அருள் மறைச்சாரல்
- தராவீஹ் சிந்தனை 02:-
கடன் இறைவனின்
தொடர்பை துண்டிக்கும்!!
இரண்டாம் நாள்
தராவீஹ் தொழுகையைத் தொழுது முடித்து, முதல் நாள் நோன்பை நிறைவு
செய்து அமர்ந்திருக்கின்ற நம் அனைவரின் நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அங்கீகரித்து அளவிலா நன்மைகளை
வழங்குவானாக! ஆமீன்!
அல்பகரா
அத்தியாயம் ஹிஜ்ராவிற்குப் பின்னர் மதீனாவில் இறக்கியருளப்பட்ட ஓர்
அத்தியாயமாகும். நேற்றும் இன்றும் ஓதி நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இன்று ஓதப்பட்ட
ஒன்னேகால் ஜுஸ்வில் சட்டதிட்டங்கள், சலுகைகள், வணக்க வழிபாடுகள்,
இம்மை மறுமையின் பல்வேறு நிலைகள் மற்றும் தர்மத்தின்
சிறப்புகள் என பல்வேறு விஷயங்கள் இடம் பெற்றுள்ளது.
இறைவனோடும், இறையடியார்களோடும் தொடர்பிலிருக்கிற ஆதாபுகள் குறித்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன்
அதிகம் பேசுகின்ற அத்தியாயம் ஆகும்.
கடன் என்பது மனித
வாழ்வில் அத்தியாவசியமான ஒன்றாக இடம் பெற்றுள்ள ஓர் அம்சமாகும்.
கடன் வாங்கும், கடன் கொடுக்கும் பழக்கம் மனித சமூகம் கூட்டாக வாழத் தொடங்கியதிலிருந்தே
துவங்கியதாக வரலாறுகளில் காணப்படுகின்றது.
நிர்பந்தமான, இக்கட்டான,
அவசியமான சூழ்நிலையில் அகப்பட்ட ஓர் மனிதன் அந்த சூழ்நிலையை
எதிர்கொள்ள சக மனிதர்களிடம் குறிப்பிட்ட ஓர் கால அவகாசத்தை நிர்ணயித்து, பொருளாகவோ அல்லது பணமாகவோ பெற்றுக் கொள்வதற்கு கடன் எனப்படுகின்றது.
இறைநம்பிக்கையாளன்
ஒருவனுக்கு வாழ்க்கையில் இது போன்ற தருணங்கள் ஏற்பட்டால், கடன் வாங்கிக் கொள்ள இஸ்லாமிய மார்க்கமும் அனுமதி வழங்குகின்றது.
ஆனால், அதற்கான எல்லைகளை அவன் கடந்து விடக்கூடாது. அதன் வரம்புகளை அவன் மீறி
விடக்கூடாது.
ஆம்! ஏனைய
விஷயங்களுக்கு வகுத்துத் தந்திருப்பதைப் போன்றே கடன் விஷயத்திலும் இஸ்லாம் அழகிய வழிகாட்டலை
வழங்கியிருக்கின்றது.
தொழுகை, நோன்பு,
ஜகாத், ஹஜ் போன்ற வணக்க
வழிபாடுகளைக் குர்ஆனில் குறிப்பிடும் அல்லாஹ் அவைகளின் எல்லா பரிமாணங்களையும் மிக
விரிவாகக் கூறிட வில்லை.
ஆனால், கடன் குறித்து பேசுகிற போது மிக விரிவாக, தெளிவாக விவரித்துப்
பேசுவதை இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட 2- ஆம்
அத்தியாயத்தின் 282
– ஆம் வசனத்தில் பார்க்கலாம்.
இன்னும், சொல்லப்போனால் அல்குர்ஆனின் 6666 வசனங்களில் மிகப்பெரிய
வசனம் கடன் குறித்துப் பேசுகிற இந்த வசனம் தான்.
یٰۤاَیُّهَا
الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا تَدَایَنْتُمْ بِدَیْنٍ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی
فَاكْتُبُوْهُ وَلْیَكْتُبْ بَّیْنَكُمْ كَاتِبٌ بِالْعَدْلِ ۪
இறைநம்பிக்கை
கொண்டவர்களே! ஒரு குறித்த தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல்
செய்து கொண்டால்,
அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; ( அல்குர்ஆன்: 2:
286 )
மேற்கூறிய
இவ்வசனத்தில் எழுதிக்கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கட்டளை
வார்த்தையில் கூறியிருப்பதால் எழுதிக் கொள்வது கடமை என்கின்றனர் சில அறிஞர்கள்.
