அண்டை வீட்டாருக்கான யூதருக்கு வழங்குமாறு மீண்டும்
மீண்டும் கூறினார்கள். அவரின் அடிமை திகைத்தவாறு இவ்வளவு வலியுறுத்துவதன் ரகசியன் என்ன
என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் “அண்டை வீட்டாரின் கடமைகளை நிறைவேற்றும் விஷயத்தில்
ஜிப்ரீயீல் (அலை) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டே இருந்தார்கள். எங்கே என்னிடம்
சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லி விடுவார்களோ என்று எண்ணினேன்.
எனவே, நம்முடன் வசிக்கக் கூடிய வியாபாரம் செய்யக்கூடிய
பழகக்கூடிய சகோதர சமய மக்களோடு இருக்கும் உறவை மேம்படுத்துவதோடு, முன்பை விட பெருந்தன்மையோடும்,
விசாலமான எண்ணத்தோடும் நடந்து கொள்ள வேண்டும்.
பாய்மார்கள் இயற்கை சீற்றம் வந்தால் தான் இரக்கத்தோடு
நடப்பார்கள், இரத்தம் தேவை என்றால் தான் உதிரம் கொடுப்பார்கள் என்ற நிலையை மாற்றி எல்லா
காலங்களிலும் முஸ்லிம்கள் இணக்கத்தோடு நடந்து கொள்வார்கள் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
காலத்திற்கு தேவையான சிறந்த பதிவு
ReplyDelete