வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தமும்,
(Special Intensive Revision
- SIR)
தமிழ்நாடு முஸ்லிம் சமூகம் எதிர் கொள்ள வேண்டிய முறைகளும்....
இந்தியாவில்
தமிழ்நாடு,
கேரளா, சட்டீஸ்கர், கோவா,
குஜராத், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களிலும் 2ம் கட்டமாக வாக்காளர் பட்டியல்
சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த படி கடந்த நவம்பர் 4 - ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்)
துவங்கியது.
பீகார்
மாநிலத்தில் நவம்பர் 6
(நேற்று) மற்றும் 11ம் தேதிகளில் இரண்டு
கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதை காரணமாகக் கொண்டு பீகார்
மாநிலத்தில் எஸ்ஐஆர் (SIR)
எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பட்டியலை
முதல்கட்டமாக தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் வரை அதிரடியாக நீக்கப்பட்டிருந்தனர். இது இந்தியா
முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் தலைவர்
ராகுல் காந்தி சமூக ஊடகத்தின் வாயிலாக பீகாரின் எஸ்ஐஆர் குளறுபடிகளை தோலுரித்து
காட்டியதன் பின்னர் தேர்தல் ஆணையம் சில தரவுகளை வெளியிடப்பட்டது.
பீகார்
மாநிலத்தில் நடந்த ‘எஸ்ஐஆர்’
பணிகளில் நீக்கப்பட்டவர்களில் 22 லட்சம் பேர் இறந்துவிட்டதாகவும், 35 லட்சம் பேர்
நிரந்தரமாக வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டதாகவும், 7 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக
சேர்க்கப்பட்டுள்ளதாகவும்,
1.2 லட்சம் பேர் இன்னும் தங்கள் படிவங்களை சமர்ப்பிக்கவில்லை என
தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில்
பல்வேறு மனுக்களை அளித்திருந்தன. இதுதொடர்பாக விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம்
நீக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு உத்தரவிட்டிருந்தது.
இதற்கு பதிலளித்த
தேர்தல் ஆணையம்,
நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களில்
21 லட்சம் பேர் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், 3.66 லட்சம் பேர்
நீக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இதன்படி, பீகாரில் மொத்தமாக 47
லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்" என்று
தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எஸ்எஸ்ஆர்
& எஸ்ஐஆர் என்றால் என்ன?
இந்தியாவில்
இதற்கு முன்னர் 1951-ஆம் ஆண்டு முதல் 2004
வரை எட்டு முறை வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர
திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
வாக்காளர்
பட்டியலைப் பொருத்தவரை தேர்தல் ஆணையம் இரண்டு விதமான பணிகளை மேற்கொள்கிறது.
ஆண்டுதோறும் சிறப்பு சுருக்க திருத்தம் (எஸ்.எஸ்.ஆர்) - Special Summary
Revision (SSR) தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படுகிறது.
எஸ்.எஸ்.ஆர்
நடைமுறையில் புதிய வாக்காளர்களை சேர்ப்பது, இறந்து போனவர்களை
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது மற்றும் வாக்காளரின் சுய விவரங்களில்
தேவைப்படும் திருத்தங்களை மேற்கொள்வது போன்ற பணிகள் நடக்கின்றன. இது அனைத்து
மாநிலங்களிலும் ஒவ்வோர் ஆண்டும் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும்.
எஸ்.ஐ.ஆர் Special Intensive
Revision - (SIR) என்பது தேவையைப் பொருத்து தேர்தல் ஆணையத்தால்
மேற்கொள்ளப்படும் சிறப்பு நடவடிக்கை. தமிழ்நாட்டில் கடைசியாக 2002-2005 காலகட்டத்தில் எஸ்.ஐ.ஆர் மேற்கொள்ளப்பட்டது. எஸ்.எஸ்.ஆர் போல அல்லாமல்
எஸ்.ஐ.ஆர் மேற்கொள்ளப்படுகிற போது வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து
வாக்காளர்களும் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசியாக 2025-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி
தமிழ்நாட்டில் சுமார் 6.36
கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
எஸ்ஐஆர் -ன் நோக்கம் என்ன?...
மக்கள் இடம்
விட்டு இடம் பெயர்வது,
விரைவான நகரமயமாக்கல், இளைஞர்கள் வாக்களிக்கும்
தகுதியைப் பெறுவது,
போலி (வாக்காளர்கள்) பெயர்கள் மற்றும் இறந்தவர்களின்
பெயர்களை நீக்குவது,
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் சேர்க்கப்பட்டது ஆகியவை
சிறப்பு தீவிர திருத்தத்தின் நோக்கமாக உள்ளதாக, தலைமை தேர்தல் ஆணையர்
ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
எத்தனை கட்டங்களாக இது நடைபெறும்?
நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7-ஆம் தேதி முடிவடையும்
எஸ்.ஐ.ஆர் பணிகள் 5
கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தப் பணிகள்
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் மேற்கொள்ளப்படும். இதற்காக அவர்களுக்கு அக்டோபர் 27 முதல் நவம்பர் 3
வரை சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
வீடுதோறும் கணக்கெடுப்பு: 04.11.2025 - 04.12.2025
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - 09.12.2025
பெயர்களை சேர்த்தல் மற்றும் ஆட்சேபம் தெரிவித்தல் - 09.12.2025 -
08.01.2026
விசாரணை மற்றும் சரிபார்த்தல் - 09.12.2025 -
31.01.2026
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - 07.02.2026
என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?
1.அரசு ஊழியர் அடையாள அட்டை அல்லது 2.ஓய்வூதிய ஆணை
3.அரசாங்கம் அல்லது பொதுத் துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது
ஆவணம் (1987-ஆம் ஆண்டுக்கு முன்பு)
4.பிறப்பு சான்றிதழ்
5.கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)
6.பள்ளி அல்லது கல்வி சான்றிதழ்
7.நிரந்தர இருப்பிடச் சான்றிதழ்
8.வன உரிமைச் சான்றிதழ்
9.சாதிச் சான்றிதழ்
10.மாநில அரசு/உள்ளாட்சி அமைப்புகளால் தயாரிக்கப்பட்ட குடும்ப பதிவேடு
11.அரசால் வழங்கப்பட்ட நிலம்/வீடு ஒதுக்கப்பட்ட சான்று
12.
ஆதார் அட்டை (நன்றி: தினகரன், 29/10/2025, பிபிசி தமிழ்,
30/10/2025 மற்றும் 04/11/2025 )
பீகாரின்
லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டதன் பிண்ணனியில் "தங்களுக்கு சாதகமாக
வாக்களிப்பவர்களை தக்க வைத்தும், எதிர்த்து
வாக்களிப்பவர்களை இனம் கண்டறிந்து நீக்குவதற்கான மத்தியில் ஆளும் பாசிச பாஜக வின்
சதி தான் இது என்ற குற்றச்சாட்டு, தொடர்ந்து வலுவாகவே
வைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த ‘எஸ்ஐஆர்’, உஷாராகவே கவனிக்கப்பட வேண்டியது என்ற எதிர்க்கட்சிகளின் வாதத்தை புறம்தள்ளி
விட முடியாது.
1) மக்களின் அச்சத்தை போக்க வேண்டிய கடமை
ஆட்சியாளருக்கும், பொறுப்பு
வகிப்போருக்கும் உண்டு..
எஸ்ஐஆர் குறித்து
வெகுஜன பொதுமக்களும்,
அரசியல் கட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ள சில அம்சங்கள்
குறித்து சந்தேகம் கொண்டு விளக்கம் கேட்கிறது. அதற்கு தேவையான விளக்கங்கள் அளித்து
மக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையமும் அரசும் மேற்கொண்டு காரியமாற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாய்
இருக்கிறது.
عَنْ
أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ أَحْسَنَ النَّاسِ، وَأَشْجَعَ النَّاسِ، وَلَقَدْ فَزِعَ أَهْلُ
المَدِينَةِ لَيْلَةً، فَخَرَجُوا نَحْوَ الصَّوْتِ، فَاسْتَقْبَلَهُمُ النَّبِيُّ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ اسْتَبْرَأَ الخَبَرَ، وَهُوَ عَلَى
فَرَسٍ لِأَبِي طَلْحَةَ عُرْيٍ، وَفِي عُنُقِهِ السَّيْفُ، وَهُوَ يَقُولُ: «لَمْ
تُرَاعُوا، لَمْ تُرَاعُوا» ثُمَّ قَالَ: «وَجَدْنَاهُ بَحْرًا» أَوْ قَالَ:
«إِنَّهُ لَبَحْرٌ»
நபி (ஸல்) அவர்கள், மக்களிலேயே அழகானவர்களாக, வீரமிக்கவர்களாக
இருந்தார்கள். மதீனா நகர மக்கள் ஓரிரவு (எதிரிகள் படையெடுத்து வருவதாக வதந்தி
பரவி) பீதிக்குள்ளானார்கள். ஆகவே, அவர்கள் சத்தம் வரும்
திசையை நோக்கிப் புறப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அதற்குள் செய்தியைத் தீர விசாரித்து விட்டு அபூதல்ஹா (ரலி) அவர்களின் சேணம்
பூட்டப்படாத குதிரை மீது சவாரி செய்தவர்களாக வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய
கழுத்தில் வாள் (மாட்டப் பட்டுத்) தொங்கிக் கொண்டிருந்தது. அவர்கள், “பயப்படாதீர்கள். பயப்படாதீர்கள்’’ என்று கூறிக்
கொண்டிருந்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), ( நூல்: புகாரி )
2) செல்வாக்குமிக்கவர்கள், ஆட்சியாளர்கள் தவறிழைத்தாலும் தண்டிக்க முன்வருபவரே சிறந்த நீதிபதி...
1) செல்வாக்கு மிக்கவருக்கு எதிராக நீதி...
நாட்டின் உச்சபட்ச
அதிகாரம் கொண்ட அமைப்பான,
செல்வாக்கு மிக்க அமைப்பான தேர்தல் ஆணையம் குறித்து வெகுஜன
பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் ஆட்சேபனை செய்கிறது. வழக்கு தொடுத்திருக்கிறது.