கட்டளை வார்த்தையில் அமைந்திருந்தாலும் எழுதிக் கொள்வது நல்லது என்ற அடிப்படையில்
ஆர்வமூட்டும் விதத்தில் சொல்லப்பட்டது தான் என்பது வேறு அறிஞர்களின் கருத்து.
நபி ﷺ அவர்களின் நடைமுறை மற்றும் நபித்தோழர்கள்
காலத்திலிருந்து இன்று வரையுள்ள முஸ்லிம்களின் நடைமுறையையும் வைத்துப் பார்க்கும்
போது எழுதுவது கடமையல்ல என்பதையும் எழுதிக்கொண்டால் மிகவும் நலமாக அமையும்
என்பதற்கான உத்தரவு தான் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து இப்னு
கஸீர் (ரஹ்) அவர்கள் உள்ளிட்ட பிரபல குர்ஆன் விளக்கவுரைகளில் பேசப்பட்டுள்ளது.
அல்லாமா
அஷ்ஷன்கைத்தீ (ரஹ்) அவர்கள் இந்த வசனத்தின் விளக்கத்தில் மேற்கண்ட கருத்து
வேறுபாடுகளையும் ஆதாரங்களையும் கூறியபின் எழுதுகிறார்கள்: “இதுவரை நாம் எடுத்தெழுதியவற்றில், சாட்சியை
ஏற்ப்படுத்துவதும் எழுதிவைப்பதும் ஆர்வமூட்டப்பட்டது தான்; இப்னு ஜரீரும் வேறு சிலரும் கூறுவது போல் அவசியமான கடமை இல்லை என்பதற்கு
தெளிவான ஆதாரமுள்ளது.”
( நூல்: தஃபஸீர் அள்வாஉல் பயான் )
கடன் என்பது
மேற்கூறிய இக்கட்டான சூழ்நிலைகளின் போது வாங்கிய காலம் போய் எடுத்ததற்கெல்லாம்
கடன் வாங்கும் பழக்கம் இன்று பெருகிப் போய் இருக்கின்றது.
வீட்டுக்கடன், கல்விக்கடன்,
விவசாயக் கடன், இரு சக்கர, நான்கு சக்கர வாகனக் கடன், அணியும் ஆடைகள், மின் சாதனப் பொருட்கள்,
சமையல் அறைச் சாதனங்கள் என ஒரு நீண்ட பட்டியலைக் கொண்டது
இந்த கடன்.
ஆடம்பர மோகம், பிறர் போல் வாழ வேண்டும் என்கிற ஆசை எந்த வழியிலாவது வாழ்க்கையில் முன்னேறி
விட வேண்டும் என்கிற வெறி,
வீண் விரயமான செலவுகள் என வாழ்க்கைப் போங்கை மாற்றத்
துவங்கியதன் விளைவு இன்று நடமாடும் நபர்களில் பெரும்பாலானவர்கள் கடனாளிகளாகவே
நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
திருப்பி செலுத்த வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்...
حَدَّثَنَا
عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ الأُوَيْسِىُّ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ
بِلاَلٍ عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ عَنْ أَبِى الْغَيْثِ عَنْ أَبِى هُرَيْرَةَ -
رضى الله عنه - عَنِ النَّبِىِّ - صلى الله عليه وسلم - قَالَ « مَنْ أَخَذَ
أَمْوَالَ النَّاسِ يُرِيدُ أَدَاءَهَا أَدَّى اللَّهُ عَنْهُ ، وَمَنْ أَخَذَ
يُرِيدُ إِتْلاَفَهَا أَتْلَفَهُ اللَّهُ
»
அபூஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “எவன் மக்களின் பணத்தை அல்லது
பொருட்களை திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அவன் சார்பாக அல்லாஹ்வே
திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை ஏமாற்றி
அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான்” என மாநபி ﷺ
அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )
அழகிய முறையில் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்....
