Thursday, 12 September 2024

மாநபி (ஸல்) அவர்களை சந்திக்க ஆவல் கொள்வோம்!!

மாநபி (ஸல்) அவர்களை சந்திக்க ஆவல் கொள்வோம்!!


அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இந்த உலகத்திற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட சங்கையான மாதத்தில் நாம் அமைந்திருக்கின்றோம்.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் குறித்து நாம் பேசிக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்கின்றோம்.

நாம் நமது நபி முஹம்மத் (ஸல்)  அவர்களை எவ்வாறு புரிந்து வைத்துள்ளோம்.

நம் வாழ்வில் நமது நபி (ஸல்) அவர்களுக்கு எவ்வளவு தூரம் முக்கியத்துவம் கொடுத்து வைத்துள்ளோம் என்பதை எல்லாம் நாம் இந்த மாதத்தின் ஊடாக சீர் தூக்கிப் பார்க்க கடமை பட்டுள்ளோம்.

அல்லாஹ்வே நமக்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல் அவர்களை நேசிக்குமாறு நமக்கு கட்டளை இட்டுள்ளான்.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை நமது உயிரினும் மேலாக மதிக்குமாறு ஆணை பிறப்பித்துள்ளான்‌.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல் அவர்களின் வாழ்வியலையே முற்றிலுமாக பின்பற்றவும் வலியுறுத்தி கூறி இருக்கின்றான்.

ஆகவே, நாம் முழு மனதோடு மாநபி ஸல் அவர்களின் மீது நேசத்தை வெளிப்படுத்த வேண்டும். இதயத்தின் ஆழத்தில் இருந்து நாம் மாநபி ஸல் அவர்களை மதிக்க வேண்டும். உயிர்ப்புடன் நமது வாழ்வியலை மாநபி ஸல் அவர்களின் வாழ்வியலோடு இணைத்துக் கொள்ள வேண்டும். 

எல்லாவற்றுக்கும் மேலாக மாநபி ஸல் அவர்களை சந்திக்க ஆவல் கொள்ள வேண்டும்.

ஏனெனில், நமக்காக, நம்மை சந்திப்பதற்காக மாநபி (ஸல்) அவர்கள் காத்திருப்பதாக தமது ஆவலை 1400 ஆண்டுகளுக்கும் முன்பாக தமது தோழர்களிடம் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

عن أَبِي هُرَيْرَةَ رضي الله عنه : " أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى الْمَقْبُرَةَ ، فَقَالَ : ( السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ ، وَإِنَّا إِنْ شَاءَ اللهُ بِكُمْ لَاحِقُونَ ، وَدِدْتُ أَنَّا قَدْ رَأَيْنَا إِخْوَانَنَا .

قَالُوا : أَوَلَسْنَا إِخْوَانَكَ يَا رَسُولَ اللهِ ؟

قَالَ : أَنْتُمْ أَصْحَابِي ، وَإِخْوَانُنَا الَّذِينَ

ஒரு நாள் உஹதில் மரணமடைந்த ஷஹீத்களை தரிசிக்கச் சென்ற போது "மண்ணறை வாசிகளே! உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி நிலவட்டுமாக! அல்லாஹ் நாடும் ஒரு நாளில் நிச்சயமாக உங்களை சந்திக்க இருக்கிறோம்" என்று பெருமானார் (ஸல்) கூறி விட்டு, "நம் சகோதரர்களை சந்திக்க நான் ஆவல் கொண்டவனாக இருக்கின்றேன்" என்று கூறினார்கள்.

 

இறைத்தூதரே! நாங்கள் தங்களது சகோதரர்கள் இல்லையா…?’ என்று தோழர்கள் கேட்கவும், 

قوم يكونون من بعدكم, يؤمنون بي ولم يروني.

இல்லை, நீங்கள் எனது தோழர்கள். எனது சகோதரர்கள் எனக்குப் பின்னால் வருபவர்கள். என்னைப் பார்க்காமலே என் மீது ஈமான் கொண்டவர்கள்’ ( நூல்: அஹ்மத்)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களுக்கு முன்பே ("அல்கவ்ஸர்" எனும்) அத்தடாகத்தினருகில் உங்களுக்காகக் காத்திருப்பேன். அதன் இரு ஓரங்களுக்கு இடையேயுள்ள தூரம், (யமனிலுள்ள) "ஸன்ஆ"வுக்கும் "அய்லா"வுக்கும் இடையே உள்ள தூரத்தைப் போன்றதாகும். அதிலுள்ள கோப்பைகள் (எண்ணிக்கையில்) விண்மீன்களைப் போன்றவையாகும். இதை ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்: புகாரி )

அதற்கு முன்பாக நமக்கு மாநபி (ஸல்) அவர்களை ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு நமக்கு வழங்கப்படும். அது நமது மரணத்திற்கு பிறகான நமது மண்ணறை வாழ்க்கையில் நடைபெறும்.

அந்த சந்திப்பு நமக்கு சரியாக அமையும் பட்சத்தில் நாம் நமது நபி (ஸல்) அவர்களை நாளை மறுமையில் சந்திப்போம்.

فيأتيه ملكان ، فيجلسانه ، فيقولان له : من ربك ؟ فيقول ربي الله ، فيقولان له : ما دينك ؟ فيقول : ديني الإسلام ، فيقولان له : ما هذا الرجل الذي بعث فيكم ؟ فيقول : هو رسول الله ، فيقولان له : ما علمك ؟ فيقول : قرأت كتاب الله فآمنت به وصدقت ،

இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஓர் அடியான் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவனுடைய தோழர்கள் திரும்பிச் செல்லும்போது, அவன் அவர்களின் செருப்பின் ஓசையைச் செவியேற்பான். அப்போது இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, ‘இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ என்று முஹம்மத் நபி (ஸல்) குறித்துக் கேட்பர். 

அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தால் இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்எனக் கூறுவான். அவனிடம் (நீ கெட்டவனாய் இருந்திருந்தால் உனக்குக் கிடைக்கவிருந்த) நரகத்திலுள்ள உன்னுடைய இருப்பிடத்தைப் பார். (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான் எனக் கூறப்படும். இரண்டையும் அவன் ஒரே நேரத்தில் பார்ப்பான்…’அவனுக்கு மண்ணறை விசாலமாக்கப்படும்என்றும் இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இதன் அறிவிப்பாளரான கதாதா குறிப்பிடுகிறார்

ويأتيه ملكان فيجلسانه ، فيقولان له : من ربك ؟ فيقول : هاه هاه ، لا أدري ، فيقولان له : ما هذا الرجل الذي بعث فيكم ، فيقول : هاه هاه ، لا أدري ،

 

நயவஞ்சகனாகவோ நிராகரிப்பவனாகவோ இருந்தால் இந்த மனிதர் விஷயத்தில் நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ என அவனிடம் கேட்கப்படும்போது எனக்கொன்றும் தெரியாது; மக்கள் சொல்லிக் கொண்டிருந்ததையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்எனக் கூறுவான். உடனே நீ அறிந்திருக்கவுமில்லை: (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லைஎன்று கூறப்படும். மேலும் இரும்பு சுத்திகளால் அவன் கடுமையாக அடிக்கப்படுவான். அப்போது அவனை அடுத்திருக்கும் மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவுக்கு அவன் அலறுவான்.அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி). ( நூல்: புகாரி )

இந்த நபிமொழிக்கு விளக்கம் தரும் அறிஞர்கள் "பெருமானார் ஸல் அவர்களின் முகம் காட்டப்பட்டு" இந்த மனிதர் விஷயத்தில் நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ என அவனிடம் கேட்கப்படும் என்று கூறுகிறார்கள்.

சரியாக அமையாத பட்சத்தில் (அல்லாஹ் பாதுகாத்து அருள்வானாக!) நமது நபி ஸல் அவர்களே நாளை மறுமையில் அவர்களின் அருகே செல்ல விடாமல் நம்மை விரட்டி விடுவார்கள்.

وعند البخاري في صحيحه ( 2194 ) ومسلم (4257) عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لأَذُودَنَّ رِجَالا عَنْ حَوْضِي كَمَا تُذَادُ الْغَرِيبَةُ مِنْ الإِبِلِ عَنْ الْحَوْضِ "

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ("அல்கவ்ஸர்" எனும்) எனது தடாகத்தைவிட்டு, ஒட்டகங்களிடமிருந்து அந்நிய ஒட்டகங்களை விரட்டுவதைப் போன்று சில மனிதர்களை விரட்டுவேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாக வந்துள்ளது. ( நூல்: முஸ்லிம் )

மண்ணறையின் சந்திப்பும் மறுமையின் சந்திப்பும் நமக்கு சாதகமாக அமைய வேண்டுமானால் நமது நபி ஸல் அவர்களை நாம் நேசிப்பதோடு நின்று கொள்ளாமல், நமது நபி ஸல் அவர்களின் வாழ்க்கையை நமது வாழ்க்கையின் முன்மாதிரியாக அமைத்துக் கொள்வதோடு திருப்தி அடைந்து கொள்ளாமல் "நாள் தோறும் நாம் நபி ஸல் அவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் கொள்ள" வேண்டும். அதற்காக அல்லாஹ் ரப்புல் ஆலமீனிடம் இரு கரமேந்தி துஆவும் செய்ய வேண்டும்.

அந்த வகையில் நபி (ஸல்) அவர்களுடனான அத்தனை அம்சங்களிலும் முன்மாதிரியாக திகழ்ந்த நபித்தோழர்கள் "பெருமானார் (ஸல்) அவர்களை சந்திக்க எந்தளவு ஆவல் கொண்டிருந்தார்கள் என்பதை வரலாற்றின் ஊடாக நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

நாமும் மாநபி (ஸல்) அவர்களை சந்திக்க ஆவல் கொள்ள வேண்டும் என்பதை கவனப்படுத்த நபித்தோழர்களின் வாழ்வில் இருந்து ஓரிரு நிகழ்வுகளை இதோ உங்கள் செவிகளுக்கு தருகின்றேன்.

மாநபி {ஸல்} அவர்களைக் காணாமல் ஊன், உறக்கம் வேண்டாம்!

وقام أبو بكر يوما في الناس، يدعو إلى الله وإلى رسوله، وثار المشركون على أبي بكر فوطىء، وضرب ضربا شديدا، وجعل عتبة بن ربيعة يضربه بنعلين مخصوفتين يحرفهما بوجهه حتى ما يعرف وجهه من أنفه.

وحملت بنو تيم أبا بكر، وهم لا يشكّون في موته، وتكلّم آخر النهار، فقال: ما فعل رسول الله صلى الله عليه وسلم فمسّوا منه بألسنتهم وعذلوه، ثم قاموا وقالوا لأمه أم الخير: انظري أن تطعميه شيئا، أو تسقيه إياه، فلمّا خلت به ألحّت عليه، وجعل يقول: ما فعل رسول الله صلى الله عليه وسلم؟ فقالت: والله مالي علم بصاحبك.

فقال: اذهبي إلى أم جميل بنت الخطاب، فخرجت حتى أتت أمّ جميل، فمضت معها، ودنت منه أمّ جميل وهي ممن أسلم فسألها عن رسول الله صلى الله عليه وسلم قالت: هذه أمّك تسمع، قال: فلا شيء عليك منها، قالت: سالم صالح، قال: فإنّ لله عليّ ألا أذوق طعاما ولا أشرب شرابا أو آتي رسول الله صلى الله عليه وسلم، فأمهلتا، حتى إذا هدأت الرّجل، وسكن الناس، خرجتا به يتّكىء عليهما، حتى أدخلتاه،

 ورقّ له رسول الله صلى الله عليه وسلم رقة شديدة فقال أبو بكر: بأبي وأمّي يا رسول الله ليس بي بأس إلا ما نال مني الفاسق من وجهي، وهذه أمّي برة بولدها، وأنت مبارك فادعها إلى الله، وادع لها عسى أن يستنقذها بك من النار، فدعا رسول الله صلى الله عليه وسلم لأمّه، ودعاها إلى الله، فأسلمت

ஒருமுறை அபூபக்ர் (ரழி) கல் நெஞ்சக்காரர்களால் கடுமையாக மிதிக்கப்பட்டார்கள்; வன்மையாக அடிக்கப்பட்டார்கள். அந்நேரத்தில் அங்கு வந்த உத்பா, ஆபூபக்ரை செருப்பால் அடித்தது மட்டுமல்ல, அவர்களது முகத்தை செருப்பால் தேய்க்கவும் செய்தான். அவர்களது வயிற்றின் மீது ஏறி மிதித்தான். அவர்களது மூக்கு சிதைக்கப்பட்டதால் மூக்கு அடையாளம் தெரியாத அளவுக்கு ஆகிவிட்டது. தைம்கிளையினர் அன்னாரை ஒரு துணியில் சுமந்து சென்று அவர்களது வீட்டில் வைத்தார்கள். அனைவரும் அவர் இறந்துவிட்டார் என்றே எண்ணி இருந்தார்கள்.

அன்று பகலின் இறுதியில் அவர்கள் பேசத் தொடங்கியபோது அல்லாஹ்வின் தூதர் எப்படி இருக்கிறார்கள்என்றுதான் கேட்டார்கள். இதைக் கேட்ட தைம் கிளையினர் அவரைக் குறை கூறிவிட்டு அன்னாரது தாயார் உம்முல் கைடம் இவருக்கு உணவளியுங்கள்; ஏதாவது குடிக்கக் கொடுங்கள்; அவரை கவனித்துக் கொள்ளுங்கள்என்று கூறிவிட்டு எழுந்துச் சென்றனர்.

 

அன்னாரது தாய் அனைவரும் சென்றபின் உணவு சாப்பிட அவரை வற்புறுத்திக் கொண்டே இருந்தார். ஆனால் அபூபக்ரோ அல்லாஹ்வின் தூதர் என்னவானார்கள்?” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அன்னாரது தாய் உனது தோழரைப் பற்றி அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஒன்றுமே எனக்குத் தெரியாதுஎன்று கூறினார். நீங்கள் கத்தாபின் மகள் உம்மு ஜமீல் (உமரின் சகோதரி) இடம் சென்று நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரித்து வாருங்கள்என்று அபூபக்ர் (ரழி) கூறினார்கள்.

தாயார் உம்மு ஜமீலிடம் வந்து அபூபக்ர் (ரழி) உன்னிடம் முஹம்மது இப்னு அப்துல்லாஹ்வைப் பற்றி விசாரித்து வர என்னை அனுப்பினார்என்று கூற, அவர் எனக்கு அபூபக்ரையும் தெரியாது, முஹம்மது இப்னு அப்துல்லாஹ்வையும் தெரியாது. நீங்கள் விரும்பினால் உங்களுடன் உங்கள் மகனைப் பார்க்க நான் வருகிறேன்என்று கூறினார். அவர் சரிஎனக் கூறவே, உம்மு ஜமீல் அவருடன் அபூபக்ரைப் பார்க்கப் புறப்பட்டார்.

உம்மு ஜமீல் அபூபக்ரை மயக்கமுற்று மரணித்தவரைப் போன்று பார்த்தவுடன் கூச்சலிட்டு அல்லாஹ்வின் மீது சத்தியமாக! கல் நெஞ்சம் கொண்ட இறைநிராகரிப்போரும் பாவிகளும் உங்களை இவ்வாறு செய்துவிட்டார்கள். அல்லாஹ் உங்களுக்காக அவர்களிடம் பழிவாங்க வேண்டுமென நான் ஆதரவு வைக்கிறேன்என்று கூறினார்.

அவரிடம் அபூபக்ர் (ரழி), “அல்லாஹ்வின் தூதர் எப்படி இருக்கிறார்கள்என்று கேட்டதற்கு இதோ உமது தாய் (நமது பேச்சை) கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்என்று கூறவே அவரைப் பற்றி பரவாயில்லை என்று கூறியவுடன் நபி (ஸல்) நல்ல விதமாக பாதுகாப்புடன் இருக்கிறார்கள்என்று உம்மு ஜமீல் கூறினார். அவர்கள் எங்கிருக்கிறார்என்று அபூபக்ர் (ரழி) கேட்கவே அவர்கள் தாருல் அர்கமில் இருக்கிறார்கள்என்றவுடன் அல்லாஹ்வின் தூதரைச் சென்று பார்க்காமல் நான் உண்ணவுமாட்டேன், குடிக்கவுமாட்டேன். இது அல்லாஹ்விற்காக என்மீது கடமையாகும்என்று நேர்ச்சை செய்து கொண்டார்கள்.

அன்னாரது தாயாரும் உம்மு ஜமீலும் ஆள் நடமாட்டங்கள் குறைந்து மக்களின் ஆரவாரங்கள் அமைதியாகும் வரை சற்று தாமதித்து நபி (ஸல்) அவர்களிடம் அவரை அழைத்துச் சென்றார்கள். அபூபக்ர் (ரழி) நடக்க இயலாமல் அவர்கள் இருவர் மீதும் சாய்ந்து நடந்து சென்றார்கள். தாருல் அர்க்கமை அடைந்தனர் மூவரும். அபூபக்ர் (ரலி) அவர்களின் அருகே வந்த பெருமானார் {ஸல்} அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை மென்மையாக வருடி விட்டார்கள்.

பெருமானாரின் ஸ்பரிசத்தால் புத்துணர்ச்சி அடைந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் “என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பண்மாகட்டும்! அல்லாஹ்வின் தூதரே! பாவி ஒருவன் என் முகத்தில் ஏதோ செய்து விட்டான் என்பதற்காக நான் துவண்டு போகப்போவதில்லை! இதோ! என் தாய் என் நலனில் அக்கறை கொண்டவர்கள்! முபாரக்கான நீங்கள் என் தாயாருக்கு இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுங்கள்! அவர்களின் ஹிதாயத்திற்காக துஆச் செய்யுங்கள்! உங்களின் துஆ எனது தாயாரை நிரந்தர நரகின் வேதனையில் இருந்து கரை சேர்த்து காப்பாற்றி விடும்!” என்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மாநபி {ஸல்} அவர்கள் சத்திய சன்மார்க்கத்தின் பால் அழைப்பு கொடுத்து விட்டு, அவர்களின் ஹிதாயத்திற்காக துஆச் செய்தார்கள். அபூபக்ர் (ரலி) விரும்பியது போன்றே பெருமானார் {ஸல்} அவர்களுடைய துஆவின் பரக்கத்தால் அவர்களின் தாயார் இஸ்லாத்தை தழுவினார்கள். ( நூல்: ஸீரத்துன் நபவிய்யா லி அபில் ஹஸன் அந் நத்வீ (ரஹ்), ஸீரத் இப்னு ஹிஷாம் )

உங்களைக் காண்பேனா ஹபீபே!? உங்களைக் காண வேண்டுமே காத்தமுன் நபியே!?..

جاء رجل من الأنصار إلى الرسول ﷺ فقال: لأنت أحب إلي من نفسي وولدي وأهلي ومالي، ولولا أني آتيك فأراك لظننت أني سأموت، وبكى الأنصاري، فقال له رسول الله ﷺ: ما أبكاك؟ قال: ذكرت أنك ستموت ونموت فترفع مع النبيين ونحن إن دخلنا الجنة كنا دونك، فكيف نراك وأنت فوقنا ونحن تحت؟ حتى في الجنة لوعة لعدم رؤية الحبيب ﷺ ظنها ذلك الصحابي، فلم يخبره النبي ﷺ بشيء، فأنزل الله

على رسوله ﷺ

وَمَن يُطِعِ اللّهَ وَالرَّسُولَ فَأُوْلَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاء وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا ۝

அன்ஸாரித் தோழர்களில் ஒருவர் நபி அவர்களின் சமூகத்திற்கு வருகை தந்து "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் என்னை விட என் மனைவி மக்களை விட, என் குடும்பத்தை விட, என் செல்வத்தை விட எனது நேசத்திற்குரியவர்கள் ஆவீர்கள். எனினும், இந்த உலகில் நான் உங்களை பார்க்க வேண்டும் என்று நினைத்தால் உங்களை வந்து பார்த்து விடுகிறேன். ஆனால், ஒரு நாள் நான் மரணமடைந்து விடுவேன். என்று சொல்லி விட்டு அழுதார்கள்.

அப்போது, நபி அவர்கள் "எதற்காக அழுகின்றீர்? என்று வினவிய போது, நீங்களும் நாங்களும் ஒரு நாள் மரணித்து போவோம். அதன் பிறகு மறுமை நாளில் நீங்கள் சுவனத்தில் நபிமார்களுடன் உயர்ந்த நிலையில் இருப்பீர்கள். ஒரு வேளை நாங்கள் சுவனம் வந்தால் எப்படி உங்களை பார்ப்போம்? நீங்களோ உயர்ந்த அந்தஸ்தில் இருப்பீர்கள்!. நாங்கள் சுவனத்தில் சாதாரண அந்தஸ்தில் இருப்போம்! நீங்கள் அருகில் இல்லாத அந்த நிலையை எண்ணி அழுகிறேன்" என்று கூறினார். அப்போது தான் அல்லாஹ் "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த் தியாகிகளுடனும் நல்லோருடனும் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்". ( அல்குர்ஆன்:4: 69.) என்ற இறைவசனத்தை இறக்கியருளினான். ( நூல்: தஃப்ஸீர் குர்துபீ )

தனக்கு இழப்பு ஏற்பட்ட போதும்... 

 

جاءت أم سعد بن معاذ، وهي كبشة بنت رافع ـ رضي الله عنها ـ تعدو نحو رسول الله ـ صلى الله عليه وسلم ـ وقد وقف على فرسه، وسعد بن معاذ آخذ بعنان فرسه، فقال سعد: " يا رسول الله! أمّي!، فقال: مرحبا بها، فدنت حتى تأملت رسول الله ـ صلى الله عليه وسلم ـ وقالت: أما إذ رأيتُك سالما فقد أشوت (هانت) المصيبة، فعزّاها رسول الله ـ صلى الله عليه وسلم ـ بعمرو بن معاذ ابنها، ثم قال: ( يا أمّ سعد، أبشري وبشّري أهليهم: أنّ قتلاهم ترافقوا في الجنة جميعا، وقد شفّعوا في أهليهم، قالت: رضينا يا رسول الله، ومن يبكي عليهم بعد هذا؟، ثم قالت: يا رسول الله ادع لمن خلّفوا فقال: اللهم أذهب حزن قلوبهم، واجبر مصيبتهم، وأحسن الخلف على من خُلّفوا ) .

உஹது யுத்தம் நடைபெற்று முடிந்து நபி ஸல் அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட நபித்தோழர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிக் கொண்டு குதிரையின் மீது அமர்ந்து வந்து கொண்டிருந்தார்கள்.

குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்கள் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது, அங்கே ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்களின் தாயார் கப்ஷா பிந்த் ராஃபிஉ (ரலி) அவர்கள் வந்தார்கள்.

இதைக் கண்ட ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்கள் நபி ஸல் அவர்களிடம் தமது தாயார் வந்திருப்பதாக கூறினார்கள்.

அப்போது, அவர்களை நோக்கி திரும்பி "உங்கள் வருகை நல்வரவாகட்டும்! என்று வர வேற்றார்கள். பிறகு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து போனார்கள் நபி ஸல் அவர்கள்.

அப்போது, அருகில் வந்து நின்ற கப்ஷா (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! இதோ! உங்களை நான் பார்த்து விட்டேன். உஹது யுத்த களத்தில் இருந்து உங்களைப் பற்றி ஏதேதோ செய்திகள் சொல்லப்பட்டு செய்வதறியாது துடித்துப் போயிருந்தேன்! இதோ! உங்களை கண்டு விட்டேன்.  இது போதும் என் வாழ்வில் எனக்கேற்படும் எந்த துன்பமும் ஒன்றுமே இல்லை!" என்று கூறினார்கள்.

அப்போது நபி ஸல் அவர்கள் உஹதில் ஷஹீதான அவர்களின் இன்னொரு மகனான அம்ர் இப்னு மஆத் (ரலி) அவர்களுக்காக இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்கள்.

பின்னர், உம்மு ஸஅதே! என்றழைத்து நீங்களும்,:யுத்த களத்தில் கொல்லப்பட்டு ஷஹீதான குடும்பத்தார்களும் சோபனத்தை பெற்றுக் கொள்ளுங்கள்!; இறை வழியில் கொல்லப்பட்ட ஷஹீதுகள் அனைவரும் சுவனத்தில் நெருக்கமாக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் குடும்பத்தார்களுக்காக அவர்களுக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்கள்.

அப்போது, உம்மு ஸஅத் (ரலி) அவர்கள் "நாங்கள் பொருத்திக் கொண்டோம்! அல்லாஹ்வின் தூதரே! இவ்வளவு மகத்தான சோபனங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் யார் தான் அழுது கொண்டிருப்பார்கள்?.

அல்லாஹ்வின் தூதரே! இவ்வளவு மகத்தான சோபனம் வழங்கப்பட காரணமாக இருந்த இந்த உஹது யுத்தத்தில் சில காரணங்களால் பங்கேற்க முடியாமல் போனவர்களுக்காக நீங்கள் துஆ செய்யுங்கள்! என்று கேட்டார்கள்.

அதற்கு, நபி ஸல் அவர்கள் "யாஅல்லாஹ்! கவலைகளால் நிரம்பி இருக்கும் அவர்களின் உள்ளங்களில் இருந்து கவலைகளை அகற்றுவாயாக! அவர்களின் காரியங்களில் பொறுமையை வழங்கியருள்வாயாக! எவரெல்லாம் நியாயமான காரணங்களால் இந்த யுத்தத்தில் பங்கேற்க முடியாமல் போனார்களோ அவர்களுக்கு சிறந்த மாற்றத்தை வழங்கியருள்வாயாக!" என்று துஆ செய்தார்கள். ( நூல்: தபகாத் இப்னு ஸஅதுல் குப்ரா )

தொடர்படியாக இழப்புகளை சந்தித்த போதும்...

عن سعد بن أبي وقاص ـ رضي الله عنه ـ قال: ( مرَّ رسول الله ـ صلى الله عليه وسلم ـ بامرأة من بني دينار وقت أصيب زوجها وأخوها وأبوها مع رسول الله ـ صلى الله عليه وسلم ـ في أُحُد، فلما نُعوا لها قالت: ما فعل رسول الله ـ صلى الله عليه وسلم ـ؟، قالوا: خيراً يا أم فلان، هو بحمد الله كما تحبين، قالت: أرونيه حتى أنظر إليه، قال: فأشير لها حتى إذا رأته قالت:كل مصيبة بعدك جَلل (صغيرة) ) .

உஹதில் ஷஹீதாக்கப்பட்ட ஒவ்வொரு நபித்தோழர்களின் குடும்பத்தார்களையும் சந்தித்து நபி ஸல் அவர்கள் இரங்கல் கூறி ஆறுதல் படுத்திக் கொண்டிந்த தருணம் அது.

அந்த தருணத்தில் பனூ தீனார் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது குடும்பத்தில் தமது தந்தை, தமது கணவர், தமது இரு மகன்கள் ஆகியோரை உஹது களத்தில் இழந்திருந்தார். அவர்கள் நால்வரும் ஷஹீதாக்கப்பட்டிருந்தனர்.

அப்போது அந்த பனூ தீனார் கோத்திரத்தைச் சேர்ந்த அந்தப் பெண்மணியிடம் நபித்தோழர்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஷஹீதாக்கப்பட்ட விஷயம் குறித்து சொல்லப்பட்டது. மேலும், நபித்தோழர்கள் அது குறித்து ஆறுதலும் இரங்கலும் தெரிவித்தனர். அப்போது அந்தப் பெண்மணி "நபி ஸல் அவர்கள் எப்படி இருக்கின்றார்கள்? என்று கேட்டார்.

அதற்கு, நபித்தோழர்கள் "இன்னாரின் தாயே! அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! நீங்கள் விரும்புவது போன்றே மாநபி ஸல் அவர்கள் நலமுடன் இருக்கின்றார்கள்" என்றனர்.

அதற்கு அந்தப் பெண்மணி "நபி ஸல் அவர்களை நான் இப்போது பார்க்க வேண்டும். பார்த்து நான் அதை உறுதி செய்து கொள்ள வேண்டும்". என்றார்.

 

அப்போது, நபித்தோழர்கள் "ஓரிடத்தில் நபி ஸல் அவர்கள் நிற்பதை சுட்டிக் காட்டினார்கள்".. மாநபி ஸல் அவர்களைக் கண்ட அந்தப் பெண்மணி "உங்களைக் கண்டு கொண்டேன்! உங்களைக் கண்டதன் பின்னர் எனக்கு ஏற்பட்ட அனைத்து சோதனைகளும் சாதாரணமானவையே!" என்று கூறினார். ( நூல்: அஹ்மத் )

அல் இஸ்தீஆப் ஃபீ மஅரிஃபத்தில் அஸ்ஹாப் என்ற நூலிலும், அல் இஸாபா ஃபீ தம்யீஸிஸ் ஸஹாபா என்ற நூலிலும் மிகவும் விரிவான முறையில் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது.

அந்தப் பெண்மணியின் பெயர் ஸுமைரா பிந்த் கைஸ் (ரலி) என்றும், அவருடைய இரு மகன்களின் பெயர் ஸுலைம் (ரலி) நுஃமான் (ரலி) என்றும்  அவரது கணவர் பெயர் ஹாரிஸ் இப்னு ஸஅலபா (ரலி) என்றும், தந்தை பெயர் கைஸ் (ரலி) என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பெண்மணியின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இந்தப் பெண்மணியின் முதல் கணவருக்கு பிறந்த இரண்டு ஆண்மக்களில் ளஹ்ஹாக் (ரலி) பத்ரில் ஷஹீதாக்கப்பட்டார்கள். இன்னொரு மகன் நுஃமான் (ரலி) உஹதிலும், இரண்டாம் கணவருக்குப் பிறந்த குத்பா (ரலி) உஹதுக்கு முன் நடைபெற்ற பிஃர மஊனா நிகழ்வில் ஷஹீதாக்கப்பட்டார்கள். இன்னொரு மகன் ஸுலைம் (ரலி) உஹதில் ஷஹீதாக்கப்பட்டார்கள்.

قالت : هما ولداي ، النعمان وسليم ، قد شرفني الله باستشهادهما ، وإنّي لأرجو الله أن يُلحقني بهما في الجنة .

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பத்ர், பிஃர மஊனா, உஹது என்று தொடர்படியாக இழப்புகளை சந்தித்து வந்த ஸுமைரா (ரலி) அவர்கள் தற்போது கணவரையும், தந்தையையும், குறிப்பாக இரு மகன்களையும் இழந்து நிற்கிறாரே என்று அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய போது "அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்கள் இரண்டு பேரையும் ஷஹீதாக்கி எனக்கு சிறப்பு செய்திருக்கின்றான். அவ்விரண்டு பேரின் மூலமாக என்னை அவர்களுடன் சுவனத்தில் சேர்த்து வைப்பான்" என்று கூறினார்கள்.

மாநபி (ஸல்) அவர்களை பார்க்க வேண்டும். அவர்களை சந்திக்க வேண்டும் ஆவல் மட்டுமே அவர்களின் இதயங்களில் நிரம்பி இருந்ததே தவிர அவர்களின் அப்போதைய இழப்புகள் அவர்களுக்கு பெரிதாகவே தெரியவில்லை.

நான் மரணமாவது எனக்கு மகிழ்ச்சியே!

لا تقولي واحزناه، وقولي وا فرحاه  غدا نلقى الأحبة، محمدا وصحبه

பிலால் (ரலி) அவர்கள் மரணத்தின் விளிம்பில் இருந்த போது அவரது மனைவி வா ஹஸனாஹ்! எனக்கேற்பட்ட கவலையே! என்று புலம்பினார். அப்போது பிலால் (ரலி) அவர்கள் "வா ஃபரிஹாஹ்! எனக்கு ஏற்படும் மகிழ்ச்சியே! கூறிவிட்டு, நாளைக்கு நான் எனது நேசர் முஹம்மத் ஸல் அவர்களையும், எனது நேசர்களான என் (நபித்) தோழர்களையும் சந்திக்க இருக்கின்றேன்" என்று கூறினார்கள்.

ஹிஜ்ரீ 18 ம் ஆண்டி டமாஸ்கஸ் நகரில் தமது 57 வயதில் அவர் மரணமடைந்தார். அங்குள்ள பாபுஸ் ஸகீர் எனும் மைய வாடியில் அடக்கம் செய்யப் பட்டார்கள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் நமது உயிரினும் மேலான நமது நபி முஹம்மத் {ஸல்} அவர்களை சந்திக்கும் நற்பேற்றை தந்தருள்வானாக!

உலகில் நாம் வாழும் காலத்தில் மதீனா சென்று மா நபி {ஸல்} அவர்களைச் சந்தித்து ஸலாம் உரைத்து உளமுருகி நன்றி தெரிவித்து விடும் நற்பேற்றினை நம் எல்லோருக்கும் வழங்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!! 

1 comment:

  1. மாஷா அல்லாஹ் அருமையான தகவல்

    ReplyDelete