அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 24.
சமய நல்லிணக்கம்
பேணுவோம்!!
23 –ஆவது நோன்பை
நிறைவு செய்து,
24 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு
அடுத்த நோன்பு நோற்பதற்காக எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும்
கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க,
வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக
நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!
இன்றைய நாளின்
தராவீஹ் தொழுகையில் அர் மும்தஹினா அத்தியாயம் முதல் அல் முல்க் வரையிலான 08 அத்தியாயங்கள்
ஓதப்பட்டிருக்கின்றது.
இன்றைய தராவீஹ்
தொழுகையில் ஓதப்பட்ட அல் மும்தஹினா அத்தியாயத்தின் 8 வது வசனத்தில் சகோதர சமய மக்களுடனான நல்லுறவு குறித்து இஸ்லாம் வழிகாட்டுவதை
பார்க்க முடிகிறது.
لَا
يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ
يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ إِنَّ
اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ
“தீன் (இறைமார்க்கம்)
தொடர்பான விஷயங்களில் எவர்கள் உங்களுடன் போர் புரியவில்லையோ – உங்களை உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்ற வில்லையோ அவர்களிடம் நீங்கள்
நல்லவிதமாகவும்,
நீதியுடனும் நடப்பதிலிருந்து அல்லாஹ் உங்களைத்
தடுப்பதில்லை. திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான்”. ( அல்குர்ஆன்: 60:8
)
عندنا
آيتان في القرآن تحددان العلاقة بغير المسلمين، وذكرتُ في كتابي "الحلال
والحرام" من قديم: أنها يعتبران بمثابة الدستور، الذي يحدد علاقة المسلمين
بغيرهم.
فالآية
الأولى تقول: {لَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي
الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا
إِلَيْهِمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ}[الممتحنة:8]: الذين لم يقاتلوكم
في الدين، ولم يخرجوكم من ديارهم، لا ينهاكم الله أن تبروهم، فلهم البر ولهم القسط.
والقسط
هو: العدل في المعاملة، أي: تعطيهم حقهم، وتأخذ حقك. أما البر فهو الإحسان، أن
تزيد على الحق، فتعطيهم حقهم وزيادة، وتتنازل عن شيء من حقك. فعبر الله عن هذا
بكلمة (البر) التي هي أعظم ما يعبر به المسلمون عن أقدس الحقوق بعد حق الله: (بر
الوالدين).
{أَنْ تَبَرُّوهُمْ} فبر غير المسلمين لم ينه الله عنه، بل إن
الله ختم الآية بقوله: {إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ}[الممتحنة:8]. فهو
يكره الظالمين، ولا يهدي القوم الظالمين.
فإذا
كان الكفار لم يقاتلونا في الدين، ولم يخرجونا من ديارنا، فلا بأس أن نبرهم ونقسط
إليهم.
உண்மையில் இந்த
வசனங்கள் முஸ்லிம்,
முஸ்லிமல்லாதார் உறவு பற்றி விளக்குகின்ற இஸ்லாமிய சாசனமாக
கொள்ளத்தக்கதென்று அறிஞர் யூஸுப் அல் கர்ளாவி குறிப்பிடும் கருத்து
நோக்தக்தக்கதாகும். மேற்குறித்த அல் குர்ஆன் வசனம் முஸ்லிம் அல்லாதாருக்கு நன்மை
செய்ய வேண்டுமென்பதைக் குறிப்பதற்கு பெற்றோருக்கு நன்மை செய்தல் என்பதனை
குறிக்கின்ற 'பிர்ருன்'
என்ற சொல்லை பயன்படுத்தியிருப்பதைக் காணலாம். மேலும்
நீதியாக நடத்தல் என்ற கருத்தை தரும் 'அத்ல்' என்ற சொல்லை பயன்படுத்தாது அதனை விட ஆழமான பொருளைத் தரும் 'கிஸ்த்'
என்ற பதம் முஸ்லிம்மல்லாதாருடன் நீதமாக நடந்துகொள்ள
வேண்டுமென்பதை குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
(பார்க்க: அல்ஹலால் வல் ஹராம் பில் இஸ்லாம்,யூஸுப் அல்கர்ளாவி, பக்கம் : 279)
சமூக நல்லிணக்கம்
மலர இஸ்லாம் காட்டியுள்ள கோட்பாடுகளை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
1. மனிதர்கள் அனைவரும் சமமானவர்களே!
மனிதர்கள்
அனைவரும் ஒரே இறைவனின் படைப்புகள். ஒரே ஆதிப்பெற்றோரின் வழித்தோன்றல்கள். எனவே
மனிதர்கள் அனைவரும் சமமானவர்களே.
يَاأَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى
وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ
اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ
“மனிதர்களே, நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள்
ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும்
கொத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில் உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம்
வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும் தெரிந்தவனாகவும் இருக்கிறான்.” ( அல்குர்ஆன்: 49:
13 )
الرَّاحِمونَ
يرحَمُهم الرَّحمنُ تبارَك وتعالى؛ ارحَموا مَن في الأرضِ يرحَمْكم مَن في السَّماءِ.
خلاصة
حكم المحدث : حسن، الراوي : عبدالله بن عمرو | المحدث : ابن حجر العسقلاني |
المصدر : الإمتاع لابن حجر | الصفحة أو الرقم : 1/62
| التخريج : أخرجه أبو داود (4941 )،
“மண்ணிலுள்ள மனிதர்களை
நீங்கள் நேசித்தால் விண்ணிலுள்ள இறைவன் உங்களை நேசிப்பான்.” ( நூல்: திர்மிதி)
الخَلقُ
عيالُ اللَّهِ، فأحبُّ الخلقِ إلى اللَّهِ مَن أحسنَ إلى عيالِهِ، الراوي :
عبدالله بن مسعود | المحدث : البيهقي | المصدر : شعب الإيمان
“படைப்புகளனைத்தும்
இறைவனின் குடும்பமே.”
( நூல்: பைஹகி)
எனவே
மதவேறுபாடின்றி எல்லா மனிதர்களையும் நேசிக்கும்படி இஸ்லாம் பணிக்கிறது.
2. பிற மத கடவுளர்களைத் திட்டாதீர்கள்!
وَلَا تَسُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ
(இறைநம்பிக்கை
கொண்டவர்களே) அவர்கள் அல்லாஹ்வை விடுத்து யாரிடம் பிரார்த்தனை புரிகின்றார்களோ
அவர்களை நீங்கள் ஏசாதீர்கள்.” ( அல்குர்ஆன்: 6: 108 )
கருத்துகளை
விமர்சிக்க இஸ்லாம் அனுமதிக்கிறது. ஆனால் இழிவுபடுத்த அனுமதியில்லை. கருத்துகளை
மறுக்கலாம். ஆனால் உணர்வுகளை மதிக்குமாறு கட்டளையிடுகிறது.
3. கொள்கைகளைத் திணிக்காதீர்கள்!
கொள்கைத் திணிப்பு
வன்செயலுக்கு இட்டுச் செல்லும், நல்லிணக்கத்தைக்
குலைக்கும் என்பதால் இஸ்லாம் அதைத் தடை செய்திருக்கிறது.
لَا إِكْرَاهَ فِي الدِّينِ
“(இறைநெறியை மேற்கொள்வதில்)
யாதொரு கட்டாயமோ நிர்பந்தமோ இல்லை.” ( அல்குர்ஆன் 2: 256 )
وَقُلِ الْحَقُّ مِنْ رَبِّكُمْ فَمَنْ شَاءَ فَلْيُؤْمِنْ وَمَنْ
شَاءَ فَلْيَكْفُرْ
“இது (குர்ஆன்)
இறைவனிடமிருந்து வந்துள்ள செய்தியாகும். இனி நம்பிக்கை கொள்ள விரும்புவோர்
நம்பிக்கை கொள்ளட்டும். நிராகரிக்க விரும்புவோர் நிராகரிக்கட்டும்.” ( அல்குர்ஆன்: 18:29)
4. உரிமைகளைப் பறிக்காதீர்!
முஸ்லிமல்லாத
மக்களின் உயிர்,
உடைமை, நம்பிக்கை, கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாக்குமாறு உத்தரவிடுகிறது இஸ்லாம்.
وَعَنْ
صَفْوَانَ بْنِ سُلَيْمٍ عَنْ عِدَّةٍ مِنْ أَبْنَاءِ أَصْحَابِ رَسُولِ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ آبَائِهِمْ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَلَا مَنْ ظَلَمَ مُعَاهِدًا أَوِ
انْتَقَصَهُ أَوْ كَلَّفَهُ فَوْقَ طَاقَتِهِ أَوْ أَخَذَ مِنْهُ شَيْئًا بِغَيْرِ
طِيبِ نَفْسٍ فَأَنَا حَجِيجُهُ يَوْمَ الْقِيَامَةِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ
நபி ﷺ அவர்கள் நவின்றார்கள்: “ஒப்பந்தக்காரர் (இஸ்லாமிய அரசில் உள்ள முஸ்லிம் அல்லாத குடிமகன்) ஒருவனுக்கு
ஒரு முஸ்லிம் அநீதியிழைத்து விட்டாலோ, அவன் உரிமையைப்
பறித்துவிட்டாலோ,
அவன் சக்திக்கு மீறிய சுமைகளை அவன் மீது சுமத்திவிட்டாலோ, அவனுடைய பொருள் எதையேனும் பலவந்தமாக எடுத்துக் கொண்டாலோ, மறுமை நாளில் இறைவனின் நீதிமன்றத்தில் அந்த முஸ்லிமுக்கு எதிராகத்
தொடுக்கப்படும் வழக்கில் அந்த முஸ்லிமல்லாத குடிமகனின் சார்பில் நானே வாதிடுவேன்.” ( நூல்: அபூதாவூத் )
وَعَنْ
عَبْدِاللَّهِ بْنِ عمر رضي الله عنهما، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ قَتَلَ
مُعَاهَدًا لَمْ يَرَحْ رَائِحَةَ الْجَنَّةِ، وَإِنَّ رِيحَهَا لَيُوجَد مِنْ
مَسِيرَةِ أَرْبَعِينَ عَامًا. أَخْرَجَهُ الْبُخَارِيُّ.
“ஒப்பந்தத்தில் உள்ள
ஒருவரை (முஸ்லிமல்லாத குடிமகனை) யராவது கொலை செய்தால் அவர் சுவனத்தின் நறுமணத்தைக்
கூட நுகμமாட்டார்.”
(நூல் புகாரி, அபூதாவூத்)
5. மனிதனை மனிதனாகப் பார்க்க வேண்டும்!
மனிதனை மனிதராக
பார்க்கிற ஒரு பார்வையை பெருமானார் ﷺ அவர்கள் தங்களது தோழர்களுக்கு கற்பித்தார்கள். இதை
அவர்கள் தாம் வாழும் காலத்தில் மறவாமல் கடை பிடித்து வந்தார்கள்.
ولما
ودخل المسلمون أرض فارس بلد المجوس عباد النار، أَنَّه َمَرَّتْ جَنَازَةٌ بقَيْسَ
بْنَ سَعْدٍ وَسَهْلَ بْنَ حُنَيْفٍ كَانَا بِالْقَادِسِيَّةِ، فَقَامَا، فَقِيلَ
لَهُمَا: إِنَّهَا مِنْ أَهْلِ الأَرْضِ. فَقَالا: إِنَّ رَسُولَ اللهِ مَرَّتْ
بِهِ جَنَازَةٌ فَقَامَ، فَقِيلَ: إِنَّهُ يَهُودِيٌّ، فَقَالَ: "أَلَيْسَتْ
نَفْسًا -
முஸ்லிம்கள்
நெருப்பு வணங்கிகள் நிறைந்த பாரசீகத்தை வென்று அந்த நகரத்தில் வாழத் துவங்கிய போது
அந்த மக்கள் அப்போதும் நெருப்பை வணங்கிக் கொண்டு தான் இருந்தார்கள். ஒரு நாள்
காதிஸிய்யா நகரத்தில் நெருப்பு வணங்கி ஒருவர் இறந்து அவருடைய ஜனாஸா எடுத்துச்
செல்லப்பட்டு கைஸ் இப்னு ஸஅத் (ரலி) மற்றும் ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் (ரலி) ஆகியோர்
அமர்ந்திருக்கும் சபையை கடந்து செல்லும் போது இரண்டு பேரும் எழுந்து நின்றார்கள்.
அப்போது, அங்கிருந்த மற்ற முஸ்லிம்கள் இறந்து போனவர் இந்த நகரைச் சேர்ந்தவர். அவர்
நெருப்பு வணங்கி,
அவருக்காகவெல்லாம் நீங்கள் எழுந்து நிற்பீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அவ்விரு நபித்தோழர்களும் "நபி ﷺ அவர்கள் ஒரு நாள் ஒரு ஜனாஸா அவர்களைக் கடந்து சென்ற
போது எழுந்து நின்றார்கள். அப்போது, அருகிலிருந்த
நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! இறந்து போனவர் ஒரு யூதர் என்ற போது, அப்போது நபி ﷺ
அவர்கள் "அவர் ஒரு மனிதர் இல்லையா?" என்று கேட்டார்கள்.
ففي
رواية مسلم عن جابر بن عبد الله قال: "قَامَ النَّبِيُّ وَأَصْحَابُهُ
لِجَنَازَةِ يَهُودِيٍّ حَتَّى تَوَارَت"
ஜாபிர் இப்னு
அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:- நபி ﷺ அவர்களும், நபித்தோழர்களும் ஒரு
யூதருடைய ஜனாஸா கடந்து போகும் போது கால்கள் சோர்ந்து போகும் அளவு
நின்றார்கள்". ( நூல்: முஸ்லிம் )
6. பகைமை கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களின் நேர்வழிக்கும், நலனுக்கும் துஆச்
செய்யுங்கள்!
எதிரிகளைப் பலரும்
சபிப்பார்கள். முஹம்மது நபி ﷺ
அவர்கள் தனது எதிரிகளுக்கும் நேர்வழி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள்.
நபி ﷺ அவர்களது தோழர் அபூ ஹுரைரா ரலி அவர்கள் நபி ﷺ அவர்களிடம் தனது தாய் நபி ﷺ அவர்களைத் திட்டித் தீர்ப்பதாகக் கூறுகின்றார்.
பதிலுக்கு அந்தத்
தாய்க்கு நேர்வழி காட்டுமாறு நபி ﷺ அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.
اللهم
اهدِ أمَّ أبي هريرة
யாஅல்லாஹ்!
அபூஹுரைராவின் தாய்க்கு நேர்வழியை வழங்குவாயாக! என்று நபி ﷺ அவர்கள் துஆ கேட்டார்கள்.
இவ்வாறே
இஸ்லாத்தின் பரம விரோதியான அபூ ஜஹ்லின் ஹிதாயத்திற்காகக் கூட நபி ﷺ அவர்கள் பிரார்த்தித்துள்ளார்கள்
عن
النبي ﷺ هو "اللهم أعز الإسلام بأحب هذين الرجلين إليك: بعمر بن الخطاب أو
بأبي جهل (عمرو بن هشام)"
யாஅல்லாஹ்! இந்த இஸ்லாத்தை
உமர் அல்லது அபூஜஹ்ல் இந்த இருவரில் ஒருவரைக் கொண்டு உயர்வு படுத்துவாயாக!"
என்று நபி ﷺ அவர்கள் துஆ கேட்டார்கள்.
தாயிப் நகரில்
தன்னை ஓட ஓட இரத்தம் வழிந்து மயக்கம் ஏற்படுமளவுக்கு அடித்தவர்களைக் கூட
அழித்துவிடட்டுமா?
என்ற மலக்குகளின் கேள்விக்கு சற்றும் சளைக்காமல் வேண்டாம்
எனக் கூறி இவர்கள் இஸ்லாத்திற்கு வராவிட்டால் கூட பரவாயில்லை இவர்களது
சந்ததிகளாவது சத்திய வழிநடக்க வேண்டும் என்று பிரார்த்தித்த உத்தம நபி தான்
முஹம்மத் நபி ﷺ
அவர்கள்.
மதச் சிறுபான்மையினராக வாழ்ந்தவர்களிடம் நல்லிணக்கம்!
மதீனாவிற்கு மாநபி
ﷺ அவர்கள் ஹிஜ்ரத் பயணம் செய்து வந்த பிறகு பல்வேறு
முன்னெடுப்புகளை செய்தார்கள். அதில் மதச் சிறுபான்மையினராக வாழ்ந்து வந்த முஸ்லிம்
அல்லாதவர்களுடன் தங்களது சமூகத் தொடர்புகளை முறைப்படுத்தத் துவங்கினார்கள்.
அதற்குக் காரணம்,
முழு மனித சமுதாயமும் நிம்மதி, பாதுகாப்பு,
நற்பயன்கள், நல்லுறவுகள் கிடைக்கப்பெற
வேண்டும்.
ஒரே
ஒருமைப்பாட்டுக்குக் கீழ் நாட்டு மக்களை கொண்டுவர வேண்டும் என்பதுதான்.
ஆகவே
சுயநோக்கங்களும்,
இனவெறியும் நிரம்பி இருந்த அக்காலத்தில் எங்கும் காணப்படாத
மன்னித்தல்,
பெருந்தன்மையுடன் நடத்தல், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சட்டங்களை நபி ﷺ அவர்கள் அமைத்தார்கள்.
மதீனாவிற்கு
அருகில் யூதர்கள்தான் முஸ்லிமல்லாதவர்களாக இருந்தார்கள். இவர்கள் முஸ்லிம்களின்
மீது உள்ளத்தில் பகைமையை மறைத்து வைத்திருந்தாலும் வெளிப்படையாக முஸ்லிம்களை
எதிர்க்கவுமில்லை அவர்களிடத்தில் சண்டை, சச்சரவு செய்யவுமில்லை.
எனவே நபி ﷺ அவர்கள் யூதர்களுடன் நன்மையான நல்ல
உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களுக்கு அவர்களது செல்வத்திலும், மதத்திலும் முழு சுதந்திரம் அளித்தார்கள். அவர்களை மதீனாவை விட்டு விரட்ட
வேண்டுமென்றோ அல்லது அவர்களுடைய சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டுமென்றோ அவர்கள்
நாடவுமில்லை அதைச் செய்யவுமில்லை.
إن يهود
بني عوف أمة مع المؤمنين، لليهود دينهم وللمسلمين دينهم مواليهم وأنفسهم، كذلك
لغير بني عوف من اليهود.
٢-
وإن على اليهود نفقتهم، وعلى المسلمين نفقتهم.
٣-
وإن بينهم النصر على من حارب أهل هذه الصحيفة.
٤-
وإن بينهم النصح والنصيحة، والبر دون الإثم.
٥-
وإنه لم يأثم امرؤ بخليفة.
٦-
وإن النصر للمظلوم.
٧-
وإن اليهود يتفقون مع المؤمنين ما داموا محاربين.
٨-
وإن يثرب حرام جوفها لأجل هذه الصحيفة.
٩-
وإنه ما كان بين أهل هذه الصحيفة من حدث أو اشتجار يخاف
فساده فإن مرده إلى الله عز وجل، وإلى محمد رسول الله صلى الله عليه وسلم.
١٠-
وإنه لا تجار قريش ولا من نصرها.
١١-
وإن بينهم النصر على من دهم يثرب.... على كل أناس حصتهم
من جانبهم الذي قبلهم.
١٢-
وإنه لا يحول هذا الكتاب دون ظالم أو آثم «١» .
وبإبرام
هذه المعاهدة صارت المدينة وضواحيها دولة وفاقية، عاصمتها المدينة ورئيسها- إن صح
هذ التعبير- رسول الله صلى الله عليه وسلم،
நபி ﷺ யூதர்களுடன் செய்து கொண்ட
உடன்படிக்கையின் அம்சங்களை இப்போது நாம் பார்ப்போம்:
1) அவ்ஃப்
கிளையினரைச் சேர்ந்த யூதர்கள், முஃமின்களுடன் இணைந்த ஒரே
சமுதாயத்தினராக கருதப்படுவர். இந்த யூதர்களுக்கு அவர்களது மார்க்கத்தில் முழு
உரிமை உண்டு. முஸ்லிம்களுக்கும் அவர்களுடன் நட்பு கொண்டவர்களுக்கும் அவர்களின்
மார்க்கத்தில் முழு சுதந்திரம் உண்டு. இவ்வாறே அவ்ஃப் கிளையினரை சாராத மற்ற
யூதர்களுக்கும் அவர்களது மார்க்கத்தில் முழு சுதந்திரம் உண்டு.
2) யூதர்கள் தங்களின்
செலவுகளுக்குத் தாங்களே பொறுப்பாளிகளாவர். அவ்வாறே முஸ்லிம்களும் தங்களின்
செலவுகளுக்கு தாங்களே பொறுப்பாளிகளாவர்.
3) இந்த உடன்படிக்கை
உடையவர்களிடம் யார் போர் தொடுத்தாலும் அவருக்கு எதிராக முஸ்லிம்களும், யூதர்களும் தங்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்துகொள்ள வேண்டும்.
4) யூதர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலுள்ள தொடர்பு - நலம் நாடுதல், ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்தல், உபகாரம் புரிதல் - என்ற
அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். குற்றம் புரிவதில் துணை போவது கூடாது.
5) தனது நண்பன்
குற்றத்திற்காக மற்றவர் குற்றவாளியாக மாட்டார்.
6) அநீதி
இழைக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
7) பிறருக்கு
எதிரானப் போரில் முஸ்லிம்களுடன் யூதர்கள் கலந்துகொள்ளும் போது யூதர்களும் போர்
செலவுகளில் பங்கெடுக்க வேண்டும்.
8) இவ்வுடன்படிக்கையில்
கலந்து கொள்பவர்கள் மதீனாவில் குழப்பம் விளைவிப்பதோ, விஷமத்தனம் செய்வதோ,
இரத்தம் ஓட்டுவதோ முற்றிலும் தடுக்கப்பட்டதாகும்.
9) இந்த
உடன்படிக்கையில் கலந்து கொண்டவர்களுக்கு மத்தியில் ஆபத்தான சண்டை, சச்சரவுகள் அல்லது ஏதும் பிரச்னைகள் நிகழ்ந்தால் அதற்குரிய முடிவை அல்லாஹ்வும்
அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுமே கூறுவார்கள்.
10) குறைஷிகளுக்கும், குறைஷிகளுக்கு உதவி செய்பவர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கக் கூடாது.
11) யாராவது மதீனாவின்
மீது முற்றுகையிட்டால் அவர்களுக்கெதிராக அனைவரும் போர் புரிய வேண்டும்.
தங்களுக்குள் உதவி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் இருக்கும்
பகுதியைப் பாதுகாக்க வேண்டும்.
12) இந்த உடன்படிக்கை, அநியாயக்காரனையும்,
குற்றவாளியையும் தண்டனையிலிருந்து பாதுகாக்காது.
இந்த
உடன்படிக்கையும்,
ஒப்பந்தமும் உறுதிபெற்றதால் மதீனாவும், மதீனாவைச் சுற்றியுள்ள பகுதிகளும் ஒற்றுமை மிக்க நாடாக மாறி அதற்குத் தலைநகரம்
மதீனாவாக விளங்கியது. அந்த நாட்டின் தலைவராக (இவ்வாறு நாம் கூறுவது சரியாக
இருப்பின்) அல்லாஹ்வின் தூதர் ﷺ
அவர்கள் இருந்தார்கள்.
சமூக நல்லிணக்கத்தின் பெயரில் ஏனைய சமூக மக்களின்
செயல்பாடுகளுக்கு ஒத்துப்போகும் போக்கு ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல.
عن أبي
سعيدٍ الخدري -رضي الله عنه- أنَّ رسول الله -صلى الله عليه وسلم- قال:
"لَتَتَّبِعُنَّ سَنَنَ مَن قَبْلَكُمْ شِبْرًا بشِبْرٍ، وَذِرَاعًا
بذِرَاعٍ، حتَّى لو سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ، قُلْنَا يا رَسُولَ
اللَّهِ: اليَهُودَ، وَالنَّصَارَى قالَ: فَمَنْ"،
“நீங்கள் உங்களுக்கு முன்
சென்றவர்களின் வழி முறைகளை சாணுக்கு சாண், முழத்துக்கு முழம்
பின்பற்றுவீர்கள் அவர்கள் ஓர் உடும்பு பொந்துக்குள் புகுந்து விட்டால் அவர்களைத்
தொடர்ந்து நீங்களும் புகுந்து விடுவீர்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள்
யூதர்களையும்,
கிறிஸ்தவர்களையுமா குறிப்பீடுகின்றீர்கள்? என்று நாங்கள் கேட்டபோது, வேறு யாரை? என்று அல்லாஹ்வின் தூதர் திருப்பிக் கேட்டார்கள்”. அறிவிப்பவர்: அபூ ஸஈத் (ரலி) அவர்கள்,( நூல்: புகாரி ).
حَدَّثَنَا
عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ، حَدَّثَنَا عَبْدُ
الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ، حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ، عَنْ أَبِي
مُنِيبٍ الْجُرَشِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله
عليه وسلم
مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ "
“எவன் ஒரு கூட்டத்திற்கு
ஒப்பாகச் செயல்படுகின்றானோ அவனும் அந்தக்கூட்டத்தைச் சேர்ந்தவனே” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவுத்).
يَاأَيُّهَا
الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ
الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ (208) فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ
مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ (209)
நம்பிக்கை
கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்,
தெளிவான
அத்தாட்சிகள் உங்களிடம் வந்த பின்னரும் நீங்கள் சருகிவிடுவீர்களானால்- நிச்சயமாக
அல்லாஹ் வலிமை மிக்கவன்;
பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ( அல்குர்ஆன்: 2: 208 )
யூதப்பாதிரியான
அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு நபித்தோழர் ஒருவர்
அளித்த ஒரு விருந்துக்கு சென்றார். அங்கு ஒட்டகை இறைச்சி பரிமாறப்பட்டது. அவரது
முந்தைய மதக்காரர்கள் ஒட்டகை இறைச்சியை வெறுத்தார்கள். அந்தப் பழக்கத்தில் அவரும்
முகத்தில் ஒரு அறுவருப்பைக் காட்டினார். அப்போது அல்லாஹ் இந்த வசனத்தை அருளினான்.
தஃப்ஸீர் இப்னு
கஸீரில் இந்த வசனம் இறக்கியருளப்பட்டதற்கான பின்னணியில் இது இன்னும் விரிவாக
கூறப்படுகிறது:-
وزعم
عكرمة أنها نزلت في نفر ممن أسلم من اليهود وغيرهم، كعبد الله بن سلام، وثعلبة
وأسَد
بن
عُبَيد وطائفة استأذنوا رسول الله صلى الله عليه وسلم في أن يُسْبتوا، وأن يقوموا
بالتوراة ليلا. فأمرهم الله بإقامة شعائر الإسلام والاشتغال بها عما عداها. و
نزلت
هذه الآية في مؤمني أهل الكتاب عبد الله بن سلام النضيري وأصحابه، وذلك أنهم كانوا
يعظمون السبت ويكرهون لحمان الإبل وألبانها بعد ما أسلموا وقالوا: يا رسول الله إن
التوراة كتاب الله فدعنا فلنقم بها في صلاتنا بالليل فأنزل الله تعالى { يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً } (1) أي في
الإسلام، قال مجاهد في أحكام أهل الإسلام وأعمالهم { كَافَّة } أي جميعا، وقيل: ادخلوا
في الإسلام إلى منتهى شرائعه كافين عن المجاوزة إلى غيره، وأصل السلم من الاستسلام
والانقياد، ولذلك قيل للصلح سلم،
இக்ரிமா ரலி
கூறுகிறார்கள்: “சனிக்கிழமையை புனிதமாக கருதவும், இரவு நேரங்களில்
தவ்ராத்தைப் படிக்கவும் யூதர்கள் இருந்து புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அஸத்
இப்னு கஅப்,
உஸைத் இப்னு கஅப், ஸஅத் இப்னு அம்ர் கைஸ்
இப்னு ஸைத் ஆகியோர் அனுமதி கோரினர். அப்போது இந்த வசனம் அருளப்பட்டது”.
இஸ்லாம் கூறும்
நடவடிக்கைகளுக்கு எதிரானவைகளை ஷைத்தானின் வழி கேடுகள் என்றும் இது விசயத்தில்
சருகுதல்களும் சஞ்சலங்களும் தவிர்க்கப்பட வேண்டியவை என்றும் உறுதிபட இந்த வசனம்
பேசுவதை கவனிக்க வேண்டும். ( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் )
சமய நல்லிணக்கம்
பேணுவோம்! சகோதர வாஞ்சையுடன் வாழ்வோம்!!

No comments:
Post a Comment