Thursday, 20 April 2023

ரமழானிய்யீன்களாக ஆக வேண்டாம்! ரப்பானிய்யீன்களாக ஆகுவோம்!!

 

ரமழானிய்யீன்களாக ஆக வேண்டாம்! ரப்பானிய்யீன்களாக ஆகுவோம்!!


ரமலான் மாதத்தில்  விழுந்து விழுந்து இரவு-பகலாக வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு ரமழானை விடை பெறும் நாம் இனி  எப்படியிருக்கப் போகிறோம்?. நமக்கு நாமே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமிது.

ஆம்! இந்த ஆண்டு ரமழான் மாதத்தின் கடைசி ஜும்ஆவில் நாம் வீற்றிருக்கின்றோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நாம் வேண்டி விரும்பி கேட்ட அவனுடைய மேலான ரஹ்மத்தையும், அவனுடைய விசாலமான மக்ஃபிரத்தையும், அவனுடைய கருணையால் நரக விடுதலையையும் நமக்கும் நம் குடும்பத்தினருக்கும் தந்தருள்வானாக!

நாம் நோற்ற நோன்புகளையும், நம்முடைய தராவீஹ் தொழுகைகள், இரவு வணக்கங்கள், திலாவத், தஸ்பீஹ்கள், கடமையான ஜகாத் மற்றும் தான தர்மங்கள் இதர உபரியான நல்லறங்கள் அனைத்தையும் கபூல் செய்து அவன் வாக்களித்துள்ள கூலிகளை வழங்கி உயர்தர சுவனத்தின் "ரய்யானின்" வாயில் வழியாக நுழையும் நற்பேற்றினை நம் அனைவருக்கும் நஸீபாக்குவானாக! 

எல்லாவற்றுக்கும் மேலாக நோன்பின் மூலம் "தக்வா"வைப் பெற்ற மேன்மக்களில் ஒருவராக நம் ஒவ்வொருவரையும் ஆக்குவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!

இபாதத்எனும் இறைவணக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட கால, நேரத்தில் செய்ய வேண்டிய ஒன்று தானே தவிர அவை குறிப்பிட்ட காலத்தில் மட்டும் செய்யப்பட வேண்டிய ஒன்றல்ல என்ற நிலைப்பாட்டை நாம் முதலாவதாக மனதில் நிலை நிறுத்த கடமைப் பட்டிருக்கின்றோம்.

وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ

"நபியே நீர் உமது இரட்சகனை நம்பிக்கை (எனும் மரணம்) வரும் வரை வணங்குவீராக".   ( அல்குர்ஆன்: 15: 99 )

இந்த வசனத்தின் கருத்து இறை வணக்கம் அது அவரவர் இறப்பு வரைக்கும்என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் நினைத்த போது இறைவனை வணங்குவதும், இதர நேரங்களில் அவனை மறந்திருப்பதும் நம்மை எந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் என அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அருள்மறையின் மூலம் எச்சரிக்காமல் இல்லை. இதோ அந்த எச்சரிக்கை:-

وَمِنَ النَّاسِ مَنْ يَّعْبُدُ اللّٰهَ عَلٰى حَرْفٍ‌ ‌ فَاِنْ اَصَابَهٗ خَيْرٌ اۨطْمَاَنَّ بِهٖ‌  وَاِنْ اَصَابَتْهُ فِتْنَةُ اۨنْقَلَبَ عَلٰى وَجْههٖ‌ خَسِرَ الدُّنْيَا وَالْاٰخِرَةَ ‌  ذٰ لِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِيْنُ‏

இன்னும்: மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் - அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்; ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான்; இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் -இதுதான் தெளிவான நஷ்டமாகும். ( அல்குர்ஆன்: 22: 11 )

ஆகவே, ரமழானில் மட்டும் அல்லாஹ்வை அஞ்சுவோர்களாக இருக்கும் ரமழானிய்யீன்களாக ஆகாமல் எல்லா காலத்திலும் அல்லாஹ்வை அஞ்சுவோர்களாக இருக்கும் ரப்பானிய்யீன்களாக மாறுவதற்கு முயற்சி செய்வோம்!!!

பொதுவாகவே ஒவ்வொரு மனிதர்களும் இயற்கையாக எந்த அமைப்பிலே இருக்கின்றார்களோ அந்த அடிப்படையில் தான் அவர்கள் செயல்பட விரும்புவார்கள்.

قال المفسرون في تفسير قوله تعالى : ( قل كل يعمل على شاكلته ) الإسراء/84 ، كل إنسان يعمل على ما يشاكل ( يماثل ) أخلاقه التي ألفها ، وهذا ذم للكافر ومدح للمؤمن .
قُلْ كُلٌّۭ يَعْمَلُ عَلَىٰ شَاكِلَتِهِۦ فَرَبُّكُمْ أَعْلَمُ بِمَنْ هُوَ أَهْدَىٰ سَبِيلًۭا﴿17:84﴾

(நபியே!) நீர் கூறுவீராக "ஒவ்வொருவனும் தன் வழியிலேயே செயல் படுகிறான்" ( அல்குர்ஆன்: 17: 84 ) இந்த இறைவசனத்தின் விளக்கத்தில் "ஒவ்வொரு மனிதனும் அவனுடைய குணங்களுக்கு ஒப்பவே, எதன் மீது பிரியம் வைத்து இருக்கின்றானோ அதன் அடிப்படையிலே செயல்படுவான்" என்று விளக்கம் தருகிறார்கள்.

قال رسول صلى الله عليه وسلم : ( أيها الناس عليكم من الأعمال ما تطيقون فإن الله لا يمل حتى تملوا ، وإن أحب الأعمال إلى الله ما دووم عليه وإن قل وكان آل محمد صلى الله عليه وسلم إذا عملوا عملاً ثبتوه ) أي داوموا عليه ، رواه مسلم .

மனிதர்களே! உங்களால் முடிந்த அளவு நல்ல அமல்களை செய்யுங்கள்! ஏனெனில், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சடைவு அடைய மாட்டான். அல்லாஹ்விடம் அடியார்களின் அமல்களில் குறைவாக இருந்தாலும் நிரந்தரமாக செய்யும் அமல்களே மிகவும் பிரியமானதாகும். முஹம்மது நபி ஸல் அவர்களின் குடும்பத்தார்கள் ஒரு அமலைச் செய்தார்கள் என்றால் அதை நிரந்தரமாக என்றென்றும் செய்து வருவார்கள் " என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )


ولما سئل النبي صلى الله عليه وسلم أن الأعمال أحب إلى الله ، قال : ( أدومه وإن قل ) .

அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களிடம் "அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான அமல்கள் எது?" என்று கேட்கப்பட்டதற்கு, "குறைவாக செய்தாலும் நிரந்தரமாக செய்யும் நல்ல அமல்களே!" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

ரமழானை விடைபெறும் போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்!!

1. இஸ்திக்ஃபார் செய்ய வேண்டும்.

فعن عائشة رضي الله عنها أنَّها سمعت رسول الله ﷺ وأصغت إليه قبل أن يموت وهو مُسنِدٌ إليها ظهرَه يقول: *“اللَّهمَّ اغفر لي وارحَمني وأَلحِقنِي بالرَّفيق الأعلى”* (رواه البخاري). ذلك مع ملازمته -صلى الله عليه وسلم- للاستغفار في أيام حياته الزكيَّة وعمره الشريف.

அல்லாஹ்வே! என்னை மன்னிப்பாயாக! என்மீது கருணை காட்டுவாயாக! உயர்ந்த நண்பனுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக! அல்லாஹ்வே! உயர்ந்த நண்பனை...(சந்திக்க விரும்புகிறேன்) (ஸஹீஹுல் புகாரி)

கடைசி வார்த்தையை மட்டும் மூன்று முறை நபி (ஸல்) கூறினார்கள். வானை நோக்கி உயர்த்திய அவர்களுடைய கை சாய்ந்தது. உயர்ந்தோனிடம் சென்றார்கள். இன்னாலில்லா வ இன்னா இலை ராஜிஊன்.

வாழும் காலமெல்லாம் நாள்தோறும் 100 க்கும் மேற்பட்ட முறை இஸ்திக்ஃபார் செய்யும் மாநபி {ஸல்} அவர்கள் தங்களின் வாழ்நாளை முடிக்கும் போதும் இஸ்திக்ஃபாருடனே முடித்தார்கள்.

كتب عمر بن عبد العزيز إلى الأمصار : يأمرهم بختم شهر رمضان بالاستغفار والصدقة وقال :
قولوا كما قال أبوكم آدمربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين "
وكما قال ابراهيم : " والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين " .
وكما قال موسى : " ربي إني ظلمت نفسي فأغفر لي " .
وكما قال ذو النون : " لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين " .

أكثروا من شكر الله تعالى أن وفقكم لصيامه , وقيامه . فإن الله عز وجل قال في آخر آية الصياموَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُون } البقرة 185

உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் தங்களின் ஆளுகையின் கீழ் மாகாணங்களின் கவர்னர்களுக்கு ரமழானின் இறுதி நாட்களில் ஒரு சுற்றறிக்கை அனுப்பி "ரமழான் விடைபெறும் போது நீங்கள் இஸ்திக்ஃபாரைக் கொண்டும், தான தர்மங்களைக் கொண்டும் ரமழானை நிறைவு படுத்துங்கள்!" என்று.

மேலும், உங்கள் தந்தை ஆதம் (அலை) அவர்கள் கேட்டது போன்று.. 

எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்என்று கூறினார்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் கேட்டது போன்று..

நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் ஆதரவு வைக்கின்றேன்.

மூஸா (அலை) அவர்கள் கேட்டது போன்று...

என் இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக!என்று பிரார்த்தித்தார்; அப்போது அவன் அவரை மன்னித்தான் - நிச்சயமாக அவன், மிகவும் மன்னிப்பவனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்.

யூனுஸ் (அலை) கேட்டது போன்று...

எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்என்று பிரார்த்தித்தார்.

மேலும், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உங்களுக்கு நோன்பு வைப்பதற்கும், நின்று வணங்குவதற்கும் தவ்ஃபீக் செய்தமைக்காக அல்பகரா அத்தியாயத்தின் 185 வது வசனத்தில் கூறுவது போன்று அவனுக்கு அதிகமதிகம் நன்றி செலுத்துங்கள்!!"  என்று கடிதத்தின் வாயிலாக சுற்றறிக்கை அனுப்புவார்கள்.

2. கபூலிய்யத்திற்காக கவலைப்பட வேண்டும்..

