Thursday 4 March 2021

 

இஸ்லாமிய அடையாளத்துடன் பெயர் சூட்டுவோம்!!!

 


நவீனம் இன்றைய உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்று மனித சமூகம் பயணிக்கிற எல்லாத் துறைகளும் நவீன மயமாக்கலை நோக்கி நகர்த்தப்படுகின்றது.

பிரச்சனைகளைக் கூட நவீன பிரச்சனை என்றும், கண்டு பிடிப்புகளைக் கூட நவீன கண்டுபிடிப்பு, நவீன மருத்துவம், நவீன வாகனம், நவீன தீர்வு என்று அழைக்கத் துவங்கி இன்றைய உலகையே நவீன உலகு என்றே கூறுகின்றோம்.

முஸ்லிம் சமூகத்தின் வாழ்விலும் நவீனங்கள் பிரதி பலிக்கத் துவங்கி விட்டன. பழக்கவழக்கங்கள், நடைமுறை, உணவு, உடை, கலாச்சாரம், திருமணம், பேச்சு, எழுத்து, இலக்கணம் என எல்லாமும் நவீனமாகக் காட்சியளிக்கிறது.

இஸ்லாம் நவீனத்தை விரும்புகின்றதா? அல்லது தடை செய்கின்றதா? என்று உற்று நோக்கினால் ஒரு விஷயம் அது புதிதாக, நவீனமாக இருக்கின்றது என்பதற்காக மட்டுமே இஸ்லாம் அதைத் தடை செய்யாது.

நபி {ஸல்} அவர்கள் வாழ்ந்த காலத்தில் அரேபிய தீபகற்பத்திற்கு வெளியே இருந்து வந்த பல புதிய விஷயங்களை, நடைமுறைகளை நபி {ஸல்} அவர்கள் அங்கீகரித்தார்கள்.

நேர்வழி நின்ற கலீஃபாக்களும் தங்களின் ஆட்சிகாலத்தில் உலக நாடுகளில் காணப்பட்ட பல்வேறு புதிய நடைமுறைகளை அங்கீகரித்தார்கள். பின் நாளில் அப்பாஸிய ஆட்சியாளர்கள் பல்வேறு புதிய நடைமுறைகளை அங்கீகரித்ததால்இஸ்லாமிய உலகுஅடைந்த அறிவும், ஞானமும் அளப்பரியது.

எனவே, நவீனங்களை ஏற்றுக் கொள்வதிலும், தடை செய்வதிலும் இஸ்லாத்தின் பார்வை மிகத் தெளிவானதும், விசாலமானதும் ஆகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போதுள்ள முஸ்லிம் சமூகம் நவீனம் என்ற பெயரில் உள்வாங்கியிருக்கிற (வீனங்கள்) டைமுறைகள் பலது இஸ்லாம் கடுமையாக விமர்சித்ததும் தடை செய்ததும் ஆகும்.

அதில் ஒன்று குழந்தைகளுக்கு நவீனமாக பெயர் சூட்டுவது எனும் நடைமுறையாகும்.

ஸ்டைலாக, அழகாக, புதிதாக, யாருமே வைக்காத பெயராக இருக்க வேண்டும் என்று விரும்பி ஆன்லைனில் தேடித் தேடி சூட்டுகின்றனர்.

ஆனால், அந்தப் பெயர்கள் எல்லாம் ஒன்று அர்த்தம் இல்லாதவைகளாக அல்லது சகோதர சமய மக்கள் சூட்டும் பெயராக அல்லது தரமற்ற அர்த்தம் உள்ளவைகளாக இருப்பதை பார்க்க முடிகின்றது.

பெயரிடுவதும்பெயர் சூட்டுதலும் 

பொதுவாக இருக்கின்ற ஒன்றை குறிப்பிடுவதற்கும், அதை ஞாபகம் வைத்துக் கொள்வதற்கும், அதை முறையோடு அழைப்பதற்கும் பயன்படுவதே பெயர்கள்.

இந்த உலகில் மனிதன் பார்த்தும், கேட்டும், அறிந்தும் வைத்திருக்கின்ற எந்த ஒன்றும் பெயர் சூட்டப்படாத நிலையில் இல்லை.

இந்த உலகில் நாம் காண்கிற எல்லாவற்றிற்கும் ஒரு பெயர் இருக்கின்றது. இன்று புயலுக்கு, இயற்கை சீற்றத்துக்கு, புதிதாகக் கண்டறியப்படும் உயிரினங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு பெயர் சூட்டப்படுகிறது 

பெயரிடுதல் என்பது ஒன்றின் அடையாளம், பெயரிடுதல் என்பது ஒன்றின் முகவரியாகும்.

பெயர் சூட்டும் முறை என்பது சாதி, சமயம், சமூகம், நாடு, புவியியல் சார்ந்து பல்வேறு நடைமுறைகள் கையாளப்படுகின்றன. ஒவ்வொரு சமூகத்திற்கும் பெயர் வைப்பதற்கென தனித்தன்மைகள் இருக்கின்றன.

