Thursday, 4 March 2021

 

இஸ்லாமிய அடையாளத்துடன் பெயர் சூட்டுவோம்!!!

 


நவீனம் இன்றைய உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்று மனித சமூகம் பயணிக்கிற எல்லாத் துறைகளும் நவீன மயமாக்கலை நோக்கி நகர்த்தப்படுகின்றது.

பிரச்சனைகளைக் கூட நவீன பிரச்சனை என்றும், கண்டு பிடிப்புகளைக் கூட நவீன கண்டுபிடிப்பு, நவீன மருத்துவம், நவீன வாகனம், நவீன தீர்வு என்று அழைக்கத் துவங்கி இன்றைய உலகையே நவீன உலகு என்றே கூறுகின்றோம்.

முஸ்லிம் சமூகத்தின் வாழ்விலும் நவீனங்கள் பிரதி பலிக்கத் துவங்கி விட்டன. பழக்கவழக்கங்கள், நடைமுறை, உணவு, உடை, கலாச்சாரம், திருமணம், பேச்சு, எழுத்து, இலக்கணம் என எல்லாமும் நவீனமாகக் காட்சியளிக்கிறது.

இஸ்லாம் நவீனத்தை விரும்புகின்றதா? அல்லது தடை செய்கின்றதா? என்று உற்று நோக்கினால் ஒரு விஷயம் அது புதிதாக, நவீனமாக இருக்கின்றது என்பதற்காக மட்டுமே இஸ்லாம் அதைத் தடை செய்யாது.

நபி {ஸல்} அவர்கள் வாழ்ந்த காலத்தில் அரேபிய தீபகற்பத்திற்கு வெளியே இருந்து வந்த பல புதிய விஷயங்களை, நடைமுறைகளை நபி {ஸல்} அவர்கள் அங்கீகரித்தார்கள்.

நேர்வழி நின்ற கலீஃபாக்களும் தங்களின் ஆட்சிகாலத்தில் உலக நாடுகளில் காணப்பட்ட பல்வேறு புதிய நடைமுறைகளை அங்கீகரித்தார்கள். பின் நாளில் அப்பாஸிய ஆட்சியாளர்கள் பல்வேறு புதிய நடைமுறைகளை அங்கீகரித்ததால்இஸ்லாமிய உலகுஅடைந்த அறிவும், ஞானமும் அளப்பரியது.

எனவே, நவீனங்களை ஏற்றுக் கொள்வதிலும், தடை செய்வதிலும் இஸ்லாத்தின் பார்வை மிகத் தெளிவானதும், விசாலமானதும் ஆகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போதுள்ள முஸ்லிம் சமூகம் நவீனம் என்ற பெயரில் உள்வாங்கியிருக்கிற (வீனங்கள்) டைமுறைகள் பலது இஸ்லாம் கடுமையாக விமர்சித்ததும் தடை செய்ததும் ஆகும்.

அதில் ஒன்று குழந்தைகளுக்கு நவீனமாக பெயர் சூட்டுவது எனும் நடைமுறையாகும்.

ஸ்டைலாக, அழகாக, புதிதாக, யாருமே வைக்காத பெயராக இருக்க வேண்டும் என்று விரும்பி ஆன்லைனில் தேடித் தேடி சூட்டுகின்றனர்.

ஆனால், அந்தப் பெயர்கள் எல்லாம் ஒன்று அர்த்தம் இல்லாதவைகளாக அல்லது சகோதர சமய மக்கள் சூட்டும் பெயராக அல்லது தரமற்ற அர்த்தம் உள்ளவைகளாக இருப்பதை பார்க்க முடிகின்றது.

பெயரிடுவதும்பெயர் சூட்டுதலும் 

பொதுவாக இருக்கின்ற ஒன்றை குறிப்பிடுவதற்கும், அதை ஞாபகம் வைத்துக் கொள்வதற்கும், அதை முறையோடு அழைப்பதற்கும் பயன்படுவதே பெயர்கள்.

இந்த உலகில் மனிதன் பார்த்தும், கேட்டும், அறிந்தும் வைத்திருக்கின்ற எந்த ஒன்றும் பெயர் சூட்டப்படாத நிலையில் இல்லை.

இந்த உலகில் நாம் காண்கிற எல்லாவற்றிற்கும் ஒரு பெயர் இருக்கின்றது. இன்று புயலுக்கு, இயற்கை சீற்றத்துக்கு, புதிதாகக் கண்டறியப்படும் உயிரினங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு பெயர் சூட்டப்படுகிறது 

பெயரிடுதல் என்பது ஒன்றின் அடையாளம், பெயரிடுதல் என்பது ஒன்றின் முகவரியாகும்.

பெயர் சூட்டும் முறை என்பது சாதி, சமயம், சமூகம், நாடு, புவியியல் சார்ந்து பல்வேறு நடைமுறைகள் கையாளப்படுகின்றன. ஒவ்வொரு சமூகத்திற்கும் பெயர் வைப்பதற்கென தனித்தன்மைகள் இருக்கின்றன.

பெயர் சூட்டுதலை அவசியம் என்று உணர்ந்திருக்கும் நாம் எதை பெயராகச் சூட்டுவது, எந்த வார்த்தையை தேர்ந்தெடுப்பது, பொறுத்தமானது தானா? என்பதை அறிந்து பெயர் சூட்டுவதில்லை.

இஸ்லாம் பெயர் சூட்டுதல் குறித்து மிகத் தெளிவான, அழகான வழிக்காட்டலை வழங்கி இருக்கின்றது.

பெயர் சூட்டுதல் என்பது இபாதத் ஆகும்.

பொதுவாக மனிதர்கள் எல்லா விஷயங்களையும் அழகுற செய்ய வேண்டும் என்றே விரும்புகின்றார்கள். இந்த விதியை அவசியம் தங்களின் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் போதும் கவனிக்க வேண்டும். ஏனென்றால் அழகானதையே அல்லாஹ் விரும்புகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “நிச்சயமாக அல்லாஹ் அழகானவன். அவன் அழகையே விரும்புகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல் : முஸ்லிம் 147 )

عَنْ أَبِي الدَّرْدَاءِ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ وَأَسْمَاءِ آبَائِكُمْ فَحَسِّنُوا أَسْمَاءَكُمْ . أخرجه أحمد

அபூ தர்தா (ரலி) அறிவிக்கின்றார்கள்: “மறுமை நாளில் உங்களுடைய தந்தையின் பெயருடன் உங்ளது பெயரால்  நீங்கள் அழைக்கப்படுவீர்கள். ஆகையால் உங்களது பெயர்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல் : அஹ்மத் 20704 )

وقد روى ابن النجار عن أبي هريرة رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم قال: " من حق الولد على والده أن يعلمه الكتابة، وأن يحسن اسمه، وأن يزوجه إذا بلغ "، وقد رمز الإمام السيوطي لحسن هذا الحديث في كتابه " الجامع الصغير ".

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “பெற்றோர்களுக்கு குழந்தைகளின் மீதான கடமைகள் மூன்றாகும். 1. குழந்தை பிறந்ததும் அழகிய பெயரை சூட்டுவதாகும். 2. பிரித்தரியும் அறிவை அவர்கள் பெற்று விட்டால் குர்ஆனை கற்றுக் கொடுப்பதாகும். 3. திருமண வயதை அடைந்து விட்டால் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாகும்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: ஜாமிவுஸ் ஸஃகீர் )

 

முதல் தரமான பெயர்கள்

عَنْ عُقِيلَ بْنُ شَبِيبٍ عَنْ أَبِي وَهْبٍ الْجُشَمِىِّ وَكَانَتْ لَهُ صُحْبَةٌ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم :تَسَمَّوْا بِأَسْمَاءِ الأَنْبِيَاءِ وَأَحَبُّ الأَسْمَاءِ إِلَى اللهِ عَزَّ وَجَلَّ عَبْدُ اللهِ وَعَبْدُ الرَّحْمَنِ.أخرجه أحمد

உகைல் இப்னு ஷபீப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல் : அஹ்மத் )

أنس بن مالك قال

 قال رسول الله صلى الله عليه وسلم

 ولد لي الليلة غلام فسميته باسم أبي إبراهيم

அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் நபி {ஸல்} அவர்கள் எனக்கு நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்தது நான் அந்த குழந்தைக்கு எனது தந்தை நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் பெயரை சூட்டினேன்என்று கூறினார்கள். ( நூல்: முஸ்லிம்)

 قال البخاريُّ: حدثنا إسحاق ابن نصر 

 حدثنا أبو أسامة قال: حدثني بريد، عن أبي بردة، عن أبي موسى قال: ولد لي غلام، فأتيت به النَّبيَّ صلَّى الله عليه وسلَّم، فسماه إبراهيم، فحنكه بتمرة، ودعا له بالبركة، ودفعه إلي، وكان أكبر ولد أبي موسى.

