Thursday, 15 January 2026

மிஃராஜ் சிந்தனை - 2026!! ஹவ்ளுல் கவ்ஸர் நீரை நபி ﷺ அவர்களின் கரங்களால் பருகிடும் நற்பேற்றை தந்தருள்வாய் யாஅல்லாஹ்!!

 

மிஃராஜ் சிந்தனை - 2026!!

ஹவ்ளுல் கவ்ஸர் நீரை நபி அவர்களின் கரங்களால் பருகிடும் நற்பேற்றை தந்தருள்வாய் யாஅல்லாஹ்!!



அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவான்.

உலகிற்கு வந்த எல்லா தூதர்களின் வாழ்க்கையிலும் திருப்புமுனைகளை முஃஜிஸாத்துகள் (அற்புதங்கள்) என்ற பெயரில் பலவிதமான அற்புதங்களை நிகழ்த்திக் காட்டி மக்களுக்கு மத்தியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தினான்.

அந்த வரிசையில் நமது நபி அவர்களின் வாழ்க்கையில் மிஃராஜ் எனும் விண்வெளி பயணத்தின் ஊடாக திருப்புமுனை தரும் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தினான்.

மிஃராஜின் நோக்கத்தை குறித்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான். 

سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ

தனது அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, மஸ்ஜிதுல் அக்ஸா வரை பயணம் செய்வித்த அல்லாஹ் தூய்மையானவன். அது எத்தகைய இடம் என்றால், அதனை சூழாக பரகத்தை ஏற்படுத்தியுள்ளோம். மேலும் நமது அத்தாட்சிகளை காட்டுவதற்காக (அவரை அழைத்துச் சென்றோம்) அல்லாஹ் செவியேற்கக் கூடியவனாகவும், பார்க்க கூடியவனாகவும் இருக்கிறான். ( அல்குர்ஆன்: 17: 01 )

இந்த வசனத்தின் மூலம் தனது அத்தாட்சிகளை நபியவர்களுக்கு காட்டுவதற்காக அழைத்து செல்லப் பட்டதாக அல்லாஹ் கூறுகிறான். மேலும் அல்லாஹ்வின் வல்லமையையும் உலகிற்கு காட்டுவதற்காகவும் இந்த விண்வெளிப் பயணத்தை நிகழ்த்தி காட்டியுள்ளான்.

ஒவ்வொரு ஆண்டும் மிஃராஜ் தினத்தன்று நாம் நபி அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதமான பயணமான மிஃராஜ் பயணம் குறித்து நினைவு படுத்தி வருகின்றோம். 

அந்த அடிப்படையில் சுருக்கமாக நபி (ஸல்) அவர்களின் மிஃராஜ் பயணத்தை நாம் பார்ப்போமேயானால் " நபி அவர்கள் தங்களது பெரிய தந்தை அபூதாலிப் அவர்களின் மகளான உம்மு ஹானீ (ரலி) அவர்களின் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது நபி அவர்கள் எழுப்பப்பட்டு ஜம்ஜம் கிணற்றுக்கு அருகில் அழைத்து வரப்பட்டு, அங்கே அவர்களது நெஞ்சு பிளக்கப்பட்டு அதிலிருந்து அவர்களது இதயம் எடுக்கப்பட்டு பின்னர் அது புனித ஜம்ஜம் நீரால் கழுவப்பட்டு ஞானத்தால் நிரப்பப்பட்டது. 

பின்பு அங்கிருந்து புராக் எனும் வாகனத்தில் ஃபலஸ்தீனிலுள்ள பைத்துல் முகத்தஸுக்கு அழைத்து வரப்பட்டு, அங்கே கூடியிருந்த அனைத்து நபிமார்களுக்கும் முன்னின்று இமாமாக தொழுகை நடத்தினார்கள்.

பின்னர் அங்கிருந்து ஏழு வானங்களைக் கடந்து சென்று, அங்கே ஒவ்வொரு வானத்திலும் நபிமார்களைக் கண்டார்கள். அதன் பிறகு பைத்துல் மஃமூரைக் கடந்து ஸித்றத்துல் முன்தஹாவை அடைந் தார்கள். சுவனத்தையும், நரகத்தையும் கண்டார்கள். இறுதியாக இறைவனைச் சந்தித்து தொழுகையைப் பரிசாகப் பெற்று வந்தார்கள்.

இந்நிகழ்வு நபி அவர்கள் வாழ்வில் நடந்த பேரற்புதமாகும். உலகில் வேறு எந்த இறைத்தூதருக்கும் வழங்கப்படாத உயர்ந்த அந்தஸ்தாகும். 

ஒளியின் வேகம் ஒரு விநாடிக்கு 86282 மைல் ஆகும். வேகமிக்க ஒளி நட்சத்திரத்திலிருந்து பூமிக்கு வர சுமார் நாலரை ஆண்டுகளாகும் என்று அறிவியல் கூறுகிறது. 

ஆனால், நமது நபி அவர்கள் அந்த நட்சத்திரம் மட்டுமல்ல எல்லா நட்சத்திரங்களையும் கடந்து ஏழு வானங்களையும் கடந்து யாரும் கடக்க முடியாத ஸித்றத்துல் முன்தஹாவையும் கடந்து அல்லாஹ்வையும் தரிசித்து வந்தது ஓர் இரவின் சிறுபகுதி என்பது விண்ணிற்கு ஏவுகணை விடும் நவீன கால மக்களாகிய நம் அறிவுக்கே எட்டாத விஷயமாகும். 

இந்த மிஃராஜ் பயணத்தில் மாநபி அவர்கள் கண்ட ஒரு மகத்தான பொக்கிஷம். நாளை மறுமையில் நமது நபி அவர்களுக்கு மட்டுமே அல்லாஹ்வால் வழங்கப்பட இருக்கிற மகத்தான அன்பளிப்பு. நாளை மறுமையில் நமக்காக நமது நபி அவர்கள் காத்திருக்கும் இடம் தான் அல் கவ்ஸர் நீர்த்தடாகம்.

