Thursday, 14 March 2024

ஈமானிய வாழ்வின் உயிர் நாடி!!

 

ஈமானிய வாழ்வின் உயிர் நாடி!!



அல்ஹம்துலில்லாஹ்! ரஜப் மாதத்தின் துவக்கத்தில் இருந்து ஆவலோடு நாம் கேட்டுப் பிரார்த்தித்த ரமழான் இதோ வந்து விட்டது. 

அதற்குள் மூன்று நோன்புகள் ஓடி நான்காவது நோன்பும் வந்து விட்டது. நான்கு தராவீஹ் தொழுகைகள் முடிந்து விட்டது.

இந்த ரமழானை எப்படி அமைக்க வேண்டும் என்று முன் கூட்டியே திட்டமிட்ட படி நாம் அமைத்துக் கொண்டோமா? அல்லது பழையபடி கடந்த பல ஆண்டுகளாக ரமழானை சராசரியாக கடந்தோமே அதே போன்று தான் இந்த ரமழானும் அமையப் போகிறதா?

எப்போதும் நமக்கு உள்ள ஒரு பழக்கம் எந்த ஒரு நன்மையான காரியத்தையும் அது கடந்து சென்றதன் பின்னால் நான் அப்படி செய்யவில்லையே? இப்படி செய்யாமல் விட்டு விட்டேனே என்று அங்கலாய்த்துக் கொள்வது தான்.

நம்முடைய மார்க்கம் இஸ்லாம் நமக்கு மிகவும் இலகுவான முறையில் நமக்கு அமல்களை, வணக்க வழிபாடுகளை, நன்மைகளை, நல்லறங்களை வழங்கி இருக்கின்றது.

கடந்த காலங்களில் நாம் செய்யாமல் விட்டு விட்ட நல்லறங்களை, நன்மையான காரியங்களை எண்ணி நினைத்து வருந்தி அப்படி அங்கலாய்க்க அனுமதிப்பதில்லை.

மாறாக, கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கடந்த காலங்களில் செய்யாமல் விட்டு விட்ட  நன்மையான காரியங்களை ஈடு செய்ய முயற்சி செய்ய வேண்டும்.

அது தான் பெருமானார் (ஸல்) அவர்களும் மேன்மக்களான நபித்தோழர்களும், ஸலஃபுகளான ஸாலிஹீன்களும் நமக்கு வாழ்ந்து காட்டிச் சென்றுள்ள வாழ்க்கையாகும்.

உஹதில் பெரும் தோல்வியோடு திரும்பிய நபித்தோழர்களை அல்லாஹ் நல்வழிப்படுத்தும் போது கூறிய வார்த்தைகளை கொண்டு தான் சாமானிய இறைநம்பிக்கையாளர்களை ஆசுவாசப்படுத்தும் போதும் அல்லாஹ் பயன்படுத்துகின்றான்.

اِذْ تُصْعِدُوْنَ وَلَا تَلْوٗنَ عَلٰٓى اَحَدٍ وَّالرَّسُوْلُ يَدْعُوْكُمْ فِىْۤ اُخْرٰٮكُمْ فَاَثَابَكُمْ غَمًّا ۢ بِغَمٍّ لِّـكَيْلَا تَحْزَنُوْا عَلٰى مَا فَاتَكُمْ وَلَا مَاۤ اَصَابَكُمْ‌ؕ وَاللّٰهُ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ‏

(நினைவு கூறுங்கள்! உஹது களத்தில்) உங்கள் பின்னால் இருந்து இறைதூதர் உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் எவரையும் திரும்பிப் பார்க்காமல் மேட்டின்மேல் ஏறிக் கொள்ள ஓடிக் கொண்டிருந்தீர்கள்; ஆகவே (இவ்வாறு இறை தூதருக்கு நீங்கள் கொடுத்த துக்கத்தின்) பலனாக இறைவன் துக்கத்தின்மேல் துக்கத்தை உங்களுக்குக் கொடுத்தான்; ஏனெனில் உங்களுக்குக் கிடைக்க வேண்டியது தவறி விட்டாலோ, உங்களுக்குச் சோதனைகள் ஏற்பட்டாலோ நீங்கள் (சோர்வும்) கவலையும் அடையாது (பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்); இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.

( அல்குர்ஆன்: 3: 153 )

لِّـكَيْلَا تَاْسَوْا عَلٰى مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوْا بِمَاۤ اٰتٰٮكُمْ‌ؕ وَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرِۙ‏

உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. ( அல்குர்ஆன்: 57: 23 )

எனவே, தப்பிப்போன அமல்களை குறித்து அங்கலாய்க்காமல், செய்யாமல் விட்டு விட்ட நன்மையான காரியங்கள் குறித்து கை சேதப்படாமல் அதை ஈடு செய்யும் வகையில் நமது இஸ்லாமிய வாழ்வை, ஈமானிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள நாம் முன் வர வேண்டும்.

தஹஜ்ஜுத்'' நோய் போன்ற காரணங்களால் தொழமுடியாமல் போனால் அதை பகலில் நிறைவேற்றலாம் என்றும் பெருமானார் நபி(ஸல்) அவர்கள் தன் செயல்பாட்டின் மூலம் குறிப்பிட்டுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் நோயின் காரணமாக அல்லது வேறு காரணமாகவோ இரவில் தொழுகை இழந்து விட்டால் பகலில் 12 ரக்அத்துகள் தொழுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) ( நூல்கள்: முஸ்லிம், திர்மிதி, நஸயீ)

உபரித் தொழுகைகளில் பேணிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நபி(ஸல்) அவர்கள் இரவில் தொழ முடியாமல் போனதால் பகலில் தொழுதுள்ளார்கள்.