عن عائشة ـ رضي الله عنها ـ قالت: سألت رسول الله - صلى الله عليه وسلم - عن هذه الآية: (وَالَّذِينَ يُؤْتُونَ مَا آتَوْا وَّقُلُوبُهُمْ وَجِلَةٌ) [المؤمنون: 60]
أهم الذين يشربون الخمر ويسرقون؟! قال: (لا يا ابنة الصديق! ولكنهم الذين يصومون ويصلّون ويتصدقون، وهم يخافون أن لا يقبل منهم، أولئك الذين يسارعون في الخيرات).
هذه هي صفة من أوصاف المؤمنين أي يعطون العطاء من زكاةٍ وصدقة، ويتقربون بأنواع القربات من أفعال الخير والبر وهم يخافون أن لا تقبل منهم أعمالهم

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-

وَالَّذِيْنَ يُؤْتُوْنَ مَاۤ اٰتَوْا وَّ قُلُوْبُهُمْ وَجِلَةٌ اَنَّهُمْ اِلٰى رَبِّهِمْ رٰجِعُوْنَ ۙ‏

இன்னும் எவர்கள் தம் இறைவனிடம் தாங்கள் திரும்பிச் செல்லவேண்டியவர்கள் என்று அஞ்சும் நெஞ்சத்தினராய் (நாம் கொடுத்ததிலிருந்து) தங்களால் இயன்ற மட்டும் (அல்லாஹ்வின் பாதையில்) கொடுக்கிறார்களோ அவர்களும்-

:61

 اُولٰٓٮِٕكَ يُسَارِعُوْنَ فِىْ الْخَيْـرٰتِ وَهُمْ لَهَا سٰبِقُوْنَ‏

இ(த்தகைய)வர்கள் தாம் நன்மைகளின் பக்கம் விரைகின்றனர்; இன்னும் அவற்றை (நிறைவேற்றி வைப்பதில்) முந்துபவர்களாகவும் இருப்பார்கள்.

 இந்த இறைவசனம் இறக்கியருளப்பட்ட போது, அவர்கள் மது அருந்துபவர்களா? அல்லது திருடர்களா? என்று நான் நபி {ஸல்} அவர்களிடம் கேட்டதற்கு, நபி {ஸல்} அவர்கள்ஸித்தீகின் மகளே! அவர்கள் திருடர்களும் இல்லை, குடிகாரர்களும் இல்லை. மாறாக, அவர்கள் தொழுவார்கள். நோன்பு நோற்பார்கள். தான தர்மங்களும் செய்வார்கள். எனினும், எங்கே அந்த அமல்களெல்லாம் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாமல் போய்விடுமோ என்று அஞ்சுவார்கள். அவர்கள் தான் இந்த வசனத்தில் கூறப்படுபவர்கள்என்று பதில் கூறினார்கள்.

وقال علي بن أبي طالب ( رضي الله عنه ) : كونوا لقبول العمل أشد أهتماماً من العمل , ألم تسمعوا قول الله عز وجل

إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِين} .

அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:- “நீங்கள் அமல்கள் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள், கபூல் ஆக வேண்டும் என கவலை கொண்டு கபூல் செய்யப்படுபவர்களின் அமல்களைப் போன்று அமல் செய்யுங்கள். நீங்கள் அல்லாஹ்அல்லாஹ் ஏற்றுக் கொள்வதெல்லாம் இறையச்சம் உடையவர்களிடம் இருந்து தான்என்று குர்ஆனில் சொல்வதைக் கேட்கவில்லையா?” என்று.

அமல் என்பதும், கபூலிய்யத்- அங்கீகாரம் என்பதும் தனித்தனியான நிஃமத்தாகும். அல்லாஹ் சிலருக்கு அமல் செய்யும் நஸீபை வழங்குவான். ஆனால் அங்கீகாரம் வழங்கமாட்டான்.

ஆயிரம் ஆண்டுகள் வணக்கம் புரிந்த இப்லீஸின் வணக்கத்திற்கு அல்லாஹ்விடம் அங்கீகாரம் இல்லாமல் போய்விட்டது. அல்லாஹ்வின் கபூலிய்யத் கிடைக்காமல் தங்களின் ஈமானை இழந்த வணக்கசாலிகள் பற்றி திருக்குர்ஆன் பேசுகிறது.

அல்லாஹ்வின் அங்கீகாரம் கிடைக்க சில நேரங்களில் ஒரு சின்ன அமலும் காரணமாக ஆகிவிடலாம். தாகித்த நாய்க்கு தண்ணீர் புகட்டிய ஒரு விபச்சாரியின் அமல் அல்லாஹ்விடம் அங்கீகாரம் பெற்றதால் அவளுக்கு சுவனத்தை பெற்றுத் தந்தது.

அமலுக்கான அங்கீகாரம் - கபூலிய்யத் யாருக்கு கிடைக்கும்?

இதோ அல்லாஹ்வின் வசனத்தை கவனியுங்கள்...

إِنَّمَا يَتَقَبَّلُ اللَّـهُ مِنَ الْمُتَّقِينَ

"மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக்கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்துதான்" என்று (ஹாபீல்) கூறினார்.

இணைவைப்பும் இறைமறுப்பும் மட்டுமே ஈமான் பறிபோக காரணமாக சொல்ல முடியாது. பல நேரங்களில் ஈமான் பறி போக பாவங்களும் காரணமாக அமைந்துவிடும்.

பல்ஆம் இப்னு பாவூராவின் வாழ்வு இதற்கு சரியான சான்று. நபி மூஸா (அலை) அவர்கள் காலத்தில் வாழ்ந்த பல்ஆம் பின் பாஊரா என்பவர் மிகப் பிரபல்யமான துறவியாக இருந்தார். வணக்க வழிபாடுகளில் அதிகமாக ஈடுபாட்டுடன் இருந்தார். அவருக்கு அல்லாஹ் தனது மகத்தான பெயராகிய அல் இஸ்முல் அஃழம் என்பதை கற்றுக் கொடுத்திருந்தான். அந்தப் பெயர் கூறி பிரார்த்தித்தால் கேட்டது கிடைக்கும்; பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்படுபவராக அவர் கேட்டு அல்லாஹ் எதையும் கொடுக்காமல் இருந்ததில்லை. அந்த அளவுக்குப் பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்படுபவராக இருந்தார்.

வாழ்நாளில் அவர் செய்த எந்த துஆவும் மறுக்கப்பட்டதில்லை என்பதும், இஸ்முல் அஃழம் எனும் அல்லாஹ்வின் விசேஷ திருநாமத்தை அறிந்திருப்பதும், தவ்ராத் வேதம் முழுவதும் மனனம் செய்த நான்கு பேரில் ஒருவராக அவர் இருந்ததும் அவர் பெற்ற அற்புதங்களில் உள்ளதாகும். ஆனால் அவர் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரம் மற்றும் பகட்டின் பக்கம் சாய்ந்து அதன் இன்பங்களையும், சுகபோகங்களையும் எதிர்நோக்க ஆரம்பித்து பாவங்களில் குதித்தார்.

இறுதியில் நபி மூஸா (அலை) அவர்களுக்காகவும், அவர்களுடன் இருந்தவர்களுக்கு எதிராகவும் பிரார்த்தனை செய்ய எழுந்து நின்றார்.

இறுதியில் அகப் பார்வையை இழந்து அல்லாஹ்வுடைய அருளை விட்டும் தூரமாகி அழிவில் போய் விழுந்தார். அவருக்கு வழங்கப்பட்டிருந்த அருட்கொடைகள் அகற்றப்பட்டன. அவரது நாக்கு வெளியே தள்ளி நெஞ்சு வரை வந்து தொங்கியது.

(அறிவிப்பு : இப்னு மஸ்ஊத் (ரழி), முஸன்னஃப் அப்தில் ரசாக், இப்னு அப்பாஸ் (ரழி), தஃப்ஸீர் தபரி, தஃப்ஸீர் இப்னு கஸீர் : 7:175-177, விரிவுரை பாகம் : 3 பக்கம் : 954-965.)

அல்லாஹ் அவருக்கு ஒரு அத்தாட்சியல்ல, பல அத்தாட்சிகளை வழங்கியதாக கூறுகின்றான். இந்தளவு தூரம் இறைநெருக்கம் பெற்ற ஒருவரை அல்லாஹ் ஈமானை பிடுங்கி சபித்த வார்த்தையை கவனியுங்கள்:


وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ الَّذِىْۤ اٰتَيْنٰهُ اٰيٰتِنَا فَانْسَلَخَ مِنْهَا فَاَتْبَعَهُ الشَّيْطٰنُ فَكَانَ مِنَ الْغٰوِيْنَ‏ وَلَوْ شِئْنَا لَرَفَعْنٰهُ بِهَا وَلٰـكِنَّهٗۤ اَخْلَدَ اِلَى الْاَرْضِ وَاتَّبَعَ هَوٰٮهُ‌ ۚ فَمَثَلُهٗ كَمَثَلِ الْـكَلْبِ‌ ۚ اِنْ تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ اَوْ تَتْرُكْهُ يَلْهَثْ ؕ ذٰ لِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا‌ ۚ فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ‏

(நபியே!) நீர் அவர்களுக்கு ஒரு மனிதனுடைய வரலாற்றை ஓதிக் காட்டுவீராக! அவனுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம்; எனினும் அவன் அவற்றை விட்டு முற்றிலும் நழுவிவிட்டான்; அப்போது அவனை ஷைத்தான் பின் தொடர்ந்தான். அதனால் அவன் வழி தவறியவர்களில் ஒருவனாகி விட்டான்.

நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்; எனினும் அவன் இவ்வுலக வாழ்வை மதித்து, தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்; அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது".  ( அல்குர்ஆன்:  7: 176, 177 )

هذا أبو بكر -رضي الله عنه- يقول: "إن لله عملًا بالنهار لا يقبله بالليل، وعمل بالليل لا يقبله بالنهار". وكان يخاف ألا يُتقبل منه يوم الحساب

அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:- “அல்லாஹ்விற்கென்று பகலில் சில அமல்கள் இருக்கின்றன. அதை இரவில் செய்தால் அல்லாஹ் கபூல் செய்வதில்லை. இரவில் சில அமல்கள் இருக்கின்றன. அதை பகலில் செய்தால் அல்லாஹ் கபூல் செய்வதில்லை. மேலும், அல்லாஹ் மறுமை நாளில் எங்கே தன்னுடைய அமல்களை ஏற்றுக் கொள்ள மாட்டானோ என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் பயப்படுபவர்களாக இருந்தார்கள்.


وأبو ذر -رضي الله عنه- يقول: "لأن أستيقن أن الله قد تقبل لي صلاة واحدة أحب إلي من الدنيا وما فيها".

அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:- "அல்லாஹ் ரப்புல் ஆலமீன் என்னுடைய ஒரேயொரு தொழுகையை கபூல் செய்து விட்டான் எனில் எனக்கு அது இந்த உலகமும் உலகில் உள்ள அருட்கொடைகள் அனைத்தும் கிடைப்பதை விட மிகவும் பிரியமானதாகும்.


وها هو ابن عمر -رضي الله عنه وعن عمر- يقول: "لَوْ عَلِمْتُ أَنَّ اللَّهَ تَقَبَّلَ مِنِّي سَجْدَةً وَاحِدَةً , أَوْ صَدَقَةَ دِرْهَمٍ وَاحِدٍ .

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:- அல்லாஹ் ரப்புல் ஆலமீன் என்னுடைய ஒரேயொரு ஸஜ்தாவை, நான் செய்த ஒரேயொரு திர்ஹம் தர்மத்தை கபூல் செய்தான் எனில் அதுவே எனக்கு போதுமானதாகும்.
وهذا فضالة بن عبيد من أهل بيعة الرضوان يقول عليه من ربه الرضوان: "لَأَنْ أعلم أَعْلَمُ أَنَّ اللَّهَ تَقَبَّلَ مِنِّي مِثْقَالَ حَبَّةٍ أَحَبُّ إِلَيَّ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا"؛ لِأَنَّ اللَّهَ -تَبَارَكَ وَتَعَالَى- يَقُولُ: (إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ) [المائدة:27]".

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இறையச்சம் உடையவர்களிடம் இருந்து தான் அமல்களை கபூல் செய்வதாக கூறுகிறான். என்னுடைய அணுவளவு அமலை அவன் கபூல் செய்வானா? என தெரியவில்லையே அப்படி அவன் கபூல் செய்தால் எனக்கு அது இந்த உலகமும் உலகில் உள்ள அருட்கொடைகள் அனைத்தும் கிடைப்பதை விட மிகவும் பிரியமானதாகும்"  என்று ஃபுளாளத் இப்னு உபைத் (ரலி) கூறினார்கள்.

3. தற்பெருமை வேண்டாம்!

ரமழானில் நாம் செய்த அமல்களை நினைத்து நாம் மனநிறைவு கொண்டு விடக்கூடாது, நான் இவ்வளவு நாள் விடாமல் ஜமாஅத்தோடு தொழுதிருக்கின்றேன். நான் இத்தனை குர்ஆன் ஓதி முடித்துள்ளேன். நான் தஹஜ்ஜத் தொழுதிருக்கிறேன்.  இன்னின்ன வகையில் அமல்கள் செய்திருக்கிறேன் என்று நினைப்பதும்,  ரமழானில் கூட அவர் அமல் செய்ய வில்லை இவர் அமல் செய்ய வில்லை என்று நாம் நினைப்பதும் கூட ஒரு வகையான தற்பெருமையே இதன் விளைவாக நம் அமல்கள் நிராகரிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

وَلا تَمْنُنْ تَسْتَكْثِرُ 
فلا تَمُنّ على الله بما قدمتم وعملتم.
وَلَا تَمْنُنْ تَسْتَكْثِرُ

(பிறருக்குக் கொடுப்பதையும் விட அவர்களிடமிருந்து) அதிகமாகப் பெறும் (நோக்கோடு) உபகாரம் செய்யாதீர்.


فمن معاني الآية ما قاله الحسن البصري: لا تمنن بعملك على ربك تستكثره.

இந்த இறைவசனத்திற்கு இமாம் ஹஸன் பஸரீ ரஹ் அவர்கள் விளக்கம் கூறும் போது உன் அமலைக் கொண்டு உம் ரப்பிடம் அதிகமாக பெறும் எண்ணம் வைக்க வேண்டாம். உம் இறைவனே உமக்கு அந்த அமல்களுக்கு அதிக கூலியை வழங்கியருள்வான்" என்றார்கள்.


ألم تسمعوا قول الله تعالى

وَبَدَا لَهُمْ مِنَ اللَّهِ مَا لَمْ يَكُونُوا يَحْتَسِبُونَ }

மேலும், அவர்கள் எண்ணிப் பார்த்திராதவையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு (வேதனையாக) வெளியாகும். ( அல்குர்ஆன்: 39:48  )

فاحذروا من مفسدات العمل الخفية من ( النفاق _ والرياء _ والعجب ) .

ஏனெனில், அமல்களில் ஏற்படும் ரியா, தற்பெருமை, போன்றவைகள் அமல்களின் நன்மைகளை அழித்து விடும்.


وروى الترمذي وابن حبان عن زياد بن علاقة عن عمه ، قال:كان النبي صلى الله عليه وسلم يقول: اللهم إني أعوذ بك من منكرات الأخلاق، والأعمال والأهواء " قال الترمذي: هذا حديث حسن غريب.

ஆகவே தான் நபி ஸல் அவர்கள் "அல்லாஹ்வே! உன்னிடம் நான் குணங்களில், அமல்களில், மனம் ஆசைப்படுவதில் கெட்டதை விட்டும் பாதுகாப்பு கோருகிறேன் " என்று துஆ செய்வார்கள்.

حديث أبي ثعلبة الخشني رضي الله عنه، فعن أبي أمية الشعباني قال: أتيت أبا ثعلبة الخشني فقلت له: كيف تصنع بهذه الآية؟ قال: أيّةُ آية؟ قال: قوله تعالىيَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ عَلَيْكُمْ أَنفُسَكُمْ لاَ يَضُرُّكُم مَّن ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ [المائدة:105]،
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا عَلَيْكُمْ اَنْفُسَكُمْ‌ۚ لَا يَضُرُّكُمْ مَّنْ ضَلَّ اِذَا اهْتَدَيْتُمْ‌ ؕ اِلَى اللّٰهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا فَيُـنَـبِّـئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏

அபூ உமய்யா அஷ் ஷஅபானீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:- நான் அபூ ஸஅலபா அல் குஷ்னீ (ரலி) அவர்களிடம் பின் வரும் இந்த ஆயத்தை கொண்டு எப்படி நீங்கள் அமல் செய்தீர்கள் என்று நான் கேட்டேன். அப்போது அபூ ஸஅலபா (ரலி) அவர்கள் எந்த ஆயத்? எந்த ஆயத் என்று கேட்டார்கள். நான் இந்த ஆயத் தான் என்று அல்மாயிதா சூராவின் 105 வது ஆயத்தை ஓதினேன்.

"ஈமான் கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் நேர்வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் அனைவரும் மீள வேண்டியிருக்கின்றது; நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றையெல்லாம், அப்போது அவன் உங்களுக்கு உணர்த்துவான்.


قال أبو ثعلبة: أما والله لقد سألت عنها خبيرًا، سألت عنها رسول الله فقال

  (بل ائتمروا بينكم بالمعروف وتناهوا عن المنكر، حتى إذا رأيت شّحًا مطاعًا وهوى متبعًا ودنيا مؤثَرة وإعجاب كل ذي رأي برأيه فعليك بخاصة نفسك ودع العوامَّ، فإن من ورائكم أيامًا الصبر فيهن كالقبض على الجمر، للعامل فيهن مثل أجر خمسين رجلاً يعملون مثل عملكم)) رواه الترمذي وقال: "حسن غريب".

அப்போது, அபூ ஸஅலபா அல் குஷ்னீ (ரலி) அவர்கள் என்னைப் பார்த்து "என்னிடம் நீர் பெரிய விஷயத்தை கேட்டு விட்டீர்?" என்று கூறிவிட்டு இதைப் போன்று நானும் இந்த ஆயத் குறித்து எப்படி அமல் செய்வது? என்று நான் நபி ஸல் அவர்களிடம் கேட்ட போது, நபி ஸல் அவர்கள் "உங்களுக்கு மத்தியில் நன்மையை ஏவி தீமையைத் தடுத்துக் கொண்டு இருக்க வேண்டும். எதுவரை என்றால் நீ வழிபடும் கஞ்சத்தனத்தையும்,  பின்பற்றப்படும் மனோஇச்சையையும், பயன் தரும் உலக இன்பத்தையும், தன் அறிவைக் கொண்டு ஒவ்வொருவரும் தற்பெருமை கொள்ளும் போதும் " நீங்கள் மேற்கூறிய வகையில் நடந்து கொள்ளுங்கள்! குறிப்பாக இதை இதை உமக்கு நான் அறிவுறுத்துகின்றேன்! இந்த மாதிரி நேரத்தில் மற்றவர்களை நீ விட்டு விட்டு, இந்த மாதிரி குணங்களில் இருந்து உம்மை நீ தற்காத்துக் கொள்ள வேண்டும்! ஏனெனில், உங்களுக்கு பிறகு ஒரு காலம் வரும் அந்த காலத்தில் தீனில் நிலைத்திருப்பது என்பது நெருப்பை கையில் வைத்திருப்பதற்கு சமம். அந்த காலகட்டத்தில் நீங்கள் செய்யும் ஒரு அமலை  அவர்களில் ஒருவர் செய்தால் உங்களில் 50 பேர் செய்த அமல்களின் கூலி அவருக்கு வழங்கப்படும்" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ( நூல்: திர்மிதீ )

தற்பெருமை என்ற ஒரு குணத்தால்....

ஹுனைன் யுத்தத்தில் வெற்றியின் விளிம்பில் நின்று கொண்டிருந்த நேரத்தில் தோல்வி பயம் தொற்றிக் கொண்டதாகவும் பின்னர் அல்லாஹ் உதவி செய்து வெற்றி பெற வைத்ததாகவும் குறிப்பிடுவான்.


لَـقَدْ نَصَرَكُمُ اللّٰهُ فِىْ مَوَاطِنَ كَثِيْرَةٍ‌ وَّيَوْمَ حُنَيْنٍ‌ ۙ اِذْ اَعْجَبَـتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنْكُمْ شَيْـٴًـــا وَّضَاقَتْ عَلَيْكُمُ الْاَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّـيْتُمْ مُّدْبِرِيْنَ‌ۚ‏

நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குப் பல போர்க்களங்களில் உதவி செய்திருக்கின்றான்; (நினைவு கூறுங்கள்:) ஆனால் ஹுனைன் (போர் நடந்த) அன்று. உங்களைப் பெருமகிழ்ச்சி கொள்ளச் செய்த உங்களுடைய அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு எவ்விதப் பலனும் அளிக்கவில்லை, (மிகவும்) பரந்த பூமி உங்களுக்கு (அப்போது) சுருக்கமாகிவிட்டது. அன்றியும் நீங்கள் புறங்காட்டிப் பின்வாங்கலானீர்கள்.

ثُمَّ اَنْزَلَ اللّٰهُ سَكِيْنَـتَهٗ عَلٰى رَسُوْلِهٖ وَعَلَى الْمُؤْمِنِيْنَ وَاَنْزَلَ جُنُوْدًا لَّمْ تَرَوْهَا‌ وَعَذَّبَ الَّذِيْنَ كَفَرُوْا‌ ؕ وَذٰ لِكَ جَزَآءُ الْـكٰفِرِيْنَ‏

பின்னர் அல்லாஹ் தன்னுடைய தூதர் மீதும், முஃமின்கள் மீதும் தன்னுடைய சாந்தியை இறக்கியருளினான்; நீங்கள் பார்க்க முடியாப் படைகளையும் இறக்கி வைத்தான். (அதன் மூலம்) நிராகரிப்போரை வேதனைக்குள்ளாக்கினான் - இன்னும் இதுவே நிராகரிப்போரின் கூலியாகும். ( அல்குர்ஆன்: 9: 25 - 26 )

4. தொடர் படியாக அமல் செய்ய வேண்டும்...

وعن علي بن أبي طالب رضي الله عنه قال: (أتانا رسول الله فوضع رجله بيني وبين فاطمة -رضي الله عنها- فعلمنا ما نقول إذا أخذنا مضاجعنا، فقال: (يا فاطمة إذا كنتما بمنزلتكما فسبحا الله ثلاثاً وثلاثين، وحمدا ثلاثاً وثلاثين، وكبرا أربعاً وثلاثين) قال علي: والله ما تركتها بعد. فقال له رجل -كان في نفسه عليه شيء-: ولا ليلة صفين؟ قال علي: (ولا ليلة صفين)، (أخرجه الحاكم وقال: صحيح على شرط الشيخين ولم يخرجاه، ووافقه الذهبي

ஒரு முறை, கைபர் யுத்தத்தில் எதிரிகளிடம் இருந்து ஏராளமான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதை அறிந்த பாத்திமா (ரலி) தங்கள் தந்தையை அணுகி, “அருமை தந்தையே! நான் வறுமையில் வாடி வருகிறேன். வீட்டு வேலை செய்வதற்கு கூட முடியாமல் பலவீனமாக உள்ளேன். எனவே எனக்கு உதவியாக ஓர் அடிமைப் பெண்ணை தந்து உதவுங்கள்என்று கேட்டுக்கொண்டார்கள்.

ம் மகளின் வறுமையை அறிந்து நபிகளார் வேதனை அடைந்தார்கள். இருந்தாலும், “அருமை மகளே! இதெல்லாம் அற்பமான இந்த உலகின் ஆதாயங்கள். எந்த நேரத்திலும் இவை அழிந்து விடும். மேலும் இது போரில் கலந்து கொண்டவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் பொருள். நபிகளின் மகள் என்பதால் உனக்கு தந்து விட முடியாது. மகளே! இதைவிட நிம்மதியைத் தரக்கூடிய சிறந்த செயல் ஒன்றைச் சொல்லித் தரவா என்று வினவி, ஒவ்வொரு இரவிலும் நீ தூங்கச் செல்லும் போது சுபுஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹமதுலில்லாஹ் 33 தடவை, அல்லாஹ் அக்பர் 34 தடவை ஓதி விட்டு தூங்கச் செல். உன் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து நிம்மதியும் சந்தோஷமும் கிட்டும்என்றார்கள்.

இதை சொல்லும் போது அலீ (ரலி) அவர்கள்  இதன் பின்னர் நான் என் வாழ்நாளில் அதை ஓதி வருவதை விட்டதில்லை என்று கூறிய போது ஒருவர் ஸிஃப்ஃபீன் போர் நடந்த அந்த இரவில் கூடவா நீங்கள் ஓதினீர்கள்? என்று கேட்டார். அதற்கு, அலீ (ரலி) அவர்கள் ஆம்! அந்த இரவில் கூட நான் ஓதுவதை நான் விடவில்லை " என்று பதில் கூறினார்கள்.

أن من داوم على عمل صالح، ثم انقطع عنه بسبب مرض أو سفر أو نوم كتب له أجر ذلك العمل. قال رسول الله صلى الله عليه وسلم: (إذا مرض العبد أو سافر كتب له مثل ما كان يعمل مقيماً صحيحاً) رواه البخاري، 

எப்போதும் அமல் செய்து வருகிற ஒருவர் நோய் காரணமாகவோ, அல்லது தவிர்க்க முடியாத பிரயாணத்தின் காரணமாகவோ, தூக்கத்தின் காரணமாகவோ வழமையாக செய்து வருகிற அமல்களில் எதையேனும் செய்யாமல் விட்டு விட்டால் அவர் சாதாரண நாட்களில் எப்படி அமல் செய்தாரோ அது போன்று அமல் செய்ததாக அவரின் ஏட்டில் எழுதப்படும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

وهذا في حق من كان يعمل طاعة فحصل له ما يمنعه منها، وكانت نيته أن يداوم عليها. وقال صلى الله عليه وسلم: (ما من امرئ تكون له صلاة بليل فغلبه عليها نوم إلا كتب الله له أجر صلاته، وكان نومه صدقة عليه). أخرجه النسائي..

வழக்கமாக இரவுத் தொழுகையில் ஈடுபடும் ஒருவர் தூக்கத்தின் காரணமாக தொழாமல் தூங்கி விட்டார் எனில் அவருக்கு தொழுத நன்மை எழுதப்படுவதோடு, அவரின் தூக்கத்திற்கு ஸதகாவின் நன்மையும் வழங்கப்படும்"  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَارِبُوا وَسَدِّدُوا، وَاعْلَمُوا أَنَّهُ لَنْ يَنْجُوَ أَحَدٌ مِنْكُمْ بِعَمَلِهِ» قَالُوا: يَا رَسُولَ اللهِ وَلَا أَنْتَ؟ قَالَ: «وَلَا أَنَا، إِلَّا أَنْ يَتَغَمَّدَنِيَ اللهُ بِرَحْمَةٍ مِنْهُ وَفَضْلٍ» (صحيح مسلم  (2816)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- "அல்லாஹ்வுடைய பொருத்தத்தை அடைவதற்கு நீங்கள் நெருங்கிக் கொண்டே இருங்கள்; உங்களை நீங்கள் சரிபடுத்திக் கொண்டே இருங்கள்; அறிந்து கொள்ளுங்கள் உங்களில் யாரும் தன்னுடைய அமலால் ஈடேற்றம் அடைய முடியாது. அப்போது சஹாபாக்கள், அல்லாஹ்வின் தூதரே! நீங்களுமா? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நானும் தான் என் அமலால் ஈடேற்றம் அடைய முடியாது.அல்லாஹ் அவனுடைய அருளால் கருணையால் என்னை அனைத்துக் கொண்டாலே தவிர. அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் எண்: 2816.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سُفْيَانَ، عَنْ أَبِيهِ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنِي بِأَمْرٍ فِي الْإِسْلَامِ لَا أَسْأَلُ عَنْهُ أَحَدًا بَعْدَكَ، قَالَ: " قُلْ: آمَنْتُ بِاللَّهِ، ثُمَّ اسْتَقِمْ " (مسند أحمد 15417 -)

ஸுஃப்யான் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாமிய மார்க்கத்தில் எனக்கு ஒரு விஷயத்தை கற்றுத்தாருங்கள். உங்களைத் தவிர வேறு யாரிடமும் சென்று அதை நான் கேட்க மாட்டேன். அதற்க்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டேன் என்று சொல்! பிறகு அதில் நிலைத்திரு! அறிவிப்பாளர்: ஸுஃப்யான் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்னத் அஹ்மத், எண்: 15417.

5. பாவத்தின் மீது வெறுப்பும்... நல் அமல்கள் மீது ஆசையும்...

ரமழானில் நல்ல அமல்களோடு தொடர்பும், நல்ல மனிதர்களோடு தொடர்பும் இருந்தது போல் ரமழானைத் தொடர்ந்து அதே போன்ற தொடர்பை தொடர வேண்டும்.

ஈமானின் மீதும், ஈமானை வலுவாக்கும் செயல்களின் மீதும் ஈமானிய செயற்பாட்டாளர்கள் மீது நேசம் கொள்ள வேண்டும்.

எப்படி பாவமான காரியங்களில் இருந்து ரமழானில் ஒதுங்கி இருந்தோமோ அதே போன்று பாவமான காரியங்களில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும்.

பாவத்தின் மீதும் பாவமான காரியத்தை செய்வதின் மீதும் பாவமான காரியங்களை செய்பவர்கள் மீதும் வெறுப்பு ஏற்பட வேண்டும்.


وَاعْلَمُوْۤا اَنَّ فِيْكُمْ رَسُوْلَ اللّٰهِ‌ؕ لَوْ يُطِيْعُكُمْ فِىْ كَثِيْرٍ مِّنَ الْاَمْرِ لَعَنِتُّمْ وَ لٰـكِنَّ اللّٰهَ حَبَّبَ اِلَيْكُمُ الْاِيْمَانَ وَزَيَّنَهٗ فِىْ قُلُوْبِكُمْ وَكَرَّهَ اِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوْقَ وَالْعِصْيَانَ‌ؕ اُولٰٓٮِٕكَ هُمُ الرّٰشِدُوْنَۙ‏

அறிந்துகொள்ளுங்கள்: நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்; அநேக காரியங்களில் அவர் உங்களுக்கு வழிப்பட்டால், திடமாக நீங்கள் தாம் கஷ்டத்திற்குள்ளாவீர்கள், எனினும் அல்லாஹ் ஈமானை (நம்பிக்கையை) உங்களுக்குப் பிரியமுடையதாக்கி உங்கள் இதயங்களிலும் அதனை அழகாக்கியும் வைத்தான் - அன்றியும் குஃப்ரையும் (நிராகரிப்பையும்) பாவத்தையும், மாறுபாடு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கினான்; இத்தகையவர்கள் தாம் நேர்வழியில் நடப்பவர்கள். ( அல்குர்ஆன்: 49: 7 )

من علامات قبول الطاعة أن يُحبب الله إلى قلبك الصالحين أهل الطاعة ويبغض إلى قلبك الفاسدين أهل المعاصي ،و لقد روى الإمام أحمد عن البراء بن عازب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: ((إن أوثق عرى الإيمان أن تحب في الله وتبغض في الله)).

இறைநம்பிக்கையில் மிகவும் வலுவான இறைநம்பிக்கை யாதெனில் நீர் ஒன்றை   அல்லாஹ்விற்காக விரும்புவதும் நீர் ஒன்றை அல்லாஹ்விற்காக வெறுப்பதும் ஆகும் " என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


أخي الحبيب:
عطاء الله السكندري حين قال :(إذا أردت أن تعرف مقامك عند الله فانظر أين أقامك) .

அதாவுல்லாஹ் அஸ் ஸிக்கந்தரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:- அல்லாஹ்விடம் உன் அந்தஸ்தை நீ அறிய விரும்பினால் நீ யாரோடு அமர்ந்திருக்கின்றாய் என்பதை வைத்து நீயே முடிவு செய்து கொள்".


والواجب أن يكون حبنا وبغضنا، وعطاؤنا ومنعنا، وفعلنا وتركنا لله -سبحانه وتعالى- لا شريك له، ممتثلين قوله، صلى الله عليه وسلم " من أحب لله، وأبغض لله، وأعطى لله، ومنع الله، فقد استكمل الإيمان " رواه أحمد عن معاذ بن أنس وغيره

எவர் அல்லாஹ்வுக்காக நேசித்து, அல்லாஹ்வுக்காக கோபப்பட்டு அல்லாஹ்வுக்காக கொடுத்து அல்லாஹ்வுக்காக தடுத்துக் கொள்கின்றாரோ அவர் திண்ணமாக! இறைநம்பிக்கையில் பூரணத்துவத்தை அடைந்தவர் ஆவார். ( நூல்: அஹ்மத்)

சிறிது நேரம்.....

إنَّ للهِ مَلائِكةً سَيَّاحينَ في الأَرْضِ، فُضُلًا عَن كُتَّابِ النَّاسِ، فإذا وجَدوا قَوْمًا يَذْكُرون اللهَ تنادَوْا: هَلُمُّوا إلى بُغْيَتِكم، فيَجيئُون، فيَحُفُّون بـهم إلى السَّماءِ الدُّنيا، فيَقولُ اللهُ: أَيَّ شَيْءٍ تركْتُم عِبادي يَصْنَعون؟ فيَقولون: ترَكْناهم يَـحْمَدُونك ويُـمَجِّدونك ويَذْكُرونك، فيَقولُ: هل رأَوْني؟ فيَقولون: لا، فيَقولُ: فكيف لو رأَوْني؟ فيَقولون: لو رأَوْك لكانوا لك أَشَدَّ تَـحْمِيدًا وتَـمْجيدًا وذِكْرًا، فيَقولُ: فأَيَّ شيْءٍ يَطْلُبون؟ فيَقولون: يَطلُبون الجنةَ، فيَقولُ: وهل رأَوْها؟ قال: فيَقولون: لا، فيَقولُ: فكيف لو رأَوْها؟ فيَقولون: لو رأَوْها كانوا أَشَدَّ عليها حِرصًا، وأَشدَّ لَـها طَلَبًا، قال: فيَقولُ: مِن أَيِّ شيءٍ يَتعَوَّذون؟ فيَقولون: مِن النَّارِ، فيَقولُ: وهل رأَوْها؟ فيَقولون: لا، قال: فيَقولُ: فكيف لو رأَوْها؟ فيَقولون: لو رأَوْها كانوا أَشَدَّ مِنها هَرَبًا، وأَشَدَّ مِنها خَوْفًا، قال: فيَقولُ: إنِّـي أُشْهِدُكم أنِّـي قد غفرْتُ لَـهم، قال: فيَقولون: فإنَّ فيهم فُلانًا الـخَطَّاءَ، لَـمْ يُرِدْهم، إنَّـما جاءَ لِـحاجَةٍ، فيَقولُ: فيَقولُ: هُمُ القَوْمُ لا يَشْقى بِـهِم جَلِيسُهم

அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடிய வண்ணம் பூமியில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக்கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள் என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களைத் தம் இறகுகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களின் இறைவன் என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?” என்று கேட்கிறான்.

அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனாவன் என்று கூறி துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டும், உன்னைப் புகழ்ந்து கொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றர் என்று வானவர்கள் கூறுகின்றனர்.  அதற்கு இறைவன், ”அவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா?” என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ”இல்லை உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், ”என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?” என்று கேட்பான். வானவர்கள், ”உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள் இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள் என்று பதிலளிப்பார்கள்.  

அதற்கு இறைவன், ”என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகிறார்கள்?” என்று (தனக்குத் தெரியாதது போன்று) கேட்பான். வானவர்கள், ”அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கின்றனர்என்பார்கள்.

அதற்கு இறைவன், ”அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?” என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ”இல்லை உன் மீதாணையாக! அதிபதியே! அவர்கள் அதனைப் பார்த்ததில்லைஎன்பர். அதற்கு இறைவன், ”அவ்வாறாயின் அதனை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?” என்று கேட்பான். 

வானவர்கள், ”சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசை கொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்என்று பதிலளிப்பார்கள்.  இறைவன், ”அவர்கள் எதிலிருந்து (என்னிடம்) பாதுகாப்புக் கோருகின்றனர்?” என்று வினவுவான். வானவர்கள், ”நரகத்திலிருந்து (பாதுகாப்புக் கோருகின்றனர்)என்று பதிலளிப்பார்கள். இறைவன், ”அதனை அவர்கள் பார்த்திருக்கிறார்களா?” என்று கேட்பான். 

வானவர்கள், ”இல்லை உன் மீதாணையாக! அதனை அவர்கள் பார்த்தில்லைஎன்பர்.

அதற்கு இறைவன், ”அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்?” என்று கேட்பான் வானவர்கள், ”நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்என்பர்.  அப்போது இறைவன், ”எனவே (வானவர்களே!) அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன்என்று கூறுவான்.

அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், ”(அந்தக் குழுவினரிடையே அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகிற அவர்களில் உள்ளவன் இல்லை. அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்என்பார். அதற்கு இறைவன், ”அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (பாக்கியம் பெறுவானே தவிர,) பாக்கியமற்றவனாக ஆகமாட்டான்என்று கூறுவான்.  ( நூல்: புகாரி )

قال رجل لإبراهيم بن أدهم : إني لا أقدر على قيام الليل فصف لي دواء ؟ فقال : لا تعصه بالنهار ، وهو يُقيمك بين يديه في الليل ، فإن وقوفك بين يديه في الليل من أعظم الشرف ، والعاصي لا يستحق ذلك الشرف .

ஒரு மனிதர் இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்களிடம்  "எனக்கு இரவுத் தொழுகைக்கு எழ இயலாமல் போகிறது. ஏதாவது வழி சொல்லுங்கள்" என்றார். இப்ராஹீம் (ரஹ்) அவர்கள்"நீ பகலில் பாவம் செய்யாதே! அப்படி பாவம் செய்யாமல் இருந்தால் அவன் உன்னை அவனுக்கு முன்னால் எழுந்து நின்று வணங்கும் பாக்கியத்தை வழங்குவான். அப்படி நீ எழுந்து அவனுக்கு முன்னால் வணங்குவது இருக்கிறதே அது தான் ஆக உயர்ந்த சிறப்பாகும். விளக்கிக் கொள்! பாவம் செய்யும் ஒருவனுக்கு அல்லாஹ் அவனை வணங்கும் தகுதியை வழங்குவதில்லை " என்று பதில் கூறினார்கள்.

وقال رجل للحسن البصري : يا أبا سعيد : إني أبِيت معافى ، وأحب قيام الليل ، وأعِدّ طهوري ، فما بالي لا أقوم ؟ فقال الحسن : ذنوبك قيدتْك .

ஒரு மனிதர் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களிடம் நான் நல்ல நிலையில் தான் உறங்குகின்றேன். உளூவுடன் தான் உறங்குகின்றேன். நான் இரவுத் தொழுகை தொழ வேண்டும் என்ற ஆசையுடன் தான் உறங்க செல்கிறேன். எனினும், என்னால் தொழ எழ முடியாமல் போகிறதே ஏன்? என்று கேட்டார். அதற்கு, ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் "உன் பாவம் தான் உன்னை எழ விடாமல் தூக்கத்தில் ஆழ்த்தி விடுகிறது" என்று பதிலளித்தார்கள். 

وقال رحمه الله : إن العبد ليذنب الذنب فيحرم به قيام الليل ، وصيام النهار . وقال الفضيل بن عياض : إذا لم تقدر على قيام الليل ، وصيام النهار ، فأعلم أنك محروم مكبّل ، كبلتك خطيئتك

ஃபுளைல் இப்னு இயாள் (ரஹ்) அவர்கள் "உம்மால் இரவுத் தொழுகையில் ஈடுபட முடியாமல் போகிறதா? பகலில் நோன்பு நோற்க இயலாமல் போகிறதா? புரிந்து கொள்! உன் பாவத்தின் காரணமாக நீ தடுக்கப்படுகிறாய்! என்றார்கள்.

நிறைவாக…

لقد مر النبي صلى الله عليه وسلم يوماً على ابن أم عبد أي: على عبد الله بن مسعود، وكان مع النبي صلى الله عليه وسلم في هذه اللحظات الكريمة صاحباه: أبو بكر وعمر، مر النبي صلى الله عليه وسلم مع صاحبيه على عبد الله بن مسعود، وكان عبد الله قائماً يصلي لله جل وعلا، فوقف النبي صلى الله عليه وسلم؛ ليستمع إلى قراءته، فلما انتهى، قال النبي صلى الله عليه وسلم: (من أحب أن يقرأ القرآن غضاً كما أنزل فليقرأ قراءة ابن أم عبد) ، انظروا إلى هذه الشهادة أيها الأخيار! (ثم جلس ابن مسعود يدعو الله جل وعلا فقال النبي صلى الله عليه وسلم: سل تعطه، سل تعطه) فكان مما سأله ابن مسعود رضي الله عنه أنه قال: (اللهم إني أسألك إيماناً لا يرتد، ونعيماً لا ينفد، ومرافقة النبي صلى الله عليه وسلم في جنان الخلد.

قال عمر: فقلت في نفسي: والله لأغدون إلى عبد الله ولأبشرنه بتأمين رسول الله على دعائه.

يقول عمر: فذهبت إليه في الصباح، فوجدت أبا بكر رضي الله عنه قد سبقني بالبشرى، فقلت له: يا أبا بكر! والله إنك لسباق في الخير دائماً) .

والحديث رواه الإمام أحمد وهو حديث حسن، ورواه الإمام الحاكم في المستدرك وصححه وأقره الإمام الذهبي.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓர் இரவில் இறையில்லத்தில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். இப்னு மஸ்வூத் (ரலி) ஓதுவதை நபி {ஸல்} அவர்கள் ரசித்துக் கேட்டு விட்டு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: திருக்குர்ஆன் இறக்கப்பட்டது போன்றே ஒருவர் அதனை ஓத விரும்பினால், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ஓதுகிற மாதிரி ஓதுங்கள்.’‘ என்றார்கள்.

தொடர்ந்து அதே இடத்தில் இருந்தவாறு இறைவனிடம் இவ்வாறு இறைஞ்சிக் கொண்டிருந்தார்:

யா அல்லாஹ்! திரும்பிப் போகாத ஈமானை நான் உன்னிடம் கேட்கிறேன். நிரந்தரமான இன்பங்களை உன்னிடம் கேட்கிறேன். நிரந்தர சுவனத்தில், உயர்ந்த இடத்தில் (ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில்) முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுடன் நான் ஒன்றாக இருக்க உன்னிடம் இறைஞ்சுகிறேன்.

இந்தப் பிரார்த்தனை அல்லாஹ்வின் தூதர் அவர்களின் காதுகளில் விழுகின்றது. அந்த நபித்தோழர் அப்படிப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் பொழுதே அல்லாஹ்வின் தூதர் அவர்கள், “அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதே, இப்பொழுது கேளுங்கள். உங்களுக்குக் கொடுக்கப்படும்என்று மூன்று முறை கூறினார்கள். 

ஆனால் அண்ணலார் இப்படிக் கூறியது அந்த நபித்தோழரின் காதுகளுக்கு எட்டவில்லை. அவருக்கு இப்படிப் பிரார்த்திக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் உதித்து அவர் மேற்கண்ட துஆவைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அண்ணலார் அப்படிக் கூறும்பொழுது அவர்களுடன் அபூபக்கர், உமர் (ரழியல்லாஹு அன்ஹும்) ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்தச் செய்தியை எப்படியாவது அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதிடம் எத்தி வைத்து விட வேண்டும் என்று விரும்பிய உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், அண்ணலாரின் அவை கலைந்தவுடன் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதிடம் விரைந்து சென்றார். ஆனால் அங்கே ஓர் ஆச்சரியம் அவருக்குக் காத்திருந்தது!

அவருக்கு முன்பே அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரிடம் சென்று அந்தச் செய்தியை எத்தி வைத்துக் கொண்டிருந்தார்.

இதனைக் கண்டவுடன் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இவ்வாறு கூறினார்: எந்த நன்மையான செயலாக இருந்தாலும் நீங்கள் முந்தி விடுகிறீர்கள்.

நபித்தோழர்களில் நன்மைகளைச் செய்வதில் எப்பொழுதும் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் முந்தியே இருப்பார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு முக்கிய சான்று. ( நூல்: ஸில்ஸிலத்து மஸாபீஹுல் ஹுதா,  முஸ்னத் அஹமத்)

ரமழானின் நிறைவு பகுதியில் இருக்கும் நாமும் இந்த பிரார்த்தனையை அதிகமாக கேட்போம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் வாழும் காலமெல்லாம் அவனை வணங்கி வாழும், அவனைப் பயந்து வாழும் ரப்பானிய்யீன்களாக ஆக்கியருள்வானாக!! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

Monday, 17 April 2023

லைலத்துல் கத்ர் – ஓர் தனித்துவமான மகத்துவம்!!

 

லைலத்துல் கத்ர் – ஓர் தனித்துவமான மகத்துவம்!!

ரமழான் – (1444 – 2023) – தராவீஹ் சிந்தனை:- 27.


ரமழான் மாதத்தின் தனித்துவமான மகத்துவங்களில் நான்கு அம்சங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

1. ரமழானில் செய்யப்படுகிற ஃபர்ளான, சுன்னத்தான வணக்க வழிபாடுகள்,  நல்லறங்கள், தான தர்மங்களுக்கு 70 முதல் 700 மடங்கு வரை கூலி வழங்கப்படுவது.

2. நோன்பு திறக்கும் ஒரு நோன்பாளி இன்னொரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க உதவி புரிந்தால் அந்த நோன்பாளியின் நன்மையை அப்படியே குறைவில்லாமல் வழங்கப்படுவது.

3. மற்றெல்லா அமலுக்கும் அந்த அமலுக்கான கூலி முன்னரே அளவீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், நோன்புக்கான கூலியை பொறுத்தவரை அதற்கு அல்லாஹ்வே நேரடியாக கூலி வழங்குவது. அல்லது அல்லாஹ்வே அந்த நோன்பாளிக்கு கூலியாக ஆகுவது.

4. லைலத்துல் கத்ர் இரவில் வணக்க வழிபாடுகள், நல்லறங்கள் செய்வதற்கு 1000 மாதங்கள் வணக்க வழிபாடுகள்  செய்த நன்மைகளை வழங்குவது.

அந்த வகையில் ரமளானின் இந்த நான்கு தனித்துவமான அம்சங்களைப் பூரணமாக பெறும் ஒரு இறைநம்பிக்கையாளர் நாளை மறுமை நாளில் மிகப் பிரம்மாண்டமான நன்மைகளில் குவியல்களோடு வருவார். சுவனத்தின் உயர்ந்த அந்தஸ்துகள் பலவற்றிற்கு அவர் சொந்தமாவார் என்று கூறினால் அது மிகையாகாது.

உதாரணத்திற்கு ஒரு இறைநம்பிக்கையாளனின் ஒரு ரமழானின் இந்த நான்கு தனித்துவமான அமல்களின் நன்மைகளை கணக்கீடு செய்வோம்.

ஒரு நோன்பாளி தினந்தோறும் தான் நோன்பு திறக்கும் நேரத்தில் இன்னொரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க உதவுகிறார் என்றால் அவருக்கு 30 நோன்பு நோற்ற நன்மைகள் வழங்கப்படுகின்றன.

அப்படியென்றால் இவர் நோற்ற 30 நோன்புடன் சேர்த்து இன்னொரு 30 நோன்பின் நன்மைகள் அவருக்கு வழங்கப்படும். 30+30=60.

நோன்புக்கு என்ன கூலி கிடைக்கும்? அது அல்லாஹ் மாத்திரமே அறிந்த விஷயம். 60 நோன்பின் கூலிகளை அவர் பெறுகிறார்.

ஒரு நோன்பாளி ஒரு ஃபர்ளான தொழுகையை இமாம் ஜமாஅத்தோடு நிறைவேற்றுகிறார் என்றால் அவருக்கு சாதாரணமான நாளில் கிடைக்கும் நன்மை 27 மடங்கு. இப்போது ரமழானில் அவர் நிறைவேற்றி இருப்பதால் குறைந்த பட்சமாக 70 மடங்கு நன்மைகள் என்று வைத்தால் 70×27= 1890 மடங்கு நன்மைகள். அதுவே 700 மடங்கு நன்மைகள் என்று வைத்தால் 700×27= 18,900 மடங்கு நன்மைகள் அவருக்கு கிடைக்கும்.

 நாளொன்றுக்கு ஐந்து நேரத்தொழுகைகளை சாதரணமான நாளில் அவர் இமாம் ஜமாஅத்தோடு தொழுதால் 135 மடங்கு நன்மைகள் கிடைக்கும். இதுவே ரமழானாக இருப்பதால் 70 மடங்கு நன்மைகள் என்று வைத்தால் 135×70= 9450 மடங்கு நன்மைகள் கிடைக்கும். இதுவே 700 மடங்கு நன்மைகள் என்று வைத்தால் 135×700 = 94500 மடங்கு நன்மைகள் கிடைக்கும். 

இதுவே ரமழானின் 30 நாட்களில் 150  வக்த் தொழுகைகள். 70 மடங்கு நன்மைகள் என்று வைத்தால் 30×9450=28,3500 மடங்கு நன்மைகள் கிடைக்கும். 700 மடங்கு நன்மைகள் என்று வைத்தால் 30×94500= 2,83,5000 மடங்கு நன்மைகள் கிடைக்கும்.

இது போன்றே ஒருவர் தொழுத இதர சுன்னத்தான தொழுகைகள், நஃபிலான தொழுகைகள் ஃபர்ளான ஜகாத், உபரியான தான தர்மங்களின் நன்மைகளை அளவீடு செய்து பார்த்தால் பிரமிப்பையும், வியப்பையும் தான் நாம் அடைவோம்.

அதே போன்று தான் ஒரு இறைநம்பிக்கையாளர் ஒரு லைலத்துல் கத்ர் இரவை மட்டுமே தன் வாழ்நாளில் அடைந்துள்ளார் எனில் அவர் ஆயிரம் மாதங்கள் அதாவது 83 ஆண்டுகள் ஒருவர் வணக்கங்களில் ஈடுபட்டுப் பெறுகிற நன்மைகளைக் காட்டிலும் அதிகமான நன்மைகளை இந்த ஓர் இரவை அடைவதின் மூலம் பெறுகிறார். 

அப்படியானால், 63 வயது வரை வாழும் பாக்கியத்தை பெற்ற ஒருவர் தன் வாழ்நாளில் 50 க்கும் அதிகமான ரமழானில் அனைத்து தொழுகைகளையும் இமாம் ஜமாஅத்தோடு தொழுது, நோன்பு நோற்று, பல நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்க உதவி செய்து 50 லைலத்துல் கத்ர் இரவை பெற்று இந்த உலகை விட்டும் அவர் ஸாலிஹான முறையில் விடைபெறுகிறார் என்றால் அவரின் மண்ணறை எவ்வளவு விசாலமாக இருக்கும். எவ்வளவு பிரகாசமானதாக இருக்கும். அவரின் மறுமை வாழ்வு எவ்வளவு சிறப்பிற்குரியதாக இருக்கும்!! 

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் இப்படியான பென்னம்பெரும் நன்மைகளின் குவியலோடு நாளை மறுமையில் அவனைச் சந்திக்கும் நற்பேற்றை வழங்கியருள்வானாக!!

இப்போது தெரிகிறதா? ஏன் பெருமானார் ஸல் அவர்கள் ரஜபில் இருந்தே ரமழானை ஆதரவு வைத்து துஆ கேட்க சொன்னார்கள் என்று.

இப்போது புரிகிறதா? ஏன் ஸலஃபுகளான மேன்மக்கள் ரமழானின் நல்லறங்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கபூல் செய்ய வேண்டும் என்று ஆறு மாத காலத்திற்கு துஆ செய்துள்ளார்கள் என்று.

ரமழான் ஒரு இறைநம்பிக்கையாளனின் வாழ்வில் முழுமையாக கிடைக்கும் என்றால் அவனை விட இந்த உலகில் பாக்கியசாலி யாரும் கிடையாது. அவன் வாழ்நாள் முழுவதும் ரமழான் முழுமையாக கிடைத்து விட்டது என்றால் அவனை விட நாளை மறுமையில் பெரும் பாக்கியசாலி யாரும் கிடையாது.

அந்த வகையில் தனித்துவமான நான்கு மகத்துவங்களில் நான்காவது மகத்துவமான லைலத்துல் கத்ர் இரவை ஆதரவு வைத்து நாம் இந்த இரவில் அமர்ந்திருக்கின்றோம்.

இந்த இரவு குறித்து பெருமானார் (ஸல்) அவர்கள் ரமழானின் துவக்க நாளில் மேன்மக்களான நபித்தோழர்களுக்கு நினைவூட்டி இருக்கின்றார்கள்.

அந்த நினைவூட்டல் இரண்டு செய்திகளைத் தாங்கி நிற்கிறது. ஒன்று "பஷாரத்" எனும் சோபனம். இன்னொன்று "தஹ்றீ(தீ)ர்" எனும் கடும் எச்சரிக்கை.

பஷாரத்தில் கவனம் செலுத்தும் நாம் தஹ்றீ(தீ)ர் எனும் எச்சரிக்கையில் அதிக விழிப்புணர்வோடும், கவனத்தோடும் இருக்க கடமைப் பட்டுள்ளோம்.

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَدْرٍ عَبَّادُ بْنُ الْوَلِيدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بِلَالٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِمْرَانُ الْقَطَّانُ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏ ‏دَخَلَ رَمَضَانُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‏ ‏إِنَّ هَذَا الشَّهْرَ قَدْ حَضَرَكُمْ وَفِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ مَنْ حُرِمَهَا فَقَدْ حُرِمَ الْخَيْرَ كُلَّهُ وَلَا يُحْرَمُ خَيْرَهَا إِلَّا مَحْرُومٌ ‏

அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:- ரமழான் நுழைந்ததும், நபி ஸல் அவர்கள் " இதோ ரமழான் மாதம் உங்களிடம் வந்துள்ளது. இந்த மாதத்தில் ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவு இருக்கின்றது. எவர் அந்த இரவை (இழந்து) பாழாக்கி விடுகின்றாரோ, அவர் (நலவுகள்) நன்மைகள் அனைத்தையும் (இழந்தவர்) பாழாக்கியவர் ஆவார். அந்த இரவின் நன்மையை (இழப்பவர்) பாழாக்குபவர் யாரெனில் (நலவுகளை) நன்மைகளை பெறுவதை முற்றிலும் இழந்தவர் ஆவார் " என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: இப்னு மாஜா )

பாக்கியம் நிறைந்த, அருளும், ஸலாமும் இலங்குகிற, வானவர்களின் தலைவர் வருகை தருகிற, வானவர்கள் விஜயம் செய்கிற இந்த பாக்கியமான இரவை தவற விடுகிற, இரவை அடைந்தும் பாழாக்கி விடுகிற நஸீபு கெட்டவர்களின் பட்டியலில் இருந்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மைக் காப்பாற்றுவானாக!

தவற விட்டவர்கள், பாழாக்குபவர்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் விடும் எச்சரிக்கை மிகவும் கடுமையானது.

ஒன்று:- நன்மைகள் அனைத்தையும் இழந்து விடுகிறார். இன்னொன்று:- இது போன்ற நன்மையான காரியங்களை செய்வதை விட்டும் அவர் தடுக்கப்பட்டு விடுகிறார்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் பாதுகாப்பானாக! ஆமீன்!! ஆமீன்!! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!!

அல்லாஹ் எப்படி வேண்டுமானாலும் நம்மை விட்டும் நன்மையை நன்மையான காரியங்களை நாம் செய்வதை விட்டும் தடுத்து விடுவான். அவன் அத்துனை ஆற்றல் கொண்டவன்.

وَاِنْ يَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَ ‌ۚ وَاِنْ يُّرِدْكَ بِخَيْرٍ فَلَا رَآدَّ لِفَضْلِهٖ‌ ؕ يُصِيْبُ بِهٖ مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ‌ ؕ وَهُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ‏

அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் - அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் உள்ளான். ( அல்குர்ஆன்: 10: 107 )

عن ابن عَبَّاسٍ قَالَ حَدَّثَنِي عُمَرُ بْنُ الْخَطَّابِ قَالَ : " لَمَّا كَانَ يَوْمُ خَيْبَرَ أَقْبَلَ نَفَرٌ مِنْ صَحَابَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا : فُلَانٌ شَهِيدٌ فُلَانٌ شَهِيدٌ ، حَتَّى مَرُّوا عَلَى رَجُلٍ فَقَالُوا فُلَانٌ شَهِيدٌ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( كَلَّا ، إِنِّي رَأَيْتُهُ فِي النَّارِ فِي بُرْدَةٍ غَلَّهَا أَوْ عَبَاءَةٍ ) ، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( يَا ابْنَ الْخَطَّابِ ! اذْهَبْ فَنَادِ فِي النَّاسِ أَنَّهُ لَا يَدْخُلُ الْجَنَّةَ إِلَّا الْمُؤْمِنُونَ ) قَالَ : فَخَرَجْتُ فَنَادَيْتُ : أَلَا إِنَّهُ لَا يَدْخُلُ الْجَنَّةَ إِلَّا الْمُؤْمِنُونَ " .

