Monday, 25 March 2024

பேணுதலான வாழ்வே சிறந்தது!!!

 

தராவீஹ் சிந்தனை:- 15. சிறந்த அமல் & சிறந்த காரியம் தொடர்:- 4.

பேணுதலான வாழ்வே சிறந்தது!!!



அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய மகத்தான கருணையால் 14 -ம் நோன்பை நிறைவு செய்து விட்டு, 15 -ம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம். 

அல்ஹம்துலில்லாஹ்! நபி (ஸல்) அவர்கள் சிறப்பு படுத்திக் கூறிய சில செயல்கள் மற்றும் சில காரியங்கள் மற்றும் சில விஷயங்கள்  குறித்து நாம் பார்க்க வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய அமர்வில் "பேணுதலாக வாழ்வதே சிறப்பு" என்பது தொடர்பாக பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.

عن سعد بن أبي وقاص رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: «فضل العلم أحب إلي من فضل العبادة، وخير دينكم الورع»

ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: என்னிடம் வணக்க வழிபாடுகளில் சிறப்பை அடைவதை விட மார்க்க அறிவில் சிறப்பு அடைவதே எனக்கு மிகவும் விருப்பமானதாகும். உங்கள் மார்க்கம் தொடர்பான விஷயங்களில் பேணுதலே மிகவும் சிறந்ததாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்தத்ரக் அலஸ் ஸஹீஹைன் )

இன்னொரு அறிவிப்பில்....

عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: «فضلُ العلم أفضل من العبادة وملاك الدين الورع»،

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "வணக்க வழிபாடுகளின் சிறப்பை விட மார்க்க அறிவே மிகவும் சிறப்பானதாகும். மார்க்கத்தின் உயர்வு என்பது பேணுதலில் தான் இருக்கிறது " என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ( நூல்: தப்ரானீ )

பேணுதல் மிகவும் போற்றுதலுக்குரியது!!

وقد ثبت عن النبي صلى الله عليه وسلم -فيما رواه البيهقي – في وصيته لأبي هريرة رضي الله عنه : {كن ورعاً تكن أعبد الناس، وكن قنعاً تكن أشكر الناس، وأحب للناس ما تحب لنفسك تكن مؤمنا، وأحسن مجاورة من جاورك تكن مسلماً، وأَقِلّ الضحك؛ فإن كثرة الضحك تميت القلب}

அமல் செய்வதற்கோ அல்லது அமல் செய்பவருக்கு கற்றுக் கொடுப்ப தற்கோ என்னிடமிருந்து இந்த வார்த்தைகளை எடுத்துக் கொள்பவர் யார் என்று நபி ஸல் அவர்கள் கேட்ட போது ஹள்ரத் அபூஹுரைரா ரலி அவர்கள் நான்என்று கூறினார்கள்.உடனே நபி ஸல் அவர்கள் அபூஹுரைரா ரலி அவர்களின் கரத்தைப் பிடித்து 5 விஷயங்களைச் சொன்னார்கள். 1, அல்லாஹ் தடுத்தவைகளைத் தவிர்ந்து பேணுதலோடு இருந்து கொள் நீ  மக்களில் வணக்கசாலியாக ஆகி விடுவாய். 2, அல்லாஹ் உனக்கு பங்கிட்டதை பொருந்திக் கொள்.நீ மக்களில் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவனாக ஆகி விடுவாய். 3, உன் அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய். நீ முஃமினாக ஆகி விடுவாய். 4, உனக்கு விரும்புவதை பிறருக்கும் விரும்பு.நீ முஸ்லிமாக ஆகி விடுவாய். 5, அதிகம் சிரிக்காதே. அதிகம் சிரிப்பது உள்ளத்தை மரணிக்கச் செய்து விடும். ( நூல்: அஹ்மது )

பேணுதல் எங்கிருந்து துவங்குகிறது...

   حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ الْهَمْدَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَكَرِيَّاءُ ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏عَنْ ‏ ‏النُّعْمَانِ بْنِ بَشِيرٍ ‏ ‏قَالَ سَمِعْتُهُ يَقُولُ ‏ ‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏وَأَهْوَى ‏ ‏النُّعْمَانُ ‏ ‏بِإِصْبَعَيْهِ إِلَى أُذُنَيْهِ ‏ ‏إِنَّ الْحَلَالَ بَيِّنٌ وَإِنَّ الْحَرَامَ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشْتَبِهَاتٌ لَا يَعْلَمُهُنَّ كَثِيرٌ مِنْ النَّاسِ فَمَنْ اتَّقَى الشُّبُهَاتِ ‏ ‏اسْتَبْرَأَ ‏ ‏لِدِينِهِ ‏ ‏وَعِرْضِهِ ‏ ‏وَمَنْ وَقَعَ فِي ‏ ‏الشُّبُهَاتِ ‏ ‏وَقَعَ فِي الْحَرَامِ كَالرَّاعِي ‏ ‏يَرْعَى حَوْلَ ‏ ‏الْحِمَى ‏ ‏يُوشِكُ أَنْ ‏ ‏يَرْتَعَ ‏ ‏فِيهِ أَلَا وَإِنَّ لِكُلِّ مَلِكٍ ‏ ‏حِمًى ‏ ‏أَلَا وَإِنَّ حِمَى اللَّهِ مَحَارِمُهُ أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ ‏ ‏مُضْغَةً ‏ ‏إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلَا وَهِيَ الْقَلْبُ ‏

நபி (ஸல்)அவர்கள் கூறியதாக அபூ அப்துல்லாஹ் நுஃமான் இப்னு பஷீர் (ரலீ) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஹலாலும்(ஆகுமானவை)தெளிவானது.ஹராமமும் (தடைசெய்யப்பட்டவைகள் ) தெளிவானது. இவ்விரண்டிற்கும் இடையே இவை ஹலாலானவையா?,அல்லது ஹராமானவையா? என்ற சந்தேகத்திற்கிடமான காரியங்களும் உண்டு. அவற்றை அனேகர் அறிந்து கொள்ளமாட்டார்கள்.

எனவே எவர் சந்தேகத்திற்கிடமான காரியங்களிலிருந்தும் ஒதுங்கி இருக்கின்றாரோ,அவர் தனது தீனையும் கண்ணியத்தையும், மரியாதையையும் காப்பாற்றிக் கொண்டவராவார்.மேலும் எவர் சந்தேகத்திற்கிடமானவற்றில் வீழ்ந்து விடுகிறாரோ அவர் ஹராமில் வீழ்ந்து விட்டவராவார்.

அனுமதிக்கப்படாத ஒரு மேய்ச்சல் நிலத்தின் அருகில் தனது கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருக்கையில், அவை தடுக்கப்பட்ட அம்மேய்ச்சல்  நிலத்தின் சென்று மேய்ந்து விடக்கூடிய அச்சத்திற்கு எந்நேரமும் ஆளாகிக் கொண்டிருக்கும் ஓர் மேய்ப்பனுக்கு அவர் ஒப்பாவார். ஒவ்வொரு அரசனுக்கும் சொந்தமான ஒரு மேய்ச்சல் நிலம் உண்டு. அல்லாஹ்வுக்கும் மேய்ச்சல் நிலம் (ஹிமா), அவன் (அனுமதிக்காத ஹரமான) காரியங்களாகும்.உடலில் ஒரு சதைப்  பகுதி உண்டு.

அது சீராய் விடுமானால் உடல் முழுவதும் செம்மையாய் விடுகின்றது. அது கெட்டுவிடுமாயின் உடல் முழுவதும் கெட்டு விடுகின்றது.அந்த சதைப் பகுதி இதயமாகும். ( நூல் :புகாரி )

பேணுதல் தவறி விட்டோம் என்றால்?

وحَدَّثَنِي أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ مَرْزُوقٍ، حَدَّثَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ،قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَيُّهَا النَّاسُ، إِنَّ اللهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا، وَإِنَّ اللهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ، فَقَالَ: {يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا، إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ} [المؤمنون: 51] وَقَالَ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ} [البقرة: 172] ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ، يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ، يَا رَبِّ، يَا رَبِّ، وَمَطْعَمُهُ حَرَامٌ، وَمَشْرَبُهُ حَرَامٌ، وَمَلْبَسُهُ حَرَامٌ، وَغُذِيَ بِالْحَرَامِ، فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ؟

மக்களே! அல்லாஹ் தூயவன். தூய்மையானதையே அவன் ஏற்கின்றான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டவற்றையே இறை நம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு(ப் பின்வரும் இரு வசனங்களை 23:51) ஓதிக் காட்டினார்கள்

:தூதர்களே! தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நற்செயலைச் செய்யுங்கள். நீங்கள் செய்வதை நான் நன்கு அறிபவன் ஆவேன்.

பின்னர் ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். அவர் தலைவிரி கோலத்துடனும், புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற்கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி என் இறைவா என் இறைவா என்று பிரார்த்திக்கிறார்.

ஆனால், அவர் உண்ணும் உணவு தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அருந்தும் பானம் தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அணியும் உடை தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; தடை செய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?” என்று கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

عن أبي هريرةَ قال: قال اشْتَرَى رَجُلٌ مِن رَجُلٍ عَقارًا له، فَوَجَدَ الرَّجُلُ الَّذي اشْتَرَى العَقارَ في عَقارِهِ جَرَّةً فيها ذَهَبٌ، فقالَ له الَّذي اشْتَرَى العَقارَ: خُذْ ذَهَبَكَ مِنِّي؛ إنَّما اشْتَرَيْتُ مِنْكَ الأرْضَ، ولَمْ أبْتَعْ مِنْكَ الذَّهَبَ، وقالَ الَّذي له الأرْضُ: إنَّما بعْتُكَ الأرْضَ وما فيها. فَتَحاكما إلى رَجُلٍ، فقالَ الَّذي تَحاكما إلَيْهِ: ألَكُما ولَدٌ؟ قالَ أحَدُهُما: لي غُلامٌ، وقالَ الآخَرُ: لي جارِيَةٌ، قالَ: أنْكِحُوا الغُلامَ الجارِيَةَ وأَنْفِقُوا علَى أنْفُسِهِما منه وتَصَدَّقا

(பனூ இஸ்ராயீலில்) ஒருவர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தன்னுடைய நிலத்தில் தங்கம் நிரம்பிய (களிமண்) ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம், ‘என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்), உன்னிடமிருந்து நான் நிலத்தைத் தான் வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்கவில்லைஎன்று கூறினார்.

நிலத்தின் (முந்தைய) உரிமையாளர், ‘நிலததை அதிலிருப்பவற்றுடன் சேர்த்துத் தான் உனக்கு நான் விற்றேன். (எனவே, இந்தத் தங்கம் உனக்குத் தான் உரியது)என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டு சென்ற அந்த மனிதர், ‘உங்கள் இருவருக்கும் குழந்தை இருக்கிறதா?’ என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், ‘எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்என்று கூறினார். மற்றொருவர், ‘எனக்குப் பெண்பிள்ளை இருக்கிறதுஎன்று கூறினார். தீர்ப்புச் சொல்பவர், ‘அந்தப் பையனுக்கு அந்தச் சிறுமியை மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காவும் அதிலிருந்து செலவழியுங்கள்; தான தர்மம் செய்யுங்கள்என்று தீர்ப்பளித்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று  அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள். ( நூல்: புகாரி : 3472 )

அன்பளிப்புகளில் பேணுதல் வேண்டும்...

فقد روى البيهقي في سننه عن عبد الرحمن بن القاسم حدثنا مالك قال:

  وكان من عمّال عمر بن الخطاب -رضي الله عنه- - نمرقتين

 لامرأة عمر -رضي الله عنه

 فدخل عمر فرآهما فقال: (من أين لك هاتين؟ اشتريتهما؟ أخبريني ولا تكذبيني!) قالت: بعث بهما إليّ فلان، فقال: قاتل الله فلانا إذا أراد حاجة فلم يستطعها من قِبَلِي أتَانِي من قِبَلِ أهلي؛ فاجتذبهما اجتذابا شديدا من تحتِ من كان عليهما جالسا، فخرج يحملهما فتبعته جاريتها فقالت: إنّ صوفهما لنا، ففتقهما وطرح إليها الصّوف، وخرج بهما فأعطى إحداهما امرأة من المهاجرات، وأعطى الأخرى امرأة من الأنصار".

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் மனைவிக்கு, அரசவையில் பணி புரிந்த ஒருவர் இரண்டு தலையணையை அன்பளிப்பாக வழங்குகின்றார். ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் அரசவையில் அரசர் சாய்ந்து அமர்கின்ற மாதிரியான இரு தலையணையை தம் வீட்டினுள் பார்க்கிறார்கள்.

உடனே, தன் மனைவியிடம், இந்த இரண்டும் எங்கிருந்து வந்தது? அல்லது நீ விலைக்கு வாங்கினாயா? உண்மையைச் சொல், மறைக்காதே என ஜனாதிபதியாக தன் மனைவியிடம் சற்று வேகத்தோடு கேட்கிறார்கள்.

இதை இன்ன நபர் நமக்கு அன்பளிப்பாக அனுப்பியுள்ளார் என தன் மனைவி கூறிய பதிலைக் கேட்டு, “அல்லாஹ் அவருடன் போரிடுவானாக...எனக் கோபமாகக் கூறினார்கள்.

       அந்த நபர் தனக்கு உண்டான ஒரு தேவையை நிறைவேற்றித் தருமாறு என்னிடம்  வந்தார். அதை நான் அனுமதிக்கவில்லை. இப்போது என் குடும்பத்தினர் வழியாக சமரசம் பேசவே இந்த இரண்டு தலையணையை அன்பளிப்பு என்ற பெயரில் கொடுத்து அனுப்பியுள்ளார்என கூறினார்கள்.

பின்னர் அந்த இரண்டு தலையணையையும் உமர் (ரலி) அவர்கள் தங்களின் மனைவியிடமிருந்து பிடுங்கிச் செல்கிற போது, எதுவும் பேச இயலாது விக்கித்து நின்ற உமர் (ரலி) அவர்களின்  மனைவி தன் கணவர் உமர் (ரலி) அவர்கள் பின் சென்று, அதன் மேல் இருக்கின்ற கம்பளி உறை நம்முடையது என்றதுமே அதை மட்டும் எடுத்துக் கொடுத்து விடுகிறார்கள்.

       பின்பு, ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் அதில் ஒன்றை முஹாஜிர்களில் ஒரு பெண்ணுக்கும், இன்னொன்றை அன்ஸாரிகளில் ஒரு பெண்ணுக்கும் அன்பளிப்பாக கொடுத்து விடுகிறார்கள்.   ( நூல்: பைஹக்கீ )

روى البخاري بسنده عن عمر بن عبد العزيز

رحمه الله تعالى -أنه اشتهى يوما التفاح فلم يجد ما يشتري به من ماله، وبينما هو سائر مع بعض أصحابه أهديت إليه أطباق من التّفاح؛ فتناول واحدة فشمّها ثم ردّه إلى مهديه، فقيل له في ذلك

 قال: (لا حاجة لي فيه)

 فقيل له: إنّ رسول الله -صلى الله عليه وسلم كان يقبل الهدية، وأبو بكر وعمر

 فقال: "إنها لأولئك هدية وهي للعمال رشوة

ஜனாதிபதி உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரலி)  அவர்கள் ஒரு நாள் ஆப்பிள் பழம் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் ஆப்பிள் வாங்குவதற்கான பணம் அவர் கைவசம் இல்லை.

அப்போது, அவர்களின் தோழர்களுடன் சபையில் இருந்தபோது ஒரு கூடை ஆப்பிள் அன்பளிப்பு செய்யப்படுகிறது. அவற்றில் ஒரு ஆப்பிளை எடுத்து முகர்ந்து பார்த்து விட்டு, திருப்பிக் கொடுத்து விடுகிறார்கள். 

அருகிலிருந்தவர்கள் இதைச் சாப்பிட எவ்வளவு ஆசையுடன் இருந்தீர்கள்? ஏன் சாப்பிடவில்லையா..?”  இது போன்று, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுக்கும், ஃகலீஃபாக்களான அபூபக்ர், உமர் ( ரலி அன்ஹுமா ) ஆகியோருக்கு வழங்கப்பட்டு, அவர்களும் வாங்கி இருக்கின்றார்களே!? எனக் கேட்டார்கள்.

அதற்கு, உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், ஹஜ்ரத் அபூபக்கர் (ரலி), ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களுக்கும் இது போன்ற பொருட்கள் தரப்பட்டது. அது அவர்களுக்கு அன்பளிப்பாகும். 

ஆனால் என்னைப் போன்ற மக்கள் பிரதிநிதியான அரசு ஊழியனுக்கு இன்று வழங்கப்படுகின்ற எல்லா அன்பளிப்புக்களும் யாரோ ஒருவரால் தன் சுய தேவையை முன் வைத்து தரப்படுகின்ற இலஞ்சமே ஆகும். எனவே எனக்கு ஆப்பிள் வேண்டாம் என திருப்பி அனுப்பி விடுங்கள் என உத்தரவிடுகிறார்கள். ( நூல்: தப்ஸிரத்துல் ஹுக்காம் லிஇப்னி ஃபர்ஹூன் (ரஹ்), 1/30 )

وليكن قائده فى ذلك أبو أيوب الأنصارى-رضى الله عنه- وقت حادثة الإفك، قال ابن إسحاق: {أن امرأة أبى أيوب قالت: يا أبا أيوب، أما تسمع ما يقول الناس في عائشة رضي الله عنها؟ قال: نعم، وذلك الكذب، أكُنْتِ فاعلة ذلك يا أم أيوب؟ قالت: لا والله ما كنت لأفعله، قال: فعائشة والله خير منكِ.}

ஆயிஷா (ரலி) அன்ஹா அவர்களின் மீதான இட்டுக்கட்டு மதீனாவில் பரவிக் கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் வெளியே சென்று வந்த அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அவர்களின் மனைவி உம்மு அய்யூப் (ரலி) அவர்கள் தமது கணவரிடம் "அன்பு கணவரே! ஆயிஷா (ரலி) அவர்கள் விஷயத்தில் மக்கள் பேசிக்கொண்டு இருப்பதை நீங்கள் கேட்க வில்லையா?" என்றார்கள். 

ஆம்! மக்கள் பேசுவது எனக்கு தெரியும். ஆனால், ஆயிஷா (ரலி) அவர்களின் விஷயத்தில் மக்கள் பேசுவது பொய்யாகும். தொடர்ந்து தமது மனைவியிடம் "அவர்களோடு இணைந்து நீயும் ஏதும் பேசி விட்டாயா? என்று அபூ அய்யூப் (ரலி) அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு, உம்மு அய்யூப் (ரலி) அவர்கள் "நான் ஒன்றும் பேசவில்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இனி நான் அப்படி செய்யப்போவதும் இல்லை " என்று கூறினார்கள்.

அப்போது, அபூ அய்யூபுல் அன்ஸாரி (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஆயிஷா (ரலி) அவர்கள் உம்மை விட மேன்மையானவர்கள், சிறந்தவர்கள்" என்றார்கள்.

اِذْ تَلَـقَّوْنَهٗ بِاَ لْسِنَتِكُمْ وَتَقُوْلُوْنَ بِاَ فْوَاهِكُمْ مَّا لَـيْسَ لَـكُمْ بِهٖ عِلْمٌ وَّتَحْسَبُوْنَهٗ هَيِّنًا ‌وَّهُوَ عِنْدَ اللّٰهِ عَظِيْمٌ‏

இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும்.

وَ لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ قُلْتُمْ مَّا يَكُوْنُ لَـنَاۤ اَنْ نَّـتَكَلَّمَ بِهٰذَ ا ‌ سُبْحٰنَكَ هٰذَا بُهْتَانٌ عَظِيْمٌ‏

இன்னும் இதை நீங்கள் செவியேற்ற போது, “இதைப் பற்றி நாம் பேசுவது நமக்கு(த் தகுதி) இல்லை; (நாயனே!) நீயே தூயவன்; இது பெரும் பழியாகும்என்று நீங்கள் கூறியிருக்கலாகாதா?        ( அல்குர்ஆன்: 24:;15, 16 )

மக்களில் பெரும்பாலானோர் இந்த விவகாரத்தில் பெரும் பிழை செய்து விட்டதாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கண்டித்து இறை வசனத்தையே இறக்கினான். மேலும், இப்படியான கால கட்டத்தில் "இது தெளிவான இட்கடுக்கட்டு" என்று கூறியிருக்க வேண்டாமா? என்றும் கடிந்து கொண்டான்.

 

ஆனாலும் அந்த காலகட்டத்தில் மிக சொற்பமானவர்களே இந்த விஷயத்தில் பேணுதலோடு நடந்து கொண்டார்கள். அதில் அபூ அய்யூப் (ரலி) அவர்கள் மிகவும் பேணுதலோடு நடந்து கொண்டார்கள்.

أنَّ الوَرَعَ عاصِمٌ من الوقوعِ في المعاصي: قالت عائشةُ في شأنِ حادثةِ الإفكِ: «وَكَانَ رَسُولُ اللَّـهِ يَسْأَلُ زَيْنَبَ بِنْتَ جَحْشٍ عَنْ أَمْرِي، فَقَالَ: يَا زَيْنَبُ! مَا عَلِمْتِ؟ مَا رَأَيْتِ؟ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّـهِ! أَحْمِي سَمْعِي وَبَصَرِي، وَاللَّـهِ مَا عَلِمْتُ عَلَيْهَا إِلاَّ خَيْرًا. قَالَتْ: وَهْيَ الَّتِي كَانَتْ تُسَامِينِي،  فَعَصَمَهَا اللَّـهُ بِالْوَرَعِ»

            ஆயிஷா (ரலி) அவர்கள் இட்டுக்கட்டு தொடர்பாக தமது இன்னொரு மனைவி ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது "மக்கள் எதைப் பேசிக் கொண்டு இருக்கின்றார்களோ அதில் இருந்து நான் என் செவியையும், பார்வையையும், உள்ளத்தையும் பாதுகாத்து கொண்டேன். ஆயிஷா (ரலி) அவர்கள் மிகவும் நல்லவர், அவரிடம் காணப்படும் பேணுதல் காரணமாக அல்லாஹ் அர்களைப் பாதுகாப்பான்" என்று கூறினார்கள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பேணுதலான வாழ்வைத் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!

Saturday, 23 March 2024

உலகப் பெண்களில்… சுவனத்துப் பெண்களில் மிகச் சிறந்தவர்கள்!!!

 

தராவீஹ் சிந்தனை:- 13. சிறந்த அமல் & சிறந்த காரியம் தொடர்:- 3.

உலகப் பெண்களில்… சுவனத்துப் பெண்களில் மிகச் சிறந்தவர்கள்!!!



அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய மகத்தான கருணையால் 12 -ம் நோன்பை நிறைவு செய்து விட்டு, 13 -ம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம். 

அல்ஹம்துலில்லாஹ்! நபி (ஸல்) அவர்கள் சிறப்பு படுத்திக் கூறிய சில செயல்கள் மற்றும் சில காரியங்கள் மற்றும் சில விஷயங்கள்  குறித்து நாம் பார்க்க வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய அமர்வில் "சுவனத்து பெண்களில் சிறந்த பெண்கள், உலகப் பெண்களில் சிறந்த பெண்கள் யார்?" என்பது தொடர்பாக பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.

عن أبو هريرة : خير نساء العالمين أربع مريم بنت عمران وآسية بنت مزاحم امرأة فرعون وخديجة بنت خويلد وفاطمة بنت محمد

உலகப் பெண்மனிகளில் மிகச்சிறந்தவர்கள் நான்கு பேர்.1, மர்யம் பின்த் இம்ரான் (அலை) அவர்கள். அவர்கள். 2, ஆசியா பின்த் மஸாஹிம் (ரலி) அவர்கள் 3, கதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர்கள் 4, ஃபாத்திமா (ரலி) பின்த் முஹம்மத் (ஸல்)  அவர்கள்.  ( நூல்: புகாரி  )

இன்னொரு ரிவாயத்தில்...

ومن حديث ابن عباس عن النبي - صلى الله عليه وسلم - : أفضل نساء أهل الجنة خديجة بنت خويلد وفاطمة بنت محمد ومريم بنت عمران وآسية بنت مزاحم امرأة فرعون .

சுவனத்து பெண்மனிகளில் மிகச்சிறந்தவர்கள் நான்கு பேர்.1, கதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர்கள். 2, ஃபாத்திமா பின்த் முஹம்மத் (ரலி) அவர்கள். 3, மர்யம் பின்த் இம்ரான் (அலை) அவர்கள். 4, ஆசியா பின்த் மஸாஹிம் (ரலி) அவர்கள்.  ( நூல்: இப்னு ஹிப்பான் )

அருள் மறை குர்ஆனில் மர்யம் (அலை) அவர்கள் குறித்த புகழாரங்கள் இதோ!

1. அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் மர்யம் (அலை).

وَاِذْ قَالَتِ الْمَلٰٓٮِٕكَةُ يٰمَرْيَمُ اِنَّ اللّٰهَ اصْطَفٰٮكِ وَطَهَّرَكِ وَاصْطَفٰٮكِ عَلٰى نِسَآءِ الْعٰلَمِيْنَ‏ 

நபியே! மர்யமை நோக்கி) மலக்குகள் கூறிய சமயத்தில் "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உங்களைத் தேர்ந்தெடுத் திருக்கின்றான். உங்களை பரிசுத்தமாகவும் ஆக்கியிருக்கின்றான். உலகத்திலுள்ள பெண்கள் அனைவரையும்விட உங்களை மேன்மையாக்கியும் வைத்திருக்கின்றான், 

أن الله قد اصطفاها، أي: اختارها لكثرة عبادتها وزهادتها وشرفها وطهرها من الأكدار والوسواس

 

அவர்களது நன்நடத்தை, பற்றற்ற வாழ்வு மற்றும் அவர்களது அதிகமான வணக்க வழிபாட்டின் காரணமாகத்தான் அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். மேலும் , ஊசலாட்டம் மற்றும் கறைகளில் இருந்தும் தூய்மையானவராக இருந்த காரணத்தால் அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். ( நூல்: இப்னுகஸீர் )

2. அல்லாஹ்வின் அத்தாட்சி மர்யம் (அலை) 

ما مــن مولــود يولـد إلا نخســـه الشيطان فيستهل صارخاً من نخسة الشيطان ، إلا ابن مريم و أمـه

உலகில் பிறக்கிற எந்தக் குழந்தையும் ஷைத்தானின் தீண்டுதலின்றி பிறப்பதில்லை. ஷைத்தானின் தீண்டுதல் இருப்பதினால் தான் பிறந்தவுடன் அது அழுகிறது. ஆனால், மர்யம் (அலை) அவர்களையும் அவர்களது மகன் ஈஸா (அலை) அவர்களையும் தவிர  ஏனெனில், (அவ்விருவருக்கும் ஷைத்தானின் தீண்டுதல் ஏற்பட வில்லை) ( நூல்: முஸ்லிம் )

3. தாயின் உளப்பூர்வமான பிரார்த்தனை மர்யம் (அலை) அவர்கள்.

فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ اِنِّىْ وَضَعْتُهَاۤ اُنْثٰىؕ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا وَضَعَتْ وَ لَيْسَ الذَّكَرُ كَالْاُنْثٰى‌‌ وَاِنِّىْ سَمَّيْتُهَا مَرْيَمَ وَاِنِّىْۤ اُعِيْذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطٰنِ الرَّجِيْمِ

(பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கிறேன்எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள்; அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான்; ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்; இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன். ( அல்குர்ஆன்: 3: 36 )

4. அத்தாட்சியை சுமந்த அத்தாட்சி மர்யம் (அலை) அவர்கள்.

اِذْ قَالَتِ الْمَلٰٓٮِٕكَةُ يٰمَرْيَمُ اِنَّ اللّٰهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ اسْمُهُ الْمَسِيْحُ عِيْسَى ابْنُ مَرْيَمَ وَجِيْهًا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِيْنَۙ‏

மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;

وَيُكَلِّمُ النَّاسَ فِى الْمَهْدِ وَكَهْلًا وَّمِنَ الصّٰلِحِيْنَ‏

மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.

 

 قَالَتْ رَبِّ اَنّٰى يَكُوْنُ لِىْ وَلَدٌ وَّلَمْ يَمْسَسْنِىْ بَشَرٌ

قَالَ كَذٰلِكِ اللّٰهُ يَخْلُقُ مَا يَشَآءُ‌ اِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ

(அச்சமயம் மர்யம்) கூறினார்: என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” (அதற்கு) அவன் கூறினான்: அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் ஆகுகஎனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.

( அல்குர்ஆன்: 3: 45 - 47 )

1. ஈஸா (அலை) அவர்களை  கருவுற்றது.

قَالَ إِنَّمَا أَنَا رَسُولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلَامًا زَكِيًّا (19) قَالَتْ أَنَّى يَكُونُ لِي غُلَامٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌ وَلَمْ أَكُ بَغِيًّا (20) قَالَ كَذَلِكِ قَالَ رَبُّكِ هُوَ عَلَيَّ هَيِّنٌ وَلِنَجْعَلَهُ آيَةً لِلنَّاسِ وَرَحْمَةً مِنَّا وَكَانَ أَمْرًا مَقْضِيًّا (21) فَحَمَلَتْهُ فَانْتَبَذَتْ بِهِ مَكَانًا قَصِيًّا

நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு நன்கொடை அளிக்க (வந்துள்ளேன்”) என்று கூறினார்.

அதற்கு அவர் (மர்யம்), “எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?” என்று கூறினார்.

அவ்வாறேயாகும்; “இது எனக்கு மிகவும் சுலபமானதே; மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்என்று உம் இறைவன் கூறுகிறான்எனக் கூறினார்.

அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.

2. தொட்டில் குழந்தை பருவத்தில் பேசிய ஈஸா (அலை) 

يَاأُخْتَ هَارُونَ مَا كَانَ أَبُوكِ امْرَأَ سَوْءٍ وَمَا كَانَتْ أُمُّكِ بَغِيًّا (28) فَأَشَارَتْ إِلَيْهِ قَالُوا كَيْفَ نُكَلِّمُ مَنْ كَانَ فِي الْمَهْدِ صَبِيًّا (29) قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ آتَانِيَ الْكِتَابَ وَجَعَلَنِي نَبِيًّا (30) وَجَعَلَنِي مُبَارَكًا أَيْنَ مَا كُنْتُ وَأَوْصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا (31) وَبَرًّا بِوَالِدَتِي وَلَمْ يَجْعَلْنِي جَبَّارًا شَقِيًّا (32) وَالسَّلَامُ عَلَيَّ يَوْمَ وُلِدْتُ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ حَيًّا

ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை; உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை” (என்று பழித்துக் கூறினார்கள்).

(ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார்; “நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?” என்று கூறினார்கள்.

நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.

இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு வஸீய்யத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.

என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.

இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்என்று (அக்குழந்தை) கூறியது.

5. கற்பொழுக்கம் நிறைந்த தூய்மையான பெண் மர்யம் (அலை)

وَمَرْيَمَ ابْنَتَ عِمْرَانَ الَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهِ مِن رُّوحِنَا وَصَدَّقَتْ بِكَلِمَاتِ رَبِّهَا وَكُتُبِهِ وَكَانَتْ مِنَ الْقَانِتِين.

மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார்; நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - (ஏற்றுக் கொண்டார்); இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார். ( அல்குர்ஆன்: 66: 12 )

وَالَّتِىْۤ اَحْصَنَتْ فَرْجَهَا فَـنَفَخْنَا فِيْهَا مِنْ رُّوْحِنَا وَ جَعَلْنٰهَا وَابْنَهَاۤ اٰيَةً لِّـلْعٰلَمِيْنَ‏

இன்னும் தம் கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் என்ப)வரைப் பற்றி (நபியே! நினைவு கூறும்); எனினும், நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதி அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம். ( அல்குர்ஆன்: 21: 91 )

عن مجاهد: " يا مريم اقنتي لربك "و مِنَ الْقَانِتِين.، قال: كانت تصلي حتى تَرِم قدماها

அவர்களின் பாதங்கள் வீங்கும் அளவு அவர்கள் வணங்குபவர்களாக இருந்தார்கள் என முஜாஹித் ரஹ் அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்: தஃப்ஸீர் பக்வீ, தஃப்ஸீர் அத் தபரீ )

6. சுவனத்து உணவை இவ்வுலகில் உண்ட தனித்துவமான பெண் மர்யம் (அலை) 

 كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَۙ وَجَدَ عِنْدَهَا رِزْقًا

قَالَ يٰمَرْيَمُ اَنّٰى لَـكِ هٰذَا قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ‌ اِنَّ اللّٰهَ يَرْزُقُ مَنْ يَّشَآءُ بِغَيْرِ حِسَابٍ

அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், “மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார்; “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்என்று அவள்(பதில்) கூறினாள். ( அல்குர்ஆன்: 3: 37 )

7. ஜகரிய்யா (அலை) அவர்களின் பிரார்த்தனைக்கான உந்து சக்தி மர்யம் (அலை) 

هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهٗ‌ قَالَ رَبِّ هَبْ لِىْ مِنْ لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً‌ اِنَّكَ سَمِيْعُ الدُّعَآءِ‏

அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வயாக இருக்கின்றாய்.

فَنَادَتْهُ الْمَلٰٓٮِٕكَةُ وَهُوَ قَآٮِٕمٌ يُّصَلِّىْ فِى الْمِحْرَابِ اَنَّ اللّٰهَ يُبَشِّرُكَ بِيَحْيٰى مُصَدِّقًۢا بِكَلِمَةٍ مِّنَ اللّٰهِ وَسَيِّدًا وَّحَصُوْرًا وَّنَبِيًّا مِّنَ الصّٰلِحِيْنَ‏

அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து: நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்; அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்எனக் கூறினர்.  ( அல்குர்ஆன்: 3: 38, 39 )

8. உண்மையாளர் மர்யம் (அலை) அவர்கள்!

مَا الْمَسِيْحُ ابْنُ مَرْيَمَ اِلَّا رَسُوْلٌ‌قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ وَاُمُّهٗ صِدِّيْقَةٌ‌ كَانَا يَاْكُلٰنِ الطَّعَامَ‌ اُنْظُرْ كَيْفَ نُبَيِّنُ لَهُمُ الْاٰيٰتِ ثُمَّ انْظُرْ اَ نّٰى يُؤْفَكُوْنَ‏

மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை, இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். இவருடைய தாயார் மிக்க உண்மையானவர்; இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப் போல்) உணவு உண்பவர்களாகவே இருந்தனர்; அவர்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே!) நீங்கள் கவனிப்பீராக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக! ( அல்குர்ஆன்: 5: 75 )

9. இறைவனின் அருட்கொடை மர்யம் (அலை) அவர்கள்!

اِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ اذْكُرْ نِعْمَتِىْ عَلَيْكَ وَعَلٰى وَالِدَتِكَ‌

மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும்! ( அல்குர்ஆன்: 5: 110 )

ஆஸியா (ரலி) அவர்கள் குறித்த புகழாரம்!

وَضَرَبَ اللَّهُ مَثَلاً لِلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِنْدَكَ بَيْتاً فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ التحريم / 11 .

நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு(ம் இரு பெண்களை) அல்லாஹ் உதாரணமாகக் கூறுகின்றான். (முதலாவது:) ஃபிர்அவ்னுடைய மனைவி (ஆசியா). அவள் (தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! உன்னிடத்தில் உள்ள சுவனபதியில் எனக்கு ஒரு வீட்டை அமைத்து, ஃபிர்அவ்னை விட்டும் அவனுடைய செயலை விட்டும் என்னை பாதுகாத்துக்கொள்" என்று பிரார்த்தனை செய்துகொண்டே இருந்தாள்.( அல்குர்ஆன்: 66: 11 )

حدثني يعقوب بن إبراهيم، قال: ثنا ابن علية، عن هشام الدستوائي، قال: ثنا القاسم بن أبي بَزَّة، قال: كانت امرأة فرعون تسأل من غلب؟ فيقال: غلب موسى وهارون. فتقول: آمنت بربّ موسى وهارون؛ فأرسل إليها فرعون، فقال: انظروا أعظم صخرة تجدونها، فإن مضت على قولها فألقوها عليها، وإن رجعت عن قولها فهي امرأته؛ فلما أتوها رفعت بصرها إلى السماء، فأبصرت بيتها في السماء، فمضت على قولها، فانتزع الله روحها، وألقيت الصخرة على جسد ليس فيه روح.

மந்திரவாதிகள் சஜ்தாவில் விழுந்து, அல்லாஹ்வின் மீது தங்கள் நம்பிக்கையை அறிவித்து, மூஸா (அலை) அவர்களை அல்லாஹ்வின் நபியாக ஏற்றுக்கொண்டபோது - ஃபிர்அவ்னின் மனைவியும் தனது நம்பிக்கையை அறிவித்தார்.

ஃபிர்அவுன் அவளைத் தண்டிக்கத் தொடங்கினான், அவளை  மண் தரையில் கிடத்தினான் மேலும் மதிய வெயிலில் அவளை கொடுமை படுத்தினான்.. அவன் அவளை விட்டுத் திரும்பும் போதெல்லாம் வானவர்கள் தங்களின் சிறகுகளால் அவளுக்கு நிழல் தருவார்கள். 

பின்னர் ஃபிர்அவ்ன் ஆஸியா அவர்களுக்கு ஒரு தேர்வைக் கொடுத்தான்: 'உங்கள் நம்பிக்கையிலிருந்து பின்வாங்கவும் அல்லது ஒரு பெரிய பாறாங்கல் மூலம் கொல்லப்பட  தயாராக இருங்கள்.' ஆஸியா (ரலி)  நசுக்கப்படுவதைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆஸியா (ரலி)  தரையில் வைக்கப்பட்டதும், தமது பார்வையை வானத்தை நோக்கி உயர்த்தினார்கள் - பின்னர் ஆஸியா (ரலி) ஜன்னாவில் அவளது இடத்தைக் கண்டு பிரார்த்தனை செய்தார்கள்: ஓ என் அல்லாஹ்வே! உமக்கருகில் எனக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகையைக் கட்டி, ஃபிர்அவ்னிடமிருந்தும் அவனுடைய செயல்களிலிருந்தும் என்னைக் காப்பாற்று, எல்லா தீய செயல்களிலிருந்தும் என்னைக் காப்பாற்று. என்று ஆஸியா (ரலி) இதைச் சொல்லும் போது, அவர்களின் ருஹ் (ஆன்மா) அவர்களின் உடலை விட்டு வெளியேறியது, அதன் பின்னர் பாறாங்கல் ஆஸியா (ரலி) அவர்களின் உயிரற்ற உடலை நசுக்கியது.

قال الحافظ ابن حجر :- ومن فضائل آسية امرأة فرعون أنها اختارت القتل على الملك والعذاب في الدنيا على النعيم الذي كانت فيه وكانت فراستها في موسى عليه السلام صادقة حين قالت قرة عين لي .

" فتح الباري " ( 6 / 448 )

ஆஸியா (ரலி) அவர்களின் சிறப்பு என்னவெனில், உலகின் சுகபோகங்களை விட அழியாத மறுமைப் பேற்றை கவனத்தில் கொண்டு தமக்கு வேதனையும், உயிர் வதையும் ஏற்படுவதை விரும்பி தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.

ஆரம்பமாக, குழந்தை பருவத்தில் தண்ணீரில் மிதந்து வந்த மூஸா (அலை) அவர்களைக் கண்டு "இந்த குழந்தை எனக்கு கண்குளிர்ச்சியாக அமையும் என்று கூறினார்களை அந்த கண் குளிர்ச்சியை நோக்கியே அவர்களின் இயக்கம் அமைந்தது என இப்னு ஹஜர் அஸ்கலானீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

இன்னொரு ரிவாயத்தில்..‌.

وذلك كله بعين امرأة فرعون وسمعت كلام روح ابنها الأكبر ، ثم الأصغر ، فآمنت امرأة فرعون ، وقبض روح امرأة خازن فرعون ، وكشف الغطاء عن ثوابها ومنزلتها وكرامتها في الجنة لامرأة فرعون حتى رأته فازدادت إيمانا ويقينا وتصديقا ، واطلع فرعون على إيمانها ، فخرج إلى الملأ ، فقال لهم : ما تعلمون من آسية بنت مزاحم ؟ فأثنوا عليها ، فقال لهم : وإنها تعبد ربا غيري ، فقالوا له : اقتلها ، فأوتد لها أوتادا ، وشد يديها ورجليها فدعت آسية ربها فقالت : ( رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين (11) ) فكشف لها الغطاء فنظرت إلى بيتها في الجنة ووافق ذلك أن حضرها فرعون وضحكت حين رأت بيتها في الجنة ، فقال فرعون : ألا تعجبون من جنونها ، إنا نعذبها وهي تضحك فقبض روحها ، (تفسير مجاهد)

மாஷிதா (ரலி) அவர்களுக்கு ஃபிர்அவ்ன் கொடுமைகளை ஆஸியா (ரலி) பார்த்து வேதனைப்பட்டார்கள். மாஷிதா அவர்களின் ஒவ்வொரு குழந்தைகளாக ஃபிர்அவ்ன் கொல்லும் நேரத்தில் அவர்களின் ஆன்மா மேலேறிச் செல்லும்போது தனது தாய்க்கு சுபச்செய்தி சொல்லும் காட்சியை ஆஸியா (ரலி)பார்த்தார்கள். இறுதியாக மாஷிதா அவர்களையும்  ஃபிர்அவ்ன் கொன்றபோது அல்லாஹ் வானத்தின் திரைகளை விலக்கி ஆஸியா (ரலி) அவர்களின் கண்களுக்கு இறந்த மாஷிதா அவர்களின் அந்தஸ்தையும் சிறப்பையும் அறிய வைத்தான். இது அவர்களின் ஈமானை இன்னும் அதிகமாக்கியது. இறுதியில் தன் மனைவியும் இஸ்லாத்தை ஏற்ற விபரம் ஃபிர்அவ்னுக்குத் தெரிய வந்த போது ஃபிர்அவ்ன் தனது சபையினரைக் கூட்டி, என் மனைவி ஆஸியா (ரலி) ப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டான். அவர்கள் ஆரம்பத்தில் புகழ்ந்து பேசினார்கள். பின்பு ஃபிர்அவ்ன் கூறினான் அவள் என் அல்லாத வேறு கடவுளை வணங்குகிறாள் என்றவுடன் அனைவரும் அப்படியே தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றி அவளை உடனே கொல்ல வேண்டும் என்று உரக்க சப்தமிட்டனர். 

இறுதியில் தன் மனைவியையே கொல்லும்படு ஃபிர்அவ்ன் உத்தரவிட்டான். கை, கால்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது பெரிய பாறாங்கல்லை தூக்கிப் போடவிருக்கும் நிலையில் அந்த ஆஸியா (ரலி) அவர்கள் கைகளை உயர்த்தித் துஆவைச் செய்தார்கள். அல்லாஹ் அதை அப்படியே ஏற்றான். அவர்கள் கல்லை தூக்கிப் போடுவதற்கு சில நொடிகள் முன்பே உயிர் கைப்பற்றப்பட்டது. கடைசி நேரத்தில் சுவனத்தைப் பார்த்தவர்களாக சிரித்தபடி இருக்க வெறும் உடம்பின் மீது கல்லைப் போட்டார்கள். அங்கு வந்த ஃபிர்அவ்ன் பைத்தியக்காரி இவளை நான் கொல்கிறேன். ஆனால், இவளோ சிரிக்கிறாள்  என்றானாம். 

இன்ஷா அல்லாஹ்.. நாளைய அமர்வில், உம்முஹாத்துல் முஃமினீன் அன்னை கதீஜா (ரலி) அவர்கள் குறித்தும், அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்கள் குறித்தும் பார்ப்போம்!!!