حَدَّثَنَا
أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ سَلَمَةَ عَنْ أَبِى سَلَمَةَ عَنْ
أَبِى هُرَيْرَةَ - رضى الله عنه - قَالَ كَانَ لِرَجُلٍ عَلَى النَّبِىِّ - صلى
الله عليه وسلم - سِنٌّ مِنَ الإِبِلِ فَجَاءَهُ يَتَقَاضَاهُ فَقَالَ - صلى الله
عليه وسلم - « أَعْطُوهُ » . فَطَلَبُوا سِنَّهُ ، فَلَمْ يَجِدُوا لَهُ إِلاَّ
سِنًّا فَوْقَهَا . فَقَالَ « أَعْطُوهُ » . فَقَالَ أَوْفَيْتَنِى ، وَفَّى
اللَّهُ بِكَ . قَالَ النَّبِىُّ - صلى الله عليه وسلم - « إِنَّ خِيَارَكُمْ
أَحْسَنُكُمْ قَضَاءً »
அபூஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ﷺ அவர்கள் தாம் கடனாக வாங்கிய ஒரு குறிப்பிட்ட வயதுடைய
ஒட்டகத்தை ஒரு மனிதருக்குத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. ஒரு முறை
அம்மனிதர் தன் ஒட்டகத்தை திருப்பித் தருமாறு கேட்டு நபி ﷺ அவர்களிடம் வந்தார்.
அப்போது, நபித்தோழர்களிடம் “அவருக்கு கொடுத்து விடுங்கள்” என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். தோழர்கள் அவருக்குச் சேர வேண்டிய
சிறு வயதுடைய ஒட்டகத்தைத் தேடினார்கள். ஆனால், அதிக வயதுடைய ஒட்டகம்
தான் அவர்களுக்குக் கிடைத்தது.
நபி ﷺ அவர்கள் ”அதையே அவருக்கு கொடுத்து
விடுங்கள்”
என்று கூறினார்கள். அதற்கு அந்த மனிதர் “நீங்கள் எனக்கு நிறைவாக அளித்தீர்கள்! அல்லாஹ்வும் உங்களுக்கு நிறைவாக
அளிப்பானாக!”
என்று சொன்னார்.
அப்போது, நபி ﷺ அவர்கள் “உங்களில் மிகச் சிறந்தவர், தான் வாங்கிய கடனை அழகிய
முறையில் திருப்பிச் செலுத்துபவரே!” என்று கூறினார்கள். (
புகாரி )
இழுத்தடிப்பு செய்யக்கூடாது...
حَدَّثَنَا
مُسَدَّدٌ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى عَنْ مَعْمَرٍ عَنْ هَمَّامِ بْنِ
مُنَبِّهٍ أَخِى وَهْبِ بْنِ مُنَبِّهٍ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ - رضى
الله عنه - يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - « مَطْلُ
الْغَنِىِّ ظُلْمٌ »
அபூஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “வசதியுள்ளவர் தன் கடனை அடைக்காமல்
கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி தள்ளிப் போடுவது அநியாயமாகும்” என நபி ﷺ அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி
)
கடன் கொடுத்தவருக்கு கேட்கும் உரிமை உண்டு...
حَدَّثَنَا
مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ شُعْبَةَ عَنْ سَلَمَةَ عَنْ أَبِى سَلَمَةَ
عَنْ أَبِى هُرَيْرَةَ - رضى الله عنه - أَتَى النَّبِىَّ - صلى الله عليه وسلم -
رَجُلٌ يَتَقَاضَاهُ فَأَغْلَظَ لَهُ فَهَمَّ بِهِ أَصْحَابُهُ . فَقَالَ «
دَعُوهُ فَإِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالاً
» .
அபூஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நபி ﷺ அவர்களிடம் ஒரு மனிதர், தான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டு வந்தார். அப்போது, அவர் நபி ﷺ
அவர்களிடம் சற்றுக் கடுமையாகப் பேசினார். அங்கே அமர்ந்திருந்த நபித் தோழர்கள்
அவரைத் தண்டிக்க விரும்பினார்கள். அதைப் புரிந்து கொண்ட நபி ﷺ அவர்கள் “அவரை விட்டு விடுங்கள்.