والرسول ﷺ فاته قضاء سنة الظهر، ليس من تقصير، وإنما شغل بطاعة، شغلته طاعة عن طاعة، شغله وفد بني عبد القيس، ماذا فعل؟ استدركها.

وقال لما سئل:  وإنه أتاني ناس من عبد القيس فشغلوني عن الركعتين اللتين بعد الظهر فهما هاتان ، كما في البخاري عندما رأته أم سلمة يصلي بعد العصر وكان عندها نساء، فقالت أم سلمة للجارية: قومي بجنبه، اذهبي إلى النبي ﷺ، فقومي بجنبه، فقولي له: تقول لك أم سلمة: يا رسول الله سمعتك تنهى عن هاتين، وأراك تصليهما؟ فإن أشار بيده فاستأخري عنه، ففعلت الجارية، فأشار بيده، فاستأخرت عنه، ثم بعد الصلاة قال: يا بنت أبي أمية سألت عن الركعتين بعد العصر، وإنه أتاني ناس من عبد القيس  وذكر الحديث [رواه البخاري: 1233

பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு நாள் உம்மு ஸலமா ரலி அவர்கள் வீட்டில் இருக்கும் போது அஸர் தொழுகைக்கு பிறகு இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள்.

உம்மு ஸலமா ரலி அவர்கள் தங்களது அடிமைப் பெண்ணிடம் "அஸர் தொழுகைக்கு பிறகு எந்த தொழுகையும் இல்லை என்று நீங்கள் கூறி இருக்கின்றீர்களே? பிறகு ஏன் நீங்கள் இப்போது தொழுதீர்கள்?" என்று நபி ஸல் அவர்களிடம் தாம் கேட்க சொன்னதாக கேட்டு அனுப்பி வைத்தார்கள். 

அப்போது பெருமானார் (ஸல்) அவர்கள் அப்து கைஸ் கூட்டத்தார் வருகை தந்ததால் அவர்களிடம் பேசி நேரம் ஆகிவிட்டது. ஃபர்ள் தொழுகையின் நேரமும் நெருங்கி விட ளுஹர் தொழுகையின் முன் ஸுன்னத் தப்பிப் போனது. 

தற்போது நேரம் கிடைக்கவே விட்டுப் போன அந்த தொழுகையை நான் நிறைவேற்றுகின்றேன் என்று பதிலளித்தார்கள்.

وَهُوَ الَّذِىْ جَعَلَ الَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِّمَنْ اَرَادَ اَنْ يَّذَّكَّرَ اَوْ اَرَادَ شُكُوْرًا‏

இன்னும் சிந்திக்க விரும்புபவருக்கு, அல்லது நன்றி செலுத்த விரும்புபவருக்கு அவன்தான் இரவையும், பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான். ( அல்குர்ஆன்: 25: 62 )

 

قال الله عز وجل {وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِّمَنْ أَرَادَ أَن يَذَّكَّرَ أَوْ أَرَادَ شُكُورًا}. هذه الآية فيها إرشاد لاستدراك ما فات. ووجه الدلالة في الآية هو “خلفة”، قال العلماء في تفسيرها خلفةً أي من فاته عمل الليل أدركه في النهار ومن فاته عمل النهار أدركه في الليل، يُفهم من هذه الآية أن على المؤمن ألا يعيش يومه عبثًا ظانًا أنه يوم ضائع يعيشه وينتهي، بل عليه إن فاته شيء أن يعوضه.

இந்த இறைவசனத்திற்கு விளக்கம் தருகிற அறிஞர் பெருமக்கள் "பகல் நேரத்தில் ஒரு அமல் தப்பிப் போய் விட்டது என்றால் இரவு நேரத்தில் அதை நிறைவேற்ற வேண்டும். இரவு நேரத்தில் ஒரு அமல் தப்பிப் போய் விட்டது என்றால் அதை பகல் நேரத்தில் நிறைவேற்ற வேண்டும். அப்படி நிறைவேற்றும் அடிப்படையில் தான் அல்லாஹ் இந்த பகல்/இரவு ஆகியவற்றின் இயக்கத்தை அமைத்துள்ளான்.

தமக்கு நன்மையான காரியம் தப்பிப் போய் விட்டது, இன்றைய நாள் இப்படி வீணாகி விட்டது என்று எந்த ஒரு இறைநம்பிக்கையாளனும் எண்ணி முடங்கி விடக்கூடாது. மாறாக, மாற்று நேரத்தில் அதை நிறைவேற்றி உடனடியாக ஈடு செய்திட வேண்டும்.

கவலை தான் ஈமானிய வாழ்வின் உயிர் நாடி...

صلّى عبدالله بن عمر على جنازة ثم انصرف من المسجد إلى بيته بعد تأديته الصلاة فجاءه رجل وقال له: يا عبدالله بن عمر ألا تسمع ما يقول أبو هريرة؟ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ ﷺ  يَقُولُ: «مَنْ خَرَجَ مَعَ جَنَازَةٍ مِنْ بَيْتِهَا، وَصَلَّى عَلَيْهَا، ثُمَّ تَبِعَهَا حَتَّى تُدْفَنَ كَانَ لَهُ قِيرَاطَانِ مِنْ أَجْرٍ، كُلُّ قِيرَاطٍ مِثْلُ أُحُدٍ، وَمَنْ صَلَّى عَلَيْهَا، ثُمَّ رَجَعَ، كَانَ لَهُ مِنَ الْأَجْرِ مِثْلُ أُحُدٍ»؟ ويُقصد من هذا الحديث أن من يصلي على جنازة ثم يتبعها-من الرجال- حتى تدفن أي حتى يحضِر الدفن، فجزاؤهُ أجر من الله مقدار قيراطان يعني مثل جبل أحد مرتين.

 كانت تلك المرة الأولى التي يسمع فيها ابن عمر ذلك الحديث في حياته، فأرسل خباب إلى أم المؤمنين عائشة رضي الله عنها حتى يسألها عن صحة قول أبي هريرة ثم يرجع إليه بجوابها، وما كان هذا إلا  لتعجب ابن عمر من عدم سماعه لهذا الحديث سلفًا.

مر من الزمن حتى حان وقت عودة خباب وكان ابن عمر حينها يأخذ قبضةً من حصوات المسجد يمسكها بيده ويقلبها بين كفييهِ توترًا ينتظر عودة الرسول الذي أرسله. وفي لحظات الترقب والانتظار أقبل عليه خباب حاملًا الإجابة ففزع إليه ابن عمر حينما رآه وسأله ما قالت؟  -يقصد أم المؤمنين-  قال: إنها تقول صَدَق أبو هريرة -أي صحّ حديث الرجل- ومن شدة وَقع الإجابة ضَرَبَ ابن عمر بالحصى التي كانت في يده بالأرض وقال في حسرة: لقد فرّطنا في قراريط كثيرة!.

ஆமிர் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது பெரிய வீட்டுக்காரர் கப்பாப் அல்மதனீ (ரலி) அவர்கள் அங்கு வந்து, “அப்துல்லாஹ் பின் உமர் அவர்களே! ஒரு ஜனாஸாவின் வீட்டிலிருந்து அதனுடன் புறப்பட்டுச் சென்று, (ஜனாஸாத் தொழுகை) தொழுதுவிட்டு, அடக்கம் செய்யப்படும்வரை அதைப் பின்தொடர்கின்றவருக்கு இரண்டு கீராத்கள் நன்மை உண்டு; ஒவ்வொரு கீராத்தும் உஹுத் மலை அளவுடையதாகும்; (ஜனாஸாத்) தொழுது விட்டு (அடக்கம் செய்யப்படும்வரை காத்திராமல்) திரும்பிவிடுகின்றவருக்கு உஹுத் மலையளவு (ஒரு கீராத்’) நன்மை உண்டுஎன அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிவருகின் றார்களே?” என்று கேட்டார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், கப்பாபை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அது பற்றிக் கேட்டுவிட்டு அவர்கள் அளிக்கும் பதிலைத் தம்மிடம் வந்து தெரிவிக்குமாறு அனுப்பிவைத்தார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், போனவர் திரும்பி வரும்வரை பள்ளிவாசல் தரையில் கிடந்த சிறு கற்களில் ஒரு கைப்பிடியளவு அள்ளி தமது கையில் வைத்து கிளறிக்கொண்டிருந்தார்கள்.

(கப்பாப் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று கேட்டதற்கு) ஆயிஷா (ரலி) அவர் கள் அபூஹுரைரா சொன்னது உண்மையேஎன்றார்கள். (இதைக் கேள்விப்பட்ட) அப்துல் லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தமது கையி லிருந்த சிறு கற்களை கீழே எறிந்துவிட்டு, “நாம் ஏராளமான கீராத்’ (நன்மை)களை தவற விட்டுவிட்டோம்என்று கூறினார்கள்.

روي أن حاتم الأصم وهو رجل صالح فاتته صلاة العصر في جماعة، فصلاها في البيت، فجلس يبكي؛ لأن صلاة الجماعة قد فاتته -نقول هذا لكثيرٍ من المؤمنين الذين تفوتهم الصلاة بكليتها حتى يخرج وقتها- فجاءه أصحابه يعزونه على فوات صلاة الجماعة، فنظر إليهم وكانوا قلة فبكى، قالوا: ما يبكيك رحمك الله؟ قال: لو مات ابن من أبنائي لأتى أهل المدينة كلهم يعزونني، أما أن تفوتني صلاة فلا يأتيني إلا بعض أهل المدينة!! ووالله لموت أبنائي جميعاً أهون عندي من فوات صلاة الجماعة: {تَوَلَّوْا وَأَعْيُنُهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ حَزَناً أَلّا يَجِدُوا مَا يُنْفِقُونَ} [التوبة:٩٢] ندم لأنه ترك الطاعة، وندم لأنه ارتكب المعصية، فهذه من ساعات الندم.

ஹாத்தமுல் அஸம்மு (ரஹ்) அவர்கள்  ஒரு நாள் அஸர் தொழுகையின் இமாம் ஜமாஅத்தை தவற விட்டார்கள். பின்னர் தமது வீட்டில் அஸர் தொழுகையை தொழுது விட்டு தவறிப் போன அஸர் தொழுகையின் ஜமாஅத் குறித்த கவலையால் அழுது கொண்டு இருந்தார்கள்.