மிஃராஜ் பயணத்தின் பல்வேறு நிகழ்வுகளை நாம் ஒவ்வொரு ஆண்டும் நினைவு படுத்திக் கொள்கின்றோம். பரிமாறிக் கொள்கின்றோம். அந்த அடிப்படையில் இந்த மிஃராஜ் தின சிந்தனையாக அல் கவ்ஸர் நீர்த்தடாகம் குறித்து பேசவும் கேட்கவும் இருக்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்!!

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: "بَيْنَمَا أَنَا أَسِيرُ فِي الجَنَّةِ، إِذَا أَنَا بِنَهَرٍ، حَافَتَاهُ قِبَابُ الدُّرِّ المُجَوَّفِ، قُلْتُ: مَا هَذَا يَا جِبْرِيلُ؟ قَالَ: هَذَا الكَوْثَرُ، الَّذِي أَعْطَاكَ رَبُّكَ، فَإِذَا طِينُهُ -أَوْ طِيبُهُ- مِسْكٌ أَذْفَرُ".  

[صحيح] - [رواه البخاري]

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

لَمَّا عُرِجَ بالنبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ إلى السَّمَاءِ، قالَ: أتَيْتُ علَى نَهَرٍ، حَافَتَاهُ قِبَابُ اللُّؤْلُؤِ مُجَوَّفًا، فَقُلتُ: ما هذا يا جِبْرِيلُ؟ قالَ: هذا الكَوْثَرُ

நான் சொர்க்கத்தில் பயணம் செய்தேன். அப்போது அங்கு ஓர் ஆறு இருந்தது. அதன் இரு மருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான், “ஜிப்ரீலே! இது என்ன?” என்று கேட்டேன். அவர், “இது தான் உங்கள் இறைவன் உங்களுக்கு வழங்கிய அல்கவ்ஸர்என்று கூறினார். அதன் மண் அல்லது அதன் வாசனை நறுமணம் மிக்க கஸ்தூரியாகும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), ( நூல்: புகாரி, அஹ்மத் )

முஸ்னத் அஹ்மத் உடைய அறிவிப்பில் "நான் விண்ணேற்றப் பயணம் அழைத்துச் செல்லப்பட்ட போது ஒரு நீரோடையின் பக்கம் அழைத்துச் செல்லப்பட்டேன். அதன் இரு மருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான், “ஜிப்ரீலே! இது என்ன?” என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரயீல் (அலை) அவர்கள், “இது தான் உங்கள் இறைவன் உங்களுக்கு வழங்கிய அல்கவ்ஸர்என்று கூறினார். அதன் மண் அல்லது அதன் வாசனை நறுமணம் மிக்க கஸ்தூரியாகும்" என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) ( நூல்: அஹ்மத் )

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ ، أَخْبَرَنَا الْمُخْتَارُ بْنُ فُلْفُلٍ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ، - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ ، عَنِ الْمُخْتَارِ ، عَنْ أَنَسٍ ، قَالَ : بَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ بَيْنَ أَظْهُرِنَا إِذْ أَغْفَى إِغْفَاءَةً ثُمَّ رَفَعَ رَأْسَهُ مُتَبَسِّمًا، فَقُلْنَا: مَا أَضْحَكَكَ يَا رَسُولَ اللهِ قَالَ: «أُنْزِلَتْ عَلَيَّ آنِفًا سُورَةٌ» فَقَرَأَ: بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ {إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ. فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ. إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ} [الكوثر: 2] ثُمَّ قَالَ: «أَتَدْرُونَ مَا الْكَوْثَرُ؟» فَقُلْنَا اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: ” فَإِنَّهُ نَهْرٌ وَعَدَنِيهِ رَبِّي عَزَّ وَجَلَّ، عَلَيْهِ خَيْرٌ كَثِيرٌ، هُوَ حَوْضٌ تَرِدُ عَلَيْهِ أُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ، آنِيَتُهُ عَدَدُ النُّجُومِ

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே இருந்தார்கள். அப்போது அவர்கள் (திடீரென) உறங்கிவிட்டார்கள். (சிறிது நேரத்திற்குப்) பிறகு புன்னகைத்தவர்களாகத் தமது தலையை உயர்த்தினார்கள். அப்போது நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் சிரிக்கக் காரணம் என்ன? என்று கேட்டோம்.

அதற்கு அவர்கள், சற்று முன் (குர்ஆனின் 108 ஆவது அத்தியாயமான அல்கவ்ஸர் எனும்) ஓர் அத்தியாயம் எனக்கு அருளப்பெற்றது என்று கூறிவிட்டு அந்த அத்தியாயத்தை ஓதிக் காட்டினார்கள்:

(பொருள்: அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்… (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு அல்கவ்ஸரை நல்கியுள்ளோம். எனவே, உம்முடைய இறைவனைத் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக! நிச்சயமாக உம்முடைய பகைவன்தான் சந்ததியற்றவன்.)

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்கவ்ஸர் என்றால் என்ன? என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிந்தவர்கள் என்று பதிலளித்தோம். அவர்கள், அது ஒரு (சொர்க்க)நதி. என்னுடைய இறைவன் (மறுமை நாளில்) அதை(த்தருவதாக) எனக்கு வாக்களித்துள்ளான்; (ஹதீஸ் சுருக்கம்) அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (ரலி), ( நூல்: முஸ்லிம் )

 

عن عقبة بن عامر رضي الله عنه : صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَتْلَى أُحُدٍ بَعْدَ ثَمَانِي سِنِينَ، كَالْمُوَدِّعِ لِلْأَحْيَاءِ وَالأَمْوَاتِ، ثُمَّ طَلَعَ المِنْبَرَ فَقَالَ «إِنِّي بَيْنَ أَيْدِيكُمْ فَرَطٌ، وَأَنَا عَلَيْكُمْ شَهِيدٌ، وَإِنَّ مَوْعِدَكُمُ الحَوْضُ، وَإِنِّي لَأَنْظُرُ إِلَيْهِ مِنْ مَقَامِي هَذَا، وَإِنِّي لَسْتُ أَخْشَى عَلَيْكُمْ أَنْ تُشْرِكُوا، وَلَكِنِّي أَخْشَى عَلَيْكُمُ الدُّنْيَا أَنْ تَنَافَسُوهَا»، قَالَ: فَكَانَتْ آخِرَ نَظْرَةٍ نَظَرْتُهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உஹுத் போர் நடந்து) எட்டு ஆண்டுகளுக்குப் பின் உஹுதில் கொல்லப்பட்டவர்களுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்தார்கள். (அது) உயிரோடுள்ளவர்களிடமும் இறந்தவர்களிடமும் (மறுமைப் பயணத்திற்கு) விடைபெறுவது போலிருந்தது.

பிறகு அவர்கள் சொற்பொழிவுமேடை (மிம்பர்)மீது ஏறி, “நிச்சயமாக நான் உங்களுக்காகக் காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். (என்னைச் சந்திக்க) உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள இடம் (அல்கவ்ஸர் எனும்) தடாகம் ஆகும். நான் இங்கிருந்தே (மறுமையில் எனக்குப் பரிசளிக்கப்படவுள்ள) அந்தத் தடாகத்தைக் காண்கிறேன்.

நிச்சயமாக! (எனது மரணத்துக்குப் பின்னால்) நீங்கள் இணைவைப்பாளர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை; ஆனால், உலகத்திற்காக நீங்கள் ஒருவரோடொருவர் (போட்டியிட்டு) மோதிக்கொள்வீர்களோ என்றே அஞ்சுகிறேன்என்று சொன்னார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்த இறுதிப் பார்வையாக அது அமைந்தது. அறிவிப்பாளர்: உக்பா பின் ஆமிர் (ரலி), ( நூல்: புகாரி )

அல் கவ்ஸர் நீர்த்தடாகம் எப்படி இருக்கும்?...

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رضي الله عنهما قَالَ: قالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حَوْضِي مَسِيرَةُ شَهْرٍ، مَاؤُهُ أَبْيَضُ مِنَ اللَّبَنِ، وَرِيحُهُ أَطْيَبُ مِنَ المِسْكِ، وَكِيزَانُهُ كَنُجُومِ السَّمَاءِ، مَنْ شَرِبَ مِنْهَا فَلاَ يَظْمَأُ أَبَدًا».  

[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري - 6579]

நபி அவர்கள் கூறினார்கள்: (‘அல்கவ்ஸர்எனும்) என் தடாகம் ஒருமாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலைவிட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியைவிட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகின்றார்களோ அவர்கள் ஒருபோதும் தாகம் ஏற்படாது. அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), ( நூல்: புகாரி )

حَدَّثَنَا مُسَدَّدٌ ، حَدَّثَنَا يَحْيَى ، عَنْ عُبَيْدِ اللَّهِ ، حَدَّثَنِي نَافِعٌ ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : أَمَامَكُمْ حَوْضٌ كَمَا بَيْنَ جَرْبَاءَ وَأَذْرُحَ

நபி அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில் என்னுடைய அல்கவ்ஸர்எனும்) தடாகம் உங்களுக்கு முன்னால் இருக்கும். (அதன் விசாலமானது, அன்றைய ஷாம் நாட்டின்) ஜர்பாமற்றும் அத்ருஹ்ஆகிய இடங்களுக்கிடையேயான தூரமாகும். அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), ( நூல்: புகாரி )

عن أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ قَدْرَ حَوْضِي كَمَا بَيْنَ أَيْلَةَ وَصَنْعَاءَ مِنَ اليَمَنِ، وَإِنَّ فِيهِ مِنَ الأَبَارِيقِ كَعَدَدِ نُجُومِ السَّمَاءِ»

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: என் தடாகத்தின் (பரப்பு) அளவு யமனிலுள்ள ஸன்ஆநகரத்திற்கும் (ஷாம் நாட்டை ஒட்டியிருந்த) அய்லாநகரத்திற்கும் இடையேயான (தொலைதூரத்)தைப் போன்றதாகும். மேலும், அதில் விண்மீன்களின் எண்ணிக்கையைப் போன்று (கணக்கிலடங்கா) கோப்பைகள் (வைக்கப்பட்டு) இருக்கும். அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (ரலி) , ( நூல்: புகாரி )

ஹாரிஸா (ரலி) அவர்கள் (மேற்கண்ட ஹதீஸில் கூடுதலாகக்) கூறியதாவது:

حَارِثَةَ بْنَ وَهْبٍ، يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَكَرَ الحَوْضَ فَقَالَ: «كَمَا بَيْنَ المَدِينَةِ وَصَنْعَاءَ»

“(‘அல்கவ்ஸர்எனும்) எனது தடாக(த்தின் விசால)மானது, (யமனிலுள்ள) ஸன்ஆவிற்கும் மதீனாவிற்கும் இடையேயான தூரமாகும்என நபி அவர்கள் கூறக் கேட்டேன் என்று சொன்னேன். அப்போது முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் (ரலி) அவர்கள் என்னிடம், “அதன் கோப்பைகள் குறித்து நபி அவர்கள் கூறியதை நீங்கள் கேட்கவில்லையா?” என்று வினவினார்கள். நான் இல்லைஎன்றேன். அதற்கு அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தில் வைக்கப்பட்டுள்ள கோப்பைகள் நட்சத்திரங்களைப் போன்று காணப்படும்என நபி அவர்கள் தெரிவித்ததாகச் சொன்னார்கள். ( நூல்: புகாரி ) 

அல் கவ்ஸர் நீர்த்தடாகத்தில் மாநபி அவர்கள் கரங்களால் தண்ணீர் அருந்தும் பாக்யம் பெற்றவர்கள்...