அபூ மூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “எனக்கு ஆண் குழந்தையொன்று பிறந்தது. அக்குழந்தையை நான் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன். நபி (ஸல்) அவர்கள் அக்குழந்தைக்கு இப்ராஹீம்எனப் பெயர் சூட்டிப் பேரீச்சம் பழத்தை மென்று குழந்தையின் வாயில் அதைத் தடவினார்கள், பின்னர் அருள்வளத்திற்காக துஆச் செய்த பின் என்னிடம் குழந்தையைத் தந்தார்கள். இமாம் புகாரி (ரஹ்) “அபூமூஸாவுடைய மூத்த குழந்தை தான் அதுஎன்று கூறினார்கள்.( நூல் முஸ்லிம் : 4342 )

 يُوسُفُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ سَلَّامٍ قَالَ

 سَمَّانِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوسُفَ

 وَأَقْعَدَنِي عَلَى

 حِجْرِهِ

 وَمَسَحَ عَلَى رَأْسِي

யூஸுஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நபி (ஸல்) அவர்கள் எனக்கு யூசுஃப் என்று பெயர் வைத்து, தங்களது மடியில் அமர வைத்து, எனது தலையை தடவிக்கொடுத்தார்கள். ( நூல் : அஹ்மத் 15809 )

عن النبي ﷺ أنه قال

 تسموا باسمي ولا تكتنوا بكنيتي

அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “அன்சாரிகளில் ஒருவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு முஹம்மத்என்று பெயர் சூட்ட அவர் விரும்பினார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அன்சாரிகள் செய்தது நன்றே. என் பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள். என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்என்று கூறினார்கள். (நூல் : முஸ்லிம் 4324 )

நபிமார்கள், நபித்தோழர்கள், இறைநேசர்கள், நல்லடியார்கள், ஷுஹதாக்களின் பெயர்களை சூட்ட வேண்டும்.

இணைவைப்பு மற்றும் தவறான பொருள் தரும் பெயர்கள், கெட்டவர்களின் பெயர்கள், அல்லாஹ்வுடைய தன்மையைக் குறிக்கும் பெயர்களை சூட்டுவது கூடாது.

عن أبي هريرة رضي الله عنه – ولفظه في البخاري – قال رسول الله صلى الله عليه وسلم : " أخنى الأسماء يوم القيامة عند الله رجل تسمى ملك الملوك " . حديث رقم ( 2606 ) ولفظه في صحيح مسلم : " أغيظ رجل على الله يوم القيامة ، أخبثه واغيظه عليه : رجل كان يسمى ملك الأملاك ، لا ملك إلا الله " .

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: “மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் மிக வெறுப்பிற்குரிய பெயரைக் கொண்டவன் மலிகுல் அம்லாக் (அரசர்களுக்கெல்லாம் அரசன்) என்ற பெயருடையவனாவான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

تحرم التسمية بكل اسم خاص بالله سبحانه وتعالى ، كالخالق والقدوس ، أو بما لا يليق إلا به سبحانه وتعالى كملك الملوك وهذا  محل اتفاق بين الفقهاء .

وأورد ابن القيم فيما هو خاص بالله تعالى : الله والرحمن والحكم والأحد ، والصمد ، والخالق ، والرزاق ، والجبار ، والمتكبر ، والأول ، والآخر ، والباطن ، وعلام الغيوب . تحفة المودود 

அல்லாஹ்வின் குறிப்பான சில ஸிஃபாத்களை குறிக்கும் பெயர்களை சூட்டுவது ஹராம் ஆகும்.

ஃகாலிக், குத்தூஸ், அல்லாஹ், ரஹ்மான், அஹத், அவ்வல், ஆகிர், ஹகம், ஸமத், ரஜ்ஜாக், ஜப்பார், முதகப்பிர், பாதின், அல்லாமுல் ஃகுயூப் என தனித்து பெயரிடுவது தடை செய்யப்பட்டுள்ளது என மார்க்கச்சட்ட வல்லுனர்களும், இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்களும் குறிப்பிடுகின்றார்கள். ( நூல்: துஹ்ஃபத்துல் மவ்தூத்  

عن أبي شُرَيْح هانىء الحارثي الصحابي رضي اللّه عنه؛ أنه لما وَفَدَ إلى رسول اللّه صلى اللّه عليه وسلم مع قومه سمعهم يُكنّونه بأبي الحكم، فدعاه رسول اللّه صلى اللّه عليه وسلم فقال‏:‏ ‏"‏إنَّ اللَّهَ هُوَ الحَكَمُ وَإِلَيْهِ الحُكْمُ فَلِمَ تُكَنَّى أبا الحَكَمِ‏؟‏‏"‏ فقال‏:‏ إن قومي إذا اختلفوا في شيء أتوني فحكمتُ بينَهم، فرضي كِلا الفريقين، فقال رسول اللّه صلى اللّه عليه وسلم‏:‏‏"‏ مَا أحْسَنَ هَذَا، فَمَا لَكَ منَ الوَلَدِ‏؟‏‏"‏ قال‏:‏ لي شُريح، ومُسلم، وعبدُ اللّه، قال‏:‏ ‏"‏فَمَنْ أَكْبَرُهُمْ‏؟‏‏"‏ قلت‏:‏ شريحُ، قال‏:‏ ‏"‏فأنْتَ أبُو شُرَيْحٍ‏"‏‏.

மக்கள் ஹானிஃ (என்ற நபித்தோழரை) அபுல் ஹகம் (ஞானத்தின் தந்தை) என்று குறிப்புப் பெயரால் அழைத்தார்கள். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வருகை தந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை அழைத்து அல்லாஹ்வே ஞானமிக்கவன். அவனிடமே சட்டமியற்றும் அதிகாரம் உள்ளது. அவ்வாறிருக்க நீர் ஏன் ஞானமிக்கவன் எனக் குறிப்புப் பெயர்வைக்கப்பட்டுள்ளீர் என்று அவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர் என்னுடைய சமுதாயம் ஏதேனும் ஒரு விஷயத்தில் பிணங்கிக் கொண்டால் என்னிடம் (தீர்ப்பு கேட்டு) வருவார்கள். அவர்களுக்கு (நல்ல) தீர்ப்பை வழங்குவேன். இரு கூட்டத்தாரும் (அதில்) திருப்தி அடைந்துகொள்வார்கள். (ஆகையால் இப்பெயரை எனது சமுதாயம் எனக்கு வைத்தது) என்று அவர் கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தீர்ப்புவழங்குவது எவ்வளவு சிறந்தது என்று கூறிவிட்டு உமக்கு எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்று கேட்டார்கள். அவர் ஷரைஹ், அப்துல்லாஹ், முஸ்லிம் ஆகியோர் உள்ளனர் என்று கூறினார். இவர்களில் மூத்தவர் யார் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டதற்கு ஷுரைஹ் என்று கூறினார். அப்படியானால் நீர் அபூ ஷுரைஹ் (ஷுரைஹின் தந்தை) எனக் கூறிவிட்டு அவருக்காகவும், அவரது குழந்தைக்காகவும் பிரார்த்தனை புரிந்தார்கள். ( நூல் : நஸயீ 5292 )

“அறியாமைக் காலத்தில் என்னுடையத் தந்தையின் பெயர் அஸீஸ் (மிகைத்தவர்) என்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு அப்துர் ரஹ்மான (அளவற்ற அருளாளனின் அடிமை) என்று (மாற்றி) பெயர்வைத்தார்கள். (நூல் : அஹ்மத் 16944 )

உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி {ஸல்} அவர்களின் மனைவியான உம்முசலமாவின் சகோதரனுக்கு ஒரு ஆண்குழந்தைப் பிறந்தது. அவர்கள் (உம்முசலமாவின் குடும்பத்தார்கள்) அக்குழந்தைக்கு வலீத் என்று பெயர் வைத்தார்கள். (இதை அறிந்தவுடன்) நபி (ஸல்) அவர்கள் எகிப்து நாட்டு மன்னர்களின் பெயர்களையா அதற்கு வைத்தீர்கள்? இந்த சமுதாயத்தில் ஒரு மனிதன் தோன்றுவான். அவனுக்கு வலீத் என்று சொல்லப்படும். ஃபிர்அவன் அவனது சமுதாயத்திற்கு தீங்கிழைத்ததை விட அவன் இந்த சமுதாயத்திற்கு அதிகம் தீங்கிழைப்பான் என்று கூறினார்கள். ( நூல் : அஹ்மத் 104 )

عن أُسامة بن أَخْدَريٍّ الصحابي رضي اللّه عنه ـ وأخدري بفتح الهمزة والدال المهملة وإسكان الخاء المعجمة بينهما ـ أن رجلاً يُقَال له أصرم كان في النفَر الذين أتوْا رسولَ اللّه صلى اللّه عليه وسلم، فقالَ رسولُ اللّه صلى اللّه عليه وسلم‏:‏ ‏"‏ما اسْمُكَ‏؟‏‏"‏ قال‏:‏ أَصْرَم، قال‏:‏ ‏"‏بَلْ أنْتَ زُرْعَةُ‏"‏‏.