அஸர் தொழுகையை முடித்து வெளியே வந்த அவர்களின் தோழர்களில் சிலர் அழுது கொண்டிருந்த ஹாத்தமுல் அஸம்மு (ரஹ்) அவர்களிடம் வந்து, ஏன் நீங்கள் அஸர் ஜமாஅத்துக்கு வர வில்லை? என்று கேட்டு விட்டு எதற்காக இப்படி அழுகின்றீர்கள்? என வினவினார்கள்.

அதற்கு, ஹாத்தமுல் அஸம்மு (ரஹ்) அவர்கள் "நான் பெற்றெடுத்த மக்களில் ஒருவர் இறந்து போயிருந்தால் இந்நேரம் இந்த ஊரின் அனைத்து மக்களும் வந்து என்னிடம் துக்கம் விசாரிக்க வருகை தந்திருப்பார்கள். ஆனால், நான் தவற விட்ட ஒரு வக்த் ஜமாஅத் தொழுகைக்காக இந்த ஊரின் குறைவான மக்களே "ஏன் ஜமாஅத் தொழுகையில் பங்கேற்க வில்லை" என்று விசாரித்து செல்கின்றனர்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக சொல்கிறேன். நான் பெற்றெடுத்த எனது மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் இறந்து போனாலும் அந்த துக்கத்தை விட உண்மையில் எனக்கு ஒரு வக்த் தொழுகை தவறிப் போகுமானால் அதுவே மிகப் பெரிய இழப்பாக எனக்கு தோன்றும்" என்று கூறினார்கள்.

மேன்மக்களான ஸஹாபாக்களும், ஸலஃபுகளும் நன்மையான காரியங்களை அல்லது வணக்க வழிபாடுகளின் ஒரு பகுதியை செய்ய முடியாமல் தவறிப் போகும் போது அதற்காக வேண்டி எந்தளவு கவலைகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்பதையும், அதற்கு ஈடான அல்லது அதை ஈடு செய்கிற நன்மையான நல்லறங்களில் உடனே ஈடுபட்டிருப்பதை வரலாறு நெடுகிலும் காண முடிகிறது.

حينما حضر عمرو بن العاص الموت بكى طويلاً و حول وجهه إلى الجدار، فقال له ابنه: "ما يبكيك يا أبتاه ؟ أما بشرك رسول الله". فأقبل عمرو رضي الله عنه إليهم بوجهه و قال: "إن أفضل ما نعد شهادة أن لا إله إلا الله، وأن محمداً رسول الله، إني كنت على أطباق ثلاث. لقد رأيتني و ما أحد أشد بغضاً لرسول الله صلى الله عليه و سلم مني، و لا أحب إلى أن أكون قد استمكنت منه فقتلته، فلو مت على تلك الحال لكنت من أهل النار. فلما جعل الله الإسلام في قلبي، أتيت النبي صلى الله عليه و سلم فقلت: ابسط يمينك فلأبايعنك، فبسط يمينه، قال: فقضبت يدي. فقال: «ما لك يا عمرو ؟» قلت: أردت أن أشترط فقال: «تشترط ماذا ؟» قلت: أن يغفر لي . فقال: «أما علمت أن الإسلام يهدم ما كان قبله، وأن الهجرة تهدم ما كان قبلها، وأن الحج يهدم ما كان قبله ؟» [مسلم] وما كان أحد أحب إلي من رسول الله صلى الله عليه وسلم ولا أحلى في عيني منه، وما كنت أطيق أن أملأ عيني منه إجلالاً له، ولو قيل لي صفه لما إستطعت أن أصفه، لأني لم أكن أملأ عيني منه، ولو مت على تلك الحال لرجوت أن أكون من أهل الجنة، ثم ولينا أشياء، ما أدري ما حالي فيها ؟ فإذا أنا مت فلا تصحبني نائحة ولا نار، فإذا دفنتموني فسنوا علي التراب سنا ثم أقيموا حول قبري قدر ما تنحر جزور و يقسم لحمها، حتى أستأنس بكم، وأنظر ماذا أراجع به رسل ربي ؟"

அப்துர் ரஹ்மான் இப்னு ஷுமாசா அல் மஹ்ரி (ரஹ்) கூறியதாவது; இறக்கும் தருவாயில் இருந்த அம்ரு இப்னு அல் ஆஸ் (ரல)] அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவர்கள் நீண்ட நேரம் அழுதார்கள். பின்பு சுவற்றின் பக்கம் தமது முகத்தை திருப்பிக் கொண்டார்கள். அப்போது அவர்களின் மகன், என் தந்தையே! உங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்னின்ன நற்செய்திகள கூறவில்லையா? என (ஆறுதல் சொல்லும் வகையில்) கேட்டார். உடனே அம்ரு இப்னு அல்ஆஸ் (ரலி) அவர்கள் தமது முகத்தை தம் புதல்வரை நோக்கித்  திருப்பி பின்வருமாறு கூறினார்கள்;

அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் கூறியதே நமது சேமிப்புகளில் சிறந்ததாகும். நான் என் வாழ்நாளில் மூன்று கட்டங்களை கடந்து வந்துள்ளேன்.

முதலாவதுகட்டத்தில் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மீது கடுமையான வெறுப்பு கொண்டவர் என்னைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது என்று நான் கருதினேன். என்னால் இயன்றால் அவர்களை கொன்றுவிடவேண்டும் என்பதே எனக்கு விருப்பமானதாக இருந்தது. அந்த கால கட்டத்தில் மட்டும் நான் மரணித்திருந்தால் நரகவாதிகளில் ஒருவனாக நான் ஆகியிருப்பேன்.

