Thursday, 20 November 2025

டாய்லெட் (கழிவறை) பரிணாமம்:- உலக நாகரிகமும்... இஸ்லாமிய நாகரிகமும்....

டாய்லெட் (கழிவறை) பரிணாமம்:-

உலக நாகரிகமும்... இஸ்லாமிய நாகரிகமும்....

மனிதனின் அடிப்படை தேவைகளில் முக்கியமானவை உணவு, உடை, உறைவிடம். இதற்கு அடுத்தபடியாக இருப்பது சுகாதாரம். 

அந்த அளவுக்கான முக்கியத்துவத்தை அன்றாடம் பயன்படுத்தும் கழிப்பறைகளுக்கு ஏனோ பலரும் அளிப்பதில்லை. சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கழிப்பறைகளின் தேவை, அவசியத்தை உணர்ந்து சிங்கப்பூரில் ஜாக் சிம் என்பவரால் கடந்த 2001-ம் ஆண்டு முதல்முறையாக நவ.19-ம் தேதி உலக கழிப்பறை கழகம் தொடங்கப்பட்டது.

அதன்பின், 2013 முதல் நவ.19-ம் தேதியை உலக கழிப்பறை தினமாக ஐ.நா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. கழிப்பறை சுகாதாரத்தின் முக்கியத்துவத்தையும், அது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதுதான் இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

2025 -ம் ஆண்டு நவம்பர் 19 அன்று உலக கழிவறை தினம் "Sanitation in a changing world - மாற்றமடைகிற உலகில் சுகாதாரம்" என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்பட்டது.

பாதுகாப்பான கழிவறை வசதியின்றி உலகில் 3.5 மில்லியன் 340 கோடி பேர் வாழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய அளவில் 419 மில்லியன் மக்கள் திறந்த வெளியில் மலஜலம் கழிப்பதாகவும் இதனால் ஏற்படும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் காரணமாக ஆண்டுக்கு 4.32 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில், குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பது பல்வேறு கட்ட ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

தற்போதைய முன்னேற்ற விகிதத்தில், 2030ம் ஆண்டிலும் 3 பில்லியன் மக்கள் பாதுகாப்பான கழிப்பறைகள் இல்லாமல் வாழ்வார்கள் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ( நன்றி: கல்கி ஆன்லைன் )

டாய்லெட் (கழிவறை) பரிணாமம்:- உலக நாகரிகமும்... இஸ்லாமிய நாகரிகமும்....

கருங் கற்களாலான நீண்ட செவ்வக வடிவிலான பெஞ்ச் போன்ற அமைப்பு, அதில் நெடுகிலும் துளைகளிடப்பட்டிருக்கும், அந்த துளைகளின் மீது ரோமானியர்கள் மலங்கழித்தார்கள். அந்த கழிவு அப்படியே பெஞ்சின் கீழுள்ள கால்வாய் வழியாக நீர்நிலைகளில் போய் சேர்ந்துவிடும். கிறிஸ்துவுக்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் ரோமப் பேரரசில் குறைந்தது இருபதுபேர் ஒன்றாக உற்கார்ந்துகொண்டு மலம் கழிக்கும்வகையில் இப்படித்தான் கழிப்பறைகள் இருந்தன என தொல்பொருள் ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மொசபடோமிய மற்றும் சிந்துசமவெளி நாகரீகங்களின் அகழ்வாராச்சிகளின் போது கண்டெடுக்கப்பட்ட புதைபடிமங்களின் படி வீடுகளிலிருந்து கழிவுகளை அகற்றும் கழிவு வாய்க்கால்கள் பிரதான பாதையுடன் இணைக்கப்பட்டிருப்பதை காண முடிந்தது. 

சீனாவில் மலக் கழிவுகள் உடனடியாக அப்புறப்படுத்தப்படவேண்டும் என்பதற்காக பன்றிகள் மிக அதிகமாக வளர்க்கப்பட்டு அப்பன்றிகளுக்கு உணவாக மனித மலம் கொடுக்கப்பட்டதுடன், இரவு வேளைகளில் ஊர்கள் தோறும் மலத்தினை சேகரித்து அவற்றை ஊருக்கு ஒதுக்குபுறமாக குறிப்பிட்ட இடத்தில் கொட்டுவதற்க்கென்றே பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 

பாரிசில் ஜன்னல்களில் அமர்ந்தவாறு மலம் கழிக்கும் வழக்கம் இருந்ததாகவும், அதன்போது தவறி விழுந்து மரணங்கள் ஏற்படவே வீட்டில் உள்ள பானைகளில் மலம் கழிக்கப்பட்டு அவை ஜன்னல்கள் ஊடாக வெளியே வீசப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. 

பழங்காலத்து அரண்மனைகளில் அரச குடும்பத்தினர்கள் மலம் கழிக்கும்போது அவற்றுக்கு தண்ணீரை ஊற்றி கழிவிவிடுவதற்கென்றே பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனராம். எனினும் ஒழுங்கமைக்கப்படாத இந்த கழிவகற்றல்களால் vibrio cholerae , shigella , salmonella Typhi போன்ற தொற்று நோய்கள் மிக வேகமாக பரவத்தொடங்கியது. இதன் பின்னரே சிறிதுசிறிதாக இது பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பரவத்தொடங்கியது. 

அந்த காலகட்டத்தில் தான் (1860) லூயிஸ் பாஸ்டர் எனும் அறிவியல் அறிஞர் வைரஸ், பாக்டீரியா போன்ற வெறுங் கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிரிகள் இயற்கையாகவே தாம் பெற்றுள்ள ஆற்றலால், மரபணு மாற்றத்தால் புதுப்புது வடிவம் எடுப்பதோடல்லாமல் ,அவை புதிய புதிய வகையில் தொற்றத் தொடங்கி கட்டுமீறிப் பரவுவதை, பெருகுவதை கண்டுபிடித்தார்.

காலப்போக்கில் இங்கிலாந்து அரண்மனையில் மூடியுடன் கூடிய மரத்திலாலான பெட்டிகள் (Chamber Pot) மலம் கழிப்பதற்கென்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டு , பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன. 

தற்கால நவீன டாய்லெட்டுக்களின் உருவாக்கத்தில் முன்னோடியாக இருந்தவர் முதலாம் எலிசபெத்தின் கணவர் சர் ஜான் ஹாரிங்டன் (Sir John Harrington) என்பவரே. இவர் தான் தனது மனைவியான முதலாம் எலிசபெத்திற்காக உருவாக்கி பரிசாக கொடுத்த (modern flush toilet) டொய்லெட்டினை முன்மாதிரியாகக்கொண்டே பின்னாளில் வெஸ்டர்ன் டொய்லெட்டுக்கள் உருவாக்கப்பட்டது. ( நன்றி: Archive.Roar.media தமிழ் )

கழிப்பறைகளின் வகைகள்:-

கழிப்பறைகளில் உலர் கழிப்பறை, உரக்குழி கழிப்பறை, ஈரக் கழிப்பறை, குழி கழிப்பறை, பிளேர் கழிப்பறை, உறிஞ்சு குழி கழிப்பறை என பல வகைகள் உள்ளன. இதில் தற்போது பலரும் பயன்படுத்துவது, தரையில் அமைக்கப்பட்டுள்ள துளையில் கழிவுகள் சேகரமாகும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குழி கழிவறைதான். தற்போது, உறிஞ்சு குழி கழிப்பறை என்னும் வெஸ்டர்ன் கழிப்பறைகளும் அதிகளவில் புழக்கத்துக்கு வந்துள்ளன. தவிர பயோ கழிப்பறைகளும் வந்துவிட்டன. ( நன்றி: இந்து தமிழ் திசை, 19/11/2019 )

 

நபி அவர்களின் காலத்தில் மலஜலம் கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறி தூரமான வெற்றிடத்துக்குச் செல்லும் வழக்கம் ஆரம்பத்தில் இருந்தது.

حدثنا عبد الله بن مسلمة بن قعنب القعنبي حدثنا عبد العزيز يعني ابن محمد عن محمد يعني ابن عمرو عن أبي سلمة عن المغيرة بن شعبة أن النبي صلى الله عليه وسلم كان إذا ذهب المذهب أبعد

நபி அவர்கள் கழிப்பிடம் செல்வதாக இருந்தால் தூரமாகச் சென்று விடுவார்கள். அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி) ( நூல்கள் : அபூதாவூத், நஸாயீ )

நபி அவர்களின் காலத்துப் பெண்கள் மாலை இருள் படரும் வரை காத்திருந்து விட்டு மாலை இருள் படர்ந்ததும் திறந்தவெளி கழிப்பிடம் செல்வார்கள்.

இது பற்றி ஆயிஷா (ரலி) கூறும் போது

فخرجت أنا وأم مسطح قبل المناصع متبرزنا لا نخرج إلا ليلا إلى ليل وذلك قبل أن نتخذ الكنف قريبا من بيوتنا وأمرنا أمر العرب الأول في البرية أو في التنزه

நானும், உம்மு மிஸ்தஹ் (ரலி) அவர்களும் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த மனாஸிஉ என்னுமிடத்தை நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வது வழக்கம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு அங்கு சென்று கொண்டிருந்தோம். (இயற்கைத் தேவைக்காக) நகருக்கு வெளியே செல்லும் முற்கால அரபுகளின் வழக்கமே அப்போது எங்களது வழக்கமாயிருந்தது. (நீண்ட ஹதீஸின் சுருக்கம் - நூல் : புகாரி ) 

حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن يحيى بن سعيد عن محمد بن يحيى بن حبان عن عمه واسع بن حبان عن عبد الله بن عمر أنه كان يقول إن ناسا يقولون إذا قعدت على حاجتك فلا تستقبل القبلة ولا بيت المقدس فقال عبد الله بن عمر لقد ارتقيت يوما على ظهر بيت لنا فرأيت رسول الله صلى الله عليه وسلم على لبنتين مستقبلا بيت المقدس لحاجته وقال لعلك من الذين يصلون على أوراكهم فقلت لا أدري والله قال مالك يعني الذي يصلي ولا يرتفع عن الأرض يسجد وهو لاصق بالأرض

நான் ஒரு நாள் என் வீட்டின் மாடியில் ஏறினேன். அப்போது நபி அவர்கள் (தமது வீட்டில்) இரண்டு செங்கற்கள் மீது பைத்துல் முகத்தஸை நோக்கி அமர்ந்து கொண்டு தமது இயற்கைத் தேவையை நிறைவேற்றிக் கொண்டிருந்ததை பார்த்தேன் என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள் ( நூல்: புகாரி )

நபி ஸல் அவர்கள் வாழும் காலத்திலேயே தத்தமது வீடுகளுக்குள் கழிப்பறை அமைத்துக் கொள்ளும் பழக்கம் ஏற்பட்டு விட்டது என்பதை ஆயிஷா ரலி மற்றும் இப்னு உமர் ரலி ஆகியோரின் அறிவிப்புகளில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

கழிவறை பயன்பாட்டின் அவசியத்தை வலியுறுத்திய நபி அவர்கள்...

கழிவறையை பயன் படுத்தி மலஜலம் கழிக்கவில்லையானால் பின் வரும் பாவத்தில் இருந்து நாம் தவிர்ந்து கொள்ள இயலாது.

حَدَّثَنَا بَهْزُ بْنُ حَكِيمٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ عَوْرَاتُنَا مَا نَأْتِي مِنْهَا وَمَا نَذَرُ قَالَ ‏"‏ احْفَظْ عَوْرَتَكَ إِلاَّ مِنْ زَوْجَتِكَ أَوْ مِمَّا مَلَكَتْ يَمِينُكَ ‏"‏ ‏.‏ فَقَالَ الرَّجُلُ يَكُونُ مَعَ الرَّجُلِ قَالَ ‏"‏ إِنِ اسْتَطَعْتَ أَنْ لاَ يَرَاهَا أَحَدٌ فَافْعَلْ ‏"‏ ‏.‏ قُلْتُ وَالرَّجُلُ يَكُونُ خَالِيًا ‏.‏ قَالَ ‏"‏ فَاللَّهُ أَحَقُّ أَنْ يُسْتَحْيَا مِنْهُ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ ‏.‏ وَجَدُّ بَهْزٍ اسْمُهُ مُعَاوِيَةُ بْنُ حَيْدَةَ الْقُشَيْرِيُّ وَقَدْ رَوَى الْجُرَيْرِيُّ عَنْ حَكِيمِ بْنِ مُعَاوِيَةَ وَهُوَ وَالِدُ بَهْزٍ

எங்கள் மறைவான உறுப்புகளில் எதை மறைக்க வேண்டும் ? எவற்றை மறைக்காமல் இருக்கலாம் ? என்று நபி ஸல் அவர்களிடம் கேட்டேன் அதற்கு நபி ஸல் அவர்கள் உன் மனைவி உடன் அடிமை பெண்களிடம் தவிர மற்றவர்களிடம் உன் மறை உறுப்புக்களை பாதுகாத்து கொள் என்று விடையளித்தார்கள் ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் இருக்கும் போது மறை உறுப்பை காத்து கொள்ள வேண்டுமா ? என்று கேட்டேன் அதற்கு நபி ஸல் அவர்கள் எவரும் பார்க்க முடியாதவாறு உம்மால் மறைத்துக் கொள்ள முடியுமானால் மறைத்துக்கொள் என்று கூறினார்கள். ஒரு மனிதர் தனிமையில் இருக்கும் போது ( மறைவுறுப்பை வெளிப்படுத்தலாமா ?) என்று கேட்டேன் . அதற்கு நபியவர்கள் அல்லாஹ் வெட்கப்படுவதற்கு மிகத் தகுதியானவர் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா ( ரழி ) ( நூல் : திர்மிதீ )

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، عَنِ الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ، قَالَ أَخْبَرَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ يَنْظُرُ الرَّجُلُ إِلَى عَوْرَةِ الرَّجُلِ وَلاَ الْمَرْأَةُ إِلَى عَوْرَةِ الْمَرْأَةِ وَلاَ يُفْضِي الرَّجُلُ إِلَى الرَّجُلِ فِي ثَوْبٍ وَاحِدٍ وَلاَ تُفْضِي الْمَرْأَةُ إِلَى الْمَرْأَةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ ‏"‏ ‏.‏

ஒரு ஆண் மற்றொரு ஆணுடைய மறை உறுப்பை பார்க்க வேண்டாம் ஒரு பெண் மற்றொரு பெண்ணுடைய மறும உறுப்பை பார்க்க வேண்டாம் .ஒரு ஆண் மற்றொரு ஆணுடன் ஒரு ஆடைக்குள் படுக்க வேண்டாம் . ஒரு பெண் மற்றொரு ஒரு ஆடைக்குள் படுக்க வேண்டாம் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ சயீத் அல் குத்ரீ ( ரழி ) ( நூல் : முஸ்லிம் )

சிறு நீர் கழிக்கும் போது மறைக்காதவருக்கு கப்ரில் தண்டனை உண்டு

 

 

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِقَبْرَيْنِ فَقَالَ ‏"‏ إِنَّهُمَا لَيُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ أَمَّا أَحَدُهُمَا فَكَانَ لاَ يَسْتَتِرُ مِنَ الْبَوْلِ، وَأَمَّا الآخَرُ فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ ‏"‏‏.‏ ثُمَّ أَخَذَ جَرِيدَةً رَطْبَةً، فَشَقَّهَا نِصْفَيْنِ، فَغَرَزَ فِي كُلِّ قَبْرٍ وَاحِدَةً‏.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ، لِمَ فَعَلْتَ هَذَا قَالَ ‏"‏ لَعَلَّهُ يُخَفَّفُ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا ‏"‏‏.‏ قَالَ ابْنُ الْمُثَنَّى وَحَدَّثَنَا وَكِيعٌ قَالَ حَدَّثَنَا الأَعْمَشُ قَالَ سَمِعْتُ مُجَاهِدًا مِثْلَهُ ‏"‏ يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ ‏"‏‏.‏

 நபி அவர்கள் இரு கப்ருகளைக் கடந்து சென்றார்கள். அப்போது இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக ( பாவத்திற்காக ) இவர்கள் வேதனை செய்யப்படவில்லை . அவ்விருவரில் ஒருவர் தாம் சிறு நீர் கழிக்கும் போது மறைப்பதில்லை மற்றொருவர் கோள் சொல்லித்திரிபவராக இருந்தார் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ( ரழி ) ( நூல் : புகாரி )

மேலும், நபி அவர்கள் கழிவறை கட்டப்பட வேண்டியதன் அவசியத்தை இந்த எச்சரிக்கையின் ஊடாக வலியுறுத்தினார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்னொரு கோணத்தில் நபி அவர்கள் முஸ்லிம்களை மனதளவில் தயார் படுத்தினார்கள்.

وعن أبي هريرة قال: أنَّ رسولَ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ قالَ : اتَّقوا اللَّاعِنَينِ ، قالوا: وما اللَّاعنانِ يا رسولَ اللَّهِ ؟ قالَ الَّذي يتخلَّى في طريقِ النَّاسِ أو ظلِّهِم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள்என்று கூறினார்கள். மக்கள், “சாபத்திற்குரிய அவ்விரு செயல்கள் என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள்.

அதற்கு, “மக்களின் நடைபாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான) நிழல்களில் மலம் கழிப்பதுதான்என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ( நூல்: முஸ்லிம் )

கழிவுகளை அகற்றுவதும்... கருணை நபி அவர்களின் வழிகாட்டலும்...

தந்தையை விட மேலாக தங்கள் சமுதாயத்திற்கு (பிள்ளைகளுக்கு) அணு அணுவாக தேவையான அனைத்தையும் கற்றுக் கொடுத்தார்கள் கருணை நபி அவர்கள். மலம், ஜலம் கழிக்கும் முறையைக் கூட கற்றுத் தர தவறவில்லை.

عن ابي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: إنَّـما أنا لكم مِثْلُ الوالِدِ، أُعَلِّمُكم، فإذا أَتى أَحَدُكم الـخَلاءَ فلا تَسْتَقْبِلوها ولا تَسْتَدْبِروها، ولا يَسْتَنْجي بِيَمينِه، وكان يَأْمُرُ بِثَلاثةِ أَحْجارٍ، ويَنْهى عن الرَّوَثِ والرِّمَّةِ

நபி (ஸல்) அவர்கள் நான் உங்களுக்கு தந்தையைப் போன்றவன்என்று கூறிவிட்டு, உங்களுக்கு நான் கற்றுத் தருகிறேன் என்று சொல்லி "உங்களில் ஒருவர் கழிவறைக்கு வந்தால் கிப்லாவை முன்னோக்கவோ பின்னோக்கவோ வேண்டாம். மேலும், வலது கை கொண்டு சுத்தம் செய்ய வேண்டாம். மேலும், விட்டைகள் கொண்டு சுத்தம் செய்யவும் வேண்டாம்" என்று கழிவறை ஒழுங்குகளைப் பற்றி கற்றுத் தந்தார்கள். ( நூல்: அஹ்மத் )

وفي رواية مسلم: "المشركون" إلى سلمان الفارسي رضي الله عنه فقالوا: لقد عَلَّمَكُمْ نَبِيُّكُمْ كُلَّ شَيْءٍ حَتَّى الْخِرَاءَةَ فَقَالَ: أَجَلْ (لَقَدْ نَهَانَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ لِغَائِطٍ أَوْ بَوْلٍ، أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِالْيَمِينِ، أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِأَقَلَّ مِنْ ثَلَاثَةِ أَحْجَارٍ، أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِرَجِيعٍ أَوْ بِعَظْمٍ)

ஒரு முறை ஸல்மான் (ரலி) அவர்களிடம் முஷ்ரிகீன்கள் கேலி செய்த வண்ணம் என்ன? உங்கள் நபி உங்களுக்கு மலம், ஜலம் கழிக்கும் முறைகளை கூட கற்றுத் தருகிறாராமே!என்று கேட்டதற்கு ஸல்மான் (ரலி) அவர்கள் ஆம்என்று கூறி அதன் சில முறைகளையும் கூறினார்கள். ( நூல் : முஸ்லிம் )

அல்லாஹ்வின் நேசத்தைப் பெற்றுத் தரும் சுத்தம்....

பொதுவாக மலஜலம் கழித்த பின்னர் தண்ணீரைக் கொண்டு நாம் சுத்தம் செய்கிறோம். எனினும் கற்களைக் கொண்டும் சுத்தம் செய்யலாம். இவ்வாறு கற்களைக் கொண்டு மட்டும் சுத்தம் செய்யும் பட்சத்தில் குறைந்த பட்சம் 3 கற்களைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். 3 கற்களைக் கொண்டும் சுத்தமாகாவிட்டால் சுத்தமாகும் வரை கற்களை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். 

எனினும் கற்களைக் கொண்டு மட்டும் சுத்தம் செய்வதை விட தண்ணீரைக் கொண்டு மட்டும் சுத்தம் செய்வது சிறந்தது. 

عن مجاهد ، عن ابن عباس قال : لما نزلت هذه الآية : ( فيه رجال يحبون أن يتطهروا ) بعث رسول الله صلى الله عليه وسلم إلى عويم بن ساعدة فقال : " ما هذا الطهور الذي أثنى الله عليكم ؟ " . فقال : يا رسول الله ، ما خرج منا رجل ولا امرأة من الغائط إلا غسل فرجه - أو قال : مقعدته - فقال النبي صلى الله عليه وسلم . " هو هذا " .

மேலும் கற்களைக் கொண்டு சுத்தம் செய்வதை விட தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வது சிறந்தது. அவ்வாறு சுத்தம் செய்பவர்களை அல்லாஹ்வே புகழ்ந்து கூறியுள்ளான்.

அதிலே (குபா எனும் ஊரிலே) மிக பரிசுத்தவான்களாக இருப்பதை விரும்புபவர்களும் உள்ளனர். அல்லாஹ்வும் பரிசுத்தவான்களை விரும்புகிறான். (அல்குர்ஆன் 8:108) என்ற வசனம் இறங்கியவுடன் நபி அவர்கள் குபாவாசிகளில் உவைம் இப்னு ஸாஇதா (ரலி) அவர்களை அழைத்து அவர்களிடம் அல்லாஹ்வே உங்களின் சுத்தத்தை புகழ்ந்து கூறுமளவிற்கு நீங்கள் சுத்தம் செய்யும் முறைதான் என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஆணோ பெண்ணோ நாங்கள் (மலம், ஜலம் கழித்த பின்) தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வோம். என்று பதில் கூறினார்கள். ( நூல் : இப்னு மாஜா ).

மண்ணறையில் வேதனையை பெற்றுத் தரும் சுத்தமின்மை...

عن ثابت عن النبي ﷺ، أخرجه البخاري ومسلم في الصحيحين، قال: «مر النبي ﷺ على قبرين فقال: إنهما ليعذبان، وما يعذبان في كبير، ثم قال: بلى، أما أحدهما فكان يمشي بالنميمة، وأما الآخر فكان لا يستنزه من البول

நபி (ஸல்) அவர்கள் இரண்டு கப்ருக்கு பக்கத்தில் சென்று கொண்டிருக்கும் போது அவ்விரு கப்ருகளிலுள்ளவர்களும் வேதனை செய்யப்படுகின்றார்கள், (ஆனால்) பெரும் விஷயத்தில் அவ்விருவரும் வேதனை செய்யப்படவில்லை, அதில் ஒருவர் சிறு நீர் கழித்தால் சுத்தம் செய்ய மாட்டார், மற்றவர் கோள்செல்லித் திரிபவராக இருந்தார் என நபி அவர்கள் கூறினார்கள். ( நூல்: நஸாயி )

மலஜலம் கழித்தழில் சில ஒழுங்குமுறைகள்....

கழிவறை நுழையும் முன்...

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَشْعَثِ بْنِ سُلَيْمٍ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رضي الله تعالى عنها، قَالَتْ: «كَانَ النَّبِيُّ ﷺ يُحِبُّ التَّيَمُّنَ مَا اسْتَطَاعَ فِي شَأْنِهِ كُلِّهِ، فِي طُهُورِهِ، وتَرَجُّلِهِ، وتَنَعُّلِهِ».

நபி அவர்கள் சுத்தமான இடங்களுக்குள் நுழையும் போதும் செருப்பு அணியும் போதும் தலை சீவும் போதும் வலது பக்கத்தை முற்படுத்துவதையே விரும்பி வந்தார்கள். (அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி), நூல் : இப்னுமாஜா)

قَالَ حَدَّثَتْنِي حَفْصَةُ، زَوْجُ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَجْعَلُ يَمِينَهُ لِطَعَامِهِ وَشَرَابِهِ وَثِيَابِهِ وَيَجْعَلُ شِمَالَهُ لِمَا سِوَى ذَلِكَ ‏.

அன்னை ஹஃப்ஸா ரலி அவர்கள் அறிவித்தார்கள்:- நபி அவர்கள் உணவு உண்ணும் போதும், நீர் அருந்தும் போதும், ஆடை அணியும் போதும் வலதை பயன் படுத்துவார்கள். இவையல்லாத மற்ற காரியங்களுக்கு இடதை பயன் படுத்துவார்கள். ( நூல்: அஹ்மத் )

இதனடிப்படையில் மலம் ஜலம் கழிக்க கழிப்பிடம் நுழையும் பொழுது இடது காலை முதலில் வைத்தும் வெளியேறும் பொழுது வலது காலையும் முதலில் வைத்தும் வெளியேற வேண்டும்.

இரண்டு துஆக்கள்....

عن علي بن أبي طالبٍ أن النبي ﷺ قال: سَتْرُ ما بين الجن وعورات بني آدم إذا دخل أحدُهم الخلاء أن يقول: بسم الله، أخرجه الترمذي وابن ماجه

 

நபி அவர்கள் அருளினார்கள் : ஜின்களின் கண்களுக்கும் மனிதர்களின் மர்மஸ்தலங்களுக்கும் மத்தியில் மறைப்பு ஏற்பட (வேண்டுமானால்) அவர்கள் கழிப்பிடம் செல்லும் முன் பிஸ்மில்லாஹ்என்று ஓதிக் கொள்ளட்டும். (அறிவிப்பாளர்: ஹள்ரத் அலி (ரலி), நூல்: திர்மிதி)

وفي "الصحيحين" عن أنسٍ قال: كان النبي ﷺ إذا دخل الخلاء قال: اللهُم إني أعوذ بك من الخُبُث والخبائث

நபி அவர்கள் கழிவறை செல்ல நாடினால் அல்லாஹும்ம இன்னி அஊதுபிக்க மினல் குப்ஸி வல் கபாயிஸி” (இறைவா! நிச்சயமாக நான் கெட்ட ஆண் ஜின்கள், பெண் ஜின்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.) என்ற துஆவை ஓதுவார்கள். (அறிவிப்பாளர் : ஹள்ரத் அனஸ் (ரலி), நூல் : புகாரி)

தலையை மறைத்தலும், செருப்பு அணிதலும்...

وروى البيهقي (465) عَنْ حَبِيبِ بْنِ صَالِحٍ قَالَ : ( كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ الْخَلاَءَ لَبِسَ حِذَاءَهُ وَغَطَّى رَأْسَهُ ) .

நபி அவர்கள் கழிப்பிடம் செல்லும் போது தலையை மறைத்து, கால்களுக்கு செருப்பு அணிந்தவர்களாக செல்வார்கள்.(அறிவிப்பாளர் : ஹள்ரத் ஹபீப் இப்னு ஸாலிஹ் (ரலி), நூல் : ஸுனனுல் குப்ரா)

فعن عُرْوَة ، عَنْ أَبِيهِ : " أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ ، قَالَ ، وَهُوَ يَخْطُبُ النَّاسَ : " يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ ، اسْتَحْيُوا مِنَ اللهِ ، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ إنِّي لأظل حِين أَذْهَبُ إلَى الْغَائِطِ فِي الْفَضَاءِ ، مُغَطّيًا رَأْسِي اسْتِحْيَاءً مِنْ رَبِّي "

رواه ابن المبارك في " الزهد " (1/107) ، وابن أبي شيبة في "المصنف" (1/105) .

وإسناده صحيح .

அபூபக்ர் ரலி அவர்கள் ஆட்சி காலத்தில் ஒரு முறை மக்களுக்கு பிரசங்கம் செய்யும் போது "முஸ்லிம்களே! அல்லாஹ்வின் விஷயத்தில் வெட்கப்படுங்கள்! என் உயிர் எவன் வசம் இருக்கிறதோ அந்த இறைவன் மீது ஆணையாக! நான் மலஜலம் கழிக்க கழிவறையின் பக்கம் ஒதுங்கும் போது அல்லாஹ்வின் மீது எனக்கு வெளிப்படும் வெட்கத்தின் காரணமாக என் தலையை மறைத்தவனாகவே செல்கிறேன்" என்று கூறினார்கள். ( நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா )

நின்று கொண்டு சிறு நீர் கழிக்கத் தடையும்... அனுமதியும்....

عَنْ عَائِشَةَ، قَالَتْ مَنْ حَدَّثَكُمْ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَبُولُ قَائِمًا فَلاَ تُصَدِّقُوهُ مَا كَانَ يَبُولُ إِلاَّ قَاعِدًا

நபி ஸல் அவர்கள் நின்று கொண்டு சிறு நீர் கழித்ததாக உங்களுக்கு எவர் சொன்னாலும் அதனை நீங்கள் நம்பாதீர்கள்.அவர்கள் உட்கார்ந்தவர்களாகவே தவிர சிறு நீர் கழித்ததில்லை. அறிவிப்பவர் ; ஆயிஷா ( ரழி ) ( நூல் : திர்மிதீ )

 

روى مسلم : عَنْ أَبِي وَائِلٍ قَالَ: كَانَ أَبُو مُوسَى يُشَدِّدُ فِي الْبَوْلِ، وَيَبُولُ فِي قَارُورَةٍ [خوفًا من أن يصيبه شيء من رشاشه]، وَيَقُولُ: إِنَّ بَنِي إِسْرَائِيلَ كَانَ إِذَا أَصَابَ جِلْدَ أَحَدِهِمْ بَوْلٌ قَرَضَهُ بِالْمَقَارِيضِ. فَقَالَ حُذَيْفَةُ: لَوَدِدْتُ أَنَّ صَاحِبَكُمْ لَا يُشَدِّدُ هَذَا التَّشْدِيدَ، فَلَقَدْ رَأَيْتُنِي أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَتَمَاشَى ، فَأَتَى سُبَاطَةً خَلْفَ حَائِطٍ ، فَقَامَ كَمَا يَقُومُ أَحَدُكُمْ فَبَالَ ، فَانْتَبَذْتُ مِنْهُ ، فَأَشَارَ إِلَيَّ فَجِئْتُ فَقُمْتُ عِنْدَ عَقِبِهِ حَتَّى فَرَغَ .

அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் சிறுநீர் (துளிகள் தெறிக்கும்) விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவராய் இருந்தார்கள். (மேனியில் சிறுநீர் தெறித்துவிடக் கூடாது என்பதற்காக) அவர்கள் கண்ணாடிக் குடுவையில் சிறுநீர் கழிப்பார்கள். மேலும், இஸ்ரவேலர்களில் ஒருவரது சருமத்தில் சிறுநீர் பட்டுவிட்டால் அந்த இடத்தைக் கத்தரிக்கோலால் கத்தரித்து விடக் கூடியவராக அவர் இருந்தார் என்று கூறுவார்கள்.

(இதை அறிந்த) ஹுதைஃபா பின் அல் யமான் (ரலி) அவர்கள், உங்கள் தோழர் (அபூ மூசா) இந்த அளவு கண்டிப்பானவராய் இருக்க வேண்டியதில்லை என்றே நான் விரும்புகிறேன். (ஒரு முறை) நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சுவருக்குப் பின்னாலிருந்த குப்பைக் குழிக்குச் சென்று உங்களில் ஒருவர் நிற்பதைப் போன்று (சாதாரணமாக) நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள். உடனே நான் அவர்களைவிட்டும் சற்று ஒதுங்கிச் சென்றேன். அப்போது அவர்கள் என்னை நோக்கி (தம் அருகில் வருமாறு) சைகை செய்தார்கள். நான் அவர்களிடம் சென்று அவர்கள் தமது தேவையை முடித்துக் கொள்ளும்வரை அவர்களுக்குப் பின்பக்கம் நின்று (மறைத்துக்) கொண்டிருந்தேன். ( நூல்: முஸ்லிம் )

عَنْ حُذَيْفَةَ، قَالَ أَتَى النَّبِيُّ صلى الله عليه وسلم سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا، ثُمَّ دَعَا بِمَاءٍ، فَجِئْتُهُ بِمَاءٍ فَتَوَضَّأَ‏

'நபி (ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பைக் குழிக்கு வந்து (அங்கு) நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள். பிறகு தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள். நான் அவர்களுக்குத் தண்ணீர் கொண்டு வந்தேன். அதில் நபி (ஸல்) அவர்கள் உளூ செய்தார்கள். ( நூல் : புகாரி )

பொதுவாக சிறுநீர் கழிக்கும் போது உட்கார்ந்து தான் சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதையும், நின்று கொண்டு கழிக்க வேண்டிய இக்கட்டான ஓரிரு சந்தர்ப்பங்கள் வந்துவிட்டால் நின்று கொண்டு கழிக்கலாம் என்பதையும் மேற்கூறிய நபிமொழிகள் உணர்த்துகின்றன.

சிறுநீர் கழிக்கும் போது, சிறுநீர் துளிகள் நமது மேனியில் படாத அளவிற்கு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் மேற்கூறிய நபிமொழி நமக்கு உணர்த்துகிறது.

வலது கரத்தால் மர்ம உறுப்பை பிடிக்கக் கூடாது...

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ إِذَا بَالَ أَحَدُكُمْ فَلاَ يَأْخُذَنَّ ذَكَرَهُ بِيَمِينِهِ، وَلاَ يَسْتَنْجِي بِيَمِينِهِ، وَلاَ يَتَنَفَّسْ فِي الإِنَاءِ

உங்களில் ஒருவர் சிறுநீர் கழித்தால் அவர் தன்னுடைய வலக்கரத்தால் மறைவு உறுப்பைத் தொடவேண்டாம். இன்னும் வலக்கரத்தால் சுத்தம் செய்யவும் வேண்டாம். பாத்திரத்தில் மூச்சு விடவும் வேண்டாம்" என்று நபி அவர்கள் கூறினார்கள் அபூ கதாதா தன்னுடைய தந்தையின் வாயிலாக அறிவித்தார்கள். ( நூல் : புகாரி )

நீரில் சிறு நீர் கழிக்கத் தடை...

وَبِإِسْنَادِهِ قَالَ ‏ "‏ لاَ يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ الَّذِي لاَ يَجْرِي، ثُمَّ يَغْتَسِلُ فِيهِ ‏"‏‏.‏

ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அதில் குளிக்க வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரழி ) ( நூல் : புகாரி )

கழிவறைப் பயன்பாட்டில் இஸ்லாமிய நாகரிகம் பேணுவோம்! சுகாதார மேம்பாட்டில் இஸ்லாம் செய்த புரட்சியை உலகுக்கு அறிவிப்போம்!!

  

1 comment:

  1. மாஷா அல்லாஹ் அருமையான தலைப்பு அல்லாஹுத்தஆலா தங்களுக்கு இரு உலகிலும் நற்பாக்கியங்களை நல்குவானாக ஆமீன்

    ReplyDelete