பெயர் சூட்டுதலை அவசியம் என்று உணர்ந்திருக்கும் நாம் எதை பெயராகச் சூட்டுவது, எந்த வார்த்தையை தேர்ந்தெடுப்பது, பொறுத்தமானது தானா? என்பதை அறிந்து பெயர் சூட்டுவதில்லை.

இஸ்லாம் பெயர் சூட்டுதல் குறித்து மிகத் தெளிவான, அழகான வழிக்காட்டலை வழங்கி இருக்கின்றது.

பெயர் சூட்டுதல் என்பது இபாதத் ஆகும்.

பொதுவாக மனிதர்கள் எல்லா விஷயங்களையும் அழகுற செய்ய வேண்டும் என்றே விரும்புகின்றார்கள். இந்த விதியை அவசியம் தங்களின் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் போதும் கவனிக்க வேண்டும். ஏனென்றால் அழகானதையே அல்லாஹ் விரும்புகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “நிச்சயமாக அல்லாஹ் அழகானவன். அவன் அழகையே விரும்புகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல் : முஸ்லிம் 147 )

عَنْ أَبِي الدَّرْدَاءِ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ وَأَسْمَاءِ آبَائِكُمْ فَحَسِّنُوا أَسْمَاءَكُمْ . أخرجه أحمد

அபூ தர்தா (ரலி) அறிவிக்கின்றார்கள்: “மறுமை நாளில் உங்களுடைய தந்தையின் பெயருடன் உங்ளது பெயரால்  நீங்கள் அழைக்கப்படுவீர்கள். ஆகையால் உங்களது பெயர்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல் : அஹ்மத் 20704 )

وقد روى ابن النجار عن أبي هريرة رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم قال: " من حق الولد على والده أن يعلمه الكتابة، وأن يحسن اسمه، وأن يزوجه إذا بلغ "، وقد رمز الإمام السيوطي لحسن هذا الحديث في كتابه " الجامع الصغير ".

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “பெற்றோர்களுக்கு குழந்தைகளின் மீதான கடமைகள் மூன்றாகும். 1. குழந்தை பிறந்ததும் அழகிய பெயரை சூட்டுவதாகும். 2. பிரித்தரியும் அறிவை அவர்கள் பெற்று விட்டால் குர்ஆனை கற்றுக் கொடுப்பதாகும். 3. திருமண வயதை அடைந்து விட்டால் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாகும்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: ஜாமிவுஸ் ஸஃகீர் )

 

முதல் தரமான பெயர்கள்

عَنْ عُقِيلَ بْنُ شَبِيبٍ عَنْ أَبِي وَهْبٍ الْجُشَمِىِّ وَكَانَتْ لَهُ صُحْبَةٌ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم :تَسَمَّوْا بِأَسْمَاءِ الأَنْبِيَاءِ وَأَحَبُّ الأَسْمَاءِ إِلَى اللهِ عَزَّ وَجَلَّ عَبْدُ اللهِ وَعَبْدُ الرَّحْمَنِ.أخرجه أحمد

உகைல் இப்னு ஷபீப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல் : அஹ்மத் )

أنس بن مالك قال

 قال رسول الله صلى الله عليه وسلم

 ولد لي الليلة غلام فسميته باسم أبي إبراهيم

அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் நபி {ஸல்} அவர்கள் எனக்கு நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்தது நான் அந்த குழந்தைக்கு எனது தந்தை நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் பெயரை சூட்டினேன்என்று கூறினார்கள். ( நூல்: முஸ்லிம்)

 قال البخاريُّ: حدثنا إسحاق ابن نصر 

 حدثنا أبو أسامة قال: حدثني بريد، عن أبي بردة، عن أبي موسى قال: ولد لي غلام، فأتيت به النَّبيَّ صلَّى الله عليه وسلَّم، فسماه إبراهيم، فحنكه بتمرة، ودعا له بالبركة، ودفعه إلي، وكان أكبر ولد أبي موسى.

அபூ மூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “எனக்கு ஆண் குழந்தையொன்று பிறந்தது. அக்குழந்தையை நான் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன். நபி (ஸல்) அவர்கள் அக்குழந்தைக்கு இப்ராஹீம்எனப் பெயர் சூட்டிப் பேரீச்சம் பழத்தை மென்று குழந்தையின் வாயில் அதைத் தடவினார்கள், பின்னர் அருள்வளத்திற்காக துஆச் செய்த பின் என்னிடம் குழந்தையைத் தந்தார்கள். இமாம் புகாரி (ரஹ்) “அபூமூஸாவுடைய மூத்த குழந்தை தான் அதுஎன்று கூறினார்கள்.( நூல் முஸ்லிம் : 4342 )

 يُوسُفُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ سَلَّامٍ قَالَ

 سَمَّانِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوسُفَ

 وَأَقْعَدَنِي عَلَى

 حِجْرِهِ

 وَمَسَحَ عَلَى رَأْسِي

யூஸுஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நபி (ஸல்) அவர்கள் எனக்கு யூசுஃப் என்று பெயர் வைத்து, தங்களது மடியில் அமர வைத்து, எனது தலையை தடவிக்கொடுத்தார்கள். ( நூல் : அஹ்மத் 15809 )

عن النبي ﷺ أنه قال

 تسموا باسمي ولا تكتنوا بكنيتي

அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “அன்சாரிகளில் ஒருவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு முஹம்மத்என்று பெயர் சூட்ட அவர் விரும்பினார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அன்சாரிகள் செய்தது நன்றே. என் பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள். என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்என்று கூறினார்கள். (நூல் : முஸ்லிம் 4324 )

நபிமார்கள், நபித்தோழர்கள், இறைநேசர்கள், நல்லடியார்கள், ஷுஹதாக்களின் பெயர்களை சூட்ட வேண்டும்.

இணைவைப்பு மற்றும் தவறான பொருள் தரும் பெயர்கள், கெட்டவர்களின் பெயர்கள், அல்லாஹ்வுடைய தன்மையைக் குறிக்கும் பெயர்களை சூட்டுவது கூடாது.

عن أبي هريرة رضي الله عنه – ولفظه في البخاري – قال رسول الله صلى الله عليه وسلم : " أخنى الأسماء يوم القيامة عند الله رجل تسمى ملك الملوك " . حديث رقم ( 2606 ) ولفظه في صحيح مسلم : " أغيظ رجل على الله يوم القيامة ، أخبثه واغيظه عليه : رجل كان يسمى ملك الأملاك ، لا ملك إلا الله " .

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: “மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் மிக வெறுப்பிற்குரிய பெயரைக் கொண்டவன் மலிகுல் அம்லாக் (அரசர்களுக்கெல்லாம் அரசன்) என்ற பெயருடையவனாவான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

تحرم التسمية بكل اسم خاص بالله سبحانه وتعالى ، كالخالق والقدوس ، أو بما لا يليق إلا به سبحانه وتعالى كملك الملوك وهذا  محل اتفاق بين الفقهاء .

وأورد ابن القيم فيما هو خاص بالله تعالى : الله والرحمن والحكم والأحد ، والصمد ، والخالق ، والرزاق ، والجبار ، والمتكبر ، والأول ، والآخر ، والباطن ، وعلام الغيوب . تحفة المودود 

அல்லாஹ்வின் குறிப்பான சில ஸிஃபாத்களை குறிக்கும் பெயர்களை சூட்டுவது ஹராம் ஆகும்.

ஃகாலிக், குத்தூஸ், அல்லாஹ், ரஹ்மான், அஹத், அவ்வல், ஆகிர், ஹகம், ஸமத், ரஜ்ஜாக், ஜப்பார், முதகப்பிர், பாதின், அல்லாமுல் ஃகுயூப் என தனித்து பெயரிடுவது தடை செய்யப்பட்டுள்ளது என மார்க்கச்சட்ட வல்லுனர்களும், இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்களும் குறிப்பிடுகின்றார்கள். ( நூல்: துஹ்ஃபத்துல் மவ்தூத்  

عن أبي شُرَيْح هانىء الحارثي الصحابي رضي اللّه عنه؛ أنه لما وَفَدَ إلى رسول اللّه صلى اللّه عليه وسلم مع قومه سمعهم يُكنّونه بأبي الحكم، فدعاه رسول اللّه صلى اللّه عليه وسلم فقال‏:‏ ‏"‏إنَّ اللَّهَ هُوَ الحَكَمُ وَإِلَيْهِ الحُكْمُ فَلِمَ تُكَنَّى أبا الحَكَمِ‏؟‏‏"‏ فقال‏:‏ إن قومي إذا اختلفوا في شيء أتوني فحكمتُ بينَهم، فرضي كِلا الفريقين، فقال رسول اللّه صلى اللّه عليه وسلم‏:‏‏"‏ مَا أحْسَنَ هَذَا، فَمَا لَكَ منَ الوَلَدِ‏؟‏‏"‏ قال‏:‏ لي شُريح، ومُسلم، وعبدُ اللّه، قال‏:‏ ‏"‏فَمَنْ أَكْبَرُهُمْ‏؟‏‏"‏ قلت‏:‏ شريحُ، قال‏:‏ ‏"‏فأنْتَ أبُو شُرَيْحٍ‏"‏‏.