[இராண்டாவது கால கட்டத்தில்] அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தை புகுத்தினான். அப்போது நான் நபியவர்களிடம் சென்று உங்கள் வல்லக்கரத்தை நீட்டுங்கள் நான் உங்களிடம் உறுதிப் பிரமாணம் [பைஅத்] அளிக்கிறேன் என்றேன். நபி[ஸல்] அவர்கள் தமது வலது கரத்தை நீட்டினார்கள். உடனே நான் எனது கரத்தை இழுத்துக் கொண்டேன். நபி[ஸல்] அவர்கள், அம்ரே! உமக்கு என்ன ஆயிற்று என்றார்கள். நான் சில நிபந்தனைகளை விதிக்க விரும்புகிறேன் என்று கூறினேன். நபி[ஸல்] அவர்கள் என்ன நிபந்தனை விதிக்கப் போகிறீர் என்று கேட்டார்கள்.

என் [முந்தைய] பாவங்கள் மன்னிக்கப்படவேண்டும் என்று கூறினேன். அப்போது நபி[ஸல்] அவர்கள் உங்கள் முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும். ஹஜ்ஜும் முந்தையா பாவங்களை அழித்துவிடும் என்பது உமக்கு தெரியாதா என்றார்கள். [பின்பு நான் இஸ்லாத்தை தழுவினேன்] அப்போது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களை விட மிகவும் பிரியமானவர் எவரும் எனக்கில்லை. எனது பார்வைக்கு அவர்களைவிட கண்ணியமானவர்கள் எவரும் இருக்கவில்லை. அப்போது அவர்கள் மீது நான் கொண்ட மரியாதையினால் என் கண்கள் நிரம்ப, அவர்களை பார்க்கக் கூட என்னால் முடியவில்லை. அவர்களை வர்ணித்துக் கூறுமாறு என்னிடம் கேட்கப்பட்டால் அதற்கும் என்னால் இயலாது. ஏனெனில் அவர்கள் மீது நான் கொண்ட மரியாதையினால், என் கண்கள் நிரம்ப அவர்களை நான் பார்த்திருக்கவில்லை. அந்த நிலையில் நான் மரணித்திருந்தால் நான் சொர்க்கவாசிகளில் ஒருவானாக ஆகியிருப்பேன் என்றே கருதுகிறேன்.

பிறகு [மூன்றவாது கட்டத்தில்] பல்வேறு பொறுப்புகளை நாம் வகித்தோம். அவற்றில் எனது நிலை என்ன என்று எனக்குத்தெரியாது. [ஹதீஸ் சுருக்கம் நூல்;முஸ்லிம்]

கவலையோடு நின்று விடாமல் ஈடு செய்வதில் முனைப்பு காட்டுவது ஈமானிய வாழ்வின் ஆதாரம்…

1.   அனஸ் இப்னு நள்ர் (ரலி)

جاء أنس بن النضر للنبي ﷺ متألمًا متكدرًا بعدما فاتته غزوة بدر فقال: (يا رسول الله غبتُ عن أول قتال قاتلت فيه المشركين -يعني يقولها مستنكرًا أنا أنس بن النضر أغيب عنك أنت يا رسول الله في أول قتال تقاتل فيه المشركين- وأكمل قائلاً: لَئن أشهدني الله قتال المشركين؛ لَيَرَيَنَّ الله ما أصنع).

إن المرء ليعجب من قوله ورباطة جأشه، لم يقل سترى يا رسول الله، سترى ما يمكنني صنعه بل كان جل تفكيره هو رضا الله، فهو يؤمن بأن رسول الله ﷺ لا يملك  شيء، فالأمر بيد الله عز وجل، وأضاف قائلاً : (يا رسول الله أأنا أغيب عنك؟!، أأنا أغيب عن قتال المشركين كأنني منافق أو من هؤلاء الجبناء؟!، لَئن عشتُ وشهدتُ قتالًا آخر للمشركين؛ ليرنّ الله ما أصنع)

هل منا من يتجرأ أن  يقول يارب سترى ما يمكنني صنعه؟، ثم وقعت معركة غزوة أحد، فكان أنس بن النضر من أوائل الناس الذين يشهدونها؛ ليشارك صادقًا ملتزمًا بوعده.

سعد بن معاذ الصحابي العظيم الذي اهتز عرش الرحمن لوفاته، لكم الآن أن تتخيلوا أن سعد هذا يقول عن أنس بن النضر “والله يا رسول لم أستطع أن أفعل ما فعل”، يثور التساؤل ماذا فعل أنس؟ ما الذي قام به أنس ويعجز سعد بن معاذ عن فعله؟  يذكر عدد من الصحابة أنهم (وجدوا أنسًا بعد المعركة شهيدًا ممثلاً به -ويعني أن المشركين شوهوا جسده ووجه- ووجدوا به بضعًا وثمانين ضربة، ما بين ضربة بسيف أو طعنة برمح أو رمية بسهم).

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:- “என் தந்தையின் சகோதரர் அனஸ் பின் நள்ர் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல் எங்கோ சென்று விட்டார். அவர் (திரும்பி வந்தவுடன்) அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் இணை வைப்பவர்களுடன் நடத்திய முதல் போரில் நான் கலந்து கொள்ளவில்லை; இணைவைப்பவர்களுக்கெதிரான போரில் அல்லாஹ் என்னைப் பங்குபெற வைத்திருந்தால் நான் செய்வதை (வீரமாகப் போரிடுவதை) அவன் நிச்சயம் பார்த்திருப்பான். பின்பு உஹுதுப் போரின் போது முஸ்லிம்கள் தோல்வி யுற்ற நேரத்தில் அவர், இறைவா! என் தோழர்கள் செய்த (பின்வாங்கிச் சென்ற) செயலுக்காக உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். இணைவைப்பவர்கள் செய்த (நபியவர்களுக்கெதிரான) இந்தப் போருக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று அறிவிக்கிறேன் என்று கூறிவிட்டு, பிறகு (போர்க் களத்தில்) முன்னேறிச் சென்றார். சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் அவருக்கெதிரில் வரக் (கண்டு), சஅத் பின் முஆத் அவர்களே! நான் சொர்க்கத்தையே விரும்புகிறேன். என் தந்தை நள்ருடைய இறைவன் மீது சத்தியமாக! நான் சொர்க்கத்தின் வாடையை உஹுது மலையிலிருந்து பெறுகிறேன் என்று கூறினார். சஅத் இப்னு முஆத் (ரலி) அவர்கள் இதை நபி (ஸல்) அவர்களிடம் கூறிவிட்டு, அவர் செய்த (வீராவேசமான) போரை வர்ணிக்க என்னால் முடியவில்லை, அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார். நாங்கள் அவர் உட-ல் வாளால் வெட்டப்பட்டும், ஈட்டியால் குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப்பட்டும் இருந்த எண்பதுக்கும் மேற்பட்ட காயங்களைக் கண்டோம். மேலும், இணைவைப்பவர்கள் அவரது உடல் உறுப்புகளைச் சிதைத்து விட்டிருந்த நிலையில் அவர் கொல்லப் பட்டிருக்கக் கண்டோம். அவருடைய சகோதரியைத் தவிர வேறெவரும் அவரை (இன்னாரென்று) அறிந்து கொள்ள முடியவில்லை; அவரது சகோதரி கூட அவரது விரல்(நுனி)களை வைத்துத் தான் அவரை அடையாளம் காண முடிந்தது.

அல்லாஹ்விடம் தாம் கொடுத்த உறுதிமொழியை மெய்ப்படுத்தி விட்டவர்களும் இறை நம்பிக்கையாளர் களிடையே உள்ளனர்என்கிற (33:23) இறைவசனம் இவர் விஷயத்திலும் இவரைப் போன்ற மற்ற உயிர்த் தியாகிகள் விஷயத்திலும் தான் அருளப்பட்டது என்றே நாங்கள் கருதி வந்தோம். ( நூல்: புகாரி 2805 )

2. ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி)

இஸ்லாத்தில் இருபத்தோரு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் ஹகீம் நுழைந்தார். தாமதமாய் இஸ்லாத்தினுள் நுழைந்த அபூ தர்தா ரலியல்லாஹு அன்ஹு மனதில் ஓடிய அதே எண்ணம், அவரைவிடத் தாமதமாய் வந்த ஹகீம் மனதிலும் தோன்றியது. எவ்வளவு தவற விட்டு விட்டாய், நற்கருமங்களில் எவ்வளவு பின்தங்கி விட்டாய் ஹகீம்?” என்று அரற்றியது அவரது மனது. நுழைந்த நொடியில் லாப நஷ்டத்ததைச் சரியாக பகுத்துணர முடிந்த மனங்களின் பெரிய ஆச்சரியம் அது!

يا أبتاه, ما يبكيك؟ قال: أمور كثيرة، كلها أبكتني يا بني، أولها بُطْءُ إسلامي، ممّا جعلني أُسْبَقُ إلى مواطن كثيرة صالحة، حتى لو أني أنفقت ملء الأرض ذهباً لما بلغت شيئاً منها،

ஒருநாள் உட்கார்ந்து கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார் ஹகீம். அதைக் கண்ட அவருடைய மகனுக்கு ஒன்றும் புரியவில்லை. தந்தையே ஏன் அழுகிறீர்கள்?”

பல விஷயங்கள். எதை என்று சொல்வேன்,” என்றவர் தொடர்ந்தார். முதலாவது, நான் இஸ்லத்திற்குள் எவ்வளவு தாமதாகமாக வந்தடைந்திருக்கிறேன்? எனக்கு முன்னால், பல ஆண்டுகளுக்கு முன்னரேயே நுழைந்துவிட்டவர்கள் எத்தனை பேர்? அவர்கள் இதுவரை ஈட்டி, சேமித்துள்ள நன்மை எவ்வளவு உயரமானது? என்னுடைய சொச்ச நாளுக்கும் பூமி நிறையும் அளவுள்ள தங்கத்தை நான் இஸ்லாத்தின் பாதையில் செலவிட்டாலும் அவர்களுக்கு நான் ஈடாக முடியுமா? அதை நினைத்து அழுகிறேன்

பத்ரு, உஹது யுத்தங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நான் கலந்து கொண்டிருந்தும் அல்லாஹ்வின் கிருபையினால் தப்பிப் பிழைத்தேன். அப்பொழுது எனக்கு நானே சத்தியம் செய்து கொண்டேன் – ‘அல்லாஹ்வின் தூதருக்கு எதிராக இந்தக் குரைஷிகளை நான் ஆதரிக்க மாட்டேன்; அவருக்கு எதிராக நான் மக்காவை விட்டு வெளியே நகரக்கூட மாட்டேன்’, என்று. ஆனால் அவர்களுக்கு ஆதரவாக நான் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டேன். என்னால் என்னைத் தடுத்துக் கொள்ளும் உறுதி இல்லாமற் போனது. அதை நினைத்து அழுகிறேன்

அதன்பின் ஒவ்வொரு முறையும் என் மனதிற்குள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விடலாம் என்ற எண்ணம் தோன்றும் போதெல்லாம் குரைஷிகள் மாண்புடன் நோக்கும் மூதாதையர்களைப் பார்த்தேன். அவர்கள் எப்படித் தங்களுடைய பழைய அஞ்ஞான பழக்கத்தில் பற்றிப் பிடித்துக் கொண்டு, தம் கொள்கையில் பிடிவாதமாய் இருக்கிறார்கள் என்று பார்த்தேன். நானும் அவர்களுடைய அனாச்சாரத்தைப் பின்பற்றி உருவ வழிபாட்டையே தொடர்ந்தேன். அப்படி செய்திருக்கக் கூடாது என்று எனக்கு இப்பொழுது தோன்றுகிறது. மூத்தவர்களையும் மூதாதையர்களையும் குருட்டுத் தனமாய்ப் பின்பற்றியதுதான் என்னை அழிவின் விளிம்பு வரை இட்டுச் சென்று விட்டது. என் நன்மையைத் தாமதப்படுத்தி விட்டது. இவ்வளவையும் நினைத்துப் பார்க்கும்போது என்னால் எப்படி அழாமல் இருக்க முடியும்? சொல் மகனே!

அழுது முடித்தவர் சூளுரைத்தார். முன்னர் இஸ்லாத்திற்கு விரோதமாய்ச் செய்த  ஒவ்வொரு செயலுக்கும் பரிகாரம் காணப் போகிறேன். இஸ்லாத்திற்கு எதிராய்ச் செலவழித்த ஒவ்வொரு துகளுக்கும் பரிகாரமாய் இப்பொழுது இஸ்லாத்தின் பாதையில் செலவழிக்கப் போகிறேன். அது தான் சரி.அப்படியே செய்ய ஆரம்பித்தார் ஹகீம் இப்னு ஹிஸாம்.

மக்காவில் தாருந் நத்வா என்றொரு இல்லம் இருந்தது. அந்த இல்லம் ஹகீமின் வசம் வந்து சேர்ந்தது. தனக்கும் தன்னுடைய கடந்த கசந்த காலத்திறகும் இடையில் பலமான தடுப்பொன்றை ஏற்படுத்த விழைந்தார் ஹகீம். என்ன செய்யலாம் என்று நினைத்தவருக்கு அந்த யோசனை உதித்தது. அதனால் அந்த வீட்டை இலட்சம் திர்ஹங்களுக்கு விற்றார்.

அந்த வீட்டை விற்று வந்த பணமிருக்கிறதே அதை இஸ்லாத்தின் பாதையில் நற்காரியங்களுக்கு அளித்து விடப்போகிறேன். அதைக் கொண்டு எனக்கு மறுமையில் அங்கு வீடு கிடைக்கலாம்

குரைஷியர்களுக்குத் தெரிவித்தார், “இதோ பாருங்கள். உங்கள் எல்லோரையும் சாட்சியாக வைத்துக் கூறுகிறேன், அந்தப் பணத்தை அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணிக்கிறேன்என்றார்.

இஸ்லாத்தினுள் நுழைந்தபின் தனது முதல் ஹஜ் கடமையை நிறைவேற்றும் வாய்ப்புக் கிடைத்தது அவருக்கு. தன்னுடன் நூறு ஒட்டகங்களைச் சிறப்பாய் அலங்கரித்து உடனழைத்துச் சென்றார். அவற்றையெல்லாம் அறுத்து ஸதக்கா தர்மமாய் அதன் இறைச்சி முழுவதையும் அனைத்து முஸ்லிம்களுக்கும் பகிர்ந்தளித்து விட்டார்.

அடுத்ததொரு ஹஜ் வந்தது. இம்முறை நூறு அடிமைகளைத் தன்னுடன் அழைத்து வந்து அவர்களுக்கெல்லாம் விடுதலையளித்தார். அவர்கள் கழுத்துகளில் வெள்ளியில் கழுத்தணி ஒன்று இருந்தது. அல்லாஹ்விற்காக ஹகீம் பின் ஹிஸாமினால் இவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்என்று அதில் பொறிக்கப்பட்டிருந்தது. விடுதலை பெற்ற அவ்வடிமைகள் அந்த வெள்ளி ஆபரணத்தை விற்று, தங்கள் வாழ்க்கையை சுயமே துவங்கிக்கொள்ள அத்தகைய ஏற்பாடு.

அதற்கு அடுத்த ஹஜ் வந்தது. இப்பொழுது தன்னுடன் ஆயிரம் செம்மறியாடுகளை ஓட்டி வந்தவர், அவற்றையெல்லாம் மினாவில் பலிகொடுத்து, அனைத்து இறைச்சியையும் முஸ்லிம்களுக்குப் பகிர்ந்து அளித்தார்.

அவர் மனசு முழுவதும் கடந்த காலங்களில் தவறவிட்ட நல்லறங்கள் மற்றும் நன்மைகளை மற்றத் தோழர்களுடன் போட்டி போட்டு ஏதாவது செய்து அவர்களுக்கு இணையாய் நற்கூலியை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தான்.

أَخْبَرَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمِ بْنِ سُفْيَانَ الثَّقَفِيِّ ‏ ‏أَنَّهُمْ غَزَوْا ‏ ‏غَزْوَةَ السُّلَاسِلِ ‏ ‏فَفَاتَهُمْ الْغَزْوُ فَرَابَطُوا ثُمَّ رَجَعُوا إِلَى ‏ ‏مُعَاوِيَةَ ‏ ‏وَعِنْدَهُ ‏ ‏أَبُو أَيُّوبَ ‏ ‏وَعُقْبَةُ بْنُ عَامِرٍ ‏ ‏فَقَالَ ‏ ‏عَاصِمٌ ‏ ‏يَا ‏ ‏أَبَا أَيُّوبَ ‏ ‏فَاتَنَا الْغَزْوُ الْعَامَ وَقَدْ أُخْبِرْنَا أَنَّهُ مَنْ صَلَّى فِي الْمَسَاجِدِ الْأَرْبَعَةِ غُفِرَ لَهُ ذَنْبُهُ فَقَالَ يَا ابْنَ أَخِي أَدُلُّكَ عَلَى أَيْسَرَ مِنْ ذَلِكَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ تَوَضَّأَ كَمَا أُمِرَ وَصَلَّى كَمَا أُمِرَ غُفِرَ لَهُ مَا قَدَّمَ مِنْ عَمَلٍ ‏ ‏أَكَذَلِكَ يَا ‏ ‏عُقْبَةُ ‏ ‏قَالَ نَعَمْ ‏

முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஒரு யுத்தத்தில் ஆஸிம் இப்னு ஸுஃப்யான் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்களால் பங்கேற்க இயலவில்லை. யுத்தம் நடைபெற்று படை வீரர்கள் ஊர் திரும்பிய பின்னர் ஆஸிம் ரலி அவர்கள் முஆவியா ரலி அவர்களிடம் வந்து தாம் யுத்தத்தில் பங்கேற்க முடியாத நிலையை கூறினார். அப்போது அங்கே அபூ அய்யூபுல் அன்ஸாரி ரலி உக்பா இப்னு ஆமிர் ரலி ஆகியோர் இருந்தனர்.

ஆஸிம் ரலி அவர்கள் உக்பா ரலி அவர்களிடம்  தாம் யுத்தத்தில் பங்கேற்று நன்மைகளை பெற முடியாமல் போனது குறித்து வருத்தத்தை வெளியிட்ட போது, உக்பா ரலி அவர்கள் "எவர் நான்கு மஸ்ஜிதுகளில் (மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுன் நபவீ, மஸ்ஜிதுல் அக்ஸா, மஸ்ஜிதுல் குபா) தொழுகின்றாரோ அவரின் பாவங்கள் மன்னிக்கப்படும்" என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக நமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கு சென்று தொழுது மன்னிப்பை பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்கள்.

அதற்கு, ஆஸிம் (ரலி) அவர்கள் என் சகோதரனின் மகனே! இதை விட இலகுவான வழியை சொல்லக்கூடாதா? என்று கேட்டார்கள்.

அப்போது, உக்பா ரலி அவர்கள் "எவர் ஏவப்பட்டிருப்பதைப் போன்று உளூ செய்து, ஏவப்பட்டிருப்பதைப் போன்று தொழுகின்றாரோ அவருக்கு அதன் மூலம் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும்" என்று நபி ஸல் அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன்" என்றார்கள்.

அதற்கு, ஆச்சரியமாக அப்படியா? என்று ஆஸிம் ரலி அவர்கள் கேட்க, ஆம் என்று உக்பா இப்னு ஆமிர் ரலி அவர்கள் பதிலளித்தார்கள். ( நூல்: நஸாயி )

ஆகவே, கடந்து போன ரமழானில் நாம் இழந்து விட்ட நன்மைகளை எண்ணி அங்கலாய்க்காமல் கிடைத்திருக்கும் இந்த ரமழானில் பேரார்வத்தோடு அமல் செய்து நன்மையான காரியங்களில் முனைப்போடு ஈடுபட்டு, நல்லறங்களை போட்டி போட்டு செய்து கடந்த காலங்களில் விடுபட்ட நன்மைகளை ஈடு செய்யும் ஆர்வத்தோடு, ஆசையோடு இந்த ரமழானை அமைத்துக் கொள்வோம்! வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

5 comments:

  1. மாஷா அல்லாஹ் அருமையான பதிவு அல்லாஹுத்தஆலா தங்களுக்கு ஈருலகிலும் நற் பாக்கியங்களை தருவானாக ஆமீன்

    ReplyDelete
  2. அருமை ஹஜ்ரத் மாஷா அல்லாஹ்...... துஆவுடன் ஜைனி பொள்ளாச்சி

    ReplyDelete
  3. அல்ஹம்துலில்லாஹ். அபாரமான தங்களது திறமை, எங்கள் பாரத்தை இறக்கிவிட்டது..
    அல்லாஹ் தங்களது அனைத்து ஹலாலான தேவைகளையும் பூர்த்தி செய்து வைப்பானாக!

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ். அற்புதமான கருத்துக்கள் சூழலுக்கு ஏற்ப... அல்லாஹ் தங்களுக்கு ஆரோக்கியத்தையும் சலாமத்தையும் பரிசளிப்பானாக! ஆமீன்

    ReplyDelete