உஸாமா இப்னு அஹ்தரீ (ரலி) அறிவிக்கின்றார்கள்: “அஸ்ரம் என்று சொல்லப்பட்ட ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வருகை தந்த நபர்களில் ஒருவராக இருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் உம் பெயர் என்ன என்று வினவினார்கள். (அதற்கு) அவர் என் பெயர் அஸ்ரமாகும் (காய்ந்த செடிக் கொத்து) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் மாறாக உன் பெயர் சுர்ஆவாகும் (மணிகள் கொண்ட பசுமையான செடிக்கொத்து)  என்று (பெயர்மாற்றிக்) கூறினார்கள். ( நூல் : அபூதாவூத் 4303 )

وعَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ ؛أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم غَيَّرَ اسْمَ عَاصِيَةَ. وَقَالَ : أَنْتِ جَمِيلَةُ.أَخْرَجَهُ أحمد 2/18(4682) و\"البُخَاريّ\" في (الأدب المفرد) 820 و\"مسلم\" 6/172(5655).

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “நபி (ஸல்) அவர்கள் ஆசியா என்ற பெண்ணின் (மாறுசெய்பவள்) பெயரை மாற்றி (அவரிடம்) நீ ஜமீலாவாகும் (அழகானவள்) என்று கூறினார்கள். ( நூல் : அபூதாவூத் 4301 )

ஆஸியா (عَاصِيَة) என்பதின் பொருள் மாறுசெய்பவள் என்பதாகும். இதில் முதலாவது எழுத்தாக அய்னும் இரண்டாவது எழுத்தாக ஸாதும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பெயரை வைப்பது கூடாது.

ஆசியா (آسٍيَة)  என்பதின் பொருள் பின்பற்றுபவள் என்பதாகும்.  இதில் முதலாவதாக அலிஃபும் இரண்டாவதாக சீனும் இடம்பெற்றுள்ளது. இப்பெயரை வைப்பதற்கு தடையில்லை.

குறிப்பிட்ட சில பெயர்களையும் சூட்டக்கூடாது...

عن سمرة بن جندب رضي اللّه عنه قال‏:‏ قال رسول اللّه صلى اللّه عليه وسلم‏:‏ ‏"‏لا تُسَمِّيَنَّ غُلامَكَ يَسَاراً، وَلا رَباحاً، وَلا نَجاحاً، وَلا أفْلَحَ،

ஸமுரா இப்னு ஜுந்துப் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் எங்கள் அடிமைகளுக்கு அஃப்லஹ் (வெற்றியாளன்), ரபாஹ் (இலாபம்), யசார் (சுலபம்), மற்றும் நாஃபிஉ (பயனளிப்பவன்) ஆகிய நான்கு பெயர்களைச் சூட்ட வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள். (நூல் : முஸ்லிம் 4328 )

عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم؛أَنَّ زَيْنَبَ كَانَ اسْمُهَا بَرَّةَ ، فَقِيلَ : تُزَكِّي نَفْسَهَا ، فَسَمَّاهَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم زَيْنَبَ. أخرجه \"أحمد\" 2/430و\"الدارِمِي\" 2698 و\"البُخاري\" 6192 و\"مسلم\" 5658 .

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: “ஸைனப் (ரலி) அவர்களுக்கு (முதலில்)  பர்ரா (நல்லவள்) என்ற பெயர் இருந்தது. அப்போது அவர் தம்மைத் தாமே பரிசுத்தப் படுத்திக்கொள்கிறார்என்று (மக்களால்) சொல்லப்பட்டது. ஆகவே, அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைனப்என்று பெயர் சூட்டினார்கள். ( நூல் : புகாரி 6192 )

சில பெயர்களும்அதன் குணபாடுகளும்

மோசமான அர்த்தங்களைக் கொண்டப் பெயர்களை சூட்டக்கூடாது. அப்படி சூட்டுகிற போது அது வாழ்க்கையில் மிகப் பெரிய குணபாடுகளை அளிக்கும்.

عن سعيد بن المسيب بن حَزْن عن أبيه، أن أباه جاء إلى النبي صلى اللّه عليه وسلم فقال‏:‏ ‏"‏ما اسْمُكَ‏؟‏‏"‏ قال‏:‏ حَزْن، فقال‏:‏ ‏"‏أنْتَ سَهْلٌ‏"‏ قال‏:‏ لا أُغيّر اسماً سمّانيه أبي، قال ابنُ المسيب‏:‏ فما زالت الحزونة فينا بعد

 முஸைய்யப் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “முஸய்யப் (ரலி) அவர்களின் தந்தை நபி (ஸல்) அவர்களிடத்தில் வந்த போது நபி (ஸல்) அவர்கள் உங்களது பெயர் என்ன என்று வினவினார்கள். அதற்கு அவர் ஹஸ்ன் (முரடு) என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் (இனிமேல் உமது பெயர்) சஹ்ல் (இலகு) ஆகும் என்று கூறினார்கள். அதற்கு அவர் எனது தந்தை எனக்கு இட்டப் பெயரை நான் மாற்றமாட்டேன் என்று கூறிவிட்டார். (இந்த ஹதீஸை அறிவிக்கும் முஸைய்யப் அவர்கள் கூறுகிறார்கள்.) இதன் பின்னர் எங்களிடம்  (குணநலன்களில்) முரட்டுத்தன்மை தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. ( நூல் : புகாரி 6190 )

وتأمل أسماء الستة المتبارزين يوم بدر كيف اقتضى القدر مطابقة أسمائهم لأحوالهم يومئذ، فكان الكفار: شيبة وعتبة والوليد ثلاثة أسماء من الضعف، فالوليد له بداية الضعف، وشيبة له نهاية الضعف؛ كما قال تعالى

خَلَقَكُم مِّن ضَعْفٍ ثُمَّ جَعَلَ مِن بَعْدِ ضَعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِن بَعْدِ قُوَّةٍ ضَعْفًا وَشَيْبَةً  الروم(54)

 وعتبة من العتب فدلت أسماؤهم على عتب يحل بهم، وضعف ينالهم، وكان أقرانهم من المسلمين: علي وعبيدة والحارث -رضي الله عنهم- ثلاثة أسماء تناسب أوصافهم، وهي العلو والعبودية والسعي الذي هو الحرث فعلَوا عليهم بعبوديتهم، وسعيهم في حرث الآخرة.

பத்ரில் கலந்து கொண்ட ஆறு நபர்களின் பெயர்களும் அவர்களின் முடிவுகளையும் நாம் ஒப்பிட்டுப்பார்த்தால் அவர்களுக்கு சூட்டப்பட்ட பெயர்கள் அவர்களின் வாழ்க்கையில் எப்படியான குணபாடுகளை அளித்தது என்பதைப் பார்க்க முடியும்.

உத்பா, ஷைபா, வலீத் இம்மூவரும் பத்ரில் கொல்லப்பட்டவர்கள் வலீத் என்றால் பலகீனத்தின் ஆரம்பம், ஷைபா என்றால் பலகீனத்தின் இறுதி, உத்பா என்றால் கடுமையான பலகீனம் போரில் பலகீனப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

அதே பத்ரில் கலந்து கொண்ட மூவர் அலீ (ரலி) உபைதா (ரலி) ஹாரிஸ் (ரலி) ஆகியோர் அலீ என்றால் உயர்வு, உபைதா என்றால் இறை அடிமைத்தனம், ஹாரிஸ் என்றால் மறுமைக்காக விரைந்து செயல்படக்கூடியவர் என்று பொருள் அல்லாஹ் மூவரையும் பொருந்திக் கொண்டான். ஈருலகத்தின் பேறு பெற்றவர்களாக ஆக்கினான்.

நபி {ஸல்} அவர்கள் அழகிய பெயர்களை விரும்புவார்கள் .....

وعن بريدة

 أن النبي ﷺ كان لا يتطير من شيء، وكان إذا بعث عاملاً سأل عن اسمه، فإذا أعجبه اسمه فرح به، ورؤي بشر ذلك في وجهه، وإن كان كره اسمه رؤي كراهية ذلك في وجهه 

رواه أبو داود:3920، وصححه الألباني السلسلة الصحيحة: 762]

நபி (ஸல்) அவர்கள் எதற்கும் சகுணம் பார்த்ததில்லை.(வரிவாங்குவதற்கு) 

அதிகாரியை அவர்கள் அனுப்பும் போது அவருடையப் பெயரைப் பற்றிக் 

கேட்பார்கள். அவருடைய பெயர் அவர்களுக்குப் பிடித்திருந்தால் சந்தோஷம்

 அடைவார்கள். 

அவர்களுடைய முகத்தில் அதனால் மகிழ்ச்சி தென்படும். அவருடைய பெயரை 

அவர்கள் வெறுத்தால் அதன் வெறுப்பு அவர்களது முகத்தில் தென்படும்.

அவர்கள் ஓரு ஊருக்குச் சென்றால் அதன் பெயரைப் பற்றி விசாரிப்பார்கள். 

அதன் பெயர் அவர்களுக்குப் பிடித்திருந்தால் அதனால் சந்தோஷம் அடைவார்கள். 

அதனால் அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சி தென்படும். அதன் பெயரை அவர்கள் வெறுத்தால் அதன் வெறுப்பு அவர்களின் முகத்தில் தென்படும்.”  ( நூல் : அபூதாவூத் 3419 )

وكان صلى الله عليه وسلم يتفاءل بالاسم الحسن , ويُعرف ذلك في وجهه عليه الصلاة والسلام , وفي لقاء رسول الله صلى الله عليه وسلم في طريق المدينة ولقائه ببُرَيدة الأسلمي، وتفاؤله باسمه وخدمة بريدة إياه ,عن عبدالله بن بُرَيدة، عن أبيه: أن النبي صلى الله عليه وسلم كان لا يتطيَّر، وكان يتفاءل، وكانت قريش جعلت مائة من الإِبل فيمن يأخذ نبيَّ الله صلى الله عليه وسلم فيرده عليهم حين توجه إلى المدينة.فركب بُرَيدة في سبعين راكباً من أهل بيته من بني سَهْم، فتلقى نبيَّ الله صلى الله عليه وسلم, فقال رسول الله صلى الله عليه وسلم: «مَنْ أنْتَ؟» ,فقال: أنا بُرَيدة ,فالتفت إلى أبي بكر الصِّديق فقال: «يَا أبَا بَكْرٍ، بَرُدَ أمْرُنَا وَصَلُحَ» ، ثم قال: «مِمَّنْ أنْتَ؟» قال: مِنْ أَسلم.قال رسول الله صلى الله عليه وسلم لأبي بكر: «سَلِمْنَا» قال: «ممَنْ؟» قال: من بني سهم.قال: «خَرَجَ سَهْمُكَ (يَا أبَا بَكْرٍ)» فقال بريدة للنبي صلى الله عليه وسلم: مَنْ أنت؟قال: «أَنا مُحَمَّدُ بنِ عبْدِالله رَسُولُ الله» فقال بريدة: أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً عبده ورسوله.فأسلم بُريدة وأسلم مَنْ كان معه جميعاً. أسد الغابة , لابن الأثير 1/209, ابن الجوزي : الوفا بتعريف فضائل المصطفى 182.

மாநபி {ஸல்} அவர்கள் மதீனா நோக்கி ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டிருந்த தருணம் அது.. மாநபி {ஸல்} அவர்களை பிடித்து வருபவர்களுக்கு 100 ஒட்டகத்தை அன்பளிப்பாக தருவோம் என்று குறைஷிகள் அறிவிப்புச் செய்திருந்த தருணமும் கூட.

  பெருமானார் {ஸல்} அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களோடு பாலைவனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது அஸ்லம் கோத்திரத்தைச் சேர்ந்த புரைதா என்பவர் எதிர் திசையில் தமது குடும்பத்தார்களோடு 70 வாகனத்தில் பயணித்து வந்து கொண்டிருந்தார் 

மாநபி {ஸல்} அருகே வந்து புரைதா வாகனத்தை நிறுத்தியதும் “நீர் யார்?” என நபி {ஸல்} அவர்கள் வினவ, நான் “புரைதா” என பதில் கூறினார்கள். அப்போது நபி {ஸல்} “அபூபக்ரே! நம் காரியம் இலகுவாகவும், குளிர்ச்சியானதாகவும் ஆகிவிட்டது” என்று கூறினார்கள்.

பின்பு நபி {ஸல்} புரைதாவை நோக்கி “நீர் எந்த கோத்திரத்தைச் சார்ந்தவர்?” என்று வினவ, புரைதா அவர்கள் “நான் அஸ்லம் கோத்திரத்தைச் சேர்ந்தவன்” என்றார்கள். அப்போது நபி {ஸல்} அவர்கள் “அபூபக்ரே! இனி நமக்கு நிம்மதி தான்” என்று கூறினார்கள்.

பின்பு நபி {ஸல்} புரைதாவை நோக்கி “நீர் எந்த குடும்பத்தைச் சார்ந்தவர்?” என்று வினவ, புரைதா அவர்கள் “நான் பனூஸஹ்ம் குடும்பத்தைச் சேர்ந்தவன்” என்றார்கள். அப்போது நபி {ஸல்} அவர்கள் “அபூபக்ரே! உமது அம்பை வெளியே எடுத்து தயாராக வைப்பீராக!” என்று கூறினார்கள்.

அப்போது, புரைதா அவர்கள் மாநபி {ஸல்} அவர்களை நோக்கி “நீங்கள் யார் என்று வினவ, நபி {ஸல்} அவர்கள் “நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத்” என்று பதில் கூறினார்கள்.

அப்போது புரைதா அவர்கள் மாநபி {ஸல்} அவர்களின் கரம் பற்றி கலிமா ஷஹாதாவைக் கூறி இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டார்கள். மேலும், அவர்களுடன் வந்திருந்த அவர்களின் குடும்பத்தார்கள் அனைவரும் ஷஹாதாக் கூறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். ( நூல்: உஸ்துல் ஃகாபா, அல் வஃபா பிதஃரீஃபி ஃபளாயிலுல் முஸ்தஃபா லிஇமாமி இப்னுல் ஜவ்ஸீ )

وفي معجم الطبراني عنْ يَعِيشَ الْغِفَارِيِّ، قَالَ:دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بناقَةٍ يَوْمًا، فَقَالَ: مَنْ يَحْلُبُهَا، فَقَالَ رَجُلٌ: أَنَا، قَالَ: مَا اسْمُكَ؟ قَالَ مُرَّةُ، قَالَ: اقْعُدْ، ثُمَّ قَامَ آخَرُ، فَقَالَ: مَا اسْمُكَ؟ قَالَ: مُرَّةَ، قَالَ: اقْعُدْ، ثُمَّ قَامَ آخَرُ، فَقَالَ: مَا اسْمُكَ؟ قَالَ: جَمْرَةُ، قَالَ: اقْعُدْ، ثُمَّ قَامَ يَعِيشُ، فَقَالَ: مَا اسْمُكَ؟ قَالَ: يَعِيشُ، قَالَ: احْلُبْهَا.
معجم الطبراني 16/143.

ஒரு நாள் நபி {ஸல்} அவர்கள் தங்களின் ஒட்டகத்தில் பால் கறப்பதற்கு யார் தயாராக இருக்கின்றீர்கள்? என நபித்தோழர்களைப் பார்த்து கேட்டார்கள். அப்போது ஒருவர் நான் பால் கறக்கின்றேன் என்றார். உமது பெயரென்ன? என்று நபி {ஸல்} அவர்கள் கேட்க, அவர் “முர்ரா (கசப்பு) என்றார். அமருங்கள்! என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். பின்பு ஒருவர் முன் வர அவர் பெயரும் முர்ரா என்றிருக்க அவரையும் அமருமாறு நபி {ஸல்} கூறினார்கள். பின்பு ஒருவர் முன் வர, உமது பெயர் என்ன? என்று நபி {ஸல்} அவர்கள் வினவ, யஈஷ் (வாழ்பவர், வாழ்க்கை) என்று கூறினார். நீர் சென்று பால் கறப்பீராக!” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஃஜம் அத் தப்ரானீ )

الحديبية قبيل مكة، أرسلت قريش عروة بن مسعود مندوباً عنها للتفاوض مع النبي صلى الله عليه وسلم، ثم أرسلت سهيل بن عمرو لعقد الاتفاق والصلح، فلما رآه النبي صلى الله عليه وسلم قال: «لقد سَهُلَ لكم مِن أمركم» (رواه البخاري)، ». 

நபி {ஸல்} அவர்கள் ஹுதைபிய்யாவில் உடன்படிக்கை எழுதுவதற்காக காத்திருக்க, அங்கே ஸஹ்ல் இப்னு அம்ர் (அப்போது அவர்கள் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை, மக்காவின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக மதிக்கப் பட்டவர்) வருகை தர, மக்கள் இதோ! ஸஹ்ல் (இலகுவானவர்) வந்து விட்டார் என்று கூற, நபி {ஸல்} நபித்தோழர்களை நோக்கி “அல்லாஹ் உங்களின் காரியங்களை உங்களுக்கு இலகுவாக ஆக்கிவிட்டான்” என்று கூறினார்கள். ( நூல்: புகாரி  

எப்போது பெயர் சூட்ட வேண்டும்

فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ إِنِّي وَضَعْتُهَا أُنْثَى وَاللَّهُ أَعْلَمُ بِمَا وَضَعَتْ وَلَيْسَ الذَّكَرُ كَالْأُنْثَى وَإِنِّي سَمَّيْتُهَا مَرْيَمَ وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

இம்ரானின் மனைவி ”அவர் (குழந்தையை) பெற்றெடுத்த போது என் இறைவா பெண் குழந்தையாக ஈன்றெடுத்துவிட்டேன் எனக் கூறினார். அவர் எதை பெற்றெடுத்தார் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான்.ஆண் பெண்ணைப் போன்றவன் அல்ல. நான் இவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். விரட்டப்பட்ட ஷைய்தானை விட்டும் இவளுக்கும் இவளுடைய வழி தோன்றல்களுக்கும் உன் பாதுகாப்பை வேண்டுகிறேன் எனவும் அவர் கூறினார். ( அல்குர்ஆன் 3 : 36 )

وروينا في سنن أبي داود والترمذي والنسائي وابن ماجه وغيرهما، بالأسانيد الصحيحة، 

 سمرة بن جُندب رضي اللّه عنه؛

أن رسول اللّه صلى اللّه عليه وسلم قال‏:‏ ‏"‏كُلُّ غُلامٍ رَهِينٌ بِعَقِيقَتِهِ تُذْبَحُ عَنْهُ يَوْمَ سابِعِهِ، ويُحْلَقُ، وَيُسَمَّى"

ஸமுரா இப்னு ஜுந்துப் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “ஓவ்வொரு குழந்தையும் அகீகாவுடன் பிணைக்கப்பட்டுள்ளது. அது பிறந்த ஏழாம் நாளில் அதற்காக (ஆடு) அறுக்கப்படும். அதை விட்டு நோவினை (தலை முடி) அகற்றப்படும். அதற்கு பெயரும் வைக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல் : அஹ்மத் ( 19327 )

குழந்தை பிறந்த பிறகும் பெயர் சூட்டலாம் என மேலுள்ள வசனத்திலிருந்தும்

ஏழாவது நாள் குழந்தைக்குப் பெயர் வைக்கப்பட வேண்டும் என்று இந்த ஹதீஸில் வந்துள்ளது. இதனடிப்படையில் குழந்தை பிறந்த அன்றும், ஏழாவது நாளும் பெயர் சூட்டலாம் என்று அறிய முடிகின்றது.

எனவே, அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் விரும்பும் பெயர்களை சூட்டுவோம்! இஸ்லாமிய அடையாளத்தை பெயரில் வெளிப்படுத்தி மகிழ்வோம்!!!

Tuesday, 2 March 2021

 

புறம் பேசுவதை புறந்தள்ளுவோம்!!

 

 

 

படைப்பினங்களிலேயே ஆக உயர்ந்த படைப்பாக அல்லாஹ் மனிதனைப் படைத்திருக்கின்றான். அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட மனிதனுக்கு அளவில் மிகச்சிறியதாக இருக்கும் நாவை வழங்கி பேசும் ஆற்றலை தந்திருக்கின்றான்.

அளவில் சிறிதாக இருக்கும் நாவினால் மனிதன் சில நேரங்களில் மேன்மையடைகின்றான். ஆனால் பல நேரங்களில் சிறுமையடைந்தும் விடுகின்றான்.

உலகில் நிகழும் பல பிரச்சனைகளுக்கு மூல காரணமாக இருப்பது என்னவோ இந்த நாவு தான் என்றால் அது மிகையாகாது. இந்த நாவின் மூலம் பல குடும்பங்களுக்கிடையே பிரிவுகளும், பல சமூகங்களுக்கிடையே பெரும் போர்களும் அழிவுகளும் ஏற்பட்டிருக்கின்றன. அதே போல் மிகப் பெரிய சமுதாய எழுச்சிகளும், புரட்சிகளும் ஏற்பட்டிருக்கின்றன.

எனவே நாம் இந்த நாவைப் பயன்படுத்துவதைப் பொறுத்து அதன் விளைவு ஆக்கப் பூர்வமானதாகவோ அல்லது அழிவைத் தரக்கூடியதாகவோ அமைகிறது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: “ஒரு அடியான் அல்லாஹ் திருப்தியுறும் வார்த்தையைக் கூறுகிறார். (ஆனால்) அதனுடைய சக்தியைப் பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை. இதன் காரணமாக அல்லாஹ் அவனுடைய அந்தஸ்த்தை உயர்த்துகிறான். இன்னொரு மனிதன் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய வார்த்தையை பேசுகிறான். (ஆனால்) அவன் அதனுடைய சக்தியை எண்ணிப் பார்ப்பதில்லை. இதன் காரணமாக அல்லாஹ் அவனை நரகத்தில் எறிகிறான்”. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )

நம் வாயிலிருந்து வெளியாகும் அனைத்து வார்த்தைகளும் பதிவு செய்யப்படுகின்றது:

அல்லாஹ் கூறுகிறான்: “(மனிதன்) எதைக் கூறியபோதிலும் அதனை எழுதக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. (அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகின்றது.)  ( அல்குர்ஆன்: 50:18 )

இறைவனால் நியமிக்கப்பட்டிருக்கும் வானவர்கள் கன நேரம் கூட தவறாமல் நம்மைக் கண்கானித்துக் கொண்டு இருக்கின்றார்கள். மேலும், நம்முடைய அனைத்துச் செயல்களையும் பதிவு செய்து கொண்டும் இருக்கின்றனர்.

மேலும் நம் வாயிலிருந்து உதிரும் அனைத்து வார்த்தைகளையும் ஒன்று கூட விடாமல் பதிவு செய்கின்றனர்.

எனவே,அல்லாஹ் மறுமையில் இவை குறித்து நிச்சயமாக நம்மிடம் கேள்வி கேட்பான் என்பதை முஸ்லிமான ஒவ்வொருவரும் நன்கு புரிந்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய ஜும்ஆவில் நாம் இன்று மக்களிடையே புறையோடியிருக்கிற ஒரு தீய குணம் குறித்துப் பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.

நாம் வாழ்கிற இக்காலக் கட்டத்தில் பிறர் பற்றி புறம் பேசுவது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.

புறம் பேசுதல் (Gossip). ஒரு போதையாக மாறிவிட்ட காலம் இது. போதைப் பழக்கம், போதைக்கு அடிமையாகி இருப்பவரை மட்டுமின்றி அவரைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிப்பதைப் போல, புறம் பேசுதலும் பேசுபவரை மட்டுமில்லாமல் அவரைச் சுற்றி இருப்போரையும் பாதிக்கிறது.

உலக அளவில் 60 சதவீதம் மக்கள் ஒருவரைப் பற்றி மற்றவர் ஏதேனும் ஒன்றைப் பேசுகிறார்கள் என்கிறது மேலை நாட்டு ஆய்வு ஒன்று. மேலும், சிலர் மற்றவர்களைப் பற்றி தாழ்வாக பேசுவது தங்களை உயர்வாக நினைக்கச் செய்யும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். உண்மையில் புறம் பேசுபவர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்ளவே செய்கிறார்கள். இவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல என்ற எண்ணத் தைத்தான் பிறர் மனதில் விதைக்கிறார்கள் என்கிறது அந்த ஆய்வின் முடிவு.

ஒருவர் இன்னொருவர் பற்றி புறம் பேசுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றது, மிக முக்கியமாகக் கருதப்படும் இரு காரணங்களை நாம் அறிவது அவசியமாகும்.

பொறாமை, முக்கியத்துவ உணர்வு என்ற இரு காரணங்களே அவையாகும்.

நொடிப் பொழுதில் நிகழ்ந்துவிடும் தன்மைகொண்டது பொறாமை. தன்னிடம் இல்லாத ஒன்று பிறரிடம் இருக்கும்போது, அவர்மீது பொறாமை ஏற்படுகிறது. அவரிடத்தில் இருக்கும் அந்த ஒன்றோ அதைபோல் வேறு ஒன்றோ கிடைத்தால் அன்றி, பொறாமை போகாது. அல்லது அவர்களிடத்தில் அதைப் பற்றிய மதிப்பு குறைய வேண்டும் என்ற நோக்கில் அவரைப் பற்றி பிறரிடம் நாம் புறம் பேசுவோம்.

நாம் இருக்கும் இடத்தில் எப்போதுமே ஓர் முக்கியத்துவ உணர்வைப் பெற விரும்புகிறோம். நாம் குடும்பத்தில், பணிபுரியும் இடத்தில், நண்பர்கள் மத்தியில், சுற்றி இருப்பவர்கள் மத்தியில், 'சிறந்தவர்' என்ற உணர்வைப் பெற விரும்புகிறோம். இந்த உணர்வை எல்லா இடத்திலும் நாம் எதிர்பார்ப்பதில்லை. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் மத்தியில் மட்டுமே எதிர்பார்கிறோம். அப்படி நாம் பெற்றிருக்கும் இந்தச் சிறப்பை நாம் இழந்து அந்த இடத்திற்கு இன்னொருவர் வந்து விடுவார் என்று அஞ்சுகிற பொழுதோ அல்லது இன்னொருவர் வந்து விட்டாலோ அவர் குறித்து நாம் குறை கூறுவோம், புறம் பேசுவோம் 

பொறாமையாலும், முக்கியத்துவ உணர்வாலும் ஈமானை இழந்த அப்துல்லாஹ் இப்னு உபை..

وزيد بن أرقم ونفر من الأنصار عند عبد الله بن أبي-فلما سمعها قال: قد ثاورُونا في بلادنا. والله ما مثلُنا وجلابيب قريش هذه إلا كما قال القائل: "سَمن كلبك يأكلك". والله لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل. ثم أقبل على من عنده من قومه وقال: هذا ما صنعتم بأنفسكم، أحللتموهم بلادكم، وقاسمتموهم أموالكم، أما والله لو كففتم عنهم لتحولوا عنكم في بلادكم إلى غيرها. فسمعها زيد ابن أرقم، فذهب بها إلى رسول الله صلى الله عليه وسلم وهو غُلَيّمٌ -وعنده عمر بن الخطاب رضي الله عنه-فأخبره الخبر، فقال عمر رضي الله عنه: يا رسول الله مر عَبّاد بن بشرْ  فليضرب عنقه. فقال صلى الله عليه وسلم: "فكيف إذا تحدث الناس -يا عمر-أن محمدا يقتل أصحابه؟ لا ولكن ناد يا عمر في الرحيل".

فلما بلغ عبد الله بن أبي أن ذلك قد بلغ رسولَ الله صلى الله عليه وسلم، أتاه فاعتذر إليه، وحلف بالله ما قال ما قال عليه زيد بن أرقم -وكان عند قومه بمكان-فقالوا: يا رسول الله، عسى أن يكون هذا الغلام أوهم ولم يثبت ما قال الرجل.

وراح رسول الله صلى الله عليه وسلم مُهجرًا في ساعة كان لا يروح فيها، فلقيه أسيد بن الحضير فسلم عليه بتحية النبوة، ثم قال: والله لقد رُحتَ في ساعة مُنكَرَة ما كنت تروح فيها. فقال رسول الله صلى الله عليه وسلم: "أما بلغك  ما قال صاحبك ابن أبي؟. زعم أنه إذا قدم المدينة سيخرج الأعز منها الأذل". قال: فأنت -يا رسول الله-العزيزُ وهو الذليل. ثم قال: يا رسول الله ارفق به فوالله لقد جاء الله بك وإنا لننظم له الخَرزَ لِنُتَوّجه، فإنه ليرى  أن قد استلبتَه ملكا.

فسار رسول الله صلى الله عليه وسلم بالناس حتى أمسوا، ليلته حتى أصبحوا، وصَدرَ يومه حتى اشتد الضحى. ثم نزل بالناس ليشغلهم عما كان من الحديث، فلم يأمن الناس أن وجدوا مَس الأرض فناموا، ونزلت سورة المنافقين

அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூல் என்பவனுக்கு  நபி (ஸல்) அவர்கள் மீது விரோதம் இருந்தது. காரணம் மதீனாவின் மக்கள் அவனைத் தங்களின் தலைவராக ஏற்க இருந்த நிலையில்தான் நபி {ஸல்} மதீனாவிற்குக் குடிபெயர்ந்தார்கள். சூழல் மாறியது. மக்கள் அவனைத் தலைவராக ஏற்கவில்லை.

இதனை மனதில் வைத்திருந்த அப்துல்லாஹ் இப்னு உபை சின்ன விஷயங்களைப் பெரிதுபடுத்திக் கொண்டிருந்தான். மதீனாவாசிகளிடம், “நமது ஊருக்கு வந்த வந்தேறிகள் நம்மையே மிகைத்து விட்டார்கள். நாயை நல்ல கொழுக்க வளர்த்தால், அது இறுதியில் நம்மையே தின்றுவிடும். இழிவானவர்களை மதீனாவிலிருந்து வெளியேற்ற வேண்டும். நீங்கள் அவர்களுக்குக் கொடுப்பதை நிறுத்திக் கொண்டால் அவர்கள் உங்களை விட்டுவிட்டு வேறு ஊருக்குச் சென்று விடுவார்கள்என்று நபிகளாரைப் பற்றி அவதூறு கூறினான் அப்துல்லாஹ் இப்னு உபை.

அக்கூட்டத்தில் இருந்த ஜைது இப்னு அர்கம் (ரலி) இதைக் கேட்டு நபி (ஸல்} அவர்களிடம் அதைச் சொல்லிவிட்டார். உஸைது (ரலி) என்பவர், அப்துல்லாஹ் இப்னு உபை ஏன் நபிகளார் மீது வெறுப்புக் கொண்டார் என்று விளக்கி நபிகளாரைச் சாந்தப்படுத்தினார். இருப்பினும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு உபைக்கு ஆளனுப்பினார்கள்.

அவனிடம் அது குறித்துக் கேட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு உபை நபியவர்களைச் சந்தித்து, தான் அப்படி எதுவும் பேசவில்லை என்று சத்தியம் செய்து கூறினான். ஜைது இப்னு அர்கம் பொய்யர், சரியாக விளங்கி இருக்கமாட்டார் அல்லது சரியாக நினைவில் வைக்கத் தெரியாதவர்என்றெல்லாம் அப்துல்லாஹ் இப்னு உபைக்குச் சாதகமாகச் சிலரும் பேசினர்.

நபிகளாரும் அப்துல்லாஹ் இப்னு உபையை நம்பினார்கள், ஜைது இப்னு அர்கம் பொய் சொல்வதாக எண்ணினார்கள். அப்போது அல்லாஹ் இறை வசனங்களை அனுப்பினான்.

அதில், “நாங்கள் மதீனாவுக்குத் திரும்புவோமானால், கண்ணியமானவர்கள் தாழ்ந்தவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றிவிடுவார்கள்' என்று அவர்கள் கூறுகின்றனர்; ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஸ்லிம்களுக்குமே உரியது; எனினும், இந்நயவஞ்சகர்கள் அதை அறிந்து கொள்ளமாட்டார்கள்என்ற வசனத்தின் மூலம் ஸைது இப்னு அர்கம் சொன்னதை உண்மை என்று இறைவன் தெளிவுபடுத்தினான். அதனை நபி முஹம்மது(ஸல்) ஸைது இப்னு அர்கத்தை அழைத்து ஓதிக் காட்டினார்கள். ( இப்னு கஸீர் )