கடன் கொடுத்தவருக்குக் கடுமையாகப் பேச உரிமையுண்டு” என நபி ﷺ அவர்கள் கூறினார்கள். ( நூல்:
முஸ்லிம் )
சுவனத்தை கேள்விக் குறியாக்கும் கடன்...
في حديث
ثوبان رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:- ((من فارق الروحُ
الجسد وهو بريء من ثلاث دخل الجنة: الكبر، والدَّيْن، والغلول))
رواه
الترمذي برقم (1572)، وصححه الألباني في صحيح سنن الترمذي
ஸவ்பான் (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ““எவருடைய உயிர் உடம்பை
விட்டும் பிரியும்போது மூன்று விஷயங்களைவிட்டும் நிரபராதியாகப் பிரிகின்றதோ அவர்
சுவனம் நுழைந்துவிட்டார். (அவை) பெருமையும் மோசடியும் கடனுமாகும்.” என நபி ﷺ அவர்கள் கூறினார்கள். ( நூல்:
திர்மிதீ )
பெருமை, கடன்,
மோசடி என்கிற இந்த மூன்று விஷயங்களும் அது தனிமனிதனோடு
தொடர்புடைய பிரச்சனை மட்டுமல்ல.
அது சக
மனிதர்களோடும் தொடர்புடையது. அவன் மட்டும் பாதிக்கப்படுவான் என்றில்லை அதனால்
அவனைச் சார்ந்துள்ள அத்துனை பேரும் பாதிக்கப்படுவார்கள்.
அதிலும் குறிப்பாக
கடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் நாம் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
பொய் பேசத் தூண்டும் கடன்…
حَدَّثَنَا
أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنِ الزُّهْرِىِّ ح وَحَدَّثَنَا
إِسْمَاعِيلُ قَالَ حَدَّثَنِى أَخِى عَنْ سُلَيْمَانَ عَنْ مُحَمَّدِ بْنِ أَبِى
عَتِيقٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ أَنَّ عَائِشَةَ - رضى الله عنها -
أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - كَانَ يَدْعُو فِى
الصَّلاَةِ وَيَقُولُ « اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ
وَالْمَغْرَمِ » . فَقَالَ لَهُ قَائِلٌ مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ يَا رَسُولَ
اللَّهِ مِنَ الْمَغْرَمِ قَالَ « إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ فَكَذَبَ
وَوَعَدَ فَأَخْلَفَ »
ஆயிஷா (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் தொழுகையில் துஆ செய்யும் போது “இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம்
பாதுகாப்புத் தேடுகின்றேன்”
என்று கூறுவார்கள்.
இதைச் செவியுற்ற
ஒருவர் நபி ﷺ அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடன் படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப்
பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டார்.
அதற்கு, நபி ﷺ அவர்கள் “மனிதன் கடன் படும் போது பொய் பேசுகிறான். வாக்குறுதி தந்து அதற்கு மாறு
செய்கின்றான்”
என்று பதில் அளித்தார்கள். ( நூல்: புகாரி )
கடன் வாங்கியவரின் மண்ணறை நிலை...
عن جابر
بن عبد الله قال : توفي رجل فغسلناه وكفناه وحنطناه ثم أتينا به رسول الله – صلى
الله عليه وسلم – ليصلي عليه ، فقلنا : تصلي عليه ؟ فخطا خطوة ثم قال: "
أعليه دين ؟ " قلنا : ديناران ، فانصرف ، فتحملهما أبو قتادة ، فأتيناه ،
فقال : أبو قتادة : الديناران عليّ ، فقال رسول الله : " قد أوفى الله حقَّ
الغريم وبرئ منهما الميت ؟ قال : نعم ، فصلى عليه ، ثم قال بعد ذلك بيومين :
" ما فعل الديناران ؟
قلت : إنما مات أمس ، قال : فعاد إليه من الغد فقال : قد
قضيتها ، فقال رسول الله : الآن بردت جلدته " رواه أحمد وصححه الحاكم وحسنه
المنذري
ஒரு ஜனாஸா கொண்டு
வரப்பட்டபோது ”இறைத்தூதர் அவர்களே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு 'நபி ﷺ அவர்கள் 'இவர் கடனாளியா?' என்று கேட்டபோது 'ஆம்'
எனக் கூறப்பட்டது. 'இவர் ஏதேனும்விட்டுச்
சென்றிருக்கிறாரோ?'
என்று நபி ﷺ அவர்கள் கேட்டபோது 'இல்லை' என்றனர்.
'இவர் எதையேனும்விட்டுச்
சென்றிருக்கிறாரோ?
என்று நபி ﷺ அவர்கள் கேட்டார்கள். 'இவர் கடனாளியா?
என்று நபி ﷺ அவர்கள் கேட்டபோது 'இரண்டு தங்கக் காசுகள்
கடன் வைத்திருக்கிறார்'
என்று நபித்தோழர்கள் கூறினார்கள்.
நபி ﷺ அவர்கள் 'உங்கள் தோழருக்கு நீங்களே
தொழுகை நடத்துங்கள்'
என்றனர். அப்போது, நடத்துங்கள்' என்றனர். அப்போது அபூ கதாதா (ரலி) 'இவரின் கடனுக்கு நான்
பொறுப்பு;
தொழுகை நடத்துங்கள்' என்று கூறியதும் நபி ﷺ அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்.
பின்னர் இரண்டு
நாட்கள் கழித்து அவரின் கடனை அடைத்து விட்டீரா? என்று என்னிடம்
கேட்டார்கள். நான் “அல்லாஹ்வின் தூதரே! நேற்று தானே இறந்திருக்கின்றார்? என்றேன்.
பின்னர், மறுநாள் நானே மாநபி ﷺ
அவர்களிடம் சென்று “அல்லாஹ்வின் தூதரே! அந்த இரண்டு தீனார் கடனை நான் அடைத்து விட்டேன்” என்றேன். அதற்கு நபி ﷺ
அவர்கள் “இப்போது தான் அவரின் உடல் மண்ணறையில் குளிர்ந்து இருக்கும்” என்று நவின்றார்கள். ( நூல்: அஹ்மத், ஹாக்கிம் )
இறைவனின் முன்பாக குற்றவாளியாக நிற்க வைக்கும் கடன்....
ففي
صحيح مسلم أن رسول الله – صلى الله عليه وسلم:- قام في أصحابه فذكر لهم أن الجهاد
في سبيل الله والإيمان بالله أفضل الأعمال ، فقام رجل فقال : يا رسول الله أرأيت
إن قُتلت في سبيل الله تُكفر عني خطاياي ؟ فقال رسول الله : " نعم ، إن قتلت
في سبيل الله وأنت صابر محتسب مقبل غير مدبر " ، ثم قال رسول الله – صلى الله
عليه وسلم – : " كيف قلت ؟ " ، قال : أرأيت إن قتلت في سبيل الله أتكفر
عني خطاياي ؟ فقال رسول الله : " نعم ، وأنت صابر محتسب مقبل غير مدبر إلا
الدين فإن جبريل عليه السلام قال لي ذلك
"
நபி ﷺ அவர்களிடத்தில் ஒரு தோழர் வருகை தந்து ”அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டால், அது என்னுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக அமையுமா?” எனக் கேட்டார்.
அதற்கு நபி ﷺ அவர்கள் “ஆம். நீ
பொறுமைசாலியாகவும் கூலியை எதிர்பார்க்கக் கூடியவனாகவும் பின்வாங்காமல் முன்னோக்கிச்
சென்று போர் புரியக்கூடியவனாகவும் இருக்க அல்லாஹ்வுடைய பாதையில் கொலை
செய்யப்பட்டால் ( அந்த சிறப்பு உனக்குக் கிடைக்கும் )” என்றார்கள்.
பிறகு நபி ﷺ அவர்கள் மீண்டும் அத்தோழரை அழைத்து, “நீர் எவ்வாறு வினவினீர்?” எனக் கேட்க, அத்தோழரும் முன்பு அவர் கேட்டது போலவே கேள்வியை மீண்டும் கூறினார்.
அதற்கு நபி ﷺ அவர்கள் முன்பு கூறிய அதே பதிலைக் கூறிவிட்டு, “கடனைத் தவிர”
என்று கூறினார்கள். “இதனை நிச்சயமாக ஜிப்ரீல்
இப்போது தான் எனக்குக் கூறிவிட்டுச் சென்றார்” எனப் பகர்ந்தார்கள்.