1) அநீதத்திற்கு துணை போகாதவர்கள்...

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ عَاصِمٍ الْعَدَوِيِّ، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ تِسْعَةٌ، فَقَالَ: «إِنَّهُ سَتَكُونُ بَعْدِي أُمَرَاءُ مَنْ صَدَّقَهُمْ بِكَذِبِهِمْ، وَأَعَانَهُمْ عَلَى ظُلْمِهِمْ، فَلَيْسَ مِنِّي وَلَسْتُ مِنْهُ، وَلَيْسَ بِوَارِدٍ عَلَيَّ الْحَوْضَ، وَمَنْ لَمْ يُصَدِّقْهُمْ بِكَذِبِهِمْ، وَلَمْ يُعِنْهُمْ عَلَى ظُلْمِهِمْ، فَهُوَ مِنِّي وَأَنَا مِنْهُ، وَهُوَ وَارِدٌ عَلَيَّ الْحَوْضَ»

கஅப் இப்னு உஜ்ரா ரலி அறிவிக்கின்றார்கள்:- ஒரு நாள் நாங்கள் ஒன்பது நபர்கள் அமர்ந்திருந்தோம். அப்போது எங்களிடையே வந்த நபி அவர்கள் "எனக்கு பின்னால் சில தலைவர்கள் வருவார்கள். அவர்களிடம் சென்று அவர்களின் பொய்களை உண்மைப்படுத்துவார்கள். அவர்களின் அநீத செயல்களுக்கு உதவி புரிவார்கள். அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் இல்லை. நான் அவனைச் சார்ந்தவனும் இல்லை.

அவர்கள் (மறுமைநாளில்) ஹவ்லுல் கவ்ஸர் தடாகத்திற்கு என்னிடம் வர மாட்டார்கள். யார் அவர்களிடம் (அநீதி இழைக்கும் தலைவர்களிடம்) செல்லாமல் அவர்களின் அநீதிக்கு உதவி செய்யாமல் அவர்களின் பொய்களை உண்மைப்படுத்தாமல் இருப்பார்களோ அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள், நான் அவர்களைச் சார்ந்தவன். அவர்கள் ஹவ்லுல் கவ்ஸர் தடாகத்திற்கு என்னிடம் வருவார்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: நஸாயி )

2) தொழுகையாளிகள்...

எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக, ஒரு மனிதன் தனது தடாகத்தை விட்டும் தனக்குச் சொந்தமில்லாத ஒட்டகங்களை விரட்டுவானோ அதுபோல மற்ற மனிதர்களை நான் தடாகத்தை விட்டும் விரட்டுவேன்' என்று நபி (ஸல்) கூறிய போது 'அல்லாஹ்வின் தூதரே! எங்களை நீங்கள் அறிந்து கொள்வீர்களா? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'ஆம்! உலூச் செய்ததன் காரணமாக கைகள், கால்கள், முகங்கள் வெண்மையானவர்களாக என்னிடம் நீங்கள் வருவீர்கள்' என்று விடையளித்தார்கள். ( நூல்: முஸ்லிம் )

தடுத்து நிறுத்தப்படும் சிலர்...

விரட்டியடிக்கப்படும் சிலர்....

عن أبي حازم قال: سمعت سهل بن سعد يقول: سمعتُ النّبيَّ يقول: «أنا فرطكم على الحوض، من ورد شرب منه، ومَنْ شرب منه لم يظمأ بعده أبدًا، ليرد عليَّ أقوام أعرفهم ويعرفوني، ثم يحال بيني وبينهم».

நபி அவர்கள் கூறினார்கள்: நான் உங்களுக்கு முன்பே அல்கவ்ஸர்தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். யாருக்கு என்னிடம் வரமுடிகிறதோ அவர் (அந்தத் தடாகத்தின் நீரை) அருந்துவார். யார் (அதை) அருந்துகிறாரோ அவருக்கு இனி ஒருபோதும் தாகமே ஏற்படாது. (இந்நிலையில்) என்னிடம் சிலர் வருவார்கள். அவர்களை நான் அறிந்துகொள்வேன். என்னையும் அவர்கள் அறிந்துகொள்வார்கள். பிறகு எனக்கும் அவர்களுக்கும் இடையே தடுப்பு ஏற்படுத்தப்படும். அறிவிப்பாளர்: சஹ்ல் பின் சஅத் (ரலி), ( நூல்: புகாரி )

عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَأَذُودَنَّ رِجَالًا عَنْ حَوْضِي، كَمَا تُذَادُ الغَرِيبَةُ مِنَ الإِبِلِ عَنِ الحَوْضِ»

நபி அவர்கள் கூறினார்கள்: என் உயிரைத் தன் கையில் வைத்திருப் பவன்மீது ஆணையாக! (தனது குளத்தில் நீரருந்த விடாமல்) அந்நிய ஒட்டகத்தை (குளத்தின் உரிமையாளர்) குளத்திலிருந்து விரட்டுவதைப் போன்று நானும் (மறுமையில் சிறப்புப் பரிசாக) எனக்குக் கிடைக்கவிருக்கும் தடாகத்திலிருந்து சில மனிதர்களை (நீரருந்த விடாமல்) விரட்டுவேன். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி),

( நூல்: புகாரி )

عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: "إِنِّي عَلَى الحَوْضِ حَتَّى أَنْظُرَ مَنْ يَرِدُ عَلَيَّ مِنْكُمْ، وَسَيُؤْخَذُ نَاسٌ دُونِي، فَأَقُولُ: يَا رَبِّ مِنِّي وَمِنْ أُمَّتِي، فَيُقَالُ: هَلْ شَعَرْتَ مَا عَمِلُوا بَعْدَكَ، وَاللَّهِ مَا بَرِحُوا يَرْجِعُونَ عَلَى أَعْقَابِهِمْ".  

[صحيح] - [متفق عليه] فَكَانَ ابْنُ أَبِي مُلَيْكَةَ، يَقُولُ: «اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ أَنْ نَرْجِعَ عَلَى أَعْقَابِنَا، أَوْ نُفْتَنَ عَنْ دِينِنَا» {أَعْقَابِكُمْ تَنْكِصُونَ} [المؤمنون: ]: «تَرْجِعُونَ عَلَى العَقِبِ

நபி அவர்கள் கூறினார்கள்: நான் (அல்கவ்ஸர்’) தடாகத்தின் அருகில் இருந்தவாறு உங்களில் யார் என்னிடம் வருகிறார்கள் என்பதை உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பேன். அப்போது என்னை நெருங்க விடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். உடனே நான், “இறைவா! (இவர்கள்) என்னைச் சேர்ந்தவர்கள்; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்என்பேன்.

அதற்கு உங்களுக்குப் பின்னால் இவர்கள் செய்ததை நீங்கள் அறிவீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்கள் தங்கள் குதிகால்கள்மீது (தம் பழைய மதத்திற்கே) திரும்பச் சென்றுகொண்டேயிருந்தார்கள்என்று கூறப்படும்". இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள், “அல்லாஹ்வே! நாங்கள் எங்கள் குதிகால்கள் மீது திரும்பிச் செல்வதிலிருந்தும், நாங்கள் எங்கள் மார்க்கம் தொடர்பாகக் குழப்பத்தில் ஆழ்த்தப்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறோம்என்று பிரார்த்திப்பார்கள். அறிவிப்பாளர்: அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) , ( நூல்: புகாரி )

أَنَا فَرَطُكُمْ عَلَى الحَوْضِ، وَلَيُرْفَعَنَّ مَعِي رِجَالٌ مِنْكُمْ ثُمَّ لَيُخْتَلَجُنَّ دُونِي، فَأَقُولُ: يَا رَبِّ أَصْحَابِي، فَيُقَالُ: إِنَّكَ لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களுக்கு முன்பே (அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது உங்களில் சிலர் என்னுடன் இருப்பதாகக் காட்டப்படுவார்கள். பின்னர் என்னிடமிருந்து அவர்கள் விலக்கிவைக்கப்படுவார்கள்.

உடனே நான் இறைவா! (இவர்கள்) என் தோழர்களாயிற்றே!என்பேன். அப்போது இவர்கள் உங்களுக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதுஎனக் கூறப்படும்.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), ( நூல்: புகாரி )

 

மேற்கூறிய இந்த நபிமொழிக்கு நபி அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தில் புதிதாக வணக்க வழிபாடுகளை ஏறிபடுத்தியவர்கள் - அவர்கள் நபித்தோழர்களாக இருந்தாலும் - அந்தத் தடாகத்திற்கு வராதவாறு தடுக்கப்படுவார்கள்" என்று அபத்தமாக பொருள் கொள்கிறார்கள். நவூது பில்லாஹ்... அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மை இது போன்ற வழிகெட்ட கொள்கையாளர்களிடம் இருந்தும் நம்மை காத்தருள்வானாக! ஆமீன்!

இந்த நபிமொழியில் அஸ்ஹாபி என் தோழர்கள் என்று நபி அவர்கள் கூறியிருப்பது வழக்கத்தில் உள்ள கண்ணியமான நபித்தோழர்களை குறிக்காது. மாறாக, முனாஃபிக்களான - நயவஞ்சகர்களையே குறிக்கும் என்று பின் வரும் நபிமொழியை ஆதாரமாக வைத்து இமாம் நவவீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

ومما يدل على دخول المنافقين في اسم " أصحابي " : قوله صلى الله عليه وسلم ( لا يَتَحَدَّثُ النَّاسُ أَنَّهُ كَانَ يَقْتُلُ أَصْحَابَهُ ) رواه البخاري ( 3518 ) ،

நயவஞ்சகர்களின் தலைவர் உபை இப்னு ஸலூலை இஸ்லாத்தை ஏற்று தூய வடிவில் வாழ்ந்து கொண்டிருந்த உபை இப்னு ஸலூலின் மகனாரான அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் இஸ்லாத்திற்கும், இறைத்தூதர் நபி அவர்களுக்கும் துரோகம் இழைத்து வரும் தம் தந்தையை தம் கையாலேயே கொலை செய்ய அனுமதி கோரி நின்ற போது "என்ன இந்த முஹம்மது?.. தம் தோழர்களையே கொலை செய்கிறார் என்று மக்கள் பேசி விடக்கூடாது" என்று கூறி தடுத்து விட்டார்கள். தமது தோழர் என்று கூறிய அந்த தருணத்தில் உபை இப்னு ஸலூல் பட்டவர்த்தனமான முனாஃபிக் - நயவஞ்சகராகவே இருந்தார்.

ஹவ்ளுல் கவ்ஸர் நீர் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?..

மறுமையின் ஒரு நாள் என்பது உலகின் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு நிகரான நாள்.

تَعْرُجُ الْمَلٰٓٮِٕكَةُ وَ الرُّوْحُ اِلَيْهِ فِىْ يَوْمٍ كَانَ مِقْدَارُهٗ خَمْسِيْنَ اَلْفَ سَنَةٍ‌ۚ‏ فَاصْبِرْ صَبْرًا جَمِيْلًا‏ اِنَّهُمْ يَرَوْنَهٗ بَعِيْدًا وَّنَرٰٮهُ قَرِيْبًا 

ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய) ரூஹும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும். எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக. நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர். ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம். ( அல்குர்ஆன்: 70: 4 ) 

மேற்குறிப்பிட்ட நாள் மறுமை நாளைப் பற்றியது தான் என்பதற்கு கீழ்காணும் ஹதீஸ் சான்றாக உள்ளது.

عن أبي هُرَيرة رَضِيَ اللهُ عنه قال: قال رسولُ اللهِ صلَّى الله عليه وسلَّم: ((ما مِنْ صاحِبِ ذهَبٍ ولا فِضَّةٍ لا يؤدِّي منها حقَّها إلَّا إذا كان يومُ القيامةِ، صُفِّحَتْ له صفائِحُ من نارٍ، فأُحمِيَ عليها في نارِ جهنَّمَ، فيُكوى بها جنبُه وجبينُه وظهرُه، كلَّما برُدَتْ أُعيدَت له، في يومٍ كان مقدارُه خمسينَ ألفَ سَنةٍ، حتَّى يُقضَى بين العبادِ؛ فيُرَى سبيلَه؛ إمَّا إلى الجنَّة وإمَّا إلى النَّار

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:- "ஜகாத் கொடுக்காதவர்களுக்கு விலாப்புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும்அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

அந்த நாளில் தலைக்கு மிக அருகாமையில் இருக்கும் சூரியன் அதன் மூலம் ஏற்படும் கடுமையான வெப்பம் அதன் ஊடாக ஏற்படும் தாகத்தை தணிக்க இறைவன் செய்த ஏற்பாடு தான், நபி அவர்களுக்கு வழங்கப்பட்ட சுவனத்து நதியான ஹவ்ளுல் கவ்ஸர் என்ற சுவையான, மதுரமான அதிஅற்புதமான நீர் தடாகம்!

وعن المِقْدَاد قَالَ: سَمِعْتُ رسولَ الله ﷺ يَقُولُ: تُدْنَى الشَّمْسُ يَومَ القِيَامَةِ مِنَ الخَلْقِ حتَّى تَكُونَ مِنْهُمْ كَمِقْدَارِ مِيل، قَالَ سُلَيمُ بْنُ عَامرٍ الرَّاوي عَن المِقْدَاد: فَوَاللَّهِ مَا أَدْرِي مَا يَعْني بِالمِيلِ، أَمَسَافَةَ الأَرضِ أَمِ الميل الَّذي تُكْتَحَلُ بِهِ العَيْنُ؟ فَيَكُونُ النَّاسُ عَلَى قَدْرِ أَعْمَالِهمْ في العَرَقِ، فَمِنْهُمْ مَنْ يَكُونُ إِلى كَعْبَيْهِ، وَمِنْهُمْ مَنْ يَكُونُ إِلى رُكْبَتَيْهِ، ومِنْهُمْ مَنْ يَكون إِلى حِقْوَيْهِ، ومِنْهُمْ مَنْ يُلْجِمُهُ العَرَقُ إِلجامًا، قال: وَأَشَارَ رَسُولُ اللَّه ﷺ إِلى فِيه. رواه مسلم.

மறுமை நாளில் சூரியன் படைப்பினங்களுக்கு மிகவும் சமீபமாக இருக்கும். சூரியனுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு மைல் தூரம் தான் இடைவெளி இருக்கும். (அதன் வெப்பத்தால்) மக்கள் தங்களுடைய செயல்களுக்குத் தக்கவாறு வியர்வையில் மூழ்கி இருப்பார்கள். ஒருவரின் செயல் எந்தளவு தீயதாக இருக்குமோ, அந்தளவுக்கு வியர்வை அதிகமாக இருக்கும். சிலரின் வியர்வை கரண்டைக்கால் வரை இருக்கும். இன்னும், சிலரின் வியர்வை முழங்கால் வரை இருக்கும். இன்னும், சிலரின் வியர்வை இடுப்பு வரை இருக்கும். இன்னும், சிலரின் வியர்வை வாய் வரை இருக்கும் என்று நபி அவர்கள் தமது வாயின் பக்கம் கையால் சமிக்கை செய்து காட்டி கூறுவார்கள்’. அறிவிப்பாளர்: மிக்தாத் (ரலி), ( நூல் : முஸ்லிம் )

பூமியில் நாம் வாழும் காலத்தில் வெகு தூரத்தில் உதிக்கும் சூரியனின் வெப்பத்தின் ஊடாக நமக்கு ஏற்படும் தாகமும் அதன் காரணமாக நமக்கு ஏற்படும் விளைவுகளும் நாம் அறிந்து வைத்துள்ளோம். 

அந்த வெப்பத்தையும், அதனால் ஏற்படும் தாகத்தையும் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் இருக்கும் நாம் உடனடியாக நாடுவது தண்ணீரைத் தான்.

அப்படியென்றால் நாளை மறுமையில் நமது தலைக்கு மிக அருகாமையில் இருக்கும் சூரிய வெப்பத்தில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள போகிறோம்?..

உலகின் சூரியனும்… அதன் வெப்பத்தின் தாக்கமும்…

நமது உடல் சுமார் 60% முதல் 70% வரை நீரினால் ஆனது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

ஒருவருக்குத் தாகம் எடுக்கிறது என்றால், அவரது உடல் ஏற்கனவே 1% முதல் 2% வரை நீர்ச்சத்தை இழந்துவிட்டது என்று அர்த்தம். தாகம் எடுக்கும் நிலையை மருத்துவ ரீதியாக 'லேசான நீர்ச்சத்து குறைபாடு' (Mild Dehydration) என்று அழைக்கிறார்கள்.

தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியானது மாறி மாறி வெப்பமும் குளிர்ச்சியும் வருகின்ற பருவ நிலைகளைக் கொண்டது. கோடைக் காலங்களில் குறிப்பாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அதிகமாக தாகம் எடுக்கின்றது. அதன் காரணமாக அதிகமான தண்ணீரைப் பருகுவோம்.

உடலானது பருவநிலைச் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாது உடல் வெப்பநிலையை உடல் உள்உறுப்புகள் சீராகவே வைத்திருக்கின்றன.

கோடைக்காலத்தில் அதிகப்படியான வெப்பம் நம் தோலின் மீது விழுகின்றபோது அதன் மூலமாக அதிகப்படியான நீர் வியர்வை மூலமாக வெளியேற்றப்படுகின்றன.

உடம்பில் இருக்கும் நீரின் அளவு ஒரே மாதிரியாய் இருந்தால் நமக்கு தண்ணீரின் ஞாபகமே இருக்காது. நீரின் அளவு 2.5 சதவீதம் குறைந்தாலே போதும். அவ்வாறு குறைவு ஏற்படுகின்றபோது உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருப்பதற்காக மூளை நரம்பு செல்களுக்குக் கொடுக்கும் உணர்வு (தகவல்) தான் தாகம்ஆகும்.

மூளையின் ஒரு பகுதி ஹைபோதாலமஸ் (Hypothalamus) மிகமிகச் சிறிய அளவிலான நியூரான்கள் அடங்கியிருக்கின்றன. இந்த நியூரான்களின் முக்கியப் பணி உடல் வெப்பநிலை, பசி மற்றும் தாகம் இவைகளைக் கவனிப்பதுதான். ஹைபோதாலமஸ் உள்ள நியூரான்கள் பிட்யூட்டரி சுரப்பி வழியாக நரம்புகளோடு இணைந்து இருக்கின்றன.

உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும்போது இந்த நியூரான்கள் மிக வேகமாக செயல்பட்டு நரம்பு உணர்வுகளைத் தெரிவிக்கின்றன.அந்த உணர்வைத்தான் தாகம்என்கிறோம். ( நன்றி: தினமணி நாளிதழ், 10/12/2016 )

அதிகபட்சமாக இந்தத் தாகத்தை தணிக்காமல் சுமார் 2 மணிநேரம் இருக்கலாம், அவ்வளவுதான்! அதற்கு மேல் தண்ணீர் பருகாமல் இருக்க முடியாது. ( நன்றி: தினத்தந்தி நாளிதழ், 16/09/2022 )

இது போக தண்ணீர் தாகம் அதிகம் ஏற்படுவதற்கு இன்னும் பல்வேறு காரணிகள் உள்ளதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

1) நீரிழிவு இன்சிபிடஸ்: இதில் அதிகமான அளவு சிறுநீர் வெளியேறி, உடலில் உள்ள திரவங்களின் சமநிலையை இழக்க செய்து, தாகத்தை அதிகரிக்கிறது.

2) முதன்மை தாகமிகுமை (பிரைமரி பாலிடிப்சியா): உடலியல் தூண்டல் இல்லாத நிலையிலும் உண்டாகும் அதிக தாகம் மற்றும் நீர் பருகும் நிலை.

3) சைக்கோஜெனிக் பாலிடிப்சியா அல்லது உளச்சார்பு தாகமிகுமை: கடுமையான மனநல கோளாறுகள் உள்ளவர்களிடம் காணப்படும் அதிகமான நீர் உட்கொள்ளல்.

4) நீர்ச்சத்து இழப்பு: வாந்தி, வயிற்று போக்கு, அதிகம் வியர்த்தல் போன்ற பிரச்சினைகளால் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பு குறைபாடு.

5) அதிக உப்பு: அதிக உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும்போது, உப்பு ரத்தத்தில் உறிஞ்சப்படுவதால், திசுக்களில் உள்ள திரவம் இழுக்கப்பட்டு தாகம் அதிகரிக்கிறது.

6) செரிமானம் தொடர்பான பிரச்சினை: இதில் உணவை ஜீரணிக்க அதிமான அளவு தண்ணீர் தேவைப்படுவதால் தாகம் அதிகரிக்கிறது.

7) ரத்த சோகை.

8) உமிழ் நீர் குறைவாக சுரப்பதால் உண்டாகும் வறண்ட வாய் பிரச்சினை

9) கடுமையான உடற்பயிற்சி

10) உடலில் வேறு எங்கேனும் ஏற்படும் குறிப்பிடத்தக்க ரத்த இழப்பு.

11) அதிகமான காபின் அல்லது மது அருந்துதல்.

12) மருந்துகளின் பக்கவிளைவுகள் (டையூரிடிக்ஸ், லித்தியம்)

13) ரத்தத்தில் குறைந்த அளவு பொட்டாசியம் (ஹைபோகலீமியா)

14) மிகை தைராய்ட் நிலை (ஹைப்பர்தைராய்டிசம்) ( நன்றி: தினத்தந்தி நாளிதழ், 09/06/2025 )

இன்னும் அதிர்ச்சியான ஒரு மருத்துவ ஆய்வு கூறும் ரிப்போர்ட் என்னவென்றால், தாகம் ஏற்படும் முன்பே தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படி தாகம் ஏற்பட்ட பின்னர் தண்ணீர் குடித்தால் "கவனிப்புத் திறன் (Concentration) குறையும், அடிக்கடி தலைவலி வரும், மற்றும் மனநிலை மாற்றங்கள் (Mood swings) ஏற்படும்" என்று.

உலகின் ஒரு மிடரு தண்ணீருக்கே இவ்வளவு மதிப்பு என்றால்?..

دخل ابن السماك يوماً، على أمير المؤمنين هارون الرشيد، فوافق أن وجده يرفع الماء إلى فمه ليشرب فقال:‏ ‏ ناشدتك الله يا أمير المؤمنين أن تنتظر به قليلاً. فلما وضع الماء قال له:‏ ‏ أستحلفك بالله تعالى، لو أنك مـُنعت هذه الشربة من الماء، فبكم كنت تشتريها؟ قال:‏ ‏ بنصف ملكي، قال:‏ ‏ اشرب هنأك الله، فلما شرب قال:‏ ‏ أستحلفك بالله تعالى، لو أنك منعت خروجها من جوفك بعد هذا، فبكم كنت تشتريها؟ قال:‏ ‏ بملكي كله

 فقال

 ‏ يا أمير المؤمنين إن ملكا تربو عليه شربة ماء، وتفضله بولة واحدة، لخليق ألا يـُنافس فيه، فبكى هارون الرشيد، حتى ابتلت لحيته.

இப்னு ஸிமாக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அமீருல் முஃமினீன் ஹாரூன் ரஷீத் பாதுஷா ரஹிமஹுல்லாஹு அலைஹி அவர்களைச் சந்திக்க வருகை தந்தார்கள்.

 

அப்போது அமீருல் முஃமினீன் ஹாரூன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தண்ணீர் பருகுவதற்காக தங்களின் வாயருகே தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டு சென்று ஒரு மிடரு குடித்தார்கள்.

குடித்து முடிக்கும் வரை காத்திருந்த இப்னு ஸிமாக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அமீருல் முஃமினீன் அவர்களே! அல்லாஹ்வை முன்னிருத்தி உங்களிடம் கேட்கிறேன். நீங்கள் குடிக்கும் இந்த ஒரு மிடரு நீர் உங்களுக்கு கிடைக்காமல் போனால் என்ன விலை கொடுத்து இந்த நீரை நீங்கள் வாங்குவீர்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு, ஹாரூன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் என் அரசாட்சியின் பாதி இடங்களை விலையாகக் கொடுத்து இந்த ஒரு மிடரு நீரை வாங்குவேன்என்று பதில் கூறினார்கள்.

அல்லாஹ் உங்களுக்கு அன்பளிப்பாய் தந்திருக்கும் இந்த நீரை பருகுவீராக! என்று இப்னு ஸிமாக் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்.

மீண்டும் ஒரு மிடரை அமீருல் முஃமினீன் ஹாரூன் ரஹிமஹுல்லாஹ் குடித்து முடித்ததும் அமீருல் முஃமினீன் அவர்களே! அல்லாஹ்வை முன்னிருத்தி உங்களிடம் கேட்கிறேன். நீங்கள் குடித்த இந்த ஒரு மிடரு நீர் உங்களின் வயிற்றுக்குள் சென்று, சிறுநீராக வராமல் தடைபட்டு போனால் என்ன விலை கொடுத்து சிறுநீரை நீங்கள் வெளியேற்றுவீர்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு, ஹாரூன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் என் முழு அரசாட்சியையும் விலையாகக் கொடுத்து இந்த சிறுநீரை வெளியேற்றுவேன்என்று பதில் கூறினார்கள்.

இது கேட்ட இப்னு ஸிமாக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அமீருல் முஃமினீன் அவர்களே! பார்த்தீர்களா? உங்கள் அரசாட்சி என்பது ஒரு மிடர் குடிநீருக்கும், ஒரு முறை கழிக்கிற சிறுநீருக்கும் கூட பொறுமதியாக இல்லை. ஆனால், நீங்கள் பொறுமதி பெறாத இந்த ஆட்சியதிகாரத்திலேயே அனுதினமும் மூழ்கிப்போய் கிடக்கின்றீர்கள்என்றார்களாம்.

அது கேட்ட, அமீருல் முஃமினீன் ஹாரூன் ரஷீத் பாதுஷா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் தாடி நனையும் அளவுக்கு அழுதார்களாம். ( நூல்: வஃப்யாத்தில் அஃயான், ஸியரு அஃலாமின் நுபலா )

சுவர்க்கத்தில் இருந்து வழிந்தோடும் அல் கவ்ஸர் தண்ணீர்...?

عن ثوبانَ رَضِيَ اللهُ عنه أنَّ نبيَّ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم قال: ((إِنِّي لَبِعُقْرِ حوضي أذودُ النَّاسَ لأهلِ اليَمَنِ، أضرِبُ بعصاي حتى يَرفَضَّ عليهم )، فسُئِلَ عن عَرْضِه فقال: ((من مقامي إلى عَمَّانَ))، وسُئِلَ عن شرابِه فقال: ((أشدُّ بياضًا من اللَّبَنِ، وأحلى من العَسَلِ، يَغُتُّ فيه ميزابانِ يمدَّانِه من الجنَّةِ، أحَدُهما من ذهبٍ، والآخَرُ مِن وَرِقٍ

 

ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், "நான் எனது ("அல் கவ்ஸர்") தடாகத்தில் நீர் அருந்தும் பகுதியில் நின்றுகொண்டு யமன்வாசிகளுக்(கு முன்னுரிமை அளிப்பதற்)காக மற்றவர்களை விரட்டுவேன். யமன்வாசிகளுக்குத் தண்ணீர் கிடைப்பதற்காக எனது (கையிலுள்ள) தடியின் மூலம் மற்றவர்களை அடிப்பேன்" என்று சொன்னார்கள்.

அப்போது நபியவர்களிடம் அத்தடாகத்தின் அகலம் குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள், "அது, எனது வசிப்பிட(மான மதீனா நகர)த்திலிருந்து "அம்மான்"வரை உள்ள தொலைவிற்கு அகலமானதாகும்" என்றார்கள்.

அத்தடாகத்தின் பானம் குறித்து வினவப்பட்டபோது, "அது, பாலைவிட வெண்மையானது; தேனைவிட இனிமையானது. சொர்க்கத்திலிருந்து நீளுகின்ற இரு வடிகுழாய்கள் அத்தடாகத்திற்குள் தொடர்ச்சியாகத் தண்ணீரைப் பாய்ச்சிக்கொண்டிருக்கும். அக்குழாய்களில் ஒன்று தங்கத்தாலானது; மற்றொன்று வெள்ளியாலானது" என்று பதிலளித்தார்கள். ( நூல்: புகாரி )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஹவ்ளுல் கவ்ஸர் தடாகத்தில் நபி அவர்களின் கரங்களால் நீரருந்தும் பாக்கியத்தை நமக்கும் நம் குடும்பத்தினர் அனைவருக்கும் வழங்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment