Wednesday, 4 March 2026

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 16. சமூக அக்கறை கொள்வோம்!!!

 

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 16.

சமூக அக்கறை கொள்வோம்!!!



அல்லாஹ்வின் மகத்தான கருணையினால் 15 –வது நோன்பை நோற்று, 16 – வது தராவீஹை நிறைவு செய்து, 16 –வது நோன்பை நோற்கும் ஆவலில் எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்தருள்வானாக! எதிர் வரும் நாட்களில் நோன்பு நோற்கும் ஆற்றலையும், தராவீஹ் தொழும் பாக்கியத்தையும் நஸீபாக்குவானாக!

இன்றைய தராவீஹ் தொழுகையில் சூரா அந்நம்ல், சூரா அல் கஸஸ் நிறைவு செய்யப்பட்டு சூரா அல் அன்கபூத்தின் 44 வசனங்கள் ஓதப்பட்டுள்ளது.

இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட சூரா அந் நம்லு அத்தியாயத்தில் இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அல்லாஹ் எடுத்துரைக்கின்றான்.

அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் இடம் பெறும் பிரதானமான இரண்டு உயிரினங்களை பற்றியும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குறிப்பிடுகின்றான். ஒன்று எறும்பு. இன்னொன்று ஹுத்ஹுத் பறவை.

எறும்பு தொடர்பாக இறைவன் கூறும் தகவல் இது தான்.

حَتّٰٓى اِذَاۤ اَتَوْا عَلٰى وَادِ النَّمْلِۙ قَالَتْ نَمْلَةٌ يّٰۤاَيُّهَا النَّمْلُ ادْخُلُوْا مَسٰكِنَكُمْ‌ۚ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمٰنُ وَجُنُوْدُهٗۙ وَهُمْ لَا يَشْعُرُوْنَ‏

فَتَبَسَّمَ ضَاحِكًا مِّنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًـا تَرْضٰٮهُ وَاَدْخِلْنِىْ بِرَحْمَتِكَ فِىْ عِبَادِكَ الصّٰلِحِيْ

அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்தபோது எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்திடக் கூடாது’’ என்று ஓர் எறும்பு கூறியது. அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார்.

என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களில் என்னையும் சேர்ப்பாயாக!’’ என்றார். ( அல்குர்ஆன்: 27:18,19 )

ஹுத்ஹுத் பறவை தொடர்பாக இறைவன் கூறும் தகவல் இது தான்.

وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ (20) لَأُعَذِّبَنَّهُ عَذَابًا شَدِيدًا أَوْ لَأَذْبَحَنَّهُ أَوْ لَيَأْتِيَنِّي بِسُلْطَانٍ مُبِينٍ (21) فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ فَقَالَ أَحَطْتُ بِمَا لَمْ تُحِطْ بِهِ وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ (22) إِنِّي وَجَدْتُ امْرَأَةً تَمْلِكُهُمْ وَأُوتِيَتْ مِنْ كُلِّ شَيْءٍ وَلَهَا عَرْشٌ عَظِيمٌ (23) وَجَدْتُهَا وَقَوْمَهَا يَسْجُدُونَ لِلشَّمْسِ مِنْ دُونِ اللَّهِ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيلِ فَهُمْ لَا يَهْتَدُونَ (24) أَلَّا يَسْجُدُوا لِلَّهِ الَّذِي يُخْرِجُ الْخَبْءَ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَيَعْلَمُ مَا تُخْفُونَ وَمَا تُعْلِنُونَ (25) اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ (26)

பறவைகளை அவர் ஆய்வு செய்தார். ஹுத்ஹுத் பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா?” என்றார். அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டும்” (என்றும் கூறினார்). (அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது. உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்து, ஸபா எனும் ஊரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்’’ என்று கூறியது.

நான் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் அவர்களை ஆட்சி செய்கிறாள். அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளுக்கு மகத்தான சிம்மாசனமும் உள்ளது. அவளும், அவளது சமுதாயமும் அல்லாஹ்வுக்கன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்)வழியை விட்டும் தடுத்துள்ளான்.