(முஸ்லிம்)
அல்லாஹ்வுடைய
பாதையில் உயிர்த்தியாகம் செய்தவர்களின் சிறப்புக்கள் தொடர்பாக ஏராளமான செய்திகள்
அல்குர்ஆனிலும்,
நபிமொழிக் கிரந்தங்களிலும் காணக்கிடைக்கின்றது.
எடுத்துக்காட்டாக…
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:
وَلَا
تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا ۚ بَلْ أَحْيَاءٌ
عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ
”(விசுவாசங்கொண்டோரே)
அல்லாஹ்வின் பாதையில் (யுத்தம் செய்து) கொல்லப்பட்டோரை இறந்துவிட்டவர்களென நீங்கள்
நிச்சயமாக எண்ண வேண்டாம். மாறாக, அவர்கள் தங்களின்
இரட்சகனிடத்தில் உயிருள்ளளோராக இருக்கிறார்கள். அவனால் அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.
( ஆலு இம்ரான்: 169)
எனவே, இத்தகைய சிறப்பைப் பெற்ற உயிர்த்தியாகிக்குக் கூட கடன் மன்னிக்கப்பட மாட்டாது
என்றால் கடன் குறித்த விஷயம் எவ்வளவு பாரமானது என்பதை விளங்க வேண்டும்.
قال
رسول الله صلى الله عليه وسلم :- " إن أعظم الذنوب عند الله أن يلقاه بها عبد
بعد الكبائر التي نهى الله عنها أن يموت رجل وعليه دين لا يدع له قضاءً "
رواه أحمد وأبو داود
”அல்லாஹ்விடத்தில் மிகப்
பெரும் பாவமாக கருதப்படுவது எதுவெனில் ஓர் அடியான் அல்லாஹ்வை அவன் தடுத்திருக்கிற
பெரும்பாவங்களோடு சேர்த்து,
வாங்கிய கடனை நிறைவேற்றாமலும், அதை நிறைவேற்றும் அளவிற்கு எதையும் வைக்காமலும் சந்திப்பதாகும்” என்று நபி ﷺ
அவர்கள் கூறினார்கள்.”
( நூல்: அஹ்மத், முஸ்தத்ரக் அல் ஹாக்கிம்
)
கடனாளி இறைவனின் ரஹ்மத்தை விட்டும் தடுத்து
வைக்கப்படுகிறார்...
عن سعدِ
بنِ الأطْوَلِ أنَّ أخاهُ ماتَ وتركَ ثلاثمائةِ درهمٍ وتركَ عيالًا قال فأردتُ أن
أُنفقَها على عيالِهِ فقالَ النَّبيُّ صلَّى اللَّهُ عليهِ وآلِه وسلَّمَ إنَّ
أخاكَ محتبَسٌ بدَينِهِ فاقضِ عنه فقالَ يا رسولَ اللَّهِ قد أدَّيتُ عنهُ إلَّا
دينارَينِ ادَّعتْهُما امرأةٌ وليسَ لها بيِّنةٌ قالَ فأعطِها فإنَّها مُحِقَّةٌ.
ஸஃத் பின்
அல்அத்வால் (ரலி) அவர்களின் சகோதரர் மரணிக்கையில் முன்னூறு திர்ஹமை விட்டுச்
சென்றார். அந்த தொகையை மரணித்தவரின் பிள்ளைகளுக்காக செலவழிக்க வேண்டுமென்று
வைத்திருந்தார் ஸஃத் (ரலி) அவர்களை நோக்கி நபி ﷺ அவர்கள் உன் சகோதரர் அவர் வாங்கிய கடனால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
எனவே அவருக்காக அதனை அடைத்து விடு! என்றார்கள். அதற்கவர் அல்லாஹ்வின் தூதரே!
அவருடைய கடனெல்லாம் நான் அடைத்து விட்டேன். ஆனால் ஒரு பெண்மணி தனக்கு இரண்டு
தீனார்கள் அவர் கொடுக்க வேண்டுமென்று வாதிட்டார், அவரிடம் ஆதாரம் எதுவுமில்லை என்பதால் நான் கொடுக்கவில்லை என்றார். அதற்க்கு
நபி ﷺ அவர்கள் அப்பெண் உண்மைதான் சொல்கிறார் அந்தக் கடனையும்
அடைத்து விடு! என்றார்கள். ( நூல்கள்: அஹ்மத், இப்னுமாஜா )
இக்கடன் விஷயமானது
நபி ﷺ அவர்கள் அதிகம் பாதுகாப்புத் தேடிய ஓர் அம்சமாக உள்ளது.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நபி ﷺ வர்கள் தொழுகையில் பின்வருமாறு பிரார்த்திக்கக்
கூடியவர்களாக இருந்தார்கள்.
اللهُمّ
إنِّي أعُوْذُ بِكَ مِنَ المَأثَمِ وَالمَغْرَمِ
பொருள்:
அல்லாஹ்வே! நிச்சயமாக நான் தீமை செய்யும் விடயம் மற்றும் கடன் ஆகியவற்றை விட்டும்
உன்னிடத்தில் பாதுகாவல் தேடுகின்றேன்.
அப்போது ஒரு
தோழர்: அல்லாஹ்வின் தூதரே! கடனில் இருந்து அதிகமாகப் பாதுகாவல் தேடுகின்றீர்களே?! என்று வியப்புடன் வினவ,
அதற்கு நபி ﷺ அவர்கள்: நிச்சயமாக மனிதன் கடன் பெற்றால், பேசும் போது பொய் பேசுவான். மற்றும், வாக்களிக்கும் போது
அதற்கு மாறு செய்வான்”
எனக் கூறினார்கள். (புகாரி)
அனஸ் (ரழி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நான் நபி ﷺ அவர்களுக்குப் பணிவிடை செய்யக்கூடியவனாக இருந்தேன்.
அவர்களிடத்தில் நான் வரும்போதெல்லாம் அதிகமாகச் செவிமடுக்கும் பிரார்த்தனையாவது:
اللهُمَّ
إنِّيْ أعُوْذُ بِكَ مِنَ الهَمّ وَالحَزَن وَالعَجْز وَالكَسَل وَالبُخلِ
وَالجُبْن وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَال
பொருள்:
அல்லாஹ்வே! நிச்சயமாக நான் வருங்காலத்துடன் தொடர்புடைய கவலை, சென்ற காலத்துடன் தொடர்புடைய கவலை, இயலாமை, சோம்பேறித்தனம்,
உலோபித்தனம், கோலைத்தனம், கடன்சுமை மற்றும் மனிதர்களின் மிகைப்பு ஆகியவற்றை விட்டும் உன்னிடத்தில்
பாதுகாவல் தேடுகின்றேன்.”
( நூல்: புகாரி )
ஒரு முறை அடிமை
உரிமைச் சீட்டு எழுதப்பட்ட ஓர் அடிமை அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் வந்து: “நிச்சயமாக என்டைய உரிமைச் சீட்டை நிறைவேற்றும் விடையத்தில் இயலாமைப்பட்டுள்ளேன், எனக்கு சற்று உதவி புரியுங்கள்!” என்று கேட்டுக் கொண்டார்.
அதற்கு அலி (ரழி) அவர்கள்: “அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எனக்குக்
கற்றுத்தந்த சில வார்த்தைகளை நானும் உனக்குக் கற்றுத் தரட்டுமா? எனக் கேட்டுவிட்டு,
“உன்மீது ஸீர் என்ற மலையைப் போன்றளவு கடன் இருந்தாலும்
அல்லாஹ் அதனை உன்னைவிட்டும் நீக்கிவிடுவான்.” என்று கூறி பின்வரும்
பிரார்த்தனையைக் கற்றுக் கொடுத்தார்கள்.
اللَّهُمَّ
اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
பொருள்:
அல்லாஹ்வே! உன்னுடைய ஹராத்தைவிட்டும் உன்னுடைய ஹலாலைக் கொண்டு என்னைப்
போதுமாக்குவாயாக! மேலும்,
உன்னைத் தவிர்ந்தவற்றை விட்டும் உன்னுடைய சிறப்பைக் கொண்டு
என்னைத் தேவையற்றவனாக்குவாயாக! ( நூல்: திர்மிதி )
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இறைவனின்
தொடர்பை விட்டும் நம்மை துண்டிக்கும் கடன் விஷயத்தில் இருந்து நம் அனைவரையும் பாதுகாப்பானாக!
ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

மாஷா அல்லாஹ் அருமை
ReplyDelete