நீதிமன்றம் என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்யாமல் வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்கின்றது.
மக்களுக்கு நீதி
வழங்கும் இடத்தில் வீற்றிருக்கும் நீதிமன்றங்களும் நீதிபதிகளும் ஆட்சியாளரோ, செல்வாக்குமிக்கவர்களோ தவறுகள் செய்து அது
மக்களுக்கோ அல்லது பாதகமாகவும், ஆட்சியாளருக்கு
சாதகமாகவும் இருந்தாலும்,
அத்தகையவர்கள் செய்த தவறுகளை தயவு தாட்சண்யமின்றி சுட்டிக்
காட்டி, உரிய தண்டனை வழங்க வேண்டும். அது தான் சிறந்த நீதிமன்றம், அவர் தான் சிறந்த நீதிபதியாவார்.
عَنْ
عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا:- أَنَّ قُرَيْشًا أَهَمَّهُمْ شَأْنُ
المَرْأَةِ المَخْزُومِيَّةِ الَّتِي سَرَقَتْ، فَقَالُوا: وَمَنْ يُكَلِّمُ
فِيهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالُوا: وَمَنْ
يَجْتَرِئُ عَلَيْهِ إِلَّا أُسَامَةُ بْنُ زَيْدٍ، حِبُّ رَسُولِ اللَّهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَلَّمَهُ أُسَامَةُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَتَشْفَعُ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ، ثُمَّ
قَامَ فَاخْتَطَبَ، ثُمَّ قَالَ: إِنَّمَا أَهْلَكَ الَّذِينَ قَبْلَكُمْ،
أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ فِيهِمُ الشَّرِيفُ تَرَكُوهُ، وَإِذَا سَرَقَ
فِيهِمُ الضَّعِيفُ أَقَامُوا عَلَيْهِ الحَدَّ، وَايْمُ اللَّهِ لَوْ أَنَّ
فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا
மக்ஸூமிய்யா
குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம்
செய்திருந்தாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். “அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசுவார்கள்?’’ என்று தமக்குள் பேசிக் கொண்டனர். அவர்களில் சிலர், “அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தவிர
இதற்கு யாருக்குத் துணிவு வரும்?’’ என்று கூறினர்.
(உஸாமா (ரலி) அவர்களிடம்
பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ள, அவ்வாறே) உஸாமா (ரலி)
அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (அவள் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள்,
“அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத்
தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய்’’ என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை
நிகழ்த்தினார்கள்.
பிறகு
(அவ்வுரையில்),
“உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை
(தண்டிக்காமல்) விட்டு வந்தார்கள்; அவர்களில் பலவீனமான
(பிரிவைச் சேர்ந்த)வன் திருடி விட்டால் அவனுக்குத் தண்டனையளித்து வந்தார்கள்
என்பதால் தான். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி
விட்டிருந்தாலும் அவரது கையையும் நான் துண்டித்திருப்பேன்” என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ( நூல்: புகாரி )
2) ஆட்சியாளருக்கு எதிராக நீதி...
في
عملية توسعة البناء هذه، تم تدمير المنازل المحيطة بالمسجد لتوسيع مساحة المسجد
النبوي. ويقال أنه في هذه العمارة أضيف إلى المسجد بيت ابنا أبي بكر وعبد الله بن
جعفر وبيت أسامة وزيد بن حارثة وبيت عباس بن عبدالمطلب وبيت عبد الرحمن بن عوف
وبيت سعد بن ابي وقاص وبيت عبد الله بن مسعود.
أخرج
ابن سعد عن سالم أبي النضر رضي الله عنه قال: لما كثر المسلمون في عهد عمر رضي
الله عنه ضاق بهم المسجد فاشترى عمر ما حول المسجد من الدور إلا دور العباس بن عبد
المطلب وحجر أمهات المؤمنين فقال عمر رضي الله عنه للعباس: يا أبا الفضل.
إن مسجد
المسلمين قد ضاق بهم وقد ابتعت ما حوله من المنازل فوسع به على المسلمين في مسجدهم
إلا دارك وحجر أمهات المؤمنين، فأما حجرات أمهات المؤمنين فلا سبيل إليها. وإما
دارك فبعنيها بما شئت من بيت مال المسلمين أوسع بها في مسجدهم.
فقال
العباس رضي الله عنه: ما كنت لأفعل. فقال عمر رضي الله عنه: إختر مني إحدى ثلاث:
إما أن تبيعنيها بما شئت من مال المسلمين. وإما أن أحطك حيث من المدينة و ابنيها
لك من بيت مال المسلمين. وإما أن تصدق بها على المسلمين فيوسع بها في مسجدهم فقال:
لا، ولا واحدة منها. فقال عمر رضي الله عنه: اجعل بيني وبينك من شئت فقال أبي بن
كعب رضي الله عنه فانطلقا إلى أبي فقصا عليه القصة فقال أبي رضي الله عنه:
إن
شئتما حدثتكما بحديث سمعته من رسول الله صلى الله عليه وسلم؟ فقالا: حدثنا فقال:
سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن الله أوحى إلى داود: ابن لي بيتا أذكر
فيه فخط له هذه الخطة خطة بيت المقدس فإذا بربعها زاوية بيت رجل من بني إسرائيل
فسأل داود أن يبيعه إياه فأبى فحدث داود نفسه أن يأخذه منه فأوحى الله إليه: أن يا
داود أمرتك أن تبني لي بيتا أذكر فيه فأردت أن تدخل في بيتي الغصب وليس من شأني
الغصب وإن عقوبتك أن لا تبنيه. قال: يا رب فمن ولدي؟ قال: من ولدك. قال: فأخذ عمر
رضي الله عنه بمجامع ثياب أبي بن كعب وقال: جئتك بشئ فجئت بما هو أشد منه وقال عمر
للعباس: " إذهب فلا
أعرض لك
في دارك". فقال العباس: "أما إذ فعلت هذا فإني قد تصدقت بها على
المسلمين أوسع بها عليهم في مسجدهم، فأما وأنت تخاصمني فلا". قال: فخط عمر
لهم دارهم التي هي لهم اليوم وبناها من بيت مال المسلمين
الصفحة
١٨١، ١٨٢")
ஹிஜ்ரி 17 –ஆம் ஆண்டு,
உமர் (ரலி)ஆட்சிப்பொறுப்பிற்கு வந்து நான்காண்டுகள்
உருண்டோடி விட்டது. இஸ்லாம் அருகே இருக்கும் நாடுகளுக்கு பரவிக்கொண்டிருந்த தருணம்
அது.
மஸ்ஜிதுன் நபவீ
உள்ளூர் மற்றும் வெளியூர் முஸ்லிம்களின் கூட்ட நெரிசலால்சிக்கித் தவித்துக்
கொண்டிருப்பதை உணர்ந்த உமர் (ரலி) அவர்கள் பள்ளியை விஸ்தரிக்க விரும்பினார்கள்.
அதற்காக, பள்ளியைச் சுற்றி இருக்கிற நபித்தோழர்களின் வீட்டை இடித்து, அந்த இடத்தையும் சேர்த்து கட்டினால் தான் பள்ளியை விரிவாக்கம் செய்ய முடியும்
என்ற நிலையையும் உணர்ந்தார்கள்.
பள்ளியைச்
சுற்றிலும் நபித்தோழர்களனான உஸாமா (ரலி), ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி), அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரலி), அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) ஸஅத் இப்னுஅபீ வக்காஸ் (ரலி), அப்துர்ரஹ்மான் இப்னுஅவ்ஃப் (ரலி), மற்றும் அப்துல்லாஹ்
இப்னுஅப்பாஸ் (ரலி),
அப்துர்ர்ஹ்மான் இப்னு அபூபக்ர்(ரலி), முஹம்மத் இப்னு அபூபக்ர் (ரலி), ஆகியோர்களின் வீடுகளும், முஃமின்களின் அன்னையர்களான நபி {ஸல்} அவர்களின் தூய துணைவியர்களின் வீடுகளும் இருந்தன.
உமர் (ரலி)
அவர்கள்,
முஃமின்களின் அன்னையர்கள் வீட்டை மட்டும் விட்டு விட்டு
மற்ற நபித்தோழர்கள் அனைவரின் வீடுகளையும், இடங்களையும் வாங்கிட
முடிவெடுத்தார்கள்.
வீட்டின்
உரிமையாளர்கள் அனைவரையும் அழைத்து “நீங்கள் உங்கள் வீட்டை
விலைக்கு கொடுத்தீர்கள் என்றால் அதற்குப்பகரமாக மதீனாவின் இன்னொரு இடத்தில் ஒரு
வீட்டையோ,
அல்லது அதற்கான கிரயத்தையோ முழுமையாகப் பெற்றுக்கொள்ளலாம்.
அல்லது நீங்கள் விரும்பினால் அரசுக்கு அன்பளிப்பாக தரலாம். அரசும் உங்களை
நன்றியுணர்வுடன் நடத்தாட்டும். அல்லது நீங்கள் விரும்பினால் அல்லாஹ்விற்காக
தர்மமாகத்தந்திடுங்கள். கூலி வழங்குவதற்கு அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான்” என்று கூறினார்கள்.
இதைக் கேட்ட
மாத்திரத்தில் அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரலி) அவர்களும்,அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களின் இரு மகன்களும் தங்களின் வீடுகளையும், நிலங்களையும்
அல்லாஹ்விற்காக தர்மம் செய்துவிட்டார்கள்.
மற்ற
நபித்தோழர்களில் சிலர் கிரயத்தையும், இன்னும் சிலர் மதீனாவின்
பிற பகுதியில்
நிலத்தையும் பெற்றுக் கொண்டு அவர்கள் வசித்து வந்த
வீட்டையும்,
நிலத்தையும் அரசிடம் ஒப்படைத்தனர். இந்த நிகழ்வு நடைபெறுகிற
போது அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வெளியூர் சென்றிருந்தார்கள்.