எனவே அவர்கள் நேர்வழி பெற மாட்டார்கள். வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்தும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தாச் செய்ய மாட்டார்களா? நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷின் அதிபதி” (என்றும் கூறியது) ( அல்குர்ஆன்: 27:20-26 )

பொதுவாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எந்த ஒன்றையும் வீணாகக் கூறுபவன் மாறாக, மனித சமூகத்திற்கு படிப்பினைக்காக இது போன்ற வரலாறுகளை கூறுகின்றான்.

لَقَدْ كَانَ فِي قَصَصِهِمْ عِبْرَةٌ لِأُولِي الْأَلْبَابِ مَا كَانَ حَدِيثًا يُفْتَرَى وَلَكِنْ تَصْدِيقَ الَّذِي بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيلَ كُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً لِقَوْمٍ يُؤْمِنُونَ

அல்லாஹ் குறிப்பிடும் அவர்களின் வரலாற்றில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது. (இது) இட்டுக்கட்டப்பட்ட செய்தி அல்ல. மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்தி, ஒவ்வொரு பொருளையும் விளக்கிக் கூறுகிறது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர்வழியாகவும், அருளாகவும் உள்ளது. ( அல்குர்ஆன்: 12: 111 )

அந்த வகையில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறும் இந்த இரண்டு நிகழ்வுகளையும் நோக்கும் போது, மனிதர்களாகிய நாம் படிப்பினை பெறத்தக்க அம்சங்கள் இதிலே அடங்கியுள்ளதை நாம் மறுக்க இயலாது.

எறும்பின் ஊடாக நாம் பெற வேண்டிய படிப்பினை:- ஓர் ஆபத்து நேரிடுகின்றது என்றால் அந்த ஆபத்திலிருந்து தன்னை மட்டும் காத்துக் கொண்டால் போதாது. தன்னுடைய குடும்பத்தையும், தன்னைச் சுற்றி வாழும் மக்களையும், தன் சமூகத்தையும் காக்க வேண்டும் என்ற பொதுநலனையும், சமூக அக்கறையையும் எறும்பின் இந்த அறைகூவல் நமக்கு உணர்த்துகிறது.

ஹுத்ஹுத் பறவையின் ஊடாக நாம் பெற வேண்டிய படிப்பினை:- தன்னுடைய நலனைத் தாண்டி, பிறருடைய நலன் குறித்தும் சிந்திக்க வேண்டும் என்கிற தூர நோக்கு சிந்தனையை பறவைக்கும் சுலைமான் அலை அவர்களுக்கும் இடையே நடைபெறும் உரையாடல் நமக்கு உணர்த்துகிறது.

எறும்புடைய சமூக அக்கறையை விளக்கும் நபிமொழி ஒன்று முஸ்னத் அஹ்மதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை ஹாக்கிம் ரஹ் அவர்கள் ஸஹீஹ் என்று கூறினார்கள்.

சுலைமான் அலை அவர்கள் உட்பட முந்தைய காலத்தில் வாழ்ந்த அத்துனை நபிமார்களுக்கும், அவர்களின் சமூக மக்களுக்கும் பஞ்ச காலத்தில் மழை வேண்டி பிரார்த்தனை செய்வது கடமையாக ஆக்கப்பட்டிருந்தது. 

وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: (خرج سليمان عليه السلام يستقي فرأى نملة مستلقية على ظهرها، رافعة قوائمها إلى السماء تقول: اللهم إنا خلق من خلقك، ليس بنا غنى عن سقياك فقال: ارجعوا؛ فقد سقيتم بدعوة غيركم) رواه أحمد، وصححه الحاكم] .

அபூஹுரைரா ரலி அவர்கள் அறிவித்தார்கள்: நபி அவர்கள் கூறினார்கள்:- "மழை தேவையான ஒரு பஞ்ச காலத்தில் நபி சுலைமான் அலை அவர்கள் தமது தோழர்களுடன் மழை வேண்டி பிரார்த்தனை செய்ய ஓரிடத்திற்கு வருகை தந்தார்கள். அப்போது முதுகுப்புறமாக படுத்தவாறு தமது கொடுக்குகளை வானை நோக்கி உயர்த்தியவாறு ஒரு எறும்பு "அல்லாஹ்வே! நாங்களும் நீ படைத்துள்ள படைப்புகளில் ஒரு படைப்பு தான். நீ வழங்கும் மழையின் பால், தண்ணீரின் பால் தேவையுடையவர்களாக நாங்களும் இருக்கின்றோம்" என்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தது. இதைக் கேட்ட சுலைமான் அலை அவர்கள் தம்முடன் வந்தவர்களைப் பார்த்து"செல்லுங்கள்! திரும்பிச் செல்லுங்கள்! மற்றவர்களின் பிரார்த்தனை மூலம் உங்களுக்கு மழை பொழிவிக்கப்படும்" என்று கூறினார்கள். ( நூல்: அஹ்மத், ஹாக்கிம்)

இன்னும் சில அறிவிப்புகளில்...

ثم يروي لنا أنها قالت: (اللهم إنا خلق من خلقك، فلا تمنع عنا بذنوبنا فضلك) ، أو (بذنوب العباد

அல்லாஹ்வே! நாங்களும் நீ படைத்துள்ள படைப்புகளில் ஒரு படைப்பு தான். எங்களுக்கு உன் அருளை அடியார்களின் பாவங்களின் காரணமாக தடை செய்து விடாதே!" என்றும்,

 

كما في رواية أحمد: (فلا تهلكنا بذنوب العباد، لا غنى لنا عن سقياك) ، وفي بعض الرويات -كما يذكرها الجاحظ: (إن لم تسقنا تهلكنا، إن لم تسقنا فأمتنا) أي: لنستريح من عذاب القحط

நீ எங்களுக்கு மழையை அருள வில்லை யானால் நாங்கள் அழிந்து போவோம்! நீ எங்களுக்கு மழையை அருள வில்லை யானால் நாங்கள் இறந்து போவோம்!" என்று பிரார்த்தனை செய்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமூக அக்கறை என்றால்...

عَنْ حُذَيْفَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « لاَ تَكُونُوا إِمَّعَةً تَقُولُونَ إِنْ أَحْسَنَ النَّاسُ أَحْسَنَّا وَإِنْ ظَلَمُوا ظَلَمْنَا وَلَكِنْ وَطِّنُوا أَنْفُسَكُمْ إِنْ أَحْسَنَ النَّاسُ أَنْ تُحْسِنُوا وَإِنْ أَسَاءُوا فَلاَ تَظْلِمُوا ». (ترمذي

சு (யநலமான) கம் அனுபவிக்கும் மக்களாக இருக்காதீர்கள்! அதாவது பிற மக்கள் ஏதேனும் எங்களுக்கு நல்லது செய்தால் நாமும் அவர்களுக்கு நல்லது செய்வோம். பிற மக்கள் எங்களுக்கு தீமை செய்தால் நாங்களும் அவர்களுக்கு தீங்கு செய்வோம் என கூறும் சு (யநலமான) கம் அனுபவிக்கும் மக்களாக இருக்காதீர்கள்! மாறாக, பிற மக்கள் ஏதேனும் எங்களுக்கு நல்லது செய்தால் நாங்களும் அவர்களுக்கு நல்லது செய்வோம். பிற மக்கள் எங்களுக்கு தீமை செய்தால் அப்போது நாங்கள் அவர்களுக்கு பதிலுக்கு தீங்கு விழைவிக்க மாட்டோம்! என்று உங்களின் மனதில் நல்லெண்ணத்தையே விதையுங்கள்!" என்று நபி அவர்கள் கூறினார்கள். ( நூல்: திர்மிதீ )

சில போது ஹுத்ஹுதாக வாழ வேண்டும்... வாழா விட்டால்?

இறைவனுக்கு மாறு செய்யும் சூழல் நிரம்பிய காலத்தில் வாழும் ஒரு இறைநம்பிக்கையாளர் சமூக அக்கறையும், பொதுநலனும், தூர நோக்கு சிந்தனையும் இல்லாமல் வாழ்ந்தால் எச்சரிக்கை முதலில் அந்த மக்களில் ஒருவராக, பின்னர் அந்த மக்களாகவே மாற வேண்டி இருக்கும். இறுதியில் இறைவனின் தண்டனைக்கு உள்ளாக்கப்படும் ஆபத்து நேரிடும்.

عَنْ عَبْد اللَّه قَالَ : قَالَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا وَقَعَتْ بَنُو إِسْرَائِيل فِي الْمَعَاصِي نَهَتْهُمْ عُلَمَاؤُهُمْ فَلَمْ يَنْتَهُوا فَجَالَسُوهُمْ فِي مَجَالِسهمْ قَالَ يَزِيد وَأَحْسَبُهُ قَالَ فِي أَسْوَاقهمْ وَوَاكَلُوهُمْ وَشَارَبُوهُمْ فَضَرَبَ اللَّه قُلُوب بَعْضهمْ بِبَعْضٍ وَلَعَنَهُمْ عَلَى لِسَان دَاوُدَ وَعِيسَى اِبْن مَرْيَم ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ "(تفسير ابن كثير)

நபி அவர்கள் கூறினார்கள். பனூ இஸ்ராயீல் சமூக மக்கள் பாவத்தில் ஈடுபட்ட போது ஆரம்பத்தில் அவர்களுடைய அறிஞர்கள் அந்த மக்களை தடுத்துப் பார்த்தார்கள். ஆனால், அந்த மக்கள் பாவத்தை விட்டும் விலகிக் கொள்ளாமல் பாவத்திலேயே தொடர்ந்தனர். அதற்குப் பிறகு அந்த மக்களை அந்த மக்களை திருத்தும் எண்ணமில்லாமல் அம்மக்களோடு சகஜமாக வியாபாரம் செய்தார்கள். அம்மக்களோடு சகஜமாக உணவு உண்டார்கள். கடைசியில் அல்லாஹ் அந்த அறிஞர்களின் உள்ளங்களை அந்த மக்களின் உள்ளங்களோடு ஒன்றிணைத்து விட்டான். இறுதியில் அந்த அறிஞர்களும் சேர்ந்து பாவத்தில் ஈடுபடும் நிலையை உருவாக்கி விட்டான். ( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் )

عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَوْحَى الله عَزَّ وَجَلَّ إِلَى جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ أَنِ اقْلِبْ مَدِينَةَ كَذَا وَكَذَا بِأَهْلِهَا، قَالَ: فَقَالَ: يَا رَبِّ إِنَّ فِيهِمْ عَبْدَكَ فُلَانًا لَمْ يَعْصِكَ طَرْفَةَ عَيْنٍ، قَالَ: فَقَالَ: اقْلِبْهَا عَلَيْهِمْ، فَإِنَّ وَجْهَهُ لَمْ يَتَمَعَّرْ فِيَّ سَاعَةً قَطُّ " (طبراني

அல்லாஹ் ஜிப்ரயீல் (அலை) அவர்களுக்கு பாவம் செய்து வாழும் மக்கள் நிரம்பிய ஒரு ஊரை அந்த மக்களோடு சேர்ந்து தலைகீழாக புறட்டுமாறு (அழிக்கச் சொல்லி) உத்தரவிட்டான். அப்போது ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் இறைவா! இவர்களுள் ஒரு மனிதர் கண் சிமிட்டும் நேரம் கூட உனக்கு மாறு செய்ததில்லை. அவரையும் சேர்த்தே தலைகீழாக புறட்டவா? அழிக்க வேண்டுமா? என்று கேட்க, அதற்கு அல்லாஹ் ஆம்! அவருடன் சேர்த்தே அந்த மக்களை அழித்து விடுவீராக! ஏனெனில் என்னுடைய விஷயத்தில் அந்த மக்கள் வரம்பு மீறியதைக் கண்டு ஒரு தடவை கூட அவர் முகத்தில் அதை வெளிப்படுத்த வில்லை என்று அல்லாஹ் அறிவித்தான். ( நூல்: தப்ரானீ )

எவ்வளவு தூர நோக்கான சிந்தனை? எவ்வளவு தூர நோக்கான சமூக அக்கறை?

நபி அவர்கள் தொழுகையின் ஸஃப்புகளை சரி செய்ய சொல்லி கொடுக்கும் போது அத்தோடு சமுக ஒற்றுமையையும் சேர்த்தே சொன்னார்கள்.

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ إِدْرِيسَ، وَأَبُو مُعَاوِيَةَ، وَوَكِيعٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ التَّيْمِيِّ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ مَنَاكِبَنَا فِي الصَّلَاةِ، وَيَقُولُ: «اسْتَوُوا، وَلَا تَخْتَلِفُوا، فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ، لِيَلِنِي مِنْكُمْ أُولُو الْأَحْلَامِ وَالنُّهَى ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ» قَالَ أَبُو مَسْعُودٍ: «فَأَنْتُمُ الْيَوْمَ أَشَدُّ اخْتِلَافًا»

நபி அவர்கள் தொழுகையில் நிற்கும் போது எங்கள் தோள்புஜங்களை தொட்டு அணி வகுப்பை சரி செய்வார்கள். நேராக நில்லுங்கள்! அணிவகுப்பில் மாறி மாறி நிற்காதீர்கள். உங்களின் இதயங்களை அல்லாஹ் கருத்து முரண்கள் நிறைந்ததாக மாற்றி விடுவான். உங்களில் பருவம் அடைந்தவர்களும், அறிவில் சிறந்தவர்களும் எனக்கு அருகில் (முதல் வரிசையில்) நிற்கட்டும். பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும், பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும், பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும் நிற்கட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி), ( நூல்: முஸ்லிம் )

 

 

وَجَاءَ رَجُلٌ شَابٌّ فَقَالَ أَبْشِرْ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ بِبُشْرَى اللَّهِ لَكَ مِنْ صُحْبَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدَمٍ فِي الْإِسْلَامِ مَا قَدْ عَلِمْتَ ثُمَّ وَلِيتَ فَعَدَلْتَ ثُمَّ شَهَادَةٌ قَالَ وَدِدْتُ أَنَّ ذَلِكَ كَفَافٌ لَا عَلَيَّ وَلَا لِي فَلَمَّا أَدْبَرَ إِذَا إِزَارُهُ يَمَسُّ الْأَرْضَ قَالَ رُدُّوا عَلَيَّ الْغُلَامَ قَالَ يَا ابْنَ أَخِي ارْفَعْ ثَوْبَكَ فَإِنَّهُ أَبْقَى لِثَوْبِكَ وَأَتْقَى لِرَبِّكَ

பஜ்ரு தொழுகையை இமாமாக நின்று தொழவைத்துக் கொண்டிருந்த நீதியின் திரு உருவமான ஹஜ்ரத் உமர்(ரலி) அவர்கள் .

அபூலுஃலுவுல் ஃபைரோஸி என்பவனால் விஷம் தேய்த்த கத்தியினால் குத்தப்பட்டு, மஸ்ஜிதின் ஓரத்தில் வேதனையின் உச்சத்திலும் மரணத்தின் விளிம்பிலும் இருந்த நிலையில்

தன்னை நலம் விசாரிக்க வந்த வாலிபரின் கீழாடை கரண்டைக்கால் கீழ் இருப்பதை கண்டு..அவர் திரும்ப செல்லும்போது அந்நேரத்திலும் சப்தமிட்டு அவரை அழைக்க முடியாமல் அருகிலுல்லவர்களின் துணை கொண்டு அழைத்து அவரிடம் சொன்னார்கள்.

قَالَ يَا ابْنَ أَخِي ارْفَعْ ثَوْبَكَ فَإِنَّهُ أَبْقَى لِثَوْبِكَ وَأَتْقَى لِرَبِّكَ

என் சகோதர மகனே! உன் ஆடையை உயர்த்திக்கொள்! அது உன் ஆடைக்கு மிகுந்த சுகாதரத்தை தருவதுடன் உன் இறைவனிடம் உனக்கு இறையச்சமிகுந்தவன் என்ற பெயரையும் பெற்றுத்தரும்!" என்றார்கள். ( நூல்: புகாரி )

இன்று நாம் ஹுத்ஹுத் பறவை போன்று சிந்தித்து தூர நோக்குடன் செயல்படுகின்றோமா? சிந்தித்து பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.

உயிருடன் இல்லாதவர்கள் மீதும் அக்கறை கொண்ட மேன்மக்கள்..

وقال الإمام أحمد: حدثنا خَلَف بن الوليد، حدثنا إسرائيل، عن أبي إسحاق، عن أبي مَيْسَرة، عن عمر بن الخطاب [رضي الله عنه] أنه قال: لما نزل تحريم الخمر قال: اللهم بَيّن لنا في الخمر بيانًا شافيًا. فنزلت هذه الآية التي في البقرة: { يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ } فَدُعي عمر فقرئت عليه، فقال: اللهم بين لنا في الخمر بيانًا شافيًا. فنزلت الآية التي في سورة النساء: { يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لا تَقْرَبُوا الصَّلاةَ وَأَنْتُمْ سُكَارَى } فكان منادي رسول الله صلى الله عليه وسلم إذا أقام الصلاة نادى: ألا يقربن الصلاة سكران. فدعي عمر فقرئت عليه، فقال: اللهم بين لنا في الخمر بيانًا شافيًا. فنزلت الآية التي في المائدة، فدعي عمر فقرئت عليه فلما بلغ: { فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ } قال عمر: انتهينا.

وهكذا رواه أبو داود، والترمذي، والنسائي من طرق، عن إسرائيل، عن أبي إسحاق عَمْرو بن عبد الله السَّبِيعي وعن أبي ميسرة -واسمه عمرو بن شُرَحبيل الهمداني-عن عُمَر، به.

 

மது குறித்த இறைவனின் வழிகாட்டல் படிப்படியாக இறைவசனங்களாக இறக்கியருளப்பட்ட போது, அவ்வசனங்களை பெருமானார் அவர்கள் உமர் (ரலி) அவர்களை அழைத்து சத்திய ஸஹாபாக்களுக்கு ஓதிக்காட்டச் சொல்வார்களாம்.

அப்பொழுது, உமர் (ரலி) அவர்கள் பெருமானாரின் கட்டளைக்கிணங்க ஸஹாபாக்களிடையே ஓதிக்காட்டி விட்டு யா அல்லாஹ் மது சம்பந்தமாக தெளிவான போதுமான ஓர் கட்டளையை எங்களுக்கு நீ இறக்கியருள வேண்டும்என மனமுருகி பிரார்த்திப்பார்களாம்.

இறுதியாக, அல்லாஹ் மதுவை முற்றிலுமாக தடை செய்து வசனங்களை இறக்கியருளினான்.

இறைநம்பிக்கை கொண்டவர்களே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருக்கத்தக்க ஷைத்தானியச் செயல்களாகும். அவற்றை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள்! அதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம்.

மது மற்றும் சூதாட்டத்தின் வாயிலாக உங்களுக்கிடையில் பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தி அல்லாஹ்வை நினைவு கூர்வதிலிருந்தும், தொழுகையிலிருந்தும் தடுத்துவிடவே ஷைத்தான் விரும்புகின்றான். இதற்குப் பிறகாவது நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்வீர்களா?”

அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் நீங்கள் கட்டுப்படுங்கள். மாறு செய்வதிலிருந்து நீங்கள் விலகியிருங்கள். நீங்கள் புறக்கணித்து விட்டால், நமது தூதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைப்பது மட்டுமே நமது தூதர் மீது கடமையாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.” ( அல்குர்ஆன்: 5:90,91,92 )

இந்த இறைவசனத்தை ஓதியவராக ஓர் அறிவிப்பாளர் மதீனாவின் வீதி வழியாக முழங்கிக் கொண்டே செல்கின்றார்.

நபித்தோழர்களின் செவிகளில் இவ்வசனம் நுழைந்த மாத்திரத்தில் தவிர்த்துக் கொள்கின்றோம் இறைவா!” “விலகிக் கொண்டோம் இறைவா!என்ற முழக்கத்துடன் தங்களின் கரங்களிலும், தங்கள் வீடுகளில் சேமித்தும் வைத்திருந்த மதுபானங்களை கீழே ஊற்றினார்கள்.

அதற்காக பயன்படுத்திய பாத்திரங்களையும், பீப்பாய்களையும் உடைத்தெறிந்தார்கள்.

அத்தோடு அவர்கள் நிறுத்தி இருந்தால் நாம் இங்கே இந்தச் செய்தியை குறிப்பிட்டு இருக்கமாட்டோம்.

ஆனால், அடுத்து ஒரு காரியத்தைச் செய்தார்கள். அது எவ்வளவு மகத்தான சேவை தெரியுமா? எத்துனை மகத்தான தொண்டு தெரியுமா?

ஆம், அல்லாஹ்வின் தூதர் அவர்களின் அருள் நிறைந்த சபையில் நபித்தோழர்களெல்லாம் அவதானித்திருந்த ஒரு பொழுதிலே ஒட்டுமொத்தமாய் ஒரே குரலாய்....

 

وقال الناس: يا رسول الله، ناس قتلوا في سبيل الله، [وناس] ماتوا على سرفهم كانوا يشربون الخمر ويأكلون الميسر، وقد جعله الله رجسًا من عمل الشيطان؟ فأنزل الله تعالى: { لَيْسَ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جُنَاحٌ فِيمَا طَعِمُوا } إلى آخر الآية، وقال النبي صلى الله عليه وسلم: "لو حرم عليهم لتركوه كما تركتم". انفرد به أحمد.

அல்லாஹ்வின் தூதரே! இதோ அல்லாஹ்வின் கட்டளை எங்களுக்கு முன்பாக இறங்கிற்று! அது ஷைத்தானியச் செயல் என்று எங்களுக்கு உணர்த்தப்பட்டு விட்டது. நாங்களும் ரப்பிற்கு கட்டுப்பட்டு அந்த இழிசெயலை முழுமையாக விட்டு விட்டோம்.

ஆனால், இந்த இறைக்கட்டளை இறக்கப்படும் முன், இது ஷைத்தானியச் செயல் என்று தெரியாமல் எத்தனையோ பேர் மது அருந்தியிருக்கின்றார்கள். சூதாடிய பணத்தில் உண்டிருக்கின்றார்கள்.

அவர்கள் பத்ரிலும், உஹதிலும் இன்னும் சில யுத்தங்களிலும் கலந்து கொண்டு ஷஹாதத் வீர மரணமும் அடைந்திருக்கின்றார்கள். அவர்களின் நிலை என்ன? அவர்களை அல்லாஹ் எவ்வாறு நடத்துவான்? “ என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மௌனமாக இருக்கின்றார்கள். சில நொடிப்பொழுதில் நபிகளாருக்கு இறைச் செய்தி வந்து கொண்டிருப்பதை நபித்தோழர்கள் உணர்கின்றார்கள்.

அப்போது நபி அவர்கள்: இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்கள், முன்னர் எதையும் உண்டவர்கள் பற்றி அவர்கள் மீது குற்றமில்லை. ஆனால், இனி தடுக்கப்பட்டவைகளில் இருந்து இறைநம்பிக்கையாளர்கள் விலகியிருக்க வேண்டும்.

மேலும், இறைநம்பிக்கையில் உறுதியாக நிலைத்திருப்பவர்களாகவும், நற்செயல் புரிபவர்களாகவும், இன்னும் எந்தெந்தப் பொருள்களை விட்டு தடுக்கப்பட்டிருக்கின்றனரோ அவற்றிலிருந்து விலகியிருப்பவர்களாகவும், மேலும், இறைக்கட்டளைகளை ஏற்று வாழ்பவர்களாகவும், இன்னும் இறையச்சத்துடன் நன்னடத்தையை மேற்கொள்பவர்களாகவும் திகழ வேண்டும். அல்லாஹ் நன்னடத்தை கொண்டோரை அதிகம் நேசிக்கின்றான்.” ( அல்குர்ஆன்: 5:93 ) எனும் இறைவசனத்தை ஓதிக்காண்பித்த பின்னர் இதே இறைக்கட்டளை அவர்கள் உயிர் வாழ்கிற போதும் இறக்கியருளப்பட்டிருக்குமேயானால் அவர்களும் உங்களைப் போன்றே நடந்து கொண்டிருப்பார்கள்என்று நபி அவர்கள் கூறினார்கள்.

( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர், தஃப்ஸீர் அல்குர்துபீ, முஸ்னத் அஹ்மத் )

சமூக அக்கறை அனைவருக்கும் வேண்டும்...

ஸபா நாட்டு அரசிக்கு ஸுலைமான் (அலை) அவர்கள் இஸ்லாமிய அழைப்பை ஏந்திய கடிதத்தை ஹுத் ஹுத் பறவையிடம் கொடுத்து அனுப்பினார்கள்.

அது கொண்டு சென்று அரசியின் மாளிகையில் கொண்டு போட்டது. அதைப் பிரித்துப் படித்து விட்டு அந்த அரசி உடனடியாக தம் அரசவைக் கூட்டத்தைக் கூட்டி தம் அரசவைப் பிரதானிகளிடம் விவாதிக்க ஆரம்பித்த போது

 

قَالَتْ يَا أَيُّهَا الْمَلَأُ إِنِّي أُلْقِيَ إِلَيَّ كِتَابٌ كَرِيمٌ (29) إِنَّهُ مِنْ سُلَيْمَانَ وَإِنَّهُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ (30) أَلَّا تَعْلُوا عَلَيَّ وَأْتُونِي مُسْلِمِينَ

அரசவைப் பிரமுகர்களே! மிக முக்கியமான, கண்ணியம் நிறைந்த கடிதம் ஒன்று என்னிடம் போடப்பட்டுள்ளது. அது ஸுலைமான் என்பவரிடமிருந்து வந்துள்ளது. மேலும், அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால் அது தொடங்கப்பட்டுள்ளது. எனக்கு எதிராக நீங்கள் ஆணவத்துடன் நடந்து கொள்ளாதீர்கள். முஸ்லிம்களாய் பணிந்தவர்களாய் என்னிடம் வரவேண்டும்எனும் வாசகம் அதில் உள்ளது.

قَالَتْ يَاأَيُّهَا الْمَلَأُ أَفْتُونِي فِي أَمْرِي مَا كُنْتُ قَاطِعَةً أَمْرًا حَتَّى تَشْهَدُونِ (32)

சமுதாயத்தலைவர்களே! என்னுடைய இந்த விவகாரத்தில் நீங்கள் எனக்கு நல்லதொரு ஆலோசனையை வழங்க வேண்டும்!” (அல்குர்ஆன்:27:27-32) என்று கூறினார்.

قَالُوا نَحْنُ أُولُو قُوَّةٍ وَأُولُو بَأْسٍ شَدِيدٍ وَالْأَمْرُ إِلَيْكِ فَانْظُرِي مَاذَا تَأْمُرِينَ (33)

அப்போது அந்த அவையில் இருந்த அமைச்சர்கள் பலர் ஒன்றிணைந்து நாம் வல்லமை மிக்கவர்களாகவும், கடுமையாகப் போரிடக்கூடியவர்களாகவும் இருக்கின்றோம். இதற்கு மேல் இறுதி முடிவெடுப்பது உங்கள் பொறுப்பு. என்ன ஆணையிடுவது என்பதைத் தாங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்!என்றனர்.

இதைக் கேட்டதும் அந்த அரசியார் அவர்கள் மிகவும் சமூக அக்கறையோடு சொன்ன பதில்..

قَالَتْ إِنَّ الْمُلُوكَ إِذَا دَخَلُوا قَرْيَةً أَفْسَدُوهَا وَجَعَلُوا أَعِزَّةَ أَهْلِهَا أَذِلَّةً وَكَذَلِكَ يَفْعَلُونَ (34

அரசர்கள் ஏதேனும் ஒரு நாட்டில் புகுந்தால் அதனை அழித்து விடுவார்கள். மேலும், அங்கு கண்ணியத்துடன் வாழ்பவர்களைக் கேவலப்படுத்தி விடுவார்கள். இதைத் தான் அவர்கள் செய்கின்றார்கள். ( அல்குர்ஆன்: 27: 33, 34 

சமூக அக்கறையுடன் செயல்படுபவரின் அந்தஸ்து!

நபி அவர்கள் சில நபித்தோழர்களை அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள் நான் அவர்களை சேர்ந்தவர் என்று சிறப்பு படுத்தி கூறியுள்ளார்கள். அப்படியான ஒரு அந்தஸ்தை தன் சொந்த குடும்பத்தினரோடு, கிளையாரோடு அக்கறையுடன் நடந்த கொண்ட சமூக மக்களைப் பார்த்து கூறினார்கள்.

إنَّ الأشْعَرِيِّينَ إذا أرْمَلُوا في الغَزْوِ، أوْ قَلَّ طَعامُ عِيالِهِمْ بالمَدِينَةِ، جَمَعُوا ما كانَ عِنْدَهُمْ في ثَوْبٍ واحِدٍ، ثُمَّ اقْتَسَمُوهُ بيْنَهُمْ في إناءٍ واحِدٍ، بالسَّوِيَّةِ، فَهُمْ مِنِّي وأنا منهمْ. خلاصة حكم المحدث : [صحيح]

الراوي : أبو موسى الأشعري | المحدث : مسلم | المصدر : صحيح مسلم

 

அஷ்அரீ குலத்தினர் போரின்போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்து விட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு (இருப்பு) குறைந்து போய்விட்டால் தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுக்கிடையே அதைப் பங்கிட்டுக் கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன் என நபி அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி, அபூமூஸா (ரலி) )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் சமூக அக்கறையுடன் வாழச் செய்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment