Monday, 18 March 2024

அச்சமற்ற மனிதராய்… நன்மை அதரவு வைக்கப்படும் மனிதராய்…

 

தராவீஹ் சிந்தனை:- 8. உங்களில் சிறந்தவர்:- 7.

அச்சமற்ற மனிதராய்… நன்மை அதரவு வைக்கப்படும் மனிதராய்…



அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய மகத்தான கருணையால் ஏழாவது நோன்பை நிறைவு செய்து விட்டு, எட்டாம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம். 

பெருமானார் {ஸல்} அவர்கள் பல சந்தர்ப்பங்களில் ஃகியாருக்கும், ஃகைருக்கும் ( உங்களில் மிகச் சிறந்தவர் ) ஃகைருன் நாஸ் ( மனிதர்களில் மிகச் சிறந்தவர் ) என்ற அடைமொழியோடு சில நல்ல பண்புகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் பட்டியலிட்டார்கள்.

அப்படி பெருமானார் (ஸல்) அவர்கள் பட்டியலிட்டுக் கூறிய சில நல்ல பண்புகளை இந்த ரமழானில் நாம் தொடராகப் பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.

ஆறாவதாக  இன்றைய அமர்வில் எந்த மனிதரிடம் இருந்து நன்மையான செயல்கள் ஆதரவு வைக்கப்படுமோ, எந்த மனிதரிடம் இருந்து தவறேதும் நிகழாது என அச்சமற்ற நிலை ஏற்டுமோ அவரே உங்களில் சிறந்தவர் என்ற நபிமொழி குறித்து நாம் பார்க்க இருக்கின்றோம்.

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَفَ عَلَى أُنَاسٍ جُلُوسٍ فَقَالَ ‏ ‏أَلَا أُخْبِرُكُمْ بِخَيْرِكُمْ مِنْ شَرِّكُمْ قَالَ فَسَكَتُوا فَقَالَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ فَقَالَ رَجُلٌ بَلَى يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنَا بِخَيْرِنَا مِنْ شَرِّنَا قَالَ خَيْرُكُمْ مَنْ ‏ ‏يُرْجَى خَيْرُهُ وَيُؤْمَنُ شَرُّهُ وَشَرُّكُمْ مَنْ لَا ‏ ‏يُرْجَى خَيْرُهُ وَلَا يُؤْمَنُ شَرُّهُ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو عِيسَى ‏ ‏هَذَا ‏ ‏حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அமர்ந்திருக்கும் மக்களுக்கு முன்னால் வந்து நின்று, உங்களில் சிறந்தவர் யார்? கெட்டவர் யார்? என்பதை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் அமைதியாக இருந்தார்கள். எனவே, நபியவர்கள் அதே வார்த்தையை மூன்று முறை மீண்டும் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், நிச்சயமாக, அல்லாஹ்வின் தூதரே! எங்களில் சிறந்தவர் யார், கெட்டவர் யார் என்பதை எங்களுக்கு அறிவியுங்கள் என்று கூறினார்.

அதற்கு, உங்களில் எவரிடம் இருந்து நன்மையான காரியங்கள் (மக்களிடம்) எதிர்பார்கப்படுமோ, தீமையான காரியங்கள் குறித்து பயப்படப்படாதோ அவர்தான் உங்களில் சிறந்தவர். மேலும், உங்களில் எவரிடம் இருந்து நன்மையான காரியங்கள் (மக்களிடம்) எதிர்பார்க்கப்படாதோ, தீமையான காரியங்கள் பயப்படப்படுமோ அவர்தான் உங்களில் கெட்டவர் என்று நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) - ( நூல் : திர்மிதீ )

பிறருக்கு தீங்கு விளைவிக்க கூடாது!

 

حدثنا عبد الوارث بن سفيان حدثنا قاسم بن أصبغ أخبرنا المطلب ابن سعيد أخبرنا عبد الله بن صالح قال: حدثني الليث قال: حدثني ابن الهادي عن أبي بكر بن محمد بن عمرو بن حزم قال: جاءت أروى بنت أويس إلى أبي محمد بن عمرو بن حزم فقالت له: يا أبا عبد الملك إن سعيد بن زيد بن عمرو بن نفيل قد بنى ضفيرة في حقي فأته بكلمة فلينزع عن حقي فوالله لئن لم يفعل لأصيحن به في مسجد رسول الله صلى الله عليه وسلم فقال لها: لا تؤذي صاحب رسول الله صلى الله عليه وسلم فما كان ليظلمك ولا ليأخذ لك حقاً. فخرجت وجاءت عمارة بن عمرو وعبد الله بن سلمة فقالت لهما ائتيا سعيد بن زيد فإنه قد ظلمني وبنى ضفيرة في حقي فوالله لئن لم ينزع لأصيحن به في مسجد رسول الله صلى الله عليه وسلم. فخرجا حتى أتياه في أرضه بالعقيق فقال لهما: ما أتى بكما؟ قالا: جاءتنا أروى بنت أويس فزعمت أنك بنيت ضفيرة في حقها وحلفت بالله لئن لم تنزع لتصيحن بك في مسجد رسول الله صلى الله عليه وسلم فأحببنا أن نأتيك ونذكر ذلك لك. فقال لهما: إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: " من أخذ شبراً من الأرض بغير حقه يطوقه الله يوم القيامة من سبع أرضين " . فلتأت فلتأخذ ما كان لها من الحق اللهم إن كانت كاذبة فلا تمتها حتى تعمي بصرها وتجعل ميتتها فيها فرجعوا فأخبروها ذلك فجاءت فهدمت الضفيرة وبنت بنيانا فلم تمكث إلا قليلاً حتى عميت وكانت تقوم بالليل ومعها جارية لها تقودها لتوقظ العمال فقامت ليلة وتركت الجارية فلم توقظها فخرجت تمشي حتى سقطت في البئر فأصبحت ميتة.

மர்வான் இப்னு ஹகம் (ரஹ்) அவர்களிடம் அர்வா பிந்த் உவைஸ் எனும் பெண்மனி சுவனத்தைக் கொண்டு சோபனம் சொல்லப்பட்ட பத்து நபித்தோழர்களில் ஒருவரான ஸயீத் இப்னு ஜைத் (ரலி) அவர்களைக் குறித்து நில அபகரிப்புக் குற்றச்சாட்டு ஒன்றை சமர்ப்பித்தார்.

அபூ அப்துல் மலிக் அவர்களே! எனக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை ஸயீத் இப்னு ஜைத் அவர்கள் அபகரித்துக் கொண்டார். நீங்கள் வந்து பேசி என் நிலத்தை அவரிடம் இருந்து மீட்டுத்தரவேண்டும். இல்லையெனில், அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! மஸ்ஜிதுன் நபவீக்கு முன்னால் நின்று நான் கூச்சலிடுவேன்என்று கூறினாள்.

அப்போது, மர்வான் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் நபித் தோழருக்கு நோவினை கொடுக்காதே! அவர் அப்படியெல்லாம் செய்திருக்க மாட்டார். முதலில் இங்கிருந்து கிளம்புஎன்று விரட்டி விட்டார்கள்.

 

அங்கிருந்து வெளியேறிய அப்பெண்மனி நேராக அம்மாரா இப்னு அம்ர், மற்றும் அப்துல்லாஹ் இப்னு ஸலமா என்பவர்களிடத்தில் சென்று மர்வான் அவர்களிடத்தில் முறையிட்டது போன்று முறையிட்டாள்.

இருவரும் ஸயீத் (ரலி) அவர்களிடம் வந்து அர்வா வின் முறையீடு குறித்தும், அவளின் மிரட்டல் குறித்தும் கூறிவிட்டு இது குறித்து உங்களின் அபிப்பிராயம் என்ன? என்று கேட்டனர்.

அப்போது, ஸயீத் (ரலி) அவர்கள் “”எவர் பிறரது நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்துக் கொண்டாரோ அவர் ஏழு நிலங்களை கழுத்தில் மாலையாகக் கட்டி தொங்க விடப்படுவார்என நபி {ஸல்} அவர்கள் கூறியதை ( தங்களின் செவியைப் பிடித்துக் காட்டி ) இந்தச் செவியால் நான் கேட்டிருக்கின்றேன்.

பிறகு, நான் எப்படி அவ்வாறு அப்பெண்மனியின் நிலத்தின் ஒரு பகுதியை அபகரிப்பேன்என்று அவ்விருவரிடமும் கூறிவிட்டு

தங்களின் இரு கரங்களையும் வானை நோக்கி உயர்த்தி இறைவா! அவள் பொய் சொல்கிறாள் என்றால் அவளின் பார்வையை குருடாக்கி விடு! எந்த நிலத்தை நான் அபகரித்ததாகச் சொல்கிறாளோ அதிலேயே அவளை மரணிக்கச் செய்! என துஆச் செய்தார்கள்.

அல்லாஹ் ஸயீத் அவர்களின் துஆவைக் கபூலாக்கினான். பின் நாளில் அது போன்றே அவளின் மரணமும் நடந்தேறியது.

மக்கள் கூட அல்லாஹ் அர்வாவைக் குருடாக்கியது போல் உன்னையும் குருடாக்குவானாக! என ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் நிலையை நாங்கள் கண்டோம் என அலாவு இப்னு அப்துர்ரஹ்மான் மற்றும், முஹம்மத் இப்னு அபூபக்ர் ஆகிய இந்த அறிவிப்பின் இரு ராவிகளும் கூறுகின்றார்கள்.  ( நூல்: அல் இஸ்தீஆப் ஃபீ மஅரிஃபத்தில் அஸ்ஹாப் )

பிறருக்கு தீங்கு விளைவிப்பரின் முடிவு!

شَكَا أَهْلُ الكُوفَةِ سَعْدًا إلى عُمَرَ رَضِيَ اللَّهُ عنْه، فَعَزَلَهُ، واسْتَعْمَلَ عليهم عَمَّارًا، فَشَكَوْا حتَّى ذَكَرُوا أنَّهُ لا يُحْسِنُ يُصَلِّي، فأرْسَلَ إلَيْهِ، فَقالَ: يا أَبَا إسْحَاقَ إنَّ هَؤُلَاءِ يَزْعُمُونَ أنَّكَ لا تُحْسِنُ تُصَلِّي، قالَ أَبُو إسْحَاقَ: أَمَّا أَنَا واللَّهِ فإنِّي كُنْتُ أُصَلِّي بهِمْ صَلَاةَ رَسولِ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ ما أَخْرِمُ عَنْهَا، أُصَلِّي صَلَاةَ العِشَاءِ، فأرْكُدُ في الأُولَيَيْنِ وأُخِفُّ في الأُخْرَيَيْنِ، قالَ: ذَاكَ الظَّنُّ بكَ يا أَبَا إسْحَاقَ، فأرْسَلَ معهُ رَجُلًا أَوْ رِجَالًا إلى الكُوفَةِ، فَسَأَلَ عنْه أَهْلَ الكُوفَةِ ولَمْ يَدَعْ مَسْجِدًا إلَّا سَأَلَ عنْه، ويُثْنُونَ مَعْرُوفًا، حتَّى دَخَلَ مَسْجِدًا لِبَنِي عَبْسٍ، فَقَامَ رَجُلٌ منهمْ يُقَالُ له أُسَامَةُ بنُ قَتَادَةَ يُكْنَى أَبَا سَعْدَةَ قالَ: أَمَّا إذْ نَشَدْتَنَا فإنَّ سَعْدًا كانَ لا يَسِيرُ بالسَّرِيَّةِ، ولَا يَقْسِمُ بالسَّوِيَّةِ، ولَا يَعْدِلُ في القَضِيَّةِ، قالَ سَعْدٌ: أَما واللَّهِ لَأَدْعُوَنَّ بثَلَاثٍ: اللَّهُمَّ إنْ كانَ عَبْدُكَ هذا كَاذِبًا، قَامَ رِيَاءً وسُمْعَةً، فأطِلْ عُمْرَهُ، وأَطِلْ فَقْرَهُ، وعَرِّضْهُ بالفِتَنِ، وكانَ بَعْدُ إذَا سُئِلَ يقولُ: شيخٌ كَبِيرٌ مَفْتُونٌ، أَصَابَتْنِي دَعْوَةُ سَعْدٍ، قالَ عبدُ المَلِكِ: فأنَا رَأَيْتُهُ بَعْدُ، قدْ سَقَطَ حَاجِبَاهُ علَى عَيْنَيْهِ مِنَ الكِبَرِ، وإنَّه لَيَتَعَرَّضُ لِلْجَوَارِي في الطُّرُقِ يَغْمِزُهُنَّ. .

(கூஃபாவில் அதிகாரியாக இருந்த) ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) மீது கூபா வாசிகளில் சிலர் உமர்(ரலி) அவர்களிடம் புகார் கூறினார்கள். அவர் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்பதும் அவர்களின் புகார்களில் ஒன்றாக இருந்தது. உடனே உமர்(ரலி) அவரை நீக்கிவிட்டு அம்மார்(ரலி)ஜ அதிகாரியாக நியமித்தார்கள். ஸஃதை (மதீனாவுக்கு) வரவழைத்து 'அபூ இஸ்ஹாக்! நீங்கள் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்று கூஃபா வாசிகளில் சிலர் கூறுகின்றனரே! என்று கேட்டார்கள்.

அதற்கு ஸஃது(ரலி) 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி() அவர்கள் தொழுது காட்டிய முறைப் படியே தொழுகை நடத்தினேன். அதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. இஷாவுடைய முதல் இரண்டு ரக்அத்களில் நீண்ட நேரம் ஓதியும் பின் இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதியும் தொழுகை நடத்துகிறேன்' என்று பதிலளித்தார்கள். 'உம்மைப் பற்றி நம்முடைய கருத்தும் அதுவே' என்று உமர்(ரலி) கூறினார்.

அதன்பின்னர் ஒரு நபரை அல்லது சில நபர்களை ஸஃது(ரலி) உடனே கூஃபாவுக்கு அனுப்பி, ஸஃதைப் பற்றிக் கூஃபா வாசிகளிடம் விசாரிக்கச் சொன்னார்கள். விசாரிக்கச் சென்றவர் ஒரு பள்ளிவாசல் விடாமல் அவரைப் பற்றி விசாரித்தபோது அனைவரும் ஸஃதைப் பற்றி நல்ல விதமாகவே கூறினார்கள். 'பனூஅபஸ்' கூட்டத்தாரின் பள்ளி வாசலில் விசாரித்தபோது, அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த அபூ ஸஃதா எனப்படும் உஸாமா இப்னு கதாதா என்பவர் எழுந்து, 'நீங்கள் விசாரிப்பதால் நான் சொல்கிறேன். ஸஃது அவர்கள் தம்து படையிலுள்ளவர்களிடம் எளிமையாக நடப்பதில்லை; (பொருட்களை) சமமாகப் பங்கிடுவதில்லை; தீர்ப்பு வழங்குவதில் நீதியாக நடப்பதில்லை' என்று புகார் கூறினார்.

இதைக் கேட்ட ஸஃது(ரலி) 'அல்லாஹ்வின் மேல் ஆணையாக! மூன்று பிரார்த்தனைகளை (உமக்கெதிராக) நான் செய்யப் போகிறேன்' என்று கூறிவிட்டு, 'இறைவா! உன்னுடைய இந்த அடியார் (அவரின் புகாரில்) பொய்யராகவும் புகழ் விரும்பிப் புகார் கூறுபவராகவும் இருந்தால் அவரின் ஆயுளை அதிகப் படுத்துவாயாக! அவரின் வறுமையையும் அதிகப் படுத்துவாயாக! அவரைப் பல சோதனைகளுக்கு ஆளாக்குவாயாக!' என்று பிரார்த்தனை செய்தார்கள்.

இதன் பிறகு அந்த மனிதரிடம் எவரேனும் நலம் விசாரித்தால் 'சோதனைக்காளான முதுபெரும் வயோதிகனாம் விட்டேன். ஸஃதின் பிரார்த்தனை என் விஷயத்தில் பலித்துவிட்டது' எனக் கூறக் கூடியவராம்விட்டார். ஜாபிர்(ரலி) வழியாக இதை அறிவிக்கும் அப்துல் மலிக் இப்னு உமைர் 'அதன் பிறகு நானும் அவரைப் பார்த்திருக்கிறேன்; முதுமை யினால் அவரின் புருவங்கள் அவரின் கண்களை மறைத்திருந்தன. பாதைகளில் நடந்து செல்லும் பெண்களின் மீது (பார்வை பறி போனதால்) மோதிக் கொள்வார்; இந்த நிலையில் அவரை பார்த்திருக்கிறேன்' என்று குறிப்பிட்டார். (புகாரி : 755)

 

நன்மையான காரியங்கள் ஆதரவு வைக்கப்பட்டால்…

பிறருக்கு நன்மை செய்வது பற்றியும் பிறரை மகிழச் செய்ய வேண்டும் என்பது பற்றியும் உபதேசித்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதில் அனைவருக்கும் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள்.

حدثنا عبدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ ، حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ سَهْلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ : أَنَّ امْرَأَةً جَاءَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبُرْدَةٍ مَنْسُوجَةٍ ، فِيهَا حَاشِيَتُهَا ، أَتَدْرُونَ مَا البُرْدَةُ ؟ قَالُوا : الشَّمْلَةُ ، قَالَ : نَعَمْ ، قَالَتْ : نَسَجْتُهَا بِيَدِي فَجِئْتُ لِأَكْسُوَكَهَا ، فَأَخَذَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحْتَاجًا إِلَيْهَا ، فَخَرَجَ إِلَيْنَا وَإِنَّهَا إِزَارُهُ ، فَحَسَّنَهَا فُلاَنٌ ، فَقَالَ : اكْسُنِيهَا ، مَا أَحْسَنَهَا ، قَالَ القَوْمُ : مَا أَحْسَنْتَ ، لَبِسَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحْتَاجًا إِلَيْهَا ، ثُمَّ سَأَلْتَهُ ، وَعَلِمْتَ أَنَّهُ لاَ يَرُدُّ ، قَالَ : إِنِّي وَاللَّهِ ، مَا سَأَلْتُهُ لِأَلْبَسَهُ ، إِنَّمَا سَأَلْتُهُ لِتَكُونَ كَفَنِي ، قَالَ سَهْلٌ : فَكَانَتْ كَفَنَهُ

 நபித்தோழர் ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) கூறியது : ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ஒரு துணியைக் கொடுத்து இதை நீங்கள் அணிவதற்காக என் கையால் நெய்தேன் என்றார். அதை நபியவர்கள் பெற்றுக்கொண்டார்கள். அது அவர்களுக்கு தேவையாகவும் இருந்தது. பின்பு அதை தனது கீழாடையாக அணிந்து கொண்டு எங்களிடம் வந்தார்கள். 

அப்போது ஒரு மனிதர் இறைத்தூதரே! இந்த துணி எவ்வளவு அழகாக உள்ளது. இதை எனக்கு உடுத்தக் கொடுங்கள் என்று கேட்டார். நபிகள் நாயகம் சரிஎன்றார்கள். பிறகு வீட்டிற்கு சென்றதும் அதை மடித்து அந்த மனிதருக்கு கொடுத்தனுப்பினார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் அவரிடம் நீர் செய்தது சரியல்ல. நபியவர்களுக்கு அந்த துணி தேவைப்பட்ட நிலையில் தான் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. எதையேனும் கேட்டால் இல்லையென்று சொல்ல மாட்டார்கள் என்று தெரிந்திருந்தும் கேட்டு விட்டீரே!என்று (கண்டித்துச்) சொன்னார்கள்.

 அதற்கு அந்த நபர், அல்லாஹ் மீது சத்தியமாக! அதை நான் அணிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக நபியவர்களிடம் கேட்கவில்லை. ஆனாலும் அது எனது கஃபன் (பிரேத) ஆடையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே கேட்டேன் என்றார். அதுவே அவர் மரணித்த போது அவரது பிரேத ஆடையாக இருந்தது.

நபிமொழியின் கருத்து நூல் : புகாரி, ப்னு மாஜா

       நபியவர்களிடம் ஏதேனும் நன்மையான காரியத்தை ஆதரவு வைக்கப்பட்டால்  அதை நிறைவேற்றாமல் இருப்பது அவர்களின் வழிமுறையல்ல என்பதை அவர்களைச் சுற்றியிருந்த தோழர்கள் எல்லாம் அறிந்திருந்தார்கள் என்பது இந்த செய்தியில் தெரிய வருகிறது.

ஆகவே, மனிதர்களில் சிறந்தவர்களாக மாற முயற்சிப்போம்!!

No comments:

Post a Comment