இப்னு அப்பாஸ் (ரழி), தனக்கு உமர் (ரழி) அவர்கள் தெரிவித்ததாகப் பின்வரும் சம்பவத்தை அறிவிக்கின்றார்கள் : கைபர் யுத்தம் நடந்து முடிந்த பின்னர் நபி (ஸல்) அவர்களது தோழர்களிற் சிலர் அங்கு வந்தனர். மேற்படி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களைப் பற்றி 'அவர் ஷஹீத், இவர் ஷஹீத்", என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள். ஒரு நபரை (அவரது ஜனாஸாவைக்) கடந்து சென்ற அவர்கள் 'இவரும் ஷஹீத்" என்றனர். அதுகேட்ட நபி (ஸல்) அவர்கள் ''நீங்கள் அப்படிக் கூற வேண்டாம். அவர் யுத்தத்தில் கிடைத்த கனீமத் பொருட்களில் ஒன்றான ஓர் ஆடையை அல்லது மேலங்கியைத் (திருட்டுத் தனமாக) அபகரித்துக் கொண்டார். அந்த ஆடையுடன் அவரை நான் நரகில் கண்டேன்"" என்று கூறி விட்டு, ''உமர் இப்னு கத்தாபே! நீர் சென்று முஃமீன்களைத் தவிர வேறு எவரும் சுவர்க்கம் நுழைய மாட்டார்கள்"" என்று மக்களுக்கு மத்தியில் சொல்வீராக"" என்றார்கள்.

( நூல்: ஸஹீஹ் முஸ்லிம், கிதாபுல் ஈமான் - 182 )

போரில் கலந்து கொள்வதென்பது சாமானியமான காரியம் அல்ல. அதிலும் போரில் எதிரிகளால் கொல்லப்படும் பாக்கியம் ஷஹீத் எனும் அந்தஸ்து வழங்கப்படுவதற்கு காரணமாக அமையும்.

போரில் கலந்து கொண்டு, கடுமையான முறையில் போரிட்டு இறுதியில் எதிரிகளால் கொல்லப்பட்ட ஒருவருக்கு அல்லாஹ் "ஷஹீத்" எனும் நலவு, நன்மை கிடைப்பதை தடை செய்து விட்டான்.

எனவே, நாம் மிகவும் விழிப்புணர்வோடும் கவனத்தோடும் இந்த உலகில் வாழ வேண்டும்.

நன்மையான, நலவுகள் தருகிற அமல்களை காரியங்களை செய்ய முடியாமல் போகிற போது நாம் கவலை கொள்ள வேண்டும்.

நன்மையான, நலவுகள் தருகிற அமல்களை காரியங்களை செய்து கொண்டிருக்கும் நாம் சில போது தவற விடுகிற போது நாம் கவலை கொள்ள வேண்டும்.

عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صلى على جنازة فله قيراط، ومن تبعها حتى يقضى دفنها فله قيراطان أحدهما أو أصغرهما مثل أحد فذكرت ذلك لابن عمر فأرسل إلى عائشة فسألها عن ذلك، فقالت: صدق أبو هريرة، فقال ابن عمر: لقد فرطنا في قراريط كثيرة

இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஒரு ஹதீஸினை சொல்லிக்காட்டினார்கள். எவர் ஒருவர் ஜனாஸாவுடைய தொழுகை தொழுவாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மை கிடைக்கும் , எவர் மைய்யித்தை அடக்கம் செய்யும் வரை அதனுடன் இருப்பாரோ அவருக்கு இரண்டு கீராத் நன்மை கிடைக்கும், அவற்றில் ஒவ்வொன்றும் உஹத் மலைக்கு சமமானதாகும்.

ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) இந்த ஹதீஸ் குறித்து ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வினவியபோது அவர்களும் ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) கூறியது உண்மையான செய்திதான் என்றதும், ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) நாம் காரணமே  இல்லாமல் வீணாக பலகீராத் நன்மைகளை இழந்து விட்டோமே என கவலையோடு சொன்னார்கள். ( நூல்: ஜாமிவுத்திர்மிதி )

எது பாக்கியமின்மை?

இந்த உலகில் பலர் தம்மிடம் இல்லாத ஒன்றை வேறு ஒருவரிடம் இருப்பதைப் பார்த்து நாம் அந்த பாக்கியம் இல்லாதவர் என்று கவலை கொள்கிறார். அதை அடைவதற்கும் பெறுவதற்கும் முயற்சி செய்கிறார்.

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் குழந்தைப் பேறு இருப்பவர்களைப் பார்த்தும், ஒரு ஏழை செல்வந்தரைப் பார்த்தும், பதவி, அதிகாரம் இன்றி வாழ்பவர்கள் பதவி அதிகாரம் பெற்று செல்வாக்குடன் வாழ்பவரைப் பார்த்தும் அவரோடு தம்மை ஒப்பிட்டும் தம்மை பாக்கியம் இல்லாதவராக கருதுகிறார்.

உண்மையில் இது மட்டும் பாக்கியம் அல்ல. மாறாக, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வழங்கிய எத்துனையோ அருட்கொடைகளை அனுபவித்துக் கொண்டு தம்மால் அல்லாஹ் ரப்புல் ஆலமீனுக்கு நன்றி செலுத்த முடியவில்லையே? அவனுக்குரிய வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற முடிய வில்லையே என்று தம்மை விட எல்லாவற்றிலும் கொஞ்சமாக வழங்கப்பட்ட ஒரு நல்லடியாரிடம் இருக்கும் இபாதத்தோடு, வாழ்வியலோடு தம்மை ஒப்பீடு செய்து தம்மை  அவரைப் போன்ற பாக்கியம் நமக்குக் கிடைக்கவில்லையே என்று தம்மை சரி செய்து கொள்வது தான் மகத்தான பாக்கியம் ஆகும்.

நம்மில் எத்தனை பேர் கவலைப்படுகின்றோம்?..

حَدَّثَنَا عبداللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عبداللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: الَّذِي تَفُوتُهُ صَلاَةُ العَصْرِ، كَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உரிய நேரத்தில் தொழாமல்) யாருக்கு அஸ்ர் தொழுகை தவறிவிடுமோ அவர் தம் குடும்பமும் தமது செல்வமும் அழிக்கப்பட்டவரைப் போன்றவரே ஆவார். அறிவிப்பவர்:  இப்னு உமர் (ரலி) ( நூல்: புகாரி (552).. )

عن أبي سعيد الخدري رضي الله عنه أنّ رسول الله صلى الله عليه وسلم قال:

«يقول الله عزَّ وجلَّ: إنَّ عَبْداً صَحَّحْتُ لَهُ جِسْمَهُ، وَوَسَّعْتُ عَلَيْهِ فِيِ المَعيشَةِ، تَمْضِي عَلَيْهِ خَمْسَةُ أعْوَامٍ لا يَفِدُ إليَّ لَمَحْرُومٌ»

அபூஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- அல்லாஹ் கூறுவதாக நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:-  நிச்சயமாக ஒரு அடியாருக்கு நான் உடல் ஆரோக்கியத்தை கொடுத்து, செழுமையான வாழ்வாதாரத்துடன் விசாலமான வாழ்க்கையை வழங்கி ஐந்து ஆண்டுகள் கடந்தும் (ஹஜ்ஜுக்கு) வரவில்லையோ அந்த அடியான் ஒரு போதும் என்னை வந்து சேர முடியாது. அந்த அடியார் நன்மை செய்யும் (ஹஜ் செய்யும்) பாக்கியத்தை இழந்தவர் ஆவார் ". ( நூல்: தப்ரானீ )

இந்த நபிமொழி ஹஜ் தொடர்பானது என்று முஸ்லிம் ஷரீஃபின் விளக்கவுரையில் இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

وفي حادثة أخرى في السياق نفسه ، أن رجالاً أسلموا في مكة ، فأرادوا أن يأتوا رسول الله صلى الله عليه وسلم في المدينة ليتفقهوا في دينهم ويزدادوا من الخير، فأبى أزواجهم وأولادهم عليهم ذلك فأطاعوهم ، وبقوا في مكة. وبعد زمن أتوا رسول الله صلى الله عليه وسلم فرأوا الناس قد فقهوا في الدين ، فتحسروا على ما فاتهم ، وهمّوا أن يعاقبوا أهليهم وأولادهم،فأنزل الله قوله تعالى "يأيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدواً لكم فاحذروهم، وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم". تفسير ابن كثير عند الآية 14 من سورة التغابن.

மக்காவைச் சேர்ந்த சிலர் நபி ஸல் அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் பயணம் மேற்கொள்ளும் முன்பாக இஸ்லாத்தை தழுவினார்கள். 

ஹிஜ்ரத் கடமையாக்கப்பட்டு நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வந்த பிறகு, இஸ்லாத்தை தழுவிய அவர்களும் தங்கள் மனைவி, மக்களிடம் சென்று தாங்கள் ஹிஜ்ரத் பயணம் மேற்கொள்ள போவதாகவும், மதீனா சென்றதன் பின்னர் மாநபி (ஸல்) அவர்களுக்கு வஹீயின் மூலமாக பல்வேறு இறைக்கட்டளைகள் அருளப்பட்டு மேம்பட்ட வாழ்க்கையை மதீனாவில் இருக்கும் முஸ்லிம்கள் வாழ்வதாகவும், தாங்களும் சென்று தங்கள் ஈமானையும் வாழ்க்கையையும் மேம்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும் தங்களுடைய விருப்பத்தை தெரிவித்தனர். இதற்கு அவர்களின் மனைவி மக்கள் மறுப்பு தெரிவித்து ஹிஜ்ரத் செல்லக் கூடாது என்று தடுத்து விட்டனர். அவர்களும் அவர்களின் சொல் கேட்டு அங்கேயே தங்கி விட்டனர். எனினும், அவர்களால் மக்காவில் இருக்க முடியாமல் ஓரிரு ஆண்டுகள் கழித்து ஹிஜ்ரத் செய்து மதீனா வந்தடைந்தனர்.

மதீனா வந்தடைந்ததன் பின்னர் தான் முஸ்லிம் சமூகத்தின் வாழ்க்கைப் போங்கின் பல்வேறு மாற்றங்களை அதன் விளைவாக அந்த மக்கள் பெற்ற பயன்களைப் பார்த்து வியந்தனர்.

இப்போது வந்த துணிவு அப்போதே வந்நிருக்க்கூடாதா? என்று ஆதங்கம் அடைந்தனர். கொஞ்ச காலம் தாமதமாக வந்ததினால் எவ்வளவு மகத்தான நன்மைகளை நாம் இழந்து விட்டோம் என்று வருந்தினார்கள். இதற்கு காரணமாக இருந்த தங்களுடைய மனைவி மக்கள் மீது கோபம் கொண்டனர்.  அவர்களைத் தண்டிக்க விரும்பினர்.  இந்த நேரத்தில் தான்  அவர்களை மன்னித்து விடுமாறு கூறி அல்லாஹ் ரப்புல் ஆலமீன்  தகாபுன் அத்தியாயத்தின் 14 வது வசனத்தை இறக்கியருளினான்.

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِنَّ مِنْ أَزْوَٰجِكُمْ وَأَوْلَٰدِكُمْ عَدُوًّۭا لَّكُمْ فَٱحْذَرُوهُمْ ۚ وَإِن تَعْفُوا۟ وَتَصْفَحُوا۟ وَتَغْفِرُوا۟ فَإِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌ﴿64:14﴾

இறைநம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர், எனவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; அதையும் (அவர்களின் குற்றங் குறைகளை) மன்னித்தும், அவற்றைப் பொருட்படுத்தாமலும், சகித்துக் கொண்டும் இருப்பீர்களாயின் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன். ( அல்குர்ஆன்: 64: 14 )

         قال أبو حاتم الأصم : فاتـتـني صلاة الجماعة فلم يعزني إلا أبو إسحاق البخاري ،ولقد ماتت لي بنت فعزاني أكثر من عشرة آلاف ،                   

ஹாத்தமுல் அஸம்மு (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:- எனக்கு ஒரு நாள் ஒரு நேர ஜமாஅத் தொழுகை தவறிவிட்டது. அபூ இஸ்ஹாக் அல் புகாரி (ரஹ்) அவர்களைத் தவிர வேறு யாரும் என்னிடம் வந்து கவலை (இரங்கல்) தெரிவிக்கவில்லை. ஆனால் எனது மகள் இறந்த போது பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் என்னிடம் வந்து கவலை (இரங்கல்) தெரிவித்தனர்.

وهذا الإمام الشافعي –رحمه الله- يقول: ما فاتني أحد كان أشدّ عليَّ من الليث وابن أبي ذئب . فقد كان -رحمه الله- يتمنى لو لقي هذين العالمين ليأخذ العلم منهما . قال الإمام الذهبي معلقاً على ذلك : وللشافعي تسعة أعوام .

இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் இமாம் லைஸ் (ரஹ்) இமாம் இப்னு அபீ திஃபு (ரஹ்) ஆகியோரிடம் மார்க்கக் கல்வியை பயில வேண்டும் என்று பேராவல் கொண்டிருந்தார்களாம். அவர்களிடம் கல்வி பயில முடியாமல் போனது குறித்து பெரிதும் கவலை கொண்டார்களாம். இமாம் தகபீ (ரஹ்) அவர்கள் ஒரு செய்தியை கூறுகிறார்கள் "இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா? இமாம் இப்னு அபீ திஃபு (ரஹ்) அவர்களைச் சந்தித்து கல்வி பயில இமாம் ஷாஃபிஈ ரஹ் வரும் போது இமாம் இப்னு அபீ திஃபு (ரஹ்) அவர்கள் இந்த உலகை விட்டும் விடை பெற்றிருந்தார்கள். இதற்கும் முன்பாகவே, இமாம் லைஸ் (ரஹ்) அவர்கள் இந்த உலகை விட்டும் விடை பெற்றுச் சென்று விட்டார்கள். இத்தனைக்கும் அப்போது இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்களின் வயது 9 தான்.

وقد كان السلف أيضاً يندمون إذا فاتهم شيء من الخير .. فابن عباس رضي الله عنهما-يقول "ما ندمت على شيء فاتني إلا أني لم أحج ماشياً . فرغم كثرة ما حج ابن عباس إلا أنه يرى أنه فرّط في عدم ذهابه للحج ماشياً ،لأنه يرى أن فضل الحج ماشياً أعظم أجراً

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள முடிய வில்லையே என்று பெரிதும் கவலைப்பட்டார்களாம். ஏனெனில், நடந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் போது ஏராளமான நன்மைகள் கிடைக்கும். வாகனத்தில் செல்லும் போது அந்த நன்மைகள் கிடைக்காமல் போகிறதே என்று அங்கலாய்த்து கொள்வார்களாம்.

فعندما ماتت أم الحسن البصري ودفنها بكى بكاء شديداً ، فقيل له : تبكي وأنت إمام المسلمين ، وأنت الذي كنت تصبرنا ؟ . فقال : أبكي والله لأنه كان لي بابان إلى الجنة فأغلق أحدهما .

இமாம் ஹஸன் அல் பஸரீ (ரஹ்) அவர்கள் அவர்களின் தாயார் மரணித்த போது கடுமையாக தேம்பி தேம்பி அழுதார்களாம். சுற்றியிருந்த மக்கள் " நீங்கள் முஸ்லிம்களின் இமாமாக இருக்கின்றீர்கள்? எங்களுக்கு இது போன்ற இழப்புகள் ஏற்படும் போது எங்களை பொறுமையாக இருங்கள் என்று கூறும் நீங்கள் இப்போது உங்கள் தாயாரின் இறப்புக்காக இப்படி அழுகின்றீர்களே?" என்று கேட்டார்கள். அப்போது இமாம் ஹஸன் அல் பஸரீ (ரஹ்) அவர்கள் "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் என் சுவனத்தின் இரண்டு வாசல்களில் ஒரு வாசல் அடைபட்டு விட்டதே" என்று நினைத்து கவலையில் அழுகிறேன் " என்றார்கள்.

حال الصحابي الجليل كعب بن مالك عندما بقي في المدينة متخلفاً عن اللحاق برسول الله صلى الله عليه وسلم وصحابته إلى غزوة تبوك، فقد عبَّر عن حاله قائلاً: فطفقت إذا خرجت في الناس بعد رسول الله يحزنني أني لا أرى إلا رجلاً مغموصاً عليه في النفاق أو رجلاً ممن عذره الله عز وجل

நபி (ஸல்) அவர்கள் சென்ற பிறகு நான் மக்கள் மத்தியில் சென்றபொழுது "நயவஞ்சகனென்று இழித்துக் கூறப்பட்டவனையும் (பெண்கள் முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகளைப் போன்ற) இயலாதவர்களையும் தக்க காரணம் உடையவர்களையும் தவிர என்னைப்போல் போருக்குக் கிளம்பாதிருந்த எவரையும் நான் காணவில்லை. இது எனக்கு மிகுந்த துயரம் அளிக்கலானது" என்றார்கள்.

நாம் செய்யாமல் தவற விட்ட நல்லறங்களுக்காக நாம் தவ்பா செய்து மீளுவோம்!!

إِنَّا بَلَوْنَاهُمْ كَمَا بَلَوْنَا أَصْحَابَ الْجَنَّةِ إِذْ أَقْسَمُوا لَيَصْرِمُنَّهَا مُصْبِحِينَ (17) وَلَا يَسْتَثْنُونَ (18) فَطَافَ عَلَيْهَا طَائِفٌ مِنْ رَبِّكَ وَهُمْ نَائِمُونَ (19) فَأَصْبَحَتْ كَالصَّرِيمِ (20) فَتَنَادَوْا مُصْبِحِينَ (21) أَنِ اغْدُوا عَلَى حَرْثِكُمْ إِنْ كُنْتُمْ صَارِمِينَ (22) فَانْطَلَقُوا وَهُمْ يَتَخَافَتُونَ (23) أَنْ لَا يَدْخُلَنَّهَا الْيَوْمَ عَلَيْكُمْ مِسْكِينٌ (24) وَغَدَوْا عَلَى حَرْدٍ قَادِرِينَ (25) فَلَمَّا رَأَوْهَا قَالُوا إِنَّا لَضَالُّونَ (26) بَلْ نَحْنُ مَحْرُومُونَ (27) قَالَ أَوْسَطُهُمْ أَلَمْ أَقُلْ لَكُمْ لَوْلَا تُسَبِّحُونَ (28) قَالُوا سُبْحَانَ رَبِّنَا إِنَّا كُنَّا ظَالِمِينَ (29) فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ يَتَلَاوَمُونَ (30) قَالُوا يَاوَيْلَنَا إِنَّا كُنَّا طَاغِينَ (31) عَسَى رَبُّنَا أَنْ يُبْدِلَنَا خَيْرًا مِنْهَا إِنَّا إِلَى رَبِّنَا رَاغِبُونَ

நிச்சயமாக நாம் தோட்டமுடையவர்களைச் சோதித்தது போலவே, நாம் அவர்களைச் சோதித்தோம். அ(த் தோட்டத்திற்குடைய)வர்கள் அதிலுள்ள கனிகளை அதிகாலையில் சென்று பறித்து விடுவோமென்று சத்தியம் செய்தார்கள்.

அல்லாஹ் நாடினால் என்று அவர்கள் கூறவில்லை;

எனவே, அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது உம் இறைவனிடமிருந்து சுற்றக் கூடிய (நெருப்பின் ஆபத்)து சுற்றி(த் தோட்டத்தை) அழித்து விட்டது.

 (நெருப்புக் கரித்து விட்ட படியால் அத்தோட்டம்) காலையில் கருத்த சாம்பலைப் போல் ஆயிருந்தது.

இது அறியாது) காலையில் எழுந்த அவர்கள் ஒருவரை ஒருவர் அழைத்தனர்.

நீங்கள் (விளைந்த) கனிகளைக் கொய்பவர்களாக இருந்தால் உங்கள் தோட்டத்திற்கு அதிகாலையில் செல்லுங்கள்” (என்று கூறிக் கொண்டனர்).

எனவே அவர்கள் (பிறர் அறியாது) மெதுவாகப் பேசிக் கொண்டு சென்றனர்;
 எந்த ஏழை எளியவரும் இன்று உங்களிடம் அ(த் தோட்டத்)தில் நிச்சயமாக பிரவேசிக்கக் கூடாது” (என்று). உறுதியுடன் சக்தியுடையவர்களாக காலையில் சென்றனர். ஆனால், அவர்கள் அதை (தோட்டத்தை அழிந்து போன நிலையில்) கண்ட போது: நிச்சயமாக நாம் வழி தவறி (வேறு தோட்டத்திற்கு) வந்து விட்டோம்என்று கூறினார்கள்.

(பின்னர் கவனித்துப் பார்த்துவிட்டு) இல்லை! (ஏழை எளியோர்க்கு எதுவும் கிடைக்காமற் செய்து) நாம் தாம் பாக்கியம் இழந்தவர்களாக ஆகிவிட்டோம்” (என்றும் கூறிக்கொண்டனர்.)

அவர்களில் நடுநிலையுள்ள ஒருவர் நீங்கள் தஸ்பீஹு செய்திருக்க வேண்டும் என்று நான் உங்களுக்கு கூறவில்லையா?” என்று கூறினார்.
எங்கள் இறைவன் தூயவன்; நாம் தாம் நிச்சயமாக அநியாயம் செய்தவர்கள் ஆகிவிட்டோம்என்றும் கூறினர். பின்னர், அவர்களில் சிலர் சிலரை நிந்தித்தவர்களாக முன்னோக்கினர். அவர்கள் கூறினார்கள்: எங்களுக்குண்டான கேடே! நிச்சயமாக நாம் வரம்பு மீறியவர்களாக இருந்தோம்.

எங்களுடைய இறைவன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித் தரக்கூடும்; நாங்கள் (தவ்பா செய்து) நிச்சயமாக எங்களுடைய இறைவன் மீதே ஆதரவு வைக்கிறோம்” (எனக் கூறினர்) ( அல்குர்ஆன்: 68: 17 – 32 )