மக்கள் ஹானிஃ (என்ற நபித்தோழரை) அபுல் ஹகம் (ஞானத்தின் தந்தை) என்று குறிப்புப் பெயரால் அழைத்தார்கள். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வருகை தந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை அழைத்து அல்லாஹ்வே ஞானமிக்கவன். அவனிடமே சட்டமியற்றும் அதிகாரம் உள்ளது. அவ்வாறிருக்க நீர் ஏன் ஞானமிக்கவன் எனக் குறிப்புப் பெயர்வைக்கப்பட்டுள்ளீர் என்று அவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர் என்னுடைய சமுதாயம் ஏதேனும் ஒரு விஷயத்தில் பிணங்கிக் கொண்டால் என்னிடம் (தீர்ப்பு கேட்டு) வருவார்கள். அவர்களுக்கு (நல்ல) தீர்ப்பை வழங்குவேன். இரு கூட்டத்தாரும் (அதில்) திருப்தி அடைந்துகொள்வார்கள். (ஆகையால் இப்பெயரை எனது சமுதாயம் எனக்கு வைத்தது) என்று அவர் கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தீர்ப்புவழங்குவது எவ்வளவு சிறந்தது என்று கூறிவிட்டு உமக்கு எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்று கேட்டார்கள். அவர் ஷரைஹ், அப்துல்லாஹ், முஸ்லிம் ஆகியோர் உள்ளனர் என்று கூறினார். இவர்களில் மூத்தவர் யார் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டதற்கு ஷுரைஹ் என்று கூறினார். அப்படியானால் நீர் அபூ ஷுரைஹ் (ஷுரைஹின் தந்தை) எனக் கூறிவிட்டு அவருக்காகவும், அவரது குழந்தைக்காகவும் பிரார்த்தனை புரிந்தார்கள். ( நூல் : நஸயீ 5292 )

“அறியாமைக் காலத்தில் என்னுடையத் தந்தையின் பெயர் அஸீஸ் (மிகைத்தவர்) என்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு அப்துர் ரஹ்மான (அளவற்ற அருளாளனின் அடிமை) என்று (மாற்றி) பெயர்வைத்தார்கள். (நூல் : அஹ்மத் 16944 )

உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி {ஸல்} அவர்களின் மனைவியான உம்முசலமாவின் சகோதரனுக்கு ஒரு ஆண்குழந்தைப் பிறந்தது. அவர்கள் (உம்முசலமாவின் குடும்பத்தார்கள்) அக்குழந்தைக்கு வலீத் என்று பெயர் வைத்தார்கள். (இதை அறிந்தவுடன்) நபி (ஸல்) அவர்கள் எகிப்து நாட்டு மன்னர்களின் பெயர்களையா அதற்கு வைத்தீர்கள்? இந்த சமுதாயத்தில் ஒரு மனிதன் தோன்றுவான். அவனுக்கு வலீத் என்று சொல்லப்படும். ஃபிர்அவன் அவனது சமுதாயத்திற்கு தீங்கிழைத்ததை விட அவன் இந்த சமுதாயத்திற்கு அதிகம் தீங்கிழைப்பான் என்று கூறினார்கள். ( நூல் : அஹ்மத் 104 )

عن أُسامة بن أَخْدَريٍّ الصحابي رضي اللّه عنه ـ وأخدري بفتح الهمزة والدال المهملة وإسكان الخاء المعجمة بينهما ـ أن رجلاً يُقَال له أصرم كان في النفَر الذين أتوْا رسولَ اللّه صلى اللّه عليه وسلم، فقالَ رسولُ اللّه صلى اللّه عليه وسلم‏:‏ ‏"‏ما اسْمُكَ‏؟‏‏"‏ قال‏:‏ أَصْرَم، قال‏:‏ ‏"‏بَلْ أنْتَ زُرْعَةُ‏"‏‏.

உஸாமா இப்னு அஹ்தரீ (ரலி) அறிவிக்கின்றார்கள்: “அஸ்ரம் என்று சொல்லப்பட்ட ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வருகை தந்த நபர்களில் ஒருவராக இருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் உம் பெயர் என்ன என்று வினவினார்கள். (அதற்கு) அவர் என் பெயர் அஸ்ரமாகும் (காய்ந்த செடிக் கொத்து) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் மாறாக உன் பெயர் சுர்ஆவாகும் (மணிகள் கொண்ட பசுமையான செடிக்கொத்து)  என்று (பெயர்மாற்றிக்) கூறினார்கள். ( நூல் : அபூதாவூத் 4303 )

وعَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ ؛أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم غَيَّرَ اسْمَ عَاصِيَةَ. وَقَالَ : أَنْتِ جَمِيلَةُ.أَخْرَجَهُ أحمد 2/18(4682) و\"البُخَاريّ\" في (الأدب المفرد) 820 و\"مسلم\" 6/172(5655).

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “நபி (ஸல்) அவர்கள் ஆசியா என்ற பெண்ணின் (மாறுசெய்பவள்) பெயரை மாற்றி (அவரிடம்) நீ ஜமீலாவாகும் (அழகானவள்) என்று கூறினார்கள். ( நூல் : அபூதாவூத் 4301 )

ஆஸியா (عَاصِيَة) என்பதின் பொருள் மாறுசெய்பவள் என்பதாகும். இதில் முதலாவது எழுத்தாக அய்னும் இரண்டாவது எழுத்தாக ஸாதும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பெயரை வைப்பது கூடாது.

ஆசியா (آسٍيَة)  என்பதின் பொருள் பின்பற்றுபவள் என்பதாகும்.  இதில் முதலாவதாக அலிஃபும் இரண்டாவதாக சீனும் இடம்பெற்றுள்ளது. இப்பெயரை வைப்பதற்கு தடையில்லை.

குறிப்பிட்ட சில பெயர்களையும் சூட்டக்கூடாது...

عن سمرة بن جندب رضي اللّه عنه قال‏:‏ قال رسول اللّه صلى اللّه عليه وسلم‏:‏ ‏"‏لا تُسَمِّيَنَّ غُلامَكَ يَسَاراً، وَلا رَباحاً، وَلا نَجاحاً، وَلا أفْلَحَ،

ஸமுரா இப்னு ஜுந்துப் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் எங்கள் அடிமைகளுக்கு அஃப்லஹ் (வெற்றியாளன்), ரபாஹ் (இலாபம்), யசார் (சுலபம்), மற்றும் நாஃபிஉ (பயனளிப்பவன்) ஆகிய நான்கு பெயர்களைச் சூட்ட வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள். (நூல் : முஸ்லிம் 4328 )

عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم؛أَنَّ زَيْنَبَ كَانَ اسْمُهَا بَرَّةَ ، فَقِيلَ : تُزَكِّي نَفْسَهَا ، فَسَمَّاهَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم زَيْنَبَ. أخرجه \"أحمد\" 2/430و\"الدارِمِي\" 2698 و\"البُخاري\" 6192 و\"مسلم\" 5658 .

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: “ஸைனப் (ரலி) அவர்களுக்கு (முதலில்)  பர்ரா (நல்லவள்) என்ற பெயர் இருந்தது. அப்போது அவர் தம்மைத் தாமே பரிசுத்தப் படுத்திக்கொள்கிறார்என்று (மக்களால்) சொல்லப்பட்டது. ஆகவே, அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைனப்என்று பெயர் சூட்டினார்கள். ( நூல் : புகாரி 6192 )

சில பெயர்களும்அதன் குணபாடுகளும்

மோசமான அர்த்தங்களைக் கொண்டப் பெயர்களை சூட்டக்கூடாது. அப்படி சூட்டுகிற போது அது வாழ்க்கையில் மிகப் பெரிய குணபாடுகளை அளிக்கும்.

عن سعيد بن المسيب بن حَزْن عن أبيه، أن أباه جاء إلى النبي صلى اللّه عليه وسلم فقال‏:‏ ‏"‏ما اسْمُكَ‏؟‏‏"‏ قال‏:‏ حَزْن، فقال‏:‏ ‏"‏أنْتَ سَهْلٌ‏"‏ قال‏:‏ لا أُغيّر اسماً سمّانيه أبي، قال ابنُ المسيب‏:‏ فما زالت الحزونة فينا بعد

 முஸைய்யப் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “முஸய்யப் (ரலி) அவர்களின் தந்தை நபி (ஸல்) அவர்களிடத்தில் வந்த போது நபி (ஸல்) அவர்கள் உங்களது பெயர் என்ன என்று வினவினார்கள். அதற்கு அவர் ஹஸ்ன் (முரடு) என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் (இனிமேல் உமது பெயர்) சஹ்ல் (இலகு) ஆகும் என்று கூறினார்கள். அதற்கு அவர் எனது தந்தை எனக்கு இட்டப் பெயரை நான் மாற்றமாட்டேன் என்று கூறிவிட்டார். (இந்த ஹதீஸை அறிவிக்கும் முஸைய்யப் அவர்கள் கூறுகிறார்கள்.) இதன் பின்னர் எங்களிடம்  (குணநலன்களில்) முரட்டுத்தன்மை தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. ( நூல் : புகாரி 6190 )

وتأمل أسماء الستة المتبارزين يوم بدر كيف اقتضى القدر مطابقة أسمائهم لأحوالهم يومئذ، فكان الكفار: شيبة وعتبة والوليد ثلاثة أسماء من الضعف، فالوليد له بداية الضعف، وشيبة له نهاية الضعف؛ كما قال تعالى

خَلَقَكُم مِّن ضَعْفٍ ثُمَّ جَعَلَ مِن بَعْدِ ضَعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِن بَعْدِ قُوَّةٍ ضَعْفًا وَشَيْبَةً  الروم(54)

 وعتبة من العتب فدلت أسماؤهم على عتب يحل بهم، وضعف ينالهم، وكان أقرانهم من المسلمين: علي وعبيدة والحارث -رضي الله عنهم- ثلاثة أسماء تناسب أوصافهم، وهي العلو والعبودية والسعي الذي هو الحرث فعلَوا عليهم بعبوديتهم، وسعيهم في حرث الآخرة.

பத்ரில் கலந்து கொண்ட ஆறு நபர்களின் பெயர்களும் அவர்களின் முடிவுகளையும் நாம் ஒப்பிட்டுப்பார்த்தால் அவர்களுக்கு சூட்டப்பட்ட பெயர்கள் அவர்களின் வாழ்க்கையில் எப்படியான குணபாடுகளை அளித்தது என்பதைப் பார்க்க முடியும்.

உத்பா, ஷைபா, வலீத் இம்மூவரும் பத்ரில் கொல்லப்பட்டவர்கள் வலீத் என்றால் பலகீனத்தின் ஆரம்பம், ஷைபா என்றால் பலகீனத்தின் இறுதி, உத்பா என்றால் கடுமையான பலகீனம் போரில் பலகீனப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

அதே பத்ரில் கலந்து கொண்ட மூவர் அலீ (ரலி) உபைதா (ரலி) ஹாரிஸ் (ரலி) ஆகியோர் அலீ என்றால் உயர்வு, உபைதா என்றால் இறை அடிமைத்தனம், ஹாரிஸ் என்றால் மறுமைக்காக விரைந்து செயல்படக்கூடியவர் என்று பொருள் அல்லாஹ் மூவரையும் பொருந்திக் கொண்டான். ஈருலகத்தின் பேறு பெற்றவர்களாக ஆக்கினான்.

நபி {ஸல்} அவர்கள் அழகிய பெயர்களை விரும்புவார்கள் .....

وعن بريدة

 أن النبي ﷺ كان لا يتطير من شيء، وكان إذا بعث عاملاً سأل عن اسمه، فإذا أعجبه اسمه فرح به، ورؤي بشر ذلك في وجهه، وإن كان كره اسمه رؤي كراهية ذلك في وجهه 

رواه أبو داود:3920، وصححه الألباني السلسلة الصحيحة: 762]

நபி (ஸல்) அவர்கள் எதற்கும் சகுணம் பார்த்ததில்லை.(வரிவாங்குவதற்கு) 

அதிகாரியை அவர்கள் அனுப்பும் போது அவருடையப் பெயரைப் பற்றிக் 

கேட்பார்கள். அவருடைய பெயர் அவர்களுக்குப் பிடித்திருந்தால் சந்தோஷம்

 அடைவார்கள். 

அவர்களுடைய முகத்தில் அதனால் மகிழ்ச்சி தென்படும். அவருடைய பெயரை 

அவர்கள் வெறுத்தால் அதன் வெறுப்பு அவர்களது முகத்தில் தென்படும்.

அவர்கள் ஓரு ஊருக்குச் சென்றால் அதன் பெயரைப் பற்றி விசாரிப்பார்கள். 

அதன் பெயர் அவர்களுக்குப் பிடித்திருந்தால் அதனால் சந்தோஷம் அடைவார்கள். 

அதனால் அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சி தென்படும். அதன் பெயரை அவர்கள் வெறுத்தால் அதன் வெறுப்பு அவர்களின் முகத்தில் தென்படும்.”  ( நூல் : அபூதாவூத் 3419 )

وكان صلى الله عليه وسلم يتفاءل بالاسم الحسن , ويُعرف ذلك في وجهه عليه الصلاة والسلام , وفي لقاء رسول الله صلى الله عليه وسلم في طريق المدينة ولقائه ببُرَيدة الأسلمي، وتفاؤله باسمه وخدمة بريدة إياه ,عن عبدالله بن بُرَيدة، عن أبيه: أن النبي صلى الله عليه وسلم كان لا يتطيَّر، وكان يتفاءل، وكانت قريش جعلت مائة من الإِبل فيمن يأخذ نبيَّ الله صلى الله عليه وسلم فيرده عليهم حين توجه إلى المدينة.فركب بُرَيدة في سبعين راكباً من أهل بيته من بني سَهْم، فتلقى نبيَّ الله صلى الله عليه وسلم, فقال رسول الله صلى الله عليه وسلم: «مَنْ أنْتَ؟» ,فقال: أنا بُرَيدة ,فالتفت إلى أبي بكر الصِّديق فقال: «يَا أبَا بَكْرٍ، بَرُدَ أمْرُنَا وَصَلُحَ» ، ثم قال: «مِمَّنْ أنْتَ؟» قال: مِنْ أَسلم.قال رسول الله صلى الله عليه وسلم لأبي بكر: «سَلِمْنَا» قال: «ممَنْ؟» قال: من بني سهم.قال: «خَرَجَ سَهْمُكَ (يَا أبَا بَكْرٍ)» فقال بريدة للنبي صلى الله عليه وسلم: مَنْ أنت؟قال: «أَنا مُحَمَّدُ بنِ عبْدِالله رَسُولُ الله» فقال بريدة: أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً عبده ورسوله.فأسلم بُريدة وأسلم مَنْ كان معه جميعاً. أسد الغابة , لابن الأثير 1/209, ابن الجوزي : الوفا بتعريف فضائل المصطفى 182.

மாநபி {ஸல்} அவர்கள் மதீனா நோக்கி ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டிருந்த தருணம் அது.. மாநபி {ஸல்} அவர்களை பிடித்து வருபவர்களுக்கு 100 ஒட்டகத்தை அன்பளிப்பாக தருவோம் என்று குறைஷிகள் அறிவிப்புச் செய்திருந்த தருணமும் கூட.

  பெருமானார் {ஸல்} அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களோடு பாலைவனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது அஸ்லம் கோத்திரத்தைச் சேர்ந்த புரைதா என்பவர் எதிர் திசையில் தமது குடும்பத்தார்களோடு 70 வாகனத்தில் பயணித்து வந்து கொண்டிருந்தார் 

மாநபி {ஸல்} அருகே வந்து புரைதா வாகனத்தை நிறுத்தியதும் “நீர் யார்?” என நபி {ஸல்} அவர்கள் வினவ, நான் “புரைதா” என பதில் கூறினார்கள். அப்போது நபி {ஸல்} “அபூபக்ரே! நம் காரியம் இலகுவாகவும், குளிர்ச்சியானதாகவும் ஆகிவிட்டது” என்று கூறினார்கள்.

பின்பு நபி {ஸல்} புரைதாவை நோக்கி “நீர் எந்த கோத்திரத்தைச் சார்ந்தவர்?” என்று வினவ, புரைதா அவர்கள் “நான் அஸ்லம் கோத்திரத்தைச் சேர்ந்தவன்” என்றார்கள். அப்போது நபி {ஸல்} அவர்கள் “அபூபக்ரே! இனி நமக்கு நிம்மதி தான்” என்று கூறினார்கள்.

பின்பு நபி {ஸல்} புரைதாவை நோக்கி “நீர் எந்த குடும்பத்தைச் சார்ந்தவர்?” என்று வினவ, புரைதா அவர்கள் “நான் பனூஸஹ்ம் குடும்பத்தைச் சேர்ந்தவன்” என்றார்கள். அப்போது நபி {ஸல்} அவர்கள் “அபூபக்ரே! உமது அம்பை வெளியே எடுத்து தயாராக வைப்பீராக!” என்று கூறினார்கள்.

அப்போது, புரைதா அவர்கள் மாநபி {ஸல்} அவர்களை நோக்கி “நீங்கள் யார் என்று வினவ, நபி {ஸல்} அவர்கள் “நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத்” என்று பதில் கூறினார்கள்.

அப்போது புரைதா அவர்கள் மாநபி {ஸல்} அவர்களின் கரம் பற்றி கலிமா ஷஹாதாவைக் கூறி இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டார்கள். மேலும், அவர்களுடன் வந்திருந்த அவர்களின் குடும்பத்தார்கள் அனைவரும் ஷஹாதாக் கூறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். ( நூல்: உஸ்துல் ஃகாபா, அல் வஃபா பிதஃரீஃபி ஃபளாயிலுல் முஸ்தஃபா லிஇமாமி இப்னுல் ஜவ்ஸீ )

وفي معجم الطبراني عنْ يَعِيشَ الْغِفَارِيِّ، قَالَ:دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بناقَةٍ يَوْمًا، فَقَالَ: مَنْ يَحْلُبُهَا، فَقَالَ رَجُلٌ: أَنَا، قَالَ: مَا اسْمُكَ؟ قَالَ مُرَّةُ، قَالَ: اقْعُدْ، ثُمَّ قَامَ آخَرُ، فَقَالَ: مَا اسْمُكَ؟ قَالَ: مُرَّةَ، قَالَ: اقْعُدْ، ثُمَّ قَامَ آخَرُ، فَقَالَ: مَا اسْمُكَ؟ قَالَ: جَمْرَةُ، قَالَ: اقْعُدْ، ثُمَّ قَامَ يَعِيشُ، فَقَالَ: مَا اسْمُكَ؟ قَالَ: يَعِيشُ، قَالَ: احْلُبْهَا.
معجم الطبراني 16/143.

ஒரு நாள் நபி {ஸல்} அவர்கள் தங்களின் ஒட்டகத்தில் பால் கறப்பதற்கு யார் தயாராக இருக்கின்றீர்கள்? என நபித்தோழர்களைப் பார்த்து கேட்டார்கள். அப்போது ஒருவர் நான் பால் கறக்கின்றேன் என்றார். உமது பெயரென்ன? என்று நபி {ஸல்} அவர்கள் கேட்க, அவர் “முர்ரா (கசப்பு) என்றார். அமருங்கள்! என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். பின்பு ஒருவர் முன் வர அவர் பெயரும் முர்ரா என்றிருக்க அவரையும் அமருமாறு நபி {ஸல்} கூறினார்கள். பின்பு ஒருவர் முன் வர, உமது பெயர் என்ன? என்று நபி {ஸல்} அவர்கள் வினவ, யஈஷ் (வாழ்பவர், வாழ்க்கை) என்று கூறினார். நீர் சென்று பால் கறப்பீராக!” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஃஜம் அத் தப்ரானீ )

الحديبية قبيل مكة، أرسلت قريش عروة بن مسعود مندوباً عنها للتفاوض مع النبي صلى الله عليه وسلم، ثم أرسلت سهيل بن عمرو لعقد الاتفاق والصلح، فلما رآه النبي صلى الله عليه وسلم قال: «لقد سَهُلَ لكم مِن أمركم» (رواه البخاري)، ». 

நபி {ஸல்} அவர்கள் ஹுதைபிய்யாவில் உடன்படிக்கை எழுதுவதற்காக காத்திருக்க, அங்கே ஸஹ்ல் இப்னு அம்ர் (அப்போது அவர்கள் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை, மக்காவின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக மதிக்கப் பட்டவர்) வருகை தர, மக்கள் இதோ! ஸஹ்ல் (இலகுவானவர்) வந்து விட்டார் என்று கூற, நபி {ஸல்} நபித்தோழர்களை நோக்கி “அல்லாஹ் உங்களின் காரியங்களை உங்களுக்கு இலகுவாக ஆக்கிவிட்டான்” என்று கூறினார்கள். ( நூல்: புகாரி  

எப்போது பெயர் சூட்ட வேண்டும்

فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ إِنِّي وَضَعْتُهَا أُنْثَى وَاللَّهُ أَعْلَمُ بِمَا وَضَعَتْ وَلَيْسَ الذَّكَرُ كَالْأُنْثَى وَإِنِّي سَمَّيْتُهَا مَرْيَمَ وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

இம்ரானின் மனைவி ”அவர் (குழந்தையை) பெற்றெடுத்த போது என் இறைவா பெண் குழந்தையாக ஈன்றெடுத்துவிட்டேன் எனக் கூறினார். அவர் எதை பெற்றெடுத்தார் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான்.ஆண் பெண்ணைப் போன்றவன் அல்ல. நான் இவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். விரட்டப்பட்ட ஷைய்தானை விட்டும் இவளுக்கும் இவளுடைய வழி தோன்றல்களுக்கும் உன் பாதுகாப்பை வேண்டுகிறேன் எனவும் அவர் கூறினார். ( அல்குர்ஆன் 3 : 36 )

وروينا في سنن أبي داود والترمذي والنسائي وابن ماجه وغيرهما، بالأسانيد الصحيحة، 

 سمرة بن جُندب رضي اللّه عنه؛

أن رسول اللّه صلى اللّه عليه وسلم قال‏:‏ ‏"‏كُلُّ غُلامٍ رَهِينٌ بِعَقِيقَتِهِ تُذْبَحُ عَنْهُ يَوْمَ سابِعِهِ، ويُحْلَقُ، وَيُسَمَّى"

ஸமுரா இப்னு ஜுந்துப் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “ஓவ்வொரு குழந்தையும் அகீகாவுடன் பிணைக்கப்பட்டுள்ளது. அது பிறந்த ஏழாம் நாளில் அதற்காக (ஆடு) அறுக்கப்படும். அதை விட்டு நோவினை (தலை முடி) அகற்றப்படும். அதற்கு பெயரும் வைக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல் : அஹ்மத் ( 19327 )

குழந்தை பிறந்த பிறகும் பெயர் சூட்டலாம் என மேலுள்ள வசனத்திலிருந்தும்

ஏழாவது நாள் குழந்தைக்குப் பெயர் வைக்கப்பட வேண்டும் என்று இந்த ஹதீஸில் வந்துள்ளது. இதனடிப்படையில் குழந்தை பிறந்த அன்றும், ஏழாவது நாளும் பெயர் சூட்டலாம் என்று அறிய முடிகின்றது.

எனவே, அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் விரும்பும் பெயர்களை சூட்டுவோம்! இஸ்லாமிய அடையாளத்தை பெயரில் வெளிப்படுத்தி மகிழ்வோம்!!!

5 comments:

  1. بارك الله فيك وتقبل الله جهودك

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. ،بارك الله فيك وفي علمك ومالك وأهلك وولدك

    ReplyDelete
  4. ماشاء الله بارك الله حضرت

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத். காலத்திற்கு தேவையான மிக அவசியமான விஷயங்கள்.
    جزاكم الله خير الجزاء يا استاذ الكريم 👍 திருப்பூர்

    ReplyDelete