மனசாட்சி - தடம்
புரள்வதில் இருந்து காக்கும் கேடயம்!
சர்வதேச மனசாட்சி
தினம் (International
Day of Conscience) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 5 அன்று கொண்டாடப்படுகிறது.
மனசாட்சி என்றால்
என்ன என்பது குறித்துக் கொஞ்சம் சிந்தித்திப் பார்த்தோமேயானால் மனசாட்சி என்பது
தன்னுடைய செயல்கள் சரியானதா? அல்லது தவறானதா? என்பதை அடையாளம் காணும் மனதின் குரல் ஆகும்.
இன்றைய உலகில்
எல்லா இடங்களிலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.
தேர்வறைகளிலும், தேர்தல் நேரங்களிலும் கண்காணிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. வணிக வளாகங்கள், அடுக்குமாடி கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள்
போன்றவற்றில் தற்காலங்களில் கண்காணிப்பு கேமரா இல்லாத இடமே இல்லை என்று சொல்லலாம்.
குற்றங்களை தடுக்கவும்,
நடந்த குற்றங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும்
கண்காணிப்பு கேமராக்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. இந்நிலையில், ’கண்காணிப்பு’
என்பது நம் சொந்த வாழ்விலும், பொதுவாழ்விலும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
அந்த வகையில் நமது
தவறு செய்யும் ஆர்வத்திற்கு தொடக்கத்திலேயே தடை போடுகிற ’சுய கண்காணிப்பு’
கேமரா, மனதின் குரல் தான் இந்த
மனசாட்சி என்று சொன்னால் அது மிகையாகாது.
நாம் ஒரு செயலைச்
செய்யத் துவங்கும்போது,
நமக்குள் கோழைத்தனம் இருந்தால், நம் உள்மனக்குரல் இது ஆபத்தில்லையா? என்ற கேள்வியைக் கேட்கும், நம் தர்க்கவாதமோ,
இதில் பயனுண்டா? என சிந்திக்கும். சுயநலமோ
கொஞ்சம் மேலே போய்,
இதில் புகழுண்டா? என சிந்திக்கும். ஆனால், மனசாட்சி மட்டுதான்,
இது நியாயமா? என்று நம்மையே
நீதிபதியாக்கி அந்த செயலை செய்யவோ அல்லது விடவோ தீர்மானிக்க வைக்கும் மகத்தான
வல்லமை தான் மனசாட்சி ஆகும்.
தன்நெஞ் சறிவது
பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும் என்றான் வள்ளுவன்.
மனசாட்சிக்கு எதிராகப்
பொய் சொல்லக்கூடாது;
அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத்
தண்டிக்கும் என்பதாக நம்மை எச்சரிக்கிறது இந்த குறல்.
மனசாட்சி என்பது
மனிதன் படைக்கப்பட்ட நாள் முதலே இருந்து வருகிறது என்கிறது இஸ்லாம்.
தடுக்கப்பட்டக்
கனியை உண்ட முதல் மனிதர் ஆதம் அலை அவர்களும், ஹவ்வா அலை அவர்களும் அதை
தவறென உணர்ந்ததால்தான்,
அவர்களின் மனசாட்சி அதனை சுட்டிக்காட்டியதால்தான், மரங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு சுவனத்து மர இலைகளால் வெட்கத்தலங்களை
மூடிக் கொண்டார்கள்.
فَدَلّٰىهُمَا
بِغُرُوْرٍ فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْاٰتُهُمَا وَطَفِقَا
یَخْصِفٰنِ عَلَیْهِمَا مِنْ وَّرَقِ الْجَنَّةِ وَنَادٰىهُمَا رَبُّهُمَاۤ اَلَمْ
اَنْهَكُمَا عَنْ تِلْكُمَا الشَّجَرَةِ وَاَقُلْ لَّكُمَاۤ اِنَّ الشَّیْطٰنَ
لَكُمَا عَدُوٌّ مُّبِیْنٌ
இவ்வாறு, அவன் (ஷைத்தான்) அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள்
நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை
(அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு
வெளியாயிற்று;
அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு: “உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு
சொல்லவில்லையா?”
என்று கேட்டான். ( அல்குர்ஆன்: 7: 22 )
யாஸீன், அத்தியாயத்தின் 22 முதல் 27 வசனங்கள், அஸ்
ஸாஃப்ஃபாத் அத்தியாயத்தின் 51 முதல் 61 வசனங்கள் ஆகியவற்றின் ஊடாக இறைவசனங்களின்
மூலம் மனசாட்சி எனும் மாபெரும் அருட்கொடையை அல்லாஹ் மனித சமூகத்திற்கு
வழங்கியிருப்பதை அல்லாஹ் உணர்த்திக்காட்டுகின்றான்.
நாம் ஒரு பாவமான காரியத்தை செய்து விட்ட பிறகு நம்மை உறங்க
விடாமல் சதாவும் துரத்திக் கொண்டே இருக்கும் உணர்வு.
நாம் ஒரு நன்மையான காரியத்தை செய்ய நினைத்து செய்யாமல்
போகிற போது அதைக் குறித்து வருத்தப்படுகிற உணர்வு.
எல்லா ஆற்றலும் இருந்தும் சமூகத்தில் யாரோ ஒரு நல்ல
மனிதருக்கு நிகழ்கிற ஒரு நிகழ்வில் அவருக்கு உதவிட முடியாமல் போகிற போது ஏற்படுகிற
குற்ற உணர்வு.
இப்படி நம் உள்ளிருந்து நம்மை அழவும், எழவும் தூண்டுகிற ஓர்
அபாரமான அருட்கொடை தான் மனசாட்சி.
மேலே யாஸீன் சூராவின் வசனங்களில் வாயிலாக இறை மன்னிப்பையும், சுவனத்து சோபனத்தையும்
பெற்ற ஓர் இளைஞரின் தம் சமூகத்தை நோக்கிய உள உணர்வைத் தான் அல்லாஹ்
குறிப்பிடுகின்றான்.
அஸ்ஸாஃப்ஃபாத் அத்தியாயத்தின் 51 முதல் 61 வசனங்களின்
வாயிலாக தம் நண்பர் ஒருவரின் மறுமை நிலை கண்டு மருகி, உருகி உணர்வுகளை
வெளிப்படுத்துகிற ஒருவரின் உளக்குமுறலைத் தான் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
இந்த மனசாட்சி நம்முள் சரியாக செயல் படுகிற வரை நாம்
நேர்வழியிலும், சுவனப்பாதையிலும் பயணிப்போம்.
எனவே, அல்லாஹ் மனசாட்சி என்கிற உணர்வை மாபெரும் அருட்கொடையாகத்
தந்து மனித சமூகத்தை அழிவிலிருந்தும், இழி நரகிலிருந்தும்
காக்கின்றான்.
وَنَفْسٍ وَمَا سَوَّاهَا
(7) فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا (8) قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا (9)
وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا (10)
“மனித ஆன்மாவின் மீதும், அதனைச் செம்மைப்படுத்தி பின்னர், அதன் தீமையையும்,
தூய்மையையும் அதனுடைய உள்ளுணர்வில் (மனசாட்சியில்) வைத்தவன் மீது
சத்தியமாக!
திண்ணமாக! (மனசாட்சியைப் பயன்படுத்தி) மனதைத்
தூய்மைபடுத்தியவன் வெற்றி பெற்றுவிட்டான். மேலும், (மனசாட்சியை மதிக்காமல்) மனதை நசுக்கியவன்
தோற்று விட்டான்!.” ( அல்குர்ஆன்: 91: 7 – 10 )
عَنْ وَابِصَةَ بۡنِ مَعْبَدٍ الْأَسَدِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّهُ عَلَيْهِ وَسَلَّهُ تَسْأَلُ عَنْ الْبِرِّ
وَالْإِثْمِ قُلْتُ نَعَمۡ قَالَ فَجَمَعَ أَصَابِعَهُ فَضَرَبَ بِهَا صَدْرَالَ
وَقَا صَدْرَالَ وَقَالَ صَدْرَالَ نَفْسَكَ اسْتَفْتِ قَلْبَكَ يَا وَابِصَةُ
ثَلَاثًا الْبِرُّ مَا اطْمَأَنَّتْ إِلَيْهِ النَّفْسُ وَاطْمَأَنَّتْ
وَاطْمَأَنَ وَالْإِثْمُ مَا حَاكَ فِي النَّفْسِ وَتَرَدَّدَ فِي الصَّدْرِ
وَإِنْ أَفْتَاكَ النَّاسُ وَأَفْتَوْكَ. خلاصة حكم المحدث : [حسن كما قال في
المقدمة]، الراوي : وابصة بن معبد الأسدي | المحدث : ابن حجر العسقلاني | المصدر :
هداية الرواة | الصفحة أو الرقم : 3/135 | التخريج : أخرجه أحمد (17999)، والدارمي
(2533)، وأبو يعلى (1586) باختلاف يسير.
வாபிஸா இப்னு
ம(ஃ)அபத் (ரலி) அறிவித்தார்:- அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் என்னிடம், “ நன்மையையும்
பாவத்தையும் பற்றிக் கேட்க வந்திருக்கிறாயா ?” என்று
கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். அப்போது, நபி ﷺ அவர்கள் தமது முஷ்டியை இறுக்கி, தமது மார்பில் அடித்துக்கொண்டு, “ வாபிஸாவே, அதை உன் (ஆன்மாவையும் இதயத்தையும் கலந்தாலோசி) மனசாட்சயிடமே கேட்பீராக!. நன்மை
என்பது உன் ஆன்மாவையும் இதயத்தையும் தேற்றுவதாகும். பாவம் என்பது உன் ஆன்மாவை
அலைபாயச் செய்து,
உன் நெஞ்சில் பதற்றத்தை உண்டாக்குவதாகும்; மக்கள் தங்கள் தீர்ப்புகளின் ஊடாக அதை மீண்டும் மீண்டும் அங்கீகரித்தாலும் கூட, ” என்று கூறினார்கள். ( நூல்: சுனன் அல்-தாரமி 2533, தரம்: இப்னு ஹஜரின் கூற்றுப்படி ஹசன் (நடுத்தரமானது)
عن أبي
ثعلبة قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي بِمَا يَحِلُّ لِي وَيُحَرَّمُ
عَلَّيَلَّيَّمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبِرُّ مَا سَكَنَتْ
إِلَيْهِ النَّفْسُ وَاطْمَأَنَّ إِلَيْهِ الْقَلْبُ وَالْهِ تَسْكُنْ إِلَيْهِ
النَّفْسُ وَلَمْ يَطْمَئِنَّ إِلَيْهِ الْقَلْبُ وَإِنْ أَفْتَاكَ الْمُفْتُونَ
அபூ ஸ(ஃ)அலபா
(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: நான், நபி ﷺ அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே!
எனக்கு எது அனுமதிக்கப்பட்டது?, எது அனுமதிக்கப்படாதது?" என்று கூறுங்கள்”
என்று கேட்டேன்.
அதற்கு நபி ﷺ அவர்கள், “ நன்மை என்பது
ஆன்மாவின் அமைதியும்,
இதயத்தின் மன அமைதியும் ஆகும். பாவம் என்பது ஆன்மாவின்
அமைதியற்றது;
அது நீதிபதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், மனசாட்சி அதை ஏற்றுக் கொள்ளாது” என்று கூறினார்கள்.( நூல்: முஸ்னத் அஹ்மத் 17742
), தரம்: அல்-அர்னாஊத் அவர்களின் படி ஸஹீஹ் (நம்பகமானது)
இந்த நபிமொழிக்கு
விளக்கம் தருகிற அறிஞர்கள் “ஒவ்வொரு முஃமினின் இதயத்திலும், நம்பிக்கையைத் தூண்டி அச்சத்தை உண்டாக்கி, கட்டளையிட்டும் தடுத்தும்
வருகிற ஒரு போதகர் (மனசாட்சி) இருக்கிறார். இந்தக் கட்டளையிடுதலும் தடுத்தலும், குர்ஆனின் கட்டளைகள் மற்றும் தடுத்தல்களின் அடிப்படையில் முஃமினின் இதயத்தில்
நிகழ்கின்றன. எனவே,
அவற்றுள் ஒவ்வொன்றும் மற்றொன்றை வலுப்படுத்துகிறது.” ( நூல்: மஜ்மூஉ அல் ஃபதாவா 10/475 )
عَنْ
أَبِي أُمَامَةَ أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّهُ عَلَيْهِ وَسَلَّهُ قَالَ إِذَا سَرَّتْكَ حَسَنَتُكَ وَسَاءَتْكَ
سَيِّئَتُكَ فَأَنْتَ مُؤْمِنٌ قَالَ يَا رَسُولَ اللَّهِ فَمَا الْإِثْم حَاكَ
فِي نَفْسِكَ شَيْءٌ فَدَعْهُ.، 22166 مسند أحمد بن حنبل
36/497 المحدث شعيب الأرناؤوط خلاصة حكم المحدث صحيح في تخريج المسند
لشعيب
அபூ உமாமா (ரலி)
அவர்கள் அறிவித்தார்கள்: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களிடம், “ஈமான் என்றால்
என்ன?” என்று கேட்டார். அதற்கு நபி ﷺ அவர்கள், “ நீங்கள் உங்கள்
நற்செயல்களால் மகிழ்ச்சியடைந்து, உங்கள் தீய செயல்களால்
வருந்தினால்,
நீங்கள் ஒரு முஃமின் (நம்பிக்கையாளர்) ஆகிறீர்கள் ” என்று கூறினார்கள். அந்த மனிதர், “அல்லாஹ்வின் தூதரே, பாவம் என்றால் என்ன?”
என்று கேட்டார். அதற்கு நபி ﷺ அவர்கள், “ உங்கள் உள்ளத்தில்
ஏதேனும் தடுமாற்றத்தைக் கண்டால், நீங்கள் அதை விட்டுவிட
வேண்டும் ”
என்று கூறினார்கள். ( நூல்: முஸ்னத் அஹ்மத் 22166 ), தரம்: அல்-அர்னாஊத் அவர்களின் படி ஸஹீஹ் (நம்பகமானது).
உயிர் இருக்கும் வரை ஆதிக்கம் செலுத்தும் அபார ஆற்றல்
கொண்டது மனசாட்சி...
لم يمض على ذلك وقت طويل حتّى أتى عمر بن الخطاب ـ رضي الله عنه ـ ديار الشام يتفقد أحوالها،
فلما نزل بحمص لقيه أهلها للسلام عليه فقال: كيف وجدتم أميركم؟ فشكوه إليه، وذكروا
أربعاً من أفعاله كل واحد منها أعظم من الآخر. قال عمر فجمعت بينه وبينهم، ودعوت
الله ألا يخيب ظني فيه، فقد كنت عظيم الثقة به. فلما أصبحوا عندي هم وأميرهم، قلت
ما تشكون من أميركم؟ قالوا: لا يخرج إلينا حتى يتعالى النهار، فقلت وما تقول في
ذلك يا سعيد؟ فسكت قليلاً، ثم قال: والله إني كنت أكره أن أقول ذلك، أمّا وإنّه لا
بدّ منه، فإنه ليس لأهلي خادم، فأقوم في كل صباح على خدمتهم.
قال عمر: فقلت لهم: وما تشكون منه أيضاً؟ قالوا: إنه لا يجيب أحداً
بليل. قلت: وما تقول في ذلك يا سعيد؟ قال: إني والله كنت أكره أن أعلن هذا
أيضاً. فأنا قد جعلت النهار لهم والليل لله عز وجل. قلت: وما تشكون منه أيضاً؟ قالوا: إنه
لا يخرج إلينا يوماً في الشهر. قلت: وما هذا يا سعيد؟ قال: ليس لدي خادم يا أمير
المؤمنين، وليس عندي ثياب غير التي علي، فأنا أغسلها في الشهر مرة وأنتظرها حتى
تجف، ثم أخرج إليهم في آخر النهار. ثم قلت: وما تشكون منه أيضاً؟! قالوا: تصيبه من
حين إلى آخر غشية فيغيب عمّن في مجلسه، فقلت: وما هذا يا سعيد؟! فقال: شهدت مصرع
خبيب بن عديّ وأنا مشرك، ورأيت قريشاً تقطع جسده وهي تقول: أتحبّ أن يكون محمّدا
مكانك؟ فيقول: (والله ما أحب ّ أن أكون آمناً في أهلي وولدي، وأن محمداً تشوكه
شوكةٌ...)(1) وإني والله ما ذكرت
ذلك اليوم وكيف أني تركت نصرته إلا ظننت أن الله لا يغفر لي..! وأصابتني تلك
الغشية. عند ذلك قال عمر بن الخطاب: الحمد لله الذي لم يخيّب ظني به!
ஸயீத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் குறித்து ஹிம்ஸ் மாகாண
மக்கள் ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்களை அணுகி நான்கு விதமான குற்றச்சாட்டுகளை
முன்வைத்த போது,
1. காலையில் மிக தாமதமாகவே பணிக்கு வருகின்றார்.
2. இரவு நேரங்களில் எங்களின் முறையீடுகளுக்கு செவி
சாய்ப்பதே இல்லை.
3. மாதத்தில் இரு நாட்கள் எங்களைச் சந்திப்பதை முற்றிலும்
தவிர்க்கிறார்.
4. சில நேரங்களில் மயங்கி கீழே விழுந்து விடுகின்றார்.
இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்விடம் இப்படிப்
பிரார்த்தித்தார்களாம் “யாஅல்லாஹ்! உன் பொருப்பை சுமக்கும் விஷயத்தில் இது வரை நான் அவரை
கண்ணியமானவராகவே அறிந்து வைத்திருக்கின்றேன்! என் உள்ளத்தில் இருக்கும் அந்த
உத்தமரின் கண்ணியத்தை எடுத்து விடாதே ரஹ்மானே!” என்று....
விசாரணை மன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்த ஸயீத் மேற்கூறிய
குற்றச்சாட்டுகளுக்கு ஒன்றன் பின் ஒன்றாக விளக்கம் தந்தார்கள்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! முதல்குற்றச்சாட்டிற்கான
விளக்கத்தை நான் கொடுக்கும் முன்பாக, நான் பகிரங்கப்படுத்த விரும்பாத ஒன்று
என்ற போதிலும் மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதை நினைத்து
வருந்துகின்றேன்.
1. எனது வீட்டில் வேலையாட்கள் கிடையாது. எனது குடும்பத்தாருக்கு வீட்டு வேலைகளில் நான் தான் உதவி ஒத்தாசையாக இருப்பேன். தினமும் காலையில் எழுந்ததும்
ரொட்டிக்கு மாவு பிசைந்து, பின்னர் சமைத்து கொடுத்து விட்டு
வருவேன்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இரண்டாம் குற்றச்சாட்டிற்கான
விளக்கத்தை நான் கொடுக்கும் முன்பாக, இதற்கும் பதில் கூறுவதை நான்
விரும்பவில்லை. ஆயினும், நான் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதை
நினைத்து மிகவும் வருந்துகின்றேன்.
2. பகலெல்லாம் இவர்களுக்காக உழைக்கின்றேன்; இரவை படைத்த என் இரட்சகனுக்காக ஒதுக்கி வைத்துள்ளேன்.
மூன்றாம் முறையும் முன்பு போலவே சத்தியமிட்டுக் கூறி தமது
வருத்தத்தை வெளிப்படுத்தினார்கள்.
3. என்னிடத்திலே உடுத்துவதற்கு என்று பிரத்யேகமாக எந்த ஆடையும் கிடையாது. இதோ நான் உடுத்தியிருக்கிற ஓர் ஆடை மட்டும் தான் என்னிடம் உள்ளது. மாதத்தில் ஒரு நாள் சலவை செய்து, காயவைத்து பின்னர் உடுத்த வேண்டியுள்ளது.
அதனால் தான் அன்று என்னால் இவர்களை சந்திக்க முடியாமல் போனது.
நான்காவது குற்றச்சாட்டிற்கு பதில் கூறும் போது ஸயீத் (ரலி)
அவர்கள் மிகவும் உணர்ச்சி வயப்பட்டவர்களாக காணப்பட்டார்கள்.
4. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்முன் ஒரு நாள் அந்த கொடூரக் காட்சியை பார்த்தேன். ஆம்! குபைப் இப்னு அதீ (ரலி) இறைவிரோதிகளால்
கொல்லப்பட்டதை என்னுடைய இந்த இரண்டு கண்களால் பார்த்தேன்.
குறைஷிகள் மிகக் குரூரமாக வெட்டி, ரத்த வெள்ளத்தில் அவரை மிதக்க விட்டிருந்தனர். உயிர்
ஊசலாடிக் கொண்டிருக்கும் அவ்வேளையில், கொடியோர்கள் அவரிடம் இப்படிக்கேட்டனர்: “உமக்கு பதிலாக இப்போது இங்கே முஹம்மத்
இருந்திருக்கலாமே என்று நினைக்கின்றாய் தானே?” என்று...
மரணத்தின் வாசல் வரை வந்து விட்ட பின்னரும் கூட, இந்த கேள்வியைக் கேட்டதும், மிகவும் ஆவேசமடைந்தவர்களாக “முஹம்மத் {ஸல்} அவர்கள் மீது சிறு முள் தைப்பதைக் கூட
என்னால் அனுமதிக்க முடியாது” என்று உரக்கக் கூறினார்கள்.
இந்தப் பதிலை சற்றும் எதிர்பாராத விரோதிகள், உடனடியாக சிலுவையில் அறைந்து கொன்றனர்.
இந்த கொடூரங்களையெல்லாம் பார்த்துக்கொண்டு, ஒரு சாட்சியாக, அவரைக் காப்பாற்ற முடியாமல் வேடிக்கை
பார்த்துக்கொண்டிருந்தேனே! என்ற எண்ணம் எனக்கு மேலோங்கும் போதெல்லாம், அல்லாஹ்வின் தண்டனையை நினைத்து அஞ்சி நடுக்கம் ஏற்பட்டு
மயக்க நிலைக்கு சென்று விடுகின்றேன்.” என பதில் கூறி முடித்தார்கள்.
இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் “அனைத்துப் புகழும் அல்லாஹ்விற்கே! நான்
ஸயீத் (ரலி) அவர் மீது கொண்டிருந்த கண்ணியம் எதுவும் வீண்போகவில்லை” என்று மீண்டும் துஆ
செய்தார்கள். ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்},
பக்கம்:156, குலஃபாவுர் ரஸூல் {ஸல்}, பக்கம்:131. )
நினைத்ததை முடிக்க வைக்கும் ஆற்றல் கொண்டது மனசாட்சி...
மக்கா வெற்றியின் போது நபி {ஸல்} அவர்களின் வருகையையும், முஸ்லிம்களின் எழுச்சியையும் கண்டு பயந்துபோய் இக்ரிமா எமனுக்குச் சென்று விட்டார்.
இக்ரிமா வேறு யாருமல்ல. அபூஜஹ்லின் மகன், இவரும் தந்தையைப் போலவே இஸ்லாத்திற்கெதிராக கடும் பகமை
கொண்டிருந்தார்.
இவரின் மனைவி உம்மு ஹக்கீம் பின்த் ஹாரிஸ் {ரலி} அவர்கள் எமனுக்குச் சென்று அழைத்து வந்தார்கள். பின்பு மாநபியின் சபைக்கு அழைத்து
வந்தார்கள்.
தூரத்தில் இக்ரிமா வருவதைக் கண்ட பெருமானார் {ஸல்} அவர்கள் “வெகு தூரத்திலிருந்து சிரமத்துடன்
பயணித்து வரும் பயணியே, வாருங்கள்! தங்கள் வருகை நல்வரவாகட்டும்!” என்று கூறி தம் அருகே அமர வைத்தார்கள். இக்ரிமா கேட்டார்: இப்போது நான் என்ன
சொல்ல வேண்டும்.? நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: ஷஹாதத் சொல்லுங்கள்.
உடனடியாக ஷஹாதாவை மொழிந்து இக்ரிமா முஸ்லிமானார்கள்.
فقال رسول الله
( لا تسألني
اليوم شيئا أعطيه أحدا إلا أعطيتكه )
فقال عكرمة
فإني أسألك أن
تستغفر لي كل عداوة عاديتكها ، أو مسير وضعت فيه ، أو مقام لقيتك فيه ، أو كلام
قلته في وجهك أو وأنت غائب عنه ، فقال رسول الله - صلى الله عليه وسلم - :( اللهم
اغفر له كل عداوة عادانيها ، وكل مسير سار فيه إلى موضع يريد بذلك المسير إطفاء
نورك ، فاغفر له ما نال مني من عرض في وجهي أو أنا غائب عنه ) ..
فقال عكرمة : رضيت يا رسول الله ، لا أدع نفقة
كنت أنفقها في صدٍ عن سبيل الله إلا أنفقتُ ضعفها في سبيل الله ، ولا قتالا كنت
أقاتل في صد عن سبيل الله إلا أبليت ضعفه في سبيل الله .. ثم اجتهد في القتال حتى
قتِل شهيدا (أي في يوم اليرموك) .. وبعد أن أسلم رد رسول الله - صلى الله عليه
وسلم - امرأته له بذلك النكاح الأول .." .
பின்னர் நபி {ஸல்} அவர்கள் ”இக்ரிமா.. உமக்கு என்ன வேண்டும்
கேளுங்கள். எது கேட்டாலும் தருகிறேன்.” என்றார்கள்.
இக்ரிமா {ரலி} அவர்கள் சொன்னார்கள்: “அல்லாஹ்வின் தூதரே! ஆரம்பமாக என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். உங்கள் மீதான பகைமையால் உங்களை நான் கடுமையாக
ஏசியிருக்கிறேன். போர்களில் கலந்து கொண்டு கண்மூடித்தனமாக நான் நடந்து கொண்டிருக்கிறேன். இவை
அத்தனைக்காகவும் என்னை மன்னித்து விடுங்கள்.”
அப்போது நபி {ஸல்} அவர்கள் தம் இரு கைகளையும் வானை நோக்கி உயர்த்தி “யா அல்லாஹ்! இந்த இக்ரிமா எனக்கு எதிராக
நடத்திய போருக்காக, என்மேல் கொண்டிருந்த பகைமைக்காக, என்னை ஏசியதற்காக, இவை அத்தனைக்காகவும் இவரை மன்னித்துவிடு” என்று துஆ செய்தார்கள்.
இதனைக் கேட்ட இக்ரிமா {ரலி} அவர்கள்: “ அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது
சத்தியமாக! இந்த மார்க்கத்தை தடுப்பதற்காக எவ்வளவு
பொருளாதாரத்தை செலவு செய்தேனோ, அதைவிட பன்மடங்கு இந்த மார்க்கத்தின் உயர்விற்காக நான் செலவு செய்வேன். இந்த
மார்க்கத்திற்கெதிராக எவ்வளவு போர்களில் நான்
கலந்து கொண்டேனோ, அதைவிட பன்மடங்கு இந்த மார்க்கத்தின்
உயர்விற்காக இறைவனின் பாதையில் நான் போர் செய்வேன்.” என முக மலர்ச்சியோடு கூறினார்கள்.
மாநபி {ஸல்} அவர்கள், இக்ரிமா {ரலி} அவர்கள் தம்மை நோக்கி சபைக்குள் நுழைகிற போதே அவரின்
நோக்கத்தை அறிந்து கொண்டு “அபூஜஹ்லின் மகன் இக்ரிமா நம்பிக்கை கொண்டவராக உங்கள்
முன் வருகிறார். அவரைக் கண்டால் அவரின் தந்தையைக் குறித்து குறை கூறி விமர்சனம் செய்யாதீர்கள். இறந்து போன
ஒருவரை ஏசினால் அது உயிருடன் இருப்பவருக்கு
மனவேதனையையே தரும். என்றார்கள்.” நூல்: இஸ்தீஆப், பாகம்:2, பக்கம்:269,270,271.
விளைவு அவர் தனது நெஞ்சில் உள்ள பாரத்தையெல்லாம்
இறக்கிவைத்து விட்டு நபித்தோழர் எனும்
மாணிக்கமாக மாறிச் சென்றார். இஸ்லாத்திற்கெதிராக
அவர் நடந்து கொண்டவைகளைக் கொண்டு அவரின் மனசாட்சி அவரைத் துரத்திக் கொண்டே
இருந்தது.
ஆம்! முஸைலமாவுக்கு எதிராக நடைபெற்ற யமாமா யுத்தத்தில்
வீரமரணம் அடைந்த போது தான் அவரின் மனசாட்சி அமைதி அடைந்தது.
பாவமீட்சியை பெற்றுத் தந்த மனசாட்சி…
كَانَ رَسُولُ اللَّهِ (
صلى الله عليه و آله ) لَمَّا حَاصَرَ بَنِي قُرَيْظَةَ قَالُوا لَهُ ابْعَثْ
إِلَيْنَا أَبَا لُبَابَةَ نَسْتَشِيرُهُ فِي أَمْرِنَا ، فَقَالَ رَسُولُ اللَّهِ
( صلى الله عليه و آله ) : " يَا أَبَا لُبَابَةَ ائْتِ حُلَفَاءَكَ وَ
مَوَالِيَكَ ، فَأَتَاهُمْ .
فَقَالُوا لَهُ : يَا بَا لُبَابَةَ مَا تَرَى ، أَ
نَنْزِلُ عَلَى حُكْمِ رَسُولِ اللَّهِ ( صلى الله عليه و آله ) ؟
فَقَالَ : انْزِلُوا وَ اعْلَمُوا أَنَّ حُكْمَهُ
فِيكُمْ هُوَ الذَّبْحُ ، وَ أَشَارَ إِلَى حَلْقِهِ .
ثُمَّ نَدِمَ عَلَى ذَلِكَ ، فَقَالَ خُنْتُ اللَّهَ وَ
رَسُولَهُ ، وَ نَزَلَ مِنْ حِصْنِهِمْ ، وَ لَمْ يَرْجِعْ إِلَى رَسُولِ اللَّهِ
( صلى الله عليه و آله ) ، وَ مَرَّ إِلَى الْمَسْجِدِ ، وَ شَدَّ فِي عُنُقِهِ
حَبْلًا ثُمَّ شَدَّهُ إِلَى الْأُسْطُوَانَةِ الَّتِي كَانَتْ تُسَمَّى
أُسْطُوَانَةَ التَّوْبَةِ ، فَقَالَ لَا أَحُلُّهُ حَتَّى أَمُوتَ ، أَوْ يَتُوبَ
اللَّهُ عَلَيَّ .
فَبَلَغَ رَسُولَ اللَّهِ ( صلى الله عليه و آله ) ، فَقَالَ
: " أَمَا لَوْ أَتَانَا لَاسْتَغْفَرْنَا اللَّهَ لَهُ ، فَأَمَّا إِذَا
قَصَدَ إِلَى رَبِّهِ فَاللَّهُ أَوْلَى بِهِ " .
وَ كَانَ أَبُو لُبَابَةَ يَصُومُ النَّهَارَ وَ
يَأْكُلُ بِاللَّيْلِ مَا يُمْسِكُ رَمَقَهُ ، وَ كَانَتْ بِنْتُهُ تَأْتِيهِ
بِعَشَائِهِ ، وَ تَحُلُّهُ عِنْدَ قَضَاءِ الْحَاجَةِ .
فَلَمَّا كَانَ بَعْدَ ذَلِكَ وَ رَسُولُ اللَّهِ فِي
بَيْتِ أُمِّ سَلَمَةَ نَزَلَتْ تَوْبَتُهُ .
فَقَالَ : " يَا أُمَّ سَلَمَةَ قَدْ تَابَ اللَّهُ
عَلَى أَبِي لُبَابَةَ "
.
فَقَالَتْ : يَا رَسُولَ اللَّهِ أَ فَأُؤْذِنُهُ
بِذَلِكَ ؟
فَقَالَ : " لَتَفْعَلَنَّ " .
فَأَخْرَجَتْ رَأْسَهَا مِنَ الْحُجْرَةِ ، فَقَالَتْ :
يَا أَبَا لُبَابَةَ أَبْشِرْ قَدْ تَابَ اللَّهُ عَلَيْكَ .
فَقَالَ : الْحَمْدُ لِلَّهِ .
فَوَثَبَ الْمُسْلِمُونَ يَحُلُّونَهُ .
فَقَالَ : لَا وَ اللَّهِ حَتَّى يَحُلَّنِي رَسُولُ
اللَّهِ ( صلى الله عليه و آله ) بِيَدِهِ .
فَجَاءَ رَسُولُ اللَّهِ ( صلى الله عليه و آله ) ،
فَقَالَ : " يَا أَبَا لُبَابَةَ قَدْ تَابَ اللَّهُ عَلَيْكَ تَوْبَةً لَوْ
وُلِدْتَ مِنْ أُمِّكَ يَوْمَكَ هَذَا لَكَفَاكَ " .
فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ أَ فَأَتَصَدَّقُ
بِمَالِي كُلِّهِ ؟
قَالَ : " لَا " .
قَالَ : فَبِثُلُثَيْهِ ؟
قَالَ : " لَا " .
قَالَ : فَبِنِصْفِهِ ؟
قَالَ : " لَا " .
قَالَ : فَبِثُلُثِهِ ؟
قَالَ : " نَعَمْ " .
فَأَنْزَلَ اللَّهُ : ﴿ وَآخَرُونَ اعْتَرَفُواْ بِذُنُوبِهِمْ خَلَطُواْ عَمَلاً
صَالِحًا وَآخَرَ سَيِّئًا عَسَى اللّهُ أَن يَتُوبَ عَلَيْهِمْ إِنَّ اللّهَ
غَفُورٌ رَّحِيمٌ * خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِم
بِهَا وَصَلِّ عَلَيْهِمْ إِنَّ صَلاَتَكَ سَكَنٌ لَّهُمْ وَاللّهُ سَمِيعٌ عَلِيمٌ * أَلَمْ
يَعْلَمُواْ أَنَّ اللّهَ هُوَ يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهِ وَيَأْخُذُ
الصَّدَقَاتِ وَأَنَّ اللّهَ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ ﴾
அபூ லுபாபா (ரலி) அவர்கள் பிரபல ஸஹாபி ஆவார்கள் . "பனூ குறைளா " யுத்தத்தின் போது , பனூ குறைளா வர்க்கத்தினரை நபித்தோழர்கள் முற்றுகையிட்டனர் . வேறு வழி இன்றி
ஆயுதங்களை போட்டு விட்டு சரணடைந்து விட எண்ணினார்கள்.
அறியாமைக் காலத்தில் அபூ லுபாபா (ரலி) அவர்களுக்கும் பனூ
குறைளா வர்க்கத்தினருக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்தது. இதனால் " நாங்கள் சரணடைந்தால் , நபி (ஸல்) அவர்களின் திட்டம் என்னவாக இருக்கும் " என்பதை அக்கூட்டத்தினர்
அழுது கொண்ட கேட்க, அபூ லுபாபா (ரலி) அவர்கள் தமது கையால் கழுத்தின் பக்கம்
சாடை செய்து , அதாவது அவர்களை தலைவெட்டி விடுவதுதான் , என்ற யுத்த ரகசியத்தை எதிராளிகளுக்கு வெளிப்படுத்தினார்கள்.
இது மாபெரும் தவறு என்பதை பின்னர் உணர்ந்தார்கள் அபூ லுபாபா (ரலி) உடனே
மஸ்ஜிதுந் நபவிக்குச் சென்று ஒரு பேரீத்த
மரத்தூணில் தன்னைத் தாமேக் கட்டிக் கொண்டு " என்னுடைய தவ்பா வை இறைவன் ஏற்றுக் கொள்ளாத வரை என்னை
அவிழ்த்துக் கொள்ள மாட்டேன் .
மேலும் நபி (ஸல்) அவர்கள் அவிழ்த்து விட்டால்தான் இவ்விடத்தை விட்டுச் செல்வேன் " என்று உறுதி கொண்டார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்கு இச்செய்தி கிடைத்த போது , "அவர் நேரே என்னிடம் வந்திருந்தால் , நான் அல்லாஹு தஆலாவிடம் அவருக்காக பாவ மன்னிப்புக் கேட்டிருப்பேனே , ஆனால் அவர் நேரடியாக அல்லாஹ்விடம் தவ்பா ஏற்றுக்கொள்ள உறுதி கொண்ட பிறகு நான்
எவ்வாறு அவரை அவிழ்த்து விட முடியும் ?
" என்று கூறிவிட்டார்கள் .
பல நாட்கள் இதே நிலையில் கழிந்தன. தொழும் நேரத்திலும் சுய தேவைகளுக்கும்
அவருடைய மனைவியோ ,மகளோ அவரை அவிழ்த்து விடுவார்கள். தேவை முடிந்த
பின் கட்டி விடுவார்கள் .
இதே நிலையில் பல நாட்கள் வரை உண்ணவோ, அருந்தவோ, ஏதுமின்றி பசியினால் கண்களுக்கு முன்னால் இருள் சூழ்ந்து
கொண்டது .காதடைத்து பலத்த ஓசை மட்டுமே கேட்டது.
பல நாட்களுக்குப் பிறகு நபி (ஸல்) உம்மு ஸல்மா (ரலி -அன்ஹா)
அவர்களின் வீட்டினருக்கும் போது, தஹஜஜ் நேரத்தில் .அபூ லுபாபா (ரலி)
அவர்களின் தவ்பா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இறைவசனம் வேத
வசனமாக " வ ஆகரூன ஃதர Fபூ பிதுனூபிஹிம் " நபி (ஸல்)
அவர்களுக்கு அருளப்பட்டது .
உடனே அபூ லுபாபா (ரலி) அவர்களின் தவ்பா இறைவன்
ஏற்றுக்கொள்ளப்பட்ட நற்செய்தியை கூறி ஸஹாபாக்கள் அவிழ்த்து
விட எண்ணி அவரை அவிழ்க்க முற்படும் போது, " ரசூலுல்லாஹி (ஸல்) அவர்களே நேரடியாக வந்து தங்களுடைய
முபாரக்கான திருங்கரங்களால் அவிழ்த்து விடாதவரை
என்னை அவிழ்த்துக் கொள்வதில் சம்மதம் இல்லை " என உறுதி பட கூறி விட்டார்கள் .
நபி (ஸல்) சுப்ஹூ தொழுகைக்கு தமது இல்லத்தில் இருந்து
வெளியே வந்த போது அவர்களை அவிழ்த்து விட்டார்கள். ( தஃப்ஸீர் இப்னு கஸீர் )
روى عن جابر بن عبد الله رضي الله
عنهما قال
إن فتى من الأنصار يقال له ثعلبة بن عبد الرحمن أسلم ، فكان
يخدم النبي صلى الله عليه وسلم ، بعثه في حاجة ، فمر بباب رجل من الأنصار ، فرأى
امرأة الأنصاري تغتسل ، فكرر النظر إليها ، وخاف أن ينزل الوحي على رسول الله صلى
الله عليه وسلم ، فخرج هاربا على وجهه ، فأتى جبالا بين مكة والمدينة فولجها ،
ففقده رسول الله صلى الله عليه وسلم أربعين يوما ، وهي الأيام التي قالوا ودعه ربه
وقلى ، ثم إن جبريل عليه السلام نزل على رسول الله صلى الله عليه وسلم ، فقال : يا
محمد ! إن ربك يقرأ عليك السلام ويقول : إن الهارب من أمتك بين هذه الجبال يتعوذ
بي من ناري . فقال رسول الله صلى الله عليه وسلم : يا عمر ويا سلمان ! انطلقا
فأتياني بثعلبة بن عبد الرحمن ، فخرجا في أنقاب المدينة ، فلقيهما راع من رعاء
المدينة يقال له : ذفافة . فقال له عمر : يا ذفافة ! هل لك علم بشاب بين هذه الجبال ؟ فقال له ذفافة
لعلك تريد الهارب من جهنم ؟ فقال له عمر : وما علمك أنه هارب من جهنم ؟ قال : لأنه
إذا كان جوف الليل خرج علينا من هذه الجبال واضعا يده على رأسه وهو يقول : يا ليتك
قبضت روحي في الأرواح ، وجسدي في الأجساد ولم تجردني في فصل القضاء . قال عمر :
إياه نريد . قال : فانطلق بهم رفاقة ، فلما كان في جوف الليل خرج عليهم من بين
تلك الجبال واضعا يده على أم رأسه وهو يقول : يا ليتك قبضت روحي في الأرواح ،
وجسدي في الأجساد ، ولم تجردني لفصل القضاء . قال : فعدا عليه عمر فاحتضنه فقال :
الأمان الخلاص من النار . فقال له عمر : أنا عمر بن الخطاب . فقال : يا عمر ! هل علم
رسول الله صلى الله عليه وسلم بذنبي ؟ قال : لا علم لي إلا أنه ذكرك بالأمس فبكى
رسول الله صلى الله عليه وسلم . يا عمر ! لا تدخلني عليه إلا وهو يصلي ، وبلال
يقول : قد قامت الصلاة . قال : أفعل . فأقبلا به إلى المدينة ، فوافقوا رسول الله صلى الله
عليه وسلم وهو في صلاة الغداة ، فبدر عمر وسلمان الصف ، فما سمع قراءة رسول الله
صلى الله عليه وسلم حتى خر مغشيا عليه ، فلما سلم رسول الله صلى الله عليه وسلم
قال : يا عمر ويا سلمان ! ما فعل ثعلبة بن عبد الرحمن ؟ قالا : هو ذا يا رسول الله .
فقام رسول الله صلى الله عليه وسلم قائما فقال : ثعلبة ! قال : لبيك يا رسول الله
! فنظر إليه فقال : ما غيَّبك عني ؟ قال : ذنبي يا رسول الله . قال : أفلا أدلك
على آية تكفر الذنوب والخطايا ؟ قال : بلى يا رسول الله ! قال : قل : اللهم آتنا
في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار . قال : ذنبي أعظم يا رسول الله !
فقال رسول الله صلى الله عليه وسلم : بل كلام الله أعظم . ثم أمره رسول الله صلى
الله عليه وسلم بالانصراف إلى منزله . فمرض ثمانية أيام ، فجاء سلمان إلى رسول
الله صلى الله عليه وسلم فقال : يا رسول الله ! هل لك في ثعلبة نأته لما به ؟ فقال
رسول الله صلى الله عليه وسلم : قوموا بنا إليه . فلما دخل عليه أخذ رسول الله صلى
الله عليه وسلم رأسه فوضعه في حجره ، فأزال رأسه عن حجر رسول الله صلى الله عليه
وسلم . فقال له رسول الله صلى الله عليه وسلم : لم أزلت رأسك عن حجري ؟ قال : إنه
من الذنوب ملآن . قال : ما تجد ؟ قال : أجد مثل دبيب النمل بين جلدي وعظمي . قال : فما
تشتهي ؟ قال : مغفرة ربي . قال : فنزل جبريل عليه السلام على رسول الله صلى
الله عليه وسلم فقال : إن ربك يقرأ عليك السلام ويقول : لو أن عبدي هذا لقيني بقراب
الأرض خطيئة لقيته بقرابها مغفرة . فقال له رسول الله صلى الله عليه وسلم : أفلا
أعلمه ذلك ؟ قال : بلى . فأعلَمَه رسول الله صلى الله عليه وسلم بذلك . فصاح صيحة
فمات . فأمر رسول الله صلى الله عليه وسلم بغسله وكفنه وصلى عليه ، فجعل رسول الله
صلى الله عليه وسلم يمشي على أطراف أنامله ، فقالوا : يا رسول الله ! رأيناك تمشي
على أطراف أناملك ؟ قال : والذي بعثني بالحق نبيا ما قَدِرت أن أضع رجلي على الأرض
من كثرة أجنحة مَن نزل لتشييعه من الملائكة .
رواه أبو نعيم في "حلية الأولياء" (9/329-331) وفي
"معرفة الصحابة" (1/498))
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள்: “நபி {ஸல்} அவர்களுக்கு பணிவிடைகள் செய்த நபித்தோழர்களில், அன்ஸாரிகளைச் சார்ந்த ஸஅலபா இப்னு அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களும் ஒருவர்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அன்றொரு நாள் ஸஅலபா (ரலி)
அவர்களை ஏதோ பணி நிமித்தமாக எங்கோ அனுப்பினார்கள்.
சென்ற ஸஅலபா (ரலி) அவர்கள் மீண்டும் அண்ணலாரின்
சமூகத்திற்கு வரவே இல்லை. அண்ணலாரும் அவர் வருவார். நியமித்த பணியை நிறைவேற்றி
விட்டு இதோ இன்று வந்து விடுவார், நாளை வந்து விடுவார் என எதிர்பார்த்து
காத்து இருந்தார்கள்.
நாட்கள் மட்டும் அடுத்தடுத்து வந்ததே தவிர ஸஅலபா (ரலி)
அவர்கள் இன்னும் வரவில்லை.
ஒரு நாள் இரண்டு நாள் அல்ல,
ஒரு வாரம்
இரண்டு வாரம் அல்ல நாற்பது நாட்கள் நகர்ந்து விட்டது இன்னும் ஸஅலபா வரவில்லை. எங்கு போனார்? என்ன ஆனார்? அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை.
இந்த நிலையில், ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ”அண்ணலாரின் சமூகத்திற்கு வருகை தந்து அல்லாஹ் ஸலாம் சொல்லி அனுப்பியதாகவும், உங்களிடம் உங்களது தோழர் ஒருவர் மக்கா, மதீனாவிற்கு இடையே இருக்கிற மலை முகடு
ஒன்றில் இருந்து அல்லாஹ்விடம் கடந்த நாற்பது நாட்களாக பாவமன்னிப்பையும், நரக ஈடேற்றத்தையும் கேட்டு மன்றாடிக் கொண்டிருக்கிறார் என்கிற செய்தியை சொல்லி
விட்டு வருமாறு என்னை அனுப்பி வைத்திருக்கின்றான்”
என்று கூறி விடை
பெற்றுச் சென்றார்கள்.
உடனே, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இந்த மன்றாட்டத்திற்கு உரியவர்
காணாமல் போன ஸஅலபாவாகத் தான் இருக்கும் என்று தீர்மானித்து விட்டு, உமர் மற்றும் ஸல்மான் (ரலி – அன்ஹுமா) ஆகியோரை அழைத்து ”என்னிடம் ஸஅலபாவைக் கொண்டு வாருங்கள்!” என்று பணித்தார்கள்.
இருவரும் ஸஅலபாவைத் தேடி மக்கா, மதீனாவிற்கு இடையே இருக்கிற மலைப்பகுதியின் அடிவாரத்திற்கு வந்து, அங்கே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த துஃபாஃபா என்கிற இடையனிடம் ஸஅலபா குறித்தும், அவரின் மன்றாட்டம் குறித்தும் கூறி விசாரித்தார்கள்.
அதற்கு, அந்த இடையர் ஆம்! சமீப நாட்களாக இங்கே
வசிக்கிற நாங்கள் “என் ஆன்மாவைக் கைப்பற்றும் ஆற்றல்
கொண்டவனே! என் உடலை மீட்டும் ஆற்றல் பெற்றவனே! நாளை மறுமையில் என்னைத் தண்டித்து
விடாதே! எனக்கு நரகத்தை விட்டும் நீ பாதுகாப்புத் தர வேண்டும்!” என்று ஒருவர் மன்றாடுவதை கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.
நீங்கள் சொன்ன இன்னின்ன அடையாளம் கொண்ட அந்த நபரை நான்
பார்த்திருக்கின்றேன். இதோ இந்த பகுதியில் தான் அவர் இருப்பார். இன்னும் சற்று
நேரத்தில் அவரின் மன்றாட்டம் கேட்கும் என்று கூறினார்.
சற்று நேரம் தாமதித்த பின்னர், மலை முகட்டில் இருந்து ஸஅலபா (ரலி) அவர்களின் மன்றாட்டம் ஒலித்தது. ஒலி வந்த
திசையை நோக்கி இருவரும் நடந்து ஸஅலபா (ரலி) அவர்களை அடைந்து கொண்டனர்.
இருவரையும் பார்த்த ஸஅலபா (ரலி) அவர்கள் மீண்டும்
அழுதார்கள். அப்போது, உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ் உம்மை மன்னிப்பான். உம்மை நரகில் இருந்து பாதுகாப்பான்!” நபி {ஸல்} அவர்கள் உம்முடைய இந்த மன்றாட்ட நிலை
குறித்து கேள்வி பட்டு நேற்று அழுதார்கள். மேலும்,
உம்மை அழைத்து
வருமாறு எங்களிடம் கூறி இங்கே அனுப்பி வைத்திருக்கின்றார்கள்.” வாருங்கள்! ஸஅலபா செல்வோம்” என்றார்கள்.
இது கேட்ட ஸஅலபா (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நான் செய்த பாவம் குறித்து
அறிந்து கொண்டார்களா?” என்று வினவினார். இல்லை என்று உமர் (ரலி)
பதில் பகர்ந்ததும் அப்படியானால், நபி {ஸல்} அவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக்
கொண்டிருக்கும் நேரத்தில் என்னை அழைத்துச் செல்லுங்கள்! பாவியான நான் அண்ணல் நபி {ஸல்} அவர்களை முகம் பார்த்து பேச
வெட்கப்படுகின்றேன்!” என்று கூறினார்கள்.
அவரை அழைத்துக் கொண்டு இருவரும் மஸ்ஜிதுன் நபவீக்கு வந்து
இஷாத் தொழுகையின் இகாமத்தை பிலால் (ரலி) அவர்கள் கூறும் வரை காத்திருந்து பின்னர்
தொழுகை ஆரம்பித்ததும் தொழுகையில் இணைந்து கொண்டனர்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தொழுகையில் அத் தகாஸுர் சூராவை
ஓதினார்கள். முதல் இரு வசனங்களை கேட்ட மாத்திரத்திலேயே ஸஅலபா (ரலி) மயக்கமாகி கீழே
விழுந்து விட்டார்கள்.
தொழுகை முடிந்ததும் உமர் மற்றும் ஸல்மான் (ரலி) இருவரையும்
கண்ட பெருமானார் {ஸல்} அவர்கள் எங்கே ஸஅலபா? என்று கேட்டார்கள்.
இதோ! அல்லாஹ்வின் தூதரே! மயக்கமுற்று கீழே விழுந்து
கிடக்கின்றார் என்றார்கள் இருவரும்.
முகத்தில் தண்ணீர் தெளித்து,
அருகே அமர
வைத்து அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அன்பொழுக “ஸஅலபா! உமக்கு என்ன நேர்ந்து விட்டது? ஏன் இவ்வளவு நாளாக எங்கு சென்றீர்?” என்று கேட்டார்கள்.
”லப்பைக்க யாரஸூலுல்லாஹ்! நான் செய்து
விட்ட ஒரு பாவம் தான் அல்லாஹ்வின் தூதரே! காரணம்”
என்றார் நா
தழுதழுத்தவராக!
”யாஅல்லாஹ்! இவ்வுலகிலகிலும் எனக்கு நீ
சிறந்ததைக் கொடு! மறுமையிலும் சிறந்ததைக் கொடு! மேலும், நரக வேதனையில் இருந்து என்னைக் காத்துவிடு!”
என்று
இறைஞ்சுங்கள்” உமது பாவத்திற்கு பரிகாரமாக அமைந்து
விடும் என்றார்கள் பெருமானார் {ஸல்} அவர்கள்.
இல்லை, அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய பாவம் மிகப்
பெரியது! என்றார் ஸஅலபா (ரலி). தோழரே! அல்லாஹ்வின் வார்த்தை அதை விட மிகப்
பெரியது! இதைக் கூறுங்கள் அல்லாஹ் உம் குற்றங்களை மன்னிப்பான்” என்றார்கள்.
மீண்டும் அவர் முன்பு போல் கூறவே, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மேற்கொண்டு எதுவும் கேட்காமல்
அவரின் வீட்டில் கொண்டு விட்டு வருமாறு தோழர்களிடம் கூறினார்கள்.
வீட்டிற்குச் சென்ற ஸஅலபா இந்தக் கவலையால் நோய்வாய்ப் பட்டு
படுத்த படுக்கையானார். எட்டு நாட்கள் ஆகியும் அவர் பள்ளிக்கு வரவில்லை.
அப்போது, ஸல்மான் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! நாம் சென்று ஸஅலபாவை நலம் விசாரித்து விட்டு வருவோமே! அவர்
எட்டு தினங்களாக பள்ளிக்கும் வரவில்லை. அவர் குறித்து எந்தத் தகவலும் இல்லை” என்றார்கள்.
நபி {ஸல்} அவர்கள் அங்கிருந்த தோழர்களை அழைத்துக்
கொண்டு ஸஅலபா (ரலி) வீட்டிற்கு சென்றார்கள்.
படுத்த படுக்கையாய் கிடக்கிற ஸஅலபாவின் தலையை தங்களது புனித
மடியில் கிடத்தி “ஸஅலபாவே! உமக்கு என்ன? நீர் அப்படி என்ன தான் பாவம் செய்து விட்டீர்?
என்று
கேட்டார்கள்.
அப்போது, ஸஅலபா (ரலி) அவர்கள் “எனக்கு இன்ன வேலையைச் செய்து வருமாறு என்னை நீங்கள் அனுப்பிய போது, அதைச் செய்வதற்காக நான் விரைந்து போய்க்கொண்டிருந்தேன்! மதீனாவின் இன்ன
தெருவைக் கடந்து செல்கிற போது வீட்டின் கொல்லைப் புறத்தில் ஒரு பெண் குளித்துக்
கொண்டிருந்தார்.
நான் என்னையும் அறியாமல் திரும்பத் திரும்ப பார்த்துக்
கொண்டிருந்தேன். பின்பு அது பாவம் எனத் தெரியவே அங்கிருந்து விலகி விட்டேன்.
என்றாலும், அல்லாஹ் என்னுடைய இந்த பாவம் குறித்து, ஏதேனும் இறைவசனத்தை இறக்கி தண்டித்து விடுவானோ என நான் பயந்து மலை
முகட்டுக்குச் சென்று விட்டேன்” என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதரே! இந்த மாபெரும் பாவத்தை அல்லாஹ்
மன்னிப்பானா? என்னையே நான் வெறுக்கின்றேன்! என் உடல்
முழுவதும் புழு பூச்சிகள் ஊர்ந்து செல்வது போல் அருவருப்பாக உணர்கின்றேன் என்றார்
ஸஅலபா.
அப்போது, அங்கே வருகை தந்தார்கள் வானவர் கோமான்
ஜிப்ரயீல் (அலை) அவர்கள். தொடர்ந்து “அல்லாஹ் ஸலாம் சொல்லி அனுப்பியதாகவும், உங்களிடம் என்னுடைய அடியான் பூமி முழுவதும் பாவத்தோடு என்னை நெருங்கி வந்தால், அதே பூமி முழுவதும் மன்னிப்போடு நான் அவனை நெருங்கி வருகின்றேன்” இதோ! இவரின் பாவத்தை அல்லாஹ் மன்னித்து விட்டான்” என்கிற செய்தியை சொல்லி விட்டு வருமாறு என்னை அனுப்பி வைத்திருக்கின்றான்” என்று கூறி விடை பெற்றுச் சென்றார்கள்.
ஸஅலபாவே! உமக்கு ஒரு விஷயத்தை நான் சொலட்டுமா? என்று கூறிவிட்டு அல்லாஹ் உம்மை மன்னித்து விட்டான் என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
இது கேட்ட ஸஅலபா (ரலி) பெரும் சப்தம் ஒன்றை எழுப்பியவாறு
மரணித்து விட்டார்கள். இன்னாலில்லாஹ்…
பின்னர் நபி {ஸல்} அவர்கள் அவருக்கு குளிப்பாட்டுமாறும், கஃபன் செய்யுமாறும் ஆணையிட்டு விட்டு அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தினார்கள்.
அதன் பின்னர், அவரின் ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்ற
நபி {ஸல்} அவர்கள் தங்களின் பெருவிரலால் ஊன்றி, ஊன்றி மிகவும் சிரமப்பட்டு நடந்து சென்றார்கள்.
மண்ணறையில் அடக்கம் செய்து முடித்ததும், நபித்தோழர்கள் இது குறித்து வினவிய போது, அவரின் ஜனாஸாவை மலக்குமார்களில்
லட்சக்கணக்கானோர் பின் தொடர்ந்து வந்தனர். எங்கு நோக்கினும் வானவர்கள் இறக்கைகளையே
நான் கண்டேன். வானவர்களின் இறக்கைகளை மிதித்து விடாதிருக்கவே நான் அவ்வாறு பெரு
விரலால் நடந்து வந்தேன்” என்று பதில் கூறினார்கள். { நூல்: அல் இஸாபா ஃபீ மஅரிஃபதிஸ் ஸஹாபா, ஹுல்யத்துல் அவ்லியா )
அல்லாஹ்விடம் நன்மையின் பால் தூண்டுகிற, தீமையில் இருந்து காக்கிற மனசாட்சியைக் கேட்போம்! மனசாட்சியைக் கொண்டு மகத்தான
வெற்றி பெறுவோம்!!!

No comments:
Post a Comment