Saturday, 16 April 2022

தெவிட்டாத தேன்மறை – தராவீஹ் உரை:- 16. சுயமரியாதை காப்போம்!!!

 

தெவிட்டாத தேன்மறைதராவீஹ் உரை:- 16.

சுயமரியாதை காப்போம்!!!



அல்லாஹ்வின் மகத்தான கருணையினால் 15 –வது நோன்பை நோற்று, 16 – வது தராவீஹை நிறைவு செய்து, 16 –வது நோன்பை நோற்கும் ஆவலில் எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்தருள்வானாக! எதிர் வரும் நாட்களில் நோன்பு நோற்கும் ஆற்றலையும், தராவீஹ் தொழும் பாக்கியத்தையும் நஸீபாக்குவானாக!

இன்றைய தராவீஹ் தொழுகையில் சூரா அந்நம்லின் எஞ்சிய 87 வசனங்களையும், சூரா அல் கஸஸ் நிறைவு செய்யப்பட்டு சூரா அல் அன்கபூத்தின் 44 வசனங்கள் என 219 வசனங்கள் ஓதப்பட்டுள்ளது.

இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட அந்நம்ல் அத்தியாயத்தின் 36 –ம் வசனத்தில் சுயமரியாதையின் முக்கியத்துவம் குறித்து பேசப்பட்டதை பார்க்கின்றோம்.

இறைத்தூதர் ஸுலைமான் (அலை) அவர்கள் ஹுத்ஹுத் பறவையின் தகவல் மற்றும் கவலையின் அடிப்படையில் ஸபா நாட்டு அரசிக்கு கடிதம் எழுதினார்கள். அந்த கடிதத்தை அந்த நாட்டு அரசி தம் அமைச்சரவையில் விவாதத்திற்கு உட்படுத்துகின்றார். பலரும் பல கருத்தை முன் வைக்கின்றார்கள். எவரின் கருத்தையும் ஏற்றுக் கொள்ளாத அரசி இறுதியில் ஒரு முடிவுக்கு வருகின்றார்.

وَإِنِّي مُرْسِلَةٌ إِلَيْهِمْ بِهَدِيَّةٍ فَنَاظِرَةٌ بِمَ يَرْجِعُ الْمُرْسَلُونَ (35) فَلَمَّا جَاءَ سُلَيْمَانَ قَالَ أَتُمِدُّونَنِ بِمَالٍ فَمَا آتَانِيَ اللَّهُ خَيْرٌ مِمَّا آتَاكُمْ بَلْ أَنْتُمْ بِهَدِيَّتِكُمْ تَفْرَحُونَ

“ஆகவே, நிச்சயமாக நான் அவர்களிடம் அன்பளிப்பை அனுப்பி வைப்பவளாக இருக்கின்றேன். அதனைக் கொண்டு செல்லும் நம் தூதுவர்கள் எப்படி திரும்புகின்றனர் என்பதைக் கவனிக்கப் போகின்றேன்” என்றார்.

பின்னர், ஸுலைமானிடம் அரசியின் தூதுவர் வந்த போது “நீங்கள் பொருளால் எனக்கு உதவி புரிந்திட விரும்புகின்றீர்களா? அல்லாஹ் எனக்கு வழங்கியிருப்பது உங்களுக்கு வழங்கியிருப்பதை விட எவ்வளவோ மேலானதாகும். எனவே, உங்கள் அன்பளிப்பைக் கொண்டு நீங்களே மகிழ்ந்திருங்கள்” என்று ஸுலைமான் (அலை) கூறினார்.  ( அல்குர்ஆன்: 27: 35, 36 )

இறைவன் மனிதர்களுக்கு வழங்கியிருக்கின்ற மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த,  குணநலன்களில் ஒன்று சுயமரியாதை.

சுயமரியாதை என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இன்றியமையாத, அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய பண்பாகும்

மனிதனின் சுயமரியாதையை இஸ்லாம் பேணுமளவுக்கு எந்த மதமும், சித்தாந்தமும், மார்க்கமும், கோட்பாடும் பேணவில்லை. மேலும்,  சுயமரியாதையின் முக்கியத்துவத்தைப் பற்றி போதித்தது போன்று எந்த இஸமும் போதித்ததில்லை.

சுயமரியாதையை இழந்து இந்த உலகத்தில் வாழ்வதென்பது படுமோசமான வாழ்க்கையாகக் கருதப்படும். பிற மக்களால் எள்ளி நகையாடக்கூடிய, கேலி கிண்டலுக்கு உள்ளாகக்கூடிய வாழ்க்கையாக மாறிவிடும். மக்கள் மரியாதையின்றி நடத்தக்கூடிய அவல நிலைக்கும் அவர்கள் தள்ளப்படுவார்கள். 

 

மானம் மரியாதையை விட பொருளாதாரமே முதன்மையானது என்ற எண்ணம் எவரிடம் காணப்படுகிறதோ அவர் சுயமரியாதையை இழந்து விட முன் வருகிறார். 

இந்த இடத்தில் பொருளாதாரத்தை விட மானம் மரியாதையே முதன்மையான செல்வம் என்று இஸ்லாம் போதிக்கிறது. 

சுயமரியாதையை விட்டால் தான் பணம் காசு கிடைக்கும் என்றால் அந்த பணத்தை அலட்சியம் செய்து விட்டு சுயமரியாதைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது.

حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ اللَّيْثِيُّ، أَنَّ أَبَا سَعِيدٍ الخُدْرِيَّ، أَخْبَرَهُ: أَنَّ أُنَاسًا مِنَ الأَنْصَارِ سَأَلُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يَسْأَلْهُ أَحَدٌ مِنْهُمْ إِلَّا أَعْطَاهُ حَتَّى نَفِدَ مَا عِنْدَهُ، فَقَالَ لَهُمْ حِينَ نَفِدَ كُلُّ شَيْءٍ أَنْفَقَ بِيَدَيْهِ: مَا يَكُنْ عِنْدِي مِنْ خَيْرٍ لاَ أَدَّخِرْهُ عَنْكُمْ، وَإِنَّهُ مَنْ يَسْتَعِفَّ يُعِفَّهُ اللَّهُ، وَمَنْ يَتَصَبَّرْ يُصَبِّرْهُ اللَّهُ، وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ، وَلَنْ تُعْطَوْا عَطَاءً خَيْرًا وَأَوْسَعَ مِنَ الصَّبْرِ

அன்சாரிகளில் சிலர் நபி {ஸல்} அவர்களிடம் உதவி கேட்டார்கள். கேட்ட யாருக்குமே நபி {ஸல்} அவர்கள் கொடுக்காமல் இருக்கவில்லை. இறுதியாக, நபியவர்களிடம் இருந்த அனைத்தும் தீர்ந்து விட்டது. தம் கரங்களால் செலவிட்டு எல்லாப் பொருட்களும் தீர்ந்து போன பின்பு அந்த அன்சாரிகளிடம் நபி {ஸல்} அவர்கள் என்னிடத்தில் உள்ள எந்தச் செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப் போவதில்லை.

(இருப்பினும்) யார் சுயமரியாதையோடு நடந்து கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சுயமரியாதையுடன் வாழச் செய்வான்.

யார் (இன்னல்களைச்) சகித்துக் கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் (மேலும்) சகிப்புத் தன்மையை வழங்குவான்.

யார் பிறரிடம் தேவையாகாமல் இருக்கிறாரோ அவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான்.

பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை உங்களுக்கு வழங்கப்படப் போவதில்லை என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரி (ரலி).                               ( நூல் : புகாரி 6470, 1469 )

நபி (ஸல்) அவர்களின் ஏகத்துவ பிரச்சாரத்தில் ஆரம்பமாக இடம் பெற்ற போதனைகளில் சுயமரியாதையும் ஒன்றாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரச்சாரம் ஆரம்பக் கட்டத்தில் இருந்தபோது அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்ட ஹிர்கல் மன்னர் நபி {ஸல்} நாயகத்தின் அப்போதைய எதிரியாக இருந்த அபூ ஸுஃப்யானிடம் நபி {ஸல்} அவர்களின் அறிவுரைகள் என்ன என்று விசாரித்தபோது

அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்; அவனுக்கு எதனையும்/ எவரையும் இணையாக்காதீர்கள்; உங்கள் மூதாதையர் சொல்லி வருகின்ற (அறியாமைக் கால) கூற்றுக்களையெல்லாம் விட்டுவிடுங்கள் என்று கூறுகிறார். தொழுகையை நிறைவேற்றும்படியும், ஸகாத் கொடுக்கும்படியும், உண்மை பேசும்படியும், சுயமரியாதையைப் பேணுமாறும், உறவுகளைப் பேணும்படியும் எங்களுக்கு அவர் கட்டளையிடுகின்றார் என்று கூறினார். (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி) (நூல் : புகாரி 7).

இந்த உலகில் யாரும் அவ்வளவு எளிதில் சுயமரியாதையை இழக்க முன் வருவதில்லை. பெரும்பாலானவர்கள் ஆரம்பமாக பொருளாதாரத்தின் பக்கம் ஆசை காட்டப்படுகிறார்கள்.

தங்களுடைய தேவைகளை துரிதமாக நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளோர் அந்த காரியங்களை ஆற்றும் சக்தி படைத்தோரை அணுகும் போது தங்களின் காரியங்களை சாதித்துக் கொள்ள இந்த "பொருளாதார" ஆசையை ஊட்டுவார்கள்.

அல்லது தங்களுக்கு இடையூறாக இருப்பதாக கருதுபவர்களை அதை விட்டும் அவர் தூரமாக வேண்டும் என்ற எண்ணத்தில்  இந்த "பொருளாதார" ஆசையை ஊட்டுவார்கள்.

அல்லது தங்களுடைய உயிரின் மீதான ஆசையால் தம்மை எதிர்த்து நிற்பவரிடம் தங்களைத் தற்காத்துக் கொள்ள இந்த "பொருளாதார" ஆசையை ஊட்டுவார்கள்.

அல்குர்ஆனும் ஸுன்னாவும் சொல்கிற செய்தி என்னவென்றால் இந்த மாதிரி தருணங்களில் நல்லோர்கள் மட்டுமே தப்பித்துக் கொள்கிறார்கள்.

பிறர் அந்த ஆசையால் ஈர்க்கப்பட்டு மானம் மரியாதையை இழந்து விடுகிறார்கள். ஏன் சில போது சிலர் ஈமானையே இழந்து விடுவதாக இஸ்லாம் எச்சரிக்கின்றது‌

மனிதன் சுயமரியாதையை இழக்க முன் வரும் இடங்களில் பொருளாதாரத்தின் மீதான ஆசை, வாழ்க்கை வசதிகள் மீதான ஆசை, பேர் புகழின் மீதான ஆசை ஆகியவை பிரதானமாகும்.

وكانت قصته - على ما ذكره ابن عباس وابن إسحاق والسدي وغيرهم - أن موسى لما قصد حرب الجبارين ونزل أرض بني كنعان من أرض الشام أتى قوم بلعم إلى بلعم - وكان عنده اسم الله الأعظم - فقالوا : إن موسى رجل حديد ومعه جند كثير ، وإنه جاء يخرجنا من بلادنا ويقتلنا ويحلها بني إسرائيل ، وأنت رجل مجاب الدعوة ، فاخرج فادع الله أن يردهم عنا ، فقال : ويلكم نبي الله ومعه الملائكة والمؤمنون كيف أدعو عليهم وأنا أعلم من الله ما أعلم ، وإني إن فعلت هذا ذهبت دنياي وآخرتي ، فراجعوه وألحوا عليه فقال : حتى أؤامر ربي ، وكان لا يدعوه حتى ينظر ما يؤمر به في المنام فآمر في الدعاء عليهم ، فقيل له في المنام : لا تدع عليهم ، فقال لقومه : إني قد آمرت ربي وإني قد نهيت فأهدوا إليه هدية فقبلها ، ثم راجعوه فقال : حتى أؤامر ، فآمر ، فلم يوح إليه شيء ، فقال : قد آمرت فلم يجز إلي شيء ، فقالوا : لو كره ربك أن تدعو عليهم لنهاك كما نهاك في المرة الأولى ، فلم يزالوا يتضرعون إليه حتى فتنوه فافتتن فركب أتانا له متوجها إلى جبل يطلعه على عسكر بني إسرائيل يقال له حسبان ، فلما سار عليها غير كثير ربضت به ، فنزل عنها فضربها حتى إذا أذلقها قامت فركبها ، فلم تسر به كثيرا حتى ربضت ، ففعل بها مثل ذلك فقامت ، فركبها فلم تسر به كثيرا حتى ربضت ، فضربها حتى أذلقها ، أذن الله لها بالكلام فكلمته حجة عليه ، فقالت : ويحك يا بلعم أين تذهب بي؟ ألا ترى الملائكة أمامي تردني عن وجهي هذا؟ أتذهب بي إلى نبي الله والمؤمنين تدعو عليهم؟ فلم ينزع ، فخلى الله سبيلها فانطلقت حتى إذا أشرفت به على جبل حسبان جعل يدعو عليهم ولا يدعو عليهم بشيء إلا صرف الله به لسانه إلى قومه ، ولا يدعو لقومه بخير إلا صرف الله به لسانه إلى بني إسرائيل . فقال له قومه : يا بلعم أتدري ماذا تصنع إنما تدعو لهم علينا؟! فقال : هذا ما لا أملكه ، هذا شيء قد غلب الله عليه ، فاندلع لسانه فوقع على صدره ، فقال لهم : قد ذهبت الآن مني الدنيا والآخرة فلم يبق إلا المكر والحيلة ، فسأمكر لكم وأحتال ، جملوا النساء وزينوهن وأعطوهن السلع ، ثم أرسلوهن إلى العسكر يبعنها فيه ،

ஷாம் தேசத்திலுள்ள கன்ஆன் என்னும் ஊரில் வசித்து வந்த கொடிய முரடர்களுடன் அறப்போர் புரிவதற்காக நபி மூசா (அலை) அவர்கள் தங்கள் கூட்டத்தினருடன் வந்தார்கள். இவ்வூரில் அல்லாஹ்வின் மகத்தான பெயரை (இஸ்முல் அஃழம்) அறிந்திருந்த "பல்ஆம் பின் பாஊரா" என்னும் ஒரு பெரியார் வாழ்ந்து வந்தார். அவர் கேட்கும் வேண்டுகோள் அல்லாஹ்விடம் உடனே ஏற்றுக் கொள்ளப்படும். இப்பெரியாரிடம் அம்முரடர்கள் வந்து, மூசாவும் அவரது கூட்டத்தினரான இஸ்வேலர்களும் நம்மோடு போர் புரிய வந்துள்ளனர். அவர்கள் வெற்றி கொண்டால் நம்மை எல்லாம் இந்த நாட்டை விட்டு வெளியேற்றி விடுவர். அல்லது கொன்றுவிடுவர். நீர் பிரார்த்தனை ஒப்பு கொள்ளப்பட்ட மனிதர் ஆவீர். எனவே, அவர்களுக்கெதிரான பிரார்த்திப்பீராக" என்று முறையிட்டனர்.

அதற்கு பல்ஆம், “மூசா அல்லாஹ்வின் தூதர்; அவருடன் வானவர்களும் இறைநம்பிக்கையாளர்களும் உள்ளனர். நான் எப்படி அவர்களுக்கெதிராக பிரார்த்திப்பேன்? நான் அல்லாஹ்விடமிருந்து பல விஷயங்களை அறிந்தவன்" என்று கூறி மறுத்தார்.

ஆனால் அவர்கள் அவரிடம் பணிவாகவும் மென்மையாகவும் பேசி குழப்பினர். பிறகு வாழ்வாதார வசதிகள் குறித்தான ஆசைகள் காட்டினர். இறுதியில் அவரும் குழப்பத்தில் சிக்கினார்.

இதையடுத்து அவர் தமது கழுதையில் ஏறி ஒரு மலை உச்சிக்குச் சென்று மூசா (அலை) அவர்களுக்கெதிராக பிரார்த்தனை புரிய எண்ணியபோது, அவரது நாவை அவருடைய சமுதாயத்திற்கு எதிராகவும் மூசா நபிக்கு ஆதரவாகவும் அல்லாஹ் திருப்பி விட்டான். (அதாவது மூசா நபிக்கு வெற்றியைக் கொடு! எனது கூட்டத்தினருக்கு தோல்வியை கொடு! என்று நாவு தடுமாறி பிரார்த்தித்தார்.)

இதைக் கண்டு திகைத்த அவருடைய சமுதாயத்தார் அவரிடம், "பல்ஆம்! நீர் என்ன செய்கிறீர் என்பது தெரிகிறதா?" என்று வினவினர். அதற்கு அவர், 

( فَهَذَا مَا لَا أَمْلِك هَذَا شَيْء قَدْ غَلَبَ اللَّه عَلَيْهِ قَدْ ذَهَبَتْ مِنِّي الْآن الدُّنْيَا وَالْآخِرَة )

"இது என்னை மீறிய செயல்; இதில் அல்லாஹ்வின் கை ஓங்கி விட்டது" என்று கூறினார். இப்போது இம்மையும்-மறுமையும் என்னை விட்டு சென்று விட்டன (இறைநம்பிக்கை பறிபோய் விட்டன)என்று கூறினார்.

(பிறகு,) சதியும் சூழ்ச்சியும் தான் இப்போதுள்ள ஒரே வழி. நான் உங்களுக்காக சதி செய்யப் போகிறேன் என்று கூறிவிட்டு, அழகான பெண்களை அலங்கரித்து இஸ்ரவேலர்கள் மத்தியில் அனுப்புங்கள் அவர்கள் இப்பெண்கள் மீது ஆசை கொண்டு தகாத செயலில் ஈடுபடுவர் அவர்களுக்கு தோல்வி ஏற்படும் என்று அவர் தமது கூட்டத்தினருக்கு தவறான யோசனையைக் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தனர்.    (  நூல்:- தஃப்சீர் காஸின், தஃப்சீர் இப்னு கசீர் அல்அஃராஃப் வசனம்-175,176 )

(நபியே இஸ்ரவேலர்களில்) ஒருவரைப் பற்றிய செய்தியை அவர்களுக்கு எடுத்துரைப்பீராக. நாம் அவருக்கு நம் சான்றுகளை வழங்கியிருந்தோம். ஆனால் அவர் அவற்றிலிருந்து நழுவிக்கொண்டார். ஆகவே, அவரை ஷைத்தான் தன் ஆதரவாளராக ஆக்கிக் கொண்டான். (இதையடுத்து) தவறான (வழியில் சிக்கி அழிந்து போன) வர்களில் ஒருவராக மாறினார். நாம் நாடியிருந்தால் (அந்தச்) சான்றுகள் மூலம் அவரை நாம் உயர்த்திருப்போம்; ஆனால், அவர் இவ்வுலக (இன்ப)த்தில் மையல் கொண்டு தமது மன விருப்பத்தைப் பின்பற்றினார்.

அவரது நிலை நாயின் நிலையை ஒத்திருக்கிறது. அதை நீர் துரத்தினாலும் நாக்கைத் தொங்க விடும்; அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடும். இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கருதிய மக்களின் நிலையாகும். (நபியே இது போன்ற) வரலாறுகளை (அவர்களுக்கு) எடுத்துரைப்பீராக. (இதனால்) அவர்கள் சிந்தித்து உணரலாம்.                                                                   (  அல்குர்ஆன்:- 7: 175, 176 )

عبد الرحمن بن ملجم هذا رجل صالح في أول أمره أرسله عمر بن الخطاب إلى مصر رضي الله عنه، طلبه عمرو بن العاص، قال: يا أمير المؤمنين أرسل لي رجلا قارئا للقرآن يقرئ أهل مصر القرآن. فقال عمر بن الخطاب: أرسلت إليك رجلا هو عبد الرحمن بن ملجم من أهل القرآن آثرتك به على نفسي -يعني أنا أريده عندي في المدينة؛ لكن آثرتك به على نفسي- فإذا أتاك فاجعل له دارا يقرئ الناس فيها القرآن وأكرمه.
لكن عبد الرحمن بن ملجم لم يكن عنده علم، دخلته الأسباب التي ذكرنا فجرّه الخوارج معهم.

உமர் (ரலி) அவர்களின் ஆட்சியின்போது எகிப்தில் கவர்னராக இருந்த அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள், நன்கு குர்ஆனை கற்றறிந்த ஒரு மனிதரை எகிப்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டபோது, கலீபா உமர் (ரலி) அவர்கள் அப்துல் ரஹ்மான் இப்னு முல்ஜம்மை அனுப்பி, இவ்வாறு கடிதம் எழுதினார். “”நான் இவரை அனுப்புகிறேன், இவர் மதீனாவிற்கு தேவையானவராக இருப்பினும் உமக்காக அவரை எகிப்துக்கு அனுப்பி வைக்கிறேன். ஆகவே அப்துல் ரஹ்மான் இப்னு முல்ஜம் முக்கு உரிய இடம் கொடுத்து மக்களை குர்ஆனை போதிக்கும் அவருக்கு உரிய கண்ணியம் கொடுக்கவும்.

உமர் (ரலி) அவர்களால் குர்ஆனை உடையவர் என்று கண்ணியப்படுத்தப்பட்ட ஒரு மனிதர் பின்பு வழிகேட்டில் வீழ்ந்ததற்கு காரணம் கவாரீஜ்களுடன் சேர்ந்ததே. அலி (ரலி) அவர்கள் ஆட்சியின் போது அவரின் படையில் சேர்ந்து போரிட்ட இந்த மனிதர், மூஆவியா (ரலி) அவர்களுடன் அலி (ரலி) அவர்கள், சமாதானம் பேசியதை எதிர்த்து, வழிகெட்ட கவாரிஜ்களுடன் சேர்ந்து, அலி (ரலி) அவர்களை கொல்லவும் திட்டமிட்டான். திட்டத்தை செயல்படுத்த கூபா வந்த மனிதரின் பார்வையில் ஒரு பேரழகி சிக்கினாள்.

அவள் பெயர் கத்தம் பின்த் அஸ்-ஸஜ்னா, இவள் ஒரு கவாரீஜ் பெண்மணி நஹர்வான் யுத்தத்தில் தனது தந்தையையும், தனயனையும் போரில் இழந்தவள். அதற்கு பழிக்குப் பழியாக அலி(ரழி) அவர்களை கொன்றால் அவரது தலையை மஹராக கொடுத்து என்னை மணக்கலாம் என்ற ஆசையை தூண்டி விட்டாள். அலி (ரலி) அவர்களை கொல்வதற்கு அல்லாஹ்வே இப்பெண்ணை தனக்கு பரிசாக கொடுத்ததாக மகிழ்ச்சியடைந்தான் மதிகெட்ட முல்ஜம், ஒரு பஜ்ர் தொழுகைக்கு இமாமத் செய்ய வந்த அலி (ரலி) அவர்களை திட்டமிட்டபடி வாளால் வெட்டி பிடிபட்டான்.

காயத்தின் காரணமாக மூன்று நாட்களுக்குப்பின் அலி (ரலி) அவர்கள் இறந்தபின், முல்ஜம்முக்கு மரண தண்டனை கொடுக்க அவனை இழுத்து வந்தனர். அப்போது அவனது இரண்டு முட்டுக்காலிலும், நெற்றியிலும், கருத்து காய்த்துப் போய் இருந்தது. அவன் அதிகமதிகம் ஓதியும் தொழுததால் ஏற்பட்ட அடையாளம். அழகாக குர்ஆனை ஓதி, மக்களுக்கு மார்க்க விளக்கம் கொடுத்த மனிதர் ஷைத்தானின் தீண்டுதலால் கவாரிஜ்களிடம் சிக்கி சீரழிந்தார்.

சமூகத்தில் பிரபல்யமாக இருப்பவருக்கும், வழிகாட்டும் தலைவராக இருப்பவருக்கும் இந்த நெருக்கடி ஏற்படுகிறது.

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ حَدَّثَنَا عَبَّادُ بْنُ عَبَّادٍ الْمُهَلَّبِيُّ، عَنْ مُجَالِدِ بْنِ سَعِيدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: دَخَلَتْ عَلَيَّ امْرَأَةٌ مِنَ الْأَنْصَارِ، فَرَأَتْ فِرَاشَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبَاءَةً ثَنِيَّةً، فَانْطَلَقَتْ، فَبَعَثَتْ إِلَيَّ بِفِرَاشٍ حَشْوُهُ الصُّوفُ، فَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَا هَذَا يَا عَائِشَةُ؟» ، قَالَتْ

 فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ فُلَانَةُ الْأَنْصَارِيَّةُ دَخَلَتْ عَلَيَّ، فَرَأَتْ فِرَاشَكَ، فَذَهَبَتْ، فَبَعَثَتْ إِلَيَّ بِهَذَا، فَقَالَ: «رُدِّيهِ يَا عَائِشَةُ» ، قَالَتْ: فَلَمْ أَرُدَّهُ، وَأَعْجَبَنِي أَنْ يَكُونَ فِي بَيْتِي، حَتَّى قَالَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ، قَالَتْ: فَقَالَ: «رُدِّيهِ يَا عَائِشَةُ فَوَاللَّهِ لَوْ

شِئْتُ لَأَجْرَى اللَّهُ عَزَّ وَجَلَّ مَعِيَ جِبَالَ الذَّهَبِ وَالْفِضَّةِ

ஒரு நாள் வெளியில் சென்றிருந்த மாநபி {ஸல்} அவர்கள் வீட்டிற்குள்  நுழைகின்றார்கள். நபிகளாரின் புருவம் வியப்பால் உயர்கிறது. ஆம்! தாம் அமரும்  இடத்தைப் பார்க்கின்றார்கள். அங்கே அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய  புத்தம் புதிய விரிப்பொன்று விரிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறார்கள்.

இப்போது, நபி {ஸல்} அவர்கள் வீட்டின் இன்னொரு புறத்தில் அமர்ந்திருந்த தமது அருமைத்துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கி ஆயிஷாவே! நான் காணும் இந்த விரிப்பு என்ன? எங்கிருந்து வந்தது? யார் தந்தது?” என அன்பொழுக வினவினார்கள்.

அதற்கு, அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அன்ஸாரிப் பெண்மணி ஒருவர்  வந்தார். என்னோடு அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது உங்களுடைய  விரிப்பைப் பார்த்து இது யாருடையது? எனக் கேட்டார். நான் அல்லாஹ்வின்  தூதருடையது என்றேன். அதற்கு, அந்தப் பெண்மணி இந்த இத்துப்போன, கிழிசல்  உடைய பழைய விரிப்பிலேயா அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அமர்வார்கள்?  உறங்குவார்கள்?” என்று கேட்டு விட்டு நேராக வீட்டிற்குச் சென்றார். பின்னர், நீங்கள்  காணும் இந்த அழகிய விரிப்பைக் கொடுத்தனுப்பினார் என்று பதில் கூறினார்கள்.

இது கேட்டதும் அண்ணலாரின் முகம் மாறிப்போனது. “ஆயிஷாவே! இதை அந்த  அன்ஸாரிப் பெண்மணியிடம் சென்று திருப்பிக் கொடுத்து விட்டு வாருங்கள்!” என்று நபி  {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

அதற்கு, ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! விரிப்பு பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கின்றதே! அவசியம் திருப்பிக் கொடுக்க வேண்டுமா?” என்று கேட்டார்கள்.

அப்போது, அண்ணலார் ஆயிஷாவே! இதை அந்த அன்ஸாரிப் பெண்மணியிடம் சென்று திருப்பிக் கொடுத்து விட்டு வாருங்கள்!” என்று நபி {ஸல்} அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.

பின்னர், ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கி ஆயிஷாவே! நான் விரும்பி கேட்டால் இதோ இருக்கிற இந்த மலைகளை ( அருகில் தெரிந்த மலைகளை காட்டி) தங்கமாகவும், வெள்ளியாகவும் அல்லாஹ் மாற்றித் தந்து விடுவான் என்று கூறினார்கள்.

பொதுவாகவே நபி {ஸல்} அவர்கள் அன்பளிப்புகளை யார் கொடுத்தாலும் அக  மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளும் பழக்கம் உள்ளவர்களாகவே இருந்தார்கள். இருந்தும்  இங்கே அந்த அன்ஸாரிப் பெண்மணியிடம் திருப்பிக் கொடுக்கச் சொல்கின்றார்கள் என்றால்…?  வேறொன்றுமில்லை, சுயமரியாதையின் கண்ணியத்தை உணர்த்தவே இவ்வாறு செய்தார்கள்.

பிறரின் தேவைகளை நிறைவேற்றும் அதிகார அமைப்பில் இருப்பவருக்கு இந்த நெருக்கடி ஏற்படுகிறது. 

துல்கர்னைன் (அலை) அவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி..

حَتّٰٓى اِذَا بَلَغَ بَيْنَ السَّدَّيْنِ وَجَدَ مِنْ دُوْنِهِمَا قَوْمًا ۙ لَّا يَكَادُوْنَ يَفْقَهُوْنَ قَوْلًا

இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓரிடத்தை) அவர் எத்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவராக இருக்கவில்லை;

قَالُوْا يٰذَا الْقَرْنَيْنِ اِنَّ يَاْجُوْجَ وَمَاْجُوْجَ مُفْسِدُوْنَ فِى الْاَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلٰٓى اَنْ تَجْعَلَ بَيْنَـنَا وَبَيْنَهُمْ سَدًّا‏

அவர்கள் துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது - குழப்பம் - செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?” என்று கேட்டார்கள்.

قَالَ مَا مَكَّنِّىْ فِيْهِ رَبِّىْ خَيْرٌ فَاَعِيْنُوْنِىْ بِقُوَّةٍ اَجْعَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ رَدْمًا ۙ‏

அதற்கவர்: என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது; ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; நான் உங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஓர் உறுதியான தடுப்பை ஏற்படுத்தி விடுகிறேன்என்றுகூறினார்.                              ( அல்குர்ஆன்: 18: 93 – 95 )

ஆகவே, சுயமரியாதை காப்போம்! சுயமரியாதையை இழக்கச் செய்யும் எந்த காரணிகளிலும் சிக்கிக் கொள்ளாமல் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாத்து அருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

Thursday, 14 April 2022

தெவிட்டாத தேன்மறை – தராவீஹ் உரை:- 15. அல்லாஹ்வின் காணிக்கையை வீட்டுக்கு எடுத்துச் செல்வோம்!!!

 

தெவிட்டாத தேன்மறைதராவீஹ் உரை:- 15.

அல்லாஹ்வின் காணிக்கையை வீட்டுக்கு எடுத்துச் செல்வோம்!!!



அல்லாஹ்வின் மகத்தான கருணையினால் 14 –வது நோன்பை நோற்று, 15 – வது தராவீஹை நிறைவு செய்து, 15 –வது நோன்பை நோற்கும் ஆவலில் எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்தருள்வானாக! எதிர் வரும் நாட்களில் நோன்பு நோற்கும் ஆற்றலையும், தராவீஹ் தொழும் பாக்கியத்தையும் நஸீபாக்குவானாக!

இன்றைய தராவீஹ் தொழுகையில் சூரா அந்நூரின் எஞ்சிய 44 வசனங்களையும், சூரா அல் ஃபுர்கான் மற்றும் சூரத்துஷ் ஷுஅரா ஆகிய சூராக்கள் நிறைவு செய்யப்பட்டு சூரா அந்நம்லின் 6 வசனங்கள் என 354 வசனங்கள் ஓதப்பட்டுள்ளது.

இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட அந்நூர் அத்தியாயத்தின் 61 –ம் வசனத்தில் நம் இல்லங்களுக்கு அல்லாஹ்வின் காணிக்கையை எடுத்துச் செல்லுமாறு அல்லாஹ் பணிக்கின்றான்.

அதாவது வீட்டிற்குள் நுழைந்தால் ஸலாம் “அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு” சொல்லி நுழையுமாறு கட்டளையிடுகின்றான்.

فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَى أَنْفُسِكُمْ تَحِيَّةً مِنْ عِنْدِ اللَّهِ مُبَارَكَةً طَيِّبَةً كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ

"நீங்கள் உங்கள் இல்லங்களில் நுழையும் போது, அல்லாஹ்விடமிருந்து வழங்கப்பட்ட அருள் மிகு நல்வாழ்த்தை(அமைதியை) கொண்டு ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொள்ளுங்கள். அல்லாஹ் தமது வசனங்களை நீங்கள் விளங்கி கொள்வதற்காக உங்களுக்கு தெளிவாக்கியுள்ளான்.             ( அல்குர்ஆன்:  24: 61 )

வீட்டிற்குள் அல்லாஹ்வின் காணிக்கையை எடுத்துச் செல்பவர் பெறும் பேறு..

عَنْ أَبِي أُمَامَةَؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: ثَلاَثَةٌ كُلُّهُمْ ضَامِنٌ عَلَي اللهِ، إِنْ عَاشَ رُزِقَ وَكُفِيَ، وَإِنْ مَاتَ أَدْخَلَهُ اللهُ الْجَنَّةَ: مَنْ دَخَلَ بَيْتَهُ فَسَلَّمَ فَهُوَ ضَامِنٌ عَلَي اللهِ، وَمَنْ خَرَجَ إِلَي الْمَسْجِدِ فَهُوَ ضَامِنٌ عَلَي اللهِ، وَمَنْ خَرَجَ فِي سَبِيلِ اللهِ فَهُوَ ضَامِنٌ عَلَي اللهِ.

رواه ابن حبان، (والحديث صحيح): ٢ /٢٥٢

அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “மூன்று நபர்கள் அல்லாஹ்வுடைய பொறுப்பில் உள்ளனர், அவர்கள் உயிர் வாழ்ந்தால் அவர்களுக்கு இரணம் அளிக்கப்படும், அவர்களுடைய வேலைகளில் உதவி செய்யப்படும், அவர்கள் மரணித்துவிட்டால் அல்லாஹுதஆலா அவர்களைச் சுவனத்தில் நுழையவைப்பான். அவர்களில் முதலாமவர், தமது வீட்டில் நுழைந்ததும் ஸலாம் சொல்பவர் இரண்டாமவர், பள்ளிக்குச் செல்பவர் மூன்றாமவர், அல்லாஹுதஆலாவின் பாதையில் புறப்பட்டவர்என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: இப்னு ஹிப்பான் )

வீட்டிற்குள் ஸலாம் சொல்லி செல்பவர் பெறுகிற பேறு மிகச் சாதாரணமான ஒன்றல்ல. மூன்று நற்பாக்கியங்களுக்கு 1. வாழும் காலமெல்லாம் ரிஸ்க் வழங்கப்படுதல். 2. அவருடைய சொந்த அலுவல்களில் இறையுதவி பெறுதல். 3. மரணத்திற்குப் பின்னர் சுவனத்தில் நுழையும் பேற்றைப் பெறுதல்.அல்லாஹ் பொறுப்பேற்பதாக சோபனம் சொல்கின்றார்கள் மாநபி {ஸல்} அவர்கள்.

பள்ளிக்குத் தொழச் செல்பவருக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போராட, கல்வி பெற) புறப்பட்டவருக்கு அல்லாஹ் இந்தப் பேற்றை வழங்குவதோடு ஒருவர் தன் வீட்டிற்கு தன் தேவைக்காகவே வருகின்றார். தன் தாய் தந்தையை, மனைவி, மக்களை பார்க்க, அவர்களுடன் சிரித்துப் பேச, மகிழ்ந்திருக்க என அவர் தன் வீட்டில் செய்கிற எந்தக் காரியமும் இறை வழிபாட்டோடோ அந்த அந்த இரண்டு காரியங்களுக்கு ஒப்பாகவோ இல்லை. ஆனாலும், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த பேற்றை வழங்குவதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கின்றான். அப்படி என்ன நாம் வசிக்கும் வீட்டில் இருக்கின்றது?

வீடு என்பது..

وَاللَّهُ جَعَلَ لَكُمْ مِنْ بُيُوتِكُمْ سَكَنًا وَجَعَلَ لَكُمْ مِنْ جُلُودِ الْأَنْعَامِ بُيُوتًا تَسْتَخِفُّونَهَا يَوْمَ ظَعْنِكُمْ وَيَوْمَ إِقَامَتِكُمْ ۙ وَمِنْ أَصْوَافِهَا وَأَوْبَارِهَا وَأَشْعَارِهَا أَثَاثًا وَمَتَاعًا إِلَىٰ حِينٍ

உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். கால்நடைகளின் தோல்களிலிருந்து உங்களுக்குக் கூடாரங்களை ஏற்படுத்தினான். உங்கள் பிரயாணத்தின் போதும், ஊரில் நீங்கள் தங்கியிருக்கும் போதும் அவற்றை எளிதாக எடுத்துச் செல்கிறீர்கள். செம்மறி ஆட்டு ரோமங்கள், வெள்ளாட்டின் ரோமங்கள், ஒட்டகத்தின் ரோமங்கள் ஆகியவற்றிலிருந்து ஆடைகளையும், குறிப்பிட்ட காலம் வரை (பயன்படும்) வசதிகளையும் ஏற்படுத்தினான் ( அல்குர்ஆன்: 16: 80 )

நிம்மதி தவழும் இடமாக, நிம்மதி என்றென்றும் நிலவும் வீடாக நம் இல்லங்கள் இருக்க வேண்டும் என்றால் நம் வீடுகளில் ஸலாம் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

வீடு என்பது இறைவனின் அருள். அந்த வீட்டில் வாழவைப்பது இறைவன் புரிகிற மகத்தான பேரருள் ஆகும்.

வாழ்வதற்கு வீடில்லாமல் வீட்டை விட்டும் வெளியேற்றுவது அல்லாஹ் வழங்கும் தண்டனைகளில் ஒன்றாகும்..

هُوَ الَّذِي أَخْرَجَ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ مِنْ دِيَارِهِمْ لِأَوَّلِ الْحَشْرِ ۚ مَا ظَنَنْتُمْ أَنْ يَخْرُجُوا ۖ وَظَنُّوا أَنَّهُمْ مَانِعَتُهُمْ حُصُونُهُمْ مِنَ اللَّهِ فَأَتَاهُمُ اللَّهُ مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوا ۖ وَقَذَفَ فِي قُلُوبِهِمُ الرُّعْبَ ۚ يُخْرِبُونَ بُيُوتَهُمْ بِأَيْدِيهِمْ وَأَيْدِي الْمُؤْمِنِينَ فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ

அவனே வேதமுடையோரில் உள்ள (ஏக இறைவனை) மறுப்போரை அவர்களது இல்லங்களிலிருந்து முதல் வெளியேற்றமாக வெளியேற்றினான். அவர்கள் வெளியேறுவார்கள் என நீங்கள் எண்ணவில்லை. தமது கோட்டைகள் அல்லாஹ்விடமிருந்து தங்களைக் காக்கும் என அவர்கள் நினைத்தனர். அவர்கள் எண்ணிப் பார்த்திராத வழியில் அவர்களை அல்லாஹ் அணுகினான். அவர்களது உள்ளங்களில் அச்சத்தை விதைத்தான். தமது கைகளாலும், நம்பிக்கை கொண்டோரின் கைகளாலும் தமது வீடுகளை நாசமாக்கினார்கள். அறிவுடையோரே படிப்பினை பெறுங்கள்! அவர்கள் வெளியேறுவதை அல்லாஹ் விதித்திருக்காவிட்டால் அவர்களை இவ்வுலகில் தண்டித்திருப்பான். மறுமையில் அவர்களுக்கு நரகின் வேதனை இருக்கிறது. அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்போராக இருந்ததே இதற்குக் காரணம். யார் அல்லாஹ்வைப் பகைக்கிறாரோ அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். ( அல்குர்ஆன்: 59: 2-4 )

வீடில்லாமல் வாழ்வது மிகப் பெரும் சோதனை ஆகும். ஆதலால் தான் அநியாயமும், அட்டூழியமும் செய்த யூதர்களுக்கு வாழ்வதற்கு வீடில்லாமல் தட்டழிந்து திரியும் தண்டனையை இறைவன் அவர்களுக்கு விதித்தான். இதிலிருந்து ஒருவன் வாழ்வதற்குரிய வீட்டைப் பெற்றிருப்பது இறைவன் அவனுக்குச் செய்த மிகப் பெரும் பேரருள் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

இவ்வளவு சிறப்பு மிக்க வீடு என்னும் பாக்கியத்தைப் பெற்றவர்கள் அவ்வீட்டை நிம்மதி தரும் வீடாக ஆக்க வேண்டாமா?

எனவே, நாம் நம் வீடுகளில் நுழையும் போது ஸலாம் சொல்லி நுழைவோம்.

ஸலாம் என்பது அல்லாஹ்வின் பெயராகும்..

عَنْ عَبْدِ اللهِ يَعْنِيْ اِبْنَ مَسْعُوْدٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اَلسَّلاَمُ اِسْمٌ مِنَ اَسْمَاءِ اللهِ تَعَالَي وَضَعَهُ فِي اْلاَرْضِ فَاَفْشُوْهُ بَيْنَكُمْ، فَاِنَّ الرَّجُلَ الْمُسْلِمَ اِذَا مَرَّ بِقَوْمٍ فَسَلَّمَ عَلَيْهِمْ فَرَدُّوْا عَلَيْهِ كَانَ لَهُ عَلَيْهِمْ فَضْلُ دَرَجَةٍ بِتَذْكِيْرِهِ اِيَّاهُمُ السَّلاَمَ، فَاِنْ لَمْ يَرُدُّوْا عَلَيْهِ رَدَّ عَلَيْهِ مَنْ هُوَ خَيْرٌ مِنْهُمْ.

رواه البزار والطبراني واحد اسنادي البزار جيد قوي الترغيب:٣ /٤٢٧

ஸலாம் என்ற வார்த்தை அல்லாஹுதஆலாவின் பெயர்களில் ஒன்று. அல்லாஹுதஆலா அதை பூமியில் இறக்கி வைத்துள்ளான், எனவே உங்களுக்கிடையே அதை நன்றாகப் பரப்புங்கள். ஏனேனில் ஒரு முஸ்லிம் ஒரு கூட்டத் தாரைக் கடந்து செல்லும்போது அவர் அக்கூட்டத்தாருக்கு ஸலாம் சொல்ல, அவர்கள் இவருக்குப் பதில் சொன்னால், அவர்களுக்கு ஸலாமை ஞாபக மூட்டியதன் காரணத்தால் ஸலாம் சொல்லியவருக்கு அந்தக் கூட்டத்தாரை விட ஒரு படித்தரம் சிறப்புக் கிடைக்கிறது. அவர்கள் இவருக்குப்பதில் சொல்லவில்லை யெனில் மனிதர்களைவிடச் சிறந்த மலக்குகள் இவருடைய ஸலாமுக்குப் பதில் சொல்கின்றனர்என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்: பஸ்ஸார், தபரானீ, தர்ஙீப் )

ஸலாம் தான் மனித சமூகத்திற்கு அல்லாஹ் இட்ட முதல் கட்டளை..

وعن أبي هريرة، رضي اللّه ستون ذراعاً، فلما خلقه قال: اذهب فسلم على أولئك، نفر من الملائكة، جلوس، فاستمع ما يحيونك، فإنها تحيتك وتحية ذريتك، فقال: السلام عليكم، فقالوا: السلام عليك ورحمة الله، فزادوه: ورحمة الله، فكل من يدخل الجنة على صورة آدم، فلم يزل الخلق عنه، عن النبي صلى الله عليه وسلم قال: (خلق الله آدم على صورته، طوله ينقص بعد حتى الآن)
أخرجه البخارى, – باب: بدء السلام

இறைத்தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம்(அலை) அவர்களை(களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, ‘நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்என்று சொன்னான்.

அவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), ‘அஸ்ஸலாமு அலைக்கும் உங்களின் மீது சாந்தி பொழியட்டும்என்று கூறினார்கள். அதற்கு வானவர்கள், ‘உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்என்று பதில் கூறினார்கள். இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாக கூறினார்கள்.
எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம்(அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம்(அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றனஎன அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ( நூல்: புகாரி: 3326 )

பொறுப்பேற்றுக் கொண்ட அல்லாஹ் தன் பொறுப்பை எப்படி நிறைவேற்றுவான்?

قال الإمام أحمد: حدثنا يونس بن محمد، حدثنا ليث، عن جعفر بن ربيعة، عن عبد الرحمن بن هُرْمُز، عن أبي هريرة، عن رسول الله صلى الله عليه وسلم أنه ذكر "أن رجلا من بني إسرائيل سأل بعض بني إسرائيل أن يُسْلفه ألف دينار، فقال: ائتني بشهداء أشهدهم. قال: كفى بالله شهيدًا. قال: ائتني بكفيل. قال: كفى بالله كفيلا. قال: صدقت. فدفعها إليه إلى أجل مسمى، فخرج في البحر فقضى حاجته، ثم التمس مركبًا يقدم عليه للأجل الذي أجله، فلم يجد مركبًا، فأخذ خشبة فنقرها فأدخل فيها ألف دينار وصحيفة معها إلى صاحبها، ثم زَجج موضعها، ثم أتى بها البحر، ثم قال: اللهم إنك قد علمت أني استسلفت فلانًا ألف دينار، فسألني كفيلا فقلت: كفى بالله كفيلا. فرضي بذلك، وسألني شهيدًا، فقلت: كفى بالله شهيدًا. فرضي بذلك، وإني قد جَهِدْتُ أن أجد مركبًا أبعث بها إليه بالذي أعطاني فلم أجد مركبًا، وإني اسْتَوْدعْتُكَها. فرمى بها في البحر حتى ولجت فيه، ثم انصرف، وهو في ذلك يطلب مركبًا إلى بلده، فخرج الرجل الذي كان أسلفه ينظر لعل مركبًا تجيئه بماله، فإذا بالخشبة التي فيها المال، فأخذها لأهله حطبًا فلما كسرها وجد المال والصحيفة، ثم قدم الرجل الذي كان تَسَلف منه، فأتاه بألف دينار وقال: والله ما زلت جاهدًا في طلب مركب لآتيك بمالك فما وجدت مركبًا قبل الذي أتيت فيه. قال: هل كنت بعثت إلي بشيء؟ قال: ألم أخبرك أني لم أجد مركبًا قبل هذا الذي جئت فيه؟ قال: فإن الله قد أدى عنك الذي بعثت به في الخشبة، فانصرف بألفك راشدًا".

وهذا إسناد صحيح  وقد رواه البخاري في سبعة مواضع من طرق صحيحة

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:  ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், நாங்கள் அவர்களோடு அமர்ந்திருந்த சபையில் எங்களிடம் கூறினார்கள்:இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் ஆயிரம் பொற்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர், ”என்னிடம் சாட்சிகளை அழைத்து வாரும்! அவர்களைச் சாட்சியாக வைத்து உமக்கு கடன் தருகின்றேன் என்றார்.

கடன் கேட்டவர் சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன் என்றார். அப்படியானால், “ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டு வாரும்! அவரை ஜாமீனாக வைத்து உமக்கு கடன் தருகின்றேன் என்றார் கடன் கேட்கப்பட்டவர். அதற்கு, கடன் கேட்டவர் பிணை நிற்க அல்லாஹ்வே போதுமானவன் என்றார். அப்போது, கடன் கேட்கப்பட்டவர் நீர் கூறுவதும் ஒரு வகையில் உண்மை தான்! என்று கூறி, குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பித் தர வேண்டும் என்ற உத்தரவாதத்துடன் அவரிடம் ஆயிரம் பொற்காசுகளை வழங்கினார்.

கடன் வாங்கியவர் கடல் வழிப் பயணம் புறப்பட்டு, தம் காரியங்களை முடித்து விட்டு, குறிப்பிட்ட தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக வாகன வசதியைத் தேடினார். ஆனால், அவருக்கு எந்த வாகனமும் கிடைக்க வில்லை. அப்போது, அவர் ஒரு மரக்கட்டையை விலைக்கு வாங்கி, அதைக் குடைந்து அதற்குள் ஆயிரம் பொற்காசுகளையும், கடன் கொடுத்தவருக்கு ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்து அடைத்தார். பின்னர், கடற்கரையோரமாக அந்த மரக்கட்டையை கொண்டு வந்து, வானை நோக்கி கையை உயர்த்தி….

       இறைவா! இன்ன மனிதரிடம் நான் ஆயிரம் பொற்காசுகளைக் கடனாகக் கேட்டேன். அவர் பிணையாளி வேண்டுமென்றார். நானோ அல்லாஹ்வே நீயே போதுமானவன்! என்றேன். அவர் உன்னைப் பிணையாளியாக ஏற்றுக் கொண்டார்.

என்னிடம் சாட்சிகளைக் கொண்டு வருமாறு கோரினார். நானோ அல்லாஹ்வே நீயே சாட்சிக்குப் போதுமானவன்! என்றேன். அவர் உன்னை சாட்சியாக ஏற்றுக் கொண்டார்.

அவர் கூறிய தவணை முடிவடையும் முன்பாக அவருக்குரிய பணத்தை அவரிடம் கொடுத்து விடும் முயற்சியில் இறங்கி, வாகனத்திற்கு ஏற்பாடு செய்தேன்! அல்லாஹ்வே! ஒரு வாகனமும் எனக்கு கிடைக்கவில்லை. இதையெல்லாம் நீ நன்கறிவாய்! எனவே, இதோ அவருக்குரிய பொற்காசுகள் நிரப்பிய மரக்கட்டையை இந்த கடலில் வீசுகின்றேன்! இதை உரியவரிடத்தில் சேர்க்கும் பொறுப்பையும் உன்னிடத்தில் ஒப்படைக்கின்றேன் என்று பிரார்த்து விட்டு அதைக் கடலில் வீசினார். அது கடலின் நடுப்பகுதிக்கு சென்றதும் திரும்பி விட்டார். அத்துடன் தமது ஊருக்குச் செல்வதற்காக வாகனத்தையும் அவர் தேடிக் கொண்டிருந்தார்.

இதனிடையே, கடன் கொடுத்தவர் கடன் வாங்கியவரின் வருகையை எதிர் பார்த்த வண்ணம் இருந்தார். ஒன்று அவர் வருவார், அல்லது நமது செல்வத்துடன் வாகனம் எதுவும் வரக்கூடும் என்று நோட்டமிட்ட வண்ணம் புறப்பட்டார்.

அப்போது, ஒரு ஓரத்தில் ஒரு மரக்கட்டை கிடப்பதைக் கண்டார். தமது குடும்பத்திற்கு விறகாகப் பயன்படட்டும் என்கிற நோக்கத்தில் அதை எடுத்து வீட்டுக்குக் கொண்டு வந்தார். அதைப் பிளந்து பார்த்த போது, “ஆயிரம் பொற்காசுகளையும் கடிதத்தையும் கண்டார். சிறிது நாட்கள் கழித்து, கடன் வாங்கியவர் கடன் கொடுத்த அம்மனிதரைச் சந்திக்க வந்தார். வந்தவர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உமது பணத்தை உமக்கு தருவதற்காக வாகனம் தேடும் முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தேன். இப்போது, தான் வாகனம் கிடைத்து உம்மிடம் வந்திருக்கின்றேன். இதோ! உமக்கு தருவதற்காக ஆயிரம் பொற்காசுகளை கொண்டு வந்திருக்கின்றேன் என்று பொற்காசுகள் பொதியப்பட்ட கைப்பையை கடன் கொடுத்தவரிடம் காட்டினார்.

அதற்கு கடன் கொடுத்தவர் எனக்கு எதையாவது அனுப்பி வைத்தீரா?” என்று கேட்டார். அப்போது, கடன் வாங்கியவர் வாகனம் கிடைக்காமல் இப்போது தான் வந்திருக்கின்றேன் என்று உமக்கு நான் தெரிவித்தேனே! என்றார்.

அதற்கு கடன் கொடுத்தவர் நீர் மரத்தில் வைத்து எனக்கு அனுப்பியதை உமது சார்பாக அல்லாஹ் என்னிடம் சேர்த்து விட்டான். எனவே, நீர் கொண்டு வந்த ஆயிரம் பொற்காசுகளை எடுத்துக் கொண்டு சரியான வழியில் உமது ஊருக்குச் செல்வீராக! என்றார்.       (     நூல்: முஸ்னத் அஹ்மத், தஃப்ஸீர் இப்னு கஸீர், புகாரி )

எனவே, நம் இல்லங்களை இறைவனின் காணிக்கையை கொண்டு சாந்தி நிறைந்த இல்லமாக மாற்றுவோம்!! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வீட்டுக்குள் நுழையும் போதெல்லாம் அவனுடைய காணிக்கையையும் எடுத்துச் செல்ல அருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!