رواه الإمام البخاري رحمه الله تعالى في صحيحه عن أسامة بن زيد أن نبي الله ﷺ ركب على حمار على قطيفة فدكية، وأردف أسامة بن زيد وراءه؛ يعود سعد بن عبادة في بني الحارث بن الخزرج قبل وقعت بدر حتى مر بمجلس فيه عبد الله بن أبي بن سلول قبل أن يسلم عبد الله بن أبي أي يتظاهر بالإسلام، فإذا في المجلس أخلاط من المسلمين ومن المشركين عبدة الأوثان، واليهودن والمسلمين، وفي المجلس عبد الله بن رواحة فلما غشيت المجلس عجاجة الدابة، لما غشيت المجلس عجاجة الدابة خمر عبد الله بن أبي أنفه بردائه ثم قال: لا تغبروا علينا، فسلم رسول الله ﷺ، ثم وقف فنزل فدعاهم إلى الله، وقرأ عليهم القرآن، فقال عبد الله بن أبي بن سلول: أيها المرء إنه لا أحسن مما تقول إن كان حقا فلا تؤذنا به في مجلسنا، إرجع إلى رحلك إنه لا أحسن مما تقول إن كان حقا فلا تؤذنا به في مجلسنا، فلا تؤذنا به في مجلسنا، إرجع إلى رحلك، فمن جاءك فاقصص عليه، فقال عبد الله بن رواحة: "بلى يا رسول الله فاغشنا به في مجالسنا فإنا نحب ذلك" فاستب المسلمون، والمشركون، واليهود حتى كادوا يتثاورون، فلم يزل النبي ﷺ يخفضهم، حتى سكنوا، ثم ركب النبي ﷺ دابته حتى دخل على سعد بن عبادة، فقال له النبي ﷺيا سعد ألم تسمع ما قال أبو حباب، يريد عبد الله بن أبي قال كذا وكذاقال سعد بن عبادة: "اعف عنه واصفح عنه فوالذي أنزل عليك الكتاب لقد جاء الله بالحق الذي أنزل عليك لقد اصطلح أهل هذه البحيرة أي البلدة وهي يثرب التي صارت المدينة وطيبة على أن يتوجوه فيعصبوه بالعصابة أي يتوجوا عبد الله بن أبي ملكا عليهم فلما أبى الله ذلك فاتت الفرصة على عبد الله بن أبي وفاته الملك للإسلام الذي جاء فلما أبى الله ذلك بالحق الذي أعطاك الله شرق بذلك غص به وكرهه فذلك فعل به ما رأيت" فعفى عنه رسول الله ﷺ

நபி (ஸல்) அவர்கள் கழுதையொன்றில் சேணம் விரித்து, அதில் ஃபதக்நகர் முரட்டுத் துணி விரித்து, அதில் அமர்ந்தவாறு பயணமானார்கள். என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டார்கள். இப்னு கஸ்ரஜ் குலத்தாரிடையே (உடல் நலமில்லாமல்) இருந்த ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். இது பத்ருப் போர் நிகழ்ச்சிக்கு முன்னால் நடந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் ஓர் அவையைக் கடந்து சென்றார்கள்.

அந்த அவையில் முஸ்லிம்களும் சிலை வணங்கிகளான இணைவைப்போரும் யூதர்களும் கலந்து இருந்தார்கள். அவர்களிடையே (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூலும் இருந்தார். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களும் இருந்தார்கள். (எங்கள்) வாகனப் பிராணியின் (காலடிப்) புழுதி அந்த அவையைச் சூழ்ந்தபோது அப்துல்லாஹ் இப்னு உபை தம் மேல் துண்டால் தம் மூக்கைப் பொத்திக்கொண்டு, ‘எங்களின் மீது புழுதியைக் கிளப்பாதீர்கள்என்றார்.

நபி (ஸல்) அவர்கள் அந்த அவையோருக்கு சலாம் சொன்னார்கள். பிறகு, தம் வாகனத்தை நிறுத்தி இறங்கி, அவர்களை அல்லாஹ்வின் (மார்க்கத்தின்) பால் அழைத்தார்கள். அவர்களுக்குக் குர்ஆன் (வசனங்களை) ஓதியும் காட்டினார்கள். அப்போது அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூல், ‘மனிதரே! நீர் கூறுகிற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை.

(ஆனாலும்,) அதை எங்களுடைய (இது போன்ற) அவைகளில் கூறி எங்களுக்குத் தொல்லை கொடுக்காதீர். உம்முடைய இருப்பிடத்திற்குச் செல்லும். எங்களில் யார் உம்மிடம் வருகிறார்களோ அவர்களுக்கு (இதை) எடுத்துச் சொல்லும்என்றார். (இதைக் கேட்ட) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள், ‘(ஆம். இறைத்தூதர் அவர்களே! இதை) எங்கள் அவைகளில் வெளிப்படுத்துங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகிறோம்என்றார்கள்.

 இதையடுத்து முஸ்லிம்களும் இணைவைப்போரும் யூதர்களும் ஒருவரையொருவர் ஏசிக்கொண்டே ஒருவர் மீதொருவர் பாய்ந்து (தாக்கிக்) கொள்ள முனைந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்கள் அனைவரும் மௌனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள். (அமைதி ஏற்பட்ட) பிறகு தம் வாகனத்திலேறி (உடல் நலமில்லாமல் இருந்த) ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்களிடம் சென்று, ‘சஅதே! அபூ ஹுபாப் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா?’ என்று கூறி, ‘அப்துல்லாஹ் இப்னு உபை இப்படி இப்படிக் கூறினார்என்று தெரிவித்தார்கள்.

அதற்கு ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்கள், ‘அவரை மன்னித்துவிட்டு விடுங்கள், இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (மதீனா) நகர வாசிகள் அவருக்குக் கீரிடம் அணிவித்து அவருக்கு முடி சூட்டிட முடிவு செய்திருந்த நிலையில் தான் அல்லாஹ் தங்களுக்கு இ(ந்த மார்க்கத்)தை வழங்கினான். அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய சத்தியத்தின் மூலம் அவர்களின் முடிவை அவன் நிராகரித்தபோது அதனால் அவர் பொருமினார். அதுதான் தாங்கள் பார்த்தபடி அவர் நடந்து கொண்டதற்குக் காரணம்என்று கூறினார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வை மன்னித்தார்கள். ( நூல்: புகாரி )

திருவள்ளுவர் கூட புறங்கூறாமை என்ற தலைப்பில் புறம் கூறுதலின் தீமை குறித்து பல்வேறு விஷயங்களைக் கூறுகின்றார்.

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.

ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், யாரையும் புறம் கூற மாட்டான் என உலகத்தாரால் சொல்லப்படுதல் மிக்க நன்று.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்.

புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.

ஒரு முஸ்லிம் புறம் பேசுவதை விட்டும் தவிர்ந்திருக்க வேண்டுமெனில், முதலில் அவர், புறம் பேசுதல் என்றால் என்ன? அதனால் ஏற்படும் தீமைகள் என்ன? புறம் பேசும் ஒருவனுக்கு இம்மை மற்றும் மறுமையில் கிடைக்கும் தண்டனைகள் யாவை? என்பதை அறிந்துக் கொள்ள முன் வர வேண்டும்.

புறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். உலகில் வாழும் காலங்களிலும் மரணித்த பிறகு கப்ரிலும், மறுமையிலும் மிகக் கொடிய தண்டனைகளைப் பெற்றுத் தரும் மிக மிக தீயப் பண்பான புறம் பேசுவதை விட்டும் நிச்சயம் ஒரு இறைநம்பிக்கையாளர் தவிர்ந்திருக்க வேண்டும்.

புறம் பேசுதல் என்றால் என்ன?

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ (12)

அல்லாஹ் கூறுகிறான்:-முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.”                ( அல்குர்ஆன்:  49:12 )

அல்லாஹ் கூறுகிறான்:-குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். ( அல்குர்ஆன்: 104:1 )

رواه أبو داود: حدثنا القَعْنَبِي، حدثنا عبد العزيز بن محمد، عن العلاء، عن أبيه، عن أبي هريرة (5) قال: قيل: يا رسول الله، ما الغيبة؟ قال: "ذكرك أخاك بما يكره". قيل: أفرأيت إن كان في أخي ما أقول؟ قال: "إن كان فيه ما تقول فقد اغتبته، وإن لم يكن فيه ما تقول فقد بهته".

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: “(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும்" என்று பதிலளித்தார்கள். அப்போது, "நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா? (புறம் பேசுதலாக ஆகும்), கூறுங்கள்" என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான், நீர் அவரைப் பற்றிப் புறம் பேசினீர் என்றாகும். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டாலோ, நீர் அவரைப் பற்றி அவதூறு சொன்னவராவீர்" என்று கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் 5048 )

ஒரு மனிதர் இன்னொருவரைப் பற்றி அவர் அங்கில்லாத போது குறை கூறுகின்றபோது குறை கூறப்படுகின்ற மனிதனால் நிச்சயமாக அதைத் தடுக்க முடியாது. இதே போன்று தான் மரணித்த ஒருவரின் மாமிசத்தை வெட்டும் போதும் மரணித்தவனால் அதனை தடுக்கமுடியாது! புறம் பேசுவதும் இதே போன்று ஒரு கொடுமையான செயல் என்பதை நாம் விளங்க முடியும். மேலும் வசனத்தின் இறுதியில் அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள் என அல்லாஹ் கூறுகின்றான். இதன் மூலம், பிறரின் குறைகளை கூறி புறம்பேசுவதை விட்டும் அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள்ள வேண்டும். இவ்வாறு குறை கூறி இருந்தால் இத்தகைய பெரும்பாவத்திலிருந்து மீண்டு வந்து தவ்பா செய்ய வேண்டும் என்பதை இவ்வசனம் போதிக்கின்றது.

ஒரு முஸ்லிம், பிற முஸ்லிமின் கண்ணியத்தைக் குழைக்கும் வகையில் புறம் பேசக் கூடாது:-

حدثنا واصل بن عبد الأعلى، حدثنا أسباط بن محمد، عن هشام بن سعد، عن زيد بن أسلم، عن أبي صالح، عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: "كل المسلم على المسلم حرام: ماله وعرضه ودمه، حسب امرىء من الشر أن يحقر أخاه المسلم".

ஒவ்வொரு முஸ்லிமும் பிற முஸ்லிமின் மீது அவருடைய இரத்தம், கண்ணியம், பொருள் இவற்றை களங்கப்படுத்துவது ஹராமாகும்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                                                                                          ( நூல்: முஸ்லிம் )

புறம் பேசுவதால் இம்மையில் ஏற்படும் தீமைகள்:-

وحدثنا عثمان بن أبي شيبة  ، حدثنا الأسود بن عامر، حدثنا أبو بكر بن عياش، عن الأعمش، عن سعيد بن عبد الله بن جريج، عن أبي برزة الأسلمي قال: قال رسول الله صلى الله عليه وسلم: "يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبه، لا تغتابوا المسلمين، ولا تتبعوا عوراتهم، فإنه من يتبع عوراتهم يتبع الله عورته ومن يتبع الله عورته يفضحه في بيته".

ஒரு முறை நபி {ஸல்} அவர்கள் தமது உரையின் போது, “உள்ளத்தில் இல்லாது உதட்டால் நம்பிக்கை கொண்டவர்களே! முஸ்லிம்களைப் பற்றியும் புறம் பேசாதீர்கள்; அவர்களது குறைகளை ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; யார் மற்றவர்களின் குறைகளைத் தேடி திரிகின்றாரோ, அவர்களது குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிப்பான். யாருடைய குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிக்கின்றானோ அவர்கள் தமது வீட்டில் செய்யும் குறைகளையும் பகிரங்கமாக்கி அவர்களை இழிவுபடுத்தி விடுவான்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: அஹ்மத்)

 

1)   புறம் பேசுவதன் மூலம் குடும்பங்களுக்கிடையே, உறவினர்களுக்கிடையே, நண்பர்களுக்கிடையே சண்டை, சச்சரவுகள், தகராறுகள் ஏற்படுகிறது.

2)   அதன் மூலம் அழகிய உறவுகள் அறுபட்டு முறிந்து போகின்றது.

3) ஒரு சபையில் பிறரைப் பற்றிப் புறம் பேசப்படும் போது, அவர் சமுதாயத்தின் முக்கியஸ்தராக, மார்க்க அறிஞராக இருந்தால் அது சமுதாய மக்களுக்கிடையே பிளவை உண்டாக்குகிறது.

4) சமுதாயம் பிளவு படுவதன் மூலம் முஸ்லிம்களிடையே பலபிரிவுகள் ஏற்பட்டு, முஸ்லிம் சமுதாயம் பலவீன மடைகிறது.

5) முஸ்லிம் சமுதாயம் பலவீணமடைவதால் எதிரிகளால் ஆக்ரமிக்கப்பட்டு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் பாதிப்படைகிறது.

புறம் பேசுவதால் மரணததிற்குப்பிறகு கப்ரிலும், மறுமையிலும் கிடைக்கும் தண்டனைகள்: -

கப்ரில் கிடைக்கும் தண்டனைகள்: -

عن ابن عباس قال : مرَّ رسول الله صلَّى الله عليه وسلم على قبرين فقال : أما إنَّهما ليُعذَّبان وما يعذبان في كبير ، أما أحدهما فكان يمشي بالنميمة ، وأما الآخر فكان لا يستتر من بوله ، قال : فدعا بعسيبٍ رطْبٍ فشقه باثنين ثم غرس على هذا واحداً وعلى هذا واحداً ثم قال لعله أن يخفف عنهما ما لم ييبسا .  رواه البخاري ومسلم

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: நபி {ஸல்} அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்தபோது, கப்ரில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது, 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை" என்று சொல்லிவிட்டு, 'இருப்பினும் (அது பெரிய விஷயம்தான்) அவ்விருவரில் ஒருவர், தாம் சிறு நீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்' என்று கூறிவிட்டு ஒரு பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி {ஸல்} அவர்களிடம் 'நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' என்று கேட்கப்பட்டதற்கு, 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.  ( நூல்: புஹாரி 216, 218 )

மறுமையில் கிடைக்கும் தண்டனைகள்: -

1) மனித மாமிசத்தை சாப்பிடுவார்கள்: -

حدثنا ابن مصفى، حدثنا بقية وأبو المغيرة قالا حدثنا صفوان، حدثني راشد بن سعد وعبد الرحمن بن جبير، عن أنس بن مالك قال: قال رسول الله صلى الله عليه وسلم: "لما عُرِج بي مررت بقوم لهم أظفار من نحاس، يخمشون وجوههم وصدورهم، قلت: من هؤلاء يا جبرائيل ؟ قال: هؤلاء الذين يأكلون لحوم الناس، ويقعون في أعراضهم".

அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்:  மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஜிப்ரீலே, அவர்கள் யார்?என்று கேட்டேன். இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (புறம் பேசியவர்கள்) மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள்என்று விளக்கமளித்தார்கள்.  ( நூல்;: அஹ்மது, அபூதாவூத் ) 

2) புறம் பேசுபவன் சுவனம் நுழையமாட்டான்: -

புறம் பேசுபவன் சுவனம் நுழைய மாட்டான்என நபி {ஸல்} அவர்கள் நவின்றார்கள். ( நூல்: முஸ்லிம் )

3)   மறுமையில் ஒன்றுமே ஈடாகாது

.قال صلى الله عليه وسلم : (( أتدرون من المفلس؟ قالوا: المفلس فينا من لا درهم له ولا متاع ، قال : المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاة وزكاة وصيام ، وقد شتم هذا وضرب هذا وأكل مال هذا ، فيأخذ هذا من حسناته ، وهذا من حسناته ، فإن فنيت حسناتهم أخذ من سيئاتهم فطرحت عليه ثم طرح في النار)) .

நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடத்தில், ‘உங்களில் நஷ்டவாளி யார் என்று தெரியுமா? என்று கேட்டார்கள். (அதற்கு அவர்கள்) எங்களில் (எவர்களிடத்தில்) தீனாரும் உலகத்தில் வாழ்வதற்கு வசதிவாய்ப்பும் இல்லையோ அவர்களே நஷ்டவாளி என்று குறிப்பிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘மறுமை நாளில் ஒரு மனிதன் தொழுகை, நோன்பு, ஜக்காத் போன்ற நல்லறங்களுடன் வருவான். ஆனால் பலர் வந்து, ‘இவன் என்னை ஏசியவன், நான் செய்யாத விஷயத்தை என் மீது சுமத்தியவன், எனது செல்வத்தை சாப்பிட்டவன், இரத்தங்கள் ஓட்டியவன், அடித்தவன் என்றெல்லாம் அவனுக்கு எதிராக மனிதர்கள் முறையீடு செய்வார்கள். அப்போது அவன் இவ்வுலகில் செய்த நல்லமல்களை எடுத்து அவர்களுக்கு கொடுக்கப்படும். நல்லமல்கள் முடிந்த பிறகு அவர்களின் தீமைகளிலிருந்து எடுக்கப்பட்டு இம்மனிதனுக்கு கொடுக்கப்படும். இவ்வாறு அவன் நரகத்திற்கு நுழைவிக்கப்படுவான். (ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)

புறம் பேசுவதைத் தவிர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள்: -

ஒருவர் புறம் பேசுவதன் தீமைகளை அறிந்து அதைத் தவிர்ந்தவர்களாக, யாரைப் பற்றிப் புறம் பேசினார்களோ அவரிடம் மன்னிப்புக் கோரவேண்டும். பின்னர் மனந்திருந்தியவராக அழுது மன்றாடி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரவேண்டும்.

قُلْ يَاعِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ (53) وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنْصَرُونَ (54)

அல்லாஹ் கூறுகிறான்:- என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம்; நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான்; நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்து விட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்”.  ( அல்குர்ஆன்: 39:53-54 )

ஆகவே, நாவைப் பேணுவதோடு புறம் பேசுவதால் ஏற்படும் தண்டனைகளின்ம் உணர்ந்து, பொறுப்புணர்வோடும் பொதுவெளியில் பேசுவோம்! புறம் பேசுவதை புறந்தள்ளுவோம்!!!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் புறம் பேசுதல் எனும் தீய பண்பிலிருந்து நம் அனைவரையும் காத்தருள்வானாக!!! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!