மஹர் - மணக்கொடையை மனமுவந்து வழங்குவோம்!!!
முஸ்லிம்
சமூகத்தில் சமீபத்திய காலங்களில் வரதட்சணை வாங்கும்/கொடுக்கும் பழக்கம் வெகுவாக
குறைந்து மணமகளுக்கு மஹர் - மணக்கொடை கொடுத்து திருமணம் முடிக்கும் பழக்கம் பெருகி
வருகிறது.
அதிலும் கடந்த
காலங்களில் ஐநூற்றி ஒரு ரூபாய், ஆயிரத்து ஒரு ரூபாய்
என்று மஹர் கொடுத்து வந்த பழக்கம் மாறிப் போய் 4 கிராமுக்கும் குறையாமல் 100 கிராம் வரை அவரவர்
தகுதிக்கும் வசதிக்கும் ஏற்ப தங்க ஆபரணங்கள் மஹராக வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த சில
நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டாவில் பார்த்த ஒரு தகவல் அடுத்த தலைமுறையினரின் மஹர்
வாங்கும் மற்றும் கொடுக்கும் பழக்கம் என்பது இன்னொரு தளத்திற்கு இஸ்லாத்தின்
தத்துவங்களை எடுத்துச் செல்வதாய் அமைந்திருந்ததை அவதானிக்க முடிகின்றது.
ஈரானைச் சார்ந்த
ஒரு மருத்துவம் படித்த மணமகள் ஒருவர் தமக்கு நிச்சயம் செய்த மருத்துவர் (அறுவை
சிகிச்சை நிபுணர்) மணமகனிடம் 313 ஏழைகளுக்கு இலவசமாக அறுவை
சிகிச்சை செய்வதை மஹராக கேட்டுள்ளார். என்ற இந்த தகவல் உள்ளபடியே மகளிர்க்கு
இஸ்லாம் வழங்கியுள்ள மஹரின் வலிமையை உணர்த்துவதாய் அமைந்ததை உணர முடிந்தது.
இந்த தகவலோடு
வேறேதும் வித்தியாசமான மஹர் பெறப்பட்டுள்ளதா? என்று கூகுள்
தேடுபொறியில் தேடும் போது கேரளாவைச் சேர்ந்த ஒரு மணமகன் தனது கையால் எழுதிய
குர்ஆன் பிரதியை தமது மனைவிக்கு மஹராக கொடுத்த தகவலை பார்க்க நேர்ந்தது.
நியூஸ் 18 தமிழ்,
ஏபிபி நெட்வொர்க் மற்றும் கலைஞர் தொலைக்காட்சி போன்ற
முன்னணி செய்தி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ள தற்போது, சன் தொலைக்காட்சியில் (Sun News) செய்தி வாசிப்பாளராகப்
பணியாற்றி வருகிற சலினா ஹஸ்மா என்ற மணாளி தமது திருமணத்தின் போது தமக்கு மஹராக -
மணக்கொடையாக சில நூல்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை தமக்கு மணமகனாக (மணமகள்
தேர்வு) நிச்சயம் செய்யப்பட்ட ஊடகவியலாளரும், சென்னை ஐஐடியில்
ஆய்வுக்கல்வி மேற்கொண்டு வருபவருமான இல்யாஸ் முஹம்மது மணாளரிடம் வழங்க, அவரும் திருமணத்தன்று 57
நூல்களை மஹராக கொடுத்து (இல்யாஸ் வழங்கிய மஹரில்
திருக்குர்ஆன் தொடர்பான புத்தகங்கள், தந்தை பெரியார் தொடர்பான
புத்தகங்கள்,
கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட புத்தகங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்பி சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாறி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் எழுதிய அமைப்பாய்த் திரள்வோம் என 57 புத்தகங்கள் இடம்பெற்று இருந்தது) திருமணம் செய்தார்" என்ற தகவலையும் காண
முடிந்தது.
பெண்களுக்கு
இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளில் மகத்தான உரிமை மஹர் பெறுகிற உரிமையாகும்.
மணப் பெண்ணே மஹர்
பெறுவதற்கு தகுதியானவர் ஆகிறார். அவரின் அனுமதி இல்லாமல் அதை யாரும் பெற்றுக்
கொள்ள இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பதில் இருந்து மஹரின் மகத்துவத்தை நாம் அறிந்து
கொள்ளலாம்.
மஹர் வழங்குவது அவசியம் ஆகும்...
மஹர் வழங்குவதை நேரடியாக பேசுகிற வசனங்கள் மூன்று.
وَالْمُحْصَنَاتُ مِنَ النِّسَاءِ إِلَّا مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ
كِتَابَ اللَّهِ عَلَيْكُمْ وَأُحِلَّ لَكُمْ مَا وَرَاءَ ذَلِكُمْ أَنْ
تَبْتَغُوا بِأَمْوَالِكُمْ مُحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ فَمَا
اسْتَمْتَعْتُمْ بِهِ مِنْهُنَّ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةً وَلَا جُنَاحَ
عَلَيْكُمْ فِيمَا تَرَاضَيْتُمْ بِهِ مِنْ بَعْدِ الْفَرِيضَةِ إِنَّ اللَّهَ
كَانَ عَلِيمًا حَكِيمًا
உங்கள்
பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய
மணக் கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். ( அல்குர்ஆன்: 4:
24 )
ஏதேனும்
பொருட்களைக் கொடுத்து திருமணம் முடிக்க வேண்டும் என்றும், மணக் கொடைகளை அவசியம் வழங்க வேண்டும் என்றும் இறைவன் கட்டளையிடுகின்றான்.
الْيَوْمَ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ وَطَعَامُ الَّذِينَ أُوتُوا
الْكِتَابَ حِلٌّ لَكُمْ وَطَعَامُكُمْ حِلٌّ لَهُمْ وَالْمُحْصَنَاتُ مِنَ
الْمُؤْمِنَاتِ وَالْمُحْصَنَاتُ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ
قَبْلِكُمْ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ مُحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ
وَلَا مُتَّخِذِي أَخْدَانٍ وَمَنْ يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ
وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ
நம்பிக்கை கொண்ட
கணவனில்லாத பெண்களையும்,
உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்ட கணவனில்லாத
பெண்களையும் வைப்பாட்டிகளாக்கிக் கொள்ளாமலும், விபச்சாரம் செய்யாமலும், கற்புநெறி தவறாமலும் அவர்களுக்குரிய மணக்கொடைகளை வழங்கி மணமுடிப்பது
உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
(
அல்குர்ஆன்: 5: 5 )
கணவனில்லாத/விவாகரத்தான
பெண்களை மணக்கும் போதும் கூட மஹர் தொகையை வழங்கியே திருமணம் முடிக்க வேண்டும்
என்று மேற்கூறிய வசனம் பாடம் குறிப்பிடுகின்றது.
وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ
شَيْءٍ مِنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَرِيئًا
பெண்களுக்கு
அவர்களின் மணக் கொடைகளை (அவசியமாகக்) கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து
அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்! ( அல்குர்ஆன்: 4:
4 )
மஹர் வழங்கி
திருமணம் செய்வதே மரபு என்று சான்று பகரும் வசனமும் அல்குர்ஆனில் இடம்
பெற்றுள்ளது.
அல்குர்ஆனின்
நீண்ட, அழகிய வரலாற்றுக்குச் சொந்தக்காரரான நபி மூஸா (அலை) அவர்களைப் பற்றியும், அவர்கள் திருமணம் முடிக்கின்ற நேரத்தில் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது
பற்றியும் திருக்குர்ஆன் படம் பிடித்துக் காட்டுகின்றது.
நபி ஷுஐப் அலை
அவர்கள் தங்களது மகள்கள் இருவரில் ஒருவரை நபி மூஸா அலை அவர்களுக்கு திருமணம்
செய்து வைக்க முடிவெடுத்து திருமணம் தொடர்புடைய பேச்சை துவக்கும் போதே முதலில்
மஹரைப் பற்றித் தான் பேசினார்கள்.
மூஸா (அலை)
அவர்களின் மண நிகழ்வைப் பற்றித் திருக்குர்ஆன் கூறும்போது,
قَالَ إِنِّي أُرِيدُ أَنْ أُنْكِحَكَ إِحْدَى ابْنَتَيَّ هَاتَيْنِ
عَلَى أَنْ تَأْجُرَنِي ثَمَانِيَ حِجَجٍ فَإِنْ أَتْمَمْتَ عَشْرًا فَمِنْ
عِنْدِكَ وَمَا أُرِيدُ أَنْ أَشُقَّ عَلَيْكَ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ
مِنَ الصَّالِحِينَ (27) قَالَ ذَلِكَ بَيْنِي وَبَيْنَكَ أَيَّمَا الْأَجَلَيْنِ
قَضَيْتُ فَلَا عُدْوَانَ عَلَيَّ وَاللَّهُ عَلَى مَا نَقُولُ وَكِيلٌ
“எட்டு ஆண்டுகள் நீர்
எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு
புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மணமுடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக
முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர
விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர்’’ என்று அவர் கூறினார். “இதுவே எனக்கும்,
உமக்கும் இடையே உள்ள ஒப்பந்தம். இரண்டு காலக் கெடுகளில் எதை
நான் நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை. நாம் பேசிக் கொண்டதற்கு அல்லாஹ்வே
பொறுப்பாளன்’’
என்று (மூஸா) கூறினார். ( அல்குர்ஆன்: 28: 27, 28.)
இறுதியாக மூஸா
(அலை) அவர்கள் செய்த ஒப்பந்தத்தை நிறைவு செய்து விட்டு, நபி ஷுஐப் அலை அவர்களின் மகளை திருமணம் செய்து அழைத்துச் சென்றார்கள்.
மஹர் என்பது எந்த
அளவுக்கு மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்பதற்கு நபி ﷺ அவர்கள் காலத்தில் நிகழ்ந்த சம்பவம்
ஒன்று சான்றாகும்.
لَمَّا قدِمنا المَدينةَ آخى رَسولُ اللهِ صلَّى اللهُ عليه
وسلَّم بَيني وبينَ سَعدِ بنِ الرَّبيعِ، فقال سَعدُ بنُ الرَّبيعِ: إنِّي أكثَرُ
الأنصارِ مالًا، فأَقسِمُ لك نِصفَ مالي، وانظُرْ أيَّ زَوجَتَيَّ هَوِيتَ نَزَلتُ
لك عَنها، فإذا حَلَّت تَزَوَّجتَها. قال: فقال له عبدُ الرَّحمَنِ: لا حاجةَ لي
في ذلك، هل مِن سوقٍ فيه تِجارةٌ؟ قال: سوقُ قَينُقاعٍ. قال: فغَدا إليه عبدُ
الرَّحمَنِ، فأتى بأقِطٍ وسَمنٍ، قال: ثُمَّ تابَعَ الغُدوَّ، فما لَبِثَ أن جاءَ
عبدُ الرَّحمَنِ عليه أثَرُ صُفرةٍ، فقال رَسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم:
تَزَوَّجتَ؟ قال: نَعَم، قال: ومَن؟ قال: امرَأةً مِنَ الأنصارِ، قال: كَم سُقتَ؟
قال: زِنةَ نَواةٍ مِن ذَهَبٍ -أو نَواةً مِن ذَهَبٍ- فقال له النَّبيُّ صلَّى
اللهُ عليه وسلَّم: أولِمْ ولو بشاةٍ.
خلاصة
حكم المحدث : [صحيح]
الراوي
: عبدالرحمن بن عوف | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم
: 2048
அப்துர்ரஹ்மான்
பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஹாஜிர்களான நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது
நபி ﷺ அவர்கள் என்னையும் சஅத் இப்னு ரபீஉ
(ரலி) அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். சஅத் (ரலி), அவர்கள் ஒருநாள் என்னிடம் “நான் அன்ஸாரிகளில் அதிகச் செல்வமுடையவன்; எனவே,
என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகிறேன். என்
இரு மனைவியரில் நீர் யாரை விரும்புகிறீர் என்று பாரும்! அவரை உமக்காக விவாகரத்துச்
செய்கிறேன். அவரது இத்தா முடிந்ததும் அவரை உமக்கு மணம் முடித்துத் தருகிறேன்!’’ எனக் கூறினார்.
அப்போது நான், “இது எனக்குத் தேவையில்லை! வியாபாரம் நடைபெறுகின்ற கடைவீதி ஏதும் (இங்கு)
இருக்கிறதா?’’
எனக் கேட்டேன். அவர், “கைனுகா எனும்
கடைவீதி இருக்கிறது!’’
என்றார். நான் அங்கே சென்று பாலாடைக் கட்டியையும்
நெய்யையும் (லாபமாகக்) கொண்டு வந்தேன். மறுநாளும் தொடர்ந்து சென்றேன். சிறிது
காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) கறையுடன் (நான் வருவதைப் பார்த்த) நபி ﷺ அவர்கள், “நீ மண முடித்து விட்டாயா?’’ என்று கேட்டார்கள்.
நான் “ஆம்!’’
என்றேன். “யாரை?’’ என்றார்கள். “ஓர் அன்ஸாரிப் பெண்ணை!’’
என்றேன். “எவ்வளவு மஹ்ர் (மணக்கொடை) கொடுத்தாய்?’’ என்று கேட்டார்கள். “ஒரு பேரீச்சங்கொட்டை எடைக்குத் தங்கம்!’’ என்றேன். அப்போது
நபி ﷺ அவர்கள் “ஓர் ஆட்டையேனும் (அறுத்து வலிமா-) மணவிருந்தாக அளிப்பாயாக!’’ என்றார்கள். (புகாரி:
இந்தச் செய்தியில் நபி ﷺ அவர்கள் திருமணம் முடித்தாயா? என்று கேட்டதன் பின்னர், அவர் ஆம் என்றதும் அடுத்த
கேள்வியே மஹர் எவ்வளவு?
என்றுதான்.
இதிலிருந்து ஒரு
ஆண் ஒரு பெண்ணைத் திருமணம் முடிப்பதாக இருப்பின் பெண்ணுக்குக் அவசியம் மஹரைக்
கொடுத்துவிட வேண்டும் என்று தெரிகிறது.
அல்குர்ஆன் சூராக்களை கற்றுக் கொடுத்தலே மஹராக...
قال الرسول - صلى الله عليه وسلم - للصحابي الذي لم يكن لديه شيءٌ، ولا
خاتم من حديد: ((ماذا معك من القرآن؟))، فقال: معي سورة كذا وسورة كذا، لسور
يعددها، فقال النبي - صلى الله عليه وسلم -: ((أَمْلَكْنَاكَهَا بما معك من القرآن))
மஹராக வழங்க
தன்னிடம் எதுவும் இல்லை என்று சொன்ன நபித்தோழர் ஒருவரிடம் நபி ﷺ அவர்கள் "நீர் ஏதேனும் சூராக்களை மனனமிட்டுள்ளீரா? என்று கேட்க,
அவர் இன்னின்ன சூராக்கள் மனனமிட்டுள்ளேன் என்று கூற, அப்படி என்றால் அதை உமது மனைவிக்கு கற்றுக் கொடுத்து அதை மஹராக வழங்குவீராக!
என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )
وعن
النبي - صلى الله عليه وسلم - قال لرجل من أصحابه: ((يا فلان، هل تزوجتَ؟))، قال:
لا، وليس عندي ما أتزوج، قال: ((أليس معك: ﴿ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ﴾؟))، قال:
بلى، قال: ((ربع القرآن، أليس معك: ﴿ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ﴾؟))، قال:
بلى، قال: ((ربع القرآن، قال: أليس معك ﴿ إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ ﴾؟))، قال:
بلى، قال: ((ربع القرآن، تزوَّجْ تزوَّج تزوج))
ஒரு நபித்தோழரிடம்
நபி ﷺ அவர்கள் நீர் மணம் முடித்து விட்டீரா? என்று கேட்க,
அவரோ அல்லாஹ்வின் தூதரே! திருமணம் முடிக்க என்னிடம் எதுவும்
இல்லை என்று கூற,
உமக்கு சூரா இக்லாஸ் மனனமாக தெரியுமா? என்று கேட்க,
அவர் ஆம் என்றார். அப்படி எனில், அது குர்ஆனின் நான்கில் ஒரு பகுதியாகும்" என்று கூறினார்கள். பின்னர்
சூரா காஃபிரூன் மனனமாக தெரியுமா? என்று கேட்க, அவர் ஆம் என்றார். அப்படி எனில், அது குர்ஆனின் நான்கில்
ஒரு பகுதியாகும்" என்று கூறினார்கள்.
பின்னர் சூரா அஸ்
ஸில்ஸால் மனனமாக தெரியுமா?
என்று கேட்க, அவர் ஆம் என்றார். அப்படி
எனில், அது குர்ஆனின் நான்கில் ஒரு பகுதியாகும்" என்று கூறிவிட்டு, அதையே மணமகளுக்கு மஹராக வழங்குவீராக! என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். ( நூல்: பைஹகீ )
ஒரு தடவை நபி ﷺ அவர்களிடம் வந்து ஒரு இளைஞர்
"நான் மணம் செய்யப்போகின்றேன்.ஆனால் என்னிடம் மஹராக கொடுக்க எதுவுமே
இல்லை.நான் அணிந்திருக்கும் இந்த ஒரே ஒரு வேட்டியத்தவிர.அதனால் இந்த வேட்டியை
கிழித்து ஒரு பகுதியை என் மனைவிக்கு மஹராக கொடுக்கவா" என்றார்.
இதனைக்கேட்ட நபி ﷺ அவர்கள் "வேண்டாம் கிழித்தீர்களானால் இருவருமே
உபயோகிக்க முடியாததாகி விடும்.நான் ஒன்று சொல்கின்றேன்.உமக்கு குர் ஆன் ஷரீபில்
எந்த சூராவாவது மனனம் செய்துவைத்திருக்கின்றீரா?"என்று கேட்டதும் அவ்விளைஞர் "ஆம்" என்றார்.
உடனே நபி ﷺ அவர்கள் "சரி நீர் மனனம் செய்த சூராக்களை உமது
மனைவிக்கும் கற்றுக்கொடும்.நீர்கற்றுக்கொடுத்து, கற்றுக்கொடுத்ததை மஹராக்கிக்கொள்ளும் "என்று கூறி அனுப்பிவைத்தார்கள்.
500 திர்ஹம்கள் மஹராக...
اثنتا
عشْرةَ أوقية، وهو ما يعادل خمسمائة درهم، وهو أعلى ما وصل إليه مهر زوجاتِ وبنات
النبي - صلى الله عليه وسلم - فعن عائشةَ - رضي الله عنها - قالت: "كان
صداقُه لأزواجه ثنتي عشْرة أوقية ونشًّا، قالت: أتدري ما النَّشُّ؟ قال: قلت: نصف
أوقية، فتلك خمسمائة درهم"
நபி ﷺ அவர்கள் தமது மனைவிமார்களுக்கு 500 திர்ஹம்களுக்கு ஈடான பன்னிரெண்டரை ஊக்கியா வை மஹராக வழங்கினார்கள் என்று
அன்னை ஆயிஷா ரலி அவர்கள் அறிவித்தார்கள். ( நூல்: புகாரி ) ( ஒரு ஊக்கியா என்பது 40 திர்ஹம்களுக்கு ஈடாகும்)
பேரீத்தம் பழ கொட்டை அளவு தங்கம் மஹராக....
عن أنس
بن مالك:أن النبيَّ - صلى الله عليه وسلم - رأى على عبدِالرحمن بن عوف أثَرَ صُفرةٍ،
فقال: ((ما هذا؟))، قال: يا رسول الله، إني تزوَّجْتُ امرأةً على وزن نواة من ذهب،
قال: ((فبارَك الله لك، أولِمْ ولو بشاةٍ))
அப்துர் ரஹ்மான்
இப்னு அவ்ஃப் ரலி அவர்களிடம் நபி ﷺ அவர்கள் திருமணம் செய்து விட்டீர்களா என்று கேட்டு
விட்டு, எவ்வளவு மஹர் கொடுத்தீர்கள் என்று கேட்ட போது தங்கத்தின் சிறிய அளவு மஹராக
கொடுத்தேன் என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )
160 திர்ஹம்கள் மஹராக....
ففي الحديث: ((على كم تزوَّجْتَها؟))، قال: على أربع أواق، فقال له
النبي - صلى الله عليه وسلم -: ((على أربع أواق؟! كأنما تنحتون الفضة من عُرْضِ
هذا الجبل)) ، وهذا دليل على معاتبة النبي - صلى الله عليه وسلم - من دفَع من
المهر فوق طاقته
நடுத்தர வசதியுள்ள
ஒரு நபித்தோழரிடம் நபி ﷺ
அவர்கள் எவ்வளவு மஹர் கொடுத்தீர்கள் என்று கேட்ட போது, அவர் நான்கு ஊக்கியா என்று கூற, அருகில் உள்ள மலையை
சுட்டி காட்டி இது அளவு வெள்ளியை வழங்க வேண்டியது தானே என்று கண்டிப்புடன்
கூறினார்கள். அதாவது அவர் சக்திக்கு மீறி மஹர் வழங்கினார். ( நூல்: முஸ்லிம் )
இரும்பு மோதிரம் மஹராக....
: عندما جاءت امرأةٌ إلى النبي - صلى الله عليه
وسلم - تعرض عليه النكاح، قام أحد الصحابة يُريدُ نكاحًا، فقال له: ((التمس ولو
خاتمًا من حديد))
நபி ﷺ அவர்களிடம் ஒரு பெண் தம்மை நபி ﷺ அவர்களை திருமணம் செய்து கொள்ளுமாறு சொன்ன போது சபையில்
இருந்த ஒரு நபித்தோழர் தாம் அந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாக கூறிய போது
நபி ﷺ அவர்கள் ஒரு இரும்பு மோதிரம் மஹராக வழங்கியாவது
திருமணம் செய்து கொள்வீராக! என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )
காலணிகள்
மஹராக....
روى
عامر بن ربيعة - رضي الله عنه - عن أبيه أن امرأةً من بني فزارة تزوَّجَت على
نعلين، فجيء بها إلى النبيِّ - صلى الله عليه وسلم - فقال لها: ((أرضيتِ من نفسك
ومالك بنعلينِ؟))، فقالت: نعم، فأجازه النبيُ - صلى الله عليه وسلم
பனீ ஃபஸாரா
குலத்தை சேர்ந்த ஒரு பெண்மணி மணமகன் தமக்கு ஒரு ஜோடி செருப்பை மஹராக வழங்கி திருமணம் செய்ததாக கூறிய போது நபி ﷺ அவர்கள் உமக்கு இந்த மஹர் திருப்தி தானா? என்று கேட்க,
அந்த பெண்மணி ஆம் என்று கூறிடவே, நபி ﷺ அவர்கள் அந்த மஹரை
அங்கீகரித்தார்கள். ( நூல்: திர்மிதீ )
அடிமையை உரிமை விடுதலே மஹராக....
كان
أنسُ بن مالك - رضي الله عنه - يقول: "سبى النبيُّ - صلى الله عليه وسلم -
صفيَّةَ، فأعتقها، وتزوجها، فقال ثابت لأنس: ما أصدَقَها؟ قال: أصدقها نفسها،
فأعتقها"، وذكر ابن حجر: أن صفية - رضي الله عنها - قالت: "أعتقني النبي
- صلى الله عليه وسلم - وجعَل عِتقي صداقي"، قال ابن الصلاح: معناه أن العتق
يحل محل الصداق، وإن لم يكن صداقًا، وقال ابن الجوزي: فإن قيل: ثواب العتق عظيم،
فكيف فَوَّتَهُ حيث جعله مهرًا، وكان يمكن جعل المهر غيره؟ فالجواب: أن صفيةَ بنتُ
ملِكٍ، ومثلها لا يقنع إلا بالمهر الكثير، ولم يكن عنده - صلى الله عليه وسلم - إذ
ذاك ما يُرضيها به، ولم يُرِدْ أن يقصر فجعل صداقها نفسها، وذلك عندها أشرفُ من
المال الكثير
நபி ﷺ அவர்கள் ஸஃபிய்யா ரலி அவர்களை ஒரு போரின் போது கைதியாக
பெற்றுக் கொண்டார்கள். ஸ்ஃபிய்யா ரலி அவர்களை உரிமை விட்டு, அந்த உரிமையை மஹராக வழங்கி திருமணம் செய்து கொண்டார்கள். ( நூல்: புகாரி )
இஸ்லாமே
மஹராக.....
عن أنس
- رضي الله عنه - قال: "خطب أبو طلحةَ أمَّ سُليم، فقالت: والله ما مِثلك يا
أبا طلحة يُرَد، ولكنك رجل كافر، وأنا امرأة مسلمة، ولا يحل لي أن أتزوَّجك، فإن
تُسلم، فذاك مهري، وما أسأَلُك غيره، فأسلَم، فكان ذلك مهرَها"
அபூதல்ஹா ரலி
அவர்கள் உம்மு ஸுலைம் ரலி அவர்களை திருமணம் செய்ய கோரிய போது நீர் இஸ்லாத்தை ஏற்றுக்
கொண்டால் அதையே நான் மஹராக ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறினார்கள். ( நூல்: நஸாயீ )
போர்த் தளவாடங்களே
மஹராக....
لما
تزوج عليٌّ - رضي الله عنه - فاطمة - رضي الله عنها - قال له رسول الله - صلى الله
عليه وسلم -: ((أعطِها شيئًا))، قال: ما عندي، قال: ((فأين دِرْعُك الحُطَمِيَّة؟))
அலீ ரலி அவர்கள்
ஃபாத்திமா ரலி அவர்களை திருமணம் செய்த போது கேடயத்தையோ அல்லது கவச ஆடையையோ மஹராக
வழங்கி திருமணம் செய்து கொண்டார்கள். ( நூல்: நஸாயீ )
இரண்டு திர்ஹம் மஹராக...
قال عبد
الله بن سليمان : وكانت بنت سعيد بن المسيب خطبها عبد الملك بن مروان لابنه الوليد
بن عبد الملك حين ولاه العهد فأبى سعيد أن يزوجه فلم يزل عبد الملك يحتال على سعيد
حتى ضربه مائة سوط في يوم بارد وصب عليه جرة ماء وألبسه جبة صوف .
قال عبد الله : وهي التي خطبها الخليفة عبدالملك بن مروان
لابنه الوليد فأبى أن يزوجها والدها وقال: لا أفسد عليها دينها.... ثم زوجها لأحد
طلابه اسمه ابو وداعة.
ஸயீதுப்னுல்
முஸைய்யப் ரஹ் அவர்களின் மகளை அப்துல் மலிக் இப்னு மர்வான் தமது மகன் வலீத் இப்னு
அப்துல் மலிக்கை அரியணையில் அமர வைத்த பிறகு பெண் கேட்டார்கள். ஸயீதுப்னுல்
முஸைய்யப் ரஹ் அவர்கள் பெண் கொடுக்க மறுத்து விட்டார்கள். பெண் தர மறுக்கும்
காரணத்தை அப்துல் மலிக் இப்னு மர்வான் கேட்ட போது எனது மகளின் தீன் பாழாய் போவதை
தவிர்க்கவே உமது மகனுக்கு பெண் தர மறுப்பதாக ஸயீதுப்னுல் முஸைய்யப் ரஹ் அவர்கள்
கூறினார்கள். இதன் பின்னரும் தொடர்ந்து தமது மகனுக்கு பெண் கேட்ட அப்துல் மலிக்
இப்னு மர்வான் ஒரு கட்டத்தில் ஸயீதுப்னுல் முஸைய்யப் ரஹ் அவர்களின் மறுப்பு
அதிகரிக்கவே நூறு சவுக்கடி தண்டனை வழங்கினார். பின்னர் தமது மகளை தமது மாணவர் அபீ
வதாஆ அவர்களுக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள்.
عن ابن
أبي وداعة ، قال : كنت أجالس سعيد بن المسيب ففقدني أياما فلما جئته قال : أين كنت
؟ قال : توفيت أهلي فاشتغلت بها ، فقال : ألا أخبرتنا فشهدناها ، قال : ثم أردت أن
أقوم فقال : هل استحدثت امرأة ، فقلت : يرحمك الله ومن يزوجني وما أملك إلا درهمين
أو ثلاثة
ஸயீதுப்னுல் முஸைய்யப்
ரஹ் அவர்கள் தங்களது மகளை தமக்கு திருமணம் செய்து வைத்த நிகழ்வை அபீ வதாஆ அவர்களே
கூறும் செய்தி பல்வேறு வரலாற்று நூல்களில் பதிவாகி உள்ளது.
அபீ வதாஆ (ரஹ்)
அவர்கள் கூறினார்கள்:- நான் ஸயீதுப்னுல் முஸைய்யப் ரஹ் அவர்களின் சபைக்கு சென்று
பயிலும் மாணவர்களில் ஒருவராக இருந்தேன். தினமும் அவர்களின் வகுப்புக்கு சென்று
வருவேன். எனது மனைவி இறந்து போனதன் காரணமாக சில நாட்கள் என்னால் வகுப்புக்கு செல்ல
முடியவில்லை.
மீண்டும்
வகுப்புக்கு சென்ற போது,
வகுப்புக்கு வராததன் காரணம் குறித்து என்னிடம் வினவ, நான் காரணத்தை கூறினேன். அப்போது அவர்கள் "நீ எனக்கு தகவல் தந்திருந்தால்
நானும் ஜனாஸா நல்லடக்கத்தில் பங்கேற்றிருப்பேனே?" என்று கூறினார்கள். சில நாட்கள் கழித்து மீண்டும் என்னிடம் "அபீ வதாஆவே!
மறுமணம் செய்ய பெண் ஏதும் பார்த்துக் கொண்டுள்ளீரா?" என்று கேட்க,
இனி எனக்கேது திருமணம்? எனக்கு யார் பெண் தருவார்? நானே இரண்டு அல்லது மூன்று திர்ஹம்களின் சொந்தக்காரனாக உள்ளேன்" என்றேன்.
، فقال : أنا ، فقلت : أوتفعل ، قال : نعم ، ثم
حمد الله تعالى وصلى على النبي - صلى الله عليه وسلم - وزوجني على درهمين أو قال :
ثلاثة قال : فقمت ولا أدري ما أصنع من الفرح ، فصرت إلى منزلي وجعلت أتفكر ممن آخذ
وممن أستدين ، فصليت المغرب وانصرفت إلى منزلي واسترحت وكنت وحدي صائما ، فقدمت
عشائي أفطر كان خبزا وزيتا ، فإذا بآت يقرع ، فقلت : من هذا ؟ قال : سعيد ، قال :
فتفكرت في كل إنسان اسمه سعيد إلا سعيد بن المسيب ، فإنه لم ير أربعين سنة إلا بين
بيته والمسجد فقمت فخرجت فإذا سعيد بن المسيب فظننت أنه بدا له ، فقلت : يا أبا
محمد ألا أرسلت إلي فآتيك ،
அப்போது, இரண்டு அல்லது மூன்று திர்ஹம்களை மஹராகப் பெற்று நான் உமக்கு எனது மகளை
திருமணம் செய்து தருகிறேன். என்று கூறினார்கள். அதற்கு நான் உண்மையாகவே திருமணம்
செய்து தருவீர்களா?
என்று கேட்டேன். ஆம் என்று கூறி, அல்லாஹ்வைப் புகழ்ந்து நபி ﷺ
அவர்களின் மீது ஸலவாத் சொல்லி இரண்டு அல்லது மூன்று திர்ஹம்களை மஹராகப் பெற்று
எனக்கு திருமணம் செய்து தந்தார்கள். எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியால் அந்த தருணத்தில்
நான் என்ன செய்தேன் என்றே எனக்குத் தெரியவில்லை. பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு
வந்தேன். பிறகு மக்ரிப் மற்றும் இஷா தொழுதேன். அன்று நான் நோன்பு நோற்றிருந்தேன்.
எனவே, வீட்டுக்கு வந்து இரவு உணவு சாப்பிட ஆயத்தமாகி ரொட்டி மற்றும் ஜைத்தூன்
எண்ணையை எடுத்து உணவு உண்ண அமர்ந்தேன். சாப்பிட்டு முடித்ததும் இரவு தூங்க
தயாரானேன். வீட்டின் கதவை தட்டும் சப்தம் கேட்கவே, யார் என்று கேட்டேன். நான் தான் ஸயீத் என்று கதவுக்கு அந்தப் பக்கம் இருந்து
சப்தம் வரவே,
எனக்குத் தெரிந்து எனது ஆசிரியரைத் தவிர ஸயீத் எனும்
பெயரில் வேறு யாரும் இல்லை. ஆகவே, கதவைத் திறந்தேன். அங்கே
எனது ஆசிரியர் ஸயீதுப்னுல் முஸைய்யப் ரஹ் அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
அப்போது நான் நீங்கள் ஆளனுப்பி என்னை அழைத்திருந்தால் நானே வந்திருப்பேனே என்று
கூறினேன்.
قال :
لأنت أحق أن يؤتى ، قال : قلت : فما تأمر ، قال : إنك كنت رجلا عزبا فتزوجت فكرهت
أن تبيت الليلة وحدك وهذه امرأتك فإذا هي قائمة من خلفه في طوله ، ثم أخذها بيدها
فدفعها بالباب ورد الباب ، فسقطت المرأة من الحياء فاستوثقت من الباب ثم قدمتها
إلى القصعة التي فيها الزيت والخبز ، فوضعتها في ظل السراج لكي لا تراه ثم صعدت
إلى السطح فرميت الجيران ، فجاءوني فقالوا : ما شأنك ؟ قلت : ويحكم زوجني سعيد بن
المسيب ابنته اليوم وقد جاء بها علي غفلة ، فقالوا : سعيد بن المسيب زوجك ؟ قلت :
نعم ، وها هي في الدار ، قال : فنزلوا هم إليها وبلغ أمي فجاءت ، وقالت : وجهي من
وجهك حرام إن مسستها قبل أن أصلحها إلى ثلاثة أيام ،
அதற்கு, எனது ஆசிரியர் உம்மைத் தேடி வரும் அளவுக்கு நீரும் தகுதியானவர் தான். என்று
கூறினார்கள். அப்போது,
நான் சொல்லுங்கள் ஆசிரியரே! நீங்கள் என்ன செய்யுமாறு
சொல்கின்றீர்களோ நான் செய்கிறேன் என்றேன். அப்போது, என் ஆசிரியர் "நீர் புதுமாப்பிள்ளை உமக்கு எனது மகளை நான் திருமணம்
செய்து தந்து விட்டேன். இனி நீர் தனியாக வீட்டில் தங்குவதை நான் விரும்பவில்லை.
இதோ! என் மகளை (உமது மனைவியை) உடன் அழைத்து வந்துள்ளேன் என்று கூறி, அவர்களது மகளை என் வீட்டிற்குள் அனுப்பினார்கள். வீட்டின் உள்ளே நுழைந்த எனது
ஆசிரியரின் மகள் வெட்கத்துடன் தலை குனிந்த படி நுழைந்தார். உள்ளே வரும் போது
வாசலில் கால் இடரி கீழே விழப்போக நான் கீழே விழுந்து விடாமல் தாங்கினேன்.
வீட்டுக்கு
வந்ததும் எனது மனைவிக்கு உண்பதற்காக ரொட்டியும் ஜைத்தூன் எண்ணையையும் எடுத்து
கொண்டு வந்து சாப்பிட கொடுத்தேன். பின்னர் எனது மனைவி என் வீட்டின்
மாடிப்பகுதிக்கு சென்று விட்டார்.
நான் வீட்டை
விட்டு வெளியே வந்து அக்கம் பக்கத்து வீட்டார்களிடம் எனக்கு ஸயீதுப்னுல் முஸைய்யப்
ரஹ் அவர்கள் தங்களது மகளை திருமணம் செய்து தந்துள்ளார்கள் என்று சப்தமாக கூறினேன்.
அவர்கள் ஆச்சரியம் மேலிட கேட்டு விட்டு எனது மனைவியை பார்க்க ஆவலுற்று எனது
வீட்டிற்கு வந்து எனது மனைவியை பார்த்தனர்.
இதற்குள் எனது
தாயும் இந்த செய்தியை கேள்விப்பட்டு என் வீட்டிற்குள் வந்து "அவர்களிடம்
சொல்லாமல் திருமணம் செய்து கொண்டதற்காக கோபித்துக் கொண்டு எனது மனைவியை மூன்று
நாட்களுக்கு நெருங்கவே கூடாது என்று கூறினார்கள்.
قال :
فأقمت ثلاثة أيام ثم دخلت بها فإذا هي من أجمل الناس ، وإذا هي من أحفظ الناس
لكتاب الله وأعلمهم لسنة رسول الله - صلى الله عليه وسلم - وأعرفهم بحق الزوج ،
قال : فمكثت شهرا لا يأتيني سعيد ولا آتيه ، فلما كان قرب الشهر أتيت سعيدا وهو في
حلقته فسلمت عليه فرد علي السلام ولم يكلمني حتى تقوض أهل المجلس فلما لم يبق غيري
، قال : ما حال ذلك الإنسان ، قلت : خيرا يا أبا محمد على ما يحب الصديق ويكره
العدو ، قال : إن رابك شيء فالعصا ، فانصرفت إلى منزلي فوجه إلي بعشرين ألف درهم ،
எனது தாயார்
சமாதானம் ஆன பிறகு மூன்று நாட்கள் கழித்து எனது மனைவியுடன் இல்லற வாழ்க்கையில்
இணைய எனது வீட்டில் தனிமையில் சந்தித்தேன். மக்களிடையே மிகவும் அழகான பெண்ணாக, மக்களிலேயே அல்குர்ஆனை மனனம் செய்த அழகிய ஹாஃபிழாக, மக்களிலேயே நபி ﷺ
அவர்களின் சுன்னத்தை மிகவும் அறிந்தவராக என் மனைவியை நான் கண்டேன். மேலும், கணவனின் உரிமைகளை,
கடமைகளை மிகவும் தெரிந்தவராக நான் கண்டேன்.
இல்லற
வாழ்க்கையில் ஈடுபட ஆரம்பித்து ஒரு மாத காலமாக நான் என் ஆசிரியரை சந்திக்க
வகுப்புக்கு செல்லவும் இல்லை. என் ஆசிரியரும் என்னை சந்திக்க அவர்களது மகளை
சந்திக்க வரவும் இல்லை.
பின்னர், நான் என் ஆசிரியரை சந்திக்க வகுப்புக்கு சென்றேன். ஸலாம் சொன்னேன். பதில்
ஸலாம் கூறினார்கள். வகுப்பு முடிந்து எல்லோரும் செல்லும் வரை என்னிடம் எதுவும் பேச
வில்லை. சபையில் இருந்து மாணவர்கள் அனைவரும் சென்ற பிறகு என்னை அழைத்து நலம்
விசாரித்தார்கள். பின்னர் என்னிடம் 20 ஆயிரம் திர்ஹம்களை
கொடுத்து குடும்ப செலவினங்களுக்கு பயன்படுத்துமாறு கூறி அனுப்பி வைத்தார்கள். (
நூல்: ஹில்யா லி இமாமி அபூ நுஅய்ம், ஸியரு அஃலாமின் நுபலா )
தோட்டமே மஹராக....
عن ابن
عباس رضي الله عنهما أن امرأة ثابت بن قيس أتت النبي صلى الله عليه وسلم، فقالت:
يا رسول الله، ثابت بن قيس ما أعيب في خُلُق ولا دِين، ولكني أكره الكفر في
الإسلام، فقال رسول الله صلى الله عليه وسلم: أتردِّين عليه حديقته؟ فقالت: نعم،
فقال رسول الله صلى الله عليه وسلم: اقبل الحديقة وطلِّقها تطليقة؛ رواه البخاري،
இப்னு
அப்பாஸ்(ரலி) அறிவித்தார்:- ஸாபித் இப்னு கைஸ் இப்னு ஷம்மாஸ்(ரலி) அவர்களின்
துணைவியர் நபி ﷺ
அவர்களிடம் வந்து,
'இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) ஸாபித் இப்னு கைஸின்
குணத்தையோ,
மார்க்கப் பற்றையோ நான் குறைகூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்துகொண்டே இறைநிராகரிப்புக்குரிய செயல்களைச் செய்து விடுவேனோ
என்று அஞ்சுகிறேன்'
என்று கூறினார். அப்போது, 'இறைத்தூதர் ﷺ
அவர்கள் ,
'ஸாபித் உனக்கு (மணக்கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே
திருப்பித் தந்துவிடுகிறாயா?' என்று கேட்டார்கள் அவர், 'ஆம் (தந்து விடுகிறேன்)' என்று கூறினார்.
இறைத்தூதர் ﷺ அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), 'தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக்
சொல்லி விடுங்கள்!'
என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )
நான்காயிரம் திர்ஹம்
மஹராக....
كانت
زوجة لعبيد الله بن جحش وهاجرت معه إلى الحبشة، وهناك ارتدّ زوجها عن الإسلام
واعتنق النصرانية ومات عليها، بينما ثبتت هي على دين الإسلام. ولما بلغ النبي ﷺ
حالها وهي في أرض الغربة، أرسل إلى النجاشي (ملك الحبشة) ليخطبها له في السنة
السابعة للهجرة. قام النجاشي بتزويجها للنبي وأصدقها مهرًا من عنده مقداره أربعة
آلاف درهم (وفي رواية: أرباعمائة دينار)، وجهّزها من ماله الخاص، ثم أرسلها إلى
المدينة المنورة مع شرحبيل بن حسنة.
உம்மு ஹபீபா (ரலி)
அவர்கள் தங்களது கணவர் உபைதுல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் ரலி அவர்களுடன் அபீசீனியாவிற்கு
ஹிஜ்ரத் செய்தார்கள்.
அங்கே சென்ற
உபைதுல்லாஹ் கிருஸ்துவராக மதம் மாறி அங்கேயே இறந்து போனார். நபி ﷺ அவர்களுக்கு இந்த செய்தி கிடைத்த போது, தமக்காக அவர்களை பெண் பேசுமாறு நபி ﷺ அவர்கள் தகவல் அனுப்பினார்கள். அது போன்றே பெண் பேசி
தமது சார்பாக,
தமது சொந்த பணத்தில் இருந்து நான்காயிரம் திர்ஹம் மஹராக
கொடுத்தனுப்பி ஷுர்ஹபீல் இப்னு ஹஸனா ரலி அவர்களுடன் ஹிஜ்ரி ஏழில் நஜ்ஜாஷி மன்னர்
மதீனா நகருக்கு அனுப்பி வைத்தார்கள். ( நூல்: தஹ்தீபுல் கமால் )
மஹரை மனமுவந்து
வழங்கி மணாளியைக் கரம்
பிடிப்போம்!

மாஷா அல்லாஹ் அருமையான பதிவு அல்லாஹுத்தஆலா தங்களுக்கு ஈருலகிலும் பரக்கத் செய்வானாக ஆமீன்
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDelete