Wednesday, 20 April 2022

தெவிட்டாத தேன்மறை – தராவீஹ் உரை:- 20. ஆதலால்... மன்னிப்போம்!!!

 

தெவிட்டாத தேன்மறைதராவீஹ் உரை:- 20.

ஆதலால்... மன்னிப்போம்!!!


அல்லாஹ்வின் மகத்தான கருணையினால் 19 –வது நோன்பை நோற்று, 20 – வது தராவீஹை நிறைவு செய்து, 20 –வது நோன்பை நோற்கும் ஆவலில் எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்தருள்வானாக! எதிர் வரும் நாட்களில் நோன்பு நோற்கும் ஆற்றலையும், தராவீஹ் தொழும் பாக்கியத்தையும் நஸீபாக்குவானாக!

இன்றைய தராவீஹ் தொழுகையில் ஹாமீம் அஸ் ஸஜ்தா, அஷ் ஷூரா, அஸ் ஸுஃக்ருஃப், அத் துஃகான், அல் ஜாஸியா ஆகிய சூராக்கள் நிறைவு செய்யப்பட்டு 294 வசனங்கள் ஓதப்பட்டுள்ளது. இன்றைய தராவீஹ் தொழுகையோடு அல்குர்ஆனின் 25 ஜுஸ்வுகள், 45 அத்தியாயங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!.

இன்று தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட ஹாமீம் அஸ் ஸஜ்தா  அத்தியாயத்தின் 40ம் வசனத்தில் அல்லாஹ் மன்னிக்கும் குணம் குறித்தும், அதற்கு கிடைக்கும் நற்பலன் குறித்தும் பேசுகின்றான்.

وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِّثْلُهَا ۖ فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّـهِ ۚ  ( الشورى 40)

இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையே யாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.

நம்மில் இரு ரகமான மனிதர்கள் இருக்கின்றோம். ஒரு ரகம்...

இனி ஜென்மத்துக்கும் அவனை மன்னிக்க மாட்டேன்.”, “செத்தாலும் சரி, அவள் முகத்தில் முழிக்க மாட்டேன்.”, “அவர்கள் செய்திருக்கிற காரியத்திற்கு நான் செத்தாலும் மன்னிக்க மாட்டேன்.

சொல்லிடு அவன்ட்ட நான் செத்தால் என் ஜனாஸாவிற்கு அவன் வரக் கூடாது. அவன் செத்தால் நானும் அவன் ஜனாஸாவுக்கு போக மாட்டேன்.

நம்மில் பலரும் கேட்கிற, சொல்லிய, சொல்கிற பலப் பிரயோக வார்த்தைகள் இவை.

சில போது பெற்றெடுத்த தாய் தந்தையரோடு, சில போது தாய் தந்தையின் உடன் பிறப்புகளோடு, சில போது உடன் பிறந்த ரத்த உறவுகளோடு, சில போது மனைவி மக்களோடு, அண்டை அயலரோடு, குடும்ப உறவுகளோடு, நட்போடு நாம் பரிமாறுகிற வார்த்தைகள் இவை.

இன்னொரு ரகம்...நான் கொஞ்சூண்டு மன்னித்துவிடுகிறேன் ; மிச்சத்தை மனதில் ஓரமாய் வைத்துக் கொள்கிறேன்; பின்னர் ஏதாவது சந்தர்ப்பத்தில் சொல்லிக்காட்ட அவை தேவைப்படும்.என்று சிலர்.

இந்த இரண்டு ரக மனிதர்களிலும் படித்தவர் படிக்காதவர், ஏழை பணக்காரன், ஆலிம் சாமானியர், ஹாஜி தொழுகையாளி, என எவ்வித பாகுபாடும் கிடையாது.

சக மனிதர்களுடனான வாழ்வில் ஏற்படும் மனக் கசப்புகளின் போதும், புரிந்து கொள்ளாமல் நடைபெறும் சம்பவங்களின் போதும், கொடுக்கல் வாங்கலின் போதும், வாக்குறுதிகள் பொய்த்துப் போகும் போதும், நம்பிக்கைகள் சிதைக்கப்படுகிற போதும், கவனக் குறைவாக ஏற்படும் சிற்சில தவறுகளின் போதும் நாம் பாதிக்கப்பட்டதாக உணரும் போது நாம் வெளிப்படுத்தும் உணர்வுகள் இவை.

உண்மையில் நாம் மனிதனாக நடந்து கொள்கிறோமா? ஒரு உண்மை முஃமினாக நாம் நடந்து கொள்கிறோமா? என்பதை அறிவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.

மனிதன் என்றாலே தவறு செய்பவன் தான். இயல்பாகவே அவன் பல்வேறு குறைபாடுகளோடே படைக்கப்பட்டுள்ளான் என இஸ்லாம் கூறுகின்றது.

எனவே, அந்த தவறும் குறைபாடும் நம்மிடமும் இருக்கிறது. நாமும் பிறர் விஷயத்தில் தவறிழைத்து விட வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, சக மனிதர்கள் செய்கிற தவறுகளை நாம் மன்னிக்க, மறக்க பழகிக் கொள்ள வேண்டும். நாம் சறுகிடும் போது நம்மை பிறர் மன்னிக்க வேண்டும் அத்தோடு அவர் அதை மறக்க வேண்டும் என நாம் ஆசைப்படத்தானே செய்கிறோம் என்பதை நாம் முதலில் மனதின் ஆழத்தில் பதிந்திட வேண்டும்.

சமூக வாழ்வில் மன்னிப்பு என்பது  நான்கு வழிப் பாதைகளை கொண்ட வார்த்தை என இஸ்லாம் வகுக்கிறது.  

நாம் செய்த தவறுகளுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவது ஒரு வழி. நாம் பிறருக்கு செய்த தவறுகளுக்காக பிறரிடம் மன்னிப்புக் கோருவது ஒரு வழி. பிறர் செய்த தவறுகளை நாமே பெருந்தன்மையாக மன்னிப்பது ஒரு வழி. பிறர் தாம் செய்த தவறுகளுக்காக நம்மிடம் மன்னிப்பு கோரினால் மன்னிப்பது ஒரு வழி.

இந்த நான்கு வழிகளுமே இறுதியில் சென்று சேர்கிற\சேர்க்கிற இடம்   சொர்க்கம் தான்.

இனி நாம் தான் முடிவெடுக்க வேண்டும் சொர்க்கத்தின் பாதையில் பயணிப்பதா? இல்லை..?

வேண்டாம்! எதிர் மறையான சிந்தனை வேண்டாம்!

நாம் சொர்கத்தின் பாதையில் பயணிப்பதையே தேர்ந்தெடுப்போம்.

இன்ஷா அல்லாஹ்.. சொல்லுங்க!!

மன்னிப்பை மனைவி, மக்களிடம் இருந்து துவங்கச் சொல்கிறது குர்ஆன்.

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّ مِنْ اَزْوَاجِكُمْ وَاَوْلَادِكُمْ عَدُوًّا لَّكُمْ فَاحْذَرُوْهُمْ‌ۚ وَاِنْ تَعْفُوْا وَتَصْفَحُوْا وَتَغْفِرُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக உங்கள் மனைவியாிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர், எனவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சாிக்கையாக இருங்கள்; அதையும் (அவர்களின் குற்றங் குறைகளை) மன்னித்தும், அவற்றைப் பொருட்படுத்தாமலும், சகித்துக் கொண்டும் இருப்பீர்களாயின் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன். (64:14)

மன்னிப்பை நம்மோடு இயங்குகிற, நம் ஏற்றத்திற்கு உதவுகிற, நம் உயர்வை விரும்புகிற நம் பணியாளர்களிடம் தொடரச் சொல்கிறது நபிமொழி.

عَنْ عَبْدِاللهِ بْنِ عُمَرَ ؓ قَالَ: جَاءَ رَجُلٌ اِلَي النَّبِيِّ ﷺ فَقَالَ: يَارَسُوْلَ اللهِﷺ كَمْ اَعْفُوْ عَنِ الْخَادِمِ؟ فَصَمَتَ عَنْهُ النَّبِيُّ ﷺ ثُمَّ قَالَ: يَارَسُوْلَ اللهَﷺ كَمْ اَعْفُوَ عَنِ الْخَادِمِ؟ قَالَ: كُلَّ يَوْمٍ سَبْعِيْنَ مَرَّةً.

ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒருவர் நபி {ஸல்} அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே!, நான் (என்னுடைய) பணியாளரின் தவறை எத்தனை தடவை மன்னிப்பது?” என வினவினார், நபி {ஸல்} அவர்கள் அமைதியாக இருந்தார்கள். அவர் மீண்டும் அவ்வாறே, அல்லாஹ்வின் தூதரே!,, நான் (எனது) பணியாளரின் தவறை எத்தனை முறை மன்னிப்பது?” எனக் கேட்க, தினமும் எழுபது முறைஎன்று மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். [திர்மிதீ, அபூதாவூத் 5164] 

சக மனிதர்களின் குறைகளை மன்னிக்கத் தூண்டுகிறது நபிமொழி.

عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ اَقَالَ مُسْلِمًا عَثْرَتَهُ اَقَالَهُ اللهُ عَثْرَتَهُ يَوْمَ الْقِيَامَةِ.

எவர், ஒரு முஸ்லிமுடைய குறைகளை மன்னித்துவிடுகிறாரோ, அவருடைய குறைகளை கியாமத் நாளன்று அல்லாஹுதஆலா மன்னித்து விடுவான்என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இப்னு ஹிப்பான்)

மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்கக் கூடாது என வலியுறுத்துகிறது, எச்சரிக்கிறது‌.

عَنْ جَوْدَانَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنِ اعْتَذَرَ اِلَي اَخِيْهِ بِمَعْذِرَةٍ فَلَمْ يَقْبَلْهَا، كَانَ عَلَيْهِ مِثْلُ خَطِيْئَةِ صَاحِبِ مَكْسٍ.

ஜவ்தான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "யாரேனும் ஒரு மனிதர் தன் சக முஸ்லிம் சகோதரரிடம் தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்க, இவர் அவரை மன்னிக்கவில்லையென்றால், அநியாயமாக வரி வசூலிப்பவருக்குரிய பாவம் இவருக்குக் கிடைக்கும்என்று மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: இப்னுமாஜா )

حَدَّثَنِي هِشَامُ بْنُ عَمَّارٍ ، حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ ، حَدَّثَنَا زَيْدُ بْنُ وَاقِدٍ عَنْ بُسْرِ بْنِ عُبَيْدِ اللهِ عَنْ عَائِذِ اللهِ أَبِي إِدْرِيسَ ، عَنْ أَبِي الدَّرْدَاءِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ

كُنْتُ جَالِسًا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ أَقْبَلَ أَبُو بَكْرٍ آخِذًا بِطَرَفِ ثَوْبِهِ حَتَّى أَبْدَى عَنْ رُكْبَتِهِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَمَّا صَاحِبُكُمْ فَقَدْ غَامَرَ فَسَلَّمَ وَقَالَ إِنِّي كَانَ بَيْنِي وَبَيْنَ ابْنِ الْخَطَّابِ شَيْءٌ فَأَسْرَعْتُ إِلَيْهِ ثُمَّ نَدِمْتُ فَسَأَلْتُهُ أَنْ يَغْفِرَ لِي فَأَبَى عَلَيَّ فَأَقْبَلْتُ إِلَيْكَ فَقَالَ يَغْفِرُ اللَّهُ لَكَ يَا أَبَا بَكْرٍ ثَلاَثًا ثُمَّ إِنَّ عُمَرَ نَدِمَ فَأَتَى مَنْزِلَ أَبِي بَكْرٍ فَسَأَلَ أَثَمَّ أَبُو بَكْرٍ فَقَالُوا لاَ فَأَتَى إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَلَّمَ فَجَعَلَ وَجْهُ النَّبِيِّ صلى الله عليه وسلم يَتَمَعَّرُ حَتَّى أَشْفَقَ أَبُو بَكْرٍ فَجَثَا عَلَى رُكْبَتَيْهِ فَقَالَ يَا رَسُولَ اللهِ وَاللَّهِ أَنَا كُنْتُ أَظْلَمَ مَرَّتَيْنِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِنَّ اللَّهَ بَعَثَنِي إِلَيْكُمْ فَقُلْتُمْ كَذَبْتَ وَقَالَ أَبُو بَكْرٍ صَدَقَ وَوَاسَانِي بِنَفْسِهِ وَمَالِهِ فَهَلْ أَنْتُمْ تَارِكُو لِي صَاحِبِي مَرَّتَيْنِ فَمَا أُوذِيَ بَعْدَهَا

அபுத்தர்தா (ரலி) அறிவிக்கின்றார்கள்: "அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபி -ஸல்- அவர்களுக்கு) சலாம் கூறிவிட்டு, “அல்லாஹ்வின் தூதரே! எனக்கும் கத்தாபின் மகனா(ர் உம)ருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு (என் செய்கைக்காக) நான் வருந்தி அவரி டம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்து விட்டார். ஆகவே உங்களிடம் வந்தேன்என்று சொன்னார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், “அபூபக்ரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!என்று மும்முறை கூறினார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (அபூபக்ர் ரலி அவர்களை மன்னிக்க மறுத்து விட்டதற்காக) மனம் வருந்தி அபூபக்ர் (ரலி) அவர்கன் வீட்டிற்குச் சென்று, “அங்கே அபூபக்ர் (ரலி) அவர்கள் இருக்கிறார்களா?” என்று கேட்க, அவர்களின் வீட்டார், “இல்லைஎன்று பதிலத்தார்கள்.

ஆகவே, அவர்கள் நபி {ஸல்} அவர்க டம் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய முகம், (கோபத்தால்) நிறம் மாற லாயிற்று. எனவே, அபூபக்ர் (ரலி) அவர்கள் பயந்துபோய் தம் முழங்காலின் மீது மண்டியிட்டு அமர்ந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் வின் மீதாணையாக! நான் தான் (வாக்கு வாதத்தை தொடங்கியதால் உமரைவிட) அதிகம் அநீதி இழைத்தவனாகி விட்டேன்.என்று இருமுறை கூறினார்கள். அப்போது நபி {ஸல்} அவர்கள், “(மக்களே!) அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். பொய் சொல்கிறீர்என்று நீங்கள் கூறினீர்கள்.

அபூபக்ர் அவர்களோ, நீங்கள் உண்மையே சொன்னீர்கள்என்று கூறினார்; மேலும் (இறைமார்க்கத்தை நிலை நிறுத்தும் பணியில்) தன்னையும் தன் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார். அத்தகைய என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து) விட்டு விடுவீர்களா?” என்று இருமுறை சொன்னார்கள். அதன் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் மன வேதனைக் குள்ளாக்கப்படவில்லை. ( நூல் :  புகாரி )

قال ابن إسحاق: “ولما قدم رسول الله صلى الله عليه وسلم من منصرفه عن الطائف.

كتب بجير بن زهير بن أبي سلمی إلى أخيه كعب بن زهير يخبره أن رسول الله صلى الله عليه وسلم قـ.ـتل رجلا بمكة، ممن كان يهجوه ويؤذيه.

وأن من بقي من شعراء قريش، ابن الزبعرى وهبيرة بن أبي وهب قد هربوا من كل وجه، فإن كانت لك في نفسك حاجة فطر إلى الرسول صلى الله عليه وسلم.

فإنه لا يقـ.ـتل أحدا جاءه تائبا، وإن أنت لم تفعل فانج إلى نجاتك من الأرض.

ثم قال ابن إسحاق: فلما بلغ كعتا الكتاب ضاقت به الأرض، وأشفق على نفسه، وأرجف به من كان في حاضره من عدوه.

فقالوا: هو مقتـ.ـول، فلما لم يجد من شيء بذا، قال قصيدته التي يمدح فيها رسول الله صل الله عليه وسلم.

وذكر فيها خـ.ـوفه وإرجاف الوشاة به من عدوه، ثم خرج حتى قدم المدينة فصلى مع رسول الله صل الله عليه وسلم۔

فذكر لي أنه قام إلى السول الله، حتى جلس إليه فوضع يده في يده وكان رسول الله لا يعرفه.

فقال: يا رسول الله إن كعب بن زهير قد جاء ليستأمن منك تائبا مسلفا، فهل أنت قابل منه إن أنا جئتك به؟

قال رسول الله: نعم، قال: أنا يا رسول الله، كعب بن زهير

قال ابن إسحاق: فحدثني عاصم بن عمر بن قتادة: أنه وثب عليه رجل من الأنصار، فقال: يا رسول الله، دعني وعدو الله أضرب عنقه.

فقال: رسول الله: دعه عنك، فإنه قد جاء تائبا نازعا عما كان عليه

فأقبل به عليه وآمن وأنشد قصيدته المشهورة (بانت سعاد)، فعفا عنه النبي، وخلع عليه بردته فسميت قصيدته ب (البردة)

கஅப் இப்னு சுஹைர் இவர் ஒரு பரம்பரை கவிஞர். நபிகளார் மீது இட்டு கட்டி கவிதை புனைந்து அவதூறு பரப்பிக் கொண்டிருந்தவர். இவரது சகோதரர் புஜைர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவராய் இருந்தார்.

எனவே கஅபிற்கு, புஜைர் சகோதர வாஞ்சையுடன் ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘கஅபே, துர் கவிதைகளாலும், அதனை பரப்புவதாலும் உன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தன்னிடம் மன்னிப்புக்கேட்கும் எவரையும் நபிகளார் தண்டிப்பது இல்லை. எனவே, தூய இதயத்தோடு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு நபிகளாரை கண்டு மன்னிப்புக்கேள். நீ மன்னிக்கப்படுவாய்என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

கடிதம் கண்டவுடன் பதறிப்போன கஅப் மதீனா விரைந்தார். ஒரு தொழுகைக்கு பின் நபிகளாரை சந்தித்தார். அப்போது அவர் தன்னை கஅப் என்று நபிகளாரிடம் காட்டிக் கொள்ளவில்லை.

அவர் ஒரு மூன்றாம் மனிதர் போல பேச்சை தொடங்கினார். அல்லாஹ்வின் தூதரே, கஅப் மனம் வருந்தியவராக உங்களிடம் வந்து ஒரு முஸ்லிமாக மன்னிப்பு கேட்க விரும்புகிறார். அவரை நான் உங்களிடம் அழைத்து வந்தால் நீங்கள் கஅபை ஏற்றுக் கொள்வீர்களா?’ என்றார்.

அண்ணலார் ஆம்என்று சொன்னது தான் தாமதம், ‘அல்லாஹ்வின் தூதரே, நான் தான் அந்த கஅப்என்று நபிகளாரின் கரம் பற்றிக் கொண்டு கூறினார்.

அருகிலிருந்த நபித்தோழர்கள் கஅபை தண்டிக்க விரைந்தனர். அதனை தடுத்த நபிகளார், ‘கஅபை விட்டு விடுங்கள், அவரை நான் மன்னித்து விட்டேன். அவர் முன்பு இருந்த கஅப் அல்ல இப்போதுஎன்றார்கள்.

மன்னிப்பின் மகத்துவத்தையும் அதன் உயர்வையும் உணர்ந்து கொண்ட கஅப் மகிழ்ச்சி பொங்க, மன்னிப்பின் மாண்பை மையமாக கொண்டு கவிதை பாடினார். அதன் பரிசாக போர்வையைப் போர்த்தி கஅப் (ரலி) அவர்களைக் கவுரவித்தார்கள்.

மன்னிப்புக் கேட்க மறக்கக் கூடாது எனவும் இஸ்லாம் தூண்டுகிறது....

حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ ، حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم

مَنْ كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لأَحَدٍ مِنْ عِرْضِهِ ، أَوْ شَيْءٍ فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ الْيَوْمَ قَبْلَ أَنْ لاَ يَكُونَ دِينَارٌ ، وَلاَ دِرْهَمٌ إِنْ كَانَ لَهُ عَمَلٌ صَالِحٌ أُخِذَ مِنْهُ بِقَدْرِ مَظْلَمَتِهِ وَإِنْ لَمْ تَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ صَاحِبِهِ فَحُمِلَ عَلَيْهِ

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: " ஒருவர், தன் சகோதரனுக்கு அவனது மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப் படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ, வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட் டும்.)

(ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனது அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதி யிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரது தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )

மன்னிப்பு கடந்த காலத்தின் நிகழ்வுகளை மாற்றாது. ஆனால் அது எதிர்காலத்தின்  பாதைகளில் ஆனந்தமான பூக்களைச் சொரியும். பல்வேறு சோபனங்களின் சோலைவனமாய் மாற்றிவிடும். இதோ! இஸ்லாம் கூறும் சோபனங்கள்...

மன்னிப்பது சுவனத்துக்கான பாதை...

وَسَارِعُواْ إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ  الَّذِينَ يُنفِقُونَ فِي السَّرَّاء وَالضَّرَّاء وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ ( آل عمران 134)

இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும் சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்;. அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள் பூமியைப் போலுள்ளது. அது பயபக்தியூடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்பமான (செல்வம்) நிலையிலும் துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்;. தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யூம் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.

மன்னிப்பவர்களுக்கு அல்லாஹ்வே நற்கூலி வழங்குகின்றான்..


وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِّثْلُهَا ۖ فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّـهِ ۚ  ( الشورى 40)

இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையே யாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.

மன்னிப்பது மகத்தான பண்பு...

 وَلَمَن صَبَرَ وَغَفَرَ إِنَّ ذَٰلِكَ لَمِنْ عَزْمِ الْأُمُورِ ﴿٤٣﴾

ஆனால் எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால் நிச்சயமாக அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும்.

மனிதர்களை மன்னித்தால் அல்லாஹ் எம்மை மன்னிப்பான்

وَلْيَعْفُوا وَلْيَصْفَحُوا ۗ أَلَا تُحِبُّونَ أَن يَغْفِرَ اللَّـهُ لَكُمْ ۗوَاللَّـهُ غَفُورٌ رَّحِيمٌ ﴿٢٢﴾  النور 22

அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவூம்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன்.

إِن تُبْدُوا خَيْرًا أَوْ تُخْفُوهُ أَوْ تَعْفُوا عَن سُوءٍ فَإِنَّ اللَّـهَ كَانَ عَفُوًّا قَدِيرًا ﴿١٤٩﴾النساء

நீங்கள் ஒரு நன்மையை வெளிப்படையாக செய்தாலும் அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அல்லது (ஒருவர் உங்களுக்குச் செய்த) தீமையை நீங்கள் மன்னித்தாலும் (அது உங்களுக்கு மிகவும் நல்லது) ஏனெனில் அல்லாஹ் நிச்சயமாக மன்னிப்பவனாகவும் பேராற்றல் உடையோனாகவும் இருக்கின்றான்.

அல்லாஹ்வின் அன்பு கிடைக்கும்...

فَاعْفُ عَنْهُمْ وَاصْفَحْ إِنَّ اللّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ }المائدة 13

எனவே நீர் அவர்களை மன்னித்து புறக்கணித்து விடுவீராக. மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.

கண்ணியம் கிடைக்கும்...

” وما زاد الله عبدا بعفو إلا عزا ، وما تواضع أحد لله إلا رفعه الله ” رواه مسلم

மன்னிக்கும் அடியார்களின் கண்ணியத்தை அல்லாஹ் அதிகரிக்கின்றான். யார் அல்லாஹ்வுக்காக பணிவாக நடந்துகொள்கின்றாரோ அல்லாஹ் அவரது அந்தஸ்தை உயர்த்துகின்றான்.

வியப்பூட்டும் ஆராய்ச்சி முடிவுகள்...

மன்னிக்கும் பழக்கமுடைய மனிதர்கள் ஆனந்தமாகவும்,  ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்' என்கின்றன பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள்.   'கேம்பைன் பார் பர்கிவ்னஸ் ரிசர்ச்' சுமார் 48 ஆராய்ச்சிகளின் முடிவை  விலாவரியாக எடுத்துரைக்கிறது. எல்லா ஆராய்ச்சிகளுமே மன்னிக்கும் மனிதர்கள்  உடலிலும், உள்ளத்திலும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருப்பதாக அடித்துச்  சொல்கின்றன.

ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக பேராசிரியர் தனது 'லேர்ன் டு  பர்கிவ்' (மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்) எனும் நூலில் மன்னிப்பின்  மகத்துவத்தையும், அது தரும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் பற்றி  பிரமிப்பூட்டும் வகையில் எழுதியிருக்கிறார்.

மன்னிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பும் குறைவு என்கின்றன ஏல்  மெடிக்கல் பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரைகள். மேலும், மன்னிக்கும் மனம் நமது உடலில்  நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும் என்கிறது.

ஆதலால் மன்னிப்போம்!! மகத்தான சோபனங்களைப் பெற்று மகிழ்வுடன் வாழ்வோம்!!!

Tuesday, 19 April 2022

தெவிட்டாத தேன்மறை – தராவீஹ் உரை:- 19. மனிதன் ஓர் அற்புதப் படைப்பு!!!

 

தெவிட்டாத தேன்மறைதராவீஹ் உரை:- 19.

மனிதன் ஓர் அற்புதப் படைப்பு!!!



அல்லாஹ்வின் மகத்தான கருணையினால் 18 –வது நோன்பை நோற்று, 19 – வது தராவீஹை நிறைவு செய்து, 19 –வது நோன்பை நோற்கும் ஆவலில் எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்தருள்வானாக! எதிர் வரும் நாட்களில் நோன்பு நோற்கும் ஆற்றலையும், தராவீஹ் தொழும் பாக்கியத்தையும் நஸீபாக்குவானாக!

இன்றைய தராவீஹ் தொழுகையில் ஸாத், அஸ் ஸுமர், அல் முஃமின் ஆகிய சூராக்கள் நிறைவு செய்யப்பட்டு 248 வசனங்கள் ஓதப்பட்டுள்ளது.

இன்று தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட அஸ் ஸுமர் அத்தியாயத்தின் 6 – ம் வசனத்திலும், அல் முஃமின் அத்தியாயத்தின் 67 –ம் வசனத்திலும் அல்லாஹ் மனித படைப்பின் பரிணாமம் குறித்து பேசுகின்றான்.

அதே போன்று அல்லாஹ்வின் படைப்பாற்றல் விஷயத்தில் தர்க்கம் செய்பவர்கள் குறித்து அல் முஃமின் அத்தியாயத்தின் 56 மற்றும் 69 ஆகிய வசனங்களில் பேசுகின்றான். எனவே, அல்லாஹ்வின் படைப்பாற்றலின் அற்புதச் சான்றாக இருக்கின்ற மனிதப் படைப்பு குறித்து இன்றைய அமர்வில் பேசுவது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றேன்.

உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் படைத்தவன் இறைவன்.

கண்ணுக்கு தெரியாத உயிரினம் முதல் உருவத்தில் மிகப்பெரிய பிரம்மாண்டமான உயிரினங்கள் வரை பல்வேறு வகையான உயிரினங்களை பல்வேறு அமைப்பில்  இறைவன் படைத்துள்ளான்.

ஊர்ந்து செல்லும் எறும்பு, தனது உடல் எடையை விடச் சுமார் எட்டு மடங்கு சுமையைச் சுமக்கிறது.

ஒட்டகம், முற்செடியையும் வலியின்றி உட்கொண்டு ஜீரணிப்பதோடு ஓரிரு வாரம் வரை நீரின்றி உயிர் வாழ்கிறது.

ஆந்தை, கடுமையான இருட்டிலும் எவ்வித தடுமாற்றமின்றிப் பறக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான மைல் தூரம் பறக்கும் பறவை எத்தனை நாட்களனாலும் மீண்டும் அதே வழித்தடத்தில் பறந்து தன் இருப்பிடத்திற்கே வந்து சேர்கிறது.

இப்படி  மனிதன் பெற்றிராத உடற்கூறுகளை, ஆற்றலைக் கொண்டுள்ள கோடிக் கணக்கான ஜீவராசிகளை விடவும், “மனிதனை மிகச்சிறந்த படைப்பாகப் படைத்திருக்கிறோம்என்று அல்லாஹ்  கூறுகிறான்.

உலகில் எந்த உயிரினங்களுக்கும் இல்லாத பல்வேறு சிறப்புகளுடன் மனிதனை இறைவன் படைத்துள்ளான்.

وَلَقَدْ كَرَّمْنَا بَنِىٓ ءَادَمَ وَحَمَلْنَٰهُمْ فِى ٱلْبَرِّ وَٱلْبَحْرِ وَرَزَقْنَٰهُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ وَفَضَّلْنَٰهُمْ عَلَىٰ كَثِيرٍۢ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًۭا﴿17:70﴾

நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கறையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம். (அல்குர்ஆன்:17:70)

திருக்குர்ஆனில் அல்லாஹ் முக்கியமான ஒரு விஷயத்தை  மிக அழுத்தமாக சொல்ல நினைத்தால், சில படைப்புகள் மீது சத்தியம் செய்து சொல்வதுண்டு. அப்படிப்பட்ட செய்திகளில் மிகுந்த உண்மைத்தன்மையும், பல அத்தாட்சிகளும் இடம் பெற்றிருக்கும். அப்படியான ஒரு வசனம் மனித படைப்பின் முக்கியத்துவம் குறித்து பேசும்போது..


وَالتِّينِ وَالزَّيْتُونِ وَطُورِ سِينِينَ وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ

 

"அத்தியின் மீதும், ஜெய்த்தூனின் மீதும் சத்தியமாக, தூர்ஸினாய் மலைத்தொடரின் மீதும் சத்தியமாக, அபயமளிக்கும் இந்த நகரத்தின் மீதும் சத்தியமாக, நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகிய அமைப்பில் படைத்திருக்கிறோம்". ( அல்குர்ஆன் 95: 1–4 )

மனிதன் அழகிய அமைப்பில் படைக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்ல அவன் தனித்துவம் வாய்ந்தவனாகவும் படைக்கப்பட்டிருக்கின்றான். தனித்துவத்துமானதில் ஒன்று விரல் ரேகை ஆகும். மற்றொன்று உள்வால் எழும்பாகும்.

விரல் ரேகை...

கைரேகை என்பது இறைவன் மனிதர்களுக்கு அளித்த முத்திரைஎன்று தடயவியல் அறிஞர்கள் வர்ணித்துள்ளனர். 

கைரேகை மூலம் மனிதர்களை அடையாளம் காண்பதற்கான முறையை சர் பிரான்சிஸ் கால்டன், சர் எட்வர்டு ஹென்றி ஆகியோர் உருவாக்கினார்கள். இந்த முறை 1901–ம் ஆண்டு ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப் படுத்தப்பட்டது.


بَلَىٰ قَادِرِينَ عَلَىٰ أَن نُّسَوِّيَ بَنَانَهُ

ஆம்! அவனுடைய விரலின் நுனியைக் கூட மிக துல்லியமாக அமைப்பதற்கு நாம் ஆற்றல் பெற்றுள்ளோம்’’. ( அல்குர்ஆன்: 75: 4 )

 

மனிதனின் தனித்தன்மையை நிரூபிக்க இன்றைய அறிவியல் உலகு விரல் ரேகையையும், மரபணுக்களின் தொகுப்பையும் மட்டுமே நம்பியுள்ளது என்பதை நவீன அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன

Unique Identification Data அனைத்து மனிதர்களுக்குமான தனித்துவமான அடையாளமாக அல்லாஹ் விரல்ரேகையை அமைத்துள்ளான்

عن أنس قال:عمي أنس بن النضر سميت به لم يشهد بدرا مع رسول الله صلى الله عليه وسلم فكبر علي فقال: أول مشهد شهده رسول الله صلى الله عليه وسلم غبت عنه أما والله لئن أراني الله مشهدا مع رسول الله صلى الله عليه وسلم فيما بعد ليرين الله ما أصنع قال فهاب أن يقول غيرها فشهد مع رسول الله صلى الله عليه وسلم يوم أحد من العام القابل فاستقبله سعد بن معاذ فقال يا أبا عمرو أين؟ قال: واها لريح الجنة أجدها دون أحد فقاتل حتى قتل، فوجد في جسده بضع وثمانون من بين ضربة وطعنة ورمية فقالت: عمتي الربيع بنت النضر: فما عرفت أخي إلا ببنانه.

அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “நபி {ஸல்} அவர்களுடன் உஹதுப் போரில் பங்குகொண்ட நபித்தோழர்,அனஸ் இப்னு நள்ர் (ரலி) அவர்கள் கடுமையாக போரிட்டு ஷஹீதானர். அவர் (உடல் முழுவதும் சிதைந்து போனதால்) அடையாளம் அறியப்படாத நிலையில் கொல்லப்பட்டார். அவரின் உடலில் வாளால் வெட்டப்பட்டும், ஈட்டியால் குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப்பட்டும் எண்பதுக்கும் மேற்ப்பட்ட காயங்கள் இருந்தன. அவரை அவரின் சகோதரி ருபைஉ பின்த் நள்ர் (ரலி) அவர்கள் அனஸ் அவர்களின்  கைவிரலை  வைத்தே அடையாளம் காட்டினார். ( நூல்: புகாரி )

1400 ஆண்டுகளுக்கு முன்பே கைவிரல் நுனி வடிவமைப்பை கொண்டு மனிதர்களை அடையாளம் காண முடிந்தது என்பதை மேற்கூறிய நபிமொழி நமக்கு உணர்த்துகிறது.

உள்வால் எலும்பு...

மனிதன் மரணம் அடையக்கூடியவன் என்றும்  மறுமை நாளில் அவன் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவான் என்றும்  அங்கே அவனது நன்மைகள், தீமைகளுக்கு ஏற்ப அவனுக்கு சொர்க்கம் அல்லது நரகம் பரிசாக தீர்ப்பளிக்கப்படும் என்று இஸ்லாம் கூறுகிறது.

இறந்த பிறகு அடக்கம் செய்யப்படும் மனித உடல் எண்ணப்படும் சில நாட்களில் மண்ணோடு மண்ணாக மட்கிப்போகும். மீண்டும் எப்படி மனிதன் உருவாக்கப்படுவான்என்கிற கேள்வி உலகம் தோன்றிய நாள் முதற் கொண்டு  இன்று வரை நிலைத்திருக்கின்ற ஒன்றாகும். 

இதற்கு அல்குர்ஆனும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் இவ்வாறு பதிலுரைக்கின்றார்கள்:

وَضَرَبَ لَنَا مَثَلًا وَنَسِيَ خَلْقَهُ قَالَ مَنْ يُحْيِ الْعِظَامَ وَهِيَ رَمِيمٌ (78) قُلْ يُحْيِيهَا الَّذِي أَنْشَأَهَا أَوَّلَ مَرَّةٍ وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيمٌ (79)

மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று.

      முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்என்று (நபியே!) நீர் கூறுவீராக! ( அல்குர்ஆன்: 36: 78, 79 )

மனிதன் மரணிக்கக் கூடியவன்தான். ஆயினும் மறுமை நாளில் அவன் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவான். அப்போது அவனது நன்மைகள், தீமைகளுக்கு ஏற்ப அவனுக்கு சொர்க்கம் அல்லது நரகம் பரிசாக வழங்கப்படும் என்பதே உண்மை. இதுவே இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையும் நம்பிக்கையும் ஆகும்.

இறந்த பின்னர் அடக்கம் செய்யப்படும் மனித உடல் சில மாதங்களில் மண்ணோடு மண்ணாகிவிடும். அவ்வாறான மனிதன் மீண்டும் எப்படி உருவாக்கப்படுவான்? என்ற கேள்வி அன்று முதல் இன்று வரை காணப்படுகின்றது. அருள்மறை அல்குர்ஆன் இதற்கு பின்வருமாறு பதிலுரைக்கின்றது:

أَيَحْسَبُ الْإِنْسَانُ أَلَّنْ نَجْمَعَ عِظَامَهُ ، بَلَى قَادِرِيْنَ عَلَى أَنْ نُسَوِّيَ بَنَانَهُ  – القيامة: 3 ، 4 

இறந்து, உக்கி மண்ணாய்போன அவனுடைய எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கமாட்டோம் என்று மனிதன் எண்ணிக் கொண்டிருக்கின்றானா? அவனது நுனிவிரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம். (அல்குர்ஆன்: 75: 3, 4)

இத்திருவசனம் மனிதன் மரணித்த பின் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவான் என்பதை வலியுறுத்துகின்றது.

அவன் எவ்வாறு உயிர்ப்பிக்கப்படுவான் என்பது பற்றி தெளிவுபடுத்தும் போது நபி {ஸல்} அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: كُلُّ ابْنِ آدَمَ يَأْكُلُهُ التُّرَابُ، إِلَّا عَجْبَ الذَّنَبِ مِنْهُ، خُلِقَ وَفِيهِ يُرَكَّبُ (صحيح مسلم  

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "ஆதமின் மகனின் (மனிதனின் உடலிலுள்ள) அனைத்துப் பகுதிகளையும் மண்சாப்பிட்டு விடும் மனிதனின் (முதுகுத் தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் நுனியைத் தவிர! அதை வைத்தே அவன் (தன் தாயின் கருவறையில் முதன் முதலாக) படைக்கப்பட்டான். அதிலிருந்தே அவன் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படுவான்" என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். (  நூல்: முஸ்லிம் )

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَيْنَ النَّفْخَتَيْنِ أَرْبَعُونَ» قَالُوا: يَا أَبَا هُرَيْرَةَ أَرْبَعُونَ يَوْمًا؟ قَالَ: أَبَيْتُ، قَالُوا: أَرْبَعُونَ شَهْرًا؟ قَالَ: أَبَيْتُ، قَالُوا: أَرْبَعُونَ سَنَةً؟ قَالَ: أَبَيْتُ، «ثُمَّ يُنْزِلُ اللهُ مِنَ السَّمَاءِ مَاءً فَيَنْبُتُونَ، كَمَا يَنْبُتُ الْبَقْلُ» قَالَ: «وَلَيْسَ مِنَ الْإِنْسَانِ شَيْءٌ إِلَّا يَبْلَى، إِلَّا عَظْمًا وَاحِدًا، وَهُوَ عَجْبُ الذَّنَبِ، وَمِنْهُ يُرَكَّبُ الْخَلْقُ يَوْمَ الْقِيَامَةِ. صحيح مسلم

 

அபூஹுரைரா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி {ஸல்} மறுமை நாளில் மனிதர்கள் எழுப்பப்படுவது குறித்த நபிமொழி ஒன்றை நான் மக்களுக்கு அறிவித்துக் கொண்டிருந்தேன். நபி ஸல் அவர்கள்: உலக முடிவு நாளில் அனைத்தையும் அழிப்பதற்காகவும், பின்னர் அனைவரையும் எழுப்புவதற்காகவும் ஊதப்படும்)  இரண்டு ஸூருக்கும் இடையே நாற்பது இருக்கும்". என்று கூறினார்கள். அப்போது மக்கள் அபூஹுரைரா அவர்களே! நாற்பது நாளா? என்று கேட்டனர். நான் இல்லை என்றேன். மீண்டும் மக்கள் நாற்பது மாதமா? என்றனர். நான் இல்லை என்றேன். மீண்டும் மக்கள் நாற்பது ஆண்டுகளா? என்று கேட்டனர். மீண்டும் நான் இல்லை என்றேன். பின்னர் நபி {ஸல்} அவர்கள் கூறிய செய்தியை நான் தொடர்ந்தேன். இரண்டாம் ஸூர் ஊதப்பட்டதும் "இறந்து போனவர்கள் பச்சைப் புற் பூண்டுகள் முளைப்பதைப் போன்று எழுவார்கள். மனிதனின் எல்லா உறுப்புகளும் (மண்ணுக்குள்) மக்கிப் போய்விடும்; ஒரே ஒரு எலும்பைத் தவிர! அது (அவனது முதுகுத்தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும். அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படும் என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

Hans Spemann experiments

Scientists found out that the cell formation and organization of the fetus is initiated by the primitive streak and primitive node. Before these parts form no differentiation of cells can take place. One of the most popular scientists, who proved this, was the German scientist Hans Spemann.

By his experiments with the primitive streak and the primitive node he found out that they organize the development of the embryo and called them for this reason "the primary organizer".

The German scientist started his experiments with amphibians by inserting a primary organizer he had cut out from one embryo under the epiblast of another embryo of the same age (first embryonic stage third or fourth week).

This led to the formation of a second embryo from the implanted part, which has been inserted into a new environment. The implanted part had influence on the surrounding cells of the new environment. That way a second embryo is formed in the first embryo.

Tailbone cells can not be degraded or destroyed

In 1931 Spemann ground the primary organizer and implanted it again. The grinding did not change the results of the experiment; the second embryo was formed anyhow. In 1933 Spemann and his scientists repeated the same experiment but this time they boiled the primary organizer before. But despite boiling a second embryo was formed. It was shown that the cells could not be influenced. In 1935 Spemann got the Nobel Prize for the discovery of the primary organizer.

Dr. Othman Al Djilani and Sheik Abd Majid Azzandani did some experiments on the tailbone in 2003/Ramadan1424 in the Sheik Abd Majid Azzanidanis house in Sana'a (Yemen). One of the two vertebras of the five tailbones was burned on a gas flame for 10 minutes until they were burned completely. (They had glowed red and then turned black).

They put the burned pieces into sterile boxes and brought them to a analysis laboratory in Sana'a (Al Olaki Laborytory) Dr. Saleh al Olaki, Professor for histology and pathology of the university of Sana'a analyzed the pieces and found out that the cells of the bone tissue of the tailbone ware not affected and had survived the flames (only muscles, fat and bone marrow were burned, while the cells of the tailbone were not affected).

ஜெர்மனின் நோபல் விஞ்ஞானியான ஹான்ஸ் ஸ்பீமேன் என்பவர் உள்வால் எலும்பு நுனி குறித்து தீவிரமாக ஆராய்ந்தார். அதனை பல ஆயிரம் டிகிரி வெப்பத்தில் எரிக்கவும், வீரியம் மிக்க அமிலங்களின் கலவை கொண்டு அதனை கரைக்கவும் முயற்சி செய்தார். அதில் சிறு மாறுதலைக் கூட அவரால் செய்ய முடியவில்லை. ஆராய்ச்சியின் முடிவாய் திருக்குர்ஆன் மற்றும் நபி ஸல் அவர்களின் வார்த்தைகளை உண்மைபடுத்தி உலகிற்கு 1931 - 1933 காலகட்டத்தில் அறிவித்தார். மனித உடலில் உள்ள அழிக்க முடியாத பகுதி இது என்பதை இந்த உலகுக்கு தன்னுடைய சோதனையின் மூலம் நிரூபித்தார். இதற்காக அவர் நோபல் பரிசினையும் பெற்றார்.

எனவே, முதலில் மனிதன் தன் படைப்பைப் பற்றி சிந்திக்க வேண்டும்..

اَوَلَا يَذْكُرُ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ قَبْلُ وَلَمْ يَكُ شَيْـٴًـــا

இதற்கு முன்னர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த அவனை நாமே மனிதனாகப் படைத்தோம் என்பதை அவன் கவனிக்க வேண்டாமா?  ( அல்குர்ஆன்: 19: 67 )

பின்னர் எந்த நோக்கத்திற்காக படைக்கப்பட்டிருக்கின்றான் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.


أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ

நாம் உங்களை வீணுக்காகப் படைத்தோம் எனவும் நிச்சயமாக நீங்கள் எம்மிடம் மீட்டப்படமாட்டீர்;கள் எனவும் எண்ணிக்கொண்டிருந்தீர்களா? ( அல்குர்ஆன்: 23: 115 )

أَيَحْسَبُ الْإِنسَانُ أَن يُتْرَك سُدًى 

மனிதன்  (விசாரணையின்றி) வெறுமனே விட்டு விடப்படுவான் என அவன் எண்ணிக் கொண்டிருக் கின்றானா?                           ( அல்குர்ஆன்: 75: 36 )

விடையாக, அல்லாஹ் மனித ஜின் இனங்களை அவனை வணங்கி வழிபடும் உயர் இலட்சியத்திற்காகவும், உன்னத நோக்கத்திற்காகவும் இவ்வுலகத்தில் படைத்துள்ளான் என்கிற பேருண்மையை நாம் புரிந்து கொள்ள முடியும்.

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالأِنْسَ إِلاَّ لِيَعْبُدُونِ 

என்னை வணங்குவதற்காகவேயன்றி ஜின்களையும், மனிதர்களையும் நான் படைக்கவில்லை.                                            ( அல்குர்ஆன்: 51: 56 )

فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ

அல்லாஹ் படைப்பாளர்களிலெல்லாம் மிகச் சிறந்த படைப்பாளன் ஆவான்”. ( அல்குர்ஆன்: 23: 14 )

எனவே, உலகப் படைப்புகளில் எப்படி அறிவின் மூலம் மனித படைப்பு சிறந்த படைப்பு என்பதாக பெருமை அடைகின்றோமோ, அதே உணர்வோடு படைப்பின் நோக்கமான இறைவனை வணங்கி வழிபடும் விஷயத்திலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்!!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனை அறிந்து, விளங்கி வணங்கும் மேன்மக்களாக நம் அனைவர்களையும் ஆக்கியருள்வானாக!! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!