அப்பாஸ் (ரலி)
அவர்கள் வெளியூரில் இருந்து வந்த உடன் உமர் (ரலி)அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி)
அவர்களைச் சந்தித்து மற்ற வீட்டின் உரிமையாளர்களிடம் பேசியது போன்று இப்னு அப்பாஸ்
(ரலி) அவர்களிடமும் பேசினார்கள். .ஆனால், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களோ மறுத்து விட்டார்கள்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள் ”நீர் இடம் தரவில்லையானால் அரசு உம்முடைய நிலத்தை தம் அதிகாரத்தைக் கொண்டு கைப்பற்றிக் கொள்ளும்!”என்று கூறினார்கள்.
இருவருக்கும் பேச்சு முற்றவே, வழக்காக நீதிமன்றத்தில்
தொடுத்தார்கள் இப்னுஅப்பாஸ் (ரலி) அவர்கள்.
நீதிபதி உபை இப்னு
கஅப் (ரலி) அவர்கள்
இருவரின் வாதப் பிரதிவாதங்களையும் கேட்டு விட்டு...உமர்
(ரலி) அவர்களை நோக்கி “உமர் (ரலி) அவர்களே! நபி ﷺ அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன்....
“அல்லாஹ் நபி தாவூத் (அலை) அவர்களிடம் பைத்துல் முகத்தஸ்ஸை கட்ட ஆணை
பிறப்பித்தான். முதற்கட்டமாக அதற்கான இடத்தை தெரிவு செய்யும் பணியை மேற்கொண்டாகள் தாவூத் ( அலை)அவர்கள்.
அங்கே
இஸ்ரவேலர்களில் ஒருவருக்குச் சொந்தமான ஓர் இடம் இருப்பதைக் கண்டு அதை இறையில்லம்
கட்ட இடம் தேவைப்படுவதால் தம்மிடம் விலைக்கு தந்து விடுமாறு விலை
பேசினார்கள்.ஆனால்,
அவரோ தரமுடியாது என்று மறுத்து விட்டார். அதற்கு தாவூத்
(அலை) அவர்கள்... “மனதிற்குள் இப்படிச் சொல்லிக் கொண்டார்களாம் “நீ தராவிட்டால் என்ன?
நான் எடுத்துக் கொள்கிறேன்” என்று.
உடனடியாக, அல்லாஹ் தாவூத் (அலை) அவர்களிடம் வஹீ மூலம் “என்னை வணங்குவதற்காகக் கட்டப்படுகிற ஆலயம் என்பது ஆக்கிரமிப்பு, அபகரிப்பு,
மோசடி ஆகிய குற்றங்களிலிருந்து நீங்கி பரிசுத்த பூமியாய்
இருக்கவேண்டும்”
என்று அறிவித்தான். மேலும், நீர் இனி அந்த ஆலயத்தைக் கட்ட வேண்டாம்" என்றான். அதற்கு, தாவூத் (அலை) அவர்கள் "என் மகனுக்கு அந்த வாய்ப்பை வழங்கிடுவாயாக! என்று
கேட்டார்கள். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் "உமது மகனுக்கு அந்த ஆலயத்தை கட்டும் பாக்கியம்
வழங்கப்படும்" என்றான்.
( வஃபாவுல் வஃபா உடைய
இன்னொரு அறிவிப்பில்,
பின்னர், அதற்கான இழப்பீடைக்
கொடுத்து அந்த இடத்தை வாங்கி பைத்துல்முகத்தஸின் கட்டுமானப் பணியைத்
துவக்கினார்கள்
தாவூத் (அலை) அவர்கள்) என்று வந்துள்ளது.
ஆகவே, உமர் அவர்களே! "சற்று நிதானித்து முடிவெடுங்கள்!” என்றார்கள் நீதிபதி உபை இப்னு கஅப் ரலி அவர்கள்.
நீதிபதி உபை இப்னு
கஅப் (ரலி) அவர்கள் இந்த தீர்ப்பைக் கேட்டதும், உமர் (ரலி) அவர்கள்
நீதிபதி உபை இப்னு கஅப் (ரலி) அவர்களின் மொத்த ஆடையையும் சேர்த்துப்
பிடித்தவர்களாக "நான் உம்மிடம் ஒரு விஷயத்திற்கு தீர்வு தேடி வந்தால் நீர்
அதை விட கடினமான ஒன்றை எனக்கு (பரிசாக) தருகின்றீர்" என்றார்கள்.
பின்னர் இப்னு
அப்பாஸ் அவர்களை நோக்கி இப்னு அப்பாஸ் அவர்களே! உம்முடைய வீடும் வேண்டாம், உம்முடைய நிலமும் வேண்டாம். இரண்டையும் அதிகாரத்தைக் கொண்டுநான் ஒரு போதும்
நான் அபகரிக்க மாட்டேன்”என்றார்கள்.
அதற்கு, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்உமர் (ரலி) அவர்களிடம் “உமர் (ரலி) அவர்களே! ஒரு மனிதனுக்கு இஸ்லாம்
வழங்கியிருக்கிற உரிமையை அவர் எந்தளவுக்கு பயன்படுத்த முடியும் என்பதைக்
காட்டுவதற்காகத்தான் நான் இவ்வாறுசெய்தேன். மேலும், உங்களை விட மஸ்ஜிதுன் நபவீயின் விரிவாக்கத்தில் அதிக நாட்டமுடையவன் நான். எனவே, எந்தப் பிரதி பலனையும் நாடாமல்
இதோ என் வீட்டையும், நிலத்தையும் உங்களிடம்
தருகின்றேன்”
என்றார்கள். பின்னர் அந்த இடத்தையும் இணைத்து உமர் ரலி
அவர்கள் மஸ்ஜித் அந் நபவீயை விரிவாக்கம் செய்து மக்களின் பயன்பாட்டிற்கு
அர்ப்பணித்தார்கள். ( நூல் : ஹாக்கிம், அத் திராயத்து ஃபீ பயானி
ளவாபித்தி நக்துர் ரிவாயத்து இன்தஸ் ஸஹாபா லிஇமாமி அப்துல் காதர் அல் முஹம்மதீ )
3) நீதிமன்றம் தவறுகளை தெரிந்து கொண்டே நீதி செலுத்த தவறுமேயானால் ....
தேர்தல் ஆணையம்
மற்றும் மத்திய அரசின் மீதான எதிர் கட்சிகளின் குற்றச்சாட்டுகளை நீதிமன்றம்
சரிகண்டு தவறென சுட்டிக் காட்டாமல் இரண்டு அமைப்புக்களுக்கும் உடன்பட்டு
மக்களுக்கு அநீதி இழைக்குமானால் அந்த நீதிமன்றத்திற்கும், தீர்ப்பு வழங்கத் தயங்கும் நீதிபதிக்கும் அந்த தவறில் பங்குண்டு என்பதில்
எவ்வித ஐயமும் இல்லை.
. عَنْ
أَبِى هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ
:مَنِ اشْتَرَى سَرِقَةً وَهُوَ يَعْلَمُ أَنَّهَا سَرِقَةٌ فَقَدْ شْرَكَ فِى
عَارِهَا وَإِثْمِهَا( سنن الكبيري
"ஒருவர் திருடப்பட்ட
பொருள் என்று தெரிந்தும் அதை விலை கொடுத்து வாங்குகின்றாரோ, அவர் அந்த திருட்டு குற்றத்திலும், அதன் பாவத்திலும்
திருடியவருடன் கூட்டாளியாகி விடுவார்" என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக
அபூஹுரைரா ரலி அவர்கள் அறிவித்தார்கள். ( நூல்: சுனனுல் குப்ரா )
தற்போது கண்டும்
காணாமல் இருந்தால் அல்லது மத்திய அரசுக்கு சாதகமாக நடந்து கொண்டால் ஓய்வு பெற்ற
பின்னர் அரசு சார்பில் ஏதேனும் பதவிகளை அனுபவிக்கலாம் என்று நீதிபதி நடந்து
கொள்வாரேயானால் அதுவும் பாவமான செயலாக மாறிவிடும்.
عَنْ
أَبِي أُمَامَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ مَنْ شَفَعَ لِأَحَدٍ شَفَاعَةً فَأَهْدَى لَهُ هَدِيَّةً
فَقَبِلَهَا فَقَدْ أَتَى بَابًا عَظِيمًا مِنْ الرِّبَا( احمد)
"யார் தான் செய்த
சிபாரிசுக்காக பணம் தரப்பட்டு அதை வாங்குவாரோ அவர் வட்டியின் பெரிய வாயிலுக்கு
வந்துவிட்டார்" என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன் என்று
அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல் : அஹ்மத் )
தமிழ்நாடு முஸ்லிம் சமூகம் என்ன செய்ய
வேண்டும்?
தமிழ்நாட்டை
பொறுத்தவரை திமுக, காங்கிரஸ், பாமக, நாதக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 14 கட்சிகள் ‘எஸ்ஐஆர்’ பணிகளுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
அஇஅதிமுக,
தவெக மற்றும் பாஜக அதன் கூட்டணி கட்சிகள் எஸ்ஐஆர் நடவடிக்கைகளுக்கு ஆதரவு
தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், ‘‘தேர்தலுக்கு மிக நெருக்கத்தில், அதுவும் பருவமழை காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் ‘எஸ்ஐஆர்’ பணிகளை
மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது. அவசரகதியில் செய்யப்படும் இந்த ‘எஸ்ஐஆர்’ நடவடிக்கை
மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பாஜவுக்கு
சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிகாரில் பெண்கள், சிறுபான்மையினர், பட்டியல், பழங்குடி
மக்கள் உள்ளிட்டோர் அதிகளவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதுடன் இந்த
நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லாதது அனைவர் மனதில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது' என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுதொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன் (அக்டோபர் 27 அன்று) கலந்து பேசியிருக்கிறோம்' எனக் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், ' நவம்பர் 2 அன்று
அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து
ஆலோசிப்பதற்கு கூட்டம் நடத்தி “தமிழக
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நவ.2-ல்
சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ‘தமிழ்நாட்டு வாக்காளர்கள் அனைவரின் வாக்குரிமையையும்
நிலைநாட்ட உச்சநீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை. தேர்தல் ஜனநாயகத்தைக்
காப்பாற்றிட தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்வது என இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானிக்கிறது’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, நவம்பர் 03/11/2025 அன்று உச்ச நீதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின்
சார்பில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர்.-ஐ நடைமுறைப்படுத்துவதை எதிர்த்து
வழக்கு தொடர்ந்துள்ளார். மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி இம்மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், எஸ்ஐஆரை நடைமுறைப்படுத்த உகந்த காலம் இதுவல்ல என்றும், தேர்தல் ஆணையத்துக்கு இந்த நடைமுறையை செயல்படுத்துவதற்கு
அதிகாரம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசிலமைப்புச் சட்டம் தந்த அதிகாரங்களை மீறி தேர்தல் ஆணையம்
செயல்படுவதாவும், தகுதி உள்ளவர்கள் நீக்கப்படுவதற்கும், தகுதியற்றோர் சேர்க்கப்படுவதற்கும் ஏதுவான வகையில் இந்த
நடைமுறை அமைந்துள்ளதாகவும், இந்த எஸ்ஐஆரை நடைமுறைபடுத்தினால், லட்சக்கணக்கான தமிழ்நாடு வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை
இழக்கும் அபாயம் ஏற்படும் போன்ற முக்கிய காரணங்களை சுட்டிக்காட்டி இம்மனு உச்ச
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கு வருகிற நவம்பர் 6 அல்லது 7-ம்
தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’. ( நன்றி: இந்து தமிழ் திசை, 03/11/2025 )
தமிழ்நாடு
அரசியல் கட்சிகளில் பிரதான கட்சிகளின் ஆதரவு மற்றும் எதிர்ப்பு, வழக்கு எனும் குழப்பமான இந்த சூழ்நிலை நிலையில் ”தமிழ்நாடு
முஸ்லிம் சமூகம் என்ன செய்ய வேண்டும்? என்பதை நமது தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நவம்பர் 4- ம் தேதி முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை தேர்தல் ஆணையத்தால் வீடு தேடி வந்து தரப்படும்
எஸ்ஐஆர் விண்ணப்ப படிவத்தை தகுந்த ஆவணங்களுடன் பூர்த்தி செய்து கொடுக்குமாறு
கேட்டுக் கொண்டுள்ளது.
பூர்த்தி செய்யாமல் இருந்து பின்னால் அதன் மூலம் ஏற்படும்
அலைச்சல்களையும், வீண்
சிரமங்களையும் தவிர்க்குமாறும் வலியுறுத்தி உள்ளது.
ஒரு முஸ்லிமின் சிறந்த செயல்....
عن
عائشة رضي الله تعالى عنها قالت:- قال رسول الله صلى الله عليه وسلم إن الله يحب
إذا عمل أحدكم عملاً أن يتقنه" (الصحيحة)
“உங்களில் ஒருவர் ஒரு
செயலைச் செய்தால் மிக நேர்த்தியாகவும், ஒழுங்கு முறைகளோடும்
செய்யப்படுவதையே நிச்சயமாக! அல்லாஹ் விரும்புகின்றான்” என நபி {ஸல்}
அவர்கள் கூறினார்கள். ( நூல்: பைஹகீ )
عَنِ
ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِىِّ
-صلى الله عليه وسلم- أَنَّهَا قَالَتْ مَا خُيِّرَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه
وسلم- بَيْنَ أَمْرَيْنِ إِلاَّ أَخَذَ أَيْسَرَهُمَا مَا لَمْ يَكُنْ إِثْمًا
فَإِنْ كَانَ إِثْمًا كَانَ أَبْعَدَ النَّاسِ مِنْهُ وَمَا انْتَقَمَ رَسُولُ
اللَّهِ -صلى الله عليه وسلم- لِنَفْسِهِ إِلاَّ أَنْ تُنْتَهَكَ حُرْمَةُ اللَّهِ
عَزَّ وَجَل .
அன்னை ஆயிஷா (ரலி)
அவர்கள் கூறுகின்றார்கள்: “இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கும்படி அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்களுக்கு விருப்ப உரிமை வழங்கப்பெற்றால், அவர்கள் அவ்விரண்டில் எளிதானதையே – அது பாவமான விஷயமாக
இல்லாதிருக்கும் பட்சத்தில் தேர்வு செய்வார்கள்.
அது பாவமான காரியமாக இருந்தால், மக்களிலேயே அவர்கள் தான் அதிலிருந்து விலகி வெகுதொலைவில் சென்றுவிடுவார்கள். (
நூல்: முஸ்லிம்,
பாபு முபாஅததிஹி {ஸல்} லில் ஆஸாமி வஃக்தியாரிஹி )
அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுவோம்!
وَعَنْ
عَبْدِاللَّهِ بنِ مَسْعُودٍ قَالَ: قالَ رسُولُ اللَّه ﷺ
إنَّهَا
ستَكُونُ بَعْدِي أَثَرَةٌ وأُمُورٌ تُنْكِرُونَهَا، قَالُوا: يَا رسُولَ اللَّهِ،
كَيفَ تَأْمُرُ مَنْ أَدْرَكَ مِنَّا ذلكَ؟ قَالَ
تُؤَدُّونَ الحَقَّ الَّذِي عَلَيْكُمْ، وتَسْأَلُونَ اللَّهَ
الذي لَكُمْ متفقٌ عليه.
அப்துல்லாஹ் இப்னு
மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நிச்சயமாக! என(து
வாழ்நாளு) க்குப் பிறகு உங்களுக்கு உரிமைப் பறிப்பு ஏற்படும் வகையிலான சுய
நலப்போக்கும்,
நீங்கள் வெறுக்கக் கூடிய வேறு சில காரியங்களும் நடைபெறும்” என்று நபி {ஸல்}
அவர்கள் கூறிய போது, தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! அப்பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டுமென நீங்கள்
எங்களுக்கு கட்டளையிடுகின்றீர்கள்? என வினவ, அதற்கு மாநபி {ஸல்}
அவர்கள் “உங்கள் கடமையை நீங்கள்
நிறைவேற்றுங்கள்! உங்களுக்கு சேர வேண்டிய உரிமைகளை அல்லாஹ்விடமே நீங்கள்
கேளுங்கள்!”
என்று பதில் கூறினார்கள். ( நூல்: புகாரி )
நம் உரிமையை பிறர் அபகரித்துக் கொள்ள இடம் தரக் கூடாது...
நாம் மதிக்கின்ற
ஒன்று, நாம் பாதுகாக்கிற ஒன்று சேதப்படுத்தப்படுமானால், நம்மிடம் இருந்து பறிக்கப்படுமானால் அதற்காக போராட வேண்டும் என்று இஸ்லாம்
வலியுறுத்துகின்றது.
வாக்களிக்கும்
உரிமை என்பது நமக்கு இந்த தேசம் தந்திருக்கும் மகத்தான உரிமையாகும். அந்த உரிமையை
நாம் நம்முடைய அலட்சிய போக்கினால் இழந்து விடக் கூடாது.
போராடி பெற
வேண்டாம். இருப்பதை தக்க வைக்கவாவது நாம் போராடித் தான் ஆக வேண்டும்.
عَنْ
أَبِي هُرَيْرَةَ رَضيَ اللهُ عنه قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، أَرَأَيْتَ إِنْ جَاءَ
رَجُلٌ يُرِيدُ أَخْذَ مَالِي؟ قَالَ: «فَلَا تُعْطِهِ مَالَكَ» قَالَ: أَرَأَيْتَ
إِنْ قَاتَلَنِي؟ قَالَ: «قَاتِلْهُ» قَالَ: أَرَأَيْتَ إِنْ قَتَلَنِي؟ قَالَ:
«فَأَنْتَ شَهِيدٌ»، قَالَ: أَرَأَيْتَ إِنْ قَتَلْتُهُ؟ قَالَ: «هُوَ فِي
النَّارِ». [صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم - 140
ஒருவர்
அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்களிடம் வந்து... “அல்லாஹ்வின் தூதரே!
ஒருவன் என் பொருளை அபகரிக்க வந்தால் நான் என்ன செய்ய வேண்டும்? எனக் கேட்டார்.
அதற்கு அண்ணலார் “உன் பொருளை அவன் கைப்பற்றிவிடாமல் நீ பாதுகாக்கவேண்டும் என்று பதில்
கூறினார்கள்.
நான் அவனை
தடுக்கிறபோது,
அவன் என்னிடம் சண்டையிட்டால் இப்போது நான் எப்படி
நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் மீண்டும் கேட்டார்.
அதற்கு நபி ஸல்
அவர்கள் ”நீ அவனுடன் போராடியேனும் உன் உரிமையை மீட்க வேண்டும்” என்றார்கள்.
”அப்படி அவனிடம் நான்
போராடும் போது அவன் என்னை கொலை செய்துவிட்டால் இப்போது என் நிலை என்ன?” என்று அவர் கேட்ட போது... ”நீ மார்க்கப்போராளி எனும் ஷஹீது
அந்தஸ்தைப் பெறுவீர்”.
என்று மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். சரி! நான் அவனை கொலை செய்து விட்டால் இப்போது என்ன
சொல்கிறீர்கள்?”
என்று அவர் கேட்டதும் அப்போது அண்ணலார் ”அவன் நரகவாதியே!”
என்று பதில் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )
எனவே, இந்திய தேசத்தின் கள சூழ்நிலையை மனதில் கொண்டு, தமிழ்நாடு அரசியலின் குழப்பமான காலகட்டத்தை நினைவில் கொண்டு நமது தமிழ்நாடு
ஜமாஅத்துல் உலமா சபையின் வழிகாட்டலுக்கு செவிசாய்த்து இசைவுடன் நடப்போம்! நமது
வாக்குரிமையை பாதுகாப்போம்!
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது இந்திய தேசத்தின் முஸ்லிம் சமூகத்தை எதிரிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியில் இருந்து காத்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

மாஷா அல்லாஹ் நிறைய கேள்விகளுக்கு விடை கிடைத்தது
ReplyDelete